12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 02/03/2021
12ஆம் வகுப்பு கணினி பயன்பாடுகள் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய மூன்று மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Computer Application Reduced Syllabus Three mark Important Questions - 2021(Public Exam)
12ஆம் வகுப்பு Computer Applications / கணினி பயன்பாடுகள் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Applications / கணினி பயன்பாடுகள் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Applications Test

1.
முன் வரையறுக்கப்பட்ட அல்லது அமைப்பு அல்லது உள்ளமைந்த செயற்கூறுகளை பற்றி சிறு குறிப்பு வரைக.
2.
HTTP என்றால் என்ன?
3.
MYSQL ல் அட்டவணையிலிருந்து ஏற்கனவே இருக்கும் தரவுகளை எவ்வாறு நீக்குவாய்?
4.
உறவு நிலைகளின் வகைகளை விவரி.
5.
பேஜ்மேக்கரில் மாஸ்டர் பக்கங்களைக் குறிக்கும் பணிக்குறிகளைப் பற்றி எழுதுக.
6.
பேஜ்மேக்கரில் சேமித்து மூடப்பட்ட ஆவணத்தைத் திறக்க பின்பற்ற வேண்டிய வழிமுறைகளைப் பட்டியலிடு.
7.
பேஜ்மேக்கரில் உள்ள உரையை எவ்வாறு அழிக்க முடியும்?
8.
MIDI படிவம்-குறிப்பு வரைக.
9.
OGG என்றால் என்ன?
10.
GET மற்றும் POST வழிமுறையினை வேறுபடுத்துக.
11.
MySQLi -ஐ இணைப்பதற்கான கட்டளையை எடுத்துக்காட்டுடன் எழுதுக
12.
கணினி வலையமைப்புகள் எப்படி பணத்தை சேமிப்பது?
13.
RFID செயல்படுத்தப்பட்ட கணினியின் கூறுகளை பட்டியலிடுக?
14.
முழுமையான URL சார்பு URL இவற்றிற்கு இடையில் உள்ள வேறுபாடுகள் யாவை?
15.
'Do while' மடக்கினை பற்றி சிறுகுறிப்பு வரைக
16.
ஈத்தர்நெட் கேபிளிங்கில் தொடர்புடைய கூறுகள் என்ன?
17.
Switch கூற்றினை பற்றி சிறு குறிப்பு எழுதுக
18.
இலவச மென்பொருள் விவரி
19.
மின்-வணிகத்தின் மூன்றாவது அலை பற்றி சிறுகுறிப்பு வரைக.
20.
வலை சேவையக பக்கம் மற்றும் கிளைன்ட் பக்கம் ஸ்கிரிப்டிங் மொழிகளை வேறுபடுத்துக
21.
22.
சமச்சீரற்ற குறியீடு குறியாக்கம் பற்றி எழுதுக.
23.
பேஜ்மேக்கரில் உள்ள ஏதேனும் மூன்று கருவிகளையும் அதன் விசைப்பலகை குறுக்கு வழிகளையும் கூறு.
24.
UN/EDIFACT பற்றி குறிப்பு வரைக.
25.
அசைவூட்டலின் சிறப்பம்சங்கள் மற்றும் தொழில் நுட்பங்களை விவரிக்கவும்
1.
ஒரு செயற்கூறு என்பது ஏற்கனவே நிரல்பெயர்ப்பியல் முன் வரையறுக்கப்பட்டுள்ளன. ஒரு குறிப்பிட்ட பணியை செய்வதற்கான குறிமுறை தொகுதிகளை கொண்டுள்ளது. இந்த குறிமுறைகளை மீண்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரு செயற்கூறு குறிப்பிட்ட பணியை செய்வதற்காக அழைக்கப்படும் பொழுது மதிப்பை திருப்பி அனுப்பலாம் (அ) திருப்பி அனுப்பாமல் இருக்கலாம்.
2.
1. HTTP : Hyper Text Transfer Preprocessor என்பதன் சுருக்கமாகும்.
2. இது உலகளாவிய இணையத்தில் பயன்படுத்தப்படும் ஒரு நெறிமுறை (Protocol) ஆகும்.
3. இந்த நெறிமுறைகள் எவ்வாறு செய்திகளை வடிவமைத்து அனுப்புகிறது என்பதை வரையறுக்கிறது மற்றும் பல்வேறு கட்டளைகளுக்கு வலை சேவையகம் மற்றும் உலவி எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை வரையறுக்கிறது.
3.
1. தரவுகளை அட்டவணையிலிருந்து நீக்க "DELETE" கட்டளை பயன்படுகிறது.
2. அனைத்து பதிவுகளையோ (அ) குறிப்பிட்ட நெடுவரிசைகளையோ அட்டவணையிலிருந்து நீக்கலாம்.
3. ஏதேனும் குறிப்பிட்ட நெடுவரிசையை, நீக்க வேண்டுமெனில் அந்த நிபந்தனையை WHERE கட்டளையைப் பயன்படுத்தி நீக்கலாம்.
4. நிபந்தனை தரவில்லை எனில் அனைத்து தரவுகளும் நீக்கப்படும்.
Syntax1:
DELETE from tablename WHERE
Columnname ="value",
எ.கா :
mysql > DELETE from Biodata WHERE age =15;
4.
1. ஒன்றுடன் ஒன்று உறவுநிலை
2. ஒன்றுடன் பல உறவுநிலை
3. பலவற்றுடன் பல உறவுநிலை
ஒன்றுடன் ஒன்று உறவு நிலை :
A மற்றும் B என்ற இரண்டு உருப்பொருளை எடுத்துக் கொள்வோம். உருப்பொருள் A-வின் 0 (அ) 1 நிலை. உருப்பொருளின் B-யின் 0 (அ) 1 நிலையுடன் தொடர்பு படுத்தப்படும் பொழுதோ மற்றும் உருப்பொருள் B-யின் 0 (அ) 1 நிலையுடன் தொடர்புப்படுத்தப்படும். பொழுதோ, உறவுநிலை தரவுத்தள வடிவமைப்பில், ஒன்றுடன் ஒன்று உறவுநிலை உருவாகிறது.
ஒன்றுடன் பல உறவுநிலை :
A மற்றும் B என்ற இரண்டு உருப்பொருளை எடுத்துக் கொள்வோம். உருப்பொருள் A-ன் 1 நிலை. உருப்பொருள் B-ன் 0 (அ) 1 (அ) பல நிலைகளுடனும், மற்ற உருப்பொருள் Bன் 1 நிலை. உருப்பொருள் A-ன் 0 (அ) 1 நிலைகளுடனும் தெரிவுபடுத்தும் பொழுது, உறவுநிலை தரவுத்தள வடிவமைப்பில் ஒன்றுடன் பல உறவுநிலை உருவாகிறது.
பலவற்றுடன் பல உறவுநிலை :
A மற்றும் B என்ற இரண்டு உருப்பொருள்களை எடுத்துக் கொள்வோம். உருப்பொருள் A ன் 1 நிலை உருப்பொருள் Bன் 1 நிலை, உருப்பொருள் A ன் 0 (அ) 1 (அ) பல நிலைகளுடன் தொடர்புப்படுத்தும் பொழுது, உறவுநிலை தரவுத்தள வடிவமைப்பில், பலவற்றுடன் பல (N:N) உறவுநிலை உருவாகிறது.
5.
1. ஒரு ஆவணச் சாளரத்தின் கீழ் இடது மூலையில் மாஸ்டர் பக்கங்களைக் குறிக்கும் ஒரு பணிக்குறியைக் காணலாம்.
2. L மற்றும் R எழுத்துக்கள் எதிரெதிர் பக்கம் கொண்ட மாஸ்டர் பக்கப் பணிக்குறியைக் குறிக்கப் பயன்படுகிறது.
3. ஒற்றைக் பக்க மாஸ்டர் பணிக்குறியைக் குறிக்க R மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
6.
1. பட்டிப் பட்டையில் File > Open என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். (அ) கருவிப் பட்டையில் Open சுட்டுக்குறியைக் கிளிக் செய்ய வேண்டும். (அ) விசைப்பலகையில் Ctrl+O என்னும் சாவி சேர்மானத்தை அழுத்த வேண்டும். Open publication உரையாடல் பெட்டி திரையில் தோன்றும்.
2. திறக்க வேண்டிய ஆவணத்தின் பெயரை File name உரைப்பெட்டியில் தட்டச்சு செய்ய வேண்டும். (அ) பெயர் பெட்டியில் இருந்து ஒற்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
3. பிறகு Open பொத்தானைக் கிளிக் செய்ய வேண்டும்.
7.
1. செருகும் புள்ளியை அழிக்க வேண்டிய எழுத்தின் இடது புறம் வைத்து விசைப்பலகையில் Delete விசையை அழுத்த வேண்டும்.(அ)
2. செருகும் புள்ளியை அழிக்க வேண்டிய எழுத்தின் வலது புறம் வைத்து விசைப்பலகையில் Backspace விசையை அழுத்த வேண்டும்.
உரைத் தொகுதிகளை அழிக்க
1. அழிக்க வேண்டிய உரைத் தொகுதியை தேர்ந்தெடுக்க வேண்டும்.
2. விசைப்பலகையில் Delete அல்லது Backspace விசையை அழுத்த வேண்டும். (அ) பட்டிப்பட்டையில் Edit> clear என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
8.
Musical Instrument Digital Interface (MIDI):
1. கணினிகள் மற்றும் மின்னணு கருவிகளுக்காக உருவாக்கப்பட்ட தரமான தொடர்பு கருவியாகும்.
2. பல்லூடகத்தில் இந்த கருவி நெகிழ்வானது மற்றும் செயல்திட்டங்களை இயற்ற எளிதானது.
3. ஒலி மற்றும் மென்பொருளை வரிசையாக தொகுக்கும் கருவிகள் MIDIக்கு தேவை.
9.
1. சிறந்த ஓட்டத்தினை அடைவதற்காக வடிவமைக்கப்பட்ட இலவச திறந்த மூல கொள்கலன் வடிவமாகும்.
2. உயர் இறுதி தர இலக்க பல்லூடாகத்தில் சிறிது சிறிதாக மாறி வருகிறது.
3. தரத்தின் அடிப்படையில் இதை MP3 கோப்புகளோடு ஒப்பிடப்படும்.
10.
| GET வழிமுறை | POST வழிமுறை | |
| 1 | உள்ளீடு செய்யப்படும் தரவானது URL முகவரி வழியாக சேவையகத்திற்கு அனுப்பப்படுகிறது. | உள்ளீடு செய்யப்படும் தரவானது கிளைக் கணிப்பொறியின் HTTP request னுடைய கோரிக்கை உடற்பகுதியில் சேமிக்கப்படுகிறது. |
| 2 | உள்ளீடு செய்யப்பட்ட அனைத்துத் தரவினையும் எல்லோரும் பார்க்க முடியும். | உள்ளீடு செய்யப்பட்ட தரவுகளை மற்றவர் பார்க்க முடியாது. |
| 3 | பாதுகாப்பற்றது | பாதுகாப்பானது. |
11.
கட்டளை :
mysqli_connect("Server Name", "User Name", "Password", "DB Name");
எடுத்துக்காட்டு : $conn=mysqli_connect($dbhost, $dbuser, $dbpass);
12.
1. கணினி வலையமைப்புகளை பயன்படுத்துவது மூலம் ஒரு நிறுவனம் அதிக பணத்தை சேமிக்க முடியும்.
2. இது காகித வேலை, மனித சக்தி மற்றும் நேரத்தை சேமிக்கிறது.
3. ஊதியம், சரக்கு, விலைப்பட்டியல் போன்றவற்றைக் கணக்கிடுவதில் துல்லியம்.
4. எ.கா: ஒரு நிறுவனம் ஒவ்வொருவருக்கும் முதல் நிலை கணிப்பொறியை வழங்க முடியாது. ஆனால் இணையத்தை பயன்படுத்தி தனியாள் கணிப்பொறியியல் முதல்நிலை கணிப்பொறியின் செயல்பாட்டை வழங்க முடியும்.
13.
1. ஒரு RFID குறிச்சொல்: இது ஒரு சிறிய ஆண்டெனாவுடன் இணைக்கப்பட்ட மற்றும் மூலக்கூறு மீது வைக்கப்பட்டுள்ள சிலிக்கன் மைக்ரோசிப்-ஐ கொண்டுள்ளது.
2. ஒரு படிப்பான் : தகவல் தொடர்புக்குப் பயன்படுத்தப்படும் சிக்னல்களை பரிமாறவும் பெறுவதற்குமான ஆண்டெனாவுடன் கூடிய வருடியைக் கொண்டுள்ளது.
3. ஒரு கட்டுப்பாட்டாளர்: இது நுண்செயலியுடன் கூடிய புரவலன் கணினியாகும். இது படிப்பானின் உள்ளீட்டைப் பெற்று தரவுகளைச் செயலாக்குகிறது.
14.
| முழுமையான URL | சார்பு URL | |
| 1 | இது இணையத்தில் உள்ள ஒரு கோப்பின் முழுமையான முகவரி. | இது இணையத்தில் உள்ள கோப்பின் முழுமையற்ற முகவரி. |
| 2 | இது இணையத்தில் கோப்பினைத் தேடித் கண்டுபிடிக்கத் தேவையான அனைத்து தகவல்களையும் கொண்டுள்ளது. | இது கோப்புப் பெயர் அல்லது கோப்புறையுடன் கூடிய கோப்புப் பெயரைக் கொண்டது. |
15.
do while மடக்கு எப்பொழுதும் மடக்கினை முதல் முறை செயல்படுத்தும் போதே மடக்கின் உடற்பகுதியில் உள்ள கூற்றுகளை ஒரு முறை செயல்படுத்தும். ஆனால், கொடுக்கப்பட்ட நிரல் தொகுதியை நிபந்தனை சோதிப்பதற்கு முன்னர் ஒரே ஒரு முறையேனும் செயல்படுத்தும். அதாவது, இங்கே நிபந்தனை , மடக்கின் இறுதியில் மட்டுமே சோதிக்கப்படுகிறது.
கட்டளை அமைப்பு:
do {
code to be executed;
} while (condition is true);
16.
ஈத்தர்நெட் வடமிடலில் நான்கு முக்கிய பகுதிகள் உள்ளன
(i) இணைப்பு வடம்
(ii) RJ - 45 இணைப்பி
(iii) ஈத்தர் நெட் தொடர்பி
(iv) கிரிம்பிங் கருவி
17.
1. switch கூற்று பல்வேறு நிபந்தனைகளின் அடிப்படையில் பல்வேறு செயல்களைச் செய்ய பயன்படுகிறது.
switch(n) {
case label 1:
code to be executed if n=label1;
break;
case label2:
code to be executed if n= label 2; .
break;
case label3:
code to be executed if n=label3;
break;
default:
code to be executed if n is different
from all labels;
}
2. break கூற்றை ஒவ்வொரு case கூற்றின் இறுதியில் கொடுக்க வேண்டும். இல்லையெனில் அந்த case தொகுதியைத் தொடர்ந்து வரும் கூற்றுகள் செயல்படுத்தப்படும்.
18.
(i) இலவச மென்பொருள் என்ற கருத்து 1980 களில் MIT யை சேர்ந்த ரிச்சர்ட் ஸ்டால்மேன் என்ற ஆராய்ச்சியாளரால் உருவாக்கப்பட்டது
(ii) பயனர் தங்களது விருப்பம் போல் மென்பொருளை பயன்படுத்த உரிமை அளிக்கிறது.
(iii) இலவச மென்பொருள் என்பது பயனர் எந்தவித செலவுமின்றி தரவிறக்கம் செய்து பயன்படுத்தக் கூடிய தனியுரிமை மென்பொருள். எவ்வாறாயினும் அதன் மூலக்குறிமுறையை மாற்ற முடியாது.
19.
மின் வணிகத்தின் மூன்றாம் அலை 2012 - நிகழ்காலம் வரை
1. மூன்றாவது அலை கைபேசி தொழில்நுட்பங்களால் கொண்டு வரப்பட்டது
2. இது நிகழ் நேரம் மற்றும் தேவை அடிப்படையில் (on-demand) கைபேசி சாதனங்கள் மூலம் பயனர்களை இணைக்கப்படுகிறது
3. குறிப்பிட்ட இருப்பிடம் சார்ந்த தொகுக்கப்பட்ட தகவல்கள், நேர அடிப்படையில் மட்டுமல்லாமல் புவியியல் ஆயத் தொலைவுகள் மூலம் வடிகட்டப்படுகிறது
4. வலை 3.0 என்ற பதம், செயற்கை நுண்ணறிவு, Semantic Web, Generic Database போன்றவை அடங்கிய எதிர்கால இணையத்தின் பல்வேறு பண்புகளைச் சுருக்கமாகத் தொகுத்தளிக்கிறது
20.
| வலை சேவையக பக்க ஸ்கிரிப்டிங் | கிளைன்ட் பக்கம் ஸ்கிரிப்டிங் |
|---|---|
| 1. ஸ்கிரிப்ட் குறிமுறை முழுவதும் வலை சேவையைக் கணிப்பொறியில் இயங்குகிறது | ஸ்கிரிப்ட் குறிமுறை முழுவதும் வலை உலாவியில் இயங்குகிறது. |
| 2. கிளைன்ட் பக்கம் மூலக்கூறி முறையை பார்க்க முடியாதபடி மறைத்து வைத்து பயன்படுத்தப்படும். | வலை உலாவியில் முன்னின்று செயல்படுத்தப்படும். பயனர் மூலக்கூறி முறையைப் பார்க்க முடியும். |
| 3. சேவையகக் கணிப்பொறி உடனான ஊடுதல் தேவை. | சேவையகக் கணிப்பொறியுடனான ஊடாடுதல் தேவையில்லை. |
| 4. பாதுகாப்பானது | பாதுகாப்பற்றது. |
21.
22.
(i) சமச்சீரற்ற குறியீடு குறியாக்கம் (Asymmetric Key Encryption) பொதுக் குறியீடு குறியாக்கம் என்றும் அழைக்கப்படுகிறது.
(ii) இது பொது குறியீடு மற்றும் எண்முறைச் சான்றிதழ்களை பயன்படுத்துகிறது.
(iii) RSA, ECC, DSA போன்ற நெறிமுறைகள் சமச்சீரற்ற குறியீடு குறியாக்க தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றன.
23.
| கருவிகள் | விசைப்பலகை குறுக்கு வழி |
| 1. பாயின்டர் டூல் (Pointer tool) | F9 |
| 2. ரொட்டேடிங் டூல் (Rotating tool) | Shift+F2 |
| 3. லைன் டூல் (Line tool) | Shift+F3 |
24.
1. United Nations / Electronic Data Interchange for Administration, Commerce and Transport (UN/EDIFACT) ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு சர்வதேச EDI தரநிலை ஆகும்.
2. 1987ல் சர்வதேச UN/EDIFACT தரப்படுத்தலுக்கான அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டது.
3. இது வணிக பரிவர்த்தனைகளுக்கு சர்வதேச தரத்திலான பல்-தொழில்துறை மின்னணு தரவு பரிமாற்ற தரப்பாடுகள் ஆகும்.
4. இதில் சர்வதேச அளவில் ஒப்புக்கொண்ட தரப்பாடுகள், அட்டவணைகள் மற்றும் தற்சார்பு கணினி அமைப்புகளுக்கிடையே உள்ள கட்டமைக்கப்பட்ட தரவுகளின் மின்னணு பரிமாற்றத்திற்கான வழிகாட்டுதல்கள் ஆகியவை அடங்கும்.
25.
அசைவூட்டலில், திரை பொருள் என்பது ஒரு வெக்டர் படமாகும்.
(i) எண் மாற்றத்தைப் பயன்படுத்தி ஒருங்கிணைப்புகளை வரையறுக்க படத்துடன் அதன் பாதையின் இயக்கம் கணக்கிடப்படும்.
(ii) குறைந்தபட்ச சட்டக விகிதம் விநாடிக்கு 16 சட்டங்கள் என இருந்தால் மென்மையான தோற்றத்தைக் கொடுக்கும்.
(iii) இயற்கை தோற்றத்திற்கு குறைந்தபட்சம் விநாடிக்கு 25 சட்டகங்களாக இருத்தல் வேண்டும்.
தொழில்நுட்பம் :
(i) அசைவூட்டல் இரு அல்லது முப்பரிமாணங்களைக் கொண்டது.
(ii) திரையில் X, மற்றும் Y அச்சுகளுக்கு இடையேயான பரப்பில் இரு பரிமாண அசைவூட்டல் நிழற்படத்தை உயிரோட்டமாகக் கொண்டு வருகிறது.
(iii) முப்பரிமாண அசைவூட்டத்தில் X, Y மற்றும் Z ஆகிய மூன்று அச்சுகளுக்கிடையே உயிரோட்டம் நடைபெறுகிறது.
(iv) அசைவூட்டல் கருவிகள் மிகவும் சக்தி வாய்ந்தவை ஆகும். இரண்டு வகையான அசைவூட்டல்களாவன:
1. பாதை அசைவூட்டல்
2. சட்டக அசைவூட்டல்
1. பாதை அசைவூட்டல் :
மாறாத பின்னணியைக் கொண்ட திரையில் ஒரு பொருளை நகர்த்துவதை உள்ளடக்கியது.
2. சட்டக அசைவூட்டல் :
பல பொருட்கள் ஒரே சமயத்தில் நகர்வதற்கு அனுமதிக்கிறது மற்றும் பின்னணி அல்லது பொருள்களும் மாறுகிறது.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards