12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 02/03/2021
12ஆம் வகுப்பு இயற்பியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு இரண்டு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) -12th Standard Tamil Medium Physics Reduced syllabus Creative Two mark Question with Answer key - 2021(Public Exam)
12ஆம் வகுப்பு Physics / இயற்பியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Physics / இயற்பியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Physics Test1.
RMS மின்னோட்டத்தை வரையறு, அதன் கோவையை எழுதுக.
2.
3 cm விட்டமும் 2 மீ நீளமும் கொண்ட சுருள்வில்லானது 1000 சுற்றுகள் கொண்ட 5 படிவங்கள் உள்ளன. அதன் வழியே 5A மின்னோட்டம் பாயும் அதன் மையத்தில் ஏற்படும் காந்த தூண்டலைக் கணக்கிடுக.
3.
ஏற்பியின் செயலை விவரி.
4.
கட்டுப்பாடற்ற தொடர்வினை என்றால் என்ன?
5.
தொடர் வினை என்றால் என்ன?
6.
20,000 V முடுக்கம் மின்னழுத்தம் உள்ள X-கதிர் குழாயில் இருந்து வெளிவரும் X-கதிர்களின் வெட்டு அலைநீளம் மற்றும் வெட்டு அதிர்வெண் ஆகியவற்றைக் கணக்கிடுக.
7.
\(5\mathring { A } \) இடைவெளியுடைய அணு அமைப்பை எலக்ட்ரான் நுண்ணோக்கியில் பிரித்தறிய வேண்டியுள்ளது. இதற்குச் சமமான அலைநீளமுடைய எலக்ட்ரானை உருவாக்க, எலக்ட்ரான் முடுக்கப்பட வேண்டிய மின்னழுத்தத்தைக் காண்க.
8.
வெள்ளி பரப்பிற்கான பயன் தொடக்க அலைநீளம் 3250 x 10-10 m. அதன்மீது 2536 x 10-10 m அலைநீளமுடைய புறஊதாக் கதிர் ஒன்று விழும் பொழுது வெளிவரும் எலக்ட்ரானின் பெருமை திசைவேகத்தைக் கண்டுபிடி.
9.
பரப்பு அரண் என்றால் என்ன?
10.
X-கதிர் என்றால் என்ன?
11.
அலுமினியத்தின் வெளியேற்று ஆற்றல் 4.2 eV. ஒவ்வொன்றும் 2.5 eV ஆற்றலுடைய இரு ஃபோட்டான்கள் உலோகப்பரப்பின் மீது விழுகிறது. எலக்ட்ரான் வெளிவருவது சாத்தியமா?
12.
சீசியத்தின் வெளியேற்று ஆற்றல் 2eV. இதனை விளக்குக.
13.
உலோகப்பரப்பிலிருந்து வெளியிடப்படும் அனைத்து எலக்ட்ரான்களும் ஒரே அளவான இயக்க ஆற்றலைக் கொண்டிருக்குமா? ஏன்?
14.
புவியில் வளிமண்டலம் இல்லாதிருந்தால் பகல் பொழுதின் நேரம் தற்போது இருப்பதை விட குறைவாக இருக்கும். விளக்குக.
15.
ஒளிவிலகலின் பண்புகள் யாவை?
16.
ஒரேநேர எதிரொளிப்பு அல்லது ஒரேநேர ஒளிவிலகல் என்றால் என்ன?
17.
மெய் மற்றும் மாயப் பிம்பங்களை வேறுபடுத்துக
18.
ஒன்றை ஒன்று தொட்டுக் கொண்டுள்ள இரண்டு லென்சுகளின் கூட்டமைப்பால், சுழி மதிப்புள்ள திறனை உருவாக்க முடியுமா? விளக்குக.
19.
மின்புலத்திற்கும் \(\left( \vec { E } \right) \) மின்னழுத்தத்திற்கும் உள்ள தொடர்பு யாது(V)?
20.
\(\vec { { F }_{ 21 } } =\cfrac { { kq }_{ 1 }{ q }_{ 2 } }{ { r }^{ 2 } } { \hat { r } }_{ 12 }\), இல் k இன் மதிப்பு என்ன?
21.
ஒரு பொது உமிழ்ப்பான் பெருக்கியில் உள்ளீடு மற்றும் வெளியீடு AC மின்னழுத்தங்களுக்கு இடைப்பட்ட கட்டத்தொடர்பு என்ன? கட்ட புரட்டுகளுக்கான காரணம் என்ன?
22.
ரேடியோ அலைகள் எவ்வாறு உருவாகிறது?
23.
மைக்ரோ அலையின் பயன்கள் யாவை?
24.
100 W மின்திறன் கொண்ட மின்விளக்கு அவற்றின் திறனில் 5% கண்ணுறு ஒளியாக மாற்றப்பட்டால் மாறும் மின்காந்த அலையின் பெரும செறிவு
a) 1 m தொலைவில்
b) 10 m தொலைவில்
25.
மின்காந்த அலை ஒன்றின் பெரும மின்புலச் செறிவின் மதிப்பு E0 = 120 NC-1 மற்றும் அதிர்வெண் 50.0 MHz
(a) B0, ω, k மற்றும் λ மதிப்பை கணக்கிடு
(b) \(\vec { E } \) மற்றும் \(\vec { B } \) சமன்பாட்டை தருவி
26.
UV - கதிரின் பயன்கள் யாவை?
27.
பாயிண்டிங் வெக்டர் என்றால் என்ன?
28.
ஒரு மின்தேக்கி எப்போது முடிவிலா மின்மறுப்பு பெறும்?
29.
ஒரு லட்சிய மின்தூண்டிக்கான நிபந்தனை யாது?
30.
சைன் வடிவ மாறுதிசை மின்னழுத்த வேறுபாடு என்றால் என்ன?
31.
ஏற்று மின்மாற்றி - இறக்கு மின்மாற்றி வேறுபடுத்துக.
32.
ஒவ்வொன்றும் 9 pF மின்தேக்குத்திறன் கொண்ட மூன்று மின்தேக்கிகள் தொடரிணைப்பில் இணைக்கப்பட்டுள்ளன. தொகுப்பின் மொத்த மின்தேக்குத்திறன் யாது? தொகுப்பானது 120V மூலத்துடன் இணைக்கப்படும் போது, ஒவ்வொரு மின்தேக்கியின் இடையேயும் உள்ள மின்னழுத்த வேறுபாடு யாது?
33.
மின்னல் தாங்கி எவ்வாறு உயரமான கட்டடங்களை இடி மின்னலிலிருந்து பாதுகாக்கிறது?
34.
புள்ளி மின்னூட்டம் வரையறு
35.
சில சமயங்களில் மின் இணைப்பைக் கொடுத்தாலும் கூரை விசிறி இயங்க மறுப்பதைப் பார்த்திருப்போம். ஆனால் அதன் இறக்கைகளை சற்று சுழற்றிய பின் விசிறி இயல்பாக சுழலும். ஏன்?
36.
காஸ் விதியைக் கூறுக.
37.
கூலும் விதியின் அடிப்படையில் கூலும் என்பதை வரையறு.
38.
நிலை மின்னியல் என்றால் என்ன?
39.
மின் கடத்து எண்ணின் சமன்பாடு மற்றும் அதன் அலகை எழுதுக?
40.
வெப்ப மின்னிரட்டையில் தோன்றும் மின்னியக்கு விசையானது எந்த காரணிகளைச் சார்ந்திருக்கும்?
41.
மின்னோட்டத்தின் வெப்ப விளைவு பயன்பாடுகள் என்ன?
42.
மின்தடையாக்கிகள் பக்க இணைப்பில் உள்ள போது அதன் தொகுபயன் மின்தடையை வரையறு.
43.
மின்தடை எண்ணைப் பொருத்து பொருட்களை எவ்வாறு வகைப்படுத்தலாம்?
44.
நேர் மின் அயனி மின்னோட்டத்தை உருவாக்குமா? எப்படி?
45.
ஒரு புரோட்டான் மற்றும் ∝- துகள் சீரான காந்தப் புலத்தில் செங்குத்தாக ஒரே வேகத்தில் செல்கிறது. புரோட்டான் 5 சுழற்சிகளை 25μ விநாடிகளில் சுற்றுகிறது. ∝- துகளின் அலைவு நேரத்தைக் கணக்கிடு.
46.
இயற்கை காந்தம் மற்றும் செயற்கை காந்தம் வேறுபடுத்துக.
47.
மெய்சனர் விளைவு என்றால் என்ன?
48.
புவி ஒரு சீரற்ற காந்தப்புலத்தைப் பெற்றிருந்தாலும், உங்கள் ஆய்வுக் கூடத்தில் தடையின்றி தொங்கவிடப்பட்டுள்ள சட்டகாந்தம் இடப்பெயர்ச்சி இயக்கத்தை மேற்கொள்ளாமல், சுழற்சி இயக்கத்தை மட்டுமே மேற்கொள்கிறது. ஏன்?
49.
மின்காந்தங்களை உருவாக்குவதற்கு ஏற்ற பொருட்களின் தன்மையை தருக.
50.
சரிவு அல்லது காந்தச் சரிவு என்றால் என்ன?
1.
ஒரு மாறுதிசை மின்னோட்டங்களின் RMS மதிப்பு என்பது ஒரு சுற்றில் உள்ள அனைத்து மின்னோட்டங்களின் இருபடிகளின் சராசரியின் இருமடி மூலம் என வரையறுக்கப்படுகிறது. இது IRMS எனக் குறிப்பிடப்படுகிறது.
\(\mathrm{I}_{\mathrm{RMS}}=\sqrt{\frac{\mathrm{I}_{\mathrm{m}}^{2} \pi}{2 \pi}}\)
2.
சுற்றுகளின் எண்ணிக்கை N = 5 x 1000 = 500
நீளம் l = 2m
மின்னோட்டம் I = 5A
காந்தத் தூண்டல் \(B=\cfrac { { \mu }_{ 0 }NI }{ l } =\cfrac { 4\pi \times { 10 }^{ -7 }\times 5000\times 5 }{ 2 } \)
\(B=1.57\times { 10 }^{ -2 }T\)
3.
தகவல் தொடர்பு ஊடகத்தின் வழியாக பரப்பப்பட்ட சைகைகள் ஒரு ஏற்கும் விண்ணலைக்கம்பியால் ஏற்கப்பட்டு, மின்காந்த அலைகளை ரேடியோ அதிர்வெண் சைகைகளாக மாற்றி, ஏற்பிக்கு அளிக்கிறது. ஏற்பியானது பண்பிறக்கி, பெருக்கி, பகுப்பான் ஆகிய எலக்ட்ரானியச் சுற்றுகளைக் கொண்டுள்ளது. பண்பிறக்கியானது பண்பேற்றப்பட்ட அலையிலிருந்து அடிக்கற்றை சைகையைப் பிரித்தெடுக்கிறது. பின்னர் அடிக்கற்றை சைகை பகுக்கப்படுகிறது மற்றும் பெருக்கியால் பெருக்கப்படுகிறது. இறுதியாக இது வெளியீடு ஆற்றல் மாற்றிக்கு அளிக்கப்படுகிறது.
4.
கட்டுப்பாடற்ற தொடர்வினையில் நியூட்ரான் எண்ணிக்கை முடிவில்லாமல் பெருகுவதால் மிகக்குறைந்த நேரத்திலேயே மொத்த ஆற்றலும் வெளிப்படுகிறது.
எ.கா: அணு குண்டு.
5.
ஒரு \(_ { 92 }^{ 235 }{ U }\) அணுக்கரு பிளவுக்கு உட்படும்போது உருவாகும் ஆற்றல் சிறியதாக இருப்பினும், ஒவ்வொரு பிளவு வினையிலும் 3 நியூட்ரான்கள் உருவாகின்றன. அவை 3ம் மேலும் மூன்று \(_{ 92 }^{ 235 }{ U }\) அணுக்கருக்களைப் பிளந்து 9 நியூட்ரான்களை உருவாக்குகின்றன. - \(_{ 92 }^{ 235 }{ U }\) இந்த 9 நியூட்ரான்கள் மேலும் 27 நியூட்ரான்களை உருவாக்கின்றன. இது தொடர்கிறது. இதுவே தொடர்வினை எனப்படுகிறது. இதில் நியூட்ரான்களின் எண்ணிக்கை பெருக்குத் தொடர்ச்சியில் பெருகிக் கொண்டே போகிறது.
இரண்டு வகைகள்:
1) கட்டுப்பாடிலுள்ள தொடர்வினை அணு உலை.
2) கட்டுப்பாடற்ற தொடர்வினை அணு குண்டு.
6.
X-கதிர்களின் வெட்டு அலைநீளம்
\({ \lambda }_{ 0 }=\cfrac { 12400 }{ V } \mathring { A } =\cfrac { 12400 }{ 20000 } \mathring { A } =0.62\mathring { A } \)
இதற்குத் தொடர்புடைய வெட்டு அதிர்வெண்
\({ V }_{ o }=\cfrac { c }{ { \lambda }_{ 0 } } =\cfrac { 3\times { 10 }^{ 8 } }{ 0.62\times { 10 }^{ 10 } } =4.84\times { 10 }^{ 18 }Hz\)
7.
குறைந்தபட்ச அலைநீளம் \(5\mathring { A } \)
\({ \lambda }_{ min }=\cfrac { 12.2 }{ \sqrt { v } } \mathring { A }\)
\( 5\mathring { A } =\cfrac { 12.2 }{ \sqrt { V } } \mathring { A } \)
v = 6.25V
8.
வெள்ளியின் பயன் தொடக்க அலைநீளம் \({ \lambda }_{ 0 }=3250\mathring { A } \)
\(\lambda =2536\mathring { A }\)
\( \therefore \cfrac { 1 }{ 2 } { mv }^{ 2 }=hc=\left[ \cfrac { 1 }{ \lambda } -\cfrac { 1 }{ { \lambda }_{ 0 } } \right] \)
\(V=\cfrac { { r }^{ 2 }{ eB }^{ 2 } }{ 2m } \sqrt { \cfrac { 2hc }{ m } \left[ \cfrac { 1 }{ \lambda } -\cfrac { 1 }{ { \lambda }_{ 0 } } \right] } \\ V=\sqrt { \cfrac { 2\times 12400\times 1.6\times { 10 }^{ -19 } }{ 9.1\times { 10 }^{ -31 } } \left[ \cfrac { 714 }{ 2536\times 3250 } \right] } \)
\(V=0.6\times { 10 }^{ 6 }m/s\)
\(V=6\times { 10 }^{ 5 }m/s\)
9.
உலோகத்தின் மேற்பரப்பிலிருந்து கட்டுறா எலக்ட்ரான்களை வெளியேற விடாமல் தடுக்கும் மின்னழுத்த அரண், பரப்பு அரண் எனப்படும்.
10.
0.1\(\mathring { A } \) முதல் 100 \(\mathring { A } \) வரை குறைந்த அலைநீளம் கொண்ட மின்காந்த அலைகள் X-கதிர்கள் எனப்படும்.
11.
இல்லை, படுகின்ற ஒவ்வொரு ஃபோட்டானின் ஆற்றலும் பரப்பின் வெளியேற்று ஆற்றல் அளவை விட அதிகமாக இருந்தால் மட்டுமே ஒளி எலக்ட்ரான்கள் வெளியிடப்படும்.
12.
ஒளி எலக்ட்ரான்களை சீசியத்தின் பரப்பிலிருந்து வெளியேற்றுவதற்குத் தேவையான ஒளியின் ஆற்றல் குறைந்த அளவு 2 eV பெற்றிருக்க வேண்டும்.
13.
வெளியிடப்படும் அனைத்து எலக்ட்ரான்களின் இயக்க ஆற்றலும் ஒன்று போல இருப்பதில்லை. வெவ்வேறான எலக்ட்ரான்களை பரப்பிலிருந்து வெளியேற்ற வெவ்வேறு அளவான ஆற்றல் செலவழிக்கப்படுவதால் வெளிவரும் எலக்ட்ரான்கள் அனைத்தும் ஒரே அளவு இயக்க ஆற்றலை பெற்றிருப்பதில்லை.
14.
வளிமண்டலம் இருப்பதால் ஒளிவிலகல் காரணமாக சூரியன் உதிப்பதற்குச் சிறிது நேரத்திற்கு முன்பே தெரியத் தொடங்குகிறது. இதே போன்று, சூரியன் உண்மையில் மறைந்த பிறகும் ஒளி விலகல் காரணமாக நமக்கு சூரியன் தெரியும். இதன் காரணமாக பகல் பொழுது சற்று நீண்டிருக்கிறது என்பது உண்மைதான்.
15.
(1) ஒளி, அடர்குறை ஊடகத்தில் இருந்து அடர்மிகு ஊடகத்திற்குள் செல்லும்போது அது அடர்மிகு ஊடகத்தில் உள்ள செங்குத்துக் கோட்டை நோக்கி வளையும்.
(2) ஒளி அடர்மிகு ஊடகத்தில் இருந்து அடர்குறை ஊடகத்திற்குள் செல்லும்போது அது அடர்குறை ஊடகத்தில் உள்ள செங்குத்துக் கோட்டை விட்டு விலகிச் செல்லும்.
(3) எந்த ஒளிவிலகு பரப்பாக இருந்தாலும், அது சிறிதளவு ஒளி எதிரொளிப்பையும் ஏற்படுத்தும்.
16.
ஒரு ஒளி மூலத்திலிருந்து வரும் ஒளிக்கதிர் ஒளி ஊடுருவும் ஒரு பரப்பின் மீது விழும்போது ஒளியின் ஒரு பகுதி ஒளி எதிரொளிப்பையும், மற்றொரு பகுதி ஒளி விலகலையும் அடையுமானால் அதற்கு ஒரேநேர எதிரொளிப்பு அல்லது ஒரேநேர ஒளிவிலகல் என்று பெயர்.
17.
| மாயபிம்பம் | மெய்பிம்பம் |
| திரையில் தோன்றாத ஆனால் கண்களினால் மட்டும் காணக்கூடிய பிம்பமே, மாயபிம்பமாகும். |
திரையில் தோன்றும் கண்களால் காணக்கூடிய பிம்பம் மெய்பிம்பம் ஆகும். |
18.
கூட்டமைப்பு லென்ஸ்
(i) இரண்டு லென்ஸ்கள் கொண்ட கூட்டமைப்பை கருதுவோம். இதில் முதல் லென்ஸ்
(ii) குவிக்கும் லென்ஸ் மற்றும் அதன் திறன் \({ P }_{ 1 }=-P\) என்க.
(iii) இரண்டாவது லென்ஸ் விரிக்கும் லென்ஸ் மற்றும் அதன் திறன் \({ P }_{ 2 }=P\) என்க.
(iv) இக்கூட்டமைப்பின் நிகர திறன் \(P={ P }_{ 1 }+{ P }_{ 2 }={ P }_{ 2 }=-P=0\) என்க.
(v) எனவே சம அளவு திறன் கொண்ட குவி மற்றும் குழி லென்சுகள் ஒன்றை ஒன்று தொட்டுக் கொண்டுள்ள கூட்டமைப்பின் மொத்த திறன் சுழியாகும்.
19.
\(E=-\cfrac { dv }{ dx } \)
20.
k ன் மதிப்பு \(9\times { 10 }^{ 9 }{ Nm }^{ 2 }{ C }^{ -2 }\) ஆகும்.
இங்கு \(k=\cfrac { 1 }{ 4\pi { \varepsilon }_{ n } } \)
\( { \varepsilon }_{ 0 }\) - வெற்றிடத்தில் விடுதிறன் = \(8.85\times { 10 }^{ -12 }{ C }^{ 2 }{ N }^{ -1 }{ m }^{ -2 }\)
21.
உள்ளீடு சைகையின் நேர் அரை அலையின்போது உமிழ்ப்பான் அடிவாய்க்குக் குறுக்கே முன்னோக்கு மின்னழுத்தம் உள்ளீடு சைகையினால் அதிகரிக்கப்படும். இதன் விளைவாக அடிவாய் மின்னோட்டம் (IB) அதிகரிக்கும். இதனால் ஏற்பான் மின்னோட்டம் (Ic) யானது மடங்கு அதிகரிக்கும். இது RC யின் குறுக்கே மின்னழுத்த இறக்கத்தை (ICRC) அதிகரித்து ஏற்பான் உமிழ்ப்பான் மின்னழுத்த வேறுபாட்டை (vCE.) குறைக்கும். எனவே, நேர்மறை உள்ளீடு சைகை, வெளியீட்டில் பெருக்கப்பட்ட எதிர்மறை சைகையாக உருவாகிறது. இதனால் வெளியீட்டு சைகை 180o திருப்பப்படுகிறது
22.
முடுக்கிவிடப்பட்ட எலக்ட்ரான்கள் கடத்தும் கம்பிகளில் அல்லது அலைவூட்டிகளினால் ரேடியோ அலைகளை உருவாகும்
23.
(i) ரேடார் கருவிகளில் விமானங்களை வழிநடத்த
(ii) சமையல் கலனில்
(iii) நீண்ட தூர கம்பியில்லா செய்தி தொடர்பில்
24.
பல்பு புள்ளி ஒளி மூலமாகக் கொண்டால் அனைத்து திசைகளிலும் கதிர்வீச்சு பரவும். r m தொலைவில் பரப்பு, A = 4πr2
25.
\(a){ B }_{ o }=\frac { { E }_{ o } }{ c } =\frac { 120N{ C }^{ -1 } }{ 3\times { 10 }^{ 8 }m{ s }^{ -1 } } =4\times { 10 }^{ 7 }T\)
\(\omega =2\pi v=2\times 3.14\times 50\times { 10 }^{ 6 }=3.14\times { 10 }^{ 8 }rad{ s }^{ -1 }\)
\(k=\frac { \omega }{ c } =\frac { 3.14\times { 10 }^{ 8 } }{ 13\times { 10 }^{ 8 } } =1.05{ m }^{ -1 }\)
\({ \lambda }=\frac { c }{ { v } } =\frac { 3\times { 10 }^{ 8 } }{ 50\times { 10 }^{ 6 } } =6.00m\)
\((b){ E }_{ 0 }=120sin(1.05x-3.14\times { 10 }^{ 8 }t)\hat { j } N{ C }^{ -1 }\)
\({ E }_{ 0 }=4\times { sin }(1.05x-3.14\times { 10 }^{ 8 }t)\hat { j } tesla\)
26.
(i) சூரிய மின் கலன் வடிவில் செயற்கைக் கோளுக்கு ஆற்றல் அளிக்கிறது
(ii) உலர் பலஸ்களை உருகாக்க
(iii) பசுமை இல்லங்களில் வெப்பக் காப்பானாக
(iv) தசையில் ஏற்படும் வலியினை சரிசெய்ய
(v) தொலைக்காட்சி பெட்டியின் தொலைக்கட்டுப்பாட்டு உணர்வியலில்
(vi) இரவு நேரங்களில் புகைப்படம் எடுக்க
27.
ஓரலகு பரப்பு வழியே பாய்ந்து செல்லும் ஆற்றலுக்கு மின்காந்த அலையின் பாயிண்டிங் வெக்டர் என்று பெயர்
\(\vec { S } =\frac { 1 }{ { \mu }_{ o } } (\vec { E } \times \vec { B } )\)
28.
மின்தேக்கியின் மின்மறுப்பு XC = \(\frac { 1 }{ \omega c } \)
\(\therefore { X }_{ c }=\frac { 1 }{ \omega c } =\frac { 1 }{ 2\pi fc } =\frac { 1 }{ o } =\infty \)
நேர்த்திசை மின்னோட்டத்திற்கு f = 0 எனில் \(\frac { 1 }{ 2\pi fc } =\frac { 1 }{ o } =\infty \) மின்தேக்கி சுற்று நேர்த்திசை மின்னோட்டத்திற்கு முடிவிலி மதிப்பை பெறும். எனவே மின்தேக்கி DC மின்னோட்டத்தை தன் வழியே அனுமதிக்காது.
29.
ஒரு மின்தூண்டியின் மின்மறுப்பு XL = ωL
XL = 2πfL
நேர்திசை மின்னோட்டத்திற்கு அதிர்வெண் f = 0 எனில் (XL = 0) மின்மறுப்பு சுழியாகும்.
ஒரு லட்சிய மின்தூண்டி மின்மறுப்பை அளிக்காது.
30.
மாறுதிசை மின்னழுத்த வேறுபாடு அலை வடிவம் சைன் அலை எனில் அது சைன் வடிவ மாறுதிசை மின்னழுத்த வேறுபாடு ஆகும்.
v = Vm sin ωt
31.
| ஏற்று மின்மாற்றி | இறக்கு மின்மாற்றி | |
|---|---|---|
| 1 | மின்னழுத்த வேறுபாடு அதிகரித்து மின்னோட்டத்தை குறைப்பது | மின்னழுத்த வேறுபாட்டை குறைத்து மின்னோட்டத்தை அதிகரிக்கும். |
| 2 | Ns > Np | Ns < Np |
| 3 | Vs > Vp | Vs < Vp |
| 4 | Is < Ip | Is > Ip |
| 5 | K > 1 | K < 1 |
32.
C1 = C2 = C3 = 9pF = 9 x 10 F,
V = 120 Volt
\(\frac { 1 }{ { C }_{ S } } =\frac { 1 }{ { C }_{ 1 } } +\frac { 1 }{ { C }_{ 2 } } +\frac { 1 }{ { C }_{ 3 } } \)
\(\frac { 1 }{ { C }_{ s } } =3\times \frac { 1 }{ 9\times { 10 }^{ -12 } } \)
Cs = 3x10-12 F
ii) V1, V2, V3 என்பன மின்னழுத்த வேறுபாடுகள்
V1 + V2 + V3 = 120 V
ஒவ்வொரு மின்தேக்கியிலும் மின்னழுத்தம் q எனில்
\(\frac { q }{ { C }_{ 1 } } +\frac { q }{ { C }_{ 2 } } +\frac { q }{ { C }_{ 3 } } \) = 120
= \(q\left[ \frac { 1 }{ 9\times { 10 }^{ -12 } } \right] =120=320\times { 10 }^{ -12 }{ C }^{ 2 }\)
ஒவ்வொரு மின்தேக்கியிலும் மின்னழுத்தம்
\(\frac { q }{ C } =\frac { 360\times { 10 }^{ -12 } }{ 9\times { 10 }^{ -12 } } =40V\)
C = 3pF, ஒவ்வொன்றும் 40 volt
33.
(i) எதிர் மின்னூட்டம் பெற்ற மேகம் கட்டடத்தின் மேல் செல்லும் போது, கடத்தியின் கூர்முனைகளில் நேர் மின்னூட்டம் தூண்டப்படுகிறது
(ii) கூர்முனை செயல்பாட்டினால் அருகில் உள்ள காற்று அயனியாக்கப்படுகிறது.
(iii) இதன்மூலம் உருவாகும் எதிர்மின்னூட்டம் மேகத்திலுள்ள ஒரு பகுதி மின்னூட்டங்களை சமன் செய்கிறது
(iv) கூர்முனைகள் நோக்கி விரட்டப்பட்ட எதிர்மின்துகள்கள், தாமிரத்தண்டின் வழியே தரை அடைகிறது
(v) இவ்வாறு கட்டடங்கள் பாதுகாக்கப்படுகின்றன
34.
வெளியில் மின்னோட்டம் ஒன்றின் பரிணாமம் அவற்றுக்கிடையேயான நோக்குபுள்ளி தொலைவை விட குறைவாக இருப்பின் அது புள்ளி மின்னூட்டம் எனப்படும்
35.
(i) ஒரு பொருளை சுழலச் செய்ய அதன் மீது திருப்புவிசை செலுத்தப்பட வேண்டும். கூரை விசிறியில் இந்த தொடக்கத் திருப்புவிசையை அளிப்பதற்கு மின்தேக்கி பொருத்தப்பட்டுள்ளது.
(ii) கன்டென்சர் (Condenser) என்ற பெயரில் அறியப்படும் மின்தேக்கி பழுதடைந்து விட்டால் தேவைப்படும் தொடக்கத் திருப்பு விசையை அதனால் அளிக்க இயலாது.
36.
காஸ் விதியின்படி, எந்தவொரு மூடிய பரப்பில் செயல்படும் மின்புலத்தின் மொத்த பாய மதிப்பு. அப்பரப்பில் உள்ள மொத்த மின்னூட்டத்தின் \(\frac { 1 }{ { \varepsilon }_{ o } } \) மடங்குக்குச் சமம். அதாவது, \({ \phi }=\frac { q }{ { \varepsilon }_{ o } } \)
37.
காற்றிலோ அல்லது வெற்றிடத்திலோ, ஒரு மீட்டர் இடைவெளியில் வைக்கப்பட்டுள்ள, ஒத்த மின்னூட்டங்களுக்கிடையேயான விரட்டு விசை 9 x 109 N எனில் அம்மின்னூட்ட மதிப்பு ஒரு கூலும் என வரையறுக்கப்படுகிறது.
38.
நிலையாக உள்ள மின்துகளை பற்றி அறிய உதவும் பிரிவு
39.
1. \(\sigma =\frac { { ne }^{ 2 }r }{ m } \)
2. அலகு : \({ \Omega }^{ -1 }{ m }^{ -1 }\)
40.
வெப்ப மின்னிரட்டையில் தோன்றும் மின்னியக்கு விசையின் எண் மதிப்பு
i) மின்னிரட்டையில் இடம்பெறும் உலோகங்களின் தன்மை மற்றும்
ii) சந்திகளின் வெப்பநிலை வேறுபாடு ஆகியவற்றை பொறுத்ததாகும்.
41.
மின்னிறக்க விளக்குகள் [Discharge lamp] மின் பற்றவைத்தல் (வெல்டிங்), மின்வில் போன்றவை மின்னோட்டத்தின் வெப்பவிளைவை பயன்படுத்துகின்றன.
42.
1. பல மின்தடையாக்கிகள் பக்க இணைப்பில் இணைக்கப்படும் போது,தனித்தனி மின்தடைகளின் தலைகீழ் மதிப்புகளின் கூடுதல் மதிப்புக்குச் சமம்.
2. 1/ Rp = 1/R1 + 1/R2 + 1/R3
43.
கடத்திகள் மிகக்குறைந்த மின்தடை எண்ணையும், மின்கடத்தாப் பொருட்கள் மிக அதிக மின்தடை எண்ணெயும் குறைகடத்திகளின் மின்தடை எண் கடத்திகளை விட அதிகமாகவும் ஆனால் மின்கடத்தாப்பொருட்களை விட குறைவாகவும் அமையும்.
44.
1. வெளிக்கூட்டில் உள்ள எலக்ட்ரான்கள் அணுவை விட்டு வெளியேறினால், அது கட்டுறா எலக்ட்ரானாக மாறி மின்னோட்டத்தை ஏற்படுத்தும்.
2. வெளிவட்ட எலக்ட்ரானை இழந்த அணு அதிக நேர்மின்னூட்டத்தை கொண்டிருக்கும் எனவே அது நேர்மின் அயனி எனப்படும்.
3. நேர்மின் அயனி மின்னோட்டத்தை உருவாக்காது.
45.
புரோட்டானின் அலைவு நேரம்
\({ T }_{ P }=\frac { 25 }{ 5 } =5\mu \)விநாடிகள்
\(T=\frac { 2\pi m }{ qB } \)
\(\frac { { T }_{ \alpha } }{ { T }_{ P } } =\frac { { m }_{ \alpha } }{ { m }_{ P } } \times \frac { { q }_{ p } }{ q_{ -\alpha } } \)
\(\frac { { 4m }_{ \alpha } }{ { m }_{ P } } \times \frac { { q }_{ p } }{ 2q_{ p } } \)
\(\frac { { T }_{ \alpha } }{ { T }_{ P } } =\frac { 4 }{ 2 } \)
\(\\ { T }_{ \alpha }=2{ T }_{ p }\)
\(=2\times 5\)
\({ T }_{ \alpha }=10\mu \)விநாடிகள்
46.
| இயற்கை காந்தம் | செயற்கை காந்தம் |
| 1. இயற்கையாக உருவாகிறது. | மனிதனால் உருவாக்கப்படுகிறது. |
| 2. சீரற்ற உருவம் மற்றும் வடிவத்தை கொண்டுள்ளது. | சீரான உருவம் மற்றும் வடிவத்தை உருவாக்கலாம். |
| 3. எ.கா: மேக்னடைட் (அல்லது) காந்தக்கல் | எ.கா. சட்டக்காந்தம் |
47.
டயா காந்தப்பொருட்கள் மீக்கடத்திகளாக மாறும் போது மீக்கடத்தியிலிருந்து காந்தப்பாயம் விலக்கித் தள்ளப்படும் நிகழ்வு.
48.
1. ஆய்வுக் கூடத்திற்கான புவியின் காந்தப்புலம் சீரானது.
2. எனவே சுழற்சி இயக்கத்தை மட்டுமே மேற்கொள்கிறது. இடப்பெயர்ச்சி இயக்கத்தை மேற்கொள்ளவில்லை.
49.
1. குறைந்த காந்தத் தேக்குத்திறன்
2. குறைந்த காந்த நீக்குத்திறன்
3. அதிக தொடக்க காந்த ஏற்புத்திறன்.
4. மெல்லிய காந்த தயக்கக் கண்ணி கொண்ட பொருட்களை பயன்படுத்த வேண்டும்.
எ.கா: தேனிரும்பு மற்றும் மியூமெட்டல் (நிக்கல்) இரும்பு உலோக கலவை
50.
புள்ளி ஒன்றில், புவியின் மொத்த காந்தப்புலம், \(\\ \overrightarrow { B } \) காந்தத் துருவத் தளத்தின் கிடைத்தளத்திசையுடன் ஏற்படுத்தும் கோணம்.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards