12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 02/03/2021
12ஆம் வகுப்பு வரலாறு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய மூன்று மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium History Reduced Syllabus Three Mark Important Questions - 2021(Public Exam)
12ஆம் வகுப்பு History / வரலாறு தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , History / வரலாறு பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ History Test1.
போரில் அமெரிக்கா நுழைந்தபிறகு நிகழ்ந்தவற்றை வரிசைக்கிரமமாகச் எடுத்துக் கூறுக
2.
சீனாவில் நிகழ்ந்த பாக்ஸர் கிளர்ச்சி பற்றிய குறிப்புகளைத் தருக.
3.
பாரிஸ் கம்யூனை நோக்கி வழிநடத்திச்சென்ற சம்பவங்களின் அடிச்சுவட்டை ஆராய்க.
4.
"1789 ஆம் ஆண்டு புரட்சிக்கு நீண்ட காலத்திற்கு முன்னதாகவே கருத்துக்களின் களத்தில் ஒரு புரட்சி நடந்தது " - விளக்குக.
5.
நேட்டோவைப் போல ஏன் சீட்டோ (SEATO) பிரபலமடையவில்லை ?
6.
1492இல் கொலம்பஸ் மேற்கொண்ட பயணம் பற்றி குறிப்பு வரைக.
7.
மறுமலர்ச்சி காலத்தில் இங்கிலாந்தில் ஏற்பட்ட இலக்கிய சாதனைகளை குறிப்பிடவும்.
8.
இந்திய வேளாண்மையின் பின்தங்கிய நிலைக்கான காரணங்கள் யாவை?
9.
மத்திய அரசு 1980களில் கொண்டுவந்த ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டத்தை விளக்குக.
10.
இந்தியாவில் பசுமைப் புரட்சியின் விளைவுகள் யாவை?
11.
பிரிவினையால் ஏற்பட்ட கடுமையான விளைவுகளைச் சுட்டிக் காட்டுக.
12.
சர் ஸ்டாஃபோர்டு கிரிப்ஸ் அவர்களின் முன்மொழிவுகளை விவாதிக்கவும்.
13.
மாற்றத்தை விரும்புபவர்கள் – மாற்றத்தை விரும்பாதவர்கள் - வேறுபடுத்துக.
14.
பிராமணரல்லாதார் இயக்கத் தலைவர்கள் காலனி அரசாங்கத்தைக் கையாள்வதில் தொடக்க கால தேசியவாதிகள் கடைப்பிடித்த அதே யுக்தியினை கையாண்டனர். விவரி.
15.
பூனா ஒப்பந்தத்தின் முக்கியத்துவம் யாது?
16.
வகுப்புவாதம் ஒரு கருத்தியலாக எவ்வாறு வரையறுக்கப்படுகிறது?
17.
இந்திய சுதந்திரப் போராட்டத்தின் ஒரு அத்தியாயமாக கதார் இயக்கம் கருதப்படுவது ஏன்?
18.
தன்னாட்சி இயக்கத்தின் இரட்டைக் குறிக்கோளைப் பற்றி விவாதிக்கவும்.
19.
டாடா இரும்பு எஃகு நிறுவனம் (TISCO) பற்றி குறிப்பு எழுதுக.
20.
21.
பிபின் சந்திரபாலின் விடுதலை தினத்தை திருநெல்வேலியில் சுயராஜ்ய தினமாக சுதேசி இயக்கத் தலைவர்கள் கொண்டாட திட்டமிட்டதின் விளைவு யாது?
22.
அலிப்பூர் வெடிகுண்டு வழக்கின் முக்கியத்துவம் குறித்து எழுதுக.
23.
மே 1884இல் நடைபெற்ற சென்னை மகாஜன சங்கத்தின் தொடக்கவிழாவில் பங்கேற்ற முக்கியத் தலைவர்களின் பெயர்களை எழுதுக.
24.
பிரிட்டிஷ் இந்தியாவில் ஒப்பந்தக் கூலித் தொழிலாளர் முறை எவ்வழியில் ஏற்படுத்தப்பட்டது?
25.
பிரிட்டிஷ் இந்தியாவில் தேசிய உணர்வினை உருவாக்கியதில் பத்திரிகைகளின் பங்கினை எழுதுக.
1.
1.நீர்மூழ்கிகளின் படையெடுப்பு உக்கிரமானபோது அமெரிக்கர்கள் போரில் நுழைந்தார்கள்.
2.அமெரிக்கா போரில் இறங்கியது நேச நாடுகளின் வெற்றியை முன்பே உறுதி செய்தது போலாயிற்று.
3.பல்கேரியா சரணடைந்தது.
4.துருக்கியர்கள் போர் நிறுத்த ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட விரும்பினர்.
5.ஜெர்மனி நவம்பர் 11 அன்று சரணடைவதாக கையெழுத்திட்டது.
2.
1.பாக்ஸர் என்பது ஈஹிகுவான் என்ற சீன இரகசிய சங்கத்தை குறிக்க அயல்நாட்டினர் பயன்படுத்திய சொல்லாகும்.
2.ஷாண்டுங் மாகாணத்தை பிறப்பிடமாகக் கொண்ட விவசாயிகளே பாக்ஸர் ஆவர்.
3.மஞ்சு வம்சத்தை முடிவுக்கு கொண்டு வருவதோடு முறைகேடாக சலுகைகளை பெற்று வந்த மேற்கத்தியர்களை சீனாவை விட்டு வெளியேற்றுவதே பாக்ஸர்களின் முக்கிய குறிக்கோள் ஆகும்.
4.கிறித்துவ சமயத்தை தழுவிய சீனர்களை பார்த்த இடத்திலேயே கொன்று குவித்தார்கள்.
3.
1. தேசிய மன்றத்தில் பெரும்பான்மையாக மன்னராட்சி ஆதரவாளர்கள் இருந்தது பாரீஸ் நகர மக்கள் மனதை கவலை அடையச் செய்தது.
2. தலைவராக தியர்ஸ் என்ற 71 வயது மனிதரை நியமித்து மக்களுக்கு ஏமாற்றத்தை தந்தது.
3. முறையான ராணுவம் கலைத்துவிட்டபடியால் மக்களே ஆயுதமேந்த தொடங்கினார்.
4.
1.அறிவொளிச் சிந்தனைகளால் எழுச்சியூட்டப்பட்டிருந்த அறிவார்ந்த மக்கள் அனைத்து அறிவுத் துறைகளையும் காரண காரியங்களோடு பார்க்கத் துவங்கினர்.
2. வால்டேர், ரூஸோ, மாண்டெஸ்கியூ ஆகியோரின் எழுத்துகள் 1789 ஆம் ஆண்டு புரட்சிக்கு தூண்டுகோலாய் அமைந்தன.
3. மாண்டெஸ்கியூவின் சட்டங்களின் சாரம்,வால்டேரின் பதினான்காம் லூயியின் காலம்,ரூஸோவின் சமூக ஒப்பந்தம் போன்ற நூல்கள் புரட்சி ஏற்பட தூண்டுகோலாக அமைந்தன.
5.
1.1954 ல் அமெரிக்கா,பிரான்ஸ்,கிரேட் பிரிட்டன்,நியூசிலாந்து ஆஸ்திரேலியா, பிலிப்பைன்ஸ்,தாய்லாந்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் உடன்படிக்கை எனும் அமைப்பை நிறுவின .
2.பிலிப்பைன்ஸ்,தாய்லாந்து தவிர ஏனைய தென்கிழக்கு ஆசிய நாடுகள் இவ்வுடன்படிக்கையில் பங்கேற்க மறுத்து விட்டன.
3.சீட்டோ ஒரு ஆலோசனை மன்றமாக மட்டுமே செயல்பட்டது.
4.வியட்நாம் போருக்குப் பிறகு 1977 ல் சீட்டோ கலைக்கப்பட்டது.
6.
1.1492 ல் கொலம்பஸ் காடிஸ் அருகே உள்ள பாலோஸ் துறைமுகத்திலிருந்து மூன்று சிறிய கப்பல்கள் (தி சான்டா மரியா, தி நின்யா) மூலமாகப் பயணித்தார்.
2.2 மாதங்கள் கழித்து இந்தியா என்று அவரால் நம்பப்பட்ட நிலப்பகுதியை வந்தடைந்தார்.
3.ஆனால் உண்மையில் அது அமெரிக்கா எனும் ஒரு புதிய கண்டமாகும்.
7.
1.ஆங்கில மறுமலர்ச்சியில் முதலாம் எலிசபெத் பல அறிஞர்களை ஆதரித்ததை குறிப்பிடலாம்.
2.வில்லியம் ஷேக்ஸ்பியர், கிறிஸ்டோபர் மார்லோவ், பிரான்சிஸ் பேகன் குறிப்பிடத்தக்கவர்கள்.
3.ஆங்கில இலக்கியத்தின் முடிசூடா மன்னர் வில்லியம் ஷேக்ஸ்பியர் 38 நாடகங்களையும் பல கவிதைகளையும் எழுதியுள்ளார்.
8.
1.வேளாண்மையின் பின்தங்கிய நிலையை இரு காரணிகளோடு தொடர்புபடுத்தி பார்க்கலாம்.
2.ஒன்று நிறுவன அடிப்படையிலானது.
3.நிறுவனம் சார்ந்தது என்பது நிலவுடமை வர்க்கம்,விவசாயத் தொழிலாளர் வர்க்கத்திற்கு இடையே உள்ள சமூக பொருளாதார உறவுகளை குறிப்பது.
4.தொழில்நுட்பம் சார்ந்தது என்பது சிறந்த விதைகள்,டிராக்டர் மற்றும் அறுவடை இயந்திரம் உள்ளிட்ட நீர்ப்பாசன வசதிகள் ஆகியவற்றோடு தொடர்புடையது.
9.
1.1980ல் ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டம் என்ற பெயரில் ஓர் ஒருமுகப்படுத்தப்பட்ட திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
2.கிராமப்புற குடும்பங்களின் பொருளாதார நிலையை உயர்த்துவதற்கு அவர்களுக்கு சில சொத்துக்களை வழங்குவது இத்திட்டத்தின் நோக்கமாகும்.
3.இதன் மூலம் அவர்கள் வறுமையிலிருந்து வெளியே வர இயலும்.
10.
விளைவுகள் :
1.உணவு உற்பத்தி பெருகியது.
2.இரசாயன உரங்கள்,பூச்சிக்கொல்லி மருந்துகள் தயாரிக்கும் தொழிற்சாலை வளர்ச்சி பெற்றது.
3.உபரி உணவு தானியங்கள் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் மக்களுக்குக் கிடைக்குமாறு செய்யப்பட்டு உணவு பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டது.
4.ஏற்றத் தாழ்வுகள் அதிகரித்தது.
5.இரசாயன உரங்கள் பயன்படுத்தப்பட்டால் சூழலியல் பிரச்சனைகள் தோன்றியது.
11.
(i) பிரிவினையைச் சமாளித்தல், பொருளாதாரத் திட்டமிடல் மற்றும் கல்விமுறையை சீரமைத்தல் ஆகும்.
(ii) இந்திய விடுதலைப் போராட்டத்தால் கிளர்ந்தெழுந்த உயர்ந்த இலட்சியங்களை எதிரொளிக்கும் அரசமைப்பை உருவாக்குதல்.
(iii) 500 க்கும் அதிகமான எண்ணிக்கையில் வெவ்வேறு பரப்பளவில் இருந்த சுதேச அரசுகளை இந்தியாவோடு ஒருங்கிணைத்தல்.
(iv) மக்களாட்சி, இறையாண்மை, சகோதரத்துவம் ஆகிய கோட்பாடுகளுக்கு இசைவான ஒரு வெளியுறவுக் கொள்கையை உருவாக்க வேண்டிய சவாலும் அடங்கும்.
12.
(i) இரண்டாம் உலகப்போருக்குப் பின் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டிருந்த சூழலில் அமைச்சரவைத் தூதுக்குழு உருவாக்கப்பட்டது.
(ii) இந்திய நாட்டிற்கென்று நியமிக்கப்பட்டிருந்த அரசு செயலரான சர் ஸ்டாஃபோர்டு கிரிப்ஸையும், A.V. அலெக்ஸாண்டரையும் உறுப்பினர்களாகக் கொண்ட அந்த தூதுக்குழு மார்ச் 1946 இல் இந்தியா வந்தடைந்தது. முழு அதிகார மாற்றத்தை ஏற்படுத்துவதற்குத் தேவையான அரசை உருவாக்க முனைந்தது.
(iii) இத்தூதுக்குழு மாகாணங்களிலும், சுதேச அரசாட்சிக்கு உட்பட்ட பிரதேசங்களினும் தேர்தல் நடத்தி அதன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்டு சுதந்திர இந்தியாவிற்கான அரசியல் சாசனத்தை உருவாக்கலாம் என்று முன்மொழிந்தது.
13.
1. சட்டப்பேரவையைக் கைப்பற்றி தேசியவாத உணர்வூட்டி அதன் செயல்பாடுகளை முடக்கும் ஆற்றலைத் தேசியவாதிகள் வெளிப்படுத்தினர்.
2. சுயராஜ்யம் வேண்டுவோர் மற்றும் மாற்றம் வேண்டுவோர் (pro - changers) என்று இந்த குழு அழைக்கப்பட்டது.
3. சட்டப்பேரவை நுழைவை உதித்த மற்றொரு குழு காந்தி வழியைப் பின்பற்றி மக்களை ஒன்று திரட்டும் பணிகளில் ஆர்வம் காட்டியது.
4. எந்த மாற்றமும் தேவையில்லை என்று இந்த அணியை மாற்றம் விரும்பாதோர் - No - Changes என்று அழைக்கப்பட்டார்கள்.
14.
1. பல்வேறு அடுக்குகள் கண்ட இந்திய சமூகமும் அதனுள் இருந்த முரண்பாடுகளும் உயர் வகுப்பு ஆளுமையைக் கேள்வி கேட்டும் சாதி அமைப்புகள் மற்றும் இயக்கங்கள் தொடங்கப்பட ஏதுவாக அமைந்தன.
2. பிராமணர் அல்லாத தலைவர்களால் நடத்தப்பட்ட இந்த இயக்கம் பிராமணர்கள் மற்றும் இதர உயர் வகுப்பினரின் மேன்மை குறித்துக் கேள்வி எழுப்பின.
3. காலனி ஆதிக்க நிர்வாகிகள் மற்றும் ஏற்படுத்தப்பட்ட கல்வி நிலையங்கள் ஆகியன மறைமுகமாக அவர்களின் தோற்றத்துக்கு வழிவகுத்தன.
4. காலனி ஆதிக்க காலத்தில் இருந்த உயர் வகுப்பு ஆடவர் அனைவரும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பூர்வீக மக்களுக்குத் திறந்த மனதுடன் நடந்துகொண்டனர்.
15.
1. தீண்டத்தகாதோருக்குத் தனித் தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளதைத் தனது வாழ்நாள் முழுவதும் காந்தி அறிவித்தார்.
2. காந்தியின் உயிரைக் காப்பாற்றும் அழுத்தம் அம்பேத்கருக்கு ஏற்பட்டது, ஆலோசனை கூட்டம் பிரார்த்தனை நடந்தது.
3. அம்பேத்கர் மற்றும் காந்தி இடையே ஏற்பட்ட புதிய ஒப்பந்தம் 1932-இல் பூனா ஒப்பந்தம் என்று அழைக்கப்பட்டது.
16.
(i) பிறமதத்தாரோடு பொருள்சார்ந்த பிரச்சனைகளில் கூட விரோதப்போக்கோடு சண்டையிடும் வகையில் ஒரு மதத்தினரை உருவாக்குவது, வகுப்புவாதம் எனப்படும்.
(ii) வகுப்புவாதம் என்ற கருத்தாக்கம் அல்லது இயக்கத்தை பல்வேறு அறிஞர்கள் பல்வேறு விதமாக வரையறுத்துள்ளனர்.
(iii) நேருவின் கூற்றுப்படி வகுப்புவாதம் என்பது பிற்போக்குவாதிகளின் செயல் ஆகும்.
(iv) வகுப்புவாதம் என்பது ஒரு குழு குறுகிய நோக்கில் மற்ற குழுக்கள் அல்லது அரசாங்கத்திடமிருந்து வரும் எதிர்ப்பை மடைமாற்றம் செய்யும் செயல் ஆகும்.
17.
1. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் கதார் இயக்கம் மிக முக்கிய அத்தியாயமாகும்.
2. "கோமாகட்டா மாரு" என்று பெயரிடப்பட்ட கப்பல் இந்தியாவிலிருந்து குடியேறியவர்களுடன் கனடாவில் இருந்து திரும்பியது
3. இந்தியா திரும்பியவுடன் பிரிட்டிஷ் போலீசாருடன் ஏற்பட்ட மோதலில் அந்தக் கப்பலில் இருந்த பல பயணிகள் கொல்லப்பட்டனர்
4. இந்த நிகழ்வு இந்திய தேசிய இயக்கத்திற்கு ஆழமான வடுவை ஏற்படுத்தியது.
5. 1913 இல் லாலா ஹர்தயாள் கதார் கட்சி என்ற அமைப்பைத் தொடங்கினார்.
18.
1. திலகர் தலைமையிலும் மற்றொன்று அன்னி பெசன்ட் அம்மையார் தலைமையிலும் தன்னாட்சி இயக்கங்கள் ஆரம்பிக்கப்பட்டன.
2. இரு இயக்கங்களின் வரையறைகளும் தெளிவாக வகுக்கப்பட்டிருந்தன.
3. தன்னாட்சி இயக்கத்தின் இரட்டைக் குறிக்கோள்கள் பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவில் தன்னாட்சியை ஏற்படுத்துவது மற்றும்,
4. தாய்நாடு பற்றிய பெருமையுணர்வை இந்திய மக்களிடையே ஏற்படுத்துவது ஆகிய அந்த இரண்டு குறிக்கோள்கள் ஆகும்.
19.
(i) 1907 இல் பீகாரிலுள்ள சாகி நகரில் டாடா குழுமத்தால் டாடா இரும்பு மற்றும் எ∴கு நிறுவனம் ( TISCO ) முதன்முதலில் சுதேசி இயக்கத்தின் ஒரு நிகழ்வாக அமைக்கப்பட்டது.
(ii) ஜே. என். டாடா எனப் பிரபலமாய் அறியப்பட்ட "ஜாம்ஷெட்ஜீ " நுஸர்வஞ்சி டாடா- ( 1839 - 1904 ) பரோடாவில் உள்ள நவ்சாரி என்ற இடத்தில் ஒரு பார்சி ஜொராஸ்ட்ரியன் வணிகக் குடும்பத்தில் இருந்து வந்தார்.
(iii) இந்தியாவின் முதல் வெற்றிகரமான தொழிலதிபர் ஆவார்.
(iv) இந்திய நவீன தொழிலகங்களின் தந்தை என அழைக்கப்படுகிறார்.
(v) 1910 இல் மிகப் பெருமளவில் டாடா நீர்மின் சக்தி நிறுவனம் உதயமானது.
(vi) டாடா இரும்பு மற்றும் எ∴கு உற்பத்தி 1912 - 13- ல் 31, 000 டன்னிலிருந்து 1971 - 78 இல் 1, 81, 000 டன்னாக அதிகரித்துள்ளது.
20.
21.
(i) திருநெல்வேலியில் தமிழ்நாட்டுச் சுதேசி இயக்கத் தலைவர்கள் சுதேசி தினத்தை கொண்டாட அரசு நிர்வாகம் அனுமதி மறுத்தது.
(ii) இதை மீறி வ.உ.சி, சுப்பிரமணிய சிவா, பத்மநாபர் ஆகியோர் செயல்பட்டனர். அவர்கள் 1908 மார்ச் 12 இல் தேசதுரோகக் குற்றத்திற்காக கைது செய்யப்பட்டனர்.
(iii) இதனால் கைதுக்கு எதிராக உள்ளூர் மக்கள், வன்முறை நடவடிக்கைகளிலும், கடையடைப்புகளிலும் ஈடுபட்டனர்
(iv) திருநெல்வேலியில் நகரசபைக் கட்டடமும், காவல் நிலையமும் தீ வைக்கப்பட்டன. நூற்பாலைத் தொழிலாளர்கள் ஆலையைவிட்டு வெளியேறி போராட்டம் நடத்தினார்கள். இதில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டிற்கு நால்வர் பலியானார்கள்.
22.
1. புரட்சிகர பயங்கரவாதியாகிய அனுசீலன் சமிதியைச் சேர்ந்த ஹேமச்சந்திர கனுங்கோ பாரிஸ் சென்று இராணுவப் பயிற்சிப் பெற்று நாடு திரும்பி மணிக்தலா எனுமிடத்திலிருந்த ஒரு பண்ணை வீட்டில் குண்டுகள் தயாரிப்பதற்கான ஒரு தொழில்கூடத்தை நிறுவினார்.
2. சுதேசி போராட்டக்காரர்களை கொடூரமாக நடத்திய டக்ளஸ் கிங்ஸ்போர்டு எனும் ஆங்கில அதிகாரியை குண்டு வீசி கொல்ல திட்டம் தீட்டப்பட்டது.
3. கொலை செய்யும் பொறுப்பு புரட்சிவாதிகளான குதிரம் போஸ் மற்றும் பிரஃபுல்லா சாக்கி ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
4. 1908 ஏப்ரல் 30 இல் அவர்கள் தவறுதலாக ஒரு சாரட் வண்டியின் மீது குண்டை வீச கிங்ஸ்போர்டுக்குப் பதிலாக வேறு இரண்டு ஆங்கில பெண்கள் அதில் கொல்லப்பட்டனர்.
இதனால் பிரஃபுல்லா சாக்கி தற்கொலை செய்து கொல்ல, குதிரம் போஸ் ஆங்கில அரசால் தூக்கிலிடப்பட்டார்.
23.
1. ஓர் அரசியல் சார்ந்த அமைப்பின் தேவை உணரப்பட்டது. அதன் விளைவாக மே 16,1884-இல் சென்னை மகாஜன சங்கம் நிறுவப்பட்டது.
2. தொடக்கவிழாவில் பங்குபெற்ற முக்கிய தலைவர்கள் ஜி. சுப்பிரமணியம், விஜயராகவாச்சாரி, அனந்தா சார்லு, ரங்கையா, பாலாஜிராவ், சேலம் ராமசாமி ஆகியவர்கள் ஆவார்கள்.
24.
1. 1815 - இல் சிலோன் ஆளுநர் சென்னை மாகாண ஆளுநருக்கு எழுதிய கடிதத்தில் பெருந்தோட்டங்களில் வேலை செய்யக் கூலிகளை அனுப்பிவைக்கக் கேட்டுக்கொண்டார்.
2. 1833, 1843 ஆகிய ஆண்டுகளில் ஏற்பட்ட பஞ்சங்கள், அரசாங்கத்தின் தூண்டுதல் இல்லாமலேயே மக்கள் புலம் பெயர்ந்து செல்லக்கட்டாயப்படுத்தின.
3. ஒப்பந்தக் கூலித் தொழிலாளர் முறையின் கீழ் இலங்கையில் காபி, தேயிலைத் தோட்டங்களில் இந்தியர்கள் கூலிகளாக வேலை செய்யச் சென்றார்கள்.
25.
1. இந்தியாவில் அச்சு இயந்திரம் அறிமுகம் செய்யப்பட்டமை மிக முக்கிய நிகழ்வாகும்.
2. நவீன சிந்தனைகளைப் பரப்ப மக்களுக்கு பத்திரிக்கைகள் உதவின.
3. பத்திரிகைகள் அரசியலை விமர்சனம் செய்யத் தொடங்கின. நாட்டினைப் பாதிக்கும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து மக்களிடம் பேசின.
4. தன்னாட்சி, மக்களாட்சி, குடிமை உரிமைகள், தொழில்மயமாக்குதல் போன்ற நவீன சிந்தனைகளை மக்களுக்குப் பரப்ப பத்திரிகைகள் உதவின.
5. தி இந்தியன் மிரர், தி இந்து, சுதேசமித்திரன் ஆகியன முக்கியத்துவம் வாய்ந்த பத்திரிகைகள் ஆகும்.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards