12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 02/10/2020
12 ஆம் வகுப்பு வேதியியல் முக்கிய 3 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Chemistry Tamil Medium Important 3 Mark Book Back Questions (New Syllabus 2020)
12ஆம் வகுப்பு Chemistry / வேதியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Chemistry / வேதியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Chemistry Test

1.
நீண்ட காலத்திற்கு காப்பர் சல்பேட்டை இரும்புக் கலனில் சேமித்து வைக்க இயலுமா? கொடுக்கப்பட்டது: (\(E^{0}_{Cu^{2+}|Cu}=0.34 V\) மற்றும் \(E^{0}_{Fe^{2+}|Fe}= -0.44V\))
2.
பின்வருவனவற்றை வரிசைபடுத்துக.
i. நீரில் கரைதிறனின் ஏறுவரிசை, C6H5NH2, (C2H5)2 NH, C2H5NH2
ii. கார வலிமையின் ஏறுவரிசை
a) அனிலீன், p- டொலுடின் மற்றும் p – நைட்ரோ அனிலீன்
b) C6H5NH2, C6H5NHCH3, மற்றும், p-Cl-C6H4-NH2
iii. வாயுநிலைமைகளில் காரவலிமையின் இறங்கு வரிசை
C2H5NH2, (C2H5)NH, (C2H5)3N மற்றும் NH3
iv. கொதிநிலையின் ஏறுவரிசை C6H5OH, (CH3)2NH, C2H5NH2
v. pKb மதிப்புகளின் இறங்கு வரிசை C2H5NH2, C6H5NHCH3,(C2H5)2NH மற்றும் CH3 NH2
vi. கார வலிமையின் ஏறுவரிசை C6H5NH2, C6H5N(CH3)2, (C2H5)2 NH மற்றும் CH3 NH2
vii. கார வலிமையின் இறங்கு வரிசை 
3.
பென்சால்டிஹைடை பின்வரும் சேர்மங்களாக எவ்வாறு மாற்றுவாய்?
(i) பென்சோபீனோன்
(ii) பென்சாயிக் அமிலம்
(iii) α-ஹைட்ராக்ஸி பீனைல் அசிட்டிக் அமிலம்.
4.
x + y + z \(\rightarrow \) விளைபொருள் என்ற வினையின், வேக விதி, வினைவேகம் = k[x]3/2 [Y]1/2 வினையின் ஒட்டு மொத்த வினைவகை மற்றும் Z ஐப் பொருத்து வினையின் வினைவகை என்ன?
5.
Fe3+ மற்றும் Fe2+ல் எது அதிக நிலைப்புத் தன்மை உடையது. ஏன்?
6.
ஆய்வகத்தில் எவ்வாறு குளோரினைத் தயாரிப்பாய்?
7.
ஹைட்ரோ போரோ ஏற்ற வினை பற்றி குறிப்பு வரைக.
8.
துத்தநாகத்தின் பயன்களைக் கூறுக.
9.
ஜியோலைட்டுகள் வினைவேகமாற்றத்தின் சில சிறப்புப் பண்புகளை விவரி.
10.
ஒடுக்கும் மற்றும் ஒடுக்கா சர்க்கரைகள் என்பவை யாவை ?
11.
AAAA, ABABA மற்றும் ABC ABC வகை முப்பரிமாண நெருங்கிப் பொதிந்த அமைப்புகளை தகுந்த படத்துடன் விளக்குக.
12.
எண்முகி படிக புலத்தில், d – ஆர்பிட்டாலின் படிக புலப் பிளப்பினை குறிப்பிடும் வரைபடம் வரைக
13.
கால்வானிக் மின்கலத்தில் நிகழும் நிகர வினையானது கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
2 Cr (s) + 3Cu2+ (aq) → 2Cr3+ (aq) + 3Cu (s)
மின்கல குறியீட்டை பயன்படுத்தி மின்கலத்தை விளக்குக, மேலும் அரை வினைகளை எழுதுக.
14.
4 – மெத்தில் பென்ட் -2- ஈன் -1- ஆல் ஐ தரும் ஆல்டிஹைடு, கார்பாக்சிலிக் அமிலம் மற்றும் எஸ்டர் ஆகியனவற்றின் வடிவமைப்புகளைத் தருக.
15.
மன அமைதிப்படுத்திகள் உடலில் எவ்வாறு செயல்புரிகின்றன?
16.
ஆஸ்வால்ட் நீர்த்தல் விதிக்கான சமன்பாட்டைத் தருவி.
1.
\(\begin{aligned}
\left(\mathrm{E}_{\mathrm{ox}}^0\right)_{\mathrm{FFe}^{2+}}=+0.44 \mathrm{~V}
\end{aligned}\)
\(\begin{aligned}
\left(\mathrm{E}_{\mathrm{red}}^0\right)_{\mathrm{Cu}^{2+} |\mathrm{Cu}}=+0.34 \mathrm{~V}
\end{aligned}\)
இந்த +Ve emf மதிப்புகள் இரும்பு ஆக்ஸிஜனேற்றமடைகிறது எனவும் காப்பர் ஒடுக்கமடைகிறது எனவும் தெரிவிக்கின்றன. (எனவே) இரும்புக் கலனில் காப்பர் சல்பேட்டை சேமித்து வைக்க இயலாது.
2.
(i) C6H5NH2, (C2H5)2 NH,C2H5NH2
C6H5NH2 < (C2H5)2 NH < C2H5NH2
ii. கார வலிமையின் ஏறுவரிசை
a) அனிலீன், p- டொலுடின் மற்றும் p – நைட்ரோ அனிலீன்
அ) அனிலீன், p - டொலுடின் மற்றும் p - நைட்ரோ அனிலின்
p - டொலுடின் >அனிலின் > p - நைட்ரோ அனிலீன்
(e⊝) வெளியிடும் தொகுதி) ( e -ஈர்க்கும் தொகுதி)
b) C6H5NH2, C6H5NHCH3, மற்றும், p-Cl-C6H4-NH2
C6H5NH2 , C6H5NHCH3, p-Cl-C6H4-NH2
C6H5NH2 > C6H5NHCH3 > p-Cl-C6H4-NH2
iii. வாயுநிலைமைகளில் காரவலிமையின் இறங்கு வரிசை
C2H5NH2, (C2H5)NH, (C2H5)3N மற்றும் NH3
NH3 > (C2H5)NH2 > (C2H5)3NH > (C2H5)3N
1° அமீன் 2° அமீன் 3° அமீன்
iv. கொதிநிலையின் ஏறுவரிசை C6H5OH, (CH3)2NH, C2H5NH2
(CH3)2NH > C2H5NH2 > C2
2° அமீன் 1° அமீன்
3.
4.
வினைவேகம் \(=K{ [x] }^{ (3/2) }[y{ ] }^{ (1/2) }\)
ஒட்டுமொத்த வினைவகை \(=\left( \frac { 3 }{ 2 } +\frac { 1 }{ 2 } \right) =2\)
இரண்டாவது வகை வினை
வினைவேக விதியானது z ன் செறிவு மதிப்பினைக் கொண்டிருப்பதில்லை. எனவே Z ஐப் பொறுத்து பூஜ்ய வகை வினையாகும்.
5.
1. Fe3+ ன் எலக்ட்ரான் அமைப்பு - [Ar]3d5
2. சரிபாதி நிரம்பிய எலக்ட்ரான் அமைப்பை பெற்றுள்ளது
3. Fe2+ ன் எலக்ட்ரான் அமைப்பு - [Ar]3d6
4. இவற்றில் ஒரு பகுதியளவு நிரப்பப்பட்ட d- ஆர்பிட்டாலைப் பெற்றுள்ளது.
5. இதனால் Fe3+ ஆனது Fe2+ விட அதிக நிலைப்பு தன்மையை பெற்றுள்ளது.
6.
மாங்கனீஸ் டைஆக்சைடு முன்னிலையில் குளோரைடுகளை அடர் கந்தக அமிலத்துடன் வினைபடுத்தி குளோரின் தயாரிக்கப்படுகிறது.
4NaCl + MnO2 + 4H2SO4 ⟶ Cl2 + MnCl2 + 4NaHSO4 + 2H2O
7.
(i) அறை வெப்பநிலையில், ஈதர் ஊடகத்தில் போரேன் ஆல்கீன்கள் மற்றும் ஆல்கைன்களுடன் சேர்க்கை வினைக்கு உட்படுகிறது. இவ்வினை ஹைட்ரோபோரோனேற்றம் என்றழைக்கப்படுகிறது.
(ii) இது தொகுப்பு கரிம வேதியியலில், குறிப்பாக எதிர் மார்கோனிகாவ் சேர்க்கை வினைகளில் அதிகம் பயன்படுகிறது.
B2H6+ 6 RCH = CHR ⟶ 2B (RCH - CH2 - R)3B
8.
1. எஃகு மற்றும் இரும்பு அமைப்புகள் அரிமானம் மற்றும் துருப்பிடிக்காமல் பாதுகாக்கும் துத்தநாகப்பூச்சில் (கால்வனைசேஷன்) பயன்படுகிறது.
2. மோட்டார் வாகன அச்சு வார்ப்பு, மின்சாதனப் பொருட்களில் பயன்படுகிறது.
3. துத்தநாகத்தின் உலோகக் கலவையான பித்தளை (brass) அரிமானம் அடையாத தன்மையை பெற்றிருப்பதால் குழாய் வால்வுகள் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்கள் தயாரிக்க பயன்படுகிறது.
9.
ஜியோலைட்டுகள் நுண்துளைகளையுடைய, படிகவடிவமுடைய, நீரேறிய அலுமினோ சிலிக்கேட்டுகளாகும். இவை சிலிக்கான் மற்றும் அலுமினியம் நான்முகிகளால் ஆனவை.
இயற்கையில் காணப்படும் 50 வெவ்வேறு வகை ஜியோலைட்டுகளும், 150 தொகுப்பு ஜியோலைட்டுகளும் காணக்கிடைக்கின்றன.
சிலிக்கான் நான்கு இணைதிறனையும், அலுமினியம் மூன்று இணைதிறனையும் கொண்டிருப்பதால் ஜியோலைட்டு அணிக்கோவையில் மிகையான எதிர்மின்சுமை காணப்படுகிறது.
இந்த எதிர்மின்சுமையை நடுநிலையாக்க H+ அல்லது Na+ போன்ற கட்டமைப்புசாரா அயனிகள் காணப்படுகின்றன. புரோட்டான்களைக்
கொண்டுள்ள ஜியோலைட்டுகள் திண்ம அமிலங்களாகவும், வினைவேக மாற்றிகளாகவும் பயன்படுத்தப்படுகின்றன.
மேலும், இவை பெட்ரோலிய தொழிற்சாலைகளில் உயர் ஹைட்ரோகார்பன்களை சிதைத்து பெட்ரோல், டீசல் போன்றவற்றை பெறுவதிலும் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன.
Na+ அயனிகளைக் கொண்டுள்ள ஜியோலைட்டுகள் கார வினைவேக மாற்றிகளாக பயன்படுத்தப்படுகின்றன.
ஜியோலைட்டுகளின் முக்கிய பயன்பாடுகளில் ஒன்று அவற்றின் வடிவ தெரிவுத்திறனாகும். ஜியோலைட்டுகளில், கிளர்வு மையங்கள் அதாவது புரோட்டான்கள் நுண்துளைகளினுள் அமைந்துள்ளன.
எனவே, ஜியோலைட்டுகளின் நுண் துளைகளுக்குள் மட்டுமே வினைகள் நிகழ்கின்றன.
வினைப்பொருள் தெரிவுத்திறன்:
வினைப்பொருள் கலவையிலுள்ள பெரிய மூலக்கூறுகள், ஜியோலைட் படிகத்தின் கிளர்வு மையங்களை சென்றடையாமல் தடுக்கப்படுகின்றன. இந்த தெரிவுத்திறனானது வினைப்பொருள் வடிவத் தெரிவுத்திறன் என்றழைக்கப்படுகிறது.
இடைநிலைச் சேர்ம தெரிவுத்திறன்:
வினையில் உருவாகும் இடைநிலைச் சேர்மமானது, ஜியோலைட்டுகளின் நுண்துளை அளவை விட பெரியதாக இருந்தால் விளைபொருள் உருவாகாது.
வினைப்பொருள் தெரிவுத்திறன்:
சில விளைபொருள் மூலக்கூறுகள் ஜியோலைட்டுகளின் நுண்துளைகளிலிருந்து வெளியேற இயலாத அளவிற்கு மிகப்பெரியதாக இருக்கும்போது, இந்த சிக்கல் உருவாகிறது.
10.
| வ.எண் | ஒடுக்கும் சர்க்கரைகள் | ஒடுக்கா சர்க்கரைகள் |
| 1 | டாலன்ஸ் காரணி அல்லது பெல்லிங்ஸ் கரைசல் அல்லது பெனடிக்ட் கரைசல் ஆகியவற்றை ஒடுக்கும் சர்க்கரைகள், ஒடுக்கும் சர்க்கரைகள் எனப்படுகின்றன. | டாலன்ஸ் காரணி அல்லது பெல்லிங்ஸ் கரைசல் அல்லது பெனடிக்ட் கரைசல் ஆகியவற்றை ஒடுக்காத சர்க்கரைகள், ஒடுக்கா சர்க்கரைகள் எனப்படும். |
| 2 | α -ஹைட்ராக்ஸைல் கீட்டோன் அல்லது உருளை வடிவ ஹெமி அசிட்டால் அல்லது ஹெமி கீட்டால் அல்லது தனித்த CHO அல்லது C=O தொகுதியுடனான திறந்த சங்கிலி அமைப்புடன் சமநிலையில் உள்ள அமைப்புகளை பெற்றிருக்கும். | தனித்த கார்பனைல் தொகுதியாக பிரிக்க முடியாத நிலையான அசிட்டால் அல்லது கீட்டால் அமைப்புகளை பெற்றிருக்கும். |
| 3 | அ) D - குளுக்கோஸ், D - ஃப்ரக்டோஸ் (ஆல்டோஸ்கள் மற்றும் கீட்டோஸ்கள்) போன்ற அனைத்து மோனோ சாக்கரைடுகள் ஆ) லாக்டோஸ் மற்றும் மால்டோஸ் போன்ற சுக்ரோஸை தவிர்த்து மற்ற சர்க்கரைகள். | எ.கா: சுக்ரோஸ், ஸ்டார்ச், செல்லுலோஸ், கிளைக்கோஜன், டெக்ஸ்ட்ரின் etc. |
11.
எளிய கனசதுர அமைப்பு: (AAAA அமைப்பு)
(i) முப்பரிமாணத்தில், ஒவ்வொரு அடுக்கும், AAAA வகை இரு பரிமாண அமைப்பினை ஒத்திருக்கும் ஒரு அமைப்பினை உருவாக்கினால், அவ்வாறு உருவாகும் அமைப்பு எளிய கனசதுர அமைப்பாகும்.
(ii) இரண்டாம் அடுக்கில் அமையும் அனைத்துக் கோளங்களும் முதல் அடுக்கில் அமையப் பெற்றுள்ள கோளங்களுக்கு நேராக அவற்றின் மேற்புறங்களில் அமைகின்றன. எனவே இதன் விளைவாக உருவாகும் அமைப்பில் அனைத்து அடுக்குகளும் ஒரே மாதிரியாக உள்ளன. வெவ்வேறு அடுக்குகளில் காணப்படும் அனைத்துக் கோளங்களும், அனைத்து திசைகளிலும் ஒரே வரிசையில் அமைகின்றன. இவ்வாறான அமைப்பில் ஒரு அலகுக் கூடானது எளிய சதுர அமைப்பினைப் பெறுகிறது.
(iii) எளிய கனச்சதுர அமைப்பில் உள்ள ஒவ்வொரு கோளமும், தான் அமைந்துள்ள அடுக்கில் தன்னைச் சுற்றி அருகாமையில் அமைந்துள்ள நான்கு கோளங்களை தொட்டுக் கொண்டிருப்பதுடன், அதற்கு மேல் உள்ள அடுக்கில் ஒரு கோளத்தினையும், கீழ்புறம் அமைந்துள்ள அடுக்கில் ஒரு கோளத்தினையும் தொட்டுக் கொண்டுள்ளது. எனவே, எளிய கனச்சதுர அமைப்பில் உள்ள ஒரு கோளத்தின் அணைவு எண் 6.
பொருள் மைய கனசதுர அமைப்பு: (ABABAB ......அமைப்பு)
இந்த அமைப்பில், முதல் வரிசையான வகைA வரிசையில் உள்ள கோளங்கள் ஒன்றையொன்று நேரடியாகத் தொட்டுக்கொண்டிருக்காமல் சிறிது விலகி அமைந்துள்ளன. இந்த A அடுக்கில் உள்ள கோளங்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள இடைவெளிகளில் இரண்டாம் அடுக்கு உருவாக்கப்படுகிறது.
மூன்றாவது அடுக்கு முதல் அடுக்கினை ஒத்திருக்குமாறு அமைக்கப்படுகிறது. இந்த அமைப்பானது ABAB... என மீண்டும் மீண்டும் அமையுமாறு இவ்வமைப்பு உள்ளது. இந்த அமைப்பில் உள்ள எந்த ஒரு கோளத்தின் அணைவு எண் 8 ஆகும்.
பொருள் மைய கனசதுர அமைப்பு: (ABC ABC ABC ....... அமைப்பு)
இரண்டாவது அடுக்கின் மேல், எண்முகித்துளைகளில் பொருந்துமாறு மூன்றாவது அடுக்கின் கோளங்களை அடுக்கலாம். இவ்வாறு அமைக்கும்
போது மூன்றாவது அடுக்கானது முதல் இரண்டு அடுக்குகளான (a) மற்றும் (b) ஆகியனவற்றிலிருந்து மாறுபட்டிருக்கும், இந்த மூன்றாவது அடுக்கு (c) என குறிப்பிடப்படுகிறது தொடர்ந்து abc abc என்ற அமைப்பில் அடுத்தடுத்த அடுக்குகளால் உருவாக்கப்படும் கனச்சதுர நெருங்கிப்பொதிந்த அமைப்பு (ccp) என அழைக்கப்படுகிறது.
12.

13.
நேர்மின்வாய் ஆக்ஸிஜனேற்றம் : 2Cr (s) → 2Cr3+ (aq) + 6e- .... (1)
எதிர்மின்வாய் ஒடுக்கம்: 3Cu2+ (aq) + 6e- → 3Cu (s) ....(2)
மின்கலக் குறியீடு
Cr (s)|Cr3+ (aq) || Cu2+ (aq)|Cu (s)
14.

15.
இவை நரம்பு மண்டலத்தை தாக்கும் மருந்துகளாகும். வேலியம், டையசிபாம் போன்றவை மூளையிலுள்ள டோபமைன் எனும் நரம்புத் தூண்டல் கடத்தியை முடக்குவதன் மூலம் மைய நரம்பு மண்டலத்தின் மீது செயல்புரிகின்றன.
இவை, காமா அமினோ பியூட்ரிக் அமிலம் (GABA) என்ற நரம்புத் தூண்டல் கடத்தியின் செயல்பாட்டை தூண்டுகிறது. இதனால் மூளையில் நரம்பு உந்துதல் பரிமாற்றம் தடுக்கப்பட்டு பதற்றம் குறைகிறது. இவற்றின் பக்க விளைவுகள் பார்பிட்ரேட்டுகளைப் போல் உள்ளன. அதாவது தூக்கம் அயர்வு, நிலையற்ற நடைபோன்றவை.
16.
(i) ஆஸ்வால்ட் நீர்த்தல் விதியானது, ஒரு வலிமை குறைந்த அமிலத்தின் பிரிகை மாறிலியை (Ka ) அதன் பிரிகை வீதம் (\(\alpha \)) மற்றும் செறியுடன் (c ) தொடர்புபடுத்துகிறது. ஒரு சேர்மத்தின் மொத்த மோல் எண்ணிக்கையில், சமநிலையில் பிரிகையடைந்த மோல்களின் பின்னம், பிரிகை விதம் (\(\alpha \)) என்றழைக்கப்படுகிறது.

ஒரு வலிமை குறைந்த அமிலம் , அதாவது அசிட்டிக் அமிலத்தை (CH3COOH), எடுத்துக்காட்டாக கொண்டு ஆஸ்வால்ட் நீர்த்தல் விதிக்கான சமன்பாட்டை நாம் வருவிப்போம். அசிட்டிக் அமிலத்தின் பிரிகையடைதலை பின்வருமாறு குறிப்பிடலாம்.
\(\mathrm{CH}_3 \mathrm{COOH} \rightleftharpoons \mathrm{H}^{+}+\mathrm{CH}_3 \mathrm{COO}^{-}\)
அசிட்டிக் அமிலத்தின் பிரிகை மாறிலி,
\(\mathrm{K}_{\mathrm{a}}=\frac{\left[\mathrm{H}^{+}\right]\left[\mathrm{CH}_3 \mathrm{COO}^{-}\right]}{\left[\mathrm{CH}_3 \mathrm{COOH}\right]}\) ......(1)
| CH3COOH | H+ | CH3COO- | |
| ஆரம்ப நிலை மோல்களின் எண்ணிக்கை | 1 | - | - |
| CH3COOH ன் பிரிகைவீதம் | \(\alpha \) | - | - |
| சமநிலையில் மோல்களின் எண்ணிக்கை | 1-\(\alpha \) | \(\alpha \) | \(\alpha \) |
| சமநிலைச் செறிவு | (1 - \(\alpha \)) C | \(\alpha \)C | \(\alpha \)C |
சமன்பாடு (1) இல் சமநிலைச் செறிவை பிரதியிட
\(\begin{aligned}
\mathrm{K}_{\mathrm{a}}=\frac{(\alpha \mathrm{C})(\alpha \mathrm{C})}{(1-\alpha) \mathrm{C}}
\end{aligned}\)
\(\begin{aligned}
\mathrm{K}_{\mathrm{a}}=\frac{\alpha^2 \mathrm{C}}{1-\alpha}
\end{aligned}\) .....(2)
வலிமை குறைந்த அமிலமானது மிகக் குறைந்தளவே பிரிகையடைகிறது என்பதை நாம் அறிவோம். எண் ஒன்றுடன் ஒப்பிடும்போது \(\alpha\) மதிப்பு மிகச்சிறியது. எனவே, சமன்பாட்டின் விகுதியிலுள்ள (1 - \(\alpha\)) \(\simeq\) 1. இப்போது சமன்பாடு (2) பின்வருமாறு எழுதலாம்.
\(\mathrm{K}_{\mathrm{a}}=\left(\alpha^2 \mathrm{C}\right)\)
\(\alpha^2=\mathrm{Ka} / \mathrm{C} ; \alpha=\sqrt{\frac{\mathrm{Ka}}{\mathrm{C}}}\)
"நீர்த்தல் அதிகரிக்கும் போது ஒரு வலிமை குறைந்த மின்பகுளியின் பிரிகை விதமும் அதிகரிக்கிறது”
இது ஆஸ்வால்ட் நீர்த்தல் விதி எனப்படும்.
மேலும்: [H+) = \(\alpha\)C மற்றும்
\(\begin{aligned}
{\left[\mathrm{H}^{+}\right]=\left[\frac{\sqrt{\mathrm{Ka}}}{\mathrm{C}}\right] \mathrm{C}=\sqrt{\frac{\mathrm{KaC}^2}{\mathrm{C}}}=\sqrt{\mathrm{Ka} \cdot \mathrm{C}}}
\end{aligned}\)
\(\begin{aligned}
\mathrm{Kb}=\alpha^2 \mathrm{C}, \quad \because \alpha=\sqrt{\frac{\mathrm{Kb}}{\mathrm{C}}} \text {, }
\end{aligned}\)
\(\begin{aligned}
{\left[\mathrm{OH}^{-}\right] \alpha \mathrm{C}=\sqrt{\frac{\mathrm{Kb}}{\mathrm{C}} \times \mathrm{C}}=\sqrt{\frac{\mathrm{KbC}^2}{\mathrm{C}}}}
\end{aligned}\)
\(\begin{aligned}
=\sqrt{\mathrm{KbC}}
\end{aligned}\)
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards