12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Maths Applications of Matrices and Determinants Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 02/03/2021
12ஆம் வகுப்பு கணினி அறிவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு மூன்று மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil MediumComputer Science Reduced Syllabus Creative Three Mark Question with Answer key - 2021(Public Exam)
12ஆம் வகுப்பு Computer Science / கணினி அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Science / கணினி அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Science Test

1.
Tuplesக்கு மதிப்பிருத்துதல் பற்றி குறிப்பு வரைக.
2.
குறிப்பு வரைக:
(i) ஸ்கேட்டர் வரைவிடம்
(ii) பெட்டி வரைவிடம்
3.
இரண்டு வகையான பச்சோந்திகள் சமமான எண்ணாக இருந்தால், இந்த இரண்டு வகையும் சேர்ந்து மூன்றாவது வகையின் நிறத்தை மாற்றுவதற்கான நிரல் நெறிமுறையை உருவாக்கவும். முடிவில் அனைத்தும் ஒரே நிறத்தை காண்பிக்க வேண்டும். நிரல் நெறிமுறையை செயற்கூறுவைப் பயன்படுத்தி எழுதவும்.
4.
செயற்கூறு வகைகளின் தொடரியலை விளக்கமாக எழுதுக.
5.
input( ) செயற்கூறு - சிறுகுறிப்பு வரைக.
6.
பைத்தானின் சிறப்பம்சங்கள் யாவை?
7.
தரவு கையாளுதல் மொழி பற்றி எழுதுக
8.
மாறும் நீள செயலுருப்பு எப்போது பயன்படுத்துவாய்? ஏன்? விளக்குக.
9.
தானமைவு செயலுருபு என்றால் என்ன? எடுத்துக்காட்டுடன் விளக்குக.
10.
தேவைப்படும் செயலுருபுகள் பற்றி குறிப்பு வரைக.
11.
கீழே கொடுக்கப்பட்டுள்ள நிரல் எவ்வாறு வேலை செய்கிறது என்பதை கூறு.
12.
இனக்குழு செயற்கூற்றில் பயன்படும் self அளபுரு பற்றி குறிப்பு வரைக.
13.
பைத்தானில் பொருள் பற்றி எழுதுக.
14.
வரிசை முறை கூற்றுகள் -எடுத்துக்காட்டுடன் சிறுகுறிப்பு வரைக.
15.
தேர்ந்தெடுப்பு வரிசையாக்கத்தின் போலி குறிமுறையை எழுதுக
16.
இடம் நேரம் பரிமாற்றம் அல்லது நேரம் நினைவகம் பரிமாற்றம் என்பது என்ன?
17.
இயங்கு நேரம் அளவிடப்படும் காரணிகளை எழுதுக
18.
நெறிமுறை யுக்தி என்றால் என்ன?
19.
Asymptotic குறியீடு - குறிப்பு வரைக.
20.
இடம் மற்றும் இடச்சிக்கலின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் காரணிகள் யாவை?
21.
நெறிமுறையின் பண்பியல்புகளைப் பட்டியலிடுக.
22.
பின்வருவனவற்றில் எது List, Tuple மற்றும் இனக்குழு (class) என அடையாளம் காண்க.
(a) arr [1, 2, 34]
(b) arr (1, 2, 34)
(c) student [rno, name, mark]
(d) day: = (‘sun’, ‘mon’, ‘tue’, ‘wed’)
(e) x: = [2, 5, 6.5, [5, 6], 8.2]
(f) employee [eno, ename, esal, eaddress]
23.
List உள்ள உருப்புகளை அணுகும் பல்வேறு வழிமுறைகள் யாவை? எடுத்துக்காட்டு தருக.
24.
pure மற்றும் impure செயற்கூற்றை வேறுபடுத்துக.
25.
1.
Tuples மதிப்பிருத்தல் என்பது பைத்தானில் ஆற்றல் மிக்க சிறப்பியல்பாகும். இது, மதிப்பிருத்து செயற்குறியின் இடது பக்கத்தில் உள்ள மாறிகளில் மதிப்பிருத்த செயற்குறியின் வலது பக்கத்தில் உள்ள மதிப்புகளை இருத்த அனுமதிக்கிறது. ஒவ்வொரு மதிப்பும் அதற்குரிய மாறியில் இருத்தப்படுகிறது.
எடுத்துக்காட்டு :
> > > (a,b,c) = (34,90,76)
> > > print (a,b,c)
34 90 76
2.
(i) ஸ்கேட்டர் வரைவிடம்: ஸ்கேட்டர் வரைவு என்பது தரவுகளை புள்ளிகளின் தொகுப்பாக காட்டுகிறது. ஒரு புள்ளிகளின் நிலை அதன் இரு பரிமாண மதிப்பைப் பொறுத்தது, ஒவ்வொரு மதிப்பும் கிடைமட்ட அல்லது செங்குத்து பரிமாணத்தின் நிலையை குறிக்கும்.
(ii) பெட்டி வரைவிடம்: பெட்டி வரைவிடம் என்பது சிறிய முதல் கால்மானம், சராசரி, மூன்றாம் கால்மானம் மற்றும் பெரிய (minimum, first quartile, median, third quartile அண்ட் maximum) ஆகிய ஐந்து எண்கள் திரட்டைக் கொண்டு தரவுகளின் பகிர்வை காட்டுகிறது.
3.
let rec monochromatize a b c:=
if a > 0 then
a, b, c:= a - 1, b - 1, c + 2
else
a:= 0 b:= 0 c:= a + b + c
return c
4.
செயற்கூறு வகைகளின் தொடரியல்
x⇾y
x1⇾x2⇾y
x1⇾...⇾xn⇾y
'x' மற்றும் 'y'மாறிகள் செயற்கூறு வகைகளைக் குறிக்கும்.x ⇾ y என்ற செயற்கூறு வகையானவை 'x' வகையின் உள்ளீட்டைப் பெற்று 'y' வகையின் வெளியீட்டைத் திருப்பி அனுப்பும். அதே சமயம் x1⇾x2⇾y என்ற செயற்கூறு வகையானது இரண்டு உள்ளீட்டின் வகை 'x1' ஆகும். இரண்டாவது உள்ளீட்டின் வகை 'x2' ஆகும். x1 ⇾...⇾xn ⇾y யில் n அளபுருக்களின் உள்ளீட்டு வகை x ஆகும். வெளியீட்டின் வகை 'y' ஆகும்.
5.
(i) பைத்தானில், input() செயற்கூறு நிரலை இயக்கும் பொழுது தரவுகளை உள்ளீடாக பெற்றுக் கொள்ள பயன்படுகிறது. input() செயற்கூறின் தொடரியல்,
Variable = input ("prompt string")
(ii) இந்த தொடரியலில் உள்ள "prompt string" பயனர் கொடுக்கப்பட வேண்டிய உள்ளீடு எதுவென்பதை உணர்த்தும் கூற்று அல்லது செய்தியை கொண்டிருக்கும்.
(iii) input() கட்டளை அமைப்பில் உள்ள "prompt string" திரையில் தோன்றும், பயனர் இதை படித்து உள்ளீடு சாதனத்திலிருந்து எதிர்பார்க்கப்படும் தரவுகளை கொடுக்கலாம்.
(iv) input() செயற்கூறு, விசைப்பலகையின் மூலம் தட்டச்சு செய்தவற்றை மாறியில் சேமித்து வைக்கும்.
(v) "prompt string" கொடுக்கப்படவில்லை எனில் திரையில் எந்த தகவலும் தோன்றாது. இதனால் பயனர் எவற்றை உள்ளீடு செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள முடியாது.
6.
(i) இது ஒரு பொது பயன்பாட்டு மொழியாகும். இதை அறிவியல் மற்றும் அறிவியல் அல்லாத நிரலாக்கத்திற்கு பயன்படுத்தலாம்.
(ii) இது இயக்க முறையை சாராத நிரலாக்க மொழியாகும்.
(iii) பைத்தான் நிரல் எளிதாக புரிந்து கொள்ள இயலும்.
7.
தரவு கையாளுதல் மொழி (DML) என்பது ஒரு தரவுத்தளத்தில் உள்ள தரவுகளை சேர்த்தல், அழித்தல் மற்றும் மாற்றியமைப்பதற்காக பயன்படும் ஒரு கணிப்பொறி நிரலாக்க மொழியாகும். SQL - ல் தரவு கையாளுதல் மொழி தரவுத்தள அட்டவணையில் சேமித்து வைக்கப்பட்டுள்ள தரவுகளை மாற்றியமைக்க பயன்படும் SQL தரவு மாற்றுக் கூற்றுகளை கொண்டிருக்கும்.
தரவுத்தள திட்ட வடிவமைப்பின்படி, தரவுத்தளம் உருவாக்கிய பின்னர், DML ல் குறிப்பிடப்பட்டுள்ள செயல் முறைகளின் தொகுப்பை பயன்படுத்தி தரவுகளை கையாளலாம்
8.
1) சில சமயங்களில், ஏற்கனவே குறிப்பிடப்பட்ட செயலுருபுகளை விட அதிகமான செயலுருபுகளை அனுப்ப வேண்டிய தேவை இருக்கும்.
2) மீண்டும் செயற்கூறினை மறு வரையறை செய்வது கடினமான செயல் அதற்கு பதிலாக மாறும் நீள செயலுருபுகளை பயன்படுத்தலாம்.
3) செயற்கூறு வரையறையில் இது குறிப்பிடபடுவதில்லை. மாறாக இந்த செயலுருபுகளை குறிப்பிடுவதற்கு * குறியீடு பயன்படுகிறது.
மாறும் நீள செயலுருபின் பொதுவடிவம்:
def function _name(* args):
function_body
return' statement
எடுத்துக்காட்டு:
def printnos (*nos):
for n in nos:
print (n)
return
# now invoking the printnost) function
print (,Printing two values')
printnos (1,2)
print ('Printing three values')
printnos (10,20,30)
வெளியீடு
Printing two values
1
2
Printing three values
10
20
30
9.
பைத்தானில், செயற்கூறை அழைக்கும் போது எந்த மதிப்பும் கொடுக்கப்படவில்லை எனில், செயலுருபானது தானாகவே மதிப்பை எடுத்துக் கொள்ளும். இதுவே தானமைவு செயலுருபு ஆகும்.
பின்வரும் எடுத்துக்காட்டில் செயலுருபுவை அனுப்பாதபோது தானமைவு Salary-யை அச்சிடுவதைக் காணலாம்.
எடுத்துக்காட்டு:
defprintinfo( name, salary = 3500):
print ("Name:"; name)
print ("Salary:", salary)
return
printinfo("Mani ")
வெளியீடு:
Name: Mani
Salary: 3500
10.
1. செயலுருபுகளை சரியான இடவரிசையில் செயற்கூற்றுக்கு அனுப்புவதே தேவைப்படும். செயலுருபுக்கள் எனப்படும்.
2. இங்கு, செயற்கூறு அழைப்புக் கூற்றில் உள்ள செயலுருபுகளின் எண்ணிக்கை, செயற்கூறு வரையறையோடு சரியாக பொருந்த வேண்டும்.
3. தொடரியல் பிழையை தவிர்த்து தேவையான வெளியீட்டை பெறுவதற்கு குறைந்தது ஒரு செயலுருபாவது தேவை.
எடுத்துக்காட்டு:
def printstring( str):
print ("Example - Required arguments ")
print (str)
return
# Now you can call printstring( ) function
printstring("Welcome")
11.
நிரல்:
class Sample:
def__init__ ( self, num );
print ( "Constructor of class Sample..." )
self. num = num
print ( "The value is : ", num )
S = Sample ( 10 )
(i) மேலே உள்ள இனக்குழு " Sample ", " num " என்னும் ஒரே ஒரு அளபுருவுடன் கூடிய ஆக்கியைக் கொண்டுள்ளது. ஆக்கி இயக்கப்படும் போது முதல் " print " கூற்று, " Constructor of class Sample... " என்பதை அச்சிடும்.
(ii) பிறகு ஆக்கிக்கு அனுப்பப்படும் மதிப்பு self. num ல் இருத்தப்படுகிறது. இறுதியாக, கொடுக்கப்பட்ட சரத்துடன் அனுப்பப்பட்ட மதிப்பையும் அச்சிடுகிறது.
(iii) S என்ற பொருள் 10 என்ற மெய்யான அளபுருவுடன் உருவாக்கப்படும் போது மேலே உள்ள ஆக்கி தானாகவே இயக்கப்படும். பின்வரும் வெளியீடு கிடைக்கிறது.
Constructor of class Sample...
The value is: 10
(iv) ஆக்கியின் உள்ளே வரையறுக்கப்படும் இனக்குழு மாறியானது, இனக்குழுவில் உருவாக்கப்படும் பொருள்களின் எண்ணிக்கையைக் கொண்டிருக்கும்.
12.
(i) பைத்தானில் இனக்குழு செயற்கூறு அல்லது வழிமுறை சாதாரண செயற்கூறுவைப்போல் ஒத்திருந்தாலும், ஒரு சிறிய வேறுபாடு உள்ளது. இனக்குழு வழிமுறையின் முதல் அளபுரு கண்டிப்பாக self என இருக்க வேண்டும்.
(ii) வழிமுறைகளை அழைக்கும் போது இந்த அளபுருவுக்கு மதிப்பை அனுப்ப தேவையில்லை. பைத்தான் தானாகவே இதற்கு மதிப்பை வழங்கும்.
(iii) வழிமுறையில் அளபுருக்களை எடுத்துக் கொள்ளாத போதும், முதல் அளபுருவாக self வரையறுக்கப்பட வேண்டும்.
(iv) வழிமுறை ஒரே ஒரு அளபுருவை ஏற்க வரையறுக்கப்பட்டால் அது இரண்டு அளபுருவாக எடுத்துக் கொள்ளும். அதாவது, self மற்றும் வரையறுக்கப்பட்ட அளபுரு.
13.
(i) பைத்தானில் மிக முக்கிய கட்டமைப்பு கூறுகளாகத் திகழ்பவை இனக்குழுவாகும். பொருள் என்பது தரவுகளின் மீது செயல்படும் செயற்கூறு மற்றும் தரவுகளின் தொகுப்பாகும். இனக்குழு என்பது பொருளின் வார்ப்புரு ( template ) ஆகும்.
(ii) பொருள்நோக்கு நிரலாக்கத்தின்படி பொருள்கள் இனக்குழுவின் சான்றுரு ( instance ) ( அல்லது ) இனக்குழு மாறி ( class variables ) என்று அழைக்கப்படும். பைத்தானில் அனைத்துமே பொருள்களாகும்.
(iii) எடுத்துக்காட்டாக, நிரலில் பயன்படும் அனைத்து முழு எண் மாறிகளும் " int " இனக்குழுவின் பொருளாகும். அதே போல அனைத்து சரங்களின் மாறிகளும் string இனக்குழுவின் பொருளாகும்.
14.
ஒன்றன் பின் ஒன்றாக நிறைவேற்றப்படும் கூற்றுகளின் வரிசையைக் கொண்டது வரிசை முறை கூற்று ஆகும். உன்னுடைய பெயர், முகவரி மற்றும் தொலைபேசி எண்ணை அச்சிடும் குறிமுறை, வரிசைமுறை கூற்றுக்கு எடுத்துக்காட்டு ஆகும்.
எடுத்துக்காட்டு:
#உன்னுடைய பெயர் மற்றும் முகவரியை அச்சிடும் நிரல் - வரிசைமுறை கூற்றுக்கு எடுத்துக்காட்டு
print ("Hello! This is Shyam")
print ("43, Second Lane, North Car Street, TN")
வெளியீடு:
Hello! This is Shyam
43, Second Lane, North Car Street, TN
15.
தேர்ந்தெடுப்பு வரிசையாக்கத்தின் போலி குறிமுறை:
(i) முதல் உறுப்பில் தொடங்கி அணியில் உள்ள மிகச் சிறிய உறுப்பைத் தேடி முதல் இடத்தில உள்ள உறுப்போடு இடமாற்றம் செய்ய வேண்டும். (அணியின் சுட்டு எண் 0 - ல்)
(ii) பிறகு இரண்டாவது இடத்திற்கு சென்று துணை அணியில் உலா மிகச் சிறிய உறுப்பை சுட்டெண் 1-லிருந்து இறுதி சுட்டெண் வரை தேட வேண்டும்
(iii) கொடுக்கப்பட்ட அணியில் இரண்டாவது இடத்தில படிநிலை 2 - ல் கண்டறிந்த உறுப்பை இடமாற்றம் செய்க இடமாற்றம் அல்லது இது துணை அணியின் முதல் இடத்தில இருக்கும்
(iv) அணி வரிசையாக்கம் செய்யப்படும் வரை, இதை மீண்டும் மீண்டும் செய்தல் வேண்டும்
16.
(i) இடம் நேரம் பரிமாற்றம் அல்லது நேரம் நினைவகம் பரிமாற்றம் என்பது குறைந்த நேரத்தில் அதிகமான சேமிக்கும் இடத்தைப் பயன்படுத்தி நெறிமுறையை தீர்க்கும் வழியாகும் (ii) கொடுக்கப்பட்ட நிரலாக்கத்தின் சிக்கலைத் தீர்ப்பதற்கு பல விதமான நெறிமுறைகளைப் பயன்படுத்தலாம்
(iii) அதில் சில நெறிமுறைகள் மிகவும் நேர செயல்திறன் உடையதாகவும் மற்றும் சில நெறிமுறைகள் மிகவும் இட செயல்திறன் உடையதாகவும் இருக்கும்
(iv) நேரம் / இடம் பரிமாற்றம் என்பது மெதுவான நிரல் இயங்கு நேரத்தில் நினைவகப் பயன்பாட்டைக் குறைக்கும் நிலைமையை அல்லது அதிகமான நினைவக பயன்பாட்டில் இயங்கு நேரத்தைக் குறைக்கும் நிலைமையைக் குறிப்பதாகும்
17.
அளவிடப்படும் இயங்கு நேரம் பின்வரும் காரணிகளைப் பொறுத்ததாகும்:
(i) இயந்திரத்தின் வேகம்
(ii) நிரல்பெயர்ப்பி மற்றும் பிற கணினி மென்பொருள் கருவிகள்
(iii) இயக்க அமைப்பு
(iv) பயன்படுத்தப்பட்ட நிரலாக்க மொழி
(v) தரவு தொகுதி
18.
(i) ஒரு நெறிமுறையை வரையறுக்கும் முறையை நெறிமுறை யுக்தி என்கிறோம்
(ii) கொடுக்கப்பட்ட n - ன் தொடர் பெருக்கலைக் காணும் உதாரணத்தை எடுத்துக் கொள்வோம்
(iii) தொடர் பெருக்கலைக் கணக்கிடும் செயற்கூறினை வரையறுப்பதன் மூலம் இதை செய்ய முடியும்
(iv) பிறகு, தேவைப்படும் சுழற்சியின் எண்ணிக்கை வரும் வரை, அந்த செயற்கூறை தற்சுழற்சி செயற்கூறாக அழைக்க வேண்டும்
19.
Asymptotic குறியீடுகள் நேரம் மற்றும் இடச்சிக்கல்களைப் பற்றிய அர்த்தமுள்ள கூற்றுகளைப் பயன்படுத்தும் ஒரு மொழியாகும். பின்வரும் மூன்று Asymptotic குறியீடுகள் நெறிமுறையில் நேரச் சிக்கலைக் குறிக்க மிகவும் பயன்படுகிறது.
(i) Big O : நெறிமுறையின் மிக மோசமான நிலையை விவரிக்க Big O பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.
(ii) Big \(\Omega\): Big Omega, Big O-வின் தலைகீழ் ஆகும். Big O-asymptotic (மோசமான நிலையில்) செயற்கூறின் உச்ச வரம்பையும், Big Omega அதன் கீழ்வரையை குறிக்கும் (சிறந்த நிலையில்).
(iii) Big : \(Θ\) = நெறிமுறையானது கீழ் எல்லை = மேல் எல்லை என்னும் சிக்கலைக் கொண்டிருந்தால், உதாரணத்திற்கு O (n log n) மற்றும் \(\Omega\)(n log n), ஆகிய சிக்கல்களைக் கொண்டுள்ளது என வைத்துக் கொள்வோம். உண்மையில் அதனுடைய சிக்கல் \(Θ\) (n log n), என்பது ஆகும். இதனுடைய அர்த்தம் என்னவென்றால் நெறிமுறையின் இயங்கு நேரம் மிகச் சிறந்த நிலை மற்றும் மிக மோசமான நிலை ஆகிய இரண்டு நிலையிலுமே எப்பொழுதும் n log n ஆக இருக்கும்.
20.
நேரம் காரணி: நெறிமுறைக்கு பொருத்தக் கூடிய முக்கிய செயல்பாடுகளின் எண்ணிக்கையை எண்ணுவதன் மூலம் நேரம் அளவிடப்படுகிறது, வரிசையாக்கம் நெறி முறையிலுள்ள பொருத்தங்களின் எண்ணிக்கை
இட காரணி: நெறிமுறைக்கு தேவைப்படும் மிக அதிகபட்ச நினைவக இடத்தை கணக்கிடுவதன் மூலம் இது அளவிடப்படுகிறது.
21.
(i) உள்ளீடு
(ii) வெளியீடு
(iii) எல்லையற்றது
(iv) வரையறுத்தல்
(v) செயல்தன்மை
(vi) உண்மைத் தன்மை
(vii) எளிமை
(viii) குழப்பமற்றது
(ix) செயலாக்கம்
(x) அடக்கமானது
(xi) சார்பற்றது
22.
a. List
b. Tuple
c. Class
d. Tuple
e. List
f. Class
23.
(i) list -ன் உறுப்புகளை இரு வழியில் அணுகலாம். முதல் வழி, அதிகம் பயன்படுத்தப்படும் பன்மடங்கு மதிப்பிருத்தல். இம்முறையில், list-ன் உறுப்புகள் பிரிக்கப்பட்டு, அனைத்து உறுப்புகளும் வேறு பெயர்களுடன் இணைக்கப்படுகிறது.
1st := [10, 20]
x,y := 1st
(ii) மேலே காணும் எடுத்துக்காட்டில், xயின் மதிப்பு 10 என்றும், Yயின் மதிப்பு 20 என மதிப்பிருத்தப்படும்.
(iii) இரண்டாம் முறையில் லிஸ்டின் உறுப்புகள், உறுப்புகள் தேர்வு செயற்குறிகள் மூலம் அணுகப்படுகிறது.
(iv) லிஸ்ட் லிட்டரல்ஸ் போல் அல்லாது கோவையில் ஒரு சதுர அடைப்புக்குறியை தொடர்ந்து வரும் மற்றொரு சதுர அடைப்புக்குறி லிஸ்டின் மதிப்புகளாக எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. ஆனால் முந்தைய கோவையின் உறுப்பை மதிப்பாக தேர்வு செய்யும்.
1st [0]
10
1st[1]
20
24.
| pure செயற்கூறு | impure செயற்கூறு | |
| 1. | pure செயற்கூறுவின் திருப்பி அனுப்பும் மதிப்பு முற்றிலும் செயலுருபுகளை பொறுத்தே அமையும். | impure செயற்கூறுவின் திருப்பி அனுப்பும் மதிப்பு முற்றிலும் செயலுருபுகளை பொறுத்து அமையாது, |
| 2. | செயற்கூறினை அதே செயலுருபுகளை கொண்டு அழைத்தால் எப்பொழுதும் அதே திருப்பி அனுப்பும் மதிப்பே கிடைக்கும். | Impure செயற்கூறினை அதே செயலுருபுகளை கொண்டு அழைத்தால் வெவ்வேறான திருப்பி அனுப்பும் மதிப்பு கிடைக்கும். |
| 3. | இது எந்த பக்கவிளைவுகளையும் கொண்டிருக்காது. | (எ.கா) random () date () |
| 4. | இந்த செயற்கூறு செயலுருபுகளை மாற்றம் செய்யாது. | இந்த செயற்கூறு செயலுருபுகளை மாற்றம் செய்யலாம். |
25.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards