12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 04/10/2020
12 ஆம் வகுப்பு உயிரியல் முக்கிய 5 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Biology Tamil Medium Important 5 Mark Creative Questions (New Syllabus 2020)
12ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
தாவர வழிமுறை வளர்ச்சியின் முக்கியத்துவம் யாது?
2.
இடதுவரை மையங்கள் மற்றும் இடதுவரை தாவரங்கள் பற்றி எழுதுக.
3.
புதிய காடு வளர்ப்பின் நோக்கங்கள் மற்றும் குறிக்கோள் அடைவுகள் (அல்லது) சாதனைகள் யாவை?
4.
உயிரித் திரள் பிரமிட் வரையறு. பிரமிடின் வடிவத்தை பொருத்து உயிரித்திரள் பிரமிட் எத்தனை வகைப்படும்?
5.
இந்தியாவில் உயிரியல் பல்வகைத் தன்மையின் பரிணாமத்தை விவரி.
6.
வாழிடங்கள் துண்டாடப்படுவதினால் உயிரினங்கள் பாதிக்கப்படுவதை விவரி. உயிரினங்கள் வாழும் ஒரு பெரிய நிலப்பரப்பு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சிறு பகுதிகளாகப் பிரித்தல் வாழிடம் துண்டாடப்படுதல் ஆகும்.
7.
r-தேர்வு செய்த மற்றும் k-தேர்வு செய்த சிற்றினங்களுக்கிடையே உள்ள வேறுபாடுகளை அட்டவணைப்படுத்துக.
8.
பல்வேறு பருவகாலங்களில் பெய்யும் மழையின் பரவலின் அடிப்படையில் மிதவெப்ப மண்டலக் காடுகளை வகைப்படுத்துக.
9.
PHB, PHA & PLA போன்ற பயோபாலிமர்கள் வேறுபடுத்துக.
10.
மரபணு மாற்றமடைந்த தாவரங்களையும் அவற்றின் பயன்களையும் தொகுத்தெழுதுக.
11.
தொற்று நோய்களாக இருந்தாலும், பரம்பரை நோயாக இருந்தாலும் முன்கூட்டியே கண்டறிதல் சிகிச்சைக்கு முக்கியமானதாகும். பாரம்பரிய முறைகளில் நோயினை முன்கூட்டியே கண்டறிய முடிவதில்லை.
அ) முன்கூட்டியே நோய் கண்டறிதலின் முக்கியத்துவம் யாது?
ஆ) மூலக்கூறு அளவில் நோய் கண்டறிதலின் முக்கியத்துவம் யாது?
12.
கரும்பின் பயன்கள் கூறு?
13.
கழிவுநீர்ச் சுத்திகரிப்பில் இரண்டாம் நிலைச் சுத்திகரிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உன் பதில் மூலம் நியாயப்படுத்து.
14.
புள்ளி சடுதிமாற்றம் வரையறு-அதன் வகைகள் யாவை?
15.
மரபணு அமைவிடங்கள் A/a மற்றும் D/d இவை மிக நெருக்கமாக அமைந்திருப்பதால் அவற்றிடையே மறுசேர்க்கை காணப்பட வாய்ப்பில்லை.
16.
உயிரி பூச்சிக் கொல்லிகள் பற்றி விரிவாக விவரி
17.
உயிரி உரங்களின் வகைகளை பற்றி விரிவாக எழுதுக
18.
புழுவின் நோய்கள் பற்றி விவரி.
19.
அயல் மகரந்தச் சேர்க்கைக்கான உத்திகளை விவரி?
20.
21.
தொற்றுத்தாவரங்கள் என்றால் என்ன? அதன் புறஅமைப்பு தகஅமைவுகள் யாவை?
22.
நீர்வாழ் தாவரங்களின் புறஅமைப்பு (அ) புறத்தோற்ற தகவமைப்புகள் யாவை?
23.
மூன்று பண்பு கலப்பை விவரி
24.
பல்வேறு உயிரினங்களில் கருமுட்டைப் பற்றிய ஒப்புமை அறிவியல் பரிணாமத்திற்கான சான்றாக விளங்குகிறது?
25.
ELSI என்றால் என்ன? மற்றும் உயிர் அறநெறி விளக்குக.
26.
உயிர் பாதுகாப்பு என்றால் என்ன?
27.
வேளாண் வேதிப்பொருட்களின் விளைவுகள் யாவை?
28.
நீர் மாசுபாட்டினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் யாவை?
29.
கருவுறுதலின் நிகழ்வுகளை விவரி.
30.
இரட்டைக் குழந்தைகளின் வகைகளை விவரி.
31.
குரோமோசோம்களில் ஏற்படும் இயல்பு மற்றும் சின்ட்ரோம்களை உருவாக்குகின்றன?
32.
இயற்கையான ஆனால் நம்பகத்தன்மையற்ற கருத்தடை முறை எது? விளக்கு?
33.
பலபிளவு முறை பற்றி விரிவாக விடையளி.
34.
DNA ரேகை அச்சிடலில் பயன்பாடுகள் யாவை?
35.
மரபணுக்குறியீடுகளின் சிறப்புப் பண்புகள் தருக.
1.
1. சுற்றுச்சூழல் சார் வழிமுறை வளர்ச்சி பற்றிய அறிவு, காடுகளில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சிற்றினங்களின் கட்டுப்பாடான வளர்ச்சியைப் புரிந்து கொள்ள உதவுகிறது.
2. வழிமுறை வளர்ச்சி பற்றிய அறிவை பயன்படுத்துவதன் மூலம், படிவிலிருந்து அணைகளை பாதுகாக்கலாம்.
3. காடுகளை மீட்டெடுத்தல், புதிய காடுகளை வளர்த்தலில் பயன்படுத்தப்படும் நுட்பங்களைப் பற்றிய தகவல்களை இது வழங்குகிறது.
4. மேய்ச்சல் நிலங்களின் பராமரிப்புக்கு இது உதவுகிறது.
5. உயிரினங்களின் உயிரிப்பன்மத்தை ஒரு சூழல் பல்வேறு காரணிகளின் இடையூறுகளால் வழிமுறை வளர்ச்சியின் போது உருவாகும் உயிரிப்பன்மத்தன்மைகள் தாக்கத்திற்கு உள்ளாகின்றன.
6. உயிரினங்கள் இல்லாத ஒரு வாழ்விடப் பகுதியில் குடியேறி காலனிகள் தோன்ற முதனிலை வழிமுறை வளர்ச்சி உதவுகிறது.
7. சேதமடைந்த பகுதி மற்றும் வாழிடத்தில் ஒரு தாவர குழுமத்தை மறுசீரமைப்பதில் இரண்டாம்நிலை வழிமுறை வளர்ச்சி ஈடுபடுகிறது.
8. உலகெங்கிலும் நாம் பார்க்கும் காடுகள் மற்றும் தாவரங்கள் அனைத்தும் தாவர வழிமுறை வளர்ச்சியினால் தோன்றியவையேயாகும்.
2.
1. ஒரு குறிப்பிட்ட புவியியல் பகுதியில் மட்டும் காணப்படும் தாவரங்கள் மற்றும் விலங்குகள் இடதுவரை சிற்றினங்களுக்கு இடையேயான இடைச்செயல்கள், விதை பரவுதலில் சிக்கல்கள், ஒரு குறிப்பிட்ட இடம் தள விசேடத்துவம் மற்றும் பல சுற்றுச்சூழல் மற்றும் சூழ்நிலையில் பிரச்சனைகள் போன்ற பல்வேறு காரணங்களாக இருக்கலாம்.
3.மூன்று பெரிய இடவரை மையங்கள் மற்றும் 27 நுண்ணிய இடவரை மையங்கள் இந்தியாவில் காணப்படுகின்றன. இந்தியாவில் சுமார் மூன்றில் ஒரு பங்கு இடவரை மையங்கள் இந்தியாவில் காணப்படுகின்றன. இந்தியாவில் சுமார் மூன்றில் ஒரு பங்கு ஐடாவரைத் தாவர இனங்ளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
4. இந்திய இமயமலை , தீபகற்ப இந்தியா மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் பரவிக் காணப்படுகின்றன.
5. ஃபோயேசி, ஏப்பியேஸி,ஆஸ்ட்ரேஸி மற்றும் ஆர்க்கிடேஸி குடும்பத்தைச் சார்ந்த சிறு செடிகளே அதிகச் சதவீதத்தில் காணப்படும் இடவரை தாவரங்களாகும்.
| இடவரைத் தாவரங்கள் | வளரியல்பு | இடவரை மையம் | |
| 6. | பக்காரியா குற்றாலன் சிஸ் | மரம் | மேற்குத் தொடர்ச்சி மலையின் தெற்குப் பகுதி |
| 7. | அகஸ்தியமலையய்யா பாசிப்ஃப்ளோரோ | மரம் | தீபகற்ப வளர்ச்சி |
| 8. | ஹார்ட்விக்கியா பைனேட்டா | மரம் | தீபகற்பம் மற்றும் வட இந்தியா பகுதி |
| 9. | பென்டிக்கியா கொண்டப்னா | மரம் | தமிழ்நாடு மற்றும் கேரளாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகள் |
| 10 | நெப்பந்தஸ் காசியானா | வன்கொடி | காசி மலைகள் மற்றும் மேகாலயா |
3.
புதிய காடு வளர்ப்பின் நோக்கங்கள் :
1. காடுகளின் பரப்பளவை அதிகரித்தல், அதிக மரங்களை நடவு செய்தல், ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரித்தல் மற்றும் காற்றின் தரத்தை உயர்த்துதல்.
2. வளங்குன்றிய காடுகளைப் புனரமைப்பதனால் கார்பன் நிலைநிறுத்தலை அதிகரித்தல் மற்றும் வளிமண்டலக் கார்பன்-டை -ஆக்ஸைடை குறைத்தல்.
3. மூங்கில் தோட்டங்களை வளர்த்தல்.
4. சிறிய வனளப் பொருட்கள் உற்பத்தி மற்றும் மருத்துவத் தாவரங்களை நடவு செய்தல்.
5. உள்ளூர் சிறு செடி /புதர்ச் செடிகளை மீளுருவாக்குதல், நீர்மட்டம் அல்லது நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துதல், மண்ணில் நைட்ரஜன் வழிந்தோடுதலையும், குடிநீரில் நைட்ரஜன் கலப்பதையும் குறைத்தல், அதன் காரணமாக நைட்ரஜன் மாசற்ற தூய நீர் உருவாதல்.
6. இயற்கையின் துணை கொண்டு செயற்கை மீளுருவாக்கம் சாத்தியமாகிறது.
குறிக்கோள் அடைவுகள் /சாதனைகள் :
7. சிதைவுற்ற காடுகள் மறுசீரமைக்கப்பட்டுள்ளன.
8. சமூகச் சொத்துக்களான மேல்நிலை தொட்டிகள், ஆழ்துளை கிணறுகள், கை பம்புகள், சமுதாயக் கூடங்கள், நூலகங்கள் முதலியன நிறுவப்பட்டுள்ளது.
9. சுற்றுச்சூழ்நிலையில் மற்றும் சூழலியல் நிலைப்புத் தன்மை பராமரிக்கப்பட்டுள்ளது.
10.உயிரிபன்மம், வன மற்றும் மரபணு மூலகங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன.
11. காடு மேலாண்மையில் சமூக ஈடுபாடு குறிப்பாகப் பெண்கள் பங்கு குறிப்பிடத்தக்கது.
4.
1. உயிரித்திரள் பிரமிட் (Pyramid of biomass): ஒரு சூழல்மண்டலத்தின் அடுத்தடுத்த ஊட்ட மட்டங்களில் காணப்படும் கரிமப்பொருட்களின் (உயிரித்திரள்) அளவை குறிக்கும் திட்ட வரைபடம் உயிரித்திரள் பிரமிட் என்று அழைக்கப்படுகிறது.
2. புல்வெளி மற்றும் வனச் சூழல்மண்டலத்தில் உயிரிதிரளின் அளவு அடுத்தடுத்த ஊட்ட மட்டங்களில் உற்பத்தியாளர்களில் தொடங்கி இறுதி உண்ணிகள் (மூன்றாம் நிலை நுகர்வோர்) வரை படிப்படியாகக் குறைகிறது. எனவே இந்த இரண்டு சூழல்மண்டலங்களிலும் உயிரித்திரள் பிரமிட் நேரான பிரமிட்டாக உள்ளது.
3. எனினும், குளச் சூழல்மண்டலத்தின் பிரமிட்டின் அடிப்பகுதியில் உள்ள உற்பத்தியாளர்கள் நுண்ணுயிரிகளாக குறைவான உயிரித்திரளைக் கொண்டுள்ளது. மேலும் உயிரித்திரள் மதிப்பு பிரமிட்டின் இறுதிவரை படிப்படியாக அதிகரிக்கிறது. எனவே இந்த உயிரித்திரள் பிரமிட் எப்பொழுதும் தலைகீழ் வடிவத்தில் காணப்படும்.
5.
1. தனித்தன்மை வாய்ந்த உயிரிய புவியமைப்பு கொண்ட இருப்பிடங்கள், பரந்த மாறுபாடுடைய காலநிலை கூறுகள், எண்ணிலடங்கா சுற்றுச் சூழல் பல்வகைத் தன்மை மற்றும் புவியியல் தன்மையை பெற்றிருப்பதால் இந்தியா செழிப்பு மிக்க நாடாக விளங்குகிறது.
2. நிலப்பரப்பின் அடிப்படையில் இந்தியா உலகின் 7வது பெரிய நாடாகும்.
3. இந்தியாவில் பல்வேறு வகையான சூழ்நிலை மண்டலங்கள், மலைகள், பள்ளத்தாக்குகள், பீடபூமிகள், கடற்கரைகள், சதுப்பு நிலங்கள், கழிமுகங்கள், பனிப்பாறைகள், புல்வெளிகள் மற்றும் ஆற்றுப் படுக்கைகள் போன்ற பல்வேறுபட்ட சுற்றுச்சூழல் மண்டலங்களை இந்தியா கொண்டுள்ளது.
4. 17 உயிரிய மிகைப் பல்வகைத் தன்மை கொண்ட உலக நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
5. மேலும் இந்தியாவில் 10 வெவ்வேறு உயிர் புவி மண்டலங்கள் உள்ளது. அவை இமயமலைக்கு அப்பாலுள்ள மண்டலம், இமயமலை, இந்திய பாலைவனம், குறைவறட்சி மண்டலம், மேற்கு தொடர்ச்சி மலை, டெக்கான் தீபகற்பம், கங்கை சமவெளி, வடகிழக்கு இந்தியா கடற்கரையோர மண்டலம், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள்.
6. மேலும் இந்தியாவில் 89 தேசிய பூங்காக்கள் 492 வனவிலங்கு சரணாலயங்கள், 14 உயிர்கோள காப்பிடங்கள் உள்ளன.
7. 50 புலி காப்பகங்களை உள்ளடக்கியுள்ளது.
6.
1. உயிரினங்கள் வாழும் ஒரு பெரிய நிலப்பரப்பு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சிறு பகுதிகளாகப் பிரித்தல் வாழிடம் துண்டாடப்படுதல் எனப்படும்.
2. காட்டு நிலங்களை விளை நிலங்களாக மாற்றுதல் பழத்தோட்டங்கள், மலைத் தோட்டங்கள், நகர்ப்புற குடியிருப்புகள் அமைத்தல், தொழிற்பேட்டைகள், விளைபொருட்களை எடுத்துச்செல்ல வழித்தடங்கள் அமைத்தல் ஆகிய நிகழ்வுகளால் வாழிடம் துண்டாடப்படுகிறது.
3. இதன் விளைவாக உணவுச்சங்கிலி, உணவு வலை அழிக்கப்படுதல், அழிக்கப்பட்ட பகுதியில் உள்ள உயிரினங்கள் அழிதல், துண்டாடப்பட்ட வாழிடத்தில் உள்ள பல்வகைத் தன்மை குறைதல் ஆகியவை ஏற்படுகின்றன.
4. அதிக நிலப்பரப்பை தேவையாகக் கொண்ட பாலூட்டிகள், பறவை போன்ற பாதிக்கப்படுகின்றன.
5. யானை வழித்தடங்கள், வலசை போகும் பறவைகள் பாதிக்கப்படுகின்றன.
6. சிட்டுக் குருவிகள் குறைய இதுவும் ஒரு காரணமாகும்.
7.
| r -தேர்வு செய்த சிற்றினங்கள் | k-தேர்வு செய்த சிற்றினங்கள் | |
| 1. | சிறிய அளவிலான உயிரினங்கள் | பெரிய அளவிலான உயிரினங்கள் |
| 2. | அதிக சேய் உயிரிகளை உருவாக்கும். | குறைவான சேய் உயிரிகளை உருவாக்கும் |
| 3. | வேகமாக முதிர்ச்சியடையும் | தாமதமான முதிர்ச்சி மற்றும் பெற்றோர் பராமரிப்பு காணப்படும். |
| 4. | ஒவ்வொரு உயிரினமும், வாழ்நாளில் ஒரு முறையோ அல்லது சில முறைகளோ மட்டுமே இனப்பெருக்கம் செய்யும். | பெரும்பாலான உயிரினங்கள் அதிக வாழ்நாளை எட்டும். |
| 5. | சுற்றுச்சூழல் நிலையற்றது, அடர்த்தி சாராதது. | சுற்றுச்சூழல் நிலையானது, அடர்த்தி சார்ந்தது. |
8.
1. ஈரமான ஊசியிலை மற்றும் பசுமைமாறா, அகன்ற இலைக் காடுகள்:
ஈரமான பனிக்காலம் மற்றும் உலர்ந்த கோடைகாலம்.
2. உலர் ஊசியிலைக்காடுகள் :
உயரமான பகுதிகளில் அதிகம் உள்ளன. குறைவான மழைப்பொழிவைப் பெறுகின்றன.
3. மத்திய, தரைக்கடல் காடுகள் :
குளிர்காலங்களில் அதிக மழைப்பொழிவு (ஆண்டுக்கு 1000 மி.மீ க்கு குறைவு)
4. மிதவெப்ப மண்டல ஊசியிலைக் காடுகள் :
மிதமான குளிர்காலம், அதிகமான மழைப்பொழிவு.
5. மித வெப்ப மண்டலம் அகன்ற இலை மழைக்காடுகள் :
மிதமான, உறைபனியற்ற குளிர்காலம், ஆண்டு முழுவதும் சீராகப் பெய்யும் அதிக அளவு மழைப்பொழிவு.
9.
| வகைகள் | PHB | PHA | PLA | |
| 1 | விரிவாக்கம் | பாலிஹைட்ராக்ஸி பியூட்டரேட் | பாலிஹைட்ராக்சி ஆல்கனோயேட்கள் | பாலிலாக்டிக் அமிலம் |
| 2 | இயல்பு | சிதைவுறும் உயிரி பாலிமர்கள் | சிதைவுறும் உயிரி பாலிமர்கள் -உயிரிய பெரும் மூலக்கூறு | உயிரிய சிதைவடையும் அலிபாடிக் பாலியெஸ்டர் பாலிமர் |
| 3 | ஆதாரம் | சில வகை நுண்ணுயிரிகள் | கிராம் பாசிட்டிவ்: 1. பேசில்லஸ் மெகாஸ்டிரியம் 2. பேசில்லஸ் சப்டைலிஸ் 3. கார்னிபாக்டீரியம் 4. குளுடேனிக்கம் கிராம் நெகட்டிவ் 1. சூடோமோனாஸ் சிற்றினங்கள் 2. ஆல்கலிஜீன்ஸ் யூட்ரோபஸ் |
மீள் புதுப்பிக்கத்தக்க மூலப்பொருட்களான மக்காச்சோள தரசம், மரவள்ளிக்கிழங்கு, வேர்கள், சீவல்கள் தரசம் (அ) கரும்பு போன்றவற்றிலிருந்து பெறப்படுகிறது. |
| 4 | பயன்கள் | PHB & PHA பயன்பாடுகள் மருத்துவ பயன்: 1. சரியான ஏற்பிடத்தில் மருந்து சேர்க்கப்படுதல் 2. சாரக்கட்டு அமைப்பு 3. இதய வால்வுகள் அமைக்க 4. உயிரிய பெரும் மூலக்கூறு மற்றும் வெப்ப 5. பிளாஸ்டிக்குகள் |
உயிரிய சிதைவடையும் மற்றும் உயிரிய செயல்பாடுடைய வெப்ப பிளாஸ்டிக் | |
10.
| மரபணு மாற்றமடைந்த தாவரங்கள் | அவற்றின் பயன்கள் | |
| 1 | Bt-பருத்தி | காய்புழுக்களின் தாக்குதல் மற்றும் காய் ஈக்களின் தாக்குதலையும் கட்டுப்படுத்துகிறது. பூச்சிக்கொல்லியின் பயன்பாட்டையும் பயிர் வளர்ப்பு செலவும் குறைகிறது. |
| 2 | Bt-கத்திரி | லெபிடோப்டெரா வகை பூச்சிகளுக்கு தண்டு துளைப்பானுக்கு எதிராக உருவாக்கப்பட்டுள்ளது. |
| 3 | பொன்னிற அரிசி | உயிரி ஊட்டத்தரம் ஏற்றப்பட்டது. (Bio -fortification) பீட்டா கரோட்டீன் அரிசியில் உண்ணும் பகுதியில் நுழைக்கப்படுவதால் வைட்டமின் A குறைபாட்டை நீக்குகிறது. |
| 4 | தாரா கடுகு கலப்பினம் (DMH II) | பார், பர்னேஸ், ஃபார்ஸ்டார் எனும் மரபணுக்கள் சேர்த்து உருவாக்கப்பட்டது. ஃபாஸ்டா-களைக்கொல்லிக்கு எதிர்ப்பு தன்மை உடையது. |
| 5 | வைரஸ் எதிர்ப்பு தாவரங்கள் | வைரஸ் எதிரான மரபணுக்கள் ஓம்புயிரியில் செலுத்தப்படுகின்றன. வைரஸ் எதிர்ப்புத் தன்மை வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்படாமல் காக்கிறது. |
11.
அ) முன்கூட்டியே நோய் கண்டறிதலின் முக்கியத்துவம்:
தொற்று நோய்களாக இருந்தாலும், பரம்பரையாக வரும் மரபியல் நோய்களாக இருந்தாலும், முன்கூட்டியே கண்டறிதல் சரியான சிகிச்சைக்கு முக்கியமானதாகும்.
ஆ) மூலக்கூறு அளவில் நோய் கண்டறிதலின் முக்கியத்துவம்:
(i) நோய்களைக் கண்டறிய இலக்கு தன்மையுடைய, துல்லியமான எளிய கண்டறிதல் தொழில்நுட்பங்களை நாடி அறிவியலாளர்கள் தொடர் ஆய்வுகளைச் செய்து வருகிறார்கள்.
(ii) DNA மறுசேர்க்கைத் தொழில்நுட்பம், பாலிமரேஸ் சங்கிலி வினைகள், நொதி சார்ந்த நோய்த்தடைப்பொருள் உறிஞ்சுகை மதிப்பீடு போன்ற நம்பகத்தன்மை உள்ள தொழில்நுட்பங்கள் நோய்களைத் தொடக்க நிலையிலேயே கண்டறிய உதவுகின்றன.
(iii) நோயாளியின் உடல் அறிகுறிகள் தோன்றும் போது தான் அவரது உடலுக்குள் வைரஸ், பாக்டீரியா போன்ற நோயூக்கிகள் இருப்பதை அறிய முடிகிறது.
(iv) ஆனால், அறிகுறிகள் தோன்றுவதற்குள் அவை பல்கிப்பெருகி அதிக எண்ணிக்கையுடன் காணப்படுகின்றன.
(v) பாக்டீரியா, வைரஸ் போன்றவை மிகக்குறைந்த எண்ணிக்கையில் இருக்கும்போது, நோயின் அறிகுறிகளை வெளிப்படுத்துவதற்கு முன்பே அவற்றின் நியூக்ளிக் அமில பெருக்க வினையின் மூலம் அந்நோய்க் கிருமிகள் இருப்பதைக் கண்டறிய இயலும்.
12.
போயேசி குடும்பத்தை சேர்ந்த சாக்கரம் அஃபிசினாரம்
தோற்றம், விளையுமிடம்
நியூ கினியா காட்டு ரகமான, சாக்கரம் ஆஃபிசினாரம். இந்தியாவின் சாக்கரம் ஸ்பான்டேனியத்துடன், பிற்கலப்பு செய்து உருவானது. கன்னியாகுமரி, நீலகிரி தவிர எல்லா தமிழ்நாட்டு இடங்களிலும் விளைகிறது.
பயன்கள் :
1. வெள்ளைச் சர்க்கரை உற்பத்தி மூலப்பொருள்
2. சுத்திகரிக்கப்பட்டு சர்க்கரை, மதுபானம், வெல்லம் உற்பத்தி செய்யும் ஆலைகளில் பயன்படும்.
3. கரும்புச் சாறு புத்துணர்ச்சி தரும் பானம்.
4. வெல்லக் கழிவு பாகு (Molasses) எத்தில் ஆல்கஹால் உற்பத்திக்கு மூலப்பொருள்.
13.
1. இரண்டாம் நிலை சுத்திகரிப்பில் நுண்ணுயிரிகள் மூலம் கரிம பொருட்கள் உட்கொள்ளப்பட்டு அழிக்கப்படுகின்றன.
2. முதல் நிலையில் உருவான கலங்கல் நீர் பெரிய காற்றோட்டமுள்ள தொட்டிகளுள் செலுத்தப்படுகிறது.
3. அங்கு அவை இயந்திரங்களின் உதவியுடன் தொடர்ச்சியாக கலக்கப்படுவதால் காற்று உட்செலுத்தப்படுகிறது.
4. இதனால் காற்று சுவாச நுண்ணுயிரிகள் தீவிரமாக வளர்ந்து திரளாக (Floc) உருவாகின்றன.
5. திரள் (Floc) என்பது பாக்டீரியத் தொகுப்பும் பூஞ்சை இழைகளும் இணைந்து வலைப்பின்னல் போன்ற அமைப்பாக காணப்படும் அமைப்பு ஆகும்.
6. இவற்றின் வளர்ச்சியின் போது கழிவுநீரில் உள்ள பெருமளவு கரிம பொருட்களை உட்கொண்டு அழிக்கின்றன.
7. இது பெருமளவில் உயிரிய ஆக்சிஜன் தேவையை (BOD) குறைக்கின்றது.
8. உயிரிய ஆக்சிஜன் தேவை குறையும் வரை கழிவு சுத்திகரிப்பு நடைபெறுகின்றது.
9. உயிரிய ஆக்சிஜன் தேவை (BOD) எனப்படுவது "ஒரு லிட்டர் நீரிலுள்ள அனைத்து கரிம பொருட்களையும் ஆக்சிஜனேற்றம் செய்வதற்கு பாக்டீரியாவால் பயன்படுத்தப்படும் ஆக்சிஜன் அளவு" ஆகும்.
10. உயிரிய ஆக்சிஜன் தேவை குறைந்தவுடன் அந்த நீர் வீழ்ப்படிவதால் தொட்டிக்குள் அனுமதிக்கப்படுகிறது.
11. இதனால் பாக்டீரியா திரள் கீழே படிகிறது. இது செறிவூட்டப்பட்ட கசடு எனப்படும்.
12. இதன் ஒரு பகுதி காற்றோட்டமுள்ள தொட்டிக்குள் மூல நுண்ணுயிரிகளாகப் பயன்படுத்த செலுத்தப்படுகிறது.
13. மீதமுள்ள செறிவூட்டப்பட்ட கசடுகள் காற்றில்லா சுவாச கசடு சிதைப்பான் என்னும் பெரிய தொட்டியினுள் செலுத்தப்படுகிறது.
14. அதிலுள்ள காற்றற்ற சுவாச பாக்டீரியாக்கள் கசடிலுள்ள பாக்டீரியா மற்றும் பூஞ்சையை செரிக்கின்றன.
15. செரிமானத்தின் போது பாக்டீரியாக்கள் மீத்தேன், ஹைட்ரஜன் சல்பைடு மற்றும் கார்பன்-டை-ஆக்ஸைடு வாயுக் கலவையை உற்பத்தி செய்கின்றன.
16. இந்த உயிரிய வாயு ஆற்றல் மூலாதாரமாக பயன்படுகிறது.
17. இவ்வாறு முக்கிய பெருமளவு சுத்திகரிப்பு நிகழ்ச்சிகள் இந்நிகழ்வின் போது நடைபெறுவதால் இது மிகவும் முக்கியமான நிலை ஆகும்.
14.
வரையறை :
DNA வின் ஒரு காரம் (அ) கார இணைகளை மாற்றும் சடுதிமாற்றம் -புள்ளி சடுதிமாற்றம் எனப்படும்
வகைகள்:
இன்டெல் சடுதிமாற்றம்
கார இணை சேர்த்தல் (அ) நீக்குதல் -கூட்டாக இந்நிகழ்வுகள் அனைத்தும் இன்டெல் சடுதிமாற்றம் எனப்படுகிறது.
பதிலீடு: பதிலீடு இருவகைப்படும்
ஒத்த பதிலீடு
வேறுபட்ட பதிலீடு
ஒத்த பதிலீடு: (Transition)
பியூரின் நியூக்ளியோடைடுக்குப் பதிலாக வேறொரு பியூரின் (அ) ஒரு பைரிமிடினுக்கும் பதிலாக வேறொரு பைரிமிடின் சேர்க்கப்படுதல் -
பொருளுணர்த்தாதா சடுதிமாற்றம்:
ஒரு அமினோ அமிலத்திற்கான மரபுக்குறியின் முடிவு (அ) நிறுத்துக் குறியனாக மாற்றமடையும் சடுதிமாற்றம்
கட்ட நகர்வு சடுதிமாற்றம்:
ஒரு DNA வில் ஒரு கார இணை சேர்த்தல் (அ) நீக்குதலால் மரபுச் செய்தி பெயர்வு கட்டமைப்புகளை மாற்றுவதால் இயல்பான புரத அமைப்பு மற்றும் செயல்பாடு இழக்கப்படுகிறது-
15.
AAdd -ஒரு daDD பண்புக்கலப்பில் F2 வில் என்ன புறத்தோற்றம் என்ன விகிதத்தில் காணப்படும்
1. பெற்றோர் இன ஆக்கம் Ad/AdxaD/aD
2. மரபணுக்கள் மிக நெருக்கமாக இருப்பதால் அவை உருவாக்கிய கேமிட்டுகள்
3. Ad&aD (பெற்றோர் பண்புடையவை -புதிய மறுசேர்க்கை காணப்படவில்லை)
4. F1 அனைத்தும் Ad/aD அக இருந்தது
5. F1 உருவாக்கிய கேமிட்கள் Ad(50% aD =50%)
6. F2 விகிதம் -Ad/Ad(1/4)Ad/aD(1/2)aD/aD(1/4)
| Ad/Ad | Ad/aD | aD/aD |
| 1 | 2 | 1 |
16.
(i) உயிரிகளை அடிப்படையாகக் கொண்ட தாவர நோய்க்குறிகளை கட்டுப்படுத்தும் பூச்சிக்கொல்லிகள்.
(ii) செயற்கை பூச்சிக்கொல்லிகளை விட நச்சுத்தன்மையற்றும் மலிவாகவும், சூழலுக்கு உகந்த தன்மை கொண்டதாகவும் இருக்கும்
ட்ரைகோடெர்மா:
(i) பொதுவாக மண்ணிலும், வேர்த்தொகுதியிலும் தனித்து வாழும் பூஞ்சையாகும்
(ii) இவை தாவர நோய்களை கட்டுப்படுத்தும்
(iii) வேரின் வளர்ச்சிப் பெருக்கத்தைத் திறம்பட மேம்படுத்துகிறது
(iv) பயிர் உற்பத்தியை அதிகரிக்கும்
(v) சத்துக்களை உள்ளெடுத்து பயன்படுத்தும்
பியூவேரியா:
(i) உலகெங்கிலும் மண்ணில் இயற்கையாக வாழக்கூடிய ஒரு பூச்சி நோயுயிரி பூஞ்சையாகும்
(ii) இவை பல்வேறு கணுக்காலி சிற்றினங்களில் ஒட்டுண்ணியாக வாழ்ந்து வெள்ளை மஸ்கார்டைன் நோயை தடுக்கிறது
(iii) இது ரைசோக்டோனியா சொலானி என்ற பூஞ்சையால் தக்காளியில் ஏற்படுத்தப்படும் நாற்றமடிதல் நோயைக் கட்டுப்படுத்துகிறது.
17.
உயிரி உரம் என்பது உயிருள்ள அல்லது மறையுயிர் செல்களின் செயலாக்கம் மிக்க நுண்ணுயிரி இரகங்களை கொண்டு தயாரிக்கப்படுகிறது.
ரைசோபியம்:
(i) வேர் முடிச்சுகளில் கூட்டுயிர் வாழ்க்கையை கொண்டுள்ளது
(ii) வளிமண்டலத்திலுள்ள நைட்ரஜனை மண்ணில் நிலைநிறுத்துகிறது
(iii) இது நெல் விளைச்சலை 15 முதல் 40 சதவீதம் வரை அதிகரிக்கச் செய்கிறது
அசோலா:
(i) மிதக்கும் நீர்வாழ் பெரணியாகும்
(ii) நீலப்பசும்பாசியுடன் இணைந்து வளிமண்டல நைட்ரஜனை மண்ணில் நிலைநிறுத்துகிறது
(iii) விரைவாக சிதைவடைந்து நெற்பயிரின் விளைச்சலை அதிகரிக்கிறது
ஆர்பஸ்குலார் வேர் பூஞ்சை:
(i) மண்ணிலுள்ள அதிக பாஸ்பேட்டுகளை கரைக்கும் திறன் கொண்டது
(ii) நோய் எதிர்ப்பு மற்றும் சாதகமற்ற சூழ்நிலையைத் தாங்கும் திறன் உள்ளது
(iii) நிலத்தில் நீர் இருப்பதை உறுதிப்படுத்துகின்றது
கடற்பாசி திரவ உரம்:
(i) சைட்டோகைனின், ஜிப்ரலின் மற்றும் ஆக்சினையும் உடையது
(ii) இது கெல்ப் என்னும் கடற்பாசியிலிருந்து தயாரிக்கப்பட்டது.
(iii) இதில் 70க்கும் மேற்பட்ட கனிமங்கள், வைட்டமின்கள் மற்றும் நொதிகள் உள்ளன.
(iv) இதில் ஊறவைத்த விதைகள் வேகமாக முளைக்கும்
18.
1. மனிதனில் குடல் மற்றும் இரத்தத்தில் அக ஒட்டுண்ணிகளாக இருக்கும்.
அஸ்காரியாஸிஸ்
1. இது அஸ்காரிஸ் லும்பிரிகாய்ட்ஸ் மூலம் ஏற்படுகிறது.
2. இவை கெட்டுப்போன உணவு மற்றும் நீரின் மூலம் பரவுகிறது.
3. இதன் அறிகுறிகள் - வயிற்றுவலி, வாந்தி இரத்தசோகை மற்றும் வயிற்றுப்போக்காகும்.
4. இது குடலழற்சி, கல்லீரல் அழற்சி, மூச்சுக்குழாய் அழற்சி ஏற்படுத்துகிறது.
யானைக்கால் வியாதி :
1. வுச்செரியா பான்கிராஃப்டி மூலம் ஏற்படுகிறது.
2. இது நிணநீர் நாளங்கள் மற்றும் நிணநீர் முடிச்சுகளில் காணப்படுகிறது.
3. இதன் வாழ்க்கைச் சுழற்சி மனிதன் மற்றும் பெண் கியூல்க்ஸ் கொசுவிலும் நடைபெறுகிறது.
4. அப்புழுவால் மைக்ரோபைலேரியே என்றும் இளம் உயிரி உருவாகிறது.
5. அவை நிணநீர் முடிச்சுகளில் முதிர்வடைகிறது.
6. நிணநீர் நாளங்களில் அவை அடைப்பு ஏற்படுத்துவதால் கால்கள், விதைப்பை மற்றும் பால் சுரப்பிகளில் இந்நோய் ஏற்படுகிறது.
19.
1. ஒரு பால் தன்மை (ஈரிட பிரிதல்) (Dicliny, Unisexuality)
ஒரு பால் தன்மையுடைய மலர்கள் இருந்தால், அயல் மகரந்தச் சேர்க்கை மட்டும் நடைபெறும். இது 2 வகைப்படும்.
i) ஆண் பெண் மலர்த்தாவரங்கள் (Monoecious)
1. ஆண், பெண் மலர்கள் ஒரே தாவரத்தில் காணப்படும் (எ.கா) தென்னை.
2. ஆமணக்கு, சோளத்தில் தன் மகரந்தச்சேர்க்கை தடுக்கப்படும், கெய்ட்டினோகேமி நடைபெறும்
ii) ஒரு பால் மலர்த்தாவரங்கள் (Dioecious)
ஆண், பெண் மலர்கள் வெவ்வேறு தாவரங்களில் காணப்படும் (எ.கா) பேரீச்சை, இவற்றில் தன் மகரந்தச் சேர்க்கை, கெய்ட்டினோகேமி இரண்டுமே தடுக்கப்படும். (எ.கா) பேரீச்சை, பப்பாயா
2. ஓரிட அடைதல் (இருபால் தன்மை) (Monocliny or Bisexuality)
i) இரு கால முதிர்வு
அ) ஆண் முன் முதிர்வு (Protogyny)
மகரந்தத் தாள்கள், சூலக முடிக்கு முன்னர் முதிர்ச்சியடையும் (எ.கா) ஹீலியாந்தஸ்
ஆ) பெண் முன் முதிர்வு (புரோடோகைனி, Protogyny)
சூலக முடி, மகரந்தத் தாளுக்கு முன்னர் முதிரும் (எ.கா) அரிஸ்டலோக்கியா
ii) பாலுறுப்பு தனிப்படுத்தல் (Herkogamy)
மகரந்தத்தாளும், சூலக முடியும் மலரில் அமைந்திருக்கும் விதம் தன் மகரந்தச்சேர்க்கை நடப்பதைத் தடுக்கும். (எ.கா) குளோரியோசர் சூபர்பா.
iii) மாற்று சூலகத்தண்டுத் தன்மை (Heterostyly)
வெவ்வேறு மலர்களில், மகரந்தத் தாள்களும், சூலகத்தண்டும் வேறுபட்ட நீளத்தைப் பெற்றுள்ளன.
அ) இரு சூலகத் தண்டுத் தன்மை (Distyly)
இரு வகை மலர்கள் உள்ளன. இதில் ஊசி மலர் நீண்ட சூலக தண்டு, குட்டையான மகரந்தத் தாள்கள் பெற்றவை. ஊசிக்கண் மலர் குட்டையான சூலகத் தண்டு, நீண்ட மகரந்தத் தாள் கொண்டவை. (எ.கா. பிரைமுலா) எனவே ஊசிக்கண் மலரின் சூலக முடியும், ஊசி மலரின் மகரந்தப்பையும் ஒரே மட்டத்தில் இருக்கும்.
ஆ) மூன்று சூலகத்தண்டு தன்மை (Tristyly)
சூலகத்தண்டு, மகரந்தத் தாளின் நீளத்தைப் பொறுத்து, 3 வகை மலர்கள் உண்டாகும். இதனால் ஒரு வகை மலரின் மகரந்தத் துகள்கள், மற்ற 2 வகை மலர்களில் மட்டும் மகரந்தச் சேர்க்கை நடத்தும். (எ.கா) லைத்ரம்.
iv) தன் மலட்டுத்தன்மை தன் ஒவ்வாத் தன்மை (Self Sterility, Self Incompatibility)
ஒரு மலரின் மகரந்தத்துகள், அதே மலரின் சூலக முடியில் முளைக்காது. இது மரபணுசார் செயல்பாடு.
(எ.கா) அபுட்டிலான்
20.
21.
தொற்றுத் தாவரங்கள் (Epiphytes):
மற்ற தாவரங்களின் மேல் (ஆதாரத் தாவரங்கள்) தொற்றி வாழ்பவை தொற்றுத் தாவரங்கள் எனப்படுகின்றன. இதில் ஆதாரத் தாவரத்தை உறைவிடத்திற்காக மட்டுமே பயன்படுத்திக் கொள்கின்றன. ஆனால் நீர் அல்லது உணவினைப் பெற்றுக் கொள்வதில்லை. தொற்றுத் தாவரங்கள் பொதுவாக வெப்ப மண்டல மழைக்காடுகளில் அதிகம் காணப்படுகின்றன.
(எ.கா) ஆர்கிட்கள், வன்கொடிகள், தொங்கும் மாஸ்கள், மணி தாவரங்கள்
புற அமைப்பில் தக அமைவுகள்:
(i) வேர்த்தொகுப்புகள் விரிவாக வளர்ச்சி அடைந்துள்ளது. இதில் இருவகை வேர்கள் காணப்படுகின்றன. இவை
அ) பற்றுவேர்கள் மற்றும்
ஆ) உறிஞ்சும் வேர்கள்
(ii) தொற்றுத் தாவரங்களின் பற்றுவேர்கள் (Clinging roots) ஆதாரத் தாவரங்களின் மேற்புற உறுதியாக நிலை நிறுத்த உதவுகின்றன.
(iii) நிலப்புற வேர்கள் (Aerial roots) பசுமையானது. இவை கீழ்நோக்கித் தொங்கிக் கொண்டிருப்பவை. மேலும் வளி மண்டலத்திலிருந்து ஈரப்பதத்தை உறிஞ்சுவதற்காக வெலாமன் (Velamen) என்ற பஞ்சு போன்ற திசுவுடையது.
(iv) சில தொற்றுத் தாவரங்களின் தண்டு சதைப் பற்றுள்ளதாகவும் மற்றும் போலி குமிழ்களையோ அல்லது கிழங்குகளையோ உருவாக்குகின்றன.
(v) இலைகள் பொதுவாகக் குறைந்த எண்ணிக்கையிலும் தடிப்பான தோல் போன்றும் காணப்படுகின்றன.
(vi) கொன்று உண்ணிகளிடமிருந்து தன்னைக் காத்துக்கொள்ளத் தொற்று தாவரக்கூட்டங்களில் மிர்மிகோஃபில்லி பொதுவாகக் காணப்படுகிறது.
22.
வேர்:
(i) பொதுவாக உல்ஃபியா மற்றும் சால்வீனியாவில் வேர்கள் முற்றிலும் காணப்படுவதில்லை அல்லது ஹைட்ரில்லாவில் குறைவுற்ற வளர்ச்சியுடனும், ரானென்குலஸில் நன்கு வளர்ச்சி அடைந்து வேர்களும் காணப்படுகின்றன.
(ii) வேர்மூடிகளுக்கு பதிலாக வேர் பைகள் அமைந்திருக்கிறது. (எ.கா) ஆகாயத்தாமரை
தண்டு:
(i) நீருள் மூழ்கித்தாவரங்களில் நீண்ட, மிருதுவான பஞ்சு போன்ற நீட்சியடைந்த தண்டு காணப்படுகிறது.
(ii) மிதக்கும் தாவரங்களில் தண்டானது தடித்த, குறுகிய, பஞ்சு போன்ற ஓடு தண்டுடனும், வேரூன்றி மிதக்கும் தாவரங்களில் இது கிடைமட்டத் தண்டாகவும் (கிழங்கு) காணப்படுகிறது.
(iii) தரைபடர் ஓடுதண்டு, தரைகீழ் உந்து தண்டு, தரைமேல் ஓடுதண்டு, தண்டு மற்றும் வேர் பதியன்கள், கிழங்குகள், உறங்கு நிலை நுனிகள் ஆகியவற்றின் மூலம் உடல இனப்பெருக்கம் நிகழ்கிறது.
இலைகள்:
(i) வாலிஸ்நேரியாவில் இலைகள் மெல்லியவை, நீண்டவை மற்றும் பட்டையான நாடா வடிவமுடையது. பொட்டோமோஜிடானில் இலைகள் மெல்லியவை, நீண்டவை செரட்டோஃபில்லம் தாவரத்தில் நுண்பிளவுற்ற இலைகள் காணப்படுகின்றன.
(ii) வேரூன்றி வெளிப்பட்ட நீர்வாழ் தாவரங்களில் இருவகையான இலைகள் (நீர்மட்டத்திற்குக் கீழே பிளவுற்ற இலைகளும், நீர் மட்டத்திற்கு மேலே முழுமையான இலைகளும்) காணப்படுகின்றன. எடுத்துக்காட்டு ரெனன்குலஸ், லிம்னோஃபில்லா ஹெட்டிரோபில்லா மற்றும் சாஜிடேரியா.
23.
மூன்று எதிரிடைப் பண்புகளுக்கான மரபணு இணைகளைக் கொண்ட இது தூய கால் வழி தாவரங்களுக்கிடையே செய்யப்படும் கலப்பு
♂️ F2 முப்பண்புக் கலப்பு (மூன்று மரபணுக்களுக்கான மாதிரி செக்கர் போர்டு)
| ♂️ | ABD | ABd | AbD | Abd | aBD | aBd | abD | abd | |
| ABd | AABBDd | AABBDD | AABBdd | AABbdd | AaBBDd | AaBbdd | AaBbDd | AaBbdd | |
| Abd | AAbbDD | AABbDd | AAbbDD | AAbbDd | AaBbDD | AaBbDd | AabbDD | AabbDd | |
| Abd | AAbbdd | AABbdd | AAbbDd | AaBbdd | AaBbDd | AaBbdd | AabbDd | Aabbdd | |
| aBD | AaBBDD | AaBBDd | AaBbDD | AaBbDd | aaBBDD | aaBBDd | aaBbDD | aaBbDd | |
| aBd | aaBBDd | AaBBdd | AaBbDd | AaBbdd | aaBBDd | aaBBdd | aaBbDd | aaBbdd | |
| abD | AaBbDD | AabbDd | AabbDD | AabbDd | aaBbDD | aaBbDd | aabbDD | aabbDd | |
| abd | AaBbDd | AaBbdd | AabbDd | Aabbdd | aaBbDd | aaBbdd | aabbDd | aabbdd | |
| 27 | 9 | 9 | 9 | 3 | 3 | 3 | 1 |
F2 புறத்தோற்ற விகிதம் 27 : 9 : 9 : 9 : 3 : 3 : 3 : 1
24.
1. விலங்குகளில் கரு வளர்ச்சி நிலைகளிலும் வடிவங்களிலும் ஒற்றுமை உண்டு.
2. அனைத்து முதுகெலும்புகளின் இதயத்தின் கரு வளர்ச்சி ஒரே முறையில் நடைபெறுகிறது.
அ) மீன்களில் இரண்டு அறைகளையுடைய இதயமாகவும்
ஆ) இருவாழ்விகளில் 3 அறைகளுடைய இதயமாகவும்
இ) முதலை பறவைகள் பாலூட்டிகள் நான்கு அறைகளுடைய இதயமாகவும் வளர்ச்சி அடைகிறது.
1. உயிர்வழி தோற்ற விதியினை எர்ன்ஸ்ட் ஹேக்கல் உருவாக்கினார்.
ஆன்டோஜெனி - தன் உயிரி வளர்ச்சி
பைலோஜெனி - இனவரலாறு
உதாரணமாக : மனித கருவளர்ச்சியின் போது தோன்றும் தொண்டை செவுள் பிளவுகள் கரு உறைப்பை மற்றும் வால் ஆகும்.
2. மனிதக் கரு வளர்ச்சியின் மூதாதை விலங்குகளின் கரு வளர்ச்சி நிலைகளை மட்டுமே காட்டுகின்றனவே தவிர முதிர் உயிரியை போன்றிருப்பதில்லை.
3. மீன் சலமாண்டர் ஆமை கோழி மற்றும் மனிதக் கருக்கள் பொதுவான மூதாதையிடமிருந்து தோன்றியவை. ஒற்றைச் செல் கரு முட்டை

25.
Ethical & Legal & Social Implications - (உயிர் - அறநெறி - அறம்சார் சட்டப்பூர்வமான மற்றும் சமூக விளைவுகள்)
(i) 1990 - ELSI - HGP இன் ஒருங்கிணைந்த பகுதியாக உருவாக்கப்பட்டது.
(ii) நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஹெல்த் மற்றும் USன் டிபார்ட்மென்ட் ஆப் எனர்ஜி
மனித மரபணு தொகையை செயல்திட்டத்தின் பட்ஜெட்டில் ஒரு குறிப்பிட்ட விழுக்காடு ELSI ஆய்விற்குப் பகிர்ந்தளித்தது.
(iii) வரையறை
உயிரி அறநெறி என்பது மேம்பட்ட உயிரியல் மற்றும் மருத்துவத்தில் காணப்படும் அறம் சார்ந்த பிரச்சனைகள் பற்றிய படிப்பாகும்.
(iv) நோக்கம் (பரந்தது)
அ) நகலாக்கம், மரபணு சிகிச்சை, உயிர் நீட்டிப்பு, வான்வெளி உயிரிகள், இது போன்ற வளர்ச்சிகள், சூழ்நிலை சமநிலை மற்றும் வருங்கால பரிணாமத்தைப் பாதிக்கும் விஷயங்கள் அது மட்டுமல்ல. சூழல் பாதிப்புகளோடு கூடவே சட்டரீதியான பிரச்சனைகள் சமூக நம்பிக்கைகள் ஆகியவற்றை கேள்வி குறியாக்கும்.
ஆ) கூடுதலாக மனித உயிர்களையும், அவற்றின் பண்புகளையும், அமைப்புகளையும் மதிக்கும் அறநெறிகள் காப்பதும் முக்கியமானதாகும்.
இ) ஆகவே உயிரி மருத்துவம், அறிவியல், தொழில்நுட்பம் ஆகியவற்றிற்கு இடையேயுமான உயர் சமுதாயத்திற்கு தொடர்பான அறநெறி சார் பகுத்தறிவு பிரச்சனைகளை அடையாளம் கண்டறிந்து, தீர்வுக்குட்படுத்துவதும், அறிவுநெறிசார் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவதும், தறிகெட்ட அறிவுநெறிசார் அறிவியலின் அசுர வளர்ச்சிகளைக் வரைமுறைக்குட்படுத்துவதும் இதன் நோக்கமாகும்.
ஈ) பிற உயிர்களை மதிக்கவும், அவற்றின் வாழும் உரிமைகளைக் கருத்தில் கொண்டு, பிற உயிர்களுக்கும் மானுடமும் இயைவாக வாழ்தலே நலமாகும் என்பதே இதன் மையக்கருத்தாகும்.
26.
(i) பரந்துபட்ட பல கூறுகளை உள்ளடக்கியதே உயிரி பாதுகாப்பு
மனித உயிரி தொழில்நுட்ப அறிவின் பயன்பாட்டை தொழில்நுட்ப கருவிகளை ஆய்வகச் சூழலில் உயிரி பாதுகாப்பு பற்றிய தொடர் மீளாய்வு செய்தல், பின்பற்ற வேண்டிய கடுமையான வழிகாட்டுதல்களையும் உள்ளடக்கியது.
(ii) உயிரி பாதுகாப்பு கவனத்தில் கொள்வது
(i) உயிரி ஒருங்கிணைந்த தன்மையின் பெரிய அளவு இழப்பே - தடுப்பு
(ii) சூழ்நிலை பாதுகாப்பு
(iii) மனித உடல்நலம் ஆகியவை.
(iii) உயிர் தீங்கு விளைவிக்கும் பொருட்கள் (வேதிப்பொருட்கள், நோய் காரணிகள்) கையாளும் ஆய்வகங்களில் மேற்கொள்வது
(i) தொடர்ந்து செயல்படும் தீங்கு மேலாண்மை மதிப்பீடு
(ii) உயிரி பாதுகாப்பை உறுதி செய்யும் நடைமுறைகள் ஆகியவை
(iii) மனித தவறை முடிந்தவரை தவிர்ப்பது
(iv) தொழில்நுட்ப தவறுகள் ஏற்படாமல் தொடர்ந்து பராமரிப்பது
(v) தீங்கு நிகழும் போது விரைந்து செயல்படும் வழிமுறைகள்
(iv) உயிரி பாதுகாப்பு நெறிமுறைகள் செயல்படுத்தாமலிருப்பதால் ஏற்படும் பாதிப்பு அதிகளவு என்பது கருத்தில் கொள்ளப்படவேண்டியது.
27.
1. நன்மையளிக்கும் பாக்டீரியாக்கள் மண்வாழ் உயிரினங்களை கொல்லக்கூடும்.
2. நீர் நிலைகளில் மிகை உணவூட்டத்தை ஏற்படுத்தும்.
3. நீர்வாழ் விலங்குகளையும் அவற்றின் உற்பத்தித்திறனையும் பாதிக்கிறது.
4. வேதிப்பொருட்களின் துகள்கள் மாசுபாட்டினை ஏற்படுத்தும்.
5. மாசடைந்த காற்றினை உள்ளிழுப்பது சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தும்.
6. உட்கொள்ளுதல் நச்சாகும்.
7. வேதிப்பொருட்கள் தோலில் அரிப்பினை ஏற்படுத்தும்.
8. பல வேதிப்பொருட்கள் புற்றுநோயினை ஏற்படுத்தக்கூடும்.
9. நன்மை செய்யும் பூச்சிகள் பாதிக்கப்படும்.
28.
1. தூய்மையான நீருக்கான உரிமை இந்திய அரசியலமைப்பின் கீழுள்ள அடிப்படை உரிமையாகும்.
2. நீர் மாசுபாட்டினைத் தடுத்தல் மற்றும் கட்டுப்படுத்துதல் சட்டம் 1974 பிரிவுகள் 17 முதல் 40 மாசுபடுத்துவதை தடை செய்கிறது.
3. மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு கட்டுப்பாட்டு வாரியத்தின் மீது அதிகாரம் உள்ளது.
4. சுற்றுச்சூழல், காடுகள் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் சுற்றுச்சூழல் மற்றும் வனவியல் கொள்கைகள் மற்றும் திட்டங்கள் மேற்கொள்கிறது.
29.
1. விந்து செல்கள் திறனேற்றம் என்ற உயிர்வேதியச் செயலால் அண்ட செல்லைத் துளைக்கிறது.
2. நுண்பை செல்களின் உறைவழி சென்று, அண்டக சோனா பெலூசிடாவில் உள்ள ஏற்பி மூலக்கூறுகளுடன் இணைகிறது.
3. இந்த இணைவில் அக்ரோசம் வினை தூண்டப்படும்.
4. விந்தணு சோனா பெலூசிடா சிதைக்கப்பட்டு, விந்து பிளாஸ்மா சவ்வை அடையும்.
5. இந்த நொதியால், சோனா பெலூசிடா சிதைக்கப்பட்டு, விந்து பிளாஸ்மா சவ்வை அடையும்.
6. விந்து செல்லின் உட்கரு மற்றும் இதர பொருட்கள் அண்டத்தினுள் நுழைகிறது.
7. கார்டிகல் துகள்கள் சேர்ந்து கருவுறுதல் சவ்வை உருவாக்கும், இது பல விந்தணுக்கள் உள் நுழைவதைத் (Polypermy) தடுக்கிறது.
30.
I.ஒரே கர்ப்பத்தில் உருவாகும் இரட்டைக் குழந்தைகள் (உருவமொத்த அல்லது ஒரு கருமுட்டை இரட்டையர்):
1. கருமுட்டையின் முதல் பிளவின்போது 2 கருக்கோளஸ் செல்கள் உருவாகின்றன. இவை தனியே பிரிந்து வளர்ந்து இரட்டையர்களாகின்றனர்.
2. இவர்கள் ஒரே பாலினம், உருவ ஒற்றுமை, ஓர் வகை மரபணு கொண்டவர்கள்.
II.உருவம் மாறுபட்ட அல்லது 2 கருமுட்டை இரட்டையர்கள் (பிரடர்னல் ஓர் Dizygotic twins):
1. இரு வேறு அண்ட செல்கள், 2 வேறு விந்து செல்களால் கருவுற்று, உருவான இரட்டையர்கள்.
2. இவர்கள் ஒரே பாலினம் அல்லது வேறுபட்ட பாலினம் சேர்ந்தவர் உருவத்தில் மாறுபட்டிருப்பர்.
III.சயாமிய இரட்டையர்கள் :
1. ஒட்டிப்பிறக்கும் இரட்டையர்கள்.
31.
1. மனிதனுடைய ஒவ்வொரு இரட்டை மய உடல்செல்களும் 46 குரோமோசோம்களை பெற்றுள்ளன.
2. குரோமோசோமின் அமைப்பு அல்லது எண்ணிக்கையில் ஏற்படுகின்ற மாற்றங்கள் குரோமோசோம் குறைபாட்டு நோய்களை உண்டாக்குகின்றன.
3. செல் பிளவில் ஏற்படும் பிழைகளால் குரோமோசோமில் முரண்பாடுகள் உண்டாகின்றன.
4. செல்பிரிவின்போது குரோமோசோம்கள் குரோமேட்டுகள் சரிவர புரியாமல் அமையும்.
5. இதனால் குரோமோசோம்களின் எண்ணிக்கை அதிகரித்தோ அல்லது குறைந்தோ காணப்படுவது ஒழுங்கற்ற பன்மயம் எனப்படும்.
6. குரோமோசோம்கள் சரிவர பிரிந்து ஒதுங்காததால் இந்நிலை உண்டாகிறது.
7. ஒரு குறிப்பிட்ட குறைபாட்டு நோயின் பண்புகளாக வெளிப்படுகிற பல்வேறு அடையாளங்களும் அறிகுறிகளும் சின்ட்ரோம் எனப்படும்.
8. குரோமோசோம் குறைபாட்டு நோய்க்கு டவுன்சின்டரோம்,டர்னர்சின்டரோம் க்ளைன்பெல்டர்சின்டரோம் பட்டாவ் சின்டரோம் ஆகும்.
32.
பாலூட்டும் கால மாதவிடாயின்மை (Lactational Amenorrhoea)
1. தாய் பாலூட்டும் போது இயல்பான அண்ட செல்லாக்கச் சுழற்சி தொடங்க 6 மாதங்கள் தாமதமாகும்.
2. குழந்தை பாலை உறிஞ்சுவதால், பிட்யூட்டரி சுரப்பி தூண்டப்பட்டு, புரோலாக்டின் ஹார்மோன் உற்பத்தி அதிகரிக்கும். இதனால் பால் உற்பத்தி உயரும்.
3. தாய் இரத்தத்தில் புரோலாக்டின் ஹார்மோன் உற்பத்தி அதிகரிக்கும்.
4. இதனால் ஹைபோதலாமஸ் சுரக்கும் GnRH கொனடோடிராபின் விடுவிக்கும் காரணி உற்பத்தி தடுக்கப்படும்.
5. பிட்யூட்டரி சுரக்கும், கொனாடோட்ரோபின் ஹார்மோன் உற்பத்தி தடுக்கப்படும். இதனால் மாதவிடாய்ச் சுழற்சி தடுக்கப்படும்.
33.
1. சாதகமற்ற சூழலில் இனப்பெருக்கம் செய்வதற்காகத் சில உயிரிகளில் பல பிளவுமுறை நடைபெறுகிறது.
2. உட்கரு தொடர்ந்து பிரிவடைந்து பல உட்கருக்களாக உருவாகின்றன.
3. பல பிளவு முறையில் சமமான செல் பிரிதலினால் ஒரு உயிரியிலிருந்து நான்கு அல்லது பல சேய் உயிரிகள் தோன்றுகின்றன.
4. மேலும் பிளவுறுதல் நிகழ்வு முழுமையடையும் வரை சேய் உயிரிகள் பிரிவதில்லை.
5. இதற்கு பன்மடிப் பகுப்பு என்று பெயர்.
6. பிளாஸ்மோடியத்தில் சைஷாண்ட் மற்றும் உசைட் நிலையில் பலபிளவு முறை நடைபெறுகிறது.
7. சைஷான்ட் நிலையில் மீரோசைட்டுகள் உருவாகின்றன.
8. உசைட் நிலையில் ஸ்போரோசோயிட்டுகள் உருவாகின்றன.
9. அமீபாக்கள் சாதகமற்ற சூழலில் உறையாக்கம் மூலமும் இனப்பெருக்கம் செய்கிறது.

34.
1. தடய ஆய்வு
இரத்தம், முடி, தோல், எலும்பு, உமிழ்நீர் விந்து போன்றவற்றைக் கொண்டு DNA ரேகை அச்சிடல் மூலம்
1. குற்ற செயல் (கொலை, கற்பழிப்பு) ஈடுபட்டவரை அடையாளம் காண்தல்
2. தாய்-தந்தை -கண்டறிதல் சார்ந்த சோதனைகள்
3. குடியேற்றத் தேவைக்கான உறவுகளை தீர்மானித்தல் போன்றவை.
2. மரபுக் காலத் தொடர் ஆய்வு
தலைமுறைகள் வழியாக மரபணுக்கள் கடத்தப்படுவதையும் மற்றும் பாரம்பரிய நோய்களைக் கண்டறிதலுக்கும் DNA பதிவுகளை பராமரித்தல்.
3. வன உயிரின பாதுகாப்பு
அருகி வரும் இனங்களைப் பாதுகாத்தல் அருகி வரும் உயிரினங்களின் இறந்த திசுக்களை அடையாளம் கண்டறிவதற்காக DNA பதிவுகள் பராமரித்தல்.
4. மானுடவியல் ஆய்வுகள்

ஆகிவைகளைத் தீர்மானிக்க உதவுகிறது.
35.
1. மரபணுக்குறியீடு: முக்குறியங்களாலானது -61 முக்குறியங்கள் அமினோ அமிலங்களைக் குறிக்க மற்ற -3 முக்குறியங்கள் நிறுத்துக் குறியீடுகளாக உள்ளன.
2. பொதுவானது: மரபணுக்குறியீடு எல்லா உயிரின மண்டலங்களுக்கும் பொதுவானது - அமினோ அமிலங்களை அதே முக்குறியங்களால் குறிக்கப்படுகின்றன.
எ.கா: தூது RNA விலுள்ள UUU -எல்லா உயிரினங்களிலும் பினைல் அலனின் எனும் அமினோ அமிலத்தைக் குறிக்கிறது.
3. விதிவிலக்குகள்: புரோகேரியாட்டுகள் சில, மைட்டோ காண்டிரியா, குளோரோபிளாஸ்ட் (இருந்தபோதும் வேறுபாடுகள் மிகச் சிறியது ஒற்றுமையோ அதிகம் உள்ளது)
4. ஒன்றோடு ஒன்று மேற்கொள்வதில்லை: ஒரே மாதிரி எழுத்துக்கள் வெவ்வேறு முக்குறியங்களுக்குப் பயன்படுவதில்லை. GUU, GUC கார வரிசை இரண்டு முக்குறியங்களை மட்டுமே குறிக்கும்.
5. மரபணு குறியீடு - காற்புள்ளி அற்றது: செய்திகள் ஒரு முனையிலிருந்து இன்னொரு முனைவரை வரிசையாக படிக்கப்படுகின்றன.
6. சிதைவு குறியீடுகள்: ஒரு அமினோ அமிலத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்ட முக்குறியங்கள் இருக்குமானால்- அது சிதைவு குறியீடுகள் எனப்படும்.
எ.கா: GUU, GUC, GUA மற்றும் GUG அனைத்தும் வேலின் எனும் அமினோ அமிலத்தைத் குறிக்கின்றன.
7. குழப்பமற்றவை: ஒவ்வொரு குறியீடும் ➝ ஒரு அமினோ அமிலத்தை மட்டும் குறிக்கின்றது.
8. துருவத்துவம்: எப்போதும் 5' ➝ 3' திசையில் படிக்கப்படுகின்றன
9. இரட்டிப்பணி: AUG எனும் குறியீடு - தொடக்கக் குறியீடு மேலும் மெதியோனின் அமினோ அமிலக் குறியீடாகவும் உள்ளது.
10. நிறுத்தல் கோடான்கள்: UAA, UAG (நிறுத்துக் குறியீடு UGA (நிறுத்துக் குறியீடு- நிறைவுக் குறியீடுகளாகும் மேலும்-பொருளற்ற குறியீடுகள் என்றும் கருதப்படுகிறது.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards