12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 04/10/2020
12 ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் மாதிரி 3 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Accountancy Tamil Medium Sample 3 Mark Creative Questions (New Syllabus 2020)
12ஆம் வகுப்பு Accountancy / கணக்குப்பதிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Accountancy / கணக்குப்பதிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Accountancy Test

1.
நிதிநிலை அறிக்கை பகுப்பாய்வின் நோக்கங்களை எழுதுக.
2.
நற்பெயரை மதிப்பீடு செய்வதற்கான தேவைகள் யாவை?
3.
பங்குகளின் பிரிவுகளை எழுதி விளக்குக.
4.
விலகும் கூட்டாளிக்குரிய தொகையை எவ்வகையில் தீர்க்கப்படலாம்?
5.
பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கை தயாரிப்பதற்கான படிநிலைகளை எழுதுக.
6.
பாரம்பரிய அடிப்படையின் வகைகளை எழுதி விளக்குக.
7.
முதலீட்டு மாறுபடும் நிதி பற்றி குறிப்பு வரைக
8.
முதல் மீதான வட்டி எவ்வாறு கணக்கிடப்படுகிறது?
1.
நிதிநிலை அறிக்கை பகுப்பாய்வின் நோக்கங்கள்:
1) வருவாயீட்டும் தன்மை மற்றும் இலாபமீட்டும் திறனை ஆய்வு செய்வதற்காக.
2) நீண்டகால மற்றும் குறுகிய கால கடனைத் தீர்க்கும் திறன் பற்றி அறிய
3) சொத்துகளை பயன்படுத்துவதிலும், செயல்பாடுகளிலும் ஆற்றலைத் தீர்மானிப்பதற்கு
4) நிர்வாகம் மற்றும் பணியாளர்களின் திறமையைத் தீர்மானிப்பதற்கு
5) உற்பத்தி, மற்றும் விற்பனையின் போக்கினைத் தீர்மானிப்பதற்கு
6) எதிர்கால முன்கணிப்பு மற்றும் திட்டப் பட்டியல் தயாரிப்பதற்கு
7) நிறுவனத்திற்குள்ளேயும், பிற நிறுவனங்களோடும் ஒப்பீடு செய்வதற்கு.
2.
கூட்டாண்மை நிறுவனங்களில் கூட்டாளிகளின் பரஸ்பர உரிமைகளில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் நற்பெயர் மதிப்பீடுச் செய்வதற்கான தேவை எழுகிறது. கூட்டாளிகளின் உரிமைகளைக் காக்கும் பொருட்டு பின்வரும் சூழ்நிலைகளில் நற்பெயரை மதிப்பிடுவதற்கான தேவை எழுகிறது:
(i) இலாபப் பகிர்வு விகிதத்தில் மாற்றம் ஏற்படும்போது
(ii) கூட்டாண்மை நிறுவனத்தில் புதிய கூட்டாளி சேர்க்கப்படும்போது
(iii) கூட்டாண்மை நிறுவனத்தில் இருக்கும் கூட்டாளி ஒருவர் நிறுவனத்தை விட்டு விலகும் போது அல்லது கூட்டாளி ஒருவர் இறக்கும் போது
(iv) ஒரு கூட்டாண்மை நிறுவனத்தை கலைக்கும் போது
3.
ஒரு நிறுமத்தின் பங்குமுதல் பின்வரும் பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன:
1) அங்கீகரிக்கப்பட்ட முதல்:
i) இது அமைப்பு முறையேட்டின் படி அங்கீகரிக்கப்பட்ட முதல் ஆகும்.
ii) அதிகபட்சமாக முதலாக திரட்ட அனுமதிக்கப்பட்ட தொகை.
iii) இதனைப் 'பதிவு செய்யப்பட்ட முதல்' அல்லது 'பெயரளவு முதல்' என்றும் கூறலாம்.
2) வெளியிட்ட முதல்:
வாங்குவதற்கென வெளியிடப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட முதலின் ஒரு பகுதி வெளியிட்ட முதல் ஆகும்.
3) ஒப்பிய முதல்:
வெளியிட்ட முதலில், வாங்குவதற்கு ஒப்புக்கொண்ட, மேலும் நிறுமத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்ட முதல் ஒப்பிய முதல் ஆகும்.
4) அழைக்கப்பட்ட முதல்:
பணம் செலுத்தப்பட, நிறுமத்தால் அழைக்கப்பட ஒப்பிய முதலில், ஒரு பகுதி அழைக்கப்பட்ட முதல் ஆகும்.
5) செலுத்தப்பட்ட முதல்:
பங்குதாரர்களால் உண்மையில் செலுத்தப்பட்ட அழைக்கப்பட்ட முதலின் ஒரு பகுதி செலுத்தப்பட்ட முதல் ஆகும்.
6) காப்பு முதல்:
ஒரு நிறுமம் அதன் கலைப்பின்போது மட்டும் அழைப்பு விடுக்கலாம் என ஒதுக்கி வைத்துள்ள அழைக்கப்பட்ட முதலின் ஒரு பகுதியினை 'காப்பு முதல்' என்று அழைக்கலாம்.
4.
(i) கூட்டாண்மை நிறுவனத்திலிருந்து கூட்டாளி ஒருவர் விலகும் போது, நற்பெயர், பகிர்ந்து தரா இலாபம் அல்லது நட்டம், மறுமதிப்பீட்டு இலாபம் அல்லது நட்டம், கூட்டாளியின் ஊதியம் ஆகியவற்றை சரிகட்டிய பிறகு கிடைக்கக்கூடிய முதல் கணக்கின் இருப்பு அக்கூட்டாளிக்கு செலுத்தப்பட வேண்டும்
(ii) கூட்டாண்மை ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு அவருக்கு சேர வேண்டிய தொகையைத் தீர்வு செய்ய வேண்டும். பின்வரும் வழிகளில் விலகும் கூட்டாளிக்கு செலுத்த வேண்டிய தொகை தீர்க்கப்படலாம்
1. அவருக்கு சேரவேண்டிய முழுத் தொகையையும் ரொக்கமாக உடனடியாக செலுத்தலாம்
2. மொத்தத் தொகையும் கூட்டாளியின் கடன் கணக்கிற்கு மாற்றி விடலாம்
3. பாதித் தொகையை உடனடியாக ரொக்கமாகவும் மீதித் தொகையை கடன் கணக்கிற்கு மாற்றி விடலாம்
5.
பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கினைத் தயாரிக்கப் பின்வரும் படிநிலைகளைப் பின்பற்ற வேண்டும்:
1) பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கின் பற்றுப் பக்கத்தில் தொடக்க ரொக்க இருப்பையும், சாதகமான வங்கி இருப்பையும் பதிவு செய்ய வேண்டும். வங்கி மேல்வரைப்பற்றாக இருந்தால் அதனை வரவுப் பக்கம் தொடக்க இருப்பாக பதிவு செய்ய வேண்டும்.
2) அந்த ஆண்டில் மேற்கொண்ட ரொக்கப் பெறுதல்கள் பற்றுப்பக்கத்திலும் மற்றும் ரொக்கச் செலுத்தல்கள் வரவுப் பக்கத்திலும் பதியப்பட வேண்டும்.
3) ரொக்கப் பெறுதல்கள் மற்றும் ரொக்கச் செலுத்தல்கள் பதியும் போது அவை வருவாயினத்தைச் சார்ந்ததா அல்லது முதலினத்தைச் சார்ந்ததா என்று வேறுபடுத்தத் தேவையில்லை. அதுபோன்று, அவை முந்தைய ஆண்டுக்குரியதா அல்லது நடப்பாண்டிற்குரியதா அல்லது எதிர்வரும் ஆண்டிற்குரியதா எனவும் வேறுபடுத்த வேண்டியதில்லை.
4) பற்றுப் பக்கத்தின் மொத்தம் வரவுப்பக்கத்தின் மொத்தத்தை விட அதிகமாக இருந்தால் இருப்புக் கட்டப்படும் தொகை வரவுப் பக்கத்தில் தோன்றும், இது இறுதி ரொக்கம் அல்லது வங்கி இருப்பினைக் குறிக்கும்.
5) வரவுப் பக்கத்தின் மொத்தம் பற்றுப்பக்கத்தின் மொத்தத்தை விட அதிகமாக இருந்தால் இருப்புக்கட்டும் தொகை பற்றுப் பக்கத்தில் தோன்றும். இது வங்கி மேல்வரைப்பற்று ஆகும்.
6.
பாரம்பரிய அடிப்படையில், எந்த நிதிநிலை அறிக்கையிலிருந்து விகிதங்கள் கணக்கிடப்படுகின்றன என்பதன் அடிப்படையில் விகிதங்கள்.
(i) இருப்புநிலைக் குறிப்பு விகிதங்கள்
(ii) வருமான அறிக்கை விகிதங்கள் மற்றும்
(iii) அறிக்கைகளுக்கிடையேயான விகிதங்கள் என வகைப்படுத்தப்படுகின்றன.
(i) இருப்புநிலைக் குறிப்பு விகிதம் :
ஒரு விகிதத்தின் இரு இனங்களும் இருப்புநிலைக் குறிப்பிலிருந்து எடுக்கப்பட்டால், அது இருப்புநிலைக் குறிப்பு விகிதம் என வகைப்படுத்தப்படுகிறது.
(ii) வருமான அறிக்கை விகிதம் :
ஒரு விகிதத்தின் இரு இனங்களும் வருமான அறிக்கையிலிருந்து எடுக்கப்பட்டால் அது வருமான அறிக்கை விகிதம் என வகைப்படுத்தப்படுகிறது.
(iii) அறிக்கைகளுக்கிடையான விகிதம் :
ஒரு இனம் வருமான அறிக்கையிலிருந்தும் மற்றொரு இனம் இருப்புநிலைக் குறிப்பிலிருந்தும் எடுத்து விகிதம் கணக்கிடப்பட்டால், அது அறிக்கைகளுக்கிடையேயான விகிதம் என அழைக்கப்படுகிறது.
7.
முதலீடுகளின் சந்தை மதிப்பில் ஏற்படும் இறக்கத்தை சரிக்கட்டுவதற்காக முதலீட்டு மாறுபடும் நிதி இலாபத்திலிருந்து உருவாக்கப்படுகிறது. முதலீடுகளின் சந்தை மதிப்பு, ஏட்டு மதிப்பிற்கு சமமாகவோ அல்லது அதிகமாகவோ இருப்பின் முதலீட்டு மாறுபடும் நிதி முழுவதும் பழைய கூட்டாளிகளின் முதல் கணக்கிற்கு பழைய இலாப விகிதத்தில் மாற்றப்படுகிறது. முதலீடுகளின் சந்தை மதிப்பு, ஏட்டு மதிப்பிற்கு குறைவாக இருப்பின், அதன் வேறுபாடு முதலீட்டு மாறுபடும் நிதியிலிருந்து கழிக்கப்பட்டு, மீதமுள்ள தொகை பழைய கூட்டாளிகளின் முதல் கணக்கிற்கு பழைய இலாப விகிதத்தில் மாற்றப்படுகிறது.
8.
(i) முதல் மீது வட்டி நடப்பாண்டுக்குரிய தொடக்க முதல் கணக்கிடப்படுகிறது.
(ii) அவ்வாண்டில் கூட்டாளிகள் கூடுதல் முதல் ஏதாவது கொண்டு வந்திருந்தாலோ, அல்லது முதல் தொகையை நிரந்தரமாக திரும்ப எடுத்திருந்தாலோ, அது முதல் தொகையில் மாற்றத்தை உண்டாக்கும்
(iii) எனவே, நடப்பாண்டுக்குரிய வட்டியானது முதல் தொகையில் ஏற்பட்ட மாற்றங்களின் விகிதாச்சாரத்திற்கேற்ப கணக்கிடுதல் வேண்டும்.
(iv) முதல் மீது வட்டி = முதல் தொகை x ஆண்டுகளுக்கான வட்டி விகிதம் x வட்டிக்குரிய காலம்
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards