12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 04/10/2020
12 ஆம் வகுப்பு உயிரியல் மாதிரி 3 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Biology Tamil Medium Sample 3 Mark Creative Questions (New Syllabus 2020)
12ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
சிப்கோ இயக்கம் மற்றும் அப்பிக்கோ இயக்கம் வேறுபடுத்துக.
2.
எந்த சுழற்சி படிம சுழற்சி என்று அழைக்கப்படுகிறது? ஏன்?
3.
புவி வெப்பமடைதல் தற்போது அச்சுறுத்தும் சவாலாக உள்ளது. அதனை தடுக்கும் வழிமுறைகள் யாவை?
4.
முதல்நிலை உற்பத்தித்திறனை இரண்டாம் நிலை உற்பத்தித்திறனிலிருந்து வேறுபடுத்துக.
5.
சிட்டுக்குருவிகளின் இனம் அழிவை நோக்கி செல்கின்றன. இக்கூற்றை நியாயப்படுத்து.
6.
மேற்கால் மற்றும் கீழ்கால் பதப்படுத்துதல் வேறுபடுத்துக்க.
7.
உயர்மலைச் சாரல் உயிர்த்தொகை பற்றி சிறுகுறிப்பு தருக.
8.
சாயங்கள் பண்டைக்காலத்திலிருந்து உபயோகத்தில் உள்ளன? விளக்குக.
9.
இணைப்பு மற்றும் விலகுதல் வேறுபடுத்துக.
10.
பயோடீசல் எவ்வாறு மனிதனுக்குப் பயன்படுகிறது?
11.
மெண்டலின் மாறுபாடுகளை குரோமோசோம் பிறழ்ச்சியிலிருந்து வேறுபடுத்து.
12.
முதிர் தண்டு செல்கள் பற்றி எழுதுக.
13.
மரபணு மாற்றப்பட்ட விலங்குகள் என்றால் என்ன?
14.
தொற்று நோய் மற்றும் தொற்றா நோய்கள் வேறுபடுத்துக.
15.
முதல்நிலை நிணநீரிய உறுப்புகள் என பெயர் வர காரணம் என்ன?
16.
அயல் மகரந்தச் சேர்க்கையின் நன்மைகள்.
17.
கைரமோன் என்றால் என்ன?
18.
சாகுபடிக்கு ஏற்ற மண் எது? (அ) பசலைமண் ஏன் சாகுபடிக்கு சிறந்தது?
19.
விதை ஒட்டுத்தாள் என்பது யாது? (Aril)
20.
சைட்டோபிளாசம் சார் ஆண் மலட்டுத் தன்மை என்றால் என்ன?
21.
Bb cc மற்றும் Bb cc கலப்பு செய்வதால் அதிலிருந்து என்ன கிடைக்கும் என்பதைக் கூறு
22.
நவீன ஐரோப்பியர்களின் மூதாதையார்கள் யார்? விவாதி.
23.
உயிரினங்கள் தோன்றியது பற்றிய அனைத்து மத நம்பிக்கைகளும் என்ன கூறுகிறது?
24.
காப்புரிமம் சார் பொதுவான படிநிலைகள் யாவை?
25.
காலஸ் தூண்டப்படுதலை விவரி.
26.
எவ்வாறு மகரந்தச் சேர்க்கையாளர்கள் மாசினால் பாதிக்கப்படுகின்றன
27.
காற்று மாசுபடுத்தலின் முக்கிய ஆதாரங்கள் யாவை?
28.
பெல்லோப்பியன் நாளங்களின் பாகங்களை விவரி.
29.
பொய்யான பிரசவ வலியை ஏற்படுத்துவது எது?
30.
மியாடிக் நிலை குரோமோசோம்கள் சரியாக பிரிந்து அமையாமையால் உருவாகும் குறைபாட்டு நோய் எது?
31.
குரோமோசோம் தொகுப்பு வரைபடம் என்றால் என்ன?
32.
கருப்பை உள் இடமாற்றம் - குறிப்பு வரைக.
33.
தாமிரம் வெளிவிடும் உள்கருப்பை சாதனங்கள் எவ்வாறு பணியாற்றுகிறது?
34.
உயிரிகளில் காணப்படும் பல்வேறு வகையான ஒருங்கிணைவு முறைகள் யாவை?
35.
பிளாஸ்மோ டோமி என்றால் என்ன?
36.
UTR (அ) மொழி பெயர்க்கப்படாத பகுதிகள் என்றால் என்ன?
37.
DNA மற்றும் RNA வை அதன் நிலைப்புத்தன்மை வேதி எதிர்வினைப்பண்புகள் அடிப்படையில் வேறுபடுத்துக.
1.
| சிப்கோ இயக்கம் | அப்பிக்கோ இயக்கம் | |
| 1. | இமயமலை பகுதியிலுள்ள மக்கள் விளையாட்டு பொருள் தயாரிப்பு நிறுவனம் மரங்களை வெட்டுவதற்கு எதிராக மரங்களை | கிராமவாசிகள் காடுகளை காப்பாற்றுவதற்காக மரங்களை வெட்டுதல் ஒற்றைச் சிற்றின வளர்ப்பு வனக் கொள்கை, காடு அழிப்பு ஆகியவற்றிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தத் தொடங்கினர். |
| 2. | 1972-ல் இமயமலை பகுதியில் உள்ள பழங்குடி பெண்களால் தொடங்கப்பட்டது. பின்னர் சுந்தர்லால் பகுகுனா என்பவரால் சிப்கோ இயக்கம் என மாற்றப்பட்டது. | இந்த இயக்கம் கர்நாடகாவில் சிர்சிக்கு அருகிலுள்ள குப்பிகட்டே என்ற சிறிய கிராமத்தில் பாண்டுரங்க ஹெக்டேவினால் தொடங்கப்பட்டது. |
2.
1. பாஸ்பரஸ், சல்பர், கால்சியம் ஆகியவற்றின் சுழற்சிகள் படிம சுழற்சியில் அடங்கும்.
2. இவை உயிர்க்கோளத்தில் காணப்படுவது இல்லை. ஆனால் இவை பாறை படிவுகள், கடல் படிவுகள், கடல் அருகு வாழ் பறவை எச்சங்கள் போன்றவற்றில் உள்ளன.
3.
1. புவிப்பரப்பின் மீது தாவரப் போர்வையை அதிகரித்த, அதிக மரங்களை வளர்த்தல்.
2. தொல்லுயிர் படிம எரிபொருட்கள், பசுமை இல்ல வாயுக்கள் பயன்பாட்டைக் குறைத்தல்.
3. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வள ஆதாரங்களைப் பெருக்குதல்.
4. நைட்ரஜன் உரங்கள் மற்றும் ஏரோசோல் குறைந்த அளவு பயன்படுத்துதல்.
4.
| முதல்நிலை உற்பத்தித்திறன் | இரண்டாம் நிலை உற்பத்தித்திறன் |
| தற்சார்பு ஊட்ட உயிரிகளினால் உற்பத்தி செய்யப்படும் வேதியாற்றல் (அ) கரிம கூட்டுப்பொருட்கள் | இது நுகர்வோர்கள் (அ) சார்பூட்ட உயிரிகளால் திசுக்களில் சேமித்து வைக்கப்படும் ஆற்றல். |
| இது ஒளிச்சேர்க்கை மற்றும் வேதிச்சேர்க்கை மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. | இது நுகர்வோர்களால் தற்சார்பு ஊட்ட உயிரிகளிடமிருந்து பெறப்பட்டது. |
| இது பாக்டீரியங்கள் முதல் மனிதன் வரை உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் கிடைக்கும் மூலமாகும். | இது நுகர்வோர்களில் சேமிக்கப்படும் ஆற்றல் |
5.
1. உறையிடப்பட்ட உணவுகள் வேளாண்மைக்கான பூச்சிக்கொல்லிகள், மாறும் வாழ்க்கை முறைகள் மற்றும் தீப்பெட்டி போன்ற அடுக்குமாடி குடியிருப்புகள் ஆகியவற்றால் சிட்டுக்குருவிகளுக்குத் தேவையான உணவு, பாதுகாப்பான இடம் ஆகியவற்றில் பற்றாக்குறை ஏற்படுகிறது.
2. சிட்டுக்குருவிகள் கூடுகள் கட்ட பொந்துகள் தேவைப்படுகின்றன.
3. நவீன கட்டுமானங்களில் பொந்துகளுக்கான வாய்ப்புகள் இல்லாததால் சிட்டுக்குருவிகள் கூட்டிற்கான இடமின்றி தவிக்கின்றன.
6.
| மேற்கால் பதப்படுத்துதல் | கீழ்கால் பதப்படுத்துதல் | |
| 1 | முதல் நிலை - நொதித்தலுக்கு முன்பானது. | இரண்டாம் நிலை நொதித்தலுக்குப் பின்பானது. |
| 2 | நுண்ணுயிர் நீக்கம் தயார்படுத்துதல், வளர்ப்பு ஊடக நுண்ணுயிர் நீக்கம் மற்றும் பொருத்தமான உப்புக்கட்டலின் வளர்ச்சி ஆகிய படிகள் உள்ளன. | வாலை வடிவத்தல், மைய விலக்கல், விசைக்கு உட்படுத்துதல், வடிகட்டுதல் மற்றும் கரைப்பான் மூலம் பிரித்தெடுத்தல் போன்றவை உள்ளடங்கியுள்ளன. |
| 3 | தயாரித்தல் முன்னேற்பாடுகளை உள்ளடக்கியது. | தூய்மைப்படுத்துதலை உள்ளடக்கியது. |
7.
1. இமயமலையில் உள்ள உயர்மலைச் சாரல் பகுதியில் விலங்கினங்கள் மிகக் குறைவாகக் காணப்படுகின்றன.
2. இங்கு வாழும் முதுகு நாணற்ற விலங்குகள் பெரும்பாலும் கொன்றுண்ணிகளாகவும், ஏரிகள், ஓடைகள் மற்றும் குளங்களில் வாழ்வதாகவும் உள்ளன.
3. முதுகு நாணுள்ளவைகளில் மீன்கள் மற்றும் இருவாழ்விகள் ஆகியவை இங்கு காணப்படவில்லை.
8.
1. எகிப்தின் கல்லறை ஓவியங்களில் சாயங்கள் இருந்ததற்கான பதிவுகள் உள்ளன.
2. அவுரி, குங்குமப்பூவின் சாயங்கள் மம்மியைச் சுற்றி சிமெண்ட்களில் உள்ளன.
3. இந்தியப் பாறை ஓவியங்களும் உள்ளன.
9.
| இணைப்பு (சிஸ்வகை) | விலகல் (டீரான்ஸ் வகை) |
| ஒத்திசைவு குரோமோசோம்களில் காணப்படும் இரு ஒங்குதன்மை அல்லீல்கள் (அ) ஒரு ஒடுங்குதன்மை அல்லீல்கள் ஒரே கேமீட்-மரபு வழி அடைவது -இணைப்பு (அ) சிஸ்வகை எனப்படும். | ஒத்திசைவு குரோமோசோம்களில் ஓங்கு மற்றும் ஒடுங்கு தன்மை கொண்ட அல்லீல்கள் வெவ்வேறு குரோமோசோம்களில் அமைந்து வேறுபட்ட கேபீட்டுகள் மூலம் தனியாகவே மரபு வழி அடைந்தால் அது விலகல் அல்லது டிரான்ஸ்வகை அமைவு என்று பெயர் |
10.
1. தாவர எண்ணெய், கொழுப்பு (அ) உயவு களிம்புகளில் இருந்து பயோடீசல் என்ற எரிபொருள் தயாரிக்கப்படுகிறது.
2. எஞ்சின்களில் எந்த மாற்றமும் செய்யாமல் இதை பயன்படுத்தலாம்.
3. பெட்ரோலியம் சார்ந்த டீசல் எரிபொருளை ஒப்பிடும் போது இது ஒரு நச்சற்ற, உயிரிய சிதைவுக்கு உள்ளாகக் கூடிய குறைந்த அளவு மாசுபடுத்திகளை கொண்ட எரிபொருளாகும்.
4. இந்திய அரசாங்கம், டிசம்பர் 2009-ல் உயிரிய எரிபொருள் குறித்த தேசிய கொள்கைக்கு ஒப்புதல் அளித்தது.
5. காட்டாமணக்கு, புங்கன் என்னும் சிற்றினமும் பயோடீசல் உற்பத்திக்கு ஏற்றது என கருதப்படுகிறது.
11.
| மெண்டலின் வேறுபாடு | குரோமோசோம் பிறழ்ச்சி |
| ஒரு மரபணுவில் ஏற்படும் சடுதிமாற்றத்தினால் ஏற்படும் - மெண்டலின் பாரம்பரிய பண்பு கடத்துதலை ஒத்தது. எ.கா.: அரிவாள் செல் அனிமியா |
குரோமோசோம்களின் எண்ணிக்கையில் ஏற்படும் மாறுபாடுகளினால் உருவாகிறது. எ.கா: டவுண் சிண்ட்ரோம் |
12.
(i) குழந்தைகள் மற்றும் முதிர்ந்த மனிதர்களின் பல்வேறு திசுக்களில் முதிர் தண்டு செல்கள் காணப்படுகின்றன. முதிர் தண்டு செல் அல்லது உடல் தண்டு செல் பிரிதலடைந்து தன்னைப் போன்றே மற்றொரு செல்லை உருவாக்க இயலும்.
(ii) பெரும்பாலான முதிர் தண்டு செல்கள் பல்திறன் கொண்டவை. இவை உடலின் சேதமுற்ற பாகங்களைச் சரி செய்யும் அமைப்பாகவும் திகழ்கின்றன. முதிர் தண்டு செல்களின் அதிகப்படியான உற்பத்திக்கு மூலாதாரமாக சிவப்பு மஜ்ஜை விளங்குகிறது.
13.
(i) உயிரிகளின் மரபணுத் தொகுதிக்குள் புதிய மிகைப்படியான டி.என்.ஏ-க்களை நுழைத்து நிலையான மரபியல் மாற்றங்களை விரும்பிய வண்ணம் தோற்றுவிக்கலாம்.
(ii) மரபணு மாற்றம் என்று பெயர் இவ்விதம் உள் நுழைக்கப்படும் அந்நிய டி.என்.ஏவானது 'மாற்று மரபணு' எனவும், இதனால் தோற்றுவிக்கப்படும் விலங்குகளை 'மரபு பொறியியல் மூலம் மாற்றப்பட்ட' அல்லது 'மரபியல்பு மாற்றப்பட்ட உயிரிகள்' என்று அழைக்கலாம்.
14.
| தொற்று நோய் | தொற்றா நோய் | ||
|---|---|---|---|
| 1. | ஒரு நபரிடமிருந்து மற்றொருவருக்கு பரவும். | இந்நோய் மற்றவர்களுக்கு பரவாது. | |
| 2. | நோயூக்கிகள் நோய்கடத்திகள் மற்றும் காற்று நீர் மூலம் பரவுகிறது. | இது மரபியல் ஊட்டச்சத்து மற்றும் உடற்சிதைவின் மூலம் ஏற்படுகிறது. | |
| 3. | நோயூக்கிகள் - வைரஸ் பாக்டீரியா போன்றதாகும். | புற்றுநோய் மரணத்தை விளைவிக்கும். | |
15.
1. இது லிம்போசைட்டுகளின் முதிர்ச்சிக்கு தேவையான சூழலை வழங்குகிறது.
2. முதல்நிலை நிணநீர் உறுப்புகளில் முதிர்ச்சியடைந்த லிம்போசைட் செல்கள் மட்டுமே நோய்த்தடைக்காப்பு திறன் பெற்ற செல்களாகின்றன.
3. பாலூட்டிகளில் டி-செல்கள் எலும்பு மஜ்ஜைகளிலும் செல்கள் முதிர்ச்சி தைமஸிலும் நடைபெறுகிறது.
16.
1. வளமான சந்ததி
2. மேம்பட்ட விதைமுளைத்திறன்
3. புதிய ரகங்கள் உருவாக்கம்
4. சூழ்நிலைக்கேற்ற தகவமைப்பு தாவரங்களில் உண்டாகும்.
17.
பியரிஸ் ரேஃபே சிற்றினக் கம்பளிப்புழு வெளியிடும் கைரமோன் என்ற சேர்மம் காட்டுவகை முள்ளங்கியின் வாயிலாக காப்புத்தன்மை அதன் சந்ததிகளுக்குக் கடத்துகிறது.
18.
(i) பசலைமண் சாகுபடிக்கு ஏற்ற மண் வகையாகும். இது 70% மணல் மற்றும் 30% களிமண் (அ) வண்டல் மண் (அ) இரண்டும் கலந்தது ஆகும்.
(ஆ) இந்த மண்
1) நன்கு நீர்த்தேக்குதல்
2) மெதுவாக வடிகால் பண்பை உறுதி செய்தல்
3) மண்ணில் துகள்களிடையே இடைவெளியுடன்
(iii) நல்ல காற்றோட்டம், முதலியவை இருப்பதால் தாவர வேர்கள் நன்கு மண்ணில் ஊடுருவி வளர முடிகிறது.
19.
சூலகக் காம்பு (Funiculus), சதைப்பற்றுடன் வண்ணமயமான விதை ஒட்டுத்தாளாகிறது. (எ.கா) மிரிஸ்டிகா பித்தசிலோபியம்.
20.
(i) செயல்படும் மகரந்தத்துகள்களை உருவாக்க இயலாத தாவரங்கள் ஆண் மலட்டுத்தன்மைக்குரியவைகளாகக் கருதப்படுகின்றன
(ii) இந்தப் பண்பு மெண்டலின் பாரம்பரியக் கடத்துதல் மூலம் கடத்தப்படாமல், பெண் தாவரத்தின் மைட்டோகாண்டிரியா கூறுகள் (சைட்டோபிளாசம்) மூலம் கடத்தப்படுகிறது. (எ.கா முத்துச் சோளம்)
(iii) இது தாய் தாவரம் வழியாகக் கடத்தப்படுகிறது
(iv) இது உட்கரு சாரா மைட்டோகாண்டிரியா மூலம் கடத்தப்படுவதால் சைட்டோபிளாசம் சார் பாரம்பரியப் பண்பாகக் கருதப்படுகிறது
21.
எனவே Bbcc வருவதற்கான வாய்ப்பு 50% உள்ளது
22.
1. நவீன ஐரோப்பியர்களின் மூதாதையர்கள் குரோமேக்னன் ஆகும்.
2. பிரான்ஸ் நாட்டின் குரோமேக்னன் பாறைப் பகுதிகளில் வாழ்ந்ததாகக் கருதப்படுகிறது.
3. அவர்கள் பல்வேறு சூழ்நிலைகளில் வாழும் திறனைப் பெற்றவர்கள்.
4. குகைகளிலும் தரைகளிலும் சுவர்களிலும் படங்கள் வரையவும் பண்பினையும் பெற்றிருந்தனர்.
23.
1. உயிரினங்கள் யாவும் இயற்கைக்கு அப்பாற்பட்ட (கடவுள்) சக்தியினால் படைக்கப்பட்டவை.
2. இந்து மதக் கொள்கையின் படி பிரம்மா உலகத்தை உருவாக்கினார்.
3. கிறிஸ்துவம், இஸ்லாம் மற்றும் அனைத்து மத நம்பிக்கைகளும் இறைவன் பூமியையும் விலங்குகளையும் தாவரங்களையும் படைத்ததாகக் கூறுகிறது.
24.
25.
I) Inoculation (உட்செலுத்துதல்)
நோய்க்கிருமி நீக்கப்பட்ட துண்டுகளின் பிரிகூறுகள் ஆக்சின் கூடுதலாகச் சேர்க்கப்பட்ட MS ஊட்டக கரைசலில் வைக்கப்படுகிறது.
II) Incubation: (அடைகாத்தல்)
இவை 25o C± 2o C வெப்ப நிலையில் 12 மணிநேரம் ஒளி மற்றும் இருள் என மாறி மாறி வைக்கப்படும்.
III) Induction of Callus (காலஸ் உருவாக்கம்)
பிரிகூறின் மேற்பரப்பில் செல்பிரிதல் தூண்டப்பட்டு - காலஸ் உருவாகிறது.
காலஸ் என்பது ஆய்வுக்கூட சோதனை வளர்ப்பு
ஊடகத்தில் தாவர செல்கள் (அ) திசுக்களின் முறையற்ற வளர்ச்சி ஆகும்.
26.
1. தாவரக்கொல்லி மருந்துகள் தீங்குயிர்க்கொல்லி மருந்துகள் சூழ்நிலை மண்டலத்தை பாதிப்பதால் தேனீக்கள் மற்றும் தேன்கூடுகளை பாதிப்பதால் தேனீக்கள் எண்ணிக்கை குறைந்து வருவதால் விவசாய உற்பத்தி பாதிக்கிறது.
2. இதனால் தேனீக்களில் கூட்டச்சிதைவு நோய் ஏற்படுகிறது.
27.
1. போக்குவரத்து மூலாதாரங்கள் - போக்குவரத்து மகிழுந்துகள்
2. நிலையான மூலாதாரங்கள் - மின் நிலையங்கள்
3. பரப்பு மூலாதாரங்கள் - விவசாய மூலாதாரங்கள் - மரக்கட்டை
4. இயற்கை மூலாதாரங்கள் - தூசிகள், காட்டுத் தீ
28.
1. பெல்லோப்பியன் குழாய் அண்டக விளிம்பிலிருந்து, கருப்பை வரை நீண்டுள்ளது.
2. இதன் முன் முனையின் புனல் வடிவ இன்பண்டிபுலம் உள்ளது. இதில் விரல் போன்ற நுண் நீட்சிகள் உள்ளன. இவை அண்டம் வெளிப்படும்போது இழுக்கின்றன.
3. ஆம்புல்லா என்பது விரிவடைந்த மையப்பகுதி.
4. குழாயின் கடைசிப்பகுதி, தடித்த சுவர் கொண்ட இஸ்த்மஸ் ஆகும்.
29.
1. கர்ப்பகாலம் முழுவதும், அவ்வப்போது இலேசான வலிமையான சுருக்கங்களை கருப்பை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறது.
2. பொய்யான பிரசவ வலியை ஏற்படுத்தும் இந்த சுருக்கங்கள் பிராக்ஸ்டர் ஹிக்ஸ் சுருக்கங்கள் எனப்படும்.
30.
1.பட்டாவ் சின்டரோம்
.பட்டாவ் சின்டரோம்
(i) 13 வது குரோமோசோம் டிரைசோமி நிலையினால் ஏற்படுகின்றது.
(ii) மனனலக் குறைபாடு இதன் முக்கிய அறிகுறியாகும்.
(iii) மற்ற அறிகுறிகள் : சிறிய கண்களுடன் கூடிய சிறிய தலைகள், பிளவுற்ற அண்ணம்.
(iv) மூளை மற்றும் உள்உறுப்புகளின் குறைபாடு வளர்ச்சி
31.
ஒரு செல்லில் உள்ள குரோமோசோம் தொகுதியை முழுமையாகப் பிரித்தெடுத்து அவற்றை இணைகளாக வரிசைப்படுத்தும் தொழில் நுட்பமே குரோமோசோம் தொகுப்பு வரைபடம் எனப்படும்.
32.
8 பிளாஸ்டோமியர்களை விட அதிக செல்களை கொண்ட கரு கருப்பையினுள் செலுத்தப்பட்டு முழு வளர்ச்சி அடைகின்றது.
33.
தனித்த தாமிரம், தாமிர உப்புக்கள் விந்து இயக்கத்தை தடைசெய்கின்றன. இவை கருப்பையினுள் 5 முதல் 10 ஆண்டுகள் இருக்கலாம்.(எ.கா) CuT -380, Multiload 375.
34.
தன் கருவுறுதல், அயல் கருவுறுதல், முழுச்சேர்க்கை, இளம் செல்சேர்க்கை, மாறுபட்ட செல் சேர்க்கை, ஒத்த செல் சேர்க்கை, வேறுபட்ட செல் சேர்க்கை போன்றவை ஒருங்கிணைவு வகைகள் ஆகும்.
35.
1. பல உட்கருக்களைக்கொண்ட சேய் உயிரிகளை உருவாக்கும்.
2. பின்னர் உட்கருக்கள் பிளந்து இயல்பான எண்ணிக்கையை நிலைப்படுத்துகின்றன.
3. (எ.கா) பிலோமிக்ஸா, ஒபாலினா
36.
(i) தொடக்க குறியீடு (AUG) மற்றும் நிறைவு குறியீட்டுக்கும் இடையே காணப்படும் தூது RNA பகுதியில் இடையில் உள்ள சில பகுதிகள் மொழிபெயர்ப்பு செய்யப்படுவதில்லை
(ii) இதற்கு (UTR) UnTranslated Regions என்று பெயர்
37.
| DNA | RNA | |
| 1. | மரபுப்பொருளில் முக்கியப் பண்பான நிலைப்புத் தன்மை DNA வில் அதிகமாக உள்ளது. | எளிதில் சிதைகிறது - ஏனெனில் 2' - OH குழு - ஒவ்வொரு நியூக்ளியோடைடுகளிலும் காணப்படுகிறது. |
| 2. | இரு இழைகளைக் கொண்டிருப்பதால் வெப்பத்தினால் தன்மை மாற்றம் நடந்தாலும், தனிமைப்படுத்தப்பட்ட இரு இழைகளும் இயல்பு சூழல் அமையும் போது டி.என்.ஏவின் நிரப்பு கூறுகள் மீண்டும் உருவாகின்றன. | வெப்பப்படுத்தப்படும் போது தன்மை மாற்றம் நடைபெறும். |
| 3. | தைமின் - காணப்படுவதால் அதிகபட்ச நிலைப்புத்தன்மை கொண்டுள்ளது. | யுராசில் காணப்படுவதால் நிலைப்புத் தன்மை குறைவு. |
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards