12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set C
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set B
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set C

Published on: 04/10/2020
12 ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் பயிற்சி 3 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Accountancy Tamil Medium Model 3 Mark Book Back Questions (New Syllabus 2020)
12ஆம் வகுப்பு Accountancy / கணக்குப்பதிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Accountancy / கணக்குப்பதிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Accountancy Test

1.
இராணி, ஜெயா மற்றும் ரதி என்ற கூட்டாளிகள் தங்கள் இலாபம் மற்றும் நட்டங்களை 2:2:1 என்ற விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். 31.3.2018 அன்று ரதி என்பவர் கூட்டாண்மையை விட்டு விலகினார். முந்தைய ஆண்டுகளின் இலாபம் பின்வருமாறு:
2014: ரூ.10,000; 2015: ரூ.20,000; 2016: ரூ.18,000 மற்றும் 2017: ரூ.32,000 2018 ஆம் ஆண்டில் கூட்டாளி விலகல் நாள் வரையிலான இலாபத்தில் ரதிக்குரிய இலாபப் பங்கினை கீழ்க்கண்ட நிலைகளில் தயாரிக்கவும்.
(i) இலாபம் முந்தைய ஆண்டுகளின் இலாபத்தின் அடிப்படையில் பகிர்ந்தளிக்கப்படுவதாக இருந்தால்
(ii) இலாபம் கடந்த நான்கு ஆண்டுகளின் சராசரி இலாபத்தின் அடிப்படையில் பகிர்ந்தளிக்கப்படுவதாக இருந்தால்
மேலும் மாறுபடும் முதல் முறை எனக்கொண்டு, தேவையான குறிப்பேட்டுப் பதிவுகள் தரவும்.
2.
வினோத், கார்த்தி மற்றும் பிரணவ் என்ற கூட்டாளிகள் 2:2:1 என்ற விகிதத்தில் இலாபம் மற்றும் நட்டங்களைப் பகிர்ந்து வந்தனர். 2018, ஏப்ரல் 1 அன்று பிரணவ் என்பவர் கூட்டாண்மையிலிருந்து விலகினார். அவருடைய விலகலின்போது கீழ்க்கண்ட சரிக்கட்டுதல்கள் செய்யப்பட வேண்டும்.
(i) நிலம் மற்றும் கட்டடத்தின் மதிப்பை ரூ.18,000 அதிகரிக்க வேண்டும்.
(ii) இயந்திரத்தின் மதிப்பை ரூ.15,000 குறைக்க வேண்டும்.
(iii) கொடுபட வேண்டிய செலவுகளுக்கு ரூ.8,000 ஒதுக்கு உருவாக்க வேண்டும்.
குறிப்பேட்டுப் பதிவுகள் தந்து மறுமதிப்பீட்டுக் கணக்கினைத் தயாரிக்கவும்.
3.
நிதிநிலை அறிக்கைகள் கடந்தகால விவரங்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. இது எப்படி ஒரு குறைபாடாகும் என விளக்கவும்.
4.
வருண் மற்றும் பாரத் இருவரும் கூட்டாளிகள். அவர்களின் இலாப நட்டம் விகிதம் 5:4 ஆகும். அவர்கள் தாமு என்பவரை புதிய கூட்டாளியாக சேர்த்தனர். புதிய இலாபப் பகிர்வு விகிதமாக 1:1:1 என்பதை மூவரும் ஒப்புக் கொள்கின்றனர். தாமு செலுத்த வேண்டிய நற்பெயர் மதிப்பு ரூ.15,000 என மதிப்பிடப்பட்டது. அதில், அவர் ரூ.10,000 ரொக்கம் செலுத்துகிறார். மாறுபடும் முதல் முறையில் கணக்குகள் உள்ளதெனக் கொண்டு நற்பெயருக்கான குறிப்பேட்டுப் பதிவினைத் தரவும்.
5.
இரத்னா, பாஸ்கர், மற்றும் இப்ராஹிம் ஆகிய கூட்டாளிகள் 2 : 3 : 4 என்ற விகிதத்தில் இலாப நட்டங்களை பகிர்ந்து வந்தனர். 2018, டிசம்பர் 31 அன்று இரத்னா இறந்துவிட்டார். அவருக்குச் செலுத்த வேண்டிய இறுதித் தொகை ரூ.1,00,000 வரவு இருப்பினைக் காட்டியது. கீழ்கண்ட சூழ்நிலைகளில் குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.
(அ) சேரவேண்டியத் தொகை உடனடியாகக் காசோலை மூலம் செலுத்தப்பட்டது
(ஆ) சேரவேண்டியத் தொகை உடனடியாகச் செலுத்தப்படவில்லை
(இ) ரூ.60,000 காசோலை மூலம் உடனடியாகச் செலுத்தப்பட்டது
6.
பின்வரும் விவரங்களிலிருந்து மொத்த விற்பனையைக் கணக்கிடவும்.
| விவரம் | ரூ. | விவரம் | ரூ. |
|---|---|---|---|
| 2018, ஏப்ரல் 1 அன்று கடனாளிகள் | 2,50,000 | பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு மறுக்கப்பட்டது | 15,000 |
| 2018, ஏப்ரல் 1 அன்று பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு | 60,000 | உள் திருப்பம் | 50,000 |
| கடனாளிகளிடமிருந்து பெற்ற ரொக்கம் | 7,25,000 | 2019, மார்ச் 31 அன்று பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு | 90,000 |
| பெறுதற்குரிய மாற்றுச்சீட்டுக்காக ரொக்கம் | 1,60,000 | 2019, மார்ச் 31 அன்று பற்பல கடனாளிகள் | 2,40,000 |
| வாராக்கடன் | 30,000 | ரொக்க விற்பனை | 3,15,000 |
7.
சதீஷ் மற்றும் சுதன் இருவரும் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளிகள். அவர்கள் 4:3 என்ற விகிதத்தில் இலாபம் மற்றும் நட்டங்களைப் பகிர்ந்து வருகின்றனர். 2018 ஏப்ரல் 1 அன்று சசி என்பவரை கூட்டாளியாகச் சேர்த்துக்கொண்டனர். சசி கூட்டாண்மையில் சேர்ந்த அன்று நிறுவன ஏடு நற்பெயர் மதிப்பினை ரூ.35,000 என்று காட்டியது. மாறுபடும் முதல் முறையில் பராமரிக்கப்படுவதாக கருதி தேவையான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும். கூட்டாளிகள் பின்வரும் முடிவினை எடுத்தனர்.
(i) ஏட்டில் உள்ள நற்பெயர் தொகை முழுவதையும் போக்கெழுவது
(ii) ஏட்டில் உள்ள நற்பெயரில் ரூ.21,000 மட்டும் போக்கெழுவது
8.
பின்வரும் விவரங்கள் மார்த்தாண்டம் பெண்கள் பண்பாட்டு மன்றத்தின் இறுதிக் கணக்குகளில் எவ்வாறு தோன்றும் எனக் காட்டவும்
| ரூ | |
| 1.4.2018 அன்று விளையாட்டுப் பொருள்கள் இருப்பு | 16,000 |
| அவ்வாண்டில் வாங்கிய விளையாட்டுப்பொருள்கள் | 84,000 |
| 31.3.2019 அன்று விளையாட்டுப் பொருள்கள் | 10,000 |
9.
10.
சரக்கிருப்பு மாற்று காலம் என்றால் என்ன? இது எவ்வாறு கணக்கிடப்படுகிறது?
11.
12.
வருவாய் மற்றும் செலவினக் கணக்கு என்றால் என்ன?
13.
இராஜேஷ் மற்றும் இரமேஷ் எனும் கூட்டாளிகள் 3:2 என இலாபநட்டம் பகிர்ந்து வந்தனர். இராமன் என்பவரை புதிய கூட்டாளியாக சேர்த்துக் கொண்டனர். அவர்களது புதிய இலாப விகிதம் 5:3:2. பின்வரும் மறுமதிப்பீடுகள் செய்யப்பட்டன. தேவையான குறிப்பேட்டுப் பதிவுகள் தந்து மறுமதிப்பீட்டுக் கணக்கு தயாரிக்கவும்.
(அ) கட்டடத்தின் மதிப்பு ரூ.15,000 உயர்த்தப்பட்டது
(ஆ) இயந்திரத்தின் மதிப்பு ரூ.4,000 குறைக்கப்பட்டது
(இ) வாரா ஐயக்கடன் ஒதுக்கு ரூ.1,000 உருவாக்கப்பட்டது.
14.
கூட்டாண்மை அடிப்படையில் நடத்தப்படும் ஒரு வணிகத்தின் விவரங்கள் பின்வருமாறு:
(i) ஈட்டிய இலாபங்கள்: 2016: ரூ.25,000; 2017: ரூ.23,000 மற்றும் 2018: ரூ.26,000.
(ii) 2016 ஆம் ஆண்டின் இலாபத்தில் திரும்பத் திரும்ப நிகழா வருமானம் ரூ.2,500 சேர்ந்துள்ளது.
(iii) சரக்கிருப்பு தீயினால் சேதமடைந்ததால் 2017 ஆம் ஆண்டின் இலாபத்தில் ரூ.3,500 குறைக்கப்பட்டது.
(iv) சரக்கிருப்பு காப்பீடு செய்யப்படவில்லை. ஆனால் எதிர்காலத்தில் காப்பீடு செய்வதென முடிவு செய்யப்பட்டது. அதற்கான காப்பீட்டுக் கட்டணம் ஆண்டுக்கு ரூ.250 என மதிப்பிடப்பட்டது.
3 ஆண்டுகள் சராசரி இலாபத்தில் 2 ஆண்டுகள் கொள்முதல் என்ற அடிப்படையில் நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடவும்.
15.
உயர் இலாப முறையில் நற்பெயர் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?
16.
சானியா நிறுமத்தின் கொடுக்கப்பட்ட தகவல்களிலிருந்து சரக்கிருப்பு சுழற்சி விகிதம் மற்றும் சரக்கிருப்பு மாற்று காலத்தை (மாதங்களில்) கணக்கிடவும்.
| விவரம் | ரூ. |
|---|---|
| விற்பனை மூலம் பெற்ற வருவாய் | 1,90,000 |
| அவ்வாண்டில் தொடக்கச் சரக்கிருப்பு | 40,000 |
| அவ்வாண்டில் இறுதிச் சரக்கிருப்பு | 20,000 |
| அவ்வாண்டில் மேற்கொண்ட கொள்முதல் | 90,000 |
| உள்தூக்குக்கூலி | 10,000 |
17.
கவிதா என்பவர் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளி. அவர் வழக்கமாக ஒவ்வொரு மாதமும் ரூ.2,500 எடுத்துக் கொள்கிறார். எடுப்புகள் மீது வட்டி ஆண்டுக்கு 4% கணக்கிடப்பட வேண்டும். எடுப்புகள் மீது வட்டி சராசரி கால முறையைப் பயன்படுத்தி கீழ்க்கண்ட சூழ்நிலைகளில் கணக்கிடவும். அவர்
(i) ஒவ்வொரு மாதத் தொடக்கத்தில் எடுத்திருந்தால்
(ii) ஒவ்வொரு மாத இடையில் எடுத்திருந்தால்
(iii) ஒவ்வொரு மாத இறுதியில் எடுத்திருந்தால்
18.
இராஜன் மற்றும் தேவன் என்ற கூட்டாளிகள் தங்கள் இலாப நட்டங்களை 2:1 என்ற விகிதத்தில் பகிர்ந்து வருகின்றனர். அவர்களின் பின்வரும் இருப்புநிலைக் குறிப்பிலிருந்து 2018, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய முதல் மீது வட்டி ஆண்டுக்கு 6% கணக்கிடவும்.
| பொறுப்புகள் | ரூ. | ரூ. | சொத்துகள் | ரூ. |
| முதல் கணக்குகள்: | பல்வகைச் சொத்துகள் | 2,20,000 | ||
| இராஜன் | 1,00,000 | |||
| தேவன் | 80,000 | 1,80,000 | ||
| இலாபநட்டப் பகிர்வு கணக்கு | 40,000 | |||
| 2,20,000 | 2,20,000 |
2018, ஏப்ரல் 1 அன்று இராஜன் கொண்டுவந்த கூடுதல் முதல் ரூ.40,000 மற்றும் 2018, செப்டம்பர் 1 அன்று தேவன் கொண்டு வந்த கூடுதல் முதல் ரூ.30,000. அவ்வாண்டின் எடுப்புகள் முறையே இராஜன் ரூ.20,000, தேவன் ரூ.10,000 ஆகும். அவ்வாண்டில் ஈட்டிய இலாபம் ரூ.70,000.
19.
கூட்டாண்மை ஒப்பாவணத்தின் உள்ளடக்கங்கள் ஏதேனும் ஆறினைத் தரவும்.
20.
ஒறுப்பிழப்பு செய்த பங்குகளின் மறுவெளியீடு என்றால் என்ன?
21.
அருள் என்பவர் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளி. கூட்டாண்மை ஒப்பாவணத்தின்படி எடுப்புகள் மீது வட்டி ஆண்டுக்கு 12% கணக்கிடப்பட வேண்டும். டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் 2018 ஆம் ஆண்டில் அவருடைய எடுப்புகள் பின்வருமாறு:
| நாள் | ரூ. |
|---|---|
| மார்ச் 1 | 3,000 |
| ஜுன் 1 | 3,000 |
| செப்டம்பர் 1 | 3,000 |
| டிசம்பர் 1 | 3,000 |
எடுப்புகள் மீது வட்டி கணக்கிடவும்
22.
தங்கள் இலாப நட்டங்களை சமமாகப் பகிர்ந்து வரும் சுபா மற்றும் சுதா என்ற கூட்டாளிகளின் பின்வரும் இருப்புநிலைக் குறிப்பிலிருந்து 2017, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய முதல் மீது வட்டி ஆண்டுக்கு 6% கணக்கிடவும்.
| பொறுப்புகள் | ரூ. | சொத்துகள் | ரூ. |
|---|---|---|---|
| முதல் கணக்குகள்: | நிலைச் சொத்துகள் | 30,000 | |
| சுபா | 15,000 | நடப்புச் சொத்துகள் | 20,000 |
| சுதா | 20,000 | ||
| நடப்புப் பொறுப்புகள் | 15,000 | ||
| 50,000 | 50,000 |
அவ்வாண்டில் சுபா மற்றும் சுதாவின் எடுப்புகள் முறையே ரூ.2,500 மற்றும் ரூ.3,500. அவ்வாண்டில் ஈட்டிய இலாபம் ரூ.15,000.
23.
மருது நிறுமம் ரூ.10 மதிப்புள்ள 150 பங்குகளை பங்கொன்றுக்கு ரூ.4 இறுதி அழைப்புத் தொகை செலுத்தத் தவறியதால் ஒறுப்பிழப்பு செய்தது. அவற்றில் 100 பங்குகளை பங்கொன்றுக்கு ரூ.9 வீதம் மறுவெளியீடு செய்தது. ஒறுப்பிழப்பு மற்றும் மறுவெளியீட்டிற்கான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.
24.
25.
பின்வரும் விவரங்களிலிருந்து விடுபட்ட தகவலைக் கண்டறியவும்:
| விவரம் | ரூ. |
|---|---|
| 31.3.2019 அன்று இறுதி முதல் | 1,90,000 |
| அவ்வாண்டில் கொண்டுவந்த கூடுதல் முதல் | 50,000 |
| அவ்வாண்டின் எடுப்புகள் | 30,000 |
| 1.4.2018 அன்று தொடக்க முதல் | ? |
| 31.3.2019 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டின் நட்டம் | 40,000 |
26.
வெளிச்செல்லும் கூட்டாளிக்குச் செலுத்தவேண்டிய தொகையினை எவ்வாறு தீர்வு செய்யலாம்?
27.
ஹரி, மாதவன் மற்றும் கேசவன் ஆகிய கூட்டாளிகள் இலாப நட்டங்களை 5:3:2 என்ற விகிதத்தில் பகிர்ந்து வருகின்றனர். 2017, ஏப்ரல் 1 அன்று வான்மதி புதிய கூட்டாளியாகச் சேர்த்தபின் அவர்களின் இலாப விகிதம் 4:3:2:1 என முடிவு செய்யப்பட்டது. பின்வரும் சரிக்கட்டுதல்கள் செய்யப்பட வேண்டும்:
(அ) வளாகத்தின் மதிப்பு ரூ.60,000 அதிகரிக்கப்பட்டது
(ஆ) சரக்கிருப்பு மீது ரூ.5,000, அறைகலன் மீது ரூ.2,000, இயந்திரம் மீது ரூ.2,500 தேய்மானம் நீக்கப்பட வேண்டும்.
(இ) கொடுபட வேண்டிய பொறுப்பு ரூ.500 உருவாக்கப்பட வேண்டும்.
குறிப்பேட்டுப் பதிவுகள் தந்து, மறுமதிப்பீட்டுக் கணக்கினை தயார் செய்யவும்.
28.
பின்வரும் விவரங்களைக் கொண்டு சிவா வரையறு நிறுமத்தின் மார்ச் 31, 2016 மற்றும் மார்ச் 31, 2017 க்கான பொது அளவு வருவாய் அறிக்கையினை தயார் செய்யவும்.
| விவரம் | 2015-16 | 2016-17 |
|---|---|---|
| ரூ. | ரூ. | |
| விற்பனை மூலம் பெற்ற வருவாய் | 2,00,000 | 3,00,000 |
| இதர வருமானம் | 25,000 | 75,000 |
| செலவுகள் | 2,50,000 | 1,50,000 |
| வருமான வரி % | 40 | 40 |
29.
டெல்ஃபி நிறுமத்திடமிருந்து பெறப்பட்ட பின்வரும் தகவல்களிலிருந்து
(i) சரக்கிருப்பு சுழற்சி விகிதம்
(ii) கணக்குகள் மூலம் பெற வேண்டியவைகளின் சுழற்சி விகிதம்
(iii) கணக்குகள் மூலம் செலுத்தப்பட வேண்டியவைகளின் சுழற்சி மற்றும்
(iv) நிலைச் சொத்துகள் சுழற்சி விகிதம் கணக்கிடவும்.
| விவரம் | 2018, மார்ச் 31 ரூ. |
2019, மார்ச் 31 ரூ. |
|---|---|---|
| சரக்கிருப்பு | 1,40,000 | 1,00,000 |
| கணக்குகள் மூலம் பெற வேண்டியவைகள் | 80,000 | 60,000 |
| கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவைகள் | 40,000 | 50,000 |
| நிலைச் சொத்துகள் | 5,50,000 | 5,00,000 |
கூடுதல் தகவல்கள்:
(i) அவ்வாண்டில் விற்பனை மூலம் பெற்ற வருவாய் ரூ.10,50,000
(ii) அவ்வாண்டின் கொள்முதல் ரூ.4,50,000
(iii) விற்பனை மூலம் பெற்ற வருவாய்க்கான அடக்கவிலை ரூ.6,00,000.
விற்பனை மற்றும் கொள்முதலை கடன் நடவடிக்கைகளாகக் கருதவும்.
30.
கீழ்க்காணும் திருச்சி மனமகிழ் மன்றத்தின் பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கிலிருந்து 2018, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வருவாய் மற்றும் செலவினக் கணக்கினைத் தயாரிக்கவும்
| பெறுதல்கள் | ரூ | செலுத்தல்கள் | ரூ |
|---|---|---|---|
| தொடக்க இருப்பு | அறைகலன் வாங்கியது | 10,000 | |
| கைரொக்கம் | 11,000 | வாடகை | 2,800 |
| பங்காதாயம் பெற்றது | 27,600 | செயலர் மதிப்பூதியம் | 15,000 |
| பழைய செய்தித்தாள் விற்றது | 3,000 | தபால் செலவுகள் | 1,700 |
| உறுப்பினர் சந்தா | 31,000 | பொதுச் செலவுகள் | 4,350 |
| பாதுகாப்பு பெட்டக வாடகை | 8,000 | அச்சு மற்றும் எழுதுபொருள்கள் | 45,000 |
| முதலீடுகள் மீதான வட்டி | 1,250 | தணிக்கைக் கட்டணம் | 5,000 |
| அறைகலன் விற்றது | 5,000 | இறுதி இருப்பு | |
| (ஏட்டு மதிப்பு ரூ4,400) | கைரொக்கம் | 3,000 | |
| 86,850 | 86,850 |
31.
ரம்யா, சாரா மற்றும் தாரா என்ற கூட்டாளிகள் முறையே 5:3:2 எனும் விகிதத்தில் இலாப நட்டம் பகிர்ந்து வந்தனர். 2018, ஏப்ரல் 1 அன்று தாரா கூட்டாண்மையிலிருந்து விலகினார். பின்வரும் சரிக்கட்டுதல்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
i) வளாகத்தின் மதிப்பை ரூ. 40,000 உயர்த்த வேண்டும்
ii) சரக்கிருப்பு ரூ.3,000, இயந்திரம் ரூ. 6,500 மதிப்பு குறைக்க வேண்டும்.
iii) கொடுபடாச் செலவுகள் ரூ. 500 ஒதுக்கு உருவாக்க வேண்டும்.
குறிப்பேட்டுப் பதிவுகள் தந்து மறுமதிப்பீட்டுக் கணக்கு தயாரிக்கவும்.
32.
கீழ்க்காணும் பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கு மற்றும் கூடுதல் தகவல்களிலிருந்து 2018, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வருவாய் மற்றும் செலவினக் கணக்கில் காட்டப்படவேண்டிய சந்தாத் தொகையினைக் கணக்கிடவும்.
| பெறுதல்கள் | ரூ | ரூ | செலுத்தல்கள் | ரூ |
|---|---|---|---|---|
| சந்தா | ||||
| 2017 | 28,000 | |||
| 2018 | 1,72,000 | |||
| 2019 | 12,000 | 2,12,000 | ||
கூடுதல் தகவல்கள்: 2018 ஆம் ஆண்டில் பெறவேண்டிய சந்தா ரூ8,000.
33.
புதிய கூட்டாளி ஒருவரை சேர்ப்பதற்காக, ஒரு நிறுவனம் 4 ஆண்டுகள் சராசரி இலாபத்தில் 3 ஆண்டுகள் கொள்முதல் என்ற அடிப்படையில் கூட்டு சராசரி இலாபத்தினை பயன்படுத்தி, நற்பெயரை மதிப்பிட முடிவு செய்தது. கடந்த நான்கு ஆண்டுகளின் இலாபங்கள் மற்றும் அந்தந்த ஆண்டுகளுக்கான நிறைகள் பின்வருமாறு.
| விவரம் | 2015 | 2016 | 2017 | 2018 |
|---|---|---|---|---|
| இலாபம் (ரூ) | 20,000 | 22,000 | 24,000 | 28,000 |
| நிறை | 1 | 2 | 3 | 4 |
நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடவும்.
34.
ஒரு நிறுவனத்தின் கடந்த ஐந்து ஆண்டுகளின் இலாபங்கள் பின்வருமாறு:
2014: ரூ.4,000; 2015: ரூ.3,000; 2016: ரூ.5,000; 2017: ரூ.4,500 மற்றும் 2018: ரூ.3,500. 5 ஆண்டுகள் சராசரி இலாபத்தில் 3 ஆண்டுகள் கொள்முதல் என்ற அடிப்படையில் நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடவும்.
1.
(i) முந்தய ஆண்டின் இலாபத்தை அடிப்படையாகக் கொண்டு பகிர்ந்தளித்தால்
ரதியின் மூன்று மாதங்களுக்கான இலாபப் பங்கு = 32,000 x \(\frac { 3 }{ 12 } \times \frac { 1 }{ 5 } \) ரூ.1,600
| நாள் | விவரம் | பே.ப. எண் |
பற்று ரூ. |
வரவு ரூ. |
|
|---|---|---|---|---|---|
| 2018 | இலாப நட்ட அனாமத்து க/கு | ப | 1,600 | ||
| மார்ச் 31 | ரதி முதல் க/கு | 1,600 | |||
| (ரதியின் நடப்பாண்டில் இலாபத்தின் பங்கு அவருடைய கணக்கில் வரவு வைக்கப்பட்டது) |
(ii) கடந்த நான்கு ஆண்டுகளின் சராசரி இலாபத்தை அடிப்படையாகக் கொண்டு பகிர்ந்தளித்தல்
சராசரி இலாபம் = \(\frac { 10,000+20,000+18,000+32,000 }{ 4 } \)
= \(\frac { 80,000 }{ 4 } \) = ரூ. 20,000
ரதியின் மூன்று மாதங்களுக்கான இலாபப் பங்கு = 20,000 x \(\frac { 3 }{ 12 } \times \frac { 1 }{ 5 } \) = ரூ.1,000
| நாள் | விவரம் | பே.ப. எண் |
பற்று ரூ. |
வரவு ரூ. |
|
|---|---|---|---|---|---|
| 2018 | இலாப நட்ட அனாமத்து க/கு | ப | 1,000 | ||
| மார்ச் 31 | ரதியின் முதல் க/கு | 1,000 | |||
| (நடப்பாண்டு இலாபத்தில் ரதியின் பங்கு அவருடைய கணக்கில் வரவு வைக்கப்பட்டது) |
2.
| நாள் | விவரம் | பே.ப. எண் |
பற்று ரூ. |
வரவு ரூ. |
|
|---|---|---|---|---|---|
| 2018 | நிலம் மற்றும் கட்டடம் க/கு | ப | 18,000 | ||
| ஏப்ரல் 1 | மறுமதிப்பீட்டுக் க/கு | 18,000 | |||
| (நிலம் மற்றும் கட்டடத்தின் மதிப்பு உயர்த்தப்பட்டது) | |||||
| " | மறுமதிப்பீட்டுக் க/கு | ப | 23,000 | ||
| இயந்திரம் க/கு | 15,000 | ||||
| கொடுபட வேண்டிய செலவுகள் க/கு | 8,000 | ||||
| (இயந்திரம் மதிப்பை குறைத்து மற்றும் கொடுபடா செலவு ஒதுக்கு உருவாக்கியது) | |||||
| " | வினோத் முதல் க/கு | ப | 2,000 | ||
| கார்த்தி முதல் க/கு | ப | 2,000 | |||
| பிரணவ் முதல் க/கு | ப | 1,000 | |||
| மறுமதிப்பீட்டுக் க/கு | ப | 5,000 | |||
| (மறுமதிப்பீட்டு மீதான நட்டம் முதல் கணக்கிற்கு மாற்றியது) |
| விவரம் | ரூ. | ரூ. | விவரம் | ரூ. |
|---|---|---|---|---|
| இயந்திரம் க/கு | 15,000 | நிலம் மற்றும் கட்டடம் க/கு | 18,000 | |
| கொடுபடா செலவுகள் க/கு | 8,000 | மறுமதிப்பீட்டு நட்டம் | ||
| வினோத் முதல் க/கு \(\left( 5,000\times \frac { 2 }{ 5 } \right) \) | 2,000 | |||
| கார்த்தி முதல் க/கு \(\left( 5,000\times \frac { 2 }{ 5 } \right) \) | 2,000 | |||
| பிரணவ் முதல் க/கு \(\left( 5,000\times \frac { 1 }{ 5 } \right) \) | 1,000 | 5,000 | ||
| 23,000 | 23,000 | 23,000 |
3.
1) கடந்த கால விவரங்களின் பதிவேடு:
நிதிநிலை அறிக்கைகள் கடந்த கால விவரங்களின் அடிப்படையில் தயாரிக்கப்படுகின்றன.எனவே அவை நடப்பு நிலைமையை வெளிப்படுத்தாமல் போகலாம்.
2) இடைக்கால அறிக்கைகளை மட்டுமே தருகிறது:
நிதிநிலை அறிக்கைகள் ஒவ்வொரு கணக்காண்டின் இறுதியில் தயாரிக்கப்படுகின்றன ஆனால், வணிகத்தின் உண்மையான நிலவரத்தை, நிறுவனத்தின் கலைப்பின் போது மட்டுமே அறிய இயலும். எனவே, நிதிநிலை அறிக்கைகள் நிறுவனத்தின் துல்லியமான நிலையினை வெளிக்காட்டாது.
4.
தியாக விகிதம் கணக்கிடுதல்:
தியாக விகிதம் = பழைய பங்கு - புதிய பங்கு
வருண் = \(\frac { 5 }{ 9 } -\frac { 1 }{ 3 } =\frac { 5-3 }{ 9 } =\frac { 2 }{ 9 } \)
பாரத் = \(\frac { 4 }{ 9 } -\frac { 1 }{ 3 } =\frac { 4-3 }{ 9 } =\frac { 1 }{ 9 } \)
எனவே, தியாக விகிதம் = \(\frac { 2 }{ 9 } :\frac { 1 }{ 9 } \) அல்லது 2 : 1
| நாள் | விவரம் | பே.ப. எண் |
பற்று ரூ. |
வரவு ரூ. |
|
|---|---|---|---|---|---|
| ரொக்கம் க/கு | ப | 10,000 | |||
| தாமு முதல் க/கு | ப | 5,000 | |||
| வருண் முதல் க/கு (2/3) | 10,000 | ||||
| பாரத் முதல் க/கு (1/3) (தாமுவின் நற்பெயர் பங்கு பழைய கூட்டாளிகளின் முதல் கணக்கில் வரவு வைக்கப்பட்டது) |
5,000 |
5.
| நாள் | விவரம் | பே. ப.எ. | பற்று ரூ |
வரவு ரூ |
|
|---|---|---|---|---|---|
| (அ) இரத்னாவின் நிறைவேற்றாளர் க/கு | ப | 1,00,000 | |||
| வங்கி க/கு | 1,00,000 | ||||
| (சேர வேண்டியத் தொகை உடனடியாகச் செலுத்தப்பட்டது) | |||||
| (ஆ) இரத்னாவின் நிறைவேற்றாளர் க/கு | 1,00,000 | ||||
| இரத்னாவின் நிறைவேற்றாளர் கடன் க/கு | 1,00,000 | ||||
| (சேரவேண்டியத் தொகை கடன் கணக்கிற்கு மாற்றப்பட்டது) | |||||
| (இ) இரத்னாவின் நிறைவேற்றாளர் க/கு | ப | 1,00,000 | |||
| வங்கி க/கு | 60,000 | ||||
| இரத்னாவின் நிறைவேற்றாளர் கடன் க/கு | 40,000 | ||||
| (ரூ. 60,000 செலுத்தப்பட்டு மீதித் தொகை கடன் கணக்கிற்கு மாற்றப்பட்டது) |
6.
| விவரம் | ரூ. | விவரம் | ரூ. |
| இருப்பு கீ/கொ | 60,000 | ரொக்கக் க/கு | 1,60,000 |
| கடனாளிகள் க/கு | 2,05,000 | கடனாளிகள் க/கு | 15,000 |
| அவ்வாண்டில் மாற்றுச்சீட்டு பெற்றது (இருப்புக்கட்டும் தொகை) | (பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு மறுக்கப்பட்டது) | ||
| இருப்பு கீ/இ | 90,000 | ||
| 2,65,000 | 2,65,000 |
| விவரம் | ரூ. | விவரம் | ரூ. |
|---|---|---|---|
| இருப்பு கீ/கொ | 2,50,000 | ரொக்கக் க/கு | 7,25,000 |
| பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு க/கு | 15,000 | உள்திருப்பம் க/கு | 15,000 |
| (மறுக்கப்பட்டது) | பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு க/கு | 2,05,000 | |
| விற்பனை க/கு (கடன்)(இருப்புக்கட்டும் தொகை) | 9,85,000 | (மாற்றுச்சீட்டு பெற்றது) | |
| வாராக்கடன் | 30,000 | ||
| இருப்பு கீ/இ | 2,40,000 | ||
| 12,50,000 | 12,50,000 |
மொத்த விற்பனை = ரொக்க விற்பனை + கடன் விற்பனை
= ரூ.3,15,000 + ரூ.9,85,000
= ரூ.13,00,000
7.
(i) ஏட்டில் உள்ள நற்பெயர் தொகை முழுவதையும் போக்கெழுவது
| நாள் | விவரம் | பே.ப.எ | பற்று ரூ. | வரவு ரூ. | |
|---|---|---|---|---|---|
| 2018 | சதீஷின் முதல் க/கு (4/7) | ப | 20,000 | ||
| ஏப்ரல் 1 | சுதனின் முதல் க/கு (3/7) | ப | 15,000 | ||
| நற்பெயர் க/கு | 35,000 | ||||
| (ஏட்டில் உள்ள நற்பெயரைப் போக்கெழுதியது ) |
(ii) ஏட்டில் உள்ள நற்பெயர் தொகையில் ரூ.21,000 மட்டும் போக்கெழுதுவது
| நாள் | விவரம் | பே.ப.எ | பற்று ரூ. | வரவு ரூ. | |
|---|---|---|---|---|---|
| 2018 | சதீஷின் முதல் க/கு (21,000 x 4/7) | ப | 12,000 | ||
| ஏப்ரல் 1 | சுதனின் முதல் க/கு (21,000 x 3/7) | 9,000 | |||
| நற்பெயர் க/கு | 21,000 | ||||
| (ஏட்டில் உள்ள நற்பெயரில் ரூ.21,000 போக்கெழுவது ) |
8.
| செலவுகள் | ரூ. | ரூ. | வருமானம் | ரூ. |
|---|---|---|---|---|
| பயன்படுத்தப்பட்ட விளையாட்டுப் பொருள்கள்: | ||||
| தொடக்க இருப்பு | 16,000 | |||
| கூட்டுக: நடப்பாண்டு வாங்கியது | 84,000 | |||
| 1,00,000 | ||||
| கழிக்க: இறுதி இருப்பு | 10,000 | 90,000 |
| பொறுப்புகள் | ரூ. | சொத்துகள் | ரூ. |
|---|---|---|---|
| விளையாட்டுப் பொருள்கள் இருப்பு | 10,000 |
9.
10.
சரக்கிருப்பு மாற்று காலம் என்பது சரக்கிருப்பை விற்பனை செய்வதற்கு எடுத்துக் கொள்ளப்படும் காலம் ஆகும். குறுகிய சரக்கிருப்பு மாற்று காலம், சரக்கிருப்பு மேலாண்மையில் அதிக செயல்திறனை குறிப்பிடுகிறது.
சரக்கிருப்பு மாற்று காலம் (நாட்களில்)

11.
12.
1) வருவாய் மற்றும் செலவினக் கணக்கு என்பது இலாப நோக்கற்ற அமைப்புகளில் கணக்காண்டின் இறுதியில் தயாரிக்கப்படும் வருவாய் மற்றும் செலவுகளின் தொகுப்பாகும். ஒரு குறிப்பிட்ட ஆண்டிற்குரிய உபரி அல்லது பற்றாக்குறையை கண்டறிய வருவாய் மற்றும் செலவினக் கணக்கு தயாரிக்கப்படுகிறது.
2) இது ஒரு பெயரளவு கணக்கு ஆகும். இது இலாப நட்டக் கணக்கு தயாரிப்பது போன்றதாகும்.இந்த கணக்கில் வருமானங்கள் வரவுப் பக்கத்திலும், செலவுகள் பற்றுப் பக்கத்திலும் காண்பிக்கப்படும்.
3) ரொக்க நடவடிக்கைகள் மட்டுமின்றி ரொக்கம் சாரா நடவடிக்கைகளான ஈட்டிய வருமானம் பெறப்படாது, நிலைச் சொத்து விற்பனை மீதான நட்டம் அல்லது இலாபம், தேய்மானம் போன்றவைகளும் இதில் பதிவு செய்யப்படுகின்றன.
13.
| நாள் | விவரம் | பே.ப.எண் | பற்று ரூ. | வரவு ரூ. | |
|---|---|---|---|---|---|
| கட்டடம் க/கு | ப | 15,000 | |||
| மறுமதிப்பீட்டு க/கு | 15,000 | ||||
| (கட்டடத்தின் மதிப்பு உயர்த்துவது பதிவு செய்யப்பட்டது) | |||||
| மறுமதிப்பீட்டு க/கு | ப | 5,000 | |||
| இயந்திரம் க/கு | 4,000 | ||||
| வாரா ஐயக்கடன் ஒதுக்கு க/கு | 1,000 | ||||
| (இயந்திரத்தின் மதிப்பு குறைப்பது மற்றும் ஒதுக்கு பதிவு செய்யப்பட்டது) | |||||
| மறுமதிப்பீட்டு | ப | 10,000 | |||
| இராஜேஷ் முதல் க/கு | 6,000 | ||||
| இரமேஷ் முதல் க/கு | 4,000 | ||||
| (மறுமதிப்பீட்டு இலாபம் பகிர்ந்தளித்தது) |
| விவரம் | ரூ. | ரூ. | விவரம் | ரூ. |
|---|---|---|---|---|
| இயந்திரம் க/கு | 4,000 | 15,000 | ||
| வாரா ஐயக்கடன் ஒதுக்கு க/கு | 1,000 | |||
| மறுமதிப்பீட்டு இலாபம்: | ||||
| இராஜேஷ் முதல் க/கு (3/5) | 6,000 | |||
| இரமேஷ் முதல் க/கு (2/5) | 4,000 | 10,000 | ||
| 15,000 | 15,000 |
14.
| விவரம் | 2016 ரூ. |
2017 ரூ. |
2018 ரூ. |
|---|---|---|---|
| இலாபம் | 25,000 | 23,000 | 26,000 |
| கழிக்க: திரும்பத் திரும்ப நிகழா வருமானம் | 2,500 | - | - |
| 22,500 | 23,000 | 26,000 | |
| கூட்டுக: சரக்கிருப்பு தீயினால் சேதமடைந்து (அசாதாரண நட்டம்) | - | 3,500 | - |
| சரிக்கப்பட்டபின் இலாபம் | 22,500 | 26,500 | 26,000 |
= \(\frac { 22,500+26,500+26,000 }{ 3 } \)
=\(\frac { 75,000 }{ 3 } \) = ரூ.25,000
| விவரம் | ரூ |
|---|---|
| எதிர்காலத்தில் செலுத்த வேண்டிய காப்பீட்டு முனைமத்தினை சரிக்கட்டுவதற்கு முன் சராசரி இலாபம் | 25,000 |
| கழிக்க: எதிர்காலத்தில் செலுத்த வேண்டிய காப்பீட்டு முனைமம் | 250 |
| சராசரி இலாபம் | 24,750 |
நற்பெயர் = சராசரி இலாபம் x கொள்முதல் ஆண்டுகளின் எண்ணிக்கை
= 24,750 x 2
நற்பெயர் = ரூ.49,500
15.
(i) இம்முறைகளில் நற்பெயரின் மதிப்பைக் கண்டறிய உயர் இலாபம் அடிப்படையாக உள்ளது. ஒரு வியாபாரத்தின் உயர் இலாபம் என்பது சாதாரண இலாபத்தை விட கூடுதலாக உள்ள சராசரி சாதாரண இலாபம் ஆகும்
(ii) உயர் இலாபம் = சராசரி இலாபம் - சாதாரண இலாபம், சராசரி இலாபம், குறிப்பிட்ட ஆண்டுகளின் சரிகட்டப்பட்ட ஈட்டிய இலாபங்கள் கூட்டப்பட்டு, மொத ஆண்டுகளின் எண்ணிக்கையால் வகுக்கப்படுவதன் மூலம் கண்டறியப்படுகிறது. சாதாரண இலாபம் என்பது ஒரே தன்மையுள்ள வியாபார நிறுவனங்கள் சாதாரண சூழ்நிலைகளில் வழக்கமாக ஈட்டும் இலாபம் ஆகும்
(iii) சாதாரண இலாபம் = பயன்படுத்தப்பட்ட முதல் x சாதாரண இலாப விகிதம்
(iv) பயன்படுத்தப்பட்ட முதல் = நிலைச் சொத்துக்கள் + நடப்புச் சொத்துக்கள் - நடப்புப் பொறுப்புகள்
(v) சாதாரண இலாப விகிதம் = ஒரு தொழில் ஒரே தன்மையுடைய வியாபார நிறுவனங்கள் சாதாரண சூழ்நிலைகளில் ஈட்டும் இலாப விகிதம்
16.
சரக்கிருப்பு சுழற்சி விகிதம் = = \(\frac {1,20,000}{30,000}\) = 4 மடங்கு
விற்பனை மூலம் பெற்ற வருவாயின் அடக்கவிலை
தொடக்கச் சரக்கிருப்பு + நிகரக் கொள்முதல் + நேரடிச் செலவுகள் (உள்தூக்குக் கூலி) – இறுதிச் சரக்கிருப்பு
= 40,000 + 90,000 + 10,000 – 20,000
= ரூ.1,20,000
சராசரி சரக்கிருப்பு = = \(\frac {4,000+20,000}{2}\) = ரூ.30,000
மாற்று காலம்
சரக்கிருப்பு மாற்று காலம் (மாதங்களில்) = =\(\frac {12}{4}\)= 3 மாதங்கள்
17.
மொத்த எடுப்புத் தொகை = ரூ.2,500 x 12 = ரூ.30,000
(i) எடுப்புகள் ஒவ்வொரு மாதத் தொடக்கத்திலும் எடுத்திருந்தால்:
சராசரி காலம் = 6.5
= ரூ.30,000 x \(\frac { 4 }{ 100 } \times \frac { 6.5 }{ 12 } \)
= ரூ.650
(ii) எடுப்புகள் ஒவ்வொரு மாத இடையிலும் எடுத்திருந்தால்:
சராசரி காலம் = 6
= ரூ.30,000 x \(\frac { 4 }{ 100 } \times \frac { 6 }{ 12 } \)
= ரூ.600
(iii) எடுப்புகள் ஒவ்வொரு மாத இறுதியிலும் எடுத்திருந்தால்
சராசரி காலம் = 5.5
= ரூ.30,000 x \(\frac { 4 }{ 100 } \times \frac { 5.5 }{ 12 } \)
= ரூ.550
18.
| விவரம் | இராஜன் ரூ. | தேவன் ரூ. | ||
|---|---|---|---|---|
| 2018, டிசம்பர் 31 அன்று முதல் | 1,00,000 | 80,000 | ||
| கூட்டுக: எடுப்புகள் | 20,000 | 10,000 | ||
| 1,20,000 | 90,000 | |||
| கழிக்க: கூடுதல் முதல் | 40,000 | 30,000 | ||
| இலாபம் ஏற்கனவே வரவு வைத்தது | 20,000 | 60,000 | 10,000 | 40,000 |
| 2018 ஜனவரி 1 அன்று முதல் | 60,000 | 50,000 | ||
குறிப்பு: இலாபம் வரவு வைத்து = ஈட்டிய இலாபம் ரூ.70,000 - இருப்புநிலைக் குறிப்பின் படியான இலாப இருப்பு = ரூ.40,000
இந்தத் தொகை 2:1 என்ற இலாபப் பகிர்வு விகிதத்தில் கூட்டாளிகளுக்கிடையே பகிர்ந்தளிக்கிறது.
இராஜன் 30,000 x \(\frac 23\) = ரூ.20,000
தேவன் 30,000 x \(\frac 13\) = ரூ. 10,000
முதல் மீது வட்டி கணக்கிடுதல்:
இராஜன்:
தொடக்க முதல் (ஓராண்டு) = 60,000 x \(\frac {6}{100}\) = ரூ.3,600
கூடுதல் முதல் (9 மாதங்கள்) = 40,000 x \(\frac {6}{100}\) x \(\frac {9}{12}\) = ரூ.1,800
முதல் மீது வட்டி ________
(ஏப்ரல் - டிசம்பர்) = ரூ. 5,400
________
தேவன்:
தொடக்க முதல் (ஓராண்டு) = 50,000 x \(\frac {6}{100}\) = ரூ.3,000
கூடுதல் முதல் (4 மாதங்கள்) = 30,000 x \(\frac {6}{100}\) x \(\frac {4}{12}\) = ரூ.600
________
முதல் மீது வட்டி = ரூ.3,600
(செப்டம்பர் - டிசம்பர்) ________
19.
(i) நிறுவனத்தின் பெயர், தன்மை மற்றும் தொழில் செய்யும் இடம்
(ii) தொழில் தொடங்கிய நாள் மற்றும் தொழிலின் கால அளவு
(iii) அனைத்துக் கூட்டாளிகளின் பெயர் மற்றும் முகவரி
(iv) ஒவ்வொரு கூட்டாளியும் அளித்த முதல்
(v) இலாபப் பகிர்வு விகிதம்
(vi) முதல் மீது அனுமதிக்கப்படும் வட்டி வீதம்
20.
1) ஒறுப்பிழப்பு செய்யப்பட்ட பங்குகள் நிறுமத்தால் மறுவெளியீடு செய்யப்படலாம். அப்பங்குகள் எந்த விலையிலும் மறுவெளியீடு செய்யலாம்.
2) ஆனால், வெளியீட்டு விலை ஒறுப்பிழப்பு செய்யப்பட்ட பங்குகளின் செலுத்தப் பெறாத தொகையைக் காட்டிலும் குறைவாக இருக்கக் கூடாது.
3) உதாரணமாக, ஒறுப்பிழப்பு செய்யப்பட்ட ஒரு பங்கின் மதிப்பு ரூ.10 அதற்கு ரூ.4 விண்ணப்பப் பணமாக செலுத்தப்பட்டிருந்தது.
4) அப்பங்குகள் முழுவதும் செலுத்தப்பட்டவைகளாக மறுவெளியீடு செய்யப்பட்டன. அதன் புதிய விலை குறைந்தபட்சமாக ரூ.6(10-4) என நிர்ணயிக்கப்பட வேண்டும்.
5) ஒறுப்பிழப்பு செய்யப்பட்ட பங்குகள் நட்டத்தில் மறுவெளியீடு செய்யப்படும் போது, அந்த நட்டம் ஒறுப்பிழப்பு கணக்கில் பற்று செய்யப்படுகிறது.
6) ஒறுப்பிழப்பு செய்யப்பட்ட பங்குகள் முனைமத்தில் மறுவெளியீடு செய்யப்பட்டால், அந்த முனைமத்தொகை பத்திர முனைமக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
21.

22.
| விவரம் | சுபா ரூ. | சுதா ரூ. |
|---|---|---|
| 2017, டிசம்பர் 31 அன்று முதல் | 15,000 | 20,000 |
| கூட்டுக: எடுப்புகள் | 2,500 | 3,500 |
| 17,500 | 23,500 | |
| கழிக்க: இலாபம் ஏற்கனவே வரவு வைத்தது | 7,500 | 7,500 |
| 2017, ஜனவரி 1 அன்று முதல் | 10,000 | 16,000 |
முதல் மீது வட்டி கணக்கிடுதல்:
சுபா: தொடக்க முதல்=10,000 x \(\frac { 6 }{ 100 } \) =ரூ.600
சுதா: தொடக்க முதல் =16,000 x \(\frac { 6 }{ 100 } \)=ரூ.960
23.
| நாள் | விவரம் | பே. ப.எ |
பற்று ரூ. |
வரவு ரூ. |
|
|---|---|---|---|---|---|
| பங்குமுதல் க/கு (150 × 10) | ப | 1,500 | |||
| பங்கு இறுதி அழைப்பு க/கு (150 × 4) | 600 | ||||
| பங்கு ஒறுப்பிழப்பு க/கு (150 × 6) | 900 | ||||
| (150 பங்குகள் ஒறுப்பிழப்பு செய்யப்பட்டன) | |||||
| வங்கி க/கு (100 × 9) | ப | 900 | |||
| பங்கு ஒறுப்பிழப்பு க/கு (100 × 1) | ப | 100 | |||
| பங்குமுதல் க/கு (100 × 10) | 1,000 | ||||
| (ஒறுப்பிழப்பு செய்யப்பட்ட 100 பங்குகள் ரூ.9 வீதம் மறுவெளியீடு செய்யப்பட்டன) | |||||
| பங்கு ஒறுப்பிழப்பு க/கு | ப | 500 | |||
| முதலினக் காப்பு க/கு | 500 | ||||
| (மறுவெளியீட்டின் இலாபம் முதலினக் காப்பு கணக்கிற்கு மாற்றப்பட்டது) |
குறிப்பு:
150 பங்குகளுக்கான ஒறுப்பிழப்புத் தொகை = ரூ.900
100 பங்குகளுக்கான ஒறுப்பிழப்புத் தொகை = \(\frac {900}{150}\) x 100 = ரூ.600
இலாபம் அல்லது நட்டம் = ஒறுப்பிழப்புத் தொகை – மறுவெளியீட்டுத் தள்ளுபடி
= 600 – 100
நிகர ஆதாயம் = ரூ. 500
24.
25.
| விவரம் | ரூ. |
|---|---|
| இறுதி முதல் (31.3.2019) | 1,90,000 |
| கூட்டுக: அவ்வாண்டின் எடுப்புகள் | 30,000 |
| 2,20,000 50,000 |
|
| கழிக்க: அவ்வாண்டில் கொண்டுவந்த கூடுதல் முதல் | |
| சரிக்கட்டப்பட்ட இறுதி முதல் | 1,70,000 2,10,000 |
| கழிக்க: தொடக்க முதல் (1.4.2018) (இருப்புக் கட்டும் தொகை) | |
| 31.3.2019 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டின் நட்டம் | (-) 40,000 |
26.
கூட்டாண்மை நிறுவனத்திலிருந்து கூட்டாளி ஒருவர் விலகும் போது, நற்பெயர், பகிர்ந்து தரா இலாபம் அல்லது நட்டம், மறுமதிப்பீட்டு இலாபம் அல்லது நட்டம், கூட்டாளியின் ஊதியம் ஆகியவற்றை சரிக்கட்டிய பிறகு கிடைக்கக் கூடிய முதல் கணக்கின் இருப்பு அக்கூட்டாளிக்கு செலுத்தப்பட வேண்டும். கூட்டாண்மை ஒப்பாவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு அவருக்கு சேர வேண்டிய தொகையைத் தீர்வு செய்ய வேண்டும்.
பின்வரும் வழிகளில் விலகும் கூட்டாளிக்கு செலுத்த வேண்டிய தொகை தீர்க்கப்படலாம்
(i) அவருக்கு சேரவேண்டிய முழுத் தொகையையும் ரொக்கமாக உடனடியாக செலுத்தலாம்
(ii) மொத்தத் தொகையையும் கூட்டாளியின் கடன் கணக்கிற்கு மாற்றிவிடலாம்.
(iii) பாதித் தொகையை உடனடியாக ரொக்கமாகவும் மீதித் தொகையை கடன் கணக்கிற்கு மாற்றிவிடலாம்
27.
| நாள் | விவரம் |
|
பே.ப. எண் |
பற்று ரூ. |
வரவு |
|---|---|---|---|---|---|
| 2017 | வளாகம் க/கு | ப | 60,000 | ||
| ஏப்ரல் 1 | மறுமதிப்பீடு க/கு (கட்டடத்தில் மதிப்பு உயர்த்துவது பதிவு செய்யப்பட்டது) |
60,000 | |||
| மறுமதிப்பீடு க/கு | ப | 10,000 | |||
| சரக்கிருப்பு க/கு | 5,000 | ||||
|
அறைகலன் க/கு |
2,000 | ||||
| இயந்திரம் க/கு | 2.500 | ||||
| கொடுக்கப்படவேண்டிய பொறுப்பு க/கு (இயந்திரம், அறைகலன், சரக்கிருப்பு மதிப்பு குறைப்பது மற்றும் பொறுப்பு பதிவு செய்யப்பட்டது) |
500 | ||||
| மறுமதிப்பீடு க/கு | ப | 50,000 | |||
| ஹரி முதல் க/கு | 25,000 | ||||
| மாதவன் முதல் க/கு | 15,000 | ||||
| கேசவன் முதல் க/கு (மறுமதிப்பீடு இலாபம் பகிர்ந்தளித்தது) |
10,000 |
| விவரம் | ரூ. | ரூ. | விவரம் | ரூ. |
|---|---|---|---|---|
| சரக்கிருப்பு க/கு | 5,000 | வளாகம் க/கு | 60,000 | |
| அறைகலன் க/கு | 2,000 | |||
| இயந்திரம் க/கு | 2,500 | |||
| கொடுக்கப்பட வேண்டிய பொறுப்பு க/கு | 500 | |||
| மறுமதிப்பீட்டு இலாபம்: | ||||
| ஹரி முதல் க/கு (50,000 x 5/10) |
25,000 | |||
| மாதவன் முதல் க/கு (50,000 x 3/10) |
15,000 | |||
| கேசவன் முதல் க/கு | 10,000 | |||
| (50,000 x 2/10) | 50,000 | |||
| 60,000 | 60,000 |
28.
| விவரம் | 2015-16 தொகை |
2015-16 விற்பனை மூலம் பெற்ற வருவாயில் சதவீதம் |
2016-17 தொகை |
2015-16 விற்பனை மூலம் பெற்ற வருவாயில் சதவீதம் |
|---|---|---|---|---|
| ரூ. | ரூ. | |||
| விற்பனை மூலம் பெற்ற வருவாய் | 2,00,000 | 100.00 | 3,00,000 | 100 |
| கூட்டுக: இதர வருமானம் | 25,000 | 12.50 | 75,000 | 25 |
| மொத்த வருவாய் | 2,25,000 | 112.50 | 3,75,000 | 125 |
| கழிக்க: செலவுகள் | 2,50,000 | 125.00 | 1,50,000 | 50 |
| வரிக்கு முன்னர் உள்ள இலாபம்/நட்டம் | –25,000 | –12.50 | 2,25,000 | 75 |
| கழிக்க: வருமான வரி (40%) | - | - | 90,000 | 30 |
| வரிக்கு பின்னர் உள்ள இலாபம் | –25,000 | –12.50 | 1,35,000 | 45 |
29.
(i) சரக்கிருப்பு சுழற்சி விகிதம் = \(\frac {6,00,000}{1,20,000}\) = 5 மடங்கு
= \(\frac {1,40,000+1,00,000}{2}=\frac {2,40,000}{2}\) = ரூ.1,20,000
=\(\frac {10,50,000}{70,000}\) = 15 மடங்கு
= \(\frac {80,000+60,000}{2}=\frac {1,40,000}{2}\) = ரூ.70,000
= \(\frac {4,50,000}{45,000}\) = 10 மடங்கு
= \(\frac {40,000+50,000}{2}\) = \(\frac {90,000}{2}\) = ரூ.45,000
=\(\frac {10,50,000}{5,25,000}\) = 2 மடங்கு
(v)
=\(\frac {5,50,000+5,00,000}{2}\) = \(\frac {10,50,000}{2}\) = ரூ.5,25,000
30.
| செலவுகள் | ரூ | வருமானம் | ரூ |
|---|---|---|---|
| வாடகை | 2,800 | பங்காதாயம் பெற்றது | 27,600 |
| செயலர் மதிப்பூதியம் | 15,000 | பழைய செய்தித்தாள் விற்றது | 3,000 |
| தபால் செலவுகள் | 1,700 | உறுப்பினர் சந்தா | 31,000 |
| பொதுச் செலவுகள் | 4,350 | பாதுகாப்பு பெட்டக வாடகை | 8,000 |
| அச்சு மற்றும் எழுதுபொருள்கள் | 45,000 | முதலீடுகள் மீதான வட்டி | 1,250 |
| தணிக்கைக் கட்டணம் | 5,000 | அறைகலன் விற்பனை மீதான இலாபம்(5,000 - 4,400) | 600 |
| பற்றாக்குறை | 2,400 | ||
| (வருமானத்தைக் காட்டிலும் மிகுதியான செலவுகள்) | |||
| 73,850 | 73,850 |
31.
| நாள் | விவரம் | பே.ப.எ | பற்று ரூ. |
வரவு ரூ. |
|
|---|---|---|---|---|---|
| 2018 ஏப்ரல் 1 | வளாகம் க/கு | ப | 40,000 | ||
| மறுமதிப்பீட்டு க/கு | 40,000 | ||||
| (வளாகம் மதிப்பு உயர்த்தப்பட்டது) | |||||
| " | மறுமதிப்பீட்டு க/கு | ப | 10,000 | ||
| சரக்கிருப்பு க/கு | 3,000 | ||||
| இயந்திரம் க/கு | 6,500 | ||||
| கொடுபடாச் செலவுகள் க/கு | 500 | ||||
| (சொத்துகளின் மதிப்பு குறைப்பு மற்றும் கொடுபடா பொறுப்பு பதிவு செய்யப்பட்டது) | |||||
| " | மறுமதிப்பீட்டு இலாபம்: | ப | 30,000 | ||
| ரம்யா முதல் க/கு | 15,000 | ||||
| சாரா முதல் க/கு | 9,000 | ||||
| தாரா முதல் க/கு | 6,000 | ||||
| (மறுமதிப்பீட்டு இலாபம் பகிர்ந்தளிக்கப்பட்டது) |
| விவரம் | ரூ. | ரூ. | விவரம் | ரூ. |
|---|---|---|---|---|
| சரக்கிருப்பு க/கு | 3,000 | வளாகம் க/கு | 40,000 | |
| இயந்திரம் க/கு | 6,500 | |||
| கொடுபடாச் செலவுகள் க/கு | 500 | |||
| மறுமதிப்பீட்டு இலாபம்: | ||||
| ரம்யா முதல் க/கு (5/10) | 15,000 | |||
| சாரா முதல் க/கு (3/10) | 9,000 | |||
| தாரா முதல் க/கு (2/10) | 6,000 | 30,000 | ||
| 40,000 | 40,000 |
32.
| செலவுகள் | ரூ. | வருமானம் | ரூ. | ரூ. |
|---|---|---|---|---|
| சந்தா பெற்றது | 1,72,000 | |||
| கூட்டுக:2018ல் பெறவேண்டிய சந்தா | 8,000 | 1,80,000 |
33.
கூட்டு சராசரி இலாப முறை கணக்கிடல்
| ஆண்டு | இலாபம் (அ) ரூ. | நிறைகள் (ஆ) | கூட்டு இலாபம் (அ x ஆ) ரூ. |
|---|---|---|---|
| 2015 | 20,000 | 1 | 20,000 |
| 2016 | 22,000 | 2 | 44,000 |
| 2017 | 24,000 | 3 | 72,000 |
| 2018 | 28,000 | 4 | 1,12,000 |
| மொத்தம் | 10 | 2,48,000 |
=\(\frac { 2,48,000 }{ 10 } \)=ரூ.24,800
நற்பெயர் = கூட்டு சராசரி இலாபம் x கொள்முதல் ஆண்டுகளின் எண்ணிக்கை
= 24,800 × 3 = ரூ.74,400
34.
நற்பெயர் = சராசரி இலாபம் x கொள்முதல் ஆண்டுகளின் எண்ணிக்கை

=\(\frac { 4,000+3,000+5,000+4,500+3,500 }{ 5 } \)
=\(\frac { 20,000 }{ 5 } = 4,000\)
நற்பெயர் = சராசரி இலாபம் x கொள்முதல் ஆண்டுகளின் எண்ணிக்கை
= 4,000 × 3 = ரூ.12,000
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set B
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Standard Physics Wave Optics Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Physics Wave Optics Creative Questions Study Material - QB365 Set C
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards