12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 02/10/2020
12 ஆம் வகுப்பு வேதியியல் முக்கிய 3 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Chemistry Tamil Medium Important 3 Mark Creative Questions (New Syllabus 2020)
12ஆம் வகுப்பு Chemistry / வேதியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Chemistry / வேதியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Chemistry Test

1.
ஒரு குறிப்பிட்ட திண்மம் SC அமைப்பில் படிகமாகிறது. முதல்வகை X -கதிர் ( λ = 154 nm) எதிரொளிப்பு (200) தளத்திற்கு 16061. கோணத்தில் நிகழ்கிறது. கனசதுரத்தின் விளிம்பு நீளத்தை கணக்கிடு.
2.
திடப்பொருட்களின் பொதுப்பண்புகளை எழுதுக.
3.
ஒரு பொருளின் காந்ததிருப்புத் திறன் மதிப்பு 3.9 BM எனில் அதிலுள்ள தனித்த எலக்ட்ரான்களின் எண்ணிக்கையை கணக்கிடுக
4.
பின்வருவனவற்றை பொட்டாசியம் டை குரோமேட் எவ்வாறு ஆக்சிஜனேற்றமடையச் செய்கிறது?
i) அயோடைடு
ii) இரும்பு (II) கரைசல்
iii) H2S
5.
செறிவு குறைந்த HF அமிலம் வலிமை குறை அமிலமாகவும், செறிவு மிக்க HF அமிலம் வலிமையான அமிலமாகவும் செயல்படுகிறது. காரணம் தருக.
6.
ஒரு முதல் வகை வினையின் அரை வாழ் காலம் 10 நிமிடங்கள் என்றால் ஒரு மணி நேரம் கழிந்த பின் வினைபடு பொருள் எத்தனை சதவீதம் எஞ்சியிருக்கும்?
7.
ஒரு முதல் வகை வினையின் வினைவேக மாறிலி 2.3x10-4 s-1. வினைபடு பொருட்களின் ஆரம்பச் செறிவு 0.1 m எனில் 1 மணி நேரத்திற்குப் பின்னர் எஞ்சியிருக்கும் வினைபடு பொருளின் செறிவு யாது?
8.
போரான் டிரை ஆக்சைடிலிருந்து எவ்வாறு போரான் டிரை ப்ளுரைடு பெறப்படுகிறது?
9.
போராக்ஸின் நீர்க்கரைசல் காரத்தன்மை உடையது. ஏன்?
10.
ஒரு முக மாற்றியம் (Facial isomer) மற்றும் நெடுவரை (Meridional isomer) மாற்றியம் பற்றி எழுதுக.
11.
பூஜ்ய வகை வினைக்கு மூன்று எடுத்துக்காட்டுகள் தருக.
12.
இரும்பின் பயன்களை எழுது.
13.
கார வேதிக் கழுவுதல் பற்றி எழுது.
14.
படிகங்களில் காணப்படும் மாசு குறைபாடுகள் பற்றி எழுதுக.
1.
n = 1 λ = 0.154 θ = 16061, d = ?
2d sinθ = nλ
\(d=\frac { n\lambda }{ 2sin\theta } \)
\(=\frac { 1\times 0.154 }{ 2sin{ 16 }^{ 0 }{ 16 }^{ 1 } } \)
\(d=\frac { 1\times 0.154 }{ 2\times 0.286 } \) = 0.269nm
\({ d }_{ hkl }=\frac { a }{ \sqrt { { h }^{ 2 }+{ k }^{ 2 }+{ 1 }^{ 2 } } } \)
\(a={ d }_{ hkl }\sqrt { { h }^{ 2 }+{ k }^{ 2 }+{ 1 }^{ 2 } } \)
\(a={ d }_{ 200 }\sqrt { { 2 }^{ 2 }+0+0 } \)
= 0.269 x √4
= 0.269 x 2
a = 0.538nm.
2.
திடப்பொருட்கள்
i) வரையறுக்கப்பட்ட வடிவம் மற்றும் கன அளவைப் பெற்றுள்ளன.
ii) கடினமானவை மேலும் அமுக்க இயலாத் தன்மையுடையவை
iii) அவற்றின் உட்கூறுகளுக்கிடையே வலிமையான ஈர்ப்பு விசைகள் காணப்படுகின்றன.
iv) இவற்றில் காணப்படும் அணுக்கள், அயனிகள் அல்லது மூலக்கூறுகள் ஆகியவற்றிற்கு இடையேயான தொலைவு குறைவாகும்.
v) திடப்பொருட்களின் உட்கூறுகள் நிலையான இட அமைவினை பெற்றுள்ளன. மேலும் அவ்விட அமைவினை பொறுத்து மட்டுமே அவைகள் அலைவுற இயலும்.
3.
காந்த திருப்புத் திறன் \({ \mu }_{ s }=3.9BM\)
\({ \mu }_{ s }=\sqrt { n(n+2) } =3.9\)
\({ (\sqrt { n(n+2) } }^{ 2 })={ (3.9) }^{ 2 }=15\)
n(n + 2) = 15 = 3(3+2)
∴ n = 3
தனித்த எலக்ட்ரான்களின் எண்ணிக்கை = 3
4.
i) Cr2O72- + 14H+ + 6I- ⟶ 2Cr3+ + 7H2O + 3I2
ii) Cr2O72- + 6Fe2+ + 14H+ ⟶ 2Cr3+ + 6Fe3+ + 7H2O
iii) Cr2O72- + 8H+ + 3H2S ⟶ 2Cr3+ + 7H2O + 3S
5.
(i) 0.1 M HF அமிலக்கரைசல் 10% மட்டுமே அயனியுறுகிறது.
(ii) ஆனால் 5 M HF அமிலக் கரைசல்கள் பின்வரும் வேதிச் சமநிலையின் காரணமாக வலிமையான அமிலமாக செயல்படுகிறது.
HF + H2O ⇌ H3O+ + F-
HF + F- ⇌ HF-2
(iii) அதிகச் செறிவில், சமநிலையில் புளுரைடு அயனிகள் நீக்கப்பட்டு, ஹைட்ரஜன் அயனியின் செறிவு அதிகரிக்கிறது. எனவே செறிவுமிக்க கரைசல் HF அமிலம் வலிமையான அமிலமாக செயல்படுகிறது.
6.
t1/2 = 10 நிமிடங்கள்; t = 1 மணி நேரம் = 60 நிமிடங்கள் = 6 x 10 நிமிடங்கள்
t1/2 = 6t1/2
\(100\%\overset { { 1 }^{ { t }_{ 1/1 } } }{ \longrightarrow } 50\%\overset { 2^{ { t }_{ 1/1 } } }{ \longrightarrow } 25\%\overset { { 3 }^{ { t }_{ 1/2 } } }{ \longrightarrow } 12.5\%\overset { { 4 }^{ { t }_{ 1/2 } } }{ \longrightarrow } 6.25\%\overset { { 5 }^{ { t }_{ 1/2 } } }{ \longrightarrow } 3.125\%\overset { { 6 }^{ { t }_{ 1/2 } } }{ \longrightarrow } 1.5625\%\\ \)
எனவே ஒரு மணி நேரத்திற்கு பின் 1.5625% வினைபடு பொருள் எஞ்சியிருக்கும்.
7.
K = 2.3 x 10-4s-1; [A] = 0.01M; [A] = ?
t = 1 மணி = 60 x 60 = 3600 விநாடிகள்
\(K=\frac { 2.303 }{ t } log\frac { \left[ { A }_{ o } \right] }{ [A] } \)
\(2.3\times { 10 }^{ -4 }=\frac { 2.303 }{ 3600 } log\frac { 0.01 }{ [A] } \)
\(log\frac { 0.01 }{ [A] } =\frac { 2.3\times { 10 }^{ -4 }\times 3600 }{ 2.303 } \)
\(log\frac { 0.01 }{ [A] } =0.3595\)
\(\frac { 0.01 }{ [A] } =0.3595\)
\(\frac { 0.01 }{ [A] } =2.288\) ன் எதிர்மடக்கை
\([A]=\frac { 0.01 }{ 2.288 } \)
\(\\ [A]=0.00437M\)
8.
(i) அடர் கந்தக அமில முன்னிலையில் கால்சியம் ப்ளுரைடு பெறப்படுகிறது.
B2O3 + 3CaF2 + 3H2SO4 \(\underrightarrow { \Delta } \) 2BF3 + 3CaSO4 + 3H2O
(ii) போரான் டிரை ஆக்சைடு , கார்பன் மற்றும் ப்ளுரினுடன் வினைபுரியும் போது போரான் ட்ரை ப்ளுரைடு பெறப்படுகிறது.
B2O3+ 3C + 3F2 ⟶ 2BF3 + 3CO
9.
(i) வெந்நீர்க் கரைசலில் போராக்ஸ் சிதைந்து போரிக் அமிலம் மற்றும் சோடியம் ஹைட்ராக்ஸைடைத் தருகிறது.
Na2B4O7 + 7H2O ⟶ 3H3BO3 + 2NaOH
(ii) போரிக் அமிலம் ஒரு வலிமை குறைந்த அமிலம், சோடியம் ஹைட்ராக்ஸைடு ஒரு வலிமை மிக்க காரம்
(iii) எனவே உருவாகும் கரைசல் காரத்தன்மை உடையது.
10.
(i) [MA2B3]n+ வகை எண்முகி அணைவுச் சேர்மங்களும் வடிவ மாற்றியங்களைப் பெற்றுள்ளன.
(ii) ஒரே மாதிரியான ஈனிகள் (A) எண்முகியின் ஒரு முக்கோண முகத்தின் மூன்று மூலைகளில் இடம் பெற்று, மற்ற மூன்று ஈனிகள் (B) அதற்கு நேர் எதிராக அமைந்துள்ள முக்கோண முகத்தில் இடம் பெற்றிருக்குமானால் அம்மாற்றியம் ஒரு முக மாற்றியம் facial isomer or fac isomer எனப்படும்.
(iii) மூன்று ஒத்த ஈனிகள் ஒரு எண்முகியின் ஒரு உச்சியிலிருந்து மற்றொரு உச்சிக்கு கற்பனையாக வரையப்படும் ஒரு அரைவட்ட நெடுவரையில் அமைந்திருந்தால் அம்மாற்றியம் நெடுவரை மாற்றியம் எனப்படும்.
(iv) ஒவ்வொரு மூன்று ஈனித் தொகுதிகளும் எண்முகியின் நெடுவரையில் (meridian) அமைந்திருப்பதாக கருதப்படுவதால் இம்மாற்றியம் நெடு வரை மாற்றியம் (meridional isomer) எனப்படுகிறது.
11.
i) H2 மற்றும் Cl2 ஆகியவற்றிற்கு இடையேயான ஒளி வேதி வினை
H2(g)+Cl(g) ⟶ HCl(g)
ii) சூடான பிளாட்டினம் புறப்பரப்பில் N2O சிதைவடைதல்
N2O(g) ⇌ N2(g) +\(\frac{1}{2}\)O2(g)
iii) அசிட்டோன் அயோடினேற்றமடையும் வினை. அயோடினைப் பொறுத்து பூஜ்ய வகை வினை
CH2COCH3+I2 \(\overset { { H }^{ + } }{ \longrightarrow } \) I CH2COCH3+HI
12.
1. அதிக பயன்களைக் கொண்ட உலோகமான இரும்பு மற்றும் அதன் உலோகக் கலவைகள் பாலங்கள், இருசக்கர வாகனச் சங்கிலிகள், நறுக்க பயன்படும் உபகரணங்கள் மற்றும் துப்பாக்கி தோட்டா செலுத்தப்படும் குழாய்கள் தயாரிக்கப் பயன்படுகிறது.
2. வார்ப்பிரும்பு குழாய்கள், வால்வுகள், எரிபொருள் காற்றழுத்த அடுப்புகள் தயாரிக்கப் பயன்படுகிறது.
3. இரும்பு, அதன் உலோகக் கலவைகள் மற்றும் சேர்மங்கள் காந்தங்கள் தயாரிக்கப் பயன்படுகின்றன.
4. அதிக அளவில் அரிமானத்திற்கு உட்படாததால் துருப்பிடிக்காத எஃகு, கட்டிடத் தொழில், தாங்கிகள், முனை மடிக்கும் உளிகள், வெட்டுக்கருவிகள், நகை பொருட்கள் மற்றும் அறுவை சிகிச்சைக்கு பயன்படும் கருவிகள் தயாரிக்கப் பயன்படுகிறது.
5. நிக்கல் ஸ்டீல் கம்பி வடங்கள், மோட்டார் வாகன மற்றும் விமான பகுதிப் பொருட்கள் தயாரிக்கப் பயன்படுகிறது.
6. குரோம்ஸ்டீல் வெட்டுக் கருவிகள் மற்றும் நொறுக்கும் எந்திரங்கள் தயாரிக்கப் பயன்படுகிறது.
13.
1. தாது நீர்ம காரங்களுடன் வினைபட்டு கரையும் அணைவுச் சேர்மம் உருவாகிறது.
2. பாக்சைட் தாது சோடியம் ஹைட்ராக்சைடு அல்லது சோடியம் கார்பனேட் கரைசலுடன் 35 atm அழுத்தம் மற்றும் 470 - 520 K வெப்பநிலையில் வினைபுரிந்து கரையும் தன்மையுடைய சோடியம் மெட்டா அலுமினேட்டைத் தருகிறது.
3. இரும்பு ஆக்சைடு மற்றும் டைட்டேனியம் ஆக்சைடு போன்ற மாசுக்கள் கரையாமல் தங்கி விடுகின்றன.
Al2O3(S) + 2NaOH(aq) + 3H2O(l) ⟶ 2Na [Al(OH)4](aq)
4. சூடான கரைசல் வடிகட்டப்பட்டு, குளிர்விக்கப்பட்டு, நீர்க்கப்படுகிறது.
5. இக்கரைசல் வழியே CO2 வாயு செலுத்தப்பட்டு நடுநிலையாக்கப்படுவதால் நீரேற்றமடைந்த Al2O3 வீழ்ப்படிவாகிறது.
2Na[Al(OH)4](aq) + CO2(g) ⟶ Al2O3.XH2O(S) + 2NaHCO3(aq)
6. வீழ்படிவு வடிகட்டப்பட்டு சுமார் 1670K வெப்பநிலையில் வெப்பப்படுத்தும் போது தூய அலுமினா Al2O3 பெறப்படுகிறது.
14.
1. படிகத்தில் குறைபாட்டினை ஏற்படுத்த ஒரு எளிய பொதுவான முறை அதனுடன் மாசுக்களை சேர்ப்பதாகும்.
2. சேர்க்கப்படும் மாசு அணுவின் இணைதிறன் சேரும் படிகத்தில் உள்ள அணுவின் இணைதிறனிலிருந்து வேறுபடுவதால், படிக அணிக்கோவைத் தளங்களில் வெற்றிடங்கள் உருவாக்கப்படுகின்றன.
3. சில்வர் குளோரைடு படிகத்தில் காட்மியம் குளோரைடை மாசுப்பொருளாக சேர்ப்பதால் உருவாகும் திடக் கரைசலில் Cd2+ அயனியானது படிகத்தில் Ag+ அயனி இருந்த இடத்தில் இடம் பெறுகிறது.
4. இதன் காரணமாக படிகத்தின் மின் நடுநிலைத்தன்மை பாதிக்கப்படுகிறது.
5. இதனை பராமரிக்கும் பொருட்டு அதற்கு இணையான எண்ணிக்கையில் Ag+ அயனிகள் படிக அணிக்கோவை தளத்திலிருந்து வெளியேறுகின்றன.
6. இதனால் படிக அணிக்கோவைத் தளத்தில் நேர் அயனி வெற்றிடங்கள் ஏற்படுகின்றன.
7. இத்தகைய படிகக் குறைபாடுகள் மாசுகுறைபாடுகள் எனப்படுகின்றன.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards