12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 03/03/2021
12ஆம் வகுப்பு வரலாறு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு மூன்று மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium History Reduced Syllabus Creative Three Mark Question with Answer key - 2021(Public Exam)
12ஆம் வகுப்பு History / வரலாறு தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , History / வரலாறு பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ History Test1.
ஐரோப்பிய மன்றம் குறித்து சுருக்கமாக எழுதுக.
2.
பாலஸ்தீன பிரச்சனை குறித்து சுருக்கமாக எழுதுக.
3.
ஆங்கிலேயர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட மூன்று வகையான வருவாய் வசூல் முறைகளை கூறுக.
4.
பிரிவினை எதிர்ப்பு இயக்கம் பற்றி கூறுக
5.
இஸ்ரேல் நாடு உருவான வரலாற்றை கூறு.
6.
அணிசேரா இயக்கத்தின் நோக்கங்கள் யாவை?
7.
நாஜிக்களின் யூதக் கொள்கை பற்றி கூறு.
8.
சங்கத்தின் குறிக்கோள்கள் யாவை?
9.
பன்னாட்டு சங்கத்தின் அமைப்பு பற்றி விவரி.
10.
ஜெர்மானிய தேசிய உணர்வு வளர நெப்போலியன் எவ்வாறு காரணமானார்?
11.
ஜெர்மானிய தேசத்தை உருவாக்கியவர்கள் பற்றி குறிப்பு வரைக.
12.
வர்த்தகப் புரட்சி என்றால் என்ன?
13.
மீரட் சதி வழக்கிற்கு பின் கிளர்ச்சிகள் வெடிக்கக் காரணம் என்ன?
14.
அரவிந்த கோஷ் பற்றி குறிப்பு வரைக.
15.
கஜீலா லட்சுமி நரசு பற்றி குறிப்பு தருக.
16.
ஆங்கிலேயருக்கு முந்தைய இந்தியாவில் கல்வி நிலை எவ்வாறு இருந்தது?
17.
மேற்கத்திய கல்வியும் அதன் தாக்கமும் மற்றும் மெக்காலே கல்வி முறையைப் பற்றி விளக்குக.
18.
பகத்சிங்கின் குண்டு வீச்சு பற்றி எழுதுக.
19.
சிட்டகாங் ஆயுதப்படைத் தாக்குதல் என்றால் என்ன?
20.
கிரிப்ஸ் தூதுக்குழு பற்றி எழுதுக.
21.
முத்துத்துறைமுகம் தாக்கப்பட்டதைக் எழுதுக.
22.
சமிதிகள் என்றால் என்ன? அவர்களின் பணிகள் யாவை?
23.
சுதேசி இயக்கத்தின் குறிக்கோள்கள் குறித்து G. சுப்பிரமணியம் மற்றும் கோபால கிருஷ்ண கோகலேயின் கருத்துகள் யாவை?
24.
இந்திய காமன்வெல்த் லீக் இயக்கம் பற்றி விவரி?
25.
தொழிலாளர் இயக்கத்தின் எழுச்சியைப் பற்றி எழுதுக?
1.
இரண்டாம் உலகப்போருக்குப் பின்னரான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தனித்தன்மை வாய்ந்த முடிவுகளில் "மேற்கு ஐரோப்பிய நாடுகளை ஒருங்கிணைப்பது"என்பதும் ஒன்றாகும்.1949 மே மாதத்தில் பத்து நாடுகள் லண்டனில் சந்தித்து ஐரோப்பிய மன்றம் (Council of Europe) எனும் அமைப்பை உருவாக்க கையொப்பமிட்டன.இவ்வமைப்பின் தலைமையிடம் ஸ்டராஸ்பர்க்கில் அமைக்கப்பட்டது.உறுப்பு நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களைக் கொண்ட ஒரு குழுவையும் அந்நிய நாடுகளின் பாராளுமன்றங்களிலிருந்து தருவிக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட ஆலோசனைக் குழுவொன்றையும் கொண்டதாக இவ்வமைப்பு நிறுவப்பட்டது.
2.
1.இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் யூதர்கள் தங்களுக்கு பாலஸ்தீனத்தில் ஒரு தாயகம் வேண்டுமெனக் கோரினர்.
2.அராபியர்கள் இதை எதிர்த்தனர்.
3.அப்பிரச்சனை ஐ நா சபையின் முன் வைக்கப்பட்டது.1947 மே மாதம் ஐ நா சபையின் பொது சபை தீர்மானமொன்றை நிறைவேற்றி,அதன் மூலம் பாலஸ்தீன பிரச்சனை குறித்து விசாரித்து பரிந்துரைகள் வழங்க ஐ நா சபையின் பாலஸ்தீனத்திற்கான சிறப்பு குழுவொன்றை (UNSCOP) அமைத்தது.
4.இச்சிறப்புக் குழுவின் அறிக்கையின்படி அராபியர்கள் 85 விழுக்காட்டு நிலப்பகுதியையும் சொந்தமாகக் கொண்டிருந்தனர்.
5.இவ்வுண்மைகளைப் பொருட்படுத்தாது,பாலஸ்தீனம் இரு நாடுகளாகப் பிரிக்கப்பட வேண்டுமெனவும் பெரும்பான்மை அராபியர்கள்,யூதர்கள் குடியேறுவதற்கான நிலங்களை ஒப்படைக்க வேண்டுமெனவும் இக்குழு பரிந்துரைசெய்தது.முன்மொழியப்பட்ட இச்செயல் திட்டத்தின்படி அராபியர்களுக்கு 45 விழுக்காடு நிலங்களை கொண்ட நாடும் 55 விழுக்காடு நிலப்பரப்பைக் கொண்ட யூதநாடும் உருவாகும் நிலை ஏற்பட்டது.இதன்படி 1948 மே 14இல் இஸ்ரேல் எனும் புதிய நாடு உருவாக்கப்பட்டது.
3.
1.வங்காளம் மற்றும் வடஇந்தியாவில் பெரும்பகுதிகளில் அறிமுகம் செய்யப்பட்ட நிரந்தர நிலவரித்திட்டத்தின் கீழ்,நிலவரியை செலுத்தும் பொறுப்பு ஜமீன்தார்கள் எனப்படும் குத்தகைதாரர்களிடம் விடப்பட்டது.
2.தென்னிந்தியாவில் ரயத்துவாரி ( ரயத் என்றால் விவசாயி என்ற பொருள் ) முறையின் கீழ் விவசாயிகள் நிலவரியை நேரடியாக அரசாங்கத்திடம் செலுத்தினர்.
3.மூன்றாவது முறை நாட்டின் ஒரு சில இடங்களில் மட்டும் காணப்பட்ட மகல்வாரி முறை.இதில் நிலவரியைச் செலுத்துவது கிராமத்தின் கூட்டுப் பொறுப்பாகும்.
4.
டிசம்பர் 1903இல் வங்கப்பிரிவினை அறிவிக்கப்பட்டதில் இருந்தே தீவிர தேசியவாதிகள், மிதவாத தேசியவாதிகள் ஆகிய இரு தரப்பினரும் அதை விமர்சனம் செய்தனர். ஆனால் சுரேந்திரநாத் பானர்ஜி, K.K. மித்ரா, பிரித்விஸ் சந்திர ரே போன்றவர்களின் எதிர்வினையானது வேண்டுகோள் விடுப்பது மனு செய்வது என்ற அளவோடு சுருங்கிப் போனது. பிரிவினைக்கு எதிராக இங்கிலாந்து மக்களின் கருத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவது எனும் அளவில் அதன் நோக்கமும் கட்டுக்குள்ளே இருந்தது. எப்படியிருந்தபோதிலும், பரவலான எதிர்ப்புக்கிடையே 1905 ஜூலை 19இல் வங்கப்பிரிவினை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
5.
1. இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் யூதர்கள் தங்களுக்கு பாலஸ்தீனத்தில் ஒரு தாயகம் வேண்டி ஐ.நா வை நாடினர்.
2. ஐ.நா பாலஸ்தீனத்திற்கான சிறப்புக்குழுவை அமைத்தது.
3. இக்குழுவின் பரிந்துரைப்படி அரபியர்களுக்கு 45 சதவீதமும் யூதர்களுக்கு 55 சதவீதமும் கொண்ட நிலப்பரப்பு ஒதுக்கப்பட்டது.
4. யூதர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் 1948 மே 14 ல் இஸ்ரேல் எனும் புதிய நாடு உருவாக்கப்பட்டது.
6.
1. உலக அரசியல் ஒரு சுதந்திரமான பாதையை உருவாக்குவதாகும்.
2. ஏகாதிபத்தியம், காலனியாதிக்கம் ஆகியவற்றிற்கு முற்றுப்புள்ளி வைத்தல்.
3. பன்னாட்டு அமைதியையும் பாதுகாப்பையும் மேம்படுத்துதல்.
4. ஆயுதக் குறைப்பு, இனவாதத்தையும், இனப்பாகுபாட்டையும் முடிவுக்குக் கொண்டு வருதல் ஆகியன முக்கிய நோக்கங்கள் ஆகும்.
7.
1. ஹிட்லரின் அரசு யூதர்களை ஒடுக்கும் கொள்கையை பின்பற்றியது.
2. அரசுப் பணியிலிருந்து நீக்கப்பட்டார்கள், குடியுரிமை மறுக்கப்பட்டது.
3. நிறுவனங்கள் தாக்கப்பட்டது.
4. குறுகலான இருப்பிடங்களில் தங்க வைத்து விஷவாயு அறைகள் போன்ற தொழில்முறை உயிரெடுக்கும் உத்திகளைக் கொண்டிருந்தன.
8.
1. பன்னாட்டுச் சங்கத்தின் முதன்மை குறிக்கோள் போரைத் தவிர்ப்பதாகும்.
2. உலக அமைதியை நிலை நிறுத்த வேண்டும்.
3. பொருளாதார மற்றும் சமூகத் தளங்களில் ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டும்.
9.
1. சங்கம் ஐந்து உறுப்புகளைக் கொண்டிருந்தது.
2. அவை பொதுச்சபை, குழு, செயலகம், நிரந்தர நீதிமன்றம் மற்றும் பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு ஆகும்.
3. ஒவ்வொரு உறுப்பு நாடும் அவையில் பிரதிநிதித்துவம் கொண்டிருந்தன.
10.
1. நெப்போலியன் காலத்திற்கு முன்பு ஜெர்மனி 360 குறுநிலங்களாகப் பிரிந்திருந்தது.
2. நெப்போலியன் ரைன் கூட்டாட்சியை ஏற்படுத்தினார்.
3. இக்கூட்டாட்சி ஜெர்மானிய தேசிய உணர்வு வளர வகை செய்தது.
11.
1. ஒரே மொழி என்ற அடிப்படையிலும், இன்னபிற பண்புகளிலும் ஜெர்மனிய மக்கள் பல குறுந்தேசங்களாகவே பிரிந்து வாழ்ந்தார்கள்.
2. ஜோஹன் வான் ஹெர்டர், ஃபிரீட்ரிக் ஷெலிகெல் போன்றோர் ஜெர்மானியர்களின் உன்னதமான கடந்த காலத்தைச் சுட்டிக் காட்டினார்கள்.
3. J.G.ஃபிக்ட் ஒரு தொடர் சொற்பொழிவாற்றினார். ஏனைய வாழ்வியல் தத்துவத்தைக் காட்டிலும் ஜெர்மானிய வாழ்வியல் முறையின் தனித்துவம் மேன்மையானது என்று கூறினார்.
4. இவரது கருத்து ஜெர்மானிய தேசிய உணர்வு வளர வகை செய்தது.
12.
1.மறுமலர்ச்சி மற்றும் சீர்திருத்த நடவடிக்கைகளுடன் அடிப்படைப் பொருளாதார மாற்றங்களும் நிகழ்ந்தன.
2.இதன் விளைவாக உள்ளூர் நிலையிலான இலாப நோக்கமற்ற பொருளாதாரம் பதினான்காம் நூற்றாண்டில் உலகளாவிய முதலாளித்துவ நிலைக்கு மாற்றம் பெற்றது.
3.இதுவே வர்த்தகப் புரட்சி ஆகும்.
13.
1.1933 ஜனவரி 16 ல் மீரட் அமர்வு நீதிமன்றம் கடுமையான தீர்ப்பை வழங்கியது.
2.27 பேர் தண்டிக்கப்பட்டு வெவ்வேறு இடங்களுக்கு அனுப்பப்பட்டனர்.விசாரணையின் போது கம்யூனிஸ்டுகள் அரசியல் சித்தாந்தங்களை உருவாக்கினர்.
3.அவை செய்தித்தாள்களில் பரவலாக வெளியாகி அதன் வழியாக லட்சக்கணக்கான மக்கள் கம்யூனிஸ்ட் சித்தாந்தம் குறித்தும் இந்தியாவில் கம்யூனிஸ்ட் செயல்பாடு குறித்தும் அறிந்து கொண்டனர்.
14.
1.தீவிர தேசியவாதிகளில் ஒருவராக அரவிந்த கோஷ் விளங்கினார்.
2.அலிப்பூர் குண்டு வெடிப்பு வழக்கில் அரவிந்த கோஷ் உட்பட 35 பேர் கைது செய்யப்பட்டனர்.
3.விசாரணைக்கு பிறகு விடுதலையான அவர் ஆன்மீகப் பாதையை தேர்ந்தெடுத்து தனது இடத்தைப் பாண்டிச்சேரிக்கு மாற்றிக்கொண்டு 1950ல் இயற்கை எய்தும் வரை அங்கேயே தங்கியிருந்தார்.
4. ஆயுதமேந்திய புரட்சியை முன்னெடுப்பது எனும் அவரின் கருத்து நிறைவேறவில்லை.
15.
1.சென்னையில் உள்ள மிக முக்கியமான வணிகர் கஜீலா லட்சுமி நரசு ஆவார்.
2.சென்னை வாசிகள் சங்கம் எனும் அமைப்பு உருவாவதற்கு உந்து சக்தியாக திகழ்ந்தவர்.
3.இவ்வமைப்பு சென்னை மாகாணத்தைச் சேர்ந்த நிலவுடமை வணிக வர்க்கத்தினரின் அமைப்பாகும்.
16.
1.காலனிய காலத்திற்கு முந்தைய இந்தியாவில் கல்வியானது சாதி,மத அடிப்படையில் துண்டுபட்டிருந்தது.
2.இந்துக்களிடையே,பிராமணர்கள் உயர்நிலை சார்ந்த சமய,தத்துவ அறிவினைப் பெறும் தனியுரிமையைப் பெற்றிருந்தனர்.
3.கல்வியைத் தங்களின் முற்றுரிமையாக்கிக் கொண்ட அவர்கள் பிரதானமாக அர்ச்சகர்களாகவும் ஆசிரியர்களாகவும் சமூகத்தில் அங்கம் வகித்தனர்.வித்யாலயங்கள்,சதுஸ்பதிகள் என்றழைக்கப்பட்ட உயர்தரக் கல்விக்கூடங்களில் கல்வி பயின்றனர்.
4.புனிதமான மொழி எனக் கருதப்பட்ட சம்ஸ்கிருத மொழி வழியில் அவர்கள் கல்வி கற்றனர்.
17.
1. காலனிய காலத்திற்கு முந்தைய இந்தியாவில் கல்வியானது சாதி, மத அடிப்படையில் துண்டுபட்டிருந்து, இந்துக்களிடையே பிராமணர்கள் உயர்நிலை சார்ந்த சமய, தத்துவ அறிவினைப் பெறும் தனியுரிமையைப் பெற்றிருந்தனர்.
2. கல்வியை தங்களின் முழு உரிமையாக்கிக் கொண்ட அவர்கள் பிரதானமாக அர்ச்சகர்களாகவும் ஆசிரியர்களாகவும் சமூகத்தில் அங்கம் வகித்தனர்.
3. இந்தியா போன்ற ஒரு பெரிய காலனி நாட்டை ஆள்வதற்கு ஆங்கிலேயர்களுக்குத் தங்களிடம் பணி செய்ய பெரும் எண்ணிக்கையிலான கல்வி கற்றவர்கள் தேவைப்பட்டனர்.
4. தேவைப்படும் அளவிற்கான பெருவாரியான படித்த நபர்களை இங்கிலாந்திலிருந்து அழைத்து வருவது சாத்தியமற்றது. இந்நோக்கத்தில் 1835இல் இந்தியக் கவுன்சில் ஆங்கிலக் கல்விச் சட்டம் இயற்றப்பட்டது.
18.
(i) பகத்சிங்கின் பெயரை நாம் குறிப்பிடும் போதே நமது நினைவுக்கு வருகிற சித்திரம் அவர் 1929 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8 ஆம் தேதி மத்திய சட்டமன்றத்தின் குண்டு வீசிய நிகழ்வுதான். அந்தக் குண்டுகள் எவரையும் கொல்லவில்லை.
(ii) ஆங்கிலேயர்களின் கொடுங்கோன்மைச் சட்டங்களுக்கு எதிரான ஒரு போராட்டச் செயலாக செயல்பூர்வமான ஒரு நடவடிக்கையாக புரட்சியாளர்களால் அது கருதப்பட்டது.
(iii) சட்டமன்றத்தில் நிறைவேற்றுவதற்காக அதற்கான தொழிற்தகராறுகள் மசோதாவை அறிமுகப்படுத்தும் நாளை அவர்கள் இதற்கெனத் தேர்ந்தெடுத்திருந்தனர்.
19.
(i) 1930 ஏப்ரல் 18 அன்று இரவில் சிட்டகாங் படைத்தளம் தாக்கித் தகர்க்கப்பட்டது.
(ii) சூரியா சென்னின் புரட்சிகரக் குழுவான இந்தியக் குடியரசு இராணுவம் ஐரிஷ் குடியரசுப் படைக்கும், புரட்சியாளர்கள் தேசியக் கொடியை ஏற்றி "வந்தே மாதரம்", "புரட்சி ஓங்குக" போன்ற கோஷங்களை முழங்கிக் குறிப்புணர்ந்தினர்.
(iii) இந்தத் தாக்குதல்களும் எதிர்ப்பும் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குத் தொடர்ந்தன.
20.
1. இரண்டாம் உலகப்போருக்குப் பின் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டிருந்த சூழலில் அமைச்சரவைத் தூதுக்குழு உருவாக்கப்பட்டது.
2. இந்திய நாட்டிற்கென்று நியமிக்கப்பட்டிருந்த அரசு செயலரான சர் ஸ்டாப்ஃபோர்டு கிரிப்ஸையும், A.V. அலெக்ஸாண்டரையும் உறுப்பினர்களாகக் கொண்ட அந்த கிரிப்ஸ் தூதுக்குழு மார்ச் 1946-இல் இந்தியா வந்தடைந்தது.
3. இத்தூதுக்குழு மாகாணங்களிலும் பிரதேசங்களிலும் தேர்தல் நடத்தி அதன்மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்டு இந்தியாவிற்கான அரசியல் சாசனத்தை உருவாக்கலாம் என்று முன்மொழிந்தது.
21.
1. தேசிய இயக்கத்தையும் -காந்தியும் வெறுப்புணர்வோடே அணுகிவந்தனார்.
2. இந்த நிலையில் இந்திய தேசிய காங்கிரசும் நிற்கதியற்ற நிலையில் விடப்பட்டிருந்தது, அந்த நிலை வேறு வகையில் ஏற்பட்டிருந்தது.
3. சுபாஷ் அச்சு நாடுகளோடு கைகோர்த்து சுதந்திர போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல நெருக்கடி கொடுத்தார்.
4. 1942-ல் ஹிந்தி ரேடியோ மூலம் போஸ் இந்திய மக்களைக் தொடர்பு கொண்டு உரை நிகழ்த்தினார்.
5. காந்தி வெள்ளையனே வெளியேறு இயக்கத்தைத் துவங்கினார். 1941-ல் ஜப்பான் அமெரிக்க முத்துத்துறைமுகமும் தாக்கப்பட்டது ஆகும்.
22.
1. பெருவாரியான மக்களை ஒன்று திரட்ட மேற்கொள்ளப்பட்ட மற்றொரு வெற்றிகரமான முறை சமிதிகள் ஆகும்.
2. தொண்டர் படைகள் எனும் அமைப்புகள் உருவாக்கப்பட்டமையாகும்.
3. பஞ்சங்களின் போதும், நோய்களின் தாக்கத்தின் போது சேவையாற்றுதல் விழாக்களின் காலத்தில் சுதேசி செய்தியைப் பரப்புரை செய்தல், உள்ளூரளவில் பள்ளிகளையும் நடுவர் நீதிமன்றங்களையும் உருவாக்குதல் ஆகியவை சமிதிகளின் பணிகளாகும்.
23.
1. சென்னையைச் சேர்ந்த தேசியவாதியான G. சுப்பிரமணியம் சுதேசி இயக்கத்தின் குறிக்கோள் குறித்து தங்களின் சார்பு நிலைக்கு எதிரான புரட்சி தேசிய வாழ்வின் அனைத்துத் தளங்களிலும் என விளக்கினார்.
2. கோபால கிருஷ்ண கோகலே சுதேசி இயக்கமானது நம்முடையத் தொழில்களின் முன்னேற்றத்திற்கானது மட்டுமல்ல, நமது தேசிய வாழ்க்கை சார்ந்த அனைத்துத் துறைகளின் மேம்பாட்டிற்குமானது என்றார்.
24.
1. பிரிட்டிஷ் அரசின் கீழ் இந்தியா தன்னாட்சி பெறுவது அல்லது கனடா, ஆஸ்திரேலியா ஆகியவற்றின் வழியில் தன்னாட்சிப் பகுதித் (டொமினியன்) தகுதியைப் பெறுவது ஆகியவற்றுக்காகப் பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைக் கோருவதற்காக இந்திய காமன்வெல்த் லீக் என்று தன்னாட்சி இயக்கம் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
2. பின்னர் 1929 - இல் இந்திய லீக் என்று வி.கே. க்ரிஷ்ணமேனன் மாற்றம் செய்தார்.
25.
1. இயந்திரங்களின் அறிமுகம், உற்பத்திக்கான புதிய முறைகள், சில பெரிய மாநகரங்களில் தொழிற்சாலைகளின் பெருக்கம் ஆகியவை காரணமாக ஊதியம் ஈட்டுவோராகத் தொழிற்சாலைப் பணியாளர்கள் என்ற புதிய வர்க்கத்தினர் உருவானார்கள்.
2. இந்தியாவில் பெரும்பாலும் கிராமங்களைச் சேர்ந்த தொழிற்சாலைப் பணியாளர்கள் முதலில் மிகப் பணிவுடனும் முறைசாராமலும் இருந்தனர்.
3. பம்பாயின் சோரப்ஜி ஷபூர்ஜி, மற்றும் என்.எம்.லோக் காண்டே, வங்காளத்தின் சசிபாத பானர்ஜி ஆகியோர் தொழிற்சாலை பணியாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காகத் தங்களின் குரல்களை எழுப்பினர்.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards