12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 05/10/2020
12 ஆம் வகுப்பு வணிகவியல் மாதிரி 3 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Commerce Tamil Medium Sample 3 Mark Creative Questions (New Syllabus 2020)
12ஆம் வகுப்பு Commerce / வணிகவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Commerce / வணிகவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Commerce Test1.
அடிப்படை தேவைகளுக்கான உரிமை என்றால் என்ன?
2.
பாதிக்கப்பட்ட நுகர்வோர் தனது புகார் மனுவை யாரிடம் தாக்கல் செய்ய வேண்டும்?
3.
செபியின் நோக்கங்களை கூறு?
4.
நுகர்வோர் பாதுகாப்பு என்றால் என்ன?
5.
உரிமை பங்குகள் என்றால் என்ன?
6.
இயக்குனர்களின் நிலையைப் பற்றி கூறுக.
7.
தொழில் முனைவோர் தனது இடத்தை தேர்வு செய்ய உள்ள நான்கு வாய்ப்புகளை கூறுக.
8.
வில்லங்கம் பற்றிய நம்புறுதி என்றால் என்ன?
9.
லெவரேஜ் என்பதன் பொருள் தருக
10.
தெளிவான தொழில் முனைவோர் - விளக்குக.
11.
நிறும செயலரின் அதிகாரங்கள் மற்றும் உரிமைகள் யாவை?
12.
உலகமயமாக்கலின் வடிவங்கள் கூறுக.
13.
வெளிப்புற சூழல் என்றால் என்ன?
14.
பணியாளர் தேர்வு முறை நிலைகளை குறிப்பிடுக.
15.
உனது தந்தை அரசுப் பள்ளியிலிருந்து ஓய்வு பெற்றவர். அவரது ஓய்வுக்கால பணப் பலன்களை முதலீடு செய்யும் வழிமுறையைக் கூறுக
16.
ஆட்சேர்ப்பின் நேரடி வளங்கள் யாவை?
17.
முதல் நிலைச் சந்தையில் மூலதனத்தை திரட்ட பயன்படுத்தும் மூன்று வழிகளை விளக்கு
18.
மனித வள மேலாண்மை ஒரு அறிவியலா? அல்லது கலையா? உன்னுடைய கூற்றை தருக.
19.
நிதிச் சொத்துக்களின் வகைகளைக் கூறுக
20.
மேலாளரின் நேரத்தை சேமிப்பது விதிவிலக்கு மேலாண்மையா? குறியிலக்கு மேலாண்மையா? காரணம் கூறுக.
21.
மகளிர் தொழில் முனைவோருக்கு நல்ல ஆதரவை வழங்கும் சங்கங்கள் யாவை?
22.
பண வசதி மாற்றுச் சீட்டு என்றால் என?
23.
மேலாண்மையின் முக்கிய செயல்பாடுகள் யாவை?
24.
மேலாண்மைக்கும், பணியாளர்களுக்கும் இணக்கம் ஏற்படுவதற்கான காரணிகள் யாவை?
25.
அம்புஷ் / மறைமுக சந்தையிடுதல் என்றால் என்ன?
26.
மரபு வழி மற்றும் நவீன வழி - நவீன சந்தையிடுகை கலவை கூறுகள் யாவை?
27.
சந்தையின் தேவைகளைக் கூறுக.
28.
பணியிடப் பயிற்சி முறைகள் யாவை?
1.
அடிப்படை தேவைகளான உணவு, உடை, சுத்தமான நீர் மற்றும் ஆரோக்கியமான சூழலை பெறும் உரிமை
2.
(i) தயாரிப்பாளர் (அல்லது)
(ii) விற்பனையாளர் (அல்லது)
(iii) பொருளை விற்ற வணிகர்
3.
1. பரஸ்பர நிதி இயக்கத்தின் செயல்பாடுகளை கண்காணித்தல்
2. சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் நிறுவனங்களை தடை செய்தல்
3. முதலீட்டாளர்கள் நலன்களை பாதுகாப்பதில் சிறந்த பங்களிப்பை வழங்குதல்
4. தணிக்கை மற்றும் ஆய்வுகளை நடத்துதல்
5. உள் வழி வணிகத்தை தடுத்தல்
4.
(i) நுகர்வோருக்கான அவர்களின் நோக்கங்களை அடைய வடிவமைக்கப்பட்ட சமூக நடவடிக்கைகளின் வடிவம் ஆகும்
(ii) இது நுகர்வோர் சமுதாயம் நல்வாழ்வு பெறும் நேர்க்கோடு வடிவமைக்கப்பட்டதாகும்
5.
1. நிறுமத்தின் பங்களிப்பு மற்றும் பங்கு முதலை உயர்த்துவதற்காக வெளியிடப்படும் பங்குகள்.
2. இதன் வெளியீடு செயல்முறை விதிகளுக்குட்பட்டு இருக்கும்.
6.
1. இயக்குனர்கள் முகவர்களாக:
நிறுமத்தின் சார்பாக ஒப்பந்தங்களில் ஈடுபடும் பொழுது இயக்குனர்கள் முகவர்களாக செயல்படுகின்றனர்.
2. இயக்குனர்கள் பொறுப்பாண்மையராக:
நிறுமத்தின் சொத்துக்களை நிறும நலனுக்காக மட்டும் பயன்படுத்தும் போது பொறுப்பாண்மையராக செயல்படுகிறார்.
3. இயக்குனர்கள் பணியாளராக:
ஒரு இயக்குனர் தனிப்பட்ட ஒப்பந்தத்தின் மூலம் பணியாளராக செயல்படலாம்.
4. இயக்குனர்கள் அதிகாரிகளாக:
நிறும மேலாண்மையில் ஈடுபடும் பொழுது அதிகாரியாக செயல்படுகின்றனர்.
7.
(i) சிறு தொழில்துறை மேம்பாட்டு கழகம், தமிழ்நாடு மாநில தொழில்துறை மேம்பாட்டு முகமைத்துவத்தால் உதவி செய்யப்படலாம்.
(ii) தொழிற்சாலை கொட்டகை கட்ட மாநில தொழில்துறை மேம்பாட்டு முகமைத்தால் உதவி செய்யப்படலாம்.
(iii) தனியார் நில மேம்பாட்டாளரால் அளிக்கப்பட்ட இடத்தில் தொழில் தொடங்கலாம்.
(iv) தனியார் நிலத்தை வாங்கி தொழில் முனைவோர் அதை தொழில்துறை பயன்பாட்டிற்கு உருவாக்கலாம்.
8.
தான் வாங்கிய சரக்கு மூன்றாம் நபரின் பிணையத்திற்கு உட்பட்டதல்ல என கூறும் நம்புறுதி வில்லங்கம் பற்றிய நம்புறுதி.
(எ.கா) -ராஜேந்தர் என்பவர் கோபால் என்பவரிடம் தன்னுடைய கைகடிகாரத்தை அடமானம் வைத்து பணம் பெற்றார்.
- பின்னர் ராஜேந்தர், கோபாலிடம் ஒரு நாள் கைகடிகாரத்தை இரவல் தரும்படி கொடுக்க வேண்டினால்.
- கோபால் அதை கொடுத்த பிறகு வேல்முருகனுக்கு விற்றார்.
- இப்பொழுது கோபால் கைகடிகாரத்தை நிலைமையை சொல்லி வேல்முருகனிடம் கேட்கும் பொழுது அவர் திருப்பி கொடுத்து விட வேண்டும்.
9.
(i) பங்கு விலைகளின் மாற்றங்களிலிருந்து பங்குகளின் முழுமையான விலையை செலுத்துவதன் மூலம் இலாபம் கிடைக்கலாம்
(ii) பங்குகளை வாங்குவதன் மூலம் அதனை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதையே லெவரேஜ் என்று அழைக்கப்படுகிறது
10.
1. உளவியல் மற்றும் பொருளாதார காரணிகளால் உந்தப்பட்டு தொழில் துவங்க முனைந்தவர்கள்
2. இவர்கள் வேறு யாரிடமும் பணிபுரிய விரும்ப மாட்டார்கள்.
3. தன்னுடைய அறிவு, அனுபவம், திறமை, ஆற்றல் போன்றவற்றை உள்ளீடாக செலுத்தி இலாபம் ஈட்டுபவர்கள்.
எ.கா : திருபாய் அம்பானி, T.V. சுந்தரம். டாடா பிர்லா.
11.
i. மேற்பார்வை மற்றும் கட்டுப்படுத்துதல்
ii. கையொப்பம் இடும் உரிமை
iii. அதிகாரம் செலுத்துதல்
iv. சான்றிதழ் வழங்கும் உரிமை
v. ஊதியம் மற்றும் இழப்பீடு கோரும் உரிமை
vi. முன்னுரிமை கடனீந்தோர்
vii. கூட்டத்தில் கலந்து கொள்ளும் உரிமை.
12.
1. வெளிநாட்டு வர்த்தக கொள்கை
2. ஏற்றுமதி ஊக்குவிப்பு
3. நாட்டிற்கு வருமானத்தை எடுத்து வருவது
4. கட்டண குறைப்பு
5. சிறந்த போட்டிகளை ஊக்குவித்தல்
13.
1. வணிகத்திற்கு வெளியேயுள்ள காரணிகளை குறிக்கும்.
2. இவற்றில் எவ்வித மாறுதலும் கொண்டு வர முடியாது.
எ.கா: பொருளாதாரம், அரசியல் மற்றும் சமூக கலாச்சார காரணிகள்
14.
1. விண்ணப்ப பரிசீலனை, தேர்வு சோதனை
2. நேர்காணல்
3. உடல் சோதனை
4. ஒப்புதல்
5. இறுதிநிலை தேர்ந்தெடுத்தல்
6. பணி ஒப்பந்தம்
15.
(i) மூலதனச் சந்தையில் பங்குகள், கடனீட்டுப் பத்திரங்கள், அரசுப் பத்திரங்கள் போன்றவற்றில் முதலீடு செய்யலாம்
(ii) பணச் சந்தையில் வணிக இரசீதுகள், வணிகத்தாள், கருவூலச் சீட்டு, மாற்றுமுறை ஆவணம் போன்றவற்றிலும் முதலீடு செய்யலாம்.
16.
விளம்பரங்கள், பரிந்துரையில்லாத விண்ணப்பதாரர்கள், நேர்முகத் தேர்வு, வளாக தேர்வு, தொழிற்சாலை வாயிலில் ஆட்சேர்ப்பு, போட்டி நிறுவனங்கள், இணையவழி ஆட்சேர்ப்பு போன்றவையாகும்.
17.
பொது வெளியீடு:
(i) புதிய நிறுமத்தால் பொதுமக்களுக்கு பத்திரங்கள் விற்பனை செய்வதன் மூலம் மூலதனம் திரட்டப்படுவது பொது வெளியீடு ஆகும்
(ii) இது மிகவும் பொதுவான முறையாகும்
உரிமை வெளியீடு:
ஏற்கனவே இயங்கிக் கொண்டிருக்கும் நிறுமம் கூடுதல் முதலீட்டை திரட்ட விரும்பும் போது முன்னுரிமை அடிப்படையில் தனது பங்குதாரர்களுக்கு முதலில் பங்குகளை முன்மொழிவது உரிமை வெளியீடு எனப்படும்
தனியார் வெளியீடு:
ஒரு சிறு குழு முதலீட்டாளர்களுக்கு பத்திரங்களை தனிப்பட்ட முறையில் விற்பனை செய்யும் முறை தனியார் வெளியீடு முறை ஆகும்
18.
1. மனித வள மேலாண்மை என்பது அறிவியல் மற்றும் கலை ஆகிய இரண்டுமாக இருத்தல் வேண்டும்.
2. இது சோதனைகள் மற்றும் உற்றுநோக்கல் அடிப்படையிலும் அத்துடன் திறம்பட மனித வளத்தைக் கையாள்வதின் அடிப்படையிலும் இவை அறிவியல் மற்றும் கலை ஆகிய இரண்டுமாக கருதப்படுகிறது.
19.
சந்தைப்படுத்தப்படும் சொத்துக்கள்:
அதிகப்படியான தடைகள் இன்றி ஒரு நபரிடமிருந்து மற்றொரு நபருக்கு எளிதாக மாற்றப்படும் சொத்துக்களை சந்தைப்படுத்தப்படும் சொத்துக்கள் ஆகும்
எ.கா: அரசு பத்திரங்கள், பொதுத்துறை பிணையங்கள்
சந்தைப்படுத்தப்படா சொத்துக்கள்:
எளிதில் மாற்ற முடியாத சொத்துக்கள் சந்தைப்படுத்தப்படா சொத்துக்கள் ஆகும்.
எ.கா: வங்கி வைப்புகள், காப்பீடுகள்
20.
1. விதிவிலக்கு மேலாண்மை என்பது ஒரு மேலாளரின் நேரத்தை சேமிக்கிறது.
2. ஒரு மேலாளர் விதிவிலக்கான செயல்களை மட்டுமே கையாளுகிறார்.
3. இவர் வழக்கமான பிரச்சனைகளை கீழ்நிலை ஊழியர்களின் வசம் விடுகிறார்.
21.
1. இந்திய மகளிர் தொழில் முனைவோர் சம்மேளனம்
2. சிறு தொழில் வளர்ச்சி அமைப்பு
3. இந்திய வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி
4. சுய தொழில் ஈடுபட்டுள்ள மகளிர் சங்கம்
5. கர்நாடக மகளிர் தொழில் முனைவோர் சங்கம்
6. பன்னாட்டு தொழில் முனைவு மற்றும் தொழில் முன்னேற்ற சங்கம்
22.
பின்னாளில் ஒருவருக்கு உதவும் என்ற நோக்குடன் மறுபயன் இன்றி வரையப்படும் மாற்றுச் சீட்டு பணவசதி மாற்றுச் சீட்டு எனப்படும்
23.
1. திட்டமிடுதல்
2. ஒழுங்கமைத்தல்
3. பணிக்கமர்த்துதல்
4. இயக்குவித்தல்
5. கட்டுப்பாடு காத்தல்
6. ஒருங்கிணைத்தல்
7. செயலூக்கமளித்தல்
24.
1. இலாப உபரியை பணியாளர்களோடு பகிர்ந்து கொள்ளல்
2. பணியாளர்களுக்கு பயிற்சி அளித்தல்
3. வேலைப் பகிர்வு
4. ஒற்றுமை உணர்வு
5. நேர்மறை மனநிலை
6. ஒழுங்குணர்வு
7. நேர்மை
25.
1. சந்தையிடுதல் முறையில் புதிய நுட்பமாக, அம்புஷ் (பதுங்கியிருந்து) சந்தையிடுதலைக் கூறலாம்.
2. இம்முறையில் ஒரு நிகழ்ச்சிக்கு எவ்வித நிதியுதவியும் செய்யாமல் வாடிக்கையாளரின் மனதில் பதியும் வகையில் விளம்பரதாரர்களுடன் இணைந்து தங்களுடைய பொருளுக்கும் இரகசிய வழியில் விளம்பரப்படுத்திக் கொள்ளும் நுட்பத்தை அம்புஷ் (பதுங்கியிருந்து) சந்தையிடுதல் என்கிறோம்.
26.
27.
1. பண்டங்கள் மற்றும் பணிகளை பரிமாற்றம் செய்ய வழிவகுக்கிறது.
2. விலைக் கொள்கை மூலம் தேவை மற்றும் அளிப்பை சரி செய்கிறது.
3. சமுதாயத்தின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வழிவகை செய்கிறது.
4. வாழ்க்கையின் புதிய முறையை அறிமுகப்படுத்துகிறது.
5. பொருள் மேம்பாடு மூலம் சந்தை பகுப்பை மேம்படுத்துகிறது.
28.
1. வழிகாட்டுதல் பயிற்சி
2. பணி சுழற்சி பயிற்சி
3. பணி அறிவுறுத்தல் பயிற்சி
4. தொழில் பழக்குநர் பயிற்சி
5. குழு முறை பயிற்சி
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards