12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 06/10/2020
12 ஆம் வகுப்பு பொருளியல் பயிற்சி 3 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Economics Tamil Medium Model 3 Mark Book Back Questions (New Syllabus 2020)
12ஆம் வகுப்பு Economics / பொருளியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Economics / பொருளியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Economics Test

1.
பொருளாதார அளவையியலின் நோக்கங்களை கூறுக.
2.
திட்டமிடலுக்கு ஆதரவான கருத்துகளை விவரி.
3.
நீர்மாசுக்கான காரணங்கள் யாவை?
4.
நேர்முக மற்றும் மறைமுக வரிகளுக்கிடையேயான மூன்று வேறுபாடுகளைக் கூறுக.
5.
சார்க்கின் பணிகளைச் சுருக்கமாகக் கூறுக.
6.
மாறுகின்ற பணமாற்று வீதத்தின் பொருள் தருக?
7.
பண அங்காடியையும், மூலதன அங்காடியையும் வேறுபடுத்துக.
8.
பண அளிப்பினைத் தீர்மானிக்கும் காரணிகள் யாவை?
9.
10.
கீன்சின் கோட்பாட்டை விளக்குக.
11.
தனிமனிதர் வருமானத்திற்கும் செலவிடக்கூடிய வருமானத்திற்கும் உள்ள வேறுபாடு என்ன?
12.
முதலாளித்துவத்தின் சிறப்பினை வரிசைப்படுத்துக.
1.
பொருளாதார அளவையியலின் நோக்கங்கள்:
1. பொருளாதார நடவடிக்கைகளை முன்கணித்தல் மூலமாக அறிந்து விளக்குவதற்கு உதவுகின்றது.
2. இவை மாறிகளுக்கு இடையேயுள்ள கடந்த காலத்திலுள்ள பழைய, நிறுவப்பட்ட உறவுகளை மீண்டும் நிரூபிப்பதற்கும் உதவுகின்றது.
3. புதிய கோட்பாடுகளையும் புதிய உறவுகளையும் நிறுவுவதற்கு உதவுகின்றது.
4. எடுகோள்களை சோதனை செய்யவும், முழுத்தொகுப்பின் பண்புகளை மதிப்பீடு செய்யவும் உதவுகின்றது.
2.
திட்டமிடலுக்கு ஆதரவான கருத்துகள் :
நாட்டின் அங்காடிகளின் இயக்கத்தை முடுக்கி விடுதலும் உறுதியாக்குதலும் : பின்தங்கிய நாடுகளில் அங்காடி சக்திகள் சரிவர இயங்காததற்கு அறியாமையும், பிரபலமும் இல்லாததே காரணம் ஆகும். எனவே, திட்டமிட்ட பொருளாதாரமே அங்காடிப் பொருளாதாரத்திற்கு சிறந்த மாற்றாகக் கருதப்படுகிறது.
வேலையின்மையை அகற்றுதல் : மூலதனக் குறைவும், தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பும் ஏற்படுவதால் அதிகரித்து வரும் தொழிலாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வேலைவாய்ப்பை உருவாக்குவது அரசுகளுக்கு அறை கூவலாக உள்ளது. பின்தங்கிய நாடுகளில் வேலையின்மையையும் மறைமுக வேலையின்மையையும் அகற்றத் திட்டமிடுதல் அவசியமாகும்.
சமமான முன்னேற்றம் ஏற்படுத்துதல்: பொருளாதாரத்தின் பல துறை சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள போதுமான பெரிய நிறுவனங்கள் இல்லாத சூழ்நிலையில் திட்டக்குழுவே சரிசம முன்னேற்றத்தை ஏற்படுத்த உதவும். பின்தங்கிய நாடுகளில் வேளாண்மை, தொழில், சமூகக் கட்டமைப்பு, உள்நாட்டு வாணிகம் பன்னாட்டு வாணிகம் ஆகியத் துறைகளின் முன்னேற்றம் நாட்டின் பொருளாதார முன்னேற்றம் விரைவாக நடைபெறத் தேவைப்படுகிறது.
திட்டமிடல் வறுமையையும் ஏற்றத்தாழ்வையும் குறைக்கும் : திட்டமிடல் என்பது மட்டுமே பின்தங்கிய நாடுகள், நாட்டு வருமானம், தலா வருமானத்தை அதிகரிக்கவும், வறுமையையும், ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்கவும் வேலைவாய்ப்பினை அதிகரிக்கவும் செய்கிறது.
3.
கழிவு நீரும் தேவையற்ற நீரும் வெளியேற்றப்படுதல்:
பல இடங்களில் இருந்து வருகின்ற சாக்கடைத் தண்ணீர், கழிவு நீர் குப்பைகள், வேளாண்மைக் கழிவுகள், தொழிற்சாலைக் கழிவுகள், நீர் நிலைகளில் கொட்டப்படுகின்றன.
இத்தகைய கழிவுகளில் உள்ள நச்சுப் பண்டங்கள் தண்ணீரை மாசுபடுத்தி நச்சுத்தன்மை உள்ளதாக மாற்றுகின்றன.
திடக் கழிவுகள் குவித்தல் : திடப்பொருள் கழிவுகளை நீர் நிலையில் கொட்டுதல், நீர் நிலையுடன் கலந்துவிடுமாறு விட்டுவிடுதல்.
எண்ணெய் சிந்துதல் : கப்பல்களில் குறிப்பாக எண்ணெய்க் கப்பல்களின் எண்ணெய் கடல்நீரை மாசுபடுத்துகின்றது. இதனால் கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன.
அமில மழை : காற்று மாசுவால் அமில மழை ஏற்பட்டு நீர் மாசு ஏற்படுத்துகின்றது. காற்று மாசுவில் உள்ள அமிலத் துகள்கள் தண்ணீர் ஆவியுடன் கலந்து அமில மழையை ஏற்படுத்தி சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
புவி வெப்பமடைதல் : புவி வெப்பமடைதல் காரணமாக நீரின் வெப்பநிலை அதிகரித்து நீர்வாழ் உயிரினங்களைப் பாதிக்கின்றது.
4.
| ஒப்பீட்டிற்கான அடிப்படை | நேர்முக வரி | மறைமுக வரி |
| பொருள் | நேர்முக வரி என்பது ஒருவரின் வருமானம், செல்வத்தின் மீது விதிக்கப்பட்டு நேரடியாக அரசுக்குச் செலுத்துவதாகும். | மறைமுக வரி என்பது ஒருவர் நுகரும் பண்டங்கள், பணிகள் மீது விதிக்கப் பட்டு மறைமுகமாக அரசுக்குச் செலுத்துவதாகும் . |
| இயல்பு | வளர்வீதம் | தேய்வீதம் |
| சுமையும் தாக்கமும் | ஒரே ஒருவர் மீது விழுகிறது. | பலர் மீதும் வரிச்சுமை விழுகிறது. |
5.
சார்க்கின் பணிகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
1. தெற்காசிய நாடுகளின் ஒத்துழைப்பை பராமரித்தல்.
2. உறுப்பினர் நாடுகளின் பொதுவான சிக்கல்களுக்கு தீர்வு காணுதல்.
3. உறுப்பினர் நாடுகளிடையிலான உறவை மேம்படுத்துதல்.
4. வறுமை ஒழிப்புத்திட்டங்கள் மூலம் ஏழ்மையை ஒழிப்பது.
5. பயங்கரவாதச் செயல்களைத் தடுப்பது.
6.
1. அயல்நாட்டுச் செலாவணி சந்தை விசைகளான மாறுகின்ற அயல்நாட்டுச் செலாவணிக்கான தேவையும் அளிப்பும் பரிமாற்று வீதத்தை நிர்ணயிக்கும் முறையே மாறுகின்ற பரிமாற்று வீதமாகும்.
2. இது மிதக்கும் பரிமாற்று வீதம் என்றும் அழைக்கலாம்.
7.
| பணச்சந்தை | மூலதனச்சந்தை | |
| 1 | அதிக நீர்மைத் தன்மையைக் கொண்டதும் குறுகிய காலத்தில், முதிர்ச்சியுறுவதுமான நிதிக்கருவிகளைக் கையாளும் அங்காடியே பண அங்காடி. | நீண்ட கால நிதிக் கருவிகளை வாணிபம் செய்யும் அங்காடி மூலதன அங்காடி |
| 2 | ஒருநாள் முதற்கொண்டு ஒரு ஆண்டிற்குள் முதிர்ச்சியடையும் நிதிக் கருவிகள் இவ்வங்காடியில் கையாளப்படுகின்றன. | உற்பத்தி நோக்கில் நிறுவனங்களும் அரசுக்குத் தேவைப்படும் நிதியைத் திரட்டும் இடமாகவும் மூலதன அங்காடி இருக்கிறது. |
| 3 | இங்கு கையாளப்படும் நிதிக்கருவிகள் அரசு பத்திரங்கள், வணிகப் பத்திரங்கள், அழைப்புப் பணம், வைப்புச் சான்றுகள், வங்கியாளர் ஏற்புகள், மாற்றுச் சீட்டுகள், மறு வாங்கல் ஒப்பந்தங்கள், கருவூல உறுதிச் சீட்டுகள் அயல் நாட்டுச் செலாவணிகள் போன்றவை.. | மூலதன அங்காடியில் பயன்படுத்தப்படும் பாரம்பரியமான நிதிக்கருவிகள், கடன் பத்திரங்களும், சமபங்குகளும் ஆகும் . |
8.
1. ரொக்க வைப்பு விகிதம் (Cash Deposit Ratio - CDR) : இது பொதுமக்கள் கையில் வைத்திருக்கும் பணம்/ வங்கி வைப்புகளில் உள்ள பணம் என்ற விகிதத்தை குறிக்கும்.
2. ரொக்க இருப்பு வைப்பு விகிதம் (Reserve Deposit Ratio - RDR): வங்கி தனது பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்திருக்கும் இருப்பு மற்றும் மைய வங்கியில் வைத்திருக்கும் ரொக்க வைப்பு / மொத்த வைப்புகள் என்ற விகிதம்.
3. ரொக்க இருப்பு விகிதம் (Cash Reserve Ratio - CRR) : "வங்கியில் வைப்புகளில் குறைந்தபட்சமாக மைய வங்கியில் வைக்க வேண்டிய அளவு/ வங்கிகளில் செலுத்தப்பட்ட மொத்த வைப்புகள்" என்ற விகிதம்.
4. சட்டபூர்வ நீர்மை விகிதம் (Statutory Liquidity Ratio - SLR) : " வணிக வங்கிகள் வைத்திருக்கும் நீர்மை தன்மையிலான சொத்துக்கள்/ வணிக வங்கிகளில் இருக்கும் மொத்த கேட்பும் மற்றும் கால வைப்புகளும்" என்ற விகிதம்.
9.
10.
1. புதியப் பொருளாதாரக் கோட்பாடுகளின் வளர்ச்சியில், கீன்சு எழுதிய புத்தகமான "வேலைவாய்ப்பு, வட்டி, பணம் பற்றிய பொதுக்கோட்பாடு." ஒரு திருப்புமுனையாக இருக்கிறது.
2. கீன்சின் கோட்பாடு, முழு வேலைவாய்ப்பு கருத்தை மட்டும் விளக்காமல், குறைந்த வேலை நிலைக்கும் வாய்ப்பு இருப்பதை சுட்டுக்காட்டுகிறது.
3. கீன்சின் கோட்பாடு ஒரு பொதுக் கோட்பாடாகவேத் திகழ்ந்தது. இது எல்லா வகைச் சூழ்நிலைகளுக்கும் பொருந்துவதாக இருக்கிறது.
4. கீன்சின் கருத்துகள் குறுகிய காலத்தை அடிப்படையாகக் கொண்டு இருந்தன.
5. அவரது கருத்துப்படி, வேலைவாய்ப்பின் அளவு நிர்ணயிக்கப்படும் போது உற்பத்திக் காரணிகளான மூலதனம், உழைப்பு, திறன், தொழில்நுட்பம் ஆகியவை மாறாமலேயே இருக்கும்.
11.
| தனிமனிதர் வருமானம் | செலவிடக்கூடிய வருமானம் |
| 1. தனிமனிதர் வருமானம் என்பது ஒரு ஆண்டில் ஒரு நாட்டில் வாழும் ஒவ்வொரு தனிமனிதருக்கும் பல வழிகளில் இருந்து கிடைக்கப் பெறும் மொத்த வருமானம் ஆகும். | செலவிடக்கூடிய வருமானம் என்பது தனிமனிதர் செலவிடக்கூடிய வருமானத்தைக் குறிக்கிறது. |
| 2. வட்டியாகவோ, வாரமாகவோ, கூலியாகவோ இருக்கலாம். இவை அனைத்தையும் ஒவ்வொரு தனிமனிதருக்கும் கூட்டினால் அது தனிமனிதர் வருமானம் ஆகும். | இந்த வருமானம் தான் தனிமனிதர்கள் நுகர்வுக்காக செலவிடக்கூடிய பண அளவு ஆகும். |
| 3. சூத்திரம்: தனிமனிதர் வருமானம் = நாட்டு வருமானம் - (சமூக பாதுகாப்பு பங்களிப்பு மற்றும் பகிரப்படாத கார்ப்பரேட் இலாபம்) மாற்று செலுத்துதல்கள். |
சூத்திரம் : |
12.
தனியார் சொத்துரிமையும் பரம்பரைச் சட்டமும்: முதலாளித்துவத்தின் முக்கிய இயல்பு என்னவெனில் உழைப்பு, மூலதனம், இயந்திரங்கள், சுரங்கம் போன்ற அனைத்து வளங்களும் தனிமனிதர்களுக்குச் சொந்தமாக இருக்கும்.
தேர்ந்தெடுப்பதில் சுதந்திரம் : ஒவ்வொரு தனிமனிதரும் தங்களது வேலையைத் தேர்ந்தெடுப்பதிலும், உற்பத்தி செய்யும் பண்டங்களைத் தேர்ந்தெடுப்பதிலும், வியாபார இடத்தை தெரிவு செய்வதிலும் முழு சுதந்திரம் பெற்றிருப்பர்.
இலாப நோக்கம்: முதலாளித்துவப்பொருளாதாரத்தில், அனைத்துப் பொருளாதார நடவடிக்கைகளிலும் இலாபம் பெறுவதே உந்து விசையாகக் காணப்படும்.
போட்டியில் சுதந்திரம் : பண்டங்கள் சந்தை, காரணிகள் சந்தை ஆகிய இரண்டிலும் முழு சுதந்திரம் உண்டு. அரசாங்கமோ வேறு எந்த அமைப்போ நிறுவனங்களின் வாங்குதல் மற்றும் விற்பனை நடவடிக்கைகளில் தலையிட முடியாது.
விலை இயங்கு முறை : விலை இயங்கு முறையானது முதலாளித்துவப் பொருளாதாரத்தின் இதயமாகும்.
அரசின் பங்கு : முதலாளித்துவப் பொருளாதாரத்தின், அனைத்துப் பொருளாதார நடவடிக்கைகளையும் விலை இயங்கு முறையானது கட்டுப்படுத்துவதால், அரசின் பங்கு மிகக் குறைவாக இருக்கும்.
வருமான ஏற்றத்தாழ்வு: முதலாளித்துவ சமுதாயம் இரண்டு வகுப்பாகப் பிரிக்கப்படுகிறது. சொத்துகளை வைத்திருப்பவர்கள், சொத்துக்கள் இல்லாதவர்கள் எனப் பிரிக்கப்பட்டுள்ளனர்.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards