12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 02/03/2021
12ஆம் வகுப்பு கணிதவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு ஐந்து மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Maths Reduced Syllabus Creative Five Mark Question with Answer key - 2021(Public Exam )
12ஆம் வகுப்பு Maths / கணிதவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
நம்மிடம் 12 அலகு பக்க அளவுடைய மெல்லிய சதுர தகடு உள்ளது மற்றும் வெளிப்புறத்தின் மூலைகளிலிருந்து சிறிய சதுரங்களை வெட்டி பக்கங்களை மடிப்பதன் மூலம் திறந்த பெட்டியை உருவாக்க விரும்புகிறோம். கேள்வி என்னவென்றால், எந்த வெட்டு அதிகபட்ச கன அளவை உருவாக்கும்?
2.
f(x) = x log x + 3x என்ற சார்பிற்கு ஓரியல்பு இடைவெளிகள் மற்றும் அதிலிருந்து இடஞ்சார்ந்த அறுதி மதிப்புகளைக் காண்க.
3.
\(\vec { a } =-2\hat { i } +3\hat { j } -2\hat { k } \), \(\vec { b } =3\hat { i } -\hat { j } +3\hat { k } \), \(\vec { c } =2\hat { i } -5\hat { j } +\hat { k } \) எனில், \(\left( \vec { a } \times \vec { b } \right) \times \vec { c } \) மற்றும் \(\vec { a } \times \left( \vec { b } \times \vec { c } \right) \) ஆகியவற்றைக் காண்க. மேலும், அவை சமமாகுமா எனக் காண்க.
4.
\(\left[ \begin{matrix} 3 & 1 & 4 \\ 2 & 0 & -1 \\ 5 & 2 & 1 \end{matrix} \right] \) என்பது பூச்சியமற்ற அணிக்கோவை அணி எனக்காட்டுக மற்றும் இவ்வணியை தொடக்க நிலை உருமாற்றங்கள் மூலம் அலகு அணியாக மாற்றுக.
5.
If F(\(\alpha\)) = \(\left[ \begin{matrix} \cos { \alpha } & 0 & \sin { \alpha } \\ 0 & 1 & 0 \\ -\sin { \alpha } & 0 & \cos { \alpha } \end{matrix} \right] \) எனில், [F(\(\alpha\))]-1 = F(-\(\alpha\)) எனக்காட்டுக.
6.
y = f(x) = x3 - 6x -9 என்ற வளைவரையை வரைக.
7.
y = f (x) = x2 - x - 2 - 6 என்ற வளைவரையை வரைக.
8.
9.
\(f(x)=\frac{x }{1+x^{2}}\) என்ற சார்பிற்கு ஓரியல்பு இடைவெளிகளைக் கணக்கிட்டு இதிலிருந்து இடஞ்சார்ந்த அறுதி மதிப்புகளைக் காண்க.
10.
(-5,7,-4) மற்றும் (13,-5,2) என்ற புள்ளிகள் வழியாகச் செல்லும் நேர்க்கோட்டின் துணையலகு வெக்டர் சமன்பாடு மற்றும் கார்டீசியன் சமன்பாடுகளைக் காண்க. மேலும், இந்த நேர்க்கோடு xy -தளத்தை வெட்டும் புள்ளியைக் காண்க.
11.
வெக்டர் முறையில் sin(α −β )=sinα cosβ −cosα sinβ என நிறுவுக.
12.
வழக்கமான குறியீடுகளுடன், முக்கோணம் ABC-ல் வெக்டர்களைப் பயன்படுத்தி
\(\frac { a }{ sinA } =\frac { b }{ sinB }=\frac { c }{ sinc }\) என நிறுவுக
13.
(2x−3)(6x−1)(3x−2)(x−2)−5=0 எனும் சமன்பாட்டைத் தீர்க்க:
14.
ஒரு அணு உலை குளிரூட்டும் தூணின் குறுக்கு வெட்டு அதிபரவளைய வடிவில் உள்ளது. மேலும் அதன் சமன்பாடு \(\frac { { x }^{ 2 } }{ { 30 }^{ 2 } } -\frac { { y }^{ 2 } }{ { 44 }^{ 2 } } =\)1. தூண் 150மீ உயரமுடையது. மேலும் அதிபரவளையத்தின் மையத்திலிருந்து தூணின் மேல்பகுதிக்கான தூரம் மையத்திலிருந்து அடிப்பகுதிக்கு உள்ள தூரத்தில் பாதியாக உள்ளது. தூணின் மேற்பகுதி மற்றும் அடிப்பகுதியின் விட்டங்களைக் காண்க.

15.
ஒரு நான்கு வழிச்சாலைக்கான மலை வழியே செல்லும் சுரங்கப்பாதையின் முகப்பு ஒரு நீள்வட்ட வடிவமாக உள்ளது. நெடுஞ்சாலையின் மொத்த அகலம் (முகப்பு அல்ல) 16மீ. சாலையின் விளிம்பில் சுரங்கப்பாதையின் உயரம், 4மீ உயரமுள்ள சரக்கு வாகனம் செல்வதற்குத் தேவையான அளவிற்கும் முகப்பின் அதிகபட்ச உயரம் 5மீ ஆகவும் இருக்க வேண்டுமெனில் சுரங்கப்பாதையின் திறப்பின் அகலம் என்னவாக இருக்க வேண்டும்?
16.
17.
1+2i மற்றும் \(\sqrt { 3 } \) ஆகியவை x6 − 3x5 − 5x4 + 22x3 − 39x2 − 39x +135 என்ற பல்லுறுப்புக் கோவையின் இரு பூச்சியமாக்கிகள் எனில் அனைத்து பூச்சியமாக்கிகளையும் கண்டறிக.
18.
சூரியனிலிருந்து பூமியின் அதிகபட்சம் மற்றும் குறைந்தபட்ச தூரங்கள் முறையே 152 × 106கி.மீ மற்றும் 94.5 × 106 கி.மீ. நீள்வட்டப் பாதையின் ஒரு குவியத்தில் சூரியன் உள்ளது. சூரியனுக்கும் மற்றொரு குவியத்திற்குமான தூரம் காண்க.
19.
2+i மற்றும் 3-\(\sqrt { 2 } \) ஆகியவை x6-13x5+62x4-126x3+65x2+127x-140=0 எனும் சமன்பாட்டின் மூலங்கள் எனில் அனைத்து மூலங்களையும் காண்க.
20.
(2,2,1), (9,3,6) ஆகிய புள்ளிகள் வழிச் செல்லக்கூடியதும் 2x+6y+6z=9 என்ற தளத்திற்குச் செங்குத்தாக அமைவதுமான தளத்தின் துணையலகு அல்லாத வெக்டர் சமன்பாடு மற்றும் கார்டீசியன் சமன்பாடுகளைக் காண்க.
21.
(2,3,6) என்ற புள்ளி வழிச் செல்வதும் \(\cfrac { x-1 }{ 2 } =\cfrac { y+1 }{ 3 } =\cfrac { z-3 }{ 1 } \)மற்றும் \(\cfrac { x+3 }{ 2 } =\cfrac { y-3 }{ -5 } =\cfrac { z+1 }{ -3 } \) என்ற கோடுகளுக்கு இணையானதுமான தளத்தின் துணையலகு அல்லாத வெக்டர் சமன்பாடு மற்றும் கார்டீசியன் சமன்பாடுகளைக் காண்க.
22.
காஸ்ஸீயன் நீக்கல் முறையைப் பயன்படுத்தி C2H6 + O2 ⟶ H2O + CO2 என்ற வேதியியல் எதிர்வினைச் சமன்பாட்டை சமநிலைப்படுத்துக.
23.
பாசன வாய்க்கால் மீது அமைந்த சாலையில் 20மீ அகலமுடைய இரண்டு அரைவட்ட வளைவு நீர்வழிகள் அமைக்கப்பட்டன. அவற்றின் துணைத்தூண்களின் அகலம் 2 மீ. படம் -ஐப் பயன்படுத்தி அந்த வளைவுகளின் மாதிரிக்கான சமன்பாடுகளைக் காண்க.

24.
பின்வரும் நேரியச் சமன்பாடுகளின் தொகுப்பானது ஒருங்கமைவு உடையதா என ஆராய்க. ஒருங்கமைவு உடையதாயின் அவற்றைத் தீர்க்க:
4x - 2y + 6z = 8, x + y - 3z = -1, 15x - 3y + 9z = 21
25.
ஒரு குடும்பத்திலுள்ள மூன்று நபர்கள் இரவு உணவு சாப்பிட ஓர் உணவகத்திற்குச் சென்றனர். இரு தோசைகள், மூன்று இட்லிகள் மற்றும் இரு வடைகளின் விலை ரூ.150. இரு தோசைகள், இரு இட்லிகள் மற்றும் நான்கு வடைகளின் விலை ரூ.200. ஐந்து தோசைகள், நான்கு இட்லிகள் மற்றும் இரண்டு வடைகளின் விலை ரூ.250. அக்குடும்பத்தினரிடம் ரூ.350 இருந்தது மற்றும் அவர்கள் மூன்று தோசைகள், ஆறு இட்லிகள் மற்றும் ஆறு வடைகள் சாப்பிட்டனர். அக்குடும்பத்தினர் சாப்பிட்ட செலவிற்கான தொகையை அவர்களிடமிருந்த பணத்தைக் கொண்டு செலுத்த முடியுமா? (உமது விடையை கிராமரின் விதிக்கொண்டு நிரூபி).
1.
x = வெட்டி எடுக்கப்படும் ஒவ்வொரு சிறிய சதுரங்களின் நீளம் என்க.
V = மடிப்பதன் மூலம் பெறப்படும் பெட்டியின் கன அளவு என்க.
நீளத்தின் இரு மூலைகளிலும் x நீளமுள்ள சதுரத்தை வெட்டிய பின் நீளம் 12 − 2x மடித்த பின்பு பெட்டியின் ஆழம் x. எனவே, கன அளவு V = x \(\times\) (12 - 2x)2 ஆகும். x = 0 அல்லது 6 -ல் கன அளவு பூச்சியமாவதைக் கவனிக்க. எனவே, x = 0 அல்லது 6 எனில் பெட்டி கிடைக்காது. எனவே, V = x \(\times\) (12 - 2x)2 , x∈(0, 6) -ஐ பெருமப்படுத்த வேண்டும்.
இப்பொழுது, \(\frac { dV }{ dx } ={ (12-2x) }^{ 2 }-4x(12-2x)\)
= (12 − 2x)(12 − 6x).
\(\frac { dV }{ dx } \)= 0 ⇒ x = 2,6 . 6∉(0,6) என்பதால் x = 2∈(0,6) என்பது மட்டுமே தேக்கநிலை எண். மேலும் \(\frac { dV }{ dx } \)-ன் குறி x = 2 -ஐ கடக்கும்போது மிகையிலிருந்து குறைக்கு மாறுகிறது. எனவே x = 2 -ல் V ஆனது இடஞ்சார்ந்த பெரும மதிப்பினை அடையும். இந்த இடஞ்சார்ந்த பெரும கன அளவு V =128 அலகுகள். எனவே பெரும கன அளவிற்கு 2 அலகுகள் வெட்ட வேண்டும்.
2.
கொடுக்கப்பட்ட சார்பு \(x \in(0, \infty)\) -ல் வரையறுக்கப்பட்டு வகையிடத்தக்கதாக உள்ளது.
f(x) = x log x + 3x.
எனவே , f'(x) = logx + 1 + 3 = 4 + logx.
தேக்கநிலை எண்களைக் காண 4 + log x = 0 -ஐ தீர்க்க
நமக்குக் கிடைப்பது x=e-4 ஆகும்.
ஆகவே, சார்பு f(x) -ன் ஓரியல்பு இடைவெளிகள் (0,e-4) மற்றும் \((e^{-4}, \infty)\) ஆகும்.
\(x=e^{-5}\in(0,e^{-4})\) -ல் f'(e-5) = -1 < 0 மேலும் இதிலிருந்து (0,e-4) -ல் f(x) திட்டமாக இறங்கும்.
\(x=e^{-3}\in(e^{-4},\infty)\) -ல் f'(e-3) = 1 > 0 மேலும் இதிலிருந்து \((e^{-4}, \infty)\)-ல் f(x) திட்டமாக ஏறும்.
f′(x) -ன் குறி x=e-4 -ஐ கடக்கும்போது குறையிலிருந்து மிகைக்கு மாறுவதால், முதலாம் வகைக்கெழு சோதனையின்படி x = e-4 -ல் இடஞ்சார்ந்த சிறும மதிப்பு f(e-4)=-e-4ஆகும்.
3.
வரையறைப்படி, \(\vec { a } \times \vec { b } =\left| \begin{matrix} \hat { i } & \hat { j } & \hat { k } \\ -2 & 3 & -2 \\ 3 & -1 & 3 \end{matrix} \right| =7\hat { i } -7\hat { k } \)
\(\left( \vec { a } \times \vec { b } \right) \times \vec { c } =\left| \begin{matrix} \hat { i } & \hat { j } & \hat { k } \\ 7 & 0 & -7 \\ 2 & -5 & 1 \end{matrix} \right| =-35\hat { i } -21\hat { j } -35\hat { k } \) ...(1)
\(\vec { b } \times \vec { c } =\left| \begin{matrix} \hat { i } & \hat { j } & \hat { k } \\ 3 & -1 & 3 \\ 2 & -5 & 1 \end{matrix} \right| =14\hat { i } +3\hat { j } -13\hat { k } \)
\(\vec { a } \times \left( \vec { b } \times \vec { c } \right) =\left| \begin{matrix} \hat { i } & \hat { j } & \hat { k } \\ -2 & 3 & -2 \\ 14 & 3 & -13 \end{matrix} \right| =-33\hat { i } -54\hat { j } -48\hat { k } \) ...(2)
எனவே,சமன்பாடுகள் (1) மற்றும் (2) ஆகியவற்றிலிருந்து \(\left( \vec { a } \times \vec { b } \right) \times \vec { c } \neq \vec { a } \times \left( \vec { b } \times \vec { c } \right) \) எனக் காண்கிறோம்.
4.
A =\(\left[ \begin{matrix} 3 & 1 & 4 \\ 2 & 0 & -1 \\ 5 & 2 & 1 \end{matrix} \right] \) என்க. |A| = 3(0+2)-1(2+5)+4(4-0) = 6-7+16 = 15 ≠ 0. எனவே, A ஆனது பூச்சியமற்ற அணிக்கோவை அணியாகும்.
\(\left[ \begin{matrix} 3 & 1 & 4 \\ 2 & 0 & -1 \\ 5 & 2 & 1 \end{matrix} \right] \overset { { R }_{ 1 }\rightarrow \frac { 1 }{ 3 } { R }_{ 1 } }{ \longrightarrow } \left[ \begin{matrix} 1 & \frac { 1 }{ 3 } & \frac { 4 }{ 3 } \\ 2 & 0 & -1 \\ 5 & 2 & 1 \end{matrix} \right] \overset { { R }_{ 2 }\rightarrow { R }_{ 2 }-2{ R }_{ 1 },{ R }_{ 3 }\rightarrow { R }_{ 3 }-5{ R }_{ 1 } }{ \longrightarrow } \left[ \begin{matrix} 1 & \frac { 1 }{ 3 } & \frac { 4 }{ 3 } \\ 0 & -\frac { 2 }{ 3 } & -\frac { 11 }{ 3 } \\ 0 & \frac { 1 }{ 3 } & -\frac { 17 }{ 3 } \end{matrix} \right] \overset { { R }_{ 2 }\rightarrow \left( -\frac { 3 }{ 2 } \right) { R }_{ 2 } }{ \longrightarrow } \left[ \begin{matrix} 1 & \frac { 1 }{ 3 } & \frac { 4 }{ 3 } \\ 0 & 1 & \frac { 11 }{ 2 } \\ 0 & \frac { 1 }{ 3 } & -\frac { 17 }{ 3 } \end{matrix} \right] \\ \overset { { R }_{ 1 }\rightarrow { R }_{ 1 }-\frac { 1 }{ 3 } { R }_{ 2 },{ R }_{ 3 }\rightarrow \frac { 1 }{ 3 } { R }_{ 2 } }{ \longrightarrow } \left[ \begin{matrix} 1 & 0 & -\frac { 1 }{ 2 } \\ 0 & 1 & \frac { 11 }{ 2 } \\ 0 & 0 & -\frac { 15 }{ 2 } \end{matrix} \right] \overset { { R }_{ 3 }\rightarrow \left( -\frac { 2 }{ 15 } \right) { R }_{ 3 } }{ \longrightarrow } \left[ \begin{matrix} 1 & 0 & -\frac { 1 }{ 2 } \\ 0 & 1 & \frac { 11 }{ 2 } \\ 0 & 0 & 1 \end{matrix} \right] \\ \overset { { R }_{ 1 }\rightarrow { R }_{ 1 }+\frac { 1 }{ 2 } { R }_{ 3 },{ R }_{ 2 }\rightarrow- \frac { 11 }{ 2 } { R }_{ 3 } }{ \longrightarrow } \left[ \begin{matrix} 1 & 0 & 0 \\ 0 & 1 & 0 \\ 0 & 0 & 1 \end{matrix} \right] \)
5.
F (\(\alpha\)) = \(\left[ \begin{matrix} \cos { \alpha } & 0 & \sin { \alpha } \\ 0 & 1 & 0 \\ -\sin { \alpha } & 0 & \cos { \alpha } \end{matrix} \right] \) தரப்பட்டது.
R1 மூலம் விரிவுபடுத்த கிடைப்பது,
|F(\(\alpha\))| = cos \(\alpha\) \(\left| \begin{matrix} 1 & 0 \\ 0 & cos\alpha \end{matrix} \right| -0+sin\alpha \left| \begin{matrix} 0 & 1 \\ -sin\alpha & 0 \end{matrix} \right| \)
|F(\(\alpha\))| = cos \(\alpha\) (cos - 0) + sin \(\alpha\) (0 + sin \(\alpha\))
= cos2 + sin2 \(\alpha\) = 1 ≠ 0
F (\(\alpha\)) ஒரு பூச்சியமற்றக் கோவை அணி ஆதலால், [F(\(\alpha\))]-1 காணலாம்.
இங்கு, adj (F(\(\alpha\))) = \(\left[ \begin{matrix} +\left| \begin{matrix} 1 & 0 \\ 0 & cos \space \alpha \end{matrix} \right| & -\left| \begin{matrix} 0 & 0 \\ -sin \space \alpha & cos \space \alpha \end{matrix} \right| & +\left| \begin{matrix} 0 & 1 \\ -sin \space \alpha & 0 \end{matrix} \right| \\ -\left| \begin{matrix} 0 & sin \space \alpha \\ 0 & cos \space \alpha \end{matrix} \right| & +\left| \begin{matrix} cos \space \alpha & sin \space \alpha \\ -sin \space \alpha & cos \space \alpha \end{matrix} \right| & -\left| \begin{matrix} cos \space \alpha & 0 \\ -sin \space \alpha & 0 \end{matrix} \right| \\ +\left| \begin{matrix} 0 & sin \space \alpha \\ 1 & 0 \end{matrix} \right| & -\left| \begin{matrix} cos \space \alpha & sin \space \alpha \\ 0 & 0 \end{matrix} \right| & +\left| \begin{matrix} cos \space \alpha & 0 \\ 0 & 1 \end{matrix} \right| \end{matrix} \right] ^{ T }\)
= \(\left[ \begin{matrix} +(cos\alpha -0) & -(0-0) & +(0+sin \space \alpha ) \\ -(0-0) & +(cos^{ 2 }\alpha +sin^{ 2 }\alpha & -(0-0) \\ +(0-sin \space \alpha ) & -(0-0) & +(cos \space \alpha-0) \end{matrix} \right] ^{ T }\)
\(\left[ \begin{matrix} cos \space \alpha & 0 & +sin\space \alpha \\ 0 & 1 & 0 \\ -sin \space \alpha & 0 & cos \space \alpha \end{matrix} \right] =\left[ \begin{matrix} cos \space \alpha & 0 & -sin \space \alpha \\ 0 & 1 & 0 \\ +sin \space \alpha & 0 & cos \space \alpha \end{matrix} \right] \)
∴ F(\(\alpha\))-1 = \(\frac { 1 }{ |F(\alpha )| } \) adj (F(\(\alpha\)))
[F(\(\alpha\))]-1 = \(\frac { 1 }{ 1 } \left[ \begin{matrix} cos \space \alpha & 0 & -sin \space \alpha \\ 0 & 1 & 0 \\ +sin \space \alpha & 0 & cos \space \alpha \end{matrix} \right] \)
= \(\left[ \begin{matrix} cos \space \alpha & 0 & -sin \space \alpha \\ 0 & 1 & 0 \\ +sin \space \alpha & 0 & cos \space \alpha \end{matrix} \right] \) ....(1)
இங்கு, F(-\(\alpha\)) = \(\left[ \begin{matrix} cos(-\alpha ) & 0 & sin(-\alpha ) \\ 0 & 1 & 0 \\ -sin(-\alpha ) & 0 & cos(-\alpha ) \end{matrix} \right] \)
= \(\left[ \begin{matrix} cos \space \alpha & 0 & -sin \space \alpha \\ 0 & 1 & 0 \\ sin \space \alpha & 0 & cos \space \alpha \end{matrix} \right] \) ....(2)
[∵ cos \(\alpha\) ஒரு இரட்டைச் சார்பு, cos (-\(\alpha\)) = cos \(\alpha\) மற்றும் sin \(\alpha\) ஒரு ஒற்றைச் சார்பு, sin (-\(\alpha\)) = -sin \(\alpha\)]
(1) மற்றும் (2) லிருந்து [F(\(\alpha\))]-1 = F (-\(\alpha\)) எனவே நிரூபிக்கப்பட்டது.
6.
கொடுக்கப்பட்ட சார்பை காரணிப்படுத்த, y = f (x) = (x - 3)(x2 + 3x + 3) ஆகும்.

(1) சார்பு f (x)-ன் சார்பகம் மற்றும் வீச்சகங்கள் முழு மெய் எண் நேர்க்கோடாகும்.
(2) y = 0 எனப் பிரதியிட x = 3. மற்ற இரண்டு மூலங்களும் கற்பனை. எனவே, x -வெட்டுத்துண்டு (3,0) ஆகும். x = 0 எனப்பிரதியிட y =-9 ஆகும். எனவே y-ன் வெட்டுத்துண்டு (0,−9) ஆகும்.
(3) f'(x) = 3(x2 - 2) மேலும் இதிலிருந்து நிலை எண்கள் x =\(\pm \sqrt { 2 } \) ஆகும்.
(4) f''(x) = 6x . மேலும் x = \(\sqrt { 2 } \) -ல் f''( \(\sqrt { 2 } \)) = 6\(\sqrt { 2 } \) >0. எனவே x =- \(\sqrt { 2 } \) -ல் வளைவரை இடஞ்சார்ந்த சிறும மதிப்பு f(\(\sqrt { 2 } \)) =-4\(\sqrt { 2 } \) -9 அடையும். இதுபோலவே x=-\(\sqrt { 2 } \) -ல் f''(-\(\sqrt { 2 } \)) = -6\(\sqrt { 2 } \) <0. எனவே x = -\(\sqrt { 2 } \) -ல் வளைவரை இடஞ்சார்ந்த பெரும மதிப்பு f (-\(\sqrt { 2 } \) )= 4\(\sqrt { 2 } \) -9-ஐ அடையும்.
(5) f'(x) = 6x > 0,∀x >0 என்பதால் வளைவரையானது மிகை மெய் எண் நேர்க்கோட்டில் மேல் நோக்கி குழிவானது f'(x) = 6x<0,∀x<0 என்பதால் வளைவரையானது கீழ்நோக்கி குழிவானது.
(6) x = 0 -வில் f''(x) = 0 மற்றும் f ′′(x) -ன் குறி x = 0 -ஐ கடக்கும்போது மாறுகிறது. எனவே வளைவு மாற்றப் புள்ளி (0, f (0)) = (0, −9).
(7) இவ்வளைவரைக்கு தொலைத் தொடுகோடுகள் இல்லை, இவ்வளைவரையின் தோராய வரைபடம் வலதுபக்கம் காட்டப்பட்டுள்ளது.
7.
கொடுக்கப்பட்ட சார்பை காரணிப்படுத்த நமக்குக் கிடைப்பது y = f (x) = (x - 3)(x + 2) .

(1) சார்பு f (x) -ன் சார்பகம் முழு மெய் எண் கோடாகும்.
(2) y = 0 எனப் பிரதியிட, x =-2,3 எனப் பெறலாம். எனவே, x -வெட்டுத்துண்டுகள் (−2,0) மற்றும் (3,0) . x = 0 எனப் பிரதியிட y =-6 எனப் பெறலாம். எனவே, y -வெட்டுத்துண்டு (0,−6).
(3) f '(x) = 2x -1 மேலும் இதிலிருந்து x=\(\frac { 1 }{ 2 } \) -ல் வளைவரையின் நிலைப்புள்ளி அமையும்.
(4) f''(x) = 2 > 0,∀x . எனவே, x =\(\frac { 1 }{ 2 } \) -ல் வளைவரை இடஞ்சார்ந்த சிறும மதிப்பை அடையும். இதன் மதிப்பு f\(\left( \frac { 1 }{ 2 } \right) =-\frac { 25 }{ 4 } \)
(5) சார்பின் வீச்சகம் y \(\ge -\frac { 25 }{ 4 } \)
(6) f''(x) = 2 > 0,∀x என்பதால் இந்த சார்பு மெய் எண் நேர்க்கோடு முழுமையிலும் மேல்நோக்கி குழிவு ஆகும்.
(7) f (x) = 2 ≠ 0,∀x எனவே வளைவரைக்கு வளைவு மாற்றப் புள்ளிகள் இல்லை.
(8) வளைவரைக்கு தொலைத் தொடுகோடுகள் இல்லை. இவ்வளைவரையின் தோராய வரைபடம் வலது பக்கம் காட்டப்பட்டுள்ளது.
8.
9.
கொடுக்கப்பட்ட சார்பு \(x\in (-\infty, \infty) \) -ல் வரையறுக்கப்பட்டு வகையிடத்தக்கதாக உள்ளது.
\(f(x)=\frac{x }{1+x^{2}}\)
\(f'(x)=\frac{1-x^{2} }{(1+x^{2})^{2}}\)
தேக்கநிலை எண்களைக் காண 1-x2=0 -ஐ தீர்க்க \(x=\pm1\) என நமக்கு கிடைக்கிறது. ஆகவே ஓரியல்பு இடைவெளிகள் \((-\infty, -1) , (-1,1)\) மற்றும் \((1,\infty)\) ஆகும்.
| இடைவெளி | \((-\infty,-1)\) | (-1,1) | \((1,\infty)\) |
| f'(x)-ன் குறி | - | + | - |
| ஓரியல்புத் தன்மை | திட்டமாக இறங்கும் | திட்டமாக ஏறும் | திட்டமாக இறங்கும் |
எனவே , \((-\infty,-1)\) மற்றும் \((1,\infty)\) இடைவெளிகளில் f(x) திட்டமாக இறங்கும், (-1,1) என்ற இடைவெளியில் f(x)திட்டமாக ஏறும்.
f ′(x) -ன் குறி x=-1-ஐ கடக்கும் போது குறையிலிருந்து மிகைக்கு மாறுவதால் , முதலாம் வகைக்கெழு சோதனையின்படி x=-1-ல் இடஞ்சார்ந்த சிறுமத்தை அடையும். இந்த இடஞ்சார்ந்த சிறும மதிப்பு \(f(-1)=-\frac{1}{2}\) ஆகும். இதுபோலவே , f′(x) -ன் குறி x =1-ஐ கடக்கும் போது மிகையிலிருந்து குறைக்கு மாறுவதால், முதலாம் வகைக்கெழு சோதனையின்படி x =1-ல் இடஞ்சார்ந்த பெரும மதிப்பு \(f(x)=\frac{1}{2}\) ஆகும்.
10.
தேவையான நேர்க்கோடு (-5, 7, -4) மற்றும் (13, -5, 2) என்ற புள்ளிகள் வழியாகச் செல்கிறது. எனவே, இப்புள்ளிகளை இணைக்கும் கோட்டின் திசை விகிதங்கள் 18, -12, 6 ஆகும். அதாவது 3, -2, 1 ஆகும்.
ஆதலால், தேவையான நேர்க்கோடு \(3\hat { i } -2\hat { j } +\hat { k } \) என்ற வெக்டருக்கு இணையாக இருக்கும். எனவே,
தேவையான நேர்க்கோட்டின் துணையலகு வடிவ வெக்டர் சமன்பாடு
\(\vec { r } =(-5\hat { i } +7\hat { j } -4\hat { k } )+t(3\hat { i } -2\hat { j } +\hat { k } )\)அல்லது \(\vec { r } =(13\hat { i } -5\hat { j } +2\hat { k } )+s(3\hat { i } -2\hat { j } +\hat { k } )\) இங்கு s,t \(\in R\) ஆகும்.
தேவையான கோட்டின் கார்டீசியன் சமன்பாடுகள் \(\frac { x+5 }{ 3 } =\frac { y-7 }{ -2 } =\frac { z+4 }{ 1 } \) அல்லது \(\frac { x-13 }{ 3 } =\frac { y+5 }{ -2 } =\frac { z-2 }{ 1 } \) ஆகும்.
இந்நேர்க்கோட்டில் உள்ள ஏதேனும் ஒரு புள்ளியின் அமைப்பு
(3t-5, -2t+7, t-4) அல்லது (3s+13, -2s-5, s+2)
நேர்க்கோடு xy-தளத்தை சந்திப்பதால், வெட்டும் புள்ளியின் z -அச்சுத் தொலைவு பூச்சியமாகும். எனவே, t−4 = 0, அதாவது, t = 4 ஆகும். ஆகையால், நேர்க்கோடு xy-தளத்தை வெட்டும் புள்ளி (7, -1, 0) ஆகும்.
11.

x -அச்சின் மிகை திசையுடன் \(\hat { a } =\vec { OA } \), \(\hat { b } =\vec { OB } \) என்ற அலகு வெக்டர்கள் முறையே α, β என்ற கோணங்களை ஏற்படுத்துகிறது என்க. இங்கு A, B என்பன படம் -ல் காட்டப்பட்டுள்ளன. ஆகவே \(\hat { a } =cos\alpha \hat { i } +sin\alpha \hat { j } \) மற்றும் \(\hat { b } =cos\beta \hat { i } +sin\beta \hat { j } \).
\(\hat { a } ,\hat { b } \) வெக்டர்களுக்கு இடைப்பட்டக் கோணம் \(\alpha -\beta \) மற்றும் \(\hat { b } ,\hat { a } ,\hat { k } \) என்ற வெக்டர்கள் வலக்கை முறையில் அமைந்துள்ளதால்,
\(\hat { b } \times \hat { a } =\left| \hat { b } \right| \left| \hat { a } \right| \)sin(α −β )\(\hat {k}\)=sin(α −β)\(\hat {k}\)
மாறாக
\(\hat { b } \times \hat { a } =\left| \begin{matrix} \hat { i } & \hat { j } & \hat { k } \\ cos\beta & sin\beta & 0 \\ cos\alpha & sin\alpha & 0 \end{matrix} \right| \) = (sin α cos β -cos α sin β)\(\hat { k } \)
ஆகவே, சமன்பாடுகள் (1) மற்றும் (2)-லிருந்து
sin(α −β) = sin α cos β − cos α sin β
12.

வழக்கமான குறியீடுகளுடன், முக்கோணம் ABC-ல் \(\vec { BC } =\vec { a } \), \(\vec { CA } =\vec { b } \), மற்றும் \(\vec { AB } =\vec { c} \) என்க.
\(|\vec { BC } |=|\vec { a } |\), \(|\vec { CA } |=|\vec { b } |\) மற்றும் \(|\vec { AB }| =|\vec { c } |\) என்க.
எனவே, ΔABC, \(\vec { BC }+\vec { CA }+\vec { AB}=0\) என்பதால் \(\vec { BC }\times(\vec { BC }+\vec { CA }+\vec { AB })=\vec { 0 }\)
\(\vec { BC }\times\vec { CA }=\vec { AB }\times\vec { BC }\).....(1)
இதேபோல் \(\vec { BC }+\vec { CA }+\vec { AB}=0\) என்பதால்,
\(\vec { CA } \times (\vec { BC } +\vec { CA } +\vec { AB } )=\vec { 0 } \)
\(\vec { BC }\times\vec { CA }=\vec {CA }\times\vec {AB }\)
சமன்பாடுகள் (1) மற்றும் (2)-லிருந்து
\(\vec { AB }\times\vec {BC }\) = \(\vec { CA }\times\vec {AB }\) = \(\vec { BC}\times\vec {CA}\)
ஆகவே, \(\left| \overrightarrow { AB} \times \overrightarrow { BC } \right| =\left| \overrightarrow { CA } \times \overrightarrow { AB } \right| =\left| \overrightarrow { BC } \times \overrightarrow { CA } \right| \)
ca sin(π − B) = bc sin(π - A) = ab sin (π - C)
அதாவது, ca sin B = bc sin A = ab sin C. இதனை abc-ஆல் வகுத்தால்,
\(\frac { sinA }{ A } =\frac { sinB }{ b } =\frac { sinC }{ c } \) or \(\frac { a }{ sinA }= \frac { b }{ sinB } =\frac { c }{ sinC } \) எனக் கிடைக்கிறது.
13.
கொடுக்கப்பட்ட சமன்பாட்டை மாற்றியமைக்க,
(2x−3)(3x−2)(6x−1)(x−2)−5=0
சோடிகளாகப் பெருக்க,
(6x2 −13x+6) (6x2 −13x+2)−5 = 0 .
இதில் y=6x2-13x எனப் பிரதியிட, சமன்பாடு
( y+6) ( y+2)−5 = 0
என மாறுகிறது. அதாவது,
y2 + 8y + 7 = 0 .
இச்சமன்பாட்டைத் தீர்க்க,y=−1 மற்றும் y=−7 எனக் கிடைக்கிறது.
y=6x2-13x-ல் y-ன் மதிப்புகளை பிரதியிட,
6x2 −13x+1 = 0
6x2 −13x+7 = 0
எனப் பெறுகிறோம். இவ்விரு சமன்பாட்டுகளையும் தீர்க்க.
\(x = 1 ,x=\frac { 7 }{ 6} ,x=\frac { 13+\sqrt { 145 } }{ 12 } \) மற்றும் x=\(\frac { 13-\sqrt { 145 } }{ 12 } \)
என சமன்பாட்டின் மூலங்களைப் பெறுகிறோம்.
14.
அணு உலை குளிரூட்டும் தூணின் குறுக்கு வெட்டு அதிபரவளைய வடிவில் உள்ளது.

கொடுக்கப்பட்ட \(OC=\cfrac { 1 }{ 2 } OD\) மற்றும் CD = 150மீ அதனுடைய சமன்பாடு OC = 50மீ மற்றும் OD = 100 மீ \(\cfrac { { x }^{ 2 } }{ { 30 }^{ 2 } } -\cfrac { { y }^{ 2 } }{ { 44 }^{ 2 } } =1\)
OC = 50 மீ மற்றும் OD = 100 மீ அணு உலையின் மேற்புற ஆரம் x1 எனவும், கீழ்புற ஆரம் x2 எனவும் கொள்க.
ஃபுள்ளிகள் A(x1, 50) மற்றும் B(x₂, -100) அதிபரவளையம் A(x1, 50) புள்ளி வழிச் செல்கிறது.
\( \therefore \frac{x_1^2}{30^2}-\frac{50^2}{44^2} =1+\frac{2500}{1936}=\frac{1936+2500}{1936} \\ x_1^2 =\frac{30^2}{44^2}(4436) \\ \Rightarrow x_1 =\frac{30}{44} \times \sqrt{4436}
\)
\(\\ \Rightarrow x_1 =\frac{30}{44} \times(66.6)=45.41 \ \)மீ
மேற்புற ஆரம் = 45.41 மீ
மேற்புற விட்டம் = 90.82 மீ
மேலும், அதிபரவளையம் B(x2, -100) வழிச் செல்கிறது.
\( \frac{x_2^2}{30^2}-\frac{100^2}{44^2} =1 \\ \frac{x_2^2}{30^2} =1+\frac{100^2}{44^2}=\frac{44^2+100^2}{44^2} \\ x_2^2 =\frac{30^2}{44^2}(11936) \\ x_2 =\frac{30}{44} \times \sqrt{11936} \\ =\frac{30}{44}(109.25)=74.48 \)
கீழ்ப்புற ஆரம் = 74.48 மீ
கீழ்ப்புற விட்டம் = 148.96 மீ
ஃ தூணின் மேற்பகுதி மற்றும் அடிப்பகுதியின் விட்டங்கள் முறையே 90.82 மீ மற்றும் 148.96 மீ.
15.
சுரங்க பாதையின் குறுக்கு வெட்டு நீள்வட்ட வடிவில் உள்ளது என்க.

கொடுக்கப்பட்ட AA' = 16மீ \(\Rightarrow\) OA = 8 மீ மற்றும் OB = 5மீ
\(\therefore\) \(\cfrac { { x }^{ 2 } }{ { 5 }^{ 2 } } +\cfrac { { y }^{ 2 } }{ { 8 }^{ 2 } } =1\)
சாலையின் அகலம் BB' மற்றும் AA' சுரங்கப் பாதை திறப்பின் முனைகள் என்க.
CB = 8 மற்றும் BD = 4
D(8, 4) என்ற புள்ளி நீள்வட்டத்தில் உள்ளது.
\( \frac{8^2}{a^2}+\frac{4^2}{5^2} =1 \\ \Rightarrow a^2 =\frac{25}{9} \times 64 \\ \Rightarrow a =\frac{40}{3} \)
\( \mathrm{AA}^{\prime} =2 a=\frac{80}{3} \\ =26.66 \)
சுரங்கப்பாதையின் திறப்பின் அகலம் = 26.66 மீ
16.

17.
f(x) = x6 − 3x5 − 5x4 + 22x3 − 39x2 − 39x +135 என்க.
கொடுக்கப்பட்ட (1+2i) ஒரு மூலம் (1-2i) யும் ஒரு மூலம்.
மேலும், \(\sqrt { 3 } \) ஒரு மூலம் ⇒ -\(\sqrt { 3 } \) ஒரு மூலம்
எனவே f(x)-ன் காரணிகள் [x-(1+2i)]
[x-(1-2i)][x-\(\sqrt { 3 } \)][x+\(\sqrt { 3 } \)]
[(x-1)2i][(x-1)+2i][x-\(\sqrt { 3 } \)][x+\(\sqrt { 3 } \)]
((x-1)2+22)(x2-3) =(x2-2x+1+4)(x2-3)
⇒ f(x) -ன் காரணிகள் (x2-2x+5)(x2-3)
⇒ x4-3x2-2x3+6x+5x2-15
⇒ (x4-2x3+2x2+6x-15), f(x)-ன் காரணி
மற்ற காரணியை காண f(x) ஐ x4-2x3+2x2+6x-15 ஆல் வகுக்க
மற்ற காரணியானது x2-x-9
⇒ x=\(\frac { 1\pm \sqrt { (-1)^{ 2 }-4(1)(-9) } }{ 2 } \)
\(\left[ \because x=\frac { -b\pm \sqrt { { b }^{ 2 }-4ac } }{ 2a } \right] \)
⇒ x=\(\frac { 1\pm \sqrt { 37 } }{ 2 } \)
எனவே மற்ற மூலங்கள்
1+2i, 1-2i, \(\sqrt { 3 } \), -\(\sqrt { 3 } \), \(\frac { 1+\sqrt { 37 } }{ 2 } ,\frac { 1-\sqrt { 37 } }{ 2 } \).
18.

AS = 94.5 × 106 கி.மீ, SA' = 152 × 106 கி.மீ
a+c = 152 × 106
a-c = 94.5 × 106
கழிக்க 2c = 57.5 × 106 = 575 × 105 கி.மீ
மற்றொரு குவியத்திலிருந்து சூரியனுக்கு உள்ள தூரம் SS' = 575 × 105 கி.மீ.
19.
சமன்பாட்டின் கெழுக்கள் அனைத்தும் விகிதமுறு எண்கள் என்பதாலும் 2+i மற்றும் 3-\(\sqrt { 2 } \) ஆகியவை மூலங்கள் என்பதாலும் கொடுக்கப்பட்ட பல்லுறுப்புக்கோவைச் சமன்பாட்டிற்கு 2-i மற்றும் 3+\(\sqrt { 2 } \) ஆகியவையும் மூலங்களாக அமையும். எனவே (x − (2 + i)) (x − (2 − i)) (x − (3− \(\sqrt { 2 } \))) மற்றும் (x − (3 + \(\sqrt { 2 } \))) ஆகியவையும் காரணிகளாகும். ஆகையால் இவற்றின் பெருக்கல்
((x − (2 + i)) (x − (2 − i)) (x − (3− \(\sqrt { 2 } \))) (x − (3 + \(\sqrt { 2 } \))) என்பதும் கொடுக்கப்பட்ட பல்லுறுப்புக்கோவை சமன்பாட்டிற்கு ஒரு காரணியாகும். அதாவது (x2-4x+5)(x2-6x+7)
என்பது ஒரு காரணி. கொடுக்கப்பட்ட பல்லுறுப்புக்கோவைச் சமன்பாட்டை இக்காரணியால் வகுக்க, மற்றொரு காரணியாக (x2-3x-4) பெறப்படுகிறது. இதிலிருந்து 4 மற்றும் −1ஆகியவை மற்ற இரு மூலங்களாகும். எனவே 2+i, 2-i, 3+\(\sqrt { 2 } \), 3-\(\sqrt { 2 } \), -1, மற்றும் 4 ஆகியவை கொடுக்கப்பட்ட பல்லுறுப்புக்கோவைச் சமன்பாட்டின் மூலங்களாகும்.
20.
கொடுக்கப்பட்ட தளம் புள்ளிகள் \(\vec { a } =2\hat { i } +\hat { 2j } +\hat { k } \) மற்றும் \(\vec { b } =9\hat { i } +3\hat { j } +6\hat { k } \) வழிச் செல்கிறது.
கொடுக்கப்பட்ட தளத்தின் சமன்பாடு \(2x+6y+6z=9\)
இதை இவ்வாறு எழுதலாம் \(\vec { r } .\left( 2\hat { i } +6\hat { j } +6\hat { k } \right) =9\)
கொடுக்கப்பட்ட தளம் \(2\hat { i } +6\hat { j } +6\hat { k } \)க்கு செங்குத்து ஆதலால், தேவையான தளம் \(\vec { c } =2\hat { i } +6\hat { j } +6\hat { k } \)க்கு இணை ஆகையால் இரண்டு புள்ளி வழிச் செல்லும் மற்றும் வெக்டருக்கு இணையான தளத்தின் வெக்டர் சமன்பாட்டின் துணையலகு வடிவம் \(\vec { r } =\vec { a } +s\left( \vec { b } -\vec { a } \right) +t\vec { c } ,s,t\in R\)
\(\vec { r } =2\hat { i } +2\hat { j } +\hat { k } +s\left( 7\hat { i } +\hat { j } +5\hat { k } \right) +t\left( 2\hat { i } +6\hat { j } +6\hat { k } \right) ,s,t\in R\)
தளத்தின் கார்டீசியன் சமன்பாடு
\(\left| \begin{matrix} x-{ x }_{ 1 } & y-{ y }_{ 1 } & z-{ z }_{ 1 } \\ { x }_{ 2 }-{ x }_{ 1 } & { y }_{ 2 }-{ y }_{ 1 } & { z }_{ 2 }-{ z }_{ 1 } \\ { c }_{ 1 } & { { c }_{ 2 } } & { c }_{ 3 } \end{matrix} \right| =0\)
\(\Rightarrow \left| \begin{matrix} x-2 & y-2 & z-1 \\ 7 & 1 & 5 \\ 2 & 6 & 6 \end{matrix} \right| =0\)
\(\Rightarrow \left( x-2 \right) (6-30)-(y-2)(42-10)+(z-1)(42-2)=0\)
\(\Rightarrow (x-2)(-24)-(y-2)(32)+(z-1)(40)=0\)
\(\Rightarrow -24x+48-32y+64+40z-40=0\)
\(\Rightarrow -24x-32y+40z+72=0\)
\(\div -8\) கிடைப்பது
3x + 4y - 5z - 9 = 0 என்பது கார்டீசியன் வடிவம்.
\(\therefore\) வெக்டர் சமன்பாட்டின் துணையலகு வடிவம்
\(\vec { r } =\vec { r } .\left( 3\vec { i } +4\hat { j } -5\vec { k } \right) =9\)
21.
தளமானது \(\vec { a } =2\hat { i } +3\hat { j } +6\hat { k } \)
புள்ளி வழிச் செல்கிறது மற்றும் கோடுகள் \(\cfrac { x-1 }{ 2 } =\cfrac { y+1 }{ 3 } =\cfrac { z-3 }{ 1 } \)
மற்றும் \(\cfrac { x+3 }{ 2 } \) = \(\cfrac { y-3 }{ -5 } =\cfrac { z+1 }{ -3 } \)
\(\Rightarrow \vec { b } =2\hat { i } +3\hat { j } +\hat { k } \) மற்றும் \(\vec { c } =2\hat { i } -5\hat { j } -3\hat { k } \)
\(\vec { b } \times \vec { c } =\left| \begin{matrix} \hat { i } & \hat { j } & \hat { k } \\ 2 & 3 & 1 \\ 2 & -5 & -3 \end{matrix} \right| \)
= \(\hat { i } \left( -9+5 \right) -\hat { j } \left( -6-2 \right) +\hat { k } \left( 10-6 \right) \)
= \(-4\hat { i } +8\hat { j } -16\hat { k } \)
தளத்தின் துணையலகு இல்லாத வெக்டர் சமன்பாடு
\(\left( \vec { r } .\vec { a } \right) .\left( \vec { b } \times \vec { c } \right) =0\)
\(\left( \vec { r } -2\hat { i } +3\hat { j } +16\hat { k } \right) .\left( -4\hat { i } +8\hat { j } -16\hat { k } \right) =0\)
\(\Rightarrow \left[ \vec { r } (-4\hat { \quad i } +8\hat { j } -16\hat { k } ) \right] -(-4\hat { i } +8\hat { j } -16\hat { k } )]=0\)
\(\Rightarrow \left[ \vec { r } (-4\hat { \quad i } +8\hat { j } -16\hat { k } ) \right] -\left( -8+24-96 \right) =0\)
\(\Rightarrow \vec { r } .\left( -4\hat { i } +8\hat { j } -16\hat { k } \right) =-80\)
\(\div -4\) , கிடைப்பது
\(\vec { r } .\left( \hat { i } -2\hat { j } +4\hat { k } \right) =20\)
\(\vec { r } =x\hat { i } +y\hat { j } +z\hat { k } \) என்க.
\(\Rightarrow \left( x\hat { i } +y\hat { j } +z\hat { k } \right) .\left( \hat { i } -2\hat { j } +4\hat { k } \right) =20\)
\(\Rightarrow x-2y+4z=20\Rightarrow x-2y+4z-20=0\)
22.
கொடுக்கப்பட்ட C2 H6 + O2 ➝ H2O + CO2
நாம் மிகை எண்கள் x1, x2, x3 மற்றும் x4 இவ்வாறு காண வேண்டும்.
x1 C2 H6 + x2 O2 ➝ x3 H2O + x4 CO2 ... (1)
(1) ல் இடது பக்கத்தில் உள்ள கார்பன் அணுக்களின் எண்ணிக்கை வலது பக்கத்தில் உள்ள கார்பன் அணுக்களின் எண்ணிக்கைக்கு சமமாக இருக்க வேண்டும்.
∴ 2x1 = 1x4
⇒ 2x1 - x4 = 0 ...(2)
ஹைட்ரஜன் அணுக்களால் கிடைப்பது,
6x1 = 2x3
⇒6x1 - 2x3 = 0
⇒ 3x1 - x3 = 0 ...(3)
மேலும், ஆக்ஸிஜன் அணுக்களால் கிடைப்பது,
2x2 = 1x3 + 2x4
⇒ 2x2 - x3 - 2x4 = 0 ...(3)
4 மாறிகளில் அமைந்த நேரியில் சமபடித்தான தொகுப்பு சமன்பாடுகள் (2), (3) மற்றும் (4)
∴ விரிவுபடுத்தப்பட்ட அணி
[A|B] \(\left[ \begin{matrix} 2 \\ 3 \\ 0 \end{matrix}\begin{matrix} 0 \\ 0 \\ 2 \end{matrix}\begin{matrix} 0 \\ -1 \\ -1 \end{matrix}\begin{matrix} -1 \\ 0 \\ -2 \end{matrix}|\begin{matrix} 0 \\ 0 \\ 0 \end{matrix} \right] \)
காஸ்ஸியன் நீக்கல் முறை மூலம் கிடைப்பது,
\(\overset { { R }_{ 2 }\rightarrow 2{ R }_{ 2 } - 3{ R }_{ 1 } }{ \longrightarrow } \left[ \begin{matrix} 2 \\ 0 \\ 0 \end{matrix}\begin{matrix} 0 \\ 0 \\ 2 \end{matrix}\begin{matrix} 0 \\ -2 \\ -1 \end{matrix}\begin{matrix} { -1 } \\ 3 \\ -2 \end{matrix}|\begin{matrix} 0 \\ 0 \\ 0 \end{matrix} \right] \)
\(\overset { { R }_{ 2 }\leftrightarrow { R }_{ 3 } }{ \longrightarrow } \left[ \begin{matrix} 2 \\ 0 \\ 0 \end{matrix}\begin{matrix} 0 \\ 2 \\ 0 \end{matrix}\begin{matrix} 0 \\ -1 \\ -2 \end{matrix}\begin{matrix} { -1 } \\ { -2 } \\ { 3 } \end{matrix}|\begin{matrix} 0 \\ 0 \\ 0 \end{matrix} \right] \)
இங்கு ρ(A) = ρ([A | B]) = 3 < 4, மதிப்பிட வேண்டிய மாறிகளின் எண்ணிக்கை.
∴ தொகுப்பு ஒருங்கமைவுடன் ஒரு சாராமாறிக் குடும்ப தீர்வுகளை கொண்டிருக்கும், ஆகையால் x4 = t என்க.
ஏறுபடிவத்திலிருந்து சமன்பாடுகளை எழுத கிடைப்பது
2x1 - x4 = 0
⇒ 2x1 - x4 = 0
⇒ 2x1 = x4
⇒ 2x - t
⇒ x1 = \(\frac{t}{2}\)
4x2 - 7x4 = 0
⇒, 4x2 = 7t ⇒ x2=\(\frac{7t}{4}\)
-2x3 + 3x4 = 0 ⇒ 2x3 = 3x4
⇒x3 = \(\frac{3t}{2}\)
x1, x2, x3 மற்றும் x4 மிகை முழுக்கள், ஆதலால், t = 4 என தேர்ந்தெடுக்க
∴ x1=\(\frac{4}{2}=2\)
x4=t=4
ஆகையால் சமநிலைப்படுத்தப்பட்ட சமன்பாடு
2C2H6 + 7O2 ⟶ 6H2O + 4CO2
23.
அரைவட்ட வளைவு வழிகளின் மையப்புள்ளிகள் O1 மற்றும் O2 என்க.
முதல் வளைவு வழியின் மையம் O1(12, 0) மற்றும் r =10. இதிலிருந்து அந்த அரைவட்டத்தைக் குறிக்கும் சமன்பாடு
(x −12)2 + ( y − 0)2 = 102
\(\Rightarrow \) x2 + y2 − 24x + 44 = 0 , y > 0 .
இரண்டாம் வளைவு வழியின் மையம் O2 (34, 0) மற்றும் ஆரம் r = 10. முதல் வளைவு போல இரண்டாம் வளைவு வழியின் சமன்பாடு
(x − 34)2 + y2 = 102
\(\Rightarrow \) x2 + y2 − 68x +1056 = 0, y > 0 .
24.
மதிப்பிட வேண்டிய மாறிகளின் எண்ணிக்கை 3.
தொகுப்பின் அணி வடிவம் AX = B
இங்கு A = \(\left[ \begin{matrix} 4 & -2 & 6 \\ 1 & 1 & -3 \\ 15 & -3 & 9 \end{matrix} \right] ,X=\left[ \begin{matrix} x \\ y \\ z \end{matrix} \right] ,B=\left[ \begin{matrix} 8 \\ -1 \\ 21 \end{matrix} \right] \)
[A|B] என்ற விரிவுபடுத்தப்பட்ட அணியில் தொடக்கநிலை நிரை செயலிகள் பயன்படுத்தக் கிடைப்பது
[A|B] =\(\left[ \begin{matrix} 4 & -2 & 6 \\ 1 & 1 & -3 \\ 15 & -3 & 9 \end{matrix}|\begin{matrix} 8 \\ -1 \\ 21 \end{matrix} \right] \overset { { R }_{ 1 }\leftrightarrow { R }_{ 2 } }{ \longrightarrow } \left[ \begin{matrix} 1 & 1 & -3 \\ 4 & -2 & 6 \\ 15 & -3 & 9 \end{matrix}|\begin{matrix} -1 \\ 8 \\ 21 \end{matrix} \right] \overset { { R }_{ 2 }\rightarrow { R }_{ 2 }-4{ R }_{ 1 },\\ { R }_{ 3 }\rightarrow { R }_{ 3 }-15{ R }_{ 1 } }{ \longrightarrow } \left[ \begin{matrix} 1 & 1 & -3 \\ 0 & -6 & 18 \\ 0 & -18 & 54 \end{matrix}|\begin{matrix} -1 \\ 12 \\ 36 \end{matrix} \right] \overset { { R }_{ 2 }\rightarrow { R }_{ 2 }\div (-6),\\ { R }_{ 3 }\rightarrow { R }_{ 3 }\div (-18) }{ \longrightarrow } \left[ \begin{matrix} 1 & 1 & -3 \\ 0 & 1 & - \\ 0 & 1 & -3 \end{matrix}|\begin{matrix} -1 \\ -2 \\ -2 \end{matrix} \right] \\ \overset { { R }_{ 3 }\rightarrow { R }_{ 3 }-{ R }_{ 2 } }{ \longrightarrow } \left[ \begin{matrix} 1 & 1 & -3 \\ 0 & 1 & -3 \\ 0 & 0 & 0 \end{matrix}|\begin{matrix} -1 \\ -2 \\ 0 \end{matrix} \right] \)
எனவே \(\rho \)(A) = \(\rho \)([A|B]) = 2 < 3
ஏறுபடி வடிவத்திலுள்ள அணியிலிருந்து கிடைக்கும் சமான சமன்பாடுகளின் தொகுப்பானது
x + y - 3z = -1, y - 3z = -2, 0 = 0
இதில் கடைசி சமன்பாடு 0 = 0 வெளிப்படையானது மற்றும் பொருத்தமுடையது.
மேலும் வெளிப்படையற்ற சமன்பாடுகள் இரண்டு உள்ளன. மூன்று தொகுப்பில் மாறிகள் உள்ளன. எனவே மாறிகளில் ஒன்றை நமது விருப்பப்படி நிலை நிறுத்தி மற்ற இரு மாறிகளுக்கான இரு சமன்பாடுகளைப் பெறலாம். எனவே z-ஐ t என்ற மெய்யெண் பெறும் தன்னிச்சை மாறியாகக் கொள்வோம். எனவே நாம் பெறுவது y = 3t - 2, x = -1-(3t - 2) + 3t = 1. எனவே தீர்வானது (x = 1, y = 3t - 2, z = t) ஆகும். இங்கு t என்பது தன்னிச்சை மெய்யெண் ஆகும். மேல் உள்ள தீர்வுக் கணமானது ஒரு சாராமாறி குடும்பத் தீர்வுகள் ஆகும். எனவே கொடுத்துள்ள தொகுப்பானது ஒருங்கமைவுடையது மற்றும் எண்ணற்ற தீர்வுகள் பெற்றிருக்கும். இந்த எண்ணற்ற தீர்வுகள் ஒரு குடும்பத் தீர்வுகளாகும்.
25.
ஒரு தோசையின் விலை ரூ.x என்க.
ஒரு இட்லியின் விலை ரூ. y என்க.
ஒரு வடையின் விலை ரூ.z என்க.
கொடுக்கப்பட்ட தரவின்படி,
2x+3y+2z=150
2x+2y+4z=200
5x+4y+2z=250
\(\therefore \Delta =\left| \begin{matrix} 2 & 3 & 2 \\ 2 & 2 & 4 \\ 5 & 4 & 2 \end{matrix} \right| \)
\(=2\left| \begin{matrix} 2 & 4 \\ 4 & 2 \end{matrix} \right| -3\left| \begin{matrix} 2 & 4 \\ 5 & 2 \end{matrix} \right| +2\left| \begin{matrix} 2 & 2 \\ 5 & 4 \end{matrix} \right| \)
=2(4-16)-3(4-20)+2(8-10)
=2(-12)-3(-16)+2(-2)
=-24+48-4=20 ≠ 0
\({ \Delta }_{ 1 }=\left| \begin{matrix} 150 & 3 & 2 \\ 200 & 2 & 4 \\ 250 & 4 & 2 \end{matrix} \right| \)
C3 லிருந்து 50ஐ பொதுவில் எடுக்க கிடைப்பது
\(=50\left| \begin{matrix} 3 & 3 & 1 \\ 4 & 2 & 2 \\ 5 & 4 & 1 \end{matrix} \right| \)
\(=50\left[ 3\left| \begin{matrix} 2 & 2 \\ 4 & 1 \end{matrix} \right| -3\left| \begin{matrix} 4 & 2 \\ 5 & 1 \end{matrix} \right| +1\left| \begin{matrix} 4 & 2 \\ 5 & 4 \end{matrix} \right| \right] \)
= 50[3(4 - 16) - 3(8 - 20) + 2(16 - 10)]
= 50[- 36 + 36 + 12] = 600
\({ \Delta }_{ 2 }=\left| \begin{matrix} 2 & 150 & 2 \\ 2 & 200 & 4 \\ 5 & 250 & 2 \end{matrix} \right| =50\left| \begin{matrix} 2 & 3 & 1 \\ 2 & 4 & 2 \\ 5 & 5 & 1 \end{matrix} \right| \)
\(=50\left[ \left| \begin{matrix} 4 & 2 \\ 5 & 1 \end{matrix} \right| -3\left| \begin{matrix} 2 & 2 \\ 5 & 1 \end{matrix} \right| +1\left| \begin{matrix} 2 & 4 \\ 5 & 5 \end{matrix} \right| \right] \)
= 50 [2(8-20)-3(4-20)+2(10-20)]
= 50[-24+48-20] = 200
\({ \Delta }_{ 3 }=\left| \begin{matrix} 2 & 3 & 150 \\ 2 & 2 & 200 \\ 5 & 4 & 250 \end{matrix} \right| =50\left| \begin{matrix} 2 & 3 & 3 \\ 2 & 2 & 4 \\ 5 & 4 & 5 \end{matrix} \right| \)
\(=50\left[ 2\left| \begin{matrix} 2 & 4 \\ 4 & 5 \end{matrix} \right| -3\left| \begin{matrix} 2 & 4 \\ 5 & 5 \end{matrix} \right| +3\left| \begin{matrix} 2 & 2 \\ 5 & 4 \end{matrix} \right| \right] \)
=50[2(10-16)-3(10-20)+3(8-10)]
=50[2(-6)-3(-10)+3(-2)]
=50[-12+30-6]=50[12]=600
\(\therefore x=\frac { { \Delta }_{ 1 } }{ \Delta } =\frac { 600 }{ 20 } =30\)
\(y=\frac { { \Delta }_{ 2 } }{ \Delta } =\frac { 200 }{ 20 } =10\)
\(z=\frac { { \Delta }_{ 3 } }{ \Delta } =\frac { 600 }{ 20 } =30\)
ஆகையால் ஒரு தோசையின் விலை ரூ.30, ஒரு இட்லியின் விலை ரூ. 10 மற்றும் 1 வடையின் விலை ரூ.30.
மேலும் 3 தோசைகள், ஆறு இட்லிகள் மற்றும் 6 வடைகளின் விலை
=3x+6y+6z =3(30)+6(10)+6(30)
=90+60+180=ரூ.330
அக்குடும்பத்தினரிடம் ரூ.350 இருப்பதால் சாப்பிட்ட செலவிற்கான தொகையை அவர்களிடமிருந்த பணத்தைக் கொண்டு செலுத்த முடியும்.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards