12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th English Poem - 6 - Incident of the French Camp Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 6 - On the Rule of the Road Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 5 - The Chair Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Supplementary - 4 - The Midnight Visitor Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Poem - 4 - Ulysses Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 4 - The Summit Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 02/10/2020
12 ஆம் வகுப்பு வேதியியல் மாதிரி 3 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Chemistry Tamil Medium Sample 3 Mark Creative Questions (New Syllabus 2020)
12ஆம் வகுப்பு Chemistry / வேதியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Chemistry / வேதியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Chemistry Test

1.
ஒரு குறிப்பிட்ட திண்மம் SC அமைப்பில் படிகமாகிறது. முதல்வகை X -கதிர் ( λ = 154 nm) எதிரொளிப்பு (200) தளத்திற்கு 16061. கோணத்தில் நிகழ்கிறது. கனசதுரத்தின் விளிம்பு நீளத்தை கணக்கிடு.
2.
சகப்பிணைப்பு படிகங்கள் என்றால் என்ன?
3.
[Ti (H2O)6]3+ நிறமுடையது ஆனால் [Sc(H2O)6]3+ நிறமற்றது ஏன்?
4.
லாந்தனைடுகளில் ஆக்சிஜனேற்ற நிலை பற்றி எழுதுக
5.
சிவப்பு பாஸ்பரஸ் ஆக்சிஜனுடன் எவ்வாறு வினைபுரிகிறது?
6.
500 K வெப்பநிலையில், ஒரு முதல் வகை வினைக்கு வினைவேக மாறிலி 8x10-1 ஆகும். அவ்வினையின் கிளர்வு ஆற்றல் 190kJ mol-1 எனில் அதிர்வுக் காரணியைக் கணக்கிடுக.
7.
படிகாரத்தின் பயன்களை எழுதுக.
8.
போராக்ஸின் நீர்க்கரைசல் காரத்தன்மை உடையது. ஏன்?
9.
X+Y ➝ வினைபொருள் என்ற வினையில், [X] ஐ நான்கு மடங்காக்கும் போது வினைவேகம் எட்டு மடங்காகிறது. மேலும் [X] மற்றும் [Y] ஆகிய இரண்டையும் நான்கு மடங்காக்கும் போது வினைவேகம் பதினாறு மடங்காகிறது எனில் X மற்றும் Y ஐப் பொறுத்து வினைவகை மற்றும் ஒட்டுமொத்த வினைவகை ஆகியவற்றினைக் கண்டறிக.
10.
ஒரு முக மாற்றியம் (Facial isomer) மற்றும் நெடுவரை (Meridional isomer) மாற்றியம் பற்றி எழுதுக.
11.
உருக்குதல் பற்றி விவரி.
1.
n = 1 λ = 0.154 θ = 16061, d = ?
2d sinθ = nλ
\(d=\frac { n\lambda }{ 2sin\theta } \)
\(=\frac { 1\times 0.154 }{ 2sin{ 16 }^{ 0 }{ 16 }^{ 1 } } \)
\(d=\frac { 1\times 0.154 }{ 2\times 0.286 } \) = 0.269nm
\({ d }_{ hkl }=\frac { a }{ \sqrt { { h }^{ 2 }+{ k }^{ 2 }+{ 1 }^{ 2 } } } \)
\(a={ d }_{ hkl }\sqrt { { h }^{ 2 }+{ k }^{ 2 }+{ 1 }^{ 2 } } \)
\(a={ d }_{ 200 }\sqrt { { 2 }^{ 2 }+0+0 } \)
= 0.269 x √4
= 0.269 x 2
a = 0.538nm.
2.
1. படிகங்களில் காணப்படும் உட்கூறுகள் அணுக்களாக இருப்பின் அவை சகப்பிணைப்பு படிகங்கள் எனப்படும்.
2. இப்படிகங்களில் உட்கூறுகள் முப்பரிமாண வலைப்பின்னல் கட்டமைப்பில், முற்றிலும் சகப்பிணைப்புகளால் பிணைக்கப்பட்டுள்ளன.
3. இவை மிக்க கடினமானவை.
4. இவை அதிக உருகுநிலை உடையவை.
5. இவை மிகக் குறைவான வெப்ப மற்றும் மின்கடத்தும் தன்மையைப் பெற்றிருக்கின்றன.
6. எ.கா. வைரம், சிலிக்கன் கார்பைடு
3.
| அணைவு | உலோக அயனி | எலக்ட்ரான் அமைப்பு | நிறம் | காரணம் |
| [Ti (H2O)6]3+ | Ti3+ | [Ar]3d0 4s0 | நிறமுடையது | i) பகுதியளவு நிரம்பிய நிலையற்ற d ஆர்பிட்டால்கள் ii) தனித்த எலக்ட்ரான்கள் 1 iii) d - d எலக்ட்ரான் பரிமாற்றம் நடைபெறும் |
| [Sc(H2O)6]3+ | Sc3+ | [Ar]3d14s0 | நிறமற்றது | i) காலியான d ஆர்பிட்டால்கள் ii) தனித்த எலக்ட்ரான்கள் இல்லை iii) d - d எலக்ட்ரான் பரிமாற்றம் இல்லை |
4.
(i) பொதுவான ஆக்சிஜனேற்ற நிலை +3
(ii) சில லாந்தனைடுகள் +2 மற்றும் +4 ஆகிய ஆக்சிஜனேற்ற நிலைகளையும் கொண்டுள்ளன
5.
சிவப்பு பாஸ்பரஸ், ஆக்சிஜனுடன் வெப்பப்படுத்தும்போது வினைபுரிந்து பாஸ்பரஸ் டிரை ஆக்சைடு மற்றும் பாஸ்பரஸ் பென்டாக்சைடு உருவாகிறது
P4 + 3O2 ⟶ P4O6
P4 + 5O2 ⟶ P4O10
6.
Ea = 190 KJ mol-1= 190 x 103 J mol-1
K = 8 x 10-4 s-1; T = 500K; R = 8.314 JK-1 mol-1; A = ?
\(K={ A }e^{ -\frac { Ea }{ RT } }\)
\(log\quad K=log\quad A-\frac { Ea }{ 2.303RT } \)
\(log\quad A=log\quad K+\frac { Ea }{ 2.303RT } \)
\(=log\quad 8\times { 10 }^{ -4 }+\frac { 190\times { 10 }^{ 3 } }{ 2.303\times 8.314\times 500 } \)
\(=log8\times { 10 }^{ -4 }+\frac { 190\times { 10 }^{ 3 } }{ 2.303\times 8.314\times 500 } \)
\(=log\quad 8-4log10\frac { 190\times { 10 }^{ 3 } }{ 2.303\times 8.314\times 500 } \)
= 0.9031-4 x 1 + 19.8463
= 20.7494-4
log A = 16.7494
A = 16.7494 ன் எதிர் மடக்கை
A = 5.614 x 1016
7.
படிகாரம்,
i) நீர் சுத்திகரிப்பில் பயன்படுகிறது.
ii) நீர் ஒட்டா ஆடைகள் தயாரித்தல், ஜவுளித் துறையிலும் பயன்படுகிறது.
iii) சாயமிடுதல், காகிதம் மற்றும் தோல் பதனிடுதல் தொழிற்சாலைகளில் பயன்படுகிறது.
iv) இரத்தக் கசிவைத் தடுக்கும்"குருதித்தடுப்பான்" ஆக பயன்படுகிறது.
8.
(i) வெந்நீர்க் கரைசலில் போராக்ஸ் சிதைந்து போரிக் அமிலம் மற்றும் சோடியம் ஹைட்ராக்ஸைடைத் தருகிறது.
Na2B4O7 + 7H2O ⟶ 3H3BO3 + 2NaOH
(ii) போரிக் அமிலம் ஒரு வலிமை குறைந்த அமிலம், சோடியம் ஹைட்ராக்ஸைடு ஒரு வலிமை மிக்க காரம்
(iii) எனவே உருவாகும் கரைசல் காரத்தன்மை உடையது.
9.
X+Y ➝ விளை பொருள்
இவ்வினையின் வேக விதி,
வினைவேகம் = K[X]m[Y]n
வினைவேகம் = 1 என்க
ஃ k[4X]m[Y]n = 1 -----------(1)
[X]ஐ நான்கு மடங்காக்கும் போது,
அதாவது [4X], வினைவேகம் =8
ஃ K[4X]m [Y]n = 8
K4m[X]m [Y]n = 2 ------------(2)
[X] மற்றும் [Y] ஆகியவற்றை நான்கு மடங்காக்கும் போது,
அதாவது [4X] மற்றும் [4Y] எனும் போது
வினைவேகம் = 16
ஃ K[4X]m[Y]n = 16
K4m[X]m 4n [Y]n=16 ------------(3)
(2) ஐ (1) ஆல் வகுக்க
\(\frac { { K4 }^{ m }{ [X] }^{ m }{ [Y] }^{ n } }{ K{ [X] }^{ m }{ [Y] }^{ n } } =\frac { 8 }{ 1 } \)
ஃ 4m = 23
(22)m = 23
22m = 23
ஃ 2m = 3
m = \(\frac{3}{2}\)
m = 1.5
எனவே X இ பொறுத்து வினை வகை 1.5 ஆகும்.
(3) ஐ (2) ஆல் வகுக்க,
\(\frac { { K4 }^{ m }{ [X] }^{ m }{ { 4 }^{ n }[Y] }^{ n } }{ K{ 4 }^{ m }{ [X] }^{ m }{ [Y] }^{ n } } =\frac { 16 }{ 8 } \)
ஃ 4n = 2
(22)n = 21
22n = 21
2n = 1
n = \(\frac{1}{2}\)
n = 0.5
எனவே Y ஐ பொறுத்து வினை வகை 0.5 ஆகும்.
ஃ ஒட்டுமொத்த வினை வகை = m+n
= 1.5 + 0.5
= 2
10.
(i) [MA2B3]n+ வகை எண்முகி அணைவுச் சேர்மங்களும் வடிவ மாற்றியங்களைப் பெற்றுள்ளன.
(ii) ஒரே மாதிரியான ஈனிகள் (A) எண்முகியின் ஒரு முக்கோண முகத்தின் மூன்று மூலைகளில் இடம் பெற்று, மற்ற மூன்று ஈனிகள் (B) அதற்கு நேர் எதிராக அமைந்துள்ள முக்கோண முகத்தில் இடம் பெற்றிருக்குமானால் அம்மாற்றியம் ஒரு முக மாற்றியம் facial isomer or fac isomer எனப்படும்.
(iii) மூன்று ஒத்த ஈனிகள் ஒரு எண்முகியின் ஒரு உச்சியிலிருந்து மற்றொரு உச்சிக்கு கற்பனையாக வரையப்படும் ஒரு அரைவட்ட நெடுவரையில் அமைந்திருந்தால் அம்மாற்றியம் நெடுவரை மாற்றியம் எனப்படும்.
(iv) ஒவ்வொரு மூன்று ஈனித் தொகுதிகளும் எண்முகியின் நெடுவரையில் (meridian) அமைந்திருப்பதாக கருதப்படுவதால் இம்மாற்றியம் நெடு வரை மாற்றியம் (meridional isomer) எனப்படுகிறது.
11.
1. ஒரு உருக்கு உலையில் அடர்ப்பிக்கப்பட்ட தாது ஒரு இளக்கி மற்றும் தகுந்த ஒடுக்கும் காரணியுடன், உலோகத்தின் உருகு நிலையை விட அதிக வெப்பநிலையில் உருக்கப்படுகிறது.
2. கனிமக் கழிவுடன் சேர்ந்து எளிதில் உருகும் கசடினை உருவாக்கும் வேதிப்பொருள் இளக்கி எனப்படும்.
3. (எ.கா.) சுட்ட சுண்ணாம்பு CaO.
4. கார்பன், கார்பன் மோனாக்சைடு, அலுமினியம் ஆகியன தகுந்த ஒடுக்கும் காரணிகள் ஆகும்.
5. இரும்பு ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடால் பின்வருமாறு ஒடுக்கப்படுகிறது.
Fe2O3(S) + 3CO(g) ⟶ 2Fe(S) + 3CO2(g) ↑
6. இத்தாதுவில் உள்ள அமிலத்தன்மையுடைய சிலிக்கா கனிமக் கழிவு, காரத்தன்மையுடைய இளக்கி சுட்ட சுண்ணாம்பினால் கால்சியம் சிலிக்கேட் எனும் கனிமக் கசடாக நீக்கப்படுகிறது.
CaO(S) + SiO2(S) ⟶ CaSiO3(S)
இளக்கி கனிமக்கழிவு கனிமக் கசடு
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th English Supplementary - 3 - The Hour of Truth (Play) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Poem - 3 - All the World’s a Stage Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 3 - In Celebration of Being Alive Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Supplementary - 2 - Life of Pi Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards