12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 03/03/2021
12ஆம் வகுப்பு வரலாறு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் மற்றும் விடைகள் - 2021 - 12th Standard Tamil Medium History Reduced Syllabus Annual Exam Model Question Paper with Answer Key - 2021
12ஆம் வகுப்பு History / வரலாறு தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , History / வரலாறு பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ History Test1.
பின்வரும் எது சரியாகப் பொருந்தியுள்ளது?
1908 - செய்தித்தாள் சட்டம்
1912 - இந்தியப் பத்திரிகைச் சட்டம்
1910 - மிண்டோ - மார்லி அரசியல் அமைப்புச் சீர்திருத்தங்கள்
1905 - விடிவெள்ளிக் கழகம்
2.
சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்.
பொருத்துக.
1. இண்டிகா காலம் - i.1857
2.ஒப்பந்தக் கூலித் தொழிலாளர் - ii. சிலோன்
3.டெல்லி முற்றுகை - iii.1952
4.சென்னைவாசிகள் சங்கம் - iv.1859
I ,II ,III,IV
IV ,II ,I ,III
II ,I ,IV ,III
III,II ,I ,IV
3.
பொருத்துக
அ) ஷா நவாஷ் கான் - 1.போர்க்கப்பல்
ஆ) HMIS தல்வார் - 2.ஜான்சி ராணி படைப்பிரிவு
இ) ஆசாத் ஹிந்து ரேடியோ
ஈ) டாக்டர் லட்சுமி - 4.ஜெர்மனி
4 2 1 3
4 2 3 1
3 1 4 2
3 4 1 2
4.
சத்ய சோதக் சமாஜம் என்ற அமைப்பை உருவாக்கியவர்.
ஜோதிராவ் பூலே
அம்பேத்கர்
ஈ.வெ.ரா
காந்தியடிகள்
5.
மார்க்சும், ஏங்கல்சும் தங்களின் கம்யூனிஸ்ட் மேனிபெஸ்டோ என்ற நூலை _______ ஆண்டில் வெளியிட்டனர் .
1842
1848
1867
1871
6.
______ நகரம் 'காட்டன்பொலிஸ்'எனும் புனைப் பெயரைப் பெற்றது.
மான்செஸ்டர்
லங்காசயர்
லிவர்பூல்
கிளாஸ்கோ
7.
1947இன் இறுதியில் கிழக்கு ஐரோப்பாவில் சோவியத் ரஷ்யாவின் செல்வாக்கிலிருந்து விடுபட்டிருந்த ஒரே நாடு ______.
கிழக்கு ஜெர்மனி
செக்கோஸ்லோவாக்கியா
கிரீஸ்
துருக்கி
8.
கீழ்க்காண்பனவற்றுள் சரியாகப் பொருத்தப்படாத ஒன்றைச் சுட்டுக.
விடுதலை ஆணை – இரண்டாம் அலெக்ஸாண்டர்
இரத்த ஞாயிறு - இரண்டாம் நிக்கோலஸ்
ரஷ்யாவில் 500 அடிமைகளின் கலவரங்கள் - முதலாம் நிக்கோலஸ்
பிரெஸ்ட்-லிடோவ்ஸ்க் உடன்படிக்கை - மூன்றாம் அலெக்ஸாண்டர்
9.
கீழ்க்கண்ட போப்பாண்டவர்களில் இத்தாலிய மறுமலர்ச்சிக்கு ஆதரவாகச் செயல்படாதவர் யார்?
ஐந்தாம் நிக்கோலஸ்
இரண்டாம் ஜூலியஸ்
இரண்டாம் பயஸ்
மூன்றாம் பால்
10.
நேரு அறிக்கை எப்போது வெளியிடப்பட்டது?
1927
1935
1928
1930
11.
காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கம் நிறுத்தப்பட்ட ஆண்டு எது?
1920
1921
1923
1922
12.
தென்னிந்தியாவில் பல தொழிற்சங்கங்களை இவர் தோற்றுவித்தார்
காமராஜர்
பெரியார்
திரு.வி.க
அண்ணா
13.
"இந்து - முஸ்லீம் ஒற்றுமையின் தூதர்" என்று அழைக்கப்படுபவர் யார்?
அன்னி பெசன்ட்
காந்தி
ஜின்னா
சரோஜினி நாயுடு
14.
பிரிட்டிஷார் எந்தக் காலத்திற்குள் இந்தியாவை விட்டு வெளியேற முடிவு செய்தனர்?
ஆகஸ்ட் 15, 1947
ஜனவரி 26, 1950
ஜூன், 1948
டிசம்பர், 1949
15.
இந்தியாவின் மூவர்ணக் கொடி எப்போது ஏற்றப்பட்டது?
டிசம்பர் 31, 1929
மார்ச் 12, 1930
ஜனவரி 26, 1930
ஜனவரி 26, 1931
16.
வேவல் பிரபுவிற்குப் பின்னர் பதவியேற்றவர் _______.
லின்லித்கோ
பெதிக் லாரன்ஸ்
மௌண்ட்பேட்டன்
செம்ஸ்ஃபோர்டு
17.
1916 ஆம் ஆண்டு லக்னோ மாநாட்டின் முக்கியத்துவம் _______.
முஸ்லீம் லீக் எழுச்சி
காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக் தற்காலிக இணைப்பு
முஸ்லீம் லீக்கின் தனித்தொகுதி கோரிக்கையை காங்கிரஸ் ஏற்றுக் கொண்டது.
காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக்கின் கூட்டமர்வில் ஜின்னாவின் எதிர்மறை போக்கு.
18.
கல்பனா தத் எதனுடன் தொடர்புடையவர்?
ஹிந்துஸ்தான் சோசலிஸ்ட் ரிபப்ளிகன் அசோசியேஷன்
வங்காள சபை
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
இந்தியக் குடியரசு இராணுவம்
19.
சூரத்தில் நடைபெறவிருந்த காங்கிரஸ் மாநாட்டிற்கு காங்கிரஸின் அடுத்த தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு யாருடைய பெயர் தீவிர தேசியவாதிகளால் முன்மொழியப்பட்டது?
அரவிந்தோ கோஷ்
தாதாபாய் நெளரோஜி
பெரோஸ் ஷா மேத்தா
லாலா லஜபதிராய்
20.
பின்வருவனவற்றை பொருத்தி சரியான விடையைத் தேர்வு செய்க.
| (அ) பாலகங்காதர திலகர் | 1. இந்தியாவின் குரல் |
| (ஆ) தாதாபாய் நெளரோஜி | 2. மெட்ராஸ் டைம்ஸ் |
| (இ) மெக்காலே | 3. கேசரி |
| (ஈ) வில்லியம் டிக்பை | 4. இந்தியக் கல்வி குறித்த குறிப்புகள் |
| A | B | C | D |
| 2 | 4 | 1 | 3 |
| A | B | C | D |
| 3 | 1 | 4 | 2 |
| A | B | C | D |
| 1 | 3 | 2 | 4 |
| A | B | C | D |
| 4 | 2 | 3 | 1 |
21.
அமைச்சரவைத் தூதுக்குழு பற்றி விவரி.
22.
உலகப் பெருமந்தம் இந்தியாவில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தியது?
23.
பெருவாரியான மக்களை ஒன்று திரட்ட மேற்கொள்ளப்பட்ட சமிதிகளின் பணிகள் யாவை?
24.
பாகிஸ்தான் யூனியன் உருவானதில் முகமது அலி ஜின்னாவின் பங்கு யாது?
25.
ஒருங்கிணைந்த ஜெர்மனியின் உண்மையான வடிவமைப்பாளர் பிஸ்மார்க்கே என ஏன் சொல்லப்படுகிறது?
26.
அமெரிக்க விடுதலைப் போருக்கான காரணங்கள், அதன் போக்கு, விளைவுகள் குறித்து விவாதிக்கவும்.
27.
இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின் ஆகியவை தேசிய அரசுகளாக உருவெடுத்தமை பற்றி ஒருங்கிணைந்த முறையில் ஆராயவும்.
28.
ஊரக மறுசீரமைப்பு தொடர்பாக இந்திய அரசு பின்பற்றிய நடவடிக்கைகளை முன்னிலைப்படுத்துக.
29.
சுதேச அரசுகளை இந்திய ஒன்றியத்துடன் இணைப்பது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினைகள் என்ன? அவற்றை எவ்வாறு திறமையாக படேல் மற்றும் நேரு கையாண்டனர் என்பதையும் விளக்குக
30.
ஒத்துழையாமை இயக்கத்தை நடைமுறைப்படுத்தும் சூழலையும் அதன் விளைவுகளையும் விவரி.
31.
இராஜாஜி திட்டம் பற்றி ஒரு பத்தி எழுதுக.
32.
33.
இந்திய தேசிய இயக்கத்தில் லால்-பால்-பால் ஆகிய மூவரின் பங்களிப்பினை மதிப்பிடுக.
34.
இந்திய தேசிய காங்கிரசின் நோக்கங்களையும் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுதலை பெறுவதற்கு ஆரம்ப கால தேசியவாதிகள் அளித்த பங்கினையும் விளக்குக.
35.
தாய்நாட்டைக் காப்பதற்காய் பெண்களின் நிலை என்ன?
36.
தன்னாட்சி இயக்கம் ஏன் வீழ்ச்சி கண்டது?
37.
வேவல் திட்டம் பற்றிய அறிக்கை எழுதுக.
38.
மெளண்ட்பேட்டன் பிரபு பற்றி எழுதுக.
39.
எதனால் 1848 ஆம் ஆண்டின் ஜூன் 24 முதல் 26 வரையான காலம் 'இரத்த ஜூன் தினங்கள் ' எனக் கொள்ளப்படுகின்றன?
40.
ஐ.நா சபையில் நிறைவேற்றப்பட்ட “அமைதிக்காக இணைகிறோம்” எனும் தீர்மானத்தின் சிறப்பினைக் குறிப்பிடவும்
41.
சமதர்ம சமூக அமைப்பு என்பதைப் பற்றி நீர் அறிந்ததென்ன?
42.
43.
தேசியவாதிகளால் ரெளலட் சட்டம் ஏன் எதிர்க்கப்பட்டது?
44.
மிதவாத தேசியவாதிகளின் ‘இறைஞ்சுதல் கொள்கை’ (The Mendicant Policy) என்றால் என்ன?
45.
இந்திய தேசிய காங்கிரஸ் உருவானது எப்படி?
46.
பொருளாதார பெருமந்தம் எவ்வாறு அரசியல் தளத்தில் தாக்கத்தை வெளிப்படுத்தியது என்பதனை விளக்குக.
47.
சீன இந்திய உறவு ஏன் முக்கியத்துவம் பெற்றது?
48.
தனித்தொகுதியும் வகுப்புவாதம் பரவலும் பற்றி எழுதுக.
49.
இங்கிலாந்தோடும், பிரான்சோடும் முழுமையான தேசங்களாக இத்தாலியும், ஜெர்மனியும் ஏன் உருப்பெற்று வெளிப்படமுடியவில்லை என்பதற்கான காரணங்களைப் பட்டியலிடுக.
50.
1783 இல் கையெழுத்திடப்பட்ட பாரிஸ் உடன்படிக்கையின் முக்கிய சரத்துக்களை விவாதிக்கவும்.
51.
இத்தாலிய மற்றும் ஆங்கிலேய கடல் பயணிகளின் சாதனைகள் என்ன?
52.
காஷ்மீர் அரசர் எவ்வாறு இணைப்புறுதி ஆவணத்தில் கையெழுத்திட்டார்?
53.
பிரதம அமைச்சர் ராம்சே மெக்டொனால்டின் வகுப்புவாத அறிக்கையைப் பற்றி எழுதுக.
54.
1.
(a)
1908 - செய்தித்தாள் சட்டம்
2.
(b)
IV ,II ,I ,III
3.
(c)
3 1 4 2
4.
(a)
ஜோதிராவ் பூலே
5.
(b)
1848
6.
(a)
மான்செஸ்டர்
7.
(b)
செக்கோஸ்லோவாக்கியா
8.
(d)
பிரெஸ்ட்-லிடோவ்ஸ்க் உடன்படிக்கை - மூன்றாம் அலெக்ஸாண்டர்
9.
(d)
மூன்றாம் பால்
10.
(c)
1928
11.
(d)
1922
12.
(c)
திரு.வி.க
13.
(c)
ஜின்னா
14.
(a)
ஆகஸ்ட் 15, 1947
15.
(a)
டிசம்பர் 31, 1929
16.
(c)
மௌண்ட்பேட்டன்
17.
(b)
காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக் தற்காலிக இணைப்பு
18.
(d)
இந்தியக் குடியரசு இராணுவம்
19.
(d)
லாலா லஜபதிராய்
20.
(b)
| A | B | C | D |
| 3 | 1 | 4 | 2 |
21.
1.இரண்டாம் உலகப்போருக்குப் பின் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டிருந்த சூழலில் அமைச்சரவைத் தூதுக்குழு உருவாக்கப்பட்டது.
2.இந்திய நாட்டிற்கென்று நியமிக்கப்பட்டிருந்த அரசு செயலரான சர் ஸ்டாஃப்போர்டு கிரிப்ஸ் A.V அலெக்சாண்டர்,பெதிக் லாரன்ஸ் ஆகியோர்களை உறுப்பினர்களாகக் கொண்ட அந்தத் தூதுக்குழு மார்ச் 1946 இல் இந்தியா வந்தடைந்தது முழு அதிகார மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு தேவையான அரசை உருவாக்க முனைந்தது.
3.இத்தூதுக்குழு மாகாணங்களிலும்,சுதேச அரசாட்சிக்கு உட்பட்ட பிரதேசங்களிலும் தேர்தல் நடத்தி அதன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்டு சுதந்திர இந்தியாவிற்கான அரசியல் சாசனத்தை உருவாக்கலாம் என்று முன்மொழிந்தது.
4.வடகிழக்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் முஸ்லிம் லீக்கின் செல்வாக்கை நிறுவும் வகையில் கூட்டாட்சி போன்றதொரு அமைப்பையும்,இந்தியாவின் பிறப்பகுதிகளைக் காங்கிரஸ் நிர்வகிக்குமாறும் யோசனை முன்வைக்கப்பட்டது.
5.இதற்கு 1946 ஜூன் 6 இல் ஜின்னா ஒப்புதல் அளித்தார்.
6.இதற்கிடையே காங்கிரசும் அமைச்சரவைத் தூதுக்குழுவின் நோக்கத்தில் சட்டசபையை உருவாக்க இருந்தத் தீவிரத்தைப் புரிந்து கொண்டது.
7.இது குறித்து 1946 ஜூலை 7 இல் கூடிய அனைத்திந்திய காங்கிரஸ் குழுவில் பேசிய நேரு இந்திய தேசிய காங்கிரஸ் அந்த முன்மொழிவை ஏற்றுக்கொள்வதாகக் தெரியப்படுத்தினார். ஆனால், இதையடுத்து 1946 ஜூலை 29 ல் பேசிய ஜின்னா முஸ்லிம் லீக் அம்முன்மொழிவை நிராகரிப்பதாக அறிவித்தார்.
22.
1.உலகப் பெருமந்த நிலை 1929இல் இருந்து பத்தாண்டாக நீடித்த ஒரு கடுமையான மற்றும் நீடித்தப் பொருளாதார நெருக்கடி ஆகும்.
2.மந்தமான பொருளாதார நடவடிக்கைகள்,குறிப்பாகத் தொழிலகத்தில் உற்பத்திக் குறைப்பு,கதவடைப்பு,ஊதிய குறைப்பு,வேலையின்மை மற்றும் பட்டினி போன்ற நெருக்கடிகளுக்கு இட்டுச் சென்றது.
3.வட அமெரிக்காவில் தொடங்கிய பொருளாதாரப் பெருமந்தமானது ஐரோப்பாவையும் உலகின் அனைத்துத் தொழில்துறை மையங்களையும் பாதித்தது.
4.அமெரிக்காவில் வால் தெருவில் உண்டான (அமெரிக்கப் பங்கு சந்தை அமைந்துள்ள இடம்) பெரும் அளவிலான பொருளாதார வீழ்ச்சி உலகையே உலுக்கியது.இது இந்தியாவையும் தாக்கியது.
5.பிரிட்டிஷ் காலனித்துவம் இந்தியாவின் நிலைமையை மேலும் மோசமாக்கியது.
6.பெருமந்தம் உற்பத்தித்தொழில்,வேளாண் துறைகள் என இரண்டையும் பாதித்தது.
7.தொழில்துறை மையங்களான பம்பாய்,கல்கத்தா,கான்பூர்,ஐக்கிய மாகாணம், எதிராகவும் வாழ்க்கை நிலையை மேம்படையச் செய்யக் கோரியும் தொழிலாளர் போராட்டம் வெடித்தது.
8.வேளாண் துறையில்,சணல் மற்றும் கச்சா பருத்தி போன்ற ஏற்றுமதி விவசாயப் பொருட்களின் விலைகள் அதலபாதாளத்தில் சரிந்தன.
9.1929-1930 இல் ரூ.311 கோடியாயிருந்த இந்திய ஏற்றுமதியின் மதிப்பு 1932-1933 இல் ரூ.132 கோடியாகச் சரிந்தது.
10.எனவே,1930 களில் தோன்றிய கிசான் சபாக்கள் குத்தகைக்/வாடகைக் குறைப்புகள்,கடன் பிடியிலிருந்து நிவாரணம்,ஜமீன்தாரி முறை அகற்றப்படுதல் ஆகியவற்றிற்காகப் போராடியது.
23.
1.பெருவாரியான மக்களை ஒன்று திரட்ட மேற்கொள்ளப்பட்ட மற்றொரு வெற்றிகரமான முறை சமிதிகள் (தொண்டர் படைகள்)எனும் அமைப்புகள் உருவாக்கப்பட்டவையாகும்.
2.உறுப்பினர்களுக்கு உடற்பயிற்சி அளித்தல் அறநெறிகளைக் கற்றுக்கொடுத்தல் பஞ்சங்களின் போதும் நோய்களின் தாக்கத்தின் போதும் சேவையாற்றுதல் விழாக்காலங்களில் சுதேசி செய்தியைப் பரப்புரை செய்தல் உள்ளூரளவில் பள்ளிகளையும் நடுவர் நீதிமன்றங்களையும் உருவாக்குதல் போன்ற பல பணிகளில் ஈடுபடுத்தப்பட்டன.
3.தனது இயல்பான அமைதிவழிப் போராட்டத்தின் மூலம் ஆங்கில அரசு நிர்வாகத்திற்கு ஒத்துழைப்புத் தராமல் இருப்பதே அதன் நோக்கம்.
4.மக்களைப் பெருமளவில் ஒன்றுதிரட்ட மேற்கொள்ளப்பட்ட இம்முயற்சிகள் முஸ்லீம்களை ஈர்க்க இயலாமல் போனதால் செழித்தோங்க இயலவில்லை.
5.சமிதிகளின் தொண்டர்களில் பெரும்பாலோர் கற்றறிந்த மத்தியதர வர்க்கத்திலிருந்தும் இந்து உயர் வர்க்கத்திலிருந்தும் அணி திரட்டப்பட்டிருந்தனர்.
6.தவிரவும் சுதேசி இயக்கவாதிகள் பல சமயங்களில் சமூக ரீதியாகவும் உடல் ரீதியாகவும் வலுக்கட்டாயமான முறைகளைக் கையாண்டனர்.
7.அந்நடவடிக்கைகள் சாதி அமைப்புகளின் மூலமாகவும் ஏனைய தேசியவாத அமைப்புகளின் வழியாகவும் மேற்கொள்ளப்பட்டன.
24.
1. முதலில் ஜின்னாவோ நவாப் ஜாஃபருல்லா கானோ முஸ்லிம்களுக்கு தனி நாடு உருவாக்குவது சாத்தியமாகும் என்று கருதவில்லை.
2. 1940 மார்ச் 23 இல் முஸ்லிம் லீக் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அதில் "இது அகில இந்திய முஸ்லிம் லீக்கின், இந்த அமர்வின் ஒருங்கிணைந்த கருத்தாகும்.
3. நிலவியல் அடிப்படையில் நிர்ணயித்து அடுத்தடுத்து அமைந்துள்ள பகுதிகள் மண்டலங்களாக அவற்றின் எல்லைகள் வரையறை செய்யப்பட வேண்டும் என முஸ்லிம் லீக் வலியுறுத்தியது.
4. தேவைக்கேற்றவாறு மாற்றப்பட்ட, நிலப்பகுதிகளைக் கொண்டவைகளாக அவைகள் அமைதல் வேண்டும்
5. முஸ்லிம்களின் எண்ணிக்கையில் பெரும்பான்மையாக உள்ள பகுதிகள் சுதந்திரமான தனி மாநிலமாக அமைக்கப்பட வேண்டும் என முஸ்லிம் லீக் கூறியது.
6. பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியாவை விட்டுச் செல்லும் முன் நாட்டை இந்திய யூனியன் மற்றும் பாகிஸ்தான் யூனியன் என பிரிவினை செய்ய வேண்டும் என்று முஸ்லிம் லீக் தீர்மானித்தது.
7. ஜின்னா தன் பிடிவாதத்தால் அமைச்சரவை தூதுக்குழுவின் திட்டத்தை ஏற்று ஒரு முடிவுக்கு வராமல் நேரடி நடவடிக்கை நாளுக்கு அழைப்பு விடுத்ததால் 1946 இல் கல்கத்தாவில், உள்நாட்டுப் போர் போன்ற நிலை உருவாகி, இறுதியில் நாட்டினை இந்தியா, பாகிஸ்தான் என்று இரு நாடுகளாக பிரிவினை செய்யும் நிலைக்கு இட்டுச் சென்றது.
25.
1.பிரஷ்யாவின் பிரதம அமைச்சர் பதவி வகித்த ஆட்டோ வான் பிஸ்மார்க் (Otto von Bismarck ) பிரஷ்யாவின் தலைமையில் ஜெர்மனியப் பகுதிகள் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தோடு அதனை வலுப்படுத்தினார்.
2.ஒருங்கிணைவை அடைவதற்கு அவர் "இரத்தமும் இரும்பும்" என்ற வலுவான கொள்கையைக் கைக்கொண்டார்.
3.ஜெர்மனிய ஒருங்கிணைவை ஆஸ்திரியாவுடன் பிரான்சுடனும் மோதாமல் அடைவது சாத்தியமில்லை என்று அவர் புரிந்துகொண்டிருந்தார்.
4.இராஜதந்திர நகர்வுகளின் வாயிலாக ஆஸ்திரியாவுடன் பிரான்சுடனும் முரண்போக்கைக் கைக்கொள்ளலானார்.
5.ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தைகளைத் துவங்கிய அவர் பிரஷ்யாவிற்கும் ஆஸ்திரியாவிற்கும் இடையே போர் ஏற்பட்டால் அந்நாடு தலையிடாது என்பதை உறுதி செய்து கொண்டார்.
6.அதன்பின் ஜெர்மனிய ஒருங்கிணைவை அடைய மூன்று போர்களை நடத்தும்படி ஆயிற்று.
ஸ்லெஸ்விக் -ஹால்ஸ்டின் சிக்கல்:
1.ஸ்லெஸ்விக்கும் ஹால்ஸ்டினும் டென்மார்க்கின் கட்டுப்பாட்டில் இருந்த இரு ஜெர்மானிய மாநிலங்களாகும்.
2.இவ்விரு பகுதிகளையும் (Duchies) 1863 இல் டென்மார்க் மன்னர் தனது அரசுடன் இணைத்தார்.
3.பிஸ்மார்க் ஆஸ்திரியாவுடன் சேர்ந்து ஒரு கூட்டு நடவடிக்கையை மேற்கொண்டு டென்மார்க்கை எதிர்க்க முன்மொழிந்தார்.
4.அதன்படி 1864இல் ஆஸ்திரியா ,பிரஷ்யாவின் கூட்டுப்படைகள் டென்மார்க்கைப் போரில் தோற்கடித்தன.
ஆஸ்திரிய-பிரஷ்யப் போர் 1866 :
1.தனது ராஜதந்திர செயல்பாடுகளின் வாயிலாக பிரான்ஸ் மற்றும் ரஷ்யாவின் நடுநிலையை பிஸ்மார்க் உறுதி செய்துகொண்டார்.
2.பின்னர் ஆஸ்திரியாவை வெனிஷியப் பகுதியை விட்டு அப்புறப்படுத்த விரும்பிய அவர் பியட்மாண்ட் - சார்டினியாவின் ஆதரவைப் பெற்றார்.
3.பெரும் சக்திகள் எதுவும் ஆஸ்திரியாவிற்கு ஆதரவளிக்காது என்பதனை உறுதி செய்து கொண்ட பிஸ்மார்க் பிரஷ்யாவை தாக்க ஆஸ்திரியாவைத் தூண்டும் செயல்களில் ஈடுபட்டார்.
4.இவ்வாறு நடந்த ஆஸ்திரிய-பிரஷ்யப் போர் ஏழு வாரப் போர் என்றும் குறிப்பிடப்படுகிறது.
பிராங்கோ-பிரஷ்யப்போர்,1870-71 :
1.பிஸ்மார்க் தெற்கு ஜெர்மானிய மாகாணங்களை ஒன்றிணைக்கும் பொருட்டு பிரஷ்யாவிற்கும்,பிரான்சிற்குமிடையே பிளவை ஏற்படுத்த தனது கவனத்தைச் செலுத்தினார்.
2.அதற்கான வாய்ப்பு ஸ்பானிய அரசுரிமை வாரிசுப் பிரச்சனை தோன்றியபோது ஏற்பட்டது.
3.ஸ்பெயினில் ஏற்பட்ட ஒரு புரட்சிக்குப்பின் இராணி இஸபெல்லா வெளியேற்றப்பட்டு பிரஷ்ய மன்னரின் உறவினரான இளவரசர் லியோபால்டிற்கு அரியணை வழங்கப்பட்டது.
4.பிரஷ்யர்கள் தங்கள் மன்னர் மதிக்கப்படவில்லை என்று நினைக்கவும் தக்கபடி பிஸ்மார்க் மாற்றியமைத்தார். இதனால் எம்ஸ் தந்தி பிராங்கோ-பிரஷ்யப் போர் தோன்ற வழிவகுத்தது.
5.பிஸ்மார்க் கடுமையான பல சரத்துகளை பிரான்சின் மீது திணித்தார்.அல்சேஸ் - லொரைன் பகுதிகளை விட்டுக்கொடுக்க நேர்ந்த பிரான்ஸ் பெருந்தொகையைப் போர் இழப்பீடாகவும் கொடுக்கும்படி ஆயிற்று.
6.வெர்செய்ல்ஸ் அரண்மனையில் பிரஷ்ய மன்னர் முதலாம் வில்லியம் வடக்கு ஜெர்மானிய கூட்டமைப்பிற்கும்,தெற்கத்திய ஜெர்மானிய மாகாணங்களுக்கும் மன்னராக அறிவிக்கப்பட்டார்.
7.இவ்வாறு இராஜதந்திர உத்திகளையும், போர் நடவடிக்கைகளையும் கொண்டு ஜெர்மானிய ஒருங்கிணைவு சாத்தியப்படுத்தப்பட்டது.
26.
காரணம்:
1.காலனிகளைத் தனது நாட்டின் பகுதிகளாக கருதிய இங்கிலாந்து காலனி மக்களின் நலன்களை புறக்கணித்து தனது நலன்களுக்காக பல சட்டங்களை இயற்றியது.
2.நாவாய் சட்டம் சர்க்கரை மீது வரி விதிப்பு,முத்திரைச் சட்டம்,டவுண்ஷெண்ட் சட்டம் ,தேயிலை மீதான வரிவிதிப்பு போன்றவை அமெரிக்க விடுதலைப் போருக்கான காரணங்கள் ஆகும்.
3.பொறுத்துக் கொள்ள முடியாத சட்டங்களின் விளைவாக குடியேற்ற நாடுகள்,பிலடெல்பியாவில் முதன் முதலாக பொது மாநாட்டைக் கூட்டின.
போக்கு:
1775-ல் மாசசூசெட்ஸில் உள்ள லெக்சிங்டன் என்ற இடத்தில் விவசாயிகள் ஆங்கிலேயரோடு போரிட்டு ஆங்கிலப் படைகளை முற்றுகையிட விரைந்தனர்.
2.ஆங்கிலப் படைகளுக்கு வில்லியம் ஹோவ் என்பவரும்,அமெரிக்க படைகளுக்கு ஜார்ஜ் வாஷிங்டனும் தலைமையேற்றனர்.
3.ஆரம்ப கால போர்களில் ஆங்கிலப் படை வெற்றி வாகை சூடியது.பின்னர் வாஷிங்டன் தனது திட்டமிடப்பட்ட போர் தந்திரங்களின் வாயிலாக ஆங்கிலப் படைகளைத் தோற்கடித்தார். 1777-ல் சரடோகா போரும் 1781-ல் யார்க்டவுன் போரும் முக்கிய போராகும்.
4.குடியேற்ற நாடுகளுக்கு ஐரோப்பிய நாடுகள் உதவின.
விளைவுகள்:
1.அமெரிக்க புரட்சி உலக வரலாற்றில் பல அணுகுமுறைகளை (Avenues) ஏற்படுத்தியது.
2.மக்களாட்சி, குடியரசு போன்ற கோட்பாடுகள் மேலும் விரிவாகப் பரவலாயின.
3.அரசியல்,சமூக மாற்றங்கள் ஜனநாயகத்தையும் சமத்துவத்தையும் அடிப்படையாக கொண்டிருந்தன.
4.குடியேறியவர்கள் அனைவருக்கும் அமெரிக்க ஐக்கிய நாடுகள் சுதந்திரத்தையும் வாய்ப்புகளையும் வழங்கும் நாடானது.
5.கல்வியின் முக்கியத்துவம் சிறப்பிடத்தைப் பெற்றது.
6.கூட்டாட்சிக் கோட்பாடு பரவலானது.
7.அமெரிக்க புரட்சி காலனியாதிக்கத்திற்கு ஒரு பின்னடைவாகும்.தங்கள் காலனிய எஜமானர்களுக்கு எதிராக குடியேற்ற நாடுகளின் விடுதலைக்கான கோரிக்கை உலகின் பல்வேறு பகுதிகளில் பரவியது.
8.ஒவ்வொரு தனி மனிதருக்கும் பேச்சு சுதந்திரம், மத சுதந்திரம் மற்றும் சமவாய்ப்பு ஆகியன வழங்கப்பட்ட சுதந்திர சமுதாயம் உருவாவதற்கு இப்புரட்சி வழிகோலியது.
27.
ஸ்பெயின் தேசிய அரசு:
1.அராபிய அரசர்களின் வழித்தோன்றல்களாகிய முஸ்லிம் மன்னர்களாகிய மூர்களின் கட்டுப்பாட்டில் ஸ்பெயினின் பெரும்பாலான பகுதிகள் இருந்தன.
2.அராகன்,காஸ்டைல் என இரண்டு முக்கிய அரசுகள் அங்கிருந்தன.
3.ஸ்பெயின் நாட்டின் வரலாற்றின் ஒரு திருப்புமுனையாக அராகன் அரசர் பெர்டினான்ட் காஸ்டைல் இளவரசி இசபெல்லாவை திருமணம் செய்தார்.
4.1479 இல் அரசரும் அரசியும் தங்கள் கைகளில் அதிகாரத்தை எடுத்தனர்.
5.மன்னர் சபையில் இருந்து பிரபுக்களை நீக்கியதன் மூலம் அவர்களைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தார்.ஸ்பெயின் ஒரு தனி நாடாக உருவெடுத்தது.
இங்கிலாந்து அரசு:
1.அரச சிம்மாசனத்தை அடைய யார்க் குடும்பம் மற்றும் லாங்காஸ்டர் குடும்பம் என இரண்டு அரச குடும்பங்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
2.இதன் விளைவாக ரோஜாப்பூக்கள் போர் நடந்தது.அவர்கள் முறையே வெள்ளை மற்றும் சிவப்பு ரோஜாக்கள் உடைய அடையாளக்குறிகளை அணிந்தனர்.அதனால் இப்பெயர் பெற்றது.
3.இந்த உள்நாட்டுப்போரில் ஹென்றி டியூடர் வெற்றி வாகை சூடி,இங்கிலாந்தில் புதிய அரசாட்சி அமைய வழிவகுத்தார்.
4.ஏழாம் ஹென்றி என்று பட்டம் சூட்டிக்கொண்ட அவர் யார்க் குடும்பத்தைச் சேர்ந்த எலிசபெத் உடன் திருமண ஒப்பந்தத்தில் ஈடுபட்டார்.இதனால் இங்கிலாந்து ஒரு தேசிய அரசராக உருவெடுத்தது.
5.பிரான்சின் கிழக்கே உள்ள பர்கண்டி என்பது ஒரு சக்திவாய்ந்த நாடாகும்.பெயரளவிற்கே பிரான்ஸ் அரசரின் கட்டுப்பாட்டின்கீழ் இருந்த கிளர்ச்சிமிகுந்த பகுதியான பர்கண்டியை ஆங்கிலேயர்கள் பிரான்சுக்கு எதிராக ஆக்கிரமித்தனர்.
6.பிரெஞ்சு அரசர் ஏழாம் சார்லசுக்குக்காக ஜோன் ஆஃப் ஆர்க் என்ற பெயருடைய ஒரு இளம்பெண் வீரதீரமாகப் போரிட்டு ஆர்லியன்ஸ் போரை வென்றார்.ஆர்லியன்ஸின் பணிப்பெண் (Maid of Orleans) என்ற பட்டம் ஜோன் ஆஃப் ஆர்க் மங்கைக்கு வழங்கப்பட்டது.
7.ஜோன் ஆஃப் ஆர்க்கின் மறைவுக்குப் பிறகு நூறாண்டுகள் போரைத் தொடர்ந்த பிரெஞ்சு அரசு அதில் வெற்றி பெற்றது.
8.கிளர்ச்சி மிகுந்த இந்தப்பகுதி இறுதியாக 1483 ஆம் ஆண்டு பிரான்சின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.
9.பிரான்ஸ் ஒரு வலுவான மத்திய மன்னராட்சி நடைபெறும் அரசாக பதினோராம் லூயி உருவெடுத்தது.
28.
1.1960 களில் தொழில் துறையிலும் வேளாண்மையிலும் வளர்ச்சி ஏற்பட்ட பின்னரும் வறுமை குறையவில்லை.
2.கிராமப்பகுதிகள்,நகர்ப்பகுதிகள் ஆகிய இரண்டிலும் வறுமை நிலவுகிறது.
3.கிராமப்புற வறுமையைப் போக்குவதற்காக அரசாங்கத்தால் முழுவீச்சில் ஊரக வளர்ச்சித் திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டன.
4.சமூக வளர்ச்சித் திட்டங்கள்,பஞ்சாயத்துராஜ் போன்ற உள்ளாட்சி நிறுவனங்களைப் புதுப்பிப்பது,சிறு குறு விவசாயிகளைப் போன்ற குறிப்பிட்ட குழுக்களை இலக்காகப் கொண்ட திட்டங்கள் ஆகியவை இதில் அடங்கும்.
5.1980இல் ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி திட்டம் என்ற பெயரில் ஒருமுகப்படுத்தப்பட்ட திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
6.கிராமப்புற குடும்பங்களின் பொருளாதார நிலையை உயர்த்துவதற்கு அவர்களுக்கு சில சொத்துக்களை வழங்குவது இத்திட்டத்தின் நோக்கமாகும்.
7.இதன் மூலம் அவர்கள் வறுமையிலிருந்து வெளியே வர இயலும்.
8.நாட்டிலிருந்த 5011 ஊராட்சி ஒன்றியங்களிலும் இத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
9.உதவியைப் பெறும் குடும்பத்தின் பொருளாதார நிலைக்கு ஏற்றவாறு மானியங்களும் மாறுபட்டன.
10.இத்திட்டத்தால் அடையப்பட்ட குறிப்பிடத்தக்க வெற்றியைக் கருத்தில் கொண்டு கிராமப்புற ஏழைகளின் சுய வேலைவாய்ப்பை மேம்படுத்துவதற்கான ஒரு திட்டமாக 1999 இல் இது மறுசீரமைக்கப்பட்டது.
11.தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டமானது (பின்னர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
12.ஒவ்வொரு குடும்பத்தைச் சேர்ந்த வயதுவந்த உறுப்பினர்களுக்கு தனித்திறனற்ற உடல் உழைப்பு,வேலையைத் செய்ய விருப்பம் உடையவர்களுக்கு,ஒவ்வொரு ஆண்டும் 100நாட்களுக்கு ஊதியத்துடன் கூடிய வேலையைக் கொடுப்பதன் மூலமே இதை வெற்றிகரமாகச் செய்தது.
13.இம்முயற்சியின் கீழ்க்கொள்ளப்படும் பணிகள் கிராமப்புறங்களில் சாலைகள்,கால்வாய்கள்,சிறிய நீர்ப்பாசன வேலைகள்,மரபு சார்ந்த நீர் நிலைகளை மீட்டெடுத்தல் போன்ற நீண்ட காலம் பயன்தரும் செல்வங்களை உருவாக்கும்.
29.
(i) இந்தியாவிற்கான அரசமைப்பு வரைவுப்பணி தொடங்கியபோதே இந்தியப் பகுதிகள் அல்லது சுதேச அரசுகளை ஒன்றிணைப்பது முக்கியமானதாக இருந்தது.
(ii) காஷ்மீர், ஜுனாகத், ஹைதராபாத் ஆகியவற்றைத் தவிர மற்ற சுதேச அரசுகள் அனைத்தும் இணைப்புறுதி ஆவணத்தில் கையெழுத்திட்டன.
(iii) இதனால் பாதுகாப்பு, வெளியுறவு மற்றும் தகவல் தொடர்பில் இந்தியாவின் மைய ஆதிக்கத்தை ஏற்றுக்கொண்டன.
(iv) ஹைதராபாத் நிஜாம் இந்திய ஆளுமைக்கு கீழ்ப்படிய மறுத்து, அவர் ஹைதராபாத் அரசை சுதந்திர அரசு என்று அறிவித்தார்.
(v) ஜுனாகத் அரசர் மக்கள் விருப்பத்திற்கு எதிராக பாகிஸ்தானுடன் சேர விரும்பினார்.
(vi) இதே போல், காஷ்மீரின் இந்து அரசான மகாராஜா ஹரிசிங் காஷ்மீர் சுதந்திர அரசாக இருக்குமென்று அறிவித்தார்.
(vii) இதனால் அந்நாட்டு மக்கள் தேசிய மாநாட்டுத் தலைமையில் "காஷ்மீரை விட்டு வெளியேறுங்கள்" என்று போராட்டத்தை அரசருக்கு எதிராக தொடங்கினார்.
(viii) ஹைதராபாத் நிஜாம் விடுதலைப் பிரகடனம் செய்த 48 மணிநேரத்திற்குள் இந்தியா அங்கு காவல்துறை நடவடிக்கைகளைத் தொடர்ந்தது.
(ix) 1946 முதலே படேல் காஷ்மீர் மஹாராஜாவோடு பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்.
(x) இந்திய விடுதலைக்குச் சில மாதங்களுக்குப் பின் பாகிஸ்தானியர்கள் சிலர் காஷ்மீரை சூறையாடினர்.
(xi) இந்த நடவடிக்கையை ஹரிஷிங்கால் தடுக்க முடியவில்லை.
(xii) காஷ்மீர் அரசுக்கு உதவுவதற்காக இந்திய இராணுவம் அனுப்பப்படுவதற்கு முன் காஷ்மீர் அரசர் ஹரிசிங் இணைப்புறுதி ஆவணத்தில் கையெழுத்திட்டார்.
(xiii) இதன் விளைவாக காஷ்மீர் சுதந்திர இந்தியாவின் ஒரு பகுதியானது.
(xiv) சுதேச அரசுகளை இந்தியாவோடு நிறைவாக இணைக்கும் பணியை அப்போதைய இடைக்கால அமைச்சரவையில் உள்துறை அமைச்சராகிய சர்தார் வல்லபாய் படேல், மற்றும் நேரு போன்றோர் திறம்பட செய்து முடித்தனர்.
30.
1. கிலாபத் மாநாட்டில் காந்தியடிகள் வற்புறுத்தலின் பேரில் 1920 ஆகஸ்ட் 31 முதல் ஒத்துழையாமை இயக்கத்தை தொடங்க முடிவு செய்யப்பட்டது.
2. அரசு கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு நீதிமன்றங்களை புறக்கணிக்கும் திட்டத்தை அலகாபாத்தில் கூடிய அனைத்து கட்சி கூட்டம் முடிவு செய்தது.
3. 1920 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கல்கத்தாவில் நடந்த காங்கிரஸ் சிறப்பு அமர்வில் காலனி ஆதிக்க அரசுடன் ஒத்துழையாமையைக் கடைப்பிடித்தது.
4. காந்தியடிகள் யோசனைகளை ஏற்றுக்கொள்ளும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
5. கிலாபத் மற்றும் பஞ்சாப் குறைகள் சரிசெய்யப்பட்டு தன்னாட்சி அரசு நிறுவப்படும் வரை இந்த ஒத்துழையாமையைக் கடைபிடிக்க உறுதி ஏற்கப்பட்டது.
6. 1920 ஆம் ஆண்டு நாக்பூரில் நிகழ்ந்த காங்கிரஸ் அமர்வில் முந்தைய தீர்மானங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
7. காங்கிரஸ் கமிட்டிகளை அங்கீகரித்து அமைப்பதற்கு வகை செய்யும் மற்றொரு முக்கிய தீர்மானம் நாக்பூர் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.
8. இதனால் பெரும் எண்ணிக்கையிலான பணியாளர்கள் இந்த இயக்கத்தில் சேர்ந்தனர்.
31.
இராஜாஜி 14 ஏப்ரல் 1944 இல் ஒரு முன்மொழிவுத் தீர்மானத்தை வழங்கினார், அதன் அம்சங்களாவன:
(i) போருக்குப் பின்பு ஒரு ஆணையத்தின் மூலம் இஸ்லாமியர்க்கு முழுப் பெரும்பான்மையில் வாழும் தொடர் மாவட்டங்களைப் பிரித்தெடுத்து அங்கே வயதுத்தகுதி அடைந்தோரைக் கொண்டு வாக்கெடுப்பு நடத்தி பாகிஸ்தான் உருவாக்கம் பற்றி முடிவை எடுத்தல் வேண்டும்
(ii) ஒரு வேலை ஓட்டெடுப்பின் முடிவில் பிரிவினை உறுதிசெய்யப்பட்டால், அதிமுக்கியப் பணிகளான பாதுகாப்பு, தொலைத்தொடர்பு போன்றவற்றை பொதுவில் செயல்படுத்த ஒப்பந்தம் ஏற்படுத்துதல் வேண்டும்.
(iii) எல்லையில் அமையப்பெற்ற மாவட்டங்களுக்கு இரு இறையாண்மை கொண்ட நாடுகளில் ஏதோ ஒன்றில் சேர்ந்து கொள்ள வாய்ப்பளிக்கப்பட வேண்டும்.
(iv) இத்திட்டங்கள் யாவும் முழுமையான அதிகார மாற்றம் ஏற்பட்டபின் செயல்முறைக்கு கொண்டுவரப்படுதல் வேண்டும்.
(v) சிறையிலிருந்து காந்தியடிகள் ஜூலை,1944 இல் விடுவிக்கப்பட்ட பின் இராஜாஜி திட்டத்தை அடிப்படையாக கொண்டு ஜின்னாவோடு பேச்சுவார்த்தை நடத்த முயன்றார் ஆனால், அந்தப் பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.
32.
33.
(i) பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் புத்தாண்டுகளில் இந்திய தேசிய காங்கிரசுக்குள்ளே மிதவாத அரசியலுக்கு எதிராக வெளிப்படையான வெறுப்பு நிலவியது.
(ii) இவ்வேறுப்பு முடிவில் ஒரு புதிய போக்காகத் தோற்றம் பெற்று அது தீவிர தேசியவாதப் போக்கெனக் குறிப்பிடப்பட்டது.
(iii) இத்தீவிர தேசியவாதிகள் அல்லது முற்போக்காளர்கள் அல்லது போர்க்குணமிக்கவர்கள் ஆவார்கள்.
(iv) தீவிர தேசியவாதத் தலைவர்களாகிய லால்-பால்-பால் ஆகியோர் மிதவாதிகளின் கவனமான அணுகுமுறை, ஆங்கிலேயரிடம் மன்றாடுதல் மனு சமர்ப்பித்தல் போன்ற மிதவாதிகளின் "இறைஞ்சுதல் கொள்கைகளை" கடுமையாக விமர்சித்தனர்.
(v) மகாராஷ்டிராவில் பாலகங்காதர திலகர் வங்காளத்தில் பிபின் சந்திரபால், பஞ்சாபில் லாலா லஜபதிராய் ஆகியோரின் தலைமையில் இப்போர்க்குணம் வளர்ச்சி பெற்றது.
(vi) இதற்கு காரணங்கள், காங்கிரசுக்குள் உருவான உட்குழுக்கள், மிதவாதிகளின் அரசியல் நடவடிக்கைகளால் ஏற்பட்ட மனச்சோர்வு மற்றும் வங்காளத்தை பிரிப்பதற்காகக் கர்சன் மீது ஏற்பட்ட சினம் ஆகும்.
(vii) இவர்களால் சுதேசி இயக்கம் வளர்ச்சி பெற்றது. பல உத்திகள் முன்னெடுக்கப்பட்டன.
(viii) அந்நியப் பொருட்களைப் புறக்கணிப்பது, அரசால் நிர்வகிக்கப்படும் கல்வி நிலையங்களைப் புறக்கணிப்பது ஆகியன சுதேசி இயக்கத்தின் ஆக்கபூர்வமானத் திட்டங்களாக இருந்தன.
(ix) வங்கப் பிரிவினையைத் தடுப்பதில் ஏற்பட்ட தோல்வி பிபின் சந்திரபால் கொடுத்த அழுத்தம் காரணமாக மிதவாத தேசியவாதிகள் ஆங்கிலப் பொருட்களைப் புறக்கணிப்பது என்ற முடிவுக்கு வந்தனர்.
(x) மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த பாலகங்காதர திலகர் "சுயராஜ்ஜியம் எனது பிறப்புரிமை அதை அடைந்தே தீருவேன்" என்று முழங்கினார்.
(xi) பிபின் சந்திரபாலின் கருத்துப்படி சுயராஜ்ஜியம் என்பது அந்நியர் ஆட்சியிலிருந்து முற்றிலுமாக விடுதலையடைதல் என்பதாகும்.
(xii) வ.உ.சி.யின் சுதேசி இயக்க கப்பல் நிறுவனத்தின் வெற்றி குறித்து லோகமான்ய திலகர் தன்னுடைய கேசரி, மராட்டா பத்திரிகைகளில் எழுதினார்.
(xiii) பாலகங்காதர திலகர், பிபின் சந்திரபால், லாலா லஜபதிராய் (லால்-பால் -பால், Lal-bal-pal ) எனக் குறிப்பிடப்படும் முப்பெரும் தலைவர்களின் இயக்க நடவடிக்கைகளின் விளைவாக மகாராஷ்டிரம், வங்காளம், பஞ்சாப் ஆகிய மூன்றும் சுதேசி இயக்கக் காலப்பகுதியில் தீவிர தேசியவாதத்தின் மையப்புள்ளிகளாகத் திகழ்ந்தன.
34.
1. 1875 க்கும் 1885 க்கும் இடைப்பட்ட காலத்தில் இந்தியாவில் ஆங்கிலேயரின் கொள்கைக்கு எதிராக பல போராட்டங்கள் நடைபெற்றன.
2. 1877 இல் அரசுப் பணிகள் இந்திய மயமாக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை ஓங்கி ஒலித்தது.
3. இந்திய தேசிய காங்கிரஸ் "இந்தியா ஒரே நாடு" எனும் கருத்து அவ்வமைப்பின் பெயரில் பிரதிபலித்தது.
4. இந்திய தேசியக் காங்கிரஸ் 1885 டிசம்பர் 28-இல் பம்பாயில் உருவாக்கப்பட்டது.
5. W.C. பானர்ஜி இவ்வமைப்பின் முதல் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.
6. இவ்வமைப்பு தேசியவாதம் எனும் கருத்தையும் அறிமுகம் செய்தது.
7. இந்தியரை ஒரே நாடாக ஒருங்கிணைப்பதே இந்திய தேசிய காங்கிரசின் இன்றியமையா நோக்கங்களில் ஒன்றாக இருந்தது.
8. இந்தியர்கள் தாங்கள் அனைவரும் ஒரே நாட்டின் குடிமக்கள் என உணர்ந்தால் மட்டுமே காலனியாட்சிக்கு எதிரான போராட்டங்கள் வெற்றி பெறுமென்பதை இந்திய தேசிய காங்கிரஸ் நிர்வாகிகள் நன்குணர்ந்தனர்.
9. பிபின் சந்திரபால், பாலகங்காதர திலகர், லாலா லஜபதிராய் போன்ற ஆரம்பகால தேசியவாதிகள் மனுக்கள் எழுதுவது, மன்றாடிக் கேட்டுக்கொள்வது போன்றவற்றிற்கு மாறாக தீவிரமான அணுகுமுறைகளை பரிந்துரைத்தனர்.
35.
நாட்டின் சுதந்திரத்திற்காக தங்களை அர்ப்பணித்துக்கொண்ட இளைஞர்கள் பலரைப் பிரதிநிதித்துவப்படுத்த பகவத்சிங் போன்றோர் இருக்கின்ற அதே வேளையில் ஆணாதிக்கமிக்க இச்சமூகத்தில் தாய்நாட்டைக் காப்பதற்காய் இளம்பெண்களின் பிரதிநிதியாய் விடுதலைப்போரில் ஆயுதத்தாங்கி கல்பனா தத் போன்றோரும் பங்கேற்றனர்.வெறும் செய்திகளை அங்குமிங்கும் எடுத்துச் செல்பவராய் மட்டுமின்றி,போரில் நேரடி நடவடிக்கைகளில் பங்கு பெற்று,துப்பாக்கிக் கொண்டு ஆண்களுடன் இணைந்து போராடினர்.
36.
"Indian Unrest" என்ற புத்தகத்தின் ஆசிரியர் வேலண்டைன் சிரோலுக்கு எதிராக தாம் தொடுத்து அவதூறு வழக்கினை நடத்துவதற்காகச் செப்டம்பர் 1918இல் திலகர் பிரிட்டனுக்குச் சென்றது மற்றும் உத்தேசிக்கப்பட்ட மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தங்களை பெசன்ட் ஏற்றுக்கொண்ட பிறகு தன்னாட்சி இயக்கம் வீழ்ச்சி கண்டது.
37.
1. வேவல் பிரபு ஜூன் 1945-இல் பேச்சுவார்த்தை நடத்த சிம்லா மாநாட்டைக் கூட்டினார்
2. நேரு, பட்டேல் மற்றும் அபுல் கலாம் ஆசாத் போன்றவர்கள் மாநாட்டில் பங்கெடுக்க சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்கள்.
3. வேவல் பிரபு சர்ச்சிலிடம் காங்கிரசையும், முஸ்லிம் லீக்கையும் இணைந்து ஆட்சியமைக்க ஒப்புதல் பெற்றார்.
38.
1. இந்தியாவில் வேவல் பிரபுவைத் தொடர்ந்து மெளண்ட்பேட்டன் பிரபு அரசாங்க பிரதிநிதியாக பொறுப்பேற்றார்.
2. அதிகாரத்தை மாற்றித்தரவும் நாட்டின் பிரிவினையை நடைமுறைப்படுத்தவும் மெளண்ட்பேட்டன் பிரபு இந்தியா வந்தார்.
3. 1947 ஜூன் 3 இல் மெளண்ட்பேட்டன் பிரபு இந்திய அரசியல் பிரச்சனைகளை தீர்க்க மெளண்ட்பேட்டன் திட்டத்தை கொண்டு வந்தார்.
39.
1. லூயி பிளாங்கின் முயற்சியால் உருவாக்கப்பட்ட பட்டறைகள் மூடப்பட்டதை எதிர்த்து தொழிலாளர்கள் போராடினர்.
2. ஜூன் 24 - 26ம் தேதிகளுக்கிடையே ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டார்கள்.
3. பதினோராயிரம் புரட்சியாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
4. இக்காலம் இரத்தம் தோய்ந்த ஜூன் தினங்கள் என்று அழைக்கப்பட்டன.
40.
1.அமெரிக்காவின் முன்முயற்சியில் ஐ.நா. பொது அவை அவசரமாக கூடி அமைதிக்காக ஒன்றுபடுகிறோம் என்று தீர்மானத்தை நிறைவேற்றியது.
2.பாதுகாப்பு சபையானது ஒரு நெருக்கடியில் உடன்பாட்டை எட்ட முடியாவிட்டால் பொது அவை இராணுவத்தை பயன்படுத்தும்.
3.இது சட்டத்திற்கு புறம்பானது என சோவியத் ரஷ்யா நினைத்தது.
41.
1.ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பது.
2.சுரண்டலை ஒழிப்பது.
3.செல்வம் ஓரிடத்தில் குவிக்கப்படுவதை தடுப்பது ஆகியன சமதர்ம சமூக அமைப்பு ஆகும்.
42.
43.
1. மத்திய சட்டப்பேரவையில் ஒவ்வொரு உறுப்பினரும் இந்த மசோதாவை எதிர்த்த நிலையில் 1919 இல் மார்ச் மாதம் ரௌலட் சட்டத்தை அரசு நிறைவேற்றியது.
2. எந்தவித நீதிமன்ற விசாரணையுமின்றி எவரையும் சிறையில் அடைக்க இச்சட்டம் அதிகாரமளிக்காது.
3. 1919 இல் ரௌலட் சட்டத்திற்கு எதிராக வேலைநிறுத்தத்தில் ஈடுபடவும், எதிர்க்கவும் செய்தனர்.
44.
1. மிதவாதிகளின் கவனமான அணுகுமுறை ஆங்கிலேயரிடம் மன்றாடுதல் ஆகும்.
2. மனு சமர்ப்பித்தல் போன்றவை அவர்களின் "இறைஞ்சுதல் கொள்கை" ஆகும். இக்கொள்கையைக் கடுமையாக தீவிரவாத காங்கிரஸ் விமர்சனம் செய்தது.
45.
ஆலன் ஆக்டேவியன் ஹியூம் (A.O. Hume) எனும் பணி நிறைவு பெற்ற இந்தியக் குடிமைப் பணி (Indian Civil Service - ICS) அதிகாரி டிசம்பர் 1884இல், சென்னையில் பிரம்மஞான சபையின் கூட்டமொன்றிற்குத் தலைமை ஏற்றிருந்தார். இக்கூட்டத்தில் அகில இந்திய அளவில் செயல்படும் ஒரு அரசியலமைப்பை உருவாக்குவது தொடர்பாக விவாதிக்கப்படுகையில் இந்திய தேசிய காங்கிரஸை உருவாக்குவது எனும் கருத்து உருவானது. இந்திய தேசிய காங்கிரஸ் 1885 டிசம்பர் 28இல் பம்பாயில் உருவாக்கப்பட்டது. A.O. ஹியூம் தவிர இவ்வமைப்பை உருவாக்கிய முக்கிய உறுப்பினரான W.C. பானர்ஜி இவ்வமைப்பின் முதல் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.
46.
1.இங்கிலாந்து தொழிலாளர் கட்சி தேர்தலில் தோல்வியுற்றது.
2.அமெரிக்காவில் பெருமந்தத்துக்குப்பின் 20 ஆண்டுகள் குடியரசுக் கட்சி ஆட்சியை இழந்தது.
3.பாசிச நாசிச கட்சிகள் இத்தாலியிலும் ஜெர்மானியிலும் அதிகாரத்தை அடைந்தன.
4.அர்ஜென்டினா,சிலி,பிரேசில் ஆகிய நாடுகளிலும் அரசு மாற்றம் ஆனது.
47.
1.இந்தியா சீனாவோடு நீண்ட எல்லையைக் கொண்டிருந்தால் நேரு சீனாவுடனான நட்புறவுக்கு அதிக முக்கியத்துவம் தந்தார்.
2.சீன மக்கள் குடியரசை 1950 ஜனவரி 1ல் முதல் முதலாக அங்கீகரித்த நாடு இந்தியா,
3.இந்திய சீன உறவுக்கான கோட்பாடுகளாகப் பஞ்சசீல கொள்கையை வகுத்தது.
48.
1. பிரிட்டிஷ் இந்திய அரசு வகுப்புவாதத்தை வளர்ப்பதற்கும் பரப்புவதற்கும் தனித்தொகுதி என்னும் முதன்மையான ஒரு நுட்பத்தை நடைமுறைப்படுத்தியது.
2. மக்கள் தனித் தொகுதிகளாக பிரிக்கப்பட்டதால் அவர்கள் வகுப்புவாத அடிப்படையில் வாக்களித்தனர்.
3. தனித் தொகுதி மூலம் ஆங்கிலேயரின் பிரித்தாளும் கொள்கை என்ற கோட்பாடு அரசமைப்பு சட்டத்தில் முறையாக நுழைந்து இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களை முழுமையாக அந்நியப்படுத்தியது.
49.
1. மறுமலர்ச்சி கண்ட இத்தாலி அரசியல் மாற்றங்களில் பங்கெடுக்கவில்லை.
2. இத்தாலியின் நகரங்களான மிலான்,ஃபிளாரன்ஸ்,வெனிஸ்,நேப்பில்ஸ் போன்றவை பேரரசுகளுக்கு பலியாகும் சூழல் ஏற்பட்டது.
3. இத்தாலியில் தனிப்பட்ட குடும்பத்தாரின் கொடுங்கோல் ஆட்சி நடத்தப்பட்டு வந்தது.
4. ஜெர்மனியிலும் இதே நிலைதான் இருந்தது.
5. ஜெர்மனி மட்டும் 300 முதல் 400 தனிநாடுகளைக் கொண்டிருந்தது.
6. ஆகவே 19 ஆம் நூற்றாண்டில் தான் இத்தாலியும் ஜெர்மனியும் தேசிய அரசுகளாக ஏற்றம் பெற முடிந்தது.
50.
1.13 குடியேற்ற நாடுகளின் சுதந்திரத்தையும் அமெரிக்க ஐக்கிய நாடுகள் எனும் பெயரில் ஒரு புதிய நாடு உருவானதையும்,இங்கிலாந்து அங்கீகரித்தது.
2.மேற்கே 31வது இணைகோட்டை எல்லையாகவும் கொண்ட பகுதிகள் அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்குச் சொந்தமாயின.
3.மேற்கிந்திய தீவுகள், இந்தியா, ஆப்பிரிக்கா ஆகியவற்றில் இங்கிலாந்திற்குச் சொந்தமாயிருந்த சில பகுதிகளை பிரான்ஸ் பெற்றது.
4. ஸ்பெயின் இங்கிலாந்திடமிருந்து புளோரிடாவைப் பெற்றது.
5. ஹாலந்தும் இங்கிலாந்தும் போருக்கும் முன்பு நிலவிய நிலையை அப்படியே பேணின.
51.
1.இத்தாலிய கடற்பயணியான ஜான் கேபட் என்பவரை இங்கிலாந்து நியமித்தது.அவர் கனடாவை கண்டறிந்து அதனை ஆங்கிலேயக் காலனியாக மாற்றினார்.
2.இத்தாலியரான மற்றொருவர் ஜியோவானி வெர்ரசானோ பிரான்ஸ் நாட்டுக்காக நிலப்பகுதியை கண்டறிந்தார்.
3.ஹென்றி ஹட்சன் என்ற ஆங்கில கடற்பயணி வட அமெரிக்காவில் இருந்து பசிபிக் பெருங்கடல் பகுதிக்கு பாதை காண முயன்றார்.
52.
(i) இந்திய விடுதலைக்குச் சில மாதங்களுக்குப் பின் (அக்டோபர் 1947) பாகிஸ்தானியர்கள் சிலர் காஷ்மீரைச் சூறையாடினர்
(ii) காஷ்மீர் மகாராஜா ஹரிசிங்கால் அந்த நடவடிக்கையை தடுக்க முடியவில்லை.
(iii) காஷ்மீர் அரசருக்கு உதவுவதற்காக, இந்திய இராணுவம் அனுப்பப்படுவதற்கு முன் காஷ்மீர் அரசர் இணைப்புறுதி ஆவணத்தில் கையெழுத்திட வேண்டும் என்பதில் படேல் உறுதியாக இருந்தார்.
(iv) இதன் விளைவாக, காஷ்மீர் சுதந்திர இந்தியாவின் ஒரு பகுதியானது.
53.
1. இலண்டனில் நடந்த இரண்டாவது மாநாட்டில் கலந்து கொள்வதற்காக காந்தி மற்றும் அம்பேத்கர் செல்வதற்கு முன் அவர்கள் இடையே தனித்தொகுதிகள் பற்றிய கருத்தில் நடந்த பேச்சு தோல்வி அடைந்தன.
2. வட்ட மேசை மாநாட்டின் போது இருதலைவர்கள் இடையே இதே கருத்து குறித்து விவாதம் நடந்தது.
3. பிரிட்டிஷ் "பிரதமர் ராம்சே மேக் டொனால்டு" இதில் தலையிட்டு முடிவெடுக்க வேண்டும் என்று இந்த கருத்தில் முடிவு எட்டப்படாமல் இருந்தது.
4. 1932-ல் வகுப்பு வாரித் தொகுதி அறிவிக்கப்பட்டது.
54.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards