12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 05/10/2020
12 ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் மாதிரி 5 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Accountancy Tamil Medium Sample 5 Mark Creative Questions (New Syllabus 2020)
12ஆம் வகுப்பு Accountancy / கணக்குப்பதிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Accountancy / கணக்குப்பதிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Accountancy Test

1.
பின்வரும் விவரங்களைக் கொண்டு சிவா வரையறு நிறுமத்தின் மார்ச் 31, 2016 மற்றும் மார்ச் 31, 2017 க்கான பொது அளவு வருவாய் அறிக்கையினை தயார் செய்யவும்.
| விவரம் | 2015-16 ரூ. |
2016-17 ரூ. |
|---|---|---|
| விற்பனை மூலம் பெற்ற வருவாய் | 4,00,000 | 6,00,000 |
| இதர வருமானங்கள் | 50,000 | 1,50,000 |
| செலவுகள் | 5,00,000 | 3,00,000 |
| வருமான வரி % | 40 | 40 |
2.
கீர்த்திகா நிறுமம் பங்கொன்று ரூ.10 வீதம் பங்குகளை 10% முனைமத்தில் வெளியிட்டது. தொகையானது விண்ணப்பத்தின் போது ரூ.2, ஒதுக்கீட்டின் போது ரூ.3 (முனைமம் உட்பட அழைப்பின் போது ரூ.3, மற்றும் இரண்டாம் மற்றும் இறுதி அழைப்பின் போது ரூ.3 எனச் செலுத்தப்பட வேண்டும்.
பின்வரும் தருணங்களில் பங்குகளை ஒறுப்பிழப்பு செய்வதற்கு தேவையான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.
1) 50 பங்குகளை வைத்திருக்கும் மோகன் என்பவர் இரண்டாம் மற்றும் இறுதி அழைப்புத் தொகையை செலுத்தத் தவறியதால் அவருடைய பங்குகள் ஒறுப்பிழப்பு செய்யப்பட்டன.
2) 50 பங்குகளை வைத்திருக்கும் மோகன் என்பவர் ஒதுக்கீட்டுத் தொகை, முதல் அழைப்பு, இரண்டாம் மற்றும் இறுதி அழைப்புத் தொகை செலுத்தத் தவறியதால் அவருடைய பங்குகள் ஒறுப்பிழப்பு செய்யப்பட்டன.
3) 50 பங்குகளை வைத்திருக்கும் மோகன் என்பவர் ஒதுக்கீட்டுத் தொகை மற்றும் முதல் அழைப்புத் தொகை செலுத்தத் தவறியதால் முதல் அழைப்பிற்கு பின் அவருடைய பங்குகள் ஒறுப்பிழப்புச் செய்யப்பட்டன.
3.
4.
பாரத் நிறுமம் ரூ.10 மதிப்புள்ள 50,000 பங்குகளை முகமதிப்பில் பொதுமக்களுக்கு வெளியிட்டது. பங்குகள் மீதான பணம் செலுத்த வேண்டிய விவரங்கள் பின்வருமாறு:
| விண்ணப்பத்தின் போது பங்கொன்றிற்கு | ரூ.5 |
| ஒதுக்கீட்டின் போது பங்கொன்றிற்கு | ரூ.3 |
| முதல் மற்றும் இறுதி அழைப்பின் போது பங்கொன்றிற்கு | ரூ.2 |
60,000 பங்குகளுக்கு விண்ணப்பத் தொகை பெறப்பட்டது. கூடுதல் விண்ணப்பத் தொகை உடனடியாக திரும்பிச் செலுத்தப்பட்டது. மேற்கண்டவற்றை பதிவு செய்ய குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.
5.
சுந்தர், விவேக், மற்றும் பாண்டியன் என்ற கூட்டாளிகள் இலாப நட்டங்களை 3 : 2 : 1 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் 2016, டிசம்பர் 31 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு
| பொறுப்புகள் | ரூ. | ரூ. | சொத்துகள் | ரூ. |
|---|---|---|---|---|
| முதல் கணக்குகள்: | நிலம் | 80,000 | ||
| சுந்தர் | 50,000 | சரக்கிருப்பு | 20,000 | |
| விவேக் | 40,000 | கடனாளிகள் | 30,000 | |
| பாண்டியன் | 10,000 | 1,00,000 | வங்கி ரொக்கம் | 14,000 |
| பொதுக்காப்பு | 36,000 | இலாப நட்டக் க/கு (நட்டம்) | 6,000 | |
| பற்பல கடனீந்தோர் | 14,000 | |||
| 1,50,000 | 1,50,000 |
1.1.2019 அன்று பாண்டியன் இறந்துவிட்டார் மற்றும் அவரின் இறப்பின் போது பின்வரும் சரிக்கட்டுதல்கள் செய்யப்பட்டன
(i) சரக்கிருப்பின் மதிப்பு 10% தேய்மானம் குறைக்கப்பட வேண்டும்
(ii) நிலத்தின் மதிப்பு ரூ.11,000 அதிகரிக்கப்பட வேண்டும்
(iii) கடனாளிகள் மதிப்பு ரூ.3,000 குறைக்க வேண்டும்
(iv) பாண்டியனுக்கு செலுத்த வேண்டிய இறுதித் தொகை செலுத்தப்படவில்லை
கூட்டாளியின் இறப்பிற்கு பின் நிறுமத்தின் மறுமதிப்பீட்டுக் கணக்கு, கூட்டாளிகள் முதல் கணக்கு மற்றும் இருப்புநிலைக் குறிப்பு தயாரிக்கவும்.
6.
ராகுல், ரவி மற்றும் ரோஹித் எனும் கூட்டாளிகள் முறையே 5 : 3 : 2 என்ற விகிதத்தில் இலாபம் பகிர்ந்து வந்தனர். அவர்களில் ரோஹித் விலகினார். அவருடைய பங்கு ராகுல் மற்றும் ரவி ஆகியோரால் 3 : 2 எனும் விகிதத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது. புதிய இலாப விகிதம் மற்றும் ஆதாய விகிதம் கணக்கிடவும்
7.
திருச்சி இலக்கிய மன்றத்தின் 2018, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்கான பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கு பின்வருமாறு:
| பெறுதல்கள் | ரூ. | ரூ. | செலுத்தல்கள் | ரூ. | ரூ. |
|---|---|---|---|---|---|
| இருப்பு கீ/கொ | மைதான பராமரிப்பு | 33,000 | |||
| ரொக்கம் | 1,000 | விளையாட்டுப் போட்டிச் செலவுகள் | 38,000 | ||
| வங்கி | 14,000 | பல்வகைச் செலவுகள் | 22,000 | ||
| சந்தா (2016-17ஆம் ஆண்டிற்கான ரூ.4,000 உட்பட) | 60,000 | அறைகலன் | 40,000 | ||
| உயில்கொடை | 18,000 | இருப்பு கீ/இ | |||
| விளையாட்டுப் போட்டி நிதி | 20,000 | கையிரொக்கம் | 3,000 | ||
| வரவுகள் | 45,000 | வங்கி ரொக்கம் | 22,000 | 25,000 | |
| 1,58,000 | 1,58,000 |
கூடுதல் தகவல்கள்:
2017, ஏப்ரல் 1 அன்று மன்றத்தின் முதலீடு ரூ.80,000 ஆக இருந்தது. மன்றத்தின் விளையாட்டுப் போட்டி நிதிக் கணக்கின் வரவு இருப்பில் ரூ.60,000 இருந்தது. 2018, மார்ச் 31-ல் பெறவேண்டிய சந்தா ரூ.8,000 மற்றும் 2018, மார்ச் 31 அன்று பெறவேண்டிய சந்தா ரூ.9,000 இறுதிக் கணக்குகளைத் தயார் செய்யவும்.
8.
தமிழ் கல்வியில் மன்றத்தின் கீழ்க்காணும் தகவல்களிலிருந்து 2019, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கினைத் தயார் செய்யவும்.
| விவரம் | ரூ. | விவரம் | ரூ. |
|---|---|---|---|
| தொடக்க ரொக்க இருப்பு (1.4.2018) | 15,000 | சந்தா பெற்றது | 40,000 |
| வங்கி மேல்வரைப்பற்று (1.4.2018) | 9,000 | பழுது பார்த்தல் மற்றும் புதுப்பித்தல் | 7,500 |
| அச்சு மற்றும் எழுதுபொருள் | 2,500 | போக்குவரத்துச் செலவுகள் | 2,750 |
| வட்டி செலுத்தியது | 5,250 | புத்தகங்கள் வாங்கியது | 10,000 |
| முதலீடுகள் விற்றது | 4,000 | காப்பீட்டு முனைமம் செலுத்தியது | 4,000 |
| சிற்றுண்டி வாங்கியது | 2,500 | பல்வகை வரவுகள் | 650 |
| கொடுபட வேண்டிய சம்பளம் | 6,000 | அரசிடமிருந்து பெற்ற மானியம் | 6,000 |
| அறக்கொடை நிதி பெற்றது | 6,000 | சிற்றுண்டி விற்றது | 1,500 |
| ஒளியூட்டுக் கட்டணம் | 3,300 | கட்டடம் மீதான தேய்மானம் | 3,000 |
| வங்கி ரொக்கம் (31.3.2019) | 2,000 |
9.
அமீர் மற்றும் ராஜா என்ற கூட்டாளிகளின் இலாபப் பகிர்வு விகிதம் 3 : 2 : 2018, டிசம்பர் 31 ஆம் நாளைய அவர்களின் இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு:
| பொறுப்புகள் | ரூ. | ரூ. | சொத்துக்கள் | ரூ. |
|---|---|---|---|---|
| முதல் கணக்குகள்: | இயந்திரம் | 60,000 | ||
| அமீர் | 80,000 | அறைகலன் | 40,000 | |
| இராஜா | 70,000 | 1,50,000 | கடனாளிகள் | 30,000 |
| காப்பு நிதி | 15,000 | சரக்கிருப்பு | 10,000 | |
| கடனீந்தோர் | 35,000 | முன்கூட்டிச் செலுத்திய காப்பீடு | 40,000 | |
| வங்கி ரொக்கம் | 20,000 | |||
| 2,00,000 | 2,00,000 |
ரோஹித் என்பவர் புதிய கூட்டாளியாகச் சேர்க்கப்பட்டார். அவர் எதிர்கால இலாபத்தில் தன்னுடைய 1/5 பங்கிற்காக ரூ.30,000 முதலாகக் கொண்டு வந்தார். அவர் நற்பெயரில் தன்னுடைய பங்காக ரூ.10,000 கொண்டுவந்தார்.
பின்வருமாறு மறுமதிப்பீடு செய்யப்பட்டது.
(i) சரக்கிருப்பின் மதிப்பு ரூ.14,000 ஆக அதிகரிக்கப்பட்டது
(ii) அறைகலன் மீது 5% தேய்மானம் நீக்கப்பட வேண்டும்
(iii) இயந்திரம் மதிப்பு ரூ.80,000 ஆக மறுமதிப்பீடு செய்யப்பட்டது
தேவையான பேரேட்டு கணக்குகள் தயார் செய்து சேர்ப்பிற்கு பின் உள்ள இருப்புநிலைக் குறிப்பினைத் தயார் செய்யவும்.
10.
கீழ்க்காணும் விவரங்களைக் கொண்டு இறுதி பற்பல கடனாளிகளையும், இறுதி பற்பல கடனீந்தோரையும் கணக்கிடுக.
| ரூ. | |
|---|---|
| 1.4.2002 அன்று பற்பல கடனாளிகள் | 30,000 |
| 1.4.2002 அன்று பற்பல கடனீந்தோர் | 41,000 |
| கடன் கொள்முதல் | 1,50,000 |
| கடன் விற்பனை | 1,70,000 |
| பெற்ற தள்ளுபடி | 5,000 |
| அளித்த தள்ளுபடி | 6,000 |
| கொள்முதல் திருப்பம் | 7,500 |
| விற்பனைத் திருப்பம் | 6,500 |
| பற்பல கடனாளிகளிடமிருந்து பெற்ற ரொக்கம் | 1,50,000 |
| பற்பல கடனீந்தோருக்கு அளித்த ரொக்கம் | 1,40,000 |
11.
நவீன் நிறுமத்தின் பின்வரும் வணிக நடவடிக்கையிலிருந்து
(i) மொத்த இலாப விகிதம்
(ii) நிகர இலாப விகிதம்
(iii) இயக்க அடக்கவிலை விகிதம்
(iv) இயக்க இலாப விகிதம் கணக்கிடவும்.
| விவரம் | ரூ | |
| I | விற்பனை மூலம் பெற்ற வருவாய் | 20,000 |
| II. | இதர வருமானம் | |
| முதலீடு மூலம் வருவாய் | 200 | |
| III | மொத்த வருவாய் (I+II) | 20,200 |
| IV | செலவுகள் | |
| கொள்முதல் சரக்குகள் | 17,000 | |
| சரக்கிருப்பு மாற்றம் | (-)1,000 | |
| நிதிசார் செலவுகள் | 300 | |
| இதர செலவுகள் (நிர்வாகம் மற்றும் விற்பனை) | 2,400 | |
| மொத்த செலவுகள் | 18,700 | |
| V | அவ்வாண்டிற்கான வரிக்கு முன்னர் உள்ள இலாபம் (III-IV) | 1,500 |
12.
அருண் நிறுமத்தின் 31.03.2019 ஆம் நாளைய பின்வரும் இருப்புநிலைக் குறிப்பிலிருந்து
(i) புற அக பொறுப்புகள் விகிதம்
(ii) உரிமையாளர் விகிதம் மற்றும்
(iii) முதல் உந்துதிறன் விகிதம் கணக்கிடவும்.
| விவரம் | ரூ | |
| I | பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள் | |
| 1. | பங்குதாரர் நிதி | |
| (அ) பங்குமுதல் | ||
| நேர்மைப் பங்குமுதல் | 1,50,000 | |
| 8% முன்னுரிமைப் பங்குமுதல் | 2,00,000 | |
| (ஆ) காப்புகள் மற்றும் மிகுதி | 1,50,000 | |
| 2. | நீண்டகாலப் பொறுப்புகள் | |
| நீண்டகால கடன்கள் (9% கடனீட்டுப் பாத்திரங்கள்) | 4,00,000 | |
| 3. | நடப்பு பொறுப்புகள் | |
| (அ) வங்கியிலிருந்து பெற்ற குறுகிய காலக் கடன்கள் | 25,000 | |
| (ஆ) கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவைகள் | 75,000 | |
| மொத்தம் | 10,00,000 | |
| II | சொத்துகள் | |
| 1. | நீண்ட காலச் சொத்துகள் | |
| நிலைச் சொத்துகள் | 7,50,000 | |
| 2. | நடப்புச் சொத்துகள் | 1,20,000 |
| (அ) சரக்கிருப்பு | 1,20,000 | |
| (ஆ) கணக்குகள் மூலம் பெற வேண்டியவைகள் | 1,000,000 | |
| (இ) ரொக்கம் மற்றும் ரொக்கத்திற்கு சமமானவர்கள் | 27,500 | |
| (ஈ) இதர நடப்புச் சொத்துகள் | ||
| செலவுகள் முன்கூட்டிச் செலுத்தியது | 2,500 | |
| மொத்தம் | 10,00,000 | |
13.
நிலா மற்றும் மாதுரி இருவரும் கூட்டாளிகள், நிலா ஒவ்வொரு அரையாண்டின் தொடக்கத்திலும் ரூ.60,000 எடுத்துக்கொண்டார். கணக்கிடப்பட வேண்டிய எடுப்புகள் மீதான வட்டி ஆண்டுக்கு 4%, 2018, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய எடுப்புகள் மீது வட்டி, சராசரி முறையைப் பயன்படுத்திக் கணக்கிடவும்
1.
| விவரம் | 2016-17 ரூ. |
2016-17 விற்பனை மூலம் பெற்ற வருவாயில் சதவீதம் |
2016-17 தொகை |
2016 விற்பனை மூலம் பெற்ற வருவாயில் சதவீதம் |
|---|---|---|---|---|
| விற்பனை மூலம் பெற்ற வருவாய் | 4,00,000 | 100 | 6,00,000 | 100 |
| கூட்டுக: இதர வருமானங்கள் | 50,000 | 12.50 | 1,50,000 | 25 |
| மொத்த வருவாய் | 4,50,000 | 112.50 | 7,50,000 | 125 |
| கழிக்க: செலவுகள் | 5,00,000 | 125 | 3,00,000 | 50 |
| வரிக்கு முன்னர் உள்ள இலாபம்/நட்டம் | -50,000 | -12.50 | 10,50,000 | 125 |
| கழிக்க: வருமான வரி (40%) | - | - | 4,20,000 | 70 |
| வரிக்கு பின்னர் உள்ள இலாபம் | -50,000 | -12.50 | 6,30,000 | 55 |
2.
1) இறுதி அழைப்புத் தொகை செலுத்தப்படாத போது:
| நாள் | விவரம் | பே.ப.எண் | பற்று ரூ. |
வரவு ரூ. |
|
|---|---|---|---|---|---|
| நேர்மைப் பங்கு முதல் க/கு (50x10) | ப | 500 | |||
| நேர்மைப்பங்கு இரண்டாம் மற்றும் இறுதி அழைப்புக் க/கு(50x3) | 150 | ||||
| பங்கு ஒறுப்பிழப்பு க/கு (50x7) | 350 | ||||
| (50 பங்குகள் ஒறுப்பிழப்பு செய்யப்பட்டன) |
குறிப்பு: முனைமத் தொகை நிறுமத்தால் பெறப்பட்டதால் முனைமத் தொகையை இரத்து செய்தல் கூடாது.
2) ஒதுக்கீட்டுத் தொகை, முதல் அழைப்பு, இரண்டாம் அழைப்பு மற்றும் இறுதி அழைப்புத் தொகை பெறப்படாத போது
| நாள் | விவரம் | பே.ப.எண் | பற்று ரூ. |
வரவு ரூ. |
|
|---|---|---|---|---|---|
| நேர்மைப் பங்கு முதல் க/கு (50x10) | ப | 500 | |||
| பத்திர முனைமக் க/கு (50x1) | ப | 50 | |||
| நேர்மைப் பங்கு ஒதுக்கீட்டுக் க/கு (50x3) | 150 | ||||
| நேர்மைப் பங்கு முதல் அழைப்பு க/கு (50x3) | 150 | ||||
| நேர்மைப் பங்கு இரண்டாம் மற்றும் இறுதி அழைப்பு க/கு (50x3) | 150 | ||||
| பங்கு ஒறுப்பிழப்பு க/கு (50x2) | 100 | ||||
| (50 பங்குகள் ஒறுப்பிழப்பு செய்யப்பட்டன) |
3) ஒதுக்கீட்டுத் தொகை மற்றும் அழைப்புத் தொகை பெறப்படாத போது
| நாள் | விவரம் | பே.ப.எண் | பற்று ரூ. |
வரவு ரூ. |
|
|---|---|---|---|---|---|
| நேர்மைப் பங்கு முதல் க/கு (50x7) | ப | 350 | |||
| பத்திர முனைமக் க/கு (50x1) | ப | 50 | |||
| நேர்மைப் பங்கு ஒதுக்கீட்டுக் க/கு (50x3) | 150 | ||||
| நேர்மைப் பங்கு முதல் அழைப்பு க/கு (50x3) | 150 | ||||
| பங்கு ஒறுப்பிழப்பு க/கு (50x2) | 100 | ||||
| (50 பங்குகள் ஒறுப்பிழப்பு செய்யப்பட்டன) |
3.
4.
| நாள் | விவரம் | பே.ப.எண் | பற்று ரூ. |
வரவு ரூ. |
|
|---|---|---|---|---|---|
| வங்கிக் க/கு (60,000x5) | ப | 3,00,000 | |||
| நேர்மை பங்கு விண்ணப்பக் க/கு | 3,00,000 | ||||
| (விண்ணப்பத் தொகை பெற்றது) | |||||
| நேர்மை பங்கு விண்ணப்பக் க/கு (50,000x5) | ப | 2,50,000 | |||
| நேர்மை பங்கு முதல் க/கு | 2,50,000 | ||||
| (நேர்மை பங்கு விண்ணப்பத் தொகை பங்கு முதலுக்கு கணக்கிற்கு மாற்றியது) | |||||
| நேர்மை பங்கு விண்ணப்பக் க/கு (10,000x5) | 50,000 | ||||
| வங்கி க/கு | 50,000 | ||||
| (மிகுதியான பங்கு விண்ணப்பத் தொகை திரும்பிச் செலுத்தியது) | |||||
| நேர்மை பங்கு ஒதுக்கீட்டுக் க/கு | ப | 1,50,000 | |||
| நேர்மை பங்கு முதல் க/கு | 1,50,000 | ||||
| (ஒதுக்கீட்டுத் தொகை பெற்றது) | |||||
| வங்கிக் க/கு | ப | 1,50,000 | |||
| நேர்மை பங்கு ஒதுக்கீட்டுக் க/கு | 1,50,000 | ||||
| (ஒதுக்கீட்டுத் தொகை பெற்றது) | |||||
| நேர்மை பங்கு முதல் மற்றும் இறுதி அழைப்பு க/கு | ப | 1,00,000 | |||
| நேர்மை பங்கு முதல் க/கு | 1,00,000 | ||||
| (பங்கு முதல் மற்றும் இறுதி அழைப்புத் தொகை பெற வேண்டியது) | |||||
| வங்கி க/கு | ப | 1,00,000 | |||
| நேர்மை பங்கு முதல் மற்றும் இறுதி அழைப்புக் க/கு | 1,00,000 | ||||
| (பங்கு முதல் மற்றும் இறுதி அழைப்புத் தொகை பெற்றது) |
5.
| விவரம் | ரூ. | ரூ. | விவரம் | ரூ. |
|---|---|---|---|---|
| சரக்கிருப்பு க/கு | 2,000 | நிலம் க/கு | 11,000 | |
| கடனாளிகள் க/கு | 3,000 | |||
| மறுமதிப்பீட்டு இலாபம்: | ||||
| சுந்தர் முதல் க/கு (3/6) | 3,000 | |||
| விவேக் முதல் க/கு (2/6) | 2,000 | |||
| பாண்டியன் முதல் க/கு (1/6) | 1,000 | 6,000 | ||
| 11,000 | 11,000 |
| விவரம் | சுந்தர் ரூ. |
விவேக் ரூ. |
பாண்டியன் ரூ. |
விவரம் | சுந்தர் ரூ. |
விவேக் ரூ. |
பாண்டியன் ரூ. |
|---|---|---|---|---|---|---|---|
| இலாபநட்டக் க/கு | 3,000 | 2,000 | 1,000 | இருப்பு கீ/கொ | 50,000 | 40,000 | 10,000 |
| பாண்டியனின் | பொதுக்காப்பு க/கு | 18,000 | 12,000 | 6,000 | |||
| நிறைவேற்றாளர் க/கு | 16,000 | ||||||
| இருப்பு கீ/இ | 68,000 | 52,000 | மறுமதிப்பீட்டு க/கு | 3,000 | 2,000 | 1,000 | |
| (இலாபம்) | |||||||
| 71,000 | 54,000 | 17,000 | 71,000 | 54,000 | 17,000 | ||
| இருப்பு கீ/கொ | 68,000 | 52,000 | - |
| பொறுப்புகள் | ரூ. | ரூ. | சொத்துகள் | ரூ. | ரூ. |
|---|---|---|---|---|---|
| முதல் கணக்குகள்: | நிலம் | 80,000 | |||
| சுந்தர் | 68,000 | கூட்டுக: | |||
| விவேக் | 52,000 | 1,20,000 | மதிப்பேற்றம் | 11,000 | 91,000 |
| பாண்டியனின் | |||||
| நிறைவேற்றாளர் க/கு | 16,000 | சரக்கிருப்பு | 20,000 | ||
| பற்பல கடனீந்தோர் | 14,000 | கழிக்க: | |||
| மதிப்பு குறைவு | 2,000 | 18,000 | |||
| கடனாளிகள் | 30,000 | ||||
| கழிக்க: மதிப்பு குறைப்பு | 3,000 | 27,000 | |||
| வங்கி ரொக்கம் | 14,000 | ||||
| 1,50,000 | 1,50,000 |
6.
ரோஹித் பங்கு = \(\frac { 2 }{ 10 } \)
ஆதாயப் பங்கு = விலகும் கூட்டாளியின் பங்கு x ஆதாயப்பங்கின் விகிதாச்சாரம்
ராகுல் = \(\frac { 2 }{ 10 } \times \frac { 3 }{ 5 } =\frac { 6 }{ 50 } \)
ரவி = \(\frac { 2 }{ 10 } \times \frac { 2 }{ 5 } =\frac { 4 }{ 50 } \)
ஆதாய விகிதம் = \(\frac { 4 }{ 50 } :\frac { 4 }{ 50 } \) அதாவது 3 : 2
தொடரும் கூட்டாளிகளின் புதிய பங்கு = பழைய பங்கு + ஆதாயப் பங்கு
ராகுல் = \(\frac { 5 }{ 10 } +\frac { 6 }{ 50 } =\frac { 25+6 }{ 50 } =\frac { 31 }{ 50 } \)
ரவி = \(\frac { 3 }{ 10 } +\frac { 4 }{ 50 } =\frac { 15+4 }{ 50 } =\frac { 19 }{ 50 } \)
ஆகையால், ராகுல் மற்றும் ரவி ஆகியோரின் புதிய விகிதம் = \(\frac { 31 }{ 50 } :\frac { 19 }{ 50 } \) அதாவது 31 : 19
7.
குறிப்பு: தொடக்க முதல் நிதியினைக் கண்டறிய தொடக்க இருப்புநிலைக் குறிப்பினைத் தயாரிக்க வேண்டும்.
| பொறுப்புகள் | ரூ. | சொத்துகள் | ரூ. |
|---|---|---|---|
| முதல் நிதி | 43,000 | முதலீடு | 80,000 |
| (இருப்புக்கட்டும் தொகை) | பெறவேண்டிய சந்தா | 8,000 | |
| விளையாட்டுப் போட்டி நிதி | 60,000 | வங்கி ரொக்கம் | 14,000 |
| 1,03,000 | 1,03,000 |
| செலவுகள் | ரூ. | வருமானம் | ரூ. | ரூ. |
|---|---|---|---|---|
| மைதான பராமரிப்பு | 33,000 | சந்தா | 60,000 | |
| பல்வகை செலவுகள் | 22,000 | கழிக்க: 2016-2017 ஆம் ஆண்டிற்காகப் பெற்றது | 8,000 | |
| செலவுகளைக் காட்டிலும் மிகுதியான வருமானம் (உபரி) | 26,000 | 52,000 | ||
| கூட்டுக: நடப்பு ஆண்டில் பெற வேண்டியது | 9,000 | 61,000 | ||
| அரங்க வாடகை | 20,000 | |||
| 81,000 | 81,000 |
| பொறுப்புகள் | ரூ. | ரூ. | சொத்துகள் | ரூ. |
|---|---|---|---|---|
| முதல்நிதி | 43,000 | அறைகலன் | 40,000 | |
| கூட்டுக: செலவுகளைக் காட்டிலும் மிகுதியான வருமானம் (உபரி) | 26,000 | 69,000 | முதலீடு | 80,000 |
| உயில்கொடை | 18,000 | சந்தா பெற வேண்டியது | 9,000 | |
| விளையாட்டுப் போட்டி நிதி | 60,000 | வங்கி ரொக்கம் | 22,000 | |
| கூட்டுக: விளையாட்டுப் போட்டி நிதி வரவுகள் | 45,000 | கையிரொக்கம் | 3,000 | |
| 1,05,000 | ||||
| கழிக்க: விளையாட்டுப் போட்டி நிதிச் செலவுகள் | 38,000 | 97,000 | ||
| 1,54,000 | 1,54,000 |
8.
| பெறுதல்கள் | ரூ. | செலுத்தல்கள் | ரூ. |
| இருப்பு கீ/கொ | இருப்பு கீ/கொ | ||
| ரொக்க இருப்பு | 15,000 | வங்கி மேல்வரைப்பற்று | 9,000 |
| முதலீடுகள் விற்றது | 4,000 | அச்சு மற்றும் எழுதுபொருள் | 2,500 |
| அறக்கட்டளை நிதி வரவுகள் | 6,000 | வட்டி செலுத்தியது | 5,250 |
| சந்தா பெற்றது | 40,000 | சிற்றுண்டி வாங்கியது | 2,500 |
| இதர வரவுகள் | 650 | ஒளியூட்டுக் கட்டணம் | 3,300 |
| அரசு மானியம் பெற்றது | 6,000 | பழுது பார்த்தல் மற்றும் புதுப்பித்தல் | 7,500 |
| சிற்றுண்டி விற்றது | 1,500 | போக்குவரத்துச் செலவுகள் | 2,750 |
| புத்தகங்கள் வாங்கியது | 10,000 | ||
| காப்பீட்டு முனைமம் செலுத்தியது | 4,000 | ||
| இருப்பு கீ/இ | |||
| வங்கி ரொக்கம் | 2,000 | ||
| கைரொக்கம் | 24,350 | ||
| 73,150 | 73,150 |
குறிப்பு கொடுக்கப்பட வேண்டிய சம்பளம் மற்றும் தேய்மானம் ரொக்கம் சாரா நடவடிக்கைகளாக இருப்பதால் இவை இரண்டும் பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கில் இடம் பெறாது.
9.
| விவரம் | ரூ. | ரூ. | விவரம் | ரூ. |
|---|---|---|---|---|
| அறைகலன் க/கு | 2,000 | சரக்கிருப்பு க/கு | 4,000 | |
| மறுமதிப்பீட்டு இலாபம்: | இயந்திரம் க/கு | 20,000 | ||
| அமீர் முதல் க/கு (3/5) | 13,200 | |||
| இராஜா முதல் க/கு (2/5) | 8,800 | 22,000 | ||
| 24,000 | 24,000 |
| விவரம் | அமீர் ரூ. |
இராஜா ரூ. |
ரோஹித் ரூ. |
விவரம் | அமீர் ரூ. |
இராஜா ரூ. |
ரோஹித் ரூ. |
|---|---|---|---|---|---|---|---|
| இருப்பு கீ/இ | 1,08,200 | 88,800 | 30,000 | இருப்பு கீ/கொ | 80,000 | 70,000 | - |
| வங்கி க/கு | - | - | 30,000 | ||||
| காப்பு நிதி க/கு | 9,000 | 6,000 | - | ||||
| மறுமதிப்பீட்டு க/கு | 13,200 | 8,800 | - | ||||
| வங்கி க/கு | 6,000 | 4,000 | - | ||||
| (நற்பெயர் பங்கு) | |||||||
| 1,08,200 | 88,800 | 30,000 | 1,08,200 | 88,800 | 30,000 | ||
| இருப்பு கீ/கொ | 1,08,200 | 88,800 | 30,000 |
குறிப்பு: தியாக விகிதம் கொடுக்கப்படாமல் ஆனால், புதிய கூட்டாளியின் இலாப விகிதம் கொடுக்கப்பட்டிருந்தால் பழைய இலாப விகிதத்தை (3:2) தியாக விகிதமாகக் கொண்டு புதிய கூட்டாளியின் நற்பெயரை பழைய கூட்டாளிக்கு பகிர்ந்தளிக்க வேண்டும்.
| நாள் | விவரம் | ரூ. | நாள் | விவரம் | ரூ. |
|---|---|---|---|---|---|
| இருப்பு கீ/கொ | 20,000 | இயந்திரம் | 60,000 | ||
| ரோஹித் முதல் க/கு | 30,000 | ||||
| அமீர் முதல் க/கு | 6,000 | ||||
| இராஜா முதல் க/கு | 4,000 | ||||
| 60,000 | 60,000 |
| பொறுப்புகள் | ரூ. | ரூ. | பொறுப்புகள் | ரூ. | ரூ. |
|---|---|---|---|---|---|
| முதல் கணக்குகள்: | இயந்திரம் | 60,000 | |||
| அமீர் | 1,08,200 | கூட்டுக: மதிப்பேற்றம் | 20,000 | 80,000 | |
| இராஜா | 88,800 | அறைகலன் | 40,000 | ||
| ரோஹித் | 30,000 | 2,27,000 | கழிக்க: தேய்மானம் | 2,000 | 38,000 |
| கடனீந்தோர் | 35,000 | கடனாளிகள் | 30,000 | ||
| சரக்கிருப்பு | 10,000 | ||||
| கூட்டுக: மதிப்பேற்றம் | 4,000 | 14,000 | |||
| முன்கூட்டிச் செலுத்திய | |||||
| காப்பீடு | 40,000 | ||||
| வங்கி ரொக்கம் | 60,000 | ||||
| 2,62,000 | 2,62,000 |
10.
| விவரம் | தொகை ரூ. |
விவரம் | தொகை ரூ. |
|---|---|---|---|
| இருப்பு கீ/கொ | 30,000 | ரொக்கம் பெற்றது | 1,50,000 |
| (தொடக்க இருப்பு) | அளித்த தள்ளுபடி | 6,000 | |
| கடன் விற்பனை | 1,70,000 | விற்பனைத் திருப்பம் | 6,500 |
| இருப்பு கீ/இ (இறுதி இருப்பு/இருப்புக் கட்டும் தொகை) | 37,500 |
| விவரம் | தொகை ரூ. |
விவரம் | தொகை ரூ. |
|---|---|---|---|
| ரொக்கம் கொடுத்தது | 1,40,000 | இருப்பு கீ/இ | 41,000 |
| பெற்ற தள்ளுபடி | 5,000 | (தொடக்க இருப்பு) | |
| கொள்முதல் திருப்பம் | 7,500 | கடன் கொள்முதல் | 1,50,000 |
| இருப்பு கீ/இ (இறுதி இருப்பு/இருப்புக் கட்டும் தொகை) | 38,500 | ||
| 1,91,000 | 1,91,000 |
11.

விற்பனை மூலம் பெற்ற வருவாய்க்கான அடக்க விலை = கொள்முதல் செய்த சரக்குகள் + சரக்கிருப்பு மாற்றம் + நேரடிச் செலவுகள் வருவாய்க்கான அடக்க விலை
= 17,000-1,000+0=ரூ.16,000
மொத்த இலாபம் = விற்பனை மூலம் பெற்ற வருவாய் - விற்பனை மூலம் பெற்ற வருவாய்க்கான அடக்க விலை
= 20,000-16,000=ரூ.4,000
\(\therefore \) மொத்த இலாப விகிதம் = \(\cfrac { 4,000 }{ 20,000 } \times 100=20\%\)
(ii)

குறிப்பு :
வரி இல்லை எனக் கொள்ளவும்.
(iii)

இயக்க அடக்க விலை = விற்பனை மூலம் பெற்ற வருவாய்க்கான அடக்க விலை + இயக்கச் செலவுகள்
இயக்கச் செலவுகள் = இதர செலவுகள் = ரூ.2,400
இயக்க அடக்க விலை = 16,000+2,400=ரூ.18,400
\(\therefore \) இயக்க அடக்க விலை விகிதம் = \(\cfrac { 18,400 }{ 20,000 } \times 100=92\%\)
(iv)

இயக்க இலாபம் = விற்பனை மூலம் பெற்ற வருவாய் - இயக்க அடக்க விலை
= 20,000-18,400=ரூ1,600
\(\therefore \) இயக்க இலாப விகிதம் = \(\cfrac { 1,600 }{ 20,000 } \times 100=8\%\)
12.

நீண்டகாலக் கடன் = 9% கடனீட்டுப் பத்திரங்கள் = ரூ.4,00,000
பங்குதாரர் நிதி = நேர்மைப் பங்குமுதல் + முன்னுரிமைப் பங்குமுதல் + காப்புகள் மற்றும் மிகுதி
= 1,50,000+2,00,000+1,50,000=ரூ.5,00,000
\(\therefore \) புற அக பொறுப்புகள் விகிதம் =
\(\cfrac { 4,00,000 }{ 5,00,000 } =0.8:1\)
(ii)

(iii)

= 8%முன்னுரிமைப் பங்குமுதல் +9% கடனீட்டுப் பத்திரங்கள்
= 2,00,000+4,00,000=ரூ 6,00,000
நேர்மைப் பங்குதாரர் நிதி = 1,50,000+1,50,000=ரூ.3,00,000
\(\therefore \) முதல் உந்து திறன் விகிதம் = \(\cfrac { 6,00,000 }{ 3,00,00 } =2:1\)
13.
நிலாவின் எடுப்புகள் மீதான வட்டி கணக்கிடுதல் (சராசரி கால முறையை பயன்படுத்தி
மொத்த எடுப்புத் தொகை = 5,000 x 2 = ரூ.10,000
எடுப்புகள் ஒவ்வொரு அரையாண்டு இறுதியிலும் எடுத்திருந்தால், சராசரி காலம் = 9
= ரூ.10,000 \(\times \frac { 4 }{ 100 } \times \frac { 9 }{ 12 } \) = ரூ.300
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards