12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 04/10/2020
12 ஆம் வகுப்பு உயிரியல் முக்கிய 3 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Biology Tamil Medium Important 3 Mark Book Back Questions (New Syllabus 2020)
12ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
காடுகளை பாதுகாப்பதில் பெண்களின் பங்கினை விவாதி.
2.
மிர்மிகோஃபில்லி என்றால் என்ன?
3.
ஓம்புயிரிகளில் வெற்றிகரமாக ஒட்டுண்ணி வாழ்க்கையினை மேற்கொள்ள உதவும் இரண்டு தகவமைப்பு பண்புகளை வரிசைப்படுத்துக.
4.
வளர்ப்பு தொழில்நுட்பத்தை, பயன்படுத்தப்படும் பொருள்களின் அடிப்படையில் எவ்வாறு வகைப்படுத்துவாய்? அதனை விளக்குக.
5.
வாழிட இழப்பை ஏற்படுத்தும் காரணிகள் யாவை?
6.
இனக்கூட்டம் நெறிப்படுத்தப்படுதல் குறித்து எழுதுக.
7.
உயிர்த்தொகையின் பண்புகளை எழுதுக.
8.
மஞ்சளின் பயன்களை பட்டியலிடுக.
9.
டி.என்.ஏ தடுப்பூசிகள் என்பன யாவை?
10.
11.
இயற்கைத் தேர்வு செயல்படுதலை,கரும்புள்ளி அந்திப்பூச்சியினை எடுத்துக்காட்டாகக் கொண்டு விளக்குக, இந்நிகழ்ச்சியை எவ்வாறு அழைக்கலாம்?
12.
பயிர் பெருக்கவியலாளர்கள் தற்போது பயன்படுத்தும் மிகச் சிறந்த வழிமுறைகள் என்னென்ன?
13.
இயற்கை வேளாண்மையின் முக்கியப் பண்புகளை எழுதுக.
14.
இறப்பு வீதத்தை பிறப்பு வீதத்திலிருந்து வேறுபடுத்துக.
15.
தாழ்நிலை ‘லாக் ஓபரான்’ வெளிப்பாடு எல்லா நேரங்களிலும் நடைபெறுகிறது. இக் கூற்றை நியாயப்படுத்துக.
16.
17.
பன்ம பாதுகாப்பில் கோவில் காடுகள் எவ்வாறு உதவிபுரிகின்றன?
18.
ஒரு குறிப்பிட்ட சூழல்மண்டலத்தின் பிரமிட் வடிவமானது எப்பொழுதும் மாறுபட்ட வடிவத்தைக் கொண்டுள்ளது. அதனை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
19.
வேறுபட்ட இனச்செல் பெண் உயிரிகளைப் பற்றி எழுதுக.
20.
கர்ப்ப காலத்தில் தாய்சேய் இணைப்புத்திசுவிலிருந்து உற்பத்தி செய்யப்படும் ஹார்மோன்கள் யாவை?
21.
இடை பால் உயிரியை மிகை பெண்ணில் இருந்து வேறுபடுத்துக?
22.
குறுக்கேற்ற செயல்முறையை விளக்குக.
23.
பாலிலா இனப்பெருக்க முறையில் உருவாக்கப்படும் சேய்கள் ஏன் ‘பிரதி’ (clone) என்று அழைக்கப்படுகிறது?
24.
உயிரிதொழில்நுட்பவியலின் பயன்பாட்டைக் குறிப்பிடுக.
25.
ஒரு பண்புக் கலப்பு அடிப்படையில் ஓங்குதன்மை விதியை விளக்குக.
26.
1.
1. 1730 ல் இராஜஸ்தானை ஆண்ட அப்யசிங் மன்னர் அரண்மனையைக் கட்டுவதற்காக கெஜ்ரி மரங்களை வெட்ட ஆணையிட்டார்.
2. இதை அமிர்தாதேவி எனப்படும் தைரியமான பெண் அறிந்தார்.
3. மன்னரின் படையினரால் மரங்கள் வெட்டப்படுவதை அறிந்த அமிர்தா தேவியும் மற்றும் பலரும் மரங்கள் வெட்டப்படுவதிலிருந்து காக்க கெஜ்ரி மரங்களை கட்டியணைத்துக் கொண்டனர்.
4. மன்னரின் படையினர் 363 பிற பிஷ்னாய்களுடன் அம்ரிதா தேவியையும் கொன்றனர்.
5. அவரது வீரத்தைப் பறைசாற்றும் வகையில் இராஜஸ்தான் அரசு இவரது பெயரில் அமிர்தாதேவி பிஷ்னாய் ஸ்மிருதி விருது' என்ற மாநில அளவிலான கௌரவ விருதினை வழங்குகிறது,
சிப்கோ இயக்கம்:
i) இந்த இயக்கத்திலிருந்த மக்கள் மரங்களை கட்டியணைத்து ஒப்பந்தக் காரர்களிடமிருந்து மரங்களைக் காத்தனர்.
ii) இவ்வியக்கங்களின் முக்கிய நோக்கம் மரங்கள் வெட்டப்படுவதை தடுத்தல்.
2.
(i) எறும்புகள் சில நேரங்களில் மா, லிட்சி, ஜாமுன், அக்கேஷியா போன்ற சில தாவரங்களைத் தங்குமிடமாக எடுத்துக் கொள்கின்றன.
(ii) இந்த எறும்புகள் தாவரத்திற்கு தொந்தரவு அளிக்கும் உயிரினங்களிடமிருந்து காக்கும் காப்பாளராகவும் இதற்குப் பதிலாக தாவரங்கள் எறும்புகளுக்கு உணவு மற்றும் தங்குமிடத்தையும் அளிக்கின்றன.
(iii) இது மிர்மிகோஃபில்லி என அழைக்கப்படுகிறது. (எ.கா) அக்கேஷியா மற்றும் அக்கேஷியா எறும்பு.
3.
முழு ஒட்டுண்ணிகள்:
ஒரு உயிரினமானது தனது உணவிற்காக ஓம்புயிரி தாவரத்தினை முழுவதுமாகச் சார்ந்திருத்தல் அது முழு ஒட்டுண்ணி என அழைக்கப்படுகிறது. இவை மொத்த ஒட்டுண்ணிகள் எனவும் அழைக்கப்படுகின்றன.
(எ.கா) ஓம்புயிரிகளான அக்கேசியா, டுராண்டா மற்றும் பல்வேறு தாவரங்களின் மீது கஸ்குட்டா என்ற தாவரம் முழுதண்டு ஒட்டுண்ணியாகக் காணப்படுகின்றன. மலர்தலை தூண்ட தேவையான ஹார்மோன் கூட கஸ்குட்டா ஓம்புயிரி தாவரத்திலிருந்து பெறுகிறது.
பாதி ஒட்டுண்ணி:
ஒரு உயிரினமானது ஓம்புயிரியிலிருந்து நீர் மற்றும் கனிமங்களை மட்டும் பெற்று தானே ஒளிச்சேர்க்கையின் மூலமாக தனக்கு தேவையான உணவினைத் தயாரித்துக் கொள்பவை பாதி ஒட்டுண்ணி எனப்படும்.
(எ.கா) விஸ்கம் மற்றும் லோரான்தஸ் - தண்டு வாழ் பகுதி ஒட்டுண்ணியாகும்.
சந்தனக்கட்டை வேர்வாழ் பகுதி ஒட்டுண்ணியாகும்.
4.
பிரிகூறு அடிப்படையில் தாவரத்தில் வளர்ப்பின் வகைகளாவன
1. உறுப்பு வளர்ப்பு
2. ஆக்குத்திசு வளர்ப்பு
3. புரோட்டோ பிளாஸ்ட் வளர்ப்பு
4. செல் மிதவை வளர்ப்பு
1. உறுப்பு வளர்ப்பு
2. ஆக்குத்திசு வளர்ப்பு
வளர்ஊடகத்தில் ஆக்குத்திசுவை வளர்த்தல்
3. புரோட்டோ பிளாஸ்ட் வளர்ப்பு
(செல்சுவரற்ற, ஆனால் செல்சவ்வு (அ) பிளாஸ்மா சவ்வினால் சூழப்பட்ட செல் அமைப்பாகும்) புரோட்டாபிளாஸ்ட்டை பயன்படுத்தி ஒற்றைச் செல்லிலிருந்து முழுத் தாவரத்தை மீளுருவாக்கம் செய்து இரு புரோட்டோபிளாஸ்டுகளை இணைத்து (உடலக் கலப்பினம்) உடல கலப்பின செல்களை உருவாக்க இயலும்.
4. செல் மிதவை வளர்ப்பு
கேலஸிலிருந்து செல்கள் தனிமைப்படுத்தப்பட்டு திரவ ஊடகத்தில் செல்மிதவை வளர்ப்புக்கு பயன்படுத்தப்படுகின்றன.
இரண்டாம் நிலை வளர்சிதை பொருட்கள் உற்பத்தி
செல் மிதவை வளர்ப்பின் மூலமாக இரண்டாம் நிலை வளர்சிதை மாற்றப் பொருட்கள் சில உத்திகள் (உயிரிசார் நிலை மாற்றம், வளர்சிதை மாற்றப் பொருள் தூண்டல் மற்றும் முடக்க வளர்ப்பு முறை) பயன்படுத்தப்பட்டு உருவாக்கப்படுகின்றன.
5.
(i) மனித சமுதாயத்தின் வளர்ச்சி தவிர்க்க முடியாத ஒன்று.
(ii) குடியிருப்புகள், விவசாயம், சுரங்கம் அமைத்தல், தொழிற்சாலைகள், மற்றும் நெடுஞ்சாலைகள் அமைத்தல் போன்ற காரணங்களுக்காக உயிரினங்களின் இயற்கையான வாழிடங்கள் அழிக்கப்படுகின்றன.
(iii) இதன் விளைவாக உயிரினங்கள் தங்களை தகவமைத்துக் கொள்ள அல்லது வேறு இடங்களுக்கு நகர கட்டாயமாக்கப்படுகின்றன.
(iv) அதிக மக்கள் தொகை நெருக்கம், நகர மயமாக்கம், தொழில்மயமாக்கம், மற்றும் வேளாண்மை முன்னேற்றத்திற்கான நிலங்களின் தேவை, நீர் மற்றும் மூலப்பொருட்களின் தேவை ஒவ்வொரு ஆண்டுக்கும் அதிகரிக்கிறது.
(v) இதனால் சதுப்பு நிலங்களை நிரப்புதல், புல்வெளிகளை விளை நிலமாக்குதல், மரங்களை வெட்டுதல், ஆறுகளில் மணல் அள்ளுதல், மலைகளை குடைந்து சாலைகள் அமைத்தல் போன்ற பல செயல்கள் மூலம் இது சாத்தியமாகிறது.
(vi) வெப்ப மண்டல மழைக்காடுகள் இத்தகைய வாழிட அழிவிற்கு மிகச் சரியான எடுத்துக்காட்டாகும்.
(vii) புவிக் கோளின் நுரையீரல் என அழைக்கப்பட்ட அமேசான் மழைக் காடுகளின் பல பகுதிகள் வேளாண்மை மற்றும் மனித குடியிருப்புகளுக்காக அழிக்கப்பட்டுள்ளன.
(viii) நியூசிலாந்தின் 90% சதுப்பு நிலங்கள் அழிக்கப்பட்டு சோயாபீன்ஸ் பயிரிடவும், இறைச்சி தரும் கால்நடைகளுக்கு புல் வளர்ப்பிடமாகவும் மாற்றப்பட்டுள்ளன.
(ix) தமிழ்நாட்டில் கொடைக்கானல் மற்றும் நீலகிரி மலைகள் மனித ஆக்கிரமிப்புகளால் வேகமாக அழிக்கப்பட்டு வருகின்றன.
(x) இதன் விளைவாக தாவரங்கள், நுண்ணுயிரிகள் அழிக்கப்படுகின்றன. மற்றும் விலங்குகள் தம் வாழிடங்களை விட்டு வெளியேற வேண்டியுள்ளது.
6.
1. அனைத்து விலங்கினக் கூட்டத்தின் உள்ளார்ந்த நோக்கம் எண்ணிக்கை அதிகரிப்பதே ஆகும். ஆனால் எண்ணிக்கை எல்லையில்லாமல் அதிகரிப்பதில்லை.
2. சுற்றுச்சூழல் தாங்குதிறன் எல்லையை எட்டியவுடன், இனக்கூட்டத்தின் எண்ணிக்கை நிலையாகவோ, சுற்றுச்சூழல் நிலைகளுக்கேற்ப ஏற்ற இறக்கமாகவோ காணப்படும்.
3. இனக்கூட்டத் தொகையை பல காரணிகள் நெறிப்படுத்திக்கின்றன. அவை:
i) அடர்த்தி சாராதது - புறக் காரணிகள்
ii) அடர்த்தி சார்ந்தது - அகக் காரணிகள்
(i) உயிரினத்திற்கு கிடைக்கும் இடப்பரப்பு, வசிப்பிடம், தட்பவெப்பம், உணவு ஆகியன புறக் காரணிகள் ஆகும்.
(ii) போட்டி, கொன்றுண்ணுதல், வெளியேற்றம், உள்ளேற்றம் மற்றும் நோய்கள் ஆகியவை அகக் காரணிகள் ஆகும்.
7.
உயிர்த்தொகையின் பண்புகள்:
1. இருப்பிடம் / புவியியல் நிலை
2. காலநிலை மற்றும் இயற்பியல் - வேதியியல் சூழல்
3. முதன்மையாகக் காணப்படும் தாவரங்கள் மற்றும் விலங்குகள்
4. உயிர் தொகைகளுக்கிடையே உள்ள எல்லையைத் துல்லியமாக வரையறை செய்ய முடியாது. புல்வெளி மற்றும் வன உயிர்த்தொகையில், சந்திக்கும் இடைநிலைப் பகுதிகள் உள்ளன.
8.
மஞ்சளின் பயன்கள்:
(i) குழம்பு பொடியின் கலவைப் பொருள்
(ii) மருந்தாக, இனிப்பு பண்ட, உணவுத் தொழிற்சாலைகளில் நிறமூட்டி.
(iii) விழாக்களில் மஞ்சள் தடவிய புனித அரிசி பயனாகிறது.
(iv) தோல், நூல், பேப்பர், விளையாட்டுப் பொருள்களை நிறமூட்டப் பயன்படும்.
(v) மஞ்சள் நிறத்துக்குக் காரணமான 'குர்குமின்' என்ற வேதிப்பொருள் ஆண்டி - ஆக்சிடெண்ட்
(vi) புற்றுநோய், வீக்கம், சர்க்கரை நோய், பாக்டீரியா, பூஞ்சை, வைரஸ் எதிர்ப்புப் பொருள்.
(vii) இரத்தக்குழாய்களில் தட்டை செல்கள் உறைதலைத் தடுத்து, மாரடப்பைத் தடுக்கும்.
9.
டி.என்.ஏ தடுப்பூசிகளை மரபியல் நோய்த்தடுப்பு முறையாகப் பயன்படுத்தும் ஒரு புதிய அணுகு முறை 1990 ல் நடைமுறைக்கு வந்தது.
டி.என்.ஏ மூலக்கூறுகள் மூலம் உடலில் தடைகாப்பு வினைகள் தூண்டப்படுகின்றன.
எதிர்ப்பொருள் தூண்டி புரதத்திற்கு குறியீடு செய்யும் ஒரு மரபணுவை டி.என்.ஏ தடுப்பூசி கொண்டுள்ளது.
இந்த மரபணுவை ஒரு பிளாஸ்மிட்டுக்குள் செலுத்தி பின்னர் ஒரு இலக்கு விலங்கின் உடல் செல்களுக்குள் ஒன்றிணையச் செய்யப்படுகிறது.
உள்ளே சென்ற அந்த டி.என்.ஏ எதிர்ப்பொருள் தூண்டி மூலக்கூறுகளை உருவாக்க செல்களுக்கு உத்தரவிடுகிறது. அவ்விதம் உருவாக்கப்பட்ட மூலக்கூறுகள் செல்களுக்கு வெளியே காணப்படுகின்றன.
செல்களால் உருவாக்கப்பட்டு சுதந்திரமான மிதந்து கொண்டிருக்கும் இம்மூலக்கூறைக் காணும் நமது தடைக்காப்பு, தனது வலுவான எதிர்ப்பை, எதிர்ப்பொருள் உருவாக்கத்தின் மூலம் தெரிவிக்கிறது.
டி.என்.ஏ தடுப்பூசியால் நோயை உருவாக்க இயலாது. ஏனெனில், இது நோயுண்டாக்கும் மரபணுவின் ஒரு பகுதி நகல்களைக் கொண்டுள்ளது.
வடிவமைக்கவும், மலிவாக உற்பத்தி செய்யவும் டி.என்.ஏ தடுப்பூசிகள் எளிதானவை.
இவ்வாறு புதிய தொழில்நுட்ப முறைகளின் மூலம் உருவாக்கப்படும் தடுப்பூசிகள் உறுதியான பல நன்மைகளைக் கொண்டுள்ளன. அவையாவன: இலக்கு புரத உற்பத்தி, நீண்டு நிலைக்கும் நோய்த் தடைகாப்பு மற்றும் குறிப்பிட்ட நோயுண்டாக்கிகளுக்கு எதிரான தடைகாப்பு வினைகளை குறைந்த நச்சு விளைவுகளுடன் விரைவாகத் தூண்டுதல் ஆகியன.
10.
11.
தொழிற்சாலை மெலானியாக்கம்:
1. எடுத்துக்காட்டு: இயற்கை தேர்வு கரும்புள்ளி அந்திப்பூச்சி (பிஸ்டன் பெட்டுலேரியா) மூலம் விளக்கலாம்.
2. தொழில்மயமாக்கத்திற்கு முன் வெள்ளை மற்றும் கருப்பு நிற அந்திப்பூச்சிகள் பரவலாக காணப்பட்டன.
3. தொழில்மயமாக்கத்திற்கு முன்பு கட்டிடங்களின் வெள்ளை நிற சுவரின் பின்புலத்தில் வெள்ளை நிற அந்திப்பூச்சுகளின் கொன்றுண்ணிகளிடமிருந்து எளிதில் தப்பித்தன.
4. தொழில்மயமாக்கத்திற்கு பின் மரங்களின் தண்டுப் பகுதிகள் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் புகைக் கரியினால் கரியநிறமாக மாறின.
5. கருப்பு நிற அந்திப்பூச்சிகள் இந்த கரிய மரத் தண்டுகளில் உருவ மறைப்பு பெற்றன.
6. வெள்ளை நிற பூச்சிகள் கொன்றுண்ணிகளால் எளிதில் அடையாளம் காணப்பட்டன.
7. கரிய நிறமுடைய அந்திப்பூச்சிகள் இயற்கையால் தேர்வு செய்யப்பட்டு அவற்றின் எண்ணிக்கை அதிகரித்தது.
8. இயற்கை கருப்பு நிற அந்திப்பூச்சிக்கு நேர்மறை தேர்வு அழுத்தத்தை வழங்கியது.
8. தகுந்த தகவமைப்புப் பெற்ற உயிரினங்கள் இயற்கைத் தேர்வு காரணமாக அதிகமான வாரிசுகளை உருவாக்கின.
12.
(i) சடுதி மாற்றப் பயிர்பெருக்கம் தான் தற்போது பயன்படுத்தப்படும் மிகச்சிறந்த வழிமுறையாகும்.
(ii) முல்லர் மற்றும் ஸ்டேட்லர் தான் சடுதிமாற்ற பயிர் பெருக்கம் என்ற சொல்லை உருவாக்கினார்கள்.
(iii) இது மரபுவழிப் பயிர்பெருக்க உத்திகளில் மேற்கொள்ளப்படும் புதிய வழிமுறையைக் குறிக்கிறது.
(iv) இது மரபுவழிமுறைகளிலுள்ள குறைபாடுகளை உழவியல் மற்றும் பயிரின் தரப்பண்புகளை மேம்படுத்தும் முறையாகும்.
(v) இது விதையிலாப் பயிர்களை மேம்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படும் ஒரே வழிமுறையாகும்.
(vi) இயற்கை காரணிகள் - புறஊதாக்கதிர்கள், எக்ஸ்ரே, ஆல்பா, பீட்டா, காமா, போன்ற கதிர்வீச்சுகள்.
(vii) வேதியியல் காரணிகள் - சீசியம், இதைல் மீத்தேன், சல்போனேட் மற்றும் யூரியா போன்றவை.
(viii) இதுபோன்ற காரணிகள் புதிய இரகப் பயிரை உருவாக்க சடுதிமாற்றத்தை தூண்டுகின்றன.
(x) சடுதி மாற்றம் மூலம் மரபணு கொண்ட குறு இரகக் கோதுமை
(xi) உவர்தன்மை மற்றும் பூச்சி எதிர்ப்பு தன்மை கொண்ட அடோமிகா 2 அரிசி ரகம்.
13.
இயற்கை வேளாண்மையின் முக்கியப் பண்புகள்:
1. கரிமப் பொருட்களை பயன்படுத்தி மண்ணின் தரம் பாதுகாத்தல் மற்றும் உயிரிய செயல்பாடுகளை ஊக்குவித்தல்.
2. மண்வாழ் உயிரிகளை பயன்படுத்தி பயிர்களுக்கு ஊட்டச் சத்துகளை மறைமுகமாக அளித்தல்
3. பயறு வகை தாவரங்களை பயன்படுத்தி மண்ணில் நைட்ரஜனை நிலைப்படுத்துதல்
4. பயிர் சுழற்சி, உயிரியப் பல்வகைத்த தன்மை, இயற்கையான கொன்றுண்ணிகள், இயற்கை உரங்கள் மற்றும் பொருத்தமான வேதிய, வெப்ப மற்றும் உயிரிய தலையீடுகள் போன்ற முறைகளால் களை மற்றும் தீங்குயிர்கள் கட்டுப்படுத்துதல்.
14.
| இறப்பு வீதம் | பிறப்பு வீதம் |
| இறப்பு வீதத்தினை சீரமைக்கப்படாத இறப்பு வீதத்தினை கொண்டு கூறலாம். சீரமைக்கப்படாத இறப்பு வீதம் என்பது ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு உயிரினத்தின் இறக்கும் உயிரிகளின் எண்ணிக்கை ஆகும். | பிறப்பு வீதத்தினை சீரமைக்கப்படாத பிறப்பு வீதத்தினை கொண்டு கூறலாம். சீரமைக்கப்படாத பிறப்பு வீதம் என்பது ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு உயிரினத்தின் பெண் பால் உயிரிக்கு பிறக்கும் உயிரிகளின் எண்ணிக்கை ஆகும். |
|
இறப்பு வீதம் = ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஏற்படும் உயிரிகளின் இறப்பு எண்ணிக்கை / சராசரி இனக் கூட்டம் |
பிறப்பு வீதம் = ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஏற்படும் உயிரிகளின் பிறப்பு எண்ணிக்கை / சராசரி இனக் கூட்டம். |
15.
1. வெளி ஊடகத்திலிருக்கும் லாக்டோஸ் பாக்டீரியா செல்லினுள் நுழைய பெர்மியோஸ் நொதி தேவைப்படுகிறது
2. லாக்டோஸ் செல்லினுள் நுழைய இயலவில்லை எனில் அது தூண்டியாக செயல்பட இயலாது.
3. அது லாக் - ஓபரானை தடுக்கும் அடக்கிப் புரதத்துடன் இணைந்து அதனை செயலற்றதாக்குகிறது லாக் ஓபரான் - செயல்பட தொடங்குகிறது.
4. எனவே லாக் ஒபரானின் தாழ் நிலை வெளிப்பாடு எப்போதும் இருந்து கொண்டிருக்கிறது.. அதனால் பல்வேறு மரபினோய் சிகிச்சைக்கும் பயன்படுகிறது.
16.
17.
1. கோவில் காடுகள் சமூகங்களால் பாதுகாக்கப்பட்டு வளர்க்கப்பட்ட மரங்களின் தொகுப்புகளாகும் (or) தோட்டங்களாகும்.
2. சமூகத்தின் பாதுகாப்பிற்காக ஒரு குறிப்பிட்ட சமயச் சித்தாங்களைக் கொண்டிருக்கும் வலுவான மத நம்பிக்கையை கொண்டவை.
3. இவை நீர்ப்பாசனம், தீவனம், மருத்துவத் தாவரங்கள் மற்றும் நுண் காலநிலை கட்டுப்பாடு ஆகியவற்றைப் பாதுகாப்பதன் மூலம் ஏராளமான சுற்றுச்சூழல் அமைப்புச் சேவைகளை அண்டை பகுதிகளுக்கு வழங்கும்.
4. கோவில் காடுகள் நிலத்தடி நீரை பாதுகாத்தல் மண்ணரிப்பை தடுத்தல், மண்ணின் வளத்தை பாதுகாக்கிறது.
5. கோவில் காடுகளில் ஆயுர்வேத மருத்துவ தாவரங்கள். மேலும் அச்சுறுத்தப்படும் சிற்றினங்கள் பாதுகாக்கப்படுகின்றன.
6. அச்சுறுத்தலுக்குண்டான சிற்றினங்களுக்கு உறைவிடம் மற்றும் பராமரிப்பு வழங்குவதோடு மட்டுமல்லாமல் சமுதாயத்திற்கான கல்வி மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களையும் பெற்றுத் தருகின்றன.
7. ஒவ்வொரு கிராமத்துக் கோயில் காடுகளும் ஐய்யனார் அல்லது அம்மன் போன்ற கிராம ஆண், பெண் தெய்வங்களின் உறைவிடமாகவே கருதப்படுகின்றன.
8. தமிழ்நாடு முழுவதும் 448 கோயில் காடுகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன
18.
1. வனச்சூழல் மண்டலத்தின் எண்ணிக்கை பிரமிட் சற்று வேறுபட்ட வடிவத்தை கொண்டிருக்கிறது. ஏனென்றால்.
2. பிரமிடின் அடிப்பகுதி (T1 உற்பத்தியாளர்) குறைவான எண்ணிக்கையிலான பெரிய மரங்களை கொண்டுள்ளது.
3. (தாவர உண்ணிகள் T2) பழம் உண்ணும் பறவைகள், யானை, மான் உற்பத்தியாளர்களை விட அதிக எண்ணிக்கையில் இரண்டாம் ஊட்ட மட்டத்தில் இடம் பெற்றுள்ளன.
4. இறுதிஊட்ட மட்டத்தில் (T4) காணப்படும் மூன்றாம் நிலை நுகர்வோர்கள் விட (சிங்கம்) மூன்றாம் ஊட்ட மட்டத்தில் (T3) உள்ள இரண்டாம்நிலை நுகர்வோர்களை விட (நரி மற்றும் பாம்பு) குறைவான எண்ணிக்கையை கொண்டுள்ளது.
5. எனவே வனச் சூழல் மண்டலத்தின் எண்ணிக்கை பிரமிட் கதிரிழை வடிவத்தில் தோன்றுகிறது.

19.
வேறுபட்ட இனச்செல் பெண்கள் :
மீன்கள் ஊர்வன பறவைகளில் பெண் உயிரிகள் வேறுபட்ட இனச்செல்களை உற்பத்தி செய்கின்றன.
ZO-ZZ வகை
(i) இவ்வகை பால் நிர்ணயம் அந்திப்பூச்சி, வண்ணத்துப்பூச்சி வீட்டுக் கோழிகளில் காணப்படுகிறது.
(ii) இவைகளில் பெண்கள் வேறுபட்ட இனச்செல் வகை ZO சார்ந்தன.
(iii) இவைகளில் இரண்டு வகையான முட்டைகளை உற்பத்தி செய்கின்றன.
(iv) சில முட்டைகள் Z குரோமோசோம் அற்றும் O காணப்படுகின்றன.
(v) ஆண் அமைப்புகள் ஒத்த இனச்செல் வகை ஆகும்.
ZW-ZZ வகை
(i) இவ்வகை பால் நிர்ணயம் ஜிப்சி அந்திப்பூச்சி முதுகுநாண் உயிரிகளான மீன்கள் ஊர்வன மற்றும் பறவைகளில் காணப்படுகின்றன.
(ii) பெண் உயிரிகள் இருவகையான அண்டத்தை வெளியிடுகின்றன.
(iii) ஒரு Z குரோமோசோமையும் ஒரு W குரோமோசோமையும் பெற்றுள்ளன.
(iv) ஆண் உயிரிகள் ஒரே வகையான விந்து செல்களை ஒத்த இனச்செல் ZZ முறையில் உற்பத்தியாகின்றன.
20.
(i) hCG - மனித கோரியானிக் கொனடோடிராபின்
(ii) hCS - மனித கோரியானிக் சோமட்டோமாம்மோட்ரோபின்
(iii) hPL - மனித பிளாசன்டல் லாக்டோஜன்
(iv) ஈஸ்ட்ரோஜன்
(v) புரோஜெஸ்டிரான்
(vi) ரிலாக்ஸின்
21.
| இடைபால் உயிரி | |
| குரோமோசோம் ஜீனோடைப் மற்றும் பாலின புறத்தோற்ற சேர்ந்த XY ஆண் மற்றும் XX பெண் அல்லாத அமைப்பு | மிகைபெண் அதிக எண்ணிக்கையில் X குரோமோசோம் உடையவர் அவர்களில் 44 உடல் குரோமோசோம் மற்றும் 3X குரோமோசோம் உள்ளது. மும்மய X நோய் குறியீடு என்று பெயர். |
| பால் பண்புகளில் மாற்றத்தை முக்கியமாக ஒரே குரோமோசோம் இனச்செல்கள் பால் ஹார்மோன்கள் அல்லது பிறப்புறுப்புகள் உண்டு ஆண் அல்லது பெண் என்று கருத முடியாது. | மூளை வளர்ச்சி குறைவு, மலட்டுத்தன்மை மிகை ஆண் (XYY ஆண்) |
| அதிகப்படியான X மற்றும் Y குரோமோசோம் உள்ளது. | XYY குறியீடு என அழைக்கப்படுகிறது. |
| இருபால் உயிரினம் அல்லது ஹெர்மாப்ரோடைட் ஆகும். | அதிகப்படியான Y குரோமோசோம் உண்டு. |
| அண்டக மற்றும் விந்தக திசுக்கள் காணப்படும். | மூளை குறைபாடு மற்றும் குற்றச்செயலில் ஈடுபடும் தன்மை |
| வெளிப்புற பிறப்புறுப்பு துளைகள் குறைபாடுயுடையவை |
22.
ஒத்திசைவு குரோமோசோம் இணைகளின் சகோதரி அல்லாத குரோமோடிட்களுக்கிடையே இணையான துண்டுகள் பரிமாற்றப்பட்டு புதிய மரபணு சேர்க்கை தோன்றும் உயிரிய நிகழ்விற்குக் குறுக்கேற்றம் என்று பெயர்.
இதில் பல நிலைகளை உடையது
1) இணை சேர்தல்
2) நான்கமை உருவாதல்
3) குறுக்கேற்றம் மற்றும் முடிவுறுதல்
i) இணை சேர்தல்:
புரோபேஸ் 1 இன் சைக்கோட்டின் நிலையில் இரண்டு ஒத்திசைவு குரோமோசோம்களுக்கிடையே நெருங்கிய இணை உருவாகிறது.
இது இரட்டை இணை (அ) பைவாலண்ட், இது இணைசேர்தல் (அ) சினாப்சிஸ் என்று பெயர் இணைதல் தொடங்குவதைப் பெருத்து 3 வகைப்படும்.
1. மையம் தொடங்கி இணைசேர்தல்
2. நுனி தொடங்கி இணைசேர்தல்
3. இடையிலா இணை சேர்தல்
ii) நான்கமை உருவாதல்:
இரட்டை இலையில் -இரண்டு ஒத்த அமைப்புடைய சகோதரி குரோமாடிட்களை உருவாகத் தொடங்குகிறது - இதில் நான்கு குரோமோடிடுகளைப் பெற்றிருக்கிறது -நான்கமை நிலை என்று
iii) குறுக்கேற்றம்:
பாக்கிடீன் நிலையில் குறுக்கேற்றம் நிகழ்கிறது-
ஒத்திசைவு குரோமோசோம்களின் சகோதரி அல்லாத குரோமோடிடுகளுக்கிடையேே இணைவுப்புள்ளிகள் (கயாஸ்மாக்கள்)- எனும் (X) வடிவ அமைப்பு உருவாகிறது. இவற்றில் குரோமோடிடுகள் உடைந்து துண்டுகள் பரஸ்பரம் பரிமாற்றம் செய்யப்படுகிறது.
1) அண்மைக்கால ஆய்வு: மேம்படுத்தப்பட்ட இழை அமைப்பு கொண்ட இணை பிணைப்புக் கூட்டமைப்பு -இணைசேர்தல் (அ) கயாஸ்மா தோன்றுதலுக்கு வழி வகுக்கிறது. (விதி விலக்கு - சில ஆண் டுரோசோஃபிலா வில் இணைப்பிணைப்புக் கூட்டமைப்பு உருவாவதில்லை)
iv) முடிவுறுதல்:
குறுக்கேற்றத்தின் பின் கயாஸ்மாவானது குரோமாடிட்களின் நுனிப்பகுதியை நோக்கி நகர்கிறது இது முடிவுறுத்தல் எனப்படுகிறது. ஒத்திசைவு குரோமோசோம்கள் முழுமையாகப் பிரிகிறது.
23.
(i) பாலிலா இனப்பெருக்க முறையில் உருவாக்கப்படும் சேய்கள் பெற்றோர்களின் பண்புகளையே கொண்டிருக்கும்.
(ii) இதையே பிரதி எனவும் சொல்லலாம்.
(iii) பிரதி என்பது பெற்றோரின் சாயலை கொண்ட சேய்களாகும்.
24.
1. 21 ஆம் நூற்றாண்டின் மிகவும் முக்கியமான பயன்பாட்டு அறிவியல்களில் முக்கியமானது.
2. வாழ்வை பயனுள்ள முறையில் செலவிட நமக்குள்ள ஒரு நம்பத்தகுந்த துறையாகும்.
3. பரந்துபட்ட பயன்பாடு வேளாண்மை, மருத்துவம், சூழல், வணிக தொழில்கள் போன்றவை
4. மரபணு மற்றும் தாவரவகைகள் போன்ற அதிக மதிப்புள்ள விளைவுகள்
Bt. பருத்தி, அரிசி, தக்காளி, புகையிலை, காலிஃபிளவர், உருளை, வாழை போன்றவை
5. மரபணு மாற்ற வேளாண் தாவர வகைகள் நோயெதிர்ப்பு திறன், களைக்கொல்லி எதிர்ப்புத்தன்மை, இறுக்க எதிர்ப்பு தன்மை
6. உயிர்தொழில் நுட்ப தொழிற்சாலையின் மிகப்பெரிய சாதனை (மருத்துவம்) இன்சுலின், இரத்தப்புரத உற்பத்தி, தடுப்பூசி மருந்து, நொதிகள், உயிரி எதிர்ப்புப் பொருட்கள், பால் சார்ந்த தயாரிப்புகள், பானங்கள் போன்றவை.
7. உயிரி சில்லுகள் அடிப்படையாகக் கொண்ட உயிரிய கணினி உருவாக்குதல்.
8. மரபணுப் பொறியியல் மரபணு கையாளுதல், திட்ட வளர்ப்பு (முழு ஆக்குத்திறன்)
9. SCP - ஸ்பைருலினா - (உணவு தொழிற்சாலை)
10 இரண்டாம் நிலை வளர்ச்சிதைப் பொருட்கள் உயிரி உரங்கள், உயிரி பூச்சிக் கொல்லிகள் மற்றும் நொதிகள் போன்றன.
11. சூழல் சார் உயிரி தொழில் நுட்பம் உயிரித்திரள் ஆற்றல், உயிரி எரிபொருள், உயிரி சீரமைப்பாக்கம், தாவர சீரமைப்பதால்
25.
ஓங்குத் தன்மை விதி: பண்புகள் - காரணிகளால் கட்டுப்படுத்தப்படுகிறது. எதிரிப் பண்புகளுக்கான இணைக் காரணிகளில் ஒன்று ஓங்கு தன்மையுடனும் மற்றொன்று ஒடுங்கு தன்மையுடனும் காணப்படும்.
ஒரு பண்பு கலப்பு:
F1 - ஐப் பொறுத்தவரை வெளிப்படாத ஒடுங்கு பண்பு மறைவாயிலிருந்து F2 - வில் மீண்டும் வெளிப்பட்டது.
26.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards