12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th English Poem - 6 - Incident of the French Camp Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 6 - On the Rule of the Road Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 5 - The Chair Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Supplementary - 4 - The Midnight Visitor Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Poem - 4 - Ulysses Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 4 - The Summit Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 03/03/2021
12ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய இரண்டு மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Computer Technology Reduced Syllabus Two mark Important Questions - 2021(Public Exam)
12ஆம் வகுப்பு Computer Technology / கணினி தொழில்நுட்பம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Technology / கணினி தொழில்நுட்பம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Technology Test

1.
AutoCAD ல் File தொகுதிப் பட்டையை எவ்வாறு மூடுவாய்?
2.
வட்டவில் என்றால் என்ன? அதை வரைவதற்கான பல்வேறு வழிகள் யாவை?
3.
AutoCAD லிருந்து வெளியேறாமல் தற்போதைய வரைபடக் கோப்பை மட்டும் எவ்வாறு மூடுவாய்?
4.
AutoCADல் CIRCLE கட்டளையைச் செயல் படுத்துவதற்கான பல்வேறு வழிகள் யாவை?
5.
AutoCAD என்றால் என்ன?
6.
AutoCADல் LINE கட்டளையைச் செயல்படுத்தும் பல்வேறு வழிகள் யாவை?
7.
AutoCADல் கிளீன் ஸ்கிரீன் பொத்தானின் பயன் யாது?
8.
ஃப்ளாஷில் உள்ள Deco கருவியின் பயன் யாது?
9.
ஃப்ளாஷ் காலக்கோட்டில் உள்ள அடுக்குகள் (Layers) பற்றி குறிப்பு வரைக.
10.
ஃப்ளாஷில் உள்ள Line கருவி பற்றி குறிப்பு வரைக.
11.
ஃப்ளாஷ் சன்னல் திரையின் பகுதிகள் (அ) கூறுகள் யாவை?
12.
ஃப்ளாஷ் CS6 பயன்படுத்தும் பயனாளர்கள் யார்?
13.
பல்லூடகமானது பெருமளவு பயன்படுத்தப்படும் துறைகளைப் பட்டியலிடுக.
14.
Real Audio படிவம் பற்றி குறிப்பு வரைக.
15.
OGG என்றால் என்ன ?
16.
WAV பற்றி குறிப்பு வரைக.
17.
CorelDRAW-ல் பல பொருட்களின் தேர்வினை எவ்வாறு நீக்குவாய் மற்றும் ஒரு குழுவிலுள்ள ஒரு பொருளைத் தேர்வு செய்ததை நீக்குவாய்?
18.
CorelDRAW ஆவணத்தின் தானமைவு பக்கப் பண்புகள் யாவை?
19.
CorelDRAW-ல் இணைக்கப்பட்ட பொருளை வெவ்வேறாகப் பிரித்தலுக்கான படிநிலைகளை எழுதுக.
20.
CorelDRAW-ல் பின்னலான குழுக்களின் குழுவாக்கத்தை எவ்வாறு நீக்குவாய்?
21.
CorelDRAW-ல் ஒரு பொருளின் தேர்வினை எவ்வாறு நீக்குவாய்?
22.
CorelDRAW-ல் ஆவணத்தை எவ்வாறு மூடுவாய்?
23.
CorelDRAW-ல் சதுரம் வரையப் பயன்படும் படிநிலைகளை எழுதுக.
24.
CorelDRAW-ல் உள்ள Freehand கருவியின் flyout கருவிகள் யாவை?
25.
CorelDRAW-ல் உள்ள Pick கருவியின் flyout கருவிகளைப் பட்டியலிடு.
26.
பொருள்களை உருமாற்றுதல் என்றால் என்ன?
27.
பத்திகள் என்பன யாவை?
28.
InDesign-ல் உரையின் எழுத்து அளவை எவ்வாறு மாற்றுவாய்?
29.
பரவல் என்றால் என்ன?
30.
InDesign - Essential பணித்தளத்தில் உள்ள ஆவணச் சன்னல் பற்றி எழுதுக.
31.
பேஜ்மேக்கரில் Master Pages Palette ன் பயன் யாது? அதை எவ்வாறு காண்பிப்பாய்?
32.
பேஜ்மேக்கரில் செவ்வகம் அல்லது நீள்வட்டத்தை எவ்வாறு வரைய முடியும்?
33.
பேஜ்மேக்கரில் ஜூம்டூலின் (Zoom tool) பயன் யாது?
34.
பேஜ்மேக்கரில் உரைத் தொகுதியை எவ்வாறு உருவாக்குவாய்?
35.
பேஜ்மேக்கரில் உள்ள அளவுகோல்கள் பற்றிக் குறிப்பு வரைக.
36.
ஆட்டோகேடிலிருந்து எவ்வாறு வெளியேறலாம்?
37.
ஆட்டோகேடில் ஒரு கட்டளை செயல்பாட்டில் இருக்கும் போது அதிலிருந்து எவ்வாறு வெளியேறலாம்?
38.
UCS பணிக்குறியை எவ்வாறு நீக்குவாய்?
39.
ஆட்டோகேட் எவ்வாறு தொடங்குவாய்?
40.
Adobe Professional Flash CS6ஐ தொடங்க தேவையான படிநிலைகளை எழுதுக.
41.
ஒளிக்காட்சி கோப்பு வடிவங்களைப் பட்டியலிடுக.
42.
வரையறு – அசைவூட்டல் மற்றும் அதன் சிறப்பம்சம்.
43.
பல்லூடகத்தில் உரை (Text) கூறினை வகைப்படுத்துக.
44.
Corel Draw வில் ரூலர் (Ruler) ஏன் பயன்படுத்தப்படுகின்றது.
45.
Corel Drawவில் டாக்கர் (Docker) என்றால் என்ன?
46.
Page tool –ன் பயன் என்ன?
47.
Adobe InDesign ல் பணிப்பகுதி என்றால் என்ன ?
48.
உரைத்தொகுதி என்றால் என்ன?
49.
ஒட்டுப்பலகை என்றால் என்ன?
50.
DTP மென்பொருள்களுக்கு எடுத்துக்காட்டுகள் தருக.
1.
ரிப்பனில் உள்ள View தொகுதியைக் கிளிக் செய்து தோன்றும் Interface பேனலில் உள்ள File tab பொத்தானைக் கிளிக் செய்தால் File தொகுதிப்பட்டை மூடப்படும்
2.
1. வட்டவில் என்பது வட்டத்தின் ஒரு பகுதியாகும் வழிகள் 1. Ribbon : Home > Draw > Arc drop-down (அ)
2. Command: ARC(or)A
3.
1. பயன்பாட்டுப் பட்டியில் Close > Current Drawing என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். (அ)
2. கட்டளை வரியில் CLOSE எனத் தட்டச்சு செய்ய வேண்டும்.
4.
1.Ribbon : Home > Draw > Circle drop - down Center, Radius (அ) 2.Toolbar:Draw>Circle (அ)
3.Menu Bar: Draw>Circle (அ)
4.Command: CIRCLE or C
5.
1. ஆட்டோகேட் என்பது கணினி உதவியுடன் வடிவமைப்பு செய்வதற்கான (CAD - Computer Aided Design) வணிகரீதியான வரைவு மென் பொருளாகும்.
2. இது ஆட்டோடெஸ்க் (Autodesk, Inc.) நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
6.
1. Draw பேனலில் உள்ள Line டூல் பணிக்குறியைக் கிளிக் செய்யலாம். (அ)
2. பட்டிப்பட்டையில் Draw > Line என்பதைக் கிளிக் செய்யலாம்.
3. கட்டளை வரியில் LINE கட்டளையை உள்ளிடலாம். எ.கா : LINE<R>
7.
1. கிளீன் ஸ்கிரீன் பொத்தான் ரிப்பன் போன்ற பெரும்பாலான இடைமுகக்கூறுகளை மறைத்து, தற்போதைய வரைபடத்தில் கவனம் செல்லும் படி வரைபடப் பகுதியைப் பெரிதாக்கிக் காட்டும்.
2. இந்தப் பொத்தான் திரையின் கீழ் வலது மூலையில் காணப்படும்.
8.
Deco கருவி: வடிவியல் வடிவங்களை வரைகலை வடிவங்களாக மாற்றவோ (அ) கலைடாஸ்கோப் விளைவுகள் போன்று உருவாக்கவோ பயன்படுகிறது.
9.
1. அடுக்குகள், சலனப்படத்தில் கலைப்படைப்பை ஒருங்கிணைக்க உதவுகின்றன.
2. ஃப்ளாஷ் பணித்தளத்தில் தோன்றும் ஒவ்வொரு அடுக்கும் வெவ்வேறு விதமான படங்களை கொண்டு இருக்கும்.
10.
Line கருவி பணித்தளத்தில் ஒரு நேர்கோட்டை வரையப் பயன்படுகிறது.
படிகள்:
1. கருவிப் பலகத்திலுள்ள Line tool-ஐக் கிளிக் செய்யவும்.
2. Property Inspector பலகத்திலிருந்து விரும்பும் கோட்டின் நிறம், தடிமன் மற்றும் வகையைத் தேர்ந்தெடுக்கவும்.
3. சுட்டியை பணித்தளத்திற்குக் கொண்டு வந்து கிளிக் செய்து இழுக்கவும்.
11.
ஃப்ளாஷ் சன்னல் திரையின் நான்கு கூறுகள் :
1. பணித்தளம் மற்றும் ஒட்டுப்பலகை (Stage and paste Board)
2. காலக்கோடு (Timeline)
3. கருவிகள் பலகம் (Tools Panel)
4. Property Inspector.
12.
1. வரைகலை வடிவமைப்பாளர்கள்
2. அசைவூட்டங்களை உருவாக்குபவர்கள்
3. வலைப்பக்க வடிவமைப்பாளர்கள்
4. வலைப்பக்கத்தை உருவாக்குபவர்கள்
13.
1. கல்வி 2. பொழுதுபோக்கு
3. வணிக அமைப்பு 4. மருத்துவ சேவைகள்
5. பொது இடங்கள் 6. பல்லூடகக் கலந்துரையாடல்.
14.
1. RA வடிவம் இணையத்தில் ஒலியின் ஓட்டத்திற்காக வடிவமைக்கப்பட்டதாகும்.
2. இலக்க ஒலி வளங்களைப் பொதுவாக கணினிக் கோப்புகளாகக் கணினியின் வன்வட்டு (அ) CD / DVD-களில் சேமிக்கப்படுகிறது.
15.
1. சிறந்த ஓட்டத்தினை அடைவதற்காக வடிவமைக்கப்பட்ட இலவச திறந்த மூல கொள்கலன் வடிவமாகும்.
2. உயர் இறுதி தர இலக்க பல்லூடகத்தில் சிறிது சிறிதாக மாறி வருகிறது.
3. தரத்தின் அடிப்படையில் இதை MP3 கோப்புகளோடு ஒப்பிடப்படும்.
16.
WAV (Waveform Audio File Format):
1. விண்டோஸில் குறுக்கப்படாத ஒலி கோப்புகளைச் சேமிக்கும் மிகவும் பிரபலமான ஒலி கோப்பு வடிவமாகும்.
2. குறைக்கப்பட்ட கோப்பின் அளவைப் பெறுவதற்காக MP3 போன்ற மற்ற கோப்பு வடிவங்களுக்கு மாற்றி அமைக்க முடியும்.
17.
1.பல பொருட்களின் தேர்வினை நீக்க ஏதாவது ஒரு வெற்றிடத்தில் பொருட்களின் தேர்வு நீக்கப்பட்டு வரும்.
2. பல தேர்வு செய்யப்பட்ட பொருள்களில் ஒரு பொருளைத் தேர்வு செய்ததை நீக்க Shift சாவியினை அழுத்தியவாறு பொருளின் மீது கிளிக் செய்யவும்.
18.
ஆவணத்தின்
1. தானமைவு அளவு - ஒற்றை வரி இடைவெளி
2. பக்க அளவு - Letter sized
3. பக்க அமைவு - போர்ட்ரைட் ஆக இருக்கும்.
19.
1. Pick கருவி கொண்டு இணைக்கப்பட்ட பொருளைத் தேர்வு செய்யவும்.
2. Object > Break Curve Apart கட்டளையைத் தேர்வு செய்யவும். (அ) Ctrl+K ஐ அழுத்தவும்.
20.
1. Pick கருவி கொண்டு பின்னலான குழுவினை தேர்வு செய்யவும். 2. பட்டி பட்டையிலிருந்து Object > Group > Ungroup All Objects-னை தேர்வு செய்யவும். (அ) Property பட்டையிலுள்ள Ungroup All Objects பொத்தானைக் கிளிக் செய்யவும்.
21.
1. எல்லைக் கோடு (Outline) அல்லது உயர்த்திக் காட்டுதல் பெட்டி குறிப்பான் (Marker) தவிர்த்து எங்கு வேண்டுமானாலும் கிளிக் செய்யலாம். அதாவது வெற்றிடங்களில் (White spaces) கிளிக் செய்யவும். (அ)
2. ESC சாவியினை அழுத்தவும்.
22.
1. ஆவணத்தின் சாளர திரையின் மேற்புற வலது மூலையில் உள்ள Close பொத்தானைக் கிளிக் செய்யவும். (அ) File>Close (அ) Window>Close Window தேர்வு செய்யவும் (அ) Ctrl+F4 என்பதை கிளிக் செய்யவும்.
2. ஒன்றிற்கு மேற்பட்ட ஆவணக் கோப்புகள் திறந்திருந்தால், அனைத்து கோப்புகளை ஒரே சமயத்தில் மூட Window> Close All எனத் தேர்வு செய்யவும்.
23.
1. கருவிப்பட்டையில் இருந்து Rectangle கருவியைத் தேர்ந்தெடுக்கவும். சுட்டி சிறு சதுரத்தை கொண்ட crosshair சுட்டியாக மாறும்.
2. இப்போது வரையும் பகுதியில் Ctrl விசையை அழுத்திக் கொண்டே எங்கு சதுரம் வரைய வேண்டுமோ அங்கு சுட்டியின் இடது பொத்தானைக் கிளிக் செய்து கொண்டே நகர்த்த வேண்டும்.
3. விரும்பும் அளவுடைய சதுரம் தோன்றியதும் சுட்டியின் பொத்தானை அழுத்துவதை விட்டுவிடவும்.
24.
1. Freehand
2. 2-Point Line
3. Bezier
4. Pen
5. B-Spline
6. Polyline
7. 3-Point Curve
8. Smart Drawing
9. LiveSketch
25.
1. Pick
2. Freehand Pick
3. Free Transform
26.
உருமாற்றுதல் என்பது பொருளை நகர்த்துதல், அளவிடுதல், சாய்த்தல் (அ) சுழற்றும் செயலாகும்.
27.
பத்திகள் என்பன, 'Enter' பொத்தானை அழுத்தி உருவாக்கப்படும் இடைவெளிகளால் பிரிக்கப்பட்ட உரை வரிகளாகும்.
28.
1. எழுத்து அளவு மாற்றப்பட வேண்டிய உரையைத் தேர்ந்தெடுக்கவும்.
2. கட்டுப்பாட்டு தட்டில், எழுத்து அளவு கீழ் விரிப்பட்டியலை கிளிக் செய்தால் அதில் உள்ள எழுத்து அளவுகளைக் காண்பிக்கும்.
3. தேவையான எழுத்து அளவை கிளிக் செய்யவும்.
29.
1. பரவல் என்பது ஒன்றுக்கு ஒன்று எதிராக உள்ள இரு பக்கங்களாகும்.
2. பல பக்கங்களைக் கொண்ட ஆவணத்தில் இடது பக்கம் மற்றும் வலது பக்கம் ஆகும்.
30.
1. திறக்கப்பட்ட InDesign ஆவணத்தின் மையப் பகுதியைக் குறிப்பதே ஆவணச் சன்னல் ஆகும்.
2. இது கருப்பு நிற எல்லையினால் சூழப்பட்டிருக்கும்.
3. கருப்பு நிற எல்லையானது பக்க எல்லையைக் குறிக்கும்.
31.
(i) மாஸ்டர் பக்கத்தில் செய்யக் கூடிய அனைத்துக் கட்டளைகளையும் Master pages Palette ஒழுங்குப்படுத்துகிறது.
(ii) Master pages Palette ஐக் காண்பிக்க. பட்டிப்பட்டையில் Window > Show Master Pages என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
32.
1. கருவிப் பெட்டியிலிருந்து ரெக்டாங்கல் (அ) எலிப்ஸ் டூலை தேர்ந்தெடுக்க வேண்டும். சுட்டுக்குறியானது Crosshair ஆக மாறும்.
2. திரையில் கிளிக் செய்து இழுக்க வேண்டும்.
3. சுட்டியை அழுத்துவதை விட்ட உடன் செவ்வகம் (அ) நீள்வட்டம் வரையப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும்.
33.
(i) ஜூம் டூல் மூலமாக ஆவணத்தின் எந்தவொரு பகுதியையும் பெரிதாக்கியும், சிறிதாக்கியும் காட்ட முடியும்.
(ii) ஜூம் டூலை இருமுறை கிளிக் செய்து ஆவணப் பக்கத்தின் உண்மையான அளவையும், பொத்தானுடன் சேர்த்து இருமுறைக் கிளிக் செய்து ஆவணப் பக்கம் சன்னல் திரையுடன் பொருந்தும் அளவையும் பெற முடியும்.
34.
1. ஆவணப் பக்கத்தில் அல்லது ஓட்டுப்பலகையில் டெக்ஸ்ட் டூலைக் கிளிக் செய்து இழுத்து, அதில் தட்டச்சு செய்வதன் மூலம் உரைத் தொகுதியை உருவாக்கலாம்.
2. காலியான ஆவணப்பக்கத்திலோ அல்லது பத்தியிலோ உரையேற்றப்பட்ட பணிக்குறியைக் கிளிக் செய்வதன் மூலம் உரைத் தொகுதியை உருவாக்கலாம்.
35.
பேஜ்மேக்கர் ஆவணத்தின் மேல் மற்றும் இடது ஓரத்தில் இரண்டு அளவுகோல்கள் உள்ளன.
1. அளவு கோலை திரையில் காண்பிக்க, பட்டிப்பட்டையில் View > Show Rulers என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
2. அளவுகோலை மறைக்க, பட்டிப்பட்டையில் View > Hide Rulers என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
36.
1. மூடு (X) பொத்தானைச் கிளிக் செய்ய வேண்டும்.
2. ஆட்டோகேட் வரைபடத்தை சேமிக்க வேண்டுமா என வினா எழுப்பும். உங்கள் வரைபடத்தை சேமிக்காமல் மூடுவதற்கு No பொத்தானைக் கிளிக் செய்ய வேண்டும். ஆட்டோகேட் உங்கள்
வேலையை வட்டில் பதிவு செய்யாமல் வெளியேறும்.
37.
ஒரு கட்டளையைத் தவிர்க்க அல்லது அக்கட்டளையிலிருந்து வெளியேற விசைப்பலகையில் ESC விசையை (Escape) அழுத்த வேண்டும்.
38.
1. முப்பரிமாண வரைபடங்களுக்கு UCS பணிக்குறி பெரிதும் பயன்படுகிறது.
2. இருபரிமாண வரைபடங்களுக்கு UCS பணிக்குறி தேவைப்படுவதில்லை. அப்பொழுது UCS பணிக்குறியை UCSICON கட்டளை மூலம் நீக்கவிடலாம்.
3. Command: ucsicon↲ (ENTER விசையை அழுத்தவும்)
4. Enter an option [ON/ OFF/All/ Noorigin/ Origin/Properties]
39.
1. ஆட்டோகேட் 2016 ஐ தொடங்க திரைமுகப்பில் உள்ள Auto CAD 2016 - English பணிக்குறியை இருமுறை கிளிக் செய்ய வேண்டும். (அ)
2. Start > All Programs > Autodesk > AutoCAD 2016 > Auto CAD 2016 - English என்ற வரிசையில் கிளிக் செய்ய வேண்டும்.
40.
Start > All programs > Adobe Flash Professional CS6 ஐத் தேர்வு செய்யவும்
41.
AVI (Audio Video Interleave)
MPEG (Moving Pictures Experts Group)
WMV (Windows Media Video)
MOV (QuickTime format)
FLV (Adobe Flash Video Format)
42.
அசைவூட்டல் : அசையா படங்களை மிக விரைவாக காண்பிப்பதன் மூலம் அவற்றைத் தொடர்ச்சியான அசைவு போன்ற உணர்வை கொடுக்கும் செயல். அசைவூட்டலில், திரை பொருள் என்பது ஒரு வெக்டர் படமாகும்.
சிறப்பம்சம் :
1. எண் மாற்றத்தைப் பயன்படுத்தி ஒருங்கிணைப்புகளை வரையறுக்க படத்துடன் அதன் பாதையின் இயக்கம் கணக்கிடப்படும்.
2. குறைந்தபட்ச சட்டக விகிதம் விநாடிக்கு 16 சட்டங்கள் என இருந்தால் மென்மையான தோற்றத்தைக் கொடுக்கும்.
3. இயற்கை தோற்றத்திற்கு குறைந்தபட்சம் விநாடிக்கு 25 சட்டகங்களாக இருத்தல் வேண்டும்.
43.
பல்லூடகத்தின் அடிப்படைக்கூறு உரை ஆகும்.
தகவல் தொடர்பிற்கான மிகவும் பொதுவான வழி ஆகும்.
உரைக் கூறானது இரு வகைப்படும்.
1. நிலையான உரை
2. மீ உரை
44.
ரூலர்கள் ஒரு ஆவணத்தில் பொருட்களின் அளவு மற்றும் நிலையைத் தீர்மானிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.
45.
Docker என்பது ஒரு குறிப்பிட்ட கருவி (அ) பணிக்கு தொடர்புடைய கட்டளைகள் மற்றும் அமைப்புகளைக் கொண்டிருக்கும் ஒரு சாளரம் ஆகும்.
46.
ஒரு ஆவணத்தின் உள்ளே பல்வேறு பக்க அளவுகளை உருவாக்க Page tool பயன்படுகிறது .
வெவ்வேறு பக்க அளவுகளை உருவாக்க :
1.Shift + P யை அழுத்தி பக்க கருவிகளைத் தேர்ந்தெடுக்க கிளிக் செய்யவும் .
2.இப்பொழுது கட்டுப்பாட்டுப் பலகத்தில் ( Control Page )உள்ள தேர்வைப் பயன்படுத்தி பக்க அமைவை மாற்றவும் .
47.
(i) பணித்தளம் என்பது பணி உருவாக்கப்படும் இடம் ஆகும் .
(ii) பணித்தளம் ஒரு முடிக்கப்பட வேண்டிய தயாரிப்புகளை உருவாக்கும் இடம் ஆகும் . இது ஒரு ஓவியர் ஓவியத்தை உருவாக்குவது போல உள்ளது. முதல் முறையாக InDesignஐ தொடங்கும் போது தானமைவாக இடம் பெறும் பணித்தளம் “Essentials” எனப்படும். இது மேலே கட்டுப்பாட்டுப் பலகம், இடப்புறம் கருவிப்பலகம் ஆகியவற்றுடன் InDesign சன்னல் திரையில் தோன்றும்.
(iii) திரையில் தோன்றும் சன்னல்கள் மற்றும் பலகங்கள் ஆகியவற்றின் அமைப்பே பணித்தளம் எனப்படும்.
48.
(i) பேஜ்மேக்கரில் உள்ள எல்லா உரைகளும் உரைத் தொகுதி என்று அழைக்கப்படும் கலன்களின் உள்ளே வைக்கப்பட்டிருக்கும்.
(ii) உரைத்தொகுதியானது நாம் தட்டச்சு செய்த உரையையோ (அ) ஒட்டிய உரையையோ (அ) வேறு ஆவணத்திலிருந்து கொண்டுவரப்பட்ட உரையையோ கொண்டிருக்கும்.
49.
ஒட்டுப்பலகை :
பேஜ்மேக்கர் சன்னல் திரையில், கருப்பு நிற எல்லைக் கோட்டிற்கு வெளியில் உள்ள பகுதி ஒட்டுப்பலகை (Pasteboard) என அழைக்கப்படுகிறது. ஒட்டுப்பலகையில் வைக்கப்படும் எதுவும் ஆவணத்தை அச்சிடும் போது அச்சில் வராது. ஆவணத்தை வடிவமைப்பதற்குத் தேவையானவற்றை வைத்துக் கொள்ளும் ஒரு தற்காலிக இடமாக பயன்படுத்தலாம்.
50.
i). அடோப் பேஜ்மேக்கர் (Adobe PageMaker)
ii). அடோப் இன்டிசைன் (Adobe InDesign)
iii). குவார்க் எக்ஸ்பிரஸ் (Quark XPress)
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th English Supplementary - 3 - The Hour of Truth (Play) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Poem - 3 - All the World’s a Stage Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 3 - In Celebration of Being Alive Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Supplementary - 2 - Life of Pi Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards