12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 03/03/2021
12ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய மூன்று மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Computer Technology Reduced Syllabus Three mark Important Questions with Answer key - 2021(Public Exam)
12ஆம் வகுப்பு Computer Technology / கணினி தொழில்நுட்பம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Technology / கணினி தொழில்நுட்பம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Technology Test

1.
AutoCADல் ஒப்பீட்டு செவ்வக ஆயத் தொலைவு அமைப்பைப் பயன்படுத்தும் போது டைனமிக் இன்புட் பொத்தானின் முக்கியத்துவம் யாது?
2.
AutoCADல் போலார் டிராக்கிங் (Polar Tracking)ன் பயன் யாது?
3.
ஃப்ளாஷில் உள்ள Pencil கருவியின் பயன் யாது?
4.
ஃப்ளாஷ் பணித்தளத்தில் உரையை எவ்வாறு சேர்ப்பாய்?
5.
சலனப்படம் என அழைக்கப்படுவது எது?
6.
தேவைப்படும் ஒளிக்காட்சி (அ) தேவைப்படும் திரைப்படம் என்றால் என்ன?
7.
MPEG பற்றி குறிப்பு வரைக.
8.
ஒப்புமை ஒளிக்காட்சி (Analog Video) பற்றி குறிப்பு வரைக.
9.
CorelDRAW-ல் சுட்டி கொண்டு பொருட்களை எவ்வாறு நகர்த்துவாய்?
10.
CorelDRAW-ல் முனை வளைவான செவ்வகத்தை வரைவதற்கான படிநிலைகளை எழுதுக.
11.
InDesign-ல் செவ்வகத்தின் மூலையை எவ்வாறு மாற்றுவாய்?
12.
உரைச் சட்டத்தில் தட்டச்சு உருவாக்குவதற்கான படிநிலைகள் யாவை?
13.
InDesign கருவிப் பலகத்தில் உள்ள பின்வரும் கருவிகளின் பயன் யாது?
14.
InDesign - ல் ஆவணத்திற்கு எவ்வாறு பெயரிடுவாய் மற்றும் சேமிப்பாய்?
15.
பேஜ்மேக்கரில் ஒரு குறிப்பிட்ட பக்கத்திற்கு எவ்வாறு செல்வாய்?
16.
பேஜ்மேக்கரில் ஒரு நேர் கோட்டை எவ்வாறு வரைவாய்?
17.
MS-Word போன்ற பிற மென்பொருள்களில் தயாரிக்கப்பட்ட உரைகளை பேஜ்மேக்கர் ஆவணத்தில் எவ்வாறு செருக முடியும்?
18.
உரையைத் தேர்ந்தெடுக்கப் பயன்படும் விசைப்பலகைக் குறுக்கு வழிகளைப் பட்டியலிடு.
19.
விசைப்பலகை மூலம் LINE, CIRCLE மற்றும் ERASE போன்ற கட்டளைகளை எவ்வாறு விரைவாக உள்ளிடலாம்?
20.
Zoom கருவி மற்றும் Hand கருவி வேறுபாடுகளைக் கூறுக.
21.
பல்லூடக கூறுகளை சுருக்கமாக விவரி.
22.
ஒரு பொருளுக்கு நிரப்பு வண்ணத்தையும் மற்றும் எல்லைகோட்டின் வண்ணத்தையும் எவ்வாறு குறிப்பிடுவாய்?
23.
Corel Draw வில் ஒரு செவ்வகத்தை வரைவதற்கு படிநிலைகளை எழுதுக.
24.
ஒரு பொருளை எப்படி உருவாக்குவாய் என விரிவாக விவரி?
25.
பேஜ்மேக்கரில் உள்ள ஏதேனும் மூன்று கருவிகளையும் அதன் விசைப்பலகை குறுக்கு வழிகளையும் கூறு.
1.
1. ஒப்பீட்டு செவ்வக ஆயத்தொலைவு மதிப்புகளை உள்ளிடுவதற்கு, டைனமிக் இன்புட்டின் நிலையை (ON Or OFF) சோதிக்கவும்.
2. டைனமிக் இன்புட் ON நிலையில் இருந்தால், தானமைவாக ஒப்பீட்டு செவ்வக ஆயத்தொலைவு அமைப்பைப் பயன்படுத்தி வடிவம் வரையப்படும்.
3. இந்த வகையில் X ஆயத்தொலைவு மதிப்பிற்கும் Y ஆயத்தொலைவு மதிப்பிற்கும் இடையில் காற்புள்ளி (,) இட வேண்டும்.
4. டைனமிக் இன்புட் OFF நிலையில் இருந்தால், ஆயத்தொலைவு மதிப்புகளுக்கு முன்னால் @குறியீடு இட வேண்டும்.
2.
1. போலர் டிராக்கிங் ON செய்திருந்தால், கோட்டின் திசை மற்றும் நீளம் பற்றிய சிறு குறிப்பு டிகிரி மற்றும் அலகுகளில் தோன்றும்.
2. 5, 10, 15, 23, 30, 45 அல்லது 90 டிகிரிகள் போன்ற கோண அதிகரிப்புகளுடன் கோடுகளை வரைய முடியும்.
3. போலார் டிராக்கிங்கை ON அல்லது OFF செய்வதற்கு விசைப்பலகையில் F10 விசையைப் பயன்படுத்த வேண்டும்.
3.
1. Pencil கருவி தற்போக்காக (free hand) கோடுகள் மற்றும் வடிவங்களை வரையப் பயன்படுகிறது.
2. பென்சில் முறை (Mode) விருப்பப் பட்டியில் உள்ள கட்டளைகள்: 1. Straighten - நேர்கோட்டினை வரைவதற்கு,
2. Smooth - வளைகோட்டினை வரைவதற்கு,
3. Ink - அளவுகோலற்ற வரைபடங்களை எந்த மாற்றமும் இன்றி வரைய.
4.
1. கருவிப் பலகத்திலுள்ள Text Tool ஐக் கிளிக் செய்யவும்.
2. Property Inspector பலகத்தில் எழுத்து, எழுத்து அளவு, நிறம், பாங்கு (Pattern), எழுத்து இடைவெளி, இசைவு போன்ற உரைக்கான விருப்பங்களைத் தேர்வு செய்ய வேண்டும்.
3. உரையைத் தட்டச்சு செய்ய, மேடையில் கிளிக் செய்து தட்டச்சு செய்யவும். இது தட்டச்சு செய்யப்படும் உரைக்கு தகுந்தாற்போல் உரைப்பெட்டியை விரிவடையச் செய்கிறது. (அல்லது) மேடையில் கிளிக் செய்து இழுப்பதன் மூலம் ஒரு செவ்வகம் வரையவும். இது குறித்த அளவுள்ள உரைப்பெட்டியை உருவாக்குகிறது. இப்பொழுது Text Box-ல் உரையை உள்ளிடவும். உரையானது தானாகவே உரைப்பெட்டியின் அகலத்திற்குள் மடிந்து விடுகிறது.
5.
ஃப்ளாஷ் பணித்தளம், காலக்கோடுகள், சட்டகங்கள், அசைவூட்டங்கள் மற்றும் பலவற்றைக் கொண்ட திரைப்பட உருவகத்தைப் பயன்படுத்துவதால், ஃப்ளாஷில் செய்யப்படும் வேலை சலனப்படம் (movie) (அ) ஃப்ளாஷ் ஆவணம் எனப்படுகிறது.
6.
1. தேவைப்படும் ஒளிக்காட்சி (அ) தேவைப்படும் திரைப்படத்தை வீடுகளில் உள்ள தொலைக்காட்சி பெட்டிக்கு தனிப்பட்ட முறையில் வழங்குவது ஒரு சேவையாகும்.
2. திரைப்படங்கள் மைய சேவையகத்தில் சேமிக்கப்பட்டு, தொடர்பு வலையமைப்பின் மூலம் அனுமதிக்கப்படுகிறது.
3. தொடர்பு வலையமைப்பில் இணைக்கப்பட்டுள்ள செட் - டாப் பாக்ஸ் ஆனது இலக்கத் தகவல்களை ஒப்புமைத் தகவல்களாக மாற்றி தொலைக்காட்சிப் பெட்டிக்கு உள்ளீடு செய்கின்றது.
7.
MPEG என்பது இலக்க ஒளிக்காட்சி மற்றும் ஒலி குறுக்கத்தை ISO குழுவினரால் உருவாக்கப்படும் ஒரு தர நிலை ஆகும்.
இந்த குழுவினர் உருவாக்கியவை :
1. MPEG - 1: ஒளிக்காட்சி CD மற்றும் MP3 ஆகியவற்றிற்கான தரநிலை.
2. MPEG - 2: இலக்கத் தொலைக்காட்சி செட்டாப் பெட்டி மற்றும் DVDகளை ஆதரிக்கும் தரநிலை.
3. MPEG - 4 : பல்லூடகம் மற்றும் கைப்பேசி வலைக்கான தரநிலையாகும்.
4. MPEG - 7 : ஒலி மற்றும் ஒளி பொருளடக்கத்தைத் தேடுவதற்கான தரநிலையாகும்.
5. 2000 ல் MPEG - 21 'பல்லூடகக் கட்டமைப்பு' பற்றிய ஆய்வைத் தொடங்கியது.
8.
ஒளிக்காட்சியில், கணினி சாரா ஊடகமான ஒளி நாடா, லேசர் வட்டு, படச்சுருள் ஆகியவற்றில் ஒளிக்காட்சி தரவுகள் சேமிக்கப்படுகின்றன. இது இரு வகைப்படும்.
1. கலப்பு ஒப்புமை ஒளிக்காட்சி
2. கூறு ஒப்புமை ஒளிக்காட்சி.
1. கலப்பு ஒப்புமை ஒளிக்காட்சி அனைத்து ஒளிக்காட்சி கூறுகளான பிரகாசம், நிறம் மற்றும் ஒத்திசைவு ஆகியவை இணைந்த ஒரு சமிக்ஞை ஆகும்.
2. ஒளிக்காட்சியின் கூறுகளை இணைப்பதனால், கலப்பு ஒளிக்காட்சியின் தரமானது நிறக்கலவை, குறைந்த காட்சித் தெளிவு மற்றும் அதிக தலைமுறை இழப்பு போன்ற விளைவுகளைத் தரும்.
3. இந்த பதிவு செய்யும் வடிவமானது, வாடிக்கையாளர் ஒப்புமை ஒளிக்காட்சி பதிவு நாடா வடிவமான Betamax மற்றும் VHS - ல் பயன்படுத்தப்பட்டது.
9.
1. Pick கருவி கொண்டு தேவையான பொருளைத் தேர்வு செய்யவும். 2. பொருளின் எல்லைக்கோடு பகுதியைச் சுட்டும் பொழுது, சுட்டியை அழுத்தவும் அல்லது சுட்டியானது பொருளின் நிரப்பப்பட்ட பகுதியில் இருக்கும்பொழுது அழுத்தவும். புள்ளிகளுடன் கூடிய உயர்த்திக் காட்டும் பெட்டி தோன்றும்.
3. அதனை தேவையான இடத்திற்கு நகர்த்தவும்.
4. பொருளானது சரியான இடத்தில் வைத்த பிறகு சுட்டியை அழுத்துவதை விட்டு விடவும்.
10.
1. கருவிப்பட்டையில் Shape கருவி layout பகுதியிலிருந்து Shape Tool பணிக்குறியை தேர்ந்தெடுக்கவும் (அ) F10 விசையை அழுத்தவும். 2. ஓரத்தை வளைவாக்க விரும்பும் செவ்வகத்தை தேர்ந்தெடுக்கவும். செவ்வகத்தின் ஓரத்தில் நான்கு கருப்பு சிறு சதுரம் தோன்றும்.
3. அனைத்து ஓரங்களையும் ஒரே மாதிரியாக தோன்றச் செய்ய அனைத்து ஓரங்களும் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதை உறுதி செய்து கொண்டபின் ஏதேனும் ஒரு முனையை இழுத்து தேவையான வளைவு ஏற்படும் வரை நகர்த்தவும்.
11.
1. செவ்வகத்தை வரைந்து அதனை தேர்ந்தெடுக்கவும்.
2. எல்லை பலகத்தில் எல்லையின் தடிமனை மாற்றவும்.
3. Object --> Corner Options என்பதைத் தேர்வு செய்தால் Corner Options உரையாடல் பெட்டி தோன்றும்.
4. பொருத்தமான மூலை அளவு மற்றும் வடிவத்தைக் கொடுக்கவும்.
12.
1. கருவிப்பலகத்தில் இருந்து தட்டச்சுக் கருவியை தேர்ந்தெடுக்கவும்.
2. தேவைப்படும் அளவில் இழுத்து செவ்வக உரைப்பெட்டியை உருவாக்கவும். ஒரு ஒளிரும் செருகும் புள்ளியானது உரைச்சட்டகத்தில் தோன்றும்.
3. இப்பொழுது தட்டச்சு செய்ய ஆரம்பிக்கலாம். உரையானது தானாகவே மடிந்து அந்த உரைச் சட்டத்தின் வடிவத்திற்கு அமைகிறது. புதுவரியைத் தொடங்க 'Enter' பொத்தானை அழுத்தவும்.
13.
1. தொகுப்புப் புள்ளியைச் சேர்க்கும் கருவி :
தேர்ந்தெடுக்கப்பட்ட பாதையில் இந்தக் கருவியைக் கிளிக் செய்யும் பொழுது InDesign பாதையில் உள்ள இடத்தில் ஒரு புள்ளியைச் சேர்க்கிறது.
2. தொகுப்புப் புள்ளியை நீக்கும் கருவி :
தேர்ந்தெடுக்கப்பட்ட பாதையில் உள்ள ஒரு புள்ளியில் இந்தக் கருவியை கிளிக் செய்யும் பொழுது InDesign இதை நீக்குகிறது.
3. திசைமாற்றப் புள்ளி கருவி : தேர்ந்தெடுக்கப்பட்ட பாதையில் உள்ள புள்ளியில் கிளிக் செய்தால், InDesign அந்தப் புள்ளியை வேறு ஒரு புள்ளியாக மாற்றுகிறது.
14.
1. ஆவணத்தைச் சேமிக்க, பயன்பாட்டு பட்டியிலுள்ள File --> Save வைக் கிளிக் செய்யவும்.
2. முதன்முறையாக ஒரு புதிய ஆவணத்தைச் சேமிக்கும் பொழுது, Save as dialog box திறக்கும்.
3. ஆவணத்திற்கு பெயரிடுமாறு கேட்கும்.
4. அதை சேமிப்பதற்கான இருப்பிடத்தை தேர்ந்தெடுக்கவும்.
5. தேர்ந்தெடுத்த பின் புதிய கோப்பின் பெயரைத் தொடர்ந்து InDesign கோப்பு பெயரில் நீட்டிப்பான .indd யுடன் ஆவணத்தை ஒரு தனிப்பட்ட பெயரில் சேமிக்க வேண்டும்.
15.
1. பட்டிப்பட்டையில் Layout > Go to page என்பதைக் கிளிக் செய்யவும். (அ) விசைப் பலகையில் Alt+Ctrl+G என்பதை அழுத்தவும்.
2. இப்பொழுது Go to page உரையாடல் பெட்டி தோன்றும்.
3. அந்த உரையாடல் பெட்டியில் தேவையான பக்கத்தின் எண்ணை உள்ளிடவும்.
4. பிறகு OK பொத்தானை அழுத்தவும்.
16.
1. கருவிப் பெட்டியிலிருந்து லைன் டூலை தேர்ந்தெடுக்க வேண்டும். சுட்டுக்குறியானது crosshair ஆக மாறும்.
2. திரையில் தேவையான இடத்தில் கிளிக் செய்து இழுக்க வேண்டும்.
3. சுட்டியை அழுத்துவதை விட்டவுடன், ஒரு கோடு வரையப்பட்டு தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கும். அந்தக் கோட்டின் இருபுறமும் அதன் அளவை மாற்றக்கூடிய கைப்பிடிகள் இருக்கும்.
4. தேவையானால் கைப்பிடியை கிளிக் செய்து இழுத்து கோட்டின் அளவை மாற்றிக் கொள்ளலாம்.
17.
1. பட்டிப்பட்டையில் File > Place என்பதைக் கிளிக் செய்தால், Place உரையாடல் பெட்டி தோன்றும்.
2. செருக வேண்டிய உரை உள்ள ஆவணத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
3. Place உரையாடல் பெட்டியில் உள்ள Open பொத்தானைக் கிளிக் செய்ய வேண்டும். இப்பொழுது சுட்டுக் குறியானது உரையேற்றப்பட்ட பணிக்குறியாக மாறி இருக்கும்.
4. இந்த உரையை இடுவதற்கு ஒரு உரைத் தொகுதியை உருவாக்க வேண்டும். (அ) அந்த ஆவணத்தின் ஒரு காலிப்பக்கத்தில் கிளிக் செய்தால் அப்பக்கத்தில் அவ்வுரை இடம் பெறும்.
18.
| தேர்ந்தெடுக்க | அழுத்த வேண்டியவை |
| ஒரு எழுத்து இடது புறமாக |
Shift + <-- |
| ஒரு எழுத்து வலது புறமாக | Shift + --> |
| ஒரு வரி மேலே | Shift + ↑ |
| ஒரு வரி கீழே | Shift + ↓ |
| வரியின் இறுதி வரை | Shift+ End |
| வரியின் தொடக்கம் வரை | Shift + Home |
| ஆவணம் முழுவதும் | Ctrl + A |
19.
| கட்டளை | குறுக்குவழி |
| LINE | L |
| CIRCLE | C |
| ERASE | E |
20.
| Zoom கருவி | Hand கருவி |
| 1. மேடையின் எந்த பகுதியையும் பெரிதாக்குவதற்கு மற்றும் சிறிதாக்குவதற்குப் பயன்படுகிறது. | மேடையை நகர்த்தப் பயன்படுகிறது. |
| 2.பொருளின் காட்சி அளவை மாற்றுகிறது. | உருப்பெருக்க அளவை மாற்றியமைக்காமல் பொருள்களைப் பார்க்க உதவுகிறது. |
| 3. பொருட்களை பெரிதாக்க (அ) சிறிதாக்க விருப்பத் தேர்வுகள் பகுதியில் உள்ள Enlarge (அ) Reduce modifiers உதவுகிறது. | மேடையில் பொருளின் ஒரு பகுதியை மட்டும் நெருக்கமாய் பார்க்க உதவுகிறது. |
21.
பல்லூடகம் 5 முக்கியக் கூறுகளைக் கொண்டுள்ளது. அவை
1. உரை
2. நிழற்படம்
3. ஒலி
4. ஒளிக்காட்சி
5. அசைவூட்டல்
உரை : பல்லூடகத்தின் அடிப்படை கூறு. இது தொடர்பிற்கான மிகவும் பொதுவான வழி ஆகும்.
நிழற்படம் : பல்லூடகத்தின் முக்கியக் கூறாகச் செயல்படுகிறது.
ஒலி : எந்த மொழியிலும் உள்ள அர்த்தமுள்ள பேச்சு ஆகும், இசையின் இன்பம், சிறப்பு விளைவுகள் போன்றவற்றை வழங்கும் மிகவும் முக்கியமானக் கூறு.
ஒளிக்காட்சி : பல்லூடகப் பயன்பாடுகளில் தகவலைத் தெரிவிக்க, சக்தி வாய்ந்த வழி ஆகும். இது பதிவு செய்யப்பட்ட நிகழ்வு, காட்சி போன்றவற்றைப் காண்பித்தல் ஆகும்.
அசைவூட்டல் : அசையா நிழற்படங்களை மிக விரைவாகக் காட்சிப்படுத்தும் செயலாகும்.
22.
1. Pick கருவியைப் பயன்படுத்தி பொருளைத் தேர்ந்தெடுக்கவும்.
2. வண்ணத்தட்டில் ஏதாவது ஒரு வண்ணத்தைக் கிளிக் செய்யவும்.
3. தேர்ந்தெடுக்கப்பட்ட பொருளுக்கு வண்ணங்கள் சேர்ந்திருக்கும்.
4. வண்ணத்தட்டில் உள்ள ஏதாவது ஒரு வண்ணத்தில் வைத்து வலது பொத்தானைக் கிளிக் செய்யவும்.
5. தேர்ந்தெடுக்கப்பட்ட பொருளின் ஓர வண்ணம் (அ) எல்லைக்கோட்டின் வண்ணம் மாறியிருக்கும்.
23.
1. கருவிப்பட்டையில் இருந்து Rectangle கருவியை தேர்ந்தெடுக்கவும். சுட்டி சிறு சதுரத்தை கொண்ட crosshair சுட்டியாக மாறும்.
2. வரைதல் பகுதியில் எங்கு வேண்டுமோ அங்கு கிளிக் செய்து கொண்டே சுட்டியை இழுக்க, ஒரு செவ்வகம் தோன்றும்.
3. தேவையான அளவுள்ள செவ்வகம் தோன்றியவுடன் சுட்டியை அழுத்துவதை விட்டுவிட வேண்டும்.
24.
1. சில நேரங்களில், நமது பதிப்பிற்கு தேவைப்படும் ஒரே வகை பொருள் எளிய வடிவங்களாகும்
2. வடிவங்களை உருவாக்கும் Rectangle , Ellipse , Polygon போன்ற கருவியைத் தேர்ந்தெடுக்க , கருவிகள் பலகத்தில் Rectangle கருவி மீது கிளிக் செய்து சுட்டெலி பொத்தானை அழுத்தி பிடித்தவாறே , நாம் பயன்படுத்த விரும்பும் வடிவக் கருவியைத் தேர்ந்தெடுக்கலாம் .
3.வடிவ கருவி தேர்ந்தெடுக்கப்பட்ட பின் ஆவணத்தில் அதை கைமுறையாக இழுப்பதன் மூலம் வடிவத்தை உருவாக்கலாம் ( அ ) ஆவணத்தில் கிளிக் செய்து Shapes உரையாடல் பெட்டியைத் திறந்து அதன் அமைப்பை வரையறுக்கலாம் .
25.
| கருவிகள் | விசைப்பலகை குறுக்கு வழி |
| 1. பாயின்டர் டூல் | F9 |
| 2. ரொட்டேடிங் டூல் | Shift+F2 |
| 3. லைன் டூல் | Shift +F3 |
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards