12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 03/03/2021
12ஆம் வகுப்பு வரலாறு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் - 2021 - 12th Standard Tamil Medium History Reduced Syllabus Public Exam Model Question Paper - 2021
12ஆம் வகுப்பு History / வரலாறு தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , History / வரலாறு பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ History Test1.
கூற்று :தன்னாட்சிக்கான அரசியல் சீர்திருத்தங்கள் குறித்து மேலும் வலியுறுத்த முடியவில்லை.
காரணம்: இந்திய தேசிய காங்கிரஸ் மிதவாத தேசியவாதிகள் மற்றும் தீவிர தேசியவாதிகள் என்று குழுக்களாகப் பிளவுபட்டிருந்தது.
கூற்று சரி காரணம் தவறு
கூற்று தவறு,காரணம் சரி
கூற்று சரி காரணம் கூற்றிற்கான விளக்கம்
கூற்று சரி காரணம் கூற்றிற்கான விளக்கம் இல்லை
2.
தீவிர தேசியவாதம் சரியத் தொடங்கிய வருடம்
1905
1907
1908
1907
3.
கூற்று:தாதாபாய் நௌரோஜி இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக மூன்று முறை தேர்வு செய்யப்பட்டார்.
காரணம்:1905 ஆம் ஆண்டு வரையில் இந்திய விடுதலை இயக்கம் மிதவாத தேசியவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது.
கூற்று காரணம் இரண்டும் சரி,காரணம் கூற்றை விளக்குகிறது.
கூற்று காரணம் இரண்டும் சரி,ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை.
கூற்று சரி ஆனால் காரணம் தவறு.
கூற்று தவறு ஆனால் காரணம் சரி
4.
கூற்று: கற்பனைவாத சோஷலிஸ்டுகள் உற்பத்திக் கருவிகளை பொதுவில் கொண்ட மாதிரி சமூகங்களைப் பரிந்துரைத்தனர் .
காரணம்: அவர்கள் வறுமையும், வேலையில்லா திண்டாட்டமும் ஒழிந்த சோஷலிச சமூகத்தை வளர்த்தெடுக்கும் தொலைநோக்குப் பார்வையைக் கொண்டிருந்தனர் .
கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
கூற்றும் காரணமும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை .
கூற்று சரி. காரணம் தவறு.
கூற்று தவறு. காரணம் சரி
5.
6.
7.
கூற்று: பத்தொன்பதாம் நூற்றாண்டின் இரண்டாவது பாதியில் பல நாடுகள் மிகைஉற்பத்தியால் பிரச்சனைகளை எதிர்கொண்டன.
காரணம்: மிகைஉற்பத்தி, நாடுகளை புதிய சந்தைகளைக் கண்டுபிடிக்க அழுத்தங்கொடுத்தது.
கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது
கூற்றும் காரணமும் சரி ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை
கூற்று சரி. காரணம் தவறு
கூற்று தவறு. காரணம் சரி
8.
நவீன செயல்முறை அறிவியலின் தந்தை எனக் கருதப்படுபவர் யார்?
அரிஸ்டாட்டில்
பிளாட்டோ
ரோஜர் பேக்கன்
லாண்ட்ஸ்டெய்னர்
9.
பின்வருவனவற்றைப் பொருத்தி சரியான விடையைத் தேர்வு செய்க.
| 1. இந்திய தேசிய காங்கிரஸ் கராச்சி கூட்டம் | - | 1. 1948 |
| 2. அரசமைப்புக்கான குறிக்கோள் | - | 2. 1956 |
| 3. ஆந்திரப் பிரதேசம் உருவாக்கம் | - | 3. 1931 மார்ச் |
| 4. மூவர் ஆணையம் அமைத்தல் | - | 4. 1946 டிசம்பர் 13 |
| அ | ஆ | இ | ஈ |
| 3 | 4 | 1 | 2 |
| அ | ஆ | இ | ஈ |
| 4 | 3 | 2 | 1 |
| அ | ஆ | இ | ஈ |
| 3 | 4 | 2 | 1 |
| அ | ஆ | இ | ஈ |
| 1 | 3 | 2 | 4 |
10.
"செய்" அல்லது "செத்துமடி" என்னும் முழக்கம் இட்டவர் யார்?
காந்தி
நேரு
ஜின்னா
இவற்றில் யாரும் இல்லை
11.
லக்னோ ஒப்பந்தம் நடைபெற்ற ஆண்டை எழுதுக.
1920
1916
1927
1919
12.
சிட்டகாங் ஆயுதப் படைத்தளத்தைத் துணிகரமாகத் தாக்கிய பெண்மணி யார்?
அன்னி பெசன்ட்
ஜான்சி ராணி
கல்பனா தத்
லட்சுமி
13.
இந்திய பணியாளர் சங்கத்தை தோற்றுவித்தவர் யார் ?
காந்தி
கோகலே
நேரு
சுபாஷ்
14.
கீழே குறிப்பிடப்பட்டுள்ள தலைவர்களில் சுயராஜ்ய கட்சியுடன் தொடர்பில்லாத தலைவர் யார்?
இராஜாஜி
சித்தரஞ்சன் தாஸ்
மோதிலால் நேரு
சத்யமூர்த்தி
15.
மகாத்மா காந்தியடிகளின் “செய் அல்லது செத்துமடி” என எந்த நிகழ்வின் போது அழைப்பு விடுத்தார்?
சட்டமறுப்பு இயக்கம்
ஒத்துழையாமை இயக்கம்
வெள்ளையனே வெளியேறு இயக்கம்
இவை அனைத்தும்
16.
பின்வருவனவற்றைப் பொருத்தி சரியான விடையைத் தேர்வு செய்க.
| பட்டியல் I | பட்டியல் II | |
|---|---|---|
| (அ) அன்னிபெசண்ட் | - | 1. அலிகார் இயக்கம் |
| (ஆ) சையது அகமது கான் | - | 2.தயானந்த சரஸ்வதி |
| (இ) கிலாபத் இயக்கம் | - | 3. பிரம்மஞான சபை |
| (ஈ) சுத்தி இயக்கம் | - | 4. அலி சகோதரர்கள் |
| அ | ஆ | இ | ஈ |
| 3 | 1 | 4 | 2 |
| அ | ஆ | இ | ஈ |
| 1 | 2 | 3 | 4 |
| அ | ஆ | இ | ஈ |
| 4 | 3 | 2 | 1 |
| அ | ஆ | இ | ஈ |
| 2 | 3 | 4 | 1 |
17.
18.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
1920
1925
1930
1935
19.
பின்வருவனவற்றைப் பொருத்தி சரியான விடையைத் தேர்க.
| (அ) இந்தியப் பத்திரிகைச் சட்டம், 1910 | 1. சுய ஆட்சி |
| (ஆ) விடிவெள்ளிக் கழகம் | 2. சார்ந்திருக்கும் நிலைக்கு எதிரான புரட்சி |
| (இ) சுயராஜ்யம் | 3. தேசிய அளவிலான செயல்பாடுகளை நசுக்கியது. |
| (ஈ) சுதேசி | 4. கல்விக்கான தேசியக் கழகம் |
| அ | ஆ | இ | ஈ |
| 3 | 1 | 4 | 2 |
| அ | ஆ | இ | ஈ |
| 1 | 2 | 3 | 4 |
| அ | ஆ | இ | ஈ |
| 3 | 4 | 1 | 2 |
| அ | ஆ | இ | ஈ |
| 1 | 2 | 4 | 3 |
20.
பின்வரும் அமைப்புகள் தொடங்கப்பட்ட சரியான கால வரிசையைத் தேர்வு செய்க.
(i) கிழக்கிந்தியக் கழகம்
(ii) சென்னை மகாஜன சங்கம்
(iii) சென்னைவாசிகள் சங்கம்
(iv) இந்தியச் சங்கம்
ii, i, iii, iv
ii, iii, i, iv
iii, iv, i, ii
iii, iv, ii, i
21.
மெளண்ட் பேட்டன் பிரபுவின் திட்டங்கள் பற்றி விரிவாக எழுதுக.
22.
டாடா இரும்பு மற்றும் எஃகு நிறுவனம் TISCO வளர்ச்சி பற்றி எழுதுக?
23.
பசுவதையும் வகுப்புவாத கலவரங்களையும்பற்றி விவரி.
24.
சூரத் பிளவுப் பற்றி ஒரு கட்டுரை வரைக?
25.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் முக்கியத்துவம் பெற்ற கூட்டு சிந்தனையாளர்களை (Collectivist Thinkers) அடையாளப்படுத்தி அவர்கள் சோஷலிச சிந்தனையை செழுமையாக்க ஆற்றிய பங்கைக் கூறுக.
26.
பாஸ்டில் சிறை தகர்ப்பு முதல் ரோபஸ்பியர் கொல்லப்பட்டது வரையிலுமான பிரெஞ்சுப் புரட்சியின் போக்கினை வரைக.
27.
28.
இந்திய விடுதலைக்குப் பின் ஏற்பட்ட அறிவியல் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் வளர்ச்சி குறித்து ஆய்க .
29.
30.
டாக்டர். அம்பேத்கரின் கல்விப்பணி குறித்து, குறிப்பாக ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக நீதிக்காக அவரின் செயலூக்கத்தை முதன்மைப்படுத்தி விளக்குக.
31.
இந்திய விடுதலை இயக்க வரலாற்றில் கப்பற்படைகலகம் ஒரு சிறப்பான அத்தியாயம் என ஏன் கருதப்படுகிறது?
32.
லக்னோ ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களை முன்னிலைப்படுத்துக?
33.
34.
இந்தியாவில் தேசிய விழிப்புணர்வுக்குப் பிரிட்டிஷாரின் அடக்குமுறை மற்றும் இனவெறிக் கொள்கைகள், எந்த அளவிற்குக் காரணமாக இருந்தன?
35.
உலக போரில் அச்சு நாடுகளோடு இந்திய தேசிய இராணுவம் எவ்வாறு செயல்பட்டது?
36.
மத ரீதியாக காலனித்துவ எதிர்ப்பு உணர்வை வெளிப்படுத்தியவர் பெயரை பட்டியலிடு.
37.
அமெரிக்காவில் ஏற்பட்ட பங்கு சந்தை சரிவு பற்றி எழுதுக?
38.
ஆறு சரத்துகளைக் கொண்ட 1838ஆம் ஆண்டின் மக்களின் பட்டயத்தைப் பற்றி எழுதுக.
39.
கம்யூனிசத்தைக் கட்டுக்குள் வைத்தல் எனும் கோட்பாட்டை விளக்குக.
40.
41.
தன்னாட்சி இயக்கத்தின் வீழ்ச்சி எப்போது ஏற்பட்டது?
42.
லாகூர் தீர்மானத்தின் முக்கியத்துவம் என்ன?
43.
44.
பிரிட்டிஷ் இந்தியாவில் தீவிர தேசியவாதிகளின் மையமாக விளங்கிய தலைவர்களைக் கண்டறிக.
45.
போரில் அமெரிக்கா நுழைந்தபிறகு நிகழ்ந்தவற்றை வரிசைக்கிரமமாகச் எடுத்துக் கூறுக
46.
இந்தியர்களுக்கு எதிரான அடக்கு முறை மற்றும் சுரண்டல் நடவடிக்கைகள் யாவை?
47.
இந்திய அரசமைப்பு உருவாக்குவதில் காங்கிரஸ் நோக்கம் யாது?
48.
முகமது இக்பால் பற்றி சிறுகுறிப்பு எழுதுக.
49.
50.
"செப்டம்பர் படுகொலைகள்" எதனால் ஏற்பட்டது?
51.
ஜெனீவாவில் பிராட்டஸ்டன்ட் இயக்கத்தை ஒருங்கிணைப்பதில் ஜான் கால்வின் பற்றிய பங்கை ஆராய்க.
52.
இந்திய அரசமைப்பின் தனித்தன்மைகள் யாவை?
53.
பிரதம அமைச்சர் ராம்சே மெக்டொனால்டின் வகுப்புவாத அறிக்கையைப் பற்றி எழுதுக.
54.
தென்னிந்தியாவில் தொழிற்சங்கங்களின் வளர்ச்சிக்காகச் சிங்காரவேலர் ஆற்றிய பங்களிப்புக் குறித்து எழுதுக.
1.
(c)
கூற்று சரி காரணம் கூற்றிற்கான விளக்கம்
2.
(c)
1908
3.
(d)
கூற்று தவறு ஆனால் காரணம் சரி
4.
(a)
கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
5.
(a)
6.
(b)
7.
(a)
கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது
8.
(c)
ரோஜர் பேக்கன்
9.
(c)
| அ | ஆ | இ | ஈ |
| 3 | 4 | 2 | 1 |
10.
(d)
இவற்றில் யாரும் இல்லை
11.
(b)
1916
12.
(c)
கல்பனா தத்
13.
(b)
கோகலே
14.
(a)
இராஜாஜி
15.
(a)
சட்டமறுப்பு இயக்கம்
16.
(a)
| அ | ஆ | இ | ஈ |
| 3 | 1 | 4 | 2 |
17.
(c)
18.
(a)
1920
19.
(c)
| அ | ஆ | இ | ஈ |
| 3 | 4 | 1 | 2 |
20.
(c)
iii, iv, i, ii
21.
1. 1947 ஜூலை 3-ல் மவுண்ட் பேட்டன் பிரபு இந்திய அரசியல் பிரச்சனைகளை தீர்க்க ஒரு திட்டத்தைக் கொண்டு வந்தார் அதன் விவரம்.
2. பிரிட்டிஷ் இந்தியா-இந்தியா மற்றும் பாகிஸ்தான் என இரண்டாகப் பிரிக்கப்படும்.
3. வங்காளம் மற்றும் பஞ்சாப், விரிவாக்கப்படும் வடகிழக்கு எல்லை மாகாணம் அஸ்ஸாமின் சைல்கெட் மாவட்டம் ஆகியவை வாக்கெடுப்புப்படி பிரிக்கப்படும்.
4. பாகிஸ்தான் அரசியலமைப்பை உருவாக்க தனி அரசியலமைப்பு சபை உருவாக்கப்படும்.
5. சுதேசி அரசுகள் அவர்களின் விருப்பப்படி இந்தியாவுடனோ அல்லது பாகிஸ்தானுடனோ, அல்லது தனியாகவோ இருக்கலாம்.
6. ஆகஸ்ட் 15, 1947யை இந்தியா மற்றும் பாகிஸ்தானிடம் அதிகாரத்தை ஒப்படைக்கும் நாளாகத் தீர்மானிக்கப்பட்டது.
22.
(i) 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இந்தியாவில் தொழில் துறை மாற்றுப்பாதை விரிவுபடத் தொடங்கியது.
(ii) 1907 இல் பீகாரிலுள்ள சாக்சி நகரில் டாடா குழுமத்தால் டாடா இரும்பு மற்றும் எஃகு நிறுவனம் (TISCO) முதன்முதலில் சுதேசி இயக்கத்தின் ஒரு நிகழ்வாக அமைக்கப்பட்டது.
(iii) ஜே.என்.டாடா எனப் பிரபலமாய் அறியப்பட்ட "ஜாம்ஷெட்ஜி" நுசர்வஞ்சி டாடா - (1839 - 1904) பரோடாவில் உள்ள நவ்சாரி என்ற இடத்தில் ஒரு பார்சி ஜொராஸ்ட்ரியன் வணிகக் குடும்பத்தில் இருந்து வந்தார்.
(iv) தோராப்ஜி டாடா அவரது தந்தையின் நீண்டகாலக் கனவான இரும்பு மற்றும் எஃகு நிறுவனத்தை 1907 - ஆம் ஆண்டில் நிறுவினார்.
(v) தொலைநோக்கும் பார்வையுடன் இந்திய அறிவியல் கழகம் ஒன்றை பெங்களூரில் டாடா குழுமம் நிறுவியுள்ளது.
23.
1. வடமேற்கு மாகாணங்களில் ஜூலை 1893 இல் ஆசாம்கர் மாவட்டத்தில் இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையில் ஒரு சர்ச்சை ஏற்பட்டது.
2. ஐக்கிய மாகாணங்கள், பீகார், குஜராத் மற்றும் பம்பாய் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு பரந்த பகுதியில் பரவிய கலகங்கள், நூற்றுக்கும் மேற்பட்ட உயிர்களைப் பலி வாங்கின.
3. கெளரக்ஷிணி சபைகள் (பசு பாதுகாப்பு சங்கங்கள்) மிகவும் போர்க்குணம் கொண்டதாக மாறின.
4. பசுக்களின் விற்பனை அல்லது பசுக் கொலையில் சங்கங்களின் பலவந்தமான தலையீடுகள் இருந்தன.
5. பசுவதைத் தொடர்பான கலகங்கள் 1883 க்குப் பின் அடிக்கடி நடைபெற்றன.
6. 1883 மற்றும் 1891 க்கிடையே பஞ்சாப்பில் மட்டும் இத்தகைய 15 பெரும் கலகங்கள் வெடித்தன.
7. பஞ்சாப்பை சேர்ந்த பசுப் பாதுகாவலர்கள், மத்திய மாகாணத்தின் கெளராக்ஷிநீ சபா செயல்பாட்டாளர்கள் தேவநாகரி அலுவல் மொழியாக அங்கீகரிக்க வேண்டும் என்று பரப்புரை செய்தோர் மற்றும்
8. ஐக்கிய மாகாணத்தின் அரசு அலுவலர்கள் ஆகியோர் இந்த கூட்டமைப்பில் இணைந்தனர்.
24.
1. 1906-இல் மிண்டோ இந்திய அரசுப்பிரதிநிதியாகப் பணியமர்த்தப்பட்டதிலிருந்து மிதவாதிகளுக்கும் தீவிர தேசியவாதிகளுக்கும் இடையில் நிலவிய கருத்து வேற்றுமை மேலும் தீவிரமடைந்தது.
2. 1906-இல் கல்கத்தா மாநாட்டில் தாதாபாய் நெளரோஜி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
3. இதில் சுதேசி, புறக்கணிப்பு தேசியக்கல்வி, சுயாட்சி ஆகியவை தொடர்பான நான்கு தீர்மானங்களைத் தீவிர தேசியவாதிகள் நிறைவேற்றினர்.
4. காங்கிரசின் அடுத்த மாநாடு தீவிர தேசியவாதிகள் கோட்டை எனக் கருதப்பட்ட பூனாவில் நடைபெறத் திட்டமிடப்பட்டது.
5. கல்கத்தா மாநாட்டு முடிவுகளால் அச்சம் கொண்டிருந்த மிதவாத தேசியவாதிகள் மாநாடு நடைபெறுமிடத்தைச் சூரத் நகருக்கு மாற்றினர்.
6. காங்கிரசின் அடுத்த தலைவர் பொறுப்புக்கு மிதவாதிகளின் வேட்பாளராக ராஷ்பிகாரி கோஷ் என்பாருக்கு எதிராகத் தீவிர தேசியவாதிகள் லாலா லஜபதி ராயின் முன்மொழிந்தனர்.
7. 1906-இல் கல்கத்தா மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட நான்கு தீர்மானங்களைப் பின்பற்றுவதா? இல்லையா என்று கேள்வியை ஒட்டி நிலைமை கொதிநிலையை எட்டியது.
8. பெரோஸ்ஷா மேத்தாவின் குழு இந்த தீர்மானங்களை நிகழ்ச்சி நிரலில் இருந்து நீக்க கோரியது.
9. இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 1907-இல் நடைபெற்ற சூரத் மாநாட்டில் 1885 டிசம்பரில் உருவான காங்கிரஸ் மிதவாத தேசியவாதிகள் தீவிர தேசியவாதிகள் என இரு குழுக்களாகப் பிரிந்தது. இதுவே "சூரத் பிளவு" எனப்பட்டது.
25.
1. நவீன கால அடிப்படையில் சோஷலிச சிந்தனை இயலாட்சி ஆதரவாளர்கள் (Physiocrats) அல்லது பொருளாதார நிபுணர்களால் உணவு மற்றும் சரக்கு ஆகியவற்றின் உற்பத்தியையும்,விநியோகத்தையும் குறித்த விசாரணை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
2. எட்டியன் கேப்ரியல் மோராலி (Etienne -Gabriel Morelly) 1755 இல் தான் இயற்றிய நூலான கோட் டி நேச்சர் (code de la nature) என்பதில் தனியுடைமையைக் கண்டனத்திற்கும் உட்படுத்தியதோடு சமூகத்தைப் பொதுவுடைமை அமைப்பாக மாற்ற வேண்டி ஒரு முன்மொழிவை வெளிப்படுத்தினார்.
3. செயின்ட் சைமன் பிரிட்டிஷாருக்கு எதிராக அமெரிக்க சுதந்திரப் போரில் பங்கேற்ற ஒரு பிரெஞ்சு உயர்குடிமகனாவார். விஞ்ஞானத்திலும் முன்னேற்றத்திலும் பெரும் நம்பிக்கை கொண்டிருந்த அவர் தன் சமகால பிரெஞ்சு சமூகம் நிலப்பிரபுத்துவத்தின் பிடியில் சிக்கியிருப்பதாக விமர்சித்தார்.
4. சார்லஸ் ஃபூரியர் ஆரம்பகால கற்பனைவாத சோஷலிஸ்டுகளில் ஒருவராவார். அவர் சமூக சூழலே மனித இனத்தின் கவலைகளுக்கு முதல் காரணம் என்று நம்பினார்.
5. மான்செஸ்டர் நகரின் தொழிற்சாலை ஊழியர்களின் கொடுமையான வாழ்க்கைச் சூழலைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், அவரது தொழிற்சாலையில் அவர்களின் மேம்பாட்டிற்காகப் பல சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தினார்.
6. பிரெஞ்சு அரசின்மைவாத சிந்தனையாளராகக் (anarchist) கருதப்படும் புரூதன் சோஷலிச சிந்தனை செழுமை பெற முக்கியப் பங்காற்றியுள்ளார்.
7. தேசிய அரசுகளின் இடத்தில் தன்னாட்சி கொண்ட கூட்டு சமூகங்களின் கூட்டமைப்பு தோன்றவேண்டுமென வலியுறுத்தினார்.
8. அரசு அதிகாரத்தின் துணை இல்லாமல் சோஷலிச சமூகத்தை எட்ட முடியாது என்றும் லூயி பிளாங்க் வாதிட்டார்.பிரான்ஸ் நாட்டில் 1848 இல் உருவான தற்காலிக அரசின் உறுப்பினராகப் பங்குவகித்த அவர் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி வேலைவாய்ப்பற்றோருக்கான பணிமனைகளை உருவாக்கி தேவைப்பட்டோருக்கு பணி கிடைக்க வழிவகை செய்தார்.
9. கார்ல் மார்க்சும் (1818 - 1883) பிரெட்ரிக் ஏங்கல்சும் ( 1820 - 1895 ) சோஷலிச சிந்தனைக்கு அரும் பங்களிப்பை வழங்கியுள்ளார்.
10. மார்க்சும் ஏங்கல்சும் 1848 ஆம் ஆண்டின் புரட்சி நடந்த சமகாலத்தில் தங்களின் கம்யூனிஸ்ட் மேனிபெஸ்டா என்ற நூலை வெளியிட்டார்கள்.அதிகவும் புகழ்பெற்ற தொழிலாளர்களைத் திரட்டும் கூக்குரலான "உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்! நீங்கள் இழப்பதற்கு ஏதுமில்லை,அணிந்திருக்கும் விலங்குகளைத் தவிர" என்பது இடம் பெற்றிருந்தது.
26.
பாஸ்டில் சிறை தகர்ப்பு :
1.அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தால் அல்லல்பட்ட பெண்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.அரசர் பாரிஸ் நகர வீதிகளுக்கு செல்லும்படி படைகளுக்குக் கட்டளையிட்டார்.இதனால் கோபம் கொண்ட மக்கள் 1789 ஜூலை 14-ல் பாஸ்டில் சிறையை தகர்த்து கைதிகளை விடுவித்தனர்.
தேசிய மன்றம்:
1.பாஸ்டில் சிறை தகர்ப்பால் ஊக்கம் பெற்ற தேசிய சட்டமன்றம் 1791ல் அரசியலமைப்பை உருவாக்கியது. புதிய அரசியலமைப்பு மூன்று வெவ்வேறு அங்கங்களை பரிந்துரைத்தது.
குழுக்களின் தோற்றம்:
1.தேசிய சட்டமன்றம் உருவாக்கப்பட்ட பின்னரும் கூட சாதாரண மக்களின் துயரங்கள் தொடர்கதையாக இருந்தன. மனநிறைவு பெறாத மக்கள் தங்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகள் குறித்து விவாதம் செய்ய அரசியல் குழுக்களை உருவாக்கத் தொடங்கினர்.
2.முக்கியமான குழு ஜேக்கோபியன் குழு ஆகும்.இதன் தலைவர் மாக்ஸ்மிலியன் ரோபஸ்பியர் ஆவார்.கார்டிலியர் கிளப்பில் செல்வாக்கு பெற்றவர் டாண்டன் ஆவார்.
3.ஜேக்கோபியன் குழுவிற்குள் இருந்த கிராண்டியர்கள் அரசரின் ஆதரவாளராக இருந்தனர்.
ஜேக்கோபியன்களின் ஆட்சி:
1.1793க்கும் 1794க்கும் இடைப்பட்ட காலம் தீவிர சீர்திருத்தங்களுக்கான காலமாகும்.1794 பிப்ரவரி 4ல் ஜேக்கோபியர்கள் அதிகம் இருந்த சட்டமன்றம் பிரான்சின் அனைத்துப் பகுதிகளிலும் அடிமைமுறையை ஒழித்து ஆணை பிறப்பித்தது.அரசாங்கமும்,சமூகத்தின் அடித்தளமும் அளவுக்கு மேலாக தீவிரமயமாக்கப்பட்டதால் கோபம் கொண்ட உறுப்பினர்கள் ரோபஸ்பியரை 1794ல் தூக்கிலிட்டனர்.
27.
28.
1.இந்தியா,அறிவியல் ஆய்வு மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களை வளர்த்தெடுப்பில் பல முன்னேற்றங்களை எட்டியுள்ளது.
2.விடுதலைக்கு முன்னர் இந்தியாவிலிருந்த ஒரேயொரு அறிவியல் ஆய்வு நிறுவனம் 1909-இல் J.R.D டாட்டா மற்றும் மைசூர் மஹாராஜா ஆகியோரின் நிதியுதவில் பெங்களூரில் அமைக்கப்பட்ட இந்திய அறிவியல் நிறுவனம்(Indian Institute of Science-IISc)மட்டுமேயாகும்.
3.1945-இல் முனைவர் ஹோமி J.பாபா என்பாரின் முன்னெடுப்பில் டாட்டா என்பவரின் நிதியுதவியுடன் டாட்டா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம் (Tata Institute of fundamental Research-TIFR) நிறுவப்பெற்றது.
4.புனேயில் அமைக்கப்பட்ட தேசிய வேதியியல் ஆய்வகம் (National Chemical Laboratory),புதுதில்லியில் அமைக்கப்பட்ட தேசிய இயற்பியல் ஆய்வகம் (National Physics Laboratory)ஆகியவை நாடு விடுதலை பெற்ற காலத்தில் முதன்முதலாக அமைக்கப்பட்டவை ஆகும்.
5.அது முதலாக அறிவியல் துறையின் வானியியற்பியல் (geo-physics) உயிரணு மற்றும் மூலக்கூறு உயிரியல் (Cellular and molecular biology) கணித அறிவியல்கள் (mathematical sciences) மற்றும் பல பிரிவுகளில் ஆய்வினை மேற்கொள்ளும் நிறுவனங்களின் எண்ணிக்கை தொடர்ந்து பெருகின.
6.அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றம் (Council of Scientific and Industrial Research)எனும் குடையின் கீழ் பெரும்பாலான ஆய்வு நிறுவனங்களை இயங்கி வருகின்றன.
7.இவ்வமைப்பு (CSIR)பயன்பாட்டு அறிவியல் (Applied of Scientific and Industrial Research) எனும் ஒரு குடையின் கீழ் பெரும்பாலான ஆய்வு நிறுவனங்களை இயங்கி வருகின்றன.
8.அணுசக்தி ஆணையமானது அணு அறிவியலின் வளர்ச்சிக்கு முகாமையாகத் (nodal agency)திகழ்கிறது.அணுசக்தி உற்பத்தி அணு ஆயுத உற்பத்தி ஆசிய முன்னெடுக்கிறது.
9.இந்தியத் தொழில்நுட்ப நிறுவனங்கள் பொறியியலின் வெவ்வேறு பிரிவுகளுக்காக நிறுவப்பெற்ற சிறப்பு நிறுவனங்களாகும்.முதல் IIT கரக்பூரில் நிறுவப்பட்டது.தொடர்ந்து டெல்லி,பம்பாய்,கான்பூர் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் உருவாக்கப்பட்டன.
10.தற்சமயம் நமது நாட்டில் 23 IITகள் செயல்படுகின்றது.இவையல்லாமல் 31 தேசிய தொழில்நுட்ப நிறுவனங்களும் (National Institute of Technology-NIT)23 இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் (National Institute of Information Technology - NIT) செயல்பட்டு வருகின்றன.
29.
30.
1. 1920 களில் ஒடுக்கப்பட்டவர்களின் போராட்டங்களின் மையப்புள்ளியாக அம்பேத்கர் விளங்கினார்.
2. மஹர் சாதியின் ராணுவவீரரின் மகனாகப் பிறந்தார் டாக்டர். அம்பேத்கர்.
3. எல்பின்ஸ்டன் கல்லூரியில் சேர்ந்த அம்பேத்கர் கல்வி உதவித்தொகை பெற்று 1912 -ல் பட்டதாரி ஆனார்.
4. பரோடா அரசின் கல்வி உதவித்தொகை பெற்ற அவர் அமெரிக்கா சென்று பட்டமேற்படிப்பு பட்டத்தையும்.
5. கொலம்பியா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்தையும் பெற்றார்.
6. சட்டம் மற்றும் பொருளாதார படிப்புகளுக்காக லண்டன் சென்றார்.
7. 1916- இல் மானுடவியல் தொடர்பான சர்வதேச மாநாட்டில் கலந்து கொண்டு, இந்தியாவின் சாதிகள் என்ற தலைப்பில் கட்டுரையை சமர்ப்பித்தார்.
8. தீண்டாமை கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட மக்களுக்கு தனித்தொகுதிகள் மற்றும் இடங்களின் ஒதுக்கீடு வேண்டும் என்று வாதிட்டார்.
9. அம்பேத்கர் புதிய பத்திரிகைகள் மற்றும் அமைப்புகளைக் தோற்றுவித்தார்.
31.
(i) HMIS தல்வார் என்ற போர்கப்பலில் மாலுமியாகப் பணியாற்றிய ஆங்கிலத்தில் ரேட்டிங் என்று வழங்கப்பட்ட இப்பதவிப் பெயரே பல்வேறுபட்ட போர்கப்பல்களிலும் இராயல் இந்திய கடற்படையின் போர்கப்பல்களிலும் பணியாற்றிய மாலுமிகளைக் குறிப்பதாக அமைந்தது.
(ii) B.C. தத் என்பவர் அக்கப்பலின் பக்கவாட்டில் "வெள்ளையனே வெளியேறு" என்று எழுதினார்.
(iii) தத்தின் கைது நடவடிக்கை 18 பிப்ரவரி 1946 அன்று வெடித்துக் கிளம்பிய கிளர்ச்சிக்கு உந்துவிசையாக அமைந்தது.
(iv) HMIS ஹிந்துஸ்தான் கப்பலின் மாலுமிகளும் கராச்சியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பிறரும் மின்னல் வேகத்தில் போராட்டத்தை துவங்கினார்கள்.
(v) போராட்டத்தில் ஈடுபட்ட மாலுமிகள் பல்வேறு துறைமுகங்களிலும் கப்பலின் முகட்டிலும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் முஸ்லீம் லீக் கட்சிகளின் கொடிகளை ஒருங்கே கட்டியிருந்தனர்.
(v) சர்தார் வல்லபாய் படேல் புரட்சி முடிவிற்குக் கொண்டுவர முயற்சிகள் மேற்கொண்டார்
(vi) மாலுமிகளின் போராட்டம் விடுதலைப் போராட்டத்தின் கடைசி அத்தியாயமாகவும் இது திகழ்கிறது.
32.
1. நிர்வாகம் மற்றும் நிதி விஷயங்களில் மத்திய கட்டுப்பாட்டில் இருந்து மாகாணங்கள் சுதந்திரமாகச் செயல்பட வேண்டும்.
2. மத்திய மற்றும் மாகாண சட்டமேலவைகளின் உறுப்பினர்களில் 4/5 பங்கு நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும், 1/5 பங்கு நபர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும்.
3. மாகாண மற்றும் மத்திய சட்டப் பேரவைகளின் 4/5 உறுப்பினர்கள் பரந்துபட்ட வாக்குப்பதிவின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
4. மத்திய நிர்வாக சபை உட்பட நிர்வாக சபை உறுப்பினர்களில் 1/2 பங்கு நபர்கள் அந்தந்த சபைகளின் மூலமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியர்களாக இருக்க வேண்டும்.
5. மாகாண சபைத் தேர்தல்களில் முஸ்லிம்களுக்கு தனித்தொகுதிகள் வழங்க காங்கிரசும் ஒப்புக்கொண்டது. கிலாபத் இயக்கம் மற்றும் காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கம் ஆகியவற்றில் இந்து-முஸ்லிம் ஒத்துழைப்புக்கு இந்த ஒப்பந்தம் வழியமைத்தது.
6. தங்களது சபைகள் நிறைவேற்றிய தீர்மானங்களுக்கு ஏற்ப மாகாண மற்றும் மத்திய அரசுகள் நடக்கக் கடமைப்பட்டுள்ளன. கவர்னர் ஜெனரல் அல்லது ஆளுநர் சபைகளின் தடுப்பாணை அதிகாரம் பெறும் பட்சத்தில் அந்தத் தீர்மானம் ஓராண்டுக்கும் குறைவான இடைவெளியில் மீண்டும் நிறைவேற்றப்படும் பட்சத்தில் அது செயல்பாட்டுக்கு வரும்.
7. இந்திய அரசுக்கும் வெளியுறவு அமைச்சருக்கும் உள்ள உறவுகளும் தன்னாட்சி தகுதியுடைய பகுதியின் காலனி செயலருக்கு இந்தியாவுக்கும் உள்ள உறவுகளும் ஒத்திருக்க வேண்டும்.ஏகாதிபத்திய அரசு அலுவல்களுடன் தொடர்புடைய எவரும் சமநிலை பெற்றிருக்க வேண்டும்.
33.
34.
1. ஆங்கிலேயர்கள் இனப்பாகுபாட்டுக் கொள்கையை பின்பற்றினார்கள்.
2. அரசு உயர் பதவிகளில் இந்தியர்களைப் பணியமர்த்தாமல் திட்டமிட்டு விலக்கி வைக்கப்பட்டதை மக்கள் இந்திய எதிர்ப்புக் கொள்கையின் நடவடிக்கையாகக் கருதினர்.
3. இந்தியாவின் கற்றறிந்த நடுத்தர வர்க்கம் வைத்த வேண்டுகோளை ஆங்கில அரசு ஏற்றுக் கொள்ள மறுத்தது.
4. அரசுக்கு எதிராக வெறுப்புணர்வைத் தூண்டும் முயற்சிகளை மேற்கொள்வோரை தண்டனைக்குள்ளாக்கும் இந்திய தண்டனைச் சட்டம் - 1870 பிரிவு 124A அடக்குமுறைச் சட்டத்தை இயற்றியது.
5. பத்திரிகைகள் அரசியலை விமர்சனம் செய்யத் தொடங்கின.
6. சம்வத் கௌமுகி 1821 பாரசீக மொழியில் எழுதப்பட்டது.
35.
இம்பாலை நோக்கிய ஜப்பான் படைகளின் நகர்வில் ஷா நவாஸால் வழி நடத்தப்பட்ட இந்திய தேசிய இராணுவத்தின் ஒரு பிரிவும் (battalion) பங்கெடுத்தது.இது அச்சு நாடுகளும் ஜப்பானியப் படைகளும் பின்னடைவைச் சந்தித்துக் கொண்டிருந்த 1944 இன் பிற்பகுதியில் நடந்தேறியது.இம்பாலைக் கைப்பற்றும் முயற்சியில் ஜப்பான் வெற்றிப் பெற முடியாததைத் தொடர்ந்து 1945இன் நடுவில் அது பிரிட்டிஷ் படைகளிடம் சரணடைந்தது.கைது செய்யப்பட்ட ஷா நவாஸ் மீதும் அவரோடிருந்த வீரர்கள் மீதும் இராஜ துரோகக் குற்றம் சுமத்தப்பட்டது.
36.
1.திலகர், அரவிந்த் கோஷ், லாலா லஜபதிராய் போன்றோர் ஆவர்.
2.சமய அடையாளங்கள், கணபதி விழா போன்ற திருவிழாக்கள் கொண்டாடுவதன் மூலம் எதிர்ப்பு உணர்வை வெளிப்படுத்தினர்.
37.
(i) அமெரிக்காவில் வால் தெருவில் உண்டான அமெரிக்க பங்குச் சந்தை அமைந்துள்ள இடம் பெரும் அளவான பொருளாதார வீழ்ச்சி உலகையே உலுக்கியது.
(ii) இதன் பாதிப்பு இந்தியாவையும் தாக்கியது பிரிட்டிஷ் காலனித்துவம் இந்தியாவின் நிலைமையை மேலும் மோசமாக்கியது.
38.
1. அனைவருக்கும் வாக்குரிமை.
2. அச்சுறுத்தல்களை தவிர்ப்பதற்காக வாக்குச்சீட்டுகள் மூலம் வாக்களித்தல்.
3. வேட்பாளர்களுக்கு சொத்துத்தகுதி நிர்ணயிக்கலாகாது.
4. ஏழைகள் தேர்தலில் போட்டியிடவும் பதவிகளில் இடம்பெறவும் வழிவகை செய்யும் முகமாக மக்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு நிதி சலுகைகளை வழங்குதல்.
5. சம அளவிலான தேர்தல் மாவட்டங்களையும்,சம அளவிலான பிரதிநிதித்துவத்தையும் வழங்கல்.
6. வருடாந்திரப் பாராளுமன்றம்.
39.
1.இரண்டாம் உலகப்போருக்குப் பின் ஐரோப்பிய பொருளாதாரத்தை புனரமைத்து கம்யூனிசத்தை கட்டுப்படுத்த அமெரிக்கா விரும்பியது.
2.ட்ரூமன் திட்டமும்,மார்ஷல் திட்டமும் இதற்காகவே .அமைக்கப்பட்டது.
3.1949 இல் ஐரோப்பிய பொருளாதார ஒத்துழைப்பு நிறுவனம் உருவாக்கப்பட்டது.
40.
41.
1. இந்தியக் கிளர்ச்சி என்ற புத்தகத்தின் ஆசிரியர் வேலண்டைன் சிரொலிக்கு எதிராக தாம் தொடுத்த அவதூறு வழக்கு நடத்துவதற்காக 1918 செப்டம்பரில், திலகர் பிரிட்டனுக்கு சென்றது மற்றும் உத்தேசிக்கப்பட்ட மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தங்களை அன்னி பெசன்ட் ஏற்றுக் கொண்ட பிறகு தன்னாட்சி இயக்கம் வீழ்ச்சிக் கண்டது.
42.
(i) இஸ்லாமியர்களுக்கான தனிநாடு கோரிக்கையாகும்.
(ii) இதன் துவக்கம் 1930களில் கிழக்கு மற்றும் வடமேற்கு இந்தியாவில் தனிப்பகுதி அல்லது சில பகுதிகள் என்ற நிலையிலிருந்தது.
(iii) 1940 இல் லாகூரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மூலம் தனி நாடு கோரிக்கை (பாகிஸ்தான்) ஒரு முக்கியக் கட்டத்தை எட்டியது.
43.
44.
1. பாலகங்காதர திலகர், பிபின்சந்திரபால், லாலா லஜபதிராய் (Lal-Bal-Pal), அரவிந்த் கோஷ் போன்ற தலைவர்கள் பிரிட்டிஷ் இந்தியாவில் தீவிர தேசியவாதிகளின் தலைவர்களாக விளங்கினர்.
2. மகாராஷ்டிரம், வங்காளம், பஞ்சாப் ஆகிய மூன்று மாகாணங்களில் சுதேசி இயக்கக் காலப்பகுதியில் தீவிர தேசியவாதத்தின் மையப்புள்ளிகளாகத் திகழ்ந்தன.
45.
1.நீர்மூழ்கிகளின் படையெடுப்பு உக்கிரமானபோது அமெரிக்கர்கள் போரில் நுழைந்தார்கள்.
2.அமெரிக்கா போரில் இறங்கியது நேச நாடுகளின் வெற்றியை முன்பே உறுதி செய்தது போலாயிற்று.
3.பல்கேரியா சரணடைந்தது.
4.துருக்கியர்கள் போர் நிறுத்த ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட விரும்பினர்.
5.ஜெர்மனி நவம்பர் 11 அன்று சரணடைவதாக கையெழுத்திட்டது.
46.
1. அரசுக்கு எதிராக வெறுப்புணர்வைத் தூண்டும் முயற்சிகளை மேற்கொள்வோரை தண்டனைக்குள்ளாக்கும் இந்திய தண்டனைச் சட்டம் (1870) பிரிவு 124 A அடக்கு முறை ஒழுங்குமுறைச் சட்டம் இருந்தது.
2. பத்திரிகைகளைத் தணிக்கைக்கு உட்படுத்திய பிராந்திய மொழிச் சட்டமும் 1878 எதிர்ப்புகளை தூண்டின.
3. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பருத்தியிழைத் துணிகளின் மீதான உள்நாட்டுத் தீர்வை உயர்த்தப்பட்டதும் நாடு முழுவதும் மனநிறைவின்மையை ஏற்படுத்தியது.
4. ரிப்பன் வைஸ்ராயாக இருந்தபோது இல்பர்ட் மசோதா ஏற்பட்டது.
5. இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் பருத்தியிழைத் துணிகளின் மீதான சுங்கவரி குறைக்கப்பட்டது.
47.
1. இந்திய தேசிய காங்கிரஸ் கராச்சி கூட்டத்தில் (மார்ச் 1931) நிறைவேற்றப்பட்ட அடிப்படை உரிமைகள் தீர்மானத்தில் இடம் பெற்ற தன்னாட்சி என்பதன் பொருள் மற்றும் விடுதலைப் போராட்டத்தின் இலக்கியல் (Idealism) ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே இந்திய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் காங்கிரஸ் அரசமைப்பு நிர்ணயசபை உருவாக்கியது.
2. குடிமக்களுக்கு அடிப்படை உரிமைகளையும், அரசு கொள்கைகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் நம்பிக்கையுடன் உறுதி செய்யும் ஓர் ஆவணமாக இந்திய அரசமைப்பு உருவாக்கப்படுவதற்கு இதுவே அடிப்படைக் காரணமாகும்.
48.
1. பாகிஸ்தான் என்ற எண்ணவோட்டம் 1940-இல் முஸ்லிம் லீக் மேடைகளில் இருந்து வெளிப்பட்டாலும் 10 ஆண்டுகளுக்கு முன்பாகவே கவிஞரும் அறிஞருமான முகமது இக்பாலால் சிந்திக்கப்பட்டதாகும்.
2. 1930 இல் அலகாபாத்தில் நடைபெற்ற முஸ்லிம் லீக்கின் ஆண்டு மாநாட்டில் இக்பால் ஒருங்கிணைக்கப்பட்ட வடமேற்கு இந்திய முஸ்லிம் அரசைத் தான் காணவிரும்புவதாக கூறினார்.
3. இது பின்னர் கேம்பிரிட்ஜ் மாணவர்களில் ஒருவரான ரஹமத் அலியால் வலுவாக வெளிப்படுத்தப்பட்டது.
49.
50.
1. முடியாட்சி தூக்கி எறியப்பட்ட பின்னர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அரசியல் கைதிகள் எதிர்புரட்சியாளர்கள் தீட்டிய சதியொன்றில் இணையப் போவதாக மக்கள் நம்பினர்.
2. அரச குடும்ப ஆதரவாளர்கள் எனக் கருதப்பட்ட அனைவரும் கேள்வி முறையின்றி கொல்லப்பட்டனர்.
3. 1792 செப்டம்பர் 2ல் பாரிஸ் நகரின் சிறையில் தொடங்கிய இப்படுகொலை நகரின் ஏனைய சிறைகளிலும் மேற்கொள்ளப்பட்டு அடுத்த நான்கு நாட்களும் தொடர்ந்தது.
4. இந்நிகழ்வே செப்டம்பர் படுகொலை ஆகும்.
51.
1.பிராட்டஸ்டன்ட் இயக்கத்தின் பிற்கால தலைவர்களில் ஜான் கால்வின் ஒருவர்.
2.கால்வின் ஒரு மிகப்பெரிய ஒருங்கிணைப்பாளர்.
3.குறிப்பிட்ட காலத்துக்கு அவர் ஜெனீவா நகரையே தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார்.
4.கால்வினியம் என்ற சமயப்பிரிவு அவரது வாழ்நாளிலேயே பிரபலம் அடைந்தது.
52.
(i) இந்திய அரசமைப்பு உலகிலேயே நீண்ட எழுதப்பட்ட அரசமைப்பு ஆகும்.
(ii) இந்தியா இறையாண்மையுள்ள, சமதர்ம, சமயசார்பற்ற, மக்களாட்சிக் குடியரசு என்று அரசமைப்பு முகவுரை கூறுகிறது.
(iii) அடிப்படை உரிமைகள், குறிக்கோள், தீர்மானத்தின் ஐந்தாம் பிரிவிலிருந்து உருவாக்கப்பட்டன.
(iv) இந்திய அரசமைப்பு இந்திய நாட்டிற்குச் சுதந்திரமான தேர்தல் ஆணையத்தை உருவாக்குகிறது.
(v) வயதுவந்தோர் அனைவருக்குமான வாக்குரிமையும் உறுதி செய்தது.
(vi) நீதித்துறையின் சுதந்திரத் தன்மையுடன் உறுதி செய்தது.
53.
1. இலண்டனில் நடந்த இரண்டாவது மாநாட்டில் கலந்து கொள்வதற்காக காந்தி மற்றும் அம்பேத்கர் செல்வதற்கு முன் அவர்கள் இடையே தனித்தொகுதிகள் பற்றிய கருத்தில் நடந்த பேச்சு தோல்வி அடைந்தன.
2. வட்ட மேசை மாநாட்டின் போது இருதலைவர்கள் இடையே இதே கருத்து குறித்து விவாதம் நடந்தது.
3. பிரிட்டிஷ் "பிரதமர் ராம்சே மேக் டொனால்டு" இதில் தலையிட்டு முடிவெடுக்க வேண்டும் என்று இந்த கருத்தில் முடிவு எட்டப்படாமல் இருந்தது.
4. 1932-ல் வகுப்பு வாரித் தொகுதி அறிவிக்கப்பட்டது.
54.
(i) M. சிங்காரவேலர் (18 பிப்ரவரி 1860 - 11 பிப்ரவரி 1946 ) மதராசில் பிறந்தார்.
(ii) திரு.வி.க. உடன் இணைந்து தென்னிந்தியாவில் பல தொழிற்சங்கங்களை இவர் தோற்றுவித்தார்.
(iii) 1923 ஆம் ஆண்டு மே மாதம் முதல் நாள் முதன்முறையாக நாட்டில் மே தினத்தைக் கொண்டாடினார்.
(iv) 1928 இல் இரயில்வே வேலை நிறுத்தத்தை முன்னின்று நடத்தினார்; இதற்காக தண்டனை பெற்றார்.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards