12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 02/03/2021
12ஆம் வகுப்பு கணினி அறிவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் மற்றும் விடைகள் - 2021 - 12th Standard Tamil Medium Computer Science Reduced Syllabus Annual Exam Model Question Paper with Answer Key - 2021
12ஆம் வகுப்பு Computer Science / கணினி அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Science / கணினி அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Science Test

1.
பைத்தான் தொகுப்புகளை நிறுவுவதற்கான ஒரு மேலாண்மை மென்பொருள் எது?
pip
plt
cse
pip
2.
பின்வருவனவற்றுள் எதனை கொண்டு Tuple பிரிக்கப்பட்டிருக்கும்?
( ), ,
[ ], ,
[ ], :
( ), :
3.
பின்வரும் கூற்றின் வெளிப்பாடு யாது?
mylist = [34,45,48]
print [mylist.append (90)]
34,45,48,90
90,34,45,48
34,45,90,48
34,90,45,48
4.
அளபுருக்களின் பெயரை அடையாளம் கண்ட பின்பு ______ செயலுருபானது செயற்கூறினை அழைக்கிறது.
தேவைப்படும்
தானமைவு
சிறப்பு சொல்
மாறும்-நீளம்
5.
தரவுத்தள உருவாக்கிய பின்னர் பின்வருவனவற்றில் எவற்றில் குறிப்பிட்ட செயல்முறைகளில் தொகுப்பை பயன்படுத்தி தரவுகளை கையாளலாம்?
தரவு கட்டுப்பாட்டு மொழி
தரவு வரையறை மொழி
தரவு கையாளுதல் மொழி
பரிவர்த்தனைக்கான கட்டுப்பாட்டு மொழி
6.
ஒரு நெறிமுறையின் பல்வேறு உள்ளீட்டு அளவுக்கான நேர இடச்சிக்கல்களின் மதிப்பிடுவது என்பது
நெறிமுறை மதிப்பீடு
நெறிமுறை யுக்தி
நெறிமுறை செயல்திறன்
நெறிமுறை பகுப்பாய்வு
7.
ஒரு கணிப்பொறி நிரலை பல துணை நிரல்களாக பிரிக்கும் செயல்முறை எனப்படுவது
தொகுதி நிரலாக்கம்
பொருள்நோக்கு நிரலாக்கம்
இடைமுக நிரலாக்கம்
வரையெல்லை நிரலாக்கம்
8.
பின்வருவனவற்றுள் எதனை பயன்படுத்தி CSV கோப்பினுள் உருப்புகளை சேர்க்க முடியும்?
add ( )
write ( )
append ( )
addition ( )
9.
SQL- ல் மிகவும் பொதுவாக பயன்படுத்தப்படும் கூற்று ஏது?
cursor
select
execute
commit
10.
சரங்களை எந்த மாதிரியாக பிரிக்கும்பொழுது பிழையின்றி அமைந்தால், getopt( ) வெற்று அணியை திருப்பி அனுப்பும்?
argv மாறி
opt மாறி
args மாறி
ifile மாறி
11.
பின்வருவனவற்றுள் எது RDBMS?
Dbase
Foxpro
MS - Access
MS - Excel
12.
பின்வரும் எந்த set செயல்பாடு, இரண்டு set - களுக்கும் பொதுவான உறுப்புகள் நீங்கலாக மற்ற அனைத்து உறுப்புகளையும் உள்ளடக்கியது?
சமச்சீரான வேறுபாடு
வேறுபாடு
வெட்டு
ஒட்டு
13.
பின்வரும் வடிவமைப்பு குறியீடுகளுள் அடுக்கு குறியீட்டில் அச்சிட உதவும் மேல் எழுத்து எது?
%f
%E
%g
%n
14.
எந்த செயற்குறியை ஒப்பீடு செயற்குறி என்று அழைக்கப்படுகிறது?
கணக்கீடு
தொடர்புடைய
தருக்க
மதிப்பிருத்தல்
15.
அளபுருக்களை அனுப்பும் போது பக்க விளைவுகளை ஏற்படுத்தும் செயற்கூறு எவ்வாறு அழைக்கப்படும்?
Impure செயற்கூறு
Partial செயற்கூறு
Dynamic செயற்கூறு
Pure செயற்கூறு
16.
DBMS-ன் கூறுகள் பற்றி விரிவாக விளக்குக.
17.
ALTER கட்டளைப் பற்றி விரிவாக எழுதுக
18.
கீழேகாணும் நிரலின் வெளியீட்டை எழுதவும்.
x=20
x+=20
print ("The x +=20 is =",x)
x-=5
print ("The x-=5 is =",x)
x*=5
print ("The x*=5 is =",x)
x/=2
print ("The x/=2 is =",x)
x%=3
print ("The x%=3 is =",x)
x**=2
print ("The x**=2 is =",x)
x//=3
print ("The x//=3 is =",x)
#program End
19.
பைத்தான் எவ்வாறு C++ நிரல்களின் பிழைகளைத் கையாள்கிறது என்பதை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
20.
பின்வரும் செயற்கூறுகளின் பயன்பாட்டை எழுதுக.
(அ) plt.xlabel
(ஆ) plt.ylabel
(இ) plt.title
(ஈ) plt.legend( )
(உ) plt.show( )
21.
பின்வரும் குறிப்புகளைக் கொண்டு ITEM என்ற அட்டவணையை உருவாக்க பைத்தான் ஸ்கிரிப்ட்டை எழுதவும்.
அட்டவணைக்கு ஒரு பதிவை சேர்க்கவும்.
தரவுத்தளத்தின் பெயர் : ABC
அட்டவணையின் பெயர் : Item
நெடுவரிசையின் பெயர் மற்றும் விவரங்கள் :
| Icode | : | integer and act as primary key |
| Item Name | : | Character with length 25 |
| Rate | : | Integer |
| Record to be added | : | 1008, Monitor,15000 |
22.
பைத்தானில் ஒரு கோப்பை படிப்பதற்கான பல்வேறு வழிமுறைகளை எழுதுக.
23.
பைத்தானில் பயன்படும் சர செயற்குறிகளை தகுந்த எடுத்துக்காட்டுடன் விளக்குக.
24.
for மடக்குப் பற்றி விரிவான விடையளிக்கவும்.
25.
தரவு அருவமாக்கம் எவ்வாறு செயல்படுத்துவாய்? எடுத்துக்காட்டுடன் விளக்குக.
26.
பட்டை வரைபடம் என்றால் என்ன?
27.
தற்சுழற்சி செயற்கூறு என்றால் என்ன?
28.
பைத்தானில் இனக்குழு செயற்கூறுக்கும் சாதாரண செயற்கூறுக்கும் உள்ள வேறுபாடு யாது?
29.
பின்வரும் range ( ) எடுத்துக்காட்டுகளின் வெளியீட்டை எழுதுக.
range (1,30,1)
range (2,30,2)
range (30,3,-3)
range (20)
30.
CSV கோப்பினை திறக்கும் open கட்டளை எவ்வாறு கொடுக்கப்படல் வேண்டும்?
31.
தரவுத்தள அட்டவணையிலிருந்து அனைத்து பதிவுகளையும் பெறுவதற்கான வழிமுறை எது?
32.
Scripting மொழிக்கும் மற்ற நிரலாக்க மொழிக்கும் உள்ள தத்துவார்த்த வேறுபாடு யாது?
33.
பைத்தானில் உள்ள பல்வேறு செயற்குறிகள் யாவை?
34.
மாறிகளுக்கு எதற்காக வரையெல்லை பயன்படுத்தப்பட வேண்டும்? காரணம் கூறுக?
35.
செயற்கூற்றை வரையறுப்பதற்கான தொடரியல் விவரி.
36.
பைத்தானில் கூறுநிலைகளை எவ்வாறு தருவித்துக் கொள்வது?
37.
தொகுதி - சிறுகுறிப்பு வரைக
38.
csv.writer ( ) செயற்கூறின் தொடரியலை எழுதி அதன் அளபுருகளை விளக்கவும்.
39.
Scripting மொழியின் பயன்பாடுகள் யாவை?
40.
கார்டீசியன் பெருக்கலை பொருத்தமான எடுத்துக்காட்டுடன் விளக்குக.
41.
Sort( ) பற்றி சிறுகுறிப்பு எழுதுக.
42.
உள்ளமை மாறிகளுக்கான விதிமுறைகளை எழுதுக.
43.
இடம் மற்றும் இடச்சிக்கலின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் காரணிகள் யாவை?
1.
(d)
pip
2.
(a)
( ), ,
3.
(a)
34,45,48,90
4.
(c)
சிறப்பு சொல்
5.
(c)
தரவு கையாளுதல் மொழி
6.
(d)
நெறிமுறை பகுப்பாய்வு
7.
(a)
தொகுதி நிரலாக்கம்
8.
(c)
append ( )
9.
(b)
select
10.
(c)
args மாறி
11.
(c)
MS - Access
12.
(a)
சமச்சீரான வேறுபாடு
13.
(b)
%E
14.
(b)
தொடர்புடைய
15.
(a)
Impure செயற்கூறு
16.
தரவுத்தள மேலாண்மை அமைப்பு (DBMS) பின்வரும் ஐந்து கூறுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
(i) வன்பொருள்
(ii) மென்பொருள்
(iii) தரவு
(iv) வழிமுறைகள்/செயல்முறைகள்
(v) தரவுத்தள அணுகல் மொழிகள்
(i) வன்பொருள்: கணினி, வன்வட்டு, தரவுக்கான உள்ளீடு/வெளியீடு சாதனங்கள் மற்றும் தரவைச் சேமிக்கப் பயன்படும் வேறு பாகங்கள்
(ii) மென்பொருள்: அனைத்தையும் கட்டுப்படுத்தும் மிக முக்கியமான நிரலின் கூறு ஆகும். DBMS மென்பொருளானது தரவுத்தள அணுகல் மொழிகளைப் புரிந்து கொள்ள மற்றும் இயக்கத்திற்கான தரவுத்தள கட்டளைகளை நிரல் பெயர்க்க தகுதி வாய்ந்தது.
(iii) தரவு: இது DBMS ஐ வடிவமைப்பதற்கான வளம் ஆகும். DBMS தரவுகளை சேமிக்கவும், பயன்படுத்தவும் உருவாக்கப்படுகிறது.
(iv) வழிமுறைகள்/செயல்முறைகள்: இது தரவுத்தள மேலாண்மை அமைப்பை பயன்படுத்துவதற்கான பொதுவான கட்டளைகள் ஆகும். அதாவது, DBMSஐ நிறுவுதல், தரவுத்தளங்களின் பிரதி எடுத்தலை (Backups) நிர்வகித்தல் அறிக்கை தயாரித்தல் போன்றவை ஆகும்.
(v) தரவுத்தள அணுகல் மொழிகள்: இவை தரவுத்தளத்தில் சேமிக்கப்பட்ட தரவுகளை அணுகுதல், சேர்த்தால், புதுப்பித்தல் மற்றும் நீக்குதல் போன்ற கட்டளைகளை எழுதுவதற்கு பயன்படும் மொழிகள் ஆகும்.
17.
ALTER கட்டளை: ALTER கட்டளையைப் பயன்படுத்தி அட்டவணை வடிவமைப்பில் நெடுவரிசையை சேர்த்தல், ஏற்கனவே இருக்கும் புலத்திற்கு மறு பெயரிடல், எந்த ஒரு நெடுவரிசையின் தரவு வகையையோ அல்லது அளவினையோ மாற்றி அமைத்தல் நெடுவரிசையை அட்டவணையிலிருந்து நீக்குதல் போன்ற மாற்றங்களை செய்யலாம். அது கீழ்காணும் முறையில் பயன்படுத்தப்படுகிறது.
ALTER TABLE < table-name > ADD < column-name > < data type > < size >;
மாணவர் அட்டவணையில் 'char' என்ற தரவுவகை சார்ந்த "address" என்ற நெடுவரிசையை சேர்க்க, கட்டளையமைப்பு
ALTER TABLE Student ADD Address char;
அட்டவணையில் ஏற்கனவே இருக்கும் நெடுவரிசையில் மாற்றியமைக்க, ALTER TABLE கட்டளை MODIFY clause உடன் பயன்படுத்தப்படுகிறது
ALTER < table-name > MODIFY < column-name > < data-type > < size >;
ALTER TABLE Student MODIFY Address char (25);
மேற்கண்ட கட்டளை மாணவர் அட்டவணையில் உள்ள address நெடுவரிசை இப்பொழுது 25 எழுத்துக்கள் வரை தேக்கி வைத்துக் கொள்ளும் வகையில் மாற்றி அமைக்கும்.
ALTER கட்டளை கீழ்க்காணும் முறையில் ஏற்கனவே உள்ள நெடுவரிசைக்கு மறு பெயரிட பயன்படுகிறது:
ALTER < table-name > RENAME old-column-name TO new-column-name;
உதாரணத்திற்கு, address என்ற பெயரை கொண்ட நெடுவரிசைக்கு city என்று மறுபெயரிட உதவும் கட்டளை:
ALTER TABLE Student RENAME Address TO City;
ஒரு நெடுவரிசை அல்லது அனைத்து நெடுவரிசைகளையும் நீக்க, ALTER கட்டளையைப் பயன்படுத்தலாம். உதாரணத்திற்கு, ALTER TABLE - ன் DROP COLUMN ஐ பயன்படுத்தி, குறிப்பிட்ட நெடுவரிசையை நீக்கலாம், கட்டளை:
ALTER < table-name > DROP COLUMN < column-name >;
மாணவர் அட்டவணையில் city என்ற நெடுவரிசையை நீக்க, பயன்படும் கட்டளை:
ALTER TABLE Student DROP COLUMN City;
18.
வெளியீடு :
The x +=20 is = 30
The x -=5 is = 25
The x *=5 is = 125
The x /=2 is = 62.5
The x %=3 is = 2.5
The x **=2 is = 6.25
The x //=3 is = 2.0
19.
பைத்தான் வெற்றிகரமான C++ நிரலை இயக்குவது மட்டுமல்லாது, தொகுத்தலின் போது C++ கூற்றில் ஏதேனும் பிழைகள் இருப்பின் அவற்றை வெளியிடவும் உதவுகிறது. உதாரணத்திற்கு, கீழ்க்காணும் C++ நிரலின் ஒரு பிழை உள்ளது. பைத்தான் மூலம் தொகுக்கும் போது என்ன நேரும் என்பதைத் பார்க்கலாம்.
எடுத்துக்காட்டு :
// C++ program to print the message Hello
// Now select File-s-New in Notepad and type the C++ program
#include< iostream >
using namespace std ;
int main( )
{
std::cout<<"hello"
}
// Save this file as hello.cpp
#Now select File\(\rightarrow \)New in Notepad and type the Python program as main.py
# Program that compiles and executes a .cpp file
# Python main.py -i hello
import sys, os, getopt
def main(argv):
cpp_file ="
exe_ file ="
opts,args = getopt.getopt( argv,"i:" ,['ifile='])
for o, a in opts :
if in ("-i", "--ifile"):
cpp_file = a + '.cpp'
exe_file = a + '.exe'
runecpp_file, exe_file)
def runecpp_file, exe_file):
print=Compiling " + cpp _file)
os.system('g++ ' + cpp_file +' -o' +exe_ file)
print("Running " + exe_file)
print("_______ ")
print
os.system( exe_file)
print
if____ name =='____ main_____ ':
main(sys.argv[l:])
நிரலின் வெளியீடு
C:\Program Files\OpenOffice 4\
program > Python c:\pyprg\main.py -i c:\pyprg\hello
[('-i', 'c:\\pyprg\\hello')] .
Compiling c:\pyprg\heHo.cpp
c:\pyprg\hello.cpp: In function 'int main( )':
before 'return'
std::cout < <"hello"
/\
;
return 0;
------------
Running c:\pyprg\ch14\cpp __file.exe
_______
'c:\pyprg\hello.exe' is not recognized as an internal or external command, operable program or batch file.
C:\Program Files\OpenOffice 4\program>
20.
(அ) plt.xlabel
X - அச்சின் தலைப்பை குறிப்பிடுகிறது.
(ஆ) plt.ylabel
Y - அச்சின் தலைப்பை குறிப்பிடுகிறது.
(இ) plt.title
வரைப்படத்தின் தலைப்பை குறிப்பிடுகிறது.
(ஈ) plt.legend( )
plt.legend() கட்டளையைக் கொண்டு கொடாநிலை புனைவுகள் செயலாக்கலாம்.
(உ) plt.show( )
வரைபடத்தை காண்பிக்க உதவுகிறது.
21.
import sqlite3
connection = sqlite3 . connect ("ABC.db")
cursor = connection. cursor ( )
sql_command = " " "
CREATE TABLE Item (Icode INTEGER, Item_Name VARCHAR (25), Rate Integer); " " "
cursor. execute (sql_command)
sql_command = " " "INSERT INTO Item (Icode, Item_name, Rate)
VALUES (1008, "Monitor", 15000);" " "
cursor. execute (sql_command)
connection.commit ()
connection.close ()
Print ("TABLE CREATED").
வெளியீடு:
(1008, 'Monitor', 15,000)
22.
பைத்தான் பயன்படுத்தி csv கோப்பினை படித்தல்:
CSV கோப்பினை படிக்க இரண்டு வழி முறைகள் உள்ளன.
(i) CSV தொகுதி படித்தல் செயற்கூறை பயன்படுத்துதல்.
(ii) DictReader இனக்குழுவை பயன்படுத்துதல்.

CSV -ன் Reader செயற்கூறு :
(i) CSV கோப்பின் உள்ளடக்கத்தை படிக்க csv.reader ( ) என்ற செயற்கூறானது பயன்படுத்தப்படுகிறது.
(ii) reader ( ) செயற்கூறானது கோப்பின் ஒவ்வொரு வரியையும் படித்து அவற்றை நெடுவரிசைகளின் பட்டியலாக (List) அமைக்கும்.
(iii) மாறியின் தரவிற்கு தேவையான நெடுவரிசையை தேர்வு செய்யலாம். இச்செயற்கூறை பயன்படுத்தி பயனர் கோப்பின் தரவுகளில் உள்ள இரட்டை மேற்கோள் குறி(" "),(|) மற்றும் (,) போன்ற பல்வேறு வடிவமைப்புகளை பயன்படுத்தி படிக்கலாம்.
csv.reader ( ) செயற்கூறின் தொடரியல்
csv.reader(fileobject, delimiter, fmtparams)
இங்கு
(iv) file object : கோப்பின் பாதையையும் முறைமையும் திருப்பி அனுப்பும்.
(v) delimiter : இது விருப்பத்தேர்வு அளபுருவாகும். இது சொந்த வரம்புக் குறிகளை கொண்டிருக்கும். (',|) போன்றவை மற்றவைகள் தவிர்க்கப்படும்.
(vi) fmtparams: கொடாநிலை மதிப்புகளை மேற்பதிப்பு செய்ய/நீக்க பயன்படும் விருப்பத் தேர்வு அளபுருவாகும்.
(i) CSV கோப்பு-கொடாநிலை பிரிப்பானான காற்புள்ளியை கொண்ட தரவு.
(ii) CSV கோப்பு - தொடக்கத்தில் இடம் கொண்ட தரவுகள்.
(iii) CSV கோப்பு - மேற்கோளுடன் கூடிய தரவுகள்
(iv) CSV கோப்பு - தனிப்பயன் பிரிப்பான கொண்ட தரவு.
கொடாநிலை பிரிப்பான், காற்புள்ளியுடன் கூடிய CSV (,) கோப்புகள் :
பின்வரும் நிரலானது கொடாநிலை பிரிப்பானான காற்புள்ளியுடன் கூடிய "sample1 .csv" என்ற கோப்பினை படித்து ஒவ்வொரு வரிசையாக அச்சிடும் நிரல்.
#importing csv
import csv
#opening the csv file which is in different location with read mode
with open('c:\pyprg\sample1.csv', 'r') as F:
#other way to open the file is f= ('c:\pyprg\ sample1.csv', 'r')
reader = csv.reader(F)
for row in reader :
# printing each line of the Data row by row
print(row)
F.Close ()
வெளியீடு
['SNO', 'NAME', 'CITY']
['12101', 'RAM', 'CHENNAI']
['12102', 'LAVANYA', 'TIRUCHY']
['12103', 'LAKSHMAN', 'MADURAI']
CSV கோப்பினை Dictionary படிக்க:
(i) CSV செயற்கூறிலுள்ள DictReader ஐ பயன்படுத்தி CSV கோப்பை படித்தல். இதன் செயல்பாடு reader( ) விதிமுறை செயல்பாட்டை ஒத்திருக்கும்.ஆனால் இது பொருளை உருவாக்கி அதை Dictionaryயில் இணைக்கும்.
(ii) DictReader CSV கோப்பில் உள்ள முதல் வரியை காற்புள்ளியை இந்த வரியின் Dictionary திறவுகோள் (Dictionary Key) பயன்படுத்தி படிக்கும். அடுத்தடுத்துள்ள வரிசையில் உள்ள நெடுவரிசையானது Dictionary யின் மதிப்புகளாக செயல்பட்டு அவற்றை உரிய திறவுகோல் மூலம் அணுக முடியும்(புலத்தின் பெயர்).
(iii) CSV கோப்பின் முதல் வரிசையானது புலப்பெயரை கொண்டிருக்கவில்லையெனில் புலப்பெயர் அளபுருவை DictReader's ஆக்கிக்கு அனுப்பி Dictionary திறவு கோள்களை நாமாக ஒதுக்க முடியும்.
(iv) csv.reader( ) மற்றும் DictReader ( )க்கு இடையேயான முக்கிய வேறுபாட்டை எளிமையாக கூறுவதெனில் csv.reader மற்றும் csv.writer ஆனது பட்டியல் (list/tuple) பதிவுடன் வேலை செய்யும். csv.DictReader மற்றும் csv.DictWriter ஆனது அகராதியில் வேலை செய்யும்.
import csv
filename = 'c:\pyprg\sample8.csv'
input_file =csv.DictReader( open( filename,'r'))
for row in input_file:
print( dict(row)) #dict( ) to print data
வெளியீடு
{'ItemName ': 'Keyboard ', 'Quantity': '48'}
{'ItemName ': 'Monitor', 'Quantity': '52'}
{'ItemName ': 'Mouse '. 'Quantity': '20'}
(v) csv.DictReader மற்றும் csv.DictWriter இரண்டும் கூடுதல் அளபுருவாக புலப்பெயரினை பெற்று Dictionary திறவுகோளாக பயன்படுத்தும்.
(எடுத்துக்காட்டாக) "sample8.csv" என்ற கோப்பானது Dictionary-யை படித்தல்.
(vi) செயல்முறை : மேலே கொடுக்கப்பட்டுள்ள நிரலில் dict ( ) செயல்கூறில் நீக்கவும் மற்றும் print(row) பயன்படுத்தவும். கீழே கொடுக்கப்பட்டுள்ள வெளியீடை தரும்.
OrderedDict [(' ItemName', 'Keyboard'),
('Quantity', '48')]
OrderedDict [('ItemName', 'Monitor'),
('Quantity', '52')]
OrderedDict [('ItemName', 'Mouse '),
('Quantity', '20')]
23.
பைத்தான் பின்வரும் செயற்குறிகளை வழங்குகிறது. இச்செயற்குறிகள் சரங்களை கையாள உதவுகிறது.
(i) இணைப்பு (Concatenation +)
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சரங்களை இணைக்கும் செயல்பாடு சேர்த்தல் அல்லது இணைத்தல் எனப்படும். கூட்டல் செயற்குறி சரங்களை இணைக்கப் பயன்படுகிறது.
எடுத்துக்காட்டு:
> > > "welcome" + "Python"
'welcomePython'
(ii) சேர்த்தல் (Append+=):
ஏற்கனவே உள்ள சரத்தின் இறுதியில் மேலும் புதிய சரம் அல்லது சரங்களை சேர்க்கும் செயல் சேர்த்தல் எனப்படும்.
+= செயற்குறி ஏற்கனவே உள்ள சரத்தின் இறுதியில் புதிய சரத்தினை சேர்க்க பயன்படுகிறது.
எடுத்துக்காட்டு:
> > > str1="Welcome to "
> > > str1 +="Learn Python"
> > > print (str1)
Welcome to Learn Python
பலமுறை (Repeating (*)) :
பெருக்கல் செயற்குறி கொடுக்கப்பட்ட சரத்தினை பல தடவைகள் வெளிப்படுத்த பயன்படுகிறது.
> > > str1="Welcome"
> > > print (str1*4)
Welcome Welcome Welcome Welcome
24.
(i) பொதுவாக, for மடக்கு "வரையறுக்கப்பட்ட " மடக்கு என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில் இந்த மடக்கு சரியாக எத்தனை முறை மீண்டும் மீண்டும் இயங்கும் என்பதை நிரலர் தெரிந்துவைத்திருப்பார்.
தொடரியல் :
for counter_variable in sequence:
statements-block 1
[else: # optional block statements-block 2]
(ii) for....in என்ற கூற்று, பைத்தானில் பயன்படுத்தப்படும் மடக்கு கூற்றாகும். இது தொடர் பொருள்களின் வழியே சுழலும் தன்மையுடையது. அதாவது, ஒரு தொடரின் ஒவ்வொரு மதிப்பின் ஊடாக செல்லும். இங்கே தொடர் என்பது வரிசைபடுத்தப்பட்ட அல்லது வரிசைப்படுத்தப்படாத மதிப்புகள் அல்லது ஒரு | சரமாகவும் இருக்கலாம்.
(iii) கட்டுப்பாட்டு மாறி, ஒவ்வொரு சுழற்சியிலும், தொடரின் கடைசி மதிப்பு வரை, தொடரின் ஒவ்வொரு மதிப்பையும் அணுகும்.
range ()ன் தொடரியல்:
range(start,stop,[step])
எடுத்துக்காட்டு :
| range (1,30,1) | range-ன் மதிப்புகள் 1 முதல் தொடங்கி 29 வரை |
| range (2,30,2) | range() மதிப்புகள் 2 முதல் 28 வரை |
| range (30,3,-3) | range() மதிப்புகள் 30 முதல் 6 வரை |
| range (20) | 20 என்ற மதிப்பை இறுதி மதிப்பாக எடுத்துக்கொண்டு (அல்லது மேல்வரம்பு) 0 முதல் 19 வரையிலான மதிப்புகளைக் கொடுக்கும் (range() எப்பொழுதும் stop மதிப்பு-1 வரை மதிப்பைக் கொடுக்கும் என்பதை நினைவில்கொள்க). |

எடுத்துக்காட்டு : #for மடக்கு பயன்படுத்தி ஒற்றை இலக்க இரட்டைப் படை எண்ணை அச்சிட விளக்கும்
நிரல்
for i in range (2,10,2):
print (i, end = ' ')
வெளியீடு:
2 4 6 8
25.
தரவு அருவமாக்கினை செயல்படுத்த, ஆக்கிகள் (Constructor) மற்றும் செலக்டர் (Selectors) என்ற இரண்டு செயற்கூறுகள் உருவாக்கப்பட வேண்டும்.
ஆக்கிகள் மற்றும் செலக்டர்கள் (constructors and selectors):
(i) ஆக்கி செயற்கூறுகள் அருவமாக்கம் தரவு வகையை கட்டமைக்க பயன்படுகிறது. செலக்டர் செயற்கூறுகள் தகவல்களை தரவு வகையிலிருந்து பெறுவதற்கு பயன்படுகிறது.
(ii) எடுத்துக்காட்டாக, city என்று ஒரு அருவமாக்க தரவு வகை உள்ளது என வைத்துக்கொள். City என்ற பொருள் நகரத்தின் பெயர், அட்சரேகை மற்றும் தீர்க்கரேகை பற்றிய தகவல்களை சேமித்திருக்கும் city என்ற பொருளை உருவாக்க பின்வரும் செயற்கூற்றினை பயன்படுத்தலாம்.
city := makecity (name, lat, lon)
(iii) city பொருளின் தகவல்களை பெறுவதற்கு பின்வரும் செயற்கூறுகளை பயன்படுத்தலாம்.
1. getname(city)
2. getlat(city)
3. getlon(city)
(iv) பின்வரும் போலி குறிமுறை இரு நகரங்களுக்கு இடையேயான தொலைதூரத்தை கணக்கிடும்.
distance(city1, city2):
lt1, lg1 := getlat(city1), getlon(city1)
lt2, 1g2:= getlat (city2), getlon (city2)
return ((lt1 - lt2)**2 + (lg1 - lg2)**2))1/2
(v) மேலே காணும் குறிமுறையில், distance(), getlat() மற்றும் getlon() ஆகியவை செயற்கூறுகள் ஆகும். It என்பது அட்ச ரேகை மற்றும் lg என்பது தீர்க்கரேகையும் குறிக்கிறது. longitude. := என்பதை "assigned as" அல்லது "becomes" என்று வாசிக்க வேண்டும்.
It 1, lg1 := getlat(city1), getlon(city1)
(vi) இதனை It1 என்பது getlat(city1)ன் மதிப்பாகிறது மற்றும் lg1 என்பது getlon(city1) ன் மதிப்பாகிறது. என்று வாசிக்க வேண்டும்.
(vii) இந்த செயற்கூறுகள் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. இதை வேறு ஒருவர் நமக்காக வரையறுத்துள்ளார் என்று கருதிக் கொள்ள வேண்டும். பயனர் செயற்கூறுகள் எப்படி செயல்படுத்தப்படுகின்றது என்று தெரிந்து வைத்திருக்க வேண்டியதில்லை எனினும் வேறு ஒருவரால் இச்செயற்கூறுகள் வரையறுக்கப்பட்டிருக்க வேண்டும்.
(viii) மேலே காணும் குறிமுறையில், ஆக்கி மற்றும் செலக்டர்களை அடையாளம் காண்போம். ஆக்கி செயற்கூறுகள் அருவமாக்க தரவு வகையை கட்டமைக்கப் பயன்படுகிறது என்பதை நாம் அறிவோம். மேலே காணும் போலிக் குறிமுறையில், cityயின் பொருளை உருவாக்கும் செயற்கூறு, ஆக்கி ஆகும்.
city := makecity(name, lat, lon) இங்கு makecity(name, lat, lon) என்ற ஆக்கி city எனும் பொருளை உருவாக்குகிறது.

(ix) செலக்டர் செயற்கூறுகள் தகவல்களை தரவு வகையிலிருந்து பெறுவதற்கு பயன்படுகிறது. மேலே காணும் குறிமுறையில்,
getname(city)
getlat(city)
getlon(city) என்பவை city எனும் பொருளிலிருந்து தகவல்களை பெற்றுத் தரும் செலக்டர் செயற்கூறுகளாகும்.
26.
பட்டை வரைவிடம் (அல்லது பட்டை வரைபடம்) என்பது மிகவும் பொதுவான வரைவிடம் வகையாகும். இது எண் மாறிக்கும், வகை மாறிகளுக்கும் இடையே உள்ள உறவை வெளிப்படுத்துகிறது. பட்டை விளக்கப்படம் வகைப்படுத்தப்பட்ட தரவுகளை செவ்வக பட்டையாக காட்டும். இப்பட்டைகள் செங்குத்தாகவோ அல்லது கிடைமட்டமாகவோ தொகுப்பப்படலாம். இம்முறை கொடுக்கப்பட்ட எண் மதிப்புகளை பல்வேறு வகையுடன் ஒப்பிட்டு பார்க்க உதவும்.
27.
தன்னைத் தானே அழைத்துக் கொள்ளும் செயற்கூறு வரையறைக்கு தற்சுழற்சி செயற்கூறு என்று பெயர்.
28.
பைத்தானில் இனக்குழு செயற்கூறு அல்லது வழிமுறை சாதாரண செயற்கூறுவைப்போல் ஒத்திருந்தாலும், ஒரு சிறிய வேறுபாடு உள்ளது. இனக்குழு வழிமுறையின் முதல் அளபுரு கண்டிப்பாக self என இருக்க வேண்டும்.
29.
1) range -ன் மதிப்புகள் 1 முதல் தொடங்கி 29 வரை
2) range ( ) மதிப்புகள் 2 முதல் 28 வரை
3) range ( ) மதிப்புகள் 30 முதல் 6 வரை
4) 20 என்ற மதிப்பை இறுதி மதிப்பாக எடுத்துக்கொண்டு (அல்லது மேல்வரம்பு) 0 முதல் 19 வரையிலான மதிப்புகளைக் கொடுக்கும் (range ( )எப்பொழுதும் stop மதிப்பு -1 வரை மதிப்பைக் கொடுக்கும் என்பதை நினைவில்கொள்க).
30.
கோப்பினை திறக்கும் open கட்டளையில் கோப்பின் பெயர் அல்லது கோப்பின் முழுமையான பாதையானது இரட்டை மேற்கோள் குறிகளுக்குள் அல்லது ஒற்றை மேற்கோள் குறிகளுக்குள் கொடுக்கப்படல் வேண்டும்.
31.
fetchall( ) செயற்கூறு அனைத்து வரிசைகளையும் தரவுத்தள அட்டவணையில் இருந்து பெற பயன்படுகிறது.
(எ.கா) result = cursor.fetchall( )
32.
(i) அடிப்படையில் அனைத்து scripting மொழிகளும் நிரலாக்க மொழிகளாகும். இரண்டுக்குமிடையே கருத்தியலான வேறுபாடு என்னவெனில், Scripting மொழிக்கு தொகுத்தல் படிநிலைத் தேவைப்படாது, மாறாக வரிமொழி மாற்றம் தேவைப்படும்.
(ii) உதாரணத்திற்கு, ஒரு C++ நிரல் இயக்குவதற்கும் முன்பாக, தொகுக்கப்பட வேண்டும். அதே சமயம் ஜாவாஸ்கிரிப்ட் அல்லது பைத்தான் போன்ற scripting மொழிகள் தொகுக்கப்பட தேவையில்லை.
(iii) நிரலாக்க மொழிக்கு நிரல்பெயர்ப்பி தேவைப்படுவது போல scripting மொழிக்கு வரிமொழி மாற்றி தேவைப்படுகிறது.
33.
பைத்தானில் உள்ள பல்வேறு செயற்குறிகள்:
(i) கணித செயற்குறிகள்
(ii) உறவுநிலை அல்லது ஒப்பீடு செயற்குறிகள்
(iii) தருக்க செயற்குறிகள்
(iv) மதிப்பிருத்தல் செயற்குறிகள்
(v) நிபந்தனை செயற்குறிகள்
34.
(i) மாறியை நிரலின் எந்தப் பகுதியில் அணுக அல்லது பயன்படுத்த முடியும் என்பதை குறிக்க வரையெல்லை பயன்படுகிறது.
(ii) ஒரே ஒரு வரையெல்லைக்குள் மாறிகளின் வரையெல்லையை உட்படுத்துவது சிறந்த வழிமுறை ஆகும்.
(iii) இதில் எதிர்பாராத விதமாக செயற்கூறுக்கு உள்ளே உள்ள மாறிகளில் ஏற்படும் மாற்றங்கள் செயற்கூறுக்கு வெளியே எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது.
35.
செயற்கூற்றை வரையறுப்பதற்கான தொடரியல், கணித பயன்பாட்டோடு நெருக்கம் கொண்டது. வரையறை let என்ற சிறப்புச் சொல்லோடு அறிமுகப்படுத்தப்படுகிறது. அதனைத் தொடர்ந்து செயற்கூறின் பெயர் மற்றும் அதனுடைய செயலுருபுகள் பிறகு செயலுருபுவைக் கணக்கீடு செய்யும் வாய்ப்பாடு. குறிக்குப் பிறகு எழுத வேண்டும். தற்சுழற்சி செயற்கூற்றை வரையறுக்க விரும்பினால் let-க்குப் பதிலாக let rec என்று பயன்படுத்த வேண்டும்.
செயற்கூறு வரையறையின் தொடரியல்:
let rec fn a1 a2...an:=k
இங்கு 'fn' என்பது ஒரு மாறி ஆகும். இது செயற்கூறின் பெயரைக் குறிக்கும் குறிப்பெயராகும். 'a1' முதல் 'an' வரை உள்ள மாறிகள் அளபுருக்களைக் குறிக்கும் குறிப்பெயராகும். 'fn' என்பது தற்சுழற்சி செயற்கூறினால் 'rec' என்ற சிறப்புச் சொல் தேவை, இல்லையெனில் அதை விட்டு விடலாம்.
36.
(i) ஒரு கூறுநிலைக்குள் மற்றொரு கூறுநிலையின் வரையறைகளைத் தருவித்துக் கொள்ளலாம். அவ்வாறு செய்வதற்கு நாம் 'import''என்ற சிறப்பு சொல்லைப் பயன்படுத்த முடியும்.
(ii) நாம் முன்னதாக வரையறுத்து factorial என்ற கூறுநிலையைத் தருவித்துக் கொள்ள பைத்தான் தூண்டுகுறியில் கீழ்கண்டவாறு தட்டச்சு செய்யவும்.
>>> import factorial
(iii) கூறுநிலைக்குள், வரையறுக்கப்பட்ட செயற்கூறுகளை, கூறுநிலையின் பெயரைப் பயன்படுத்தி அணுக முடியும்.
(iv) செயற்கூறுகளை அணுக புள்ளிச் செயற்குறி பயன்படுத்தப்படுகிறது கூறுநிலையிலிருந்து செயற்கூறுகளை அணுகுவதற்கான தொடரியல்
.< module name > . < function name >
37.
(i) நிரலின் ஒரு பகுதியே தொகுதியாகும். நிரல்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தனித்து உருவாக்கப்பட்ட தொகுதிகளால் அமைக்கப்படுகிறது
(ii) ஒரு தொகுதி தொடர்புடைய பல கூற்றுகளை கொண்டுள்ளது
(iii) தனித்த நிலையில் தொகுதிகள் சரியாக வேலை செய்கிறது மற்றும் பிற தொகுதிகளோடு ஒருங்கிணைக்கப்படுகிறது
(iv) ஒரு நிரலை எளிதாக்கவும், பிழைத்திருத்தவும் அது தொகுதிகளாக பிரிக்கப்பட்டு வெளியீடு பெறப்படுகிறது
(v) ஒரு கணிப்பொறி நிரலை பல துணை நிரல்களாக பிரிக்கும் செயல்முறையே தொகுதி நிரலாக்கம் எனப்படும்
38.
The syntax for csv.writer( ) is
csv.writer (fileobject, delimiter, fmtparams)
இங்கு,
(i) fileobject : கோப்பின் பாதையையும் முறைமையையும் அனுப்பும்.
(ii) delimiter : (pipe) போன்ற நிலையான Dialects பிரிப்பான்களை கொண்டிருக்கும் விருப்ப அளபுருவாகும் மற்றவை நிராகரிக்கப்படும்.
(iii) fmtparams : விருப்ப அளபுருவாகும் skipinitialspace, quoting போன்ற dialects களின் தானமைவான மதிப்புகளை மாற்றியமைக்க செய்ய உதவுகிறது. மற்றவை (மாற்ற) நிராகரிக்கப்படும்.
39.
(i) ஒரு நிரலில் சில செயல்பாடுகளை தானியங்குபடுத்துதல்.
(ii) தரவு தொகுப்பிலிருந்து தகவலைப் பிரித்தெடுத்தல்.
(iii) பழைமையான நிரலாக்க மொழிகளுடன் ஒப்பிடும் போது, குறைந்த நிரல் குறிமுறையைக் கொண்டது.
(iv) பயன்பாடுகளுக்கு புதிய செயல்பாடுகளை கொண்டு வர முடியும் மேலும், சிக்கலான அமைப்புகளை ஒருங்கமைக்க முடியும்.
40.
i) இரண்டு தொடர்புகளை சேர்க்க குறுக்குப் பெருக்கல் வழிவகுக்கிறது. இதன் விடை இரண்டு தொடர்புகளின் இணைப்பைக் கொண்டுள்ளது.
2) A x B என்பது A times B, இங்கு A தொடர்புகள் மற்றும் B தொடர்புகள் என்பன வேறுபட்ட பண்புக்கூறுகளாகும். இந்த வகை செயற்பாடுகள் இரண்டு தொடர்புகளிலிருந்து நெடுக்கைகளை ஒன்று சேர்க்க பயன்படுகிறது.

41.
sort() - List-ல் உள்ள உறுப்புகளை வரிசையாக்கம் செய்கிறது. reverse, key இரண்டு செயலுருபுகளும் கட்டாயமில்லாதவை
(i) reverse ஐ True என பொருத்தினால் இறங்கு வரிசையில் லிஸ்ட் வரிசையாக்கமாகும்.
(ii) ஏறுவரிசை தானமைவு வரிசையாக்கமாகும்.
(iii) Key=myFunc; "myFunc" வரிசையாக்க வரண்முறையைக் குறிப்பிடும் பயனர் வரையறுத்த செயற்கூறின் பெயர்.
தொடரியல் :
List.sort(reverse=True|False, key=myFunc)
எடுத்துக்காட்டு :
MyList=["Thilothamma', 'Tharani', 'Anitha', 'SaiSree', 'Lavanya']
MyList.sort()
print(MyList)
MyList.sort(reverse=True)
print(MyList)
வெளியீடு:
['Anitha', 'Lavanya', 'SaiSree', "Tharani', "Thilothamma']
['Thilothamma', 'Tharani', 'SaiSree', 'Lavanya', 'Anitha']
42.
உள்ளமை மாறியின் விதிமுறைகள் :
(i) உள்ளமை மாறியின் வரையெல்லை அது வரையறுக்கப்பட்டுள்ள தொகுதிக்குள் மட்டுமே பயன்படுத்த முடியும்.
(ii) செயற்கூறினுள் மாறி உருவாக்கப்படும் போது அது உள்ளமைவாக அமையும்.
(iii) செயற்கூறு இயக்கப்படும் போது மட்டுமே உள்ளமை மாறிகள் உயிர்பெறும்.
(iv) முறையான அளபுருக்கள் அதன் செயற்கூறுக்கு உள்ளமையானது ஆகும்.
43.
நேரம் காரணி: நெறிமுறைக்கு பொருத்தக் கூடிய முக்கிய செயல்பாடுகளின் எண்ணிக்கையை எண்ணுவதன் மூலம் நேரம் அளவிடப்படுகிறது, வரிசையாக்கம் நெறி முறையிலுள்ள பொருத்தங்களின் எண்ணிக்கை
இட காரணி: நெறிமுறைக்கு தேவைப்படும் மிக அதிகபட்ச நினைவக இடத்தை கணக்கிடுவதன் மூலம் இது அளவிடப்படுகிறது.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards