12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 02/03/2021
12ஆம் வகுப்பு வரலாறு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய இரண்டு மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium History Reduced Syllabus Two Mark Important Questions - 2021(Public Exam)
12ஆம் வகுப்பு History / வரலாறு தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , History / வரலாறு பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ History Test1.
கியூபெக் சட்டம் பின்னணி யாது?
2.
டோல்புடில் குற்றவழக்கின் பின்னணி யாது?
3.
1956 இல் நிறைவேற்றப்பட்ட தொழில் கொள்கைத் தீர்மானமே மிகவும் உறுதியான கொள்கை அறிக்கையாகும்.அது தொழிலகங்களை மூன்று வகைகளாகப் பிரித்தது.அவை யாவை?
4.
ஏன் வேவல் பிரபு சிம்லா பேச்சுவார்த்தையைக் கைவிட்டார் ?
5.
தாய்நாட்டைக் காப்பதற்காய் பெண்களின் நிலை என்ன?
6.
குலாம்கிரி எதை அடிக்கோடிட்டுக் காட்டியது?
7.
க்ளாட் ஹென்றி செயின்ட் - சைமன் பற்றிக் குறிப்பு தருக.
8.
கராச்சி அமர்வின் முக்கியத்துவம் குறித்து கூறு.
9.
உதம் சிங் பற்றி தருக.
10.
அன்னிபெசன்ட் அம்மையாரின் ஆரம்பகால பணிகள் குறித்து கூறுக.
11.
நிகிலிசம் என்றால் என்ன?
12.
முதல் உலகப்போரின் காலத்தில் கிழக்கு திசையில் வான் ஹிண்டன்பர்க் ஆற்றியப் பங்கை விளக்குக.
13.
எமிகிரஸ் என்போர் யாவர்?
14.
நில உச்சவரம்பு பொருள் யாது?
15.
இராயல் இந்தியக் கடற்படையின் கலகத்தின் முக்கியத்துவம் யாது?
16.
இந்திய தேசிய இராணுவம் மீதான விசாரணையின் விளைவு என்ன?
17.
அன்னிபெசன்ட் அம்மையாரின் ஆதரவாளர்கள் பெயரை குறிப்பிடுக.
18.
ஆக்கப்பூர்வமான சுதேசி என்பது பற்றி ரவீந்திரநாத் தாகூரின் கருத்து என்ன?
19.
ரிஸ்லி அறிக்கை பற்றி குறிப்பு வரைக.
20.
இங்கிலாந்தில் ஏற்பட்ட தொழிற்புரட்சி இந்திய பொருளாதாரம் சீர்குலைய வழிவகுத்தது என்ற கூற்றை நிரூபி.
21.
இந்திய அரசியல் நிர்ணயசபை எப்படி உருவானது?
22.
கஃபிலா (Kafila) என்றால் என்ன?
23.
மெளண்ட்பேட்டன் பிரபு பற்றி எழுதுக.
24.
நேரடி நடவடிக்கை நாள் என்றால் என்ன?
25.
சென்னை வாசிகள் சங்கம் என்றால் என்ன?
26.
இந்தியாவின் பழம்பெருமையை பற்றி அரவிந்த கோஷ் கூறுவது யாது?
27.
இந்தியாவில் ஏற்பட்ட சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள் யாவை?
28.
பிலிப்பைன்ஸில் 1902இல் நிறுவப்பட்ட அமெரிக்க ஆட்சியின் உடனடி விளைவுகள் யாவை?
29.
நான்கிங் ஒப்பந்தத்தின் முக்கியத்துவத்தை ஆய்க.
30.
பேர்ல் துறைமுகத்தை ஜப்பான் தாக்கியதன் முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்தி எழுதுக.
31.
தொழிற்புரட்சியின் சிறப்புக்கூறுகளை முன்னிலைப்படுத்திக் காட்டவும்.
32.
மனிதன் மற்றும் குடிமக்களின் உரிமைப் பிரகடனத்தின் சாராம்சத்தை அடிக்கோடிட்டுக் காட்டவும்.
33.
பண்டைய ஆட்சி முறையின் மூன்று எஸ்டேட்டுகளை விவாதிக்கவும்.
34.
ஐ.நா சபையில் நிறைவேற்றப்பட்ட “அமைதிக்காக இணைகிறோம்” எனும் தீர்மானத்தின் சிறப்பினைக் குறிப்பிடவும்
35.
"மூவர் தலையீடு"எனப்படுவது யாது?
36.
நட்சத்திர சேம்பர் உருவாக்கப்பட்டதன் நோக்கம் என்ன ? அது ஏன் அவ்வாறு அழைக்கப்பட்டது?
37.
1493ஆம் ஆண்டின் போப்பின் ஆணை பற்றி நீவிர் அறிந்ததென்ன?
38.
இந்தியா விடுதலை அடைந்ததைத் தொடர்ந்து பொதுத்துறை நிறுவனங்களை அமைப்பது தொடர்பாக வைக்கப்பட்ட இரண்டு முக்கிய கருத்துக்களை சுட்டிக் காட்டுக.
39.
AITUC - பற்றி சுருக்கமாக எழுதுக?
40.
கிரிப்ஸ் முன்மொழிவைக் காங்கிரஸ் ஏன் நிராகரித்தது?
41.
லாகூர் தீர்மானத்தின் முக்கியத்துவம் என்ன?
42.
இந்தியப் பணியாளர் சங்கம் ஏன் தோற்றுவிக்கப்பட்டது?
43.
இந்தியா வந்த வேல்ஸ் இளவரசர் எவ்வாறு வரவேற்கப்பட்டார்?
44.
இந்து-முஸ்லிம்களிடையே பிரிவினை ஏற்படக் காரணமான ஆரிய சமாஜத்தின் இரண்டு இயக்கங்கள் யாவை?
45.
இரண்டாவது லாகூர் சதி என்றறியப்படும் நிகழ்வு யாது?
46.
பிரிட்டிஷ் இந்தியாவில் தீவிர தேசியவாதிகளின் மையமாக விளங்கிய தலைவர்களைக் கண்டறிக.
47.
மகாதேவ் கோவிந்த் ரானடே சுதேசிக் கொள்கையினை எவ்வாறு விளக்குகிறார்?
48.
இல்பர்ட் மசோதாவின் முக்கியத்துவத்தை விவாதி.
49.
புதிய நிலவுடைமை உரிமைகளால் ஏற்பட்ட பாதிப்புகளை எழுதுக.
50.
பொருளாதாரப் பெருமந்தத்தின் போது தமிழ்நாட்டில் தொழில்துறை வளர்ச்சி பற்றி கூறு.
1.
1. 1774 இல் இங்கிலாந்துப் பாராளுமன்றத்தால் இயற்றப்பட்ட கியூபெக் சட்டத்தின்படி, ஓஹியோ மற்றும் மிசிசிபி ஆகிய இரு நதிகளுக்கு இடைப்பட்ட நிலப்பகுதி கியூபெக்கிற்கு வழங்கப்பட்டது.
2.இதனால் நியூயார்க்,பென்சில்வேனியா,வெர்ஜினியா ஆகிய அரசுகள் கோபம் கொண்டன.ஏனெனில் இதே நிலப்பகுதி இக்கலனியரசுகளுக்கு அரச பட்டயத்தின் மூலம் முன்னரே வழங்கப்பட்ட பகுதிகளாகும்.மேலும் இப்புதிய பகுதியில் பிரெஞ்சுக் குடிமைச் சட்டங்களும் ரோமன் கத்தோலிக்க மதமும்,செயல்பட இங்கிலாந்து அனுமதித்ததன் மூலம் பிராட்டஸ்டண்ட் காலனிகளையும் கோபம் கொள்ளச் செய்தது.
2.
டோல்புடில் குற்றவழக்கு :
1.இங்கிலாந்தின் விக் அரசாங்கம் தொழிலாளி வர்க்கத்தினரிடையே வளர்ந்து வரும் அதிருப்தியைக் கண்டு அச்சம் கொண்டு,1834 இல் அறிவிக்கப்பட்ட, ஊதிய வெட்டுக்கு எதிராக தொழிலாளர்களை ஒன்று திரட்டியதற்காக ஆறு டோல்புடில் தொழிலாளர்களைக் கைது செய்தது.
2. அவர்கள் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டு, தண்டனையாக ஏழு வருடங்களுக்கு ஆஸ்திரேலியாவில் இருந்த தண்டனைக் காலனிக்கு நாடு கடத்தப்பட்டனர்.
3.அவர்கள் ஆறு பேரும் தொழிலாளர்களுக்காக உயிர்துறந்த தியாகிகள் ஆயினர்.
3.
அட்டவணை :
1."அ " வில் இடம்பெற்ற தொழிலகங்கள் அரசின் முற்றுரிமையின் கீழிருந்தன.
2. அட்டவணை "ஆ"வில் இடம் பெற்ற தொழிலகங்கள் அரசு புதிய அலகுகளைத் தொடங்கலாம்,ஆனால் தனியார் துறையினரும் தங்கள் அலகுகளை அமைக்கலாம் அல்லது விரிவாக்கலாம்.மீதமுள்ள தொழிலகங்கள் அட்டவணை "இ" யில் இடம்பெற்றன.
4.
முஸ்லீம் லீக் தனக்கு மட்டுமே இஸ்லாமியப் பிரதிநிதிகளை நியமிக்க உரிமை உள்ளது என்று வாதிட்டதோடு காங்கிரஸ் உயர்வகுப்பு இந்துக்களை மட்டுமே நியமிக்க முடியும் என்றும் அது ஒரு முஸ்லிமையோ ஒடுக்கப்பட்ட சமூகத்தவரையோ நியமிக்கக்கூடாதென்றும் வலியுறுத்தியது.இது மக்களை மேலும் அனைத்து இந்திய மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்த காங்கிரஸிற்கு இருந்தத் தகுதியைக் குறைத்து மதிப்பிடுவதாகவும் கருதப்பட்டது.முஸ்லீம் லீக்கின் பங்களிப்பில்லாமல் ஒரு குழு முழுமைபெறாது என்று வேவல் பிரபு கருதியதால் அவர் சிம்லா பேச்சுவார்த்தையைக் கைவிட்டார்.
5.
நாட்டின் சுதந்திரத்திற்காக தங்களை அர்ப்பணித்துக்கொண்ட இளைஞர்கள் பலரைப் பிரதிநிதித்துவப்படுத்த பகவத்சிங் போன்றோர் இருக்கின்ற அதே வேளையில் ஆணாதிக்கமிக்க இச்சமூகத்தில் தாய்நாட்டைக் காப்பதற்காய் இளம்பெண்களின் பிரதிநிதியாய் விடுதலைப்போரில் ஆயுதத்தாங்கி கல்பனா தத் போன்றோரும் பங்கேற்றனர்.வெறும் செய்திகளை அங்குமிங்கும் எடுத்துச் செல்பவராய் மட்டுமின்றி,போரில் நேரடி நடவடிக்கைகளில் பங்கு பெற்று,துப்பாக்கிக் கொண்டு ஆண்களுடன் இணைந்து போராடினர்.
6.
1872 ஆம் ஆண்டு ஜோதிபா பூலேவின் புத்தகம் குலாம்கிரி என்ற தலைப்பில் முதலில் வெளிவந்தது. அவரது அமைப்பு, சத்யசோதக் சமாஜ், பிராமணியத்தின் கொடுங்கோல் மற்றும் சுரண்டல் ஆகியவற்றிலிருந்து ஒதுக்கப்பட்ட சாதியினரை விடுவிப்பதற்கான அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டியது.
7.
1.சைமன் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக அமெரிக்க சுதந்திரப் போரில் பங்கேற்க பிரெஞ்சு உயர்குடிமகனாவார்.
2.விஞ்ஞானத்திலும், முன்னேற்றத்திலும் பெரும் நம்பிக்கை கொண்டிருந்தார்.
3.சமூகக் கட்டமைப்பில் சமய குருமார்களின் இடத்தை விஞ்ஞானிகளைக் கொண்டு நிரப்பப்பட வேண்டும்.
4.தனது நூலான புதிய கிருத்துவத்தில் ஏழைகளை அரவணைக்க கிறித்துவக் கொள்கைகளைப் பின்பற்ற வலியுறுத்தினார்.
8.
1.உலக அளவிலான பொருளாதார பெருமந்த நிலையால் விவசாயம் பெருமளவில் பாதிக்கப்பட்ட விவசாயிகளை காங்கிரஸ் ஒன்று திரட்டியது.
2.குத்தகை செலுத்தா மற்றும் வரி செலுத்தா போராட்டத்தைக் கடைப்பிடித்தது.
3.பெருமந்த அழுத்தத்தினால் ஏற்பட்ட சமூக பொருளாதார தேவைகள் குறித்தும் கராச்சி அமர்வில் தீவிரமாய் பேசப்பட்டது.
9.
1.கால்சா ஆதரவற்றோர் காப்பகத்தில் வளர்ந்தவர் உதம் சிங் ஆவார்.
2.ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு பழி தீர்க்கும் விதமாக 1940 மார்ச் 30ல் லண்டன் காக்ஸ்டன் அரங்கில் மைக்கேல் ஓ டையரை உதம் சிங் படுகொலை செய்தார்.
3.லண்டனில் பென்டோவில்லே சிறையில் உதம் சிங் தூக்கிலிடப்பட்டார்.
10.
20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அன்னிபெசன்ட் அம்மையார் பிரிட்டனில் இருந்தபோது அயர்லாந்தின் தன்னாட்சி இயக்கம், ஃபேபியன் சோஷலிசவாதிகள், குடும்பக்கட்டுப்பாடு இயக்கங்கள் ஆகியவற்றில் தீவிரப் பங்காற்றினார்.
11.
1. பல்லாண்டு கால கட்டியெழுப்புதலின் வடிவமான சமூக அமைப்பை எதிர்க்கும் உணர்வின் பிரதிநிதித்துவமே நிகிலிசமாகும்.
2. நிகிலிசம் நாட்டின் அரசு, கிறித்துவ ஆலயம், குடும்பம் போன்ற நிறுவனங்கள் கொண்டிருந்த அதிகாரத்தை மறுத்தது.
3. அதன் நம்பிக்கைகள் விஞ்ஞான அடிப்படையிலான உண்மையைச் சுற்றிய அமைந்திருந்தன.
12.
1. கிழக்கு திசையில் ரஷ்யப்படைகள் பிரஷ்யாவின் கிழக்குப்பகுதி வரை ஊடுருவிச் சென்றன.
2. டானென்பர்க் போரில் வான் ஹிண்டன்பர்க்கின் போர்த்திறத்தால், ரஷ்யா தோல்வி அடைந்தது.
3. ரஷ்யர்களின் போலந்து தாக்குதலை தடுக்கச் செய்தார்.
13.
1.அரசியல் காரணங்களுக்காக தங்கள் சொந்த நாட்டிலிருந்து வெளியேறி மற்றொரு நாட்டில் குடியேறுவோரை எமிகிரஸ் என்பர்.
2.பிரான்சின் அன்றைய சூழலில் புரட்சியைத் தொடர்ந்து வந்த ஆண்டுகளில் நாட்டை விட்டு ஓடிய பிரபுக்களை எமிகிரஸ் என அழைத்தனர்.
14.
1.நில உச்சவரம்பு என்பது தனிநபர்கள் அதிகபட்சம் எவ்வளவு நிலங்களை சொந்தமாக வைத்துக் கொள்ளலாம் என்பதாகும்.
2.இது தொடர்பாக தமிழ்நாட்டில் முதன் முறையாக 1961 இல் நடைமுறைப்படுத்தப்பட்டது.
3.1972 வரை ஒரு சில நில உரிமையாளர் எவ்வளவு நிலங்களை சொந்தமாக வைத்துக் கொள்ளலாம் என்பதற்கு உச்சவரம்பு நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.
15.
1.இக்கலகம் தலைவன் இல்லாத ஒரு கலகம் ஆகும்.
2.மாலுமிகள் குறிப்பான எந்தத் திசையிலும் நகரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
3.பம்பாய்,கல்கத்தா,மதராஸ் நகரங்களின் தொழிற்சங்கப் போராட்டங்கள் மாலுமிகளுக்கு ஆதரவாக இருந்தது.
16.
1.ஷா நவாஸ் கான்,PK ஷெகல்,மற்றும் G.S தில்லான் ஆகிய இந்திய தேசிய இராணுவத்தின் மூன்று அதிகாரிகளிடம் விசாரணை நடத்தியது.
2.பத்திரிகைகள் யாவும் தலையங்கங்கள் அனைத்திலும் அவர்களது விடுதலைக்காக கோரிக்கை வைத்தனர்.
3.கடையடைப்புகளும் ஊர்வலங்களும்,பொது வேலை நிறுத்தங்களும் இந்திய தேசிய இராணுவ வாரம் கடைபிடிக்கப்பட்ட போது நடந்தேறியதோடு வீரர்களின் உடனடி விடுதலையும் வலியுறுத்தப்பட்டது.
17.
1.ஜம்னாதாஸ்
2.துவாரகாதாஸ்
3.ஜார்ஜ் அருண்டேல்
4.சங்கர்லால் பாங்கர்
5.இந்துலால் யக்னிக்
6.சி.பி இராமசாமி பி.பி.வாடியா
18.
1.சுய உதவி எனும் ஆக்கத் திட்டத்தை அவர் கோடிட்டு காட்டினார்.
2.பொருளாதார வளர்ச்சிக்கு அழைப்பு விடுத்தார்.
3.இதன் விளைவாக அனைத்து இடங்களிலும் ஜவுளி கைத்தறித் துணிகள்,சோப்புகள்,மட்பாண்டங்கள்,தீப்பெட்டி, தோல் பொருட்கள் ஆகிய விற்பனை நிலையங்கள் பெருகின.
19.
1.1903 டிசம்பரில் இந்தியாவின் மறுவிநியோகம் தொடர்பான குறிப்புகளில் ஒரு திட்டத்தை தீட்டினார் கர்சன் பிரபு.
2.இதுவே ரிஸ்லி அறிக்கை என்ற பெயரில் வெளியிடப்பட்டது.
3.இவ்வறிக்கை பிரிவினைக்கு இரண்டு காரணங்களை முன்வைத்தது.
1) வங்காளத்தில் சுமை குறைப்பு.
2) அசாமின் முன்னேற்றம் ஆகும்.
20.
1.இந்தியாவிலிருந்து பருத்தி,சணல்,பட்டு ஆகிய கச்சாப் பொருட்கள் இங்கிலாந்து எடுத்துச் செல்லப்பட்டு உற்பத்தி பொருட்களாக மாறி இந்திய சந்தைகளில் விற்பனை செய்யப்பட்டது.
2.இங்கிலாந்துப் பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டதால் இந்தியாவில் நெசவாளர்,தச்சர்,கொல்லர்,காலணிகள் தயாரிப்போர் வேலை இழந்தனர்.
3.உணவுப் பற்றாக்குறைக்கு வழிவகுத்தது.
21.
1. இந்திய அரசாங்கச் சட்டம் 1935 - இந்த அடிப்படையில் ஆகஸ்ட் 1946 - இல் மாகாண சட்டமன்றங்களுக்கான தேர்தல் நடைபெற்றது.
2. மாகாண சட்ட மன்றங்கள் மத்திய சட்டமன்றத்தைத் தேர்ந்தெடுக்க அது அரசமைப்பு நிர்ணய சபையாக செயல்பட்டது.
3. இதன் தலைவராக டாக்டர் இராஜேந்திர பிரசாத் அரசமைப்பு நிர்ணய சபையின் கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
22.
1. இரண்டு தேசங்கள் (இந்தியா, பாகிஸ்தான்) உருவான பிறகு இரண்டு நாடுகளிலும் இருந்து மக்கள் இடம் பெயர்ந்தனர்.
2. அவ்வாறு இடம் பெயர்ந்த மக்கள் இரு நாட்டு எல்லையைக் கடப்பதற்காக நகர்ந்த அகதிகளின் நீண்ட வரிசை கஃபிலா எனப்பட்டது.
23.
1. இந்தியாவில் வேவல் பிரபுவைத் தொடர்ந்து மெளண்ட்பேட்டன் பிரபு அரசாங்க பிரதிநிதியாக பொறுப்பேற்றார்.
2. அதிகாரத்தை மாற்றித்தரவும் நாட்டின் பிரிவினையை நடைமுறைப்படுத்தவும் மெளண்ட்பேட்டன் பிரபு இந்தியா வந்தார்.
3. 1947 ஜூன் 3 இல் மெளண்ட்பேட்டன் பிரபு இந்திய அரசியல் பிரச்சனைகளை தீர்க்க மெளண்ட்பேட்டன் திட்டத்தை கொண்டு வந்தார்.
24.
1. காங்கிரசும் ஜின்னாவும் அமைச்சரவை தூதுக்குழுத் திட்டத்தை ஏற்றுக் கொண்டனர்.
2. ஆனால் பல வாரங்கள் நடைபெற்ற இரகசிய பேச்சுவார்த்தைகளுக்குப் பின் ஜூலை 29, 1946 இல் முஸ்லிம் லீக் அமைச்சரவை தூதுக்குழு திட்டத்தை நிராகரிப்பதாக அறிவித்தது.
3. மேலும் இந்தியாவிலுள்ள அனைத்து முஸ்லிம்களையும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஆகஸ்ட் 16 அன்று "நேரடி நடவடிக்கை நாளில்" ஈடுபடவும் அழைப்பு கல்கத்தாவில் நான்கு நாட்கள் கலவரங்களும் கொலைகளும் நடந்தேறின.
25.
1. 1852 பிப்ரவரி 26இல் சென்னை வாசிகள் சங்கம் எனும் அமைப்பு உருவாக்கப்பட்டது.
2. சென்னையின் மிக முக்கிய வணிகரான காஜுலா லட்சுமிநரசு என்பவரே இவ்வமைப்பு உருவாவதற்கு உந்து சக்தியாய் திகழ்ந்துள்ளார்.
3. இவ்வமைப்பு 1852 டிசம்பரில் சமர்ப்பித்த மனுவில் ரயத்துவாரி, ஜமீன்தாரி முறைகள் வேளாண் வர்க்கத்தினரைக் கடும் துன்பங்களுக்கு உள்ளாக்கியதைச் சுட்டிக்காட்டியது.
26.
1. தேசியத்தின் குறிக்கோளானது இந்தியச் சிந்தனையை, இந்திய குணநலன்களை, இந்திய உணர்வுகளை, இந்திய ஆற்றலை, இந்தியாவின் உன்னதத்தை மீட்டெடுப்பதாகும்.
2. மேலும் உலகைத் தடுமாறச் செய்யும் பிரச்சினைகளை இந்திய மனப்பாங்குடன் இந்திய நிலைப்பாட்டில் தீர்த்து வைப்பதாகும் என அரவிந்த கோஷ் எழுதினார்.
27.
1. பத்தொன்பதாம் நூற்றாண்டில் நடைபெற்ற சீர்திருத்த இயக்கங்களைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம். ராஜாராம் மோகன் ராயால் நிறுவப்பெற்ற பிரம்மசமாஜம்.
2. டாக்டர் ஆத்மராம் பாண்டுரங் உருவாக்கிய பிரார்த்தனை சமாஜம், சையத் அகமது கானால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட அலிகார் இயக்கம் ஆகிய சீர்திருத்த இயக்கங்கள் ஆகும்.
28.
1.அமெரிக்க ஆட்சியின் ஆரம்பத்தில் முதன்மையான காலனிய நிறுவனங்கள் தோற்றுவிக்கப்பட்டன.
2.ஆங்கில வழி கல்விமுறை,தேர்வுகள் அடிப்படையில் குடிமைப்பணி,மாகாண நீதிமன்றங்களை உள்ளடக்கிய நீதித்துறை உருவாக்கப்பட்டது.
3.தேர்தல் மூலம் நகராட்சி மற்றும் மாகாண அரசுகள் நிறுவப்பட்டது.
29.
1.முதலாம் அபினிப் போரின் இறுதியில் 1842 இல் நான்கிங் உடன்படிக்கை கையெழுத்தானது.
2.சீனாவின் கதவுகள் பிரிட்டனுக்காக திறந்து விடப்பட்டது.
3.சீனா ஹாங்காங்கை விட்டுக் கொடுத்ததோடு இழப்பீடாக ஒரு தொகையையும் வழங்கியது.
30.
1.ஜப்பான் பேர்ல் துறைமுகம் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்க ஜப்பான் மீது போர் பிரகடனம் செய்தது.
2.இது முழுமையான இரண்டாம் உலகப் போருக்கு வழிவகுத்தது.
3.பிரிட்டனும்,சீனாவும் அமெரிக்க ஐக்கிய நாட்டோடு கைகோர்த்தன.
31.
1.அறிவியல் தொழில் புகுத்தப்பட்டது.
2.இரும்பு எஃகு பயன்பாடு அதிகரித்தது.
3.உற்பத்தியை அதிகரிக்கச் செய்த புதிய இயந்திரங்களின் கண்டுபிடிப்பு.
4.சிறப்புத் தொழிற்திறன் முறைகள்.
5.போக்குவரத்து மற்றும் செய்தித் தொடர்புகளில் ஏற்பட்ட முன்னேற்றம் ஆகியவை தொழிற்புரட்சியின் சிறப்புக் கூறுகள் ஆகும்.
32.
1.1789 ஆகஸ்ட் 26ல் மனிதன் மற்றும் குடிமகனின் உரிமைப் பிரகடனம் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
2.அரசரைச் சட்டத்தின் ஆட்சிக்குத் துணையாய் இருக்க செய்த இப்பிரகடனம் தனிமனித உரிமைகளையும் கூட்டு உரிமைகளையும் வரையறை செய்தது.
3.ஒரு முகவுரையையும் 17 பிரிவுகளையும் கொண்டுள்ளது.
4.அனைத்து மக்களும் தங்கள் வருவாய் ஆதாரங்களுக்கு ஏற்றவாறு வரி செலுத்த வேண்டுமென கூறுகிறது.
33.
1.பிரெஞ்சு சமூகம் மூன்று முக்கியப் பிரிவுகளைக் கொண்டிருந்தது.
2.இவை எஸ்டேட்டுகள் என அழைக்கப்பட்டது.
3.மதகுருமார்கள்,நிலப்பிரபுக்கள்,உரிமைகளற்ற சாதாரண மக்கள் ஆகியனவாகும்.
34.
1.அமெரிக்காவின் முன்முயற்சியில் ஐ.நா. பொது அவை அவசரமாக கூடி அமைதிக்காக ஒன்றுபடுகிறோம் என்று தீர்மானத்தை நிறைவேற்றியது.
2.பாதுகாப்பு சபையானது ஒரு நெருக்கடியில் உடன்பாட்டை எட்ட முடியாவிட்டால் பொது அவை இராணுவத்தை பயன்படுத்தும்.
3.இது சட்டத்திற்கு புறம்பானது என சோவியத் ரஷ்யா நினைத்தது.
35.
1.ஜப்பானின் வளர்ச்சியைக் கண்டு அஞ்சிய ஐரோப்பிய சக்திகள் ஜப்பானை லியோடாங்
2.1895-ல் இந்த மூவர் தலையீட்டால் (பிரான்ஸ்,இங்கிலாந்து,ரஷ்யா)சினமடைந்து ஜப்பான் மிகப்பெரிய போர்த்தளவாடத் திட்டத்தை வகுத்தது.
36.
1.இங்கிலாந்தில் பிரபுக்களின் சொத்துக்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க நட்சத்திர சேம்பர் என்ற பெயரில் நீதிமன்றத்தை ஏழாம் ஹென்றி உருவாக்கினார்.
2.நீதிமன்ற நடைமுறைகள் நடந்த வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையின் மேல் சுவரில் நட்சத்திரங்கள் ஓவியமாக தீட்டப்பட்டிருந்ததால் இப்பெயர் பெற்றது.
37.
1.1493 ஆம் ஆண்டு போப் ஆணை வெளியிட்டார்.
2.பெர்முடா தீவுகளுக்கு மேற்கே 320 மைல்கள் தொலைவில் வடக்கு தெற்காக ஒரு கோட்டினை வரைய இவ்வாணைவழி வகை செய்தது.
3.கோட்டிற்கு மேற்கே ஸ்பெயினும் கிழக்கே போர்ச்சுகலும் கண்டுபிடிக்கும் நாடுகளுக்கு சொந்தம் கொண்டாட அனுமதி அளித்தது.
38.
1.பொதுத்துறை நிறுவனங்கள் உருவாக்கப்படுவதை இரு முக்கிய அம்சங்கள் தீர்மானித்தன.
2.ஒன்று கருத்தியல் மற்றொன்று நடைமுறை சார்ந்தது.
3.கருத்தியல் நிலையில் அரசாங்கம் சமதர்ம வளர்ச்சிக்கு உறுதியளித்தது.
4.நடைமுறையில் கனரகத் தொழில்களை ஏற்கும் பொறுப்பை அரசே ஏற்க வேண்டியிருந்தது.
39.
1. 1920 அக்டோபர் 30 - இல் 1,40,854 உறுப்பினர்களைக் கொண்ட 64 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் பம்பாயில் சந்தித்தனர்.
2. லாலா லஜபதி ராயின் தலைமையில் அகில இந்தியத் தொழிற்சங்க காங்கிரசை (AITUC) நிறுவினார்.
3. மோதிலால் நேரு, சி.ஆர்.தாஸ், பட்டேல், சந்திரபோஸ், நேரு போன்ற பல தலைவர்கள் இந்த அமைப்பை ஆதரித்தனர்.
40.
(i) டொமினியன் அந்தஸ்து வழங்குவதென்பது ஏமாற்றமளிக்கக் கூடிய குறுகிய நடவடிக்கையாகும்.
(ii) பிற மாகாணங்களைப் போல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு மாற்றாக உறுப்பினர்களால் நியமிக்கப்படும் முறையை காங்கிரஸ் நிராகரித்தது.
(iii) ஆனால் பேச்சுவார்த்தை தோல்வி அடையக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டு அவ்வாறே நிகழ்ந்தது.
41.
(i) இஸ்லாமியர்களுக்கான தனிநாடு கோரிக்கையாகும்.
(ii) இதன் துவக்கம் 1930களில் கிழக்கு மற்றும் வடமேற்கு இந்தியாவில் தனிப்பகுதி அல்லது சில பகுதிகள் என்ற நிலையிலிருந்தது.
(iii) 1940 இல் லாகூரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மூலம் தனி நாடு கோரிக்கை (பாகிஸ்தான்) ஒரு முக்கியக் கட்டத்தை எட்டியது.
42.
1. அகமதாபாத் நகர மையத்தில் பணியாளர்களுக்காக மக்களை ஒன்று திரட்டும் பணி காத்திருந்தது துணி ஆலைப் பணியாளர்களுக்கும், ஆலை முதலாளிகளுக்கும் இடையே பிரச்சனை நிலவியது.
2. காந்தி இருதரப்பையும் சந்தித்துப் பேசினார்.
3. 35% ஊதிய உயர்வு வேண்டும் என்று கோரி வேலை நிறுத்தத்தில் ஈடுபடுமாறு காந்தி அறிவுரை வழங்கினார்.
4. தொழிலாளர்களுக்கு ஊக்கம் தரும் வகையில் காந்தியடிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கினார்.
43.
1. இந்தியாவின் பல நகரங்களுக்கு 1921-இல் வேல்ஸ் இளவரசர் மேற்கொண்ட பயணமும் புறக்கணிக்கப்பட்டது.
2. இந்திய மக்களின் விசுவாச உணர்வை வேல்ஸ் இளவரசரின் பயணம் தூண்டும் என்று எதிர்பார்த்த காலனி ஆதிக்க அரசின் கணக்கு தவறாகப் போனது.
3. நாடு முழுவதும் தொழிலாளிகளும் விவசாயிகளும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
44.
(i) ஆரிய சமாஜியத்தின் சுத்தி இயக்கம் மூலம் பிற சமயங்களுக்கு மதம் மாறியவர்களை மீண்டும் இந்துக்களாக மாற்றும் நோக்கில் தொடங்கப்பட்டது.
(ii) மேலும் ஆரிய சமாஜியத்தின் சங்கதன் நடவடிக்கைகளில் காங்கிரஸ்காரர்களின் பங்கேற்பு இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களை மேலும் பிளவுப்படுத்தியது.
45.
(i) ராஜகுரு, சுகதேவ் ஜதீந்திரநாத் தாஸ் ஆகியோருடன் பகத்சிங்கும் மேலும் 21 பேரும் கைது செய்யப்பட்டனர்.
(ii) சாண்டர்ஸ் கொலை தொடர்பான விசாரணைக்கு அவர்கள் ஆளாக்கப்பட்டனர். இந்த வழக்கு இரண்டாவது லாகூர் சதி வழக்கு என்று அறியப்படுகிறது.
46.
1. பாலகங்காதர திலகர், பிபின்சந்திரபால், லாலா லஜபதிராய் (Lal-Bal-Pal), அரவிந்த் கோஷ் போன்ற தலைவர்கள் பிரிட்டிஷ் இந்தியாவில் தீவிர தேசியவாதிகளின் தலைவர்களாக விளங்கினர்.
2. மகாராஷ்டிரம், வங்காளம், பஞ்சாப் ஆகிய மூன்று மாகாணங்களில் சுதேசி இயக்கக் காலப்பகுதியில் தீவிர தேசியவாதத்தின் மையப்புள்ளிகளாகத் திகழ்ந்தன.
47.
1. சுதேசி என்பதன் பொருள் "ஒருவரது சொந்த நாடு" மற்றும் அன்னியப்பொருள் எதிர்ப்பு என்பதாகும்.
2. ரானடேயின் கருத்துப்படி ஒருவரது சொந்த நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு அப்பொருட்களின் பயன்பாடு குறைவான மனநிறைவைக் கொடுத்தபோதிலும் முன்னுரிமை வழங்கப்படல் வேண்டும்.
48.
1. ரிப்பன் வைஸ்ராயாக இருந்தபோது இல்பர்ட் மசோதா கொண்டுவரப்பட்டது.
2. இந்திய நீதிபதிகள் ஐரோப்பியர்களை விசாரிக்க அதிகாரம் பெற்றனர்.
3. இதை ஐரோப்பியர்கள் கடுமையாக எதிர்த்தார்கள்.
4. பின்னர் இது திருத்தம் செய்யப்பட்டது.
49.
1. கிழக்கு இந்திய கம்பெனி அறிமுகம் செய்த புதிய நில நிர்வாகக் கொள்கையினால் இரண்டு முக்கியப் பாதிப்புகள் ஏற்பட்டன.
2. நிலத்தை விற்பனைப் பொருளாக்குவது இந்தியாவில் வேளாண்மையை வணிகமயமாக்குவது ஆகிய இரண்டையும் அவர்கள் நிறுவனமாகவே ஆக்கினார்கள்.
3. ஆங்கிலேயர் வருகைக்கு முன்பு இந்தியாவில் நிலத்தில் தனிச் சொத்துரிமை என்பது இல்லை.
50.
1.1929-37 களில் கோயம்புத்தூரில் 29 ஆலைகள் மற்றும் விதை நீக்கும் தொழிற்சாலைகள் தோன்றின.
2.1932-ல் கோயம்புத்தூர் மாவட்டத்தில் மதுக்கரை என்ற இடத்தில் சிமெண்ட் தொழிற்சாலை தொடங்கப்பட்டது.
3.1931-36க்கு இடையில் மாகாணத்தில் உள்ள சர்க்கரை ஆலைகளின் எண்ணிக்கை 2 லிருந்து 11 ஆக உயர்ந்தது.
4.அரிசி ஆலைகள், எண்ணெய் ஆலைகள் மற்றும் சினிமா நிறுவனங்களின் பெருக்கமும் அதிகரித்தது.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards