12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 04/10/2020
12 ஆம் வகுப்பு உயிரியல் பயிற்சி 3 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Biology Tamil Medium Model 3 Mark Book Back Questions (New Syllabus 2020)
12ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
காடுகளை பாதுகாப்பதில் பெண்களின் பங்கினை விவாதி.
2.
ஓபிரிஸ் ஆர்கிட் தேனீக்களின் மூலம் எவ்வாறு மகரந்தச்சேர்க்கை நிகழ்த்துகிறது.
3.
அழியும் நிலை சிற்றினங்கள் என்றால் என்ன?
4.
புவியில் காணப்படும் நீர் சார்ந்த உயிர்த்தொகையை வகைப்படுத்துக.
5.
சிறு தானியங்கள் என்றால் என்ன? அதனுடைய வகைகள் யாவை ? ஒவ்வொன்றிற்கும் எடுத்துக்காட்டு தருக
6.
உடல்செல் மரபணு சிகிச்சை, மற்றும் இனச்செல் மரபணு சிகிச்சை வேறுபடுத்துக
7.
இயற்கைத் தேர்வு செயல்படுதலை,கரும்புள்ளி அந்திப்பூச்சியினை எடுத்துக்காட்டாகக் கொண்டு விளக்குக, இந்நிகழ்ச்சியை எவ்வாறு அழைக்கலாம்?
8.
9.
இயற்கை வேளாண்மையின் முக்கியப் பண்புகளை எழுதுக.
10.
மனித உடலில் நுழைந்த பிறகு, ரெட்ரோவைரஸ் இரட்டிப்படையும் செயல்முறையை விளக்குக
11.
தாழ்நிலை ‘லாக் ஓபரான்’ வெளிப்பாடு எல்லா நேரங்களிலும் நடைபெறுகிறது. இக் கூற்றை நியாயப்படுத்துக.
12.
முக்கிய பால்வினைநோய்களையும் அவற்றின் அறிகுறிகளையும் விளக்குக
13.
பன்ம பாதுகாப்பில் கோவில் காடுகள் எவ்வாறு உதவிபுரிகின்றன?
14.
ஒரு குறிப்பிட்ட சூழல்மண்டலத்தின் பிரமிட் வடிவமானது எப்பொழுதும் மாறுபட்ட வடிவத்தைக் கொண்டுள்ளது. அதனை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
15.
விந்துத்திரவத்தில் அடங்கியுள்ள பொருட்கள் யாவை?
16.
17.
சட்டன் மற்றும் பொவேரி கோட்பாட்டின் சிறப்பு அம்சங்களை எழுதுக.
18.
முட்டையிடும் விலங்குகளின் சேய்கள், குட்டி ஈனும் விலங்குகளின் சேய்களை விட பாதுகாப்பற்ற நிலையில் உள்ளன. காரணம் கூறு.
19.
தாங்கிக் கடத்திகள் இல்லாமல் ஓம்புயிரித் தாவரத்திற்கு பொருத்தமான விரும்பத்தகுந்த மரபணுவை மாற்ற முடியுமா? உன் விடை எதுவாகினும் அதை நியாயப்படுத்துக.
20.
ஒரு பண்புக் கலப்பு அடிப்படையில் ஓங்குதன்மை விதியை விளக்குக.
21.
எண்டோதீலியம் என்றால் என்ன ?
1.
1. 1730 ல் இராஜஸ்தானை ஆண்ட அப்யசிங் மன்னர் அரண்மனையைக் கட்டுவதற்காக கெஜ்ரி மரங்களை வெட்ட ஆணையிட்டார்.
2. இதை அமிர்தாதேவி எனப்படும் தைரியமான பெண் அறிந்தார்.
3. மன்னரின் படையினரால் மரங்கள் வெட்டப்படுவதை அறிந்த அமிர்தா தேவியும் மற்றும் பலரும் மரங்கள் வெட்டப்படுவதிலிருந்து காக்க கெஜ்ரி மரங்களை கட்டியணைத்துக் கொண்டனர்.
4. மன்னரின் படையினர் 363 பிற பிஷ்னாய்களுடன் அம்ரிதா தேவியையும் கொன்றனர்.
5. அவரது வீரத்தைப் பறைசாற்றும் வகையில் இராஜஸ்தான் அரசு இவரது பெயரில் அமிர்தாதேவி பிஷ்னாய் ஸ்மிருதி விருது' என்ற மாநில அளவிலான கௌரவ விருதினை வழங்குகிறது,
சிப்கோ இயக்கம்:
i) இந்த இயக்கத்திலிருந்த மக்கள் மரங்களை கட்டியணைத்து ஒப்பந்தக் காரர்களிடமிருந்து மரங்களைக் காத்தனர்.
ii) இவ்வியக்கங்களின் முக்கிய நோக்கம் மரங்கள் வெட்டப்படுவதை தடுத்தல்.
2.
(i) ஒரு உயிரி தனது அமைப்பு, வடிவம், தோற்றம், நடத்தை ஆகியவற்றை மாற்றிக் கொள்வதன் மூலம் வாழும் வாய்ப்பைப் பெருக்கவும் தன்னை பாதுகாத்துக் கொள்ளவும் நிகழ்த்தப்படும் ஒரு செயலாகும்.
(ii) பூக்களில் காணப்படும் பாவனை செயல்கள் மகரந்தச் சேர்க்கையாளர்களை கவர உதவுகிறது.
எடுத்துக்காட்டு:
ஒபிரிஸ் என்ற ஆர்கிட் தாவரத்தின் மலரானது பெண் பூச்சியினை ஒத்து காணப்பட்டு ஆண் பூச்சிகளைக் கவர்ந்து மகரந்தச் சேர்க்கையை நிகழ்த்துகின்றன. இது மலர் பாவனை செயல்கள் என அழைக்கப்படுகின்றன.
3.
(i) அழியும் நிலை சிற்றினங்கள் என்பது மரபற்றுப் போக அதிக வாய்ப்புகள் உள்ளது என வகைப்படுத்தப்பட்டுள்ள சிற்றினங்கள் ஆகும்.
(ii) சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு கூட்டமைப்பின் சிறப்புப் பட்டியலில் தீவிரமாக அழியும் நிலையிலுள்ள உயிரினங்களுக்கு அடுத்தபடியாக அழியும் நிலையிலுள்ள வன விலங்குகளுக்கு இரண்டாம் நிலை அதிகபட்ச பாதுகாப்பு தரப்பட்டுள்ளது.
(iii) 1998 ஆம் ஆண்டில் 1102 விலங்கினங்களும் மற்றும் 1197 தாவர இனங்களும் IUCN சிவப்பு பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
(iv) 2012 ஆம் ஆண்டில் 3079 விலங்கினங்களும், 2655 தாவர இனங்களும் உலகெங்கும் அழிந்து வரும் இனங்கள் எனப் பட்டியலிடப்பட்டுள்ளது.
(v) எ.கா மலை கொரில்லா, பாண்டா, மோனார்க் வண்ணத்துப்பூச்சி
4.
புவியில் உள்ள நீர் உயிர்த்தொகை:
1. நன்னீர் (ஏரிகள், குளங்கள், ஆறுகள்)
2. உவர் நீர் (கழிமுகப் பகுதி, ஈரநிலங்கள்)
3. கடல் நீர் (பவளப் பாறைகள், மேற்கடற் பகுதிகள் மற்றும் ஆழ்கடல் பகுதிகள்)
5.
சிறு தானியங்கள் (Millets) - ஆப்ரிக்கா, ஆசியாவில், பழங்கால மக்களால் பயிரிடப்படும் சிறிய விதைகள், சிறுதானியங்கள் எனப்படும். தரசப் பரச பசையற்ற (குளூட்டன்) குறைவான சர்க்கரை கொண்ட தானியம்.
கேழ்வரகு (Finger Millet) (எல்லூசின் கோரகானா) கிழக்கு ஆப்பிரிக்காவிலிருந்து, இந்தியாவுக்கு வந்த கால்சியம் நிறைந்த பயிர்.
பயன்கள்:
(i) இந்தியத் தெற்கு மலைப்பகுதியில் முக்கிய உணவு.
(ii) கஞ்சி, கூழாகப் பயன்படும்.
(iii) ராகி மால்ட், ஊட்டச் சத்துப் பானம்.
(iv) கேழ்வரகு நொதிப்பானத் தயாரிப்பில் மூலப்பொருள்.
சோளம் (Sorghum) (சொர்கம் வல்கேர்)
உலகின் முக்கிய சிறுதானியங்களின் ஒன்று. கால்சியம். இரும்புச் சத்து உள்ளது.
பயன்கள் :
(i) கோழி, பறவை, பன்றி, கால்நடைத் தீவனம்.
(ii) சாராய பானங்கள் மூலப்பொருள்
மிகச் சிறு தானியங்கள் (Minor Millet)
தினை (Foxtail Millet) (சசெட்டேரியா இட்டாலிக்ஸ்)
(i) இந்தியாவின் பாரம்பரிய தினை வகைகளின் ஒன்று.
(ii) 6000 வருடங்களுக்கு முன் சீனாவில் வளர்க்கப்படுகிறது.
(iii) புரதம், கார்போஹைட்ரேட், விட்டமின் B, C, பொட்டாசியம், கால்சியம் நிறைந்தது.
பயன்கள்
இதய பலம், கண் பார்வை மேம்பாடு, பாலூட்டும் அன்னையர்க்குக் கொடுக்கப்படும்.
வரகு (பாஸ்பாலம் ஸ்குரோபிகுலேட்டம்)
மேற்கு ஆப்ரிக்காவில் பிறந்தது, நார்ச்சத்து, புரதம், கனிமம் நிறைந்தது.
பயன்கள்
வரகு மாவுக் களி, சிறுநீர் பெருக்கி, மலச்சிக்கல் குணமாகும். உடல் பருமனைக் குறைக்கும். இரத்தச் சர்க்கரை இரத்த அழுத்தத்தை குறைக்கும்.
6.
| உடற்செல் மரபணு சிகிச்சை | இனச்செல் மரபணு சிகிச்சை | |
|---|---|---|
| 1 | சிகிச்சையளிக்கும் மரபணுக்கள் உடற்செல்களுக்குள் மாற்றப்படுகின்றன. | சிகிச்சையளிக்கும் மரபணுக்கள் இனச்செல்களுக்குள் மாற்றப்படுகின்றன. |
| 2 | எலும்பு மஜ்ஜை செல்கள் இரத்த செல்கள், தோல் செல்கள் போன்ற செல்களுக்குள் மரபணுக்கள் செலுத்தப்படுகிறது. | அண்ட செல்கள் மற்றும் விந்து செல்களுக்குள் மரபணுக்கள் செலுத்தப்படுகின்றன. |
| 3 | பிந்தைய தலைமுறைக்கு பண்புகள் கடத்தப்படுவதில்லை. | பிந்தைய தலைமுறைக்கு பண்புகள் கடத்தப்படுகின்றன. |
7.
தொழிற்சாலை மெலானியாக்கம்:
1. எடுத்துக்காட்டு: இயற்கை தேர்வு கரும்புள்ளி அந்திப்பூச்சி (பிஸ்டன் பெட்டுலேரியா) மூலம் விளக்கலாம்.
2. தொழில்மயமாக்கத்திற்கு முன் வெள்ளை மற்றும் கருப்பு நிற அந்திப்பூச்சிகள் பரவலாக காணப்பட்டன.
3. தொழில்மயமாக்கத்திற்கு முன்பு கட்டிடங்களின் வெள்ளை நிற சுவரின் பின்புலத்தில் வெள்ளை நிற அந்திப்பூச்சுகளின் கொன்றுண்ணிகளிடமிருந்து எளிதில் தப்பித்தன.
4. தொழில்மயமாக்கத்திற்கு பின் மரங்களின் தண்டுப் பகுதிகள் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் புகைக் கரியினால் கரியநிறமாக மாறின.
5. கருப்பு நிற அந்திப்பூச்சிகள் இந்த கரிய மரத் தண்டுகளில் உருவ மறைப்பு பெற்றன.
6. வெள்ளை நிற பூச்சிகள் கொன்றுண்ணிகளால் எளிதில் அடையாளம் காணப்பட்டன.
7. கரிய நிறமுடைய அந்திப்பூச்சிகள் இயற்கையால் தேர்வு செய்யப்பட்டு அவற்றின் எண்ணிக்கை அதிகரித்தது.
8. இயற்கை கருப்பு நிற அந்திப்பூச்சிக்கு நேர்மறை தேர்வு அழுத்தத்தை வழங்கியது.
8. தகுந்த தகவமைப்புப் பெற்ற உயிரினங்கள் இயற்கைத் தேர்வு காரணமாக அதிகமான வாரிசுகளை உருவாக்கின.
8.
9.
இயற்கை வேளாண்மையின் முக்கியப் பண்புகள்:
1. கரிமப் பொருட்களை பயன்படுத்தி மண்ணின் தரம் பாதுகாத்தல் மற்றும் உயிரிய செயல்பாடுகளை ஊக்குவித்தல்.
2. மண்வாழ் உயிரிகளை பயன்படுத்தி பயிர்களுக்கு ஊட்டச் சத்துகளை மறைமுகமாக அளித்தல்
3. பயறு வகை தாவரங்களை பயன்படுத்தி மண்ணில் நைட்ரஜனை நிலைப்படுத்துதல்
4. பயிர் சுழற்சி, உயிரியப் பல்வகைத்த தன்மை, இயற்கையான கொன்றுண்ணிகள், இயற்கை உரங்கள் மற்றும் பொருத்தமான வேதிய, வெப்ப மற்றும் உயிரிய தலையீடுகள் போன்ற முறைகளால் களை மற்றும் தீங்குயிர்கள் கட்டுப்படுத்துதல்.
10.
1. ஒரு மனிதனின் உடலில் நுழைந்த பிறகு எச்.ஐ.வி மேக்ரோபேஜ் செல்களில் நுழைகிறது.
2. தன்னுடைய ஆர்.என்.ஏ மரபணுத் தொகுதியை ரிவர்ஸ் டிரான்ஸ்கிரிப்டேஸ் நொதியின் உதவியால் வைரஸின் டி.என்.ஏ வாக மாற்றி கொள்கிறது
3. இந்த வைரஸ் டி.என்.ஏ விருந்தோம்பி செல்களில் டி.என்.ஏ வுடன் இணைந்து வைரஸ் துகள்களை உற்பத்தி செய்கிறது.
4. இவ்வாறு மேக்ரோஃபேஜ்கள் தொடர்ச்சியாக வைரஸ்களை உற்பத்தி செய்வதன் மூலம் அவை எச்.ஐ.வி தொழிற்சாலையாக செயல்படுகின்றன.
5. அதே நேரத்தில் உதவி T - லிம்போசைட்டுகளினுள் நுழைந்த எச்.ஐ.வி பெருகி சந்ததி வைரஸ்களை உற்பத்தி செய்து கொள்கின்றன.
6. இவ்வாறாக வெளி வந்த சந்ததி வைரஸ்கள் இரத்தத்தின் மற்ற உதவி T - செல்களையும் தாக்குகின்றன.
11.
1. வெளி ஊடகத்திலிருக்கும் லாக்டோஸ் பாக்டீரியா செல்லினுள் நுழைய பெர்மியோஸ் நொதி தேவைப்படுகிறது
2. லாக்டோஸ் செல்லினுள் நுழைய இயலவில்லை எனில் அது தூண்டியாக செயல்பட இயலாது.
3. அது லாக் - ஓபரானை தடுக்கும் அடக்கிப் புரதத்துடன் இணைந்து அதனை செயலற்றதாக்குகிறது லாக் ஓபரான் - செயல்பட தொடங்குகிறது.
4. எனவே லாக் ஒபரானின் தாழ் நிலை வெளிப்பாடு எப்போதும் இருந்து கொண்டிருக்கிறது.. அதனால் பல்வேறு மரபினோய் சிகிச்சைக்கும் பயன்படுகிறது.
12.
அ) கொனோரியா அல்லது வெட்டை நோய்:
நோய்க்காரணி: நீஸ்ஸெரியா கொனோரியே
அறிகுறிகள்: சிறுநீர் வடிகுழாய், மலக்குடல், தொண்டை, பெண்களின் கருப்பைவாய் ஆகிய பகுதிகளில் பாதிப்பு.
பிறப்புப் பாதையில் வலி, சீழ் வடிதல், சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் உணர்வு
நோய் வெளிப்படும் காலம்: 2 - 5 நாட்கள்
ஆ) கிரந்தி அல்லது மேகப்புண்:
நோய்க்காரணி: டிரிபோனிமா பாலிடம்
அறிகுறிகள்:
முதல்நிலை: பாலுறுப்புகள் புறப்பகுதியில் வலியற்ற புண்கள்
இரண்டாம் நிலை: தோல் தடிப்பு, மூட்டுகளில் வீக்கம், காய்ச்சல் மற்றும் முடிஉதிர்வு.
மூன்றாம் நிலை: மூக்கு, கீழ்க்கால் பகுதி மற்றும் அண்ணப் பகுதியில் நாள்பட்ட புண்கள், இயக்கமின்மை, மனநலபாதிப்பு, பார்வைக் கோளாறு, இதயப் பிரச்சனை, மென்மையான பரவும் தன்மையற்ற கட்டிகள் போன்றன.
நோய் வெளிப்படும் காலம்: 10 - 90 நாட்கள்
இ) கல்லீரல் அழற்சி:
நோய்க்காரணி: ஹிபாடிடிஸ்
அறிகுறிகள்: சோர்வு, மஞ்சள்காமாலை, காய்ச்சல், தோல் தடிப்பு, வயிற்று வலி.
கல்லீரல் இறுக்கம், இறுதி நிலையில் கல்லீரல் செயலிழப்பு.
நோய் வெளிப்படும் காலம்: 30 - 80 நாட்கள்
ஈ) எய்ட்ஸ் (AIDS):
நோய்க்காரணி: மனித தடைகாப்பு குறைப்பு வைரஸ்.
அறிகுறிகள்: நிணநீர் முடிச்சுகள் பெரிதாதல், நீண்ட நாள் காய்ச்சல், நீண்ட நாள் வயிற்றுப் போக்கு, உடல் எடை குறைதல், இரவில் வியர்த்தல்.
நோய் வெளிப்படும் காலம்: 2 - 6 வாரங்கள் முதல் 10 ஆண்டுகளுக்கு மேல்.
13.
1. கோவில் காடுகள் சமூகங்களால் பாதுகாக்கப்பட்டு வளர்க்கப்பட்ட மரங்களின் தொகுப்புகளாகும் (or) தோட்டங்களாகும்.
2. சமூகத்தின் பாதுகாப்பிற்காக ஒரு குறிப்பிட்ட சமயச் சித்தாங்களைக் கொண்டிருக்கும் வலுவான மத நம்பிக்கையை கொண்டவை.
3. இவை நீர்ப்பாசனம், தீவனம், மருத்துவத் தாவரங்கள் மற்றும் நுண் காலநிலை கட்டுப்பாடு ஆகியவற்றைப் பாதுகாப்பதன் மூலம் ஏராளமான சுற்றுச்சூழல் அமைப்புச் சேவைகளை அண்டை பகுதிகளுக்கு வழங்கும்.
4. கோவில் காடுகள் நிலத்தடி நீரை பாதுகாத்தல் மண்ணரிப்பை தடுத்தல், மண்ணின் வளத்தை பாதுகாக்கிறது.
5. கோவில் காடுகளில் ஆயுர்வேத மருத்துவ தாவரங்கள். மேலும் அச்சுறுத்தப்படும் சிற்றினங்கள் பாதுகாக்கப்படுகின்றன.
6. அச்சுறுத்தலுக்குண்டான சிற்றினங்களுக்கு உறைவிடம் மற்றும் பராமரிப்பு வழங்குவதோடு மட்டுமல்லாமல் சமுதாயத்திற்கான கல்வி மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களையும் பெற்றுத் தருகின்றன.
7. ஒவ்வொரு கிராமத்துக் கோயில் காடுகளும் ஐய்யனார் அல்லது அம்மன் போன்ற கிராம ஆண், பெண் தெய்வங்களின் உறைவிடமாகவே கருதப்படுகின்றன.
8. தமிழ்நாடு முழுவதும் 448 கோயில் காடுகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன
14.
1. வனச்சூழல் மண்டலத்தின் எண்ணிக்கை பிரமிட் சற்று வேறுபட்ட வடிவத்தை கொண்டிருக்கிறது. ஏனென்றால்.
2. பிரமிடின் அடிப்பகுதி (T1 உற்பத்தியாளர்) குறைவான எண்ணிக்கையிலான பெரிய மரங்களை கொண்டுள்ளது.
3. (தாவர உண்ணிகள் T2) பழம் உண்ணும் பறவைகள், யானை, மான் உற்பத்தியாளர்களை விட அதிக எண்ணிக்கையில் இரண்டாம் ஊட்ட மட்டத்தில் இடம் பெற்றுள்ளன.
4. இறுதிஊட்ட மட்டத்தில் (T4) காணப்படும் மூன்றாம் நிலை நுகர்வோர்கள் விட (சிங்கம்) மூன்றாம் ஊட்ட மட்டத்தில் (T3) உள்ள இரண்டாம்நிலை நுகர்வோர்களை விட (நரி மற்றும் பாம்பு) குறைவான எண்ணிக்கையை கொண்டுள்ளது.
5. எனவே வனச் சூழல் மண்டலத்தின் எண்ணிக்கை பிரமிட் கதிரிழை வடிவத்தில் தோன்றுகிறது.

15.
(i) விந்துப்பைகள் செமினல் பிளாஸ்மா என்ற காரத்தன்மை கொண்ட திரவத்தைச் சுரக்கின்றன.
(ii) புரோஸ்டேட் சுரப்பி, பல்போயுரித்ரல் சுரப்பி போன்றவற்றின் சுரப்புகள் மற்றும் செமினல் பிளாஸ்மா சேர்ந்த பால் போன்ற வெண்மை நிறத் திரவமே 'விந்துத் திரவம்' எனப்படும்.
(iii) இது விந்து செல்களைக் கடத்தும் ஊடகமாகவும், உணவூட்டமளிக்கவும் பயன்படும். விந்து செல்களின் பாதுகாப்பு, இயக்கத்திற்குத் தேவையான பொருட்களைக் கொண்டுள்ளது.
(iv) செமினல் பிளாஸ்மா திரவத்தில் பிரக்டோஸ், அஸ்கார்பிக் அமிலம், புரோஸ்டகிளாண்டின்கள் உள்ளன. விந்து திரவத்தை உறைய வைக்கும் நொதியான வெஸிகுலேஸ் உள்ளது. இந்நொதி விந்து செல் இயக்கத்தைத் துரிதப்படுத்தும்.
16.
17.
1. சைகோட் (அ) கருமுட்டை தொடர்ச்சியான செல் பகுப்பின் மூலம் ஒரு உயிரினத்தின் உடலம் உருவாகிறது.
2. உடல்செல்கள் - இதில் இரண்டு ஒத்த குரோமோசோம் தொகுதிகளைக் கொண்டுள்ளது (தந்தை வழி ஒன்று மற்றொன்று தாய்வழி ஒன்று) இதற்கு ஒத்திசைவு குரோமோசோம்கள் என்று பெயர்.
3. ஒவ்வொரு குரோமோசோமும் தனித்துவமான அமைப்பு மற்றும் தனித்தன்மை உடையது.
4. ஒவ்வொரு குரோமோசோமும் மரபணுக்களால் ஆனவை.
5. கேமிட்டுகளின் உருவாக்கத்தின் போது ஒத்திசைவான குரோமோசோம்கள் தனித்தனியாக பிரிவது - மரபணுக்கள் குரோமோசோம்கள் மீது காணப்படுகிறது என்ற உண்மையை உறுதிப்படுத்துகிறது.
18.
(i) குட்டி ஈனும் உயிரிகளின் இளம் உயிர் தாயின் கருப்பையில் வளர்கிறது.
(ii) முட்டையிடும் உயிரிகள் முட்டையை வெளியே இடுகிறது.
(iii) அந்த முட்டையின் வளர்ச்சியை, வெளிப்புறச் சுற்று சூழலை கட்டுப்படுத்துகிறது.
(iv) எனவே முட்டையிடும் விலங்குகளின் சேய்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது.
19.
ஆம். தாங்கிக்கடத்தி அற்ற மரபணு மாற்ற முறை காணப்படுகிறது. இதில் அயல் மரபணு தாங்கிக் கடத்தி உதவியின்றி தாவரத்திற்குள்ளாக செலுத்தப்படுகிறது.
அ) வேதியியல் வழி மரபணு மாற்றம்
பாலி எத்திலீன் கிளைக்கால் மாற்ற டெக்ஸ்ட்ரான் சல்ஃபேட் போன்ற வேதிப்பொருட்கள் புரோட்டோபிளாஸ்ட்களுக்குள் DNA வை எடுத்துக் கொள்ளத் தூண்டி புரோட்டோபிளாஸ்ட் இணைவை ஊக்குவிக்கின்றன.
ஆ) நுண்பொருள் உட்செலுத்துதல்
தாவர செல்களை மரபணு மாற்றம் செய்ய DNA வை, நேரடியாக ஒரு மிக நுண்ணிய முனை உடைய கண்ணாடி ஊசி (அ) நுண் -பிப்பெட்டினை பயன்படுத்தி உட்கருவினுள் உட்செலுத்தப்படுகிறது.புரோட்டோபிளாஸ்ட்கள் ஒரு திட தாங்கிய அகரோஸில் (கண்ணாடித் தகட்டில் வைக்கப்பட்டுள்ளது) நிலை நிறுத்தப்படுகின்றன.
இ) மின்துலையாக்க முறையில் மரபணு மாற்றம்
திசுக்கள், செல்கள் (அ) புரோட்டோபிளாஸ்ட்கள் உயர் மின் அழுத்த விசை கொடுக்கப்படுகிறது. தன்னால் பிளாஸ்மா சவ்வில் உண்டாகும் தற்காலிகத் துளைகள் மூலம் அயல் DNA உள்ளிழுக்கப்படுகிறது.
ஈ) லிப்போசோம் வழி மரபணு மாற்ற முறை (லிப்போஃபெக்சன்)
லிப்போசோம்கள் என்ற நுண்பைகள் வழியாக மரபணு (அ) DNA தாவர செல்களின் நுண் பைகளுக்கு மாற்றப்படுகின்றது. இது காற்று உறை சூழப்பட்ட DNA வினால் நுண்குமிழ் பைக்குள் (vacuole) தாங்கிச் செல்லப்படுகிறது. இது நுண்குமிழ் பையிலுள்ள அமில pH, புரோட்டீயேஸ் நொதி ஆகியவற்றால் ஏற்படும் சிதைவிலிருந்து பாதுகாக்கிறது. இதனால் லிப்போசோம் காற்றுக் குமிழியின் டோனோபிளாஸ்ட் இணைகிறது. இந்த முறை லிப்போஃபெக்சன் (lipofection) எனப்படுகிறது.
உ) பயோலிஸ்டிக் முறை
நுண்ணிய தங்க (அ) டங்ஸ்டன் (1-3μm)துகள்களால் பூச்சு செய்யப்பட்ட அயல் DNA இலக்கு திசு (அ) செல்களில் துகள் துப்பாக்கி, நுண் எறிதல் துப்பாக்கி, வெடிப்புத் துப்பாக்கி பயன்படுத்தி அதிக விசையுடன் செலுத்தப்படுகிறது. பின்னர் செயற்கை ஊடகத்தில் வளர்க்கப்படுகிறது. இதன் மூலம் மரபணு மாற்றமடைந்த செல்களிலிருந்து தாவரங்களை மீளுருவாக்கம் செய்ய இயலும்.
20.
ஓங்குத் தன்மை விதி: பண்புகள் - காரணிகளால் கட்டுப்படுத்தப்படுகிறது. எதிரிப் பண்புகளுக்கான இணைக் காரணிகளில் ஒன்று ஓங்கு தன்மையுடனும் மற்றொன்று ஒடுங்கு தன்மையுடனும் காணப்படும்.
ஒரு பண்பு கலப்பு:
F1 - ஐப் பொறுத்தவரை வெளிப்படாத ஒடுங்கு பண்பு மறைவாயிலிருந்து F2 - வில் மீண்டும் வெளிப்பட்டது.
21.
ஒரு சில சிற்றினங்களில் (ஒரு சூலறையுடைய மென் சூல்திசு கொண்ட) சூலுறையின் உள்ளடுக்கு சிறப்பு பெற்று, கருப்பையின் ஊட்டத்திற்கு உதவுகின்றது. இந்த அடுக்கு எண்டோதீசியம் அல்லது சூலுறை டபீட்டம் (Integumentary tapetum) எனப்படும். (எ.கா) ஆஸ்டரேசி
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards