12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Maths Applications of Matrices and Determinants Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 02/03/2021
12ஆம் வகுப்பு கணினி பயன்பாடுகள் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய இரண்டு மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Computer Application Reduced Syllabus Two mark Important Questions - 2021(Public Exam)
12ஆம் வகுப்பு Computer Applications / கணினி பயன்பாடுகள் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Applications / கணினி பயன்பாடுகள் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Applications Test

1.
சந்தைப்படுத்தல் குறிப்பு வரைக.
2.
செல் என்றால் என்ன?
3.
விரிவாக்கம் தருக.
(i) WWW,
(ii) SAGE,
(iii) WAN,
(iv) ARPANET
4.
PHP தொடரியலின் வகைகளை எழுதுக.
5.
ஜூம் டூலை மூலமாக பெரிதாக்குதல் மற்றும் சிறிதாக்குதலுக்கான வழிமுறைகளை எழுது.
6.
பல்லூடகம் வழங்கும் சேவையை எழுதுக ?
7.
ICANN என்றால் என்ன?
8.
MYSQL வில் WHERE பிரிவுடன் பயன்படுத்தக்கூடிய செயற்குறிகளைப் பட்டியலிடு.
9.
பொதுவாகப் பயன்படுத்தப்படும் தரவுத்தளங்களைப் பட்டியலிடுக.
10.
நீடித்த திறன் என்றால் என்ன?
11.
மொபைல் வலையமைப்பில் பயனர் எவ்வாறு இணைப்பைப் பெறுகிறார்?
12.
ஹேக்கர்ஸ் என்பவர் யார்?
13.
RDBMS மென்பொருளுக்கு சில உதாரணங்கள் தருக.
14.
HTML படிவம் என்றால் என்ன?
15.
கடன் அட்டை அல்லது பற்று அட்டைகளிலிருந்து சேமிக்கப்பட்ட மதிப்பு அட்டை எவ்வாறு வேறுபடுகிறது?
16.
மின் - வணிகத்தில் G2C மாதிரியை விளக்குக.
17.
Open NMS ன் வகைகள் யாவை?
18.
Crimping என்றால் என்ன?
19.
பேஜ்மேக்கரில் உரையின் நிறத்தை எவ்வாறு மாற்றுவாய்?
20.
திரை உருளல் செய்தல் என்றால் என்ன? அதை எவ்வாறு செய்வாய்?
21.
WAV பற்றி குறிப்பு வரைக.
22.
RTF படிவம்-குறிப்பு வரைக.
23.
HTML ல் உள்ள உலாவு பொத்தானை வரையறு.
24.
PHP ல் உள்ள படிவத்தை கையாள்வதில் உள்ள வழிமுறையினைப் வரையறு.
25.
வலைத் தரவுத்தளம் என்றால் என்ன?
26.
MySQLi செயற்கூறு என்பது என்ன?
27.
இணையத்தை வரையறு.
28.
மொபைல் வலையமைப்பின் பயன் என்ன?
29.
தீர்வி என்றால் என்ன?
30.
IP முகவரிகளின் வகைகள் யாவை?
31.
while மடக்கின் கட்டளை அமைப்பை எழுதுக.
32.
for மடக்கை வரையறு.
33.
கிளிப்பிங் கருவி பயன்படுத்துவது என்ன?
34.
USB வடங்களின் பயன்கள் என்ன?
35.
Switch கூற்றின் பயன் என்ன?
36.
if else கூற்றின் கட்டளை அமைப்பை எழுதுக
37.
தொடர்புருத்த அணிகளை வரையறு.
38.
PHP-ன் செயற்கூறு வரையறுக்கவும்
39.
NS2 சிறுகுறிப்பு தருக
40.
மின்-வணிகம் வரையறு.
41.
PHP – ல் மாறிகளை எவ்வாறு அறிவிக்க வேண்டும்?
42.
ஸ்கிரிப்டிங் மொழிகளின் வகைகள் யாவை?
43.
மின்-பணப்பை கருத்தை விளக்குக.
44.
ஒற்றை (Single) மற்றும் பல (multi) மதிப்பு பண்புக்கூறுகளை பட்டியலிடுக
45.
மின்-வணிகத்தின் பல்வேறு வகையான பாதுகாப்புத் தொழில்நுட்பங்களை பட்டியலிடுக.
46.
டைபோபைரஸி பற்றி சிறுகுறிப்பு வரைக.
47.
உரைத்தொகுதி என்றால் என்ன?
48.
EDI துணைக்குழு பற்றி குறிப்பு வரைக.
49.
EDI யின் நான்கு முக்கிய கூறுகள் எவை?
50.
பல்லூடக கூறுகளைப் பட்டியலிடுக.
1.
(i) எந்த ஒரு தொழிலும் சந்தைப்படுத்துதல் மிக முக்கிய பங்கை வகிக்கிறது.
(ii) இணையம் மற்றும் சமூக ஊடகங்களைத் திறம்படப் பயன்படுத்தி உலகெங்கும் நமது தயாரிப்பை எடுத்துச் செல்லலாம். சந்தைப்படுத்துதலை மிக விரைவிலேயே தொடங்கலாம்.
(iii) கவர்ச்சியுள்ள தலைப்புகள் மற்றும் சின்னங்களை மேலும் புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கின்றன.
2.
மொபைல் வலையமைப்பு அல்லது செல்லுலார் வலையமைப்பு 'செல்' என்று அழைக்கப்படும். அதிக எண்ணிக்கையிலான சமிக்ஞை பகுதிகளால் உருவாக்கப்பட்டது.
3.
(i) World Wide Web
(ii) Semi-Automatic Ground Environment
(iii) Wide Area Network
(iv) Advanced Research Projects Agency Network.
4.
மூன்று வகையான PHP தொடரியல் உள்ளன.
அவை:
(i) தானமைவு தொடரியல்
(ii) குறுகிய திறந்த ஒட்டுகள் (Short open tags).
(iii) HTML ஸ்கிரிப்ட் உட்பொதிந்த (embed) ஒட்டுகள்.
5.
ஜூம் டூல் (Zoom tool) மூலமாக ஆவணத்தின் எந்தவொரு பகுதியையும் பெரிதாக்கியும் (magnify), சிறிதாக்கியும் (reduce) காட்ட முடியும். ஜூம் டூலை இருமுறை கிளிக் செய்து ஆவணப் பக்கத்தின் உண்மையான அளவையும், Alt செய்து ஆவணப் பக்கம் சன்னல் திரையுடன் பொருந்தும் அளவையும் பெற முடியும்.
6.
சேமித்தல், தகவல் தொடர்பு , வழங்கல் மற்றும் உரை, ஒளி, நிழற்படம், வரைகலை மற்றும் ஒலி ஆகியவற்றின் உள்ளீடு வெளியீடு ஊடாடுதல் போன்ற சேவைகளை வழங்குகிறது .
7.
(i) ICANN (Internet Corporation for Assigned Names and Numbers) என்பது இலாப நோக்கமற்ற நிறுவனமாகும்.
(ii) இது களப்பெயர்கள் மற்றும் IP முகவரிகள் போன்ற அனைத்து இணைய வளங்களுக்கான பெயர்களையும் எண்களையும் வழங்குகிறது
8.
| செயற்குறி வகை | செயற்குறி |
| கணக்கீட்டுச் செயற்குறி | +,-,*,% |
| ஒப்பிட்டுச் செயற்குறி | =,!=,<,> |
| தருக்கச் செயற்குறி | AND,ANY,BETWEEN,EXISTS,IN,LIKE,NOT,OR,UNIQUE |
9.
1. DB2
2. SQLite
3. MySQL
4. SQL Server
5. Oracle
6. Sybase
7. PostgreSQL
10.
நீடித்த திறன் : ஒரு அமைப்பு தோல்வி அடையும் போது அனைத்து பரிவர்த்தனைகளையும் திரும்பப் பெறும் திறன்.
11.
(i) மொபைல் வலையமைப்பு அல்லது செல்லுலார் வலையமைப்பு 'செல்' என்று அழைக்கப்படும் அதிக எண்ணிக்கையிலான சமிக்ஞை பகுதிகளால் உருவாக்கப்பட்டது.
(ii) இந்த செல்கள் ஒரு பெரிய பரப்பளவை உருவாக்குவதற்காக இணைத்துள்ளது.
(iii) பயனர்கள் இணைப்புகளை இழக்காமல் பல்வேறு செல்களை கடக்க முடியும்.
(iv) ஒவ்வொரு செல்லிலும், மொபைல் சமிக்ஞைகளை அனுப்ப மற்றும் பெறுவதற்கான ஒரு அடிப்படை நிலையம் உள்ளது.
(v) மொபைல் சாதனம் அருகில் உள்ள (அ) குறைந்தபட்ச அடிப்படை நிலையத்துடன் இணைக்கப்படும்.
12.
ஹேக்கர்ஸ் என்பவர்கள் திறமையான கணினி வல்லுநர்கள். அவர்கள் தொழில்நுட்ப அறிவை பயன்படுத்தி மற்றவர்களின் கணக்குகளை அணுகுவர்.
13.
1. MySQL
2. Oracle
3. IBM DB2
4. மைக்ரோசாப்ட் SQL SERVER
14.
HTML: (Hypertext markup language) என்பது வலைப்பக்கங்கள் மற்றும் வலைப் பயன்பாடுகளை உருவாக்குவதற்கான பொதுவான குறியீட்டு மொழியாகும். ஒரு HTML படிவம் என்பது வலைத்தளத்தை பார்வையிடுவர் மூலம் உள்ளீடு பெற்று அதனை CGI, ASP ஸ்கிரிப்ட் (or) PHP ஸ்கிரிப்ட் மூலம் back-end பயன்பாட்டிற்கு அனுப்புகிறது.
15.
(i) சேமிக்கப்பட்ட மதிப்பு அட்டையில் அட்டை உரிமையாளர் பெயர் இல்லாமலும் இருக்கலாம்.
(ii) இந்த அட்டையைப் பெற வாடிக்கையாளர்கள் வங்கிக் கணக்கைப் பெற்றிருக்க வேண்டிய அவசியமில்லை.
16.
1. மின் - வணிகத்தில் G2C, C2G யை மிகவும் ஒத்திருக்கிறது. இங்கே அரசாங்கம் தனது குடிமக்களுக்கு இணையதளத்தின் மூலமாக அதன் சேவைகள் மற்றும் தகவல்களைப் பெறுவதற்கான தளத்தை வழங்குகின்றது.
2. நிகழ்நிலையில் சான்றிதழ்களை வழங்குவதும் இவ்வகை சேவையில் அடங்கும்.
எ.கா: http://csc.gov.in/governmenttocitizen
17.
1. Meridian
2. Horizon
1. மெரிடியன்: நிறுவனம் மற்றும் வியாபார அமைப்பிற்கு ஏற்றது. திறன் மற்றும் நீண்ட கால சேவைக்கு ஏற்றது.
2. ஹரிசன்: புதிய கண்டுபிடிப்புகள் அடிக்கடி தேவைப்படும் IT Ecosystems மற்றும் புதிய மேலாண்மை திட்டத்திற்கு ஏற்றது.
18.
Crimping என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட உலோகத் துண்டு (அ) கம்பிகள் உருமாற்றி ஒற்றை பற்றிக் கொள்ளும் வகையில் இணைக்கும் செயலாகும்.
19.
1. வண்ணமிட வேண்டிய உரையைத் தேர்வு செய்ய வேண்டும்.
2. பட்டிப்பட்டையில் Window > show colors என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். இப்பொழுது colors palette தோன்றும். அதில் தேவையான வண்ணத்தைக் கிளிக் செய்ய வேண்டும்.
20.
1. ஆவணத்தை மேலும் கீழுமாகவும் இடது மற்றும் வலது புறமாகவும் நகர்த்துவதை திரை உருளல் செய்தல் என்கிறோம்.
2. ஆவணத்தை மேலும் கீழுமாக நகர்த்த செங்குத்துத் திரை உருளல் பட்டையும், இடது மற்றும் வலது புறமாக நகர்த்த கிடைமட்டக் திரை உருளல் பட்டையும் பயன்படுகின்றது.
21.
WAV (Waveform Audio File Format) :
1. விண்டோஸில் குறுக்கப்படாத ஒலி கோப்புகளைச் சேமிக்கும் மிகவும் பிரபலமான ஒலி கோப்பு வடிவமாகும்.
2. குறைக்கப்பட்ட கோப்பின் அளவைப் பெறுவதற்காக MP3 போன்ற மற்ற கோப்பு வடிவங்களுக்கு மாற்றி அமைக்க முடியும்.
22.
RTF (Rich Text Format) மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் 1987 ஆம் ஆண்டு பிரசுரிக்கப்பட்ட தயாரிப்புகளின் குறிப்புகள் மற்றும் குறுக்கு பணித்தள ஆவணங்களின் பரிமாற்றங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட முதன்மைக் கோப்பு வடிவமாகும்.
23.
Browse பொத்தான் (அ) கோப்பு தேர்ந்தெடுத்தல் (file -select) புலம் என்பது கிளைக் கணிப்பொறியிலிருந்து ஒரு கோப்பினைத் தேர்ந்தெடுத்து சேவையகக் கணிப்பொறிக்கு அனுப்பப் பயன்படும் HTML படிவ உறுப்புகளில் ஒன்றாகும்.
24.
1. படிவ ஒட்டு (< Form >tag), ஆவணத்திலுள்ள அனைத்து படிவ உறுப்புகளைக் கட்டுப்படுத்தவும், வழிமுறையைக் (POST (அ) GET) குறிப்பிடவும் பயன்படுகின்றது.
2. முறைமை என்பது HTML ல் உள்ள படிவ ஓட்டின் (< Form >tag) ஒரு பண்புக்கூறாகும்.
3. HTML படிவ உறுப்புகளில் பயனர் உள்ளீடுகளை வழங்கி submit பொத்தானைக் கிளிக் செய்யும் பொழுது, கோரிக்கை (Request) ஒன்று உருவாக்கப்பட்டு படிவ ஓட்டின் Action பண்புக்கூறில் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள PHP கோப்பினை அடைகின்றது. அனைத்து உள்ளீட்டு மதிப்புகளும் தொகுக்கப்பட்டு POST (அ) GET வழிமுறை மூலம் சேவையகத்திற்கு அனுப்பப்படுகின்றன.
25.
இணையம் வழியாக அணுகுவதற்கு, மேலாண்மை செய்வதற்கும் உருவாக்கப்பட்ட ஒரு தரவுத்தள பயன்பாடாகும்.
26.
MySQLi என்பது PHP மொழியின் நீட்டிப்பு ஆகும். இது MySQL தரவுத்தளத்தை அணுகப் பயன்படுகிறது.
27.
1. இணையம் என்பது வலையமைப்புகளின் வலையமைப்பு - உலகளாவிய வலையமைப்பு ஆகும்.
2. இது உலகளாவிய தனிப்பட்ட வலைப்பின்னல்களின் இணைப்பு.
3. இது கல்வி, தொழில், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களால் தனித்தனியாக இயக்கப்படுகிறது.
28.
மொபைல் வலையமைப்பின் பயன்கள் :
(i) மொபைல் சாதனங்கள் இயங்க குறைவான மின்சாரம் பயன்படுகிறது.
(ii) செல் கோபுரங்கள் வேறுபட்ட பல இணைப்புகளை இணைக்கின்றன.
(iii) கம்பியில்லாமல் மொபைல் வலையமைப்பினை இணைக்க முடியும்.
29.
(i) தீர்வி (Resolver) என்பது ஒரு களப்பெயரை ஐபி முகவரியாக மொழிபெயர்க்கும் பணியை துவக்கும் நிரலாகும்.
(ii) தீர்வி புரவன் (Host) கணினியிலேயே சேமிக்கப்பட்டு இருப்பதால், தீர்விக்கும் பயனர் நிரலுக்கும் இடையேயான தொடர்பை உருவாக்க எந்த நெறிமுறையும் அவசியமில்லை.
30.
IP முகவரி இரண்டு வகைப்படும்
1. IPv4
2. IPv6
1. IPv4 முகவரி: கணினி அல்லது சாதனத்திற்கு வழங்கப்படும் 32 பிட் தனித்துவமான முகவரி ஆகும்.
2. IPv6 முகவரி : ஒரு கணினி அல்லது சாதனத்திற்கு கொடுக்கப்படும் 128 பிட் தனிப்பட்ட முகவரி ஆகும்.
31.
while (condition is true) {
code to be executed;
}
32.
1. for மடக்கு என்பது முக்கியமான மடக்கு அமைப்பு ஆகும். இது பன்முறை செயல்பாட்டிற்கு பயன்படுகிறது.
2. நிரலர் முன்னதாகவே எத்தனை முறை மடக்கினை செயல்படுத்தப்பட வேண்டும் என்பதை அறிந்திருந்தால் for மடக்கினைப் பயன்படுத்தலாம்.
33.
கிளிப்பிங் கருவி: வடத்துடன் ஈத்தர்நெட் இணைப்பியை இணைக்கப் பயன்படும் ஒரு கருவி
1. வடத்தை தேவையான நீளம் வெட்டிக்கொள்ளவும்.
2. வடத்தின் இருபுறமும் இருந்து 1 அங்குல அளவிற்கு பாதுகாப்பு உறையை நீக்கவும். இதனால் முறுக்கப்பட்ட இணை கம்பிகள் வெளியே தெரியும்.
3. கம்பி அகற்றப்பட்ட பிறகு, சிறிய கம்பிகளை அவிழ்த்து, சரியான வயரிங் அமைப்பில் வைக்கவும். (T568 B பொதுவாக விரும்பப்படுகிறது).
34.
USB (Universal Serial Bus) வடம் விசைப்பலகை, சுட்டி மற்றும் பிற புறச் சாதனங்களை கணினியுடன் இணைக்கப் பயன்படுகிறது
35.
Switch கூற்று பல்வேறு நிபந்தனைகளின் அடிப்படையில் பல்வேறு செயல்களைச் செய்யப் பயன்படுகிறது.
36.
if(condition)
{
Execute statement (s) if condition is true;
}
else
{
Execute statement(s) if condition is false;
}
37.
தொடர்புருத்த அணிகள் : தொடர்புருத்த அணிகள் என்பது திறவும் (Key) மதிப்பும் (Value) இணைந்த தரவு கட்டமைப்பாகும். நேரியல் அணியில் (Linear array) தரவுகளை தேக்கி வைப்பதற்கு பதிலாக தொடர்புருத்த அணிகளை கொண்டு தரவுகளை தேக்கி வைக்கலாம்
38.
ஒரு நிரலில் உள்ள ஒரு தொகுதியின் ஒரு பகுதி குறிப்பிட்ட செயல்பாட்டு பணிகளை செய்கிறது. (சேர்த்தல், செயற்படுத்துதல், நீக்குதல் கணக்கீடுதல் போன்றவை ).இந்த பகுதி (Segment) செயற்கூறு என்று அழைக்கப்படுகிறது. ஒரு செயற்கூறு என்பது ஒரு வகை துணை நிரல் அல்லது ஒரு நிரலில் உள்ள செயல்முறை ஆகும்.
39.
(i) NS2 என்பது Network Simulation பதிப்பு 2 என்பதன் சுருக்கமாகும்.
(ii) இது பொதுவாக வலையின் தொடர்பு மற்றும் நிகழ்வு சார்ந்த ஆய்வுக்கான திறந்த மூல சிமுலேசன் வகை சார்ந்த மென்பொருள் ஆகும்.
(iii) NS2 உருவாக்க மற்றும் இயக்க OTCL மற்றும் C++ உதவுகின்றன.
40.
மின்- வணிகம் என்பது கணிப்பொறி வலையமைப்புகள் வழியாகப் பொருட்கள், சேவைகள் அல்லது தகவல்களை வாங்கும் அல்லது விற்கும் வழிமுறை ஆகும்.
41.
1. PHP யில் '$' என்ற குறியுடன் தொடங்கும்.
2. மதிப்பிருத்தல் செயல் '=' செயற்குறியைப் பயன்படுத்தி செயல்படுத்தப்படும்.
3. இறுதியாக, ஒவ்வொரு கூற்றும் அரைப்புள்ளியுடன் (;) முடிவடையும்.
எ.கா : $a =5;
42.
ஸ்கிரிப்டிங் மொழிகளின் இரு வகைகள் யாவை :
1. பயனாளர் சார்ந்த ஸ்கிரிப்டிங் மொழிகள்.
2. சேவையகம் சார்ந்த ஸ்கிரிப்டிங் மொழிகள்.
43.
மின்னணு பணப்பை (e-Wallets) பயனர்கள் மின்னணு பரிவர்த்தனைகளைத் திறன் பேசிகள் அல்லது கணினிகள் மூலம் இணையத்தில் விரைவாக மற்றும் பாதுகாப்பாகச் செய்ய அனுமதிக்கிறது. ஒரு உண்மை யான பணப்பை போலவே மின்னணு பணப்பையானது நம்முடைய பணத்தை மின்னணு வடிவில் தேக்கி வைத்திருக்கும். நிகழ்நிலையில் (ONLINE) பொருட்களை வாங்குவதற்கு ஒரு வசதியாக வழி ஆகும்
44.
1. ஒற்றைப் மதிப்புடைய பண்புக்கூறுகள் ஒரு மதிப்பை மட்டுமே கொண்டிருக்கும்.பல மதிப்புகளை கொண்டிருக்காது.
எ.கா : Age பண்புக் கூறு.
| ஒற்றைப் மதிப்புடைய பண்புக்கூறுகள் | |
| பண்புக்கூறு | மதிப்பு |
| Age | 3 |
| Roll no | 85 |
2. பல மதிப்புடைய பண்புக்கூறுகள், ஒன்றுக்கு மேற்பட்ட மதிப்புகளைக் கொண்டிருக்கும்.
| பண்புக்கூறுகள் மற்றும் மதிப்புகள் | |
| பண்புக்கூறு | மதிப்பு |
| Degree | B.Tech, MBA |
| Bank_Account | SBI, HDFC |
45.
(i) குறியாக்கத் தொழில்நுட்பம் (Encryption technology)
(ii) அங்கீகார தொழில்நுட்பம் (Authentication technology)
(iii) பாதுகாப்பு அங்கீகார நெறிமுறைகள் (Authentication protocols)
46.
(i) டைபோபைரஸி என்பது சைபர் squatting ன் ஒரு வகையாகும்.
(ii) சில போலி வலைத்தளங்கள் பயனர்களின் பொதுவான தட்டச்சு பிழைகளை பயன்படுத்தி அவர்களை தங்கள் வலைத்தளத்திற்கு திசை திருப்பும் மோசடி ஆகும்.
எ.கா.:
www.goggle.com
www.faceblook.com
47.
1. பேஜ்மேக்கரில் உள்ள எல்லா உரைகளும் உரைத் தொகுதி என்று அழைக்கப்படும் கலன்களின் உள்ளே வைக்கப்பட்டிருக்கும்.
2. உரைத்தொகுதியானது நாம் தட்டச்சு செய்த உரையையோ (அ) ஒட்டிய உரையையோ (அ) வேறு ஆவணத்திலிருந்து கொண்டு வரப்பட்ட உரையையோ கொண்டிருக்கும்.
48.
1. சிக்கற்பாடு காரணமாக துறை சார்ந்த EDIFACT துணைத்தொகுப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
2. EDIFACT ன் இந்த துணை தொகுப்புகள் குறிப்பிட்ட பயனர் குழுக்களுக்குரிய செயல்பாடுகளை மட்டுமே உள்ளடக்கியிருக்கும்.
எ.கா: CEFIC இரசாயன தொழில் துறை.
49.
1. Standard Document Format
2. Translator and Mapper
3. Communication Software
4. Communication Network
50.
பல்லூடகம் என்பது உரை, நிழற்படம், அசைவுப் படம், ஒலி, ஒளிக்காட்சிகள் ஆகிய ஐந்து முக்கியக் கூறுகளைக் கொண்டுள்ளது.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards