12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 02/03/2021
12ஆம் வகுப்பு கணிதவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் மற்றும் விடைகள் - 2021 - 12th Standard Tamil Medium Maths Reduced Syllabus Annual Exam Model Question Paper with Answer Key - 2021
12ஆம் வகுப்பு Maths / கணிதவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
\(4\hat { i } -\hat { j } +3\hat { k } ,-2\hat { i } +\hat { j } -2\hat { k } \) எனும் வெக்டர்களுக்கு செங்குத்தானாலும்,எண் அளவு 6 உடையதுமான வெக்டர்களைக் காண்க.
2.
ஒரு நீள்வட்ட எதிரொலிப்பு அறையில் உயரம் 5 மீ மற்றும் அகலம் 26 மீ இருவர் அந்த அறையின் எந்த இடங்களில் அவர்கள் மெதுவாக பேசுவதை ஒருவருக்கொருவர் தெளிவாக கேட்க முடியும்.
3.
\({ px }^{ 4 }+{ qx }^{ 3 }+{ rx }^{ 3 }+{ sx }^{ 2 }+tx+u=0\) என்ற பல்லுறுப்புக் கோவைச் சமன்பாட்டின் மூலங்களின் பெருக்கற்பலன், இரண்டிரண்டு மூலங்களாக எடுத்துக் கொண்டு பெருக்கிக் கிடைக்கும் மதிப்புகளின் கூட்டல் பலனின் மூன்றில் ஒரு மடங்கு எனில், 'r' மற்றும் 'u' ஆகியவற்றுக்கிடையேயான தொடர்பைக் காண்க.
4.
பின்வரும் வகைக்கெழுச் சமன்பாடுகளின் தீர்வு காண்க:
2xydx + (x2 + 2y2) dy = 0
5.
ℤ0 = அனைத்து ஒற்றை முழு எண்களின் கணம் எனில் ℤo -ன் மீது இயற்கணித செயலி + ஆனது (i) அடைவு பண்பு (ii) பரிமாற்றுப் பண்பு (iii) சேர்ப்புப் பண்பு (iv) சமனிப் பண்பு மற்றும் (v) எதிர்மறைப் பண்பு ஆகியவற்றைப் பெற்றுள்ளதா எனச் சரிபார்க்க.
6.
\(\int ^{1}_{0} (\tan ^{-1} x + \tan ^{-1}(1-x))\) dx = \(\frac {\pi}{2}\) - loge 2 எனக்காட்டுக.
7.
\({ tan }^{ -1 }\left( \frac { \sqrt { 1+{ x }^{ 2 } } -\sqrt { 1-{ x }^{ 2 } } }{ \sqrt { 1+{ x }^{ 2 } } +\sqrt { 1-{ x }^{ 2 } } } \right) =\alpha \) எனில் x2 = sin 2α என நிரூபிக்க.
8.
x + 2y + 3z = 2 மற்றும் x - y + z = 3 என்ற தளங்களின் வெட்டுக்கோடு வழிச் செல்வதும், (3,1,-1) என்ற புள்ளியிலிருந்து \(\frac { 2 }{ \sqrt { 3 } } \) தொலைவில் உள்ளதுமான தளத்தின் சமன்பாட்டைக் காண்க.
9.
(1, 1), (2, -1), மற்றும் (3, 2) என்ற மூன்று புள்ளிகள் வழிச்செல்லும் வட்டத்தின் சமன்பாடு காண்க.
10.
z1, z2 மற்றும் z3 என்ற கலப்பெண்கள் \(\left| { z }_{ 1 } \right| =\left| { z }_{ 2 } \right| =\left| { z }_{ 3 } \right| =r>0\) மற்றும் z1 + z2 + z3 \(\neq \) 0 எனவும் இருந்தால் \(\left| \frac { z_{ 1 }{ z }_{ 2 }+{ z }_{ 2 }{ z }_{ 3 }+{ z }_{ 3 }{ z }_{ 1 } }{ { z }_{ 1 }+{ z }_{ 2 }+{ z }_{ 3 } } \right| \) = r என நிறுவுக.
11.
வெக்டர் முறையில் cos (\(\alpha\) - \(\beta\)) = cos \(\alpha\) cos \(\beta\) + sin \(\alpha\) sin \(\beta\) என நிறுவுக.
12.
\((p\overset { \_ \_ }{ \vee } q)\wedge (p\overset { \_ \_ }{ \vee } \neg q)\) -ன் மெய்மை அட்டவணையைத் தருக.
13.
கீழ்க்காணும் சார்புகளுக்கு குழிவு இடைவெளிகள் மற்றும் வளைவு மாற்றப் புள்ளிகளைக் காண்க:
f(x) = x(x - 4)3
14.
U(x,y,z) = xyz, x=e-t, y=e-t cost, z= sin t t ∊ Rஎனில் \(\frac { dU }{ dt } \) -ஐக் காண்க.
15.
V (x, y, z) = xy + yz + zx, x, y, z ∈ R எனில் வகையீடு dV -ஐக் காண்க .
16.
f(x) = x log x + 3x என்ற சார்பிற்கு ஓரியல்பு இடைவெளிகள் மற்றும் அதிலிருந்து இடஞ்சார்ந்த அறுதி மதிப்புகளைக் காண்க.
17.
இருமுனைகளிலும் காப்பிடப்பட்ட 10மீ நீளமுள்ள ஒரு கம்பியின் வெப்பநிலை செல்சியஸில் நீளம் x சார்பாக T = x (10-x) எனத் தரப்படுகிறது. கம்பியின் மையப்புள்ளியில் வெப்பநிலை மாறுபாட்டு வீதம் பூச்சியம் என்பதை நிரூபிக்க.
18.
x2 = -36y என்ற பரவளையத்தின் முனையை செவ்வகலத்தின் முனைகளோடு கோடுகளாக இணைக்க கிடைக்கும் முக்கோணத்தின் பரப்பைக் காண்க.
19.
தீர்க்க: \({ (5+2\sqrt { 6 } ) }^{ { x }^{ 2-3 } }+{ (5-2\sqrt { 6 } ) }^{ { x }^{ 2 }-3 }=10\)
20.
தீர்க்க:
\({ \cot }^{ -1 }x-{ \cot }^{ -1 }\left( x+2 \right) =\frac { \pi }{ 12 } ,x>0\)
21.
x + y + z = a, x + 2y + 3z = b, 3x + 5y + 7z = c என்ற நேரியச் சமன்பாடுகளின் தொகுப்பின் தீர்வுகள் ஒரு சாராமாறிக் குடும்பமாக இருப்பதற்கு a b, மற்றும் c -ல் உருவாகும் நிபந்தனையைக் காண்க.
22.
கீழ்க்காண்பவைகளின் மதிப்புகளைக் காண்க.
(i) \(\left| \cfrac { 2+i }{ -1+2i } \right| \)
(ii) \(\left| \bar { (1+i) } (2+3i)(4i-3) \right| \)
(iii) \(\left| \frac { i(2+{ i })^{ 3 } }{ { (1+i) }^{ 2 } } \right| \)
23.
தீர்க்க \(\cos\left( { \sin }^{ -1 }\left( \frac { x }{ \sqrt { 1+{ x }^{ 2 } } } \right) \right) =\sin\left\{ { \cot }^{ -1 }\left( \frac { 3 }{ 4 } \right) \right\} \)
24.
z1 = 3, z2 = -7i, மற்றும் z3 = 5 + 4i எனில் கீழ்க்காண்பவைகளை நிறுவுக.
z1(z2 + z3) = z1z2 + z1z3
25.
ஆதியை மையமாகவும், குவியம் (0, 4) மற்றும் முனை (0, 7) ஆகியவற்றைக் கொண்டதுமான நீள்வட்டத்தின் சமன்பாடு
\(\cfrac { { x }^{ 2 } }{ 49 } +\cfrac { { y }^{ 2 } }{ 33 } =1\)
\(\cfrac { { x }^{ 2 } }{ 33 } -\cfrac { { y }^{ 2 } }{ 49 } =1\)
\(\cfrac { { x }^{ 2 } }{ 33 } +\cfrac { { y }^{ 2 } }{ 49 } =-1\)
\(\cfrac { { x }^{ 2 } }{ 33 } +\cfrac { { y }^{ 2 } }{ 49 } =1\)
27.
\(\cfrac { { z }_{ 1 }-{ z }_{ 2 } }{ { z }_{ 2 }-{ z }_{ 3 } } =\cfrac { 1-i\sqrt { 3 } }{ 2 } \) என்ற சமன்பாட்டை நிறைவு செய்யும் கலப்பெண்கள் z1, z2 மற்றும் z3 என்பன முக்கோணத்தின் உச்சிகள் எனில், அம்முக்கோணம்
பரப்பு பூச்சியத்தைக் கொண்டது
செங்குத்தான இருசமபக்க முக்கோணம்
சமபக்க முக்கோணம்
விரிகோண-இருசமபக்க முக்கோணம்
28.
ஒரு கூட்டுக்கூற்றில் 3 தனிக்கூற்றுகள் உட்படுத்தப்பட்டிருந்தால் அம்மெய்மை அட்டவணையின் நிரைகளின் எண்ணிக்கை _______.
9
8
6
3
29.
-ன் மீது \(a\ast b=\sqrt { { a }^{ 2 }+{ b }^{ 2 } } \) எனில்,∗ ஆனது _______.
பரிமாற்று விதிக்கு கட்டுப்படும் ஆனால் சேர்ப்பு விதியை நிறைவு செய்யாது.
சேர்ப்பு விதிக்கு கட்டுப்படும் ஆனால் பரிமாற்று விதியை நிறைவு செய்யாது.
பரிமாற்று விதி மற்றும் சேர்ப்பு விதிகளை நிறைவு செய்யும்.
பரிமாற்று விதி மற்றும் சேர்ப்பு விதிகளை நிறைவு செய்யாது.
30.
இரண்டு மிகை எண்களின் கூடுதல் 200. மேலும் அவற்றின் பெருக்கற்பலனின் பெரும மதிப்பு_______.
100
25\(\sqrt { 7 } \)
28
24\(\sqrt { 14 } \)
31.
y2 -xy + 9 = 0 என்ற வளைவரையின் தொடுகோடு எப்போது நிலைகுத்தாக இருக்கும்?
y = 0
y =\(\pm \sqrt { 3 } \)
y = \(\frac { 1 }{ 2 } \)
y =±3
32.
\(\int _{ 0 }^{ 1 }{ x(1-x)^{99} dx } \) இன் மதிப்பு _______.
\(\frac { 1 }{ 11000 } \)
\(\frac { 1 }{ 10100 } \)
\(\frac { 1 }{ 10010 } \)
\(\frac { 1 }{ 10001} \)
33.
\(\frac { dy }{ dx } +\frac { 1 }{ \sqrt { { 1-x }^{ 2 } } } =0\) எனும் வகைக்கெழுச் சமன்பாட்டின் தீர்வு _______.
y + sin-1 x = c
x + sin-1 y = 0
y2 + 2sin-1 x = C
x2 + 2sin-1 y = 0
34.
f (x, y, z) = xy + yz + zx , எனில் fx -fz − ன் மதிப்பு _______.
z − x
y − z
x − z
y − x
35.
P(X = 0) = 1−P( X = 1 ) மற்றும் E(X) = 3Var(X) எனில், P(X = 0) காண்க.
\(\frac{2}{3}\)
\(\frac{2}{5}\)
\(\frac{1}{5}\)
\(\frac{1}{3}\)
36.
3x + 3y + 3z - 1 = 0 மற்றும் x + y - z + 5 = 0 என்ற இரண்டு தளங்கள்
ஒன்றுக்கொன்று செங்குத்து
இணை
450 ல் சாய்வு
30 ல் சாய்வு
37.
tan-1 \(\left\{ \frac { \sqrt { 1+{ x }^{ 2 } } -\sqrt { 1-{ x }^{ 2 } } }{ \sqrt { 1+{ x }^{ 2 } } +\sqrt { 1-{ x }^{ 2 } } } \right\} =\alpha \) எனில் x2 =
sin 2α
sin α
cos 2α
cos α
38.
x+y+z=6, x+2y+3z=14 மற்றும் 2x+5y+\(\lambda\)z =\(\mu\) என்ற நேரிய சமன்பாட்டுத் தொடக்கமானது (\(\lambda\), \(\mu\), \(\epsilon\) R) ஒருங்கமைவு உடையது. எம் மதிப்பற்றது ஒரே ஒரு தீர்வினை தரும்?
\(\lambda\)=8
\(\lambda\)=8, \(\mu\)≠36
\(\lambda\)≠8
இல்லை
39.
\(\vec { a } .\vec { b } =\vec { b } .\vec { c } =\vec { c } .\vec { a } =0\) எனில் \(\left[ \vec { a } ,\vec { b } ,\vec { c } \right] \) ன் மதிப்பு _______.
\(\left| \vec { a } \right| \left| \vec { b } \right| \left| \vec { c } \right| \)
\(\cfrac { 1 }{ 3 } \left| \vec { a } \right| \left| \vec { b } \right| \left| \vec { c } \right| \)
1
-1
40.
z என்ற கலப்பெண்ணானது z∈ C\R ஆகவும் z + \(\frac1{z}\) ∈ R எனவும் இருந்தால், |z| - மதிப்பு _______.
0
1
2
3
41.
x3-kx2+9x எனும் பல்லுறுப்புக்கோவைக்கு மூன்று மெய்யெண் பூச்சியமாக்கிகள் இருப்பதற்கு தேவையானதும் மற்றும் போதுமானதுமான நிபந்தனை _______.
|k|≤6
k=0
|k|>6
|k|≥6
42.
நீள்வட்டம் E1: \(\frac { { x }^{ 2 } }{ 9 } +\frac { { y }^{ 2 } }{ 4 } =1\) செவ்வகம் R-க்குள் செவ்வகத்தின் பக்கங்கள் நீள்வட்டத்தின் அச்சுகளுக்கு இணையாக இருக்குமாறு அமைந்துள்ளன. அந்த செவ்வகத்தின் சுற்றுவட்டமாக அமைந்த மற்றொரு நீள்வட்டம் E2, (0, 4) என்ற புள்ளி வழியாகச் செல்கிறது எனில் அந்த நீள்வட்டத்தின் மையத்தொலைத் தகவு _______.
\(\frac { \sqrt { 2 } }{ 2 } \)
\(\frac { \sqrt { 3 } }{ 2 } \)
\(\frac { 1 }{ 2 } \)
\(\frac { 3 }{ 4 } \)
43.
A=\(\left[ \begin{matrix} 3 & 1 & -1 \\ 2 & -2 & 0 \\ 1 & 2 & -1 \end{matrix} \right] \) மற்றும் A-1 =\(\left[ \begin{matrix} { a }_{ 11 } & { a }_{ 12 } & { a }_{ 13 } \\ { a }_{ 21 } & { a }_{ 22 } & { a }_{ 23 } \\ { a }_{ 31 } & { a }_{ 32 } & { a }_{ 33 } \end{matrix} \right] \) எனில், a23-ன் மதிப்பானது ______.
0
-2
-3
-1
44.
\({ \sin }^{ -1 }\left( \tan\frac { \pi }{ 4 } \right) -{ \sin }^{ -1 }\left( \sqrt { \frac { 3 }{ x } } \right) =\frac { \pi }{ 6 } \) -ல் x என்பதை மூலமாக கொண்ட சமன்பாடு _______.
x2−x−6 = 0
x2−x−12 = 0
x2+x−12 = 0
x2+x−6 = 0
45.
\(\vec { r } =\left( \hat { i } -\hat { j } \right) +\lambda \left( 2\hat { i } +\hat { j } +\hat { k } \right) \) மற்றும் \(\vec { r } =\left( \hat { i } +\hat { j } -\hat { k } \right) +\mu \left( 2\hat { i } -\hat { j } -\hat { k } \right) \) என்ற இரண்டு ஒரே தளத்தில் அமையாத கோடுகளுக்கு இடைப்பட்ட மீச்சிறு தூரத்தைக் கணக்கிடு.
46.
p என்பது " ஜூபிடர் ஒரு கோளாகும்" மற்றும் q என்பது "இந்திய ஒரு தீவு”. பின்வரும் கூற்றுகளுக்குரிய வார்த்தைகளுடன் கூடிய வாக்கியங்களை அமைக்க.
p ↔ q
47.
(x, y)≠(0,0) -க்கு g(x,y)=\(\frac { { x }^{ 2 }y }{ { x }^{ 4 }+{ y }^{ 2 } } \) மற்றும் g(0,0) = 0 என்க.
(i) ஒவ்வொரு y = mx,m ∈ R நேர்கோட்டுப் பாதையிலும்\(\underset { (x,y)\longrightarrow (0,0) }{ \lim } \) g(x,y)=0 என நிறுவுக.
(ii) ஒவ்வொரு y = kx2 k ∈ R \{0}பரவளையப் பாதையிலும் \(\underset { (x,y)\longrightarrow (0,0) }{ \lim } \)g(x,y)=\(\frac { k }{ 1+k^{ 2 } } \) என நிறுவுக.
48.
பின்வரும் இயற்பியல் கூற்றுகள் ஒவ்வொன்றையும், வகைக்கெழுச் சமன்பாடாக எழுதுக.
(i) ரேடியம் சிதைவுறும் வீதமானது காணப்படும் அளவு Q -க்கு நேர்விகிதத்தில் இருக்கும்.
(ii) ஒரு நகரத்தின் மக்கள் தொகை P ஆனது, மக்கள்தொகை மற்றும் 5,00,000-க்கும் மக்கள் தொகைக்கும் உள்ள வேறுபாடு ஆகியவற்றை பெருக்கிக் கிடைக்கும் மதிப்புக்கு நேர்விகிதத்தில் அதிகரிக்கிறது.
(iii) ஒரு பொருளின் வெப்பநிலை Tஐப் பொருத்து ஆவி அழுத்தம் P-ன் மாறுவீதமானது, ஆவி அழுத்தத்திற்கு நேர்விகிதத்திலும், வெப்பநிலையின் வர்க்கத்திற்கு எதிர்விகிதத்திலும் உள்ளது.
(iv) ஒரு சேமிப்புத் தொகைக்கு ஒரு வருடத்திற்கு வழங்கப்படும் 8% வட்டித் தொகையானது தொடர்ச்சியாக அசலுடன் சேர்க்கப்படுகிறது. மேலும், மற்றொரு முதலீட்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் கிடைக்கும் வரவு ரூ.400 இத்தொகையுடன் தொடர்ச்சியாக சேர்க்கப்படுகிறது.
49.
பின்வரும் வகைக்கெழுச் சமன்பாடுகளின் வரிசை மற்றும் படி (இருப்பின்) ஆகியவற்றைக் காண்க:
\(3{ \left( \frac { { d }^{ 2 }y }{ d{ x }^{ 2 } } \right) }={ \left[ 4+{ \left( \frac { { d }y }{ { d }x } \right) }^{ 2 } \right] }^{ \frac { 3 }{ 2 } }\)
50.
சமன்பாடு x2-(a-2)x-a-1 = 0 இன் வர்க்கத்தின் கூடுதல் மிக குறைவான மதிப்பை கொண்டிருக்குமெனில் a ன் மதிப்பை காண்க.
51.
sin-1 (-1) ன் முதன்மை மதிப்பு காண்க.
52.
3x+y+9z=0, 3z+2y+12z=0 மற்றும் 2x+y+7z=0 என்ற சமன்பாட்டு தொகுப்பிற்கு வெளிப்படையற்ற தீர்வுகள் உள்ளன என காட்டுக.
53.
பின்வரும் நேரியச் சமன்பாட்டுத் தொகுப்புகளை நேர்மாறு அணி காணல் முறையில் தீர்க்க:
2x − y = 8, 3x + 2y = −2
54.
x2+y2-6x+4y+c=0 என்ற வட்டத்திற்கு c-ன் எல்லா மதிப்புகளுக்கும் x+y -1=0 என்ற நேர்க்கோடு விட்டமாக அமையுமா எனத் தீர்மானிக்க.
1.
\(\vec { a } =4\hat { i } -\hat { j } +3\hat { k } ;\vec { b } =-2\hat { i } +\hat { j } -2\hat { k } \) என்க
\(\vec { a } \times \vec { b } =\left| \begin{matrix} \hat { i } & \hat { j } & \hat { k } \\ 4 & -1 & 3 \\ -2 & 1 & -2 \end{matrix} \right| \)
= \(-\hat { i } +2\hat { j } +2\hat { k } \)
\(\left| \vec { a } \times \vec { b } \right| =\sqrt { 1+4+4 } =\sqrt { 9 } =3\)
= \(\hat { n } =\pm \cfrac { 6\left( \vec { a } \times \vec { b } \right) }{ \left| \vec { a } \times \vec { b } \right| } \)
= \(\pm \cfrac { 6\left( -\hat { i } +2\hat { j } +2\hat { k } \right) }{ 3 } =\pm \left( -\hat { i } +2\hat { j } +2\hat { k } \right) \)
2.
2a=26
a=13 மீ
b=5 மீ
c2=a2-b2
c2=132-52
= 169-25
c2=144
\(c=\pm 12\)
இரண்டு நபர்கள் நெட்டச்சின் மையத்திலிருந்து இருபுறமும் 12 மீ தொலைவில் இருக்கும்.
3.
\(f(x)={ px }^{ 4 }+{ qx }^{ 3 }+{ rx }^{ 3 }+{ sx }^{ 2 }+tx+u\) என்க.
மூலங்களின் பெருக்கற்பலன் \({ \Sigma }_{ 4 }=\cfrac { u }{ p } \)
இரண்டிரண்டு மூலங்களாக எடுத்துக் கொண்டு பெருக்கிக் கிடைக்கும் மதிப்புகளின் கூட்டல் பலன்.
\({ \Sigma }_{ 2 }=\cfrac { r }{ p } \)
இப்போது, கொடுக்கப்பட்ட கட்டுப்பாட்டின்படி,\(\cfrac { r }{ p } =3\cfrac { u }{ p } \)
எனவே, \(\\ \\ \\ \\ r=3u\)
4.
கொடுக்கப்பட்ட சமன்பாட்டை
\(\cfrac { dy }{ dx } =\cfrac { -2xy }{ { x }^{ 2 }+{ 2y }^{ 2 } } \) எனுமாறு எழுதலாம்.
இது ஒரு சமப்படிதான வகைக்கெழுச் சமன்பாடு
y=vx எனப் பிரதியிட
\(\cfrac { dy }{ dx } =v\left( 1 \right) +x\cfrac { dv }{ dx } \)
\(\cfrac { dy }{ dx } =v+x\cfrac { dv }{ dx } \)
கொடுக்கப்பட்ட வகைக்கெழுச் சமன்பாடு
\(M\cfrac { dV }{ dt } =F-kV\)
கொடுக்கப்பட்ட சமன்பாட்டை
\(\cfrac { dV }{ F-kV } =\cfrac { dt }{ M } \) எனுமாறு எழுதலாம்.
தொகையிடக் கிடைப்பது
\(\int { \cfrac { dV }{ F-kV } } =\int { \cfrac { dt }{ M } } \)
\(\cfrac { log\left( F-kV \right) }{ -k } =\cfrac { t }{ m } +logc\)
\(log\left[ F-kV \right] =-\cfrac { kt }{ M } +logC\)
\(log\left[ F-kV \right] -logC=-\cfrac { kt }{ M } \)
\(log\left( \cfrac { F-kV }{ C } \right) =-\cfrac { kt }{ M } \)
\(\cfrac { F-kV }{ C } ={ e }^{ \frac { -kt }{ M } }\)
\(\cfrac { F-kV }{ { e }^{ \frac { -kt }{ M } } } =C\Rightarrow C={ e }^{ \frac { kt }{ M } }\left( F-kV \right) \) ....(1)
தொடக்கக் கட்டுப்பாடு
கொடுக்கப்பட்டது t=0 எனும்போது \(V=0\)
\(C={ E }^{ \frac { k(0) }{ { e }^{ M } } }\left[ F-k(0) \right] \)
= \({ e }^{ 0 }\left[ F-0 \right] \)
C=F
\(\therefore \left( 1 \right) \Rightarrow F=\left( F-kV \right) { e }^{ \frac { kt }{ M } }\)
5.
ℤo = {2k + 1:k ∈ ℤ} = {...,−5,−3,−1,1,3,5,...} என்ற அனைத்து ஒற்றை முழுக்களைக் கொண்ட கணத்தைக் கருதுக. கூட்டல் + ஆனது ℤo -இன் மீது ஓர் ஈருறுப்புச் செயல் ஆகாது. ஏனெனில், x = 2m + 1,y = 2n + 1 எனும்பொழுது x + y = 2(m + n)+2 என்பது அனைத்து m,n-க்கும் இரட்டை எண்ணாகவே அமையும். எடுத்துக்காட்டாக, 3, 7 ∈ ℤo என்ற இரு ஒற்றை எண்களைக் கருதுக. அவைகளின் கூடுதல் 3 + 7 = 10 என்பது ஓர் இரட்டை எண்ணாகும். பொதுவாக, x, y∈ ℤ0 எனில், (x+y)∉ℤ0 ஆகும். + ஆனது ℤo ன் மீது ஓர் ஈருறுப்புச் செயல் அல்லாததால் ஏனையப் பண்புகளைச் சரிபார்க்க வேண்டிய அவசியமில்லை.
6.
I = \(\int ^{1}_{0} (\tan ^{-1} x + \tan ^{-1}(1-x))\) dx
= \(\int ^{1}_{0} (\tan ^{-1} x dx + \int ^{1}_{0} \tan ^{-1}(1-x)) dx\)
= \(\int ^{1}_{0} (\tan ^{-1} x dx + \int ^{1}_{0} \tan ^{-1}(1-(1-x)) dx\) (∵ \(\int ^{a}_{0} f (x) dx = \int ^{a}_{0} f(a-x) dx)\)
= \(\int ^{1}_{0} \tan ^{-1} x dx + \int ^{1}_{0} \tan ^{-1} x dx\)
= 2 \(\int ^{1}_{0} \tan^{-1} x dx\)
=\([2 \int udv]^1_0\) , இங்கு u = tan-1 x மற்றும் dν = dx
= 2 \([uν - \int udv]^1_0,\) பகுதி தொகையிடலின் சூத்திரத்தைப் பயன்படுத்த,
= 2 \((x \tan^{-1} x - \int x \frac{dx}{1+x^2})^{1}_{0}\) = 2 \((x \tan^{-1} x - \frac {1}{2} \log (1+x^2))^{1}_{0}\) = \(\frac{\pi}{2} \) - log2
7.
கொடுக்கப்பட்ட \(\frac { \sqrt { 1+{ x }^{ 2 } } -\sqrt { 1-{ x }^{ 2 } } }{ \sqrt { 1+{ x }^{ 2 } } +\sqrt { 1-{ x }^{ 2 } } } \) = α
\(\Rightarrow \frac { \left( \sqrt { 1+{ x }^{ 2 } } -\sqrt { 1-{ x }^{ 2 } } \right) +\left( \sqrt { 1+{ x }^{ 2 } } +\sqrt { 1-{ x }^{ 2 } } \right) }{ \left( \sqrt { 1+{ x }^{ 2 } } -\sqrt { 1-{ x }^{ 2 } } \right) -\left( \sqrt { 1+{ x }^{ 2 } } +\sqrt { 1-{ x }^{ 2 } } \right) } \)
\(=\frac { tan\alpha +1 }{ tan\alpha -1 } \)
\(\Rightarrow \frac { 2\sqrt { 1+{ x }^{ 2 } } }{ -2\sqrt { 1-{ x }^{ 2 } } } =\frac { tan\alpha +1 }{ tan\alpha -1 } \)
\(\Rightarrow \sqrt { \frac { 1-{ x }^{ 2 } }{ 1+{ x }^{ 2 } } } =\frac { 1-tan\alpha }{ 1+tan\alpha } \)
\(\Rightarrow \sqrt { \frac { 1-{ x }^{ 2 } }{ 1+{ x }^{ 2 } } } =\frac { cos\alpha -sin\alpha }{ cos\alpha +sin\alpha } \)
\(\Rightarrow \frac { 1-{ x }^{ 2 } }{ 1+{ x }^{ 2 } } ={ \left( \frac { cos\alpha -sin\alpha }{ cos\alpha +sin\alpha } \right) }^{ 2 }\)
\(\Rightarrow \frac { 1-{ x }^{ 2 } }{ 1+{ x }^{ 2 } } =\frac { 1-sin2\alpha }{ 1+sin2\alpha } \Rightarrow { x }^{ 2 }=sin2\alpha \)
8.
கொடுக்கப்பட்ட தளங்களின் சமன்பாடுகள் x+2y+3z = 2 மற்றும் x - y + z = 3 தளங்களின் வெட்டுக்கோட்டின் வழிச் செல்லும் தளத்தின் கார்டீசியன் வடிவம்
(a1x+b1y+c1z-d1) + \(\lambda \) (a2x+b2y+c2z-d2) = 0
\(\therefore\) தேவையான தளத்தின் சமன்பாடு
\(\left( x+2y+3z-2 \right) +\lambda \left( x+y+z+8 \right) =0\)
\(\left( \lambda +1 \right) +y\left( 2+\lambda \right) +z\left( 3+\lambda \right) -2-3\lambda =0\)
\(
\frac{3(1+\lambda)+1(2-\lambda)-1(3+\lambda)-2-3 \lambda}{\sqrt{(1+\lambda)^2+(2-\lambda)^2+(3+\lambda)^2}}= \pm \frac{2}{\sqrt{3}} \\
\frac{3+3 \lambda+2-\lambda-3-\lambda-2-3 \lambda}{\sqrt{1+2 \lambda+\lambda^2+4-4 \lambda+\lambda^2+9+6 \lambda+\lambda^2}}= \pm \frac{2}{\sqrt{3}} \\
\frac{-2 \lambda}{\sqrt{3 \lambda^2+4 \lambda+14}}= \pm \frac{2}{\sqrt{3}}
\)
வர்க்கப்படுத்த
\(
\frac{\lambda^2}{3 \lambda^2+4 \lambda+14} =\frac{1}{3} \\
3 \lambda^2 =3 \lambda^2+4 \lambda+14 \\
4 \lambda=-14 \Rightarrow \lambda =\frac{-7}{2}
\)
\(\lambda =\frac{-7}{2}\) 1 ல் பிரதியிட
\(
(x+2 y+3 z-2)-\frac{7}{2}(x-y+z-3)=0 \\
2 x+4 y+6 z-4-7 x+7 y-7 z+21=0 \\
-5 x+11 y-z+17=0 \\
5 x-11 y+z-17=0
\)
9.
வட்டத்தின் பொதுச் சமன்பாடு x2 + y2 + 2gx +2fy + c = 0 ...(1)
இது (1, 1), (2, -1) மற்றும் (3, 2) என்ற புள்ளிகள் வழிச்செல்வதால்
2g + 2 f + c = -2 , … (2)
4g − 2 f + c = -5 , … (3)
6g + 4 f + c = -13 . … (4)
(2)-(3)-இலிருந்து -2g + 4f = 3. ...(5)
(4)-(3)-இலிருந்து 2g + 6f = -8. ...(6)
(5)+(6)-இலிருந்து f = -\(\frac{1}{2}\) என கிடைக்கும் மதிப்பை (6) இல் பிரதியிட g =\(\frac{-5}{2},f,g\) இன் மதிப்புகளை (2) இல் பிரதியிட c = 4 எனவும் கிடைக்கிறது.
எனவே தேவையான வட்டத்தின் சமன்பாடு
\({ x }^{ 2 }+{ y }^{ 2 }+2\left( -\frac { 5 }{ 2 } \right) x+2\left( -\frac { 1 }{ 2 } \right) y+4=0\)
அதாவது x2 + y2 − 5x − y + 4 = 0.
10.
கொள்கை \(\left| { z }_{ 1 } \right| =\left| { z }_{ 2 } \right| =\left| { z }_{ 3 } \right| =r\Rightarrow { z }_{ 1 }\bar { { z }_{ 1 } } ={ z }_{ 2 }\bar { { z }_{ 2 } } ={ z }_{ 3 }\bar { { z }_{ 3 } } ={ r }^{ 2 }\)
⇒ \({ z }_{ 1 }=\frac { { r }^{ 2 } }{ \bar { { z }_{ 1 } } } ,{ z }_{ 2 }=\frac { { r }^{ 2 } }{ \bar { { z }_{ 2 } } } ,{ z }_{ 3 }=\frac { { r }^{ 2 } }{ \bar { { z }_{ 3 } } } \)
ஆகவே, z1 + z2 + z3 = \(\frac { { r }^{ 2 } }{ \bar { { z }_{ 1 } } } + \frac { { r }^{ 2 } }{ \bar { { z }_{ 2 } } }+ \frac { { r }^{ 2 } }{ \bar { { z }_{ 3 } } } \)
\(={ r }^{ 2 }\left( \frac { \bar { { z }_{ 2 } } \bar { { z }_{ 3 } } +\bar { { z }_{ 1 } } \bar { { z }_{ 3 } } +\bar { { z }_{ 1 } } \bar { { z }_{ 2 } } }{ \bar { { z }_{ 1 } } \bar { { z }_{ 2 } } \bar { { z }_{ 3 } } } \right) \)
\(\left| { z }_{ 1 }+{ z }_{ 2 }+{ z }_{ 3 } \right| =\left| { r }^{ 2 } \right| \left| \frac { \overline { z_{ 2 }{ z }_{ 3 }+{ z }_{ 1 }{ z }_{ 3 }+{ z }_{ 1 }{ z }_{ 2 } } }{ { z }_{ 1 }+{ z }_{ 2 }+{ z }_{ 3 } } \right| \) \((\because \bar { { z }_{ 1 } } +\bar { { z }_{ 2 } } =\overline { { z }_{ 1 }+{ z }_{ 2 } } )\)
= \(={ r }^{ 2 }\frac { \left| z_{ 2 }{ z }_{ 3 }+{ z }_{ 1 }{ z }_{ 3 }+{ z }_{ 1 }{ z }_{ 2 } \right| }{ \left| { z }_{ 1 } \right| \left| { z }_{ 2 } \right| \left| { z }_{ 3 } \right| } \) \((\because \left| z \right| \left| \bar { z } \right| \) மற்றும் \(\left| { z }_{ 1 }{ z }_{ 2 }{ z }_{ 3 } \right| =\left| { z }_{ 1 } \right| \left| { z }_{ 2 } \right| \left| { { z }_{ 3 } } \right| )\)
\(\left| { z }_{ 1 }+{ z }_{ 2 }+{ z }_{ 3 } \right| ={ r }^{ 2 }\frac { \left| z_{ 2 }{ z }_{ 3 }+{ z }_{ 1 }{ z }_{ 3 }+{ z }_{ 1 }{ z }_{ 2 } \right| }{ { r }^{ 3 } } =\frac { \left| z_{ 2 }{ z }_{ 3 }+{ z }_{ 1 }{ z }_{ 3 }+{ z }_{ 1 }{ z }_{ 2 } \right| }{ r } \)
⇒ \(\frac { \left| z_{ 2 }{ z }_{ 3 }+{ z }_{ 1 }{ z }_{ 3 }+{ z }_{ 1 }{ z }_{ 2 } \right| }{ \left| { z }_{ 1 }+{ z }_{ 2 }+{ z }_{ 3 } \right| } \) = r (கொள்கையின் படி z1 + z2 + z3 ≠ 0 )
எனவே, \(\left| \frac { \left| z_{ 2 }{ z }_{ 3 }+{ z }_{ 1 }{ z }_{ 3 }+{ z }_{ 1 }{ z }_{ 2 } \right| }{ { z }_{ 1 }+{ z }_{ 2 }+{ z }_{ 3 } } \right| \) = r
11.

\(\hat { a } =\vec { OA } \)மற்றும் \(\hat { b } =\vec { OB } \)என்பன அலகு வெக்டர்கள் என்க மற்றும் அவைகள் கோணங்கள் \(\alpha ,\beta \) வை x-அச்சின் மிகையுடன் ஏற்படுத்துகின்றன.AL மற்றும் BM \(\bot '\) லிருந்து x அச்சு எனுமாறு வரைக
பிறகு \(\left| \vec { OL } \right| =\left| \vec { OA } \right| cos\alpha =cos\alpha \)
\(\left| \vec { OL } \right| =\left| \vec { OA } \right| cos\alpha =cos\alpha \)
\(\left[ \because \Delta OAL,sin\alpha =\cfrac { opp }{ hyp } cos\alpha =\cfrac { adj }{ hyp } \right] \)
\(\therefore \vec { OL } =\left| \vec { OL } \right| =cos\alpha \hat { i } \)
\(\vec { LA } =\left| \vec { LA } \right| \hat { j } =sin\alpha \hat { j } \)
\(\therefore \hat { a } =\vec { OA } =\vec { OL } +\vec { LA } \)
[\(\triangle\) விதியை பயன்படுத்தி கூட்டுக]
\(\hat { a } =cos\alpha \hat { i } +sin\alpha \hat { j } \)
அதை போல \(\hat { b } =cos\beta \hat { i } +sin\beta \hat { j } \)
\(\hat { a } \) மற்றும் \(\hat { b } \) க்கு இடையேயான கோணம்\(\left( \alpha -\beta \right) \)
\(\therefore \hat { a } .\hat { b } =\left| \vec { a } \right| \left| \vec { b } \right| cos\left( \alpha -\beta \right) =cos\left( \alpha -\beta \right) \)
\(\left[ \because \left| \vec { a } \right| =\left| \vec { b } \right| =1 \right] \)
மேலும் \(\hat { a } .\hat { b } =\left( cos\alpha \hat { i } +sin\alpha \hat { j } \right) \left( cos\beta \hat { i } +sin\beta \hat { j } \right) \)
\(\hat { a } .\hat { b } =cos\alpha cos\beta +sin\alpha sin\beta \)
(3) மற்றும் (4) லிருந்து
\(cos\left( \alpha -\beta \right) =cos\alpha cos\beta +sin\alpha sin\beta \)
12.
| p | q | ¬ q | \(r:(p\overset { \_ \_ }{ \vee } q)\) | s:\((p\overset { \_ \_ }{ \vee } \neg q)\) | r ∧ s |
| T | T | F | F | T | F |
| T | F | T | T | F | F |
| F | T | F | T | F | F |
| F | F | T | F | T | F |
மேற்காணும் முடிவை மெய்மை அட்டவணைகளை பயன்படுத்தாமல் நிரூபிக்க முடியும். இதனைத் தர்க்க சமானமானவை பற்றி அறிந்த பிறகே வழங்க முடியும்.
13.
\(f(x)=x(x-4)^{ 3 }\)
\(f'\left( x \right) =3x\left( x-4 \right) ^{ 2 }+\left( x-4 \right) ^{ 3 }(1)\)
= \(\left( x-4 \right) ^{ 2 }\left( 4x-4 \right) =4\left( x-4 \right) ^{ 2 }\left( x-1 \right) \)
\(f''(x)=4\left[ \left( x-4 \right) ^{ 2 }(1)+(x-1)2(x-4) \right] \)
= \(4(x-4)(x-4+2x-2)\)
= \(4(x-4)\left( 3x-6 \right) =12\left( x-4 \right) \left( x-2 \right) \)
\(f"(x)=0\Rightarrow 12(x-4)(x-2)=0\)
தேக்க நிலைப் புள்ளிகள் x =2,4
இடைவெளிகள் \(\left( -\infty ,2 \right) \left( 2, 4 \right) \) மற்றும் \(\left( 4,\infty \right) \)
இடைவெளி \(\left( -\infty ,2 \right) \) ல் ,\(f''\left( x \right) >0\Rightarrow \) வளைவரை மேல்நோக்கி குழிவானது.
இடைவெளி \(\left( 2,4 \right) \) ,\(f''\left( x \right) >0\Rightarrow \) வளைவரை கீழ்நோக்கி குழிவானது.
இடைவெளி \(\left( 4,\infty \right) \) ல்,\(f''(x)>0\Rightarrow \) மேல்நோக்கி குழிவானது.
\(\left( -\infty ,2 \right) ,\left( 4,\infty \right) \) ல் வளைவரை மேல்நோக்கி குழிவாகவும்,(2, 4)ல் கீழ்நோக்கி குழிவாகவும் உள்ளது.
x = 2 மற்றும் x = 4 ஐக் கடக்கும்போது f''(x)ன் குறி மாறுகிறது.
இப்போது \(f(2)=2\left( 2-4 \right) ^{ 3 }=-16\) மற்றும் \(f(4)=4\left( 4-4 \right) ^{ 3 }=0\)
\(\therefore\) வளைவு மாற்றப்புள்ளிகள் (2, -16) மற்றும் (4, 0).
14.
u (x, y, z) = xyz; x = e-t y = e-t cos t; z = sin t
\(\frac { \partial u }{ \partial x } \) = yz; \(\frac { \partial u }{ \partial y } \) = xz; \(\frac { \partial u }{ \partial z } \) = xy
⇒ \(\frac { \partial u }{ \partial x } \) = et cos t sin t
\(\frac { \partial u }{ \partial y } \) = et sin t
\(\frac { \partial u }{ \partial z } \) = e-2t cos t மற்றும்
\(\frac{dx}{dt}=-e^{-t}\)
⇒ \(\frac{dy}{dt}\) = e-t (- sin t) - cos t e-t
⇒ \(\frac{dz}{dt}\) = cos t
\(\frac { dw }{ dt } =\frac { \partial w }{ \partial x } .\frac { dx }{ dt } +\frac { \partial w }{ \partial y } .\frac { dy }{ dt } +\frac { \partial w }{ \partial z } .\frac { dz }{ dt } \)
∴ \(\frac { dw }{ dt } =\frac { \partial u }{ \partial x } .\frac { dx }{ dt } +\frac { \partial u }{ \partial y } .\frac { dy }{ dt } +\frac { \partial u }{ \partial z } .\frac { dz }{ dt } \)
= e-1 cos t sin t (-e-t) + e-t sin t (-e-t) + e-t sin t (-e-t sin t - e-t cos t)+ (-e-2t) cos t(cos t)
= -e-2t [(sin t cos t + sin2 t + sin t cos t - cos2 t]
= -e-2t [2 sin t cos t - (cos2 t - sin2 t)]
\(\frac { du }{ dt } \) = - e-2t [sin 2t - cos2t]
[∵ cas 2 t = cos2 t - sin2 t and sin 2t = 2 sin t cos t]
15.
முதலில் \({ V }_{ x },{ V }_{ y },{ V }_{ z }\) ஆகியவற்றைக் காணலா.
இப்போது,\({ V }_{ x }=\cfrac { \partial v }{ \partial x } =y+z\)
\({ V }_{ y }=\cfrac { \partial v }{ \partial y } =x+z\)
\({ V }_{ z }=\cfrac { \partial v }{ \partial z } =y+x\)
வகையீடு
\(dV={ V }_{ x }dx+{ V }_{ y }dy+{ V }_{ z }dz\)
= \(\left( y+z \right) dx+\left( x+z \right) dy+\left( y+x \right) dz\)
16.
கொடுக்கப்பட்ட சார்பு \(x \in(0, \infty)\) -ல் வரையறுக்கப்பட்டு வகையிடத்தக்கதாக உள்ளது.
f(x) = x log x + 3x.
எனவே , f'(x) = logx + 1 + 3 = 4 + logx.
தேக்கநிலை எண்களைக் காண 4 + log x = 0 -ஐ தீர்க்க
நமக்குக் கிடைப்பது x=e-4 ஆகும்.
ஆகவே, சார்பு f(x) -ன் ஓரியல்பு இடைவெளிகள் (0,e-4) மற்றும் \((e^{-4}, \infty)\) ஆகும்.
\(x=e^{-5}\in(0,e^{-4})\) -ல் f'(e-5) = -1 < 0 மேலும் இதிலிருந்து (0,e-4) -ல் f(x) திட்டமாக இறங்கும்.
\(x=e^{-3}\in(e^{-4},\infty)\) -ல் f'(e-3) = 1 > 0 மேலும் இதிலிருந்து \((e^{-4}, \infty)\)-ல் f(x) திட்டமாக ஏறும்.
f′(x) -ன் குறி x=e-4 -ஐ கடக்கும்போது குறையிலிருந்து மிகைக்கு மாறுவதால், முதலாம் வகைக்கெழு சோதனையின்படி x = e-4 -ல் இடஞ்சார்ந்த சிறும மதிப்பு f(e-4)=-e-4ஆகும்.
17.
T =10x-x2 எனக் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே ஒரு முனையிலிருந்து எந்த அளவு தூரத்திலும் வெப்பநிலை மாறுபாட்டு வீதமானது \(\frac{dT}{dx}=10-2x \) ஆகும். கம்பியின் மையப்புள்ளி x = 5 –ல் உள்ளது.
x = 5 எனப்பிரதியிட, \(\frac{dT}{dx}=0\) எனக்கிடைக்கும்.
18.
கொடுக்கப்பட்ட சமன்பாடு என்பது x2 = -36y ...(1)
குவியம் (0, -9) = (0, -9)மற்றும் செவ்வகலம் என்பது (1)ல் y = -9

நமக்கு கிடைப்பது
\({ x }^{ 2 }=-36(-9)\Rightarrow \sqrt { 36(9) } =6(3)=18\)
\(\Delta AOB\) ன் பரப்பு 2(\(\Delta OSB\) ன் பரப்பு )
= \(2\left( \cfrac { 1 }{ 2 } \times b\times h \right) =2\left( \cfrac { 1 }{ 2 } \times 18\times 9 \right) \)
[\(\therefore\) b = SB = 18, h = OS = 9]
19.
பிரதியிடு 5+2√6=y; இனி 5-2√6=\(\frac{1}{y}\)
∴ கொடுக்கப்பட்ட சமன்பாடானது
\({ y }^{ { x }^{ 2 }-3 }+{ \left( \frac { 1 }{ y } \right) }^{ { x }^{ 2 }-3 }=10\)
பிரதியிடு \({ y }^{ { x }^{ 2 }-3 }=z\quad \quad \quad \quad \quad ...(1)\)
\(\Rightarrow z+\frac { 1 }{ z } =10\Rightarrow { z }^{ 2 }-10z+1=0\)
\(\Rightarrow z=\frac { 10\pm \sqrt { 100-4 } }{ 2 } =5\pm 2\sqrt { 6 } \)
\(\\ \therefore (5+2\sqrt { 6 } )^{ { x }^{ 2 }-3 }=5\pm 2\sqrt { 6 } =(5\pm 2\sqrt { 6 } )\pm 1\)
⇒ x2-3=1 (அ) x2-3=-1
⇒ x2=4 (அ) x2=2
⇒ x=土2 (அ) x=土√2
∴ மூலங்கள் 2,-2, √2,-√2
20.
\({ \cot }^{ -1 }x-{ \cot }^{ -1 }\left( x+2 \right) =\frac { \pi }{ 12 } ,x>0\)
\({ \tan }^{ -1 }\left( \frac { 1 }{ x } \right) -{ \tan }^{ -1 }\left( \frac { 1 }{ x+2 } \right) =\frac { \pi }{ 12 } \)
[∵ cot-1 (x) = tan-1 \(\left( \frac { 1 }{ x } \right) \) எனில் x > 0]
\(\Rightarrow { \tan }^{ -1 }\left( \frac { \frac { 1 }{ x } -\frac { 1 }{ x+2 } }{ 1+\frac { 1 }{ x } .\frac { 1 }{ x+2 } } \right) =\frac { \pi }{ 12 } \)
\(\Rightarrow \left( \frac { \frac { x+2-x }{ x(x+2) } }{ \frac { x(x+2)+1 }{ x(x+2) } } \right) =\tan{ 15 }^{ o }\)
\(\Rightarrow\frac { 2 }{ { x }^{ 2 }+2x+1 } =\frac { { \left( \sqrt { 3 } -1 \right) }^{ 2 } }{ 2 } \)
\(\Rightarrow \frac { 2 }{ { (x+1) }^{ 2 } } =\frac { { \left( \sqrt { 3 } -1 \right) }^{ 2 } }{ 2 } \)
⇒ 4 = (x+1)2 \({ \left( \sqrt { 3 } -1 \right) }^{ 2 }\)
இருபுறமும் வர்க்க மூலம் எடுக்க கிடைப்பது
2 = (x + 1) \(\left( \sqrt { 3 } -1 \right) \)
\(\Rightarrow x+1=\frac { 2 }{ \sqrt { 3 } -1 } \times \frac { \sqrt { 3 } +1 }{ \sqrt { 3 } +1 } =\frac { 2\left( \sqrt { 3 } +1 \right) }{ 3-1 } =\sqrt { 3 } +1\)
x + 1 = \(\sqrt { 3 } \) + 1 = x = \(\sqrt { 3 } \)
x = \(\sqrt { 3 } \) என்பது தீர்வாகும்.
| [∵ tan 15o = tan (45o - 30o)] = \(\frac { { tan45 }^{ o }-{ tan30 }^{ o } }{ 1+{ tan45 }^{ o }{ tan30 }^{ o } } \) = \(\frac { 1-\frac { 1 }{ \sqrt { 3 } } }{ 1+\frac { 1 }{ \sqrt { 3 } } } =\frac { \sqrt { 3 } -1 }{ \sqrt { 3 } +1 } \times \frac { \sqrt { 3 } -1 }{ \sqrt { 3 } -1 } \) = \(\frac { { \left( \sqrt { 3 } -1 \right) }^{ 2 } }{ 3-1 } =\frac { { \left( \sqrt { 3 } -1 \right) }^{ 2 } }{ 2 } \) |
21.
இங்கு மதிப்பிட வேண்டிய மாறிகளின் எண்ணிக்கை 3
தொகுப்பின் அணி வடிவம் AX = B, இங்கு A = \(\left[ \begin{matrix} 1 & 1 & 1 \\ 1 & 2 & 3 \\ 3 & 5 & 7 \end{matrix} \right] ,X=\left[ \begin{matrix} x \\ y \\ z \end{matrix} \right] ,B=\left[ \begin{matrix} a \\ b \\ c \end{matrix} \right] \)
[A|B] என்ற விரிவுபடுத்தப்பட்ட அணியில் தொடக்கநிலை நிரைச் செயலிகள் பயன்படுத்தக் கிடைப்பது,
[A|B] = \(\left[ \begin{matrix} 1 & 1 & 1 \\ 1 & 2 & 3 \\ 3 & 5 & 7 \end{matrix}|\begin{matrix} a \\ b \\ c \end{matrix} \right] \overset { { R }_{ 2 }\rightarrow { R }_{ 2 }-{ R }_{ 1 }\\ { R }_{ 3 }\rightarrow { R }_{ 3 }-3{ R }_{ 1 } }{ \longrightarrow } \left[ \begin{matrix} 1 & 1 & 1 \\ 0 & 1 & 2 \\ 0 & 2 & 4 \end{matrix}|\begin{matrix} a \\ b-a \\ c-3a \end{matrix} \right] \overset { { R }_{ 3 }\rightarrow { R }_{ 3 }-2R_{ 2 } }{ \longrightarrow } \left[ \begin{matrix} 1 & 1 & 1 \\ 0 & 1 & 2 \\ 0 & 0 & 0 \end{matrix}|\begin{matrix} a \\ b-a \\ (c-3a)-2(b-a) \end{matrix} \right] =\left[ \begin{matrix} 1 & 1 & 1 \\ 0 & 1 & 2 \\ 0 & 0 & 0 \end{matrix}|\begin{matrix} a \\ b-a \\ (c-2b-a) \end{matrix} \right] \)
தொகுப்பின் தீர்வுகள் ஒரு சாராமாறிக் குடும்பமாக இருக்க வேண்டுமாயின், ρ(A) = ρ[(A,B]) = 2. எனவே ஏறுபடி வடிவத்திலுள்ள மூன்றாவது நிரையானது பூச்சிய நிரையாக இருக்க வேண்டும்.
எனவே, c-2b-a = 0 ⇒ c = a +2b
22.
(i) \(\left| \frac { 2+i }{ -1+2i } \right| =\frac { \left| 2+i \right| }{ \left| -1+2i \right| } =\frac { \sqrt { { 2 }^{ 2 }+{ 1 }^{ 2 } } }{ \sqrt { { (-1) }^{ 2 }+{ 2 }^{ 2 } } } =1\) \(\left( \because \left| \frac { { z }_{ 1 } }{ { z }_{ 2 } } \right| =\frac { \left| { z }_{ 1 } \right| }{ \left| z_{ 2 } \right| } ,{ z }_{ 2 }\neq 0 \right) \).
(ii) \(\left| \overline { (1+i) } (2+3i)(4i-3) \right| =\left| \overline { (1+i) } \right| \left| (2+3i) \right| \left| (4i-3) \right| \) \(\left( \because \left| { z }_{ 1 }{ z }_{ 2 }{ z }_{ 3 } \right| =\left| { z }_{ 1 } \right| \left| { z }_{ 2 } \right| \left| { z }_{ 3 } \right| \right) \)
= \(\left| (1+i) \right| \left| (2+3i) \right| \left| (-3+4i) \right| \) \(\left( \because \left| { z }_{ 1 } \right| =\left| { \bar z } \right| \right) \)
= \(\left( \sqrt { { 1 }^{ 2 }+{ 1 }^{ 2 } } \right) \left( \sqrt { { 2 }^{ 2 }+{ 3 }^{ 2 } } \right) \left( \sqrt { { (-3) }^{ 2 }+4^{ 2 } } \right) \)
= \(\left( \sqrt { 2 } \right) \left( \sqrt { 13 } \right) \left( \sqrt { 25 } \right) =5\sqrt { 26 } \)
(iii) \(\left| \frac { i(2+{ i })^{ 3 } }{ { (1+i) }^{ 2 } } \right| \) = \(\frac { \left| i \right| \left| { (2+i) }^{ 3 } \right| }{ \left| { (1+i) }^{ 2 } \right| } =\frac { 1{ \left| 2+i \right| }^{ 3 } }{ { \left| 1+i \right| }^{ 2 } } =\frac { { (\sqrt { 4+1 } })^{ 3 } }{ { (\sqrt { 2 } ) }^{ 2 } } \) = \(\left( \because \left| \frac { { z }_{ 1 } }{ { z }_{ 2 } } \right| =\frac { \left| { z }_{ 1 } \right| }{ \left| z_{ 2 } \right| } ,{ z }_{ 2 }\neq 0 \right) \)
= \(\frac { { (\sqrt { 5 } })^{ 3 } }{ 2 } =\frac { 5\sqrt { 5 } }{ 2 } \)
23.
\({ \sin }^{ -1 }\left( \frac { x }{ \sqrt { 1+{ x }^{ 2 } } } \right) ={ \cos }^{ -1 }\left( \frac { 1 }{ \sqrt { 1+{ x }^{ 2 } } } \right) \).என அறிவோம்
எனவே, \(\cos\left( { \sin }^{ -1 }\left( \frac { x }{ \sqrt { 1+{ x }^{ 2 } } } \right) \right) +\frac { 1 }{ \sqrt { 1+{ x }^{ 2 } } } )\) ...(1)
\({ \cot }^{ -1 }\left( \frac { 3 }{ 4 } \right) =\theta \). என்க. பின்னர் \(\cot\theta =\frac { 3 }{ 4 } \)மற்றும் \(\theta \) குறுங்கோணம்.
படத்திலிருந்து, நமக்கு கிடைக்கப்பெறுவது
\(\sin\left\{ { \cot }^{ -1 }\left( \frac { 3 }{ 4 } \right) \right\} =\sin\theta =\frac { 4 }{ 5 } \) ...(2)
(1) மற்றும் (2)-ஐ கொடுக்கப்பட்ட சமன்பாட்டில் பயன்படுத்தும்போது
\(\frac { 1 }{ \sqrt { 1+{ x }^{ 2 } } } =\frac { 4 }{ 5 } \), என்பதிலிருந்து \(\sqrt { 1+{ x }^{ 2 } } =\frac { 5 }{ 4 } \) எனவே, \(x=\pm \frac { 3 }{ 4 } \).
24.
கொடுக்கப்பட்டது : z1 = 3, z2 = -7i, z3 = 5 + 4i
z2 z3 = -7i + 5 + 4i = 5 - 3i
z1 (z2 z3) = 3(5 - 3i) = 15 - 9i ...(1)
z1 z2 = 3(-7i) = -21i
z1 z2 + z1 z3 = -21i + 15 + 12i
= 15 - 9i ...(2)
(1) மற்றும் (2) லிருந்து
∴ (z1 + z2) z3 = z1 z3 + z2 z3 எனவே நிறுவப்பட்டது.
25.
(d)
\(\cfrac { { x }^{ 2 } }{ 33 } +\cfrac { { y }^{ 2 } }{ 49 } =1\)
27.
(c)
சமபக்க முக்கோணம்
28.
கூற்றுகளின் எண்ணிக்கை =3
மெய்மை அட்டவணையில் நிரைகளின் எண்ணிக்கை = 23 = 8 நிரைகள்
29.
\(\begin{aligned} a * b & =\sqrt{a^2+b^2} \end{aligned}\)
\(\begin{aligned} b * a & =\sqrt{b^2+a^2} \end{aligned}\)
\(\begin{aligned} \Rightarrow a * b & =b * a \end{aligned}\)
\(\therefore\) \(*\) என்பது பரிமாற்றுப் பண்பை நிறைவு செய்கிறது.
\(\begin{aligned} (\mathrm{a} * \mathrm{~b}) * \mathrm{c} & =\sqrt{a^2+b^2} * \mathrm{c} \end{aligned}\)
\(\begin{aligned} =\sqrt{\left(\sqrt{a^2+b^2}\right)^2+c^2}=\sqrt{a^2+b^2+c^2} \end{aligned}\)
\(\mathrm{a} *(\mathrm{~b} * \mathrm{c})=\mathrm{a} * \sqrt{b^2+c^2}\)
\(\begin{aligned} =\sqrt{a^2+\left(\sqrt{b^2+c^2}\right)^2}=\sqrt{a^2+b^2+c^2} \end{aligned}\)
\(\therefore\) \(\begin{aligned} (\mathrm{a} * \mathrm{~b}) * \mathrm{c} & =\mathrm{a} *(\mathrm{~b} * \mathrm{c}) \end{aligned}\)
\(*\) என்பது சேர்ப்புப் பண்பை நிறைவு செய்கிறது.
30.
கொடுக்கப்பட்டது \(x^2+y^2=200\)
\(y^2 =200-x^2 \)
\(y =\sqrt{200-x^2}\)
பெருக்கற்பலன் \(\mathrm{P}=x \mathrm{y}=x \sqrt{200-x^2}\)
\(\mathrm{F}=\mathrm{P}^2\) என்க.
\(\mathrm{F}=x^2\left(200-x^2\right)=200 x^2-x^4\)
F பெருமம் எனில்,P ஆனது பெருமமாகும்.
பெருமத்திற்கு, \(\frac{d F}{d x}=0 \Rightarrow 200(2 x)-4 x^3=0\)
\( \Rightarrow 4 x\left(100-x^2\right)=0 \Rightarrow x=0, x= \pm 10\)
x=0,-10 ஆக இருக்க முடியாது
\(\therefore x =+10 \)
\(y =\sqrt{200-10^2}=10 \)
\(\frac{d^2 F}{d x^2} =400-12 x^2\)
x =10-ல், F'' = 400 - 12 x 10 x 10<0
பெருக்கற்பலனின் பெரும மதிப்பு P = xy
= (10)(10)
= 100
31.
\(\mathrm{y}^2-x y+9 =0 \)
\(2 y \frac{d y}{d x}-\left(x \frac{d y}{d x}+y\right) =0 \)
\(\frac{d y}{d x}(2 y-x) =y \)
\(\frac{d y}{d x} =\frac{y}{2 y-x}\)
தொடுகோடு நிலைகுத்தாக இருக்கும்போது, \(\frac{d y}{d x}=\infty\)
அதாவது \(\frac{y}{2 y-x}=\frac{1}{0} \Rightarrow 2 \mathrm{y}-x=0\)
\(2 \mathrm{y}=x\)
(1)ல் பிரதியியிட,
\(y^2-2 y^2+9 =0 \)
\(y^2 =9 \Rightarrow y= \pm 3\)
32.
(b)
\(\frac { 1 }{ 10100 } \)
33.
(a)
y + sin-1 x = c
34.
(a)
z − x
35.
(d)
\(\frac{1}{3}\)
36.
(b)
இணை
37.
(a)
sin 2α
38.
(a)
\(\lambda\)=8
39.
கொடுக்கப்பட்டது \(\vec{a} \cdot \vec{b}=\vec{b} \cdot \vec{c}=\vec{c} \cdot \vec{a}=0\)
\(\vec{a}, \vec{b}, \vec{c}\) என்பன ஒன்றுக்கொன்று செங்குத்து
\({[\vec{a}, \vec{b}, \vec{c}] } =(\vec{a} \times \vec{b}) \cdot \vec{c}=(|\vec{a}||\vec{b}| \sin \theta \cdot \hat{n}) \cdot \vec{c} \\ =|\vec{a}||\vec{b}| \sin \theta|\vec{c}| \cos \alpha\)
\((\vec{a}, \vec{b}, \vec{c}\) என்பன ஒன்றுக்கொன்று செங்குத்து என்பதால், \(\alpha=0, \theta=\frac{\pi}{2})\)
\(=\left|\vec{a}\left\|\vec{b}\left|\sin \frac{\pi}{2} \cos 0^{\circ}\right| \vec{c}|=| \vec{a}\right\| \vec{b} \| \vec{c}\right|\)
40.
\(z \in \mathbb{C} \backslash \mathbb{R}\) மற்றும் \(z+\frac{1}{z} \in \mathbb{R}\) எனில், 1/z ஆனது z - ன் இணை எண் ஆகும்.
ie) \(|z|^2=1 \Rightarrow|z|=1\)
41.
\(\Delta \geq 0 \)
\(\mathbf{k}^2-4(1)(9) \geq 0 \)
\(\mathbf{k}^2 \geq 36 \Rightarrow|k| \geq 6\)
42.
E2 என்ற நீள்வட்டத்தின் சமன்பாடு \(\frac{x^2}{b^2}+\frac{y^2}{a^2}=1\)
இது (0, 4) என்ற புள்ளி வழிச் செல்கிறது.
a² = 16
மேலும் இது (3, 2) வழிச் செல்கிறது.
\(\frac{9}{b^2}+\frac{4}{16}=1 \Rightarrow \frac{9}{b^2}=1-\frac{1}{4}=\frac{3}{4}\)
\( b^2=12 \\
e=\sqrt{1-\frac{b^2}{a^2}}=\sqrt{1-\frac{12}{16}}=\frac{1}{2} \)
43.
A - ல் A32 ன் இணைக்காரணி =\(-\left|\begin{array}{cc}3 & -1 \\ 2 & 0\end{array}\right|\)=-(0+2)=-2
|A| =3(2)-1(-2)-1(4+2)
=6+2-6=2
\(\mathrm{A}^{-1}\) - ல் \(\mathrm{a}_{23}\)இணைக்காரணி
\(=\frac{1}{|A|} \operatorname{adj} \mathrm{A}_{32}=\frac{1}{2}(-2)=-1\)
44.
\(
\sin ^{-1}(1)-\sin ^{-1}\left(\sqrt{\frac{3}{x}}\right) =\frac{\pi}{6} \\
\frac{\pi}{2}-\sin ^{-1} \sqrt{\frac{3}{x}} =\frac{\pi}{6} \Rightarrow \cos ^{-1} \sqrt{\frac{3}{x}}=\frac{\pi}{6} \\
\sqrt{\frac{3}{x}} =\cos \frac{\pi}{6} \Rightarrow \frac{\sqrt{3}}{\sqrt{x}}=\frac{\sqrt{3}}{2} \\
\sqrt{x} =2 \Rightarrow x=4 \)
விடை (2) : \(x^2-x-12=0 \Rightarrow(x-4)(x+3)=0 \)
\(\Rightarrow x=4,-3\)
விடை (3) :\( x^2+x-12=0 \Rightarrow(x+4)(x-3)=0 \\\)
\( \Rightarrow x=3,-4\)
x = 4 க்கு, விடை(2) சரியானது.
45.
கொடுக்கப்பட்ட சமன்பாடுகளை
\(\vec { r } =\vec { a } +s\vec { b } \) மற்றும் \(\vec { r } =\vec { c } +t\vec { b } \) உடன் ஒப்பிட
\(\vec { a } =\hat { i } -\hat { j } \) \(\vec { b } =2\hat { i } +\hat { j } +\hat { k } \)
\(\vec { c } =\hat { i } +\hat { j } -\hat { k } \) \(\vec { d } =2\hat { i } -\hat { j } -\hat { k } \)
\(\vec { c } -\vec { a } =2\hat { j } -\hat { k } \)
\(\vec { b } \times \vec { d } =\left| \begin{matrix} \hat { i } & \hat { j } & \hat { k } \\ 2 & 1 & 1 \\ 2 & -1 & -1 \end{matrix} \right| \)
= \(\hat { i } \left( -1+1 \right) -\hat { j } \left( -2-2 \right) +\hat { k } \left( -2-2 \right) \)
= \(4\hat { j } -4\hat { k } \)
= \(\left( \vec { c } -\vec { a } \right) .\left( \vec { b } \times \vec { d } \right) =\left( 2\hat { j } -\hat { k } \right) .\left( 4\hat { j } -4\hat { k } \right) \)
= 8+4=12
\(\left| \left( \vec { c } -\vec { a } \right) .\left( \vec { b } \times \vec { d } \right) \right| =12\)
\(\left| \left( \vec { b } \times \vec { d } \right) \right| =\sqrt { 16+16 } =\sqrt { 32 } =4\sqrt { 2 } \)
தொலைவு = \(\cfrac { \left| \left( \vec { c } -\vec { a } \right) .\left( \vec { b } \times \vec { d } \right) \right| }{ \left| \vec { b } \times \vec { d } \right| } \)
= \(\cfrac { 12 }{ 4\sqrt { 2 } } =\cfrac { 3 }{ \sqrt { 2 } } \) அலகுகள்
46.
p ↔ q ஜூபிடர் ஒரு கோள் என்றால் மட்டுமே இந்தியா ஒரு தீவு.
47.
(i) \(g(x,y)=\cfrac { { x }^{ 2 }y }{ { x }^{ 4 }+{ y }^{ 2 } } \) என்க.\(\left( x,y \right) \neq \left( 0,0 \right) \)
மற்றும் f(0,0)=0
y=mx
\(g(x,y)=\cfrac { { x }^{ 2 }(mx) }{ { x }^{ 4 }+\left( mx \right) ^{ 2 } } \)
= \(\cfrac { { x }^{ 3 }m }{ { x }^{ 2 }\left( { x }^{ 2 }+{ m }^{ 2 } \right) } \)
\(\underset { \left( x,y \right) \rightarrow \left( 0,0 \right) }{ \lim } g\left( x,y \right) =\underset { \left( x,y \right) \rightarrow \left( 0,0 \right) }{ \lim } \cfrac { mx }{ { x }^{ 2 }+{ n }^{ 2 } } = 0\) எனவே நிறுவப்பட்டது.
(ii) பரவளையம் \(y={ kx }^{ 2 }\) க்கு
\(g\left( x,y \right) =\cfrac { { x }^{ 2 }\left( mx \right) }{ { x }^{ 4 }+\left( mx \right) ^{ 2 } } \)
= \(\cfrac { { kx }^{ 4 } }{ { x }^{ 4 }+{ k }^{ 2 }{ x }^{ 4 } } \)
= \(\cfrac { { kx }^{ 4 } }{ { x }^{ 4 }\left( 1+{ k }^{ 2 } \right) } \)
= \(\cfrac { k }{ 1+{ k }^{ 2 } } \)
\(\underset { \left( x,y \right) \rightarrow \left( 0,0 \right) }{ \lim } g\left( x,y \right) =\underset { \left( x,y \right) \rightarrow \left( 0,0 \right) }{ \lim } \cfrac { k }{ 1+{ k }^{ 2 } } \)
= \(\cfrac { k }{ 1+{ k }^{ 2 } } \)
எனவே நிறுவப்பட்டது.
48.
(i) t நேரத்தில்,ரேடியத்தின் அளவு Q.Q சிதைவுறும் மாறுவீதமானது \(\frac { dQ }{ dt } \) மற்றும் இது ஒரு குறை மதிப்பு.ரேடியம் சிதைவுறும் வீதம் Qக்கு நேர்விகிதத்தில் உள்ளது.எனவே,\(\cfrac { dQ }{ dt } +kQ=0\) என்பது தேவையான வகைக்கெழுச் சமன்பாடாகும்.
(ii). மக்கள்தொகை அதிகரிக்கும் வீதம் t நேரத்தில் \(\frac { dp }{ dt } \) மற்றும் இதன் மாறுவீதம் மக்கள் தொகைக்கு நேர்விகிதத்தில் உள்ளதால் \(\frac { dp }{ dt } =kp.\) மேலும் 5,00,000க்கும் மக்கள் தொகைக்கும் உள்ள வேறுபாடு,மக்கள் தொகை ஆகியவற்றை பெருக்கக் கிடைக்கும் மதிப்பு ஆகியவற்றிக்கு நேர்விகிதத்தில் உள்ளதால் \(\frac { dp }{ dt } =kp\) (5,00,000-P )என்பது தேவையான வகைக்கெழுச் சமன்பாடாகும்.
(iii) ஆவி அழுத்தம் Pன் மாறுவீதம் t ஐப் பொறுத்து \(\frac { dp }{ dt } \) மற்றும் T ஐப் பொறுத்து ஆவி அழுத்தம் Pன் அதிகரிக்கும் வீதம் வெப்பநிலையின் வர்க்கத்திற்கு எதிர்விகிதத்தில் உள்ளதால்
\(\cfrac { dp }{ dt } =\cfrac { kp }{ { T }^{ 2 } } \) இங்கு \(\cfrac { k }{ { T }^{ 2 } } =\alpha \)
\(\cfrac { dp }{ dt } =\alpha p\Rightarrow \cfrac { dp }{ dt } -\alpha p=0\) என்பது தேவையான வகைக்கெழுச் சமன்பாடாகும்.
(iv) x என்பது முதலீட்டுத்தொகை என்க.தொகை ஒவ்வொரு வருடமும் மாறுவதால் அதன் மாறுவீதம் t நேரத்தில் \(\frac { dx }{ dt } \) மற்றும் ஒவ்வொரு வருடமும் மற்றொரு முதலீட்டிலிருந்து கிடைக்கும் வரவு ரூ.400 இத்தொகையுடன் தொடர்ச்சியாக சேர்க்கப்படுகிறது.
\(\therefore \cfrac { dx }{ dt } =\cfrac { 8 }{ 100 } \times x+400\)
\(\Rightarrow \cfrac { dx }{ dt } =\cfrac { 2x }{ 25 } +400\)
\(\Rightarrow \cfrac { dx }{ dt } -\cfrac { 2 }{ 25 } x-400=0\) என்பது தேவையான வகைக்கெழுச் சமன்பாடாகும்.
49.
கொடுக்கப்பட்ட வகைக்கெழுச் சமன்பாடு \(3{ \left( \frac { { d }^{ 2 }y }{ d{ x }^{ 2 } } \right) }={ \left[ 4+{ \left( \frac { { d }y }{ { d }x } \right) }^{ 2 } \right] }^{ \frac { 3 }{ 2 } }\)
இருபுறமும் வர்க்கம் காண, நாம் பெறுவது \(9{ { \left( \frac { { d }^{ 2 }y }{ d{ x }^{ 2 } } \right) }^{ 2 } }={ \left[ 4+{ \left( \frac { { d }y }{ { d }x } \right) }^{ 2 } \right] }^{ 3 }\)
இச்சமன்பாட்டில் உள்ள மிக உயர்ந்த வரிசையுடைய வகைக்கெழு \(\frac { { d }^{ 2 }y }{ d{ x }^{ 2 } } \) ஆகும். இதன் அடுக்கு 2 ஆகும்.
எனவே, கொடுக்கப்பட்ட வகைக்கெழுச் சமன்பாட்டின் வரிசை 2 மற்றும் படி 2 ஆகும்.
50.
∝, β என்பது சமன்பாட்டின் மூலங்கள் எனில்
மூலங்களின் பெருக்கற் பலன் \(=\alpha +\beta =\frac { -b }{ a } \)
\(=\frac { [-(a-2)] }{ 1 } =a-2\)
மூலங்களின் பெருக்கல் \(=\alpha \beta =\frac { c }{ a } \)
\(=\frac { -(a+1) }{ 1 } =(a+1)\)
நம்மிடம் ∝2β2 = -2∝β
= (a-2)2+2(a+1)
= a2 -4a+4+2a+2
= (a-1)2+5
ஆகையால் ∝2+β2 குறைந்த மதிப்புடைய எனில் a = 1
51.
sin-1 (-1) = y என்க. இங்கு \(\frac { -\pi }{ 2 } <y<\frac { \pi }{ 2 } \)
இனி sin-1 (-1) = y ⇒ sin y = -1
-1 = sin \(\left( \frac { -\pi }{ 2 } \right) \) ⇒ y = \(\frac { -\pi }{ 2 } \)
\(\left[ \because \frac { -\pi }{ 2 } \epsilon \left( \frac { -\pi }{ 2 } ,\frac { \pi }{ 2 } \right) \right] \)
முதன்மை மதிப்பு sin-1 (-1) = \(\frac { -\pi }{ 2 } \)
52.
தொகுப்பின், அணி வடிவம்
\(\left[ \begin{matrix} 3 & 1 & 9 \\ 3 & 2 & 12 \\ 2 & 1 & 7 \end{matrix} \right] \left[ \begin{matrix} x \\ y \\ z \end{matrix} \right] =\left[ \begin{matrix} 0 \\ 0 \\ 0 \end{matrix} \right] \)
AX=B இங்கு
\(A=\left[ \begin{matrix} 3 & 1 & 9 \\ 3 & 2 & 12 \\ 2 & 1 & 7 \end{matrix} \right] ,X=\left[ \begin{matrix} x \\ y \\ z \end{matrix} \right] ,=\left[ \begin{matrix} 0 \\ 0 \\ 0 \end{matrix} \right] \)
\(|A|=\left| \begin{matrix} 3 & 1 & 9 \\ 3 & 2 & 12 \\ 2 & 1 & 7 \end{matrix} \right| =3\left| \begin{matrix} 2 & 12 \\ 1 & 7 \end{matrix} \right| -1\begin{vmatrix} 3 & 12 \\ 2 & 7 \end{vmatrix}+9\left| \begin{matrix} 3 & 2 \\ 2 & 1 \end{matrix} \right| \)
=3(14-12)-1(21-24)+9(3-4)
=6+3-9=9-9=0
|A|=0 எனில், சமப்படித்தான சமன்பாடுகளின் தொகுப்பிற்கு வெளிப்படையற்ற தீர்வுகளும் உண்டு.
53.
2x − y = 8, 3x + 2y = −2
தொகையின் அணி வடிவம்
\(\left[ \begin{matrix} 2 & -1 \\ 3 & 2 \end{matrix} \right] \left[ \begin{matrix} x \\ y \end{matrix} \right] =\left[ \begin{matrix} 8 \\ -2 \end{matrix} \right] \\ \)
⇒ AX=B இங்கு A\(=\left[ \begin{matrix} 2 & -1 \\ 3 & 2 \end{matrix} \right] \)
\(B=\left[ \begin{matrix} 8 \\ -2 \end{matrix} \right] \)
\(\Rightarrow X={ A }^{ -1 }B.\)
இப்பொழுது \(|A|=\left[ \begin{matrix} 2 & -1 \\ 3 & 2 \end{matrix} \right] =4+3=7\)
\(\therefore { A }^{ -1 }=\frac { 1 }{ |A| } adj\quad A\)
\(=\frac { 1 }{ 7 } \left[ \begin{matrix} 2 & 1 \\ -3 & 2 \end{matrix} \right] \)
\(\therefore X={ A }^{ -1 }B=\frac { 1 }{ 7 } \left[ \begin{matrix} 2 & 1 \\ -3 & 2 \end{matrix} \right] \left[ \begin{matrix} 8 \\ -2 \end{matrix} \right] \)
\(=\frac { 1 }{ 7 } \left[ \begin{matrix} 16 & -2 \\ -24 & -4 \end{matrix} \right] \)
\(=\frac { 1 }{ 7 } \left[ \begin{matrix} 14 \\ -28 \end{matrix} \right] =\left[ \begin{matrix} \frac { 14 }{ 7 } \\ \frac { -28 }{ 7 } \end{matrix} \right] =\left[ \begin{matrix} 2 \\ -4 \end{matrix} \right] \)
\(\therefore x=2,\quad y=-4\)
எனவே, தீர்வுக் கணம்{2,-4}
54.
கொடுக்கப்பட்ட வட்டத்தின் மையம் (3, -2). இது x + y - 1 = 0 - ல் உள்ளது. எனவே x + y - 1 = 0 என்ற கோடு c-இன் எல்லா மதிப்பிற்கும் வட்டத்தின் மையம் வழிச்செல்லும் ஆதலால் x + y - 1 = 0 என்ற கோடு c-இன் எல்லா மதிப்பிற்கும் வட்டத்தின் விட்டமாக அமையும்.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards