12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set C
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set B
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set C

Published on: 04/10/2020
12 ஆம் வகுப்பு உயிரியல் முக்கிய 3 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Biology Tamil Medium Important 3 Mark Creative Questions (New Syllabus 2020)
12ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
வாழிடப் பேணுகை பாதுகாப்பு, புறவாழிடப் பேணுகை பாதுகாப்பு இவற்றை வேறுபடுத்துக.
2.
புவி வெப்பமடைதலை நாம் ஏன் தடுக்க வேண்டும்?
3.
பத்து விழுக்காடு விதி என்றால் என்ன?
4.
இணை மரபற்றுப் போதல் என்றால் என்ன?
5.
பெரும்பாலான விலங்குகளால் உள் சூழ்நிலைகளை நிலையாகப் பராமரிக்க முடிவதில்லை. அவற்றின் உடல் வெப்பநிலை சுற்றுச்சூழல் வெப்பநிலைக்கேற்ப மாறுகிறது. எவ்வாறு?
6.
உயிரி வினைகலன் என்றால் என்ன?
7.
பெருந்திரள் மரபற்றுப் போதல் - சிறுகுறிப்பு எழுதுக.
8.
வரலாற்றின் பக்கங்களின், கால மாற்றங்கள் காரணமாக உயிர்த் தொகையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. காரணம் தருக.
9.
உளுந்தின் தோற்றம், விளைவிடம் எது?
10.
மரக்கூழ் தயாரிக்க பயன்படும் மரங்கள் யாது?
11.
சினாப்சிஸ் வரையறு? அதன் வகைகள் யாவை?
12.
'சைமாலஜி', 'ஈனாலஜி' - வரையறு.
13.
மறு சேர்க்கை என்பதை வரையறு
14.
தண்டு செல் என்றால் என்ன? அவற்றின் இயல்பு என்ன?
15.
வாய்வழி தடுப்பு மருந்துகள் மூலக்கூறு மருந்தாக்கத்தின் முக்கிய விளைபொருட்கள் ஆகும். உனது காரணம் தருக.
16.
மார்ஃபின் பற்றி சிறுகுறிப்பு எழுதுக.
17.
எதிர்ப்பொருள் தூண்டிகள் என்றால் என்ன?
18.
கைரமோன் என்றால் என்ன?
19.
தன் மகரந்தச் சேர்க்கையின் நன்மைகள் கூறு?
20.
தாவரங்களை பாதிக்கும் சூழல் காரணிகள் யாவை?
21.
தேனீ மகரந்தம் (Bee Pollen) பற்றிக் கூறு?
22.
பாரம்பரிய குறைபாடு என்றால் என்ன?
23.
வேறுபாடுகளின் முக்கியத்துவம் தருக
24.
நவீன ஐரோப்பியர்களின் மூதாதையார்கள் யார்? விவாதி.
25.
காப்புரிமம் அதன் 3 பகுதிகள் யாவை?
26.
காலஸ் தூண்டப்படுதலை விவரி.
27.
அமில மழை என்றால் என்ன?
28.
மார்பக அளவுக்கும், பால் சுரப்புத் திறமைக்கும் தொடர்பில்லை, விளக்குக.
29.
பொய்யான பிரசவ வலியை ஏற்படுத்துவது எது?
30.
Zo-Zz வகை பால் நிர்ணயம் Zz -Zw பால் நிர்ணய முறையிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது?
31.
சீரியக்க கால இடைவெளி குடும்பக்கட்டுப்பாட்டு முறையில், கலவி எப்போது தவிர்க்கப்படும்?
32.
உயிரிகளில் காணப்படும் பல்வேறு வகையான ஒருங்கிணைவு முறைகள் யாவை?
33.
நீள்மட்ட சமபிளவு முறை என்றால் என்ன?
34.
கடத்து RNA வின் கிராம்பு இலை வடிவ மாதிரியின் வரைபடம் தருக
35.
DNA கார வரிசைத் தொடர் 5' ATGC ATGC ATGC ATGC ATGC ATGC ATGC - 3' எனில் அதன் மற்றொரு இழை 3' - 5' திசை வரிசை மற்றும் அதன் நிரப்பு இழை 5' - 3' திசை கார வரிசைத் தருக.
36.
கரு கண்காணிப்புக் கருவி பற்றி விவரி?
1.
| வாழிடப் பேணுகை பாதுகாப்பு | புறவாழிடப் பேணுகை பாதுகாப்பு | ||
| 1. | இயற்கை வாழிடங்களில் காணப்படும் மரபியல் ஆதாரங்களின் மேலாண்மை மற்றும் பாதுகாப்பு என்பதாகும். | சிற்றினங்கள் இயற்கைச் சூழலுக்கு வெளியே பாதுகாக்கப்படுகின்றன. | |
| 2. | அச்சுறுத்தலுக்குட்பட்ட வனமரங்கள் மருத்துவ மற்றும் நறுமணத் தாவரங்கள் பாதுகாக்கப்படுகின்றன. | இவை தாவரவியல் தோட்டங்கள், விலங்கியல் பூங்காக்களைத் தோற்றுவித்தல் பாதுகாப்பு உத்திகளான மரபணு, மகரந்தம், விதை அகவளர் முறை பாதுகாப்பு நாற்றுகள், திசுவளர்ப்பு மற்றும் DNA வங்கிகள் மூலம் பாதுகாக்கப்படுகின்றன. | |
2.
1. புவியின் வெப்பம் அதிகரிக்கும் போது துருவப் பகுதியில் பனிக்குன்றுகள் மற்றும் பனிக்கட்டிகள் உருகத் தொடங்குகின்றன. இதன் காரணமாக கடல்நீர் மட்டம் உயர்ந்து உலகின் பல பகுதிகளிலுள்ள கடலோர நகரங்கள் மூழ்கும் நிலை ஏற்படும்.
2. காலநிலையில் தீவிர மாற்றங்கள் ஏற்பட்டு அதன் மூலம் கடும் வெள்ளப்பெருக்கு, அதிக வறட்சி போன்றவை நிலவும்.
3. உயிர்ப்பன்மயத் தன்மை குறைந்து வருவதோடு சில சிற்றினங்கள் அழியும் நிலை ஏற்படும்.
3.
1. இந்த விதி லின்டிமேன் (1942) என்பவரால் முன்மொழியப்பட்டது.
2. உணவுவழி ஆற்றல் ஒரு ஊட்ட மட்டத்திலிருந்து மற்றொன்றிற்கு கடத்தப்படும் போது, 10% மட்டுமே ஒவ்வொரு ஊட்ட மட்டத்திலும் சேமிக்கப்படுகிறது.
3. மீதமுள்ள ஆற்றல் 90% சுவாசித்தல், சிதைத்தல் நிகழ்வின் மூலம் வெப்பமாக இழக்கப்படுகிறது.
4. எனவே இது பத்து விழுக்காடு விதி எனப்படுகிறது.
4.
1. ஒரு இனம் மரபற்றுப் போவதனால் அதைச் சார்ந்த மற்றொரு இனமும் மரபற்றுப் போதலாகும்.
2. எ.கா. டோடோ பறவையின் அழிவு கல்வாரியா மரத்திற்கு ஆபத்தாக அமைந்தது.
5.
1. மீன்கள் போன்ற நீர்வாழ் உயிரிகளில், உடல் திரவத்தின் ஊடுகலப்புச் செறிவு சுற்றுச்சூழலில் உள்ள நீரின் ஊடுகலப்புச் செறிவிற்கேற்ப மாற்றமடைகிறது.
2. இத்தகைய விலங்குகள் ஒத்தமைவான்கள் எனப்படும். அதீத சூழல்களில் விலங்கினங்கள் வலசை போவதன் மூலம் தங்களின் வாழிடங்களை இடம் மாற்றிக் கொள்கின்றன.
6.
1. இது நொதிகலன் எனப்படும். ஒரு பாத்திரம் அல்லது கொள்கலனாகும்.
2.
3. இந்த வினைகள் நடைபெற உகந்த சூழ்நிலையை வழங்கக்கூடிய வடிவமைக்கப்பட்டுள்ளது.
4. காற்றோட்டம், கிளர்வூட்டம், வெப்பநிலை, pH போன்றவை கட்டுப்படுத்தப்பட்டிருக்கும்.
5. இதிலுள்ள இரு செயல்முறைகள் உள்ளன.
i) மேல்கால் பதப்படுத்தல்
ii) கீழ்கால் பதப்படுத்தல்
7.
1. சுற்றுச்சூழல் பேரழிவுகளால் பூமி சில பெருந்திரள் அழிவுகளை சந்தித்துள்ளது.
2. 225 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் பெர்மியன் காலத்தில் பேரழிவு ஏற்பட்டு ஆழமற்ற கடல்நீரில் வாழ்ந்த 90% முதுகு நாணற்ற உயிரினங்கள் மரபற்று போயின.
8.
1. சஹாரா பாலைவனம் ஒரு காலத்தில் இப்பகுதி ஆறுகள் பாய்ந்த பசுமையான நிலப்பரப்பாக இருந்தது. அதனால் ஏராளமான மரவகைகளும், விலங்குகளான நீர்யானை, ஒட்டகச்சிவிங்கி, முதலை போன்றவையும் இங்கு வாழ்ந்தன.
2. காலப்போக்கில் காலநிலை வறண்டதால், இப்பகுதி புவிக்கோளின் மிகப்பெரிய பாலைவனமாக மாறிவிட்டது. இங்கு விலங்குகள் சாதகமான சூழல் நிலவும் அருகிலுள்ள பகுதிகளுக்கு இடம் பெயர்ந்திருக்கலாம்.
9.
1. தொல்தாவரவியல் சான்று 3500 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் உளுந்து இருந்ததை உறுதி செய்யும்.
2. உலக உளுந்து உற்பத்தியில் இந்தியா 80 சதவீதம் பங்களிப்பு செய்யும்.
3. உத்தரப்பிரதேசம், சத்தீஸ்கர், கர்நாடகாவில் உற்பத்தியாகிறது.
10.
1. மீலியா அசடிரக்டா (மலை வேம்பு)
2. நியோலாமார்க்கியா சைனென்சிஸ் (வெண் கடம்பு)
3. காசுவரினா (சவுக்கு)
11.
மியாசிஸ் செல்பிரிதலின் புரோஃபேஸ் I நிலையின் சைகோட்டின் துணை நிலையின் போது ஒத்திசைவான குரோமோசோம்கள் அருகருகே வருகின்றது - இது இரு இணைகள் உருவாகிறது.
1. இந்த இணைதல் சினாப்ஸிஸ் (அ) சின்டசிஸ் எனப்படும்
2. துவங்கும் இடத்தினடிப்படையில் 3 விதமான சினாப்ஸிஸ் காணப்படுகிறது.
12.
சைமாலஜி: நொதித்தலின் உயிர் வேதியியல் செயல்முறைகள் மற்றும் அதன் நடைமுறை பயன்களை பற்றி படிக்கும் பன்முறை அறிவியல் சைமாலஜி எனப்படும்.
ஈனாலஜி: ஒயின் மற்றும் ஒயின் உற்பத்தி செய்யும் முறைகளைப் பற்றிய அறிவியலுக்கு ஈனாலஜி என்று பெயர்.
13.
குறுக்கேற்றத்தின் போது உருவாகும் கயாஸ்மா புள்ளிகளில் குரோமோடிடுகள் துண்டாகி மீண்டும் மறு இணையும் நடைபெறுகிறது - இந்த பரஸ்பர துண்டுகள் பரிமாற்றத்தினால் புதிய மறு சேர்க்கை உருவாகிறது.
14.
(i) பெரும்பாலான பல செல் உயிரிகளில் காணப்படும் வேறுபாடு அடையாத செல்கள் 'தண்டு செல்கள்' ஆகும்.
(ii) இவை பல முறை மைட்டாடிக் செல் பிரிவுகளுக்கு உட்பட்டாலும் தங்களது வேறுபாடடையாத் தன்மையைத் தொடர்ந்து பராமரித்து வருகின்றன.
அவற்றின் சிறப்பு தன்மைகள்:
தங்களைத் தாங்களே புதுப்பித்துக் கொள்ளும் இயல்புடைய தண்டு செல்கள் 'செல் திறனை' வெளிப்படுத்துகின்றன.
15.
(i) மரபுப் பொறியியல் என்னும் அறிவியற்புலத்தைப் பயன்படுத்தி 'மூலக்கூறு மருந்தாக்கம்' என்னும் முறை மூலம் வாய்வழி தடுப்பு மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.
(ii) தேர்ந்தெடுக்கப்பட்ட மரபணுக்கள் தாவரங்களுக்குள் புகுத்தப்பட்டு மரபியல்பு மாற்றப்படுவதால் அம்மரபணுக்களுக்குரிய புரதம் உற்பத்தியாகிறது.
(iii) உண்ணத் தகுந்த தடுப்பு மருந்துகள் கோழைப்படலத்தை இலக்காகக் கொண்டவை. இவை, உடல் பகுதி மற்றும் கோழைப்படலம் சார்ந்த தடைக்காப்பு வினைகளைத் தூண்டுகின்றன.
(iv) தற்பொழுது மனித மற்றும் விலங்கு நோய்களான மணல்வாரி, காலரா, கால் மற்றும் வாய் நோய் மற்றும் கல்லீரல் அழற்சி போன்றவற்றிற்கான உண்ணத்தகுந்த தடுப்பு மருந்துகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.
16.
1. இது அறுவை சிகிச்சையின் பொழுது பயன்படுத்தப்படும் வலிமையான வலிநீக்கி மருந்தாகும்.
2. இது பெரும்பாலும் பரவலாக பயன்படுத்தப்படும் போதை மருந்தாகும்.
3. இது உடலின் செயல்பாடுகளை குறைக்கும் மன அழுத்தவூக்கியாக செயல்புரிகின்றது.
17.
எதிர்ப்பொருள் தூண்டிகள் என்பவை கண்டுபிடிக்கக் கூடிய தடைக்காப்பு துலங்கல்களை ஏற்படுத்தும் பெரிய சிக்கலான மூலக்கூறுகளாகும்.
18.
பியரிஸ் ரேஃபே சிற்றினக் கம்பளிப்புழு வெளியிடும் கைரமோன் என்ற சேர்மம் காட்டுவகை முள்ளங்கியின் வாயிலாக காப்புத்தன்மை அதன் சந்ததிகளுக்குக் கடத்துகிறது.
19.
1. இருபால் மலர்களில் இம்முறையில் மகரந்தச் சேர்க்கை உறுதியாகிறது.
2. சிற்றின உறுப்பினர்கள், அதிகரிக்கும் போது, தொலை தூரத்தில் பிரியும் போது உதவும்.
3. அயல் மகரந்தச் சேர்க்கை வாய்ப்பு நழுவும் போது, சிற்றின அழிவைத் தடுக்கும்.
20.
(i) காலநிலைக் காரணிகள்: சூரியஒளி, மழைப்பொழிவு கார்பன் - டை - ஆக்ஸைடு மற்றும் நீராவி
(ii) உயிரி காரணிகள்: பறவைகள், பூச்சிகள், மனிதன், மேயும் விலங்குகள், கொறித்துண்ணிகள், தாவர நோய்க்கிருமிகள், தொற்றுத்தாவரங்கள்
(iii) நிலப்பரப்பியல் காரணிகள்: மண் சரிவமைவு, மண் நீர், மண்ணின் இயற்பியல் அமைப்பு மண் கனிமங்கள், மண் வளி
21.
1. இது ஒரு இயற்கைப் பொருள்.
2. இதில் புரதம், கார்போஹைடிரேட், தாதுப்பொருட்கள், விட்டமின்கள் உள்ளன.
3. கூடுதல் ஊட்டப்பொருளாகிறது.
4. மாத்திரை, பாகுநீராக விற்கப்படும்
5. தடகள வீரர், பந்தயக் குதிரைகள் செயல்பாட்டை அதிகரிக்கும்
6. தீக்காயப் புண்ணை ஆற்றும்
22.
பாரம்பரிய குறைபாடு - மரபணுக்களின் வரிசையமைப்பில் ஏற்படும் மாற்றமான சடுதி மாற்றம் (Mutation) நிகழ்வினால் ஏற்படுகிறது. இதனால் தேவையான புரத தயாரிப்பு தடைபடுகிறது. (அ) செயல்படாத புரதம் தயாரிக்கப்படுகிறது
23.
(i) சில உயிரிகளில் - வேறுபாடுகள் போராடி வாழ மாறும் சூழலில் தகவமைப்பாகின்றன
(ii) இயற்கை தேர்வுகளான மரபியல் பண்புகளை வழங்குவதாக உள்ளது
(iii) பரிணாமத்தின் அடிப்படை வேறுபாடுகளாகும்
24.
1. நவீன ஐரோப்பியர்களின் மூதாதையர்கள் குரோமேக்னன் ஆகும்.
2. பிரான்ஸ் நாட்டின் குரோமேக்னன் பாறைப் பகுதிகளில் வாழ்ந்ததாகக் கருதப்படுகிறது.
3. அவர்கள் பல்வேறு சூழ்நிலைகளில் வாழும் திறனைப் பெற்றவர்கள்.
4. குகைகளிலும் தரைகளிலும் சுவர்களிலும் படங்கள் வரையவும் பண்பினையும் பெற்றிருந்தனர்.
25.
அதன் 3 பகுதிகளாவன அனுமதி, விவரக் குறிப்பு மற்றும் உரிமைகோருதல் பகுதிகளாகும்.
அனுமதி
(i) காப்புரிம அனுமதி விண்ணப்பம் காப்புரிம அலுவலகத்தில் நிரப்பப்படுகிறது.
(ii) அனுமதி விண்ணப்பம் காப்புரிம அலுவலகத்தில் நிரப்பப்படுகிறது. ஆனால் வெளிப்படுவதில்லை. இவை கையொப்பம் இடப்பட்ட ஆவணங்களாகும்.
(iii) உருவாக்குபவர்களுக்குக் கொடுக்கப்படும் காப்புரிமை அனுமதி ஒப்பந்தமாகும்.
விவரக் குறிப்பு
(i) ஒற்றை ஆவணமாக, பொதுமக்களுக்கும் காப்புரிம அலுவலகத்திற்கும் இடையில் மேற்கொள்ளப்படுகிறது.
(ii) இதில் உருவாக்கத்தின் விவரிப்பும் - எவ்வாறு உருவாக்கம் மேற்கொள்ளப்பட்டது என்பதும் காணப்படும்.
உரிமை கோருதல் பகுதி
(i) உருவாக்கத்தின் பாதுகாக்கப்பட வேண்டிய பகுதி குறிப்பாக வரையறுக்கப்படுகிறது.
(ii) இந்த நோக்கம் மற்றவர்களால் நடைமுறைப்படுத்த முடியாததாக தடுக்கப்படுகிறது.
26.
I) Inoculation (உட்செலுத்துதல்)
நோய்க்கிருமி நீக்கப்பட்ட துண்டுகளின் பிரிகூறுகள் ஆக்சின் கூடுதலாகச் சேர்க்கப்பட்ட MS ஊட்டக கரைசலில் வைக்கப்படுகிறது.
II) Incubation: (அடைகாத்தல்)
இவை 25o C± 2o C வெப்ப நிலையில் 12 மணிநேரம் ஒளி மற்றும் இருள் என மாறி மாறி வைக்கப்படும்.
III) Induction of Callus (காலஸ் உருவாக்கம்)
பிரிகூறின் மேற்பரப்பில் செல்பிரிதல் தூண்டப்பட்டு - காலஸ் உருவாகிறது.
காலஸ் என்பது ஆய்வுக்கூட சோதனை வளர்ப்பு
ஊடகத்தில் தாவர செல்கள் (அ) திசுக்களின் முறையற்ற வளர்ச்சி ஆகும்.
27.
கந்தக அமிலம் அல்லது நைட்ரிக் அமிலம் போன்ற அமிலப் பொருட்களைக் கொண்ட மழைப் பொழிவு ஆகும்.
28.
1. மார்பக வளர்ச்சி பூப்பெய்தலில் தொடங்குகிறது.
2. ஒவ்வொரு மாதவிடாய் சுழற்சியிலும் முன்னேற்றமடைகிறது.
3. கருவுறாத பெண்களில் பால் சுரப்பிகள், சரியாக வளர்ச்சியடைவதில்லை.
4. மார்பக அளவு, படிந்துள்ள கொழுப்பைப் பொறுத்துள்ளது. மார்பக அளவுக்கும், பால் சுரப்புத் திறனுக்கும் தொடர்பில்லை.
29.
1. கர்ப்பகாலம் முழுவதும், அவ்வப்போது இலேசான வலிமையான சுருக்கங்களை கருப்பை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறது.
2. பொய்யான பிரசவ வலியை ஏற்படுத்தும் இந்த சுருக்கங்கள் பிராக்ஸ்டர் ஹிக்ஸ் சுருக்கங்கள் எனப்படும்.
30.
| Zo -Zz வகை பால் நிர்ணயம் | Zz -Zw வகை | ||
| 1. | வேறுபட்ட இனச்செல்களை உருவாக்கும் பெண் உயிரிகள் இரண்டு விதமான முட்டைகளை இடுகின்றன.Z குரோமோசோம் கொண்டு ஒன்றும் Z குரோமோசோம் இல்லாமலும் முட்டைகள் உருவாகின்றன.(Zo) | வேறுபட்ட இனச்செல் வகையான பெண் உயிரிகள் Z குரோமோசோம்களை கொண்டும் W குரோமோசோம்களை கொண்ட முட்டைகளை உருவாகின்றன. | |
| 2. | ஆண்கள் ஒத்த இனச்செல் பண்புகளை உடையவர்களாய் ஒரே விதமான முட்டைகளை உருவாகின்றன . | ஆண்கள் ஒத்த இனச்செல் பண்புகளை உடையவர்களாய் ஒரே விதமான Zz விந்து செல்களை உருவாக்குகின்றன. | |
| 3. | அந்திப்பூச்சி, வண்ணத்துப்பூச்சி, வீட்டு கோழிகளில் நடைபெறுகிறது. | ஜிப்சி அந்திப்பூச்சி சில மீன்கள் ஊர்வன பறவைகளில் காணப்படுகின்றன. | |
31.
1. மாதவிடாயின் 14 ஆம் நாளில் அண்ட செல் வெளியேறும்.
2. வெளியேறிய அண்டசெல் 2 நாட்கள் உயிருடன் இருக்கும்.
3. விந்தணு, பெண் இனப்பாதையில் 72 மணிநேரம் உயிருடன் இருக்கும். இந்தக் காலத்தில் கலவியைத் தவிர்க்க வேண்டும்.
32.
தன் கருவுறுதல், அயல் கருவுறுதல், முழுச்சேர்க்கை, இளம் செல்சேர்க்கை, மாறுபட்ட செல் சேர்க்கை, ஒத்த செல் சேர்க்கை, வேறுபட்ட செல் சேர்க்கை போன்றவை ஒருங்கிணைவு வகைகள் ஆகும்.
33.
1. இதில் பிளவுமட்டம் உயிரியின் நீள அச்சில் ஏற்படுகின்றது.
2. நீளிழை உயிரியல் பிரிவின்போது நீளிழையானது ஒரு சேய் செல்லில் தக்க வைக்கப்படுகின்றது.
3. அடுத்த சேயில் அடிப்படைத்துகள்கள் நீளிழையைத் தோற்றுவிக்கின்றது.(எ.கா)யூக்ளினா
34.
35.
3' - 5' நிரப்பு திசை - நிரப்பு DNA இழை
3' TACG TACG TACG TACG TACG TACG TACG - 5'
5' - 3' திசை - நிரப்பு DNA இழை
5' GCAT GCAT GCAT GCAT GCAT GCAT GCAT - 3'
36.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set B
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Standard Physics Wave Optics Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Physics Wave Optics Creative Questions Study Material - QB365 Set C
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards