12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 04/10/2020
12 ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் மாதிரி 3 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Accountancy Tamil Medium Sample 3 Mark Book Back Questions (New Syllabus 2020)
12ஆம் வகுப்பு Accountancy / கணக்குப்பதிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Accountancy / கணக்குப்பதிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Accountancy Test

1.
கவின், மதன் மற்றும் ரஞ்சித் என்ற கூட்டாளிகள் தங்கள் இலாபம் மற்றும் நட்டங்களை முறையே 4 : 3 : 3 என்ற விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். 2018, டிசம்பர் 31 அன்று கவின் கூட்டாண்மையை விட்டு விலகுகிறார். விலகலுக்குப்பின் தேவையான சரிக்கட்டுதல்களைச் செய்த பிறகு அவருடைய முதல் கணக்கு ரூ.1,50,000 வரவிருப்பைக் காட்டியது. பின்வரும் நிலைகளில் பதிய வேண்டிய குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.
(i) விலகும் கூட்டாளிக்குச் செலுத்த வேண்டிய தொகை உடனடியாக காசோலை மூலம் செலுத்தப் பட்டது.
(ii) விலகும் கூட்டாளிக்குச் செலுத்த வேண்டிய தொகை உடனடியாகச் செலுத்தப்படவில்லை.
(iii) ரூ.1,00,000 உடனடியாக காசோலை மூலம் செலுத்தப்பட்டது, மீதத்தொகை இன்னும் செலுத்தப்பட உள்ளது
2.
ரோஜா, நீலா மற்றும் கனகா என்ற கூட்டாளிகள் 4:3:3 என்ற விகிதத்தில் இலாபம் மற்றும் நட்டங்களைப் பகிர்ந்து வந்தனர். 2017 ஏப்ரல் 1 அன்று ரோஜா என்பவர் கூட்டாண்மையிலிருந்து விலகினார். அவருடைய விலகலின்போது கீழ்க்கண்ட சரிக்கட்டுதல்கள் செய்வதற்கு ஒப்புக்கொள்ளப்பட்டன.
(i) கட்டடத்தின் மதிப்பில் ரூ.30,000 அதிகரிக்க வேண்டும்.
(ii) சரக்கிருப்பு மதிப்பில் ரூ. 5,000 மற்றும் அறைகலன் மதிப்பில் ரூ.12,000 குறைக்க வேண்டும்.
(iii) கொடுபடா பொறுப்புகளுக்கு ரூ.1,000 ஒதுக்கு உருவாக்க வேண்டும்.
குறிப்பேட்டுப் பதிவுகள் தந்து மறுமதிப்பீட்டுக் கணக்கினைத் தயாரிக்கவும்.
3.
ரொக்க ஓட்ட பகுப்பாய்வு குறித்து சிறு குறிப்பு வரைக.
4.
வருண் மற்றும் பாரத் இருவரும் கூட்டாளிகள். அவர்களின் இலாப நட்டம் விகிதம் 5:4 ஆகும். அவர்கள் தாமு என்பவரை புதிய கூட்டாளியாக சேர்த்தனர். புதிய இலாபப் பகிர்வு விகிதமாக 1:1:1 என்பதை மூவரும் ஒப்புக் கொள்கின்றனர். தாமு செலுத்த வேண்டிய நற்பெயர் மதிப்பு ரூ.15,000 என மதிப்பிடப்பட்டது. அதில், அவர் ரூ.10,000 ரொக்கம் செலுத்துகிறார். மாறுபடும் முதல் முறையில் கணக்குகள் உள்ளதெனக் கொண்டு நற்பெயருக்கான குறிப்பேட்டுப் பதிவினைத் தரவும்.
5.
இரத்னா, பாஸ்கர், மற்றும் இப்ராஹிம் ஆகிய கூட்டாளிகள் 2 : 3 : 4 என்ற விகிதத்தில் இலாப நட்டங்களை பகிர்ந்து வந்தனர். 2018, டிசம்பர் 31 அன்று இரத்னா இறந்துவிட்டார். அவருக்குச் செலுத்த வேண்டிய இறுதித் தொகை ரூ.1,00,000 வரவு இருப்பினைக் காட்டியது. கீழ்கண்ட சூழ்நிலைகளில் குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.
(அ) சேரவேண்டியத் தொகை உடனடியாகக் காசோலை மூலம் செலுத்தப்பட்டது
(ஆ) சேரவேண்டியத் தொகை உடனடியாகச் செலுத்தப்படவில்லை
(இ) ரூ.60,000 காசோலை மூலம் உடனடியாகச் செலுத்தப்பட்டது
6.
பின்வரும் விவரங்களிலிருந்து மணி மற்றும் கனி நிறுமங்களின் 2019 மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டிற்கான பொது அளவு வருமான அறிக்கையைத் தயார் செய்யவும்.
| விவரம் | மணி நிறுமம் | கனி நிறுமம் |
|---|---|---|
| ரூ. | ரூ. | |
| விற்பனை மூலம் பெற்ற வருவாய் | 2,00,000 | 2,50,000 |
| இதர வருமானம் | 30,000 | 25,000 |
| செலவுகள் | 1,10,000 | 1,25,000 |
7.
பின்வரும் விவரங்களிலிருந்து மொத்த விற்பனையைக் கணக்கிடவும்.
| விவரம் | ரூ. | விவரம் | ரூ. |
|---|---|---|---|
| 2018, ஏப்ரல் 1 அன்று கடனாளிகள் | 2,50,000 | பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு மறுக்கப்பட்டது | 15,000 |
| 2018, ஏப்ரல் 1 அன்று பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு | 60,000 | உள் திருப்பம் | 50,000 |
| கடனாளிகளிடமிருந்து பெற்ற ரொக்கம் | 7,25,000 | 2019, மார்ச் 31 அன்று பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு | 90,000 |
| பெறுதற்குரிய மாற்றுச்சீட்டுக்காக ரொக்கம் | 1,60,000 | 2019, மார்ச் 31 அன்று பற்பல கடனாளிகள் | 2,40,000 |
| வாராக்கடன் | 30,000 | ரொக்க விற்பனை | 3,15,000 |
8.
சதீஷ் மற்றும் சுதன் இருவரும் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளிகள். அவர்கள் 4:3 என்ற விகிதத்தில் இலாபம் மற்றும் நட்டங்களைப் பகிர்ந்து வருகின்றனர். 2018 ஏப்ரல் 1 அன்று சசி என்பவரை கூட்டாளியாகச் சேர்த்துக்கொண்டனர். சசி கூட்டாண்மையில் சேர்ந்த அன்று நிறுவன ஏடு நற்பெயர் மதிப்பினை ரூ.35,000 என்று காட்டியது. மாறுபடும் முதல் முறையில் பராமரிக்கப்படுவதாக கருதி தேவையான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும். கூட்டாளிகள் பின்வரும் முடிவினை எடுத்தனர்.
(i) ஏட்டில் உள்ள நற்பெயர் தொகை முழுவதையும் போக்கெழுவது
(ii) ஏட்டில் உள்ள நற்பெயரில் ரூ.21,000 மட்டும் போக்கெழுவது
9.
10.
பின்வரும் விவரங்கள் ஒரு மன்றத்தின் 2019, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய இறுதிக் கணக்குகளில் எவ்வாறு தோன்றும் எனக் காட்டவும்.
| பெறுதல்கள் | ரூ | ரூ | செலுத்தல்கள் | ரூ |
|---|---|---|---|---|
| சந்தா | ||||
| 2017-2018 | 10,000 | |||
| 2018-2019 | 50,00 | |||
| 2019-2020 | 5,000 | 65,000 | ||
மன்றத்தில் உள்ள 200 உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் ஆண்டு சந்தாவாக ரூ.400 செலுத்துகின்றனர்.2017-2018 ஆம் ஆண்டில் இன்னும் பெற வேண்டிய சந்தா ரூ.2000
11.
2018, ஏப்ரல் 1 அன்று சுபா தன்னுடைய தொழிலை ரூ. 1,20,000 முதலுடன் தொடங்கினார். அவர் முறையான கணக்கேடுகளைப் பராமரிக்கவில்லை. 2019, மார்ச் 31 அன்று அவருடைய ஏடுகளிலிருந்து பெறப்பட்ட விவரங்கள் பின்வருமாறு:
| விவரம் | ரூ. | விவரம் | ரூ. |
|---|---|---|---|
| வங்கி மேல்வரைப்பற்று | 50,000 | சரக்கிருப்பு | 1,60,000 |
| கடனாளிகள் | 1,80,000 | கடனீந்தோர் | 90,000 |
| பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு | 70,000 | செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு | 2,40,000 |
| கணினி | 30,000 | கைரொக்கம் | 60,000 |
| இயந்திரம் | 3,00,000 |
அவ்வாண்டில் அவர் தன்னுடைய சொந்த பயனுக்காக ரூ. 30,000 எடுத்துக் கொண்டார். அவ்வாண்டில் அவர் கொண்டுவந்த கூடுதல் முதல் ரூ.40,000. அவருடைய இலாபம் அல்லது நட்டம் கண்டறியவும்.
12.
பின்வரும் விவரங்களிலிருந்து விடுபட்ட தகவலைக் காணவும்.
| விவரம் | ரூ. |
|---|---|
| 31.3.2018 அன்று இறுதி முதல் | 80,000 |
| அவ்வாண்டில் கொண்டுவந்த கூடுதல் முதல் | 30,000 |
| அவ்வாண்டில் எடுப்புகள் | 15,000 |
| 01.4.2017 அன்று தொடக்க முதல் | ? |
| 31.3.2018 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டில் நட்டம் | 25,000 |
13.
14.
இராஜேஷ் மற்றும் இரமேஷ் எனும் கூட்டாளிகள் 3:2 என இலாபநட்டம் பகிர்ந்து வந்தனர். இராமன் என்பவரை புதிய கூட்டாளியாக சேர்த்துக் கொண்டனர். அவர்களது புதிய இலாப விகிதம் 5:3:2. பின்வரும் மறுமதிப்பீடுகள் செய்யப்பட்டன. தேவையான குறிப்பேட்டுப் பதிவுகள் தந்து மறுமதிப்பீட்டுக் கணக்கு தயாரிக்கவும்.
(அ) கட்டடத்தின் மதிப்பு ரூ.15,000 உயர்த்தப்பட்டது
(ஆ) இயந்திரத்தின் மதிப்பு ரூ.4,000 குறைக்கப்பட்டது
(இ) வாரா ஐயக்கடன் ஒதுக்கு ரூ.1,000 உருவாக்கப்பட்டது.
15.
கூட்டாண்மை அடிப்படையில் நடத்தப்படும் ஒரு வணிகத்தின் விவரங்கள் பின்வருமாறு:
(i) ஈட்டிய இலாபங்கள்: 2016: ரூ.25,000; 2017: ரூ.23,000 மற்றும் 2018: ரூ.26,000.
(ii) 2016 ஆம் ஆண்டின் இலாபத்தில் திரும்பத் திரும்ப நிகழா வருமானம் ரூ.2,500 சேர்ந்துள்ளது.
(iii) சரக்கிருப்பு தீயினால் சேதமடைந்ததால் 2017 ஆம் ஆண்டின் இலாபத்தில் ரூ.3,500 குறைக்கப்பட்டது.
(iv) சரக்கிருப்பு காப்பீடு செய்யப்படவில்லை. ஆனால் எதிர்காலத்தில் காப்பீடு செய்வதென முடிவு செய்யப்பட்டது. அதற்கான காப்பீட்டுக் கட்டணம் ஆண்டுக்கு ரூ.250 என மதிப்பிடப்பட்டது.
3 ஆண்டுகள் சராசரி இலாபத்தில் 2 ஆண்டுகள் கொள்முதல் என்ற அடிப்படையில் நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடவும்.
16.
உயர் இலாப முறையில் நற்பெயர் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?
17.
சானியா நிறுமத்தின் கொடுக்கப்பட்ட தகவல்களிலிருந்து சரக்கிருப்பு சுழற்சி விகிதம் மற்றும் சரக்கிருப்பு மாற்று காலத்தை (மாதங்களில்) கணக்கிடவும்.
| விவரம் | ரூ. |
|---|---|
| விற்பனை மூலம் பெற்ற வருவாய் | 1,90,000 |
| அவ்வாண்டில் தொடக்கச் சரக்கிருப்பு | 40,000 |
| அவ்வாண்டில் இறுதிச் சரக்கிருப்பு | 20,000 |
| அவ்வாண்டில் மேற்கொண்ட கொள்முதல் | 90,000 |
| உள்தூக்குக்கூலி | 10,000 |
18.
ஜனனி, கமலி மற்றும் லட்சுமி மூவரும் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளிகள். அவர்கள் தங்கள் இலாப நட்டங்களை சமமாகப் பகிர்ந்து வருகின்றனர். அவர்கள் நிறுவனத்தின் தொழிலுக்கு அளித்த பங்களிப்புக்காக, கூட்டாண்மை ஒப்பாவணத்தின் விதிமுறைகளின் படி, கமலிக்கு மாத ஊதியம் ரூ.10,000 அனுமதிக்கப்பட்டது மற்றும் லட்சுமிக்கு கழிவு ஆண்டுக்கு ரூ.40,000 அனுமதிக்கப்பட்டது. கூட்டாளிகளுடைய முதல் மாறுபடும் முதல் எனக் கொண்டு தேவையான குறிப்பேட்டுப் பதிவினைத் தரவும்.
19.
அகமது மற்றும் பஷீர் வழங்கிய முதல் முறையே ரூ.60,000 மற்றும் ரூ.40,000. அவர்களின் இலாபப் பகிர்வு விகிதம் 2:1. அவ்வாண்டின் முதல் மீது வட்டி கணக்கிடுவதற்கு முன் இலாபம் ரூ.5,000. பின்வரும் நிலைகளில் முதல் மீதான வட்டித் தொகையைக் கணக்கிடவும்.
(i) முதல்மீது வட்டி குறித்து கூட்டாண்மை ஒப்பாவணத்தில் ஏதும் குறிப்பிடாத போது
(ii) கூட்டாண்மை ஒப்பாவணத்தின் படி, முதல்மீது வட்டி ஆண்டுக்கு 4% அனுமதிக்கப்படும்போது
(iii) கூட்டாண்மை ஒப்பாவணத்தின்படி முதல்மீது வட்டி ஆண்டுக்கு 6% அனுமதிக்கும்போது
20.
2018, ஜனவரி 1 அன்று பேகம் மற்றும் பாத்திமா என்ற கூட்டாளிகளின் முதல் கணக்குகள் முறையே ரூ.50,000 மற்றும் ரூ.40,000 இருப்பினைக் காட்டியது. 2018, அக்டோபர் 1 அன்று பேகம் கூடுதல் முதலாக ரூ.10,000 கொண்டு வந்தார் மற்றும் 2018, மே 1 அன்று பாத்திமா கொண்டுவந்த கூடுதல் முதல் ரூ.9,000. டிசம்பர் 31, 2018 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய முதல் மீது வட்டி ஆண்டுக்கு 4% கணக்கிடவும்.
21.
கூட்டாண்மையின் சிறப்பியல்புகளைத் தரவும்.
22.
ஒறுப்பிழப்பு செய்த பங்குகளின் மறுவெளியீடு என்றால் என்ன?
23.
அருண் என்பவர் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளி. கூட்டாண்மை ஒப்பாவணத்தின்படி எடுப்புகள் மீது வட்டி ஆண்டுக்கு 12% விதிக்க வேண்டும். டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் 2018 ஆம் ஆண்டில் அவருடைய எடுப்புகள் பின்வருமாறு:
| நாள் | ரூ. |
|---|---|
| மார்ச் 1 | 6,000 |
| ஜுன் 1 | 4,000 |
| செப்டம்பர் 1 | 5,000 |
| டிசம்பர் 1 | 2,000 |
எடுப்புகள் மீதான வட்டித் தொகையைக் கணக்கிடவும்
24.
தங்கள் இலாப நட்டங்களை சமமாகப் பகிர்ந்து வரும் சுபா மற்றும் சுதா என்ற கூட்டாளிகளின் பின்வரும் இருப்புநிலைக் குறிப்பிலிருந்து 2017, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய முதல் மீது வட்டி ஆண்டுக்கு 6% கணக்கிடவும்.
| பொறுப்புகள் | ரூ. | சொத்துகள் | ரூ. |
|---|---|---|---|
| முதல் கணக்குகள்: | நிலைச் சொத்துகள் | 30,000 | |
| சுபா | 15,000 | நடப்புச் சொத்துகள் | 20,000 |
| சுதா | 20,000 | ||
| நடப்புப் பொறுப்புகள் | 15,000 | ||
| 50,000 | 50,000 |
அவ்வாண்டில் சுபா மற்றும் சுதாவின் எடுப்புகள் முறையே ரூ.2,500 மற்றும் ரூ.3,500. அவ்வாண்டில் ஈட்டிய இலாபம் ரூ.15,000.
25.
ஒரு சங்கத்தின் 2017, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய இறுதிக் கணக்குகளில் பின்வரும் விவரங்கள் எவ்வாறு தோன்றும்? 2016-17 ல் அச்சங்கம் பெற்ற சந்தா ரூ.25,000. இதில் 2015-16 ஆம் ஆண்டுக்கான சந்தா ரூ. 2,000 மற்றும் 2017-18 ஆம் ஆண்டுக்கான சந்தா ரூ.1,500 சேர்ந்துள்ளது. 2016-17 ஆம் ஆண்டிற்கான சந்தா ரூ.500 இன்னும் பெற வேண்டியுள்ளது.
26.
ஜெமினி வரையறு நிறுமம் பங்கொன்றுக்கு ரூ.10 மதிப்புள்ள ரூ. 7 அழைக்கப்பட்ட 20 சாதாரண பங்குகளை ஒறுப்பிழப்பு செய்தது. மகேஷ் என்பவர் அப்பங்குகளுக்கான விண்ணப்பம் மற்றும் ஒதுக்கீடு பணம் ரூ.5 செலுத்தி இருந்தார். அவற்றில் 15 பங்குகள் பங்கொன்றுக்கு ரூ.6 வீதம் பெற்றுக் கொண்டு ரூ.7 வீதம் செலுத்தப்பட்ட பங்குகளாக நரேஷ் என்பவருக்கு மறுவெளியீடு செய்யப்பட்டது. பங்கு ஒறுப்பிழப்பு மற்றும் மறுவெளியீட்டிற்கான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.
27.
பின்வரும் விவரங்களிலிருந்து மொத்த விற்பனையை கணக்கிடவும்:
| விவரம் | ரூ. |
|---|---|
| 2017, ஏப்ரல் 1 அன்று கடனாளிகள் | 1,50,000 |
| 2017, ஏப்ரல் 1 அன்று பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு | 40,000 |
| கடனாளிகளிடமிருந்து பெற்ற ரொக்கம் | 3,90,000 |
| பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு ரொக்கம் பெறப்பட்டது | 90,000 |
| பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு மறுக்கப்பட்டது | 10,000 |
| விற்பனைத் திருப்பம் | 40,000 |
| 2018, மார்ச் 31 அன்று பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு | 30,000 |
| 2018, மார்ச் 31 அன்று பற்பல கடனாளிகள் | 1,30,000 |
| ரொக்க விற்பனை | 2,00,000 |
28.
2017, ஏப்ரல் 1 அன்று கணேஷ் ரூ. 75,000 முதலுடன் தன்னுடைய தொழிலைத் தொடங்கினார். அவர் முறையான கணக்கேடுகளை பராமரிக்கவில்லை. 31.03.2018 ஆம் நாளைய அவருடைய ஏடுகளின் விவரங்கள் பின்வருமாறு.
| விவரம் | ரூ. | விவரம் | ரூ. |
|---|---|---|---|
| ரொக்கம் | 5,000 | கடனாளிகள் | 16,000 |
| சரக்கிருப்பு | 18,000 | கடனீந்தோர் | 9,000 |
| பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு | 7,000 | வங்கி ரொக்கம் | 24,000 |
| அறைகலன் | 3,000 | செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு | 6,000 |
| நிலம் மற்றும் கட்டடங்கள் | 30,000 |
அவ்வாண்டில் தன்னுடைய சொந்தப் பயனுக்காக அவர் ரூ. 15,000 எடுத்துக் கொண்டார். அவ்வாண்டில் அவர் கொண்டுவந்த கூடுதல் முதல் ரூ. 20,000. அவருடைய இலாபம் அல்லது நட்டத்தைக் கண்டறியவும்.
29.
பின்வரும் விவரங்களிலிருந்து விடுபட்ட தகவலைக் கண்டறியவும்:
| விவரம் | ரூ. |
|---|---|
| 31.3.2019 அன்று இறுதி முதல் | 1,90,000 |
| அவ்வாண்டில் கொண்டுவந்த கூடுதல் முதல் | 50,000 |
| அவ்வாண்டின் எடுப்புகள் | 30,000 |
| 1.4.2018 அன்று தொடக்க முதல் | ? |
| 31.3.2019 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டின் நட்டம் | 40,000 |
30.
சீனு மற்றும் சிவா இருவரும் கூட்டாளிகள். அவர்கள் தங்கள் இலாபம் மற்றும் நட்டங்களை 5:3 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொள்கின்றனர். சுப்பு என்பவரை புதிய கூட்டாளியாக சேர்க்கும்போது அவர்கள் பின்வரும் முடிவுகள் எடுத்தனர்.
(i) கட்டடம் மதிப்பினை ரூ.40,000 ஆக உயர்த்த வேண்டும்.
(ii) கணக்கேடுகளில் இதுவரை பதியப்படாத ரூ.10,000 மதிப்புள்ள முதலீடுகளை கணக்கில் கொண்டுவர வேண்டும்.
(iii) இயந்திரம் மதிப்பு ரூ.14,000 மற்றும் அறைகலன் மதிப்பு ரூ.12,000 குறைக்க வேண்டும்.
(iv) பற்பல கடனீந்தோரில் ரூ.16,000 போக்கெழுத வேண்டும்.
குறிப்பேட்டுப் பதிவுகள் மற்றும் மறு மதிப்பீட்டுக் கணக்கினைத் தயார் செய்யவும்.
31.
சர்மிளா வரையறு நிறுமம் மற்றும் சங்கீதா வரையறு நிறுமத்தின் 2019 , மார்ச் 31 ஆம் நாளைய பொது அளவு இருப்புநிலைக் குறிப்பு தயார் செய்யவும்.
| விவரம் | சர்மிளா நிறுமம் | சங்கீதா நிறுமம் |
|---|---|---|
| ரூ. | ரூ. | |
| I. பங்குமூலதனம் மற்றும் பொறுப்புகள் | ||
| பங்குதாரர் நிதி | 5,00,000 | 11,00,000 |
| நீண்ட காலப் பொறுப்புகள் | 4,00,000 | 7,00,000 |
| நடப்புப் பொறுப்புகள் | 1,00,000 | 2,00,000 |
| மொத்தம் | 10,00,000 | 20,00,000 |
| II. சொத்துகள் | ||
| நிலைச் சொத்துகள் | 6,50,000 | 18,00,000 |
| நடப்புச் சொத்துகள் | 3,50,000 | 2,00,000 |
| மொத்தம் | 10,00,000 | 20,00,000 |
32.
நிலை அறிக்கை மற்றும் இருப்புநிலைக் குறிப்புக்கும் இடையே உள்ள வேறுபாடுகளைத் தரவும்.
33.
பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கிற்கும், வருவாய் மற்றும் செலவினக் கணக்கிற்கும் உள்ள வேறுபாடுகளைத் தரவும்.
34.
கூட்டாண்மை அடிப்படையில் நடத்தப்படும் ஒரு வணிகத்தின் விவரங்கள் பின்வருமாறு:
(அ) ஈட்டிய இலாபங்கள் : 2016: ரூ.30,000; 2017: ரூ.29,000 மற்றும் 2018: ரூ.32,000.
(ஆ) 2016 ஆம் ஆண்டின் இலாபத்தில் திரும்பத் திரும்ப நிகழா வருமானம் ரூ.3,000 சேர்ந்துள்ளது.
(இ) சரக்கிருப்பு தீயினால் சேதமடைந்ததால் 2017 ஆம் ஆண்டின் இலாபத்தில் ரூ.2,000 குறைக்கப்பட்டது.
(ஈ) சரக்கிருப்பு காப்பீடு செய்யப்படவில்லை. ஆனால், எதிர்காலத்தில் காப்பீடு செய்வதென முடிவு செய்யப்பட்டது. அதற்கான காப்பீட்டுக் கட்டணம் ஆண்டுக்கு ரூ.5,600 என மதிப்பிடப்பட்டது.
3 ஆண்டுகள் சராசரி இலாபத்தில் 2 ஆண்டுகள் கொள்முதல் என்ற அடிப்படையில் நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடவும்.
35.
ரம்யா, சாரா மற்றும் தாரா என்ற கூட்டாளிகள் முறையே 5:3:2 எனும் விகிதத்தில் இலாப நட்டம் பகிர்ந்து வந்தனர். 2018, ஏப்ரல் 1 அன்று தாரா கூட்டாண்மையிலிருந்து விலகினார். பின்வரும் சரிக்கட்டுதல்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
i) வளாகத்தின் மதிப்பை ரூ. 40,000 உயர்த்த வேண்டும்
ii) சரக்கிருப்பு ரூ.3,000, இயந்திரம் ரூ. 6,500 மதிப்பு குறைக்க வேண்டும்.
iii) கொடுபடாச் செலவுகள் ரூ. 500 ஒதுக்கு உருவாக்க வேண்டும்.
குறிப்பேட்டுப் பதிவுகள் தந்து மறுமதிப்பீட்டுக் கணக்கு தயாரிக்கவும்.
36.
அருள் மற்றும் அனிதா என்ற கூட்டாளிகள் இலாப நட்டங்களை 4:3 என்ற விகிதத்தில் பகிர்ந்து வருகின்றனர். 31.3.2018 அன்று புதிய கூட்டாளியாக அஜய் என்பவர் சேர்த்துகொள்ளப்பட்டார். சேர்க்கையின்போது, நிறுவன ஏடுகளில் பொதுக்காப்பு ரூ.42,000 எனக் காட்டியது. பொதுக்காப்பினை பகிர்ந்தளிப்பதற்கான குறிப்பேட்டுப் பதிவினைத் தரவும்.
37.
ஆஷிகா நிறுமத்தின் பின்வரும் தகவல்களிலிருந்து நிலைச் சொத்துகள் சுழற்சி விகிதத்தைக் கணக்கிடவும்.
அவ்வாண்டில் விற்பனை மூலம் பெற்ற வருவாய் ரூ.60,00,000.
அவ்வாண்டின் இறுதியில் நிலைச்சொத்துகள் ரூ.6,00,000.
38.
ஒரு நிறுவனத்தின் கடந்த ஐந்து ஆண்டுகளின் இலாபங்கள் பின்வருமாறு:
2014: ரூ.4,000; 2015: ரூ.3,000; 2016: ரூ.5,000; 2017: ரூ.4,500 மற்றும் 2018: ரூ.3,500. 5 ஆண்டுகள் சராசரி இலாபத்தில் 3 ஆண்டுகள் கொள்முதல் என்ற அடிப்படையில் நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடவும்.
1.
| நாள் | விவரம் | பே.ப. எண் |
பற்று ரூ. |
வரவு ரூ. |
|
|---|---|---|---|---|---|
| 2018 | (i) கவின் முதல க/கு | ப | 1,50,000 | ||
| டிசம்பர் 31 | வங்கி க/கு | 1,50,000 | |||
| (தொகை உடனடியாகச் செலுத்தப்பட்டது) | |||||
| " | (ii) கவின் முதல் க/கு | ப | 1,50,000 | ||
| கவின் கடன் க/கு | 1,50,000 | ||||
| (தொகை கடன் கணக்கிற்கு மாற்றப்பட்டது) | |||||
| " | (iii) கவின் முதல் க/கு | ப | 1,50,000 | ||
| வங்கி க/கு | 1,00,000 | ||||
| கவின் கடன் க/கு | 50,000 | ||||
| (ரூ.1,00,000 உடனடியாகச் செலுத்தப்பட்டு, மீதித் தொகை கடன் கணக்கிற்கு மாற்றப்பட்டது) |
2.
| நாள் | விவரம் | பே.ப. எண் |
பற்று ரூ. |
வரவு ரூ. |
|
|---|---|---|---|---|---|
| 2017 | கட்டடம் க/கு | ப | 30,000 | ||
| மறுமதிப்பீட்டுக் க/கு | 30,000 | ||||
| (கட்டடம் மதிப்பு உயர்த்தப்பட்டது) | |||||
| " | மறுமதிப்பீட்டுக் க/கு | ப | 18,000 | ||
| சரக்கிருப்பு க/கு | 5,000 | ||||
| அறைகலன் க/கு | 12,000 | ||||
| கொடுபடா பொறுப்பு க/கு | 1,000 | ||||
| (சரக்கிருப்பு, அறைகலன் மீது தேய்மானம் நீக்கியது மற்றும் கொடுபடா பொறுப்பு கணக்கு உருவாக்கியது) | |||||
| " | மறுமதிப்பீட்டுக் க/கு | ப | 12,000 | ||
| ரோஜா முதல் க/கு | 4,800 | ||||
| நீலா முதல் க/கு | 3,600 | ||||
| கனகா முதல் க/கு | 3,600 | ||||
| (மறுமதிப்பீட்டு இலாபம் பகிர்ந்தளிக்கப்பட்டது) |
| விவரம் | ரூ. | ரூ. | விவரம் | ரூ. |
|---|---|---|---|---|
| சரக்கிருப்பு க/கு | 5,000 | கட்டடம் க/கு | 30,000 | |
| அறைகலன் | 12,000 | |||
| கொடுபடா பொறுப்பு க/கு | 1,000 | |||
| மறுமதிப்பீட்டு இலாபம் | ||||
| ரோஜா முதல் க/கு \(\left( 12,000\times \frac { 4 }{ 10 } \right) \) | 4,800 | |||
| நீலா முதல் க/கு \(\left( 12,000\times \frac { 3 }{ 10 } \right) \) | 3,600 | |||
| கனகா முதல் க/கு (12,000 x 3/10) | 3,600 | 12,000 | ||
| 30,000 | 30,000 |
3.
1) ரொக்க ஓட்ட பகுப்பாய்வு என்பது ரொக்க ஓட்ட அறிக்கை தயாரிப்பதைக் குறிக்கும். இது ஒரு குறிப்பிட்ட காலத்தில் உள்வரும் மற்றும் வெளிச் செல்லும் ரொக்கம் மற்றும் ரொக்கத்திற்கு சமமானவைகளை வெளிப்படுத்தும்.
2) ரொக்கம் என்பது கை ரொக்கம் மற்றும் வங்கியில் உள்ள கேட்பு வைப்புகளை உள்ளடக்கியது.
3) ரொக்கத்திற்கு சமமானவைகள் என்பது குறுகிய காலத்தில் அதிக நட்டமில்லாமல் ரொக்கமாக மாற்றக்கூடிய குறுகிய கால முதலீடுகளைக் குறிக்கும்.
4) ரொக்க ஓட்டப் பகுப்பாய்வு வணிக நிறுவனத்தின் நீர்மைத்தன்மை மற்றும் கடன் தீர்க்கும் திறன் விகிதங்கள் கணக்கிடுவதற்கு உதவிகரமானதாக இருக்கிறது.
4.
தியாக விகிதம் கணக்கிடுதல்:
தியாக விகிதம் = பழைய பங்கு - புதிய பங்கு
வருண் = \(\frac { 5 }{ 9 } -\frac { 1 }{ 3 } =\frac { 5-3 }{ 9 } =\frac { 2 }{ 9 } \)
பாரத் = \(\frac { 4 }{ 9 } -\frac { 1 }{ 3 } =\frac { 4-3 }{ 9 } =\frac { 1 }{ 9 } \)
எனவே, தியாக விகிதம் = \(\frac { 2 }{ 9 } :\frac { 1 }{ 9 } \) அல்லது 2 : 1
| நாள் | விவரம் | பே.ப. எண் |
பற்று ரூ. |
வரவு ரூ. |
|
|---|---|---|---|---|---|
| ரொக்கம் க/கு | ப | 10,000 | |||
| தாமு முதல் க/கு | ப | 5,000 | |||
| வருண் முதல் க/கு (2/3) | 10,000 | ||||
| பாரத் முதல் க/கு (1/3) (தாமுவின் நற்பெயர் பங்கு பழைய கூட்டாளிகளின் முதல் கணக்கில் வரவு வைக்கப்பட்டது) |
5,000 |
5.
| நாள் | விவரம் | பே. ப.எ. | பற்று ரூ |
வரவு ரூ |
|
|---|---|---|---|---|---|
| (அ) இரத்னாவின் நிறைவேற்றாளர் க/கு | ப | 1,00,000 | |||
| வங்கி க/கு | 1,00,000 | ||||
| (சேர வேண்டியத் தொகை உடனடியாகச் செலுத்தப்பட்டது) | |||||
| (ஆ) இரத்னாவின் நிறைவேற்றாளர் க/கு | 1,00,000 | ||||
| இரத்னாவின் நிறைவேற்றாளர் கடன் க/கு | 1,00,000 | ||||
| (சேரவேண்டியத் தொகை கடன் கணக்கிற்கு மாற்றப்பட்டது) | |||||
| (இ) இரத்னாவின் நிறைவேற்றாளர் க/கு | ப | 1,00,000 | |||
| வங்கி க/கு | 60,000 | ||||
| இரத்னாவின் நிறைவேற்றாளர் கடன் க/கு | 40,000 | ||||
| (ரூ. 60,000 செலுத்தப்பட்டு மீதித் தொகை கடன் கணக்கிற்கு மாற்றப்பட்டது) |
6.
| விவரம் | மணி நிறுமம் | கனி நிறுமம் | ||
|---|---|---|---|---|
| தொகை | விற்பனை மூலம் பெற்ற வருவாயில் சதவீதம் |
தொகை | விற்பனை மூலம் பெற்ற வருவாயில் சதவீதம் |
|
| ரூ. | ரூ. | |||
| விற்பனை மூலம் பெற்ற வருவாய் | 2,00,000 | 100 | 2,50,000 | 100 |
| கூட்டுக: இதர வருமானம் | 30,000 | 15 | 25,000 | 10 |
| மொத்த வருவாய் | 2,30,000 | 115 | 2,75,000 | 110 |
| கழிக்க: செலவுகள் | 1,10,000 | 55 | 1,25,000 | 50 |
| வரிக்கு முன்னர் உள்ள இலாபம் | 1,20,000 | 60 | 1,50,000 | 60 |
7.
| விவரம் | ரூ. | விவரம் | ரூ. |
| இருப்பு கீ/கொ | 60,000 | ரொக்கக் க/கு | 1,60,000 |
| கடனாளிகள் க/கு | 2,05,000 | கடனாளிகள் க/கு | 15,000 |
| அவ்வாண்டில் மாற்றுச்சீட்டு பெற்றது (இருப்புக்கட்டும் தொகை) | (பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு மறுக்கப்பட்டது) | ||
| இருப்பு கீ/இ | 90,000 | ||
| 2,65,000 | 2,65,000 |
| விவரம் | ரூ. | விவரம் | ரூ. |
|---|---|---|---|
| இருப்பு கீ/கொ | 2,50,000 | ரொக்கக் க/கு | 7,25,000 |
| பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு க/கு | 15,000 | உள்திருப்பம் க/கு | 15,000 |
| (மறுக்கப்பட்டது) | பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு க/கு | 2,05,000 | |
| விற்பனை க/கு (கடன்)(இருப்புக்கட்டும் தொகை) | 9,85,000 | (மாற்றுச்சீட்டு பெற்றது) | |
| வாராக்கடன் | 30,000 | ||
| இருப்பு கீ/இ | 2,40,000 | ||
| 12,50,000 | 12,50,000 |
மொத்த விற்பனை = ரொக்க விற்பனை + கடன் விற்பனை
= ரூ.3,15,000 + ரூ.9,85,000
= ரூ.13,00,000
8.
(i) ஏட்டில் உள்ள நற்பெயர் தொகை முழுவதையும் போக்கெழுவது
| நாள் | விவரம் | பே.ப.எ | பற்று ரூ. | வரவு ரூ. | |
|---|---|---|---|---|---|
| 2018 | சதீஷின் முதல் க/கு (4/7) | ப | 20,000 | ||
| ஏப்ரல் 1 | சுதனின் முதல் க/கு (3/7) | ப | 15,000 | ||
| நற்பெயர் க/கு | 35,000 | ||||
| (ஏட்டில் உள்ள நற்பெயரைப் போக்கெழுதியது ) |
(ii) ஏட்டில் உள்ள நற்பெயர் தொகையில் ரூ.21,000 மட்டும் போக்கெழுதுவது
| நாள் | விவரம் | பே.ப.எ | பற்று ரூ. | வரவு ரூ. | |
|---|---|---|---|---|---|
| 2018 | சதீஷின் முதல் க/கு (21,000 x 4/7) | ப | 12,000 | ||
| ஏப்ரல் 1 | சுதனின் முதல் க/கு (21,000 x 3/7) | 9,000 | |||
| நற்பெயர் க/கு | 21,000 | ||||
| (ஏட்டில் உள்ள நற்பெயரில் ரூ.21,000 போக்கெழுவது ) |
9.
10.
| செலவுகள் | ரூ. | வருமானம் | ரூ. | ரூ. |
|---|---|---|---|---|
| சந்தா | 50,000 | |||
| கூட்டுக: 2017-2018 ல் பெறவேண்டிய சந்தா | 30,000 | 80,000 |
| பொறுப்புகள் | ரூ. | சொத்துகள் | ரூ. | ரூ. |
|---|---|---|---|---|
| முன்கூட்டிபெற்ற 2019-20ஆம் ஆண்டிற்கான சந்தா | 5,000 | பெறவேண்டிய சந்தா | ||
| 2017-2018 | 2,000 | |||
| 2018-2019 | 30,000 | 32,000 |
11.
| பொறுப்புகள் | ரூ. | சொத்துகள் | ரூ. |
|---|---|---|---|
| வங்கி மேல்வரைப்பற்று | 50,000 | கடனாளிகள் | 1,80,000 |
| கடனீந்தோர் | 90,000 | பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு | 70,000 |
| செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு | 2,40,000 | கணினி | 30,000 |
| முதல் (இருப்புக்கட்டும் தொகை) | 4,20,000 | இயந்திரம் | 3,00,000 |
| சரக்கிருப்பு | 1,60,000 | ||
| கைரொக்கம் | 60,000 | ||
| 8,00,000 | 8,00,000 |
| விவரம் | ரூ. |
| 2019, மார்ச் 31 அன்று இறுதிமுதல் | 4,20,000 |
| கூட்டுக: அவ்வாண்டின் எடுப்புகள் | 30,000 |
| 4,50,000 | |
| கழிக்க: அவ்வாண்டில் கொண்டுவந்த கூடுதல் முதல் | 40,000 |
| சரிகட்டப்பட்ட இறுதிமுதல் | 4,10,000 |
| கழிக்க:2018, ஏப்ரல் 1 அன்று தொடக்க முதல் | 1,20,000 |
| 31.3.2019 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டின் இலாபம் | 2,90,000 |
12.
| விவரம் | ரூ. |
|---|---|
| இறுதி முதல் (31-3-2018) | 80,000 |
| கூட்டுக: அவ்வாண்டில் எடுப்புகள் | 15,000 |
| 95,000 | |
| கழிக்க: அவ்வாண்டில் கொண்டு வந்த கூடுதல் முதல் | 30,000 |
| சரிகட்டப்பட்ட இறுதி முதல் | 65,000 |
| கழிக்க: 1.4.2017 அன்று தொடக்க முதல் (இருப்புக்கட்டும் தொகை) | 90,000 |
| 31.3.2018 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டில் நட்டம் | 25,000 |
13.
14.
| நாள் | விவரம் | பே.ப.எண் | பற்று ரூ. | வரவு ரூ. | |
|---|---|---|---|---|---|
| கட்டடம் க/கு | ப | 15,000 | |||
| மறுமதிப்பீட்டு க/கு | 15,000 | ||||
| (கட்டடத்தின் மதிப்பு உயர்த்துவது பதிவு செய்யப்பட்டது) | |||||
| மறுமதிப்பீட்டு க/கு | ப | 5,000 | |||
| இயந்திரம் க/கு | 4,000 | ||||
| வாரா ஐயக்கடன் ஒதுக்கு க/கு | 1,000 | ||||
| (இயந்திரத்தின் மதிப்பு குறைப்பது மற்றும் ஒதுக்கு பதிவு செய்யப்பட்டது) | |||||
| மறுமதிப்பீட்டு | ப | 10,000 | |||
| இராஜேஷ் முதல் க/கு | 6,000 | ||||
| இரமேஷ் முதல் க/கு | 4,000 | ||||
| (மறுமதிப்பீட்டு இலாபம் பகிர்ந்தளித்தது) |
| விவரம் | ரூ. | ரூ. | விவரம் | ரூ. |
|---|---|---|---|---|
| இயந்திரம் க/கு | 4,000 | 15,000 | ||
| வாரா ஐயக்கடன் ஒதுக்கு க/கு | 1,000 | |||
| மறுமதிப்பீட்டு இலாபம்: | ||||
| இராஜேஷ் முதல் க/கு (3/5) | 6,000 | |||
| இரமேஷ் முதல் க/கு (2/5) | 4,000 | 10,000 | ||
| 15,000 | 15,000 |
15.
| விவரம் | 2016 ரூ. |
2017 ரூ. |
2018 ரூ. |
|---|---|---|---|
| இலாபம் | 25,000 | 23,000 | 26,000 |
| கழிக்க: திரும்பத் திரும்ப நிகழா வருமானம் | 2,500 | - | - |
| 22,500 | 23,000 | 26,000 | |
| கூட்டுக: சரக்கிருப்பு தீயினால் சேதமடைந்து (அசாதாரண நட்டம்) | - | 3,500 | - |
| சரிக்கப்பட்டபின் இலாபம் | 22,500 | 26,500 | 26,000 |
= \(\frac { 22,500+26,500+26,000 }{ 3 } \)
=\(\frac { 75,000 }{ 3 } \) = ரூ.25,000
| விவரம் | ரூ |
|---|---|
| எதிர்காலத்தில் செலுத்த வேண்டிய காப்பீட்டு முனைமத்தினை சரிக்கட்டுவதற்கு முன் சராசரி இலாபம் | 25,000 |
| கழிக்க: எதிர்காலத்தில் செலுத்த வேண்டிய காப்பீட்டு முனைமம் | 250 |
| சராசரி இலாபம் | 24,750 |
நற்பெயர் = சராசரி இலாபம் x கொள்முதல் ஆண்டுகளின் எண்ணிக்கை
= 24,750 x 2
நற்பெயர் = ரூ.49,500
16.
(i) இம்முறைகளில் நற்பெயரின் மதிப்பைக் கண்டறிய உயர் இலாபம் அடிப்படையாக உள்ளது. ஒரு வியாபாரத்தின் உயர் இலாபம் என்பது சாதாரண இலாபத்தை விட கூடுதலாக உள்ள சராசரி சாதாரண இலாபம் ஆகும்
(ii) உயர் இலாபம் = சராசரி இலாபம் - சாதாரண இலாபம், சராசரி இலாபம், குறிப்பிட்ட ஆண்டுகளின் சரிகட்டப்பட்ட ஈட்டிய இலாபங்கள் கூட்டப்பட்டு, மொத ஆண்டுகளின் எண்ணிக்கையால் வகுக்கப்படுவதன் மூலம் கண்டறியப்படுகிறது. சாதாரண இலாபம் என்பது ஒரே தன்மையுள்ள வியாபார நிறுவனங்கள் சாதாரண சூழ்நிலைகளில் வழக்கமாக ஈட்டும் இலாபம் ஆகும்
(iii) சாதாரண இலாபம் = பயன்படுத்தப்பட்ட முதல் x சாதாரண இலாப விகிதம்
(iv) பயன்படுத்தப்பட்ட முதல் = நிலைச் சொத்துக்கள் + நடப்புச் சொத்துக்கள் - நடப்புப் பொறுப்புகள்
(v) சாதாரண இலாப விகிதம் = ஒரு தொழில் ஒரே தன்மையுடைய வியாபார நிறுவனங்கள் சாதாரண சூழ்நிலைகளில் ஈட்டும் இலாப விகிதம்
17.
சரக்கிருப்பு சுழற்சி விகிதம் = = \(\frac {1,20,000}{30,000}\) = 4 மடங்கு
விற்பனை மூலம் பெற்ற வருவாயின் அடக்கவிலை
தொடக்கச் சரக்கிருப்பு + நிகரக் கொள்முதல் + நேரடிச் செலவுகள் (உள்தூக்குக் கூலி) – இறுதிச் சரக்கிருப்பு
= 40,000 + 90,000 + 10,000 – 20,000
= ரூ.1,20,000
சராசரி சரக்கிருப்பு = = \(\frac {4,000+20,000}{2}\) = ரூ.30,000
மாற்று காலம்
சரக்கிருப்பு மாற்று காலம் (மாதங்களில்) = =\(\frac {12}{4}\)= 3 மாதங்கள்
18.
கமலியின் ஊதியம் = ரூ.10,000 x 12 = ரூ.1,20,000
லட்சுமியின் கழிவு = ரூ.40,000
| நாள் | விவரம் | பே.ப.எண் | பற்று ரூ. |
வரவு ரூ. |
|
|---|---|---|---|---|---|
| கமலியின் ஊதியம் க/கு | ப | 1,20,000 | |||
| கமலியின் முதல் க/கு (கமலியின் ஊதியம் முதல் கணக்கிற்கு மாற்றப்பட்டது) |
1,20,000 | ||||
| லட்சுமியின் கழிவு க/கு | ப | 40,000 | |||
| லட்சுமியின் முதல் க/கு (லட்சுமியின் கழிவு முதல் கணக்கிற்கு மாற்றப்பட்டது) |
40,000 | ||||
| இலாபநட்டப் பகிர்வு க/கு | ப | 1,60,000 | |||
| கமலியின் ஊதியம் க/கு | 1,20,000 | ||||
| லட்சுமியின் கழிவு க/கு (ஊதியம் மற்றும் கழிவு கணக்கிற்கு மாற்றப்பட்டது) |
40,000 |
19.
(i) கூட்டாண்மை ஒப்பாவணத்தில் முதல் மீது வட்டி குறித்து ஏதும் குறிப்பிடவில்லை. எனவே, முதல் மீது வட்டி அனுமதிக்கப்படுவதில்லை.
(ii) கூட்டாண்மை ஒப்பாவணத்தின் படி, முதல்மீது வட்டி ஆண்டுக்கு 4% அனுமதிக்கப்படும்போது
முதல் மீது வட்டி கணக்கிடுதல்:
அகமது: 60,000 x \(\frac {4}{100}\) = ரூ.2,400
பஷீர்: 40,000 x \(\frac {4}{100}\) = ரூ.1,600
போதிய இலாபம் இருப்பதால் முதல் மீது வட்டி வழங்கப்படும்
(iii) கூட்டாண்மை ஒப்பாவணத்தின்படி முதல்மீது வட்டி ஆண்டுக்கு 6% அனுமதிக்கும்போது
முதல் மீது வட்டி கணக்கிடுதல்:
அகமது: 60,000 x \(\frac {6}{100}\) = ரூ.3,600
பஷீர்: 40,000 x \(\frac {6}{100}\) = ரூ.2,400
போதிய இலாபம் இல்லாததால், முதல் மீது வட்டி வழங்கப்பட இயலாது. இலாபம் ரூ.5,000 கூட்டாளிகளின் முதல் விகிதமாகிய 3:2 என்ற விகிதத்தில் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்
குறிப்பு:
முதல் விகிதம் = அகமது : பஷீர் = 3,600 : 2,400
= 3:2
20.
முதல் மீதான வட்டி கணக்கிடுதல்:
பேகம்:
தொடக்க முதல் (ஓராண்டு) = 50,000 x \(\frac {4}{100}\) = ரூ.2,000
கூடுதல் முதல் (3 மாதங்கள்) = 10,000 x \(\frac {4}{100}\) x \(\frac {3}{12}\) = ரூ.100
(அக்டோபர் - டிசம்பர்) ________
முதல் மீது வட்டி = ரூ.2,100
________
பாத்திமா:
தொடக்க முதல் (ஓராண்டு) = 40,000 x \(\frac {4}{100}\) = ரூ.1,600
கூடுதல் முதல் (8 மாதங்கள்) = 9,000 x \(\frac {4}{100}\) x \(\frac {8}{12}\) = ரூ. 240
________
முதல் மீது வட்டி = ரூ.1,840
________
21.
கூட்டாண்மையின் சிறப்பியல்புகள் பின்வருமாறு:
(i) கூட்டாண்மை என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டவர்களால் உருவாக்கப்படும் ஒரு அமைப்பு ஆகும். அதிகபட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கை 50 என வரையறை செய்யப்பட்டுள்ளது.
(ii) தொழில் நிறுவனத்தின் இலாபம் அல்லது நட்டத்தைப் பகிர்ந்துகொள்ள கூட்டாளிகளுக்கிடையே உடன்பாடு இருக்க வேண்டும். உடன்பாடு எழுத்து வடிவிலோ அல்லது பேச்சு வடிவிலோ அல்லது உட்கிடையாகவோ இருக்கலாம்
(iii) கூட்டாண்மை உடன்பாடு ஒரு தொழில் நிறுவனத்தை நடத்தி அதிலிருந்து கிடைக்கும் இலாபத்தைப் பகிர்வதாக இருக்க வேண்டும்.
(iv) கூட்டாண்மை நிறுவனத்தை கூட்டாளிகள் அனைவருமோ அல்லது அனைவரின் சார்பில் அவர்களில் ஒருவரோ நடத்தலாம்.
22.
1) ஒறுப்பிழப்பு செய்யப்பட்ட பங்குகள் நிறுமத்தால் மறுவெளியீடு செய்யப்படலாம். அப்பங்குகள் எந்த விலையிலும் மறுவெளியீடு செய்யலாம்.
2) ஆனால், வெளியீட்டு விலை ஒறுப்பிழப்பு செய்யப்பட்ட பங்குகளின் செலுத்தப் பெறாத தொகையைக் காட்டிலும் குறைவாக இருக்கக் கூடாது.
3) உதாரணமாக, ஒறுப்பிழப்பு செய்யப்பட்ட ஒரு பங்கின் மதிப்பு ரூ.10 அதற்கு ரூ.4 விண்ணப்பப் பணமாக செலுத்தப்பட்டிருந்தது.
4) அப்பங்குகள் முழுவதும் செலுத்தப்பட்டவைகளாக மறுவெளியீடு செய்யப்பட்டன. அதன் புதிய விலை குறைந்தபட்சமாக ரூ.6(10-4) என நிர்ணயிக்கப்பட வேண்டும்.
5) ஒறுப்பிழப்பு செய்யப்பட்ட பங்குகள் நட்டத்தில் மறுவெளியீடு செய்யப்படும் போது, அந்த நட்டம் ஒறுப்பிழப்பு கணக்கில் பற்று செய்யப்படுகிறது.
6) ஒறுப்பிழப்பு செய்யப்பட்ட பங்குகள் முனைமத்தில் மறுவெளியீடு செய்யப்பட்டால், அந்த முனைமத்தொகை பத்திர முனைமக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
23.

24.
| விவரம் | சுபா ரூ. | சுதா ரூ. |
|---|---|---|
| 2017, டிசம்பர் 31 அன்று முதல் | 15,000 | 20,000 |
| கூட்டுக: எடுப்புகள் | 2,500 | 3,500 |
| 17,500 | 23,500 | |
| கழிக்க: இலாபம் ஏற்கனவே வரவு வைத்தது | 7,500 | 7,500 |
| 2017, ஜனவரி 1 அன்று முதல் | 10,000 | 16,000 |
முதல் மீது வட்டி கணக்கிடுதல்:
சுபா: தொடக்க முதல்=10,000 x \(\frac { 6 }{ 100 } \) =ரூ.600
சுதா: தொடக்க முதல் =16,000 x \(\frac { 6 }{ 100 } \)=ரூ.960
25.
| செலவுகள் | ரூ | வருமானம் | ரூ | ரூ |
|---|---|---|---|---|
| சந்தா | 25,000 | |||
| கழிக்க: 2015-16 ஆம் ஆண்டுக்கான சந்தா | 2,000 | |||
| 23,000 | ||||
| கழிக்க: 2017-18 ஆம் ஆண்டுக்கான சந்தா | 1,500 | |||
| 21,500 | ||||
| கூட்டுக: 2016-17 ஆம் ஆண்டிற்கான சந்தா | ||||
| பெற வேண்டிய | 500 | 22,000 | ||
| பொறுப்புகள் | ரூ | சொத்துகள் | ரூ |
|---|---|---|---|
| 2017-2018 ஆம் ஆண்டிற்கான முன்கூட்டிப் பெற்றது | 1,500 | 2016-2017 ஆம் ஆண்டிற்கான சந்தா பெற வேண்டியது | 500 |
26.
| நாள் | விவரம் | பே. ப.எ |
பற்று ரூ. |
வரவு ரூ. |
|
|---|---|---|---|---|---|
| நேர்மைப் பங்குமுதல் க/கு (20 × 7) | ப | 140 | |||
| நேர்மைப் பங்குமுதல் அழைப்பு க/கு (20 × 2) | 40 | ||||
| பங்கு ஒறுப்பிழப்பு க/கு (20 × 5) | 100 | ||||
| (ரூ.7 அழைக்கப்பட்ட 20 பங்குகள் ஒறுப்பிழப்பு செய்யப்பட்டன) | |||||
| வங்கி க/கு (15 × 6) | ப | 90 | |||
| பங்கு ஒறுப்பிழப்பு க/கு | 15 | ||||
| நேர்மைப்பங்கு முதல் க/கு | 105 | ||||
| (15 பங்குகள் ரூ.7 வீதம் மறுவெளியீடு செய்யப்பட்டன) | |||||
| பங்கு ஒறுப்பிழப்பு க/கு | ப | 60 | |||
| முதலினக் காப்பு க/கு | 60 | ||||
| (பங்கு ஒறுப்பிழப்பு கணக்கு முதலினக் காப்பு கணக்கிற்கு மாற்றப்பட்டது) |
குறிப்பு:
முதலினக் காப்பிற்கு மாற்றுவதற்கான கணக்கீடு
15 பங்குகளை ஒறுப்பிழப்பு செய்ததற்கான தொகை = \(\frac {100}{20}\) x 15 = 75
கழிக்க: மறுவெளியீட்டு நட்டம் = 15
___
முதலினக் காப்பிற்கு மாற்ற வேண்டியது 60
___
பங்கு ஒறுப்பிழப்பு கணக்கில் உள்ள மீதமுள்ள தொகை (40-15) = ரூ. 25 இருப்புநிலைக் குறிப்பில் தோன்றும்.
27.
| விவரம் | ரூ. | விவரம் | ரூ. |
|---|---|---|---|
| இருப்பு கீ/கொ | 40,000 | ரொக்கக் க/கு | 90,000 |
| கடனாளிகள் க/கு (அவ்வாண்டில் மாற்றுச்சீட்டு பெற்றது - இருப்புக் கட்டும் தொகை) | 90,000 | கடனாளிகள் க/கு (பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு மறுக்கப்பட்டது) | 10,000 |
| இருப்பு கீ/இ | 30,000 | ||
| 1,30,000 | 1,30,000 |
| விவரம் | ரூ. | விவரம் | ரூ. |
|---|---|---|---|
| இருப்பு கீ/கொ | 1,50,000 | ரொக்கக் க/கு | 3,90,000 |
| பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு க/கு (மறுக்கப்பட்டது) | 10,000 | விற்பனைத் திருப்பம் க/கு | 40,000 |
| விற்பனை க/கு (கடன்) (இருப்புக் கட்டும் தொகை) | 4,90,000 | பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு க/கு* (மாற்றுச்சீட்டு பெற்றது) | 90,000 |
| இருப்பு கீ/இ | 1,30,000 | ||
| 6,50,000 | 6,50,000 |
மொத்த விற்பனை = ரொக்க விற்பனை + கடன் விற்பனை
= ரூ. 2,00,000 + ரூ. 4,90,000
= ரூ. 6,90,000
28.
| பொறுப்புகள் | ரூ. | சொத்துகள் | ரூ. |
|---|---|---|---|
| கடனீந்தோர் | 9,000 | ரொக்கம் | 5,000 |
| செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு | 6,000 | வங்கி ரொக்கம் | 24,000 |
| முதல் (இருப்புக் கட்டும் தொகை) | 88,000 | சரக்கிருப்பு | 18,000 |
| கடனாளிகள் | 16,000 | ||
| பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு | 7,000 | ||
| நிலம் மற்றும் கட்டடங்கள் | 30,000 | ||
| அறைகலன் | 3,000 | ||
| 1,03,000 | 1,03,000 |
29.
| விவரம் | ரூ. |
|---|---|
| இறுதி முதல் (31.3.2019) | 1,90,000 |
| கூட்டுக: அவ்வாண்டின் எடுப்புகள் | 30,000 |
| 2,20,000 50,000 |
|
| கழிக்க: அவ்வாண்டில் கொண்டுவந்த கூடுதல் முதல் | |
| சரிக்கட்டப்பட்ட இறுதி முதல் | 1,70,000 2,10,000 |
| கழிக்க: தொடக்க முதல் (1.4.2018) (இருப்புக் கட்டும் தொகை) | |
| 31.3.2019 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டின் நட்டம் | (-) 40,000 |
30.
| நாள் | விவரம் |
|
பே.ப. எண் |
பற்று ரூ. |
வரவு |
|---|---|---|---|---|---|
| கட்டடம் க/கு | ப | 40,000 | |||
| முதலீடுகள் க/கு | ப | 10,000 | |||
| பற்பல கடனீந்தோர் க/கு | ப | 16,000 | |||
| மறுமதிப்பீட்டுக் க/கு (சரக்கிருப்பின் மதிப்பு அதிகரிப்பு, பதிவு பெறாமலுள்ள முதலீடுகள் பதிவு செய்யப்பட்டது மற்றும் பற்பல கடனீந்தோர் போக்கெழுதியது) |
66,000 | ||||
| மறுமதிப்பீட்டு க/கு | ப | 26,000 | |||
| இயந்திரம் க/கு | 14,000 | ||||
| அறைகலன் க/கு (இயந்திரம் மற்றும் அறைகலனின் மதிப்பு குறைப்பது) |
12,000 | ||||
| மறுமதிப்பீடு க/கு | ப | 40,000 | |||
| சீனு முதல் க/கு (5/8) | 25,000 | ||||
| சிவா முதல் க/கு (3/8) (மறுமதிப்பீட்டு இலாபம் முதல் கணக்கிற்கு மாற்றப்பட்டது) |
15,000 |
| விவரம் | ரூ. | ரூ. | விவரம் | ரூ. |
|---|---|---|---|---|
| இயந்திரம் க/கு | 14,000 | கட்டடம் க/கு | 40,000 | |
| அறைகலன் | 12,000 | முதலீடுகள் க/கு | 10,000 | |
| மறுமதிப்பீட்டு இலாபம்: | பற்பல கடனீந்தோர் க/கு | 16,000 | ||
| சீனு முதல் க/கு (40,000 x 5/8) |
25,000 | |||
| சிவா முதல் க/கு (40,000 x 3/8) |
15,000 | |||
| 40,000 | ||||
| 66,000 | 66,000 |
31.
| விவரம் | சர்மிளா நிறுமம் | சங்கீதா நிறுமம் | ||
|---|---|---|---|---|
| தொகை | மொத்த சொத்துகளில் சதவீதம் |
தொகை | மொத்த சொத்துகளில் சதவீதம் |
|
| ரூ. | ரூ. | |||
| I. பங்குமூலதனம் மற்றும் பொறுப்புகள் | ||||
| பங்குதாரர் நிதி | 5,00,000 | 50 | 11,00,000 | 55 |
| நீண்ட காலப் பொறுப்புகள் | 4,00,000 | 40 | 7,00,000 | 35 |
| நடப்புப் பொறுப்புகள் | 1,00,000 | 10 | 2,00,000 | 10 |
| மொத்தம் | 10,00,000 | 100 | 20,00,000 | 100 |
| II. சொத்துகள் | ||||
| நிலைச் சொத்துகள் | 6,50,000 | 65 | 18,00,000 | 90 |
| நடப்புச் சொத்துகள் | 3,50,000 | 35 | 2,00,000 | 10 |
| மொத்தம் | 10,00,000 | 100 | 20,00,000 | 100 |
32.
| வ.எண் | வேறுபாட்டிற்கான அடிப்படை | நிலை அறிக்கை | இருப்புநிலைக் குறிப்பு |
| 1 | நோக்கம் | நிலை அறிக்கை பொதுவாக வியாபாரத்தின் முதலை கண்டறிய தயாரிக்கப்படுகிறது. | இருப்புநிலைக் குறிப்பு வியாபாரத்தின் நிதிநிலையைக் கண்டறிய தயாரிக்கப்படுகிறது. |
| 2 | கணக்கியல் முறை | இரட்டைப்பதிவு முறையை பின்பற்றவது கட்டாயமானதாக இல்லாத போது நிலை அறிக்கை தயாரிக்கப்படுகிறது. | கணக்குகள் இரட்டைப்பதிவு முறையில் பராமரிக்கப்படும் போது இருப்புநிலைக்குறிப்பு தயாரிக்கப்படுகிது. |
| 3 | தயாரிப்பின் அடிப்படை | இது முழுமையாக பேரேட்டுக் கணக்குகளை அடிப்டையாகக் கொண்டதல்ல. பேரேட்டுக் கணக்குகளின் இருப்புகள் முடிந்த இடங்களில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. | இது முழுமையாக பேரேட்டுக் கணக்குகளின் அடிப்படையிலேயே தயாரிக்கப்படுகிறது. |
| 4 | நம்பகத்தன்மை | இது முழுமை பெறா பதிவேடுகளை அடிப்டையாகக் கொண்டுள்ளதால் நம்பகத்தன்மை உடையது அல்ல. | இது இரட்டைப்பதிவு முறையில் தயாரிக்கப்படுவதால் நம்பகத்தன்மை உடையது. |
| 5 | விடுபட்ட விவரங்கள் | ஏடுகள் முழுமையாக பராமரிக்கப்படாததால் விடுபட்ட விவரங்களைக் கண்டறிவது கடினம். | அனைத்து நடவடிக்கைகளின் இரண்டு தன்மைகளும் பதியப்படுவதால் விடுபட்ட விவரங்களை எளிதில் கண்டறிய முடியும். |
33.
| வ.எண் | அடிப்படை | பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கு | வருவாய் மற்றும் செலவினக் கணக்கு |
|---|---|---|---|
| 1 | நோக்கம் | இது ரொக்கப் பெறுதல்கள் மற்றும் ரொக்கச் செலுத்தல்களை அறிவதற்கு தயாரிக்கப்படுகிறது. | இது நடப்பு ஆண்டின் செலவுகளைக் காட்டிலும் மிகுதியான வருமானம் (உபரி) அல்லது வருமானத்தைக் காட்டிலும் மிகுதியான செலவுகள் (பற்றாக்குறை)குறித்து அறிந்துகொள்ள தயாரிக்கப்படுகிறது. |
| 2 | கணக்கின் தன்மை | இது ஒரு சொத்துக் கணக்காகும். இது ரொக்கக் கணக்கின் தொகுப்பாகும். அனைத்து ரொக்கப் பெறுதல்கள் பற்றுப் பக்கத்திலும், ரொக்கச் செலுத்தல்கள் வரவுப் பக்கத்திலும் பதியப்படுகின்றன. | இது ஒரு பெயரளவுக் கணக்காகும். இது இலாப நட்டக் கணக்கைப் போன்றது. செலவுகள் பற்றுப்பக்கத்திலும் மற்றும் வருமானங்கள் வரவுப் பக்கத்திலும் பதியப்படுகின்றன. |
| 3 | கணக்கியலின் அடிப்படை | இது ரொக்க அடிப்படையிலான கணக்கியலை அடிப்படையாகக் கொண்டது. ரொக்கம் சார்பற்ற விவரங்கள் பதியப்படுவதில்லை. | இது நிகழ்வு அடிப்படையிலான கணக்கியலை அடிப்படையாகக் கொண்டது. ரொக்கம் சாரா விவரங்களான கொடுபட வேண்டிய செலவுகள், தேய்மானம் போன்றவைகளும் இங்கு பதியப்படும். |
| 4 | தொடக்க இறுதி இருப்பு | இது ரொக்கம் வங்கிக் கணக்கின் தொடக்க இருப்புடன் தொடங்கி, ரொக்கம் மற்றும் வங்கிக் கணக்கின் இறுதி இருப்புடன் முடிவடைகிறது. | இங்கு தொடக்க இருப்பு என்பது கிடையாது. இது உபரி அல்லது பற்றாக்குறையுடன் முடிவடைகிறது. |
| 5 | நடவடிக்கையின் தன்மைகள் | இது வருவாயினம் அல்லது முதலினம் என்ற வேறுபாடில்லாமல் அனைத்துப் பெறுதல்கள் மற்றும் செலுத்தல்களைக் கொண்டிருக்கும். | இது வருவாயின நடவடிக்கைகளை மட்டுமே, அதாவது வருவாயினச் செலவுகள் மற்றும் வருவாயின வரவுகளை மட்டுமே கொண்டிருக்கும். |
34.
| விவரம் | 2016 ரூ. | 2017 ரூ. | 2018 ரூ. |
|---|---|---|---|
| இலாபம் | 30,000 | 29,000 | 32,000 |
| கழிக்க: திரும்பத் திரும்ப நிகழா வருமானம் | 3,000 | - | - |
| 27,000 | 29,000 | 32,000 | |
| கூட்டுக: சரக்கிருப்பு தீயினால் சேதமடைந்தது (அசாதாரண நட்டம்) |
- | 2,000 | - |
| சரிக்கட்டப்பட்ட பின் இலாபம் | 27,000 | 31,000 | 32,000 |

=\(\frac { 27,000+31,000+32,000 }{ 3 } \)
=\(\frac { 90,000 }{ 3 } \)=ரூ.30,000
| விவரம் | ரூ. |
|---|---|
| எதிர்காலத்தில் செலுத்த வேண்டிய காப்பீட்டு முனைமத்தினை சரிக்கட்டுவதற்கு முன் சராசரி இலாபம் |
30,000 |
| கழிக்க : எதிர்காலத்தில் செலுத்த வேண்டிய காப்பீட்டு முனைமம் | 5,600 |
| சராசரி இலாபம் | 24,400 |
நற்பெயர் = சராசரி இலாபம் x கொள்முதல் ஆண்டுகளின் எண்ணிக்கை
= 24,400 x 2
= ரூ.48,800
35.
| நாள் | விவரம் | பே.ப.எ | பற்று ரூ. |
வரவு ரூ. |
|
|---|---|---|---|---|---|
| 2018 ஏப்ரல் 1 | வளாகம் க/கு | ப | 40,000 | ||
| மறுமதிப்பீட்டு க/கு | 40,000 | ||||
| (வளாகம் மதிப்பு உயர்த்தப்பட்டது) | |||||
| " | மறுமதிப்பீட்டு க/கு | ப | 10,000 | ||
| சரக்கிருப்பு க/கு | 3,000 | ||||
| இயந்திரம் க/கு | 6,500 | ||||
| கொடுபடாச் செலவுகள் க/கு | 500 | ||||
| (சொத்துகளின் மதிப்பு குறைப்பு மற்றும் கொடுபடா பொறுப்பு பதிவு செய்யப்பட்டது) | |||||
| " | மறுமதிப்பீட்டு இலாபம்: | ப | 30,000 | ||
| ரம்யா முதல் க/கு | 15,000 | ||||
| சாரா முதல் க/கு | 9,000 | ||||
| தாரா முதல் க/கு | 6,000 | ||||
| (மறுமதிப்பீட்டு இலாபம் பகிர்ந்தளிக்கப்பட்டது) |
| விவரம் | ரூ. | ரூ. | விவரம் | ரூ. |
|---|---|---|---|---|
| சரக்கிருப்பு க/கு | 3,000 | வளாகம் க/கு | 40,000 | |
| இயந்திரம் க/கு | 6,500 | |||
| கொடுபடாச் செலவுகள் க/கு | 500 | |||
| மறுமதிப்பீட்டு இலாபம்: | ||||
| ரம்யா முதல் க/கு (5/10) | 15,000 | |||
| சாரா முதல் க/கு (3/10) | 9,000 | |||
| தாரா முதல் க/கு (2/10) | 6,000 | 30,000 | ||
| 40,000 | 40,000 |
36.
| நாள் | விவரம் | பே.ப. எண் |
பற்று ரூ. |
வரவு ரூ. |
|
|---|---|---|---|---|---|
| 2018 | பொதுக் காப்பு க/கு | ப | 42,000 | ||
| மார்ச் 31 | அருள் முதல் க/கு | 24,000 | |||
| அனிதா முதல் க/கு | 18,000 | ||||
| (பொதுக்காப்பு பழைய கூட்டாளிகளின் முதல் கணக்குக்கு பழைய இலாப விகிதத்தில் மாற்றப்பட்டது) |
37.
நிலைச் சொத்துகள் சுழற்சி விகிதம் =
= \(\frac {60,00,000}{6,00,000}\) = 10 மடங்கு
தொடக்க நிலைச் சொத்துகள் தரப்படாததால், சராசரி நிலைச் சொத்துகளுக்குப் பதிலாக இறுதி நிலைச் சொத்துகள் எடுத்துக்கொள்ளப்பட்டது.
38.
நற்பெயர் = சராசரி இலாபம் x கொள்முதல் ஆண்டுகளின் எண்ணிக்கை

=\(\frac { 4,000+3,000+5,000+4,500+3,500 }{ 5 } \)
=\(\frac { 20,000 }{ 5 } = 4,000\)
நற்பெயர் = சராசரி இலாபம் x கொள்முதல் ஆண்டுகளின் எண்ணிக்கை
= 4,000 × 3 = ரூ.12,000
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards