12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 03/03/2021
12ஆம் வகுப்பு வரலாறு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு இரண்டு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium History Reduced Syllabus Creative Two Mark Question with Answer key - 2021(Public Exam)
12ஆம் வகுப்பு History / வரலாறு தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , History / வரலாறு பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ History Test1.
ஐ.நா சபை சாசனத்தின் முகவுரை என்ன?
2.
உளவறிதல் கோட்பாட்டை விளக்குக.
3.
பெருமந்தத்தின் பாதிப்புகள் யாவை?
4.
ப்ராவ்தா என்றால் என்ன?
5.
பிஸ்மார்க்கின் கூற்று என்ன?
6.
கியூபெக் சட்டம் பின்னணி யாது?
7.
நிலப்பிரபுத்துவ-முறை ஏன் வீழ்ச்சியடைந்தது.
8.
1956 இல் நிறைவேற்றப்பட்ட தொழில் கொள்கைத் தீர்மானமே மிகவும் உறுதியான கொள்கை அறிக்கையாகும்.அது தொழிலகங்களை மூன்று வகைகளாகப் பிரித்தது.அவை யாவை?
9.
காங்கிரசின் வார்தா கட்டம் குறிப்பு வரைக?
10.
உலக போரில் அச்சு நாடுகளோடு இந்திய தேசிய இராணுவம் எவ்வாறு செயல்பட்டது?
11.
இந்துமத மறுமலர்ச்சி பற்றி அன்னிபெசன்ட் அம்மையாரின் கருத்து என்ன?
12.
அரசின்மைவாதம் என்பதன் பொருள் யாது?
13.
ஃபாலன்ஸ்டெரெஸ் என்பது என்ன?
14.
தனித் தொகுதி முறையினைப் பற்றி எழுதுக.
15.
வாஹாபி இயக்கம் பற்றி குறிப்பு எழுதுக.
16.
கிலாபத் இயக்கம் தோன்றக் காரணம் என்ன?
17.
கராச்சி அமர்வின் முக்கியத்துவம் குறித்து கூறு.
18.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தொடங்கப்பட்ட பிராமணரல்லாதார் இயக்கங்கள் யாவை?
19.
தன்னாட்சி என்பதன் பொருள் யாது?
20.
ஐரோப்பிய நாடுகளில் சோவியத் ரஷ்யா எவ்வாறு கம்யூனிசத்தை பரப்பியது?
21.
இரண்டாம் உலகப்போருக்கு பிந்தைய ஐரோப்பிய நிலை எவ்வாறிருந்தது?
22.
போய்டி ஓடோமா பற்றிய குறிப்பு வரைந்து அதன் தோல்விக்கான காரணங்களை குறிப்பிடுக.
23.
எந்த மாதிரி சூழ்நிலையில் பிரெஸ்ட் லிடோவ்ஸ்க் உடன்படிக்கை கையெழுத்தானது?
24.
காம்பராய் போர் பற்றி எழுதுக.
25.
எமிகிரஸ் என்போர் யாவர்?
26.
பிரெஞ்சுப் புரட்சிக்கு முந்தைய பிரான்சின் நிலை என்ன?
27.
வர்ஜின் ஆஃப் தி ராக்ஸ் பற்றி குறிப்பு வரைக.
28.
அச்சு இயந்திரங்கள் உலகின் அறிவு சார்ந்த வாழ்க்கை உத்வேகம் பெறக் காரணமாயிற்று என்ற கூற்றை விளக்குக.
29.
நில உச்சவரம்பு பொருள் யாது?
30.
ஆக்கப்பூர்வமான சுதேசி என்பது பற்றி ரவீந்திரநாத் தாகூரின் கருத்து என்ன?
31.
புதிய கிழக்கு வங்காளத்தில் அடங்கிய பகுதிகள் யாவை?
32.
ரிஸ்லி அறிக்கை பற்றி குறிப்பு வரைக.
33.
இங்கிலாந்தில் ஏற்பட்ட தொழிற்புரட்சி இந்திய பொருளாதாரம் சீர்குலைய வழிவகுத்தது என்ற கூற்றை நிரூபி.
34.
நேரு அறிக்கை பற்றிக் குறிப்பு வரைக?
35.
இந்திய அரசியல் நிர்ணயசபை எப்படி உருவானது?
36.
கஃபிலா (Kafila) என்றால் என்ன?
37.
ஸ்டேன்ஸ் நூற்பு மற்றும் நெசவு ஆலை கோவை பற்றி எழுதுக.
38.
கல்பனா தத் பற்றி சிறு குறிப்பு தருக?
39.
நேரடி நடவடிக்கை நாள் என்றால் என்ன?
40.
ஐக்கிய மாகாணத்தில் வகுப்புவாதம் குறிப்பு தருக?
41.
சௌரி சௌரா சம்பவ விளைவு யாது?
42.
லாகூர் காங்கிரஸ் மாநாடு பூரண சுயராஜ்ஜியம் விவரி?
43.
தண்டியாத்திரை பற்றி எழுதுக.
44.
சென்னை வாசிகள் சங்கம் என்றால் என்ன?
45.
இந்தியாவில் ஏற்பட்ட சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள் யாவை?
46.
சுதேசி பற்றி காந்திஜியின் கருத்து யாது?
47.
சுதேசி இயக்கம் எப்போது பிரகடனம் செய்யப்பட்டது?
48.
சுதேசி இயக்கத்தினால் வளர்ச்சி பெற்ற பிரதேச மொழிப் பத்திரிக்கைகள் யாவை?
49.
சுயராஜ்ஜியம் பற்றி திலகரின் கருத்து யாது?
50.
தன்னாட்சி இயக்கத்தின் வீழ்ச்சி எப்போது ஏற்பட்டது?
1.
போர்கள் மனிதர்களின் மனங்களிலிருந்து தொடங்குவதால் அம்மனிதர்களின் மனங்களில்தான் அமைதிக்கான பாதுகாப்புகளும் கட்டப்பட வேண்டும்.
2.
பரஸ்பரம் இராணுவ ரகசியங்கள் குறித்த செய்திகளையும்,ஏனையவற்றை சேகரிக்கவும் உளவறிதல் (அ) ஒற்றறிதல் முறையை முக்கியக் கருவியாகப் பயன்படுத்தின.
3.
1.செலவு குறைப்பு, அதிகமான வரிவிதிப்பு போன்ற அவசரகால நடவடிக்கைகளை மேற்கொண்டும் இங்கிலாந்தின் நிலைமையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.
2.பெருமந்தத்திற்கு எதிர்வினையாற்றவும், உள்ளூர் சந்தையைக் காக்கவும் ஒவ்வொரு நாடும் தனிப் பாதுகாப்புக் கொள்கையை உருவாக்கிக் கொண்டதோடு தங்களின் பணமதிப்பை குறைத்துக் கொள்ளவும் செய்தன.
3.பணமதிப்பிறக்கம் கடன் வழங்குவோரை கடனளிப்பதை நிறுத்திக்கொள்ளத் தூண்டியது. இதனால் உலகளாவிய கடன் புழக்கம் சுருங்கியது.
4.
ப்ராவ்தா என்ற ரஷ்ய சொல்லுக்கு "மெய்" என்று பொருள். இதுவே சோவியத் ஒன்றியத்தின் பொதுவுடைமை கட்சிக்குரிய அங்கீகரிக்கப்பட்ட செய்தித்தாளாக 1918 முதல் 1991 வரை இருந்தது.
5.
பிஸ்மார்க் குறிப்பிட்டதாவது வெறும் சொற்பொழிவுகளாலும், பெரும்பான்மையினரின் தீர்மானங்களினாலும் நெடுநாளைய பெரும் பிரச்சனைகளைத் தீர்த்துவிட முடியாது,மாறாக அது இரத்தத்தினாலும், இரும்பினாலுமே சாத்தியமாகும்.
6.
1. 1774 இல் இங்கிலாந்துப் பாராளுமன்றத்தால் இயற்றப்பட்ட கியூபெக் சட்டத்தின்படி, ஓஹியோ மற்றும் மிசிசிபி ஆகிய இரு நதிகளுக்கு இடைப்பட்ட நிலப்பகுதி கியூபெக்கிற்கு வழங்கப்பட்டது.
2.இதனால் நியூயார்க்,பென்சில்வேனியா,வெர்ஜினியா ஆகிய அரசுகள் கோபம் கொண்டன.ஏனெனில் இதே நிலப்பகுதி இக்கலனியரசுகளுக்கு அரச பட்டயத்தின் மூலம் முன்னரே வழங்கப்பட்ட பகுதிகளாகும்.மேலும் இப்புதிய பகுதியில் பிரெஞ்சுக் குடிமைச் சட்டங்களும் ரோமன் கத்தோலிக்க மதமும்,செயல்பட இங்கிலாந்து அனுமதித்ததன் மூலம் பிராட்டஸ்டண்ட் காலனிகளையும் கோபம் கொள்ளச் செய்தது.
7.
1.இந்த முறையில் இடைக்கால அரசர்கள் பிரபுக்களின் தயவில் இருந்தார்கள்.
2.அரசரின் எதிரிகளுடன் எந்த நேரத்திலும் கைகோர்க்கும் வகையில் பிரபுக்கள் ஆயத்தமாக இருந்தனர்.
3.அரச குத்தகை நிலங்கள் மீது அரசர்களுக்கு இந்தக் கட்டுப்பாடும் இருக்கவில்லை.
4.பிரபுக்கள் தங்களுக்குச் சொந்தமான நிலங்களை வைத்திருந்ததோடு தங்களைப் பாதுகாத்துக்கொள்ள ராணுவத்தையும் வைத்திருந்தனர்.
5.இம்முறையில் கீழ் அரசரின் நிலையம்,அதிகாரமும் குறைந்தே காணப்பட்டது.
8.
அட்டவணை :
1."அ " வில் இடம்பெற்ற தொழிலகங்கள் அரசின் முற்றுரிமையின் கீழிருந்தன.
2. அட்டவணை "ஆ"வில் இடம் பெற்ற தொழிலகங்கள் அரசு புதிய அலகுகளைத் தொடங்கலாம்,ஆனால் தனியார் துறையினரும் தங்கள் அலகுகளை அமைக்கலாம் அல்லது விரிவாக்கலாம்.மீதமுள்ள தொழிலகங்கள் அட்டவணை "இ" யில் இடம்பெற்றன.
9.
இந்திய தேசிய காங்கிரசின் செயற்குழு 1942 ஜூலை 14இல் வார்தாவில் சந்தித்தது.இக்கூட்டத்தில் நாடு தழுவிய சட்ட மறுப்புப் போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. இத்தீர்மானத்தை ஏற்றுக் கொள்ள மறுத்த இராஜாஜியும் புலாபாய் தேசாயும் காங்கிரஸ் செயற்குழுவில் இருந்து பதவித் துறப்பு செய்தனர்.நேருவும் அதே நிலைப்பாட்டைக் கொண்டிருந்தபோதும் செயற்குழுவின் பெரும்பான்மை முடிவுக்குக் கட்டுப்பட்டார்.
10.
இம்பாலை நோக்கிய ஜப்பான் படைகளின் நகர்வில் ஷா நவாஸால் வழி நடத்தப்பட்ட இந்திய தேசிய இராணுவத்தின் ஒரு பிரிவும் (battalion) பங்கெடுத்தது.இது அச்சு நாடுகளும் ஜப்பானியப் படைகளும் பின்னடைவைச் சந்தித்துக் கொண்டிருந்த 1944 இன் பிற்பகுதியில் நடந்தேறியது.இம்பாலைக் கைப்பற்றும் முயற்சியில் ஜப்பான் வெற்றிப் பெற முடியாததைத் தொடர்ந்து 1945இன் நடுவில் அது பிரிட்டிஷ் படைகளிடம் சரணடைந்தது.கைது செய்யப்பட்ட ஷா நவாஸ் மீதும் அவரோடிருந்த வீரர்கள் மீதும் இராஜ துரோகக் குற்றம் சுமத்தப்பட்டது.
11.
பண்டைய மதங்களைப் புத்துயிர்ப்பு செய்து வலுப்படுத்தி,உயர்த்துவதே இந்தியர்களின் முதற்பணி ஆகும்.இது கடந்த காலப் பெருமையுடன்,ஒரு புதிய சுயமரியாதையையும் எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையையும், ஒரு தவிர்க்க இயலாத விளைவாகவும்,தேச நாட்டுப்பற்றுடன் கூடிய வாழ்வின் ஒரு பேரலையாகவும்,நாட்டைப் புனரமைப்பதற்கானத் தொடக்கமாகவும் உருவாக்கப்பட வேண்டும்.
12.
அரசையும் சமூகத்தின் அமைப்பையும் நம்பிக்கைக் கொண்டு அதற்காக வலியைப் பயன்படுத்தாமலும்,கட்டாயப்படுத்தாமலும்,தன்னார்வ அடிப்படையில் கூட்டுறவாக அமைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டோர்.
13.
1.சார்லஸ் ஃபூரியர் கற்பனைவாத சோஷலிஸ்டுகளில் ஒருவர்.
2.சமூக சூழலே மனித இனத்தின் கவலைகளுக்கு முதல் காரணம் என்று நம்பினார்.
3.ஃபாலன்ஸ்டெரெஸ் என்ற பெயர் விளங்கும் கூட்டுறவு சமூகத்தை உருவாக்கவும் அவர் விழைந்தார்.
14.
1.தனித் தொகுதி முறையில் முஸ்லீம்கள் மட்டுமே வேட்பாளருக்கு வாக்களிக்க முடியும்.
2.1909 ம் ஆண்டு மிண்டோ-மார்லி சட்டம், பேரரசு சட்டமன்றத்தில் அலுவலரல்லாத 27 உறுப்பினர்களுக்கான இடங்களில் எட்டு இடங்களை முஸ்லீம்களுக்கு வழங்கியது.
3.மாகாண சட்டமன்றங்களின் இடங்களை முஸ்லீம் வேட்பாளர்களுக்கு பின்வருமாறு ஒதுக்கியிருந்தது. அவையாவன: மதராஸ் 4;பம்பாய் 4;வங்காளம் 5 இதுவே தனித்தொகுதி முறை என்பதாகும்.
15.
1.வாஹாபி இயக்கம் இந்து முஸ்லிம் இடையே விரிசலை ஏற்படுத்தியது.
2.வாஹாபிகள் இஸ்லாமை அதனுடைய ஆதித்தூய்மைக்கு அழைத்துச் செல்லவும், அதன் மூடப் பழக்க வழக்கங்களை முடிவுக்கு கொண்டு வரவும் விரும்பினர்.
16.
1.முதல் உலகப்போருக்கு பின்னர் கலீஃபா, காபா (இஸ்லாமியர் புனித இடம்) ஆகியவற்றின் நலன்களை பாதுகாப்பதாக இங்கிலாந்து வாக்குறுதி வழங்கியிருந்தது.
2.ஆனால் போருக்குப் பின்னர் வாக்குறுதியை நிறைவேற்ற தவறியதால் முஸ்லிம் சமூகத்தினர் ஆங்கிலேயருக்கு எதிராக கிலாபத் இயக்கத்தை தொடங்கினர்.
17.
1.உலக அளவிலான பொருளாதார பெருமந்த நிலையால் விவசாயம் பெருமளவில் பாதிக்கப்பட்ட விவசாயிகளை காங்கிரஸ் ஒன்று திரட்டியது.
2.குத்தகை செலுத்தா மற்றும் வரி செலுத்தா போராட்டத்தைக் கடைப்பிடித்தது.
3.பெருமந்த அழுத்தத்தினால் ஏற்பட்ட சமூக பொருளாதார தேவைகள் குறித்தும் கராச்சி அமர்வில் தீவிரமாய் பேசப்பட்டது.
18.
கிழக்கிந்தியாவில் நாமசூத்ரா இயக்கம், வடமேற்கில் ஆதிதர்மா இயக்கம், மேற்கு இந்தியாவில் சத்யசோதக் இயக்கம், தென்னிந்தியாவில் திராவிட இயக்கம்.
19.
மத்திய அல்லது பிரதேச அரசிடமிருந்து அதனைச் சார்ந்த அரசியல் பகுதிகளுக்கு அங்கு வாழும் மக்கள் அதற்கு அரசியல் ரீதியாக விசுவாசமாக இருப்பார்கள் என்ற நிபந்தனையுடன் வழங்கப்படும் தன்னாட்சியைக் குறிக்கிறது. பழங்கால ரோமானிய அரசியலும், நவீன ஆங்கிலேய அரசிலும் இது பொதுப்படையான அம்சமாக இருந்தது.
20.
1. இடதுசாரி சார்பு கொண்ட இயக்கங்களையும் கட்சிகளையும் சோவியத் யூனியன் ஆதரித்தது.
2. ருமேனியா, பல்கேரியா மற்றும் ஹங்கேரி ஆகிய நாடுகளில் இடதுசாரி அரசுகளை நிறுவியது.
3. யுகோஸ்லோவியாவில் மார்ஷல் டிட்டோ தலைமையில் கம்யூனிச அரசு உருவானது.
21.
1. நாஜிகள் 6 மில்லியன் ஐரோப்பிய யூதர்களைக் கொன்றனர்.
2. வார்சா, கீவ், டோக்கியோ மற்றும் பெர்லின் நகரங்கள் முற்றிலும் பாழாயின.
3. உணவு மற்றும் மூலப்பொருட்களின் பற்றாக்குறை கவலைக்கிடமாக இருந்தது.
22.
1. 1908 ஆம் ஆண்டு உள்ளூர் அரசியல் சங்கமான போய்டி ஓடோமா எனும் அமைப்பு உருவானது.
2. இவ்வமைப்பு கிழக்கிந்திய தீவுகளில் தெளிவான தேசியவாதத்தை வெளிப்படுத்தியது.
3. இச்சங்கம் வஹிதின் சுதுரோஹீசோடோ என்பவரின் திட்டத்தின்படி ஏற்படுத்தப்பட்டது.
23.
1. இடைக்கால அரசின் வீழ்ச்சிக்கு மிக முக்கிய காரணம் ரஷ்யா முதல் உலகப்போரிலிருந்து விலகாதது என லெனின் கருதினார்.
2. லெனின் உடனடியாக அமைதி ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் இறங்கினார்.
3. எனவே 1918 பிரெஸ்ட் லிடோவ்ஸ்க் உடன்படிக்கை கையெழுத்தானது.
24.
1. இப்போர் நவம்பர், டிசம்பர் 1917ல் நடந்த போராகும்.
2. இப்போரில் பிரிட்டிஷ் அதிக அளவில் டாங்கி வகை பீரங்கிகளை பயன்படுத்தியது.
3. திடீரென 340 டாங்கிகள் போர் முனையில் தோன்றியதும் ஜெர்மானியர்கள் பெரும் திகைப்பிற்கு உள்ளானார்கள்.
25.
1.அரசியல் காரணங்களுக்காக தங்கள் சொந்த நாட்டிலிருந்து வெளியேறி மற்றொரு நாட்டில் குடியேறுவோரை எமிகிரஸ் என்பர்.
2.பிரான்சின் அன்றைய சூழலில் புரட்சியைத் தொடர்ந்து வந்த ஆண்டுகளில் நாட்டை விட்டு ஓடிய பிரபுக்களை எமிகிரஸ் என அழைத்தனர்.
26.
1.பிரெஞ்சுப் புரட்சிக்கு முன்னர் பிரான்சின் அரசியல், சமூக முறைகள் பண்டைய ஆட்சிமுறை என்றழைக்கப்பட்டது.
2.அரசர் அனைத்து அதிகாரத்தையும் பெற்றிருந்தார்.
3.ஏழை மக்களின் மீது வரி விதித்த அரசு, பணம் படைத்தோர் மீது வரி விதிக்கவில்லை.
27.
1.லியானார்டோ டாவின்சியின் படைப்புகளில் ஒன்று வர்ஜின் ஆஃப் தி ராக்ஸ் ஆகும்.
2.இவ் ஓவியத்தில் கன்னிமேரி இருட்டில் இருந்து வெளியே வருவார்.இளையவரான ஜானை புரோட்டஸ்டன்ட் கிறிஸ்தவக் குழந்தையாகக் கொண்டிருப்பார்.
28.
1.கி.மு.இரண்டாம் நூற்றாண்டில் சீனா காகிதம் கண்டுபிடித்தது.
2.ஜெர்மனிக்கு கி.பி.14 ஆம் நூற்றாண்டில் தான் அறிமுகமானது.
3.ஜோஹன்னஸ் குட்டன்பெர்க் என்பவரால் நகரும் தட்டச்சு மற்றும் அச்சகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
29.
1.நில உச்சவரம்பு என்பது தனிநபர்கள் அதிகபட்சம் எவ்வளவு நிலங்களை சொந்தமாக வைத்துக் கொள்ளலாம் என்பதாகும்.
2.இது தொடர்பாக தமிழ்நாட்டில் முதன் முறையாக 1961 இல் நடைமுறைப்படுத்தப்பட்டது.
3.1972 வரை ஒரு சில நில உரிமையாளர் எவ்வளவு நிலங்களை சொந்தமாக வைத்துக் கொள்ளலாம் என்பதற்கு உச்சவரம்பு நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.
30.
1.சுய உதவி எனும் ஆக்கத் திட்டத்தை அவர் கோடிட்டு காட்டினார்.
2.பொருளாதார வளர்ச்சிக்கு அழைப்பு விடுத்தார்.
3.இதன் விளைவாக அனைத்து இடங்களிலும் ஜவுளி கைத்தறித் துணிகள்,சோப்புகள்,மட்பாண்டங்கள்,தீப்பெட்டி, தோல் பொருட்கள் ஆகிய விற்பனை நிலையங்கள் பெருகின.
31.
1.அசாம்,சிட்டகாங்,டாக்கா,ராஜஷாகி மலையின் சில பகுதிகள் அசாம் மாகாணம் ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதிகள் கிழக்கு வங்காளம் ஆகும்.
32.
1.1903 டிசம்பரில் இந்தியாவின் மறுவிநியோகம் தொடர்பான குறிப்புகளில் ஒரு திட்டத்தை தீட்டினார் கர்சன் பிரபு.
2.இதுவே ரிஸ்லி அறிக்கை என்ற பெயரில் வெளியிடப்பட்டது.
3.இவ்வறிக்கை பிரிவினைக்கு இரண்டு காரணங்களை முன்வைத்தது.
1) வங்காளத்தில் சுமை குறைப்பு.
2) அசாமின் முன்னேற்றம் ஆகும்.
33.
1.இந்தியாவிலிருந்து பருத்தி,சணல்,பட்டு ஆகிய கச்சாப் பொருட்கள் இங்கிலாந்து எடுத்துச் செல்லப்பட்டு உற்பத்தி பொருட்களாக மாறி இந்திய சந்தைகளில் விற்பனை செய்யப்பட்டது.
2.இங்கிலாந்துப் பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டதால் இந்தியாவில் நெசவாளர்,தச்சர்,கொல்லர்,காலணிகள் தயாரிப்போர் வேலை இழந்தனர்.
3.உணவுப் பற்றாக்குறைக்கு வழிவகுத்தது.
34.
1. 129 - இல் வெளியாக நேரு அறிக்கை பிரிவு 86 - இல் பின்வருமாறு தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது.
2. நிதி மற்றும் நிர்வாக காரணங்களுக்கு உட்பட்டு, பெரும்பான்மை மக்கள் வாழும் இட அடிப்படையில் மாநிலங்களை மொழி வாரியாக மறு சீரமைப்பதற்கான கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும் என்பதாகும்.
35.
1. இந்திய அரசாங்கச் சட்டம் 1935 - இந்த அடிப்படையில் ஆகஸ்ட் 1946 - இல் மாகாண சட்டமன்றங்களுக்கான தேர்தல் நடைபெற்றது.
2. மாகாண சட்ட மன்றங்கள் மத்திய சட்டமன்றத்தைத் தேர்ந்தெடுக்க அது அரசமைப்பு நிர்ணய சபையாக செயல்பட்டது.
3. இதன் தலைவராக டாக்டர் இராஜேந்திர பிரசாத் அரசமைப்பு நிர்ணய சபையின் கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
36.
1. இரண்டு தேசங்கள் (இந்தியா, பாகிஸ்தான்) உருவான பிறகு இரண்டு நாடுகளிலும் இருந்து மக்கள் இடம் பெயர்ந்தனர்.
2. அவ்வாறு இடம் பெயர்ந்த மக்கள் இரு நாட்டு எல்லையைக் கடப்பதற்காக நகர்ந்த அகதிகளின் நீண்ட வரிசை கஃபிலா எனப்பட்டது.
37.
(i) சென்னை மாகாணத்தில் தொழில்துறை வளர்ச்சி கணிசமானதாக இருந்தது.
(ii) குறைந்த வட்டி விகிதத்தில் கடன் போன்றவை கோயம்புத்தூரில் ஜவுளித்துறையில் விரிவாக்கத்திற்கு வழிவகுத்தன.
(iii) 1929 - 37 களில் அதிக அளவு மாற்றத்தை ஏற்படுத்தியது.
(iv) அதிக மக்கள் வேலை வாய்ப்பை பெற்றார்கள்.
38.
(i) 1920 ல் கல்பனா தத் என்னும் ஓர் இளம் பெண் கம்யூனிஸ்ட் தலைவர் பி.சி. ஜோஷியைத் திருமணம் செய்துகொண்டார்.
(ii) கல்பனா ஜோஷி-சிட்டாகாங் ஆயுதப் படைத்தளத்தை துணிகரமாகத் தாக்கினார்.
(iii) இதன் மூலம் இளம் நெஞ்சங்களில் நீங்காத இடம் பிடித்தார்.
39.
1. காங்கிரசும் ஜின்னாவும் அமைச்சரவை தூதுக்குழுத் திட்டத்தை ஏற்றுக் கொண்டனர்.
2. ஆனால் பல வாரங்கள் நடைபெற்ற இரகசிய பேச்சுவார்த்தைகளுக்குப் பின் ஜூலை 29, 1946 இல் முஸ்லிம் லீக் அமைச்சரவை தூதுக்குழு திட்டத்தை நிராகரிப்பதாக அறிவித்தது.
3. மேலும் இந்தியாவிலுள்ள அனைத்து முஸ்லிம்களையும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஆகஸ்ட் 16 அன்று "நேரடி நடவடிக்கை நாளில்" ஈடுபடவும் அழைப்பு கல்கத்தாவில் நான்கு நாட்கள் கலவரங்களும் கொலைகளும் நடந்தேறின.
40.
1. காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கம் 1922 இல் நிறுத்தப்பட்டது.
2. 1924 இல் கலிஃபா பதவி ஒழிக்கப்பட்டதும், முஸ்லிம்களிடையே பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
3. ஒத்துழையாமை இயக்கத்தின் பின் விளைவாகக் காங்கிரசுக்கும் முஸ்லிம் லீக்குக்குமான ஒப்பந்தம் சிதைந்தது.
41.
இந்த நிகழ்வில் 22 போலீசார் உயிரிழந்ததால், காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தை திரும்ப பெறுவதாக அறிவித்தார்.
42.
1. இந்திய விடுதலை மற்றும் காங்கிரஸ் வரலாற்றில் காங்கிரஸ் கட்சியின் லாகூர் மாநாடு சிறப்பு வாய்ந்ததாகும்.
2. 1929 டிசம்பர் 31 - இல் லாகூரில் மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 ஆம் நாளை விடுதலை நாளாகக் கொண்டாட முடிவு செய்யப்பட்டது.
3. சட்டமறுப்பு இயக்கம் காந்தியடிகளின் தலைமையில் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
43.
1. சட்டமறுப்பு இயக்கத்தின் ஒரு பகுதியாக காந்தியடிகள் தண்டியாத்திரையை அறிவித்தார்.
2. உப்பு மீது அநியாய வரி விதிக்கப்பட்டதை எதிர்த்து நடந்த ஆர்ப்பாட்டம் இதுவாகும்.
3. 1930 ஏப்ரல் 6 - இல் தண்டி சென்று அடைந்தார். இது சபர்மதி ஆசிரமத்தில் இருந்து குஜராத் தண்டி வரை 375 கிலோமீட்டர், 78 தொண்டர்களுடன் நடைபெற்றது.
44.
1. 1852 பிப்ரவரி 26இல் சென்னை வாசிகள் சங்கம் எனும் அமைப்பு உருவாக்கப்பட்டது.
2. சென்னையின் மிக முக்கிய வணிகரான காஜுலா லட்சுமிநரசு என்பவரே இவ்வமைப்பு உருவாவதற்கு உந்து சக்தியாய் திகழ்ந்துள்ளார்.
3. இவ்வமைப்பு 1852 டிசம்பரில் சமர்ப்பித்த மனுவில் ரயத்துவாரி, ஜமீன்தாரி முறைகள் வேளாண் வர்க்கத்தினரைக் கடும் துன்பங்களுக்கு உள்ளாக்கியதைச் சுட்டிக்காட்டியது.
45.
1. பத்தொன்பதாம் நூற்றாண்டில் நடைபெற்ற சீர்திருத்த இயக்கங்களைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம். ராஜாராம் மோகன் ராயால் நிறுவப்பெற்ற பிரம்மசமாஜம்.
2. டாக்டர் ஆத்மராம் பாண்டுரங் உருவாக்கிய பிரார்த்தனை சமாஜம், சையத் அகமது கானால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட அலிகார் இயக்கம் ஆகிய சீர்திருத்த இயக்கங்கள் ஆகும்.
46.
சுதேசி என்பது நமக்குள்ளிருக்கும் ஆன்மபலம் அது வெகு தொலைவிலிருந்து கிடைப்பனவற்றை ஒதுக்கி வைத்து நமக்கு வெகு அருகேயுள்ள சுற்றுப்புறத்திலிருந்து கிடைக்கும். இங்குள்ளவர்களால் தயார் செய்யும் பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
47.
1905-ஆகஸ்ட் 7-இல் நகர அரங்கில் (Town Hall) நடைபெற்ற கூட்டத்தில் சுதேசி இயக்கம் முறையாகப் பிரகடனம் செய்யப்பட்டது.
48.
1. தமிழ்நாட்டில் சுதேசமித்திரன், மகாராஷ்டிராவில் கேசரி, வங்காளத்தில் யுகாந்தர் ஆகிய பத்திரிகைகள் வளர்ச்சி பெற்றன.
2. இந்தியாவின் பல பகுதிகளில் பிரதேச மொழிப் பத்திரிகைகள் பெற்ற வளர்ச்சி சுதேசி இயக்கத்தின் சாதனையாகும்.
49.
1. தீவிர தேசியவாத தலைவர்களின் பொதுவான குறிக்கோள்களில் ஒன்று சுயராஜ்ஜியம் என்பதாகும்.
2. திலகருக்கு சுயராஜ்ஜியம் என்பது நிர்வாகத்தின் மீது ஆன இந்தியர்களின் கட்டுப்பாடு அல்லது சொந்த மக்களின் நிர்வாகம் என்பது மட்டுமே தவிர இங்கிலாந்துடனான உறவுகள் அனைத்தும் துண்டித்துக் கொள்வதல்ல எனக் கருதினர்.
50.
1. இந்தியக் கிளர்ச்சி என்ற புத்தகத்தின் ஆசிரியர் வேலண்டைன் சிரொலிக்கு எதிராக தாம் தொடுத்த அவதூறு வழக்கு நடத்துவதற்காக 1918 செப்டம்பரில், திலகர் பிரிட்டனுக்கு சென்றது மற்றும் உத்தேசிக்கப்பட்ட மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தங்களை அன்னி பெசன்ட் ஏற்றுக் கொண்ட பிறகு தன்னாட்சி இயக்கம் வீழ்ச்சிக் கண்டது.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards