12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 03/03/2021
12ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு மூன்று மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Computer Technology Reduced Syllabus Creative Three mark Question with Answer key - 2021(Public Exam)
12ஆம் வகுப்பு Computer Technology / கணினி தொழில்நுட்பம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Technology / கணினி தொழில்நுட்பம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Technology Test

1.
AutoCADல் டைனமிக் இன்புட் (Dynamic Input) பொத்தானின் பயன் யாது?
2.
AutoCADல் ஒப்பீட்டு செவ்வக ஆயத் தொலைவு அமைப்பைப் பயன்படுத்தி கீழ் இடது மூலையில் (70,70) என்ற புள்ளியைக் கொண்ட 100 அலகுகள் உடைய ஒரு சதுரம் வரைவதற்கான கட்டளை வரிகளை எழுதுக.
3.
AutoCADல் போலார் டிராக்கிங் (Polar Tracking)ன் பயன் யாது?
4.
ஃப்ளாஷில் உள்ள பின்வரும் கருவிகளின் பயன் யாது?
1) Fill color
2) Black and White
3) Swap colors
5.
ஃப்ளாஷில் Point-to-Point வகையில் பொருட்களை எவ்வாறு தேர்வு செய்வாய்?
6.
ஃப்ளாஷ் பணித்தளத்தில் உரையை எவ்வாறு சேர்ப்பாய்?
7.
ஃப்ளாஷில் சதுரம் அல்லது செவ்வகம் வரைவதற்கான படிகளை எழுதவும்.
8.
ஃப்ளாஷில் ஒரு புதிய ஆவணத்தை எவ்வாறு உருவாக்குவாய்?
9.
பல்லூடகத்தை உருவாக்கும் படி நிலைகளைப் பட்டியலிடு.
10.
MPEG பற்றி குறிப்பு வரைக.
11.
BMP மற்றும் DIB என்றால் என்ன ?
12.
இலக்க ஒலி பற்றி குறிப்பு வரைக.
13.
CorelDRAW - ல் உள்ள கலைத்திறனுள்ள உரைக்கும் பத்தி உரைக்கும் இடையேயான வேறுபாடு யாது?
14.
CorelDRAW-ல் Undo, Redo, Revert மற்றும் Repeat செயல்களை எவ்வாறு நிறைவேற்றுவாய்?
15.
CorelDRAW-ல் உள்ள Polygon கருவியின் flyout கருவிகளைப் பட்டியலிடு.
16.
உரைச் சட்டத்தில் தட்டச்சு உருவாக்குவதற்கான படிநிலைகள் யாவை?
17.
InDesign கருவிப் பலகத்தில் உள்ள சீரமைக்கும் கருவியைப் பற்றி எழுதுக.
18.
InDesign-ல் உள்ள உள்ளடக்கத்தைச் சேகரிக்கும் கருவியைப் பற்றி குறிப்பு வரைக.
19.
InDesign - னைப் பயன்படுத்தி எவை நிறைவேற்றப்படுகின்றன?
20.
பேஜ்மேக்கரில் தேவையில்லாத பக்கங்களை எவ்வாறு நீக்குவாய்?
21.
பேஜ்மேக்கரில் ஒரு புள்ளிக் கோட்டை எவ்வாறு வரைவாய்?
22.
பேஜ்மேக்கரில் உள்ள திரை உருளல் செய்யும் முறைகள் யாவை?
23.
தானமைவு உரைப்பாய்வு மூலம், பிற மென்பொருள்களிலிருந்து உரையை எவ்வாறு செருகுவாய்?
24.
பேஜ்மேக்கரில் உரையை எவ்வாறு நகர்த்துவாய்?
25.
பேஜ்மேக்கரில் உள்ள தலைப்புப் பட்டை பற்றி குறிப்பு வரைக.
1.
1. டைனமிக் இன்புட்டை ON அல்லது OFF செய்வதற்கு நிலைமைப் பட்டையிலுள்ள டைனமிக் இன்புட் பொத்தானைக் கிளிக் செய்ய வேண்டும்.
2. டைனமிக் இன்புட் மோடு ON செய்யப்பட்டிருந்தால், சுட்டியை நகர்த்தும் போது x, y ஆயத் தொலைவு புள்ளிகளைக் காட்டும்.
3. டைனமிக் இன்புட் மோடை ON அல்லது OFF செய்வதற்கு விசைப்பலகையில் F12 விசையைப் பயன்படுத்த வேண்டும்.
2.
Command:LINE
Specify first point: 70,70↲
Specify next point or (Undo]:@100,0↲
Specify next point or [Undo]: @0,100↲
Specify next point or [Close/Undo]:@-100,0 ↲
Specify next point or [Close/Undo]:C↲
3.
1. போலர் டிராக்கிங் ON செய்திருந்தால், கோட்டின் திசை மற்றும் நீளம் பற்றிய சிறு குறிப்பு டிகிரி மற்றும் அலகுகளில் தோன்றும்.
2. 5, 10, 15, 23, 30, 45 அல்லது 90 டிகிரிகள் போன்ற கோண அதிகரிப்புகளுடன் கோடுகளை வரைய முடியும்.
3. போலார் டிராக்கிங்கை ON அல்லது OFF செய்வதற்கு விசைப்பலகையில் F10 விசையைப் பயன்படுத்த வேண்டும்.
4.
1. Fill color கருவி : வரையப்பட்ட பொருள்களின் உட்பரப்பின் வண்ணத்தை மாற்றப் பயன்படுகிறது.
2. Black and White கருவி : வெளிக்கோட்டின் வண்ணத்தை கருப்பு நிறமாகவும் உட்பரப்பின் (Fill) வண்ணத்தை வெள்ளை நிறமாகவும் அமைக்கப் பயன்படுகிறது.
3. Swap color கருவி : வெளிக்கோடு மற்றும் உட்பரப்பு வண்ணத்தை இடமாற்றம் செய்யப் பயன்படுகிறது.
5.
1. கருவிகள் பலகத்தில் உள்ள Lasso கருவியைக் கிளிக் செய்யவும்.
2. விருப்பங்கள் பகுதியில் இருந்து Polygon Mode modifier ஐ கிளிக் செய்யவும்.
3. தேர்வு செய்தலைத் தொடங்க, மேடையில் தேர்வு தொடங்க வேண்டிய புள்ளியில் கிளிக் செய்யவும்.
4. தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய பொருளைச் சுற்றி கோடு வரைய (Outline) அந்த பொருளை சுற்றி பணித்தளத்தில் தொடர்ந்து கிளிக் செய்யவும்.
5. தேர்ந்தெடுப்பை முடிக்க இரட்டை கிளிக் செய்யவும்.
6.
1. கருவிப் பலகத்திலுள்ள Text Tool ஐக் கிளிக் செய்யவும்.
2. Property Inspector பலகத்தில் எழுத்து, எழுத்து அளவு, நிறம், பாங்கு (Pattern), எழுத்து இடைவெளி, இசைவு போன்ற உரைக்கான விருப்பங்களைத் தேர்வு செய்ய வேண்டும்.
3. உரையைத் தட்டச்சு செய்ய, மேடையில் கிளிக் செய்து தட்டச்சு செய்யவும். இது தட்டச்சு செய்யப்படும் உரைக்கு தகுந்தாற்போல் உரைப்பெட்டியை விரிவடையச் செய்கிறது. (அல்லது) மேடையில் கிளிக் செய்து இழுப்பதன் மூலம் ஒரு செவ்வகம் வரையவும். இது குறித்த அளவுள்ள உரைப்பெட்டியை உருவாக்குகிறது. இப்பொழுது Text Box-ல் உரையை உள்ளிடவும். உரையானது தானாகவே உரைப்பெட்டியின் அகலத்திற்குள் மடிந்து விடுகிறது.
7.
1. கருவிப் பலகத்திலுள்ள Rectangle Tool ஐக் கிளிக் செய்யவும்.
2. Property Inspector பலகத்திலிருந்து செவ்வகத்திற்குத் தேவையான அமைப்புகளைத் தேர்ந்தெடுக்கவும்.
3. மேடையில் செவ்வகம் வரைய வேண்டிய இடத்திற்கு சுட்டியைக் கொண்டு சென்று சுட்டியின் இடது பொத்தானை அழுத்திக் கொண்டே இழுக்கவும்.
4. தேவையான அளவில் செவ்வகத்தைப் பெற்ற பின் சுட்டியின் பொத்தானை விட்டுவிடவும். சுட்டியின் பொத்தானை அழுத்திக் கொண்டு இழுக்கும் போது Shift பொத்தானை அழுத்திப் பிடிப்பதன் மூலம் Rectangle tool ஐப் பயன்படுத்தி சதுரம் வரைய முடியும்.
8.
(i) ஃப்ளாஷைத் தொடங்கும் போது தோன்றும் மையத்திலுள்ள Create new நெடுவரிசையில் இருக்கும் ActionScript 3.0-ஐ கிளிக் செய்யவும். (அல்லது)
(ii) File – New-ஐ தேர்ந்தெடுத்தால் New Document உரையாடல் பெட்டி தோன்றும். அதில் General தாவலின் கீழ் உள்ள ActionScript 3.0-ஐத் தேர்ந்தெடுத்து OK பொத்தானைக் கிளிக் செய்தால் ஒரு புதிய ஆவணம் உருவாகும்.
9.
1. கருத்துரு பகுப்பாய்வு மற்றும் திட்டமிடல்
2. திட்ட வடிவமைப்பு
3. முன் - உருவாக்குதல்.
4. வரவு - செலவு திட்டமிடல்.
5. பல்லூடகத்தை உருவாக்கும் குழு
6. வன்பொருள்/மென்பொருள் தேர்ந்தெடுத்தல்.
7. பொருளடக்கத்தை வரையறுத்தல்.
8. கட்டமைப்பைத் தயார் செய்தல்.
9. உருவாக்குதல்.
10. சோதித்தல்.
11. ஆவணப்படுத்துதல்.
12. பல்லூடக திட்டத்தை வழங்குதல்.
10.
MPEG என்பது இலக்க ஒளிக்காட்சி மற்றும் ஒலி குறுக்கத்தை ISO குழுவினரால் உருவாக்கப்படும் ஒரு தர நிலை ஆகும்.
இந்த குழுவினர் உருவாக்கியவை :
1. MPEG - 1: ஒளிக்காட்சி CD மற்றும் MP3 ஆகியவற்றிற்கான தரநிலை.
2. MPEG - 2: இலக்கத் தொலைக்காட்சி செட்டாப் பெட்டி மற்றும் DVDகளை ஆதரிக்கும் தரநிலை.
3. MPEG - 4 : பல்லூடகம் மற்றும் கைப்பேசி வலைக்கான தரநிலையாகும்.
4. MPEG - 7 : ஒலி மற்றும் ஒளி பொருளடக்கத்தைத் தேடுவதற்கான தரநிலையாகும்.
5. 2000 ல் MPEG - 21 'பல்லூடகக் கட்டமைப்பு' பற்றிய ஆய்வைத் தொடங்கியது.
11.
(i) BMP(Bitmap):
1. தொடக்கத்தில் இந்த வடிவமானது விண்டோஸ் 3.1 - ல் பயன்படுத்தப்பட்டது.
2. மிகவும் பெரியது மற்றும் குறுக்கமற்றது.
3. எனவே, அதிக தெளிவுத்திறன் (அ) பெரிய நிழற்படங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது.
(ii) DIB (Device Independent Bitmap):
1. இந்த வடிவம் BMP - யை ஒத்ததாகும்.
2. கோப்புகளை பல்வேறு சாதனங்களில் காண்பிக்க அனுமதிக்கிறது.
12.
1.மாதிரி ஒலி என்பது இலக்க ஒலியாகும்.
2. மாதிரி ஒலியை எடுத்து, ஒவ்வொரு " நொடிப் பொழுதையும் பிட் மற்றும் பைட்டுகளில் இலக்கத் தகவல்களாகச் சேமிக்கப்படுகிறது.
3. இந்த பதிவு செய்தலின் தரம், மாதிரி விகிதத்தைப் பொறுத்து அமையும்.
4. எத்தனை முறை மாதிரிகள் எடுக்கப்படுகின்றன மற்றும் ஒவ்வொரு மாதிரியின் (பிட் ஆழம், தெளிவுத்திறன். மாதிரி அளவு) மதிப்பையும் குறிப்பிட எத்தனை எண்கள் பயன்படுகின்றன என்பதன் மூலம் மாதிரி விகிதம் வரையறுக்கப்படுகிறது.
5. அடிக்கடி மாதிரியினை எடுத்தும் அந்த மாதிரியைப் பற்றிய அதிக தரவுகளைச் சேமிக்கும் பொழுதும், பதிவு செய்யப்பட்ட ஒலியின் சிறந்த தரம் மற்றும் தெரிவுத்திறன் ஆகியவற்றை மீண்டும் ஒலிக்கச் செய்யும் பொழுது பெறப்படுகிறது.
13.
| கலைத்திறனுள்ள உரை | பத்தி உரை |
| 1.உரையினுடைய சிறு பகுதிகளை உருவாக்க உதவுகின்றது | நீண்ட உரைத் தொகுதிகளை வடிவமைக்க உருவாக்கப்பட்டது. |
| 2.உரையினைப் பாதையில் பொருத்துதல் (அ) கலத்தல் மற்றும் வெளியே தள்ளுதல் போன்ற சிறப்பு விளைவுகளைத் தருகிறது. | நெடுவரிசைகளாக, புல்லட் பட்டியல்களாக தொகுதிகள் மற்றும் உள்தள்ளல் போன்ற அதிக வடிவூட்டல் விருப்பங்களை உரைக்கு வழங்குகின்றது . |
14.
| கடைசி செயலை Undo செய்ய. | Edit > Undo தேர்வு செய்யவும். |
| ஒரு செயலை Redo செய்ய. | Edit > Redo தேர்வு செய்யவும். |
| வரைபடத்தின் கடைசியாக சேமிக்கப்பட்ட நிலைக்கு பின்செல்ல. |
File> Revert தேர்வு செய்யவும். |
| ஒரு செயலை மீண்டும் செய்ய | Edit > Repeat தேர்வு செய்யவும். |
15.
1. Polygon
2. Star
3. Complex Star
4. Impact tool
5. Graph Paper
6. Spiral
7. Basic Shapes
8. Arrow Shapes
9. Flowchart Shapes
10. Banner Shapes
11. Callout Shapes.
16.
1. கருவிப்பலகத்தில் இருந்து தட்டச்சுக் கருவியை தேர்ந்தெடுக்கவும்.
2. தேவைப்படும் அளவில் இழுத்து செவ்வக உரைப்பெட்டியை உருவாக்கவும். ஒரு ஒளிரும் செருகும் புள்ளியானது உரைச்சட்டகத்தில் தோன்றும்.
3. இப்பொழுது தட்டச்சு செய்ய ஆரம்பிக்கலாம். உரையானது தானாகவே மடிந்து அந்த உரைச் சட்டத்தின் வடிவத்திற்கு அமைகிறது. புதுவரியைத் தொடங்க 'Enter' பொத்தானை அழுத்தவும்.
17.
1. முதலில் பாதையைத் தேர்ந்தெடுத்து அதன் மீது இந்தக் கருவியை இழுக்கவும். இப்போது பாதை சீராக இருக்கும்.
2. இன்னமும் சீராக இல்லையெனில் மீண்டும் இந்தக் கருவியை இந்தப் பாதை மீது இழுக்கவும்.
3. இது புள்ளிகளை சரி செய்து கட்டுப்பாட்டை கையாண்டு ஒரு வரி பிரிவில் இருந்து மற்றொரு வரிக்கு மாற்றுகிறது.
18.
1. உள்ளடக்கத்தை சேகரிக்கும் கருவியை தேர்ந்தெடுத்து பொருள்கள் (அ) கதைகளை திரையின் கீழ் உள்ள உள்ளடக்க சேகரிப்பானில் சேர்க்கவும்.
2. பிறகு உள்ளடக்க வைப்பான் கருவியைப் பயன்படுத்தி உள்ளடக்க சேகரிப்பானில் உள்ள பொருள்களை வேறு அமைப்பிலோ (அ) ஆவணத்திலோ நகல் எடுக்கலாம் (அ) இணைக்கலாம்.
3. B என்ற பொத்தானை அழுத்தி உள்ளடக்க சேகரிப்பான் மற்றும் உள்ளடக்க வைப்பான் ஆகிய இரு கருவிகளுக்கு இடையே மாறிக் கொள்ளலாம்.
19.
1. உரையை உருவாக்குதல் மற்றும் வைத்தல்.
2. வரைகலையை உருவாக்குதல் மற்றும் இருத்துதல்.
3. பல நிறங்களில் இருந்து தேர்வு செய்தல்.
4. எளிதாக பொருள்களைப் பொருத்துதல்.
5. உருப்பொருள்களைச் சேமித்தல்.
6. ஊடாடும் பொத்தான்களை உருவாக்குதல் மற்றும் மீத்தொடுப்பு.
7. ஆவணத்தை மாற்றுதல்.
20.
1. பட்டிப்பட்டையில் Layout > Remove pages என்பதைக் கிளிக் செய்யவும்.
2. Remove pages உரையாடல் பெட்டி தோன்றும்.
3. நீக்க வேண்டிய பக்கங்களின் தொடக்க எண்ணையும் கொடுக்க வேண்டும்.
4. பிறகு OK பொத்தானைக் கிளிக் செய்ய வேண்டும்.
21.
1. கருவிப் பெட்டியிலுள்ள லைன் டூலில் இருமுறை கிளிக் செய்யவும். Custom Stroke உரையாடல் பெட்டி தோன்றும்.
2. Stroke style கீழிறங்கு பட்டிப்பெட்டியில் தேவையான கோட்டின் வகையைத் தேர்ந்தெடுக்கவும்.
3. பிறகு OK பொத்தானைக் கிளிக் செய்யவும். இப்பொழுது சுட்டுக்குறியானது Crosshair ஆக மாறும்.
4. திரையில் கிளிக் செய்து இழுத்து, புள்ளிக் கோட்டை வரையலாம்.
5. சுட்டியை அழுத்துவதை விட்டவுடன். கோடு வரையப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும். அதன் இருபுறமும் அளவு மாற்றும் கைப்பிடிகள் இருக்கும்.
6. தேவையானால் கைப்பிடியை கிளிக் செய்து இழுத்து கோட்டின் அளவை மாற்றிக் கொள்ளலாம்.
22.
1. இடது மற்றும் வலது புறமாக திரை உருளல் செய்ய, கீழ்ப்பக்க திரை உருளல் பட்டையில் உள்ள இடது மற்றும் அம்புக்குறிகளைக் கிளிக் செய்ய வேண்டும்.
2. மேல் மற்றும் கீழ்ப்புறமாக திரை உருளல் செய்ய, வலது பக்க திரை உருளல் பட்டையில் உள்ள மேல் மற்றும் கீழ் அம்புக்குறிகளைக் கிளிக் செய்ய வேண்டும்.
3. ஆவணத்தை குறிப்பிட்ட தொலைவிற்கு திரை உருளல் செய்ய, திரை உருளல் பெட்டிகளைப் பயன்படுத்தலாம்.
23.
1.உரையை ஏற்றுவதற்கு முன்பு, பட்டிப்பட்டையில் Layout > Autoflow என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். பின்னர் உரையை ஏற்ற வேண்டும். இப்பொழுது உரையேற்றப்பட்ட பணிக்குறி சற்று வேறுபட்டு squiggly arrow வாகத் தோன்றும்.
2. இப்பொழுது உரையேற்றப்பட்ட பணிக்குறியைப் பக்கத்தின் மேல் பகுதியில் கிளிக் செய்தால், உரையானது தானமைவாகத் தேவையான அளவிற்கு அடுத்தடுத்தப் பக்கங்களில் நிரப்பப்படும்.
24.
1. நகர்த்த வேண்டிய உரையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
2. பட்டிப்பட்டையில் Edit>Cut என்பதைக் கிளிக் செய்ய வேண்டும் (அ) விசைப்பலகையில் Ctrl + X என்பதை அழுத்த வேண்டும். (அ) சுட்டெலியின் வலது பொத்தானைக் கிளிக் செய்து வரும் பட்டியலில் Cut என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
3. உரையை ஒட்ட வேண்டிய இடத்திற்கு செருகும் புள்ளியை நகர்த்த வேண்டும்.
4. பட்டிப்பட்டையில் Edit>Paste என்பதை கிளிக் செய்ய வேண்டும். (அ) விசைப்பலகையில் Ctrl + V என்பதை அழுத்த வேண்டும். (அ) சுட்டெலியின் வலது பொத்தானைக் கிளிக் செய்து வரும் பட்டியலில் Paste என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
25.
1. தலைப்பு பட்டை சன்னல் திரையின் மேல் பகுதியில் உள்ளது. இதன் வலது ஓரத்தில் சிறிதாக்குப் பொத்தான். பெரிதாக்குப் பொத்தான். மூடு பொத்தான் போன்ற கட்டுப்பாட்டு பொத்தான்கள் இடம் பெற்றிருக்கும்.
2. தலைப்புப் பட்டையின் இடது ஓரத்தில் Adobe PageMaker 7.0 என்னும் மென்பொருளின் பெயரையும் அதைத் தொடர்ந்து Untitled-1 என்னும் ஆவணத்தின் கொடாநிலைப் பெயரையும் காண முடிகிறது.
3. சிறிதாக்குப் பொத்தானை அழுத்துவதன் மூலம் சன்னல் திரை சிறிய பொத்தானாக மாறி பணிப்பட்டைக்கு வந்துவிடும்.
4. பெரிதாக்குப் பொத்தான், ஆவணம் திரை முழுவதும் நிரம்பும் வகையில் பெரிதாக்கப் பயன்படுகிறது.
5. மூடு பொத்தான் ஆவணத்தை மூடுவதற்கு பயன்படுகிறது.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards