12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Maths Applications of Matrices and Determinants Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 02/03/2021
12ஆம் வகுப்பு பொருளியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் மற்றும் விடைகள் - 2021 - 12th Standard Tamil Medium Economics Reduced Syllabus Annual Exam Model Question Paper with Answer Key - 2021
12ஆம் வகுப்பு Economics / பொருளியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Economics / பொருளியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Economics Test

1.
வளர்வீத வரி மற்றும் தேய்வீத வரி வரையறு.
2.
செலாவணி மாற்று வீதம் என்றால் என்ன?
3.
பொருளாதார அளவையியல் என்றால் என்ன?
4.
தலா (per capita) கரிமில வாயு அதிகமாக வெளியேறும் நாடுகள் யாவை?
5.
தடையற்ற வாணிகப் பகுதி என்றால் என்ன?
6.
மைய வங்கி என்பதனை வரையறு.
7.
பெருக்கி - வரையறு
8.
"விளைவுத் தேவை" என்றால் என்ன?
9.
GDP குறைப்பான் இலக்கணம் தருக
10.
11.
அமிலமழை பொழிவதற்கு முக்கிய காரணம்
நீர் மாசு
காற்று மாசு
ஒலி மாசு
நில மாசு
12.
தொகுத் தேவை எத்தனை பகுதிகளைக் கொண்டது?
3
2
1
4
13.
தனிநபர் வருமானம்
தேசிய வருமானம் - நேர்முக வரிகள்
தேசிய வருமானம் - மறைமுக வரிகள்
தேசிய வருமானம் - சமூக பாதுகாப்பு பங்களிப்பு + மாற்று செலுத்துதல்
தேசிய வருமானம் - வெளிநாட்டு நிகர வருமானம்
14.
எஸ்.டி.ஆர். குறிப்பது யாது?
நிதியம்
உலக வங்கி
சிறப்பு எடுப்பு உரிமைகள்
உலக வர்த்தக அமைப்பு
15.
வணிக வங்கிகள் வாணிபத்திற்கான குறுகிய கால கடனை அளித்தல், மற்றும் கடன் உருவாக்கம் செய்யும் நிறுவனங்கள் ஆகும்" என கூறியவர் _________
கல்பர்ட்சன்
மில்டன் ஃபிரைட்மேன்
மார்ஷல்
கீன்ஸ்
16.
பொருளாதார அமைப்பு முறைகள்
4
5
3
2
17.
கடனுக்கே அரசு தனியொரு நிதியினை ஏற்படுத்தும் அதனை _______ என்பர்.
பொது நிதி
மூழ்கும் நிதி
நேர்முக வரி
மறைமுக வரி
18.
பொருளாதார மந்த காலத்தில் அரசு _________ முதலீட்டிற்கு ஊக்கமளிக்கும்.
ஊக்குவிக்கப்பட்ட முதலீடு
தூண்டப்பட்ட முதலீடு
தன்னிச்சையான முதலீடு
மேற்கூறிய அனைத்தும்
19.
நவீன புள்ளியியலின் நிறுவனர் என்றழைக்கப்படுபவர் ____________
ரொனால்டு பிஷர்
ராக்னர் பிரிஷ்
கார்ல் பியர்சன்
பி.சி. மஹலனோபிஸ்
20.
"திட்டமிடல் சிறப்பாக அமைய வேண்டுமெனால் கூடுதலான திட்டமிடல் நிபுணர்கள் தேவை" எனக் கூறியவர் ................
தாமஸ் பிக்கெட்டி
டக்ளஸ் சி.நார
ராக்னர் நர்கஸ்
ஆர்தர் லூயிஸ்
21.
"ஸ்டாட்டிஸ்டிக்ஸ்"(Statistics) எனும் சொல் ______ ஆகும்.
ஒருமை
பன்மை
ஒருமை மற்றும் பன்மை
மேற்சொன்ன எதுவுமல்ல
22.
கீழ்க்காணும் திட்டங்களை அவை முன்மொழியப்பட்ட ஆண்டின் அடிப்படையில் கால வரிசைப்படி தொகுத்து விடையைத் தேர்ந்தெடுக்கவும்
i) மக்கள் திட்டம்
ii) பாம்பே திட்டம்
iii) ஜவகர்லால் நேரு திட்டம்
iv) விசுவேசுவரய்யா திட்டம்
i) ii) iii) iv)
iv) iii) ii) i)
i) ii) iv) iii)
ii) i) iv) iii)
23.
அமிலமழைக் _______ விளைவுகளில் ஒன்று.
காற்று மாசு
நீர் மாசு
நில மாசு
ஒலி மாசு
24.
கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் எது சரியான சொற்றொடர் எனக் கண்டுபிடி.
(i) ஜனாதிபதியால் நிதிக்குழு பணியமர்த்தப்படுகிறது.
(ii) ஒரு நிதிக்குழுவின் காலம் 5 ஆண்டுகள்
i மட்டும்
ii மட்டும்
இரண்டும்
இரண்டும் இல்லை
25.
கீழ்க்காணும் நாடுகள் எது சார்க் அமைப்பின் உறுப்பினர் இல்லை?
இலங்கை
ஜப்பான்
வங்காள தேசம்
ஆப்கானிஸ்தான்
26.
நாடுகள் பன்னாட்டு வாணிகத்தில் ஈடுபட அடிப்படைக் காரணம்
ஒரு நாடு குறிப்பிட்டப் பொருளையும் வேறு நாடு மற்றொரு பொருளையும் உற்பத்தி செய்ய விரும்புகிறது.
உற்பத்தி வளங்கள் நாடுகளுக்கிடையே ஏற்றத் தாழ்வுடன் பகிரப்பட்டுள்ளன.
பன்னாட்டு வாணிகம் லாப குவிப்பு வாய்ப்பை அதிகரிக்கப்படுகிறது.
நாடுகளில் நிலவும் வட்டி வீதமும் வெவ்வேறு அளவில் உள்ளது.
27.
இர்விங் ஃபிஷரின் பண அளவுக் கோட்பாடு புகழ்பெற்ற ஆண்டு
1908
1910
1911
1914
28.
பெருக்கியின் மதிப்பு =
1/(1-MPC)
1/MPS
1/MPC
அ மற்றும் ஆ
29.
அமைப்புசார் வேலையின்மையின் இயல்பு________
இயங்கா சமுதாயம்
சமதர்ம சமுதாயம்
இயங்கும் சமுதாயம்
கலப்புப் பொருளாதாரம்
30.
NNP என்பது _________
Net National Product
National Net Product
National Net Product
National Net Product
31.
நீடித்த நிலையான மேம்பாடு என்றால் என்ன?
32.
ரொக்க இருப்பு வீதத்தை நிர்ணயிக்கும் காரணிகள் யாவை?
33.
பணமாற்று வீதத்தை நிர்ணயிக்கும் காரணிகள்:
34.
பணச் சந்தை மற்றும் மூலதனச் சந்தை வேறுபாடு தருக.
35.
பேரியல் பொருளாதாரத்தின் குறைபாடுகள் யாவை?
36.
நிதி ஆயோக்கின் பணிகள் யாவை?
37.
ஐஎம்எப் -ன் கடன் வழங்கும் திட்டங்களில் ஏதேனும் மூன்றினைக் குறிப்பிடுக.
38.
பண அளிப்பு என்றால் என்ன?
39.
மிகைப் பெருக்கி - விளக்குக.
40.
காரணி செலவில் NNP - குறிப்பு தருக.
41.
இந்திய தொழில் மேம்பாட்டு வங்கியின் பணிகளை விளக்குக?
42.
பன்னாட்டு பண நிதியத்தின் பணிகளை விவரி.
43.
மைய அரசின் வருவாய் மூலங்களை விவரி.
44.
உடன்தொடர்பிற்கும், ஒட்டுறவிற்கும் இடையே உள்ள வேறுபாடுகளை விளக்குக
45.
பொருளாதார முன்னேற்றத்தை அளவிடும் முறைகளை விவரி:
46.
புள்ளியியலின் இயல்பு, எல்லைகளை விளக்குக.
47.
48.
நீடித்த அல்லது வளம் குன்றா வளர்ச்சி முக்கியத்துவம் மற்றும் அதன் நோக்கங்களை விளக்குக.
49.
50.
பண மாற்று வீதம் எவ்வாறு இரண்டு முறைகளில் நிர்ணயமாகிறது என்பதை எடுத்துக்காட்டு விளக்குக.
51.
ஒரு பொருளாதாரத்தில் பணவீக்கத்திற்கான காரணங்கள், விளைவுகள் யாவை?
52.
கீன்சின் நுகர்வுச் சார்பின் உளவியல் விதியினை வரைபடம் மூலம் விளக்குக.
53.
54.
பொருளாதார ஆய்வில், சமூகக் கணக்கிடுதலின் அவசியத்தை விவாதி.
1.
1. வருமானம் உயர உயர வரி வீதம் உயர்ந்தால் வளர்வீத வரி எனப்படும்.
2. வருமானம் உயர உயர வரி வீதம் குறைந்தால் தேய்வீத வரி எனப்படும்.
2.
ஒரு அலகு அயல் பணத்தை பெறுவதற்கு எத்தனை அலகு உள்நாட்டுப் பணத்தை கொடுக்கிறோம் என்பதே செலாவணி மாற்று வீதமாகும்.
3.
பொருளாதார அளவையியல் என்பது பொருளியல், புள்ளியியல், கணிதம் ஆகிய மூன்றின் ஒருங்கிணைப்பாகும்.
பொருளாதார அளவையியல் என்பது பொருளாதார அளவீட்டு முறை. பொருளாதார அளவையியல் பொருளாதாரத் தன்மைகளை அளவீடு செய்ய பயன்படுகிறது.
4.
1. சவுதி அரேபியா
2. ஆஸ்திரேலியா
3. அமெரிக்கா
4. கனடா
5. தென் கொரியா
5.
ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட உறுப்பினர் நாடுகள் அனைத்தும் ஒரே மண்டலமாகக் கருதி வாணிகத்தடைகளைக் குறைக்க ஒத்துழைக்கும். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நாடுகளுக்கிடையே ஒப்பந்தம் போடப்படுகிறது.
எ.கா : SAFTA, EFTA
6.
1. மைய வங்கி, ரிசர்வ் வங்கி அல்லது பணவியல் அதிகார அமைப்பு என்பது அரசின் பணம், பண அளிப்பு, வட்டிவிகிதம் ஆகியவற்றை மேலாண்மை செய்யும் ஒரு நிறுவனம் ஆகும்.
2. மேலும், நாட்டிலுள்ள வணிக வங்கிகளை மேற்பார்வையிடுவதும் இதன் பணியாகும்.
7.
நாட்டு வருமானத்தின் மாற்றத்திற்கும் முதலீட்டில் ஏற்படும் மாற்றத்திற்கும் உள்ள வீதத்தை பெருக்கி என வரையறுக்கலாம்.
\(\Delta I\)என்பது முதலீட்டில் அதிகரிப்பையும், \(\Delta Y\) என்பது வருமானத்தில் அதிகரிப்பையும் குறிக்கின்றது. எனவே,.
\(K=\frac { \Delta Y }{ \Delta I } \)
8.
விளைவுத் தேவை என்பது உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களின் மீது உண்மையிலேயே செலவு செய்கிற பணத்தின் அளவு ஆகும்.
9.
GDP குறைப்பான் என்பது GDP யில் காணப்படும் பண்டங்கள் மற்றும் பணிகளின் விலைமாற்ற குறியீட்டெண் ஆகும்.
10.
11.
(b)
காற்று மாசு
12.
(d)
4
13.
(c)
தேசிய வருமானம் - சமூக பாதுகாப்பு பங்களிப்பு + மாற்று செலுத்துதல்
14.
(c)
சிறப்பு எடுப்பு உரிமைகள்
15.
(a)
கல்பர்ட்சன்
16.
(c)
3
17.
(b)
மூழ்கும் நிதி
18.
(c)
தன்னிச்சையான முதலீடு
19.
(d)
பி.சி. மஹலனோபிஸ்
20.
(d)
ஆர்தர் லூயிஸ்
21.
(c)
ஒருமை மற்றும் பன்மை
22.
(b)
iv) iii) ii) i)
23.
(a)
காற்று மாசு
24.
(c)
இரண்டும்
25.
(b)
ஜப்பான்
26.
(b)
உற்பத்தி வளங்கள் நாடுகளுக்கிடையே ஏற்றத் தாழ்வுடன் பகிரப்பட்டுள்ளன.
27.
(c)
1911
28.
(d)
அ மற்றும் ஆ
29.
(c)
இயங்கும் சமுதாயம்
30.
(a)
Net National Product
31.
வருங்காலத் தலைமுறையினர் தங்கள் தேவைகளை நிறைவேற்ற எந்த ஒரு தடையும் இல்லாத நிலையில் தற்பொழுது உள்ள மக்களின் தேவையை நிறைவேற்றுதலே நீடித்த நிலையான மேம்பாடு எனப்படும்.
32.
1. பேர நோக்கம்
2. முன்னெச்சரிக்கை நோக்கம்
3. ஊக நோக்கம்
33.
1. பணவீக்க அளவு வேறுபாடுகள்
2. வட்டி விகித வேறுபாடுகள்
3. நடப்புக் கணக்கு பற்றாக்குறை
4. பொதுக்கடன்
5. வாணிப வீதங்கள்
6. அரசியல், பொருளாதார உறுதி தன்மை
7. பொருளாதார பின்னிறக்கம்
8. ஊக வாணிகம்
34.
| பணச் சந்தை | மூலதனச் சந்தை | |
| 1 | குறுகிய காலத்தில் முதிர்ச்சியுறுவதுமான நிதிக் கருவிகளை கையாளும். | நீண்ட கால நிதிக் கருவிகளை வாணிபம் செய்யும். |
| 2 | முதிர்ச்சியடையும் நோக்கில் பணச் சந்தை செயல்படும். | உற்பத்தி நோக்கில் அரசுக்கு நிதியினை திரட்டும் இடமாக மூலதனச் சந்தை செயல்படும். |
| 3 | இங்கு கையாளப்படும் நிதிக் கருவிகள் அரசுப் பத்திரம், வணிகப் பத்திரம், அழைப்புப்பணம், வைப்பு சான்று, மாற்றுச் சீட்டு, அந்நியச் செலாவணி போன்றவை ஆகும். | இதில் பாரம்பரியமான நிதிக் கருவிகள், கடன் பத்திரங்களும் சமபங்குகளும் பயன்படுத்தப்படும். |
35.
1. பொருளாதாரம் முழுமைக்கும் மிகைப்படுத்தி, பொதுமையாக்கும் ஆபத்து காணப்படுகிறது
2. எல்லா நிறுவனங்களும் ஒரே தன்மை உடையது என்ற எடுகோளைக் கொண்டது.
3. தொகுத்தாய்வு முறை மேற்கொள்ளும் போது தவறு காணப்பட வாய்ப்பு உள்ளது. எல்லா நாட்டிற்கும் பொருந்துவது இல்லை.
4. பொருளாதார நடவடிக்கைகளை பல பொருளாதாரமற்ற காரணிகள் தீர்மானிக்கின்றன.
36.
1. கூட்டுறவும் போட்டி அடிப்படையிலான கூட்டாட்சியும்
2. நாட்டின் நிகழ்வுகளின் மாநிலங்களைப் பங்கெடுக்க வைத்தல்
3. பரவலாக்கப்பட்டத் திட்டமிடல்
4. தொலைநோக்கும், காட்சித் திட்டமிடலும்
5. நிபுணர்களின் கூட்டமைப்பை உருவாக்குதல்
6. உகந்ததாக்குதல்
7. சச்சரவுத் தீர்த்தல்
8. வெளியுலகத் தொடர்பை ஒருங்கிணைத்தல்
9. உள்நாட்டு ஆலோசனை வழங்குதல்
10. திறன் உருவாக்குதல்
11. கண்காணித்தலும் மதிப்பிடுதலும்
37.
அடிப்படைக் கடன் வசதி : ஒரு உறுப்பினர் நாடு நிதியத்தில் அது பராமரிக்கும் மூலதனப் பங்குத் தொகையில் 25 விழுக்காடு அளவுக்கு நிபந்தனையற்ற கடன் பெறுவதையே அடிப்படைக் கடன் என்கிறோம். இந்த நிபந்தனையற்றக் கடன் வாங்கும் உரிமை கையிருப்பு பகுதி என அழைக்கப்படுகிறது.
விரிவாக்கப்பட்ட நிதி வசதி : உறுப்பு நாடுகள் தங்களின் மூலதனப்பங்குத் தொகையில் 140 விழுக்காடு அளவுக்கு அடிப்படைக் கடன் தொகைக்கு மேல் அதிகமாக கடன் பெற அனுமதிப்பதே விரிவாக்கப்பட்ட கடன் திட்டம்.
ஈடு செய் நிதி வசதி : நிதியம் 1963 ஆம் ஆண்டில் ஈடு செய்கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. குறைவான ஏற்றுமதி வருவாய் ஈட்டும் முதன்மைத் துறை பண்ட உற்பத்தியைச் சார்ந்திருக்கும் நாடுகளுக்கான தனிப்பட்ட கடன் திட்டமே ஈடு செய் கடன் திட்டமாகும்.
38.
1. ஒரு பொருளாதாரத்தில் உள்ள மொத்த பண அளவே பண அளிப்பு ஆகும்.
2. ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நாட்டில் புழக்கத்தில் உள்ள பண அளவைக் குறிப்பதே பண அளிப்பதாகும்.
3. வட்டி விகிதம், விலைவாசி போன்றவற்றை நிர்ணயிப்பதில் பண அளிப்பு முக்கியப் பங்காற்றுகிறது.
4. குறிப்பிட்ட காலத்தில் பண அளிப்பு நிலைக் (stock) கருத்தாகவும் ஒரு கால இடைவெளியில் தடையிலா ஓட்டக் (flow) கருத்தாகவும் உள்ளது.
39.
1. மிகைப் பெருக்கி எளிய பெருக்கியை விட சிறந்ததாகும். ஏனெனில் எளிய பெருக்கி தன்னிச்சை முதலீட்டை மட்டும் உள்ளடக்கி இருக்கும். ஆனால் மிகைப் பெருக்கி தன்னிச்சை முதலீடு மற்றும் தூண்டப்பட்ட முதலீடு ஆகிய இரண்டையும் கொண்டிருக்கும்.
2. ஆரம்ப முதலீட்டினால் வருமானத்தில் ஏற்படும் மொத்த விளைவை அறிய ஹிக்ஸ் K மற்றும் B ஐ இணைத்து மிகைப் பெருக்கி என்பதை கணித ரீதியில் உருவாக்கினார்.
3. மிகைப் பெருக்கியானது தூண்டப்பட்ட நுகர்வு, தூண்டப்பட்ட முதலீடு ஆகியவை இணைந்து செயல்படுவதாகும்.
40.
1. நிகர நாட்டு உற்பத்தி என்பது உற்பத்தியின் அங்காடி மதிப்பு ஆகும்.
2. காரணி செலவில் NNP என்பது உற்பத்தி காரணிகளுக்கு வழங்கப்பட்ட மொத்த வருமான செலுத்துதல் ஆகும்.
3. காரணி செலவில் நிகர நாட்டு வருமானத்தை பெறுவதற்கு, அங்காடி விலையில் NNP யின் பணமதிப்பிலிருந்து மறைமுக வரியைக் கழிக்க வேண்டும். மேலும் மானியங்களைக் கூட்ட வேண்டும்.
4. காரணி செலவில் NNP = சந்தை விலையில் NNP - மறைமுக வரி + மானியம்.
41.
இந்திய தொழில் மேம்பாட்டு வங்கியின் முக்கிய பணிகள் இரு பிரிவுகளாக பிரித்து கூறப்பட்டுள்ளன.
1. மற்ற தொழில் நிறுவனங்களுக்கு நிதியளிப்பது.
2. தொழில் நிறுவனங்களுக்கு நேரடியாகவோ அல்லது மற்ற நிதியளிக்கும் நிறுவனங்களுடன் இணைந்தோ நேரடியாக கடன் வழங்குவது ஆகும்.
42.
1. நாணய மாற்று வீதத்தில் நிலைத்தன்மையை கொண்டு வருதல்
(i) ஐ.எம்.எஃப்-ன் முதல் மற்றும் முக்கிய பணி நாணய மாற்று வீதத்தை நிலைப்படுத்துதல்.
(ii) நாணய மதிப்பு குறைப்பை வலியுறுத்துதல்
(iii) உறுப்பு நாடுகள் பன்முக மாற்று வீதங்களுக்கு செல்வதைத் தடுத்தல்.
2. அயல் நாட்டு செலுத்து சமமின்மையை சரிசெய்தல்
உறுப்பு நாடுகளுக்கு அந்நிய செலாவணியை விற்பனை செய்தல் மற்றும் அவற்றை கடனாக வழங்கி, அயல்நாட்டு செலுத்து சமமின்மையை சரிசெய்தல்.
3. இணை மதிப்பை உறுதி செய்தல்
உறுப்பு நாடுகள் அதன் நாணய மதிப்பினை தங்கள் அல்லது அமெரிக்க டாலர்கள் என்ற அடிப்படையில் உறுதி செய்ய வேண்டும்.
4. நாடுகளின் பணத்தேவையை அளிப்புக்கு சமமாகும் வகையில் பராமரித்தல் :
(i) உயர்வான தேவையுள்ள எந்த நாட்டுப் பணத்தையும் பற்றாக்குறையுள்ள பணம் என நிதியம் அறிவிக்கலாம்.
(ii) அந்த நாட்டிலிருந்து அவர்களின் பணத்தை கடன் வாங்கியோ தங்கத்தைக் கொடுத்து கொள்முதல் செய்தோ அளிப்பை நிதியம் உயர்த்தும்.
5. வாணிபத் தடைகளைக் குறைத்தல் :
இந்நிதியம் உறுப்பு நாடுகளால் விதிக்கப்படுகின்ற சுங்கவரி மற்றும் பிற வாணிபத் தடைகளைத் குறைப்பதன் மூலம் வாணிபத் தடைகளை குறைத்தல்.
6. கடன் வசதிகளை வழங்குதல் :
அடிப்படை கடன் வசதி, விரிவுபடுத்தப்பட்ட நிதி வசதி, ஈடுசெய் நிதி வசதி, கட்டமைப்பு சரிசெய்தல் ஆகிய கடன் வசதிகளை ஏற்படுத்தியுள்ளது.
43.
1. தொழில் நிறுவனம் மீதான வரி.
2. பணம், நாணயம் மற்றும் அந்நியச் செலாவணி
3. சுங்கவரி ஏற்றுமதி வரி உட்பட
4. கலால் வரி மற்றும் புகையிலை மீதான வரி
5. வேளாண் நிலம் தவிர்த்த பண்ணை வரி
6. நீதிமன்ற விதிக்காக மத்திய பட்டியலில் உள்ள இதர கட்டணங்கள்
7. அயல்நாட்டு கடன்கள்
8. இந்திய அரசால் அல்லது மாநிலங்களால் அமைக்கப்பட்ட லாட்டரி சீட்டுகள்
9. தபால் துறையின் சேமிப்பு வங்கி
10. தொலைத்தொடர்பு துறையின் வருவாய்கள்
11. மத்திய அரசிற்கு சொந்தமான சொத்துக்கள்
12. மத்திய அரசின் பொது கடன்
13. இரயில்வே
14. இந்திய ரிசர்வ் வங்கி
15. வருமானவரி (வேளாண் வரி தவிர்த்தல்)
16. செய்தித்தாள் மீதான வரி
17. சொத்துக்களின் மூலதன மதிப்பில் விதிக்கப்படும் வரி
18. மாற்று சீட்டு, காசோலை மீதான வில்லை கட்டணம்
44.
| வ. எண். | உடன்தொடர்பு | ஒட்டுறவு |
| 1 | இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாறிகளின் மதிப்பு ஒரே திசையில் மாற்றமடைகின்றதோ அல்லது எதிர்த் திசையில் மாற்றமடைகின்றதோ என்பதை ஆராயும் | ஒரு மாறியின் மதிப்பில் மற்றும் மற்ற மாறியின் மதிப்பில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதே ஒட்டுறவு பயன்படுத்தப்படுகின்றது |
| 2 | X, Y என்ற இரு மாறிகளும் தனித்த மாறிகள் | ஒரு மாறி தனித்த மாறியாகவும், மற்றொன்று சார்பு மாறியாகவும் எடுத்துக்கொள்ளப்படுகிறது |
| 3 | இரு மாறிகளுக்குமிடையே உள்ள தொடர்பை மட்டும் ஆராய்கின்றது. காரண விளைவுகளை ஆய்வு செய்வதில்லை | இரு மாறிகளுக்கிடையே காரண விளைவை ஆராய்ந்து அவைகளுக்கு இடையே சார்புத் தொடர்பை ஏற்படுத்துகின்றது |
| 4 | தொடர்பில்லா இரு மாறிகளுக்கு இடையில் போலி உடன்தொடர்பு ஏற்படும் | ஒட்டுறவு ஆய்வில் போலி ஒட்டுறவு இல்லை |
| 5 | இது அதிகம் மேற்கணக்கீட்டிற்கு பயன்படுவதில்லை | இது அதிகம் மேற்கணக்கீட்டிற்கு பயன்படுத்தப்படுகின்றத |
45.
நாட்டின் மொத்த உற்பத்தி (GNP):
ஒரு நாட்டின் புவி எல்லைக்குள் ஒரு குறிப்பிட்ட ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்கள் மற்றும் பணிகளின் சந்தை மதிப்புடன் அந்த நாட்டு மக்கள் வெளிநாடுகளில் ஈட்டிய வருமானத்திற்கும் இடையிலான வேறுபாட்டுத்த தொகையை கூட்டினால் வெளிநாட்டினர் சம்பாதித்து அவர்கள் நாட்டுக்கு அனுப்பிய வருமானத்திற்கும் கிடைக்கும் மொத்த மதிப்பே மொத்த நட்டு உற்பத்தி எனலாம். இந்த கருத்தினை கொண்டு ஒரு நாட்டின் பொருளாதார நிலையை மதிப்பிடலாம்
தலாவீத மொத்த நாட்டு உற்பத்தி:
இந்த அளவிடும் முறை நீண்டகாலத்தில் தலா உற்பத்தி மதிப்பு அதிகரித்தலைக் குறிப்பிடுகிறது. தலா வருமானம் அதிகரிக்கும் வேகத்தை விட உயர்வாக இருக்க வேண்டும் என இந்த அளவிடும் முறை வலியுறுத்துகிறது
நலன்:
பண்டங்கள் மற்றும் பணிகளை மக்கள் வாங்கி பயன்படுத்துவது அதிகரிப்பதையே பொருளாதார முன்னேற்றமாக கருதப்படுகிறது. மக்கள் நலன் என்ற கண்ணோட்டத்தில் பொருளாதார முன்னேற்றத்தை மக்களின் சுகாதாரம், கல்வி மற்றும் வாழ்க்கைத்தரத்தில் குறிப்பிடத்தகுந்த அளவு மேம்படுவதாக சார்ந்து வரையறுக்கலாம்
சமூகக் குறியீடுகள்:
மக்களின் அடிப்படை மற்றும் கூட்டுத் தேவையை நிவர்த்தி செய்வதை சமூக குறியீடுகள் என அழைக்கப்படுகிறது. நேரடியாக வழங்கப்படும் அடிப்படைத் தேவை என்பது மக்களின் சுகாதாரம், கல்வி, உணவு, குடிநீர், துப்புரவு மற்றும் வீட்டு வசதி ஆகியவையாகும் இவற்றைக் கொண்டு சமூக பின்னடைவு தவிர்க்கப்படுகிறது.
46.
புள்ளியியலின் இயல்புகள்:
1. புள்ளியியலில் அறிவியல், கலையியல் ஆகிய இரண்டின் தன்மைகளும் கலந்திருக்கின்றன.
2. முறைப்படுத்தப்பட்ட அறிவின் தொகுப்பினை அறிவியலாக காண்கின்றோம்.
3. புள்ளியியல் என்பது ஒரு முறைப்படுத்தப்பட்ட தொகுப்பாகும்.
4. இது விவரங்களைப் பகுத்தாய்ந்து, அதன் அடிப்படையில் கோட்பாடுகளை உருவாக்கவும், உருவாக்கப்பட்ட கோட்பாடுகளை சோதனை செய்து துல்லியமான முடிவுகளை எடுக்கவும் உதவுகிறது.
5. புள்ளி விவரங்களை திரட்டுவது, அட்டவணையிடுவது. முடிவுகளை எடுப்பது. தீர்மானங்களைச் செய்வது என பல புள்ளிவிவர நடவடிக்கைகளில் கலையியலின் உட்கூறுகள் கலந்துள்ளன.
புள்ளியியலின் பரப்பு:
1. புள்ளியியல் பரப்பு மிகவும் விரிந்ததாகும்.
2. புள்ளியியல் பல துறைகளில் பயன்படுத்தப்படுகிறது என்பதனை காண்போம்.
பொருளியலில் புள்ளியியல் :
1. பொருளியியலில் பல சிக்கல்கள் உள்ளன.
2. எடுத்துக்காட்டாக, உற்பத்தி, வருமானம், செலவு, பகிர்வு, சேமிப்பு போன்றவையாகும்.
3. விவரங்களைத் திரட்டுவது, வகைப்படுத்துவது, பகுப்பாய்வு செய்வது, முடிவுகளை எடுப்பது, கொள்கைகளை வகுப்பது என புள்ளியியல் பொருளியலில் இரண்டறக் கலந்துள்ளது.
தொழிலில் புள்ளியியல் : தொழிற்சாலைகளில் புள்ளியலின் பயன்கள் குறிப்பிடத்தகுந்ததாக உள்ளன. மிக முக்கியமாக தரக்கட்டுப்பாட்டு நுட்பம் (Quality Control) இங்குப் பயன்படுத்தப்படுகிறது.
புள்ளியிலும் வாணிகமும் :
1. வாணிகத்திற்கு புள்ளியியல் முக்கியமானதாகும்.
2. நடப்பு நிலைகளைப் புரிந்து கொள்ளவும், எதிர்காலப் போக்கினை உணர்ந்து கொள்ளவும் சந்தை ஆய்வுகள் மிக முக்கிய பங்காற்றுகின்றன.
புள்ளியியலும், கல்வியியலும் :
மாறி வரும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப புதிய கல்விக்கான தேவையைக் கண்டறிவதில் புள்ளியியல் மிகப்பெரிய பங்கினை வகிக்கின்றது.
புள்ளியியலும் திட்டமிடலும் :
1. அனைத்து அரசுத் துறைகளும் சிறப்பாக இயங்கும் பொருட்டு திட்டமிடலின் அடிப்படையிலே செயல்படுகின்றன.
2. திட்டமிடுதலில் முக்கிய கொள்கை முடிவுகளை எடுப்பதிலும், அதை செயல்படுத்துவதிலும் புள்ளிவிவரங்கள் துணை செய்கின்றன.
புள்ளியியலும், மருத்துவமும் :
1. மருத்துவத்தில் புள்ளியியல் பெருமளவுக்குப் பயன்படுகின்றது.
உடல் சோதனைகள் அனைத்தும் புள்ளி விவரங்களாகத் தொகுக்கப்படுகின்றன.
2. மருத்துவத் துறையில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் அனைத்திலும் புள்ளியியலின் பல்வேறு பகுதிகள் பயன்படுகிறது.
புள்ளியியலும் நவீன பயன்பாடுகளும்:
புள்ளியியல், நிறுவனங்களின் முடிவெடுத்தலில் புதிய மாதிரிகளை உருவாக்கி துல்லியமான முடிவுகளை எடுக்க உதவுகிறது.
இப்பணியினைச் செய்வதற்குப் பல புதிய மென் பொருட்களை உருவாக்கியுள்ளனர்.
47.
48.
இப்போதுள்ள சந்ததியினருக்கு மட்டுமின்றி எதிர்காலச் சந்ததியினருடன் வாழ்வதற்குத் தேவையான வளத்தை வைத்து விட்டு அடைகின்ற மேம்பாடே நீடித்த நிலையான மேம்பாடு எனப்படும்.
மேல்தட்டு மக்களின் ஆடம்பர விருப்பங்கள் மட்டுமல்லாது ஏழை மக்களின் அடிப்படைத் தேவைகளான, உணவு, துப்புரவு, உடல்நலம், கல்வி முதலானவற்றையும் அளிக்க வேண்டும்.
நீடித்த நிலையான மேம்பாட்டின் நோக்கங்கள்
1. எல்லா வடிவங்களிலும் எல்லா இடத்திலும் வறுமையை ஒழித்தல்.
2. அனைத்து வயதினரின் நலமான வாழ்வை உறுதிப்படுத்துதல்.
3. எல்லோரையும் உள்ளடக்கிய தரமான கல்வியை வழங்கி வாழ்நாள் முழுக்கக் கற்றுக்கொள்ள வசதி செய்தல்.
4. பெண்களுக்கு அதிகாரம் வழங்குதல் பாலின சமன்பாட்டை சாதித்தல்.
5. குடிநீரும், துப்புரவும் அனைவருக்கும் உறுதிப்படுத்துதல்.
6. தூய்மையான, நீடித்த, நிலையான, எளிதில் பெறக்கூடிய, சக்தியினை அனைவருக்கும் உறுதிப்படுத்துதல்.
7. தேவையான கட்டமைப்புகளை வழங்குதல், தொழில்மயமாக்கல், புத்தாக்கங்களை ஊக்குவித்தல்.
8. நாடுகளுக்குள்ளேயும், நாடுகளுக்கு இடையேயும் உள்ள சமமின்மையை அகற்றுதல்.
9. பாதுகாப்பான, அமைதியான யாவரையும் உள்ளடக்கிய நகரங்களை உருவாக்குதல்
10. நீடித்த நிலையான உற்பத்தியையும் நுகர்வினையும் உறுதிப்படுத்துதல்.
49.
50.
பணமாற்று வீதம்:
ஒரு அலகு அயல் பணத்தை பெறுவதற்கு எத்தனை அலகு உள்நாட்டுப் பணத்தை கொடுக்கிறோம் என்பதே பணமாற்று வீதமாகும்.
பணச்சமநிலைப் பரிமாற்று வீதம் வரைவிலக்கணம்:
"அயல்நாட்டுச் செலுத்து சமநிலையை ஒரு குறிப்பிட்ட காலத்தில் சம நிலையில் வைப்பதே பரிமாற்றச் சமநிலை வீதம் எனப்படும்."
சமநிலை பரிமாற்று வீதம் நிர்ணயமாதல்:
1. அயல்நாட்டுச் செலாவணி அங்காடியில் சமநிலைப் பரிமாற்று வீதம் பொது விலை நிர்ணய கோட்பாட்டின் படி நிர்ணயமாகிறது.
2. அங்காடி விசைகளான தேவையளவும் அளிப்பளவும் ஒருங்கே செயல்பட்டு சமநிலை விலையை நிர்ணயிக்கும் என்பதே பொது விலை நிர்ணயக் கோட்பாடாகும்.
3. இக்கோட்பாட்டின்படி பார்த்தால் அயல்நாட்டுச் செலாவணிக்கான தேவையளவும் அளிப்பளவும் சமமாகுமளவில் சமநிலை பரிமாற்று வீதம் நிர்ணயமாகும்.
4. வரைபடத்தில் அயல்நாட்டுச் செலாவணி தேவை, அளிப்பு வளைகோடுகள் சந்திக்கும் வெட்டுப்புள்ளியில் சமநிலை பரிமாற்று வீதம் நிர்ணயமாகும்.
5. மேலே உள்ள வரைபடத்தில் செங்குத்து அச்சு பண மாற்று வீதத்தையும், படுகிடை அச்சு அயல்நாட்டுச் செலாவணிக்கான தேவை. அளிப்பு அளவுகள் குறிக்கப்பட்டுள்ளன.
6. E- என்ற புள்ளியில் அயல்நாட்டுச் செலாவணி தேவை வளைகோடு அளிப்பு வளைகோட்டை வெட்டுகிறது. தேவையும் (DD) அளிப்பும் (SS) சந்திக்கும் வெட்டுப்புள்ளியில் (E) பரிமாற்று வீதம் சமநிலையை அடைகிறது.
7. தேவையும் அளிப்பும் OQ என்ற அளவில் இருக்கும்பொழுது நிர்ணயமாகும் OP2 எனும் பரிமாற்றுவீதமே சமநிலை பணமாற்று வீதமாகும்.
51.
பணவீக்கத்திற்கான காரணங்கள் :
1. பண அளிப்பு உயர்வு: காகிதப் பண அளிப்பு உயர்வினால் மொத்த தேவை அதிகரித்து பணவீக்கம் ஏற்படுகிறது.
2. செலவிடத் தகுந்த வருமான உயர்வு : மக்களின் செலவிடத் தகுந்த வருமானம் அதிகரிக்கும் பொழுது அவை பண்டங்கள், பணிகளுக்கான தேவையைத் தூண்டுகின்றன.
3. உயர்ந்து வரும் பொதுச் செலவுகள் : வளர்ச்சித் திட்டங்கள், சமுதாய நலத் திட்டங்கள் ஆகியவற்றை அமல்படுத்துதல் அரசின் செயல்பாடுகள் விரிவடைந்து வருவதால் பொதுச் செலவுகளின் அளவு கூடி வருகிறது.
4. நுகர்வோர் செலவு அதிகரித்தல் : தவணைக் கொள்முதல் முறைகளும் கடன் கொள்முதல் முறைகளும் அமல்படுத்தப்படுவதால் நுகர்ச்சிப் பண்டங்கள், பணிகளுக்கான தேவை அதிகரித்து அதன் காரணமாக விலைவாசி அதிகமாகி பணவீக்கம் ஏற்படுகிறது.
5. மலிவுப் பணக் கொள்கை : மைய வங்கியின் மலிவுப் பணக்கொள்கை பொருளாதாரத்தில் கடன் அளவை அதிகப்படுத்தும்.
6. பற்றாக்குறை நிதியாக்கம் : தொடர்ந்து பொதுச் செலவுகள் கூடிவருவதால், அரசின் வரவு செலவு திட்டத்தில் பற்றாக்குறை ஏற்படுகிறது.
7. கணக்கில் காட்டப்படாத சொத்துகள் நடவடிக்கைகள், கறுப்புப் பணம் ஆகியன: இலஞ்சம், வரி ஏய்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் கறுப்புப் பணமும் கணக்கில் காட்டப்படாத சொத்துக்கள் உருவாகின்றன.
8. பொதுக்கடனை மீளச் செலுத்துதல்: உள்நாட்டில் பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட பொதுக்கடனை அரசு திரும்பச் செலுத்தும்பொழுது மொத்தப் பண அளிப்பில் அதிகரிப்பு ஏற்படுகிறது.
9. ஏற்றுமதி உயர்வு: ஏற்றுமதியை ஊக்கப்படுத்தும் பொழுது உள்நாட்டில் பொருள் அளிப்பு குறைந்து, விலைவாசி உயர்வு ஏற்படுகிறது.
பணவீக்கத்தின் விளைவுகள் :
அ. உற்பத்தியின் மீதான விளைவுகள் :
1. மிதமான பணவீக்கம் உற்பத்தியாளர்களுக்கும், வணிகர்களுக்கும் ஒரு ஊக்கக் காரணியாக செயல்படும்.
2. அதேசமயம் உயர் பணவீக்கம் பணத்தின் மதிப்பினைக் குறைப்பதன் மூலம், மக்களின் சேமிப்பைக் குறைக்கும்.
3. பணவீக்கத்தின் காரணமாக பணத்தின் மதிப்பு குறிப்பிடத் தகுந்த அளவு குறைவதால் நாட்டில் ஏற்கனவே செய்யப்பட்டிருக்கும் வெளிநாட்டு மூலதனங்கள் திரும்பிச் செல்லும்.
ஆ. பகிர்வின் மீதான விளைவுகள் : நாட்டு வருமானப் பகிர்வில் உள்ள பல்வேறு தரப்பினரையும் பணவீக்கம் பல்வேறு வகையில் பாதிக்கின்றது. அவைகள் கீழே தரப்பட்டுள்ளன.
1. கடன் பெற்றோர் கடன் வழங்கியோர் : பணவீக்கக் காலத்தில் கடன் பெற்றோர் ஆதாயமும், கடன் வழங்கியோர் இழப்பையும் சந்திக்கின்றனர்.
2. தொழில் முனைவோர்கள் : உற்பத்தியாளர், வணிகர் என தொழில் முனைவோர் போன்று எவ்வகையானவராக இருந்தாலும், அவர்களுக்குப் பணவீக்கம் ஒரு வரமாகும்.
3. முதலீட்டாளர்கள் : கடன் பத்திரங்களில் முதலீடு செய்தோர் நிலையான வட்டியைப் பெறுவதால் அவர்கள் பணவீக்கக் காலத்தில் இழப்பினைச் சந்திப்பார்கள்.
52.
.
1. "உளவியல் விதியின் அடிப்படையாக மனிதன் தன் முன்னறிவு, அனுபவம், விரிவான உண்மை ஆகியவற்றின் அடிப்படையில் பெரும் நம்பிக்கையுடன் வருவாய் உயரும்போது நுகர்வை அதிகமாக்குவார்கள்; ஆனால் வருவாய் கூடிய அளவுக்கு நுகர்வு அதிகரிக்காது".
2. இந்த விதி மனிதர்கள் வருமானம் உயர்ந்த முழு அளவிற்கும் செலவு செய்யமாட்டார்கள் என எடுத்துரைக்கிறது.
ஊகங்கள்
1. மற்றவை மாறாது.
2. சுமூகமான சூழல் நிலவுகிறது.
3. முதலாளித்துவப் பொருளாதாரத்தில் தலையிடாக் கொள்கை கடைப்பிடிக்கப்படுகிறது.
விதியின் கருத்துகள்
இவ்விதி மூன்று கருத்துகளைக் கொண்டது.
1. வருமானம் உயரும்போது, நுகர்வுச் செலவும் அதிகரிக்கும்.
2. அதிகரித்த வருமானம் நுகர்வுச் செலவிற்கும், சேமிப்பிற்கும் இடையே சில விகிதத்தில் பிரிக்கப்படுகிறது.
3. அதிகரிக்கின்ற வருமானம் எப்பொழுதும் நுகர்வையும், சேமிப்பையும் அதிகரிக்கச் செய்யும். இவ்விதியின் மூன்று கருத்துகளும் அட்டவணை உதவியுடன் விளக்கப்படுகிறது.
கருத்துரை (1) : வருமானம் ₹60 கோடிகளாக அதிகரிக்கின்றது மற்றும் நுகர்வு ₹50 கோடிகளாக அதிகரிக்கிறது.
கருத்துரை (2) : அதிகரித்த ₹60 கோடி வருமானம்
இரண்டாக, நுகர்விற்கும், சேமிப்பிற்கும் இடையே முறையே பிரிக்கின்றது (அதாவது ₹50 கோடி நுகர்வும், ₹10 கோடி சேமிப்புமாக)
கருத்துரை (3) : வருமானம் அதிகரிக்கும் பொழுது நுகர்வு மற்றும் சேமிப்பு அதிகரிக்கின்றது. நுகர்வோ சேமிப்போ குறையவில்லை.
அட்டவணை: விதியின் மூன்று கருத்துரைகள்
| வருமானம் y | நுகர்வு C | சேமிப்பு S = Y - C |
| 120 | 120 | 0 |
| 180 | 170 | 10 |
| 240 | 220 | 20 |
இங்கே வருமானம் படுகிடை (x)- அச்சிலும், நுகர்வுச் சேமிப்பு செங்குத்து (y)- அச்சிலும் அளவிடப்படுகிறது. C - என்பது நுகர்வுச் சார்பு வளைகோடு 45 - டிகிரி கோடு வருமானமும், நுகர்வும் சம அளவாக இருப்பதைக் காட்டுகிறது.
53.
54.
சமூக கணக்கிடுதல் மற்றும் துறைகள் :
இம்முறையில் ஒரு நாட்டின் பொருளாதாரம் பல்வேறு துறைகளாகப் பிரிக்கப்படுகிறது. தனிமனிதர்கள்உள்ளடக்கிய ஒரு குழு அல்லது பல நிறுவனங்கள் சேர்ந்த ஒரு குழு முதலானவற்றுக்கு இடையே நடைபெறும் பொருளாதாரப் பரிமாற்றங்களை ஒரு துறை என்கிறோம். ஒரு நாட்டின் பொருளாதாரம் கீழ்க்காணும் துறைகளாகப் பிரிக்கப்படுகிறது. நிறுவனங்கள், குடும்பங்கள், அரசு, வெளிநாட்டு வணிகம், மூலதனத் துறை.
நிறுவனங்கள் :
நிறுவனங்கள் உற்பத்திக் காரணிகளைப் பணியில் அமர்த்தி பண்டங்கள், பணிகளை செய்கின்றன. உற்பத்தி
குடும்பங்கள் :
குடும்பங்கள் தங்கள் உழைப்பினை அளித்து கூலியைப் பெற்று, அதன் மூலம் பண்டங்கள், பணிகளை வாங்குகின்றன. அதாவது ஊதியத்தினைப் பெற்று பண்டங்களை வாங்குகின்றது. நிறுவனங்கள் குடும்பங்களின் பணியைப் பெற்று கூலியைத் தருகின்றன.
அரசு :
அரசுத் துறையில் பல நிலைகள் உள்ளன. கிராமம், வட்டம், மாவட்டம், மாநிலம், மத்திய அரசு என பல நிலைகள் உள்ளன. எடி மற்றும் பீகாக் கூற்றுப்படி, அரசு என்பது "ஒன்று சேர்க்கப்பட்ட மனிதர்கள்" எனக் குறிப்பிடுகின்றனர். வரி, தண்டனை, கட்டணம் மற்றும் கடன் ஆகியவை மூலமாக அரசு நிதியைத் திரட்டி பண்டங்களையும் பணிகளையும் வாங்குகிறது.
வெளிநாட்டு வணிகம் :
ஏற்றுமதி, இறக்குமதிகள் மூலம் கிடைக்கும் வருமானம், வெளிநாட்டுக் கடன்கள், வெளிநாட்டு மூலதன வருமானம், செலுத்துதல்கள் ஆகியவை வெளிநாட்டுத் துறையாகக் கருதப்படுகின்றன.
மூலதனத்துறை :
மூலதனத்துறை சேமிப்பையும் முதலீட்டையும் உள்ளடக்கியது. காப்பீட்டு நிறுவனம், வங்கிகள், நிதி நிறுவனங்கள் ஆகியவற்றின் பரிமாற்றங்கள் இதில் அடங்கும். GDPயில் துறைகளின் பங்கை மதிப்பிடுவதற்கு ஒரு நாட்டின் பொருளாதாரமானது முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் துறை எனப் பிரிக்கப்படுகிறது.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards