12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 02/03/2021
12ஆம் வகுப்பு வரலாறு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய இரண்டு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium History Reduced Syllabus Two Mark Important Questions with Answer key - 2021(Public Exam)
12ஆம் வகுப்பு History / வரலாறு தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , History / வரலாறு பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ History Test1.
மூன்றாவது ரெய்ச் என்றால் என்ன?
2.
கிரீசிற்கும் பல்கேரியாவிற்குமிடையே 1925 இல் எழுந்த சர்ச்சையை பன்னாட்டு சங்கம் எவ்வாறு தீர்த்துவைத்தது?
3.
நிகிலிசம் என்றால் என்ன?
4.
நான்கிங் ஒப்பந்தத்தின் முக்கியத்துவத்தை ஆய்க.
5.
அட்லாண்ட்டிக் பட்டயத்தின் சிறப்புக் கூறுகளைப் பட்டியலிடுக.
6.
பேர்ல் துறைமுகத்தை ஜப்பான் தாக்கியதன் முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்தி எழுதுக.
7.
ரோம் - பெர்லின் அச்சின் உருவாக்கத்திற்குப் பின்புலமாக அமையப்பெற்றது எது?
8.
போலியான பொருளாதார பகட்டுக் காலம் பற்றி நீவீர் அறிவதை கூறுக.
9.
ஸோல்வரெயன் (Zollverein) எனப்படுவதன் முக்கியத்துவம் யாது?
10.
1864இல் துவங்கப்பட்ட முதல் பன்னாட்டு உழைக்கும் ஆண்களின் சங்கம் ஆற்றிய பங்கை விளக்குக.
11.
இரவலர் சட்டங்கள் பற்றி விவரமாக எழுதுக.
12.
இத்தாலியை மெட்டர்னிக் "வெறும் பூகோள வெளிப்பாடே" என ஏன் கூறினார்?
13.
மெட்டர்னிக் சகாப்தத்தில் ஐரோப்பிய கூட்டு (Concert of Europe) எத்தகைய பங்காற்றியது என்பதனை விளக்குக.
14.
எதனால் 1848 ஆம் ஆண்டின் ஜூன் 24 முதல் 26 வரையான காலம் 'இரத்த ஜூன் தினங்கள் ' எனக் கொள்ளப்படுகின்றன?
15.
அமெரிக்க விடுதலைப் போருக்குத் தாமஸ் பெயினின் அறிவுத்திறன் சார்ந்த பங்களிப்பு என்ன?
16.
வட அமெரிக்காவின் ஐரோப்பியக் காலனிகள் பூர்வகுடி மக்கள் மீது எத்தகைய தாக்கத்தினை ஏற்படுத்தின?
17.
ஷூமன் திட்டம் என்றால் என்ன ?
18.
ஹங்கேரியச் சிக்கலின் பின்னணி யாது?
19.
'கோமின்ஃபார்ம்’ குறித்து நீங்கள் அறிவதென்ன?
20.
"மூவர் தலையீடு"எனப்படுவது யாது?
21.
பால்கன் சிக்கலின் விளைவுகள் உள்ளடக்கிய சிறப்புக்கூறுகளை எழுதுக.
22.
ஸ்பெயினில் சமயவிசாரணை நீதிமன்ற அமைப்பு என்ன செய்தது?
23.
இடைக்காலத்தின் பிற்பகுதியில் நிலப்பிரபுத்துவ நடைமுறை ஏன் தோல்வி கண்டது?
24.
நட்சத்திர சேம்பர் உருவாக்கப்பட்டதன் நோக்கம் என்ன ? அது ஏன் அவ்வாறு அழைக்கப்பட்டது?
25.
ஸ்பெயின் நாட்டு கப்பற்படையின் குறிப்பிடத்தகுந்த விளைவு என்ன?
26.
பிளாரன்ஸின் மெடிசி குடும்பம் பற்றி குறிப்பு வரைக.
27.
இந்தியா விடுதலை அடைந்ததைத் தொடர்ந்து பொதுத்துறை நிறுவனங்களை அமைப்பது தொடர்பாக வைக்கப்பட்ட இரண்டு முக்கிய கருத்துக்களை சுட்டிக் காட்டுக.
28.
சமதர்ம சமூக அமைப்பு என்பதைப் பற்றி நீர் அறிந்ததென்ன?
29.
அரசமைப்பின் ஷரத்து 370 ன் முக்கியத்துவம் என்ன?
30.
அரசமைப்பு நிர்ணய சபையின் அமைப்பினை விளக்குக?
31.
சிம்லா மாநாட்டின் பேச்சுவார்த்தைகள் ஏன் முறிந்தன?
32.
கிரிப்ஸ் முன்மொழிவைக் காங்கிரஸ் ஏன் நிராகரித்தது?
33.
தேசியவாதிகளால் ரெளலட் சட்டம் ஏன் எதிர்க்கப்பட்டது?
34.
35.
இந்தியப் பணியாளர் சங்கம் ஏன் தோற்றுவிக்கப்பட்டது?
36.
காந்தியடிகளின் சம்பரான் சத்தியாகிரகத்தின் போது உடன் சென்ற உள்ளூர் தலைவர்கள் யாவர்?
37.
அன்னிபெசண்ட் அம்மையாரால் வெளியிடப்பட்ட புத்தகம் மற்றும் வாராந்திரப் பத்திரிகையின் பெயர்களைக் கூறுக?
38.
1903 - 1914 ஆகிய கால கட்டங்களில் தேசிய இயக்கம் வளர்ந்து வருவதைக் கட்டுப்படுத்த ஆங்கில அரசு மேற்கொண்ட அடக்குமுறை நடவடிக்கைகள் என்ன?
39.
இரண்டாவது லாகூர் சதி என்றறியப்படும் நிகழ்வு யாது?
40.
புகழ்பெற்ற கோரக்பூர் நீதிபதியான H.E. ஹோம்ஸ் பற்றி நீவிர் அறிவது யாது?
41.
இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்க கிரேட் பிரிட்டனால் அனுப்பப்பட்ட மூன்று ஆங்கில கம்யூனிசவாதிகளின் பெயர்களை குறிப்பிடுக?
42.
தேசிய இயக்கத்தை ஒடுக்க காலனிய அரசு மேற்கொண்ட அடக்குமுறைகள் யாவை?
43.
பிரிட்டிஷ் இந்தியாவில் தீவிர தேசியவாதிகளின் மையமாக விளங்கிய தலைவர்களைக் கண்டறிக.
44.
மகாதேவ் கோவிந்த் ரானடே சுதேசிக் கொள்கையினை எவ்வாறு விளக்குகிறார்?
45.
தொடக்க கால முக்கிய தேசியவாதிகளைக் கண்டறிக.
46.
ஆங்கிலப் பாராளுமன்றத்திற்குச் சென்னைவாசிகள் சங்கத்தினர் அளித்த கோரிக்கைகள் என்ன?
47.
நவீன கல்வியில் சமயப்பரப்புக் குழுக்களின் பங்கினை விளக்குக.
48.
இல்பர்ட் மசோதாவின் முக்கியத்துவத்தை விவாதி.
49.
அவுரி கலகம் குறித்து குறிப்பு வரைக.
50.
புதிய நிலவுடைமை உரிமைகளால் ஏற்பட்ட பாதிப்புகளை எழுதுக.
1.
1. மூன்றாவது ரெய்ச் என்பது ஹிட்லரின் நாஜி அரசு ஆகும்.
2. பாராளுமன்ற மக்களாட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
3. ஜெர்மனி முழுமையாக மையப்படுத்தப்பட்ட அரசாக மாற்றப்பட்டது.
4. நாஜி கட்சி நீங்கலாக பிறகட்சிகள் சட்டத்திற்கு புறம்பானது என அறிவிக்கப்பட்டது.
2.
1. 1925ல் கிரீசுக்கும், பல்கேரியாவிற்கும் இடையே சிக்கல் ஏற்பட்டது.
2. கிரீஸ் பல்கேரியா மீது படையெடுத்தபோது பன்னாட்டு சங்கம் போர் நிறுத்த ஆணையை வெளியிட்டு ஆக்கிரமிப்பை நிறுத்தியது. விசாரணைக்குப் பிறகு கிரீசை நஷ்ட ஈடு வழங்க ஆணையிட்டது.
3.
1. பல்லாண்டு கால கட்டியெழுப்புதலின் வடிவமான சமூக அமைப்பை எதிர்க்கும் உணர்வின் பிரதிநிதித்துவமே நிகிலிசமாகும்.
2. நிகிலிசம் நாட்டின் அரசு, கிறித்துவ ஆலயம், குடும்பம் போன்ற நிறுவனங்கள் கொண்டிருந்த அதிகாரத்தை மறுத்தது.
3. அதன் நம்பிக்கைகள் விஞ்ஞான அடிப்படையிலான உண்மையைச் சுற்றிய அமைந்திருந்தன.
4.
1.முதலாம் அபினிப் போரின் இறுதியில் 1842 இல் நான்கிங் உடன்படிக்கை கையெழுத்தானது.
2.சீனாவின் கதவுகள் பிரிட்டனுக்காக திறந்து விடப்பட்டது.
3.சீனா ஹாங்காங்கை விட்டுக் கொடுத்ததோடு இழப்பீடாக ஒரு தொகையையும் வழங்கியது.
5.
1.மக்களின் ஒப்புதல் இல்லாமல் பிரதேச சீரமைப்புகள் ஏற்படுத்தலாகாது.
2.அரசைத் தேர்ந்தெடுக்க முழுஉரிமை கொண்டவர்கள் குடிமக்களே.
3.அனைத்து நாடுகளுக்கும் வணிகத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளவும்,உலகின் பிற பகுதிகளில் கிடைக்கும் மூலப்பொருட்களைப் பெறுவதிலும் சமத்துவத்தை ஏற்படுத்துதல்.
4.தடையில்லாமல் கடல் கடந்து செல்வதற்கான சுதந்திரத்தை உறுதிப்படுத்துதல்.
5.ஆக்கிரமிப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நாடுகளை ஆயுதக்குறைப்பிற்கு உட்படுத்துதல்.
6.
1.ஜப்பான் பேர்ல் துறைமுகம் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்க ஜப்பான் மீது போர் பிரகடனம் செய்தது.
2.இது முழுமையான இரண்டாம் உலகப் போருக்கு வழிவகுத்தது.
3.பிரிட்டனும்,சீனாவும் அமெரிக்க ஐக்கிய நாட்டோடு கைகோர்த்தன.
7.
1.முசோலினியின் எத்தியோப்பியப் படையெடுப்பை பிரிட்டனும் பிரான்சும் கண்டித்தது.
2.ஹிட்லருக்கு இத்தாலியோடு நெருங்கிய நட்பை வளர்த்துக் கொள்ள வாய்ப்பு கிடைத்தது.
3.இதுவே ரோம் பெர்லின் அச்சின் துவக்கமாக அமைந்தது.
8.
1.போலியான பொருளாதார பகட்டுக் காலமாகச் சொல்லப்படும் காலம் உழைக்கும் வர்க்கம் ஒன்று திரட்டப்பட்ட காலமாகும்.
2.சோஷலிசமும்,தொழிலாளர் இயக்கங்களும் பல நாடுகளில் பரந்து விரிந்து ஏற்றம் பெறலாயின.
9.
1. 1834 ல் பிரஷ்யா ஸோல்வரெயன் என்ற சுங்க ஐக்கியத்தை வெற்றிகரமாக ஏற்படுத்தியது.
2. ஜெர்மனியின் பெரும் பகுதிகள் இதில் இணைந்தன.
3. இப்பகுதிகள் பொதுப் பொருளாதார நிர்வாகத்தின் கீழ் வரும் சூழல் உருவானது.
10.
1. 1864 ல் பன்னாட்டு உழைக்கும் ஆண்களின் சங்கம் என்ற அமைப்பு உருவானது.
2. மக்களின் கூட்டமைப்பை ஏற்படுத்துவதே இதன் நோக்கம் ஆகும்.
3. மிதவாதிகள் கலந்து விடாமல் தடுத்தது.
4. ஃபெர்டினான்ட் லசால், பகுனின் போன்ற சோசலிசவாதிகள் நுழையாமலும் செயல்பட்டது.
11.
1.பிரிட்டனில் எலிசபெத் அரசியின் ஆட்சியில் இரவலர் சட்டம் இயற்றப்பட்டது.
2.வயது முதிர்ந்தோருக்கும், நோயாளிகளுக்கும்,ஏழை சிறார்களுக்கும், வேலையில்லாமல் தவிப்போருக்கும் நிவாரணம் வழங்கியது.
12.
1.வியன்னா காங்கிரசால் இத்தாலி எட்டு மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டது.
2.இத்தாலியின் வட பகுதி ஆஸ்திரியர்களின் வசம் ஒப்படைக்கப்பட்டது.
3.19 ஆம் நூற்றாண்டில் இத்தாலி 12 மாநிலங்கள் மற்றும் பல குறுநிலங்களையும் உள்ளடக்கியதாக இருந்தது.
4.எனவே இத்தாலி வெறும் பூகோள வெளிப்பாடே என்று மெட்டர்னிக் குறிப்பிட்டார்.
13.
1.மெட்டர்னிக்கின் தலைமையில் செயலாற்றிக் கொண்டிருந்த முடியரசை ஆதரிக்கும் முன்னேற்றத்தை விரும்பாத பழமைவாத சக்திகள் ஐரோப்பிய இணைவின் வாயிலாக கொடுங்கோன்மை முறையை கையாளத் தொடங்கின.
2.சுதந்திர இயக்கங்கள் கடுமையாக ஒடுக்கப்பட்டன.
3.வெளிநாடுகளின் துணை கொண்டு மக்களின் எழுச்சி ஒடுக்கப்பட்டது.
14.
1. லூயி பிளாங்கின் முயற்சியால் உருவாக்கப்பட்ட பட்டறைகள் மூடப்பட்டதை எதிர்த்து தொழிலாளர்கள் போராடினர்.
2. ஜூன் 24 - 26ம் தேதிகளுக்கிடையே ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டார்கள்.
3. பதினோராயிரம் புரட்சியாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
4. இக்காலம் இரத்தம் தோய்ந்த ஜூன் தினங்கள் என்று அழைக்கப்பட்டன.
15.
1. ஆங்கிலேயரான தாமஸ் பெயின் பொது அறிவு எனும் துண்டு பிரசுரம் ஒன்றை எழுதினார்.
2. சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும் விதத்தில் எழுதியிருந்தார்.
3. 1,50,000 பிரதிகள் விற்பனை ஆயின.
4. இச்சிறு பிரசுரம், மக்களின் மீது கிளர்ச்சியூட்டும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
16.
1.பூர்வ குடிகளை அழித்தொழிக்க ஐரோப்பியர்கள் பின்பற்றிய தந்திரங்களில் ஒன்று நோய்களைப் பரப்புவது ஆகும்.
2.பழங்குடி மக்களின் கிராமங்களில் பதுங்கியிருந்து கொடூரமாகத் தாக்கினார்.
3.காலனியாதிக்கவாதிகளின் ஆட்சியானது கொடூரமானதாக இருந்தது.
17.
1.1950 மே 9 ல் ராபர்ட் ஷூமன் ஒரு திட்டத்தை அறிவித்தார்.
2.பிரான்சுக்கும் ஜெர்மனிக்கும் இடையே நிலக்கரி மற்றும் எஃகு ஆகியவற்றின் கூட்டு உற்பத்தியை நிர்வகிக்க ஆணையம் அமைக்க வேண்டும் என முன்மொழிந்தார்.
3.பொருளாதார ஒருங்கிணைப்புக்கான இத்திட்டம் பரஸ்பர ஆர்வத்தை உருவாக்கியது.
18.
1.ஸ்டாலினுடைய ஆட்சியின்போது பிரதமராக நியமிக்கப்பட்ட ரகோசி 1953ல் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
2.இம்ரே நாகி அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.ஆனால் அரசாங்கம் அவருக்கு ஆதரவாக இல்லை.
3.அக்டோபர் 23ல் ஒரு சில அறிவார்ந்த மக்களால் திட்டமிடப்பட்ட கிளர்ச்சி புதாபெஸ்டில் வெடித்தது.
4.நவம்பர் 4 ல் சோவியத் ரஷ்யா ஹங்கேரிக்கும் படைகளை அனுப்பி கிளர்ச்சியை ஒடுக்கியது.
19.
1.மார்ஷல் திட்டத்திற்குப் பதிலளிக்கும் வகையில் சோவியத் ரஷ்யா கோமின்ஃபார்ம் என்ற அமைப்பை 1947 ல் உருவாக்கியது.
2.ஐரோப்பிய நாடுகளின் அனைத்து கம்யூனிஸ்ட் கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
3.கம்யூனிஸ்ட் அல்லாத நாடுகளுடனான வணிக உறவுகளை தடுத்தது.
20.
1.ஜப்பானின் வளர்ச்சியைக் கண்டு அஞ்சிய ஐரோப்பிய சக்திகள் ஜப்பானை லியோடாங்
2.1895-ல் இந்த மூவர் தலையீட்டால் (பிரான்ஸ்,இங்கிலாந்து,ரஷ்யா)சினமடைந்து ஜப்பான் மிகப்பெரிய போர்த்தளவாடத் திட்டத்தை வகுத்தது.
21.
1.பல்கேரியர்கள் தாங்கள் வஞ்சிக்கப்பட்டதாக உணர்ந்து அதற்காக செர்பியர்களை பழிவாங்க துடித்தனர்.
2.செர்பியர்கள் மிதமிஞ்சிய வெற்றிக் களிப்பில் திளைத்தார்கள்.
3.ஆஸ்திரியர்களுக்கு எதிரான போராட்டங்கள் செர்பியாவிலும் போஸ்னியாவிலும் தீவிரவாதத் தன்மை கொண்டதாய் மாறியது.
22.
1.ஸ்பெயினில் அரசர் பெர்டினான்ட் நீதி விசாரணை அமைப்பை அமைத்தார்.
2.மதம் மாறிய யூதர்களும் மூர்களும் தீவிரக் கண்காணிப்பில் வைக்கப்பட்டனர்.
3.சமய நம்பிக்கைகள் இல்லாதவர்கள் துன்புறுத்தப்பட்டு எரியூட்டப்பட்டனர்.
23.
1.இடைக்காலத்தில் ஐரோப்பாவைத் தாக்கிய, கொள்ளை நோய் நிலப்பிரபுத்துவ ஆட்சியை வலுவிழக்க செய்தது.
2.பல்லாயிரக்கணக்கான வரி வருமானத்தை இழந்தனர்.
3.சிலுவைப் போர்களின் போது பெரும் எண்ணிக்கையில் பிரபுக்கள் உயிரிழந்தனர்.
4.புதிய மன்னராட்சி ஏற்பட நிலப்பிரபுத்துவ முறை வீழ்ச்சி காரணமாயிற்று.
24.
1.இங்கிலாந்தில் பிரபுக்களின் சொத்துக்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க நட்சத்திர சேம்பர் என்ற பெயரில் நீதிமன்றத்தை ஏழாம் ஹென்றி உருவாக்கினார்.
2.நீதிமன்ற நடைமுறைகள் நடந்த வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையின் மேல் சுவரில் நட்சத்திரங்கள் ஓவியமாக தீட்டப்பட்டிருந்ததால் இப்பெயர் பெற்றது.
25.
1.1588ல் இரண்டாம் பிலிப் ஸ்பெயின் நாட்டு கப்பற்படையை 130 கப்பல்கள் மற்றும் 31,000 படை வீரர்களோடு இங்கிலாந்து மீது போர் தொடுக்க அனுப்பினார்.
2.ஸ்பானிய கப்பற்படையை ஆங்கிலேய படை முறியடித்தது.
3.நவீன உலகில் ஒரு வலுவான சக்தியாக பிரிட்டிஷார் உருவெடுக்க இது காரணமாக அமைந்தது.
26.
1.பிளாரன்ஸ் நகரில் சக்திவாய்ந்த வர்த்தகக் குடும்பம் மெடிசி குடும்பம்.
2.கோசிமோ டி மெடிசி என்பவர் இத்தாலி முழுவதும் வங்கிக் கிளைகளை நடத்தி வங்கித்துறையில் கொடிகட்டிப் பறந்தார்.
3.1434-1464ஆம் ஆண்டுகளில் அரசு நிர்வாகத்தை மறைமுகமாக தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.
27.
1.பொதுத்துறை நிறுவனங்கள் உருவாக்கப்படுவதை இரு முக்கிய அம்சங்கள் தீர்மானித்தன.
2.ஒன்று கருத்தியல் மற்றொன்று நடைமுறை சார்ந்தது.
3.கருத்தியல் நிலையில் அரசாங்கம் சமதர்ம வளர்ச்சிக்கு உறுதியளித்தது.
4.நடைமுறையில் கனரகத் தொழில்களை ஏற்கும் பொறுப்பை அரசே ஏற்க வேண்டியிருந்தது.
28.
1.ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பது.
2.சுரண்டலை ஒழிப்பது.
3.செல்வம் ஓரிடத்தில் குவிக்கப்படுவதை தடுப்பது ஆகியன சமதர்ம சமூக அமைப்பு ஆகும்.
29.
(i) ஜம்மு காஷ்மீருக்காக சிறப்பு அந்தஸ்தை இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 370வது உறுப்பு அளிக்கிறது.
(ii) இதன்படி ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு தனி அரசமைப்புச் சட்டம் உள்ளது.
(iii) இந்திய அரசமைப்புச் சட்டத்திலுள்ள பகுதி IV, IVA (அடிப்படை கடமைகள்) ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு பொருந்தாது.
(iv) ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அனுமதி இல்லாமல் அந்த மாநில எல்லையை மாற்றும் அதிகாரம் மத்திய அரசுக்குக் கிடையாது.
30.
(i) 1946 டிசம்பர் 9 ஆம் நாள் அரசியலமைப்புக்குழு தன் பணியைத் தொடங்கியது.
(ii) அரசியலமைப்புக் குழுவின் தலைவராக டாக்டர் ராஜேந்திர பிரசாத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
(iii) டாக்டர் பி.ஆர் அம்பேத்கர் அரசியலமைப்பு வரைக்குழுவின் நிரந்தர தலைவராக நியமிக்கப்பட்டார்.
(iv) 1949 நவம்பர் 26 ஆம் நாள் முதல் இந்திய அரசியலமைப்பை இச்சபை ஏற்றுக்கொண்டது.
(v) 1950 ஜனவரி 26 ஆம் நாள் முதல், அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்தது.
(vi) அது முதல் ஜனவரி 26 குடியரசு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது
31.
(i) வேவல் பிரபு ஜூன் 1945 இல் பேச்சுவார்த்தை நடத்த சிம்லா மாநாட்டைக் கூட்டினார்.
(ii) அரசப் பிரதிநிதியின் குழுவிற்கு முஸ்லீம் லீக் தனக்கு மட்டுமே இஸ்லாமியப் பிரதிநிதிகளை நியமிக்க உரிமை உள்ளது என்றது.
(iii) காங்கிரஸ், ஜாதி இந்துக்களை மட்டுமே நியமிக்க முடியும் என்று வலியுறுத்தியது. இது மேலும் மக்களை இனவாரியாகப் பிரிக்கும் முயற்சி என்று வேவல் பிரபு கருதி சிம்லா பேச்சுவார்த்தையைக் கைவிட்டார்.
32.
(i) டொமினியன் அந்தஸ்து வழங்குவதென்பது ஏமாற்றமளிக்கக் கூடிய குறுகிய நடவடிக்கையாகும்.
(ii) பிற மாகாணங்களைப் போல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு மாற்றாக உறுப்பினர்களால் நியமிக்கப்படும் முறையை காங்கிரஸ் நிராகரித்தது.
(iii) ஆனால் பேச்சுவார்த்தை தோல்வி அடையக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டு அவ்வாறே நிகழ்ந்தது.
33.
1. மத்திய சட்டப்பேரவையில் ஒவ்வொரு உறுப்பினரும் இந்த மசோதாவை எதிர்த்த நிலையில் 1919 இல் மார்ச் மாதம் ரௌலட் சட்டத்தை அரசு நிறைவேற்றியது.
2. எந்தவித நீதிமன்ற விசாரணையுமின்றி எவரையும் சிறையில் அடைக்க இச்சட்டம் அதிகாரமளிக்காது.
3. 1919 இல் ரௌலட் சட்டத்திற்கு எதிராக வேலைநிறுத்தத்தில் ஈடுபடவும், எதிர்க்கவும் செய்தனர்.
34.
35.
1. அகமதாபாத் நகர மையத்தில் பணியாளர்களுக்காக மக்களை ஒன்று திரட்டும் பணி காத்திருந்தது துணி ஆலைப் பணியாளர்களுக்கும், ஆலை முதலாளிகளுக்கும் இடையே பிரச்சனை நிலவியது.
2. காந்தி இருதரப்பையும் சந்தித்துப் பேசினார்.
3. 35% ஊதிய உயர்வு வேண்டும் என்று கோரி வேலை நிறுத்தத்தில் ஈடுபடுமாறு காந்தி அறிவுரை வழங்கினார்.
4. தொழிலாளர்களுக்கு ஊக்கம் தரும் வகையில் காந்தியடிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கினார்.
36.
1. இராஜேந்திர பிரசாத், மஜாருள் ஹக், ஆச்சார்ய கிருபாளினி மஹாதேவ தேசாய் போன்ற உள்ளூர் தலைவர்கள் கலந்துகொண்டார்கள்.
2. ஐரோப்பிய வர்த்தகர்கள் படிப்படியாக "சம்பரானை" விட்டே வெளியேற்றிவிட்டனர்.
37.
1. 1914-இல் தி.காமன்வெல்த் என்ற வாரப்பத்திரிகையை வெளியிட்டார்.
2. 1915 ஜூலை 14-இல் நியூ இந்தியா என்ற தினசரியை அன்னி பெசண்ட் அம்மையார் தொடங்கினார்.
3. 1916 இல் தன்னாட்சி இயக்கங்கள் அன்னி பெசண்ட் அம்மையார் தொடங்கினார்.
38.
1 1903-ல் கர்சன் பிரபு குற்ற உளவுத்துறையை (CID) உருவாக்கினார்.
2 1908 வெடிபொருட்கள் சட்டம், 1910 தேசத்துரோக கூட்டங்கள் தடுப்புச் சட்டம் ஏற்படுத்தினர்.
3 1914-ல் இயற்றப்பட்டது புரட்சிகர இயக்கங்களின் அடிப்படைக் கட்டமைப்பைத் தகர்க்கும் நோக்கில் இவற்றில் பெரும்பான்மையான சட்டம் இயற்றப்பட்டன.
4 இவை தேசிய இயக்கம் வளர்ந்து வருவதை கட்டுப்படுத்த ஆங்கில அரசு மேற்கொண்ட அடக்குமுறை நடவடிக்கைகள் ஆகும்.
39.
(i) ராஜகுரு, சுகதேவ் ஜதீந்திரநாத் தாஸ் ஆகியோருடன் பகத்சிங்கும் மேலும் 21 பேரும் கைது செய்யப்பட்டனர்.
(ii) சாண்டர்ஸ் கொலை தொடர்பான விசாரணைக்கு அவர்கள் ஆளாக்கப்பட்டனர். இந்த வழக்கு இரண்டாவது லாகூர் சதி வழக்கு என்று அறியப்படுகிறது.
40.
மாட்சிமை பொருந்திய அமர்வு நீதிபதி ஹோம்ஸ் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது. இவர் கோரக்பூர் அமர்வு நீதிபதியாகப் பணியாற்றியபோது சௌரி சௌரா வழக்கில் தொடர்பு கொண்டவர்களாகக் குற்றம் சாட்டப்பட்ட 172 விவசாயிகளுக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துப் பிரசித்தி பெற்றவர்.
41.
பிரிட்டானிய கம்யூனிஸ்ட் கட்சியால் அனுப்பிவைக்கப்பட்ட பிலிப் ஸ்ப்ராட், பான் ப்ராட்லி, லெஸ்டர் ஹட்சின்சன் ஆகிய பிரிட்டானிய கம்யூனிஸ்டுகள் ஆவார்கள்.
42.
1. ஆங்கில அரசு அறிவித்த 1908 டிசம்பரின் மிண்டோ-மார்லி நடவடிக்கைகள் வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவத்தை நிறுவனப்படுத்தி இந்து, முஸ்லிம்களைப் பிரித்தது.
2. 1908 செய்தித்தாள் சட்டம் (குற்றம் செய்யத் தூண்டுதல்) ஆட்சேபனைக்குரிய வகையிலான செய்திகளை வெளியிடும் அச்சகங்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்யும் அதிகாரத்தை நீதிபதிகளுக்கு வழங்கியது. இதனால் ஆங்கிலேய ஆட்சியை விமர்சிக்க முடியவில்லை.
3. வெடிமருந்துச் சட்டம் (1908), இந்திய பத்திரிகைச் சட்டம் (1910) என பல அடக்குமுறைச் சட்டங்களை தேசிய இயக்கத்தை ஒடுக்க காலனி அரசு வரிசையாக இயற்றியது.
43.
1. பாலகங்காதர திலகர், பிபின்சந்திரபால், லாலா லஜபதிராய் (Lal-Bal-Pal), அரவிந்த் கோஷ் போன்ற தலைவர்கள் பிரிட்டிஷ் இந்தியாவில் தீவிர தேசியவாதிகளின் தலைவர்களாக விளங்கினர்.
2. மகாராஷ்டிரம், வங்காளம், பஞ்சாப் ஆகிய மூன்று மாகாணங்களில் சுதேசி இயக்கக் காலப்பகுதியில் தீவிர தேசியவாதத்தின் மையப்புள்ளிகளாகத் திகழ்ந்தன.
44.
1. சுதேசி என்பதன் பொருள் "ஒருவரது சொந்த நாடு" மற்றும் அன்னியப்பொருள் எதிர்ப்பு என்பதாகும்.
2. ரானடேயின் கருத்துப்படி ஒருவரது சொந்த நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு அப்பொருட்களின் பயன்பாடு குறைவான மனநிறைவைக் கொடுத்தபோதிலும் முன்னுரிமை வழங்கப்படல் வேண்டும்.
45.
பிபின் சந்திரபால், பாலகங்காதர திலகர், லாலா லஜபதிராய், சுரேந்திரநாத் பானர்ஜி, தாதாபாய் நௌரோஜி, ஜி. சுப்பிரமணியம், விஜயராகவாச்சாரி, அனந்தா சார்லு, ரங்கையா, பாலாஜிராவ், சேலம் ராமசாமி ஆகியவர்கள் தொடக்ககால முக்கிய தேசியவாதிகள் ஆவார்கள்.
46.
1. சென்னைவாசிகள் சங்கம் 1852 டிசம்பரில் சமர்ப்பித்த மனுவில் ரயத்துவாரி, ஜமீன்தாரி முறைகள் வேளாண்மை வர்க்கத்தினரைக் கடும் துன்பங்களுக்கு உள்ளாக்கியதைச் சுட்டிக்காட்டியது
2. ஜமீன்தார்கள், கம்பெனியின் அதிகாரிகள் ஆகியோரின் அடக்குமுறை சார்ந்த தலையீட்டிலிருந்து விவசாயிகளை விடுவிக்கப் பண்டைய கிராமமுறையை மீட்டெடுக்க வலியுறுத்தியது.
47.
1. இந்திய மக்களிடையே நவீனக் கல்வியைக் கற்றுக்கொடுக்க மேற்கொள்ளப்பட்ட தொடக்ககால முயற்சிகளிலொன்று கிறித்துவ சமயப்பரப்பு நிறுவனங்களால் முன்னெடுக்கப்பட்டதாகும்.
2. மரபு சார்ந்த கல்வி முறையில், கல்வி கற்பதற்கான உரிமைகள் மறுக்கப்பட்ட அடித்தட்டு மக்களுக்கும், விளிம்பு நிலை மக்களுக்கும் கல்வி பெறுவதற்கான வாய்ப்பை சமயப்பரப்புக் குழுக்கள் வழங்கின.
48.
1. ரிப்பன் வைஸ்ராயாக இருந்தபோது இல்பர்ட் மசோதா கொண்டுவரப்பட்டது.
2. இந்திய நீதிபதிகள் ஐரோப்பியர்களை விசாரிக்க அதிகாரம் பெற்றனர்.
3. இதை ஐரோப்பியர்கள் கடுமையாக எதிர்த்தார்கள்.
4. பின்னர் இது திருத்தம் செய்யப்பட்டது.
49.
1. 1859-60 இல் நடைபெற்ற "இண்டிகோ" புரட்சி கம்பெனியின் அடக்குமுறைக் கொள்கைக்கு எதிரான இந்திய விவசாயிகளின் ஒரு எதிர் வினையாகும்.
2. ஐரோப்பியர்களுக்குச் சொந்தமாயிருந்த நிலங்களில் இந்தியக் குத்தகை விவசாயிகள் அவுரியைப் பயிரிடக் கட்டாயப்படுத்தப்பட்டனர்.
3. சாயம் தயாரிக்க இச்செடிகள் அதிகம் தேவைப்பட்டது.
50.
1. கிழக்கு இந்திய கம்பெனி அறிமுகம் செய்த புதிய நில நிர்வாகக் கொள்கையினால் இரண்டு முக்கியப் பாதிப்புகள் ஏற்பட்டன.
2. நிலத்தை விற்பனைப் பொருளாக்குவது இந்தியாவில் வேளாண்மையை வணிகமயமாக்குவது ஆகிய இரண்டையும் அவர்கள் நிறுவனமாகவே ஆக்கினார்கள்.
3. ஆங்கிலேயர் வருகைக்கு முன்பு இந்தியாவில் நிலத்தில் தனிச் சொத்துரிமை என்பது இல்லை.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards