12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 02/03/2021
12ஆம் வகுப்பு கணினி அறிவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் மற்றும் விடைகள் - 2021 - 12th Standard Tamil medium Computer Science Reduced Syllabus Public Exam Model Question Paper With Answer Key - 2021
12ஆம் வகுப்பு Computer Science / கணினி அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Science / கணினி அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Science Test

1.
______ என்பது தரவு மற்றும் தகவல்களை வரைகலையாக உருவாக்குகிறது.
தரவு காட்சிப்படுத்துதல்
தரவு அருவமாக்கம்
பல்லூடகம்
செயற்கூறு
2.
எந்த செயற்கூறு சுட்டெண் தெரியாத உறுப்புகளை நீக்க பயன்படுகிறது?
del ( )
remove ( )
delete ( )
delmore ( )
3.
இரு மதிப்புகளை ஒன்றாக இணைக்கும் முறை _________ என அழைக்கப்படுகின்றன.
Set
Dictionary
Pairs
Tuple
4.
பின்வருவனவற்றுள் கட்டுப்பாடானது எந்த புலத்தில் வெற்று மதிப்பை அனுமதிக்கும்?
NULL
NO NULL
NO NULL
NO VALUE
5.
செயற்கூறுக்கு வெளியே மாறியை அறிவிக்கும் போது அது தானமைவாக ________ ஆகும்.
உள்ளமை
குளோபல்
செயற்கூறு
தொகுதி
6.
நெறிமுறைக்கு தேவைப்படும் இடம் = நிலையான பகுதி + _______
காரணி பகுதி
நிலையில்லா பகுதி
மாறும் பகுதி
தரவு பகுதி
7.
ஒரு செயற்கூறின் உள்ளே மற்றொரு செயற்கூறு அடைக்கப்பட்டிருந்தால் அது எவ்வாறு அழைக்கப்படும்?
பின்னலான செயற்கூறு
இணைக்கப்பட்ட செயற்கூறு
முழுதளாவிய செயற்கூறு
உள்ளிணைந்த செயற்கூறு
8.
dialct அளபுருவமான skipnitialspace என்பதன் கொடா நிலையான மதிப்பு
True
false
on
off
9.
SQLite எந்த தரவுத்தள அமைப்பைச் சார்ந்தது?
ஒற்றைக் கோப்பு தரவுத்தளம்
உறவுநிலை தரவுத்தளம்
படிநிலை தரவுத்தளம்
பொருள்நோக்கு தரவுத்தளம்
10.
பின்வரும் நிரல் பகுதியில் உள்ள செயற்கூறின் பெயரை அடையாளம் காண்க.
if __name__ = =' __main__':
main(sys.argv[1:])
main(sys.argv[1:])
__name__
__main__
argv
11.
12.
பின்வரும் எந்த பைத்தான் செயற்கூறு ஏற்கனவே உள்ள List - ல் ஒன்றுக்கும் மேற்பட்ட உறுப்புகளை சேர்க்கப் பயன்படுகிறது?
append( )
append_more( )
extend( )
more( )
13.
14.
15.
தரவு வகை குறிப்பு எழுதும்போது, எது கட்டாயமாகிறது?
{ }
( )
[ ]
< >
16.
DBMS-ன் கூறுகள் பற்றி விரிவாக விளக்குக.
17.
பரிவர்த்தனை கட்டுப்பாட்டு மொழி கட்டளைகள் பற்றி விவரி.
18.
கீழேகாணும் நிரலின் வெளியீட்டை எழுதவும்.
x=20
x+=20
print ("The x +=20 is =",x)
x-=5
print ("The x-=5 is =",x)
x*=5
print ("The x*=5 is =",x)
x/=2
print ("The x/=2 is =",x)
x%=3
print ("The x%=3 is =",x)
x**=2
print ("The x**=2 is =",x)
x//=3
print ("The x//=3 is =",x)
#program End
19.
பைத்தான் எவ்வாறு C++ நிரல்களின் பிழைகளைத் கையாள்கிறது என்பதை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
20.
Matplotlib யை பயன்படுத்தும் pyplot வகைகளை விரிவாக விவரி.
21.
fetchmany() பயன்படுத்தி பின்வரும் அட்டவணையிலுள்ள அனைத்து பதிவுகளையும் திரையிடுவதற்கான பைத்தான் ஸ்கிரிப்டை எழுதவும்.
| Icode | ItemName | Rate |
| 1003 | Scanner | 10500 |
| 1004 | Speaker | 3000 |
| 1005 | Printer | 8000 |
| 1008 | Monitor | 15000 |
| 1010 | Mouse | 700 |
22.
CSV கோப்பிலுள்ள தரவை வடிவமைப்பதற்கு பின்பற்றவேண்டிய விதிமுறைகளை எழுதுக.
23.
பைத்தானில் பயன்படும் சர செயற்குறிகளை தகுந்த எடுத்துக்காட்டுடன் விளக்குக.
24.
if..else..elif கூற்றை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
25.
பல்உறுப்பு பொருளை எவ்வாறு அணுகுவாய் எடுத்துக்காட்டுடன் விளக்கு.
26.
பட்டை வரைபடம் என்றால் என்ன?
27.
இனக்குழு அறிவிப்பானது எதனை இணைக்கிறது?
28.
Public மற்றும் Private தரவு உறுப்புகள் பற்றி எழுதுக.
29.
பின்வரும் range ( ) எடுத்துக்காட்டுகளின் வெளியீட்டை எழுதுக.
range (1,30,1)
range (2,30,2)
range (30,3,-3)
range (20)
30.
OrderedDict என்றால் என்ன?
31.
தரவுத்தளத்தைப் பயன்படுத்தும் பயனர்களை குறிப்பிடவும்.
32.
Scripting மொழிக்கும் மற்ற நிரலாக்க மொழிக்கும் உள்ள தத்துவார்த்த வேறுபாடு யாது?
33.
பைத்தான் நிரலினை சோதிக்க எத்தனை வகை முறைமைகள் உள்ளன?
34.
Namespaces சிறுகுறிப்பு வரைக?
35.
இரண்டு நேர்முழு எண்களின் மீப்பெரு வகு எண்ணை கண்டுபிடிக்கும் pure செயற்கூற்றின் நெறிமுறையை எழுது.
36.
பைத்தானில் கூறுநிலைகளை எவ்வாறு தருவித்துக் கொள்வது?
37.
பின்வரும் சிறப்புச் சொற்களை பற்றி குறிப்பு வரைக
(i) Public
(ii) Protected
(iii) Private
38.
சாதாரண CSV கோப்பினை எவ்வாறு உருவாக்கலாம்?
39.
பைத்தான் மற்றும் C++ வேறுபடுத்துக.
40.
பொருள் மாதிரியை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
41.
List மற்றும் Dictionary இடையேயான வேறுபாடுகள் யாவை?
42.
கொடுக்கப்பட்ட வருடம் லீப் வருடமா இல்லையா என்பதனைச் சோதிக்கும் பைத்தான் நிரலை எழுதுக.
43.
சிக்கல்தன்மை மற்றும் வகைகளைப் பற்றி விவாதிக்க.
1.
(a)
தரவு காட்சிப்படுத்துதல்
2.
(b)
remove ( )
3.
(a)
Set
4.
(a)
NULL
5.
(b)
குளோபல்
6.
(c)
மாறும் பகுதி
7.
(a)
பின்னலான செயற்கூறு
8.
(b)
false
9.
(b)
உறவுநிலை தரவுத்தளம்
10.
(b)
__name__
11.
(a)
12.
(c)
extend( )
13.
(d)
14.
(a)
15.
(b)
( )
16.
தரவுத்தள மேலாண்மை அமைப்பு (DBMS) பின்வரும் ஐந்து கூறுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
(i) வன்பொருள்
(ii) மென்பொருள்
(iii) தரவு
(iv) வழிமுறைகள்/செயல்முறைகள்
(v) தரவுத்தள அணுகல் மொழிகள்
(i) வன்பொருள்: கணினி, வன்வட்டு, தரவுக்கான உள்ளீடு/வெளியீடு சாதனங்கள் மற்றும் தரவைச் சேமிக்கப் பயன்படும் வேறு பாகங்கள்
(ii) மென்பொருள்: அனைத்தையும் கட்டுப்படுத்தும் மிக முக்கியமான நிரலின் கூறு ஆகும். DBMS மென்பொருளானது தரவுத்தள அணுகல் மொழிகளைப் புரிந்து கொள்ள மற்றும் இயக்கத்திற்கான தரவுத்தள கட்டளைகளை நிரல் பெயர்க்க தகுதி வாய்ந்தது.
(iii) தரவு: இது DBMS ஐ வடிவமைப்பதற்கான வளம் ஆகும். DBMS தரவுகளை சேமிக்கவும், பயன்படுத்தவும் உருவாக்கப்படுகிறது.
(iv) வழிமுறைகள்/செயல்முறைகள்: இது தரவுத்தள மேலாண்மை அமைப்பை பயன்படுத்துவதற்கான பொதுவான கட்டளைகள் ஆகும். அதாவது, DBMSஐ நிறுவுதல், தரவுத்தளங்களின் பிரதி எடுத்தலை (Backups) நிர்வகித்தல் அறிக்கை தயாரித்தல் போன்றவை ஆகும்.
(v) தரவுத்தள அணுகல் மொழிகள்: இவை தரவுத்தளத்தில் சேமிக்கப்பட்ட தரவுகளை அணுகுதல், சேர்த்தால், புதுப்பித்தல் மற்றும் நீக்குதல் போன்ற கட்டளைகளை எழுதுவதற்கு பயன்படும் மொழிகள் ஆகும்.
17.
COMMIT கட்டளை:
COMMIT கட்டளை, தரவுத்தளத்திலுள்ள எந்த ஒரு நடவடிக்கையும் நிரந்தரமாக சேமிக்கப் பயன்படுகிறது. INSERT, UPDATE, DELETE போன்ற DML கட்டளைகளைப் பயன்படுத்தி செய்யப்பட்ட மாற்றங்கள் நிரந்தரமல்ல. SQL தூண்டுக்குறியில் COMMIT கட்டளையை கொடுத்து விட்டால் செய்யப்பட்ட மாற்றங்கள் திரும்பப் பெற இயலாது. COMMIT கட்டளை இவ்வாறு பயன்படுத்தப்படுகிறது.
COMMIT;
ROLLBACK கட்டளை:
ROLLBACK கட்டளை கடைசி COMMIT கட்டளைக்கு பிறகு கொடுத்த அனைத்து கட்டளைகளையும் திரும்பப் பெற. இந்த கட்டளையுடன் SAVEPOINT கட்டளையும் பயன்படுத்தி ஒரு குறிப்பிட்ட savepoint இடத்திற்கு கொண்டு செல்ல முடியும்.
ROLL BACK TO savepoint name;
SAVEPOINT கட்டளை:
SAVEPOINT கட்டளை ஒரு நடவடிக்கையை தற்காலிகமாக சேமித்து வைப்பதால், நாம் தேவைப்படும் சமயங்களில் திரும்பவும் அந்த நிலைக்கு செல்லலாம். நம்முடைய அட்டவணையின் மாறுபட்ட நிலைகளை வெவ்வேறு பெயர்களை பயன்படுத்தி எந்த சமயத்திலும் சேமித்துக் கொள்ளலாம். மேலும், ROLLBACK கட்டளையைப் பயன்படுத்தி மீண்டும் அந்த நிலையை சென்றடையலாம்
SAVEPOINT savepoint_name;
18.
வெளியீடு :
The x +=20 is = 30
The x -=5 is = 25
The x *=5 is = 125
The x /=2 is = 62.5
The x %=3 is = 2.5
The x **=2 is = 6.25
The x //=3 is = 2.0
19.
பைத்தான் வெற்றிகரமான C++ நிரலை இயக்குவது மட்டுமல்லாது, தொகுத்தலின் போது C++ கூற்றில் ஏதேனும் பிழைகள் இருப்பின் அவற்றை வெளியிடவும் உதவுகிறது. உதாரணத்திற்கு, கீழ்க்காணும் C++ நிரலின் ஒரு பிழை உள்ளது. பைத்தான் மூலம் தொகுக்கும் போது என்ன நேரும் என்பதைத் பார்க்கலாம்.
எடுத்துக்காட்டு :
// C++ program to print the message Hello
// Now select File-s-New in Notepad and type the C++ program
#include< iostream >
using namespace std ;
int main( )
{
std::cout<<"hello"
}
// Save this file as hello.cpp
#Now select File\(\rightarrow \)New in Notepad and type the Python program as main.py
# Program that compiles and executes a .cpp file
# Python main.py -i hello
import sys, os, getopt
def main(argv):
cpp_file ="
exe_ file ="
opts,args = getopt.getopt( argv,"i:" ,['ifile='])
for o, a in opts :
if in ("-i", "--ifile"):
cpp_file = a + '.cpp'
exe_file = a + '.exe'
runecpp_file, exe_file)
def runecpp_file, exe_file):
print=Compiling " + cpp _file)
os.system('g++ ' + cpp_file +' -o' +exe_ file)
print("Running " + exe_file)
print("_______ ")
print
os.system( exe_file)
print
if____ name =='____ main_____ ':
main(sys.argv[l:])
நிரலின் வெளியீடு
C:\Program Files\OpenOffice 4\
program > Python c:\pyprg\main.py -i c:\pyprg\hello
[('-i', 'c:\\pyprg\\hello')] .
Compiling c:\pyprg\heHo.cpp
c:\pyprg\hello.cpp: In function 'int main( )':
before 'return'
std::cout < <"hello"
/\
;
return 0;
------------
Running c:\pyprg\ch14\cpp __file.exe
_______
'c:\pyprg\hello.exe' is not recognized as an internal or external command, operable program or batch file.
C:\Program Files\OpenOffice 4\program>
20.
Matplotlib பெட்டி வரைபடம், ஹிஸ்டோகிராம், ஸ்கேட்டர் வரைவு, பட்டை விளக்கப்படம் போன்ற பல்வேறு வகையான வரைவிகளை உருவாக்க பயன்படுகிறது.
கோட்டு வரைவு:
கோட்டு வரைவு அல்லது கோட்டு விளக்கப்படம் என்பது தகவல்களை, "குறிப்பான்கள்" (Marker) என்று அழைக்கப்படும் தரவு புள்ளிகளின் தொடரை நேர்கோட்டின் இணைப்பதன் மூலம் காட்டுகிறது. ஒரு கோட்டு வரைவு பொதுவாக கால இடைவெளி (Interval of time) நேரத் தொடர் (Time series) போன்ற போக்கு பகுப்பாய்வுக்கான (Trend analysis) தரவுகளை காட்சிப்படுத்த பயன்படுகிறது. எனவே, இதன் கோடுகள் கால வரிசையில் அமையும்.
எடுத்துக்காட்டு: வரி வரைபடம்:
import matplotlib.pyplot as plt
years [2014, 2015, 2016, 2017, 2018]
total_populations = [8939007, 8954518, 8960387, 8956741, 8943721]
plt.plot (years, total_populations)
plt.title("Year vs Population in India")
plt.xlabel ("Year")
plt.ylabel ("Total Population")
plt.show()
இந்த நிரலில்,
plt.title() \(\rightarrow\) வரைப்படத்தின் தலைப்பை குறிப்பிடுகிறது.
plt.xlabel() \(\rightarrow\) X-அச்சின் தலைப்பை குறிப்பிடுகிறது.
plt.ylabel() \(\rightarrow\) Y-அச்சின் தலைப்பை குறிப்பிடுகிறது.

பட்டை விளக்கப்படம்:
பட்டை வரைவி (அல்லது) பட்டை விளக்கப்படம் என்பது மிகவும் பொதுவான வரைவிடம் வகையாகும். இது எண் வகை தரவுகளுக்கும், மதிப்புகளுக்கும் இடையே உள்ள உறவை வெளிப்படுத்துகிறது. பட்டை விளக்கப்படம் வகைப்படுத்தப்பட்ட தரவுகளை செவ்வக பட்டையாக காட்டும்.
இப்பட்டைகள் செங்குத்தாகவோ அல்லது கிடை மட்டமாகவோ தொகுக்கப்படலாம். இம்முறை கொடுக்கப்பட்ட எண் மதிப்புகளை பல்வேறு வகையுடன் ஒப்பிட்டு பார்க்க உதவும்.
Matplotlib-ல் பட்டை விளக்கப்படத்தை உருவாக்க, plt.bar() என்ற செயற்கூறினை பயன்படுத்த வேண்டும்.
எடுத்துக்காட்டு:
import matplotlib.pyplot as plt
# Our data
labels = ["TAMIL", "ENGLISH", "MATHS", "PHYSICS", "CHEMISTRY", "CS"]
usage [79.8, 67.3, 77.8, 68.4, 70.2, 88.5]
#Generating the y positions. Later, we'll use them to replace them with labels.
y_positions range (len(labels))
#Creating our bar plot
plt.bar (y_positions, usage)
plt.xticks (y_positions, labels)
plt.ylabel ("RANGE")
plt.title("MARKS")
plt.show()
வெளியீடு:

வட்ட விளக்கப்படம் :
வட்ட விளக்கப்படம் ஒரு பொதுவான விளக்கப்பட வகையாகும். வட்ட வடிவில் தோன்றும் இந்த விளக்கப்படம் எண் விகிதத்தை விளக்கும் விதத்தில் துண்டுகளாக பிரிக்கப்பட்டிருக்கும். வட்ட விளக்கப்படத்தில் உள்ள துண்டுகள் முழு படத்துடன் உள்ள உறவை வெளிக்காட்டும்.
Matplotlib கொண்டு வட்ட விளக்கப்படத்தை உருவாக்க plt.pie() செயற்கூறினை பயன்படுத்த வேண்டும். autopct அளவுரு, Python சரம் வடிவமைப்பை பயன்படுத்தி மதிப்பை சதவீதத்தில் காட்டும்.
எடுத்துக்காட்டு :
import matplotlib.pyplot as plt
sizes = [89, 80, 90, 100, 75]
labels = ["Tamil", "English", "Maths", "Science", "Social"]
plt.pie (sizes, labels = labels, autopct = "%.2f")
plt.show()
வெளியீடு:

21.
பைத்தான் ஸ்கிரிப்ட்
import sqlite3
connection = sqlite3.connect ("shop.db")
cursor = connection. cursor ( )
cursor . execute ("SELECT * FROM electronics")
result = cursor . fetchall ( )
print (* result, sep = "\n'')
வெளியீடு:
fetching first 5 records :
([(1003, 'Scanner', '10,500'), (1004, 'Speaker', '3000'), (1005, 'Printer', '8000') (1008, 'Monitor', '15000') (1010, 'Mouse', '700')]
22.
CSV கோப்பிலுள்ள தரவை வடிவூட்டம் செய்ய பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்
(i) ஒவ்வொரு வரிசையும் (தரவின் வரிசை) புதிய வரியில் இருக்க அந்த வரியை நுழைவு பொத்தானை அழுத்த வேண்டும்.
எடுத்துக்காட்டு :↲
xxx,yyy↲
↲ என்ற குறியீடானது நுழைவு விசையை குறிக்கும்.
(ii) கோப்பினில் உள்ள கடைசி பதிவானது வரிமுறிவு/வரி செலுத்தி பிரிப்பானைக் கொண்டிருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம்.எடுத்துக்காட்டாக :
PPP, qqq ↲
yyy, xxx
(iii) சாதாரண பதிவு வரிசைகளின் வடிவங்களை போன்று கோப்பின் முதல் வரிசையில் தோன்றக்கூடிய விருப்பத்தலைப்பு வரிசை இருக்கலாம். கோப்பின் தலைப்பானது புலங்களின் தொடர்புடைய பெயரினை கொண்டிருக்க வேண்டும். மேலும் பதிவுகளிலுள்ள புலங்களின் எண்ணிக்கையில் மீதமுள்ள கோப்பில் இருத்தல் வேண்டும். ↲
எடுத்துக்காட்டு :
field_name1, field_name2, field_name3↲
aaa,bbb,ccc ↲
zzz,yyy,xxx CRLF (Carriage Return and Line Feed)
(iv) தலைப்பு மற்றும் ஒவ்வொரு பதிவிலும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட புலங்கள் காற்புள்ளியால் பிரிக்கப்பட்டிருக்கலாம். இடைவெளியானது புலத்தின் ஒரு பகுதியான கருதப்படும் மேலும் நிராகரிக்கப்பட மாட்டாது. பதிவின் கடைசி காற்புள்ளியை தொடர்ந்து காற்புள்ளி இடம் பெறல் கூடாது.எடுத்துக்காட்டு :Red,Blue
(v) ஒவ்வொரு புலமும் இரட்டை மேற்கோள் குறிகளுக்குள் கொடுக்கப்படலாம் அல்லது கொடுக்கப்படாமல் இருக்கலாம். புலமானது இரட்டை மேற்கோள் குறிகளுக்குள் தரப்படவில்லையெனில், புலங்களில் இரட்டை மேற்கோள் குறியானது தோன்றாது: எடுத்துக்காட்டு:
"Red","Blue","Green"↲ # இரட்டை மேற்கோள் குறிகளுடன் உள்ள புலத்தின் தரவு
Black, White, Yellow # இரட்டை மேற்கோள் குறிகள் இல்லாத புலத்தின் தரவு
(vi) புலங்களில் வரிதிருப்பி (CRLF), இரட்டை மேற்கோள் குறி மற்றும் காற்புள்ளி போன்றவைகளை கொண்டிருந்தால் அவைகள் இரட்டை மேற்கோள் குறிகளுக்குள் கொடுக்கப்பட வேண்டும்.
எடுத்துக்காட்டு :
Red,",",Blue CRLF # காற்புள்ளியே ஒரு புலத்தின் மதிப்பாக இருப்பதால் அதை இரட்டை மேற்கோள் குறிக்குள் கொடுக்கப்பட வேண்டும்.
Red, Blue, Green
(vii) புலமானது இரட்டை மேற்கோள் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டிருக்க வேண்டுமெனில், இரட்டை மேற்கோள் குறிகளுக்குள் உள்ள புலமானது மற்றொரு இரட்டை மேற்கோள் குறிகளுக்குள் அமைக்கப்பட வேண்டும்.
""Red"", ""Blue"", Green # இரட்டை மேற்கோள்குறி ஒரு புலத்தின் மதிப்பாக இருப்பதால் அதை மற்றொரு இரட்டை மேற்கோள் குறிக்குள் அமைக்கப்பட வேண்டும்.
23.
பைத்தான் பின்வரும் செயற்குறிகளை வழங்குகிறது. இச்செயற்குறிகள் சரங்களை கையாள உதவுகிறது.
(i) இணைப்பு (Concatenation +)
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சரங்களை இணைக்கும் செயல்பாடு சேர்த்தல் அல்லது இணைத்தல் எனப்படும். கூட்டல் செயற்குறி சரங்களை இணைக்கப் பயன்படுகிறது.
எடுத்துக்காட்டு:
> > > "welcome" + "Python"
'welcomePython'
(ii) சேர்த்தல் (Append+=):
ஏற்கனவே உள்ள சரத்தின் இறுதியில் மேலும் புதிய சரம் அல்லது சரங்களை சேர்க்கும் செயல் சேர்த்தல் எனப்படும்.
+= செயற்குறி ஏற்கனவே உள்ள சரத்தின் இறுதியில் புதிய சரத்தினை சேர்க்க பயன்படுகிறது.
எடுத்துக்காட்டு:
> > > str1="Welcome to "
> > > str1 +="Learn Python"
> > > print (str1)
Welcome to Learn Python
பலமுறை (Repeating (*)) :
பெருக்கல் செயற்குறி கொடுக்கப்பட்ட சரத்தினை பல தடவைகள் வெளிப்படுத்த பயன்படுகிறது.
> > > str1="Welcome"
> > > print (str1*4)
Welcome Welcome Welcome Welcome
24.
பின்னலான if..else..elif கூற்று:
if கூற்றுகளைத் தொடர் கூற்றுகளாக அமைக்க விரும்பும் போது 'else' பகுதிக்குப் பதிலாக 'elif' பகுதி பயன்படுத்தலாம்.
தொடரியல்:
if < condition-1 >:
statements-block 1
elif < condition-2 >:
statements-block 2
else:
statements-block n
மேற்கண்ட if..elif..else பொதுவடிவத்தில், condition-1 பரிசோதிக்கப்படும். condition-1 சரி எனில் statements-block 1 நிறைவேற்றப்படும். இல்லையெனில் கட்டுப்பாடு, condition-2யை சோதிக்கும். condition-2 சரி எனில் statements-block-2 நிறைவேற்றப்படும். இல்லையெனில் else பகுதியில் உள்ள statements-block n நிறைவேற்றப்படும்.

(i) `elif' பகுதி if..else-if..else கூற்றுகளை ஒன்றிணைத்து ஒரே if..elif...else......' கூற்றாக செயல்படும்.
(ii) 'elif' ன் விரிவாக்கம் 'else if'.
(iii) 'if' கூற்றில் பயன்படுத்தப்படும் 'elif' பகுதிக்கு வரம்பு இல்லை, ஆனால் else பகுதி பயன்படுத்தும் போது கூற்றின் இறுதியில் பயன்படுத்த வேண்டும்.
எடுத்துக்காட்டு:
கீழே கொடுக்கப்பட்ட நிபந்தனையின்படி மாணவர்கள் பெற்ற தர வரிசையை அச்சிட வேண்டிய நிரல்
| சராசரி | தரம் |
| >=80 and above | A |
| >=70 and <80 | B |
| >=60 and <70 | C |
| >=50 and <60 | D |
| Otherwise | E |
# பின்னலான if கூற்றின் பயன்பாட்டை விளக்கும் நிரல்
m1=int (input("Enter mark in first subject:"))
m2=int (input("Enter mark in second subject: "))
avg= (m1+m2)/2
if avg > =80:
print ("Grade: A")
elif avg>=70 and avg <80: print ("Grade: B")
elif avg>=60 and avg<70: print ("Grade: C")
elif avg>=50 and avg<60: print ("Grade: D")
else:
print ("Grade: E")
வெளியீடு 1:
Enter mark in first subject: 34
Enter mark in second subject: 78
Grade : D
வெளியீடு 2:
Enter mark in first subject: 67
Enter mark in second subject: 73
Grade: B
25.
(i) structure அமைப்பை (OOP மொழியில் இது இனக்குழு அமைப்பு என்று அழைக்கப்படுகிறது) கொண்டு பல உருப்படி பொருளில் அனைத்து உருப்புகளும் பெயரிடப்படும் (பெயர் கொடுக்கப்பட்டு பின்வரும் போலிக்குறிமுறையை காணவும்):
class Person:
creation()
firstName := " "
lastName := " "
id := " "
email := " "
Person எனும் புதிய தரவு வகையை படவடிவில் உருவமைக்கலாம்.

| பின்வருவனவற்றை main() கொண்டிருக்கும் | |
| p1 :=Person() | பொருள் உருவாக்கும் கூற்று |
| firstName :=Padmashri" | -- firstName எனும் புலத்திற்கு Padmashri என மதிப்பிருத்தப்படுகிறது. |
| lastName :="Baskar" | lastName எனும் புலத்திற்கு Baskar என மதிப்பிருத்தப்படுகிறது. |
| id :="994-222-1234" | id எனும் புலத்திற்கு 994-222-1234 என மதிப்பிருத்தப்படுகிறது. |
| email = "compsci @ gmail.com" | email எனும் புலத்திற்கு compsci@gmail.com என மதிப்பிருத்தப்படுகிறது. |
| -- output of firstName : Padmashri | |
(ii) இனக்குழு கட்டமைப்பு ஒரு நபரை குறிக்கும் பல பகுதி பொருளுக்கு வடிவம் வரையறுக்கிறது. இந்த வரையறுப்பு புதிய தரவு வகையை சேர்க்கிறது. இதில் நபர் என்பது வகையாகும். ஒரு முறை வரையறுத்தலின், நாம் புதிய மாறிகளை உருவாக்கலாம்.
(iii) இந்த எடுத்துக்காட்டில் Person என்பது இனக்குழு அல்லது வகையாகும். p1 என்பது தனிப்பட்ட குக்கீ குறிக்கின்றது. குக்கீ கட்டர் கொண்டு பல குக்கீகளை தயாரிக்கலாம். அது போன்று இவ் இனக்குழுவைக் கொண்டு பல பொருள்களை உருவாக்கலாம்.
(iv) இதுவரை, இனக்குழு தொடர்புடைய தரவுகளைக் கொண்டு தரவு அருவமாக்கத்தை எவ்வாறு வரையறுக்கிறது என்று பார்த்தோம். ஓர் இனக்குழு என்பது தரவுகளை மட்டுமில்லாது செயற்கூற்றினையும் தன்னுடன் கொண்டிருக்கும்.
(v) இவ்வகை செயற்கூறுகள், இனக்குழுவிற்கு கீழ்ப்படிந்தவை, ஏனெனில் இவை இனக்குழுவின் தரவுகளை வைத்து செயல்படுகிறது.
(vi) எடுத்துக்காட்டு Person பொருளின் தரவுகளை மாற்றம் செய்தல் அல்லது ஆய்வு செய்தல் எனவே, இனக்குழு என்பது தரவு மற்றும் அத்தரவின் மீது செயலாற்றும் செயற்கூறுகளை கொண்ட தொகுப்பாகும்.
(vii) முன்னதாக பார்த்த எடுத்துக்காட்டு மற்றும் விளக்கத்தின் மூலம் அருவமாக்கம் என்பது சிக்கலான தரவுகளை எளிய முறையில் கையாள உதவுகின்றது என்பதை உணரலாம்.
26.
பட்டை வரைவிடம் (அல்லது பட்டை வரைபடம்) என்பது மிகவும் பொதுவான வரைவிடம் வகையாகும். இது எண் மாறிக்கும், வகை மாறிகளுக்கும் இடையே உள்ள உறவை வெளிப்படுத்துகிறது. பட்டை விளக்கப்படம் வகைப்படுத்தப்பட்ட தரவுகளை செவ்வக பட்டையாக காட்டும். இப்பட்டைகள் செங்குத்தாகவோ அல்லது கிடைமட்டமாகவோ தொகுப்பப்படலாம். இம்முறை கொடுக்கப்பட்ட எண் மதிப்புகளை பல்வேறு வகையுடன் ஒப்பிட்டு பார்க்க உதவும்.
27.
இனக்குழு அறிவிப்பானது வெளிப்புற இடைமுகத்தோடு அதன் உள்ளமை நிலை அந்த இடைமுகத்தைச் செயல்படுத்தும் செயல்பாட்டுடன் பண்புகளை உடைய குறிமுறை இணைக்கிறது.
28.
இனக்குழுவின் உள்ளே வரையறுக்கப்படும் மாறி கொடாநிலையாக public மாறி ஆகும். இந்த மாறிகளை புள்ளி செயற்குறி ( . ) பயன்படுத்தி நிரலில் எங்கு வேண்டுமானாலும் அணுகலாம். இரட்டை அடிக்கீறலை முன்னொட்டாக கொண்ட மாறிகள் private ஆகும். இந்த மாறிகளை இனக்குழுவின் உள்ளே மட்டும் தான் அணுக முடியும்.
29.
1) range -ன் மதிப்புகள் 1 முதல் தொடங்கி 29 வரை
2) range ( ) மதிப்புகள் 2 முதல் 28 வரை
3) range ( ) மதிப்புகள் 30 முதல் 6 வரை
4) 20 என்ற மதிப்பை இறுதி மதிப்பாக எடுத்துக்கொண்டு (அல்லது மேல்வரம்பு) 0 முதல் 19 வரையிலான மதிப்புகளைக் கொடுக்கும் (range ( )எப்பொழுதும் stop மதிப்பு -1 வரை மதிப்பைக் கொடுக்கும் என்பதை நினைவில்கொள்க).
30.
DictReader( ) தானமைவாக OrderedDict என்பதை வெளியிடும். Dictionaryயின் ஒரு துணைக்குழுவாக OrderedDict செயல்படும். இது உள்ளடக்கத்தையும் அவற்றை சேமிக்கும் வரிசையில் சேர்க்கும். OrderedDict நீக்க Dict( ) யை பயன்படுத்தவும்.
31.
தரவுத்தளத்தின் பயனர்களாக மனிதர்கள், பிற நிரல்கள் அல்லது பயன்பாடுகள் இருக்கலாம்.
32.
(i) அடிப்படையில் அனைத்து scripting மொழிகளும் நிரலாக்க மொழிகளாகும். இரண்டுக்குமிடையே கருத்தியலான வேறுபாடு என்னவெனில், Scripting மொழிக்கு தொகுத்தல் படிநிலைத் தேவைப்படாது, மாறாக வரிமொழி மாற்றம் தேவைப்படும்.
(ii) உதாரணத்திற்கு, ஒரு C++ நிரல் இயக்குவதற்கும் முன்பாக, தொகுக்கப்பட வேண்டும். அதே சமயம் ஜாவாஸ்கிரிப்ட் அல்லது பைத்தான் போன்ற scripting மொழிகள் தொகுக்கப்பட தேவையில்லை.
(iii) நிரலாக்க மொழிக்கு நிரல்பெயர்ப்பி தேவைப்படுவது போல scripting மொழிக்கு வரிமொழி மாற்றி தேவைப்படுகிறது.
33.
பைத்தான் நிரலினை சோதிக்க ஊடாடும் முறைமை, ஸ்கிரிப்ட் முறைமை என்று இரு வகை முறைமைகள் உள்ளன
34.
namespaces என்பது மாறியின் பெயரை பொருளுடன் மேப்பிங் செய்வதற்கான கொள்கலனாகும்.
35.
let rec gcd a b :=
if b < > 0 then ged b (a mod b) else return
a;;
வெளியீடு:
ged 13 27;;
- : int = 1
ged 20536 7826;;
- : int = 2
36.
(i) ஒரு கூறுநிலைக்குள் மற்றொரு கூறுநிலையின் வரையறைகளைத் தருவித்துக் கொள்ளலாம். அவ்வாறு செய்வதற்கு நாம் 'import''என்ற சிறப்பு சொல்லைப் பயன்படுத்த முடியும்.
(ii) நாம் முன்னதாக வரையறுத்து factorial என்ற கூறுநிலையைத் தருவித்துக் கொள்ள பைத்தான் தூண்டுகுறியில் கீழ்கண்டவாறு தட்டச்சு செய்யவும்.
>>> import factorial
(iii) கூறுநிலைக்குள், வரையறுக்கப்பட்ட செயற்கூறுகளை, கூறுநிலையின் பெயரைப் பயன்படுத்தி அணுக முடியும்.
(iv) செயற்கூறுகளை அணுக புள்ளிச் செயற்குறி பயன்படுத்தப்படுகிறது கூறுநிலையிலிருந்து செயற்கூறுகளை அணுகுவதற்கான தொடரியல்
.< module name > . < function name >
37.
(i) Public உறுப்புகளை இனக்குழுவிற்கு வெளியே இருந்தும் அணுக முடியும்
(ii) Protected உறுப்புகள் அந்த இனக்குழு மற்றும் அதன் துணை இனக்குழுக்களால் அணுகப்படலாம்
(iii) Private உறுப்புகளை இனக்குழுவிற்கு வெளியே இருந்து அணுக முடியாது. இனக்குழுவிற்கு உள்ளே மட்டும்தான் கையாள முடியும்
38.
(i) Notepad உரைபதிப்பானை கொண்டு CSV கோப்பினை உருவாக்க முதலில் புதிய ஆவணத்தை பின்வரும் வழிமுறையை பயன்படுத்தி திறக்கலாம்.
File \(\rightarrow \) New or ctrl +N.
(ii) அடுத்து, கோப்பில் உள்ளிடப்பட்ட வேண்டிய தரவின் ஒவ்வொரு வரி அல்லது வரிசையிலுள்ள மதிப்புகளை காற்புள்ளியால் பிரிக்கப்பட்டு உள்ளீடு செய்யவும். எடுத்துக்காட்டாக, கீழ்கண்ட விவரங்களை கருதி கொள்க.
Topic1,Topic2, Topic3
one, two, three
Example1, Example2, Example3
மேற்கண்ட கோப்பினை .csv என்ற நீட்டிப்புடன் சேமிக்கவும்.
39.
| பைத்தான் | C ++ | |
|---|---|---|
| 1. | பைத்தான் ஒரு ''வரி மொழி மாற்றி (Interpreter) மொழியாகும். | C++ மொழி, ஒரு நிரல்பெயர்ப்பி (Compiler) மொழியாகும். |
| 2. | பைத்தான் மாறும் தன்மைக் கொண்ட மொழியாகும். | C++ நிலையான தன்மைக் கொண்ட தொகுக்கப்பட்ட மொழி. |
| 3. | மாறியை அறிவிக்கும் போது, அது சார்ந்த தரவின வகையை குறிப்பிடத் தேவையில்லை. | மாறியை அறிவிக்கும் போது, தரவினத்தை குறிப்பிட வேண்டும். |
| 4. | இது Scripting மற்றும் பொதுப் பயன் மொழியென இருவகையிலும் செயல்பட முடியும். | இது ஒரு பொதுப்பயன் நிரலாக்க மொழியாகும். |
40.
(i) இந்த மாதிரி தரவை பொருள்கள், பண்புக்கூறுகள், வழிமுறைகள், இனக்குழு மற்றும் மரபுரிமம் போன்ற வழிகளில் சேமிக்கிறது.
(ii) இது மிகவும் சிக்கலான பயன்பாடுகளான புவியியல் தகவல் அமைப்பு(GIS-Geographic Information System), அறிவியல் சோதனைகள் (Scientific experiments), பொறியியல் வடிவமைப்பு (Engineering design), உற்பத்தி (Manufacturing) போன்றவற்றைக் கையாள்கிறது. இது கோப்பு மேலாண்மை அமைப்பில் பயன்படுகிறது.
(iii) நிகழ்உலக பொருள்கள், பண்புக்கூறுகள், பண்பியல்புகளை குறிப்பிடுகிறது மற்றும் தெளிவான கூறுநிலை (modular structure) அமைப்பை வழங்குகிறது. இதில் ஏற்கனவே உள்ள குறிமுறையை எளிதாகப் பராமரிக்கவும், மாற்றி அமைக்கவும் முடியும்.

(iv) பொருள்நோக்கு தரவுதள மாதிரியின் எடுத்துக்காட்டு Shape, Circle, Rectangle மற்றும் Triangle ஆகியவை இந்த மாதிரியில் உள்ள பொருள்களாகும்.
1. Circle என்பது radius என்ற பண்புக்கூற்றையும்,
2. Rectangle என்பது length மற்றும் breadth என்ற பண்புக்கூறுகளையும்,
3. Triangle என்பது base மற்றும் height என்ற பண்புக்கூறுகளையும் கொண்டுள்ளன.
4. Circle, Rectangle மற்றும் Triangle ஆகிய பொருள்கள் Shape என்ற பொருளில் இருந்து தருவிக்கப்படுபவைகளாகும்.
41.
(i) List என்பது வரிசைப்படுத்திய உறுப்புகளின் தொகுப்பாகும். ஆனால் Dictionary ஒரு உறுப்பை (திறவுகோல்) மற்றொரு உறுப்புடன் (மதிப்பு) பொறுத்தப் பயன்படும் தரவு அமைப்பாகும்.
(ii) List -ன் சுட்டெண்கள் குறிப்பிட்ட உறுப்பை அணுகுவதற்குப் பயன்படுகின்றன. ஆனால், Dictionary- ல் திறவுகோல் சுட்டெண்ணைக் குறிக்கிறது. ஒரு சரத்தின் எண்ணாகவும், திறவுகோல் இருக்கலாம் என்பதை நினைவில் கொள்க.
(iii) சுட்டெண் மதிப்புகள் பார்க்க List -ன் மதிப்பை பயன்படுகிறது. Dictionary ஒரு மதிப்பை எடுத்துக் கொண்டு மற்றொரு மதிப்பை பார்க்க பயன்படுகிறது.
42.
y= int (input ("Enter year"))
if y % 4 == 0:
print ("The given year is a leap year")
else :
print ("The given year is not a leap year")
வெளியீடு:
Enter the year 2012
Leap year
43.
நெறிமுறை f(n)-ன் சிக்கலானது, அது n அளவிலான உள்ளீட்டு தரவை எடுத்துக்கொண்டு இயங்கும் நேரம் மற்றும் நினைவகத்தில் அதற்கு தேவைப்படும் இட ஒதுக்கீடு பொறுத்தது
(i) நேரசிக்கல் (Time complexity): ஒரு நெறிமுறை செயலை செய்து முடிக்க எண்ணிக்கையே நெறிமுறையின் நேரசிக்கல் எனப்படும்
(ii) இடச்சிக்கல் (space): ஒரு நெறிமுறையின் செயல்பாடு முடியும்வரை அதற்கு தேவைப்படும் நினைவக இடமே இடச்சிக்கல் எனப்படும். நெறிமுறைக்கு தேவைப்படும் இடம் பின்வரும் இரு கூறுகளின் கூட்டுத் தொகையாகும்
நிலையான பகுதி: இது நெறிமுறைக்கு தேவையான தரவு மற்றும் மாறிகளை சேமிக்க பயன்படும் கூட்டு இடத்தை வரையறுக்கும். எடுத்துக்காட்டு நிரல் நெறிமுறையில் பயன்படுத்தப்படும் மாறிகள் மற்றும் மாறிலிகள்.
மாறும் பகுதி: சிக்கலின் அளவு மற்றும் சுழற்சிக்கு தேவைப்படும் அனைத்து மாறிகளின் கூட்ட இடத்தின் அளவை பொறுத்து 'n' வரையறுக்கப்படும். எடுத்துக்காட்டாக: என்ற மதிப்பின் தொடர் பொருட்களை தற்சுழற்சி மூலம் கண்டறிதல்.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards