12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 01/03/2021
12ஆம் வகுப்பு இயற்பியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய இரண்டு மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Physics Reduced syllabus Two mark important Questions - 2021(Public Exam )
12ஆம் வகுப்பு Physics / இயற்பியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Physics / இயற்பியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Physics Test1.
3 cm விட்டமும் 2 மீ நீளமும் கொண்ட சுருள்வில்லானது 1000 சுற்றுகள் கொண்ட 5 படிவங்கள் உள்ளன. அதன் வழியே 5A மின்னோட்டம் பாயும் அதன் மையத்தில் ஏற்படும் காந்த தூண்டலைக் கணக்கிடுக.
2.
காந்த இருமுனையின் நடுவரைக் கோட்டில் உள்ள ஒரு புள்ளியில் காந்தப்புலத்திற்கான கோவையை எழுதுக.
3.
பண்பேற்றம் - வரையறு.
4.
ஒளி உமிழ்வு டையோடின் பயன்பாடுகளை வரிசைப்படுத்து.
5.
2 ev இயக்க ஆற்றல் கொண்ட ஒரு எலக்ட்ரானின் உந்தத்தைக் கணக்கிடுக.
6.
டூயான்-ஹண்ட் வாய்ப்பாடு தருக,
7.
ஒரு சிறிய தொலைநோக்கியில் பொருளருகு லென்சின் குவியத்தூரம் 180cm மற்றும் கண்ணருகு வில்லையின் குவியத்தூரம் 3 cm.தொலைநோக்கியின் உருப்பெருக்கம் என்ன? பொருளருகு லென்சிற்கும் கண் வில்லைக்கும் இடையேயானத் தொலைவு என்ன? 1 இடைவெளியில் அமைந்த இரு விண்மீன்கள் எவ்வளவு இடைவெளியில் தெரியும்?
8.
முழு அக எதிரொளிப்பு ஏற்பட நிபந்தனைகள் யாவை?
9.
மின்னோட்டம் வரையறு.
10.
ஒரு பொருளின் வழியே பாயும் மின்னோட்டத்தின் மதிப்புகள் பின்வரும் படத்தில் காட்டப்பட்டுள்ளன.
a) \(t=0\) ,
b) \(t=2\) ,
c) t = 5s ஆகிய நேரங்களில் பொருளின் வழியே செல்லும் மொத்த மின்னோட்டத்தை காண்க.
11.
ஒரு பொருள், எப்போது மின்னூட்டம் அடைகிறது?
12.
மின் இருமுனையின் திருப்பு விசையைக் கூறுக.
13.
உலோகப் பரப்பு ஒன்றின் மீது 9 x 1014 Hz அதிர்வெண் கொண்ட ஒளி படும்போது வெளிப்படும் ஒளிஎலக்ட்ரான்களின் பெரும வேகம் 8 x 105 m/s. எனில், உலோகப் பரப்பின் பயன்தொடக்க அதிர்வெண்ணைக் கணக்கிடுக.
14.
தொலைவிலுள்ள ஒளிமூலத்திலிருந்து வரும் ஒளியின் பாதையில், சிறிய வட்டத்தட்டு ஒன்றினை வைத்து அதன் நிழலைப் பார்க்கும்போது, நிழலின் மையம் கருமையாகத் தெரியுமா? அல்லது வெண்மையாகத் தெரியுமா?
15.
16.
தளவிளைவு அடைந்த மற்றும் தளவிளைவு அடையாத ஒளிகளுக்கு இடையேயான வேறுபாடுகள் யாவை?
17.
ப்ரானோஃபர் விளிம்பு விளைவில் ஏற்படும் முதல் சிறுமத்திற்கான சிறப்பு நேர்வுகளைக் கூறுக.
18.
அகஉள்நோக்கி (endoscope) செயல்படும் முறையை விவரி.
19.
வைரம் ஜொலிப்பதற்கான காரணத்தை விளக்குக.
20.
கதிரியக்கம் என்றால் என்ன?
21.
ஐசோபார் என்றால் என்ன? எடுத்துக்காட்டு ஒன்று தருக
22.
கிளர்வு ஆற்றல் என்றால் என்ன ?
23.
ரூதர்போர்டு ஆல்பா சிதறல் ஆய்வின் முடிவுகளைக் கூறுக.
24.
ஒரு முழு அலைதிருத்தியின் உள்ளீட்டு மற்றும் வெளியீட்டு அலை வடிவங்களை வரைக.
25.
மின்காந்த அலை நிறமாலை என்றால் என்ன?
26.
ஓசோன் படலத்தின் பயன்கள் யாது?
27.
அலையுறும் காந்தப்புல சமதள மின்காந்த அலையினை \({ B }_{ y }=(8\times { 10 }^{ -6 })sin[2\times { 10 }^{ 11 }t+300\pi x]T\)
(i) மின்காந்த அலையின் அலைநீளம்
(ii) அலையுறும் மின்புல சமன்பாட்டை தருவி
28.
மின்காந்த அலை ஒன்று x - அச்சில் பரவும் போது அவற்றின் காந்தப்புலம் y - அச்சில் அலையுறும் போது அவற்றின் அதிர்வெண் 3 x 1010 Hz எனில் அவற்றின் வீச்சு 10-7 T எனில்
(i) அலையின் நீளம்,
(ii) அலையுறும் மின்புலச் சமன்பாட்டை எழுதுக
29.
ஒரு மின் இருமுனையின் மின்னூட்டங்கள் 2 x 10-6 C மற்றும் -2 x 10-6 C இரண்டும் 1cm. தொலைவில் பிரித்து வைக்கப்பட்டுள்ளன. மின் இருமுனையால்
அ) அச்சுக்கோட்டில் அதன் மையத்திலிருந்து 1m தொலைவில் உள்ள புள்ளி
ஆ) நடுவரைக் கோட்டில் மையத்திலிருந்து 1m தொலைவில் உள்ள புள்ளி ஆகியவற்றில் ஏற்படும் மின்புலத்தைக் கணக்கிடுக.
30.
மின்னல் தாங்கி எவ்வாறு உயரமான கட்டடங்களை இடி மின்னலிலிருந்து பாதுகாக்கிறது?
31.
மின்தேக்குத் திறனின் அலகினை வரையறு (அ) பாரட் வரையறு.
32.
காஸ் விதியைக் கூறுக.
33.
மீக்கடத்து திறனில் (Super conductivity) உள்ள மாறுநிலை வெப்பநிலை அல்லது பெயர்வு வெப்பநிலை என்பது என்ன?
34.
வீடுகளில் மின்சுற்று துண்டிப்பான்கள் [Trippers] எவ்வாறு பயன்படுகிறது?
35.
டேஞ்சன்ட் கால்வனோ மீட்டர் மற்றும் இயங்கு சுருள் கால்வனோ மீட்டர் வேறுபடுத்துக.
36.
புவி ஒரு சீரற்ற காந்தப்புலத்தைப் பெற்றிருந்தாலும், உங்கள் ஆய்வுக் கூடத்தில் தடையின்றி தொங்கவிடப்பட்டுள்ள சட்டகாந்தம் இடப்பெயர்ச்சி இயக்கத்தை மேற்கொள்ளாமல், சுழற்சி இயக்கத்தை மட்டுமே மேற்கொள்கிறது. ஏன்?
37.
38.
ஒரு மாறுதிசை மின்னோட்டத்தின் சராசரி மதிப்பை வரையறு.
39.
தன் மின்தூண்டல் என்றால் என்ன?
40.
முதலாவது கம்பிச்சுருளில் பாயும் மின்னோட்டம் 2A இல் இருந்து 10 A ஆக 0.4 விநாடியில் மாறுகிறது. இரண்டாவது கம்பிச்சுருளில் 60mV மின்னியக்கு விசை தூண்டப்பட்டால், இரு கம்பிச்சுருள்களுக்கு இடையே உள்ள பரிமாற்று மின்தூண்டல் எண்ணைக் காண்க. மேலும் முதலாவது கம்பிச்சுருளில் பாயும் மின்னோட்டம் 4A இல் இருந்து 16A ஆக 0.03 விநாடியில் மாறும்போது, இரண்டாவது கம்பிச்சுருளில் தூண்டப்பட்ட மின்னியக்கு விசையைக் கணக்கிடுக. தூண்டப்பட்ட மின்னியக்கு விசையின் எண்மதிப்பை மட்டும் கருதுக.
41.
இலேசான பிரித்து வைக்கப்பட்டுள்ள இணைத்தட்டு மின்தேக்கி ஒன்றைக் கருதுக. தகடுகளின் ஆரம் R எனவும் இரண்டு தகடுகளையும் இணைக்கும் கடத்தியின் வழியே பாயும் மின்னோட்டம் 5A எனவும் கொண்டு, தகடுகளின் வழியே ஓரலகு நேரத்தில் மாற்றமடையும் மின்புலபாயத்தை நேரடியாகக் கணக்கிட்டு, அதன்மூலம் இணைத்தட்டு மின்தேக்கியின் தகடுகளுக்கு நடுவே உள்ள சிறிய இடைவெளியில் தகடுகளின் வழியே பாயும் இடப்பெயர்ச்சி மின்னோட்டத்தைக் கணக்கிடுக.
42.
100 N C-1 மதிப்புடைய சீரான மின்புலம் நிலவும் பகுதியில் வைக்கப்பட்டுள்ள 5 cm மற்றும் 10 cm பக்கங்கள் கொண்ட செவ்வகத்தைக் கடக்கும் மின்பாயத்தைக் கணக்கிடுக. கொடுக்கப்பட்ட கோணம் θ = 60˚. ஒருவேளை θ சுழி எனில், மின்பாயம் என்ன?

43.
இழுப்புத் திசைவேகம் மற்றும் இயக்க எண் ஆகியவற்றை வேறுபடுத்து.
44.
மின்னோட்டம் என்பது ஒரு ஸ்கேலார் ஏன்?
45.
நிலை மின்னழுத்த ஆற்றல் – வரையறு
46.
ஆம்பியர் சுற்று விதியைக் கூறு?
47.
காந்தப்பாயத்தை வரையறு.
48.
மின்னூட்டத்தின் குவாண்டமாக்கல் என்றால் என்ன?
49.
20°C வெப்பநிலையில் ஒரு கம்பிச் சுருளின் மின்தடை 3Ω மற்றும் α = 0.004/oC எனில் 100oC வெப்பநிலையில் அதன் மின்தடையைக் காண்க?
50.
ஒரு தாமிரக்கம்பிக்கு அளிக்கப்படும் மின்புலத்தின் எண்மதிப்பு 570 NC-1 எனில் எலக்ட்ரான் பெறும் முடுக்கத்தை கண்டுபிடி.
1.
சுற்றுகளின் எண்ணிக்கை N = 5 x 1000 = 500
நீளம் l = 2m
மின்னோட்டம் I = 5A
காந்தத் தூண்டல் \(B=\cfrac { { \mu }_{ 0 }NI }{ l } =\cfrac { 4\pi \times { 10 }^{ -7 }\times 5000\times 5 }{ 2 } \)
\(B=1.57\times { 10 }^{ -2 }T\)
2.
pm = pm \(\vec{i}\)
\(\left|\overrightarrow{p_m}\right|=\mathrm{p}_{\mathrm{m}}=\mathrm{q} 2 l\)
3.
குறைந்த அதிர்வெண் கொண்ட அடிக்கற்றை சைகையானது அதிக அதிர்வெண் கொண்ட ரேடியோ சைகையின் மீது மேற்பொருத்தப்படுதல் பண்பேற்றம் எனப்படும்.
4.
அறிவியல் மற்றும் ஆய்வகக் கருவிகளின் முன்பக்க பலகையில் சுட்டு விளக்கமாகப் பயன்படுகிறது.
ஏழு உறுப்பு காட்சித் திரையாகப் (seven segment display) பயன்படுகிறது.
போக்குவரத்துச் சைகை விளக்குகள், அவசர கால ஊர்திகளின் விளக்குகள் போன்றவற்றில் பயன்படுகிறது.
தொலைக்காட்சி, அறை குளிரூட்டி ஆகியவற்றின் தொலை இயக்கிக் கருவியாகப் பயன்படுகிறது.
5.
\(K=2eV=2\times 1.6\times { 10 }^{ -19 }J;m=9.1\times { 10 }^{ -31 }kg\)
எலக்ட்ரானின் உந்தம்
\(p=\sqrt { 2mk } \)
\(p=\sqrt { 2\times 9.1\times { 10 }^{ -31 }\times 2\times 1.6\times { 10 }^{ -19 } } \)
\(p=\sqrt { 5824\times { 10 }^{ -50 } } \)
\(p=7.631\times { 10 }^{ -25 }kg{ ms }^{ -1 }\)
6.
அதிவேக எலக்ட்ரான் ஆனது இலக்குப் பொருளை ஊடுருவும் பொழுது தனது மொத்த ஆற்றலையும் இழக்கும். இதனால் அதிகபட்ச அதிர்வெண் அல்லது குறைந்த பட்ச அலைநீளம் \({ \lambda }_{ 0 }\) கொண்ட X-கதிர் ஃபோட்டான் உமிழப்படுகிறது.
\({ \lambda }_{ 0 }=\frac { he }{ eV } \) மற்றும் h, c, e மதிப்புகளைப் பிரதியிட \({ \lambda }_{ o }=\frac { 12400^{ o } }{ V } \mathring { A } \) V என்பது எலக்ட்ரான்கள் முடுக்கப்படும் மின்னழுத்தம். இது டூயான்-ஹண்ட் வாய்ப்பாடு எனப்படும்.
7.
\({ f }_{ 0 }=150cm,{ f }_{ e }=3cm\)
\(m=\cfrac { { f }_{ 0 } }{ { f }_{ e } } =\cfrac { 180 }{ 3 } =60\)
\(L={ f }_{ 0 }+{ f }_{ e },L\)
என்பது குழாயின் நீளம் அல்லது பொருளருகு கண்ணருகு லென்சுகளுக்கு இடைப்பட்ட தொலைவு
\(m=\cfrac { { \theta }_{ 1 } }{ \theta _{ 0 } } ,{ \theta }_{ i }=m\times { \theta }_{ 0 }\)
\( { \theta }_{ i }=60\times i'=60\times \cfrac { 1 }{ 60 } ={ I }^{ 0 }\)
\(m=60,L=183cm,{ \theta }_{ 1 }={ I }^{ 0 }\)
8.
(i) ஒளிக்கதிர் அடர்மிகு ஊடகத்திலிருந்து அடர்குறை ஊடகத்திற்கு செல்ல வேண்டும்.
(ii) அடர்மிகு ஊடகத்தில் படுகோணத்தின் மதிப்பு மாறுநிலைக் கோணத்தை விட அதிகமாக இருக்க வேண்டும்
9.
ஓரலகு காலத்தில் கடத்தியின் பரப்பு வழியே பாயும் நிகர மின்னூட்ட அளவே மின்னோட்டம் எனப்படும். \(I=\frac { Q }{ t } \)
10.
மின்னூட்டம் Q = மின்னோட்டம் x கால இடைவெளி = I x t
t = 0 வினாடியில் \(dq=dI\times dI\times t=5\times 0=0C\)
t = 2 வினாடியில் \(dq=dI\times t=5\times 2=10C\)
t = 5 வினாடியில் \(dq=dI\times t=0\times 5=0C\)
11.
ஒரு பொருளிலிருந்து, மற்றொன்றிற்கு நிகழும் எலக்ட்ரானின் பரிமாற்றத்தினால் மின்னூட்டம் அடைகிறது.
12.
திருப்பு விசை \( \tau =pEsin\theta \)
இங்கு p-இருமுனைத் திருப்புத்திறன்
E மின்புலம்,\(p=q\times 2d\)
13.
\( \lambda =9\times { 10 }^{ 14 }Hz;V=8\times { 10 }^{ 5 }m/s\)
\(E=hv-{ hv }_{ 0 }\Rightarrow { hv }_{ 0 }\Rightarrow { v }_{ 0 }\)
\(=\cfrac { h\gamma -E }{ h } =V-\cfrac { E }{ h } =V-\cfrac { 1 }{ 2 } { mv }^{ 2 }\)
\( \cfrac { 9\times { 10 }^{ 14 }-\left[ \frac { 1 }{ 2 } \times 9.1\times { 10 }^{ -31 }\times \left( 8\times { 10 }^{ 5 } \right) ^{ 2 } \right] }{ 6.626\times { 10 }^{ -34 } } =4.605\times { 10 }^{ 14 }\)
\({ v }\simeq 4.6\times { 10 }^{ 14 }Hz\)
14.
தடை ஏற்படுத்தும் பொருள் ஒளியின் அலைநீளத்தை ஒட்டி அமையும்போது நிழலின் மையம் பொலிவாகத் தோன்றும். ஒளியின் விளிம்பு விளைவினால் இது நடைபெறுகிறது.
15.
16.
| வ.எண் | தளவிளைவு அடைந்த ஒளி | தளவிளைவு அடையாத ஒளி |
| 1. | ஒளிக்கதிர் பரவும் திசைக்குச் செங்குத்தாக உள்ள ஒரே தளத்தில் மட்டும் மின்புல வெக்டர்கள் அதிர்வுகளை பெற்றிருக்கும். | ஒளிக்கதிர் பரவும் திசைக்குச் செங்குத்தாக உள்ள அனைத்து திசைகளிலும் மின்புல வெக்டர்களின் அதிர்வுகள் சமமாகப் பங்கிடப்பட்டிருக்கும். |
| 2. | ஒளி பரவும் திசையைப் பொருத்து சமச்சீரற்றது. | ஒளிக்கதிர் பரவும் திசையைப் பொருத்து சமச்சீரானது. |
| 3. | தளவிளைவு ஆக்கிகளைப் பயன்படுத்தி தளவிளைவு அடையாத ஒளியிலிருந்து தளவிளைவு அடைந்த ஒளி பெறப்படுகிறது. | மரபான ஒளி மூலங்களிலிருந்து இவ்வகையான ஒளி கிடைக்கிறது. |
17.
ஒற்றைப்பிளவு விளிம்பு விளைவில் முதல் சிறுமத்தின் சமன்பாடு a sin 6 1 முதல் சிறுமத்தின் கோணப் பரவல், sin \(\theta\) = \(\lambda\). இருபக்கங்களிலும் உருவாகும் முதல் சிறுமங்களுக்கு நடுவில் மைய பெருமம் காணப்படும். இதற்கான சிறப்பு நேர்வுகளை இங்கு காண்போம்:
(i) a < \(\lambda\) எனில், sin \(\theta\). இது சாத்தியமில்லை. எனவே, விளிம்பு விளைவு நடைபெறாது,
(ii) a < \(\lambda\) எனில், sin \(\theta\) = 1. அதாவது, \(\theta\) = 90o. இதன் பொருள் முதல் சிறுமம் 90° இல் ஏற்படுகிறது என்பதாகும். எனவே, வடிவியல் ரீதியான நிழல் பகுதி முழுவதும் மையப் பெருமம் பரவி, விளிம்பு விளைவுக் கதிரை 90° வளைக்கிறது.
(iii) a > \(\lambda\) மற்றும் அலைநீளத்துடன் ஒப்பிடத்தக்க அளவில் அமையும்போது அதாவது, a = 2\(\lambda\) எனும்போது, sin \(\theta\) = 1/2. எனவே \(\theta\) = 30°. கணிசமான பரவலுடன் விளிம்பு விளைவு காணப்படுகிறது. ஆகவே, விளிம்பு விளைவு தெளிவாகக் காணப்படுவதற்கு பிளவின் அகலம் a ஆனது ஒளியின் அலைநீளம் \(\lambda\)வை விட ஒரு சில மடங்குகளாக இருத்தல் வேண்டும் என்பது தெளிவாகிறது.
(iv) a >> \(\lambda\) விற்கு sin \(\theta\) <<1. அதாவது. முதல் சிறுமம் பிளவின் அகலத்திற்குள்ளாகவே அமையும். எனவே, விளிம்பு விளைவைக் காண இயலாது.
18.
உள்நோக்கு உடற்குழாய் என்பது ஒளி இழைகளின் கட்டு ஆகும். இது முழு அக எதிரொளிப்புத் தத்துவத்தில் இயங்குகிறது. குழாய் வடிவிலுள்ள இது, நோயாளியின் உடலுக்குள் ஒரு துவாரம் அல்லது வாய் வழியே செலுத்தப்படுகிறது. வெளி முனையிலிருந்து செல்லும் ஒளிக்கற்றை முழு அக எதிரொளிப்பு அடைந்து உடல் உள் உறுப்புகளின் மீது பாய்ச்சப்படும். மறு முனையில் உள்ள காமிரா மூலம் மருத்துவர் உள் உறுப்புகளை ஆராய முடியும். அறுவை சிகிச்சைகளையும் மேற்கொள்ளலாம்.
19.
வைரம் ஜொலிப்பிற்குக் காரணம் அதன் உள்ளே நடைபெறும் முழு அக எதிரொளிப்பே ஆகும். வைரத்தின் ஒளிவிலகல் எண் கிட்டத்தட்ட 2.417 ஆகும். இம்மதிப்பு சாதாரண கண்ணாடியின் ஒளிவிலகல் எண் மதிப்பான கிட்டத்தட்ட 1.5 ஐ விட மிக அதிகம். வைரத்தின் மாறுநிலைக்கோணம் ஏறத்தாழ 24.4° ஆகும். எனவே, 24.4° முதல் 90° வரை உள்ள எந்தப் படுகோணத்தில் ஒளிக்கதிர் வைரத்தின் மீது விழுந்தாலும் வைரத்தின் உள்ளே நுழைந்த ஒளி வெளியேறுவதற்கு முன்பாக வைரத்தின் உட்புறமுள்ள வெட்டு முகங்களில் பலமுறை முழு அக எதிரொளிப்பு அடைவதால் வைரம் நன்கு ஜொலிக்கிறது.
20.
ஒரு தனிமத்திலிருந்து அதிக ஊடுருவு திறன் கொண்ட கதிர்வீச்சுகளான. \(\alpha ,\beta \) மற்றும் \(\gamma \) கதிர்களை தன்னிச்சையாக வெளிவிடும் நிகழ்வு கதிரியக்கம் எனப்படும். கதிர்வீச்சுக்களை வெளியிடும் தனிமங்கள் கதிரியக்கத் தனிமங்கள் எனப்படும்.
21.
சமமான நிறை எண் A மற்றும் வேறுபட்ட அணுஎண் Z கொண்ட வெவ்வேறு தனிமங்களின் அணுக்கள் ஐசோபார்கள் எனப்படும்.
\(_{ 16 }^{ 40 }{ S },_{ 17 }^{ 40 }{ CI },_{ 18 }^{ 40 }{ Ar }\)
22.
எந்தவொரு குறைந்த ஆற்றல் நிறையிலிருந்தும் அதைவிட அதிக ஆற்றல் நிலைக்கு ஒரு எலக்ட்ரானை கிளர்வுறச் செய்ய தேவையான ஆற்றல் கிளர்வு ஆற்றல் எனப்படும்.
ஹைட்ரஜனின் முதல் கிளர்வு ஆற்றல் E1 = 10.2eV
ஹைட்ரஜனின் இரண்டாம் கிளர்வு ஆற்றல் EII = 12.1eV
23.
1. பல \(\alpha\) துகள்கள் தங்க மென்தகட்டினை ஊடுருவி நேர்கோட்டில் செல்கின்றன.
2. சில \(\alpha\) துகள்கள் சிறிய கோணத்துடன் விலகலடைகிறது.
3. குறைந்த \(\alpha\) துகள்கள் 90° விட அதிகோணத்துடன் விலகலடைகிறது.
4. மிகக்குறைந்த \(\alpha\) துகள்கள், 180° கோண அளவில் பின்னோக்கிய சிதறல் அடைகின்றன.
மேற்கண்ட சோதனையிலிருந்து ரூதர்போர்டின் முடிவுகள்
1. அணு ஒன்றில் ஏராளமான வெற்றிடமும் 10-14 மீ அளவு கொண்ட அணுக்கருவும் அமைந்துள்ளது.
2. அணுக்கரு நேர்மின்னூட்டம் கொண்டது.
3. அணுவின் பெருமளவு நிறை அணுக்கருவில் அமைந்துள்ளது.
4. அணுக்கருவைச் சுற்றி எலக்ட்ரான்கள் வட்டப்பாதையில் இயங்குகின்றன.
24.

25.
அலைநீளம் அல்லது அதிர்வெண்ணின் அடிப்படையில் வரிசைக்கிரமமாக அமைக்கப்பட்ட மின்காந்த அலைகளின் தொகுப்பே மின்காந்த நிறமாலை
26.
சூரியனிலிருந்து வரும் புற ஊதாக் கதிர்களை புவி மீது படாமல் பாதுகாக்கும் படலமாக ஓசோன் படலம் விளங்குகிறது
27.
\(B_{ y }=B_{ o }sin\left[ 2\pi \left( \frac { x }{ \lambda } +\frac { t }{ T } \right) \right] \)
கொடுக்கப்பட்ட சமன்பாடு \({ B }_{ y }=(8\times { 10 }^{ -6 })sin[2\times { 10 }^{ 11 }t+300\pi x]T\)
ஒப்பிடும் பொழுது,
\(\frac { 2\pi }{ \lambda } =300\pi ;{ B }_{ o }=8\times { 10 }^{ -6 }T\)
(i) \(\lambda =\frac { 2\pi }{ 300\pi } =\frac { 1 }{ 150 } m=0.67cm\)
\((ii){ E }_{ 0 }=c{ B }_{ o }=3\times { 10 }^{ 8 }\times 8\times { 10 }^{ -6 }=2400V{ m }^{ -1 }\)
மின்புலம் அலைபரவும்
x - அச்சுக்கு செங்குத்தாகவும், காந்தப்புலம் (y - அச்சில்) அமையும்
\({ E }_{ z }=2400sin[2\times { 10 }^{ 11 }t+300\pi x]{ Vm }^{ -1 }\)
28.
\((i)\ \lambda =\frac { C }{ V } =\frac { 3\times { 10 }^{ 8 } }{ 3\times { 10 }^{ 10 } } ={ 10 }^{ -2 }m\)
\((ii)\ { E }_{ o }=c{ B }_{ o }=3\times { 10 }^{ 8 }\times { 10 }^{ -7 }=30{ Vm }^{ -1 }\)
\({ E }_{ z }={ E }_{ o }sin2\pi \left[ vt+\frac { 1 }{ \lambda } x \right] =30sin2\pi (3\times { 10 }^{ 10 }t+100x){ Vm }^{ -1 }\)
29.
+q = 2 x 10-6 C மற்றும் -2 x 10-6 C
2d = 1cm = 1.01cm
மின் இருமுனையின் திருப்பு திறன் = P = q x 2s
= 2 x 10-6 x 0.01 = 2 x 10-8 Cm
அ) அச்சுக்கோட்டில் மையத்திலிருந்து 1m தொலைவில் மின்புலம் r > > d எனில்
\(E=\frac { 1 }{ 4\pi { \varepsilon }_{ o } } \frac { 2P }{ { r }^{ 3 } } =\frac { 9\times { 10 }^{ 9 }\times 2\times 2\times { 10 }^{ -8 } }{ { 1 }^{ 3 } } =360{ NC }^{ -1 }\)
ஆ) நடுவரைக்கோட்டின் மையத்திலிருந்து 1m தொலைவில் மின்புலம்
\(E=\frac { 1 }{ 4\pi { \varepsilon }_{ o } } \frac { 2P }{ { r }^{ 3 } } =\frac { 9\times { 10 }^{ 9 }\times 2\times 2\times { 10 }^{ -8 } }{ { 1 }^{ 3 } } =180{ NC }^{ -1 }\)
30.
(i) எதிர் மின்னூட்டம் பெற்ற மேகம் கட்டடத்தின் மேல் செல்லும் போது, கடத்தியின் கூர்முனைகளில் நேர் மின்னூட்டம் தூண்டப்படுகிறது
(ii) கூர்முனை செயல்பாட்டினால் அருகில் உள்ள காற்று அயனியாக்கப்படுகிறது.
(iii) இதன்மூலம் உருவாகும் எதிர்மின்னூட்டம் மேகத்திலுள்ள ஒரு பகுதி மின்னூட்டங்களை சமன் செய்கிறது
(iv) கூர்முனைகள் நோக்கி விரட்டப்பட்ட எதிர்மின்துகள்கள், தாமிரத்தண்டின் வழியே தரை அடைகிறது
(v) இவ்வாறு கட்டடங்கள் பாதுகாக்கப்படுகின்றன
31.
மின்தேக்குத் திறனின் அலகு பாரட் (farad) ஆகும். கடத்தி ஒன்றிற்கு 1 கூலும் மின்னூட்டம் அளிக்கப்படும் போது அதன் மின்னழுத்த உயர்வு 1 வோல்ட் எனில் கடத்தியின் மின்தேக்குத்திறன் 1 பாரட் (farad) ஆகும்
32.
காஸ் விதியின்படி, எந்தவொரு மூடிய பரப்பில் செயல்படும் மின்புலத்தின் மொத்த பாய மதிப்பு. அப்பரப்பில் உள்ள மொத்த மின்னூட்டத்தின் \(\frac { 1 }{ { \varepsilon }_{ o } } \) மடங்குக்குச் சமம். அதாவது, \({ \phi }=\frac { q }{ { \varepsilon }_{ o } } \)
33.
1. ஒரு சில பொருட்களின் வெப்பநிலையானது ஒரு குறிப்பிட்ட வெப்பநிலைக்கு கீழே குறையும்போது அதன் மின்தடை எண் சுழியாகும்.
2. இந்த வெப்பநிலையானது மாறுநிலை வெப்பநிலை அல்லது பெயர்வு வெப்பநிலை எனப்படும்.
3. இந்த நிகழ்வானது மீக்கடத்து திறன் எனப்படும்.
34.
1. தவறான மின் இணைப்புகள் அல்லது அளவுக்கு அதிகமான மின்னோட்டம் மின்சுற்றில் பாயும்போது மின் துண்டிப்பான்களின் சாவி மின்சுற்றை திறந்துவிடும்.
2. பின்னர் மின்சுற்றின் பழுதை நீக்கியவுடன், நாம் மின் துண்டிப்பானின் சாவியை மூடிவிடலாம்.
35.
| டேஞ்சன்ட் கால்வனோ மீட்டர் | இயங்கு சுருள் கால்வனோ மீட்டர் |
| 1. டேஞ்சன்ட் விதி தத்துவப்படி செயல்படும். | மின்னோட்டம் பாயும் வளையம் ஒன்றை சீரான காந்தப்புலத்தில் வைக்கும், தத்துவப்படி செயல்படும். |
| 2. காந்தத் தன்மையற்ற வட்டவடிவ சட்டம் பெற்றிருக்கும். | மெல்லிய காப்பிடப்பட்ட தாமிரக் கம்பியால் சுற்றப்பட்ட செவ்வக வடிவ கம்பிச் சுருள் பெற்றிருக்கும். |
| 3. காந்தப் புலத்தை அளக்க பயன்படுகிறது. | மின்னோட்டம் கண்டறிய பயன்படுகிறது. |
36.
1. ஆய்வுக் கூடத்திற்கான புவியின் காந்தப்புலம் சீரானது.
2. எனவே சுழற்சி இயக்கத்தை மட்டுமே மேற்கொள்கிறது. இடப்பெயர்ச்சி இயக்கத்தை மேற்கொள்ளவில்லை.
37.
38.
மாறுதிசை மின்னோட்டத்தின் சராசரி மதிப்பானது ஒரு நேர் அரைச்சுற்று அல்லது எதிர் அரைச்சுற்றில் உள்ள மின்னோட்டத்தின் அனைத்து மதிப்புகளின் சராசரி ஆகும்.
39.
(i) கம்பிச் சுருளோடு தொடர்புடைய காந்தப்பாயம் மாறினால் அதே சுருளில் மின்னியக்கு விசை தூண்டப்படுகிறது. இது தன்மின்தூண்டல் எனப்படும்.
(ii) தூண்டப்பட்ட மின்னியக்கு விசை தன்மின் தூண்டப்பட்ட மின்னியக்கு விசை எனப்படும்.
40.
நேர்வு (i): di1 = 10 – 2 = 8 A; dt = 0.4 s;
ε2 = 60 x 10-3V
நேர்வு (ii):
di1 = 16 – 4 = 12 A; dt = 0.03 s
(i) கம்பிச்சுருள்கள் இடையேயான பரிமாற்று மின்தூண்டல் எண்
\({ M } =\frac { { ε }_{ 2 } }{ { di }_{ 1 }/dt } \)
= \(\frac { 60\times { 10 }^{ -3 }\times 0.4 }{ 8 } \)
M = 3 x 10-3H
(ii) முதல் கம்பிச்சுருளில் மின்னோட்டம் மாறும் வீதத்தால் இரண்டாவது கம்பிச்சுருளில் தூண்டப்பட்ட மின்னியக்கு விசை
\(ε_2=M\frac{di_1}{dt} = \frac{3\times10^{-3}\times12}{0.03}\)
ε2 = 1.2 V
41.
தகடுகளின் பரப்பு = A
ஆரம் = R
தகடுகளை இணைக்கும் கடத்தியின் வழியே பாயும் மின்னோட்டம் I = 5 A
தகடுகளின் இடையே மின்புலம் E = \(\frac{\mathrm{Q} }{\mathrm{\varepsilon _{0}} A}\)
மின்பாயம் \(\phi_E=\frac{Q}{\varepsilon_o A} \times A=\frac{Q}{\varepsilon_o}\)
இடப்பெயர்ச்சி மின்னோட்டம் \(\mathrm{I}_{\mathrm{d}}=\varepsilon_o \frac{d \phi_E}{d t}\)
\(I_d=\varepsilon_o \frac{d}{d t}\left(\frac{Q}{\varepsilon_o}\right)\)
\(=\frac{d \phi}{d t}\)
இணைக்கும் கடத்தியின் வழியே பாயும் கடத்து மின்னோட்டம் அதன் வழியே ஓரலகு காலத்தில் பாயும் மின்னோட்டம் IC
\(\therefore\) Id = Ic = 5A
42.
மின்பாயம் \({ \Phi }_{ E }=\vec { E } .\vec { A } =EA \cos\theta =100\times 5\times 10\times { 10 }^{ -4 }\times \cos{ 60 }^{ 0 }\)
\(\Rightarrow { \Phi }_{ E }=0.25N{ m }^{ 2 }{ C }^{ 1 }\)
\(\theta ={ 0 }^{ 0 }\) எனில்
\({ \Phi }_{ E }=\vec { E } .\vec { A } =EA=100\times 5\times 10\times { 10 }^{ -4 }=0.5N{ m }^{ 2 }{ C }^{ -1 }\)
43.
| வ.எண் | இழுப்புத் திசைவேகம் | இயக்க எண் |
| 1 | கடத்தியில் உள்ள எலக்ட்ரான்களை மின்புலத்திற்கு உட்படுத்தும்போது அவை பெறும் சராசரித் திசைவேகம் ஆகும். | ஓரலகு மின்புலத்தினால் உருவாகும் இழுப்புத் திசைவேகமே இயக்க எண் ஆகும். |
| 2 | இதன் அலகு m/s | இதன் அலகு m2 / vs |
44.
மின்னோட்டம் என்பது, இரு ஸ்கேலார்களின் தகவு ஆகும். மேலும் மின்னோட்டம் என்பது மின்னோட்ட அடர்த்தி (J) மற்றும் பரப்பு வெக்டர் ஆகியவற்றின் பெருக்கற்பலன் என வரையறுக்கப்படுகின்றது.
\(\begin{aligned} &I=\frac{Q}{t} \\ \end{aligned}\)
\(\begin{aligned} &I=\vec{J} \cdot \vec{A} \end{aligned}\)
45.
நிலைமின்னழுத்த ஆற்றலானது, மின்துகள்களை அவ்வடிவமைப்பில், நிலை நிறுத்துவதற்குச் செய்யப்படும் வேலையாகும்.
நிலைமின்னழுத்த ஆற்றல் \(U=\frac{1}{4\piε_o}\frac{q_1q_2}{r}\)
46.
ஒரு மூடிய சுற்று வளைவின் மீதுள்ள காந்தப்புலத்தின் கோட்டு வழித் தொகையீட்டு மதிப்பு சுற்று வளைவினால் மூடப்பட்ட நிகர மின்னோட்டத்தின் \({ \mu }_{ o }\) மடங்கிற்குச் சமம்.
\(\oint _{ c }^{ }{ \overset { \rightarrow }{ B } .d\overset { \rightarrow }{ l } ={ \mu }_{ o } } \)I மூடப்பட்ட
47.
ஓரலகு பரப்பின் வழியே கடந்து செல்லும் காந்தப்புலக் கோடுகளின் எண்ணிக்கைக்கு காந்தப் பாயம் என்று பெயர்.
48.
எந்தவொரு பொருளில் உள்ள மின்னூட்டத்தின் மதிப்பும், அடிப்படை மதிப்பு e ன் முழு மடங்காகவே இருக்கும். இதுவே மின்னூட்டத்தின் குவாண்டமாக்கல் எனப்படும்.
q = ne இங்கு n என்பது ஒரு முழு எண்
n = 0, \(\pm\)1, \(\pm\)2, \(\pm\)3, \(\pm\)4, ...
இதுவே மின்னூட்டத்தின் குவாண்டமாக்கல் எனப்படும்.
49.
R0 = 3 Ω, T = 1000C, T0 = 200C
α = 0.004/0C, RT = ?
RT = R0(1 + α(T-T0))
R100 = 3(1 + 0.004 x 80)
R100 = 3.96 Ω
50.
E = 570 N C-1, e = 1.6 × 10-19 C,
m = 9.11 x 10-31 kg மற்றும் a = ?
F = ma = eE
a =\(\frac { eE }{ m } =\frac { 570\times 1.6\times 10^{ -19 } }{ 9.11\times 10^{ -31 } } \)
=\(\frac { 912\times 10^{ -19 }\times { 10 }^{ 31 } }{ 9.11 } \)
= 1.001 x 1014 ms-2.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards