12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 02/03/2021
12ஆம் வகுப்பு பொருளியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு மூன்று மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Economics Reduced Syllabus Creative Three Mark Question with Answer key - 2021(Public Exam)
12ஆம் வகுப்பு Economics / பொருளியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Economics / பொருளியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Economics Test

1.
நில மாசுவிற்கான தீர்வுகளை பட்டியலிடுக.
2.
நில மாசுவின் விளைவுகளைக் கூறுக.
3.
ரொக்க இருப்பு வீதத்தை நிர்ணயிக்கும் காரணிகள் யாவை?
4.
மூலதனத்தின் இறுதிநிலை உற்பத்தித் திறன் என்றால் என்ன?
5.
வெளிநாட்டு நேரடி மூலதனத்தின் தீமைகள் யாவை?
6.
பணச் சந்தை மற்றும் மூலதனச் சந்தை வேறுபாடு தருக.
7.
NEFT -க்கும் RTGS-க்கும் உள்ள வேறுபாடு தருக?
8.
விரிவாக்க பணக்கொள்கை மற்றும் சுருக்கப் பணக்கொள்கை பற்றி விவரி?
9.
ICICI வங்கியின் பணிகளைக் கூறுக?
10.
பொருளாதார துறை என்றால் என்ன? அதன் பிரிவுகள் யாவை?
11.
புள்ளிவிவர சிக்கல் எப்போது ஏற்படும்?
12.
பிரிக்சின் சாதனைகளைப் பட்டியலிடு.
13.
ஆசியானின் பணிகள் யாவை?
14.
உலக வர்த்தக அமைப்பின் நோக்கங்கள் யாவை?
15.
நிதியத்தின் சாதனைகளை பட்டியலிடுக.
16.
வருவாயின் வட்ட ஓட்டம் என்றால் என்ன?
17.
முதலாளித்துவத்தின் குறைபாடுகள் யாவை?
18.
பண அளவு கோட்பாட்டை வரைந்த இர்விங் ஃபிஷரை குறிப்பு எழுதுக?
19.
பண அளிப்பின் 4 வகைகளை விவரி?
20.
பெருக்கியின் எடுகோள்கள் யாவை?
21.
பின்வரும் விவரங்களுக்கு திட்டவிலக்கத்தினை காண்க: 25, 15, 23, 42, 27, 25, 23, 25, 20.
22.
விவரிப்பு புள்ளியியலுக்கும், உய்த்துணர்வு புள்ளியியலுக்கும் உள்ள வேறுபாடுகள் யாவை?
23.
முதலாளித்துவத்தின் தோழமை பொருளாதார அமைப்பு என்றால் என்ன?
24.
குறுகிய, நடுத்தர, நீண்டகால திட்டமிடல் - குறிப்பு வரைக
25.
பொருளாதார வளர்ச்சி, முன்னேற்றம் - வேறுபடுத்துக
1.
1. மக்களுக்கு குறைத்தல், மறுசுழற்சி, மறுபயன்பாடு பற்றிய உரிய அறிவைப் புகட்டுதல்.
2. இயற்கையாக அழியக்கூடிய பொருட்களைப் பயன்படுத்துதல்.
3. இரசாயன உரங்களை குறைவாகப் பயன்படுத்துதல்
4. பலவகை பயிர்களை பயிரிட்டு மண்வளம் காத்தல்
5. பயிர் சுழற்சி முறை மண்ணின் வளத்தை கூட்டும்
6. தேவையற்ற குப்பைகளை எரித்தோ அல்லது புதைத்தோ அப்புறப்படுத்துதல்.
7. மிகக்குறைவான நெகிழிப் பொருட்களைப் பயன்படுத்துதல்.
2.
1. மண் மாசுபடுகிறது.
2. உடல் ஆரோக்கிய கேடு.
3. காற்று மாசுபாடு.
4. விலங்குகள் மீதான பாதிப்பு.
3.
1. பேர நோக்கம்
2. முன்னெச்சரிக்கை நோக்கம்
3. ஊக நோக்கம்
4.
புதிய மூலதன பொருளின் செலவைக் காட்டிலும் அதிகமாக எதிர்பார்க்கக்கூடிய விளைவு விகிதம் மூலதனத்தின் இறுதிநிலை உற்பத்தித் திறன் எனப்படும்.
5.
1. அதிக லாப வாய்ப்புள்ள துறைகளில் முதலீடு அதிகம்
2. நாட்டுக்கு பொருத்தமற்ற தொழில்நுட்பத்தை புகுத்துகிறது
3. முதலீடு திரும்பப் பெறும்போது அயல்நாட்டு செலுத்து சமமின்மை உண்டாகும்.
4. அரசியல் தலையீடு
5. அறமற்ற வணிகம்
6. சிறு மற்றும் குறு தொழில்கள் நசிவு
7. முற்றுரிமை சூழல்
8. வாணிக வீதம் பாதகமாதல்
6.
| பணச் சந்தை | மூலதனச் சந்தை | |
| 1 | குறுகிய காலத்தில் முதிர்ச்சியுறுவதுமான நிதிக் கருவிகளை கையாளும். | நீண்ட கால நிதிக் கருவிகளை வாணிபம் செய்யும். |
| 2 | முதிர்ச்சியடையும் நோக்கில் பணச் சந்தை செயல்படும். | உற்பத்தி நோக்கில் அரசுக்கு நிதியினை திரட்டும் இடமாக மூலதனச் சந்தை செயல்படும். |
| 3 | இங்கு கையாளப்படும் நிதிக் கருவிகள் அரசுப் பத்திரம், வணிகப் பத்திரம், அழைப்புப்பணம், வைப்பு சான்று, மாற்றுச் சீட்டு, அந்நியச் செலாவணி போன்றவை ஆகும். | இதில் பாரம்பரியமான நிதிக் கருவிகள், கடன் பத்திரங்களும் சமபங்குகளும் பயன்படுத்தப்படும். |
7.
| NEFT | RTGS | |
| 1 | தேசிய மின்னணு வழி பண பரிவர்த்தனை | நிகழ்நேர பெருந்திரள் தீர்வுகள் |
| 2 | தொகுப்பாக பரிமாற்றம் செய்யப்படுகிறது எனவே தாமதமாகும். | நிகழ் நேரத்தில் பரிமாற்றம் எனவே, விரைவாகச் செயல்படும் |
| 3 | நேரம் காலை 8 மணி முதல் மாலை 6.30 மணி வரை (சனிக்கிழமை மதியம் 12.30 வரை மட்டுமே) | நேரம் காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி வரை (மாலை 1.30 வரை சனிக்கிழமைகளில்) |
| 4 | குறைந்தபட்ச அளவு கிடையாது | குறைந்தபட்ச அனுப்பும் தொகை 2 லட்சம் |
8.
1. விரிவாக்கப் பணக்கொள்கை என்பது மலிவுப் பணக்கொள்கையாகும். (Cheap Money Policy) இந்திய ரிசர்வ் வங்கி அதன் கருவிகளைப் பயன்படுத்தி நடப்பு குறுகிய கால வட்டி விகிதத்தை விட குறைவான வட்டி விகிதத்தையும் வழக்கத்தை விட வேகமான பண அளிப்பையும், ஏற்படுத்துவது விரிவாக்கப் பணக்கொள்கையாகும்.
2. சுருக்கப் பணக்கொள்கை அருமைப் பணக் கொள்கை என்று அழைக்கப்படுகிறது. இதில் குறுகிய கால வட்டி விகிதம், நடப்பு வட்டி விகிதத்தை விட அதிகப்படுத்துவது பண அளிப்பினை குறைப்பது அல்லது சுருக்குவது ஆகும்.
9.
a. ICICI வங்கி 1955-ம் ஆண்டு ஜனவரி 5-ம் தேதி ஆரம்பிக்கப்பட்டது.
b. உலக வங்கியிலிருந்து பெறப்படும் இந்திய தொழிற்கடன்களை முறைப்படுத்தி அளிப்பதும் மூலதனச் சந்தையை கட்டமைப்பதும் இக்கழகத்தின் நோக்கமாகும்.
பணிகள்:
1. தொழில் நிறுவனங்களுக்கு உதவுதல்.
2. அந்நியச் செலாவணி கடன்கள் வழங்குதல்
3. வர்த்தக வங்கிப் பணிகள்
4. கடன் பெற சான்று வழங்கல்
5. வீட்டு வசதி கடன்கள் வழங்குதல்
6. குத்தகை நடவடிக்கை மேற்கொள்ளுதல்
10.
தனிநபர் உள்ளடக்கிய ஒரு குழு அல்லது பல நிறுவனங்கள் சேர்ந்த ஒரு குழு போன்றவைகளுக்கு இடையே நடைபெறும் பொருளாதார பரிமாற்றங்களை துறை என்கிறோம். இது பலவகையாக பிரிக்கப்படுகின்றது.
1. நிறுவனங்கள்:
உற்பத்தி காரணிகளை பணியில் அமர்த்தி பண்டங்கள் மற்றும் பணிகளை உற்பத்தி செய்கின்றன.
2. குடும்பங்கள்:
தங்களின் உழைப்பினை அளித்து கூலியை பெற்று அதன் மூலம் பண்டங்கள் மற்றும் பணிகளை வாங்குகின்றன.
3. அரசு:
வரி, தண்டனை, கட்டணம் மற்றும் கடன் மூலமாக அரசு நிதியை சேர்த்து பண்டங்களையும் பணியையும் வாங்குகிறது.
4. வெளிநாட்டு வாணிபம்:
ஏற்றுமதி மற்றும் இறக்குமதிகள் மூலம் கிடைக்கும் வருமானம்.
5. மூலதன துறை:
சேமிப்பையும் முதலீட்டையும் உள்ளடக்கியது. காப்பீடு, வங்கிகள், நிதி நிறுவனங்கள் இதில் அடங்கும்.
11.
புள்ளிவிவரம் என்பது பொருளாதார வளர்ச்சியை எடுத்துக்காட்டும் கண்ணாடி போன்றது. இதனை சேகரிப்பதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன. நாட்டின் வளர்ச்சி நிலையை அறிய புள்ளிவிவரம் அவசியமான ஒன்று.
பிரச்சினைகள்:
1. நம்பகத்தன்மையின்மை
2. சேகரிப்பவரின் திறமை குறைவு
3. அர்ப்பணிப்பு இன்மை
போன்றவை புள்ளிவிவரம் சேகரிப்பதில் ஏற்படும் சிக்கல்கள் ஆகும்.
12.
1. உறுப்பு நாடுகளின் பொருளாதார மற்றும் நிதித் துறைகளில் ஒருங்கிணைத்து செயல்படுதல்.
2. புதிய வளர்ச்சி வங்கியை சீனாவின் ஷாங்காய் அலுவலகத்தில் ஆரம்பித்தது.
3. பொருளாதார பலம், மக்கள் தொகை உலக அளவில் ஆதிக்கம்.
13.
1. உறுப்பு நாட்டு விற்பனையாளர் மற்ற உறுப்பு நாடுகளில் விற்க தடையற்ற அனுமதி.
2. உறுப்பு நாடுகளின் வணிக நிறுவனங்களின் போட்டித் திறனை மேம்படுத்துவது.
3. ஐரோப்பிய ஒன்றியம் போன்று ஒரே சந்தையாக செயல்படுத்தல்.
4. உறுப்பு நாடுகளுக்கு சந்தை மற்றும் முதலீட்டு வாய்ப்புகளைப் பெற்றுள்ளது.
5. தொழில் மற்றும் வணிகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு.
14.
1. பன்னாட்டு வாணிபத்தை விரிவுபடுத்துவது, வாணிகத் தடைகளை தாராளமயமாக்குவது, பொருளாதார செழுமையை உருவாக்குவது.
2. சுங்கவரி மற்றும் பிற தடைகளைக் குறைப்பது.
3. வாணிபத்தில் பேதத்தை நீக்குதல்.
4. உயர்ந்த வாழ்க்கைத் தரத்தை உருவாக்குதல்.
5. உலக வளங்களை உத்தம அளவில் பயன்படுத்துவது.
6. பின்தங்கிய நாடுகளுக்கு நியாயமான பங்கு.
15.
1. பன்னாட்டு பண இருப்பை நிறுவுதல்:
உலக நாடுகளின் பணத்தை செலவாணி கையிருப்பதாகத் திரட்டியதில் நிதியம் சிறப்பாக பங்காற்றுகிறது.
2. பணவியல் சுய கட்டுப்பாடும் ஒத்துழைப்பும் :
உறுப்பு நாடுகள் பண பரிவர்த்தனைகளில் சுய கட்டுப்பாடு மற்றும் ஒத்துழைப்பை கடைபிடிக்க வைப்பதில் நிதியம் தீவிர ஆர்வம் கொண்டுள்ளது.
3. பின் தள்ளிய நாடுகளின் பிரச்சனைகளை தீர்ப்பதில் சிறப்பு கவனம் :
பின்தங்கிய நாடுகளின் அருமையான பொருளாதார பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் சிறப்பு கவனம் செலுத்தியதே நிதியத்தின் குறிப்பிடத்தக்க வெற்றியாகும்.
16.
ஒரு பொருளாதார அமைப்பின் வருவாயின் ஓட்ட மாதிரியானது அந்த பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளுக்கிடையே உள்ள தொடர்பினை விளக்குவதாகும். இது பொருளாதார முகவர்களாகிய நிறுவனம், குடியிருப்பு, அரசாங்கம், நாடுகளிடையே வருவாய், பொருட்கள் மற்றும் பணிகள், மேலும் உற்பத்தி காரணிகளின் ஓட்டத்தை (காண்பிப்பதாகும்) விளக்குவதாகும்
1. இரண்டு துறை மாதிரி:
1. இல்லத்துறை
2. நிறுவனத்துறை
இது ஒரு எளிய பொருளாதார அமைப்பு
2. மூன்று துறை மாதிரி:
1. இல்லத்துறை
2. நிறுவனத்துறை
3. அரசுத்துறை
இது ஒரு மூடிய பொருளாதார அமைப்பு
3. நான்கு துறை மாதிரி
1. இல்லத்துறை
2. நிறுவனத்துறை
3. அரசுத்துறை
4. வெளியுறவுத்துறை
இது ஒரு திறந்தவெளி பொருளாதார அமைப்பு
17.
1. முதலாளித்துவத்தில் வருமானம் மற்றும் செல்வம் சிலரது கையில் மட்டும் குவிகிறது இதனால் நாடுகளில் ஏற்றத்தாழ்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
2. போட்டி விளம்பரங்களினால் இயற்கை வளம் வீணாக்கப்படுகின்றன.
3. முதலாளி, வேலைக்காரர்கள் என இரு பிரிவு ஏற்படவும், வர்க்க போராட்டத்திற்கும் வழிவகுக்கும்
4. வாணிபச் சூழல் பொருளாதாரத்தில் ஏற்பட்டால் நெருக்கடி நிலை உருவாகும்
5. அத்தியாவசியமான பொருட்களின் உற்பத்தி ஏற்படாமல் தட்டுப்பாடு ஏற்பட வழிவகுக்கும்
18.
பண அளவுக் கோட்பாடு, பணத்தின் மதிப்பிற்கும், பணத்தின் அளவிற்கும் இடையேயான தொடர்பினை எடுத்துரைப்பதாகும். இது ஒரு பழமையான கோட்பாடு. 1588-ம் ஆண்டு டாவன்ஷட்டி என்ற இத்தாலிய பொருளியலறிஞரால் முன்மொழியப்பட்டது. ஆனால், நவீன வடிவிலான இக்கோட்பாட்டினை உருவாக்கிய புகழ் "பணத்தின் வாங்கும் சக்தி" என்ற நூலை எழுதிய இர்விங் ஃபிஷரையே சாரும். இவரது கோட்பாடு பரிவர்த்தனைச் சமன்பாடு ஆகும்.
19.
இந்திய ரிசர்வ் வங்கி பண அளிப்பில் M1 M2 M3 மற்றும் M4 என 4 வகையிலான அளவீடுகளை செய்கின்றது.
M1 = காகிதப்பணம், நாணயங்கள் மற்றும் கேட்பு வைப்புகள்
M2 = M1 + அஞ்சலக சேமிப்பு வங்கியின் சேமிப்பு வைப்புகள்
M3 = M2 + அனைத்து வணிக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளிலுள்ள கால வைப்புகள்.
M4 = M3 + அஞ்சலகத்திலுள்ள அனைத்து வைப்புகள். இதில் M1 மற்றும் M2 'குறுகிய பணம்' என்றழைக்கப்படுகிறது.
20.
1. தன்னிச்சையான முதலீட்டில் மாற்றம் உண்டு.
2. தூண்டப்பட்ட முதலீடு இல்லை.
3. இறுதிநிலை நுகர்வு நாட்டம் நிலையாக இருக்கும்
4. நுகர்வு, நடப்பு வருமானத்தைச் சார்ந்தே அமையும்.
5. பெருக்கியின் செயல்பாட்டில் கால இடைவெளி இல்லை.
6. உற்பத்தித் தேவைக்கேற்ப நுகர்வு பொருட்கள் கிடைக்கும்.
7. நாடு மூடிய பொருளாதாரமாகும், அந்நிய நாட்டின் செயல்பாடுகள் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
8. விலையில் மாற்றம் இல்லை.
9. முழு நிலை வேலை வாய்ப்பு நிலைக்கு கீழ் பொருளாதாரம் செயல்படுகிறது.
21.
உண்மையான சராசரியிலிருந்து திட்டவிலக்கத்தினைக் காணும் முறை
| ப.எண் | மதிப்பு (X) | X-\(\bar { X }\) | \({ (X-\bar { X } ) }^{ 2 }\) |
| 1 | 25 | 25-25=0 | 0 |
| 2 | 15 | 15-25=10 | 100 |
| 3 | 23 | 23-25=-2 | 4 |
| 4 | 42 | 42-25=17 | 289 |
| 5 | 27 | 27-25=2 | 4 |
| 6 | 25 | 25-25=0 | 0 |
| 7 | 23 | 23-25=-2 | 4 |
| 8 | 25 | 25-25=0 | 0 |
| 9 | 20 | 20-25=-5 | 25 |
| N=9 | 225 | 0 | 426 |
\(\begin{aligned}
& \overline{\mathrm{X}}=\frac{225}{9}=25
\end{aligned}\)
\(\begin{aligned}
\sigma=\sqrt{\left(\frac{\sum(\mathrm{x}-\overline{\mathrm{x}})^2}{n}\right)}=\sqrt{\frac{426}{9}}=\sqrt{47.33}=\mathbf{6 . 8 8}
\end{aligned}\)
22.
| வ. எண்: | விவரிப்பு புள்ளியியல் | உய்த்துணர்வு புள்ளியியல் |
| 1 | ஆய்வில் உள்ள முழுத் தொகுதியையும் விளக்குகிறது | உய்த்துணர்வு புள்ளியியல் |
| 2 | புள்ளி விவரங்களை வரைபடங்களாகவும், விளக்கப் படங்களாகவும் வழங்குகிறது | கருதுகோள்களை சோதனை செய்து கணிக்கின்றது |
| 3 | புள்ளி விவரங்களின் சுருக்கங்களைத் தருகிறது | மாதிரியைத் தாண்டி முழுத் தொகுப்பினை அறிந்து கொள்ள பயன்படுகிறது |
23.
(i) பொருளாதார முன்னேற்றம் துரிதமாக நடைபெற மக்களின் பங்கெடுப்பு மிகவும் அவசியமாகும்
(ii) குறைபாடுள்ள சமூக அமைப்பு முறையில் ஒரு சில பிரிவினர் மட்டும் முன்னேற்றத்தின் பலன்களை கூடுதலாக பெறுவதை அனுமதித்தால் பெரும்பான்மையான மக்கள் பொருளாதார முன்னேற்ற முன்னேற்ற செயல்பாடுகளில் கலந்து கொள்ள மாட்டார்கள்
(iii) முன்னேற்றத்தின் பலன் ஒரு சிலர் கொண்டு செல்வதை முதலாளித்துவத்தின் தோழமை பொருளாதார அமைப்பு என்கிறார்
24.
(i) குறுகிய கால திட்டமிடல் ஒரு ஆண்டு வரை ஒரு காலப்பகுதியாக கருதப்படுகிறது. இது செயல்பாட்டு திட்டமிடல் எனப்படுகிறது
(ii) நடுத்தரகால திட்டமிடல் 5 ஆண்டுகளுக்கு மேல் ஒரு காலப்பகுதியாக கருதப்படுகிறது. இது நிரந்தரமான திட்டமிடல் ஆகும்
(iii) நீண்டகால திட்டமிடல் 10 ஆண்டுகளுக்கு மேல் ஒரு காலப்பகுதியாக கருதப்படுகிறது. இது வியூகத் திட்டமிடல்
25.
| பொருளாதார வளர்ச்சி | பொருளாதார முன்னேற்றம் | |
| 1 | வளர்ந்த நாடுகளின் பொருளாதார பிரச்சனைகளை கையாளுகிறது | வளரும் நாடுகளின் பிரச்சனைகளைக் கையாளுகிறது |
| 2 | மாற்றங்கள் படிப்படியாகவும் நிதானமாகவும் நிகழ்கிறது. | தொடர்ச்சியற்ற தன்னிச்சையான மாற்றங்கள் நிகழ்கிறது |
| 3. | அதிக அளவான உற்பத்தியைக் குறிக்கிறது | உற்பத்தி அதிகரிப்பதும் மட்டுமல்லாமல் உற்பத்தியாகும் பொருட்களின் வகைகளும் மாறுகிறது |
| 4 | எண்ணிக்கை அடிப்படையிலானது. தலா வருமான அதிகரிப்பைக் குறிக்கும் | விரிவான பொருள் கொண்ட சொல் |
| 5 | குறுகிய எல்லையுடையது | விரிவான பொருள் கொண்ட சொல் |
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards