12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 05/10/2020
12 ஆம் வகுப்பு வணிகவியல் முக்கிய 3 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Commerce Tamil Medium Important 3 Mark Book Back Questions (New Syllabus 2020)
12ஆம் வகுப்பு Commerce / வணிகவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Commerce / வணிகவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Commerce Test1.
வாக்கெடுப்பு குறித்து நீங்கள் அறிந்துகொண்டது என்ன?
2.
சாதாரணமான காலிப்பணியிடங்கள் என்றால் என்ன?
3.
நிறுமத்தை தோற்றுவிக்கும் போது பங்கு முதலை திரட்டும் போது விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் குறிப்பிடுக.
4.
பின்வருவனவற்றிற்கு சிறுகுறிப்பு வரைக.
1) பால்பொருள் உற்பத்தி தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம்
2) திட்ட அறிக்கை
5.
தொழில் முனைவையே தொழிலாகக் கொண்ட முனைவோர் எப்படி செயல்படுகிறார்?
6.
தொழில் முனைவோர் மற்றும் அகத்தொழில் முனைவோர் இவர்களை வேறுபடுத்துக.
7.
மாற்றுமுறை மற்றும் உரிமை மாற்றம் இவைகளை வேறுபடுத்துக. (ஏதேனும் 3)
8.
பொருள் விற்பனை ஒப்பந்தம் உட்கிடை நிபந்தனைகள் மற்றும் நம்புறுதிகளை விவாதிக்க.
9.
முதலீடுகளை திரும்பப்பெறுதலின் நன்மைகள் யாவை?
10.
சமூக சந்தையிடுதலின் நோக்கங்கள் யாவை?
11.
வியாபாரத்தின் மூன்று சுற்றுச்சூழல் காரணிகளை விளக்கு
12.
மாநில ஆணையத்தின் உச்சநீதி அதிகார வரம்பு என்ன?
13.
நுகர்வோர் உரிமைகள் - வரையறு.
14.
நுகர்வோரியல் குறித்து இயற்றப்பட்ட முக்கியச் சட்டங்கள் யாவை? (ஏதேனும் 3)
15.
பொருளின் விலையை பாதிக்கும் காரணிகள் யாவை?
16.
சந்தையிடுகையாளர் ஓர் புதுமை கண்டுபிடிப்பாளரா? நீர் அதை ஏற்றுக்கொள்வீரா?
17.
பணிவழி பயிற்சி பற்றி நீ அறிவது யாது?
18.
அடைவுச் சோதனை குறித்து நீவீர் அறிவது யாது?
19.
வேலை வாய்ப்பு இணையதளங்கள் என்றால் என்ன?
20.
மனித வளம் மற்றும் மனித வள மேலாண்மைக்கு இடையே உள்ள வேறுபாடுகளில் ஏதேனும் இரண்டு தருக.
21.
பத்திர ஒப்பந்தங்கள் சட்டப்படி செபியின் அதிகாரங்களை விளக்குக.
22.
தேசிய பங்குச் சந்தை முறை (NSMS) பற்றி விளக்குக.
23.
வைப்புச் சான்றிதழின் இயல்புகளை விவரி.
24.
தேசிய தீர்வக மற்றும் களஆசிய அமைப்பு - சிறு குறிப்பு வரைக.
25.
உடனடி சந்தை மற்றும் எதிர் நோக்கிய சந்தைகளுக்கும் இடையேயான வேறுபாடுகளை விளக்குக.
26.
குறியிலக்கு மேலாண்மையில் ஈடுபட்டுள்ள செயல்முறைகள் யாவை?
27.
மேலாண்மையை நிர்வாகத்திலிருந்து வேறுபடுத்துக. (ஏதேனும் 3)
1.
1. வாக்கெடுப்பு என்ற சொல் இலத்தீன் சொல்லான "வாக்கம்" என்ற சொல்லிலிருந்து வந்தது.
2. ஒரு முன்மொழிவுக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ ஒருவர் தனது விருப்பத்தை உரிய முறையில் பதிவு செய்வது வாக்கெடுப்பு.
3. ஒரு நிறுமத்தின் முன்மொழிவை இயக்குநர்கள் வாக்கெடுப்பு நடத்தி முறையாக நிறைவேற்றப்பட வேண்டும்.
2.
பொதுக்கூட்டத்தில் பங்குதாரர்களால் நியமிக்கப்பட்ட ஒரு இயக்குனர் பதவியை ராஜினாமா செய்தாலோ அல்லது இறந்தாலோ ஏற்படும். காலியிடம் சாதாரண (தற்காலிகமாக ஏற்படுத்தப்பட்ட) காலியிடம் எனப்படும்.
3.
1. ஒரு நபர் தன்னுடைய வியாபாரத்தில் முதலீடு செய்து அதன் மூலம் தன்னுடைய நிறுமத்தை வளர்ச்சியடைய செய்வது முதல்.
2. இந்த முதல் தொகையை உயர்த்த நிறுமம் பங்குகளை வெளியிடுகின்றன.
3. பங்குகளை வெளியிட்டு கிடைக்கக் கூடிய பணத்தைக் கொண்டு நிறுமமானது சரக்கு, வணிக வளாகம் போன்ற சொத்துக்களை வாங்கி தனது நிலை முதலை உயர்த்துகின்றனர்.
4. ஒரு வரையறுக்கப்பட்ட நிறுமத்தின் பங்குகள் அனைத்து பங்கு முதலாக கருதப்படும்.
4.
1. பால் பண்ணை தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் :
விவசாயம், செல்லப்பிராணிகள், விலங்குகள் மற்றும் சிறிய பால்பண்ணைகளை உருவாக்கும் செயல்திட்டங்களுக்கும் மற்றும் அதற்கான கருவிகளை வாங்க நிதி உதவி அளிப்பது.
2. திட்ட அறிக்கை :
நிதியியல், தொழில்நுட்ப அறிவு உழைப்பு மற்றும் மூலப் பொருட்களின் ஆதாரங்கள், சந்தை திறன் மற்றும் இலாபத்தன்மை போன்ற அம்சங்களை உள்ளடக்கிய அறிக்கை.
5.
1. எந்த ஒரு தொழிலையும் நிரந்தரமாக நடத்த மாட்டார்.
2. புதிய தொழிலை நடப்பு சூழ்நிலைக்கு ஏற்ப சிந்தித்து உருவாக்கி வளர்த்து பின் அத்தொழிலை விட்டு வெளியேறுவது இவரின் பலம்.
3. இவரை தொழில் முனைவு வித்தகர்கள் எனவும் அழைக்கலாம்.
6.
| அடிப்படை | தொழில் முனைபவர் | அகத்தொழில் முனைவோர் |
| சிந்தனை | தடையற்ற சிந்தனையாளர் | தன்னிசையான சிந்தனையாளர் ஆனால் தொழில் நிறுமத்தின் உள் செயல்படுபவர் |
| சார்பு நிலை | தன்னிசையான நபர் | தொழில் முனைவோரை சார்ந்து இருப்பவர் |
| நிதி தோற்றத்தால் | தன் சொந்த முயற்சியில் தொழிலுக்கான நிதியை திரட்ட வேண்டும் | நிதி திரட்டும் பொறுப்பில்லை. ஆனால் நிதியை கையாளும் பொறுப்பு உள்ளது. |
| வெகுமதி | இலாபம் என்ற வெகுமதியைப் பெறுகிறார் | இலாபத்தில் பங்கில்லை, ஊதியம், ஊக்க ஊதியம் மற்றும் மேம்படிகள் பெற வாய்ப்புண்டு |
| இடர் ஏற்றல் | கட்டாயம் இடர் ஏற்க வேண்டும் | இடர்பாட்டில் பங்கு பெறுவதில்லை. செயல்திட்டம் தோல்விக்கு பொறுப்பேற்பதில்லை |
| தகுநிலை / தரநிலை | உரிமையாளர் | ஊழியர் |
| செயல்பாடு | தொழிலுக்குப் புறத்தே நின்று பெரும்பாலும் செயல்படுபவர் | முழு நிறுமத்திற்கு உட்பட்டு இயங்கும் நபர் |
7.
| வ.எண் | வேறுபாடுகள் | மாற்றுமுறைத் தன்மை | உரிமைமாற்றம் |
| 1 | சட்டமுறை உரிமை மாற்றம் | ஆவண மாற்றுமுறை ஆவணத்தைப் பொறுத்தவரை உரிமையை மேலெழுதித் தருவதன் மூலமாகவோ அல்லது கொணர்பவர் மாற்றுச் சீட்டை வகையில் ஒப்படைப்பதன் மூலமாகவோ உரிமை மாற்றம் செய்ய முடியும். | உரிமை மாற்றும் சட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்ட சடங்கு முறைப்படி உரிமை மாற்ற வேண்டும். |
| 2 | அறிவிப்பு | மாற்றுமுறை ஆவணத்தைக் கொண்ட நபர் கடனாளியிடமிருந்து பணத்தை செலுத்தி கேட்க தேவையில்லை. | உரிமை மாற்றத்தில் உரிமை மாற்றம் பெற்றவர் கடனாளியிடமிருந்து தன்னிடம் கடன் தொகையை செலுத்த அறிவிக்க வேண்டும். |
| 4 | மறுபயன் | மாற்றுமுறைத் தன்மையில் மறுபயன் இருப்பதாகக் கொள்ளப்படுகிறது. | உரிமை மாற்றம் பெற்றவர் மறுபயனை மெய்ப்பிக்க வேண்டும். |
8.
உட்கிடை நிபந்தனைகள் :
(i) உரிமை குறித்த நிபந்தனை : பொருளை விற்பவர் அந்தக் குறிப்பிட்டப் பொருளை விற்க உரிமை கொண்டவர். வாங்குபவர் பொருளை விற்பவர். அந்த பொருளை விற்பதற்கு உரிமையுள்ளவர் என்று கருதிக் கொள்ளலாம்.
(ii) விவரிப்பு குறித்த நிபந்தனை : விவரிப்பு மூலம் விற்பனை செய்யப்பட்ட சரக்கு விவரித்தபடியே இருக்க வேண்டும். அதாவது வாங்குபவர் வாங்க விரும்பும் பொருளின் உண்மை நிலையை சோதித்து அறியும் வாய்ப்பைப் பெற்றிருந்தால் அப்பொழுது இந்த விதி பொருந்தாது.
உட்கிடை நம்புறுதிகள் :
(i) இடையூறற்ற உரிமை: தான் வைத்திருக்கும் சரக்கைப் பிறர் இடையூறு இன்றி முழுமையாக அனுபவிக்க முடியும் என்ற நம்புறுதி உடன்பாட்டில் உண்டு. வேறு யாரேனும் தன்னை விட சிறந்த உரிமை இருப்பதாகக் கூறிக்கொண்டு பின்னர் சரக்கு உரிமைக்கு இடையூறு விளைவித்தால், விற்குநரிடம் வாங்குனர் நட்ட ஈடு பெறும் உரிமை பெற்றவர்.
(ii) வில்லங்கம் பற்றிய நம்புறுதி: தான் வாங்கிய சரக்கு மூன்றாம் நபரின் பிணையத்திற்கு உட்பட்டதல்ல என்ற வில்லங்கம் பற்றிய நம்புறுதி விற்பனை ஒப்பந்தத்தில் உண்டு.
9.
1. பொதுக் கடன் குறைதல்
2. வணிக ரீதியான ஆபத்தை தனியார் துறைக்கு மாற்றுவது.
3. தனியார் மூலதனத்தை அதிகமாக ஊக்கப்படுத்துவது.
4. புதிய நிறுவனங்களை சந்தையில் நுழைவதற்கு அனுமதிக்கிறது.
10.
1. சமூக சந்தைப்படுத்துதலின் முக்கிய நோக்கம் சமூக நலனை பாதுகாப்பது ஆகும்.
2. சமூகம் விரும்பத்தக்க மற்றும் உடல் நலனைப் பாதுகாக்கும் பொருள்களை சந்தையிடுவதை சமூக சந்தைப்படுத்துதலைக் குறிக்கும்.
3. சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கும் அல்லது பாதிக்கும் காரணிகளை நீக்கி தரமான வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதும் சமூக சந்தைப்படுத்துதலின் முக்கிய நோக்கமாகும்.
11.
1. உட்புறச்சூழல்:
i) இது நிறுவனத்தின் உட்புறத்தோடு தொடர்புடைய காரணிகளாகும்.
ii) இவற்றை கட்டுப்படுத்துதல், மாற்றியமைத்தல் போன்றவற்றை எளிதில் மேற்கொள்ள முடியும்.
(எ.கா) கொள்கைகள் மற்றும் திட்டங்கள், நிறுவன கட்டமைப்பு, ஊழியர்கள், நிதி மற்றும் வளங்கள்.
2. நுண்ணிய சூழல்:
வியாபாரத்தின் செயல்திறனை உடனடியாக பாதிக்கும் சுற்றுச்சூழலாக இருக்கும் காரணிகளை இது குறிக்கிறது.
(எ.கா) நிதி அளிப்பவர்கள், சரக்கு விற்பனையாளர்கள், சந்தையிடுகை இடைநிலையர்கள், பொதுமக்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் போட்டியாளர்கள்.
3. பரந்த சூழல்:
i) வணிகத்தின் வெற்றி பரந்த சூழலுக்கு பொருத்தக்கூடிய தன்மையை சார்ந்து இருக்கிறது.
ii) இவை கட்டுப்படுத்த முடியாத காரணிகள் ஆகும்.
iii) அவை வியாபாரத்திற்கான மகத்தான வாய்ப்புகளை வழங்குகின்றன.
iv) வியாபாரத்திற்கு தீவிர அச்சுறுதல்களை ஏற்படுத்துகின்றன.
12.
1. 20 இலட்சத்திற்கு மிகையாக 1 கோடிக்குள்ளாக விற்கப்பட்ட சரக்குகள் மற்றும் சேவை தொடர்பாக எழும் குறை மனுக்களை விசாரிக்கும் அதிகாரம் மாநில ஆணையத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
2. மாநில மன்றத்தின் தீர்ப்புகளுக்கு எதிராக மேல் முறையீடு செய்யப்பட்ட மனுக்களை விசாரித்து தீர்ப்பு வழங்கும் அதிகாரம் மாநில ஆணையத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
13.
1. நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1986 இன் படி ஒவ்வொருவரும் தனி நபர், கூட்டாண்மை, இந்து கூட்டுக்குடும்பம் மற்றும் நிறுமம் என்பதனுள் அடங்குவர்.
2. அவர்களின் உரிமை என்பது மூலப்பொருட்களை கொள்முதல் செய்து முடிவுற்ற பொருட்களாக உற்பத்தி செய்வது.
3. நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் முக்கியத்துவம் ஒவ்வொரு நுகர்வோரும் தனது உரிமை பற்றியும், நீதிமன்றம் மற்றும் அதன் உரிமைகள், வரம்பு மீறல்களைப் பற்றி தெரிந்து கொள்வதேயாகும்.
14.
(i) இந்திய ஒப்பந்தச் சட்டம், 1872.
(ii) பொருட்கள் விற்பனைச் சட்டம், 1930
(iii) வேளாண்பொருட்கள் தரப்படுத்துதல் மற்றும் விற்பனைச் சட்டம், 1937.
15.
1. வாடிக்கையாளர் மனப்பாங்கு
2. நுகர்வோரின் தேவை
3. வழங்கல் வழிகள்
4. வாடிக்கையாளரின் பொருளாதார சூழல்
16.
ஆம், சந்தையிடுகையாளர் தனது பண்டங்கள் மற்றும் பணிகளை சந்தையில் தனக்கென ஒரு இடத்தை ஏற்படுத்துவதற்கு நடைமுறையில் இருந்து வரும் பொருட்களின் இயல்பை அதிகரித்தல், மதிப்பை கூட்டுதல், விலையில் மாற்றத்தை ஏற்படுத்துதல், பொருள் கொண்டு சேர்க்கும் முறை, தொழில் முறையில் மாற்றம் மற்றும் உற்பத்தி முறையில் மாற்றம் போன்றவற்றை செய்து வருகிறார்.
17.
(i) பணி வழி பயிற்சி என்பது பணி செய்யும் இடத்திலேயே பணியாளர்களுக்கு அங்குள்ள மேற்பார்வையாளரால் (அ) முன் அனுபவம் பெற்றவரால் பணி சார்ந்த போதனை அளிக்கப்படுகிறது.
(ii) இதனை வேறுவிதமாகவும் கூறலாம். அதாவது பணியாளர் பணி சார்ந்த விவரங்களை பணிச்சூழல் மூலம் கற்கிறார்.
(iii) 'செய்து கற்றல் மற்றும் சம்பாதிக்கும் போது கற்றல்' என்ற அடிப்படைக் கோட்பாட்டினை கொண்டது.
(iv) பணிவழி பயிற்சி ஒப்பீட்டளவில் குறுகிய காலத்தில் கற்றுக் கொள்ளக்கூடிய திறன்களை இறக்குமதி செய்வதற்கு ஏற்றது.
18.
(i) இது குறிப்பிட்ட துறையில் விண்ணப்பதாரரின் அடைவுத் திறனை அளவிடும் சோதனையாகும். கல்வி நிறுவனங்களில் வழக்கமாக நடத்தப்படும் தேர்வுகள் இச்சோதனை முறையைச் சார்ந்ததே. இதனை அறிவுத் திறன் சோதனை எனவும் அழைக்கலாம்
(ii) கற்றல் அனுபவத்திற்கு முன்னும், கற்றல் அனுபவத்தின் போதும், அதன் பிறகும் நடத்தப்படுகிறது.
(iii) பணி குறித்த சிறப்பறிவில் விண்ணப்பதாரரின் தேர்ச்சி தன்மையை அறிய இச்சோதனை நடத்தப்படுகிறது.
அ) ஓட்டுனர் பணிக்கு விண்ணப்பித்தவரை வாகனம் ஓட்டிக்காட்டச் சொல்லுதல்.
ஆ) இசைப்பள்ளி மாணவரை இசைக்கச் சொல்லி கேட்டல்.
இ) ஆசிரியர் பணிக்கானவரை பாடம் நடத்திக் காட்டச் சொல்லி சோதித்தல்.
19.
(i) நிறுவனங்கள் இணையதளங்களை வேலைவாய்ப்புக்கு பயன்படுத்தி தாங்கள் எதிர்பார்க்கும் தகுதியுடைய பணியாளர்களை தேர்வு செய்து காலியிடங்கள் பூர்த்தி செய்யலாம்.
(ii) படித்த இளைஞர்கள் தங்கள் தகுதிக்கு ஏற்றார் போன்ற வேலையை தேர்வு செய்ய இந்த இணையதளங்கள் உதவ செய்கிறது.
(iii) இந்த இணையதளங்கள் மூலம் வேலை இல்லா நிலை தவிர்க்கப்படுகிறது.
20.
| வ.எண் | மனித வளம் | மனித வளம் மேலாண்மை | |
|---|---|---|---|
| 1. | பொருள் | தனிப்பட்ட மற்றும் நிறுவனக் குறிக்கோள்களை அடைவதற்கு எவர் ஒருவர் திறமை, தனித்திறன், அறிவு தகுதிகள், போட்டித்திறன் மற்றும் சொல் திறன் பெற்றிருக்கிறாரோ அவரே மனித வளமாக கருதப்படுகிறார். | மனித வளத்தை நிர்வகிக்கும் மேலாண்மையின் கிளையே மனித வள மேலாண்மை என அழைக்கப்படுகிறது. |
| 2. | காரணி | உற்பத்தி செய்யும் ஒரே காரணியாக இது நிகழ்கிறது. | திறன்மிக்க மேலாண்மை எங்கு இருக்கிறதோ அங்கெல்லாம் இது இருக்கிறது. |
21.
(i) பங்குச் சந்தை திறம்பட ஒழுங்குபடுத்த நிதி அமைச்சகம் செப்டம்பர் 13, 1994 ஆம் ஆண்டு பத்திரங்கள் ஒப்பந்தங்கள் சட்டத்தின் கீழ் செபிக்கு பல்வேறு அதிகாரங்களை வழங்கியுள்ளது.
(ii) ஒவ்வொரு பங்குச் சந்தையிலும் ஆளும் குழுவில் மூன்று உறுப்பினர்களை நியமிக்க நிதி அமைச்சகம் செபிக்கு அதிகாரம் அளிக்கிறது.
22.
(i) தேசிய பங்குச்சந்தை அமைப்பு ஸ்ரீ எம்.ஜே. பெர்வானி தலைமையில் (பிரபலமாக பெர்வானி குழு) உயர் அதிகாரம் கொண்ட அமைப்பினால் ஏற்படுத்தப்பட்டது.
(ii) இந்தியாவில் உள்ள தேசிய பங்குச்சந்தைகள் பின்வருமாறு:
1. இந்தியாவின் தேசிய பங்குச்சந்தை
2. இந்திய பங்கு வைப்பு குழு லிமிடெட்
3. தேசிய தீர்வை மற்றும் வைப்பு முறை
4. இந்திய பங்கு பத்திரங்கள் விற்பனைக் கழகம்.
23.
1. கால வைப்புக்கான உரிமை ஆவணம்.
2. பிணையமற்ற மாற்றுமுறை ஆவணம்.
3. மேல் எழுதுதல் மூலம் எளிதில் மாற்றி வழங்கும் தன்மை உடையது.
4. முக மதிப்பிலிருந்து வட்டத்தில் வெளியிடுதல்
5. சலுகை நாட்கள் இல்லாமல் குறிப்பிட்ட தேதியில் திரும்பச் செலுத்தக்கூடியது.
24.
(i) பங்கில்லா வணிக முறையின் கீழ் பத்திரங்கள் தீர்வுகள் அனைத்தும் பதிவேட்டின் மூலமே நடைபெறுகிறது.
(ii) பங்கில்லா வணிக முறையின் மூன்று பகுதிகள்:
அ) தேசிய வணிக ஒப்பீடு மற்றும் அறிக்கை முறையானது பத்திரச் சந்தையின் வரையறை மற்றும் கட்டளைகளை விளக்குகிறது.
ஆ) தீர்வு தேதியன்று தரகர்களின் நிகர ரொக்கம் மற்றும் பங்கு பொறுப்புகளை தேசிய அகற்றீட்டு முறை முடிவு செய்வதையே குறிக்கோளாகக் கொண்டுள்ளது.
இ) எந்த ஒரு பத்திரமும் மாற்றப்படாமல் மின்னணு மூலம் பதிவுகள் செய்யப்பட்டு பங்கு உரிமையை மாற்றுவதையே தேசிய வாய்ப்பு அமைப்பு செய்கிறது.
25.
| வ.எண் | ஒப்பீட்டு அடிப்படை | உடனடி சந்தை | எதிர்நோக்கிய சந்தை |
|---|---|---|---|
| 1 | பொருள் | ஆவணங்களை வழங்கலும், ரொக்கம் பெறுதலும் உடனடியாக நடைபெறும் சந்தை உடனடி சந்தை ஆகும். | சொத்து வழங்கலும், ரொக்கம் செலுத்தலும் முன்னரே தீர்மானிக்கப்பட்டு எதிர்காலத்தில் நடைபெறும் சந்தை எதிர்கால சந்தை ஆகும். |
| 2 | விலை நிர்ணயம் / முடிவு | விலைகளை உடனுக்குடன் சந்தை நிலவரத்தைப் பொறுத்து விலை முடிவு செய்வது ஆகும். | எதிர்காலத்தில் பொருட்களை கைமாற்றிக் கொள்வதற்காக இன்றே விலைகளை முடிவு செய்வது ஆகும். |
26.
1. அமைப்பின் குறிக்கோள்களை வரையறுத்தல்
2. ஒவ்வொரு பிரிவின் இலக்குகள்
3. முக்கிய முடிவுப் பகுதிகள்
4. கீழ்நிலை ஊழியர்களின் குறிக்கோள்களை நிர்ணயித்தல்
5. குறிக்கோள்களுடன் வளங்களை ஒப்புநோக்குதல்
6. காலவாரியான மறு ஆய்வுக் கூட்டம் கூட்டுதல்
7. செயல்பாடுகளை மறு ஆய்வுக் கூட்டம் கூட்டுதல்
27.
| கோட்பாட்டின் அடிப்படை | மேலாண்மை | நிர்வாகம் |
|---|---|---|
| பொருள் | மேலாண்மை என்பது மற்றவர்களின் முயற்சி மற்றும் ஒத்துழைப்புடன் நோக்கங்களை எய்தும் ஒரு கலையாகும். | ஒரு குழுவால் ஒரு நிறுவனத்தை நிர்வகிப்பதற்கான செயல் முறையே நிர்வாகம் என்று அழைக்கப்படுகின்றது. |
| அதிகாரம் | மத்திய மற்றும் கீழ்மட்ட அளவில் | உயர் மட்ட அளவில் |
| பங்கு | நிறைவேற்றம் | முடிவெடுத்தல் |
| தொடர்பு தன்மை | கொள்கைகளை செயல்படுத்தல் | கொள்கைகளை உருவாக்குதல் |
| செயல்பாட்டு பரப்பு | நிர்வாகத்தின் கீழ் செயல்படுகிறது | நிறுவனத்தின் செயல்பாடுகள் மீது முழுக்கட்டுப்பாடு |
| செயல் | திட்டங்களையும், கொள்கைகளையும் செயல்படுத்தல் | திட்டங்கள் தீட்டுதல், கொள்கைகளைக் கட்டமைத்தல் மற்றும் இலக்குகளை நிர்ணயித்தல். |
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards