12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set C
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set B
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set C

Published on: 02/03/2021
12ஆம் வகுப்பு பொருளியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு ஐந்து மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Economics Reduced Syllabus Creative Five Mark Question with Answer key - 2021(Public Exam)
12ஆம் வகுப்பு Economics / பொருளியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Economics / பொருளியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Economics Test

1.
இயற்கைப் பண்ணையின் பொதுவான கொள்கைகள் யாவை?
2.
இயற்கை பண்ணை முறை -வரையறு.
3.
திடக்கழிவுகள் -வரையறு.
4.
E-கழிவுகளின் ஆதாரங்களை கூறுக.
5.
அயல்நாட்டு செலுத்து சமமின்மைக்கான காரணங்கள்:
6.
ஆடம்ஸ்மித்தின் 'முழுச் செலவுக் கோட்பாடு' -விவரி
7.
தேசிய வருவாயின் அடிப்படை கருத்துக்களை விவரி.
8.
உற்பத்தி முறையில் நாட்டு வருவாய் எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதை விவரி?
9.
மாநில அளவிலான நிதி நிறுவனங்களை பற்றி எழுதுக?
10.
இந்திய தொழில் மேம்பாட்டு வங்கியின் பணிகளை விளக்குக?
11.
ரெப்போ விகிதம் மற்றும் மீள் ரெப்போ விகிதம் வேறுபாடு தருக?
12.
வருவாயின் வட்ட ஓட்டத்தின் விளக்குக.
13.
கலப்பு பொருளாதார அமைப்பின் நன்மை தீமைகள் யாவை?
14.
முதலாளித்துவத்தின் நன்மை தீமைகளை விவரி
15.
பன்னாட்டு பண நிதியத்தின் பணிகளை விவரி.
16.
பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் யாவை?
17.
மாநில அரசின் வரி மூலங்கள் யாவை?
18.
மைய அரசின் வருவாய் மூலங்களை விவரி.
19.
பின்வரும் விவரங்களுக்கு உண்மைச் சராசரியை பயன்படுத்தும் சூத்திரத்தை பயன்படுத்தி கார்ல் பியர்ஸனின் ஒட்டுறவுக் கெழுவினைக் கண்டறிக
| காரின் வயது (ஆண்டுகளில்) | 3 | 6 | 8 | 9 | 10 | 6 |
| பராமரிப்புச் செலவு (ரூ.1000 களில்) | 1 | 7 | 4 | 6 | 8 | 4 |
20.
நேர்கோட்டு ஒட்டுறவு மாதிரியின் எடுகோள்கள் யாவை?
21.
உடன்தொடர்பிற்கும், ஒட்டுறவிற்கும் இடையே உள்ள வேறுபாடுகளை விளக்குக
22.
நிதி ஆயோக்கின் பயணிகளை விவரிக்க.(ஏதேனும் 7)
23.
பொருளாதாரத் திட்டமிடலும் ஆதரவான கருத்துக்களை விவரி
24.
பொருளாதார முன்னேற்றத்தை அளவிடும் முறைகளை விவரி:
25.
மொத்த தேசிய உற்பத்திக்கும் சுற்றுச்சூழல் தரத்திற்கும் இடையேயான தொடர்பினை சுருக்கமாக விளக்குக.
1.
1. சுற்றுச்சுழல் பாதுகாப்பு, மண் அரிப்பை கட்டுப்படுத்தல், மண்வளக்குறைவைத் தடுத்தல், உயிரியல் உற்பத்தியை உத்தமப்படுத்தல் மற்றும் சிறந்த உடல் நலனை ஊக்குவித்தல்.
2. மண்ணுக்குள் உயிரியல் நடவடிக்கைகளை மேம்படுத்தி மண்ணின் வளத்தன்மையை நீண்டகாலத்திற்கு நிலைத்திருக்கச் செய்தல்.
3. அமைப்புக்குள் உயிரியல் மாற்றங்களை நிலைத்திருக்கச் செய்தல்.
4. நிறுவனத்தின் பொருட்களையும் வளத்தையும் அதிக அளவு மறு சுழற்சிக்கு உட்படுத்துதல்.
5. கால்நடைகளை நன்கு பராமரித்து அவற்றின் நிலத்தை மேன்மையடையச் செய்தல்.
6. எல்லா உற்பத்தி நிலைகளிலும் நேர்மையையும், முக்கிய பண்புகளையும் கடைப்பிடித்து இயற்கை பொருட்களைத் தயாரிக்க வேண்டும்.
2.
இயற்கை பண்ணை முறை என்பது கால்நடை சாணம், இயற்கைக் கழிவுகள் ஆகியவற்றை உரமாகவும் பயிரிட்டு பயிர் சுழற்சி முறையையும் பயன்படுத்தி செய்யப்படும் வேளாண்மையாகும்.
விவசாய சூழல் அமைப்பிலுள்ள நிலத்தின் தன்மை, பயிர்கள், கால்நடைகள் மற்றும் மக்களைக் கருத்தில் கொண்டு உத்தம அளவு உற்பத்தி செய்யும் உள்ளடக்கிய அமைப்பு முறையே "இயற்கை பண்ணைகளாகும்".
3.
1. மனித நடவடிக்கைகளில் பயனில்லாத தேவையற்ற பொருட்களைக் கழிப்பதே "திடக்கழிவுகள்"ஆகும்.
2. அவை திடப் பொருட்களாகவோ அல்லது பகுதி திடப் பொருட்களாகவோ அல்லது திரவமாகவோ இருக்கும்.
எ.கா: i) வீட்டுக்கழிவுகள்,
ii) மருத்துவமனைக்கழிவுகள்
iii) கட்டுமானத்துறை கழிவுகள்
iv) விவசாயக் கழிவுகள்
v) தொழிற்சாலைக்கழிவுகள்.
4.
| வீடு | மருத்துவமனை | அரசாங்கம் | உணவு கூடம் தொழிற்சாலை தனியார்துறை |
|
கணினி |
கணினி |
கணினி |
கணினி கொதிகலன்கள் அரைப்பான் சிக்னல் ஜெனரேட்டர்கள் இங்கு பேட்டர்கள் |
5.
1. சுழற்சியின் ஏற்ற இறக்கம்:
மந்த காலங்களில் பன்னாட்டு வாணிகம் வீழ்ச்சி அடைகிறது. செழிப்பான காலங்களில் வாணிகம் வளர்கிறது.
2. கட்டமைப்பு மாற்றங்கள்:
வளரும் நாடுகளில் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்கள். அபரிமதிமான முதலீடு கட்டமைப்பை மாற்றி அமைத்து அயல்நாட்டு செலுத்து சமநிலையை உருவாக்குகிறது.
3. மேம்பாட்டுச் செலவு:
நாடுகள் வளர்ச்சியின் ஆரம்ப கட்டத்தில் ஏற்றுமதி வாய்ப்பு குறைவு. நாட்டம் அதிகம்.
4. மிகை நுகர்வுப் போக்கு:
ஆடம்பரப் பொருட்களின் மீது பேராசை அயல்நாட்டுச் செலுத்து நிலையில் பாதகமான விளைவுகளை உண்டாக்குகிறது.
5. வெளிக்காட்டும் விளைவு:
மற்றவர் வாங்கும் பொருட்களை தாமும் வாங்க வேண்டும் என்பது வெளிக்காட்டும் விளைவு.
6. வெளிநாட்டில் கடன் வாங்குதல்:
வாங்கும் ஆண்டில் அயல்நாட்டு செலுத்து நிலையில் உபரியும் வட்டியும் பற்றாக்குறை சமமின்மையை ஏற்படுத்தும்.
6.
முன்னுரை:
1. ஆடம்ஸிமித் 1776 ஆம் ஆண்டில் தனி அடக்கச் செலவுக் கோட்பாட்டினை விளக்கினார்.
2. வாணிப தடைகளற்ற சூழலில் குறைவான அடைக்கச் செலவில் பொருளுற்பத்தி செய்யும் தனி தேர்ச்சியை அடைவதினால் அனைத்து நாடுகளுக்கும் பன்னாட்டு வாணிபத்தின் பலன் கிடைக்குமென ஆடம்ஸ்மித் நம்பினார்.
ஆடம்ஸ்மித்தின் கோட்பாடு:
ஆடம்ஸ்மித்தின் கருத்துப்படி குறைந்த தனி அடக்க செலவில் பொருளுற்பத்தி செய்யும் தேர்ச்சியை நாடுகள் பெற்றிருப்பதை பன்னாட்டு வாணிகம் நடைபெறுவதற்கான அடிப்படையாகும்.
எடுகோள்கள்:
1. இரண்டு நாடுகள் இரண்டு பொருட்களை உற்பத்தி செய்கின்றன.
2. உழைப்பு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
3. உழைப்பாளர்கள் ஒரே இயல்புடைவார்கள்
4. ஒரு பொருளின் விலை உழைப்பின் அளவால் மதிப்பிடப்படுகிறது.
5. போக்குவரத்து செலவு இல்லை.
எடுத்துக்காட்டு விளக்கப்படம்:
| நாடு | இந்தியா | சீனா |
| தொழிலாளரின் தலா உற்பத்தி | ||
| கோதுமை | 20 | 8 |
| துணி | 6 | 14 |
இந்தியா கோதுமையை சீனாவைவிட குறைந்த அடக்க செலவில் உற்பத்தி செய்யும். சீனா துணியை இந்தியாவை விட குறைந்த அடக்க செலவில் உற்பத்தி செய்யும் எனவே இரு நாடுகளும் தங்களுக்குள்ள பன்னாட்டு வாணிகத்தின் மூலம் நன்மை அடையலாம்.
7.
தேசிய வருவாயை அளவிடுவதற்கு தேவையான அடிப்படை கருத்துக்கள்
1. மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP):
ஓர் ஆண்டில் ஒரு நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட இறுதிநிலை பண்டங்கள் மற்றும் பணிகளின் மொத்த சந்தை மதிப்பு உள்நாட்டு உற்பத்தியாகும்.
GDP = C+I+G+(X-M)
2. நிகர உள்நாட்டு உற்பத்தி (NDP):
ஓர் ஆண்டில் ஒரு நாட்டில் உற்பத்தியில் தேய்மானத்தை கழித்தால் கிடைப்பது நிகர உள்நாட்டு உற்பத்தியாகும்.
நிகர உள்நாட்டு உற்பத்தி = GDP - தேய்மானம்
3. மொத்த தேசிய உற்பத்தி (GNP):
மொத்த தேசிய உற்பத்தி என்பது ஒரு நாட்டில் ஓர் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட முடிவடைந்த பொருட்கள் மற்றும் பணிகளின் அங்காடி மதிப்பின் மொத்த தேசிய உற்பத்தியாகும்.
GNP = C+I+G+(X-M)+(R-P)
4. நிகர தேசிய உற்பத்தி (NNP):
நிகர தேசிய உற்பத்தி என்பது ஒரு ஆண்டின் பொருளாதாரத்தின் நிகர உற்பத்தியின் மதிப்பாகும். GNPயிலிருந்து தேய்மானத்தின் மதிப்பு முதலீட்டு சொத்தின் மாற்று கழிவு ஆகியவற்றை கழித்த பின் கிடைப்பது நிகர தேசிய உற்பத்தி ஆகும்.
NNP = GNP - தேய்மான கழிவு
5. தனிநபர் வருமானம்:
ஒரு ஆண்டில் ஒரு நாட்டில் வசிக்கும் ஒவ்வொரு தனி நபருக்கும் பல வழிகளில் இருந்து கிடைக்கும் மொத்த வருமானம் ஆகும். அவை வட்டியாகவோ, வாரமாகவோ, கூலியாகவோ இருக்கலாம்.
தனிநபர் வருமானம் = தேசிய வருமானம் + மாற்று செலுத்துதல்கள்
6. தலா வருமானம்:
தலா வருமானம் என்பது ஓர் ஆண்டில் ஒரு நாட்டில் வசிக்கும் ஒரு நபரின் சராசரி ஆண்டு வருமானம் ஆகும்.
8.
உற்பத்தி முறை என்பது ஒரு நாட்டின் மொத்த உற்பத்தியை கணக்கிடுவது ஆகும். இதனை சரக்கு முறை என்பர். ஒரு குறிப்பிட்ட ஆண்டில் விவசாயம், தொழில் வாணிபம் போன்ற துறைகளிலிருந்து கிடைக்கும் வருமானம் தேசிய வருமானம் ஆகும். இதனை கணக்கீடு செய்யும்போது ஒரு துறையின் வெளியீடு வேறு துறை உற்பத்தியின் உள்ளீடாக அமைய வாய்ப்புள்ளது. இதனை கணக்கில் எடுக்காவிடில் இரண்டு முறை கணக்கில் சேர்ந்து வரும்.
பண்ணை உற்பத்தியின் மதிப்பு கணக்கிடல்:
1. 64 வகை விவசாய பொருள்களின் மொத்த உற்பத்தி மதிப்பிடப்படுகிறது. இது ஒரு ஹெக்டேருக்கு சராசரி உற்பத்தியை கணக்கிட்டு பயிரிடப்பட்ட நிலப்பரப்பால் பெருக்கினால் உற்பத்தியின் அளவு கிடைக்கும்.
2. ஒவ்வொரு பொருளின் மொத்த உற்பத்தியும் சந்தை விலையால் மதிப்பிடப்படுகிறது.
3. எல்லா பயிர்களின் மொத்த உற்பத்தியை எடுத்துக் கொண்டு விவசாயத்துறையின் மொத்த உற்பத்தியின் மதிப்பு கணக்கிடப்படுகிறது.
4. விவசாய உற்பத்தியின் நிகர மதிப்பு கணக்கிடுவதற்கு மொத்த விவசாய உற்பத்தி மதிப்பிலிருந்து விதை, உரம், அங்காடி கட்டணம் சரி செய்தல் தேய்மானம் போன்றவற்றை கழிக்க வேண்டும்.
5. மேலும் மற்ற துறைகளான கால்நடை, காடுகள், மீன் வளர்ப்பு, சுரங்க தொழில், தொழிற்சாலை போன்றவற்றின் மொத்த உற்பத்தி மதிப்பீடு செய்யப்பட்டு அவற்றின் மொத்த மதிப்பு கணக்கிடப்படுகிறது.
இவை அனைத்தையும் ஒன்று கூட்டினால் நாட்டின் உற்பத்தி முறையில் தேசிய வருவாயை கணக்கிடலாம்.
9.
A. மாநில நிதிக்கழகம்:
1. 1951-ம் ஆண்டு இந்திய அரசால் இயற்றப்பட்டது. மாநில தொழில் நிதிக்கழகம் அந்ததந்த மாநிலங்களில் சிறு மற்றும் நடுத்தர தொழில் மேம்பாட்டினை ஏற்படுத்துவது இக்கழகங்களின் நோக்கமாகும்.
2. மாநில தொழில் நிதிக்கழகங்கள் மறு நிதியாக இந்திய தொழில் மேம்பாட்டு வங்கியிடமிருந்து கடன் பெறுகிறது.
B. மாநில தொழில் மேம்பாட்டு கழகங்கள்:
1. மாநில மேம்பாட்டு கழகம் மாநில அரசுகளினால் அமைக்கப்படுவதால் அந்ததந்த மாநில அரசுகளுக்கே உரிமையானதாகும். இக்கழகம் தொழில் நிறுவனங்களுக்கான கடன்களை அளிப்பதோடு மாநிலத்தில் தொழில் மயமாதலை தூண்டுவதாகும்,
தனியார் பங்கேற்பை அனுமதிக்கும் கூட்டுத் திட்டங்களையும் இக்கழகம் ஊக்குவிக்கப்படுகிறது.
பல்வகை அடிப்படை வசதிகளை கொண்ட தொழிற்பேட்டைகளை அமைப்பது, மாநில அரசுகளின் மானியங்களை நிர்வகிப்பதும் இக்கழகத்தின் பணிகளாகும்.
10.
இந்திய தொழில் மேம்பாட்டு வங்கியின் முக்கிய பணிகள் இரு பிரிவுகளாக பிரித்து கூறப்பட்டுள்ளன.
1. மற்ற தொழில் நிறுவனங்களுக்கு நிதியளிப்பது.
2. தொழில் நிறுவனங்களுக்கு நேரடியாகவோ அல்லது மற்ற நிதியளிக்கும். நிறுவனங்களுடன் இணைந்தோ நேரடியாக கடன் வழங்குவது ஆகும்.
11.
| ரெப்போ விகிதம் (RR) | மீள் ரெப்போ விகிதம் (RRR) | |
| 1 | வணிக வங்கிகளுக்கு மைய வங்கி குறுகிய கால கடன் வழங்கும்போது விதிக்கப்படும் வட்டி விகிதம் இது. | வணிக வங்கிகளிடமிருந்து வாங்கும் கடனுக்கான RBI கொடுக்க விரும்பும் வட்டி விகிதம் இது. |
| 2 | பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரெப்கோ விகிதத்தை அதிகப்படுத்தப்படும். | மீள் ரெப்போ விகிதத்தை உயர்த்தி பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் |
12.
ஒரு பொருளாதார அமைப்பின் வருவாயின் வட்ட ஓட்டம் மாதிரியானது அந்த பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளுக்கிடையே உள்ள தொடர்பினை விளக்குவதாகும். இது பொருளாதார முகவர்களாகிய நிறுவனம், குடியிருப்பு, அரசாங்கம் மற்றும் நாடுகளுக்கிடையே வருவாய், பொருட்கள் மற்றும் பணிகள் மற்றும் உற்பத்தி காரணிகளின் ஓட்டத்தை காண்பிப்பதாகும். வருவாயின் வட்ட ஓட்டம் ஆய்வானது தேசிய கணக்குகள் மற்றும் பேரியல் பொருளாதாரத்தின் அடிப்படையாகும்.
I. இரு துறை பொருளாதாரத்தின் வருவாயின் வட்ட ஓட்டம்:
1. இல்லத்துறை: அதற்கு சொந்தமான உற்பத்தி காரணிகளை உற்பத்திக்கு அளிப்பதன் மூலம் வருவாயைப் பெறுகின்றது
2. நிறுவனத்துறை: நிறுவனத் துறையானது பொருள் மற்றும் பணிகளை இல்லத்துறைக்கு விற்பனை செய்வதன் மூலம் வருவாயைப் பெறுகின்றது
இருதுறை பொருளாதாரத்தில் உற்பத்தி மற்றும் விற்பனை சமமாகவும், வருவாய் மற்றும் பொருட்கள் வட்ட ஓட்டமாகவும் காணப்படும். ஆகவே
y = C + I
y என்பது வருவாய், C என்பது நுகர்வு, I என்பது முதலீடு
II. மூன்று துறை பொருளாதாரத்தின் வருவாயின் வட்ட ஓட்டம்:
(i) இல்லம் மற்றும் நிறுவனத் துறைக்கு மேலாக அரசுத்துறை சேரும் போது மூன்று துறை மாதிரி அமைகிறது. அரசானது இல்லத்துறை மற்றும் நிறுவனங்களில் வரி விதிக்கின்றனர். நிறுவனங்களிலிருந்து பொருள் மற்றும் பணிகளை வாங்குகின்றன.
(ii) மூன்று துறை மாதிரியின் தேசிய வருமானம் என்பது நுகர்வு செலவு முதலீட்டு செலவு மற்றும் அரசின் செலவு ஆகியவற்றைக் கூட்டுவதால் அடையலாம்
y = C + I + G
III. நான்கு துறை பொருளாதாரத்தின் வருவாயின் வட்ட ஓட்டம்:
நான்கு துறை பொருளாதாரத்தில் இல்லம், நிறுவனம், அரசு இவற்றோடு வெளியுறவுத் துறையும் இணைக்கப்படுகிறது. நிஜ வாழ்க்கையில் நான்கு துறை பொருளாதாம் காணப்படுகிறது
வெளியுறவுத் துறையில் அதிகமாக ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சேர்ந்ததாகும்
y = C + I + G + (X - M)
13.
கலப்பு பொருளாதார அமைப்பின் நன்மைகள்:
1. அதிவேக பொருளாதார வளர்ச்சி: இதன் சிறந்த தன்மை அதிவேக பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதாகும். பொது தேவைகளும் சிந்திக்கப் படுகின்றன
2. சமமான வளர்ச்சி: பொருளாதாரத்தில் சமநிலை வளர்ச்சியை கலப்புத்துவம் ஊக்குவிக்கிறது
3. வளங்களை சரியாக பயன்படுத்துதல்: அரசு பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை நேரடியாக கட்டுப்படுத்தும். மேலும் தனியார் துறையை மறைமுகமாக கட்டுப்படுத்தும்.
4. பொருளாதார சமத்துவம்: அரசு வருவாய் வரியை வளர் வீத முறையைப் பயன்படுத்தி பொருளாதார சமத்துவத்தைக் கொண்டு வருகிறது
5. சமூகத்திற்கு சிறப்பு நன்மைகள்: குறைந்தபட்ச கூலி, பகிர்வு முறை சட்டம், நியாய விலைக் கடைகள் ஆகியவற்றின் மூலம் சமூக நல நடவடிக்கைகளை உருவாக்குகிறது
கலப்பு பொருளாதார அமைப்பின் தீமைகள்:
1. ஒருங்கிணைப்பு இல்லாமை: கலப்புத்துவத்தின் மிகப்பெரிய குறைபாடு பொதுத்துறைக்கும், தனியார் துறைக்கும் ஒருங்கிணைப்பு இல்லாததாகும்.
2. போட்டி மனப்பான்மை: அரசு மற்றும் தனியார் துறைகள் இணைந்து செயலாற்ற வாய்ப்பு குறைவு. இவை இரண்டும் போட்டித் தன்மையுடைதான் செயல்படும்
3. திறமையின்மை: மந்தமான அதிகார முறை, சிவப்பு நாடா முறை, ஊக்கமின்மை ஆகியவை திறமையின்மை ஏற்பட வாய்ப்பு உண்டு.
4. தேசியமயமாக்கல் பற்றிய பயம்: தேசியமயமாக்குதல் என்ற பயம் தனியார் துறையின் வளர்ச்சியையும், புதிதாக்க முயற்சியையும் தடை செய்யும்
5. விரிவடையும் சமத்துவமின்மை: வளங்களின் உரிமை, பரம்பரை சட்டம், மக்களின் இலாப நோக்கம் ஆகியவை பணக்காரர், ஏழைகளிடையே இடைவெளியை விரிவடையச் செய்கின்றன
14.
முதலாளித்துவத்தின் நன்மைகள்:
1. தானாக இயங்குதல்: அரசாங்கத்தின் எந்த தலையீடும் இல்லாமல் பொருளாதாரம் தானாகவே செயல்படும்
2. வளங்களை திறமையாகப் பயன்படுத்துதல்: அனைத்து வளங்களுக்கும் திறமையாகவும், உத்தம அளவிலும் பயன்படுத்தப்படுகிறது
3. கடின உழைப்பிற்கு வெகுமதி: கடின உழைப்பை ஊக்குவிக்கப்படுத்துவதும், திறமையால் அதிக லாபம் பெறுவதற்கும் பயன்படுத்தப்படுகிறது
4. பொருளாதார முன்னேற்றம்: முதலாளித்துவ பொருளாதாரத்தில் உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறன் மிக அதிகமாகும்
5. நுகர்வோர் இறையாண்மை: அனைத்து உற்பத்தி நடவடிக்கைகளும் நுகர்வோர்களை திருப்தி செய்வதை முக்கிய நோக்கமாக கொண்டிருக்கும்
6. மூலதன ஆக்க வீதம் அதிகரித்தல்: சேமிப்பு முதலீடு அதிகரித்து மூலதன ஆக்க வீதம் உயர வழிவகுக்கும்
7. புதிய தொழில்நுட்ப முன்னேற்றம்: இலாபம் பெறுவது நோக்கமாக இருப்பதால் புதிய முறையைக் கையாண்டு உற்பத்தி உயர முயற்சிகள் மேற்கொள்ளப்படும்
முதலாளித்துவத்தின் குறைபாடுகள்:
1. வருமானம் மற்றும் செல்வச் செறிவு: வருமானம் மற்றும் செல்வம் சிலரது கையில் மட்டும் குவிந்து வருமான ஏற்றத்தாழ்வு அதிகமாகும்
2. வளங்கள் வீணாக்கப்படுல்: போராடி விளம்பரங்களினாலும், பொருட்களின் பிரதிகளினாலும் வளங்கள் வீணாக்கப்படும்
3. வகுப்புப் போராட்டம்: சமுதாயத்தை முதலாளிகள், வேலைக்காரர்கள் என பிரித்து வகுப்பு போராட்டத்திற்கு வழிவகுக்கும்
4. வாணிபச் சுழல்: தடையில்லா சந்தை முறையால் அதிக அளவு பொருளாதார ஏற்றத்தாழ்வு ஏற்பட்டு நெருக்கடி நிலை ஏற்படும்
5. அத்தியாவசியமில்லா பொருட்களை உற்பத்தி: இலாபத்தைப் பெறுவதற்காக தீங்கு விளைவிக்கும் பொருட்கள் கூட உற்பத்தி செய்ய வாய்ப்பு உள்ளது.
15.
1. நாணய மாற்று வீதத்தில் நிலைத்தன்மையை கொண்டு வருதல்
(i) ஐ.எம்-ன் முதல் மற்றும் முக்கிய பணி நாணய மாற்று வீதத்தை நிலைப்படுத்துதல்.
(ii) நாணய மதிப்பு குறைப்பை வலியுறுத்துதல்
(iii) உறுப்பு நாடுகள் பன்முக மாற்று வீதங்களுக்கு செல்வதைத் தடுத்தல்.
2. அயல் நாட்டு செலுத்து சமமின்மையை சரிசெய்தல்
உறுப்பு நாடுகளுக்கு அந்நிய செலவாணியை விற்பனை செய்தல் மற்றும் அவற்றை கடனாக வழங்கி, அயல்நாட்டு செலுத்து சமமின்மையை சரிசெய்தல்.
3. இணை மதிப்பை உறுதி செய்தல்
உறுப்பு நாடுகள் அதன் நாணய மதிப்பினை தங்கள் அல்லது அமெரிக்க டாலர்கள் என்ற அடிப்படையில் உறுதி செய்ய வேண்டும்.
4. நாடுகளின் பணத்தேவையை அளிப்புக்கு சமமாகும் வகையில் பராமரித்தல் :
(i) உயர்வான தேவையுள்ள எந்த நாட்டுப் பணத்தையும் பற்றாக்குறையுள்ள பணம் என நிதியம் அறிவிக்கலாம்.
(ii) அந்த நாட்டிலிருந்து அவர்களின் பணத்தை கடன் வாங்கியோ தங்கத்தைக் கொடுத்து கொள்முதல் செய்தோ அளிப்பை நிதியம் உயர்த்தும்.
5. வாணிபத் தடைகளைக் குறைத்தல் :
இந்நிதியம் உறுப்பு நாடுகளால் விதிக்கப்டுகின்ற சுங்கவரி மற்றும் பிற வானிபத் தடைகளைத் குறைப்பதன் மூலம் வாணிபத் தடைகளை குறைத்தல்.
6. கடன் வசதிகளை வழங்குதல் :
அடிப்படை கடன் வசதி, விரிவுபடுத்தப்பட்ட நிதி வசதி, ஈடுசெய் நிதி வசதி, கட்டமைப்பு சரிசெய்தல் ஆகிய கடன் வசதிகளை ஏற்படுத்தியுள்ளது.
16.
கீன்ஸ் மற்றும் மில்டன் ப்ரீட்மேன் கருத்துப்படி, பணவீக்கத்தினை கட்டுப்படுத்தும் வழிகளை மூன்றாக பிரிக்கலாம்.
அவை:
1. பணவியல் முறைகள்
2. நிதியியல் முறைகள் (JM கீன்ஸ்) மற்றும்
3. இதர முறைகள்
I. பணவியல் முறைகள்
பணவியல் முறைகள் நாட்டின் மைய வங்கியினால் அமல்படுத்தப்படும் முறைகள்.
அவைகள்:
1) வங்கி விகிதத்தை உயர்த்துதல்
2) வெளிச்சந்தையில் அரசு பாத்திரங்களை விற்றல்
3) ரொக்க இருப்பு விகிதத்தை உயர்த்துதல் மற்றும் சட்டப்பூர்வ நீர்மை விகிதத்தை உயர்த்துதல்.
4) நுகர்வோர் கடனை கட்டுப்படுத்துதல்
5) கடன் விளிம்பு நிலையினை உயர்த்துதல்
6) மீள் வாங்கல் விகிதம் மற்றும் திருப்ப மீள் வாங்கல் விகிதம் ஆகியவற்றினை உயர்த்துதல் ஆகும்.
II. நிதியியல் நடவடிக்கைகள்:
பணவீக்கத்தின் போது அரசு செலவினங்களைக் குறைப்பது, பொதுமக்களிடமிருந்து கடன்களை பெறுவது மற்றும் வரி விதிப்புகளை விரிவாக்குவது போன்ற நிதியியல் நடவடிக்கைகள், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துகின்றன.
III. இதர நடவடிக்கைகள்:
இதர நடவடிக்கைகள்:
இதர நடவடிக்கைகள் குறுகிய கால நடவடிக்கைகள்மற்றும் நீண்ட கால நடவடிக்கைகள் என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளன.
a) குறுகிய கால நடவடிக்கைகள்:
குறுகிய கால நடவடிக்கையாக பொது விநியோக முறையின் கீழ் நியாயவிலை கடைகளில் அத்தியாவசிய பொருட்களை பங்கீடு செய்து விலை உயரா வண்ணம் தடுக்கப்படுகிறது.
b) நீண்ட கால நடவடிக்கைகள்:
நீண்ட கால நடவடிக்கையாக பொருளாதார வளர்ச்சியை அடையும் நோக்கில் சேமிப்பு முதலீடுகளை மேம்படுத்துதல். மேலும் பொது விலை மட்டத்துடனும், வாழ்க்கைச் செலவுடனும் நேரடி தொடர்பு கொண்டுள்ள கூலிப் பொருட்களின் உற்பத்தியை அதிகப்படுத்துதல் பணவீக்கத்தை தடுக்கும் வழிமுறைகளாகும்.
17.
1. தல வரி
2. வேளாண் நிலங்கள் மீதான வரி
3. மது மற்றும் போதை பொருள்கள் மீதான கலால் வரி
4. பண்ணை வரி
5. நில வருவாய்
6. வேளாண் வருவாய் வரி
7. நிலம் மற்றும் கட்டிடங்கள் மீதான வரி
8. கனிம வளங்கள் எடுப்பதற்கான உரிமை வரி
9. மின்சார நுகர்வு மற்றும் உற்பத்தி வரி
10. சாலை சுங்க கட்டணம்
11. வாகன வரி
12. விலங்குகள் மற்றும் படகுகள் மீதான வரி
13. வியாபாரம் மற்றும் தொழிலாளர் கள் மீதான விற்பனை வரி
14. கேளிக்கை வரி
15. செய்திதாள் தவிர்த்த இதர பொருட்கள் மீதான விற்பனை வரி
16. செய்தித்தாள் தவிர இதர விளம்பரங்கள் மீதான வரி
17. சாலை மற்றும் நீர்வழி மார்க்கமாக எடுத்துச் செல்லும் பொருட்கள் ,மற்றும் அயனிகள் மீதான வரி
18. உள்ளூர் பகுதியில் நுகர்வு மற்றும் விற்பனை வரி.
18.
1. தொழில் நிறுவனம் மீதான வரி.
2. பணம், நாணயம் மற்றும் அந்நிய செலவாணி
3. சுங்கவரி ஏற்றுமதி வரி உட்பட
4. கலால் வரி மற்றும் புகையிலை மீதான வரி
5. வேளாண் நிலம் தவிர்த்த பண்ணை வரி
6. நீதிமன்ற விதிக்காக மத்திய பட்டியலில் உள்ள இதர கட்டணங்கள்
7. அயல்நாட்டு கடன்கள்
8. இந்திய அரசால் அல்லது மாநிலங்களால் அமைக்கப்பட்ட லாட்டரி சீட்டுகள்
9. தபால் துறையின் சேமிப்பு வங்கி
10. தொலை தொடர்பு துறையின் வருவாய்கள்
11. மத்திய அரசிற்கு சொந்தமான சொத்துக்கள்
12. மத்திய அரசின் பொது கடன்
13. இரயில்வே
14. இந்திய ரிசர்வ் வங்கி
15. வருமானவரி (வேளாண் வரி தவிர்த்தல்)
16. செய்தித்தாள் மீதான வரி
17. சொத்துக்களின் மூலதன மதிப்பில் விதிக்கப்டும் வரி
18. மாற்று சீட்டு, காசோலை மீதான வில்லை கட்டணம்
19.
\(r=\frac { \sum { XY } }{ \sqrt { \sum { { X }^{ 2 } } } \sqrt { \sum { { Y }^{ 2 } } } } \) இங்கு, \(\sum { (X-\bar { X } ) } ,\sum { { (Y-\bar { Y } ) } } \)
| வ. எண்: | X | \(X-\bar { X } \) X -7=x |
\( { { (X-\bar { X } ) }^{ 2 } } \)= X2 | Y | \((Y-\bar { Y } )\) Y-5=y |
\({ (Y-\bar { Y } ) }^{ 2 }\)=y2 | xy |
| 1 | 3 | -4 | 16 | 1 | -4 | 16 | 16 |
| 2 | 6 | -1 | 1 | 7 | 2 | 4 | -2 |
| 3 | 8 | 1 | 1 | 4 | -1 | 1 | -1 |
| 4 | 9 | 2 | 4 | 6 | 1 | 1 | 2 |
| 5 | 10 | 3 | 9 | 8 | 3 | 9 | 9 |
| 6 | 6 | -1 | 1 | 4 | -1 | 1 | 1 |
| 42 | 0 | 32 | 30 | 0 | 32 | 25 |
\(\bar { X } =\frac { 42 }{ 6 } =7\) \(\bar { Y } =\frac { 30 }{ 6 } =5\)
\(\sum { { x }^{ 2 }=32 } \sum { { y }^{ 2 }=32 } \sum { xy } =25\)
\(r=\frac { \sum { XY } }{ \sqrt { \sum { { X }^{ 2 } } } \sqrt { \sum { { Y }^{ 2 } } } } \)
\(=\frac { 25 }{ \sqrt { \sum { 32 } } \sqrt { \sum { 32 } } } \)
\(=\frac { 25 }{ 32 } \)
20.
நேர்கோட்டு ஒட்டுறவு மாதிரியின் எடுகோள்கள்:
1) மாதிரியில் கொடுக்கப்பட்டுள்ள சில மாறிகள் சம வாய்ப்பு மாறிகள்
2) சில மாதிரிகளில் Ui மற்றும் விளக்க மாறிகள் (X1, X2, X3 ...) இடையேயுள்ள தொடர்பை விளக்கும்
மதிப்புகளின் பரவல் பற்றிய எடுகோள் சாதாரண குறைந்த வர்க்க முறையில் கூறப்பட்ட சமவாய்ப்பு மாறி எடுகோள்கள் ஆகும். விளக்க மாறிகளின் தொடர்பும் அவற்றிக்கு இடையிலான தொடர்பு பற்றியும் மற்ற எடுகோள்கள் குறிப்பிடுகின்றது
எடுகோள்கள்:
1. U என்பது சமவாய்ப்புள்ள உண்மையான மாறி. அதாவது U வின் மதிப்பு நேரிடையாகவோ எதிரிடையாகவோ அல்லது பூஜ்யமாகவோ இருக்கலாம். எனவே U வின் சராசரி மதிப்பு பூஜ்யமாகும்
2. விலக்க அளவைமதிப்பு U மாறிக்கு நிலையானதாக இருக்கும்
3. U மாறி சமசீர் பரவலை உடையது
4. இணை விலக்க அளவை மதிப்பு Ui மரிக்கும் எந்த Uj மாரிக்கும் பூஜ்யமாகவே இருக்கும்
5. U மாறி விளக்க மாறிகளிருந்து தனித்து உள்ளது
6. விளக்க மாறிகளின் மதிப்புகள் பிழை இல்லாமல் அளவிடப்படுகின்றது.
7. விளக்க மாறிகள் முழுமையாக நேர்கோட்டுத் தொடர்பு உடையவை அல்ல
8. மாறிகளை அனைத்தும் சரியான முறையில் தொகுக்கப்பட வேண்டும்
9. தொடர்பு சரியாக, குறிப்பிட்டதாக இருக்க வேண்டும்
10. தொகுதி அளவுகள் நேர்கோட்டு முறையில் அமைக்கப்பட வேண்டும்
21.
| வ. எண். | உடன்தொடர்பு | ஒட்டுறவு |
| 1 | இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாறிகளின் மதிப்பு ஒரே திசையில் மாற்றமடைகின்றதோ அல்லது எதிர்த் திசையில் மாற்றமடைகின்றதோ என்பதை ஆராயும் | ஒரு மாரியின் மதிப்பில் மற்றம் மற்ற மாறியின் மதிப்பில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதே ஒட்டுறவு பயன்படுத்தப்படுகின்றது |
| 2 | X, Y என்ற இரு மாறிகளும் தனித்த மாறிகள் | ஒரு மாறி தனித்த மாறியாகவும், மற்றொன்று சார்பு மாறியாகவும் எடுத்துக்கொள்ளப்படுகிறது |
| 3 | இரு மாறிகளுக்குமிடையே உள்ள தொடர்பை மட்டும் ஆராய்கின்றது. காரண விளைவுகளை ஆய்வு செய்வதில்லை | இரு மாறிகளுக்கிடையே காரண விளைவை ஆராய்ந்து அவைகளுக்கு இடையே சார்புத் தொடர்பை ஏற்படுத்துகின்றது |
| 4 | தொடர்பில்லா இரு மாறிகளுக்கு இடையில் போலி உடன்தொடர்பு ஏற்படும் | ஒட்டுறவு ஆய்வில் போலி ஒட்டுறவு இல்லை |
| 5 | இது அதிகம் மேற்கணக்கீட்டிற்கு பயன்படுவதில்லை | இது அதிகம் மேற்கணக்கீட்டிற்கு பயன்படுத்தப்படுகின்றத |
22.
1. கூட்டுறவு மற்றும் போட்டி அடிப்படையிலான கூட்டாட்சி:
மாநிலங்கள் நாட்டின் கொள்கை வடிவமைப்பதில் துடிப்புடன் பங்கெடுக்கத் தேவையானவற்றை செய்வது
2. நாட்டின் நிகழ்வுகளில் மாநிலங்களைப் மாநிலங்களைப் பங்கெடுக்க வைத்தல்:
நாட்டின் முன்னேற்றத்திற்கான முன்னுரிமைகள் மற்றும் உத்திகளில் மாநிலங்களையும் இணைத்துக் கொள்ளுதல்
3. பரவலாக்கப்பட்டத் திட்டமிடல்:
திட்டமிடல் நடைமுறையை கீழிருந்து மேல் என்ற முறையில் மற்றம் கொண்டு வருதல்
4. தொலைநோக்கு மற்றும் காட்சித் திட்டமிடல்:
நாட்டின் எதிகாலத்தை கவனத்தில் கொண்டு இடைக்கால மற்றும் நீண்டகால தொலைநோக்கு கட்டமைப்பை வடிவமைத்தல்
5. நிபுணர்களின் கூட்டமைப்பை உருவாக்குதல்:
அரசின் கொள்கைகள் வடிவமைப்பதிலும், திட்டங்களை செயல்படுத்துவதிலும் அரசுக்கு வெளியில் உள்ள நிபுணர்கள் ஒன்றிணைந்து பங்குபெற வைத்தல்.
6. உகந்தத்தாக்குதல்:
அரசின் பல படிநிலைகளில் பணியாற்றுபவர்களை குறிப்பாக பலதுறைகள் ஒன்றிணைந்து செயல்படும் இடங்களில் ஏற்படும் பிரச்சனைகளை களைய தொடர்பு கொள்ளுதல். ஒருங்கிணைத்தல், கைகோர்த்தல் மற்றும் கூட்டிணைத்தல் மூலம் உகந்த பணியை நிதி அயோக் செய்கிறது
7. சச்சரவுத் தீர்த்தல்:
அரசுத் திட்டங்களை வேகமாக செயல்படுத்த மாநில மைய அரசுகளுக்கு இடையில் மாநிலங்களுக்கிடையில் அரசுத் துறைகளுக்கிடையில் மற்றும் பிற துறைகளுக்கிடையில் நிலவும் சச்சரவுகளுக்குத் தீர்வுக்கான ஒரு தளத்தை அமைத்துக் கொடுக்கிறது
8. வெளியுலகத் தொடர்பை ஒருங்கிணைத்தல்:
வெளிநாட்டு நிபுணர்களின் ஆலோசனைகளையும் பன்னாட்டு நிறுவனங்களிலிருந்து கிடைக்கும் நிதி வளங்களையும் நாட்டின் முன்னேற்றத்துக்குப் பயன்படும் வகையில் பொறுத்தரும் பொறுப்பு அலுவலகமாக நிதி ஆயோக் செயல்படும்
9. உள்நாட்டு ஆலோசனை வழங்குதல்:
கொள்கைகள் மற்றும் திட்டங்கள் வகுக்க மாநில மற்றும் மைய அரசுகளுக்கு ஆலோசனைகளை வழங்குகிறது
10. திறன் உருவாக்குதல்:
அரசுத் துறைகளில் திறனை வளர்க்கவும் தொழில் நுட்பத்தை மேம்படுத்தவும், உலக அளவில் தற்போது நடைமுறையில் உள்ள தர அளவுகோள்களை கொண்டும், மேலாண்மை நுட்பங்கள் வழியாகவும் திறன் உருவாக்கும் பணியையும் நிதி ஆயோக் செய்கிறது.
11. கண்காணித்தல் மற்றும் மதிப்பிடுதல்:
அரசு செயல்படுத்தும் திட்டங்களை நிதி ஆயோக் கண்காணித்து அதன் விளைவுகளை மதிபீடும் செய்கிறது
23.
1. நாட்டுப் சந்தைகளின் இயக்கத்தை முடுக்கிவிடுதலும் உறுதியாக்குதலும்
பின்தங்கிய நாடுகளில் சந்தை சக்திகள் சரிவர இயங்காததற்கு அறியாமையும், பிரபலமும் இல்லாததே ஆகும். நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் பணமாற்ற பரிமாற்றம் நடைபெறுகிறது. பொருட்கள், உற்பத்திக் காரணிகள், பணம் மற்றும் மூலதன அங்காடிகள் அமைப்புமுறை ஆகியவை ஒழுங்குற அமைக்கப்படவில்லை. எனவே, திட்டமிட்ட பொருளாதாரமே அங்காடிப் பொருளாதாரத்திற்கு சிறந்த மாற்றமாக கருதப்படுகிறது
2. வேலையின்மை அகற்றுதல்:
மூலதன குறைவும், தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பும் ஏற்படுவதால் அதிகரித்து வரும் தொழிலாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வேலைவாய்ப்பை உருவாக்குவது அரசுகளுக்கு சவாலாக உள்ளது. பின்தங்கிய நாடுகளில் வேலையின்மை மற்றும் மறைமுக வேலையின்மை அகற்ற திட்டமிடுதல் அவசியமாகும்
3. சமமான முன்னேற்றம் ஏற்படுத்துதல்:
பின்தங்கிய நாடுகளில் வேளாண்மை, தொழில், சமூகக் கட்டமைப்பு, உள்நாட்டு மற்றும் பன்னாட்டு வணிகம் ஆகியத் துறைகளின் முன்னேற்றம் நாட்டின் பொருளாதார முன்னேற்றம் விரைவாக நடைபெற திட்டமிடல் தேவைப்படுகிறது.
1. வேளாண்துறை மற்றும் தொழில்துறை முன்னேற்றம்
2. கட்டமைப்பு முன்னேற்றம்
3. பண மற்றும் மூலதன அங்காடியின் முன்னேற்றம்
4. திட்டமிடல் வறுமையும் ஏற்றத்தாழ்வையும் குறைக்கும்:
திட்டமிடல் என்பது மட்டுமே பின்தங்கிய நாடுகள், நாட்டு வருமானம் மற்றும் தலா வருமானத்தை அதிகரிக்கவும், வறுமையும் ஏற்றத்தாழ்வுகளை குறைக்கவும் வேலைவாய்ப்பினை அதிகரிக்கவும் செய்கிறது
24.
நாட்டின் மொத்த உற்பத்தி (GNP):
ஒரு நாட்டின் புவி எல்லைக்குள் ஒரு குறிப்பிட்ட ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்கள் மற்றும் பணிகளின் சந்தை மதிப்புடன் அந்த நாட்டு மக்கள் வெளிநாடுகளில் ஈட்டிய வருமானத்திற்கும் இடையிலான வேறுபாட்டுத்த தொகையை கூட்டினால் வெளிநாட்டினர் சம்பாதித்து அவர்கள் நாட்டுக்கு அனுப்பிய வருமானத்திற்கும் கிடைக்கும் மொத்த மதிப்பே மொத்த நட்டு உற்பத்தி எனலாம். இந்த கருத்தினை கொண்டு ஒரு நாட்டின் பொருளாதார நிலையை மதிப்பிடலாம்
தலாவீத மொத்த நாட்டு உற்பத்தி:
இந்த அளவிடும் முறை நீண்டகாலத்தில் தலா உற்பத்தி மதிப்பு அதிகரித்தலைக் குறிப்பிடுகிறது. தலா வருமானம் அதிகரிக்கும் வேகத்தை விட உயர்வாக இருக்க வேண்டும் என இந்த அளவிடும் முறை வலியுறுத்துகிறது
நலன்:
பண்டங்கள் மற்றும் பணிகளை மக்கள் வாங்கி பயன்படுத்துவது அதிகரிப்பதையே பொருளாதார முன்னேற்றமாக கருதப்படுகிறது. மக்கள் நலன் என்ற கண்ணோட்டத்தில் பொருளாதார முன்னேற்றத்தை மக்களின் சுகாதாரம், கல்வி மற்றும் வாழ்க்கைத்தரத்தில் குறிப்பிடத்தகுந்த அளவு மேம்படுவதாக சார்ந்து வரையறுக்கலாம்
சமூகக் குறியீடுகள்:
மக்களின் அடிப்படை மற்றும் கூட்டுத் தேவையை நிவர்த்தி செய்வதை சமூக குறியீடுகள் என அழைக்கப்படுகிறது. நேரடியாக வழங்கப்படும் அடிப்படைத் தேவை என்பது மக்களின் சுகாதாரம், கல்வி, உணவு, குடிநீர், துப்புரவு மற்றும் வீட்டு வசதி ஆகியவையாகும் இவற்றைக் கொண்டு சமூக பின்னடைவு தவிர்க்கப்படுகிறது.
25.
சுற்றுச்சூழல் தரம் என்பது சுற்றுச்சூழல் பண்புகளின் தொகுப்பாகும்.
இன்னும் தெளிவாகக் கூறுவது என்றால் அப்பண்புகள் ஒவ்வொன்றின் அளவும் எவ்வளவு இருக்க வேண்டும் என்ற தொகுப்பின் குறியீட்டு எண் ஆகும்.
இத்தரம் பொதுவாகவும் நிர்ணயிக்கப்படலாம் அல்லது குறிப்பிட்ட பகுதிக்கான சூழ்நிலையின் அடிப்படையிலும் நிர்ணயிக்கப்படலாம்.
மனிதன் மீதும் இதர உயிரினங்களின் மீதும் பாதிப்பை ஏற்படுத்துவதால் சுற்றுசூழல் தரம் (நிர்ணயம்) என்பது மிகக் கவனத்துடன் கையாளப்பட வேண்டிய ஒன்றாகிறது.

முதலாளித்துவ செயல்முறைகளினால் சுற்றுச்சூழல் தரம் தொடர்ந்து சரிந்து கொண்டே வருகின்றது.
சுற்றுச்சூழல் என்பது ஒரு பொதுப் பொருளாகும். இப்பொருள் அனைவராலும் நுகரப்படும்.
எந்த ஒரு தனிப்பட்ட நபரையும் அதைப் பயன்படுத்துவதிலிருந்து விலக்கி வைக்க முடியாது. ஒருவர் அப்பொருளைப் பயன்படுத்துவதால், மற்றவர்களுக்குக் கிடைக்கும் அளவு குறைந்து போகாது.
மேலும், அவற்றைப் பயன்படுத்துவதற்கான இறுதி நிலைச் செலவு கிட்டத்தட்ட சுழியம் ஆகும். இத்தகைய வளங்கள் குறைந்து கொண்டே செல்கின்றன.
இயற்கை வளங்களின் குறைவும் தேசிய வருமானத்தில் இயற்கை வளங்களின் பங்களிப்பும் தற்பொழுதுள்ள தேசிய வருவாய் கணக்கீட்டில் அளவிடப்படுவதில்லை.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set B
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Standard Physics Wave Optics Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Physics Wave Optics Creative Questions Study Material - QB365 Set C
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards