12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set C
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set B
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set C

Published on: 02/03/2021
12ஆம் வகுப்பு கணினி பயன்பாடுகள் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் மற்றும் விடைகள் - 2021 - 12th Standard Tamil Medium Computer Application Reduced Syllabus Public Exam Model Question Paper with Answer key - 2021
12ஆம் வகுப்பு Computer Applications / கணினி பயன்பாடுகள் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Applications / கணினி பயன்பாடுகள் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Applications Test

1.
பின்வருவனவற்றுள் எது ALTCOIN அல்ல ?
litecoin
namecoin
ethereum
bitcoin
2.
_______ முறை பயனர் HTTP விண்ணப்பத்தின் (clients HTTP request) வேண்டுகோள் உடற்பகுதியில் உள்ளீட்டுத் தரவுகளை சேமிக்கும்.
POST
GET
form
HTML
3.
தற்காலத்தில் மக்கள் இதன்மூலம் ஆசுவாசப்படுகின்றனர்.
வணிகம்
பெரு நிறுவனம்
செய்தித் தாள்கள்
சமூக ஊடகம்
4.
பின்வருவனவற்றைப் பொருத்தி சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
i) HTTP - உலகளாவிய வலையின் முக்கிய நெறிமுறையாகும்
ii) FTP - சேவையகத்திலிருந்து முழுமையான கோப்புகளை அனுப்பவும், பெறவும் பயனரை அனுமதிக்கிறது.
iii) SMTP - மின்னஞ்சல் சேவையை வழங்குகிறது.
iv) DNS - எண்களைக் காட்டிலும் பெயர்களைக் கொண்டு பிறகணினிகளை கண்டறிகிறது.
| A | B | C | D |
| 1 | 2 | 3 | 4 |
| A | B | C | D |
| 2 | 3 | 4 | 1 |
| A | B | C | D |
| 3 | 4 | 1 | 2 |
| A | B | C | D |
| 4 | 3 | 2 | 1 |
5.
கீழ்க்கண்டவற்றில் எது சரியான கூற்று?
i. களப்பெயர் என்ப து URL-ன் ஒரு பகுதியாகும்
ii. URL நான்கு பகுதிகளால் ஆனது
iii. சார்பு நிலை URL என்பது முழுமயான URL-ன் ஒரு பகுதியாகும்.
iv. URLல் எந்த நெறிமுறையும் இடம் பெறாது
i & ii
ii
i, ii & iii
i, ii & iv
6.
பின்வரும் PHP குறிமுறைக்கு வெளியீடு என்னவாக இருக்கும்?
< ?php
for (\($\)x = -1; \($\)x < 10;--\($\)x)
{
print $x;
}
? >
123456713910412
123456713910
1234567139104
முடிவில்லா மடக்கு
7.
கீழ்க்கண்டவற்றில் வேறுபாடான ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்
Roll over
crossovers
null modem
straight through
8.
பின்வரும் PHP குறிமுறைக்கு வெளியீடு என்னவாக இருக்கும்?
< ?php
if (-100)pring “hi”; else
print “how are u”;
? >
how are u
hi
பிழை
வெளியீடு ஏதும் இல்லை
9.
அணியில் உறுப்புகளின் எண்ணிக்கையை கணக்கிட எந்த செயற்கூறு பயன்படுகிறது.
count
Sizeof
Array_Count
Count_array
10.
PHP கோப்புகளின் கொடாநிலை கோப்புகளின் நீட்டிப்பு என்ன?
html
xml
php
ph
11.
முதன்மை திறவுகோலை உருவாக்க தேவையான பண்புக்கூறுகளைக் பெற்றிருக்காத உருப்பொருள் ______.
நிலையான உருப்பொருள் தொகுதி (Strong Entity Set)
நிலையற்ற உருப்பொருள் தொகுதி (Weak Entity Set)
அடையாளத் தொகுதி (Identity Set)
உரிமையாளர் தொகுதி (Owner Set)
12.
3-D பாதுகாப்பு நெறிமுறை ______ ஆல் உருவாக்கப்பட்டது.
VISA
MASTERPAY
RUPAY
PAYTM
13.
EDIFACT பதிப்புகள் _______ என்றும் அழைக்கப்படுகிறது.
செய்தி வகைகள்
துணை தொகுதிகள்
கோப்பகங்கள்
கோப்புறைகள்
14.
எந்த பட்டியில் New கட்டளை இடம் பெற்றுள்ளது?
File menu
Edit menu
Layout menu
Type menu
15.
_________ என்பது ஒன்றிற்கு மேற்பட்ட ஊடக வகையான உரை, தரைகலை, ஒளிக்காட்சி, அசைவூட்டல் மற்றும் ஒலி ஆகியவற்றில் ஏதேனும் ஒரு வகைப் பயன்பாட்டைக் குறிக்கும்.
நிறைவேற்றப்படும் கோப்பு
கணினி பதிப்பகம்
பல்லூடகம்
மீவுரை
16.
வலையமைப்பு அடுக்கில் செயல்படும் முக்கியமான இணைய நெறிமுறைகள் யாவை?
17.
வணிகத்தில் வலையமைப்பின் பயனை விரிவாக எழுதுக.
18.
பயனாளர் சேவையக கட்டமைப்பு வகைகளை விவரி.
19.
நிகழ்நிலை வங்கிச் சேவையைப் பயன்படுத்தி நிதி பரிமாற்றம் செய்வதற்கானப் படிநிலைகளை விவரி.
20.
HTML படிவ உறுப்புகளை பற்றி விரிவாக எழுதுக.
21.
களப்பெயர் வெளி என்பது யாது? விளக்குக.
22.
அணிகளில் மடக்கின் செயல்பாட்டை விவரி
23.
மின்-வணிக வர்த்தக மாதிரிகளைப் பட்டியலிட்டு ஏதேனும் நான்கை சுருக்கமாக விளக்கவும்.
24.
25.
அசைவூட்டல் திரைப்பட துறையில் உள்ள வாய்ப்புகள் பற்றி கண்டறியவும்.
26.
விற்பனை முனை (POS) என்றால் என்ன?
27.
EDUSAT என்றால் என்ன?
28.
IP முகவரி என்றால் என்ன?
29.
சேம்ப் (Champ) இணைப்பி என்பது யாது?
30.
Open NMS சிறுகுறிப்பு வரைக.
31.
டாட்காம் குமிழி மற்றும் டாட்காம் வெடிப்பு என்றால் என்ன?
32.
தகவல் கசிவு பற்றி எழுதுக.
33.
பேஜ்மேக்கரில் உள்ள பட்டிப்பட்டை பற்றி குறிப்பு எழுதுக.
34.
EDIFACT கோப்பகங்கள் என்றால் என்ன?
35.
EDI யின் வகைகள் யாவை?
36.
அணி மற்றும் அதன் வகைகளை விவரி.
37.
வலைக்கட்டமைப்பு மென்பொருள் என்றால் என்ன? கட்டமைப்பு மென்பொருள்கள் சிலவற்றைப் பட்டியலிடு.
38.
டாங்கிள் என்றால் என்ன?
39.
RFID செயல்படுத்தப்பட்ட கணினியின் கூறுகளை பட்டியலிடுக?
40.
Switch மற்றும் if else கூற்றினை வேறுபடுத்துக
41.
நீங்கள் எத்தனை வழிகளில் PHP குறிமுறையை HTML பக்கத்தில் புகுத்த முடியும்?
42.
ஏதேனும் இரண்டு மின்-வணிக பாதுகாப்பு அச்சுறுத்தல்களைப் பட்டியலிடுக.
43.
பேஜ்மேக்கரில் உள்ள ஏதேனும் மூன்று கருவிகளையும் அதன் விசைப்பலகை குறுக்கு வழிகளையும் கூறு.
1.
(d)
bitcoin
2.
(a)
POST
3.
(d)
சமூக ஊடகம்
4.
(a)
| A | B | C | D |
| 1 | 2 | 3 | 4 |
5.
(c)
i, ii & iii
6.
(d)
முடிவில்லா மடக்கு
7.
(c)
null modem
8.
(a)
how are u
9.
(a)
count
10.
(c)
php
11.
(c)
அடையாளத் தொகுதி (Identity Set)
12.
(a)
VISA
13.
(c)
கோப்பகங்கள்
14.
(a)
File menu
15.
(c)
பல்லூடகம்
16.
வலையமைப்பு அடுக்கில் செயல்படும் முக்கியமான இணைய நெறிமுறைகள் :
(i) இணைய நெறிமுறை (Internet protocol - IP):
பொட்டலங்களை வழங்க IP முகவரிகளைப் பயன்படுத்தி வழிப்படுத்தும் நெறிமுறை ஆகும். இது ஒரு நம்பகத் தன்மை இல்லாததாகும். இது தகவலை விநியோகிக்க உறுதி அளிக்கிறது.
(ii) முகவரி தீர்வு நெறிமுறை (Address Resolution Protocol - ARP):
IP MAC (Medium Access Control) முகவரிகளாக உறுதி செய்கிறது.(MAC முகவரி என்பது வலையமைப்பில் ஒவ்வொரு சாதனத்தையும் தனிப்பட்ட முறையில் கண்டறியும் வன்பொருள் அடையாள எண் ஆகும்.) அதாவது IP வலையமைப்பு முகவரியை MAC முகவரிக்கு இணைக்கிறது.
(iii) இணைய கட்டுப்பாட்டு செய்தி நெறிமுறை (Internet Control Message Protocol - ICMP):
இது பிழை செய்திகள் மற்றும் செயல்பாட்டுத் தகவல்களை அனுப்ப வலையமைப்பு சாதனங்களால் பயன்படுத்தப்படுகிறது.
எடுத்துக்காட்டு : ஹோஸ்ட் (Host) அல்லது ரவுட்டரை அணுக முடியவில்லை அல்லது கேட்கப்பட்ட சேவை வழங்கப்படவில்லை.
(iv) இணைய குழு மேலாண்மை நெறிமுறை (Internet Group Management Protocol - IGMP):
இது பல IP முகவரிகளை ஒரே நேரத்தில் பல குழுக்களின் செய்திகளை அனுப்புவதற்கு ஹோஸ்ட்கள் மற்றும் ரவுட்டர்களால் பயன்படுத்தப்படும் தொடர்பு நெறிமுறை ஆகும்.
17.
வணிகத்தில் வலையமைப்பு:
1. இருபத்தோராம் நூற்றாண்டில் வெற்றிகரமான வணிக செயல்பாடுகளுக்கு கணினி வலையமைப்பு தொழில்நுட்பங்கள் அவசியமாகிறது.
2. இங்கு வேகமான கணினி வலையமைப்புகள்,வலிமையான இணையம் மற்றும் கம்பியில்லா தகவல்தொடர்பு வணிகத்தின் வழியை மாற்றிவிட்டன.
3. வணிகத்தில் ஒவ்வொரு நொடியும் பணம் என்று அனைவருக்கும் தெரியும்.
4. மின்-வங்கிச்சேவை மூலம் ஒருவருக்கொருவர் பணப் பரிவர்த்தனை செய்ய வழிவகை செய்கிறது, இதற்கு Payment Gateways வழிவகை செய்கிறது.
5. இங்கே வலையமைப்பு வழியாக B2B, B2C, B2G, C2B, C2C, C2G, G2B, G2C மற்றும் G2G போன்ற அனைத்து வகை வணிகமும் சாத்தியமாகிறது.
6. இந்த முறையிலேயே குறைந்த விலையில் பொருட்களை வாங்கவும் வழிவகை செய்கிறது.
7. இணைய சேவைக்கு முன்பு ஒரு பொருளின் Choice and Comparison மிகவும் கடினம். இன்று பொருட்களைப் பற்றி இணையத்தில் தேடுவது மிகவும் எளிது.
8. இணையத்தின் வழியாக மிக எளிமையாகவும் குறைந்த விலையில் ஒரு பொருளை வாங்க முடியும்.
9. ஒரு வாடிக்கையாளரால் ஒரு பொருளை தேடுவதன் மூலம் பழமையான நாட்களில் ஒரு குறிப்பிட்ட கடைக்காரர் சில பிராண்டுகள் இருக்கலாம், சில வகைகள் மற்றும் சில மாதிரிகள் கடையில் ஒரு இடத்திலிருந்து வேறுபட்டிருக்கலாம்,எனவே நிறுவனங்கள் தேவைப்படும் சில நபர்களை பிறர் பொருட்களைப் பிறர் தவறாகப் பயன்படுத்தலாம்.
10. நிறுவன உரிமம் புதுப்பித்தல், பிற சான்றிதழ்கள், பில் கட்டணங்கள், ரசீதுகள், விலைப்பட்டியல், பங்கு பராமரிப்பு, இன்டர்நெட் மற்றும் கணினி வலையமைப்புகள் வழியாக எந்த புவியியல் எல்லைகளையும் இல்லாமல் செய்ய முடியும்.
11. அரசு மானியங்களை மற்றும் டிஜிட்டல்மயமாக்கல் மூலம் வியாபாரத்தை ஊக்குவிக்கிறது.
12. இணையத்தால் நேரடி மனித உரையாடல்கள் குறைந்து வருகின்றன. உழைக்கும் சூழலும் கூட சுருங்கிவருகிறது. வாங்குபவரும் நேரடியாக உற்பத்தியாளர்களிடமிருந்து குறைந்த செலவில் வாங்குவார், நடுத்தர நபர் தரகு கட்டணங்கள் குறைக்கப்படுகின்றன.
18.
மூன்று வகை பயனாளர் சேவையகக் கட்டமைப்பு :
1. ஒற்றை அடுக்கு கட்டமைப்பு
2. இரண்டு அடுக்கு கட்டமைப்பு
3. பல/மூன்று அடுக்கு கட்டமைப்பு
1. ஒற்றை அடுக்கு கட்டமைப்பு :
(i) சேவையகம் பயன்படுத்துகின்றது. பயனாளரால் அணுகப்படுகின்றது.
(ii) பயனாளர் பயன்பாடு சேவையக கணிப்பொறிக்குள்ளேயே இயங்குகின்றது.
2. இரண்டு அடுக்கு கட்டமைப்பு
(i) இந்த கட்டமைப்பைச் சேவையகம் பயன்படுத்துகின்றது.
(ii) இரண்டு அடுக்கு ஊடாடுதலை கொண்டு பயனாளரால் அணுகப்படுகின்றது.
(iii) அதாவது பயனாளர் அடுக்கு ஒன்றிலும் சேவையகம் அடுக்கு இரண்டிலும் இயங்குகின்றன.
3. பல/மூன்று அடுக்கு கட்டமைப்பு :
(i) இந்த கட்டமைப்பைச் சேவையகம் பயன்படுத்துகின்றது.
(ii) ஒன்றிற்கு மேற்பட்ட அடுக்கு ஊடாடுதலைக் கொண்டு பயனரால் அணுகப்படுகின்றது.
(iii) நிரலர் வணிக ரீதியான அடுக்குகளின் எண்ணிக்கையை மென்பொருளின் தேவையைப் பொறுத்து தீர்மானிக்கிறார்.
(iv) இந்த காரணத்தினால் இந்த மாதிரியை பல/மூன்று அடுக்கு கட்டமைப்பு என்கிறோம்.
19.
படி 1: முன்னதாக வங்கி வழங்கிய பிரத்யேக பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி நிகழ்நிலை வங்கிக் கணக்கில் உள்நுழையவும்.
படி 2: நிதி பரிமாற்றத்தைச் செயல்படுத்த பயனாளியை "பணம் பெறுபவரில் சேர்க்கவும்". பயனாளியின் வங்கிக் கணக்கு எண். பெயர், IFSC போன்றவற்றை, "புதிய பணம் பெறுபவரின் பிரிவை சேர்" பகுதியில் நிரப்பப்பட வேண்டும்.
படி 3: பயனாளி சேர்க்கப்பட்டவுடன், நிதி பரிமாற்ற முறையை (RTGS/NEFT/IMPS) தேர்வு செய்யவும்.
படி 4: பணத்தைச் செலுத்த வேண்டிய கணக்கைத் தேர்ந்தெடுக்கவும், பணம் பெறுபவரைத் தேர்ந்தெடுக்கவும், பணம் பெறுபவரைத் தேர்ந்தெடுக்கவும், அனுப்ப விரும்பும் தொகையை உள்ளிட்டு குறிப்புரையை (விரும்பத்தேர்வு) சேர்க்கவும்.
படி 5: சமர்பி கொடுக்கவும்.
படி 6: வங்கி கணக்குடன் தொடர்புடைய கைப்பேசி எண்ணுக்குப் பெறப்பட்ட OTP ஐ உள்ளீட்டு பரிவர்த்தனையை நிறைவு செய்யவும்.
நவீன மின்னணு பணப் பரிமாற்றம் தனிப்பட்ட அடையாள எண் (PIN). ஒரு முறை கடவுச் சொல் (OTP) போன்றவற்றால் பாதுகாக்கப்படுகின்றன. ஒரு தானியங்கி தீர்வை அமைப்பு (ACH) அதன் பின் பணம் செலுத்தும்.
20.
HTML படிவத்தில் படிவ உறுப்புகளின் வகைகள் பின்வருமாறு:
1. உரைபெட்டி (Text box)
2. தேர்வுப்பெட்டி (Check box)
3. கோப்பு தேர்ந்தெடுத்தல் (File select)
4. பொத்தான்கள் (Buttons)
5. ரேடியோ பொத்தான் (Radio button)
6. படிவ ஒட்டு (Form tag)
1. உரையினை உள்ளிட உரைபேட்டி (Text box) மற்றும் உரை பரப்பு (Text area) போன்ற உறுப்புகள் உள்ளன.
2. Submit பொத்தான், reset பொத்தான் மற்றும் cancel பொத்தான் போன்ற பொத்தான்கள் உள்ளன.
3. தேர்வு பெட்டி (Check box) HTML படிவத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட மதிப்பினை தேர்ந்தெடுக்கும் அம்சமாகும் .
4. ரேடியோ பொத்தானும் தேர்வுப்பெட்டி போன்றதுதான், ஆனால் ரேடியோ ஒரு மதிப்பினைத் தேர்வு செய்ய முடியும்.
5. கிளை கணிப்பொறியிலிருந்து சேவையகக் கணினியில் உள்ள ஒரு கோப்பினைத் தேர்வு செய்ய File Select உறுப்பு சிறந்ததாகும்.
21.
களப்பெயர் வெளி:
1. களப்பெயர்களை ஒரு படிநிலை மற்றும் தருக்க மர அமைப்பில் கொண்டுள்ள ஒரு பெயரிடும் அமைப்பு.
2. படிநிலை பெயர்வெளியை அடைய களப் பெயர்வெளி வடிவமைப்பில் குறிக்கபப்படுகிறது.
3. இதில் பெயர்கள் தலைகீழ் மர வடிவமைப்பில் குறிக்கப்படுகிறது.
4. இதன் வேர் உறுப்பு மேலிருக்கும் வகையில் அமைந்திருக்கும்.
5. இந்த மர அமைப்பு, மட்டங்கள் 0 முதல் 127 வரை மொத்தம் 128 மட்டங்களைக் கொண்டிருக்கும்.
6. மேற்காண் படம் களப்பெயர்வெளியை குறிக்கிறது. இங்கு வேர் உறுப்பு மிக உயர்ந்த மட்டத்தில் அதாவது மட்டம் 0 வில் உள்ளது.
7. வேர் உறுப்பு எப்போதும் NULL சரத்தைக் குறிக்கிறது.
8. வேர் உறுப்புக்கு அடுத்த மட்டத்தில் முனைகள் (வேர் உறுப்புகளின் குழந்தைகள்) உள்ளன.
9. மர அமைப்பில் ஒவ்வொரு முனையும் ஒரு சிட்டை/ அடையாளம் மற்றும் களப் பெயரைக் கொண்டிருக்கும்.
22.
foreach மடக்கு: 1. foreach மடக்கு PHP-ல் மிகவும் பிரத்தியேகமான ஒன்றாகும். இது அணிகளுடன் மட்டுமே செயல்படுகிறது.
2. மடக்கின் சுழற்சியானது அணியில் உள்ள ஒவ்வொரு திறவு இணை மதிப்பை பொறுத்தது.
3.மடக்கின் ஒவ்வொரு சுழற்சியின் போதும் நடப்பு அணி உறுப்பின் மதிப்பானது $value மாறியில் இருத்தப்படுகிறது மற்றும் அணியின் சுட்டு ஒவ்வொரு மதிப்பாக அணியின் உறுப்பின் இருந்து வரை நகர்த்தப்படுகிறது.
foreach ($array as $value) {
code to be executed;
}
1. foreach மடக்கு அணிகளில் பன்முறையை செயல்படுத்த எளிதான வழியை வழங்குகிறது.
2. foreach மடக்கு அணிகள் மற்றும் பொருள்களில் மட்டுமே செயல்படுத்தப்படுகிறது.
3. இதனை வேறு தரவு வகை மாறியிலோ (அ) தொடக்க மதிப்பு இருத்தப்படடத மாறியிலோ பயன்படுத்த முயற்சி செய்யும் போது பிழை என சுட்டும்.
23.
1. வணிகம் - வணிகம் (B2B)
2. வணிகம் - நுகர்வோர் (B2C)
3. வணிகம் - அரசாங்கம் (B2G)
4. நுகர்வோர் - வணிகம் (C2B)
5. நுகர்வோர் - நுகர்வோர் (C2C)
6. நுகர்வோர் - அரசாங்கம் (C2G)
7. அரசாங்கம் - வணிகம் (G2B)
8. அரசாங்கம் - நுகர்வோர் (G2C)
9. அரசாங்கம் - அரசாங்கம் (G2G)
1. வணிகம் - நுகர்வோர் (B2C):
(i) B2C மின் வணிகத்தில் வணிக நிறுவனங்கள் மற்றும் அதன் இறுதி - நுகர்வோருக்கு இடையே இணையகம் வழியாக நேரடி வர்த்தகம் நடைபெறுகிறது
(ii) B2C நிறுவனங்கள், வாடிக்கையாளர்களுக்கு நிகழ்நிலையில் பொருட்கள், தகவல் (அ) சேவைகளை அதிக தனிப்பட்ட மற்றும் சக்தி வாய்ந்த சூழலில் விற்பனை செய்கின்றன
(iii) ஒரு மரனு சார்ந்த கடைக்காரருக்கு உண்மையான போட்டியாளராக் கருதப்படுகிறது
(iv) இவ்வகை மின் - வணிக மாதிரி நுகர்வோருக்குப் பயனளிக்கக் கூடியது. மின் வணிகம் இணையத்தின் சில்லறை விற்பனையாகமாக செயல்படுகிறது என்றும் கூறலாம்
எ.கா: வாடிக்கையாளர்களுக்குப் புத்தகங்களை நேரடியாக விற்பனை செய்யும் ஒரு புத்தக நிறுவனம்
2. வணிகம் - அரசாங்கம் (B2G):
(i) B2G என்பது பொருட்கள், சேவைகள் (அ) தகவல்களை அரசாங்கத்திற்கோ (அ) அதன் நிர்வாகத்திற்கோ விற்பனை செய்யும் வியாபார அமைப்புகளைக் குறிப்பிடும் ஒரு வணிக மாதிரியாகும்
(ii) ஒரு நிறுவனம் தனது பொருட்கள் அல்லது சேவைகளுக்கு இணையம் மூலம் அரசாங்கத்திடம் பணம் பெறும் போது அது B2G மின் வணிக மாதிரி என்று அழைக்கப்படுகிறது.
எ.கா: ஒரு அரசு (அ) அதன் நிர்வாகம் ஒரு வணிக நிறுவனத்திடமிருந்து மாணவர்களுக்கான மடிக்கணிக்களை வாங்குதல்
3. நுகர்வோர் - வணிகம் (C2B)
(i) இந்த மின் - வணிக மாதிரியில் வாடிக்கையாளர்களால் பரிவர்த்தனை துவக்கப்படுகிறது
(ii) குறிப்பிட்ட விலை (அ) தேவைகளில் தொகுப்பை நிர்ணயித்து நுகர்வோர்கள் ஒரு சேவை (அ) பொருளைக் கோருவோர்கள்
(iii) C2B மாதிரி தலைகீழ் ஏல மாதிரி என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு வாடிக்கையாளர் ஒரு சேவை அல்லது ஒரு தயாரிப்புக்கான விலையை நிர்ணயம் செய்கிறார்.
(iv) பின் அந்த வலைத்தளம் வாடிக்கையாளரின் தேவைகளைச் சிறப்பாகப் பூர்த்தி செய்யும் பல்வேறு வாய்ப்புகளை கண்டறியும்.
எ.கா: ஒரு பயண வலைத்தளத்தில் ஒரு வாடிக்கையாளர் அவரது பயண தேதி, புறப்படும் மற்றும் சேரும் இடம், பயணிகளின் எண்ணிக்கை மற்றும் தங்கும் விடுதியின் தரம் போன்றவற்றைக் குறிப்பிடலாம்
4. நுகர்வோர் - அரசாங்கம் (C2G):
(i) C2G மின் வணிகத்தில் நுகர்வோரும் அரசும் ஈடுபடுகின்றனர். இங்கு ஒரு தனி நுகர்வோர் அரசாங்கத்துடன் தொடர்பு கொள்கிறார்
(ii) C2G மாதிரிகள் வழக்கமாக வருமான வரி அல்லது வீட்டு வரி செலுத்துதல்கள், சான்றிதழ்கள் அல்லது பிற ஆவணங்களை வழங்குவதற்கான கட்டணங்கள் செலுத்துதல் ஆகியவை அடங்கும்
24.


25.
நம் காலத்தின் மிகப்பெரிய சினிமா படங்களின் பின்னால் சில டிஜிட்டல் அனிமேட்டர்ஸ் உள்ளனர். இன்றைய பாப் கலாச்சார சூழலில் டிஜிட்டல் அனிமேஷன் நடுநாயகமாகத் திகழ்கிறது என்பதற்கு லேம்ஸ் கேமரூனின் 'அவதார்' ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். பல்வேறு தொழில் துறைகளில் டிஜிட்டல் அனிமேஷன் வேலைகள் சாத்தியமாகும்.
திரைப்படத் துறையில் உள்ள அனிமேஷன் வாய்ப்புகள் :
அசைவூட்டல் தொழில், ஆர்வம் மற்றும் ஆக்கப்பூர்வமான விருப்பங்களுக்கு ஏற்ப பல்வேறு வேலை வாய்ப்புகளை வழங்குகிறது.
1. முப்பரிமாண மாதிரிகளை உருவாக்குபவர்கள் :
(3D Modellers) : பார்வையாளர்கள் பொருளை நன்றாகப் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் குறிப்பிட்ட பொருளை அனைத்துக் கோணங்களிருந்து கணினி மாதிரிகளாக உருவாக்குபவர்கள்.
2. கதாபாத்திர அனிமேட்டர்ஸ் (Character Animators) : ஒரு கதையை சொல்லக் கூடிய கதாபாத்திரங்கள் மற்றும் பொருத்தமான உடல் இயக்கங்களை உருவாக்குபவர்கள்.
3. இயக்க வரைகலை கலைஞர்கள் (Motion Graphics Artists) : பல்வேறு நிலைகளில் ஆக்கபூர்வமான செயல்முறைக்கு பொறுப்பானவர்கள். இயக்கத்தை சித்தரிக்க இரு பரிமாண, முப்பரிமாண அசைவூட்டப் படங்களை உருவாக்குபவர்கள்.
4. நுண் அமைப்பு கலைஞர்கள் (Texture Artists) : அசைவூட்டம் செய்யப்பட்ட கதாபாத்திரங்கள், கதாபாத்திரத்தை (அ) கலை வேலைபாட்டைச் சுற்றியுள்ள உடைமைப் பொருட்களுக்கான அமைப்பு, வண்ணம் மற்றும் முப்பரிமாண பயன்படுத்துபவர்கள்.
5. ஒளி கலைஞர்கள் (Lighting Artists) : காட்சியை உண்மை தன்மையுடனும் முறைகளின்றி உருவாக்க, சரியான ஒளி மற்றும் நிழல் விளைவுகளை ஒளி துறையுடன் பணிபுரிபவர்கள்.
6. தந்திரக் கலைஞர்கள் (Rigging Arists) :
1. துல்லியமான மற்றும் விரிவான பார்வை தேவை உள்ளவர்கள்.
2. உருவாக்குதல் சவால்களைத் தீர்ப்பதற்கும் கதாபாத்திரங்களின் இயக்கங்களை சாத்தியமாக்குவதற்கான புதிய தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்கு மாதிரிகளை உருவாக்குபவர்கள் மற்றும் அசைவூட்டக் கலைஞர்களோடு ஒத்திசைவுடன் வேலை செய்பவர்கள்.
இயக்கப்பட்ட தொடர் சித்திரக் கலைஞர்கள் (Story board Artists) :
கையாலோ கணினி மூலமாகவோ தொடர்/சினிமாக் காட்சிகளை ஒவ்வொரு சட்டங்களாக வரைந்து காட்சிப்படுத்துபவர்கள்.
தொகுத்தல் கலைஞர்கள் (compositing Artists) :
பல்லூடகப் பயன்பாட்டில் பின்-உருவாக்குதல் செயல்பாட்டிற்கான முக்கியமானக் கலைஞர்களில் இவர்களும் ஒருவர் ஆவர். திட்டப் பணிக்கு இறுதிச் செயல்பாடுகளை இவர்கள் தருகிறார்கள்.
26.
(i) விற்பனை முனையின் (POS) - இது வாடிக்கையாளர்கள் கடன் மற்றும் பற்று அட்டைகள் மூலம் பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்குவதற்கு பணம் செலுத்த வழிவகை செய்கிறது.
(ii) வாடிக்கையாளர் வசதிக்காக சில வங்கிகள் POS முனையங்களில் பற்று அட்டைகளைப் பயன்படுத்திப் பணத்தை பெற அனுமதிக்கின்றன.
27.
EDUSAT (Educational Satellite) என்பது கல்வி துறையில் மெய்நிகர் வகுப்பறைகள் பயனுள்ள முறையில் உருவாக்குவதற்கான சேவைகளை வழங்க இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள செயற்கைகோளாகும்.
28.
IP முகவரி:
(i) IP (Internet Protocol) முகவரி என்பது வலையமைப்பில் உள்ள ஒரு தருக்க (Unique) முகவரியாகும்.
(ii) ஒரு வலையமைப்பில் உள்ள ஒரு கணினியை கண்டறிய ஐபி முகவரி பயன்படுத்தப்படுகிறது.
29.
RJ-21 இணைப்பான் ஒரு முனையில் 25 ஊசிகளும் அடுத்த முனையில் 25 ஊசிகளுமாக மொத்தம் 50 ஊசிகளைக் கொண்டுள்ளது. இது சாம்ப் இணைப்பி அல்லது ஆம்பனோஸ் இணைப்பி எனவும் அழைக்கப்படுகிறது.
30.
Open NMS (Open Network Management System) என்பது இலவச மற்றும் திறந்த மூல வசதியுடன் வெளிவந்த தொடக்க காலத்திய தரமான வலையமைப்பு கண்காணிப்பு வி மற்றும் மேலாண்மை அமைப்பு ஆகும்.
31.
டாட்காம் குமிழி:
(i) டாட்காம் குமிழி சுமார் 1995 மற்றும் 2000ற்கு இடையே டாட்காம் நிறுவனங்களின் ஒரு வரலாற்று மிதமிஞ்சிய வளர்ச்சி ஆகும்.
(ii) மேலும் இது இணையத்தின் பயன்பாடு மற்றும் தகவமைப்பு ஆகியவற்றின் அதீத வளர்ச்சி காலகட்டம் ஆகும்.
டாட்காம் வெடிப்பு:
(i) NASDAQ கூட்டுப் பங்குச் சந்தை குறியீடானது 5046.86 லிருந்து 1114.11 ஆகச்சரிந்தது.
(ii) இது புகழ்பெற்ற டாட்காம் முறிவு அல்லது டாட்காம் வெடிப்பு என அறியப்படுகிறது.
32.
1. மின்-ஆவணங்களை இடைமறித்து திருடுதல் தகவல் கசிவு என அழைக்கப்படுகிறது.
2. மின்-வணிகத்தில் வர்த்தக ஆவண இரகசியங்கள் கசிவு இரண்டு முக்கிய பிரிவுகளைக் கொண்டுள்ளது.
3. விற்பனையாளர் மற்றும் வாடிக்கையாளருக்கு இடையிலான பரிமாற்றத்தின் உள்ளடக்கம் மூன்றாம் தரப்பினரால் திருடப்படுவது.
4. வணிகர் (அ) வாடிக்கையாளரால் வழங்கப்பட்ட ஆவணங்கள் மற்றவரால் சட்ட விரோதமாக பயன்படுத்தப்படுவது.
33.
பட்டிப்பட்டை File, Edit, Layout, Type, Element, Utilities, View, Window, Help போன்ற பட்டிகளைக் கொண்டுள்ளது. ஒரு பட்டியில் கிளிக் செய்தால் பல கட்டளைகள் மற்றும் துணைப்பட்டிகளுடன் கூடிய கீழ்விரி பட்டியல் தோன்றும்.
34.
1. EDIFACT பதிப்புகள் கோப்பகம் என்றும் அழைக்கப்படுகின்றன.
2. EDIFACT கோப்பகத்தில் புதிய செய்திகளை சேர்க்க அல்லது புதுப்பிக்க ஏப்ரல் 1 ஆம் தேதி மற்றும் அக்டோபர் 1 ஆம் தேதி என வருடத்திற்கு இருமுறை திருத்தி அமைக்கப்படும்.
3. EDIFACT கோப்பகங்கள் D. 18B போன்ற பெயர்களைக் கொண்டுள்ளன.
35.
தகவல் தொடர்பு இணைப்புகள் மற்றும் பரிமாற்ற ஊடகத்தின் EDI கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தலாம்.
1. நேரடி EDI
2. VAN வழியாக EDI
3. FTP/VPN,SFTP,FTPS வழியாக EDI
4. இணையம் வழி EDI
5. கைப்பேசி வழி EDI
36.
அணி என்பது ஒரே தளவு வகையைச் சார்ந்த ஒன்றுக்கு மேற்பட்ட மதிப்புகளை ஒரே நேரத்தில் வைக்கப் பயன்படும்.
வகைகள் :
1. சுட்டு எண்கள் கொண்ட அணிகள்
2. தொடர்புருத்த அணிகள்
3. பல பரிமாண அணிகள்
1. சுட்டு எண்கள் கொண்ட அணிகள் :
அணி மாறியியல் உள்ள மதிப்புகள் எண்களைச் சுட்டெண்களாகக் கொண்ட அணிகளாக இருப்பின் திறவிற்கு இணை மதிப்புகள் இருத்தப்படும். பயனர் இந்த திறவுகளைப் பயன்படுத்தி மதிப்புகளை எடுத்துக்கொள்வர்.
கட்டளை அமைப்பு :
அணியானது array ( ) என்ற சிறப்புச் சொல்லுடன் வரையறுக்கப்படுகிறது.
$teacher_name = array("Iniyan:,"Kavin","Nilant"),
echo"The student name are".
$teacher_name[0],"$$tyeacher_name[1] "and",$teacher_name[2]
?>
2. தொடர்புருத்த அணிகள் :
(i) பெயரிடப்பட்ட திறவுகளை இருத்தி வைக்கப்பயன்படுத்தப்படும்.
(ii) திறவும், மதிப்பும் இணைந்த தரவுக் கட்டமைப்பாகும்.
கட்டளை அமைப்பு :
array(key=>value, key=>,key=>value,etc,);
key=Specifies the key (numeric or string)
value=Specefies the value
எ.கா :
$marks = array("student1" =>"35");
echo"student 1 mark is ".$marks['student1'];
echo"Student 2 mark is",$marks['student2'];
3. பல பரிமாண அணி
(i) பல பரிமாண அணி என்பது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அணிகளைக் கொண்ட ஒரு அணி ஆகும்.
(ii) PHPல் பல்வேறு வகையான (அ) அளவுள்ள பல பரிமாண அணிகளை உருவாக்கமுடியும்.
(iii) அதாவது இரண்டு மூன்று நான்கு ஐந்து (அ) அதற்கும் அதிகமான அளவுள்ள பரிமாண அணிகளை உருவாக்கலாம்.
எ.கா:
//A two-dimensional array
$student=array
(
array("Iniyan",100,96),
array("Kavin",60,59),
);
?>
37.
கட்டமைப்பு மென்பொருள்: விரைவான பயன்பாடு உருவாக்கத்தை (RAD = Rapid Application Development) ஊக்குவிப்பதற்கான வடிவமைப்பையும், கட்டுமானத் தொகுதிகளையும் வழங்கும் மென்பொருள்.
எ.கா: PRADO, Cable PHP, Symforny, CodeIgniter, laravel, Yii framework மற்றும் Zend framework.
38.
1. டங்கில் ஒரு சிறிய புறச் சாதனம் ஆகும்.
2. இது இணையும் ஒரு SIM Slot ஐக் கொண்டிருக்கும்.
3. மேலும் இது கணினியை இணையத்துடன் இணைக்க மோடம் போல் செயல்படுகிறது
39.
1. ஒரு RFID குறிச்சொல்: இது ஒரு சிறிய ஆண்டெனாவுடன் இணைக்கப்பட்ட மற்றும் மூலக்கூறு மீது வைக்கப்பட்டுள்ள சிலிக்கன் மைக்ரோசிப் -ஐ கொண்டுள்ளது.
2. ஒரு படிப்பான் : தகவல் தொடர்புக்குப் பயன்படுத்தப்படும் சிக்னல்களை பரிமாறவும் பெறுவதற்குமான ஆண்டெனாவுடன் கூடிய வருடியைக் கொண்டுள்ளது.
3. ஒரு கட்டுப்பாட்டாளர்: இது நுண்செயலியுடன் கூடிய புரவலன் கணினியாகும். இது படிப்பானின் உள்ளீட்டைப் பெற்று தரவுகளைச் செயலாக்குகிறது.
40.
| switch கூற்று | if else கூற்று |
| 1. பல்வேறு தொகுதிகளில் ஒன்றை செயல்படுத்தத் தேர்வு செய்கிறது. | இரு மாற்று வழிகளில் ஒரு தொகுதியைச் செயல்படுத்தத் தேர்வு செய்கிறது. |
| 2. சமம் என்ற ஒப்பீட்டை மட்டுமே சோதிக்கிறது. | சமம் என்ற ஒப்பீடுடன் மற்றும் தருக்கக் கோவைகளைச் சோதிக்கிறது. |
| 3. ஒன்றுக்கு மேற்பட்ட மதிப்புகளை ஒரே நேரத்தில் சோதிக்க முடியும். | ஒரு கோவையை மட்டுமே சரி பார்க்கிறது. |
| 4. எந்த ஒரு case தொகுதியுடன் கோவையின் மதிப்பு பொருந்தவில்லை என்றால் 'default' என்ற சிறப்புச் சொல்லின் கீழ்வரும் கூற்றுகள் செயல்படுத்தப்படும். | நிபந்தனை தவறு எனில், else என்ற சிறப்புச் சொல்லின் கீழ்வரும் கூற்றுகள் செயல்படுத்தப்படும். |
41.
PHP குறிமுறையை HTML பக்கத்தில் இரண்டு வழிகளில் புகுத்த முடியும்.
1. முதல் வழி :HTML-ஐ PHP-க்கு வெளியே வைப்பதன் மூலம் புகுத்துதல்.
2. இரண்டாவது வழி : PRINT மற்றும் ECHOவைப் பயன்படுத்துவதன் மூலம் புகுத்துதல்.
42.
1. தரவு சிதைப்பு (Tampering)
2. பண மோசடிகள் (Payment frauds)
3. தகவல் கசிவு (Information Leakage)
4. தீங்கிழைக்கும் நிரல் அச்சுறுத்தல்கள் (Malicious code threats)
5. பரவல் சேவை மறுக்கப்படல்,தாக்குதல்கள் (Distributed Denial of Service - DDoS)
6. சைபர் Squatting (Cyber Squatting)
7. டைபோபைரஸி (Typopiracy)
43.
| கருவிகள் | விசைப்பலகை குறுக்கு வழி |
| 1. பாயின்டர் டூல் (Pointer tool) | F9 |
| 2. ரொட்டேடிங் டூல் (Rotating tool) | Shift+F2 |
| 3. லைன் டூல் (Line tool) | Shift+F3 |
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set B
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Standard Physics Wave Optics Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Physics Wave Optics Creative Questions Study Material - QB365 Set C
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards