12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 02/10/2020
12 ஆம் வகுப்பு வேதியியல் மாதிரி 3 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Chemistry Tamil Medium Sample 3 Mark Book Back Questions (New Syllabus 2020)
12ஆம் வகுப்பு Chemistry / வேதியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Chemistry / வேதியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Chemistry Test

1.
AAAA, ABABA மற்றும் ABC ABC வகை முப்பரிமாண நெருங்கிப் பொதிந்த அமைப்புகளை தகுந்த படத்துடன் விளக்குக.
2.
அலுமினியத்தின் மின்னாற் உலோகவியலை விளக்குக.
3.
ஆஸ்பிரின் மூலக்கூறின் அமைப்பு வாய்ப்பாட்டை எழுதுக.
4.
கார்போஹைட்ரேட்டுகள் பொதுவாக ஒளிசுழற்றும் தன்மையை பெற்றுள்ளன. ஏன்?
5.
பின்வருவனவற்றை வரிசைபடுத்துக.
i. நீரில் கரைதிறனின் ஏறுவரிசை, C6H5NH2, (C2H5)2 NH, C2H5NH2
ii. கார வலிமையின் ஏறுவரிசை
a) அனிலீன், p- டொலுடின் மற்றும் p – நைட்ரோ அனிலீன்
b) C6H5NH2, C6H5NHCH3, மற்றும், p-Cl-C6H4-NH2
iii. வாயுநிலைமைகளில் காரவலிமையின் இறங்கு வரிசை
C2H5NH2, (C2H5)NH, (C2H5)3N மற்றும் NH3
iv. கொதிநிலையின் ஏறுவரிசை C6H5OH, (CH3)2NH, C2H5NH2
v. pKb மதிப்புகளின் இறங்கு வரிசை C2H5NH2, C6H5NHCH3,(C2H5)2NH மற்றும் CH3 NH2
vi. கார வலிமையின் ஏறுவரிசை C6H5NH2, C6H5N(CH3)2, (C2H5)2 NH மற்றும் CH3 NH2
vii. கார வலிமையின் இறங்கு வரிசை 
6.
C5H10O எனும் மூலக்கூறு வாய்ப்பாடு கொண்ட (A) எனும் கார்பனைல் சேர்மமானது, சோடியம் பைசல்பைட்டுடன் படிக வீழ்படிவை தருகிறது, மேலும் அது அயோடோஃபார்ம் வினைக்கு உட்படுகிறது. சேர்மம் (A) ஃபெலிங் கரைசலை ஒடுக்குவதில்லை . சேர்மம் (A) வை கண்டறிக.
7.
ஆர்ஹீனியஸ் சமன்பாட்டினை எழுதி அதில் இடம் பெற்றுள்ளவற்றை விளக்குக.
8.
இணைப்பு மாற்றியம் என்றால் என்ன? ஒரு எடுத்துக்காட்டுடன் விளக்குக.
9.
Fe3+ மற்றும் Fe2+ல் எது அதிக நிலைப்புத் தன்மை உடையது. ஏன்?
10.
ஹைட்ரோ போரோ ஏற்ற வினை பற்றி குறிப்பு வரைக.
11.
கால்வானிக் மின்கலத்தில் நிகழும் நிகர வினையானது கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
2 Cr (s) + 3Cu2+ (aq) → 2Cr3+ (aq) + 3Cu (s)
மின்கல குறியீட்டை பயன்படுத்தி மின்கலத்தை விளக்குக, மேலும் அரை வினைகளை எழுதுக.
12.
4 – மெத்தில் பென்ட் -2- ஈன் -1- ஆல் ஐ தரும் ஆல்டிஹைடு, கார்பாக்சிலிக் அமிலம் மற்றும் எஸ்டர் ஆகியனவற்றின் வடிவமைப்புகளைத் தருக.
13.
1.608 A அளவுள்ள மின்னோட்டமானது 250 mL கனஅளவுள்ள 0.5 M காப்பர் சல்பேட் கரைசல் வழியே 50 நிமிடங்களுக்கு செலுத்தப்படுகிறது. கன அளவு மாறாமல் உள்ளது எனவும் மின்திறன் 100% எனவும் கருதி மின்னாற்பகுத்தல் முடிந்த பிறகு மீதமுள்ள கரைசலில் Cu2+ அயனிச் செறிவை கணக்கிடுக
14.
பால்மங்களின் மூன்று பயன்களை எழுதுக.
15.
50mL கனஅளவுடைய 0.025M KOH கரைசலுடன் 50mL கனஅளவுடைய 0.05M HNO3 கரைசல் சேர்க்கப்படுகிறது. இறுதியில் பெறப்பட்ட கரைசலின் pH மதிப்பை கணக்கிடுக.
16.
கந்தக அமிலம் ஒரு நீர் நீக்கும் காரணி - என்பதனைத் தகுந்த எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக.
1.
எளிய கனசதுர அமைப்பு: (AAAA அமைப்பு)
(i) முப்பரிமாணத்தில், ஒவ்வொரு அடுக்கும், AAAA வகை இரு பரிமாண அமைப்பினை ஒத்திருக்கும் ஒரு அமைப்பினை உருவாக்கினால், அவ்வாறு உருவாகும் அமைப்பு எளிய கனசதுர அமைப்பாகும்.
(ii) இரண்டாம் அடுக்கில் அமையும் அனைத்துக் கோளங்களும் முதல் அடுக்கில் அமையப் பெற்றுள்ள கோளங்களுக்கு நேராக அவற்றின் மேற்புறங்களில் அமைகின்றன. எனவே இதன் விளைவாக உருவாகும் அமைப்பில் அனைத்து அடுக்குகளும் ஒரே மாதிரியாக உள்ளன. வெவ்வேறு அடுக்குகளில் காணப்படும் அனைத்துக் கோளங்களும், அனைத்து திசைகளிலும் ஒரே வரிசையில் அமைகின்றன. இவ்வாறான அமைப்பில் ஒரு அலகுக் கூடானது எளிய சதுர அமைப்பினைப் பெறுகிறது.
(iii) எளிய கனச்சதுர அமைப்பில் உள்ள ஒவ்வொரு கோளமும், தான் அமைந்துள்ள அடுக்கில் தன்னைச் சுற்றி அருகாமையில் அமைந்துள்ள நான்கு கோளங்களை தொட்டுக் கொண்டிருப்பதுடன், அதற்கு மேல் உள்ள அடுக்கில் ஒரு கோளத்தினையும், கீழ்புறம் அமைந்துள்ள அடுக்கில் ஒரு கோளத்தினையும் தொட்டுக் கொண்டுள்ளது. எனவே, எளிய கனச்சதுர அமைப்பில் உள்ள ஒரு கோளத்தின் அணைவு எண் 6.
பொருள் மைய கனசதுர அமைப்பு: (ABABAB ......அமைப்பு)
இந்த அமைப்பில், முதல் வரிசையான வகைA வரிசையில் உள்ள கோளங்கள் ஒன்றையொன்று நேரடியாகத் தொட்டுக்கொண்டிருக்காமல் சிறிது விலகி அமைந்துள்ளன. இந்த A அடுக்கில் உள்ள கோளங்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள இடைவெளிகளில் இரண்டாம் அடுக்கு உருவாக்கப்படுகிறது.
மூன்றாவது அடுக்கு முதல் அடுக்கினை ஒத்திருக்குமாறு அமைக்கப்படுகிறது. இந்த அமைப்பானது ABAB... என மீண்டும் மீண்டும் அமையுமாறு இவ்வமைப்பு உள்ளது. இந்த அமைப்பில் உள்ள எந்த ஒரு கோளத்தின் அணைவு எண் 8 ஆகும்.
பொருள் மைய கனசதுர அமைப்பு: (ABC ABC ABC ....... அமைப்பு)
இரண்டாவது அடுக்கின் மேல், எண்முகித்துளைகளில் பொருந்துமாறு மூன்றாவது அடுக்கின் கோளங்களை அடுக்கலாம். இவ்வாறு அமைக்கும்
போது மூன்றாவது அடுக்கானது முதல் இரண்டு அடுக்குகளான (a) மற்றும் (b) ஆகியனவற்றிலிருந்து மாறுபட்டிருக்கும், இந்த மூன்றாவது அடுக்கு (c) என குறிப்பிடப்படுகிறது தொடர்ந்து abc abc என்ற அமைப்பில் அடுத்தடுத்த அடுக்குகளால் உருவாக்கப்படும் கனச்சதுர நெருங்கிப்பொதிந்த அமைப்பு (ccp) என அழைக்கப்படுகிறது.
2.
அலுமினியத்தின் மின்வேதிபிரிப்புமுறை ஹால் ஹெரால்டு முறை எனப்படும்.
எதிர்மின்வாய்
இம்முறையில் கார்பன் மேல் பூச்சு பூசப்பட்ட ஒரு இரும்புத் தொட்டியில் மின்னாற் பகுத்தல் நிகழ்த்தப்படுகிறது. இது எதிர்மின் வாயிலாக செயல்படுகிறது.
நேர்மின்வாய்
மின்பகுளியில் அமிழ்த்தி வைக்கப்பட்டுள்ள கார்பன் தண்டுகள் நேர்மின்வாயாகச் செயல்படுகின்றன.
மின்பகுளி
1. பாக்சைட்டிலிருந்து பெறப்பட்ட 20% அலுமினாக் கரைசல் உருகிய நிலையில் உள்ள கிரையோலைட்டுடன் கலக்கப்பட்டு மின்பகு கலனில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.
2. 10% கால்சியம் குளோரைடு கரைசல் மின்பகுகரைசலுடன் சேர்க்கப்படுகிறது. இங்கு கால்சியம் குளோரைடானது கலவையின் உருகுநிலையை குறைக்கப் பயன்படுகிறது.
வெப்பநிலை
1. உருகிய கலவையான 1270 K வெப்பநிலைக்கு மேல் இருக்குமாறு பராமரிக்கப்படுகிறது.
2. இச்செயல்முறையில் நிகழும் வேதிவினைகள் பின்வருமாறு
3. அலுமினாவின் அயனியாக்கம்
Al2O3 ➝ 2Al3+ + 3O2-
4. எதிர்மின்வாயில் நிகழும் வினை
2Al3+ (உருகிய நிலை) + 6e- ➝ 2Al(1)
5. நேர்மின்வாயில் நிகழும் வினை
6O2- (உருகிய நிலை) ➝ 3O2 + 12e-
5. கார்பன் நேர்மின்வாயாக செயல்படுவதால் அதில் பின்வரும் வினைகளும் நிகழ்கிறது.
C(S) + O2- (melt) ➝ CO + 2e-
C(S) + 2O2- (melt) ➝ CO2 + 4e-
6. மேற்கண்ட இரு வினைகளின் காரணமாக மின்னாற் பகுத்தலின்போது நேர்மின்வாய் மெதுவாக கரைகிறது.
7. எதிர்மின்வாய் தூய அலுமினியம் வீழ்படிவாகி மின்பகு கலனின் அடிப்பகுதியில் தங்குகிறது.
8. மின்னாற்பகுத்தலின் நிகர வினை:
4Al3+ (உருகிய நிலை) + 6O2- (உருகிய நிலை) + 3C(S) ➝ 4Al(1) + 3CO2(g)
3.
ஆஸ்பிரின் (C9H8O4) எனப்படுவது O-அசிட்டைல் சாலிசிலிக் அமிலமாகும்.
4.
அநேகமாக, அனைத்து கார்போஹைட்ரேட்டுகளும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சீர்மையற்ற கார்பன் அணுக்களை பெற்றிருப்பதால் அவை ஒளி சுழற்றும் தன்மையை பெற்றுள்ளன.
சீர்மையற்ற கார்பன் எண்ணிக்கையை பொறுத்து மாற்றுகளின் எண்ணிக்கை அணுக்களின் ஒளிச்சுழற்று அமைகிறது, அதாவது 2n மாற்றுகள் இங்கு n = சீர்மையற்ற கார்பன் அணுக்களின் மொத்த எண்ணிக்கை.
குளுக்கோஸில் 4* -C உள்ளன. எனவே இது 24 = 16 மாற்றுகளை பெற்றுள்ளது.
5.
(i) C6H5NH2, (C2H5)2 NH,C2H5NH2
C6H5NH2 < (C2H5)2 NH < C2H5NH2
ii. கார வலிமையின் ஏறுவரிசை
a) அனிலீன், p- டொலுடின் மற்றும் p – நைட்ரோ அனிலீன்
அ) அனிலீன், p - டொலுடின் மற்றும் p - நைட்ரோ அனிலின்
p - டொலுடின் >அனிலின் > p - நைட்ரோ அனிலீன்
(e⊝) வெளியிடும் தொகுதி) ( e -ஈர்க்கும் தொகுதி)
b) C6H5NH2, C6H5NHCH3, மற்றும், p-Cl-C6H4-NH2
C6H5NH2 , C6H5NHCH3, p-Cl-C6H4-NH2
C6H5NH2 > C6H5NHCH3 > p-Cl-C6H4-NH2
iii. வாயுநிலைமைகளில் காரவலிமையின் இறங்கு வரிசை
C2H5NH2, (C2H5)NH, (C2H5)3N மற்றும் NH3
NH3 > (C2H5)NH2 > (C2H5)3NH > (C2H5)3N
1° அமீன் 2° அமீன் 3° அமீன்
iv. கொதிநிலையின் ஏறுவரிசை C6H5OH, (CH3)2NH, C2H5NH2
(CH3)2NH > C2H5NH2 > C2
2° அமீன் 1° அமீன்
6.
C5H10O என்ற மூலக்கூறு வாய்ப்பாடுடைய சேர்மம் (A) அயோடோஃபார்ம் சோதனைக்கு உட்படுகிறது. இது
ஃபெலிங் கரைசலை ஒடுக்குவதில்லை. எனவே இது 2 பென்டனோன் ஆகும்.
7.
K = \(A{ e }^{ \frac { -Ea }{ RT } }\)
K = வினைவேக மாறிலி
A = அதிர்வெண் காரணி
Ea = கிளர்வு ஆற்றல்
R = வாயு மாறிலி
T = தனி வெப்பநிலை Kல்
8.
1. இரு வழி பிணைப்புறு ஈனி தன்னிடம் உள்ள வெவ்வேறு வழங்கி அணுக்களின் மூலம் மைய உலோக அயனியுடன் பிணைப்பினை ஏற்படுத்தும் போது இத்தகைய மாற்றியங்கள் ஏற்படுகின்றன.
2. எடுத்துக்காட்டில், நைட்ரைட் அயனியானது, 2+ மைய உலோக அயனியான Co²+ உடன் நைட்ரஜன் அணு வழியே பிணைப்பினை ஏற்படுத்துவதால் ஒரு அணைவுச் சேர்மமும், ஆக்ஸிஜன் அணு வழியே பிணைப்பினை ஏற்படுத்துவதால் மற்றொரு அணைவுச் சேர்மமும் உருவாகின்றன.
(எ.கா) [Co(NH3)5 NO2]2+
இரு வழி பிணைப்புறு ஈனிகள்:
\(\mathrm{NO}_2^{-}, \mathrm{CN}^{-}, \mathrm{CO} \& \mathrm{SCN}^{-}\)
எடுத்துக்காட்டு:
\(\left[\mathrm{Co}\left(\mathrm{NH}_3\right)_5 \mathrm{NO}_2\right] \mathrm{Cl}_2-\) மஞ்சள் ; \(\text { [ } \left.\mathrm{Co}\left(\mathrm{NH}_3\right)_5 \mathrm{ONO}\right] \mathrm{Cl}_2 \) - சிவப்பு
3. இடம் மாற்றியம், உப்பு மாற்றியம் என்றும் அழைக்கப்படும்
9.
1. Fe3+ ன் எலக்ட்ரான் அமைப்பு - [Ar]3d5
2. சரிபாதி நிரம்பிய எலக்ட்ரான் அமைப்பை பெற்றுள்ளது
3. Fe2+ ன் எலக்ட்ரான் அமைப்பு - [Ar]3d6
4. இவற்றில் ஒரு பகுதியளவு நிரப்பப்பட்ட d- ஆர்பிட்டாலைப் பெற்றுள்ளது.
5. இதனால் Fe3+ ஆனது Fe2+ விட அதிக நிலைப்பு தன்மையை பெற்றுள்ளது.
10.
(i) அறை வெப்பநிலையில், ஈதர் ஊடகத்தில் போரேன் ஆல்கீன்கள் மற்றும் ஆல்கைன்களுடன் சேர்க்கை வினைக்கு உட்படுகிறது. இவ்வினை ஹைட்ரோபோரோனேற்றம் என்றழைக்கப்படுகிறது.
(ii) இது தொகுப்பு கரிம வேதியியலில், குறிப்பாக எதிர் மார்கோனிகாவ் சேர்க்கை வினைகளில் அதிகம் பயன்படுகிறது.
B2H6+ 6 RCH = CHR ⟶ 2B (RCH - CH2 - R)3B
11.
நேர்மின்வாய் ஆக்ஸிஜனேற்றம் : 2Cr (s) → 2Cr3+ (aq) + 6e- .... (1)
எதிர்மின்வாய் ஒடுக்கம்: 3Cu2+ (aq) + 6e- → 3Cu (s) ....(2)
மின்கலக் குறியீடு
Cr (s)|Cr3+ (aq) || Cu2+ (aq)|Cu (s)
12.

13.
கொடுக்கப்பட்டது:
I = 1.608 A; t = 50 min = 50 \(\times\) 60 = 3000 sec,
S = 250 mL,
V = 500 ml; C = 0.5 M
i) Q = It
= 1.608 \(\times\) 3000 = 4824 C
\(\therefore\) பாரடேக்களின் எண்ணிக்கை = \(\frac{4824}{96500}\)
= 0.05 F
ii) \(C u^{2+}(a q)+2 e^{-} \rightarrow C u(s)\)
\(\therefore\) 2 F மின்சாரம் 1 மோல் Cu2+ வை படியச் செய்கிறது.
\(\therefore\) 0.5F மின்சாரம் படியச் செய்வது x Cu2+ ஆகும்.
\(x=\frac{1 \times 0.05}{2}=0.025 \mathrm{~mol}\)
250 ml கரைசலில் உள்ள Cu2+ஆரம்ப மோல்களின் எண்ணிக்கை
\(=\frac{0.5}{1000}=\times 250 \mathrm{~mol}\)
= 0.125 மோல்
\(\therefore\) மின்னாற்பகுப்பிற்கு பின் மோல்களின் எண்ணிக்கை = 0.125 - 0.025 = 0.1 மோல்
\(\therefore\) Cu2+ ன் செறிவு = \(\frac{0.1}{250} \times 1000=0.4 \mathrm \space {M}\)
14.
1. பால்மங்கள் உணவுத் தொழிலில் பயன்படுகின்றன. உணவுப்பொருட்களான பால், கிரீம், வெண்ணெய் போன்றவை பால்மங்களாகும்.
2. மருந்துகள் சம்பந்தமான தொழிலில் பால்மங்கள் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன. அநேக மருந்துகள் பால்மங்களாகும். எ.கா: மெக்னீஷியா பால்மமானது வயிற்று உபாதைகளை சரிசெய்ய பயன்படுகிறது. அநேக லோஷன்களும், களிம்புகளும் பால்மங்களாகும்.
3. பால்ம பெயிண்டுகள், மை போன்றவை பால்மங்களாகும்.
4. அயனித் தன்மையற்ற பால்மங்கள் அவற்றின் குறைந்த நச்சுத்தன்மை காரணமாக பெயர் பெற்றவை.
5. நேர்மின் பால்மங்கள் எதிர் நுண்ணுயிர் பண்புகளை பெற்றவை.
6. விவசாயத் தொழிலில், பூச்சுக் கொல்லிகள், பூஞ்சை கொல்லிகள் மற்றும் உயிர்கொல்லிகள் ஆகியவற்றிற்கு தாங்கிகளாக பயன்படுகின்றன.
7. முடி மற்றும் தோல் கண்டிஷனர்களுக்கும் தாங்கிகளாக பயன்படுகிறது.
8. இரத்தம், தாவரம் மற்றும் விலங்கு செல்களிலுள்ள புரோட்டாபிளாசம் மற்றும் குடல்களிலுள்ள கொழுப்பு ஆகியவை பால்மங்களாகும்.
15.
\(M=\frac{V_1 M_1-V_2 M_2}{V_1+V_2}\)
\(\begin{aligned}
M & =\frac{(50 \times 0.05)-(50 \times 0.025)}{50+50}
\end{aligned}\)
\(\begin{aligned}
=\frac{2.5-1.25}{100}
\end{aligned}\)
\(\begin{aligned}
=\frac{1.25}{100}=0.0125 \mathrm{M}
\end{aligned}\)
pH = -log10[H+]
= - log 0.0125
= -log(1.25 \(\times\) 10-2)
நார்மாலிட்டி = மோலாரிட்டி \(\times\) காரத்துவம்
= [log 1.25 - 2 log 10]
= 2 - log10 1.25
= 2 - 0.0969
pH = 1.9031.
16.
C12H22O11 + H2SO4 ⟶ 12C + H2SO4.11H2O
HCOOH + H2SO4 ⟶ CO + H2SO4.H2O
(COOH)2 + H2SO4 ⟶ CO + CO2 + H2CO3H2O
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards