12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set C
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set B
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set C

Published on: 03/03/2021
12ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு இரண்டு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Computer Technology Reduced Syllabus Creative Two mark Question with Answer key - 2021(Public Exam)
12ஆம் வகுப்பு Computer Technology / கணினி தொழில்நுட்பம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Technology / கணினி தொழில்நுட்பம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Technology Test

1.
Auto CAD ல் வரைபடப் பகுதி என்றால் என்ன?
2.
Auto CAD - ரிப்பனில் உள்ள பேனல்களின் இரு நிலைகள் யாவை?
அவற்றின் ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு எவ்வாறு மாறுவாய்?
3.
AutoCADல் தற்போது திறந்திருக்கும் கோப்பை (அ) அனைத்து கோப்புகளையும் மூடுவதற்கானப் படிநிலைகளைப் பட்டியலிடு.
4.
AutoCAD ERASE கட்டளையைப் பயன்படுத்துவதற்கான பல்வேறு வழிகள் யாவை?
5.
AutoCADல் CIRCLE கட்டளையைச் செயல் படுத்துவதற்கான பல்வேறு வழிகள் யாவை?
6.
AutoCAD File தொகுதியில் உள்ள கோப்புப் பெயரில் தோன்றும் நட்சத்திரக் குறியீடு எதைக் குறிக்கிறது?
7.
AutoCAD என்றால் என்ன?
8.
AutoCADல் புதிய வரைபடத்தைத் தொடங்குவதற்கான படிநிலைகளை எழுதுக.
9.
AutoCADல் பணித்தளம் ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு எவ்வாறு மாறுவாய்?
10.
ஃப்ளாஷில் வரைதலின் சிறப்பம்சங்கள் யாது?
11.
ஃப்ளாஷில் உள்ள 3D Translation கருவியின் பயன் யாது?
12.
ஃப்ளாஷில் உள்ள பின்வரும் கருவிகளின் பயன் யாது?
1) Brush கருவி 2) Spray Brush கருவி
13.
ஃப்ளாஷில் உட்பரப்புகள் மற்றும் வெளிக்கோடுகளை எவ்வாறு நீக்குவாய்?
14.
ஃப்ளாஷில் உள்ள Line கருவி பற்றி குறிப்பு வரைக.
15.
ஃப்ளாஷ் மேடையில் பொருட்கள் வைப்பதற்கு பயன்படுபவை எவை?
16.
ஃப்ளாஷ் மூலம் எதை உருவாக்க முடியும்?
17.
பல்லூடகமானது பெருமளவு பயன்படுத்தப்படும் துறைகளைப் பட்டியலிடுக.
18.
AVI படிவம் பற்றி குறிப்பு வரைக.
19.
OGG என்றால் என்ன ?
20.
TGA என்றால் என்ன?
21.
மீவுரை என்றால் என்ன?
22.
குழுவாக்கத்தை நீக்குதல் என்றால் என்ன?
23.
Flyout என்றால் என்ன?
24.
CorelDRAW-ல் பண்புப் பட்டையிலுள்ள பக்க பரிமாணங்கள் சூழல் பெட்டியினைப் பயன்படுத்தித் தனிப்பயன் பக்க அளவுகளை வரையறுக்க படிநிலைகளை எழுதவும்.
25.
CorelDRAW-ல் பாதைப் பொருளை நீக்குவதற்கான படிநிலைகளை எழுதுக.
26.
CorelDRAW-ல் இணைக்கப்பட்ட பொருளை வெவ்வேறாகப் பிரித்தலுக்கான படிநிலைகளை எழுதுக.
27.
CorelDRAW-ல் பின்னலான குழுக்களின் குழுவாக்கத்தை எவ்வாறு நீக்குவாய்?
28.
CorelDRAW-ல் பொருட்களை எவ்வாறு நீக்குவாய்?
29.
CorelDRAW-ல் நீங்கள் வரையும் சாளரத் திரையானது நிறையப் பொருள்களைக் கொண்டிருந்தால் அதில் ஒரு பொருளை எவ்வாறு தேர்ந்தெடுப்பாய்?
30.
CorelDRAW-ல் ஆவணத்தை எவ்வாறு மூடுவாய்?
31.
CorelDRAW-ல் சதுரம் வரையப் பயன்படும் படிநிலைகளை எழுதுக.
32.
CorelDRAW-ல் உள்ள Straight-Line Connector கருவியின் பயன் யாது?
33.
CorelDRAW-ல் உள்ள Crop கருவியின் flyout கருவிகள் யாவை?
34.
CorelDraw பற்றி எழுதவும்.
35.
InDesign-ல் உள்ள உருமாற்றக் கட்டளைகள் யாவை?
36.
InDesign-ல் பொருள்கள் எனப்படுபவை யாவை?
37.
பத்திகளை வடிவூட்டல் செய்யப் பயன்படும் பண்புகளை விவரி.
38.
InDesign-ல் உரையின் எழுத்து அளவை எவ்வாறு மாற்றுவாய்?
39.
பரவல் என்றால் என்ன?
40.
InDesign நிலைமைப்பட்டியின் பயன் யாது?
41.
InDesign - ல் பலகங்கள் என்றால் என்ன?
42.
பேஜ்மேக்கரில் Master Pages Palette ன் பயன் யாது? அதை எவ்வாறு காண்பிப்பாய்?
43.
பேஜ்மேக்கரில் பல கோணத்தை எவ்வாறு வரைவாய்?
44.
பேஜ்மேக்கரில் உள்ள முதன்மையான நான்கு படம் வரையும் கருவிகள் எவை?
45.
எழுத்து வடிவூட்டல் என்றால் என்ன?
46.
வடிவூட்டல் என்றால் என்ன?
47.
மற்ற சொற்செயலிகளில் இருக்கும் திரை உருளல் பட்டையிலிருந்து பேஜ்மேக்கர் உருளல் பட்டை எவ்வாறு வேறுபடுகிறது?
48.
பேஜ்மேக்கரில் உரைத் தொகுதியை எவ்வாறு உருவாக்குவாய்?
49.
பேஜ்மேக்கரில் உள்ள அளவுகோல்கள் பற்றிக் குறிப்பு வரைக.
50.
பேஜ்மேக்கரில் கருவிப்பெட்டியை திரையில் எவ்வாறு தோன்ற மற்றும் மறையச் செய்யலாம்?
1.
1. AutoCAD திரையின் பெருமளவுப் பகுதி வரைபடப் பகுதி ஆகும்.
2.  இதில் பொருள்களையும், முப்பரிமாண வரைகலைகளையும் எளிதாக வரைய முடியும்.
2.
பேனல்களின் இரு நிலைகள் :
1. Docked 2. Floating
1. ரிப்பனில் உள்ள பேனல்கள் அனைத்தும் அதன் தொகுதியைப் பொறுத்து, தானமைவாக docked நிலையில் இருக்கும்.
2. வரைபடப் பகுதியில் பேனலை கிளிக் செய்து இழுத்து விடுவதன் மூலம் அதை floating நிலைக்கு மாற்ற முடியும்.
3.
1. பயன்பாட்டுப் பொத்தானைக் கிளிக் செய்தால் பயன்பாட்டுப் பட்டி தோன்றும்.
2. அதில் Close என்பதைக் கிளிக் செய்து வரும் துணைப்பட்டியில், தற்போதைய கோப்பை மட்டும் மூட Current Drawing என்பதையும், திறந்திருக்கும் அனைத்து கோப்புகளையும் மூட All Drawings என்பதையும் கிளிக் செய்ய வேண்டும்.
4.
1. Modify கருவிப்பட்டையிலுள்ள ERASE பணிக்குறியைக் கிளிக் செய்யலாம். (அ)
2. பட்டிப்பட்டையில் Modify > Erase என்பதைத் தேர்ந்தெடுக்கலாம். (அ)
3. கட்டளை வரியில் Erase <R> என்னும் கட்டளையை உள்ளிடலாம்.
5.
1.Ribbon : Home > Draw > Circle drop - down Center, Radius (அ) 2.Toolbar:Draw>Circle (அ)
3.Menu Bar: Draw>Circle (அ)
4.Command: CIRCLE or C
6.
கோப்பானது மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பதையும், அது சேமிக்கப்பட வேண்டும் என்பதையும் குறிக்கிறது.
7.
1. ஆட்டோகேட் என்பது கணினி உதவியுடன் வடிவமைப்பு செய்வதற்கான (CAD - Computer Aided Design) வணிகரீதியான வரைவு மென் பொருளாகும்.
2. இது ஆட்டோடெஸ்க் (Autodesk, Inc.) நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
8.
1. விரைவு அணுகல் கருவிப்பட்டையிலுள்ள New பொத்தானைக் கிளிக் செய்ய வேண்டும். Select Template உரையாடல் பெட்டி திரையில் தோன்றும்.
2. அதில் முன்வடிவமைக்கப்பட்ட கோப்பான acad.dwt என்பதைத் தேர்ந்தெடுத்து Open பொத்தானைக் கிளிக் செய்ய வேண்டும்.
9.
1. மேல் இடது மூலையிலுள்ள Workspace கீழிறங்குப் பட்டியின் மூலமாக பணித்தளங்கள் ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு எளிதாக மாற முடியும்.
2. விரைவு அணுகல் கருவிப்பட்டைக்கு அடுத்துள்ள கீழ்நோக்கிய அம்புக்குறியைக் கிளிக் செய்ய வேண்டும். தோன்றும் பட்டியில் Workspace என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். விரைவு அணுகல் கருவிப்பட்டையில் Workspace கீழிறங்குப் பட்டி தோன்றும்.
10.
1. அடோப் ஃப்ளாஷ் புரொஃபஷனல் CS6 திசை அடிப்படையிலான வடிவங்கள், பாதைகள், நிறங்கள் மற்றும் பாங்குகள் (pattern) போன்றவற்றை உருவாக்க உதவும் சக்திவாய்ந்த கருவிகளைக் கொண்டுள்ளது.
2. ஃப்ளாஷ் பிக்சல் மற்றும் பிட்மேப் படங்களுடன் வேலை செய்ய முடிந்த போதிலும், ஃப்ளாஷினுள்ள வரை கருவிகள் வெக்டர் அடிப்படையிலான கலை வேலைப்பாடுகளை (Art work) உருவாக்குகிறது.
11.
3D Translation கருவி மேடையில் முப்பரிமாண வெளியில் சலனப் படத்துண்டுகளை நகர்த்துவதன் மூலம் முப்பரிமாண விளைவுகளை உருவாக்கப் பயன்படுகிறது.
12.
1. Brush கருவி : தூரிகைகள் போன்ற கோடுகள் வரைவதற்கு பயன்படுகிறது.
2. Spray Brush கருவி : வண்ணங்கள் மற்றும் பாங்குகளை பொருள்களின் மீது தெளிக்கப் பயன்படுகிறது.
13.
1. கருவிப் பலகத்திலுள்ள Erase Tool ஐக் கிளிக் செய்யவும்.
2. Options பகுதியில் Faucet modifier கிளிக் செய்யவும்.
3. அழிக்க வேண்டிய கோடு (அ) வண்ணப்பகுதியை (Filled Area) கிளிக் செய்யவும்.
14.
Line கருவி பணித்தளத்தில் ஒரு நேர்கோட்டை வரையப் பயன்படுகிறது.
படிகள்:
1. கருவிப் பலகத்திலுள்ள Line tool-ஐக் கிளிக் செய்யவும்.
2. Property Inspector பலகத்திலிருந்து விரும்பும் கோட்டின் நிறம், தடிமன் மற்றும் வகையைத் தேர்ந்தெடுக்கவும்.
3. சுட்டியை பணித்தளத்திற்குக் கொண்டு வந்து கிளிக் செய்து இழுக்கவும்.
15.
1. கிரிட் (Grid)
2. கைட்ஸ் (Guides)
3. ரூலர்கள் (Rulers)
16.
(i) வலைப் பயன்பாடுகள்
(ii) விளம்பரங்கள்
(iii) வலைபக்கக் கூறுகள்
(iv) விளக்கக் காட்சிகள்
(v) விளையாட்டுகள் மற்றும் அசைவூட்டப் படங்கள்
(vi) கைபேசிகளுக்கான உள்ளடக்கம்.
17.
1. கல்வி 2. பொழுதுபோக்கு
3. வணிக அமைப்பு 4. மருத்துவ சேவைகள்
5. பொது இடங்கள் 6. பல்லூடகக் கலந்துரையாடல்.
18.
AVI (Audio/Video Interleave) :
1. ஒரு விண்டோஸிற்கான ஒரு ஒளிக்காட்சி கோப்பு வடிவமாகும்.
2. இங்கு, ஒலி மற்றும் படத்தின் கூறுகளைக் கோப்பில் மாற்ற நெடுவரிசை தொகுப்பில் சேமிக்கப்படுகிறது.
19.
1. சிறந்த ஓட்டத்தினை அடைவதற்காக வடிவமைக்கப்பட்ட இலவச திறந்த மூல கொள்கலன் வடிவமாகும்.
2. உயர் இறுதி தர இலக்க பல்லூடகத்தில் சிறிது சிறிதாக மாறி வருகிறது.
3. தரத்தின் அடிப்படையில் இதை MP3 கோப்புகளோடு ஒப்பிடப்படும்.
20.
TGA (Targa):
1. அதிக தெளிவுத்திறன் நிழற்படங்களுக்கான முதல் பிரபலமான வடிவமாகும்.
2. பெரும்பான்மையான ஒளிக்காட்சி பிடிப்பு - பலகைகள் TGA - வை ஆதரிக்கின்றன.
21.
1. மீவுரை என்பது முனையம், உரை மற்றும் முனையங்களுக்கிடையேயான இணைப்பு ஆகியவற்றைக் கொண்டிருக்கும் அமைப்பு.
2. தொடர் வரிசையற்ற முறையில், உரையை அணுகுவதற்கு பயனர் பின்பற்றத் தேவையான பாதையை வரையறுக்கும்.
22.
குழுவாக்கத்தை நீக்குதல் : குழுவிலுள்ள பொருள்களுக்கிடையேயான உறவினைப் பிரித்தல்.
23.
Flyout : தொடர்புடைய கருவிகள் (அ) பட்டித்தேர்வுகளின் தொகுதியினை திறக்கும் ஒரு பொத்தான்.
24.
1. பொருள் உள்ள இடத்தைத் தவிர்த்து, வரையும் பரப்பில் ஏதாவது ஒரு இடத்தில் கிளிக் செய்யவும்.
2. ஆவணத்திற்குத் தேவையான அகலம் மற்றும் உயர அளவினை பக்க பரிமாணங்கள் சூழல் பெட்டிகளில் தட்டச்சு செய்யவும்.
25.
1. வடிவ (Shape) கருவியினைத் தேர்வு செய்து பாதை பொருளின் மீது (Path object) கிளிக் செய்யவும்.
2. Pick கருவியினை தேர்வு செய்து பாதை பொருளின் மீது கிளிக் செய்யவும்.
3. இப்பொழுது Delete சாவியினை அழுத்தவும்.
26.
1. Pick கருவி கொண்டு இணைக்கப்பட்ட பொருளைத் தேர்வு செய்யவும்.
2. Object > Break Curve Apart கட்டளையைத் தேர்வு செய்யவும். (அ) Ctrl+K ஐ அழுத்தவும்.
27.
1. Pick கருவி கொண்டு பின்னலான குழுவினை தேர்வு செய்யவும். 2. பட்டி பட்டையிலிருந்து Object > Group > Ungroup All Objects-னை தேர்வு செய்யவும். (அ) Property பட்டையிலுள்ள Ungroup All Objects பொத்தானைக் கிளிக் செய்யவும்.
28.
1. பொருளைத் தேர்வு செய்யவும்.
2. Edit>Delete என்பதை பட்டிப் பட்டையிலிருந்து தேர்வு செய்யவும் (அ) விசைப்பலகையிலுள்ள Del/ Delete சாவியினை அழுத்தவும்.
29.
1. Pick கருவியினை தேர்ந்தெடுக்க இடைவெளிப் பொத்தானை (Spacebar) அழுத்தவும்.
2. தேர்ந்தெடுக்க விரும்பும் பொருளை சுற்றிலும் தேர்ந்தெடுப்பு பெட்டி (Selection) தோன்றும் வரை Tab சாவியினை அழுத்தவும்.
30.
1. ஆவணத்தின் சாளர திரையின் மேற்புற வலது மூலையில் உள்ள Close பொத்தானைக் கிளிக் செய்யவும். (அ) File>Close (அ) Window>Close Window தேர்வு செய்யவும் (அ) Ctrl+F4 என்பதை கிளிக் செய்யவும்.
2. ஒன்றிற்கு மேற்பட்ட ஆவணக் கோப்புகள் திறந்திருந்தால், அனைத்து கோப்புகளை ஒரே சமயத்தில் மூட Window> Close All எனத் தேர்வு செய்யவும்.
31.
1. கருவிப்பட்டையில் இருந்து Rectangle கருவியைத் தேர்ந்தெடுக்கவும். சுட்டி சிறு சதுரத்தை கொண்ட crosshair சுட்டியாக மாறும்.
2. இப்போது வரையும் பகுதியில் Ctrl விசையை அழுத்திக் கொண்டே எங்கு சதுரம் வரைய வேண்டுமோ அங்கு சுட்டியின் இடது பொத்தானைக் கிளிக் செய்து கொண்டே நகர்த்த வேண்டும்.
3. விரும்பும் அளவுடைய சதுரம் தோன்றியதும் சுட்டியின் பொத்தானை அழுத்துவதை விட்டுவிடவும்.
32.
1. இரண்டு பொருள்களை இணைக்க நேர்கோட்டை வரையப் பயன்படுகிறது.
2. Right-Angle Connector, Rounded Right-Angle connector மற்றும் Anchor Editing கருவிகளை அணுக உதவுகிறது.
33.
1. Crop
2. Knife
3. Virtual Segment Delete
4. Eraser
34.
1. CorelDraw (Styled CorelDRAW) ஒரு நெறிச்சார் வரைகலை பயன்பாடு ஆகும். இது Corel Corporation என்ற கனடா நாட்டு மென்பொருள் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு சந்தைப்படுத்தப்படுகிறது.
2. இதன் அண்மை பதிப்பான CorelDraw Graphics Suite 2018 ஏப்ரல் 10, 2018 அன்று வெளியிடப்பட்டது.
35.
(i) Move
(ii) Scale
(iii) Rotate
(iv) Shear
(v) Flip
36.
InDesign ஆவணத்திலுள்ள உரை (அ) வரைகலை உறுப்புகளான நிழற்படங்கள், வண்ணத் தொகுதி மற்றும் எளிய கோடுகள் பொருள்கள் எனப்படும்.
37.
Leading : இரண்டு வகையான வரிகளுக்கு இடையே உள்ள இடைவெளியின் அளவைக் குறிக்கும்.
Alignment: பத்தியானது, உரைப்பெட்டியின் இடது மற்றும் வலது பக்கங்களுக்கு இடையே உள்ள கிடைமட்ட பரவலைக் குறிக்கிறது.
38.
1. எழுத்து அளவு மாற்றப்பட வேண்டிய உரையைத் தேர்ந்தெடுக்கவும்.
2. கட்டுப்பாட்டு தட்டில், எழுத்து அளவு கீழ் விரிப்பட்டியலை கிளிக் செய்தால் அதில் உள்ள எழுத்து அளவுகளைக் காண்பிக்கும்.
3. தேவையான எழுத்து அளவை கிளிக் செய்யவும்.
39.
1. பரவல் என்பது ஒன்றுக்கு ஒன்று எதிராக உள்ள இரு பக்கங்களாகும்.
2. பல பக்கங்களைக் கொண்ட ஆவணத்தில் இடது பக்கம் மற்றும் வலது பக்கம் ஆகும்.
40.
1. பணித்தளத்தின் கீழ்ப்பகுதியில் நிலைமைப் பட்டி உள்ளது.
2. ஆவணத்தில் அந்த நேரத்தில் நடக்கிறது என்ற நிலையை இது அளிக்கிறது.
எ.கா : பல பக்க ஆவணத்தில் எது இயங்கு பக்கம் என்பதை நிலைமைப்பட்டி காண்பிக்கிறது.
41.
பலகங்கள் : தேர்ந்தெடுக்கப்பட்ட பொருள்களுடன் வேலை செய்வதற்கான தேர்வுகளைக் கொண்ட சிறிய சன்னல்கள்.
42.
(i) மாஸ்டர் பக்கத்தில் செய்யக் கூடிய அனைத்துக் கட்டளைகளையும் Master pages Palette ஒழுங்குப்படுத்துகிறது.
(ii) Master pages Palette ஐக் காண்பிக்க. பட்டிப்பட்டையில் Window > Show Master Pages என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
43.
1. கருவிப் பெட்டியிலிருந்து பாலிகான் டூலை தேர்ந்தெடுக்க வேண்டும். சுட்டுக்குறியானது crosshair ஆக மாறும்.
2. திரையில் தேவையான இடத்தில் கிளிக் செய்து இழுக்க வேண்டும்.
3. சுட்டியை அழுத்துவதை விட்ட உடன், ஒரு பலகோணம் வரையப்பட்டிருக்கும்.
44.
1. லைன் டூல் (line tool)
2. ரெக்டாங்கல் டூல் (Rectangle tool)
3. எலிப்ஸ் டூல் (Ellipse tool)
4. பாலிகான் டூல் (Polygon tool)
45.
1. உரையை ஒரு குறிப்பிட்ட வடிவில் காண்பிப்பதை எழுத்து வடிவூட்டல் என்கிறோம்.
2. எழுத்து வடிவூட்டல் என்பது உரையின் பண்புகளான தடிமன், சாய்வு, அடிக்கோடு, எழுத்துவகை, அளவு, நிறம் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.
46.
எழுத்துக்களின் வகை, நிறம், பாணி போன்ற பொதுவான பண்புகளை மாற்றக் கூடிய செயலுக்கு வடிவூட்டல் என்று பெயர்.
47.
பேஜ்மேக்கர் திரை உருளல் பட்டை ஆவணத்தில் பல பக்கங்கள் இருந்தாலும் தற்போது இருக்கும் பக்கத்தை மட்டுமே திரை உருளல் செய்கிறது.
48.
1. ஆவணப் பக்கத்தில் அல்லது ஓட்டுப்பலகையில் டெக்ஸ்ட் டூலைக் கிளிக் செய்து இழுத்து, அதில் தட்டச்சு செய்வதன் மூலம் உரைத் தொகுதியை உருவாக்கலாம்.
2. காலியான ஆவணப்பக்கத்திலோ அல்லது பத்தியிலோ உரையேற்றப்பட்ட பணிக்குறியைக் கிளிக் செய்வதன் மூலம் உரைத் தொகுதியை உருவாக்கலாம்.
49.
பேஜ்மேக்கர் ஆவணத்தின் மேல் மற்றும் இடது ஓரத்தில் இரண்டு அளவுகோல்கள் உள்ளன.
1. அளவு கோலை திரையில் காண்பிக்க, பட்டிப்பட்டையில் View > Show Rulers என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
2. அளவுகோலை மறைக்க, பட்டிப்பட்டையில் View > Hide Rulers என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
50.
1. கருவிப்பெட்டி திரையில் தோன்றாவிட்டால், Window > Show tools என்பதைக் கிளிக் செய்து பெறலாம்.
2. கருவிப் பெட்டியை மறைக்க, பட்டிப்பட்டையில் Window > Hide tools என்பதைக் கிளிக் செய்து மறைக்கலாம்.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set B
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Standard Physics Wave Optics Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Physics Wave Optics Creative Questions Study Material - QB365 Set C
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards