12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 03/03/2021
12ஆம் வகுப்பு வரலாறு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் மற்றும் விடைகள் - 2021 - 12th Standard Tamil medium History Reduced Syllabus Public Exam Model Question Paper With Answer Key - 2021
12ஆம் வகுப்பு History / வரலாறு தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , History / வரலாறு பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ History Test1.
பின்வரும் கூற்றுகளில் சரியானவை எவை / எது?
1.வெளிநாட்டினர் தமது விடுதலைப்போரின் தொடக்ககாலத்தில் முக்கியப் பங்கினை ஆற்றினர்.
2.இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் டாக்டர் அன்னிபெசன்ட் அம்மையார் இதே போன்று ஒரு முக்கிய பணியை ஆற்றினர்.
3.அயர்லாந்தவரான டாக்டர் அன்னிபெசன்ட், பிரிட்டனில் இருந்தபோது அயர்லாந்து தன்னாட்சி இயக்கம், ஃபேபியன் சோஷலிசவாதிகள் குடும்பக் கட்டுப்பாடு இயக்கங்கள் ஆகியவற்றில் தீவிர பங்காற்றினார்.
4.பிரம்மஞான சபையின் (தியாசாபிகல் சொசைட்டி) உறுப்பினராக அன்னிபெசன்ட் அம்மையார் இந்தியாவுக்கு 1893ல் வந்தார்.
1,2
1,3
இவற்றுள் எதுவுமில்லை
இவை அனைத்தும்
2.
இந்தியப் பத்திரிகைச் சட்டம்
1910
1912
1914
1915
3.
கீழ்கண்ட கூற்றில் சரியானவை எது/எவை?
1) இந்திய தேசிய காங்கிரசின் செயற்குழு 1942 ஜூன் 12 இல் வார்தாவில் கூடியது.
2) இக்கூட்டத்தில் நாடு தழுவிய சட்ட மறுப்புப் போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது.
3) இராஜாஜியும் புலபாய் தேசாயும் காங்கிரஸ் செயற்குழுவில் இருந்து பதவித் துறப்பு செய்தனர்.
ii மற்றும் iii
i மற்றும் ii
iii மட்டும்
i மட்டும்
4.
5.
______ நகரம் 'காட்டன்பொலிஸ்'எனும் புனைப் பெயரைப் பெற்றது.
மான்செஸ்டர்
லங்காசயர்
லிவர்பூல்
கிளாஸ்கோ
6.
ஐ.நா சபையின் முதல் பொதுச் செயலாளர் டிரிக்வே லீ ________ சேர்ந்தவராவார்.
பர்மா
ஜப்பான்
சிங்கப்பூர்
நார்வே
7.
பன்னாட்டு சங்கம் ________ஆம் ஆண்டு கலைக்கப்பட்டது.
1939
1941
1945
1946
8.
பின்வருவனவற்றில் எது மறுமலர்ச்சி காலத்தில் உருவாக்கப்பட்ட ஒரு யோசனை அல்ல?
பகுத்தறிவுவாதம்
ஐயுறவுவாதம்
அரசில்லா நிலை
தனித்துவம்
9.
தண்டியாத்திரை நடைபெற்ற ஆண்டு எப்போது?
1930
1931
1932
1935
10.
தக்லா என்ற மலைப்பகுதியில் சீனப்படைகள் எப்போது தாக்குதல் நடத்தின?
1962, செப்டம்பர் 8
1962, செப்டம்பர் 18
1965, செப்டம்பர் 8
1962, செப்டம்பர் 28
11.
காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கம் நிறுத்தப்பட்ட ஆண்டு எது?
1920
1921
1923
1922
12.
டாடா இரும்பு மற்றும் எஃகு நிறுவனம் TISCO தொடங்கப்பட்ட ஆண்டு எப்போது?
1908
1907
1909
1911
13.
தென்னாப்பிரிக்காவில் இருந்து காந்தி எப்போது இந்தியா திரும்பினார்?
1917
1916
1918
1915
14.
சரியான வரிசையில் அமைத்து விடையைத் தேர்வு செய்க.
(i) இந்திய தேசிய இராணுவம் தோற்றுவிக்கப்படுதல்
(ii) இராயல் இந்திய கடற்படைக் கலகம்
(iii) இந்திய தேசிய இராணுவம் மீதான விசாரணை
(iv) இராஜாஜி திட்டம்
ii, i, iii, iv
i, iv, iii, ii
iii, iv, i, ii
iii, iv, ii, i
15.
கூற்று: 1919இல் இந்தியக் கவுன்சில் சட்டம் மற்றும் ரெளலட் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
காரணம்: இது மிதவாத தேசியவாதிகளை அரவணைத்து தீவிர தேசியவாதிகளைத் தனிமைப்படுத்தும் பிரிட்டிஷாரின் கொள்கையின் ஒரு பகுதியாகும்.
கூற்று மற்றும் காரணம் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது
கூற்று மற்றும் காரணம் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை
கூற்று சரி, காரணம் தவறு
கூற்று தவறு, காரணம் சரி
16.
நிறுவனங்களை அவை தோற்றுவிக்கப்பட்டதன் கால அடிப்படையில் வரிசைப்படுத்துக.
1. அனைத்து இந்திய முஸ்லிம் லீக்
2. ஆரிய சமாஜம்
3. அனைத்திந்திய இந்து மகா சபை
4. பஞ்சாப் இந்து சபை
1, 2, 3, 4
2, 1, 4, 3
2, 4, 3, 1
4, 3, 2, 1
17.
பின்வருவனவற்றைக் கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகள் உதவியுடன் பொருத்துக.
| (அ) கதர் கட்சி | i. 1916 |
| (ஆ) நியூ இந்தியா | ii. 1913 |
| (இ) தன்னாட்சி இயக்கம் | iii. 1909 |
| (ஈ) மிண்டோ-மார்லி சீர்திருத்தம் | iv. 1915 |
ii, iv, i, iii
iv, i, ii, iii
i, iv, iii, ii
ii, iii, iv, i
18.
முதலாவது பருத்தித் தொழிற்சாலை பம்பாயில் தொடங்கப்பட்ட ஆண்டு_______.
1852
1854
1861
1865
19.
சூரத்தில் நடைபெறவிருந்த காங்கிரஸ் மாநாட்டிற்கு காங்கிரஸின் அடுத்த தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு யாருடைய பெயர் தீவிர தேசியவாதிகளால் முன்மொழியப்பட்டது?
அரவிந்தோ கோஷ்
தாதாபாய் நெளரோஜி
பெரோஸ் ஷா மேத்தா
லாலா லஜபதிராய்
20.
21.
இந்தியாவில் ஏற்பட்ட தொழில்வளர்ச்சி பற்றி கட்டுரை வரைக.
22.
தனிநபர் சத்தியாகிரகம் பற்றி விரிவாக எழுதுக?
23.
இந்திய முஸ்லிம் லீக்கின் நோக்கங்கள் யாவை?
24.
சூரத் பிளவுப் பற்றி ஒரு கட்டுரை வரைக?
25.
ஒருங்கிணைந்த ஜெர்மனியின் உண்மையான வடிவமைப்பாளர் பிஸ்மார்க்கே என ஏன் சொல்லப்படுகிறது?
26.
தொழிற்புரட்சி ஏன் முதலில் இங்கிலாந்தில் தொடங்கிற்று? நவீன சமூகத்தின் மீது அது என்ன தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது?
27.
பிராட்டஸ்டன்ட் சீர்திருத்த இயக்கத்துக்கான காரணங்கள் யாவை ? ஜெர்மனியில் மார்ட்டின் லூதர் இந்த இயக்கத்தை எவ்வாறு ஒருங்கிணைத்தார்?
28.
இந்திய விடுதலைக்குப் பின் ஏற்பட்ட அறிவியல் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் வளர்ச்சி குறித்து ஆய்க .
29.
சுதேச அரசுகளை இந்திய ஒன்றியத்துடன் இணைப்பது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினைகள் என்ன? அவற்றை எவ்வாறு திறமையாக படேல் மற்றும் நேரு கையாண்டனர் என்பதையும் விளக்குக
30.
டாக்டர். அம்பேத்கரின் கல்விப்பணி குறித்து, குறிப்பாக ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக நீதிக்காக அவரின் செயலூக்கத்தை முதன்மைப்படுத்தி விளக்குக.
31.
32.
மலபார் மாப்பிள்ளை கிளர்ச்சியின் காரணங்கள் மற்றும் துயர விளைவுகளைப் பற்றி விவாதிக்கவும்.
33.
34.
இந்தியாவில் தேசிய விழிப்புணர்வுக்குப் பிரிட்டிஷாரின் அடக்குமுறை மற்றும் இனவெறிக் கொள்கைகள், எந்த அளவிற்குக் காரணமாக இருந்தன?
35.
அன்னிபெசன்ட் அம்மையாரின் ஆரம்பகால பணிகள் குறித்து கூறுக.
36.
அரசு ஒடுக்குமுறை என்றால் என்ன?
37.
தனி நாடு கோரிக்கை பற்றிய அம்சங்களை கூறுக.
38.
மெளண்ட்பேட்டன் பிரபு பற்றி எழுதுக.
39.
எதனால் 1848 ஆம் ஆண்டின் ஜூன் 24 முதல் 26 வரையான காலம் 'இரத்த ஜூன் தினங்கள் ' எனக் கொள்ளப்படுகின்றன?
40.
அமெரிக்கா, சோவியத் யூனியன் ஆகியவற்றின் உளவு நிறுவனங்களைக் குறிப்பிடவும்.
41.
சமதர்ம சமூக அமைப்பு என்பதைப் பற்றி நீர் அறிந்ததென்ன?
42.
கிரிப்ஸ் முன்மொழிவைக் காங்கிரஸ் ஏன் நிராகரித்தது?
43.
காந்தியடிகளின் சம்பரான் சத்தியாகிரகத்தின் போது உடன் சென்ற உள்ளூர் தலைவர்கள் யாவர்?
44.
45.
பன்னாட்டு சங்கம் வெற்றிகரமாக முடித்துவைத்த சிக்கல்கள் பற்றிக் குறிப்பு வரைக.
46.
ராஷ்டிரிய சுயசேவா சங்கத்தின் குறிக்கோள் என்ன?
47.
மேற்கத்திய கல்வியும் அதன் தாக்கமும் மற்றும் மெக்காலே கல்வி முறையைப் பற்றி விளக்குக.
48.
இந்திய, பாகிஸ்தான் பிரிவினையால் ஏற்பட்ட மதக் கலவரத்தை விவரி?
49.
“சோஷலிச கருத்துக்கள் உருப்பெற தொழில்புரட்சியே முகாந்திரம் அமைத்தது” – ஆதாரப் பின்புலத்தோடு உறுதிப்படுத்துக.
50.
அமெரிக்க புரட்சியின் முக்கியத்துவத்தை பகுப்பாய்வு செய்க.
51.
1492இல் கொலம்பஸ் மேற்கொண்ட பயணம் பற்றி குறிப்பு வரைக.
52.
பிரிவினையால் ஏற்பட்ட கடுமையான விளைவுகளைச் சுட்டிக் காட்டுக.
53.
மாற்றத்தை விரும்புபவர்கள் – மாற்றத்தை விரும்பாதவர்கள் - வேறுபடுத்துக.
54.
1.
(d)
இவை அனைத்தும்
2.
(a)
1910
3.
(a)
ii மற்றும் iii
4.
(b)
5.
(a)
மான்செஸ்டர்
6.
(d)
நார்வே
7.
(d)
1946
8.
(c)
அரசில்லா நிலை
9.
(a)
1930
10.
(a)
1962, செப்டம்பர் 8
11.
(d)
1922
12.
(b)
1907
13.
(d)
1915
14.
(b)
i, iv, iii, ii
15.
(a)
கூற்று மற்றும் காரணம் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது
16.
(b)
2, 1, 4, 3
17.
(a)
ii, iv, i, iii
18.
(b)
1854
19.
(d)
லாலா லஜபதிராய்
20.
(c)
21.
1.பிரிட்டிஷ் வணிகக் கொள்கையானது உள்நாட்டுத் தொழில்துறையைப் பெரும் எண்ணிக்கையிலாக்கியது.
2.மற்ற காலனிகளைப் போலவே இந்தியாவும் ஒரு மூலப்பொருள் கொள்முதல் செய்யும் பகுதியாகவும் உற்பத்திப் பொருட்களுக்கான சந்தையாகவும் கருதப்பட்டது.
3.இதுமட்டுமன்றி,முதல் உலகப்போரின் போதும் பொருளாதாரப் பெருமந்தம் போன்ற சில எதிர்பாராத சந்தர்ப்பங்கள் காரணமாகவும் இந்தியாவில் தொழில்துறை விரிவாக்கம் ஏற்பட்டது.
4.1854 இல் பம்பாயில் கவஸ்ஜு நானாபாய் தவர் (1815-73)என்ற பார்சி இனத்தைச் சேர்ந்த இந்தியரே பருத்தி ஆலையை முதன்முதலில் தொடங்கினார்.இது பாம்பே ஸ்பின்னிங் அண்ட் வீவிங் கம்பெனி என்று அறியப்பட்டது.
5.இந்தியத் தொழில் முனைவோரால் அகமதாபாத் ஜவுளி ஆலைகள் நிறுவப்பட்டதும், அகமதாபாத் ஆகியவை பருத்தி ஆலைகளின் முக்கிய மையங்களாக மாறின.
6.1914 ஆம் ஆண்டு வாக்கில்,பம்பாய் மாகாணத்திற்குள் 129 நூற்பு,நெசவு மற்றும் பிற பருத்தி ஆலைகள் இருந்தன.
7.1875-76 க்கும் 1913-14க்கும் இடைப்பட்ட காலத்தில் இந்தியாவில் பருத்தி ஜவுளி ஆலைகள் எண்ணிக்கை 47 லிருந்து 271 ஆக அதிகரித்தது.
8.இந்தியாவில் தொழில்துறையை நிறுவுவதில் ஒரு முக்கியமான மைல் கல் இந்தியாவின் இருப்புப்பாதை விரிவாக்கமும் புகைவண்டிப் போக்குவரத்து அதிகரித்ததுமேயாகும்.
9.முதல் பயணிகள் ரயில் 1853 இல் பம்பாய்க்கும் தானேவுக்குமிடையே இயங்கியது.இருபதாம் நூற்றாண்டின் முதல் பத்தாண்டில் இந்தியாவின் மிகப்பெரிய பொறியியல் தொழில் இரயில்வே ஆகும்.
10.இந்தியாவில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதி மற்றும் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் சணல் உற்பத்தி மற்றொரு தொழில் ஆகும்.
11.1892க்குப் பிறகு நிலக்கரி உற்பத்தித் துறையின் வளர்ச்சி வேகமெடுத்து முதல் உலகப்போரின் போது உச்சத்தையெட்டியது.
22.
1. காந்தியடிகள் சர்வாதிகாரத்திற்கு எதிரானப் போரை வலுவிழக்கச் செய்யாமலிருக்க தனிநபர் சத்தியாகிரகம் என்ற வழியைக் கைக்கொண்டார்.
2. சத்தியாகிரகிகள் தங்கள் பிரச்சாரம் மேற்கொள்ளும் தேதி, நேரம், இடம் போன்ற தகவல்களை மாவட்ட ஆட்சியருக்குத் தெரிவித்துவிட வரையறுக்கப்பட்டது.
3. சத்தியாகிரகிகள் முழங்க வேண்டியதாவது பிரிட்டிஷரின் போர்முயற்சிக்கு மனித சக்தியாகவோ, பணமாகவோ உதவுதல் தவறாகும்.
4. உருப்படியான செய்கை என்பது வன்முறையை கைக்கொள்ளாமல் எல்லா விதத்திலும் போர் முயற்சிகள் எதிர்ப்பதேயாகும்.
5. வினோபா பாவே மகாராஷ்டிரத்தில் அமைந்த தனது பாவ்னார் ஆசிரமத்திலேயே 17 அக்டோபர் 1940-இல் முதல் சத்தியாகிரகிகள் நடத்தியதின் வாயிலாக இவ்வியக்கம் தொடங்கப்பட்டது.
23.
1. அனைத்து இந்திய முஸ்லிம் லீக்கானது முதல் முறையாக முஸ்லிம்களுக்கென பிரத்தியேகமான மையப்படுத்தப்பட்ட ஓர் அரசியல் கட்சியாக இருந்தது.
2. இந்திய முஸ்லிம்கள் பிரிட்டிஷ் அரசிடம் உண்மையுடனும் நன்றியுடனும் நடந்துகொள்ள வேண்டும் என்ற உணர்வை அவர்களிடம் ஏற்படுத்துதல்.
3. இந்திய முஸ்லிம்களை விருப்பங்கள் மற்றும் அரசியல் உரிமைகள் ஆகியவற்றை மேம்படுத்துதல்.
4. இந்திய முஸ்லிம்கள் மற்ற இனத்தவரிடம் எவ்விதப் பகைமை பாராட்டுவதையும் முன்விரோதம் கொள்வதையும் தடுத்தல்.
5. 1916-இல் முஸ்லிம்களின் தனி அரசியல் அடையாளத்திற்கான அலுவல் முத்திரையை முஸ்லிம் லீக்கிற்கு வழங்கியது.
24.
1. 1906-இல் மிண்டோ இந்திய அரசுப்பிரதிநிதியாகப் பணியமர்த்தப்பட்டதிலிருந்து மிதவாதிகளுக்கும் தீவிர தேசியவாதிகளுக்கும் இடையில் நிலவிய கருத்து வேற்றுமை மேலும் தீவிரமடைந்தது.
2. 1906-இல் கல்கத்தா மாநாட்டில் தாதாபாய் நெளரோஜி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
3. இதில் சுதேசி, புறக்கணிப்பு தேசியக்கல்வி, சுயாட்சி ஆகியவை தொடர்பான நான்கு தீர்மானங்களைத் தீவிர தேசியவாதிகள் நிறைவேற்றினர்.
4. காங்கிரசின் அடுத்த மாநாடு தீவிர தேசியவாதிகள் கோட்டை எனக் கருதப்பட்ட பூனாவில் நடைபெறத் திட்டமிடப்பட்டது.
5. கல்கத்தா மாநாட்டு முடிவுகளால் அச்சம் கொண்டிருந்த மிதவாத தேசியவாதிகள் மாநாடு நடைபெறுமிடத்தைச் சூரத் நகருக்கு மாற்றினர்.
6. காங்கிரசின் அடுத்த தலைவர் பொறுப்புக்கு மிதவாதிகளின் வேட்பாளராக ராஷ்பிகாரி கோஷ் என்பாருக்கு எதிராகத் தீவிர தேசியவாதிகள் லாலா லஜபதி ராயின் முன்மொழிந்தனர்.
7. 1906-இல் கல்கத்தா மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட நான்கு தீர்மானங்களைப் பின்பற்றுவதா? இல்லையா என்று கேள்வியை ஒட்டி நிலைமை கொதிநிலையை எட்டியது.
8. பெரோஸ்ஷா மேத்தாவின் குழு இந்த தீர்மானங்களை நிகழ்ச்சி நிரலில் இருந்து நீக்க கோரியது.
9. இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 1907-இல் நடைபெற்ற சூரத் மாநாட்டில் 1885 டிசம்பரில் உருவான காங்கிரஸ் மிதவாத தேசியவாதிகள் தீவிர தேசியவாதிகள் என இரு குழுக்களாகப் பிரிந்தது. இதுவே "சூரத் பிளவு" எனப்பட்டது.
25.
1.பிரஷ்யாவின் பிரதம அமைச்சர் பதவி வகித்த ஆட்டோ வான் பிஸ்மார்க் (Otto von Bismarck ) பிரஷ்யாவின் தலைமையில் ஜெர்மனியப் பகுதிகள் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தோடு அதனை வலுப்படுத்தினார்.
2.ஒருங்கிணைவை அடைவதற்கு அவர் "இரத்தமும் இரும்பும்" என்ற வலுவான கொள்கையைக் கைக்கொண்டார்.
3.ஜெர்மனிய ஒருங்கிணைவை ஆஸ்திரியாவுடன் பிரான்சுடனும் மோதாமல் அடைவது சாத்தியமில்லை என்று அவர் புரிந்துகொண்டிருந்தார்.
4.இராஜதந்திர நகர்வுகளின் வாயிலாக ஆஸ்திரியாவுடன் பிரான்சுடனும் முரண்போக்கைக் கைக்கொள்ளலானார்.
5.ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தைகளைத் துவங்கிய அவர் பிரஷ்யாவிற்கும் ஆஸ்திரியாவிற்கும் இடையே போர் ஏற்பட்டால் அந்நாடு தலையிடாது என்பதை உறுதி செய்து கொண்டார்.
6.அதன்பின் ஜெர்மனிய ஒருங்கிணைவை அடைய மூன்று போர்களை நடத்தும்படி ஆயிற்று.
ஸ்லெஸ்விக் -ஹால்ஸ்டின் சிக்கல்:
1.ஸ்லெஸ்விக்கும் ஹால்ஸ்டினும் டென்மார்க்கின் கட்டுப்பாட்டில் இருந்த இரு ஜெர்மானிய மாநிலங்களாகும்.
2.இவ்விரு பகுதிகளையும் (Duchies) 1863 இல் டென்மார்க் மன்னர் தனது அரசுடன் இணைத்தார்.
3.பிஸ்மார்க் ஆஸ்திரியாவுடன் சேர்ந்து ஒரு கூட்டு நடவடிக்கையை மேற்கொண்டு டென்மார்க்கை எதிர்க்க முன்மொழிந்தார்.
4.அதன்படி 1864இல் ஆஸ்திரியா ,பிரஷ்யாவின் கூட்டுப்படைகள் டென்மார்க்கைப் போரில் தோற்கடித்தன.
ஆஸ்திரிய-பிரஷ்யப் போர் 1866 :
1.தனது ராஜதந்திர செயல்பாடுகளின் வாயிலாக பிரான்ஸ் மற்றும் ரஷ்யாவின் நடுநிலையை பிஸ்மார்க் உறுதி செய்துகொண்டார்.
2.பின்னர் ஆஸ்திரியாவை வெனிஷியப் பகுதியை விட்டு அப்புறப்படுத்த விரும்பிய அவர் பியட்மாண்ட் - சார்டினியாவின் ஆதரவைப் பெற்றார்.
3.பெரும் சக்திகள் எதுவும் ஆஸ்திரியாவிற்கு ஆதரவளிக்காது என்பதனை உறுதி செய்து கொண்ட பிஸ்மார்க் பிரஷ்யாவை தாக்க ஆஸ்திரியாவைத் தூண்டும் செயல்களில் ஈடுபட்டார்.
4.இவ்வாறு நடந்த ஆஸ்திரிய-பிரஷ்யப் போர் ஏழு வாரப் போர் என்றும் குறிப்பிடப்படுகிறது.
பிராங்கோ-பிரஷ்யப்போர்,1870-71 :
1.பிஸ்மார்க் தெற்கு ஜெர்மானிய மாகாணங்களை ஒன்றிணைக்கும் பொருட்டு பிரஷ்யாவிற்கும்,பிரான்சிற்குமிடையே பிளவை ஏற்படுத்த தனது கவனத்தைச் செலுத்தினார்.
2.அதற்கான வாய்ப்பு ஸ்பானிய அரசுரிமை வாரிசுப் பிரச்சனை தோன்றியபோது ஏற்பட்டது.
3.ஸ்பெயினில் ஏற்பட்ட ஒரு புரட்சிக்குப்பின் இராணி இஸபெல்லா வெளியேற்றப்பட்டு பிரஷ்ய மன்னரின் உறவினரான இளவரசர் லியோபால்டிற்கு அரியணை வழங்கப்பட்டது.
4.பிரஷ்யர்கள் தங்கள் மன்னர் மதிக்கப்படவில்லை என்று நினைக்கவும் தக்கபடி பிஸ்மார்க் மாற்றியமைத்தார். இதனால் எம்ஸ் தந்தி பிராங்கோ-பிரஷ்யப் போர் தோன்ற வழிவகுத்தது.
5.பிஸ்மார்க் கடுமையான பல சரத்துகளை பிரான்சின் மீது திணித்தார்.அல்சேஸ் - லொரைன் பகுதிகளை விட்டுக்கொடுக்க நேர்ந்த பிரான்ஸ் பெருந்தொகையைப் போர் இழப்பீடாகவும் கொடுக்கும்படி ஆயிற்று.
6.வெர்செய்ல்ஸ் அரண்மனையில் பிரஷ்ய மன்னர் முதலாம் வில்லியம் வடக்கு ஜெர்மானிய கூட்டமைப்பிற்கும்,தெற்கத்திய ஜெர்மானிய மாகாணங்களுக்கும் மன்னராக அறிவிக்கப்பட்டார்.
7.இவ்வாறு இராஜதந்திர உத்திகளையும், போர் நடவடிக்கைகளையும் கொண்டு ஜெர்மானிய ஒருங்கிணைவு சாத்தியப்படுத்தப்பட்டது.
26.
இங்கிலாந்தில் தொழிற்புரட்சி ஏற்பட்டதற்கான காரணங்கள்:
1.வியாபார,வணிகத் துறைகளில் ஏற்பட்ட புரட்சிகரமான மாற்றங்கள்,முதலாளிகள் எனும் புதிய வர்க்கத்தை உருவாக்கியது.
2.கடல் கடந்து காலனிகளை உருவாக்கும் போட்டியில், இங்கிலாந்து தாமதமாக இணைந்தாலும்,காலப்போக்கில் இங்கிலாந்து மேலாதிக்கம் பெற்றது.
3.இங்கிலாந்தில் மக்கள்தொகை வளர்ச்சிக்கு ஏற்றவாறு சந்தைகளும் விரிவடைந்தன.
4.பல்வேறு காலனிகளின் குறிப்பாக இந்தியாவின் செல்வங்கள் சுரண்டப்பட்டு இங்கிலாந்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.
5.ஏனைய ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இங்கிலாந்து மிகவும் தாராளத்தன்மை கொண்ட நாடாக இருந்தது.
6.நிலக்கரி, இரும்பு போன்ற மூல வளங்கள் இங்கிலாந்தில் அதிக அளவில் கிடைத்ததென்பது தொழில் வளர்ச்சிக்கு மற்றுமொரு காரணமாகும். தனது கடற்கரைப்பகுதி முழுவதிலும் இங்கிலாந்து சிறப்பாக நிறுவப்பட்டிருந்த துறைமுகங்களைக் கொண்டிருந்தது.
7. தொழிற்புரட்சிக்கு முன்பு வேளாண்மையிலும் இங்கிலாந்து விரைவான முன்னேற்றத்தைப் பதிவு செய்திருந்தது. இயந்திரமயமாக்கலின் மூலமாக அதிக அளவிலான நிலங்கள் வேளாண்மையின் கீழ் கொண்டுவரப்பட்டன.
8. தனது கடற்கரைப்பகுதி முழுவதிலும் இங்கிலாந்து சிறப்பாக நிறுவப்பட்டிருந்த துறைமுகங்களைக் கொண்டிருந்தது.
6.நிலப்பகுதியிலிருந்து சற்றே தொலைவில் அமைந்திருந்த இங்கிலாந்தின் புவியியல் அமைவிடமும் அந்நியர் படையெடுப்புகளிலிருந்து சற்றே பாதுகாப்பாக அமைந்திருந்தமையும் தொழிற்புரட்சி ஏற்படுவதற்கு மற்றுமொரு காரணமாக அமைந்தது.
தொழிற்புரட்சியின் தாக்கம்:
1.இங்கிலாந்துத் தீவுகளில் நிலவிய மிதமான தட்பவெப்பநிலை பருத்தி இழைத் துணி உற்பத்திக்கு உகந்ததாக இருந்தது.
2.மறுமலர்ச்சி மக்களின் வாழ்க்கையைப் பற்றிய அணுகுமுறையை மாற்றியமைத்தது எனில், தொழிற்புரட்சி விவசாய காலம் தொட்டு அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையின் பாதையையே மாற்றியது.
3. தொழிற்புரட்சி உற்பத்தியில் இருந்த பிரச்சனைகளைத் தீர்த்து வைத்தது.
4.இயந்திரங்களைப் பயன்படுத்தி பொருள் உற்பத்தி செய்வோர்கள் கைவினைத் தொழில்களைப் பாழ்படுத்தினர்.ஆயிரக்கணக்காக கைவினைஞர்களும் நெசவாளர்களும் வேலையற்றவர்களாயினர்.
5.தொழிற்புரட்சியின் முதற்கட்டத்தில் இயந்திரங்கள் அறிமுகமானபோது பெண்கள் குழந்தைகள் ஆகியோரிடமிருந்து மலிவான விலையில் உழைப்பு பெறப்பட்டதால் உடல் வலுமிக்க ஆண்கள் வேலைகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
6.தொழிற்புரட்சியின் மிக முக்கியமான விளைவு ஆலை முதலாளிகள்,ஆலை தொழிலாளர்கள் என இரண்டு வர்க்கங்கள் உருவாக்கப்பட்டதுவே தங்கள் உற்பத்திப் பொருட்களைப் பாதுகாக்கக் காப்புவரி விதிப்பது,தொழிலாளர்களின் போராட்டங்களை ஒடுக்குவது ஆகிய இவ்விரு விஷயங்களைக் கடந்து ஏனையவற்றில் அரசு தலையிடுவது முதலாளிகளுக்கு ஒவ்வாமையாக இருந்தது.
7.இயந்திரங்களை உடைப்பது பெரும் எண்ணிக்கையில் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்வது தொழிலாளர் சங்கங்கள் உருவாக்குவது என பலகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
27.
சீர்திருத்த இயக்கத்துக்கான காரணங்கள்:
1.பாவ மன்னிப்பு வழங்கும் முறைக்கு பணம் பெற்றது (ஒருவரின் பாவத்தை மன்னித்து அவருக்கு புனிதத்தை வழங்கும் போப்பாண்டவரின் பாவமன்னிப்புக்கு மன்னித்து பெற்றது).வேண்டியவர்களுக்கு வேலை வழங்குவது தேவாலயப் பணிகளை பணத்துக்கு விற்பது ஆகியன தாக்குதலுக்கு உள்ளானது.
2.ஆறாம் அலெக்ஸாண்டர்,இரண்டாம் ஜூலியஸ்,பத்தாம் லியோ ஆகிய சில போப்பாண்டவர்கள் இது போன்ற நடைமுறைகளால் ஆட்சியாளர்களிடம் சண்டையிட்டனர்.
3.போப் பத்தாம் லியோவுக்கு பணம் கொடுத்து மெயின்ஸின் ஆல்பர்ட் என்பவர் ஆர்ச்பிஷபாக பதவியேற்ற சம்பவமும் நடந்தது.
4.மெடிசி குடும்பம் போன்ற மிகப்பெரிய வர்த்தகக் குடும்பங்களின் உறுப்பினர்கள் தங்கள் சொத்தைப் பெருக்கவும் தங்களுக்கு முறைதவறிப் பிறந்த மகன்களுக்கு அந்தச் சொத்தைப் வழங்கவும் போப்பாண்டவர்களாக மாறினார்கள்.
மார்ட்டின் லூதர்:
1.கிறித்துவப் பாதிரியரான மார்ட்டின் லூதர் ரோமுக்கு எதிராக ஜெர்மனியில் கிளர்ச்சியில் ஈடுபட்டார்.ரோமுக்கு பயணம் மேற்கொண்ட பிறகு அவர் தேவாலயத்தின் ரோமானிய தேவாலயத்திற்கு எதிராக அவர் 95 புகார்களை எழுதினார்.
2.தேவாலய சீர்திருத்தத்துக்காக அவர் சில ஆலோசனைகளை வழங்கினார்.
3.பைபிள் மட்டுமே உன்னதமானது'போப்பாண்டவரே அல்லது பிஷப்புகளோ இல்லை என்று அவர் வாதிட்டார்.
4.லூதர் பைபிளை ஜெர்மனிய மொழியில் மொழிபெயர்த்தார்.
5.லூதரன் புராட்டஸ்டன்ட்கள் சில விதிகளையும் நெறிமுறைகளையும் வகுத்தனர்.அவர்கள் போப்பாண்டவரின் அதிகாரத்தை ஏற்கவில்லை.
6.அவர்கள் தங்களுக்கு என்று தேவாலயங்களை நிறுவினார்கள்.நிர்வாக அமைப்புகளை உருவாக்கினார்கள்.பைபிளின் உன்னதம் பற்றி மட்டுமே நம்பினார்கள்.
7.பாதிரியர்களுக்கான விதிமுறைகள் தளர்த்தப்பட்டு அவர்கள் திருமணம் செய்துகொள்ள அனுமதிக்கப்பட்டனர்.
28.
1.இந்தியா,அறிவியல் ஆய்வு மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களை வளர்த்தெடுப்பில் பல முன்னேற்றங்களை எட்டியுள்ளது.
2.விடுதலைக்கு முன்னர் இந்தியாவிலிருந்த ஒரேயொரு அறிவியல் ஆய்வு நிறுவனம் 1909-இல் J.R.D டாட்டா மற்றும் மைசூர் மஹாராஜா ஆகியோரின் நிதியுதவில் பெங்களூரில் அமைக்கப்பட்ட இந்திய அறிவியல் நிறுவனம்(Indian Institute of Science-IISc)மட்டுமேயாகும்.
3.1945-இல் முனைவர் ஹோமி J.பாபா என்பாரின் முன்னெடுப்பில் டாட்டா என்பவரின் நிதியுதவியுடன் டாட்டா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம் (Tata Institute of fundamental Research-TIFR) நிறுவப்பெற்றது.
4.புனேயில் அமைக்கப்பட்ட தேசிய வேதியியல் ஆய்வகம் (National Chemical Laboratory),புதுதில்லியில் அமைக்கப்பட்ட தேசிய இயற்பியல் ஆய்வகம் (National Physics Laboratory)ஆகியவை நாடு விடுதலை பெற்ற காலத்தில் முதன்முதலாக அமைக்கப்பட்டவை ஆகும்.
5.அது முதலாக அறிவியல் துறையின் வானியியற்பியல் (geo-physics) உயிரணு மற்றும் மூலக்கூறு உயிரியல் (Cellular and molecular biology) கணித அறிவியல்கள் (mathematical sciences) மற்றும் பல பிரிவுகளில் ஆய்வினை மேற்கொள்ளும் நிறுவனங்களின் எண்ணிக்கை தொடர்ந்து பெருகின.
6.அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றம் (Council of Scientific and Industrial Research)எனும் குடையின் கீழ் பெரும்பாலான ஆய்வு நிறுவனங்களை இயங்கி வருகின்றன.
7.இவ்வமைப்பு (CSIR)பயன்பாட்டு அறிவியல் (Applied of Scientific and Industrial Research) எனும் ஒரு குடையின் கீழ் பெரும்பாலான ஆய்வு நிறுவனங்களை இயங்கி வருகின்றன.
8.அணுசக்தி ஆணையமானது அணு அறிவியலின் வளர்ச்சிக்கு முகாமையாகத் (nodal agency)திகழ்கிறது.அணுசக்தி உற்பத்தி அணு ஆயுத உற்பத்தி ஆசிய முன்னெடுக்கிறது.
9.இந்தியத் தொழில்நுட்ப நிறுவனங்கள் பொறியியலின் வெவ்வேறு பிரிவுகளுக்காக நிறுவப்பெற்ற சிறப்பு நிறுவனங்களாகும்.முதல் IIT கரக்பூரில் நிறுவப்பட்டது.தொடர்ந்து டெல்லி,பம்பாய்,கான்பூர் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் உருவாக்கப்பட்டன.
10.தற்சமயம் நமது நாட்டில் 23 IITகள் செயல்படுகின்றது.இவையல்லாமல் 31 தேசிய தொழில்நுட்ப நிறுவனங்களும் (National Institute of Technology-NIT)23 இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் (National Institute of Information Technology - NIT) செயல்பட்டு வருகின்றன.
29.
(i) இந்தியாவிற்கான அரசமைப்பு வரைவுப்பணி தொடங்கியபோதே இந்தியப் பகுதிகள் அல்லது சுதேச அரசுகளை ஒன்றிணைப்பது முக்கியமானதாக இருந்தது.
(ii) காஷ்மீர், ஜுனாகத், ஹைதராபாத் ஆகியவற்றைத் தவிர மற்ற சுதேச அரசுகள் அனைத்தும் இணைப்புறுதி ஆவணத்தில் கையெழுத்திட்டன.
(iii) இதனால் பாதுகாப்பு, வெளியுறவு மற்றும் தகவல் தொடர்பில் இந்தியாவின் மைய ஆதிக்கத்தை ஏற்றுக்கொண்டன.
(iv) ஹைதராபாத் நிஜாம் இந்திய ஆளுமைக்கு கீழ்ப்படிய மறுத்து, அவர் ஹைதராபாத் அரசை சுதந்திர அரசு என்று அறிவித்தார்.
(v) ஜுனாகத் அரசர் மக்கள் விருப்பத்திற்கு எதிராக பாகிஸ்தானுடன் சேர விரும்பினார்.
(vi) இதே போல், காஷ்மீரின் இந்து அரசான மகாராஜா ஹரிசிங் காஷ்மீர் சுதந்திர அரசாக இருக்குமென்று அறிவித்தார்.
(vii) இதனால் அந்நாட்டு மக்கள் தேசிய மாநாட்டுத் தலைமையில் "காஷ்மீரை விட்டு வெளியேறுங்கள்" என்று போராட்டத்தை அரசருக்கு எதிராக தொடங்கினார்.
(viii) ஹைதராபாத் நிஜாம் விடுதலைப் பிரகடனம் செய்த 48 மணிநேரத்திற்குள் இந்தியா அங்கு காவல்துறை நடவடிக்கைகளைத் தொடர்ந்தது.
(ix) 1946 முதலே படேல் காஷ்மீர் மஹாராஜாவோடு பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்.
(x) இந்திய விடுதலைக்குச் சில மாதங்களுக்குப் பின் பாகிஸ்தானியர்கள் சிலர் காஷ்மீரை சூறையாடினர்.
(xi) இந்த நடவடிக்கையை ஹரிஷிங்கால் தடுக்க முடியவில்லை.
(xii) காஷ்மீர் அரசுக்கு உதவுவதற்காக இந்திய இராணுவம் அனுப்பப்படுவதற்கு முன் காஷ்மீர் அரசர் ஹரிசிங் இணைப்புறுதி ஆவணத்தில் கையெழுத்திட்டார்.
(xiii) இதன் விளைவாக காஷ்மீர் சுதந்திர இந்தியாவின் ஒரு பகுதியானது.
(xiv) சுதேச அரசுகளை இந்தியாவோடு நிறைவாக இணைக்கும் பணியை அப்போதைய இடைக்கால அமைச்சரவையில் உள்துறை அமைச்சராகிய சர்தார் வல்லபாய் படேல், மற்றும் நேரு போன்றோர் திறம்பட செய்து முடித்தனர்.
30.
1. 1920 களில் ஒடுக்கப்பட்டவர்களின் போராட்டங்களின் மையப்புள்ளியாக அம்பேத்கர் விளங்கினார்.
2. மஹர் சாதியின் ராணுவவீரரின் மகனாகப் பிறந்தார் டாக்டர். அம்பேத்கர்.
3. எல்பின்ஸ்டன் கல்லூரியில் சேர்ந்த அம்பேத்கர் கல்வி உதவித்தொகை பெற்று 1912 -ல் பட்டதாரி ஆனார்.
4. பரோடா அரசின் கல்வி உதவித்தொகை பெற்ற அவர் அமெரிக்கா சென்று பட்டமேற்படிப்பு பட்டத்தையும்.
5. கொலம்பியா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்தையும் பெற்றார்.
6. சட்டம் மற்றும் பொருளாதார படிப்புகளுக்காக லண்டன் சென்றார்.
7. 1916- இல் மானுடவியல் தொடர்பான சர்வதேச மாநாட்டில் கலந்து கொண்டு, இந்தியாவின் சாதிகள் என்ற தலைப்பில் கட்டுரையை சமர்ப்பித்தார்.
8. தீண்டாமை கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட மக்களுக்கு தனித்தொகுதிகள் மற்றும் இடங்களின் ஒதுக்கீடு வேண்டும் என்று வாதிட்டார்.
9. அம்பேத்கர் புதிய பத்திரிகைகள் மற்றும் அமைப்புகளைக் தோற்றுவித்தார்.
31.
32.
1. கிலாபத் விஷயம் பல பிரிவினரால் பலவாறாக எடுத்துரைக்கப்பட்டது.
2. உத்தரப்பிரதேசத்தில் இருந்த முஸ்லிம்கள் கிலாப்(எதிர்ப்பு) என்ற அர்த்தமுடைய உருது மொழி வார்த்தையை நிர்வாகத்துக்கு எதிரான பொதுக்கிளர்ச்சியின் அடையாளமாகப் பயன்படுத்தினார்கள்.
3. இவ்வாறே, மலபாரைச் சேர்ந்த மாப்பிள்ளைகள் இதனை நிலப்பிரபுகளுக்கு எதிரான கிளர்ச்சியாக உருமாற்றம் செய்தனர்.
4. இயந்திரங்களின் அறிமுகம், உற்பத்திக்கான புதிய முறைகள், சில பெரிய மாநகரங்களில் தொழிற்சாலைகளின் பெருக்கம் ஆகியவை காரணமாக ஊதியம் ஈட்டுவோராகத் தொழிற்சாலைப் பணியாளர்கள் என்ற புதிய வர்க்கத்தினர் உருவானார்கள்.
5. இந்தியாவில் பெரும்பாலும் கிராமங்களைச் சேர்ந்த தொழிற்சாலை பணியாளர்கள் முதலில் மிகப் பணிவுடனும் முறைசாராமலும் இருந்தனர்.
6. பம்பாயின் சோரப்ஜீ ஷபூர்ஜீ மற்றும் என்.எம்.லோக்காண்டே, வங்காளத்தின் சசிபாத பானர்ஜி ஆகியோர் தொழிற்சாலை பணியாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காகத் தங்களின் குரல்களை எழுப்பினர்.
7. பணியாளர்களுக்கான பணி நிலைமைகள் மிக மோசமாக இருந்தது.
8. மதிய உணவுக்குக் குறுகிய கால இடைவெளி தொழிலாளர்கள் மீது ஐரோப்பிய உதவியாளர்கள் அடிக்கடி நடத்திய தாக்குதல்கள், போதுமான ஊதியம் வழங்காதது ஆகிய இந்த கிளர்ச்சியின் துயர விளைவுகள் ஆகும்.
33.
34.
1. ஆங்கிலேயர்கள் இனப்பாகுபாட்டுக் கொள்கையை பின்பற்றினார்கள்.
2. அரசு உயர் பதவிகளில் இந்தியர்களைப் பணியமர்த்தாமல் திட்டமிட்டு விலக்கி வைக்கப்பட்டதை மக்கள் இந்திய எதிர்ப்புக் கொள்கையின் நடவடிக்கையாகக் கருதினர்.
3. இந்தியாவின் கற்றறிந்த நடுத்தர வர்க்கம் வைத்த வேண்டுகோளை ஆங்கில அரசு ஏற்றுக் கொள்ள மறுத்தது.
4. அரசுக்கு எதிராக வெறுப்புணர்வைத் தூண்டும் முயற்சிகளை மேற்கொள்வோரை தண்டனைக்குள்ளாக்கும் இந்திய தண்டனைச் சட்டம் - 1870 பிரிவு 124A அடக்குமுறைச் சட்டத்தை இயற்றியது.
5. பத்திரிகைகள் அரசியலை விமர்சனம் செய்யத் தொடங்கின.
6. சம்வத் கௌமுகி 1821 பாரசீக மொழியில் எழுதப்பட்டது.
35.
20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அன்னிபெசன்ட் அம்மையார் பிரிட்டனில் இருந்தபோது அயர்லாந்தின் தன்னாட்சி இயக்கம், ஃபேபியன் சோஷலிசவாதிகள், குடும்பக்கட்டுப்பாடு இயக்கங்கள் ஆகியவற்றில் தீவிரப் பங்காற்றினார்.
36.
(i) வேலை நிறுத்தங்களின் அலையாலும் கம்யூனிஸ்ட் செயல்பாடுகள் பரவுவதாலும் கவலை அடைந்த ஆங்கிலேய அரசு, 1928 ஆம் ஆண்டின் தொழிற்தகராறுகள் சட்டம் மற்றும்
(ii) 1928 பொது மக்கள் பாதுகாப்பு மசோதா ஆகிய இரு கொடுஞ்சட்டங்களை இயற்றியது.
37.
1. முஸ்லிம் லீக் தனிநாடு கோரிக்கையைக் தொடர்ந்து கொண்டு வந்தது.
2. முஸ்லிம் லீக் 1940-ல் நிறைவேற்றிய லாகூர் தீர்மானத்தின்படி நிறைவேற்றியது.
3. முகமது அலி ஜின்னா தன்னை மட்டுமே நிலைநிறுத்திக் கொண்டார்.
38.
1. இந்தியாவில் வேவல் பிரபுவைத் தொடர்ந்து மெளண்ட்பேட்டன் பிரபு அரசாங்க பிரதிநிதியாக பொறுப்பேற்றார்.
2. அதிகாரத்தை மாற்றித்தரவும் நாட்டின் பிரிவினையை நடைமுறைப்படுத்தவும் மெளண்ட்பேட்டன் பிரபு இந்தியா வந்தார்.
3. 1947 ஜூன் 3 இல் மெளண்ட்பேட்டன் பிரபு இந்திய அரசியல் பிரச்சனைகளை தீர்க்க மெளண்ட்பேட்டன் திட்டத்தை கொண்டு வந்தார்.
39.
1. லூயி பிளாங்கின் முயற்சியால் உருவாக்கப்பட்ட பட்டறைகள் மூடப்பட்டதை எதிர்த்து தொழிலாளர்கள் போராடினர்.
2. ஜூன் 24 - 26ம் தேதிகளுக்கிடையே ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டார்கள்.
3. பதினோராயிரம் புரட்சியாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
4. இக்காலம் இரத்தம் தோய்ந்த ஜூன் தினங்கள் என்று அழைக்கப்பட்டன.
40.
1.அமெரிக்காவின் உளவு நிறுவனம் மத்திய புலனாய்வு முகமை (Central Intelligence Agency -CIA)1947-இல் உருவாக்கப்பட்டது.
2.சோவியத் யூனியன் உளவு நிறுவனம் KGB(Komitet Gosudarstvennoy Bezopasnosti or Committee for National Security)1954 இல் உருவாக்கப்பட்டது.
41.
1.ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பது.
2.சுரண்டலை ஒழிப்பது.
3.செல்வம் ஓரிடத்தில் குவிக்கப்படுவதை தடுப்பது ஆகியன சமதர்ம சமூக அமைப்பு ஆகும்.
42.
(i) டொமினியன் அந்தஸ்து வழங்குவதென்பது ஏமாற்றமளிக்கக் கூடிய குறுகிய நடவடிக்கையாகும்.
(ii) பிற மாகாணங்களைப் போல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு மாற்றாக உறுப்பினர்களால் நியமிக்கப்படும் முறையை காங்கிரஸ் நிராகரித்தது.
(iii) ஆனால் பேச்சுவார்த்தை தோல்வி அடையக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டு அவ்வாறே நிகழ்ந்தது.
43.
1. இராஜேந்திர பிரசாத், மஜாருள் ஹக், ஆச்சார்ய கிருபாளினி மஹாதேவ தேசாய் போன்ற உள்ளூர் தலைவர்கள் கலந்துகொண்டார்கள்.
2. ஐரோப்பிய வர்த்தகர்கள் படிப்படியாக "சம்பரானை" விட்டே வெளியேற்றிவிட்டனர்.
44.
45.
1.மூன்று பிரச்சனைகளை அது அணுகியிருந்தது.
2.ஸ்வீடனுக்கும் பின்லாந்துக்கும் இடையிலான ஆலந்து தீவுகளின் பிரச்னையை தீர்த்து வைத்தது.
3.மேல்புற சைலேசியாவை முன்னிறுத்தி போலாந்துக்கும் ஜெர்மனிக்கும் இடையேயான சிக்கலைத் தீர்த்து வைத்தது.
4.1925 ல் கிரீஸ் பல்கேரியா மீது படையெடுத்த போது சங்கம் போர் நிறுத்த ஆணையை வெளியிட்டு ஆக்கிரமிப்பை நிறுத்தியது
46.
1.இந்துஸ்தானிலுள்ள இந்துக்கள் அல்லாத மக்கள் இந்து பண்பாட்டையும் மொழியையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
2.அந்நியர்களாக இருப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் அல்லது இந்து தேசத்திற்குக் கீழ்ப்படிந்தவர்களாகவும் உரிமை கோராதவர்களாகவும் இருத்தல் வேண்டும் என்று இவ்வமைப்பின் உறுப்பினர்கள் வெளிப்படையாக கூறினர்.
47.
1. காலனிய காலத்திற்கு முந்தைய இந்தியாவில் கல்வியானது சாதி, மத அடிப்படையில் துண்டுபட்டிருந்து, இந்துக்களிடையே பிராமணர்கள் உயர்நிலை சார்ந்த சமய, தத்துவ அறிவினைப் பெறும் தனியுரிமையைப் பெற்றிருந்தனர்.
2. கல்வியை தங்களின் முழு உரிமையாக்கிக் கொண்ட அவர்கள் பிரதானமாக அர்ச்சகர்களாகவும் ஆசிரியர்களாகவும் சமூகத்தில் அங்கம் வகித்தனர்.
3. இந்தியா போன்ற ஒரு பெரிய காலனி நாட்டை ஆள்வதற்கு ஆங்கிலேயர்களுக்குத் தங்களிடம் பணி செய்ய பெரும் எண்ணிக்கையிலான கல்வி கற்றவர்கள் தேவைப்பட்டனர்.
4. தேவைப்படும் அளவிற்கான பெருவாரியான படித்த நபர்களை இங்கிலாந்திலிருந்து அழைத்து வருவது சாத்தியமற்றது. இந்நோக்கத்தில் 1835இல் இந்தியக் கவுன்சில் ஆங்கிலக் கல்விச் சட்டம் இயற்றப்பட்டது.
48.
1. பிரிவினைக்குப் பின் இந்தியாவில் 42 மில்லியன் முஸ்லிம்களும், பாக்கிஸ்தானில் 20 மில்லியன் முஸ்லிம் அல்லாத இந்துக்கள், சிந்தியர்கள் மற்றும் சீக்கியர்கள் இருந்தனர்.
2. இந்து - முஸ்லிம் வன்முறைகளுக்கு இடையே ஏற்பட்ட உயிர்க் கொலைகள், அதிகாரப் பரிமாற்றம் மென்மையாக நடைபெறவில்லை.
3. இந்திய ராயல் கப்பற்படை கலகம், ஐ.என்.ஏ வழக்குகள் ஆகியவற்றின் போது நிலவிய இந்து முஸ்லிம் ஒற்றுமை தற்போது குலைந்து வெடிக்கும் எரிமலை போல் மாறியிருந்தது.
4. வகுப்பு வாதக் கலவரங்கள் இந்தியா எங்கும், குறிப்பாக வங்காளம், மற்றும் பஞ்சாப்பில் அதிகமாக நடைபெற்றன.
49.
1.ஆரம்பத்தில் தொழிலாளர்கள் தங்கள் முதலாளிகளை பெரிதும் நம்பி வாழ்ந்தனர்.
2.ஒருங்கிணைந்த அமைப்பு முறையும் ஒற்றுமையும் ஏற்படாதவரை நிரந்தரமான முன்னேற்றம் என்பது சாத்தியமில்லை என்பதை உணர்ந்தார்கள்.
3.ஆகவே தொழிற்சங்கங்களை ஏற்படுத்த முனைந்தனர்.
4.தொழிலாளர் நலம் காக்கவும் எனப் பலருக்கும் வழிகாட்டியது.
50.
1.அமெரிக்க புரட்சி உலக வரலாற்றில் பல அணுகுமுறைகளை (avenues) ஏற்படுத்தியது .
2.மக்களாட்சி,குடியரசு போன்ற கோட்பாடுகள் மேலும் விரிவாகப் பரவலாயின.
3.அரசியல்,சமூக மாற்றங்கள் ஜனநாயகத்தையும் சமத்துவத்தையும் அடிப்படையாக கொண்டிருந்தன.
4.குடியேறியவர்கள் அனைவருக்கும் அமெரிக்க ஐக்கிய நாடுகள் சுதந்திரத்தையும் வாய்ப்புகளையும் வழங்கும் நாடானது.
5.கல்வியின் முக்கியத்துவம் சிறப்பிடத்தைப் பெற்றது.
6.கூட்டாட்சிக் கோட்பாடு பரவலானது.
7.அமெரிக்க புரட்சி காலனியாதிக்கத்திற்கு ஒரு பின்னடைவாகும். தங்கள் காலனிய எஜமானர்களுக்கு எதிராக குடியேற்ற நாடுகளின் விடுதலைக்கான கோரிக்கை உலகின் பல்வேறு பகுதிகளில் பரவியது.
8.ஒவ்வொரு தனி மனிதருக்கும் பேச்சு சுதந்திரம், மத சுதந்திரம் மற்றும் சமவாய்ப்பு ஆகியன வழங்கப்பட்ட சுதந்திர சமுதாயம் உருவாவதற்கு இப்புரட்சி வழிகோலியது.
51.
1.1492 ல் கொலம்பஸ் காடிஸ் அருகே உள்ள பாலோஸ் துறைமுகத்திலிருந்து மூன்று சிறிய கப்பல்கள் (தி சான்டா மரியா, தி நின்யா) மூலமாகப் பயணித்தார்.
2.2 மாதங்கள் கழித்து இந்தியா என்று அவரால் நம்பப்பட்ட நிலப்பகுதியை வந்தடைந்தார்.
3.ஆனால் உண்மையில் அது அமெரிக்கா எனும் ஒரு புதிய கண்டமாகும்.
52.
(i) பிரிவினையைச் சமாளித்தல், பொருளாதாரத் திட்டமிடல் மற்றும் கல்விமுறையை சீரமைத்தல் ஆகும்.
(ii) இந்திய விடுதலைப் போராட்டத்தால் கிளர்ந்தெழுந்த உயர்ந்த இலட்சியங்களை எதிரொளிக்கும் அரசமைப்பை உருவாக்குதல்.
(iii) 500 க்கும் அதிகமான எண்ணிக்கையில் வெவ்வேறு பரப்பளவில் இருந்த சுதேச அரசுகளை இந்தியாவோடு ஒருங்கிணைத்தல்.
(iv) மக்களாட்சி, இறையாண்மை, சகோதரத்துவம் ஆகிய கோட்பாடுகளுக்கு இசைவான ஒரு வெளியுறவுக் கொள்கையை உருவாக்க வேண்டிய சவாலும் அடங்கும்.
53.
1. சட்டப்பேரவையைக் கைப்பற்றி தேசியவாத உணர்வூட்டி அதன் செயல்பாடுகளை முடக்கும் ஆற்றலைத் தேசியவாதிகள் வெளிப்படுத்தினர்.
2. சுயராஜ்யம் வேண்டுவோர் மற்றும் மாற்றம் வேண்டுவோர் (pro - changers) என்று இந்த குழு அழைக்கப்பட்டது.
3. சட்டப்பேரவை நுழைவை உதித்த மற்றொரு குழு காந்தி வழியைப் பின்பற்றி மக்களை ஒன்று திரட்டும் பணிகளில் ஆர்வம் காட்டியது.
4. எந்த மாற்றமும் தேவையில்லை என்று இந்த அணியை மாற்றம் விரும்பாதோர் - No - Changes என்று அழைக்கப்பட்டார்கள்.
54.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards