12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 01/10/2020
12 ஆம் வகுப்பு கணிதம் முக்கிய 3 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Mathematics Tamil Medium Important 3 Mark Book Back Questions (New Syllabus 2020)
12ஆம் வகுப்பு Maths / கணிதவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
ஒரு தளத்தில் கிடைமட்டம் அல்லாத நேர்க்கோடுகள் ஆகிய தொகுப்புகளின் வகைக்கெழுச் சமன்பாடுகளைக் காண்க.
2.
பின்வரும் வரையறுத்த தொகையிடலின் மதிப்பு காண்க :
\(\int ^{1}_{-1} \frac{dx}{x^2+2x+5}\)
3.
ஆரம் 3 அலகுகள் கொண்ட ஒரு வட்டம் ஆய அச்சுகளைத் தொட்டுச் செல்கின்றவாறு உருவாகும் அனைத்து வட்டங்களின் பொதுச் சமன்பாடுகளையும் காண்க.
4.
\(\left| z \right| \) = 3 எனில் \(7\le \left|z +6-8i \right| \le 13\) எனக் காட்டுக.
5.
ஒரு சாய்சதுரத்தின் மூலை விட்டங்கள் ஒன்றையொன்று செங்குத்தாக இருசமக்கூறிடும் என வெக்டர் முறையில் நிறுவுக.
6.
\(\neg(p \leftrightarrow q) \equiv p \leftrightarrow \neg q\) எனக் காட்டுக.
7.
கீழ்க்காணும் சார்புகளுக்கு குழிவு இடைவெளிகள் மற்றும் வளைவு மாற்றப் புள்ளிகளைக் காண்க:
f(x) = \(\frac { 1 }{ 2 } \)(ex-e-x)
8.
தீர்க்க \((1+{ x }^{ 2 })\frac { dy }{ dx } =1+{ y }^{ 2 }\).
9.
ஒரு ஜாடியில் 2 வெள்ளை பந்துகள் மற்றும் 3 சிவப்பு பந்துகள் உள்ளன. சமவாய்ப்பு முறையில் 3 பந்துகள் ஜாடியிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுகின்றன. X என்பது தேர்ந்தெடுக்கும் சிவப்பு பந்துகளின் எண்ணிக்கையைக் குறிப்பிட்டால், சமவாய்ப்பு மாறி X -இன் மதிப்புகளையும் அதன் நேர்மாறு பிம்பங்களில் எண்ணிக்கையையும் காண்க.
10.
{1.1, 1.2, 1.3, 1.4, 1.5} எனும் பிரிவினையுடன் இடது-முனை விதியைப் பயன்படுத்தி \(\int ^{1.5}_{1}\)x dx-க்கு தோராய மதிப்பு காண்க.
11.
z1 = 3, z2 = -7i, மற்றும் z3 = 5 + 4i எனில் கீழ்க்காண்பவைகளை நிறுவுக.
(z1 + z2)z3 = z1z3 + z2z3
12.
தீர்க்க:
\({ \cot }^{ -1 }x-{ \cot }^{ -1 }\left( x+2 \right) =\frac { \pi }{ 12 } ,x>0\)
13.
மதிப்பு காண்க
\(\cos\left( { \sin }^{ -1 }\left( \frac { 4 }{ 5 } \right) -{ \tan }^{ -1 }\left( \frac { 3 }{ 4 } \right) \right) \)
14.
x3 + px2 + qx + r = 0 மூலங்கள் இசைத்தொடர் முறையில் உள்ளன எனில் 9 pqr =27r2+2q3 என நிரூபிக்க. இங்கு p, q, r ≠ 0 என்க.
15.
முனைகள் (0, ±4) மற்றும் குவியங்கள் (0, ±6) உள்ள அதிபரவளையத்தின் சமன்பாடு காண்க
16.
2x2-7x+13=0 எனும் இருபடிச் சமன்பாட்டின் மூலங்கள் α மற்றும் β எனில் α2 மற்றும் β2 ஆகியவற்றை மூலங்களாகக் கொண்ட ஒரு இருபடிச் சமன்பாட்டை உருவாக்கவும்.
17.
மதிப்பு காண்க.
\({ \sin }^{ -1 }\left( \cos\left( { \sin }^{ -1 }\left( \frac { \sqrt { 3 } }{ 2 } \right) \right) \right) \)
18.
\(\vec { a }\)= \(\hat { i }\)-2\(\hat { j }\)+3\(\hat { k }\), \(\vec { b }\)= 2\(\hat { i }\)+\(\hat { j }\)-2\(\hat { k }\), \(\vec { c }\)= 3\(\hat { i }\)+2\(\hat { j }\)+\(\hat { k }\), எனில்
(i) \(\left( \vec { a } \times \vec { b } \right) \times \vec { c }\)
(ii) \(\vec { a } \times \left( \vec { b } \times \vec { c } \right)\)ஆகியவற்றைக் காண்க.
19.
z1 = 3, z2 = -7i, மற்றும் z3 = 5 + 4i எனில் கீழ்க்காண்பவைகளை நிறுவுக.
z1(z2 + z3) = z1z2 + z1z3
20.
adj(A) = \(\left[ \begin{matrix} 7 & 7 & -7 \\ -1 & 11 & 7 \\ 11 & 5 & 7 \end{matrix} \right] \)எனில், A-ஐக் காண்க.
21.
ஒரு வட்ட வடிவத் தகடு வெப்பத்தினால் சீராக விரிவடைகின்றது என்க. அதன் ஆரம் 10.5 செ மீ-இலிருந்து 10.75 செ.மீ-ஆக அதிகரிக்கும் போது அதன் பரப்பில் ஏற்படும் தோராய அதிகரிப்பு மற்றும் தோராய சதவீத அதிகரிப்பு ஆகியவற்றைக் காண்க.
22.
ஒரு வட்ட வடிவ தகட்டின் ஆரம் 12.5 செ.மீக்குப் பதிலாக 12.65 செ.மீ என அளக்கப்படுகின்றது எனில் அதன் பரப்பு கணக்கிடுவதில் பின்வருவனவற்றை காண்க:
(i) தனிப்பிழை
(ii) சார்பிழை
(iii) சதவீதப் பிழை
23.
கொடுக்கப்பட்ட கணத்தின்மீது பின்வரும் செயலியானது (i) அடைவுப் பண்பு (ii) பரிமாற்றுப் பண்பு மற்றும் (iii) சேர்ப்புப் பண்பு ஆகியவைகளைக் கொண்டுள்ளதா எனச் சரிபார்க்க.
(a*b) = ab;∀a,b∈ℕ (அடுக்குக்குறி பண்பு)
24.
y2 = 4ax என்ற பரவளையத்திற்கும் அதன் செவ்வகலத்திற்கும் அடைபடும் அரங்கத்தின் பரப்பைக் காண்க.
25.
ஒரு சமவாய்ப்பு மாறி X -இன் பரவல் சார்பு,
(i) நிகழ்தகவு அடர்த்தி சார்பு f(x) (ii) P(0.2 ≤ X ≤ 0.7) ஆகியவற்றைக் காண்க.
26.
f (x) என்ற சார்பானது \(f'(x)\le1, 1\le x,\le 4\) எனில், f(4)-f(1)\(\le\)3 எனக்காட்டுக.
27.
y=x3-6x2+x+3 என்ற வளைவரைக்கு எப்புள்ளிகளில் வரையப்படும் தொடுகோடு x + y = 1729 என்ற கோட்டிற்கு செங்குத்தாக இருக்கும்?
28.
சமன்பாடுகளைத் தீர்க்க:
x4 + 3x3 − 3x −1= 0
29.
\(\vec { r } .(2\hat { i } -7\hat { j } +4\hat { k } )=3\) மற்றும் 3x - 5y + 4z + 11 = 0 என்ற தளங்களின் வெட்டுக்கோடு வழியாகவும் (-2, 1, 3) என்ற புள்ளி வழியாகவும் செல்லும் தளத்தின் சமன்பாடு காண்க.
30.
ஒரு நேர்க்கோட்டின் துணையலகு வெக்டர் சமன்பாடு \(\vec { r } =(3\hat { i } -2\hat { j } +6\hat { k } )+t(2\hat { i } -\hat { j } +3\hat { k } )\) எனில், அக்கோட்டின் (i) திசைக்கொசைன்கள் (ii) துணையலகு அல்லாத வெக்டர் சமன்பாடு (iii) கார்டீசியன் சமன்பாடுகள் ஆகியவற்றைக் காண்க.
31.
ஒரு தேடும் விளக்கு பரவளைய பிரதிபலிப்பான் கொண்டது. (குறுக்கு வெட்டு ஒரு கிண்ண வடிவம்). பரவளைய கிண்ணத்தின் விளிம்புகளுக்கு இடையே உள்ள அகலம் 40 செ.மீ மற்றும் ஆழம் 30 செ.மீ. குமிழ் குவியத்தில் பொருத்தப்பட்டுள்ளது.
(1) பிரதிபலிப்புக்குப் பயன்படுத்தப்படும் பரவளையத்தின் சமன்பாடு என்ன?
(2) ஒளி அதிகபட்சம் தூரம் தெரிவதற்கு குமிழ் பரவளையத்தின் முனையிலிருந்து எவ்வளவு தூரத்தில் பொருத்தப்பட வேண்டும்.
32.
பின்வரும் சமன்பாடுகளின் கூம்புவளைவின் வகையைக் கண்டறிந்து அவற்றின் மையம், குவியங்கள், முனைகள் மற்றும் இயக்குவரைகள் காண்க :
\( \frac { { x }^{ 2 } }{ 25 } +\frac { { y }^{ 2 } }{ 9 } =1\)
33.
\(\frac { x-5 }{ 5m+2 } =\frac { 2-y }{ 5 } =\frac { 1-z }{ -1 }\)மற்றும் \(x=\frac { 2y+1 }{ 4m } =\frac { 1-z }{ -3 }\) என்ற நேர்க்கோடுகள் ஒன்றுக்கொன்று செங்குத்தானவை எனில், m -ன் மதிப்பைக் காண்க.
34.
A = \(\left[ \begin{matrix} 1 & -1 \\ 2 & 0 \end{matrix} \right] ,B=\left[ \begin{matrix} 3 & -2 \\ 1 & 1 \end{matrix} \right] ,C=\left[ \begin{matrix} 1 & 1 \\ 2 & 2 \end{matrix} \right] \) மற்றும் A X B = C எனில் X என்ற அணியைக் காண்க.
35.
சார்பகம் காண்க.
f(x) = sin-1 \((\frac{|x|-2}{3})+\cos^-1(\frac{1-|x|}{4})\)
1.
தளத்தில் கிடைமட்டம் அல்லாத நேர்கோட்டுத் தொகுப்புகளின் சமன்பாடு ax+by = 1,\(a\neq 0\) \(\delta \ b\in R\) .
கொடுக்கப்பட்ட சமன்பாடு ax+by=1 ...(1)
சமன்பாடு (1)ஐ 'y'ஐப் பொறுத்து வகைப்படுத்த நாம் பெறுவது
\(a\cfrac { dx }{ dy } +b=0\)
[ஃ 2 தனித்த மாறிலிகள்,
ஃ இருமுறை தொடர்ச்சியாக வகைப்படுத்த]
மீண்டும் வகைப்படுத்த நாம் பெறுவது
\(a\cfrac { { d }^{ 2 }x }{ { dy }^{ 2 } } =0\)
[\(\because \) 2 தனித்த மாறிலிகள்,
ஃ இருமுறை தொடர்ச்சியாக வகைப்படுத்த]
மீண்டும் வகைப்படுத்த நாம் பெறுவது
\(a\cfrac { { d }^{ 2 }x }{ { dy }^{ 2 } } =0\)
\(\cfrac { { d }^{ 2 }x }{ { dy }^{ 2 } } =0\) என்பது தேவையான வகைக்கெழுச் சமன்பாடு.
2.
\(\int _{ -1 }^{ 1 }{ \cfrac { dx }{ { x }^{ 2 }+2x+5 } =\int _{ -1 }^{ 1 }{ \cfrac { dx }{ \left( x+1 \right) ^{ 2 }+4 } } } \)
= \(\cfrac { 1 }{ 2 } \left[ tan^{ -1 }\cfrac { x+1 }{ 2 } \right] _{ -1 }^{ 1 }\)
= \(\cfrac { 1 }{ 2 } \left[ { tan }^{ -1 }-{ tan }^{ -1 }0 \right] \)
= \(\cfrac { 1 }{ 2 } \times \cfrac { \pi }{ 4 } =\cfrac { \pi }{ 8 } \)
3.

வட்டம் இரு அச்சுகளையும் தொட்டுச் செல்வதால் அச்சுகளிலிருந்து வட்டத்தின் மையத்திற்கு உள்ள தூரம் 3 அலகுகள். எனவே மையம் (±3, ±3)ஆக இருக்கும். அதனால் ஆரம் 3 உடைய நான்கு வட்டங்களின் சமன்பாடுகள் x2 + y2, ±6x, ±6y + 9 = 0 ஆகும்.
4.
\(7\le \left|z +6-8i \right| \le 13\) எனக் கொடுக்கப்பட்டது
\(\left| z+6-8i \right| \le \left| z \right| +\left| 6-8i \right| \) [முக்கோணச் சமனிலி]
\(\le 3\sqrt { { 6 }^{ 2 }+{ (-8) }^{ 2 } } \le 3+\sqrt { 36+64 } \le 3\sqrt { 1w } \)
\(\left| z+6-8i \right| \le 3+10\le 13\) ...(1)
மேலும் \(\left| z+6-8i \right| \ge \left| z \right| -\left| 6-8i \right| \ge \left| 3\sqrt { { 6 }^{ 2 }+{ (-8) }^{ 2 } } \right| \)
\(\ge \left| 3-\sqrt { 36+84 } \right| \ge \left| 3-10 \right| \ge \left| -7 \right| \ge 7\) ...(2)
(1) மற்றும் (2) லிருந்து கிடைப்பது,
\(7\le \left| z+6-8i \right| \le 13\) எனவே நிரூபிக்கப்பட்டது.
5.

சாய்சதுரம் ABCD-ல்,
AB = BC = DC = AD .......(1)
மேலும், AB || DC,
\( \overrightarrow{A B}=\overrightarrow{D C}=\vec{a}\) (என்க)
BC || AD,
\(\overrightarrow{B C}=\overrightarrow{A D}=\vec{b}\) (என்க)
(1)ஐப் பயன்படுத்த, நமக்கு கிடைப்பது
\(|\vec{a}|=|\vec{b}|\) ...... (2)
\(\triangle \mathrm{ABC}\) - ல்,
\(\overrightarrow{A C}=\overrightarrow{A B}+\overrightarrow{B C}=\vec{a}+\vec{b} \) ....(3)
\(\triangle A B D\) - ல்,
\( \overrightarrow{A B}+\overrightarrow{B D}=\overrightarrow{A D} \Rightarrow \overrightarrow{B D}=\overrightarrow{A D}-\overrightarrow{A B}=\bar{b}-\vec{a} \\ \overrightarrow{A C} \cdot \overrightarrow{B D} =(\vec{a}+\vec{b}) \cdot(\vec{b}-\vec{a}) \\ =(\vec{b}+\vec{a}) \cdot(\vec{b}-\vec{a}) \\ =|\vec{b}|^2-|\vec{a}|^2=0(\because|\vec{a}|=|\vec{b}|) \\ \overrightarrow{A C} \cdot \overrightarrow{B D} =0 \Rightarrow \overrightarrow{A C} \perp \overrightarrow{B D} \)
எனவே நிறுவப்பட்டது.
6.
| p | q | \(p\leftrightarrow q\) | \(\neg \left( p\leftrightarrow q \right) \) | \(\neg q\) | \(p\leftrightarrow \neg q\) |
| T | T | T | F | F | F |
| T | F | F | T | T | T |
| F | T | F | T | F | T |
| F | F | T | F | T | F |
மெய்மை அட்டவணையிலிருந்து \(\neg(p \leftrightarrow q) \equiv p \leftrightarrow \neg q\) என்பது தெளிவு.
7.
\(f(x)=\cfrac { 1 }{ 2 } \left( { e }^{ x }-{ e }^{ -x } \right) \)
\(f'\left( x \right) =\cfrac { 1 }{ 2 } \left( { e }^{ x }+{ e }^{ -x } \right) \)
\(f''\left( x \right) =\cfrac { 1 }{ 2 } \left( { e }^{ x }-{ e }^{ -x } \right) \)
\(f''\left( x \right) =0\Rightarrow \cfrac { 1 }{ 2 } \left( { e }^{ x }-{ e }^{ -x } \right) =0\)
தேக்கநிலைப் புள்ளி x=0
\(\therefore \) இடைவெளிகள் \(\left( -\infty ,0 \right) \) மற்றும் \(\\ \left( 0,\infty \right) \)
இடைவெளி \(\left( 0,\infty \right) \) ல்,\(f''\left( x \right) <0\) வளைவரை மேல்நோக்கி குழிவானது.
வளைவரை \(\left( 0,\infty \right) \) ல் மேல்நோக்கி குழிவாகவும் \(\left( -\infty ,0 \right) \) ல் கீழ்நோக்கி குழிவாகவும் உள்ளது.
x=0 ஐக் கடக்கும்போது,\( f''\left( x \right) \) ன் குறி மாறுகிறது.
இப்போது \(f(0)=\cfrac { 1 }{ 2 } \left( { e }^{ 0 }-{ e }^{ 0 } \right) =\cfrac { 1 }{ 2 } \left( 1-1 \right) =0\) வளைவு மாற்றப் புள்ளி (0, 0)
8.
\((1+{ x }^{ 2 })\frac { dy }{ dx } =1+{ y }^{ 2 }\) ...(1)
கொடுக்கப்பட்ட சமன்பாட்டின் மாறிகளைப் பிரித்து
\(\frac { dy }{ { 1+y }^{ 2 } } =\frac { dx }{ { 1+x }^{ x } } \) ...(2)
என எழுதலாம்.
சமன்பாடு (2)-ன் இருபக்கமும் தொகையிடக் கிடைப்பது tan-1 y = tan-1 x + C. ...( 3)
ஆனால் tan-1 y - tan-1 x = tan-1 \(\left( \frac { y-x }{ 1+xy } \right) \) ...(4)
சமன்பாடு (4)ஐ (3)-ல் பயன்படுத்தக் கிடைப்பது
tan-1 \(\left( \frac { y-x }{ 1+xy } \right)\) = C ⇒ \(\frac { y-x }{ 1+xy } \) = tan C = a (என்க).
ஆகவே , y − x = a(1+ xy) . இதுவே தேவையான தீர்வு ஆகும்.
9.
வெள்ளை மற்றும் சிவப்பு பந்துகளை , w1 w2, r1, r2 மற்றும் r3 எனக் குறிப்பிடுவோம்.
கூறுவெளியில் 5c3 = 10 வெவ்வேறு 3 எண்ணிக்கை அளவுள்ள கூறுகள் உள்ளன.
அதாவது S = {w1w2r1, w1w2r2, w1w2r3, w1r1r2, w1r2r3, w1r1r3, w2r1r2, w2r2r3, w2r1r3, r1r2r3,} ஆகும்.
சமவாய்ப்பு மாறி X எடுக்கும் மதிப்புகள் 1, 2, மற்றும் 3 ஆகும்

| சமவாய்ப்பு மாறி X-இன் மதிப்புகள் | 1 | 2 | 3 | மொத்தம் |
| நேர்மாறு பிம்பங்களில் உறுப்புகளின் எண்ணிக்கை | 3 | 6 | 1 | 10 |
10.
இங்கு ,\(a=1,b=1.5,n=5,f(x)=x\)
எனவே,ஒவ்வொரு பகுதி இடைவெளியின் அகலம்
\(h=\Delta x=\cfrac { b-a }{ n } =\cfrac { 1.5-1 }{ 5 } =0.1\)
இடைவெளியின் துண்டுகளைத் தரும் புள்ளிகள்
\({ x }_{ 0 }=1\)
\({ x }_{ 1 }={ x }_{ 0 }+h=1+0.1=1.1\)
\({ x }_{ 2 }={ x }_{ 1 }+h=1.1+0.1=1.2\)
\({ x }_{ 3 }={ x }_{ 2 }+h=1.2+0.1=1.3\)
\({ x }_{ 4 }={ x }_{ 3 }+h=1.3+0.1=1.4\)
\({ x }_{ 5 }={ x }_{ 4 }+h=1.4+0.1=1.5\)
சம அளவு \(\Delta x\) கொண்ட ரீமன் கூட்டலுக்கான இடது-முனை விதியானது.
\(S=\left[ f\left( { x }_{ 0 } \right) +f\left( { x }_{ 1 } \right) +...+f\left( { x }_{ n-1 } \right) \right] \Delta x\)
\(\therefore S=\left[ f(1)+f(1.1)+f(1.2)+f(1.3)+f(1.4)(0.1) \right] \)
= \(\left( 1+1.1+1.2+1.3+1.4 \right) \times 0.1\)
S = 0.6
11.
LHS = (z1 + z2) z3
= (3 - 7i)(5 + 4i)
= 15 + 12i - 35i - 28i2
= 15 - 23i + 28 = 43 - 23i
RHS = z1 z3 + z2 z3
3 (5 + 4i) + (-7i) (5 + 4i)
15 + 12i - 35i - 28i2
= 15 - 23i + 28 = 43 - 23i
LHS = RHS
∴ (z1 + z2) z3 = z1 z3 +z2 z3
12.
\({ \cot }^{ -1 }x-{ \cot }^{ -1 }\left( x+2 \right) =\frac { \pi }{ 12 } ,x>0\)
\({ \tan }^{ -1 }\left( \frac { 1 }{ x } \right) -{ \tan }^{ -1 }\left( \frac { 1 }{ x+2 } \right) =\frac { \pi }{ 12 } \)
[∵ cot-1 (x) = tan-1 \(\left( \frac { 1 }{ x } \right) \) எனில் x > 0]
\(\Rightarrow { \tan }^{ -1 }\left( \frac { \frac { 1 }{ x } -\frac { 1 }{ x+2 } }{ 1+\frac { 1 }{ x } .\frac { 1 }{ x+2 } } \right) =\frac { \pi }{ 12 } \)
\(\Rightarrow \left( \frac { \frac { x+2-x }{ x(x+2) } }{ \frac { x(x+2)+1 }{ x(x+2) } } \right) =\tan{ 15 }^{ o }\)
\(\Rightarrow\frac { 2 }{ { x }^{ 2 }+2x+1 } =\frac { { \left( \sqrt { 3 } -1 \right) }^{ 2 } }{ 2 } \)
\(\Rightarrow \frac { 2 }{ { (x+1) }^{ 2 } } =\frac { { \left( \sqrt { 3 } -1 \right) }^{ 2 } }{ 2 } \)
⇒ 4 = (x+1)2 \({ \left( \sqrt { 3 } -1 \right) }^{ 2 }\)
இருபுறமும் வர்க்க மூலம் எடுக்க கிடைப்பது
2 = (x + 1) \(\left( \sqrt { 3 } -1 \right) \)
\(\Rightarrow x+1=\frac { 2 }{ \sqrt { 3 } -1 } \times \frac { \sqrt { 3 } +1 }{ \sqrt { 3 } +1 } =\frac { 2\left( \sqrt { 3 } +1 \right) }{ 3-1 } =\sqrt { 3 } +1\)
x + 1 = \(\sqrt { 3 } \) + 1 = x = \(\sqrt { 3 } \)
x = \(\sqrt { 3 } \) என்பது தீர்வாகும்.
| [∵ tan 15o = tan (45o - 30o)] = \(\frac { { tan45 }^{ o }-{ tan30 }^{ o } }{ 1+{ tan45 }^{ o }{ tan30 }^{ o } } \) = \(\frac { 1-\frac { 1 }{ \sqrt { 3 } } }{ 1+\frac { 1 }{ \sqrt { 3 } } } =\frac { \sqrt { 3 } -1 }{ \sqrt { 3 } +1 } \times \frac { \sqrt { 3 } -1 }{ \sqrt { 3 } -1 } \) = \(\frac { { \left( \sqrt { 3 } -1 \right) }^{ 2 } }{ 3-1 } =\frac { { \left( \sqrt { 3 } -1 \right) }^{ 2 } }{ 2 } \) |
13.
\(\cos\left( { \sin }^{ -1 }\left( \frac { 4 }{ 5 } \right) -{ \tan }^{ -1 }\left( \frac { 3 }{ 4 } \right) \right) \)
sin-1 \(\left( \frac { 4 }{ 5 } \right) \) = x என்க.
\( \frac { 4 }{ 5 } \) = sin x
∴ cos x = \(\frac { adj }{ hyp } =\frac { 3 }{ 5 } \)
tan-1 \(\left( \frac { 3 }{ 4 } \right) \) = y என்க.
⇒ tan y = \(\frac { 3 }{ 4 } \)
⇒ sin y = \(\frac { opp }{ hyp } =\frac { 3 }{ 5 } \) மற்றும் cos y = \(\frac { adj }{ hyp } =\frac { 4 }{ 5 } \)
∴ cos \(\left( { \sin }^{ -1 }\left( \frac { 4 }{ 5 } \right) -{ \tan }^{ -1 }\left( \frac { 3 }{ 4 } \right) \right) \)
= cos (x - y) = cos x cos y + sin x sin y
= \(\frac { 3 }{ 5 } .\frac { 4 }{ 5 } +\frac { 4 }{ 5 } .\frac { 3 }{ 5 } =\frac { 12 }{ 25 } +\frac { 12 }{ 25 } =\frac { 24 }{ 25 } =\frac { 24 }{ 25 } \)
14.
மூலங்கள் இசைத் தொடர்முறையில் உள்ளன என்க. எனவே அவற்றின் பெருக்கல் தலைகீழிகள் கூட்டுத் தொடர் முறையில் இருக்கும். மேலும்
\(\left( \frac { 1 }{ x } \right) ^{ 3 }+p\left( \frac { 1 }{ x } \right) ^{ 2 }+q\left( \frac { 1 }{ x } \right) \)+r=0 ⇔ rx3+qx2+px+1=0 .....(1)
(1) –ன் மூலங்கள் கூட்டுத்தொடர் முறையில் இருப்பதால் அவற்றினை a-d, a,a+d என்க.வியட்டாவின் சூத்திரங்களைப் பயன்படுத்த
Σ1=(α-d)+α+(α+d) =\(-\frac { q }{ r } \Rightarrow 3\alpha =-\frac { q }{ r } \Rightarrow \alpha =-\frac { q }{ 3r } \)
ஆனால் (1)-ன் மூலம் α என்பதால்,
\(r\left( -\frac { q }{ 3r } \right) ^{ 3 }+q\left( -\frac { q }{ 3r } \right) ^{ 2 }+p\left( -\frac { q }{ 3r } \right) \)+1=0 ⇒ -q3+3q3-9pqr+27r2=0 ⇒ 9pqr =2q3+27r2.
15.

குவியங்களின் நடுப்புள்ளி மையம் C(0, 0)
குறுக்கச்சு y-அச்சு
AA′ = 2a \(\Rightarrow \) 2a = 8,
SS′ = 2c = 12, c = 6
a = 4
b2 = c2- a2 = 36 - 16 = 20.
எனவே தேவையான அதிபரவளையத்தின் சமன்பாடு \(\frac { { y }^{ 2 } }{ 16 } -\frac { { x }^{ 2 } }{ 20 } =1\)
16.
கொடுக்கப்பட்ட இருபடிச் சமன்பாட்டின் மூலங்கள் α மற்றும் β என்பதால் α+β=\(\frac { 7 }{ 2 } \) மற்றும் αβ=\(\frac { 13 }{ 2 } \) ஆகும்.
எனவே, தேவையான இருபடிச் சமன்பாட்டை பெற,
மூலங்களின் கூடுதல் =α2+β2 =(α+β)2 -2αβ=\(\frac { -3 }{ 4 } \)
மூலங்களின் பெருக்கல்=α2β2 =(αβ)2=\(\frac { 169 }{ 4 } \)
எனவே, தேவையான இருபடிச் சமன்பாடு \({ x }^{ 2 }+\frac { 3 }{ 4 } x+\frac { 169 }{ 4 } \)=0 எனக் கிடைக்கிறது.
4x2+3x+169=0
இதுவே α2 மற்றும் β2 ஆகியவற்றை மூலங்களாகக் கொண்ட இருபடிச் சமன்பாடாகும்.
17.
\({ \sin }^{ -1 }\left( \cos\left( { \sin }^{ -1 }\left( \frac { \sqrt { 3 } }{ 2 } \right) \right) \right) \)
sin-1 \(\left( \frac { \sqrt { 3 } }{ 2 } \right) \) = x என்க.
⇒ \(\frac { \sqrt { 3 } }{ 2 } \) = sin x ⇒ sin x = sin \(\frac { \pi }{ 3 } \)
[∵ \(\frac { \pi }{ 3 } \) ∈ \(\left[ \frac { -\pi }{ 2 } ,\frac { \pi }{ 2 } \right] \)]
⇒ x = \(\frac { \pi }{ 3 } \)
∴ sin-1 \(\left( \cos\left( { \sin }^{ -1 }\left( \frac { \sqrt { 3 } }{ 2 } \right) \right) \right) \) = sin-1 \(\left( \cos\left( \frac { \pi }{ 3 } \right) \right) \)
= sin-1 \(\left( \frac { 1 }{ 2 } \right) \)
sin-1 \(\left( \frac { 1 }{ 2 } \right) \) = y ⇒ \(\frac { 1 }{ 2 } \) = siny என்க.
⇒ sin \(\frac { \pi }{ 6 } \) = sin y = y = \(\frac { \pi }{ 6 } \)
[∵ \(\frac { \pi }{ 6 } \) ∈ \(\left[ \frac { -\pi }{ 2 } ,\frac { \pi }{ 2 } \right] \)]
∴ sin-1 \(\left( \cos\left( { \sin }^{ -1 }\left( \frac { \sqrt { 3 } }{ 2 } \right) \right) \right) =\frac { \pi }{ 6 } \)
18.
(i) \(\left( \vec { a } \times \vec { b } \right) =\left| \begin{matrix} \hat { i } & \hat { j } & \hat { k } \\ 1 & -2 & 3 \\ 2 & 1 & -2 \end{matrix} \right| \)
= \(\hat { i } \left| \begin{matrix} -2 & 3 \\ 1 & -2 \end{matrix} \right| -\hat { j } \left| \begin{matrix} 1 & 3 \\ 2 & -2 \end{matrix} \right| +\hat { k } \left| \begin{matrix} 1 & -2 \\ 2 & 1 \end{matrix} \right| \)
= \(\hat { i } \left( 1-3 \right) -\hat { j } \left( -2-6 \right) +\hat { k } \left( 1+4 \right) \)
= \(\hat { i } +8\hat { j } +5\hat { k } \)
\(\therefore \left( \vec { a } \times \vec { b } \right) =\left| \begin{matrix} \hat { i } & \hat { j } & \hat { k } \\ 1 & 8 & 5 \\ 3 & 2 & 1 \end{matrix} \right| \)
= \(\hat { i } \left| \begin{matrix} 8 & 5 \\ 2 & 1 \end{matrix} \right| -\hat { i } \left| \begin{matrix} 1 & 5 \\ 3 & 1 \end{matrix} \right| +\hat { k } \left| \begin{matrix} 1 & 8 \\ 3 & 2 \end{matrix} \right| \)
= \(\hat { i } \left( 8-10 \right) -\hat { j } \left( 1-15 \right) +\hat { k } \left( 2-24 \right) \)
= \(-2\hat { i } +14\hat { j } -22\hat { k } \)
(ii) \(\vec { a } \times \left( \vec { b } \times \vec { c } \right)\)
\(\vec { b } \times \vec { c } =\left| \begin{matrix} \hat { i } & \hat { j } & \hat { k } \\ 2 & 1 & -2 \\ 3 & 2 & 1 \end{matrix} \right| \)
\(\hat { i } \left| \begin{matrix} -2 & -3 \\ -8 & 1 \end{matrix} \right| -\hat { j } \left| \begin{matrix} 1 & 3 \\ 5 & 1 \end{matrix} \right| +\hat { k } \left| \begin{matrix} 1 & -2 \\ 5 & -8 \end{matrix} \right| \)
\(= 22\hat { i } +14\hat { j } +2\hat { k } \)
19.
கொடுக்கப்பட்டது : z1 = 3, z2 = -7i, z3 = 5 + 4i
z2 z3 = -7i + 5 + 4i = 5 - 3i
z1 (z2 z3) = 3(5 - 3i) = 15 - 9i ...(1)
z1 z2 = 3(-7i) = -21i
z1 z2 + z1 z3 = -21i + 15 + 12i
= 15 - 9i ...(2)
(1) மற்றும் (2) லிருந்து
∴ (z1 + z2) z3 = z1 z3 + z2 z3 எனவே நிறுவப்பட்டது.
20.
|adj(A)| = \(\left| \begin{matrix} 7 & 7 & -7 \\ -1 & 11 & 7 \\ 11 & 5 & 7 \end{matrix} \right| \)=7(77-35)-7(-7-77)-7(-5-121) = 1764 > 0
எனவே
A = \(\pm \frac { 1 }{ \sqrt { |adjA| } } adj(adjA)=\pm \frac { 1 }{ \sqrt { 1764 } } \left[ \begin{matrix} +(77-35) & -(-7-77) & +(-5-121) \\ -(49+35) & +(49+77) & -(35-77) \\ +(49+77) & -(49-7) & +(77+7) \end{matrix} \right] ^{ T }\)
\(=\pm \frac { 1 }{ 42 } \left[ \begin{matrix} 42 & 84 & -126 \\ -84 & 126 & 42 \\ 126 & -42 & 84 \end{matrix} \right] ^{ T }=\pm \left[ \begin{matrix} 1 & -2 & 3 \\ 2 & 3 & -1 \\ -3 & 1 & 2 \end{matrix} \right] \).
21.
வட்டவடிவத் தகட்டின் பரப்பு \(A={ \pi r }^{ 2 }\)
= \(\pi \times 10.5\times 10.5\)
= \(110.25\pi \)
\(dA=2\pi rdr\)
= \(2\pi \times 10.5\times 0.25\)
= \(5.25\pi \)
பரப்பில் ஏற்படும் சதவீத அதிகரிப்பு
= \(\cfrac { dA }{ A } \times 100\)
= \(\cfrac { 5.25\pi }{ 110.25\pi } \times 100\)
= \(0.04761\times 100\)
= 4.76%
22.
r ஆரமுடைய தட்டின் பரப்பிற்கான சார்பு A(r) ஆகும்.
A(r) = \(\pi\)r2 \(\Rightarrow\) A'(r) = 2\(\pi\)r
கொடுக்கப்பட்டது:
ஆரத்தின் மெய் மதிப்பு (r0) = 12.5 செ.மீ மற்றும்
அளவிடப்பட்ட ஆரம் (r) = 12.65 செ.மீ
(அ) பரப்பில் ஏற்படும் மாற்றம்:
= A (12.65) - A (12.5)
= \(\pi\) \(\times\) 12.652 - \(\pi\) \(\times\) 12.52 = \(\pi\) (12.652 - 12.52)
= \(\pi\) (12.65 + 12.5) (12.65 - 12.5)
= \(\pi\) \(\times\) 25.15 \(\times\) 0.15 = 3.7725 \(\pi\) செ.மீ2
(ஆ) நேரியல் தோராய மதிப்பின் படி, பரப்பில் ஏற்படும் துல்லியமான மாற்றம்
= A'(r). \(\Delta\)r, இங்கு r = r0 (12.5 செ.மீ)
= A'(r0).(r - r0)
= 2\(\pi\) \(\times\) 12.5 \(\times\) (12.65 - 12.5) = 25\(\pi\) \(\times\) 0.15
= 3.75 \(\pi\) செ.மீ2
(i) தனிப்பிழை = மெய்மதிப்பு - தோராய மதிப்பு
= 3.7725 \(\pi\) - 3.75 \(\pi\)
= 0.0225 \(\pi\) செ.மீ2
(ii) 
\(=\frac{3.7725\pi-3.75\pi }{3.7725\pi }\)
\(=\frac{0.0225 \pi }{3.7725 \pi }=\frac{225}{37725}=\frac{3}{503}\)
= 0.00596 = 0.006 செ.மீ2
(iii) சதவீதப்பிழை = சார்பிழை \(\times\) 100
= 0.006 \(\times\) 100 = 0.6 %
23.
(i) (a*b) = ab ∈ℕ,∀a,b∈ℕ என்பது உண்மை. எனவே ℕ ஆனது ∗ –ன் கீழ் அடைவு பெற்றுள்ளது.
(ii) a = 2 , b = 3 ஆகிய மதிப்புகளை a*b=ab மற்றும் b*a=ba ஆகியவைகளில் பிரதியிட,
a*b=23 = 8 ஆனால் b*a=32=9 ⇒ a*b≠b*a
எனவே ∗ ஆனது பரிமாற்றுப் பண்பை நிறைவு செய்யாது.
(iii) a*(b*c) = a*(bc) \({ a }^{ ({ b }^{ c }) }\) எனக் கொள்க.
இதில் a=2,b=3 மற்றும் c = 4 எனப் பிரதியிடக் கிடைப்பது
a*(b*c)=2*(3*4)=\({ 2 }^{ ({3 }^{ 4 }) }\)=281
ஆனால் (a*b)*c=(ab)*c=(ab)c=c=a(bc)=abc=212
a*(b*c)≠(a*b)*c
எனவே, ∗ ஆனது சேர்ப்புப் பண்பை நிறைவு செய்யாது.
குறிப்பு
இந்த ஈருறுப்பு செயலிக்கு சமனியும் எதிர்மறையும் இல்லை. (காரணத்துடன் விளக்குக)
24.
செவ்வகலத்தின் சமன்பாடு x = a ஆகும். இச்செவ்வகலம் பரவளையத்தை L(a,2a) மற்றும் L1(a,-2a) என்ற புள்ளிகளில் வெட்டுகிறது. தேவையான பரப்பு படம் ல் நிழலிடப்பட்டுள்ளது.
பரவளையம் சமச்சீராக இருப்பதால் தேவையான பரப்பு A ஆனது y = 2 \(\sqrt a \sqrt x\) என்ற பரவளையத்தின் பகுதி x - அச்சு, x = 0 மற்றும் x = a ஆகியவற்றால் அடைபடும் பரப்பைப் போல் இரு மடங்காகும்.
எனவே செங்குத்தான பட்டைகளைப் பயன்படுத்தி பரப்பு காண நமக்குக் கிடைப்பது
A = 2 \(\int ^{a}_{0} y dx = 2 \int ^{a}_{0} 2\sqrt {a} \sqrt{ x} dx \) = \(4\sqrt {a} [\frac {2}{3} x ^ {\frac {3}{2}}]^{a}_{0}\)
= 4 \(\sqrt{a} \times \frac {2}{3} a^{\frac {3}{2}} = \frac {8a^2}{3}\) .
25.
(i) f(x)-ன் தொடர்ச்சி புள்ளிகளில் x-ஐப் பொறுத்து F(x)-ஐ வகையிட
எனப் பெறுகிறோம்.
f(x) எனும் நிகழ்தகவு அடர்த்தி சார்பு x = 0 -ல், அல்லது x =1-ல் தொடர்ச்சியற்று உள்ளது. f(0) மற்றும் f(1)-ஐ எவ்வகையிலும் வரையறுக்கலாம். f(0) =1, மற்றும் f(1) =0 எனத் தெரிவு செய்வோம் .
எனவே f(x) எனும் நிகழ்தகவு அடர்த்தி சார்பு
(ii) P(0.2 ≤ X ≤ 0.7) = F(0.7) − F(0.2)
= 0.7 − 0.2 = 0.5 அல்லது P(0.2 ≤ X ≤ 0.7) = \(\int_{0.2}^{0.7}{f(x)dx}=\int_{0.2}^{0.7}{1dx}=0.5\)
26.
கொடுக்கப்பட்டது: f(x) க்கு, \(f'(x)\le 1,\) எல்லா \(1\le x\le 4\) க்கும்
\(\therefore\) a=1,b=4
லெக்ராஞ்சியின் சராசரி மதிப்புத் தேற்றத்தின்படி
\(f(b)-f(a)\le f'\left( c \right) \left( b-a \right) \)
\(f(4)-f(1)\le 1(4-1)\)
\(f(4)-f(1)\le 3\)
எனவே நிறுவப்பட்டது.
27.
\(y={ x }^{ 3 }-6{ x }^{ 2 }+x+3\)
'x' ஐப் பொறுத்து வகைப்படுத்த
தொடுகோட்டின் சாய்வு \(\cfrac { dy }{ dx } ={ 3x }^{ 2 }12x+1\)
செங்கோட்டின் சாய்வு = \(\cfrac { 1 }{ { 3x }^{ 2 }-12x+1 } \)
கொடுக்கப்பட்ட கோடு x+y=1729
கோட்டின் சாய்வு = -1
செங்கோடும்,கோடும் இணை என்பதால் அவற்றின் சாய்வுகள் சமம்.
\(\therefore -\cfrac { 1 }{ { 3x }^{ 2 }-12x+1 } =-1\)
\({ 3x }^{ 2 }-12x+1=1\)
\({ 3x }^{ 2 }-12x=0\)
\(3x(x-4)=0\)
x = 0, 4
x = 0 எனும்போது, \(y=(0)^{ 3 }-6(0)^{ 2 }+0+3=3\)
x = 4 எனும்போது \(y=\left( 4 \right) ^{ 3 }-6(4)^{ 2 }+4+3\)
= 64 - 96 + 4 + 3 = - 25
\(\therefore\) வளைவரையின் மீதுள்ள புள்ளிகள் (0, 3) மற்றும் (4, -25).
28.
கெழுக்களின் கூடுதல் =1+3-3-1=0
⇒ x=1 என்பது ஒரு மூலம்
⇒ (x-1) ஒரு காரணி
[தொகுமுறை வகுத்தலை பயன்படுத்தி]
∴ x=1, -1 மூலங்கள் மற்றும் மீதியுள்ள காரணி x2+3x+1]
⇒ x=\(\frac { -3\pm \sqrt { 9-4(1)(1) } }{ 2 } \)
⇒ x=\(\frac { -3\pm \sqrt { 5 } }{ 2 } \)
∴ மூலங்கள் 1,-1, \(\frac { -3\pm \sqrt { 15 } }{ 2 } ,\frac { -3\pm \sqrt { 15 } }{ 2 } \).
29.
கொடுக்கப்பட்ட தளங்களின் சமன்பாடு
\(\vec { r } .\left( 2\hat { i } -7\hat { j } +4\hat { k } \right) =3\) மற்றும் 3x - 5y + 4z + 11 = 0
தளங்களின் வெட்டுக்கோட்டின் வழிச் செல்லும் தளத்தின் வெக்டர் சமன்பாடானது
\(\vec { r } .\vec { { n }_{ 1 } } ={ d }_{ 1 }\) மற்றும் \(\vec { r } .\vec { { n }_{ 2 } } ={ d }_{ 2 }\)
\(\left( \vec { r } .{ { \vec { n } }_{ 1 }-{ d }_{ 1 } } \right) +\lambda \left( \vec { r } .{ \vec { n } }_{ 2 }-{ d }_{ 2 } \right) =0\)
\(\vec { r } =x\hat { i } +y\hat { j } +\hat { zk } \) பிரதியிட
\({ \vec { n } }_{ 1 }=2\hat { i } -7\hat { j } +4\hat { k } \), \({ \vec { n } }_{ 2 }=3\hat { i } -5\hat { j } +4\hat { k } \)
\({ d }_{ 1 }=+3,{ d }_{ 2 }=-11\)
\(\left[ \left( x\hat { i } +y\hat { j } +z\hat { k } \right) .(2\hat { i } -7\hat { j } +4\hat { k } -3) \right] +\gamma \left[ \left( x\hat { i } +yj\hat { +2\hat { k } } \right) .\left( 3\hat { i } -5\hat { j } +4\hat { k } \right) +11 \right] =0\)
\(\Rightarrow (2x+7y+4z-3)+\lambda (3x-5y+4z+11\_ =0\)
\(\left[ 2(-2)-7(1)+4(3)-3 \right] +\lambda \left[ -6-5+12+11 \right] =0\)
\(\Rightarrow (-4-7+12-3)+(12)=0\)
\(\Rightarrow -2+12\lambda =0\Rightarrow 12\lambda =2\Rightarrow \lambda =\cfrac { 1 }{ 6 } \)
\(\lambda =\cfrac { 1 }{ 6 } \) என (1) ல் பிரதியிட கிடைப்பது
புள்ளி(-2,1,3) வழி தளம் செல்வதால் கிடைப்பது
\(\left( 2x-7y+4z-3 \right) +\cfrac { 1 }{ 6 } \left( 3x-5y+11 \right) =0\) ..(2)
\(\Rightarrow\) 12x - 42y + 24z - 18 + 3x - 5y + 4z + 11 = 0
\(\Rightarrow\) 15x - 47y + 28z - 7 = 0 என்பது தேவையான தளத்தின் சமன்பாடு
30.
கொடுக்கப்பட்ட வெக்டர் சமன்பாட்டையும் \(\vec { r } =\vec { a } +t\vec { b } \) என்ற கோட்டின் சமன்பாட்டையும் ஒப்பிட நமக்குக் கிடைப்பது \(\vec { a } =3\hat { i } -2\hat { j } +6\hat { k } \) மற்றும் \(\vec { b } =2\hat { i } -\hat { j } +3\hat { k } \) எனவே,
(i) \(\vec { b } ={ b }_{ 1 }\hat { i } +{ b }_{ 2 }\hat { j } +{ b }_{ 3 }\hat { k } \) எனில், கோட்டின் திசைவிகிதங்கள் b1, b2, b3 ஆகும். எனவே, கொடுக்கப்பட்ட கோட்டின் திசை விகிதங்கள் 2, -1, 3 என்பவற்றுக்கு விகிதச் சமமானவையாகும். ஆகவே, கொடுக்கப்பட்ட கோட்டின் திசைக் கொசைன்கள் \(\frac { 2 }{ \sqrt { 14 } } ,\frac { -1 }{ \sqrt { 14 } } ,\frac { 3 }{ \sqrt { 14 } } \) ஆகும்.
(ii) கோட்டின் துணை அலகு அல்லாத வடிவ வெக்டர் சமன்பாடு \((\vec { r } -\vec { a } )\times \vec { b } =\vec { 0 } \).
எனவே, \(\\ (\vec { r } -(3\hat { i } -2\hat { j } +6\hat { k } ))\times (2\hat { i } -\hat { j } +3\hat { k } )=\vec { 0 } \).
(iii) இங்கு (x1, y1, z1) = (3, -2, 6) மற்றும் கோட்டின் திசை விகிதங்கள் 2, −1, 3 என்பவற்றுக்கு விகிதச் சமமானவை.
எனவே, கோட்டின் கார்டீசியன் சமன்பாடுகள் \(\frac { x-3 }{ 2 } =\frac { y+2 }{ -1 } =\frac { z-6 }{ 3 } \)ஆகும்.
31.
முனை (0, 0) என்க.
பரவளையத்தின் சமன்பாடு y2 = 4ax

(1) விட்டம் 40 செ.மீ மற்றும் உயரம் 30 செ.மீ. என உள்ளதால் பரவளையத்தின் விளிம்பில் உள்ள ஒரு புள்ளி (30,20) ஆகும்.
202 = 4a ×30
4a = \(\frac { 400 }{ 30 } \) = \(\frac { 40 }{ 3 } \)
சமன்பாடு y2 = \(\frac { 40 }{ 3 } \)x.
(2) குமிழ் குவியத்தில் (0, a) ஆக இருக்க வேண்டும். எனவே குமிழ் பரவளையத்தின் முனையிலிருந்து \(\frac {10}{3}\) செ.மீ. தூரத்தில் பொருத்தப்பட வேண்டும்.
32.
\( \frac { { x }^{ 2 } }{ 25 } +\frac { { y }^{ 2 } }{ 9 } =1\)
இது நீள்வட்டத்தின் சமன்பாடு
a2 = 25 மற்றும் b2 = 9 மற்றும் c2 = a2 + b2
\(\Rightarrow { C }^{ 2 }=25+9=16\Rightarrow C=4\)
(a) மையம் (0, 0) \(\Rightarrow\) h = 0, k = 0
(b) குவியங்கள் (h - c, k), (h + c, k)
\(\Rightarrow\) (0-4, 0), (0 + 4, 0)
\(\Rightarrow \) (-4, 0) மற்றும் (4, 0)
(c) முனைகள் (h-a, k) மற்றும் (h+a, k)
\(\Rightarrow\) (0-5, 0) மற்றும் (0+5, 0)
\(\Rightarrow\) (-5, 0) மற்றும் (5, 0)
(d) இயக்குவரைகள் \(x=\pm \cfrac { a }{ e } \)
\(\Rightarrow x=\pm { \cfrac { 5 }{ e } }\)
\(e=\sqrt { 1-\cfrac { { b }^{ 2 } }{ { a }^{ 2 } } } =\sqrt { 1-\cfrac { 9 }{ 25 } } =\sqrt { \cfrac { 16 }{ 25 } } =\cfrac { 4 }{ 5 } \)
\(\therefore \) கொடுக்கப்பட்ட சமன்பாடு \(x-\pm \cfrac { 5 }{ \frac { 4 }{ 5 } } \Rightarrow x=\pm \cfrac { 25 }{ 4 } \)
33.
கொடுக்கப்பட்ட கோடுகள்
\(\frac { x-5 }{ 5m+2 } =\frac { 2-y }{ 5 } =\frac { 1-z }{ -1 }\) \(\Rightarrow \cfrac { x-5 }{ 5m+2 } =\cfrac { y-2 }{ -5 } =\cfrac { z-1 }{ 1 } \)
\(\therefore \vec { b } =\left( 5m+2 \right) \hat { i } -5\hat { j } +\hat { k } \)
மற்றும்
\(x=\cfrac { 2y+1 }{ 4m } =\cfrac { 1-z }{ -3 } \)
\(\Rightarrow \cfrac { x }{ 1 } =\frac { y+\frac { 1 }{ 2 } }{ 2m } =\cfrac { z-1 }{ 3 } \)
\(\vec { b } \bot \vec { d } \Rightarrow \vec { b } .\vec { d } =0\)
\(\Rightarrow \left( \hat { i } +2m\hat { j } +3\hat { k } \right) .\left( \left( 5m+2 \right) \hat { i } -5\hat { j } +\hat { k } \right) =0\)
\(\Rightarrow (5m+2)+2m(-5)+3(1)=0\)
\(\Rightarrow 5m+2-10m+3=0\)
\(\Rightarrow 5-5m=0\)
\(\Rightarrow 5=5m\)
\(\Rightarrow m=1\)
34.
கொடுக்கப்பட்ட \(A=\begin{bmatrix} 1 & -1 \\ 2 & 0 \end{bmatrix},B=\begin{bmatrix} 3 & -2 \\ 1 & 1 \end{bmatrix}\) மற்றும் \(C=\begin{bmatrix} 1 & 1 \\ 2 & 2 \end{bmatrix}\)மேலும், AXB = C
A-1 ஆல் முன்புறம் பெருக்க கிடைப்பது.
\(\Rightarrow B={ A }^{ -1 }C.\ \quad \left[ \therefore \ { A }^{ -1 }A=1 \right] \)
B-1 ஆல் பின்புறம் பெருக்க கிடைப்பது.
\(\left( XB \right) { B }^{ -1 }=\left( { A }^{ -1 }C \right) { B }^{ -1 }\)
\(\Rightarrow X=\left( { A }^{ -1 }C \right) { B }^{ -1 }\)
\(\left| A \right| =\begin{vmatrix} 1 & -1 \\ 2 & 0 \end{vmatrix}=0+2\neq 0\)
\(\therefore { A }^{ -1 }\frac { 1 }{ |A| } adjA=\frac { 1 }{ 2 } \begin{bmatrix} 0 & 1 \\ -2 & 1 \end{bmatrix}\)
\(|B|=\begin{vmatrix} 3 & -2 \\ 1 & 1 \end{vmatrix}=3+2=5\neq 0\)
\(\therefore { B }^{ -1 }=\frac { 1 }{ \left| B \right| } adj\quad B=\frac { 1 }{ 5 } \begin{bmatrix} 1 & 2 \\ -1 & 3 \end{bmatrix}\)
\({ A }^{ -1 }C=\frac { 1 }{ 2 } \begin{bmatrix} 0 & 1 \\ -2 & 1 \end{bmatrix}\begin{bmatrix} 1 & 1 \\ 2 & 2 \end{bmatrix}\)
\(=\frac { 1 }{ 2 } \left[ \begin{matrix} 0 & +2 \\ -2 & +2 \end{matrix}\begin{matrix} 0 & +2 \\ -2 & +2 \end{matrix} \right] \)
\(=\frac { 1 }{ 2 } \begin{bmatrix} 2 & 2 \\ 0 & 0 \end{bmatrix}=\frac { 1 }{ 2 } \left( 2 \right) \begin{bmatrix} 1 & 1 \\ 0 & 0 \end{bmatrix}\)
\(=\begin{bmatrix} 1 & 1 \\ 0 & 0 \end{bmatrix}\)
\(\therefore X=Z\left( { A }^{ -1 }C \right) .{ B }^{ -1 }\)
\(=\begin{bmatrix} 1 & 1 \\ 0 & 0 \end{bmatrix}\frac { 1 }{ 5 } \begin{bmatrix} 1 & 2 \\ -1 & 3 \end{bmatrix}=\frac { 1 }{ 5 } \left[ \begin{matrix} 1 & -1 \\ 0 & +0 \end{matrix}\begin{matrix} 2 & +3 \\ 0 & +0 \end{matrix} \right] \)
\(=\frac { 1 }{ 5 } \begin{bmatrix} 0 & 5 \\ 0 & 0 \end{bmatrix}=\frac { 1 }{ 5 } \left( 5 \right) \begin{bmatrix} 0 & 1 \\ 0 & 0 \end{bmatrix}=\begin{bmatrix} 0 & 1 \\ 0 & 0 \end{bmatrix}\)
\(\therefore X=\begin{bmatrix} 0 & 1 \\ 0 & 0 \end{bmatrix}\)
35.
கொடுக்கப்பட்ட f(x) = sin-1 \(\left( \frac { \left| x \right| -2 }{ 3 } \right) \) + cos-1 \(\left( \frac { 1-\left| x \right| }{ 4 } \right) \)
sin-1 x இன் வரையறையிலிருந்து
-1≤ \( \frac { \left| x \right| -2 }{ 3 } \) ≤ 1
⇒ -3 ≤ |x| -2 ≤ 3
⇒ -3 + 2 ≤ |x| ≤ 3 + 2
⇒ -1≤ |x| ≤ 5
என்பதை சுருக்கி 0 ≤ |x| ≤ 5 ...(1)
⇒ 0 ≤ |x| மற்றும் |x| ≤ 5
⇒ |x| ≥ 0 மற்றும் -5 ≤ x ≤ 5
cos-1 x ன் வரையறைப்படி -1 ≤ \(\frac { 1-\left| x \right| }{ 4 } \) ≤ 1
⇒ -4 ≤ 1 - |x| ≤ 4 ⇒ -4 - 1≤ - |x| ≤ 4 - 1
⇒ -5 ≤ - |x| ≤ 3 ⇒ -3 ≤ |x| ≤ 5
என்பதை சுருக்கி 0 ≤ |x| ≤ 5 - 5 ≤ x ≤ 5 ...(2)
(1) மற்றும் (2) லிருந்து
சார்பகமானது [-5, 5]
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards