12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th English Poem - 6 - Incident of the French Camp Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 6 - On the Rule of the Road Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 5 - The Chair Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Supplementary - 4 - The Midnight Visitor Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Poem - 4 - Ulysses Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 4 - The Summit Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 04/10/2020
12 ஆம் வகுப்பு உயிரியல் பயிற்சி 3 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Biology Tamil Medium Model 3 Mark Creative Questions (New Syllabus 2020)
12ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
மான்ட்ரியல் ஒப்பந்தம் என்றால் என்ன? அதன் நோக்கம் யாது?
2.
மான்ட்ரியல் ஒப்பந்தம் ஏன் ஏற்படுத்தப்பட்டது?
3.
உயிர்த்திரள் பிரமிடில் குளச் சூழல் மண்டலம் தலைகீழ் வடிவத்தில் உள்ளது ஏன்?
4.
புல்வெளி சூழல் மண்டலத்தின் உணவு வலையில் விடுபட்ட உயிரியை கண்டுபிடித்து எழுதுக.
5.
தமிழ்நாட்டிலுள்ள வனவிலங்கு புகலிடங்களை பட்டியலிடுக.
6.
இந்தியா பல்வகைத் தன்மையில் செழிப்பு மிக்க நாடாக இருப்பது ஏன்?
7.
SCP இன் பயன்பாடுகள் யாவை?
8.
வரையறு :
அ) உயிரினத்திறன்
ஆ) தாங்கும் திறன்
இ) சுற்றுச்சூழல் தடைகள்
9.
வரலாற்றின் பக்கங்களின், கால மாற்றங்கள் காரணமாக உயிர்த் தொகையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. காரணம் தருக.
10.
போதைப் பொருள் தடுப்புத் துறை (Narcotics control Board - NCB) குறிப்பு வரைக.
11.
12.
பல்கூட்டு அல்லீல்களின் பண்புகள் யாவை?
13.
பன்மடியத்தின் முக்கியத்துவம் தருக.
14.
பரந்த செயலாற்றலுள்ள உயிர் எதிர்பொருட்கள் மற்றும் குறுகிய செயலாற்றலுள்ள உயிர் எதிர்பொருட்கள் வேறுபடுத்துக.
15.
SCID என்றால் என்ன?
16.
விலங்குகள் உற்பத்தி செய்யும் உயிரிய வினைகலன்களாக பயன்படுகிறது. காரணம் தருக.
17.
பொதுவாக வரையறையின்றி பயன்படுத்தப்படும் போதை மருந்துகளின் பெயர்களை எழுதுக.
18.
மண்ணீரல் என்றால் என்ன?
19.
இயல்பு நோய்த்தடைக்காப்பு என்பது இயற்கையான நோய்த்தடைக்காப்பு என்று அழைக்கப்படுவது ஏன்?
20.
ஹைக்ரோபைட்டுகள் என்றால் என்ன?
21.
பூந்தேன் கொள்ளையரைப் பற்றிக் கூறு?
22.
பல்வேறு தாவரங்களில் உள்ள சில சுவாரசியமான மகரந்தச் சேர்க்கை முறைகள் எவை?
23.
சாகுபடிக்கு ஏற்ற மண் எது? (அ) பசலைமண் ஏன் சாகுபடிக்கு சிறந்தது?
24.
தாவரங்களால் சீரமைக்கப்படுதல் என்றால் என்ன?
25.
Pedigree analysis [அ] வம்சாவளி பகுப்பாய்வின் பயன் யாது?
26.
ஒத்திசைவான குரோமோசோம்கள் (அ) ஹோமோலாகஸ் குரோமோசோம் என்றால் என்ன?
27.
Bb cc மற்றும் Bb cc கலப்பு செய்வதால் அதிலிருந்து என்ன கிடைக்கும் என்பதைக் கூறு
28.
போராட்டங்களின் மூன்று வகைகள் யாவை?
29.
படிவங்களின் வயதினைக் கண்டறிய முடியுமா? எவ்வாறு?
30.
வைரஸ் அற்ற தாவரங்களை உருவாக்குவது ஏன் அவசியம்?
31.
உடல் நகல்சார் வேறுபாட்டை, கேமீட்டக நகல்சார் வேறுபாட்டிலிருந்து வேறுபடுத்துக.
32.
சுற்றுச்சூழல் பற்றிய திட்டங்கள் மற்றும் செயல்படும் இந்திய அமைப்பு எது?
33.
சூழ்நிலை மண்டலத்தில் பெராக்சி அசிட்டைல் நைட்ரேட் விளைவு என்ன?
34.
இனப்பெருக்க மண்டலத்தின் 4 முக்கிய செயல்பாடுகள் எவை?
35.
மகப்பேறு கருப்பைச் சுருக்கங்களில், ஆக்சிடோசினின் பங்கு என்ன?
36.
பிஷர் மற்றும் ரேஸ் கொள்கை எவ்வாறு வெய்னரின் கொள்கையிலிருந்து வேறுபடுகிறது?
37.
சீரியக்க கால இடைவெளி குடும்பக்கட்டுப்பாட்டு முறையில், கலவி எப்போது தவிர்க்கப்படும்?
38.
கருப்பையினுள் விந்து செல்களை உட்செலுத்துதல் (IUI), கருப்பை உள்இடமாற்றம் (IUT) வேறுபடுத்துக.
39.
அமீபாக்கள் சாதகமற்ற சூழ்நிலைகளில் எவ்வாறு இனப்பெருக்கம் செய்கின்றன?
40.
ஒரு மரபணு - ஒரு நொதிக் கோட்பாட்டை எழுது.
41.
UTR (அ) மொழி பெயர்க்கப்படாத பகுதிகள் என்றால் என்ன?
42.
திடீர் மாற்றம் என்றால் என்ன?
1.
1987-ல் கனடாவில் நடைபெற்ற சர்வதேசப் பிரதிநிதிகள் குழு கூட்டத்தில் வளிமண்டலத்தில்,
(i) ஓசோன் படலத்தைச் சேதப்படுத்தும் பொருட்களை களைவது குறித்தும்.
(ii) படிப்படியாக அத்தகைய பொருட்கள் உற்பத்தியை நிறுத்தி பயன்பாட்டைக் குறைக்கவும் குறிக்கோளாகக் கொண்டு விவாதிக்கப்பட்டது.
2.
1. 1970 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வு முடிவில் மனிதன் வாயிலாக வெளியிடப்படும் குளோரோஃப்ளூரோ கார்பன் (CFC) ஓசோன் மூலக்கூறுகளை அதிக அளவில் சிதைத்து அதன் அளவை குறைத்து விடுவது கண்டறியப்பட்டது.
2. எனவே சுற்றுச்சூழலைப் பாதுகாக்க ஏற்படுத்தப்பட்ட வியன்னா கூட்டத்தில் ஆக்கப்பூர்வமான ஒழுங்கு நடைமுறைகள் ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது.
3. பிற்காலத்தில் இந்த செயல்முறைகள் அனைத்து சர்வதேச அளவிலான மான்ட்ரியல் ஒப்பந்தம் என அழைக்கப்பட்டது.
3.
1. குளச் சூழல் மண்டலத்தில் பிரமிட்டின் அடிப்பகுதியில் உள்ள உற்பத்தியாளர்கள் நுண்ணுயிரிகளாக குறைவான உயிரித்திரளை கொண்டுள்ளது.
2. உயிரித்திரள் மதிப்பு பிரமிட்டின் இறுதிவரை படிப்படியாக அதிகரிக்கின்றது.
3. எனவே உயிரித்திரள் பிரமிட் குளச் சூழல் மண்டலத்தில் தலைகீழாக உள்ளது.
4.
A-முயல்
B-எலி
C-ஓணான்
5.
1. வேடந்தாங்கல் ஏரி பறவைகள் புகலிடம் - காஞ்சிபுரம்
2. முதுமலை வனவிலங்கு புகலிடம் - நீலகிரி
3. கோடியக்கரை வனவிலங்கு புகலிடம் - நாகப்பட்டினம்
4. இந்திராகாந்தி வனவிலங்கு புகலிடம் - கோயம்புத்தூர்
5. முண்டந்துறை வனவிலங்கு புகலிடம் - திருநெல்வேலி
6.
தனித்தன்மை வாய்ந்த உயிரிய புவியமைப்பு கொண்ட இருப்பிடங்கள், பரந்த மாறுபாடுடைய காலநிலை கூறுகள், எண்ணிலடங்கா சுற்றுச்சூழல் பல்வகைத் தன்மை மற்றும் புவியியல் பல்வகைத் தன்மை ஆகியவற்றைப் பெற்றிருப்பதன் காரணமாக இந்தியா பல்வகைத் தன்மையில் செழிப்பாக உள்ளது.
7.
புரத மாற்று உணவு
அழகுப் பொருட்கள் தயாரிப்பு:
ஆரோக்கியமான, முடி, தோலுக்கான அழகுப் பொருட்கள் தயாரிப்பு
புரதம் மற்றும் ஊட்டச்சத்துக்களின் ஆதாரம்:
பறவை, மீன்கள், கோழி, கால்நடை உணவு தயாரிப்பு
உணவுத் தொழிற்சாலை:
மணமூட்டியாக, வைட்டமின் கொண்டதாக, அடுமனைப் பொருட்களின் ஊட்டச்சத்து அதிகரிக்க, சூப்புகள், மற்றும் தயார் நிலை உணவுகள் மற்றும் உணவுக்குறிப்பில் பயன்படுத்தப்படுகிறது.
பிற தொழிற்சாலைகள்:
காகிதம் தயாரிப்பு தோல் பதப்படுத்துதல் மற்றும் நிலைநிறுத்தியாகவும் பயன்படுகிறது.
8.
அ) உயிரினத்திறன் :
சாதகமான சுற்றுச்சூழலில் ஒரு உயிரினத்தின் அதிகபட்ச இனப்பெருக்கத் திறன் உயிரினத் திறன் எனப்படும்.
ஆ) தாங்கும் திறன் :
சுற்றுச் சூழலுக்கு எந்தப்பாதிப்பும் ஏற்படாமல் ஒரு நிலப்பகுதியில் வாழக்கூடிய சிற்றினத்தின் அதிகபட்ச எண்ணிக்கையே தாங்கும் திறன் எனப்படும்.
இ) சுற்றுச் சூழல் தடைகள்: ஒரு உயிரியின் உயிரினத் திறன் கைவரப் பெறுதலைத் தடுக்கும் உயிருள்ள மற்றும் உயிரற்ற சுற்றுச் சூழல் காரணிகளின் மொத்த தொகுப்பு சுற்றுச் சூழல் தடைகள் எனப்படும்.
9.
1. சஹாரா பாலைவனம் ஒரு காலத்தில் இப்பகுதி ஆறுகள் பாய்ந்த பசுமையான நிலப்பரப்பாக இருந்தது. அதனால் ஏராளமான மரவகைகளும், விலங்குகளான நீர்யானை, ஒட்டகச்சிவிங்கி, முதலை போன்றவையும் இங்கு வாழ்ந்தன.
2. காலப்போக்கில் காலநிலை வறண்டதால், இப்பகுதி புவிக்கோளின் மிகப்பெரிய பாலைவனமாக மாறிவிட்டது. இங்கு விலங்குகள் சாதகமான சூழல் நிலவும் அருகிலுள்ள பகுதிகளுக்கு இடம் பெயர்ந்திருக்கலாம்.
10.
1. போதைத் தடுப்புச் சட்டத்தை அமல்படுத்தும், நுண்ணறிவுப் பிரிவு.
2. போதை மருந்து கடத்தல், தவறாகப் பயன்படுத்துவதை தடுக்கும் பொறுப்பு இத்துறைக்கு உள்ளது.
11.
12.
1. ஒத்திசைவு குரோமோசோம்களில் உள்ள பல்கூட்டு அல்லீல்களின் வரிசை - எப்போதுமே ஒரே அமைவிடத்தில் அமைந்துள்ளது - இந்த அல்லீல்களின் வரிசைகளுக்குள் குறுக்கேற்றம் நடைபெறுவதில்லை
2. ஒரு பண்புக்கு மட்டுமே காரணமானவை
3. இயல்பானவை அல்லீல்கள் ➝ ஒடுங்கு பண்பை வெளிப்படுத்தும் சடுதிமாற்றமுற்ற தாவரங்களின் அல்லீல்கள் ➝ ஓங்கு அல்லது நடுத்தர வகை புறத்தோற்ற விளைவுகளை வெளிப்படுத்துகின்றன.
4. சடுதிமாற்றம் பல்கூட்டு அல்லீல்களைக் கலப்பு செய்யப்படும் போது அதன் புறத்தோற்ற வகையம் எப்பொழுதுமே சடுதிமாற்ற முற்ற வகையை ஒத்தே அமைந்திருக்கும் - இயல்பான வகையை ஒத்திருக்காது.
13.
1. அதிகவீரியம் - அதிக தகவமைப்பு
இருமடியத்தை விட அதிக வீரியம் & அதிக தகவமைப்புடையது
2. அலங்காரத் தாவரங்கள் (தன் நான்மடியங்கள்)
3. பெரிய மலர்களையும், நீண்ட மலரும் காலமும் கொண்டவை
4. அதிக நீர்ச்சத்து - எனவே அதிக உயிர் எடை உடையதாக உள்ளது.
14.
| பரந்த செயலாற்றலுள்ள உயிர் எதிர்பொருட்கள் | குறுகிய செயலாற்றலுள்ள உயிர் எதிர்பொருட்கள் | |
| 1 | இவை பலதரப்பட்ட நோய்களை உண்டாக்கக்கூடிய பாக்டீரியாக்களை எதிர்த்து செயல்படுகின்றன. | குறிப்பிட்ட நோய்களை தோற்றுவிக்கும் பாக்டீரியாக் குழுக்களை மட்டுமே எதிர்த்து செயல்படுகின்றன. |
| 2 | இவை நுண்ணுயிரிகளில் எதிர்ப்புத் திறன் உருவாகும் வாய்ப்பு அதிகம். | குறிப்பிட்ட நுண்ணுயிரிகளை குறிவைத்து தாக்குவதோடு அந்நுண்ணுயிரிகளில் எதிர்ப்புத் திறன் உருவாகும் வாய்ப்பையும் குறைக்கிறது. |
15.
(i) ADA குறைபாடு அல்லது SCID என்பது ஒரு உடற்குரோமோசோமின் ஒடுங்கு ஜீன் வளர்சிதை மாற்றக்குறைப்பாடு ஆகும்.
(ii) ADA நொதி உருவாக்கத்திற்குத் தேவையான மரபணுவின் செயலிழப்பு அல்லது நீக்கம் காரணமாக இக்குறைபாடு உண்டாகிறது. இந்நோயாளிகளின் உடலிலுள்ள 'T' செல்களின் செயலிழப்பால் உள் நுழையும் நோயூக்கிகளுக்கு எதிரான நோய்த் தடைக்காப்பு பதில் வினைகளை அவற்றால் வெளிப்படுத்த முடிவதில்லை.
(iii) இந்நிலையில் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு செயல்புரியும் நிலையிலுள்ள அடினோசின் டி அமினேஸ் அளிக்கப்பட்டு அதன் மூலம் நச்சுத்தன்மையுள்ள உயிரியல் பொருட்களை அழிப்பதே SCID நோய்க்கான சரியான சிகிச்சை முறையாகும்.
16.
(i) விரும்பத்தகுந்த புரதங்களை உற்பத்தி செய்யும் உயிரிய வினைகலன்களாக விலங்குகள் பயன்படுகின்றன. நோயுண்டாக்கும் எதிர்ப்பொருள் தூண்டிகளுக்கு எதிராகச் செயல்படும் பொருட்களே எதிர்ப்பொருட்கள் எனப்படும்.
(ii) இவற்றை உற்பத்தி செய்யும் உயிரிய வினைகலன்களாக மரபணு மாற்றப்பட்ட விலங்குகள் பயன்படுத்தப்படுகின்றன.
(iii) புற்று நோய் சிகிச்சை, இதயநோய் சிகிச்சை மற்றும் உறுப்பு மாற்று நிராகரிப்பு போன்றவற்றில் பயன்படும் ஒற்றைப்படியாக்க எதிர்ப்பொருட்கள் போன்றன உயிரி தொழில்நுட்ப முறையில் உற்பத்தி செய்யப்படுகின்றன.
(iv) இயற்கை புரத ஒட்டுப்பசைகள் என்பன நச்சற்ற, உயிரி சிதைவுக்கு உள்ளாகும். அரிதாக நோய்த்தடையை முடுக்கிவிடும் தன்மை கொண்டனவாகும்.
(v) எனவே தசை நார் மற்றும் திசுக்களை இணைக்கவும், பற்குழியை நிரப்பவும், உடைந்த எலும்புகளை சீராக்கவும் பயன்படுகின்றன.
17.
ஓஃபியாய்டுகள், கேனபினாய்டுகள், கோகோ ஆல்கலாய்டுகள், பார்பிசுரேட்டுகள், ஆம்ஃபெட்டமைன்கள் மற்றும் எல்.எஸ்.டி போன்றவை வரையறையின்றி பயன்படுத்தப்படும் போதை மருந்துகளாகும்.
18.
1. இது உடனடியாக ஏற்படும் மிகை உணர்வாக்க வினையாகும்.
2. இது திடீர் என முறையாக தீவிரமாக மற்றும் உடனடியாக தோன்றும் அதிதீவிர ஒவ்வாமை வினையாகும்.
19.
1. ஒவ்வொரு உயிரியும் பிறவியிலிருந்தே இந்த ஆற்றலை பெற்றிருக்கிறது.
2. இது இலக்கு அற்றதாகும்.
3. இது பரந்த அளவிலான திறன் கொண்ட நோய் தொற்று முகவர்களுக்கு எதிராக செயல்படுகிறது.
20.
ஈரத்தன்மையுடைய சூழல் மற்றும் நிழல் உள்ள இடங்களில் வளரும் தாவரங்கள்.
(எ.கா) ஹேபினேரியா (ஆர்கிட்கள்), மாஸ்கள் (பிரையோஃபைட்கள்) முதலியன.
21.
அமோர்போபேலஸ் மலர். மலர் பொருட்களை வெகுமதியாகத் தருகின்றன. முட்டையிட பாதுகாப்பான இடத்தை தருகின்றன. பல உயிரினங்கள் மகரந்தத் துகள்களையும், பூந்தேனையும் உண்டு, மகரந்தச் சேர்க்கைக்கு உதவாது. இவை பூந்தேன் கொள்ளையார் ஆவார்.
22.
1. பொறி இயங்கு முறை (அரிஸ்டலோக்கியா)
2. விழுகுழி இயங்கு முறை (ஆரம்)
3. இயக்க, ஏதுவாக்கி இயங்கு முறை (அஸ்கிளபியடேசி)
4. உந்து தண்டு இயங்கு முறை (பாப்பிலியோனேசி)
23.
(i) பசலைமண் சாகுபடிக்கு ஏற்ற மண் வகையாகும். இது 70% மணல் மற்றும் 30% களிமண் (அ) வண்டல் மண் (அ) இரண்டும் கலந்தது ஆகும்.
(ஆ) இந்த மண்
1) நன்கு நீர்த்தேக்குதல்
2) மெதுவாக வடிகால் பண்பை உறுதி செய்தல்
3) மண்ணில் துகள்களிடையே இடைவெளியுடன்
(iii) நல்ல காற்றோட்டம், முதலியவை இருப்பதால் தாவர வேர்கள் நன்கு மண்ணில் ஊடுருவி வளர முடிகிறது.
24.
(i) சில தாவரங்கள் மாசடைந்த மண்ணிலிருந்து காட்மியத்தை அகற்ற பயன்படுகின்றன. இதற்கு தாவரங்களால் சீரமைக்கப்படுதல் என்று பெயர்.
(ii) (எ.கா) நெல், ஆகாயத்தாமரை போன்ற தாவரங்கள் காட்மியத்தை தங்களது புரதத்தோடு இணையச் செய்து சகிப்புத்தன்மையை ஏற்படுத்திக் கொள்கின்றன.
(iii) சோயா, தக்காளி, தாவரங்கள் காட்மியத்தை மண்ணிலிருந்து பிரித்தெடுத்து சிறப்பு கூட்டுச் செல்களில் சேமித்து நிர்வகிக்கும் தன்மையை பெற்றுள்ளன.
25.
(i) மரபணு பிறழ்ச்சிகள் என்பது மரபணுக்களின் செயல்பாட்டுக் குறைபாடு - மரபணுவின் செயல் உருவாக்கும் புரதத்தினைச் சார்ந்துள்ளது
(ii) மரபணு குறைபாடு - குறைபாடுள்ள புரதத்தை உருவாக்குவதால் மரபணு நோய்கள் (அ) பாரம்பரிய நோய் உருவாகிறது
(iii) இதனைக் கண்டறிய Pedigree analysis [அ] வம்சாவளி பகுப்பாய்வு முறை உதவுகிறது
26.
(i) ஒரு இருமய செல்லில் புற அமைப்பு, செயல்படும் விதம் ஒத்த தன்மையுடைய இரு குரோமோசோம்கள் ஹோமோலாகஸ் குரோமோசோம் எனப்படும்
(ii) இதில் ஒன்று ஆண் பெற்றோரிடமும் மற்றொன்று பெண் பெற்றோரிடமும் இருந்து பெறப்பட்டவை
27.
எனவே Bbcc வருவதற்கான வாய்ப்பு 50% உள்ளது
28.
உயிரினங்கள் உணவு, இருப்பிடம், இனப்பெருக்கத் துணைக்காகப் போராடுகின்றன.
1. சிற்றினங்களுக்குள்ளான போராட்டம்:
ஒரே சிற்றினத்தைச் சேர்ந்த உயிரினங்களுக்கிடையே உணவு, இருப்பிடம், மற்றும் இனப்பெருக்கத் துணைக்காக ஏற்படும் போராட்டம்.
2. சிற்றினங்களுக்கிடையேயான போராட்டம்:
வெவ்வேறு சிற்றினங்களுக்கிடையே உணவு மற்றும் இருப்பிடத்திற்கான போராட்டம்.
3. சுற்றுச்சூழலுடன் போராட்டம்:
காலநிலை வேறுபாடு, வெள்ளம், நிலநடுக்கம், வறட்சி, மற்றும் பல சூழல் காரணிகளுடன் இணக்கமாவதற்கான போராட்டம்.
29.
படிவங்களின் வயதினை 2 முறைகளில் அறியலாம்.
1. ஒப்பீடு வயது கணக்கிடும் முறை
புதைபடிவங்களின் வயது புதைபடிவங்களை ஒத்த பாறைகள் அல்லது வயது தெரிந்த புதைபடிவங்களோடு ஒப்பிட்டுக் கணக்கிடப்படுகிறது.
2. முழுமையான வயது கணக்கிடும் முறை:
புதைபடிவங்களில் உள்ள ஐசோடோப்புகளின் சிதைவு அளவிடப்பட்டு புதைபடிவங்களின் வயது கணக்கிடப்படுகிறது.
30.
(i) வேதிப்பொருட்களைக் கொண்டு பூஞ்சை, மைக்கோபிளாஸ்மா போன்ற நோய்க்கிருமிகளை அழிப்பது எளிது. ஆனால் நோய் தொற்றை உண்டாக்கும் வைரஸ்களை அழிப்பது அரிது தாவரங்களுக்கு வைரஸால் உண்டாக்கப்படும் பொருளாதாரச் சேதம் அதிகம்.
(ii) தண்டு நுனி ஆக்குத்திசு வளர்ப்பு மூலம் வைரஸ் அற்ற தாவரங்களை உருவாக்க இயலும் - ஏனெனில் தண்டு நுனியில் வைரஸ் தொற்று காணப்படுவதில்லை.
31.
| உடல் நகல்சார் வேறுபாடு | கேமீட்டக நகல்சார் வேறுபாடு |
|---|---|
| ஆய்வுக்கூட சோதனை வளர்ப்பிலிருந்து உருவாகும் தாவர மீள் உருவாக்கத்தில் மூலத்தாவரத்தில் இருந்து சில வேறுபாடுகள் காணப்படுகின்றன. | ஆய்வுக்கூட சோதனை வளர்ப்பின் போது கேமீட்டுகளிலிருந்து உருவாகும் கேமீட்டகத் தாவர மீள் உருவாக்கத்தில் வேறுபாடுகள் காணப்படுகின்றன. |
| இலை, தண்டு, வேர், கிழங்கு இனப்பெருக்க வித்து ஆகியவற்றில் காணப்படுகின்றன. | கேமீட்டிலும், கேமீட்டகத் தாவரத்திலும் காணப்படும் வேறுபாடு. |
32.
1. சுற்றுச்சூழல், காடுகள், மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் என்பது நடுவண் அரசின் கிளை அமைப்பாகும்.
2. இது திட்டமிடல் முன்னேற்றம் மற்றும் இந்திய சுற்றுச்சூழல் மற்றும் வனவியல் கொள்கைகளை செயல்படுத்துகிறது.
33.
1. PAN ஒளிவேதி மாசுக்கூட்டத்தில் காணப்படும் இரண்டாம் நிலை மாசுபடுத்தியாகும்.
2. இது வெப்பத்தினால் சிதைந்து கண் எரிச்சலைத் தரும் பெராக்சி எத்தனால் மற்றும் நைட்ரஜன் ஆக்சைடு வாயுக்களை வெளியிடுகிறது.
34.
1.விந்து, அண்ட செல் உருவாக்கம்
2. இச்செல்களைக் கடத்துதல், தக்க வைத்தல்
3. கருவிற்கு ஊட்டமளித்துப் பேணல்
4. ஹார்மோன்களை உற்பத்தி செய்தல்
35.
நியூரோஹைபோபைசிஸ் உற்பத்தி செய்யும் ஆக்ஸிடோசின் ஹார்மோன், கருப்பையில் ஆற்றல் மிகுந்த சுருக்கங்களை உருவாக்கி, பிறப்பு வழியின் வழியாகக் குழந்தை வெளியேறும் நிகழ்வை நிறைவு செய்கிறது.
36.
| பிஷர் மற்றும் ரேஸ் கருதுகோள் | வெய்னரின் கொள்கை | |||
| 1. | மூன்று Rh அல்லீல் இணைகள் Rh | 8 அல்லீல் இணைகள் Rh காரணி உருவாக்கத்தில் பங்குகொள்கின்றன. | ||
| 2. | இவ் அல்லீல்கள் மூன்று வெவ்வேறு அமைவிடங்களில் உள்ளன. | இவ் அல்லீல்கள் அமைப்பொத்த வெவ்வேறு அமைவிடங்களில் அமைந்துள்ளன. | ||
| 3. | மரபணுக்கள் CDE/cde CdE /CDe cde /cde /CDஏ/CdE ஆகும். | மரபணு விகிதம் R1R2R0Ry r r1 r11 ry | ||
| 4. | ஓங்கிய D அல்லீல்கள் dd1 Rh(-) | rr rr1 rr11 ஒடுங்கிய பண்பு கொண்ட அனைத்து மரபு வகைகளும் Rh(-)ve புறத்தோற்றத்தை உற்பத்தி செய்கின்றன. | ||
37.
1. மாதவிடாயின் 14 ஆம் நாளில் அண்ட செல் வெளியேறும்.
2. வெளியேறிய அண்டசெல் 2 நாட்கள் உயிருடன் இருக்கும்.
3. விந்தணு, பெண் இனப்பாதையில் 72 மணிநேரம் உயிருடன் இருக்கும். இந்தக் காலத்தில் கலவியைத் தவிர்க்க வேண்டும்.
38.
| கருப்பையினுள் விந்து செல்களை உட்செலுத்துதல் (IUI) | கருப்பை உள்இடமாற்றம்(IUT) | ||
|---|---|---|---|
| 1. | குறைந்த எண்ணிக்கையில் விந்துசெல்களை உற்பத்தி செய்யும் ஆண்களுக்கு | 1. | இது ஒரு இனப்பெருக்கத் துணை தொழில் நுட்பம் |
| 2. | விந்துக் கொடையாளரின் விந்து நுண்குழல் மூலம், கலவிக்கால்வாய் வழியாக கருப்பையினுள் செலுத்தப்படும். | 2. | 8 பிளாஸ்டோமியர்களை விட அதிக செல்களைக் கொண்ட கரு, கருப்பையினுள் செலுத்தப்பட்டு, முழுவளர்ச்சியடையும். |
39.
1. இச்சூழலில் ஸ்போர் உருவாக்கம் முறையில் மேலுறையை உருவாக்காமல் எண்ணிக்கையில் பெருக்கமடைகின்றன.
2. உட்கரு பல சிறு துண்டுகளாக உடைகிறது.
3. பின் ஒவ்வொரு துண்டைச் சுற்றிலும் உட்கரு சவ்வு உருவாகும்.
4. பின்னர் சைட்டோபிளாசத்தினால் சூழப்பட்டு ஒரு ஸ்போர் உறையை உருவாக்குகிறது.
5. சூழ்நிலை சாதகமாகும் போது பெற்றோர் உடல் சிதைந்து ஸ்போர்கள் வெளியேறி ஒரு இளம் அமீபாவாக வெளிவருகிறது.
40.
41.
(i) தொடக்க குறியீடு (AUG) மற்றும் நிறைவு குறியீட்டுக்கும் இடையே காணப்படும் தூது RNA பகுதியில் இடையில் உள்ள சில பகுதிகள் மொழிபெயர்ப்பு செய்யப்படுவதில்லை
(ii) இதற்கு (UTR) UnTranslated Regions என்று பெயர்
42.
(i) அமைதியான ஒரு முக்குறியத்தில் ஒரு காரம் திடீர் மாற்றத்தினால் மாற்றமடையும் போது, ஒரு புது அமினோ அமிலம் உருவாவதில்லை.
(ii) ஒரு முக்குறியத்தில் மூன்றாவது நிலையிலுள்ள ஒரு காரம் மாறும் போதும். அது அதற்குரிய கடந்து RNA வின் எதிர்முக்குறியீட்டோடு தொடர்பு கொள்ள இயலும்.
(iii) இவ்வகை திடீர் மாற்றத்தினால் பாலிப்பெப்டைடு தொடர் மாறுவதில்லை.
(iv) எனவே இத்தகைய திடீர் மாற்றத்திற்கு சைலண்ட் திடீர் மாற்றம் (அ) அமைதியான திடீர்மாற்றம் என்று பெயர்.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th English Supplementary - 3 - The Hour of Truth (Play) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Poem - 3 - All the World’s a Stage Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 3 - In Celebration of Being Alive Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Supplementary - 2 - Life of Pi Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards