12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 01/10/2020
12 ஆம் வகுப்பு கணிதம் மாதிரி 3 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Mathematics Tamil Medium Sample 3 Mark Book Back Questions (New Syllabus 2020)
12ஆம் வகுப்பு Maths / கணிதவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
2.
g(x,y) = x log \(\left( \frac { { y } }{ x } \right) \) என்ற சார்பு சமபடித்தானது என நிறுவுக; g -ன் படியைக் கணக்கிட்டு, g -க்கு ஆய்லரின் தேற்றத்தைச் சரிபார்க்க.
3.
பின்வருவனவற்றை மதிப்பிடுக
\(\int ^\frac{\pi}{4}_{0}\) sin6 2x dx
4.
கீழ்க்காணும் சார்புகளுக்கு மெக்லாரனின் விரிவைக் காண்க:
\(\log(1-x); -1\le x<1\)
5.
ரோலின் தேற்றத்தைப் பயன்படுத்தி கீழ்க்காணும் சார்புகளுக்கு x -ன் எம்மதிப்புகளில் வரையப்படும் தொடுகோடு x -அச்சிற்கு இணையாக இருக்கும்?
\(f(x)=\frac{x^{2}-2x}{x+2}, x\in [-1,6]\)
6.
பின்வரும் முப்படி சமன்பாடுகளைத் தீர்க்க:
8x3 − 2x2 − 7x + 3 = 0
7.
தீர்க்க:
\(2{ \tan }^{ -1 }x={ \cos }^{ -1 }\frac { 1-{ a }^{ 2 } }{ 1+{ a }^{ 2 } } -{ \cos }^{ -1 }\frac { 1-{ b }^{ 2 } }{ 1+{ b }^{ 2 } } ,a>0,b>0\)
8.
2x3 +11x2 − 9x −18 = 0 என்ற சமன்பாட்டைத் தீர்க்க.
9.
z = (cos θ + i sin θ) எனில், \({ z }^{ n }+\frac { 1 }{ { z }^{ n } } \)= 2 cos nθ மற்றும் \({ z }^{ n }-\frac { 1 }{ { z }^{ n } } \)= 2i sin nθ என நிறுவுக.
10.
z3 + 2\(\bar { z } \) = 0 என்ற சமன்பாட்டிற்கு ஐந்து தீர்வுகள் இருக்கும் என நிறுவுக
11.
z1 = 3 + 4i, z2 = 5 - 12i மற்றும் z3 = 6 + 8i எனில் \(\left| { z }_{ 1 } \right| ,\left| { z }_{ 2 } \right| ,\left| { z }_{ 3 } \right| ,\left| { z }_{ 1 }+{ z }_{ 2 } \right| ,\left| { z }_{ 2 }-{ z }_{ 3 } \right| \) மற்றும் \(\left| { z }_{ 1 }+{ z }_{ 3 } \right| \) ஆகியவற்றின் மதிப்புகளைக் காண்க.
12.
z = 2 + 3i எனக்கொண்டு கீழ்க்காணும் கலப்பெண்களை ஆர்கண்ட் தளத்தில் குறிக்க.
z, iz, மற்றும் z + iz
13.
a\(\hat { i }\)+a\(\hat { j }\)+c\(\hat { k }\), \(\hat { i }\)+\(\hat { k }\) மற்றும் c\(\hat { i }\)+c\(\hat { j }\)+b\(\hat { k }\) என்ற வெக்டர்கள் ஒரு தள வெக்டர்கள் எனில், a மற்றும் b ஆகியவற்றின் பெருக்குச் சராசரி c ஆகும் என நிரூபிக்க.
14.
புதிதாக உருவாக்கப்பட்ட ஒரு நகரத்தின் வாக்காளர்களின் எண்ணிக்கையின் (ஆயிரங்களில்) அதிகரிப்பு V (t) = 30 +12t2 - t3 ,0\(\le \)t \(\le \)8 என்பதால் மதிப்பிடப்படுகின்றது. இங்கு t என்பது ஆண்டுகளை குறிக்கின்றது. காலம் 4-இலிருந்து 4\(\frac { 1 }{ 6 } \) வருடமாக இருக்கும் போது ஏற்படும் தோராய வாக்காளர்களின் எண்ணிக்கை மாற்றத்தைக் காண்க.
15.
பனிக்கட்டியிலான ஒரு கோளத்தின் ஆரம் 10 செமீ. அதன் ஆரம் 10 செமீலிருந்து 9.8 செமீ-ஆக குறைகின்றது. பின்வருவனவற்றின் தோராய மதிப்பினைக் காண்க:
(i) கன அளவில் ஏற்படும் மாற்றம்
(ii) வளைபரப்பில் ஏற்படும் மாற்றம்
16.
y = tan x, y = cot x மற்றும் கோடுகள் x = 0 , \(x=\frac { \pi }{ 2 } ,y=0\)ஆகியவற்றால் அடைபடும் அரங்கத்தின் பரப்பைக் காண்க.
17.
ஓர் ஈருறுப்பு சமவாய்ப்பு மாறி X -ன் சராசரி மற்றும் திட்ட விலக்கம் முறையே 6 மற்றும் 2 ஆகும். (i) நிகழ்தகவு நிறை சார்பு (ii) P (X = 3) (iii) P (X ≥ 2) ஆகியவற்றைக் காண்க.
18.
மகன் மற்றும் மகளுக்கு சமவாய்ப்பு நிகழ்தகவுகள் எனக் கருதி 4 குழந்தைகள் கொண்ட ஒரு குடும்பத்தில் உள்ள மகள்களின் எண்ணிக்கைக்கு நிகழ்தகவு நிறை சார்பினையும் குவிவு பரவல் சார்பினையும் காண்க.
19.
மதிப்பிடுக : \(\int ^{a}_{0} \frac{f{(x)}}{f{(x)}+f(a-x)}\) dx.
20.
x2 - y2 = r2 மற்றும் xy = c2 என்ற வளைவரைகள் செங்குத்தாக வெட்டிக் கொள்ளும் எனக்காட்டுக. இங்கு c r, ஆகியவை மாறிலிகள்.
21.
பின்வரும் சமன்பாடுகளின் கூம்புவளைவின் வகையைக் கண்டறிந்து அவற்றின் மையம், குவியங்கள், முனைகள் மற்றும் இயக்குவரைகள் காண்க :
\( \frac { { y }^{ 2 } }{ 16 } -\frac { { x }^{ 2 } }{ 9 } =1\)
22.
ω ≠ 1 என்பது ஒன்றின் முப்படி மூலம் எனில், பின்வருவனவற்றை நிறுவுக.
(1 + ω)(1 + ω2)(1 + ω4)(1 + ω8) ...(1 + \({ { \omega }^{ 2 } }^{ 11 }\)) = 1
23.
x - 1 = \(\frac { y }{ 2 } \) = z + 1 என்ற கோடும் 2x - y + 2z = 2 என்ற தளமும் சந்திக்கும் புள்ளியைக் காண்க. மேலும், இக்கோட்டிற்கும் தளத்திற்கும் இடைப்பட்ட கோணத்தையும் காண்க.
24.
முக்கோணம் ABC-ல், BC, CA மற்றும் AB என்ற பக்கங்களின் மையப்புள்ளிகள் முறையே D,E,F எனில், \(\Delta \)DEF -ன் பரப்பு\(=\frac { 1 }{ 4 } (\Delta ABC \)-ன் பரப்பு) என வெக்டர் முறையில் நிறுவுக.
25.
x2+px+q=0 மற்றும் x2+p'x+q' =0 ஆகிய இரு சமன்பாடுகளுக்கும் ஒரு பொதுவான மூலம் இருப்பின், அம்மூலம் \(\frac { pq'-p'q }{ q-q' } \) அல்லது \(\frac { q-q' }{ p'-p } \) ஆகும் எனக்காட்டுக.
26.
பின்வரும் சமன்பாடுகளின் கூம்பு வளைவின் வகையைக் கண்டறிந்து அவற்றின் மையம், குவியங்கள், முனைகள் மற்றும் இயக்குவரைகளைக் காண்க :
\( \frac { { (x-3) }^{ 2 } }{ 225 } +\frac { { (y-4) }^{ 2 } }{ 289 } =1\)
27.
\(\frac { x-1 }{ 2 } =\frac { y+1 }{ 3 } =\frac { z-1 }{ 4 }\) மற்றும் \(\frac { x-3 }{ 1 } =\frac { y-m }{ 2 } =z\) என்ற கோடுகள் ஒரு புள்ளியில் வெட்டிக் கொள்ளும் எனில், m -ன் மதிப்பைக் காண்க.
28.
ஒருவர் ஒரு குறிப்பிட்ட மாத ஊதியத்தில் ஒரு பணியில் அமர்த்தப்படுகிறார். ஒவ்வொரு ஆண்டும் ஒரு நிலையான ஊதிய உயர்வு அவருக்கு வழங்கப்படுகிறது. 3 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் பெறும் ஊதியம் ரூ. 19,800 மற்றும் 9 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் பெறும் ஊதியம் ரூ. 23,400 எனில் அவருடைய ஆரம்ப ஊதியம் மற்றும் ஆண்டு உயர்வு எவ்வளவு என்பதைக் காண்க. (நேர்மாறு அணிகாணல் முறையில் இக்கணக்கைத் தீர்க்க.)
29.
A = \(\left[ \begin{matrix} 1 & \tan x \\ -\tan x & 1 \end{matrix} \right] \) எனில் ATA-1 = \(\left[ \begin{matrix} \cos2x & -\sin2x \\ \sin2x & \cos2x \end{matrix} \right] \) எனக் காட்டுக.
30.
கீழே கொடுக்கப்பட்டிருக்கும் இரண்டு கூற்றுகள் p மற்றும் q -க்கு பின்வருபவைகளை எழுதுக.
எதிர்மறைக் கூற்று
p: பகா எண்களின் எண்ணிக்கை முடிவில்லாதது
q: ஊட்டி கேரளாவில் உள்ளது
31.
முனை (0,−1) மற்றும் y -அச்சை அச்சாகவும் கொண்ட பரவளையக் குடும்பத்தின் வகைக்கெழுச் சமன்பாட்டைக் காண்க.
32.
கீழ்க்காணும் சார்புகளுக்கு கொடுக்கப்பட்ட இடைவெளிகளில் மீப்பெரு மற்றும் மீச்சிறு அறுதி மதிப்புகளை காண்க.
f(x) = 3x4-4x3 ; [-1,2]
33.
y = sinx என்ற வளைவரைக்கும் மிகை x -அச்சிற்கும் இடைப்பட்ட கோணம் காண்க.
34.
z = 5 - 2i மற்றும் w =−1 +3i எனக்கொண்டு கீழ்க்காண்பவைகளின் மதிப்புகளைக் காண்க.
(z + w)2.
35.
p என்பது ஒரு மெய்யெண் எனில் 4x2+4px+p+2=0 எனும் சமன்பாட்டின் மூலங்களின் தன்மையை p-ன் அடிப்படையில் ஆராய்க.
36.
முனை (-1, -2), அச்சு y-அச்சுக்கு இணை மற்றும் (3, 6) வழிச்செல்லும் பரவளையத்தின் சமன்பாடு காண்க.
37.
6x2 < 1 எனில், tan-1 2x + tan-13x = \(\frac{\pi}{4}\), ஐ தீர்க்க
1.
2.
\(g\left( x,y \right) =xlog\left( y/x \right) \)
\(g\left( tx,ty \right) =txlog\left( \cfrac { ty }{ tx } \right) \)
g என்பது படி உடைய சமபடிதான சார்பாகும்.
ஃ ஆய்லரின் தேற்றபடி
\(x\cfrac { \partial g }{ \partial x } +y\cfrac { \partial g }{ \partial y } =g\)
சரிபார்த்தல்:
∴ \(\frac { \partial g }{ \partial x } \) = \(x.\frac { 1 }{ \frac { y }{ x } } \left( -\frac { y }{ { x }^{ 2 } } \right) +log\left( \frac { y }{ x } \right) \)(1)
= \(-\frac { { x }^{ 2 } }{ y } \left( \frac { y }{ { x }^{ 2 } } \right) log\left( \frac { y }{ x } \right) \)
= - 1 + log \(\left( \frac { y }{ x } \right) \)
\(\frac { \partial g }{ \partial y } =x.\frac { 1 }{ \left( \frac { y }{ x } \right) } \left( \frac { 1 }{ x } \right) =\frac { 1 }{ \frac { y }{ x } } =\frac { x }{ y } \)
\(x\frac { \partial g }{ \partial x } +y\frac { \partial g }{ \partial y } \)
= \(x\left( -1+log\frac { y }{ x } \right) +y\left( \frac { x }{ y } \right) \)
= x log \(\left( \frac { y }{ x } \right) \) = g
\(\therefore x\frac { \partial g }{ \partial x } +y\frac { \partial g }{ \partial y } \) = (g)
எனவே சரிபார்க்கப்பட்டது.
3.
\(\int _{ 0 }^{ \pi /4 }{ { sin }^{ 6 }2xdx } \)
\(t=2x\)
\(dt=2dx\)
\(I=\int _{ 0 }^{ \pi /2 }{ { sin }^{ 6 }t\cfrac { dt }{ 2 } } \)
இங்கு n=6 என்பது இரட்டை எண்
\(\therefore \int _{ 0 }^{ \pi /2 }{ { sin }^{ n }xdx } =\cfrac { \left( n-1 \right) }{ n } \times \cfrac { \left( n-3 \right) }{ (n-2) } \times ...\times \cfrac { 1 }{ 2 } \times \cfrac { \pi }{ 2 } \)
\(\int _{ 0 }^{ \pi /2 }{ { sin }^{ 6 }t\cfrac { dt }{ t } } =\cfrac { 1 }{ 2 } \times \cfrac { 5 }{ 6 } \times \cfrac { 3 }{ 4 } \times \cfrac { 1 }{ 2 } \times \cfrac { \pi }{ 2 } \) = \(\cfrac { 5\pi }{ 2 } \)
4.
\(f(x)=log\left( 1-x \right)\) என்க\(-1\le x<1\)
\(f(x)=log\left( 1-x \right) \quad f(0)=0\)
\(f'(x)=-\cfrac { 1 }{ 1-x } \quad f'(0)=-1\)
\(f''(x)=-\cfrac { 1 }{ \left( 1-x \right) ^{ 2 } } \quad f''(0)=-1\)
\(f'''(x)=-\cfrac { 2 }{ (1-x)^{ 3 } } f'''(0)=-2\)
\({ f }^{ IV }\left( x \right) =-\cfrac { 6 }{ (1-x)^{ 4 } } { f }^{ IV }(0)=-6\)
மெக்லாரின் விரிவு
\(f(x)=\overset { \infty }{ \underset { n=0 }{ \Sigma } } \cfrac { { f }^{ (n) }(0){ x }^{ n } }{ n! } \)
\(f(0)+\cfrac { f'(0) }{ 1! } x+\cfrac { f''(0) { x }^{ 2 }}{ 2! }+...+\cfrac { { f }^{ (n) }(0){ x }^{ n } }{ n! } +...\)
\(\log(1-x)=0\cfrac { 1 }{ 1! } x-\cfrac { 1 }{ 2! } { x }^{ 2 }-\cfrac { 2 }{ 3! } { x }^{ 3 }-\cfrac { 6 }{ 4! } { x }^{ 4 }+...\)
\(=-\left[ x+\cfrac { { x }^{ 2 } }{ 2 } +\cfrac { { x }^{ 3 } }{ 3 } +\cfrac { { x }^{ 4 } }{ 4 } +... \right] \)
5.
\(f(x)=\cfrac { { x }^{ 2 }-2x }{ x+2 } ,x\varepsilon \left[ -1,6 \right] \)
\(f(-1)=\cfrac { 1+2 }{ -1+2 } =3\)
\(f(6)=\cfrac { 36-12 }{ 8 } =\cfrac { 24 }{ 8 } =3\)
\(\Rightarrow f(-1)=3f(6)\)
f(x) என்பது [-1,6]ல் தொடர்ச்சியானது
f(x) என்பது (-1,6)ல் வகையிடத்தக்கது
இப்போது,\(f'\left( x \right) =\cfrac { \left( x+2 \right) \left( 2x-2 \right) -\left( { x }^{ 2 }-2x \right) (1) }{ \left( x+2 \right) ^{ 2 } } \)
= \(\cfrac { { x }^{ 2 }+4x-4 }{ \left( x+2 \right) ^{ 2 } } \)
தொடுகோடு, x -அச்சுக்கு இணை என்பதால்
\(f'(x)=0\)
\(\Rightarrow { x }^{ 2 }+4x-4=0\)
\(\Rightarrow x=-\cfrac { 4\pm \sqrt { 16+16 } }{ 2 } \)
= \(-\cfrac { -4\pm 4\sqrt { 2 } }{ 2 } =-2\pm 2\sqrt { 2 } \)
\(x=-2\pm 2\sqrt { 2 } \in \left( -1,6 \right) \)
6.
f(x) = 8x3 − 2x2 − 7x + 3 = 0 என்க. இங்கு ஒற்றைப்படி உறுப்புகளின் கெழுக்களின் கூடுதல்
=8-7=1
மற்றும் இரட்டைப்படி உறுப்புகளின் கெழுக்களின் கூடுதல்
=-2+3=1
எனவே, x=-1 என்பது f(x) ன் ஒரு மூலமாகும்.
f(x) ஐ (x+1) ஆல் வகுக்க
∴ மற்ற காரணியானது 8x2-10x+3
⇒ x=\(\frac { 10\pm \sqrt { 100-4(8)(3) } }{ 2\times 8 } \)
⇒ x=\(\frac { 10\pm \sqrt { 100-96 } }{ 16 } \Rightarrow x=\frac { 10\pm 2 }{ 16 } \)
⇒ x=\(\frac { 12 }{ 16 } \) அல்லது
x=\(\frac { 8 }{ 16 } \Rightarrow x=\frac { 3 }{ 4 } ,\frac { 1 }{ 2 } \)
∴ மூலங்கள் -1,\(\frac { 1 }{ 2 } ,\frac { 3 }{ 4 } \).
7.
\(2{ \tan }^{ -1 }x={ \cos }^{ -1 }\frac { 1-{ a }^{ 2 } }{ 1+{ a }^{ 2 } } -{ \cos }^{ -1 }\frac { 1-{ b }^{ 2 } }{ 1+{ b }^{ 2 } } ,a>0,b>0\)
a = tan θ மற்றும் b = tan ф என்க.
∴ cos-1 \(\left( \frac { 1-{ a }^{ 2 } }{ 1+{ a }^{ 2 } } \right) \) = \({ cos }^{ -1 }\left( \frac { 1-{ \tan }^{ 2 }\theta }{ 1+{\tan }^{ 2 }\theta } \right) \)
= cos-1 (cos 2θ) = 2θ -------(1)
\(\left[ \because cos2\theta =\frac { 1-{ tan }^{ 2 }\theta }{ 1+{ tan }^{ 2 }\theta } \right] \)
மேலும் \({ \cos }^{ -1 }\left( \frac { 1-{ b }^{ 2 } }{ 1+{ b }^{ 2 } } \right) ={ \cos }^{ -1 }\left( \frac { 1-{ tan }^{ 2 }\phi }{ 1+{ tan }^{ 2 }\phi } \right) \)
= cos-1 (cos 2ф) = 2ф -----(2)
∴ 2 tan-1 x = 2θ - 2ф = 2 (θ - ф)
[(1) மற்றும் (2) ஐ பயன்படுத்தி]
⇒ tan-1 x = θ - ф
⇒ x = tan (θ - ф) = \(\frac { tan\theta -tan\phi }{ 1+tan\theta \quad tan\phi } \)
[∵ tan (A - B) = \(\frac { tanA-tanB }{ 1+tanA\quad tanB } \)]
⇒ x = \(\frac { a-b }{ 1+ab } \) என்பது தீர்வாகும்.
8.
இங்கு ஒற்றைப் படியுள்ள உறுப்புகளின் கெழுக்களின் கூடுதலும் இரட்டைப் படியுள்ள உறுப்புகளின் கெழுக்களின் கூடுதலும் சமமாக இருக்கின்றது. எனவே, -1 என்பது இச்சமன்பாட்டின் ஒரு மூலமாகும். இனி பிற மூலங்களைக் கண்டறிய 2x3 +11x2 − 9x −18 -ஐ x+1 ஆல் வகுத்து 2x2+ 9x -18 என்பதை ஈவாகப் பெறுகிறோம். இதனைத் தீர்ப்பதன் மூலம், \(\\ \frac { 3 }{ 2 } \) மற்றும் -6 ஆகியவற்றை மூலங்களாக பெறுகிறோம். எனவே கொடுக்கப்பட்ட சமன்பாட்டிற்கு -6,-1,\(\\ \frac { 3 }{ 2 } \) ஆகியவை தீர்வுகளாக அமையும்.
9.
z = (cos θ + i sin θ) என்க.
டி மாய்வரின் தேற்றப்படி
zn = (cos θ + i sin θ)n = cos nθ + i sin nθ
\(\frac { 1 }{ { z }^{ n } } \) = z-n = cos nθ + i sin nθ
ஆகவே, \({ z }^{ n }+\frac { 1 }{ { z }^{ n } } \) = (cos nθ + i sin nθ) + (cos nθ - i sin nθ)
\({ z }^{ n }+\frac { 1 }{ { z }^{ n } } \) = 2 cos nθ.
இதுபோலவே,
\({ z }^{ n }-\frac { 1 }{ { z }^{ n } } \) = (cos nθ + i sin nθ) - (cos nθ - i sin nθ)
\({ z }^{ n }-\frac { 1 }{ { z }^{ n } } \) = 2i sin nθ.
10.
கொடுக்கப்பட்டது z3 + 2\(\bar { z } \) = 0
\(\Rightarrow { z }^{ 3 }=-2\bar { z } \)
இருபுறமும் மட்டுப்படுத்த, \(\left| { z }^{ 3 } \right| =\left| -2\bar { z } \right| \)
\(\Rightarrow { \left| z \right| }^{ 3 }=2\left| z \right| \)
\(\Rightarrow \left| z \right| \left[ { \left| z \right| }^{ 2 }-2 \right] =0\)
\(\left| z \right| =0\) அல்லது \({ \left| z \right| }^{ 2 }-2=0\)
\(\Rightarrow z =0\) ஒரு தீர்வு ...(1)
\(\left| { z }^{ 2 } \right| =2\)
\(\Rightarrow { \left| z \right| }^{ 2 }=2\Rightarrow (z{ \bar { z } ) }^{ 2 }=2\)
\(\Rightarrow z\bar { z } =\sqrt { 2 } \Rightarrow \bar { z } =\frac { \sqrt { 2 } }{ z } \)
கொடுக்கப்பட்ட z3 + 2\(\bar { z } \) = 0
\(\Rightarrow { z }^{ 3 }+2.\frac { \sqrt { 2 } }{ z } =0\)
\(\Rightarrow { z }^{ 4 }+2\sqrt { 2 } =0\) ...(2)
z4 = -4
இது 4 பூஜ்யமற்ற தீர்வுகளை கொண்டிருக்கும்.
எனவே (1) மற்றும் (2) லிருந்து, z3 + 2\(\bar { z } \) க்கு 5 தீர்வுகள்.
11.
\(\left| { z }_{ 1 } \right| =\left| 3+4i \right| =\sqrt { { 3 }^{ 2 }+{ 4 }^{ 2 } } =5\)
\(\left| { z }_{ 2 } \right| =\left| 5-12i \right| =\sqrt { { 5 }^{ 2 }+(-{ 12 })^{ 2 } } =13\)
\(\left| { z }_{ 3 } \right| =\left| 6+8i \right| =\sqrt { { 6 }^{ 2 }+{ 8 }^{ 2 } } =10\)
\(\left| { z }_{ 1 }+{ z }_{ 2 } \right| =\left| (3+4i)+(5-12i) \right| =\left| 8-8i \right| =\sqrt { 128 } =8\sqrt { 2 } \)
\(\left| { z }_{ 2 }-{ z }_{ 3 } \right| =\left| (5-12i)-(6+8i) \right| =\left| -1-20i \right| =\sqrt { 401 } \)
\(\left| { z }_{ 1 }+{ z }_{ 3 } \right| =\left| (3+4i)+(6+8i) \right| =\left| 9+12i \right| =\sqrt { 225 } =15\)
எல்லா வகைகளிலும் முக்கோணச் சமனிலி நிறைவு செய்யப்பட்டுள்ளது என்பதைக் காண்க
\(\left| { z }_{ 1 }+{ z }_{ 3 } \right| =\left| { z }_{ 1 } \right| +\left| { z }_{ 2 } \right|\) = 15 (ஏன்?)
12.
z, iz மற்றும் z + iz ஐ ஆர்கண்ட் தளத்தில் குறிக்க.
z = 2 + 3i (2,3) எனக் குறிக்கலாம்.
iz = i (2 + 3i) = 2i + 3i2 = 2i -3 = -3 + 2i (-3, 2) எனக் குறிக்கலாம்.
z + iz = 2 + 3i; -3 + 2i = -1 + 5i (-1, 5) என ஆர்கண்ட் தளத்தில் குறிக்கலாம்.
13.
கொடுக்கப்பட்ட \(\vec { a } ,\vec { b } \) மற்றும் \(\vec { c } \) ஒரு தள வெக்டர்கள்
\(\therefore \vec { a } .\left( \vec { b } \times \vec { c } \right) =0\)
\(\Rightarrow \left| \begin{matrix} a & a & c \\ 1 & 0 & 1 \\ c & c & b \end{matrix} \right| =0\)
\(\Rightarrow a\left| \begin{matrix} 0 & 1 \\ c & b \end{matrix} \right| -a\left| \begin{matrix} 1 & 1 \\ \quad c & b \end{matrix} \right| +c\left| \begin{matrix} 1 & 0 \\ c & c \end{matrix} \right| =0\)
\(\Rightarrow a\left( 0-c \right) -a\left( b-c \right) +c\left( c-0 \right) =0\)

\(\Rightarrow { c }^{ 2 }=ab\Rightarrow c=\sqrt { ab } \)
எனவே a மற்றும் b யின் பெருக்குச் சராசரி c ஆகும்.
14.
\(V(t)=30+12{ t }^{ 2 }-{ t }^{ 3 }\) \(dt=4 \frac{1}{6}-4\)
\(V'\left( t \right) =\left( 24t-{ 3t }^{ 2 } \right) dt\)
= \(\left( 24\left( 4 \right) -3\left( 4 \right) ^{ 2 } \right) \times \frac{1}{6}\)
= \(\left( 96-48 \right) \times 1/6\)
= \(48\times \frac{1}{6}\)
= 8
வாக்காளர்களின் எண்ணிக்கை (ஆயிரங்களில்)
\(\therefore\) தோராய வாக்காளர்களின் எண்ணிக்கை மாற்றம் = 8 x 1000 = 8000
15.
(i) கொடுக்கப்பட்டது r=10
dr=10-9.8=0.2
கன அளவு \(v=\cfrac { 4 }{ 3 } { \pi r }^{ 3 }\)
\(dr=\cfrac { 4 }{ 3 } .3{ \pi r }^{ 2 }.dv\)
கன அளவில் ஏற்படும் மாற்றம்
\(10-v(9.8)=4\pi \left( 10 \right) ^{ 2 }\left( 0.2 \right) \)
= \(80\pi \) செ.மீ3
(ii) வளைப்பரப்பு = \(4{ \pi r }^{ 2 }\)
\(ds=8\pi rdr\)
வளைபரப்பில் ஏற்படும் மாற்றம்
\(S(10)-S(9.8)=ds\)
= \(8\pi \times 10\times 0.2\)
= \(16\pi \) செ.மீ2
16.
முதலில் y=tanx மற்றும் y=cotx ஆகியவை வெட்டும் புள்ளிகளைக் காண
\(tanx=cotx\)
\(\cfrac { tanx }{ cotx } =1\)
\({ tan }^{ 2 }x=1\)
tanx=1
\(x=\cfrac { \pi }{ 4 } ,y=1\)
தேவையான பரப்பு = \(\int _{ 0 }^{ \pi /4 }{ tanxdx+\int _{ \pi /4 }^{ \pi /2 }{ cotxdx } } \\ \)
= \(\left[ logsecx \right] _{ 0 }^{ \pi /4 }+\left[ logsinx \right] _{ \pi /4 }^{ \pi /2 }\)
= \(\left[ \log \sec\cfrac { \pi }{ 4 } -\log \sec0 \right] +\left[ \log \sin\cfrac { \pi }{ 2 } -\log \sin\cfrac { \pi }{ 4 } \right] \)
= \(log\sqrt { 2 } -0+0-log\cfrac { 1 }{ \sqrt { 2 } } \)
= \(log\sqrt { 2 } +log\sqrt { 2 } \)
= \(log\left( \sqrt { 2 } \right) ^{ 2 }\)
= log 2 சதுர அலகுகள்
17.
\(X\sim B(n,p)\)
கொடுக்கப்பட்டது: சராசரி=6, திட்ட விலக்கம் = 2
\(np=6,\sqrt { npq } =2\)
\(npq=4\)
\(\cfrac { npq }{ np } =\cfrac { 4 }{ 6 } \) \(\Rightarrow\) \(
q=\cfrac { 2 }{ 3 } \)
\(\mathrm{p}=1-\mathrm{q}=\frac{1}{3}\)
npq = 4
\(\mathrm{n} \times \frac{1}{3} \times \frac{2}{3}=4 \Rightarrow \mathrm{n}=18\)
(i) நிகழ்தகவு நிறைச் சார்பு
\(P(X=x)=^{ n }{ C }_{ x },{ p }^{ x }{ q }^{ n-x },x=0,1,2..,n\)
\(P\left( X=x \right) =^{ 18 }{ C }_{ x }\left( \cfrac { 1 }{ 3 } \right) ^{ x }\left( \cfrac { 2 }{ 3 } \right) ^{ 18-x }\)
\(x=0,1,2,..18\)
(ii) \(P(X=3)\)
\(P(X=3)=^{ 18 }{ C }_{ 3 }\left( \cfrac { 1 }{ 3 } \right) ^{ 3 }\left( \cfrac { 2 }{ 3 } \right) ^{ 15 }\)
(iii) \(P(X\ge 2)\)
\(P(X\ge 2)=1-P(X<2)\)
= \(1-\left[ P(X=0)+P(X=1) \right] \)
= \(1-\left[ ^{ 18 }{ C }_{ 0 }\left( \cfrac { 1 }{ 3 } \right) ^{ 0 }\left( \cfrac { 2 }{ 3 } \right) ^{ 18 }+^{ 18 }{ C }_{ 1 }\left( \cfrac { 1 }{ 3 } \right) ^{ 1 }\left( \cfrac { 2 }{ 3 } \right) ^{ 17 } \right] \)
= \(1-\left( \cfrac { 2 }{ 3 } \right) ^{ 17 }\times \cfrac { 20 }{ 3 } \)
18.
சமவாய்ப்பு மாறி X என்பது 4 குழந்தைகள் கொண்ட குடும்பத்தில் பெண் குழந்தைகளின் எண்ணிக்கையைக் குறிக்கட்டும்.
\(X=\left\{ 0,1,2,3,4 \right\} \)
X(0) = {BBBB}
X (1) = {GBBB, BGBB, BBGB, BBBG}
X (2) = {GGBB, BBGG, GBGB, BGBG, BGGB, GBBG)
X (3) = {BGGG, GGGB, GBGG, GGBG}
X(4) = {GGGG}
| சமவாய்ப்பு மாறி X-ன் மதிப்புகள் | 0 | 1 | 2 | 3 | 4 | மொத்தம் |
| நேர்மாறு பிம்பங்களில் உறுப்புகளின் எண்ணிக்கை | 1 | 4 | 6 | 4 | 1 | 16 |
(i) நிகழ்தகவு நிறைச் சார்பு
| x | 0 | 1 | 2 | 3 | 4 | மொத்தம் |
| f(x) | \(\cfrac { 1 }{ 16 } \) | \(\cfrac { 4 }{ 16 } \) | \(\cfrac { 6 }{ 16 } \) | \(\cfrac { 4 }{ 16 } \) | \(\cfrac { 1 }{ 16 } \) | 1 |

(ii) குவிவு பரவல் சார்பு
\(\mathrm{F}(\mathrm{x})=\mathrm{P}(\mathrm{X} \leq \mathrm{x})=\sum_{x_i \leq \mathrm{x}} P\left(X=x_i\right)\)
\(\mathrm{P}(\mathrm{X}<0)=0,-\infty<\mathrm{x}<0\)
\(F(0)=P(X\le 0)=P(X=0)=\cfrac { 1 }{ 16 } \)
\(F(1)=P(x\le 1)=P(X=0)+P(X=1)=\cfrac { 1 }{ 16 } +\cfrac { 4 }{ 16 } =\cfrac { 5 }{ 16 } \)
\(F(2)=P(X\le 2)=P(X=0)+P(X=1)+P(X=2)=\cfrac { 1 }{ 16 } +\cfrac { 4 }{ 16 } +\cfrac { 6 }{ 16 } =\cfrac { 11 }{ 16 } \)
\(F(3)=P(X\le 3)=P(X=0)+P(X=1)+P(X=2)+P(X=3)\)
\(\begin{aligned}
= \frac{1}{16}+\frac{4}{16}+\frac{6}{16}+\frac{4}{16}=\frac{15}{16}
\end{aligned}\)
\(\begin{aligned}
\mathrm{~F}(4)=\mathrm{P}(X \leq 4)= & \mathrm{P}(X=0)+\mathrm{P}(X=1)+\mathrm{P}(X=2) +\mathrm{P}(X=3)+\mathrm{P}(X=4) \\
\end{aligned}\)
\(=\frac{15}{16}+\frac{1}{16}=1\)

19.
I = \(\int ^{a}_{0} \frac{f{(x)}}{f{(x)}+f(a-x)}\) dx என்க. --- (1)
\(\int ^{a}_{0}\) f(x) dx = \(\int ^{a}_{0}\) f(a-x)dx என்பதை (1)-ல் பயன்படுத்தக் கிடைப்பது,
I = \(\int ^{a}_{0} \frac{f{(a-x)}}{f{(a-x)}+f(a-(a-x))}\) dx
= \(\int ^{a}_{0} \frac{f{(a-x)}}{f{(x)}+f(a-x)}\) dx. ----- (2)
சமன்பாடுகள் (1)-ம் (2)-ம் கூட்டக் கிடைப்பது,
2I = \(\int ^{a}_{0} \frac{f{(x)}}{f{(x)}+f(a-x)}\) dx + \(\int ^{a}_{0} \frac{f{(a-x)}}{f{(x)}+f(a-x)}\) dx
= \(\int ^{a}_{0} \frac{f(x) +f{(a-x)}}{f{(x)}+f(a-x)}\) dx
= \(\int ^{a}_{0} dx = a\)
எனவே நாம் பெறுவது I = \(\frac{a}{2}\).
20.
கொடுக்கப்பட்ட வளைவரைகள் \({ x }^{ 2 }-{ y }^{ 2 }={ r }^{ 2 }\) ...(1)
\(xy={ c }^{ 2 }\) ...(2)
\(\left( { x }_{ 1 },{ y }_{ 1 } \right) \) என்பது வளைவரைகள் வெட்டும் புள்ளி என்க.
\((1)\Rightarrow { x }^{ 2 }-{ y }^{ 2 }={ r }^{ 2 }\)
'x' ஐப் பொறுத்து வகைப்படுத்த
\(2x-2y\cfrac { dy }{ dx } =0\)
\(\cfrac { dy }{ dx } =\cfrac { x }{ y } \)
இப்போது,\(\left( \cfrac { dy }{ dx } \right) _{ \left( { x }_{ 1 },{ y }_{ 1 } \right) }={ m }_{ 1 }=\cfrac { { x }_{ 1 } }{ { y }_{ 1 } } \)
\((2)\Rightarrow xy={ c }^{ 2 }\)
'x' 'ஐ'ப் பொறுத்து வகைப்படுத்த,
\(x\cfrac { dy }{ dx } +y.1=0\)
\(\cfrac { dy }{ dx } =-\cfrac { y }{ x } \)
\(\left( \cfrac { dy }{ dx } \right) _{ \left( { x }_{ 1 },{ y }_{ 1 } \right) }={ m }_{ 2 }=-\cfrac { { y }_{ 1 } }{ { x }_{ 1 } } \)
இப்போது,\({ m }_{ 1 }\times { m }_{ 2 }=\cfrac { { x }_{ 1 } }{ { y }_{ 1 } } x\left( -\cfrac { { y }_{ 1 } }{ { x }_{ 1 } } \right) =-1\)
எனவே,வளைவரைகள் செங்குத்தாக வெட்டிக்கொள்கின்றன.
21.
கொடுக்கப்பட்ட சமன்பாடு \( \frac { { y }^{ 2 } }{ 16 } -\frac { { x }^{ 2 } }{ 9 } =1\)
இது துணையச்சு y-அச்சுக்கு அதிபர வளையத்தின் சமன்பாடாகும்.
\(\therefore\) a2 = 16, b2 = 9, c2 = a2 + b2
\(\Rightarrow { c }^{ 2 }=16+9=25\Rightarrow c=5\)
\(e=\sqrt { 1+\cfrac { { b }^{ 2 } }{ { a }^{ 2 } } } =\sqrt { 1+\cfrac { 9 }{ 16 } } =\sqrt { { \cfrac { 16+9 }{ 16 } } } =\sqrt { \cfrac { 25 }{ 16 } } =\cfrac { 5 }{ 4 } \)
(a) மையம் (0, 0)
\(\Rightarrow\) h = 0, k = 0
(b) முனைகள் (h, k+a), (h, k-a)
\(\Rightarrow \left( 0,0+4 \right) ,\left( 0,0-4 \right) \Rightarrow \left( 0,4 \right) \left( 0,-4 \right) \)
(c) குவியங்கள்
\(\Rightarrow \left( 0,0+4 \right) ,\left( 0,0-5 \right) \Rightarrow \left( 0,5 \right) \left( 0,-5 \right) \)
(d) இயக்குவரையின் சமன்பாடுகள் \(y=\pm \cfrac { a }{ e } \)
\(\Rightarrow y=\pm \cfrac { 4 }{ \frac { 5 }{ 4 } } \Rightarrow y=\pm \cfrac { 16 }{ 5 } \)
22.
LHS = (1 + ω)(1 + ω2)(1 + ω4)(1 + ω8) ...(1 + \({ { \omega }^{ 2 } }^{ 11 }\))
= (1 + ω20)6(1 + ω21)(1 + ω22)(1 + ω23) ...(1 + \({ { \omega }^{ 2 } }^{ 11 }\))
[∵ ω4 = ω3. ω ω8 = ω6. ω2]
12 உறுப்புகள் உள்ளன.
= (1 + ω)(1 + ω2)(1 + ω)(1 + ω21) .... 12 உறுப்புகள்
= (1 + ω)6(1 + ω2)6(-ω)6(-ω2)6
=(ω3)6 = 1.1 ....6 = 1 RHS எனவே நிரூபிக்கப்பட்டது.
23.
கொடுக்கப்பட்ட கோட்டின் சமன்பாடு
\(\cfrac { x-1 }{ 1 } =\cfrac { y }{ 2 } =z+1=t\)
\(
2(t+1)-2 t+2(t-1)-2 =0 \\
2 t+2-2 t+2 t-2-2 =0 \\
2 t-2=0 \Rightarrow 2 t =2 \Rightarrow t=1
\)
வெட்டு புள்ளி (2, 2, 0)
\(
\sin \theta =\frac{|\vec{b} \cdot \vec{n}|}{|\vec{b}||\vec{n}|} \\
\vec{b}=\hat{i}+2 \hat{j}+\hat{k}, \quad \vec{n}=2 \hat{i}-\hat{j}+2 \hat{k} \\
\vec{b} \cdot \vec{n} =2-2+2=2 \\
|\vec{b}| =\sqrt{1+4+1}=\sqrt{6} \\
|\vec{n}| =\sqrt{4+1+4}=\sqrt{9}=3 \\
\sin \theta =\frac{|2|}{\sqrt{6} \times 3}=\frac{2}{3 \sqrt{6}} \\
\theta =\sin ^{-1}\left(\frac{2}{3 \sqrt{6}}\right)
\)
24.

முக்கோணம் ABC-ல் ஆதிப்புள்ளி A என்க. எனவே D,E,F என்ற புள்ளிகளின் நிலைவெக்டர்கள் முறையே \(\frac { \vec { AB } +\vec { AC } }{ 2 } ,\frac { \vec { AC } }{ 2 } ,\frac { \vec { AB } }{ 2 } \). ஆகும். \(\vec { AB } ,\vec { AC }\) என்ற வெக்டர்களை அடுத்தடுத்த பக்கங்களாகக் கொண்ட இணைகரத்தின் பரப்பு \(\left| \vec { AB } \times \vec { AC } \right| \) என்பதால், முக்கோணம் \(\Delta \)ABC-ன் பரப்பு \(\frac {1}{2}\)\(\left| \vec { AB } \times \vec { AC } \right| \) ஆகும்.
இதேபோன்று, \(\Delta \)DEF-ஐக் கருதுக.
\(\Delta \)DEF -ன் பரப்பு =\(\frac{1}{2}\)\(\left| \vec { DE } \times \vec { DF } \right| \)
= \(\frac{1}{2}\) \(\left| (\vec { AE }-\vec{AD}) \times (\vec { AF }-\vec{AD}) \right|\)
=\(\frac{1}{2}\) \(\left| \frac { \vec { AB } }{ 2 } \times \frac { \vec { AC } }{ 2 } \right| \)
= \(\frac14\) \(\left( \frac { 1 }{ 2 } \left| \vec { AB } \times \vec { AC } \right| \right) \)
= \(\frac14\) (\(\Delta \)ABC-ன் பரப்பு).
25.
கொடுக்கப்பட்ட சமன்பாடு x2+px+q=0 .....(1)
மற்றும் x2+p'x+q'=0 .....(2)
α என்பது (1) மற்றும் (2)-ன் பொது மூலம்
∴ α2+pα+q=0 ........(3)
மற்றும் α2+p'α+q'=0 .........(4)
(3) மற்றும் (4) ஐ குறுக்கு பெருக்கல் முறையில் தீர்க்க கிடைப்பது
⇒ \(\frac { { \alpha }^{ 2 } }{ pq'-p'q } =\frac { \alpha }{ q-q' } =\frac { 1 }{ p'-p } \)
\( \Rightarrow \alpha^2=\frac{p q^{\prime}-p^{\prime} q}{p^{\prime}-p} \& \alpha=\frac{q-q^{\prime}}{p^{\prime}-p} \)
⇒ \( \alpha=\frac{\alpha^2}{\alpha}=\frac{\frac {p q^{\prime}-p^{\prime} q}{p'-q }}{\frac{q-q^{\prime}}{p^{\prime}-p}}=\frac{p q^{\prime}-p^{\prime} q}{q-q^{\prime}} \)
எனவே மூலங்கள் \(\frac { pq'-p'q }{ q-q' } \) அல்லது \(\frac { q-q' }{ p'-p } \).
26.
கொடுக்கப்பட்ட சமன்பாடு \(\frac { { (x-3) }^{ 2 } }{ 225 } +\frac { { (y-4) }^{ 2 } }{ 289 } =1\)
இது அதிபரவளையத்தின் சமன்பாடு a2 = 289
b2 = 225 மற்றும் c2 = a2 + b2\(\Rightarrow\) 289 - 225 = 64
\(\Rightarrow\) c = 8
\(e=\sqrt { 1\frac { { b }^{ 2 } }{ { a }^{ 2 } } } =\sqrt { 1-\cfrac { 225 }{ 289 } } =\sqrt { \cfrac { 2589-225 }{ 289 } } \)
\(\sqrt { \cfrac { 64 }{ 289 } } =\cfrac { 8 }{ 17 } \)
(a) மையம் (3,4) \(\Rightarrow\) h = 3, k = 4
(b) குவியங்கள் (h,k+c), (h,k-c), (h,k+a)
\(\Rightarrow\) (3, 4+8), (3, 4-8) \(\Rightarrow\) (3,12), (3,-4)
(c) முனைகள் (h, k-a), (h,k+a)
\(\Rightarrow\) (3,4,-17), (3,4+17) \(\Rightarrow\) (3,-13), (3,21)
(d) இயக்குவரைகளின் சமன்பாடுகள்
\(y-4=\pm \cfrac { a }{ e } \)
\(\Rightarrow y-4=\pm \cfrac { 17 }{ 18 } \Rightarrow y-4\pm \cfrac { 289 }{ 9 } \)
\(\Rightarrow y=\cfrac { 289 }{ 8 } +4\) மற்றும் \(y=\cfrac { -289 }{ 8 } +4\)
\(\Rightarrow y=\cfrac { 289+32 }{ 2 } \) மற்றும் \(y=\cfrac { -257 }{ 8 } \)
27.
\(\frac { x-1 }{ 2 } =\frac { y+1 }{ 3 } =\frac { z-1 }{ 4 }\)
கொடுக்கப்பட்ட கோடுகள்
\(\vec { a } =\hat { i } -\hat { j } +\hat { k } \) மற்றும் \(\vec { b } =2\hat { i } +3\hat { j } +4\hat { k } \)
\(\cfrac { x-3 }{ 1 } =\cfrac { y-m }{ 2 } =\cfrac { z-0 }{ 1 } \Rightarrow \vec { c } =3\hat { i } +3\hat { j } \)
\(\vec { d } =\hat { i } +2\hat { j } +\hat { k } \)
\(\vec { c } -\vec { a } =\left( 3\hat { i } +m\hat { j } \right) -\left( \hat { i } -\hat { j } +\hat { k } \right) \)
= \(2\hat { i } +(m+1)\hat { j } -\hat { k } \)
\(\vec { b } \times \vec { d } =\left| \begin{matrix} \hat { i } & \hat { j } & \hat { k } \\ 2 & 3 & 4 \\ 1 & 2 & 1 \end{matrix} \right| \)
= \(-5\hat { i } +2\hat { j } +\hat { k } \)
கோடுகள் ஒரே புள்ளியில் வெட்டுவதால் \(\left( \vec { c } -\vec { a } \right) \).\(\left( \vec { b } \times \vec { d } \right) \) =0
\(\Rightarrow 2\hat { i } +\left( m,+1 \right) \hat { j } -\hat { k } ).\left( -5\hat { i } +2\hat { j+\hat { k } } \right) =0\)
\(\Rightarrow -10+2(m+1)-1=0\Rightarrow 0-10+2m+2-1=0\)
\(\Rightarrow 2m-9=0\Rightarrow 2m=9\Rightarrow m=\cfrac { 9 }{ 2 } \) \(\therefore m=\cfrac { 9 }{ 2 } \)
28.
நபரின் மாத ஆரம்ப ஊதியம் ரூ x என்க மற்றும் ஆண்டு உயர்வு ரூ y என்க.
கொடுக்கப்பட்ட தரவின்படி x + 3y = 19800 மற்றும் x + 9y = 23,400.
கொடுக்கப்பட்ட சமன்பாடு தொகுப்பின் அணி வடிவம்
\(\left[ \begin{matrix} 1 & 3 \\ 1 & 9 \end{matrix} \right] \left[ \begin{matrix} x \\ y \end{matrix} \right] =\left[ \begin{matrix} 19800 \\ 23400 \end{matrix} \right] \)
⇒ AX=B இங்கு A=\(\left[ \begin{matrix} 1 & 3 \\ 1 & 9 \end{matrix} \right] \)மற்றும் \(B=\left[ \begin{matrix} 19800 \\ 23400 \end{matrix} \right] \)
\(|A|=\left| \begin{matrix} 1 & 3 \\ 1 & 9 \end{matrix} \right| =9-3=6\neq 0\)
A-1 ஐக் காண இயலும்
\(\therefore { A }^{ -1 }=\frac { 1 }{ |A| } adj\quad A=\frac { 1 }{ 6 } \begin{bmatrix} 9 & -3 \\ -1 & 1 \end{bmatrix}\)
\(\therefore X={ A }^{ -1 }B\)
\(\left[ \begin{matrix} x \\ y \end{matrix} \right]=\frac { 1 }{ 6 } \begin{bmatrix} 9 & -3 \\ -1 & 1 \end{bmatrix}\left[ \begin{matrix} 19800 \\ 23400 \end{matrix} \right] \)
\(=\frac { 1 }{ 6 } \left[ \begin{matrix} 178200 & -70200 \\ -19800 & +23400 \end{matrix} \right] \)
\(\left[ \begin{matrix} x \\ y \end{matrix} \right]=\frac { 1 }{ 6 } \left[ \begin{matrix} 108000 \\ 3600 \end{matrix} \right] =\left[ \begin{matrix} 18000 \\ 600 \end{matrix} \right] \)
\(\therefore x=18000,\quad y=600\)
எனவே ஆரம்ப ஊதியம் Rs. 18000 மற்றும் ஆண்டு உயர்வு Rs. 600.
29.
கொடுக்கப்பட்ட \(A=\begin{bmatrix} 1 & tanx \\ -tanx & 1 \end{bmatrix}\)
\(\left| A \right| =1+{ tan }^{ 2 }x\)
\(\therefore { A }^{ -1 }=\frac { 1 }{ |A| } adjA\)
\(\frac { 1 }{ 1+{ tan }^{ 2 }x } \begin{bmatrix} 1 & -tanx \\ tanx & 1 \end{bmatrix}\)
[முதன்மை மூலைவிட்ட உறுப்புகளை இடமாற்ற மற்றும் மூலைவிட்டத்தில் இல்லாத உறுப்புகளின் குறியை மாற்ற)
\({ A }^{ T }=\begin{bmatrix} 1 & -tanx \\ tanx & 1 \end{bmatrix}\)
\(\therefore { A }^{ T }{ A }^{ -1 }=\begin{bmatrix} 1 & -tanx \\ tanx & 1 \end{bmatrix}.\cfrac { 1 }{ 1+{ tan }^{ 2 }x } \begin{bmatrix} 1 & -tanx \\ tanx & 1 \end{bmatrix}\)
\(\cfrac { 1 }{ 1+{ tan }^{ 2 }x } \begin{bmatrix} 1 & -tanx \\ tanx & 1 \end{bmatrix}\begin{bmatrix} 1 & -tanx \\ tanx & 1 \end{bmatrix}\)
\(\cfrac { 1 }{ 1+{ tan }^{ 2 }x } \begin{bmatrix} 1 & -{ tan }^{ 2 }x \\ tanx & +tanx \end{bmatrix}\begin{bmatrix} -tanx & -tanx \\ { -tan }^{ 2 }x & +1 \end{bmatrix}\)
\(\begin{bmatrix} \cfrac { 1-{ tan }^{ 2 }x }{ 1+{ tan }^{ 2 }x } & \frac { -2tanx }{ 1+{ tan }^{ 2 }x } \\ \frac { 2tanx }{ 1+{ tan }^{ 2 }x } & \frac { 1-{ tan }^{ 2 }x }{ 1+{ tan }^{ 2 }x } \end{bmatrix}\)
\({ A }^{ T }{ A }^{ -1 }=\begin{bmatrix} cos2x & -sin2x \\ sin2x & cos2x \end{bmatrix}\)
[\(\because \sin { 2x=\frac { 2tanx }{ 1+{ tan }^{ 2 }x } } \) மற்றும் \(cos2x=\frac { 1-{ tan }^{ 2 }x }{ 1+{ tan }^{ 2 }x } \)
எனவே நிரூபிக்கப்பட்டது.
30.
¬ p → ¬q (எதிர்மறைக் கூற்று) “பகா எண்களின் எண்ணிக்கை முடிவில்லாதது அல்ல எனில், ஊட்டி கேரளாவில் இல்லை”.
31.
முனை (0,-1) மற்றும் y அச்சை அச்சாகவும் கொண்ட பரவளையக் குடும்பத்தின் சமன்பாடு
\(\left( x-o \right) ^{ 2 }=4a(y+1)\)
\({ x }^{ 2 }=4a(y+1)\)
\({ x }^{ 2 }=4ay+4a\)
சமன்பாடு (1) ஐ 'x' ஐப் பொறுத்து வகைப்படுத்தக் கிடைப்பது
\(2x=4a{ y }^{ ' }\)
\(\cfrac { 2x }{ y } =4a\)
4a ன் மதிப்பை சமன்பாடு (1)ல் பிரதியிட
\({ x }^{ 2 }=\cfrac { 2x }{ y' } \left( y+1 \right) \)
\(\cfrac { { x }^{ 2 } }{ x } =\cfrac { 2 }{ y' } \left( y+1 \right) \)
\(x=\cfrac { 2 }{ y' } \left( y+1 \right) \)
\(xy'2y+2\)
xy'-2y-2=0 என்பது தேவையான வகைக்கெழுச் சமன்பாடாகும்.
32.
f(x) = 3x4-4x3 ; [-1,2]
\(f'\left( x \right) ={ 12x }^{ 3 }-{ 12x }^{ 2 }\)
\(f'\left( x \right) =0\Rightarrow { 12x }^{ 2 }\left( x-1 \right) =0\)
\(x=0,1 \in \left( -1,2 \right) \)
தேக்க நிலை எண்கள் x = 0,1 மற்றும் இடைவெளியின் முடிவுப் புள்ளிகள் x = -1, 2
\(f(-1)=3+4=7\)
\(f(0)=0-0=0\)
\(f(1)=3-4=-1\)
f(2) = 48 - 32 = 16
மீப்பெரு அறுதி மதிப்பு f(2)=16
மீச்சிறு அறுதி மதிப்பு f(1)=-1
33.
y = sin x என்ற வளைவரை மிகை x -அச்சை வெட்டும் போது y = 0 \(\Rightarrow x=n\pi , n=1,2,3,...\)
இப்பொழுது, \(\frac{dy}{dx}=cos \space x, x=n\pi\)-ல் சாய்வு \(m_{1}=cos(n\pi)=(-1)^{n}\), x -அச்சின் சாய்வு m2 = 0 ஆகும்.
இவைகளுக்கு இடைப்பட்ட கோணம் θ எனில்,
\(\tan\theta=|\frac{(-1)^{n}-0}{1+(-1)^{n}(0)}|=1, \forall n\)
\(\Rightarrow \theta=\frac{\pi}{4}\)
34.
= [(5 -2i) + (-1 + 3i)]2 = (4 + i)2
= 16 +i2 + 8i = 16 -1 + 8i
= 15 + 8i
35.
பண்புகாட்டி Δ=(4p)2-4(4)(p+2)=16(p2-p-2)=16(p+1)(p-2) ஆகும்.
எனவே,
−1< p < 2 எனில், Δ< 0
p = −1 அல்லது p = 2 எனில், Δ = 0
−∞ < p < −1 அல்லது 2 < p < ∞ எனில், Δ > 0
எனவே, கொடுக்கப்பட்டுள்ள பல்லுறுப்புக்கோவைக்கு,
−1< p < 2 எனில், கலப்பெண் மூலங்களைப் பெற்றிருக்கும் ;
p = -1 அல்லது p = 2 எனில், சமமான மெய்யெண் மூலங்களைப் பெற்றிருக்கும் ;
− ∞ < p < −1 அல்லது 2 < p < ∞ எனில், வெவ்வேறான மெய்யெண் மூலங்களைப் பெற்றிருக்கும்.
36.

அச்சு y-அச்சுக்கு இணை என்பதால் தேவையான பரவளையத்தின் சமன்பாடு
(x+1)2 = 4a(y+2)
இது (3, 6) வழிச்செல்வதால்
(3 + 1)2 = 4a(6 + 2)
\(\Rightarrow\) a = \(\frac{1}{2}\)
எனவே பரவளையத்தின் சமன்பாடு (x + 1)2 = 2(y + 2)
இதைச் சுருக்க x2 + 2x - 2y - 3 = 0 எனக் கிடைக்கும்.
37.
6x2<1 எனில், tan-1 2x + tan-13x = tan-1\(\\ \left( \frac { 2x+3x }{ 1-{ 6x }^{ 2 } } \right) \)
\({ \tan }^{ -1 }\left( \frac { 5x }{ 1-{ 6x }^{ 2 } } \right) =\frac { \pi }{ 4 } \) என்பதால் \(\frac { 5x }{ 1-6{ x }^{ 2 } } =\tan\frac { \pi }{ 4 } =1\)
ஆகையால், 1 - 6x2 = 5x, என்பதிலிருந்து 6x2 + 5x -1 = 0
ஆகவே, \(x=\frac { 1 }{ 6 } ,-1\)
x = -1 என்பது சமன்பாட்டின் இடப்புறம் குறையெண் மதிப்பையும் மற்றும் வலப்புறம் மிகையெண் மதிப்பையும் தருகிறது என்பதை கவனிக்கவும். ஆகையால், x = -1 என்பது தீர்வாகாது. எனவே, \(x=\frac{1}{6}\) மட்டுமே சமன்பாட்டிற்குத் தீர்வாக அமையும்.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards