12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th English Poem - 6 - Incident of the French Camp Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 6 - On the Rule of the Road Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 5 - The Chair Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Supplementary - 4 - The Midnight Visitor Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Poem - 4 - Ulysses Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 4 - The Summit Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 04/10/2020
12 ஆம் வகுப்பு உயிரியல் பயிற்சி 5 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Biology Tamil Medium Model 5 Mark Creative Questions (New Syllabus 2020)
12ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
இடதுவரை மையங்கள் மற்றும் இடதுவரை தாவரங்கள் பற்றி எழுதுக.
2.
சூழல் மண்டலத்தின் நன்மைகள் மற்றும் சேவைகள் அடிப்படையில் எத்தனை வகையான சூழல்மண்டல சேவைகள் உள்ளன? அவை யாவை?
3.
பசுமை இல்ல வாயுக்களை வெளிவிடும் இயற்கை மற்றும் மனித இனம் மூலம் பற்றி எழுதுக.
4.
சூழல் மண்டலத்தில் எவ்வாறு ஆற்றல் கடத்தப்படுகிறது? (அ) சூழல்மண்டலத்தில் ஊட்டமட்டம் தொடர்பான கருத்தை விளக்குக. (அ) சூழ்நிலை மண்டலத்தில் உள்ள வெவ்வேறு ஊட்டமட்டம் பற்றி எழுதுக.
5.
விலங்குகளில் உயிரற்ற காரணிகளுக்கு ஏற்ப ஏற்படும் துலங்கல்கள் யாவை? விளக்குக.
6.
GFP என்றால் என்ன? அதன் பண்புகள் யாவை?
7.
மரபற்றுப் போதல் என்றால் என்ன?
8.
பனிச்சமவெளி உயிர்த் தொகையின் பல்வேறு சிறப்புப் பண்புகளைப் பற்றி விவரி.
9.
உயிரி எதிர்ப்பு பொருள் தடுப்பு அடையாளக்குறி ஒரு பயனுள்ள தேர்ந்தெடுத்தல் அடையாளக்குறி -விளக்குக.
10.
நொதி சார்ந்த நோய்த்தடைபொருள் உறிஞ்சுகை மதிப்பீடு - எலைசா தொழில்நுட்பத்தின் படிநிலைகளை விவரி.
11.
பல்வேறு வகையான உயரிய விளைபொருட்கள் யாவை? அவற்றின் பயன்களை விளக்குக.
12.
வாய்மொழி மருத்துவ முறை எது? விளக்குக.
13.
இந்தியாவின் தேசியப் பழம் எது? விவரி?
14.
கழிவுநீர்ச் சுத்திகரிப்பில் இரண்டாம் நிலைச் சுத்திகரிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உன் பதில் மூலம் நியாயப்படுத்து.
15.
மரபணு அமைவிடங்கள் A/a மற்றும் D/d இவை மிக நெருக்கமாக அமைந்திருப்பதால் அவற்றிடையே மறுசேர்க்கை காணப்பட வாய்ப்பில்லை.
16.
கலப்புறுத்தலின் படிநிலைகளைப் பற்றி விரிவாக்கவும்
17.
உயிரி உரங்களின் வகைகளை பற்றி விரிவாக எழுதுக
18.
எச்.ஐ.வியின் அமைப்பை பற்றி விவரி.
19.
பிளாஸ்மோடியத்தின் வாழ்க்கை சுழற்சியைப் பற்றி விரிவாக எழுதுக.
20.
சூலின் வகைகளை விவரி?
21.
நீர் மூலம் விதை பரவும் தாவரங்களில் காணப்படும் தகஅமைவுகள் யாவை?
22.
தாவரங்களின் மீது குறிப்பிட்ட விளைவுகளை ஏற்படுத்தும் உயிரி காரணிகள் யாவை?
23.
மெண்டலின் இருபண்புக் கலப்பை விவரி
24.
முதன் முதலில் பரிணாமக் கோட்பாட்டை உருவாக்கியவர் யார்? அக்கொள்கை யாது?
25.
பல்வேறு உயிரினங்களில் கருமுட்டைப் பற்றிய ஒப்புமை அறிவியல் பரிணாமத்திற்கான சான்றாக விளங்குகிறது?
26.
திசு வளர்ப்பிற்கான அடிப்படை ஆய்வக வசதிகள் யாவை?
27.
வேளாண் வேதிப்பொருட்களின் விளைவுகள் யாவை?
28.
நீர் மாசுபாட்டினால் உயிரினங்களில் ஏற்படும் விளைவுகள் யாவை?
29.
மனிதனின் கருவளர்ச்சி கால நிகழ்வுகளை விளக்குக.
30.
எந்த மெண்டலின் குறைபாட்டு நோய் கொல்லி ஆகும்? விவரி.
31.
தலாசிமியா என்றால் என்ன?ஆல்பா மற்றும் பீட்டா வகை தலைசிமியாவை வேறுபடுத்துக.
32.
கருவின் குறைபாடுகளைக் கர்ப்பகாலத் துவக்கத்தில் எவ்வாறு கண்டறியலாம்?
33.
உடல் வெளிக் கருவுறுதலின் படிநிலைகள் கூறு.
34.
உயிரிகளில் காணப்படும் பல்வேறு வகையான ஒருங்கிணைவு முறைகளை விவரி.
35.
ஹார்ஷே மற்றும் சேஸ் தங்கள் பரிசோதனையான DNA மற்றும் புரதத்தில் DNA தான் மரபணு என்பதை எவ்வாறு நிரூபித்தனர்.
36.
37.
கடத்து RNA எனப்படும் இணைப்பு மூலக்கூற்றின் அமைப்பை விவரி.
1.
1. ஒரு குறிப்பிட்ட புவியியல் பகுதியில் மட்டும் காணப்படும் தாவரங்கள் மற்றும் விலங்குகள் இடதுவரை சிற்றினங்களுக்கு இடையேயான இடைச்செயல்கள், விதை பரவுதலில் சிக்கல்கள், ஒரு குறிப்பிட்ட இடம் தள விசேடத்துவம் மற்றும் பல சுற்றுச்சூழல் மற்றும் சூழ்நிலையில் பிரச்சனைகள் போன்ற பல்வேறு காரணங்களாக இருக்கலாம்.
3.மூன்று பெரிய இடவரை மையங்கள் மற்றும் 27 நுண்ணிய இடவரை மையங்கள் இந்தியாவில் காணப்படுகின்றன. இந்தியாவில் சுமார் மூன்றில் ஒரு பங்கு இடவரை மையங்கள் இந்தியாவில் காணப்படுகின்றன. இந்தியாவில் சுமார் மூன்றில் ஒரு பங்கு ஐடாவரைத் தாவர இனங்ளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
4. இந்திய இமயமலை , தீபகற்ப இந்தியா மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் பரவிக் காணப்படுகின்றன.
5. ஃபோயேசி, ஏப்பியேஸி,ஆஸ்ட்ரேஸி மற்றும் ஆர்க்கிடேஸி குடும்பத்தைச் சார்ந்த சிறு செடிகளே அதிகச் சதவீதத்தில் காணப்படும் இடவரை தாவரங்களாகும்.
| இடவரைத் தாவரங்கள் | வளரியல்பு | இடவரை மையம் | |
| 6. | பக்காரியா குற்றாலன் சிஸ் | மரம் | மேற்குத் தொடர்ச்சி மலையின் தெற்குப் பகுதி |
| 7. | அகஸ்தியமலையய்யா பாசிப்ஃப்ளோரோ | மரம் | தீபகற்ப வளர்ச்சி |
| 8. | ஹார்ட்விக்கியா பைனேட்டா | மரம் | தீபகற்பம் மற்றும் வட இந்தியா பகுதி |
| 9. | பென்டிக்கியா கொண்டப்னா | மரம் | தமிழ்நாடு மற்றும் கேரளாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகள் |
| 10 | நெப்பந்தஸ் காசியானா | வன்கொடி | காசி மலைகள் மற்றும் மேகாலயா |
2.
3.
CO2 (கார்பன்-டை -ஆக்ஸைடு)
1. நிலக்கரியைச் சார்ந்துள்ள மின் உற்பத்தி நிலையங்களில் தொல்லுயிர் படிம எரிபொருட்கள் எரிக்கப்படும் போது,
2. தானியங்கி வாகனங்கள், வணிக ஊர்திகள் , வானூர்திகள் போன்றவற்றின் எரிப்பொருட்கள் எரிக்கப்படுவதால் புவி வெப்பமடைதல் அதிகளவில் ஏற்படுத்துகிறது.
3. வேளாண் நிலங்களில் அறுவடையின்போது எஞ்சி நிற்கும் அடிக்கட்டைப் பயிர்களை எரிப்பதாலும் CO2 வெளியேற்றப்படுகின்றது.
4. கரிமப்பொருட்கள், எரிமலைகள், மிதவெப்பக் கடல்கள் மற்றும் வீழ்படிவங்கள் மூலம் இயற்கையாக உருவாதல்.
மீத்தேன் :
5. மீத்தேன்,CO2 வைக் காட்டிலும் 20 மடங்கு வெப்பத்தை வளிமண்டலத்தில் கூட்டுகிறது .
6. நெல் பயிரிடல், கால்நடை வளர்ப்பு, நீர்நிலைகளில் வாழும் பாக்டீரியங்கள் மற்றும் தொல்லுயிர் படிம எரிபொருட்களின் உற்பத்தி, கடல், ஈரத்தன்மையற்ற நிலம், காட்டுத்தீ வாயிலாக மீத்தேன் உருவாகிறது.
N2O (நைட்ரஸ் ஆக்ஸைட்) :
7. இயற்கையில் பெருங்கடல்களிருந்தும், மழைக்காடுகளிலிருந்தும் N2O உருவாகிறது.
8. நைலான், நைட்ரிக் அமில உற்பத்தி, வேளாண் உரங்களைப் பயன்படுத்துதல், வினைவேக மாற்றிகள் பொருத்தப்பட்ட மகிழுந்துகளைப் பயன்படுத்துதல் மற்றும் கரிமப்பொருட்களை எரித்தல் போன்றவற்றின் மூலம் N2O செயற்கையாக உருவாகிறது.
4.
1. சூழல் மண்டலத்தில் ஆற்றல் ஊட்டமட்டங்களுக்கிடையே பரிமாற்றம் அடைவது ஆற்றல் ஓட்டம் என குறிப்பிடப்படுகிறது.
2. உணவுச் சங்கிலியில் உயிரினங்கள் அமைந்திருக்கும் இடத்தை குறிப்பதே ஊட்டமட்டமாகும்.
3. ஊட்ட மாற்றங்களின் எண்ணிக்கை, உணவுச்சங்கிலி படிநிலைகளின் எண்ணிக்கைக்குச் சமமாக இருக்கும்.
4. முதல் ஊட்ட மட்டத்தில் (T1) பசுந்தாவரங்கள் இடம் பெற்றுள்ளதால், அவை உற்பத்தியாளர்கள் (producers) எனப்படுகின்றன.
5. தாவரங்கள் உற்பத்தி செய்யும் ஆற்றலை, பயன்படுத்தும் தாவர உண்ணிகள் முதல்நிலை நுகர்வோர்கள் (primary consumers) என்று அழைக்கப்படுவதோடு, இரண்டாவது ஊட்ட மட்டத்தில் (T2) இடம் பெறுகின்றன.
6. தாவர உண்ணிகளை உண்டு வாழும், ஊண் உண்ணிகள், மூன்றாவது ஊட்ட மட்டத்தில் (T3). இடம்பெறுகின்றன. இவை இரண்டாம்நிலை நுகர்வோர்கள் (secondary consumers) அல்லது முதல்நிலை ஊண் உண்ணிகள் (primary carnivores) என்று அழைக்கப்படுகின்றன.
7. ஒரு ஊண் உண்ணியை உணவாகக் கொள்ளும் மற்றொரு ஊண் உண்ணி நான்காவது ஊட்ட மட்டத்தில் (T4) இடம் பெறுகின்றது. இவை மூன்றாம் நிலை நுகர்வோர்கள் (tertiary consumer) அல்லது இரண்டாம்நிலை ஊண் உண்ணிகள் (secondary carnivores) என்றும் அழைக்கப்படுகின்றன.
8. தாவரங்கள் மற்றும் விலங்குகள் இரண்டையும் உண்ணும் உயிரினங்கள் அனைத்துண்ணிகள் (காகம்) எனப்படுகிறது. இந்த உயிரினங்கள் உணவுச்சங்கிலியில் ஒன்றுக்கு மேற்பட்ட ஊட்ட மட்டத்தில் இடம் பெறுகின்றன.
5.
(i) ஒழுங்கமைவு :
1. சில விலங்கினங்கள் உடற்செயலில் செயல்கள் மூலம் சீரான தன்னிலை காத்தலைப் பராமரிக்கின்றன. அச்செயல்பாடுகள் வழியாக, உடலின் வெப்பநிலை, அயனிகள் - ஊடுகலப்பு சமன் ஆகியவை உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. பறவைகள், பாலூட்டிகள் மற்றும் சில எளிய முதுகுநாணிகள் மற்றும் முதுகுநாணற்ற சிற்றினங்கள் இவ்வகை நெறிப்படுத்தலை மேற்கொள்ளும் திறன் பெறுகின்றன.
(ii) ஒத்தமைவு :
1. பெரும்பாலான விலங்குகளால் உள்சூழ்நிலைகளை பராமரிக்க முடிவதில்லை. அவற்றின் உடல் வெப்பநிலை சுற்றுச்சூழல் வெப்பநிலைக்கேற்ப மாறுகிறது.
2. மீன்கள் போன்ற நீர்வாழ் உயிரிகளில், உடல் திரவத்தின் ஊடகலப்புச் செறிவு சுற்றுச்சூழலில் உள்ள நீரின் ஊடுகலப்புச் செறிவிற்கேற்ப மாற்றமடைகிறது.
(iii) வலசை போதல் :
1. ஒரு வாழிடத்தில் வாழும் விலங்குகள் இங்கு நிலவும் அதிக சூழல் அழுத்தத்திலிருந்து தப்பிக்க இடம்பெயர்ந்து புதிய வாழத்தகுந்த பகுதிக்குச் செல்கின்றன.
2. அதன் வாழிடத்தில் சூழல் அழுத்தம் நீங்கும்போது அவை மீண்டும் தனது பழைய இடத்திற்கு வருகின்றன. சைபீரியாவில் வாழும் பறவைகள் கடுங்குளிர் பருவத்திலிருந்து தற்காத்துக் கொள்ள வலசை போதல் முறையில் இடம்பெயர்ந்து தமிழ்நாட்டின் வேடந்தாங்கல் பகுதிக்கு வருகின்றன.
(iv) செயலற்ற நிலை :
1. சில சமயம், விலங்கினங்கள், இடம்பெயர்ந்து செல்ல இயலாத சூழலில், சூழல் அழுத்தத்திலிருந்து விடுபட செயலற்ற நிலைத்தன்மையை மேற்கொள்கின்றன.
2. சில கரடிகள் குளிர்காலங்களில் குளிர் உறக்கத்தையும், சில நத்தைகள் மற்றும் மீன்கள் போன்றவை வெப்பம் மற்றும் வறட்சி போன்ற வெப்பம் தொடர்பான பிரச்சனைகளிலிருந்து விடுபட கோடைகால உறக்கத்தையும் மேற்கொள்கின்றன.
3. சில எளிய வகை உயிரினங்கள் அதன் வாழ்க்கை சுழற்சியின் சில நிலைகளை இடைநிறுத்தம் செய்து கொள்கின்றன. இது 'வளர்ச்சி தடைநிலை'எனப்படும்.
6.
தன்மை:
1. GFP இது பச்சை மிளிர் ஒளிப்புரதம்.
2. இது 238 அமினோ அமில எச்சங்களாலானது.
3. நீலம் முதல் புற ஊதா கதிர்களால் ஒளியூட்டப்படும் போது (395 nm) இது ஆழ்ந்த பச்சைநிறமாக ஒளிர்கிறது.
பண்புகள்:
1. இது ஆக்ஸிஜன் தவிர வேறெந்த கூடுதல் துணைக் காரணிகள்.
2. மரபணு சார் விளைப்பொருட்கள், நொதிகள், தளப்பொருட்கள் தேவைப்படாமலே அக நிறமித் தாங்கிகளை உண்டாக்கும் எனவே இது சிறந்த உயிரியல் கருவியாக செயல்படுகிறது.
3. GFP (அக்குவாரியா விக்டோரியா)ஜெல்லி மீனிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட புரதம்.
4. செல் மற்றும் மூலக்கூறு உயிரியலில் GFP மரபணு அடிக்கடி ஒரு மரபணு வெளிப்பாட்டு அறிவிப்பாளர் கருவியாக பயன்படுத்தப்படுகிறது.
5. இது உயிரி உணர்விகளை (biosensor) உருவாக்க மாற்றுரு பெற்ற வடிவங்களில் பயன்படுகிறது.
7.
(i) உலகின் எந்த பகுதியிலும் ஒரு இனத்தின் ஒரு உறுப்பினர் கூட உயிருடன் இல்லை என்ற நிலையை அடைந்த இனம் மரபற்றுப் போனதாகக் கருதப்படுகிறது.
(ii) ஒரு இனம் சொந்த வாழிடத்தில் இல்லாமல் மற்றொரு இடத்தில் அடைக்கலம் பெற்று உயிருடன் இருக்குமானால் அது உள்ளூர் மரபற்றுப் போனதாக கருதப்படும்.
(iii) மரபற்றுப் போதல் மூன்று வகைப்படும்.
இயற்கை வழி மரபற்று போதல்:
(i) சுற்றுச்சூழல் மற்றும் பரிணாமத்தில் ஏற்பட்ட மாற்றங்கள், கொன்றுண்ணிகள் நோய்கள் போன்ற காரணங்களால் இயற்கை வழி மரபற்றுப் போதல் உருவாகிறது.
(ii) இது மந்தமாக நடைபெறும் செயலாகும்.
(iii) அகக்கலப்பின் வீரியக் குறைவு காரணமாக சிறு இனக்கூட்டங்கள் பெரிய இனக் கூட்டங்களை விட விரைவில் மரபற்று போகின்றன.
பெருந்திரள் மரபற்று போதல்:
(i) சுற்றுச்சூழல் பேரழிவுகளால் பூமி சில பெருந்திரள் அழிவுகளை சந்தித்துள்ளது.
(ii) 225 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் பெர்மியன் காலத்தில் பேரழிவு ஏற்பட்டு ஆழமற்ற கடல்நீரில் வாழ்ந்த 90% முதுகு நாணற்ற உயிரினங்கள் மரபற்று போயின.
மானுட செயல்களால் மரபற்றுப் போதல்:
(i) வேட்டையாடுதல், வாழிடச் சீரழிவு, மிகை பயன்பாடு, நகரமயமாக்கல் மற்றும் தொழில்மயமாக்கல் போன்ற மனித நடவடிக்கைகள் இவ்வகை அழிவினைத் தூண்டுகின்றன.
(ii) மொரிஷியஸ் தீவுகளில் வாழ்ந்த டோடோ, ரஷ்யாவில் வாழ்ந்த ஸ்டெல்லரின் கடல் பசு இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
(iii) பல்வகைத் தன்மையின் இழப்பிற்கு மிக முக்கிய காரணம் உயிரினங்கள் மரபற்றுப் போவதாகும்.
8.
1. இப்பகுதி ஆசியாவின் வடக்குப்பகுதி, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் உள்ள மரங்களற்ற சமவெளி ஆகும்.
2. குறுகிய பகல் பொழுதைத் கொண்ட குளிர்காலம் நீண்டதாகவும், நீண்ட பகல் பொழுதைக் கொண்ட கோடைகாலம் குறுகியதாகவும் உள்ளது.
3. மழையளவு ஆண்டுக்கு 250 மி.மீக்கும் குறைவாக உள்ளது. இப்பகுதி நிலைத்த உறைபனி மண்டலமாகும்.
4. குட்டையான வில்லோ மரங்கள், பூச்ச மரங்கள், பாசிகள், புற்கள், கோரைகள் ஆகிய தாவர இனங்கள் இங்கு காணப்படுகின்றன.
5. கலைமான்கள், ஆர்ட்டிக் முயல்கள், கஸ்தூரி எருது மற்றும் லெம்மிங்குகள் ஆகியவை பனிச்சமவெளியில் வாழும் தாவர உண்ணிகள் ஆகும். ஆர்ட்டிக் நரி, ஆர்ட்டிக் ஓநாய், சிவிங்கி பூனை மற்றும் பனி ஆந்தை ஆகியவை இங்கு வாழும் முக்கிய விலங்குண்ணிகள் ஆகும். கடலோரப் பகுதிகளில் துருவக் கரடிகள் வாழ்கின்றன.
6. இங்கு குளிர்காலம் கடுமையாக இருப்பதால் பல விலங்குகள் வலசை போகும் பண்பைக் கொண்டுள்ளன. கடலோரப் பறவைகள் மற்றும் வாத்துக்கள் போன்ற நீர்பறவைகள் கோடைகாலங்களில் பனிச்சமவெளிகளில் வசிக்கும். குளிர்காலங்களில் தெற்கு நோக்கி வலசை போகும்.
9.
உயிரி எதிர்பொருள் தடுப்பு அடையாளக்குறி - இது மரபணுவாகும். இது செல்களில் உயிர் எதிர் பொருளுக்கான எதிர்ப்புத் தன்மையை வழங்கும் ஒரு புரதத்தை உண்டாக்குகிறது.
இது ஒரு பயனுள்ள தேர்வு செய்யக்கூடிய அடையாளக் குறியாக பயன்படுகிறது.
10.
பூச்சு:
(i) தாங்கு திரவத்தினுள் மூழ்கியுள்ள, எலைசா தகட்டில் உள்ள சிறு குமிழ்களுக்குள் எதிர்ப்பொருள் தூண்டிகள் உறிஞ்சப்படுத்தல்.
(ii) தாங்கு திரவத்தை நீக்கி விட்டு தகட்டைக் கழுவுதல்.
தடுப்பு:
(i) தொடர்பற்ற புரத்தைக் கொண்டு தாங்கு திரவதைக் கொண்டு எலைசா தகட்டில் உள்ள விடுபட்ட சிறு குழிகளை அடைத்தல்.
(ii) தாங்கு திரவத்தை நீக்கி விட்டு தகட்டைக் கழுவுதல்.
தடங்காணுதல்:
(i) நொதியுடன் இணைந்த தடங்காண் எதிர்பொருளானது எதிர்ப்பொருள் தூண்டியுடன் இணைதல்.
(ii) தாங்கு திரவத்தை நீக்கி விட்டு தகட்டைக் கழுவுதல்.
பரிசோதனை முடிவு:
(i) பரிசோதனை முடிவில் தளப்பொருளானது நொதியால் வினையூக்கப்பட்டு நிறம் உள்ள பொருளை உருவாக்குதல்.
11.
1. உயிரிகளிடமிருந்து பெறப்பட்டு நோய்கள் வருமுன் தடுக்கவும், நோய்களுக்கு சிகிச்சை அளிக்கவும் பயன்படும் பொருட்கள் "உயிரிய விளைப்பொருட்கள்" எனப்படும்.
2. எதிர் நச்சுகள், பாக்டீரியா மற்றும் வைரஸ் தடுப்பூசிகள், இரத்த விளைபொருட்கள் மற்றும் ஹார்மோன் வடிசாறு போன்றவை சில உயிரிய விளைபொருட்கள் ஆகும்.
3. இத்தகு பொருட்கள் நுண்ணுயிரிகள், தாவர செல்கள் அல்லது விலங்கு செல்கள் போன்ற உயிரிகளைக் கொண்டு உயிரிய தொழில்நுட்ப முறையில் உற்பத்தி செய்யப்படுகிறது.
4. இவற்றை பண்பாக்கம் செய்வது சிறுமூலக்கூறு மருந்துகளின் பண்பாக்கத்தைவிட கடினமாகும்.
5. இத்தகைய உயிரிய விளைபொருட்களை மரபணு சேர்க்கை தொழில்நுட்பத்தின் மூலம் தேவையான போது உற்பத்தி செய்து கொள்ள முடியும். சிகிச்சை, புரதங்கள், ஒற்றைப் படியாக்க எதிரிப்பொருட்கள் மற்றும் தடுப்பூசிகள் போன்ற பல உயிரிய விளைபொருட்கள் பயன்பாட்டிற்கான ஒப்புதலைப் பெற்றுள்ளன.
6. புரதங்கள் நலப்பாதுகாப்பு மற்றும் மருந்தாக்கத் தொழிற்சாலைகளில் உயிரிய தொழில்நுட்பவியல் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.
7. வணிக முறையில் உற்பத்தி செய்யப்படும் ஹார்மோன்களும் எதிர்ப்பொருட்களும் மருத்துவ தொழிற்சாலைக்கு முதன்மையானவை ஆகும்.
8. மறுசேர்க்கை ஹார்மோன்களான இன்சுலின், மனித வளர்ச்சி ஹார்மோன்கள், மறுசேர்க்கை தடுப்பூசிகள் மற்றும் மனித ஆல்ஃபாலாக்ட்டால்புமின் போன்ற மறுசேர்க்கைப் புரதங்கள் தற்போது கிடைக்கின்றன.
12.
1. இந்திய, கிராமப்புற பழங்குடி இன மக்களின் பாரம்பரிய முறை.
2. அகில இந்திய ஒருங்கிணைந்த, பழங்குடி உயிரியல் ஆய்வுத் திட்டம் (All India Co ஆர்டினேட்டட் Research Project on Ethnobiology) பழங்குடிகள் பயன்படுத்திய மூலிகைகளை ஆவணப்படுத்தியுள்ளது.
3. 8000 தாவரச் சிற்றினங்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
4. ஆவணப்படுத்தும் வேலை தொடர்கிறது.
5. தமிழ்நாட்டில் இருளர், மலையாளி, குரும்பர், பனியன் காணிகள் மருத்துவ அறிவால் அறியப்பட்டனர்.
13.
மா(மாங்கிஃபெரா இண்டிகா)
குடும்பம் : அனகார்டியேசி
தோற்றம், விளையுமிடம் :
1. தெற்காசியாவில் பர்மா, கிழக்கிந்தியா பிறப்பிடம்
2. ஆந்திரா, பீகார், குஜராத், கர்நாடகா அதிகம் பயிராகும் மாநிலங்கள்.
3. தமிழகத்தில் சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்கள்.
பயன்கள்
1. இந்தியாவில் அதிகம் உட்கொள்ளப்படும்.
2. பீட்டா கரோட்டீன் அதிகமுள்ளது.
3. பின் உணவுப் பண்டம், அடைக்கப்பட்டு, உலர்த்தி, பாதுகாக்கப்பட்டு பயன்படுத்தப்படும்.
4. சட்னி, ஊறுகாய், கூட்டு தயாரிக்க, உப்பு மிளகாயுடன் உண்ணப் பயன்படும்.
5. சதைப்பற்றுள்ள பகுதியிலிருந்து களிமம் (ஜெல்லி) தயாரிக்கப்படும்.
6. காற்றேற்றப்படாத சாறு பிரபல பானமாகும்.
14.
1. இரண்டாம் நிலை சுத்திகரிப்பில் நுண்ணுயிரிகள் மூலம் கரிம பொருட்கள் உட்கொள்ளப்பட்டு அழிக்கப்படுகின்றன.
2. முதல் நிலையில் உருவான கலங்கல் நீர் பெரிய காற்றோட்டமுள்ள தொட்டிகளுள் செலுத்தப்படுகிறது.
3. அங்கு அவை இயந்திரங்களின் உதவியுடன் தொடர்ச்சியாக கலக்கப்படுவதால் காற்று உட்செலுத்தப்படுகிறது.
4. இதனால் காற்று சுவாச நுண்ணுயிரிகள் தீவிரமாக வளர்ந்து திரளாக (Floc) உருவாகின்றன.
5. திரள் (Floc) என்பது பாக்டீரியத் தொகுப்பும் பூஞ்சை இழைகளும் இணைந்து வலைப்பின்னல் போன்ற அமைப்பாக காணப்படும் அமைப்பு ஆகும்.
6. இவற்றின் வளர்ச்சியின் போது கழிவுநீரில் உள்ள பெருமளவு கரிம பொருட்களை உட்கொண்டு அழிக்கின்றன.
7. இது பெருமளவில் உயிரிய ஆக்சிஜன் தேவையை (BOD) குறைக்கின்றது.
8. உயிரிய ஆக்சிஜன் தேவை குறையும் வரை கழிவு சுத்திகரிப்பு நடைபெறுகின்றது.
9. உயிரிய ஆக்சிஜன் தேவை (BOD) எனப்படுவது "ஒரு லிட்டர் நீரிலுள்ள அனைத்து கரிம பொருட்களையும் ஆக்சிஜனேற்றம் செய்வதற்கு பாக்டீரியாவால் பயன்படுத்தப்படும் ஆக்சிஜன் அளவு" ஆகும்.
10. உயிரிய ஆக்சிஜன் தேவை குறைந்தவுடன் அந்த நீர் வீழ்ப்படிவதால் தொட்டிக்குள் அனுமதிக்கப்படுகிறது.
11. இதனால் பாக்டீரியா திரள் கீழே படிகிறது. இது செறிவூட்டப்பட்ட கசடு எனப்படும்.
12. இதன் ஒரு பகுதி காற்றோட்டமுள்ள தொட்டிக்குள் மூல நுண்ணுயிரிகளாகப் பயன்படுத்த செலுத்தப்படுகிறது.
13. மீதமுள்ள செறிவூட்டப்பட்ட கசடுகள் காற்றில்லா சுவாச கசடு சிதைப்பான் என்னும் பெரிய தொட்டியினுள் செலுத்தப்படுகிறது.
14. அதிலுள்ள காற்றற்ற சுவாச பாக்டீரியாக்கள் கசடிலுள்ள பாக்டீரியா மற்றும் பூஞ்சையை செரிக்கின்றன.
15. செரிமானத்தின் போது பாக்டீரியாக்கள் மீத்தேன், ஹைட்ரஜன் சல்பைடு மற்றும் கார்பன்-டை-ஆக்ஸைடு வாயுக் கலவையை உற்பத்தி செய்கின்றன.
16. இந்த உயிரிய வாயு ஆற்றல் மூலாதாரமாக பயன்படுகிறது.
17. இவ்வாறு முக்கிய பெருமளவு சுத்திகரிப்பு நிகழ்ச்சிகள் இந்நிகழ்வின் போது நடைபெறுவதால் இது மிகவும் முக்கியமான நிலை ஆகும்.
15.
AAdd -ஒரு daDD பண்புக்கலப்பில் F2 வில் என்ன புறத்தோற்றம் என்ன விகிதத்தில் காணப்படும்
1. பெற்றோர் இன ஆக்கம் Ad/AdxaD/aD
2. மரபணுக்கள் மிக நெருக்கமாக இருப்பதால் அவை உருவாக்கிய கேமிட்டுகள்
3. Ad&aD (பெற்றோர் பண்புடையவை -புதிய மறுசேர்க்கை காணப்படவில்லை)
4. F1 அனைத்தும் Ad/aD அக இருந்தது
5. F1 உருவாக்கிய கேமிட்கள் Ad(50% aD =50%)
6. F2 விகிதம் -Ad/Ad(1/4)Ad/aD(1/2)aD/aD(1/4)
| Ad/Ad | Ad/aD | aD/aD |
| 1 | 2 | 1 |
16.
அ) பெற்றோரைத் தேர்ந்தெடுத்தல்:
(i) தெரிவு செய்யப்பட்ட பண்புடைய ஆண் மற்றும் பெண் தாவரங்களைத் தேர்ந்தெடுத்தல்.
(ii) இத்தாவரங்களின் ஒத்த பண்பிணைவுத் தன்மையைச் சோதனை செய்தல் மிக முக்கியமாகும்
ஆ) ஆண் மலடாக்குதல்:
(i) தன் மகரந்தச்சேர்க்கையை தடுப்பதற்காக ஆணகச் சிதைவுறச் செய்தல்
(ii) அதை ஆண் மடலாக்குதல் என்றழைக்கப்படுகின்றன
இ) பையிடுதல்:
(i) சூலக முடியை உறையிட்டுப் பாதுகாக்கும் முறை பயிரிடுதல் ஆகும்
(ii) இது தேவையற்ற மகரந்தத்துகள்கள் சூலக முடியில் கலந்துவிடாமல் தடுக்கும்
ஈ) கலப்பு செய்தல்:
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண் மலரின் மகரந்தங்களை ஆண் மலடாக்கப்பட்ட பெண் மலரின் சூலக முடிக்கு மாற்றம் செய்வது
உ) விதைகளை அறுவடை செய்து புதிய தாவரங்களை உண்டாக்குதல்:
(i) மகரந்த சேர்க்கை மூலம் கருவுறுதல் ஏற்பட்டு விதைகள் உருவாகின்றன
(ii) இவ்விதைகளிலிருந்து உருவாகும் புதிய சந்ததிக்கு கலப்புயிரி எனப்படும்
17.
உயிரி உரம் என்பது உயிருள்ள அல்லது மறையுயிர் செல்களின் செயலாக்கம் மிக்க நுண்ணுயிரி இரகங்களை கொண்டு தயாரிக்கப்படுகிறது.
ரைசோபியம்:
(i) வேர் முடிச்சுகளில் கூட்டுயிர் வாழ்க்கையை கொண்டுள்ளது
(ii) வளிமண்டலத்திலுள்ள நைட்ரஜனை மண்ணில் நிலைநிறுத்துகிறது
(iii) இது நெல் விளைச்சலை 15 முதல் 40 சதவீதம் வரை அதிகரிக்கச் செய்கிறது
அசோலா:
(i) மிதக்கும் நீர்வாழ் பெரணியாகும்
(ii) நீலப்பசும்பாசியுடன் இணைந்து வளிமண்டல நைட்ரஜனை மண்ணில் நிலைநிறுத்துகிறது
(iii) விரைவாக சிதைவடைந்து நெற்பயிரின் விளைச்சலை அதிகரிக்கிறது
ஆர்பஸ்குலார் வேர் பூஞ்சை:
(i) மண்ணிலுள்ள அதிக பாஸ்பேட்டுகளை கரைக்கும் திறன் கொண்டது
(ii) நோய் எதிர்ப்பு மற்றும் சாதகமற்ற சூழ்நிலையைத் தாங்கும் திறன் உள்ளது
(iii) நிலத்தில் நீர் இருப்பதை உறுதிப்படுத்துகின்றது
கடற்பாசி திரவ உரம்:
(i) சைட்டோகைனின், ஜிப்ரலின் மற்றும் ஆக்சினையும் உடையது
(ii) இது கெல்ப் என்னும் கடற்பாசியிலிருந்து தயாரிக்கப்பட்டது.
(iii) இதில் 70க்கும் மேற்பட்ட கனிமங்கள், வைட்டமின்கள் மற்றும் நொதிகள் உள்ளன.
(iv) இதில் ஊறவைத்த விதைகள் வேகமாக முளைக்கும்
18.
1. இது லென்டிவைரஸ் வகையைச் சார்ந்தது.
2. இது உருளை வடிவம் கொண்டுள்ளது.
3. 100-120 nm விட்டம் கொண்டது.
4. இது உறை கொண்ட வைரஸ்
5. மேல் உறையில் gp41 மற்றும் gp120 என்ற கிளைக்கோபுரத நுண்முட்கள் காணப்படுகின்றன.
6. 2 பெரிய ஒற்றை ஆர்.என்.ஏ ரிவர்ஸ் டிரான்ஸ்கிரிப்டேஸ் நொதிகள் இணைந்துள்ளன.
7. மேலும் இதனுடன் புரோட்டியேஸ் மற்றும் ரிபோ நியூக்ளியேஸ் நொதிகளும் காணப்படுகின்றன.
8. இதன் மைய கேப்சிட் புரத உறையால் சூழப்பட்டுள்ளது.

19.
1. இதன் வாழ்க்கை சுழற்சியில் மூன்று நிலையில் காணப்படுகின்றன. அவை ஸ்கிசோகோனி கேமிடோகோனி மற்றும் ஸ்போரோகோனி.
மனிதனில் காணப்படும் வாழ்க்கை சுழற்சி;
1. ஸ்போரோசோயிட்டுகள் கொசுவின் உமிழ்நீரின் மூலம் மனிதனுள் செலுத்தப்படுகிறது.
2. அவை கல்லீரலுள் செல்கிறது.
3. அங்கு அவை பாலிலா பல பிளவு முறையில் மீரோசோயிட்டுகளை உண்டு பண்ணுகிறது.
4. இவை சிவப்பணுக்களுக்குள் நுழைந்து டிரோபோசோயிட்டுகளாக மாறுகின்றன.
5. இது நுண்குமிழ் உருவாகி முத்திரை மோதிர நிலைமை அடைகிறது.
6. பாலிலா இனப்பெருக்கம் மூலம் பிளவுற்று ஸ்கிசாண்டுகள் உருவாகின்றது.
7. இவை பின்பு பிளவுற்று மீரோசோயிட்டுகளையும், ஹீமோசோயின் என்ற நச்சையும் இரத்தத்தில் வெளியிடுகின்றன.
8. சில மீரோசோயீட்டுகள், மேக்ரோகேமிட் டோசைட்டுகளாகவும் மைக்ரோகேமிட் டோசைட்டுகளாகவும் மாற்றமடைகின்றன.
கொசுவில் காணப்படும் வாழ்க்கைச் சுழற்சி :
1. அந்த கேமிட்டோசைட்டுகள் குடலில் ஆண் மற்றும் பெண் இனச்செல்களாக மாறுகின்றன.
2. பின் அவை இணைந்து ஊகனைட்டாக மாறுகிறது.
3. கொசுவின் குடலை துளைத்து சென்று ஊசிஸ்ட்டுகளாக மாறுகின்றன.
4. இவை ஸ்போரோகோனிடாக மாறுகிறது.
5. பின் அவை ஸ்போரோசோயிட்டாக மாறி உமிழ்நீர் சுரப்பியை அடைகிறது.
6. பின் அவை அடுத்த சுழற்சிக்காக தயாராகிறது.

20.
திசையமைவு, வடிவம், சூல்காம்பு, சலாசாவுக்கு தொடர்பாக 6 வகைகள் உள்ளன.
i) நேர்சூல் (Orthotropous)
சூல் காம்பு, சூல் துளை. சலாசா நேர்கோட்டில் இருக்கும் (எ.டு) பைப்பரேசி, பாலிகோனேசி.
ii) தலைகீழ் சூல் (Anatropous)
சூல் முழுமையாகத் தலைகீழாக இருக்கும். சூல்தளை, சூல்காம்பு அருகிலிருக்கும் (எ.டு) ஒரு விதையிலை இரு விதையிலைத் தாவரம்.
iii) கிடைமட்ட சூல் (Hemianatropous)
சூலின் உடல் குறுக்குவாட்டில், சூல் காம்புக்கு செங்குத்தாக இருக்கும். (எ.டு) பிரைமுலேசி.
iv) கம்பைலோட்ராபஸ் (Campylotropous)
சூல் துளைப்பகுதியில், சூலின் உடல் வளைந்து அவரை விதை வடிவிலிருக்கும். விதைத் தழும்பு, சூல் தளை, சலாசா அருகாமையிலிருக்கும். சூல் துளை, சூல் ஒட்டுத்திசுவை நோக்கி இருக்கும்.
(எ.டு) லெகுமினாசே
v) ஆம்பிட்ராபஸ் (Amphitropous)
சூல் திசுவும், கருப்பையும் குதிரை லாடம் போல வளைந்திருக்கும். (எ.டு) அலிஸ்டமேசி குடும்பம்.
vi) சிர்சினோட்ராபஸ் (Circinotropous)
சூல் காம்பும் சூலை முழுவதும் சூழ்ந்துள்ளது. (எ.டு) காக்டேசி.
21.
நீர்நிலைகள் அல்லது நீர் நிலைகளுக்கு அருகில் வளரும் தாவரங்களின் விதைகள் மற்றும் கனிகள் பொதுவாக நீர் மூலமாகப் பரவுகின்றன.
(i) தலைகீழ்க் கூம்பு வடிவப் பூத்தளம் (Receptacle) கொண்டு அவற்றில் காற்று அறைகள் காணப்படுதல். (எ.கா) தாமரை
(ii) கனியில் மெல்லிய வெளியுறையும், நார்களாலான நடு உறையினையும் கொண்டிருப்பது. (எ.கா) தேங்காய்
(iii) இலேசான சிறிய மற்றும் காற்றினை உள்ளடக்கிய விதை ஓட்டு வளரிகளை விதைகள் பெற்றிருப்பது. (எ.கா) அல்லி
(iv) உப்பியத்தன்மையுடன் கூடிய கனிகளைக் கொண்டிருத்தல் (எ.கா) ஹெரிட்டீரா லிட்ரோராலிஸ்
(v) தானாகவே காற்றில் மிதக்க இயலாத தன்மை கொண்ட விதைகள் ஓடு நீரின் வேகத்தினால் அடித்துச் செல்லப்படுகின்றன. (எ.கா) தேங்காய்
22.
தாவரங்கள் மற்றும் விலங்குகள் ஆகிய உயிரினங்களுக்கிடையே ஏற்படும் இடைச்செயல் விளைவுகள் உயிரிக்காரணிகள் என அழைக்கப்படுகின்றன.
நேர்மறை இடைச்செயல்கள் (Positive interaction):
இவ்வகை இடைச்செயல்களில், பங்கேற்கும் சிற்றினங்களில் ஒன்று மட்டுமே அல்லது இரண்டுமே பயன் அடைகின்றன. (எ.கா) ஒருங்குயிரி நிலை (Mutualism) உடன் உண்ணும் நிலை (Commensalism).
அ) ஒருங்குயிரி நிலை (Mutualism):
இங்கு இரண்டு வகையான சிற்றினங்களுக்கு இடையில் ஏற்படும் கட்டாய இடைச்செயல்களால் இரண்டு சிற்றினங்களும் பயனடைகின்றன.
நைட்ரஜன் நிலைப்படுத்திகள் (Nitrogen fixation):
லெகூம் வகை தாவரங்களின் வேர்களில் காணப்படும் முடிச்சுகளில் ரைசோபியம் (பாக்டீரியம்) ஒருங்குயிரி நிலையில் வாழ்கிறது. லெகூம் தாவர வேர்களிலிருந்து ரைசோபியம் உணவினை எடுத்துக்கொள்கிறது. அதற்குப் பதிலாக வளிமண்டல நைட்ரஜனை நிலைநிறுத்தி நைட்ரேட்டாக மாற்றி ஓம்புயிரித் தாவரங்களுக்குக் கிடைக்குமாறு செய்கிறது.
நீர் பெரணியாகிய அசோலா மற்றும் நைட்ரஜனை நிலைநிறுத்தும் சயனோ பாக்டீரியம் (அனபீனா)
லைக்கன்கள் - ஆல்கா மற்றும் பூஞ்சையிடையேயான ஒருங்குயிரி நிலை.
ஆ) உடன் உண்ணும் நிலை (Commensalism):
இரு வேறு சிற்றினங்களுக்கு இடையிலான இடைச்செயல்களால் ஒன்று பயன் அடைகிறது. மற்றொன்று பயன் அடைவதில்லை அல்லது பாதிப்பு அடைவதில்லை.
தொற்றுத்தாவரங்கள், வன்கொடிகள், தொங்கும் மாஸ்கள், பெப்பரோமியா, மணித்தாவரம், அஸ்னியா (லைக்கன்) ஆகியவை தாவரங்களுக்கான பிற எடுத்துக்காட்டுகளாகும்.
எதிர்மறை இடைச்செயல்கள் (Negative interactions):
பங்கேற்கும் சிற்றினங்களில் ஒன்று பயனடைகிறது. ஆனால் மற்றொன்று பாதிக்கப்படுகிறது. இது எதிர்மறை இடைச்செயல் என்று அழைக்கப்படுகின்றது. (எ.கா) கொன்று உண்ணும் வாழ்க்கை முறை, ஒட்டுண்ணி வாழ்க்கை, போட்டியிடுதல் மற்றும் அமன்சாலிஸம்.
23.
(i) இரண்டு ஜோடி எதிரிடைப் பண்புகளுக்கிடையே கலப்பு இருபண்புக் கலப்பு.
F2 புறத்தோற்ற விகிதம்
| உருண்டை மஞ்சள் | உருண்டை பச்சை | சுருங்கிய மஞ்சள் | சுருங்கிய பச்சை | |||
| 9 | : | 3 | : | 3 | : | 1 |
24.
ஜீன் பாப்டிஸ்ட் லாமார்க் என்பவர் தான் முதன் முதலாக பரிணாமக் கோட்பாட்டினை 'விலங்கியல் தத்துவம்' என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.
லாமார்க் கோட்பாட்டின் இரண்டு முக்கிய கொள்கைகள்
(i) பயன்படு மற்றும் பயன்படாக் கோட்பாடு
1. அடிக்கடி பயன்படுத்தும் உறுப்புகள் அளவில் பெரிதாகின்றன. பயன்படுத்தாத உறுப்புகள் சிதைந்து அழிகின்றன.
2. ஒட்டகச்சிவிங்கியின் கழுத்து பயன்படு விதிக்கும் பாம்புகளில் கால்கள் இல்லாத்தன்மை பயன்படாவிதிக்கும் எடுத்துக்காட்டுகள் ஆகும்.
(ii) பெறப்பட்ட பண்புகள் மரபு கடத்தல் கோட்பாடு
ஒரு உயிரினத்தின் வாழ்நாளின் போது உருவாக்கப்படும் பண்புகள் பெறப்பட்ட பண்புகள் எனப்படும். அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படுகின்றன.
25.
1. விலங்குகளில் கரு வளர்ச்சி நிலைகளிலும் வடிவங்களிலும் ஒற்றுமை உண்டு.
2. அனைத்து முதுகெலும்புகளின் இதயத்தின் கரு வளர்ச்சி ஒரே முறையில் நடைபெறுகிறது.
அ) மீன்களில் இரண்டு அறைகளையுடைய இதயமாகவும்
ஆ) இருவாழ்விகளில் 3 அறைகளுடைய இதயமாகவும்
இ) முதலை பறவைகள் பாலூட்டிகள் நான்கு அறைகளுடைய இதயமாகவும் வளர்ச்சி அடைகிறது.
1. உயிர்வழி தோற்ற விதியினை எர்ன்ஸ்ட் ஹேக்கல் உருவாக்கினார்.
ஆன்டோஜெனி - தன் உயிரி வளர்ச்சி
பைலோஜெனி - இனவரலாறு
உதாரணமாக : மனித கருவளர்ச்சியின் போது தோன்றும் தொண்டை செவுள் பிளவுகள் கரு உறைப்பை மற்றும் வால் ஆகும்.
2. மனிதக் கரு வளர்ச்சியின் மூதாதை விலங்குகளின் கரு வளர்ச்சி நிலைகளை மட்டுமே காட்டுகின்றனவே தவிர முதிர் உயிரியை போன்றிருப்பதில்லை.
3. மீன் சலமாண்டர் ஆமை கோழி மற்றும் மனிதக் கருக்கள் பொதுவான மூதாதையிடமிருந்து தோன்றியவை. ஒற்றைச் செல் கரு முட்டை

26.
(i) கழுவும் & உலர்த்தும் வசதி
கண்ணாடிக் கலங்களைக் கழுவும் & உலர்த்தும் நுண்ணலை அடுப்பு
(ii) ஊடகம் தயாரிக்கும் அறை
(i) தன்னழுத்தக்கலன்
(ii) எலக்ட்ரானிக் தராசு
(iii) pH மீட்டர்
(iii) நுண்ணுயிர் நீக்கப்பட்ட அறை
(i) சீரடுக்கு காற்று பாய்வு அமைப்பு
(ii) உயர்திறன் துகள் காற்று வடிப்பான் (HEPA)
(iv) பிற வளர்ப்பு வசதிகள்
பிரிகூறு - வளர்ப்புக் குழாயில் பொதிக்கப்பட்டு 22 - 28°C வெப்பநிலையில், 2400 லக்ஸ் ஒளிச்செறிவில் 8 - 16 மணி நேர ஒளிக்காலத்துவதிலும் 60% ஈரப்பதத்திலும் வளர்க்கப்படுகிறது.
27.
1. நன்மையளிக்கும் பாக்டீரியாக்கள் மண்வாழ் உயிரினங்களை கொல்லக்கூடும்.
2. நீர் நிலைகளில் மிகை உணவூட்டத்தை ஏற்படுத்தும்.
3. நீர்வாழ் விலங்குகளையும் அவற்றின் உற்பத்தித்திறனையும் பாதிக்கிறது.
4. வேதிப்பொருட்களின் துகள்கள் மாசுபாட்டினை ஏற்படுத்தும்.
5. மாசடைந்த காற்றினை உள்ளிழுப்பது சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தும்.
6. உட்கொள்ளுதல் நச்சாகும்.
7. வேதிப்பொருட்கள் தோலில் அரிப்பினை ஏற்படுத்தும்.
8. பல வேதிப்பொருட்கள் புற்றுநோயினை ஏற்படுத்தக்கூடும்.
9. நன்மை செய்யும் பூச்சிகள் பாதிக்கப்படும்.
28.
1. நீரின் மேற்பரப்பில் உயிரினங்களில் ஒளி மற்றும் ஆக்சிஜன் நீரினுள் செல்வது தடுக்கப்படுகிறது.
2. இது உயிரிய ஆக்சிஜன் தேவையை அதிகரித்து இறப்பினை ஏற்படுத்துகின்றது.
3. மீன்களின் செவுள்களை அடைத்து கொள்கிறது நீர்வாழ் பறவைகளின் இறக்கைகளிலும் தடையினை ஏற்படுத்துகின்றன.
4. கெட்டுப்போன நீர் மற்றும் உணவினை எடுத்துக் கொள்வதால் கல்லீரல் அழற்சி டைபாய்டு போன்ற நோய்களால் மனிதர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
5. குடிநீரின் அதிகப்படியான புளோரைடு புளோரோசிஸ் என்னும் நோயினை ஏற்படுத்துகிறது. மிகை உணவூட்டச் செறிவு நீர் நிலைகளில் தரத்தினை பாதித்து பாசிபெருக்கத்தை ஏற்படுத்துகின்றது.
29.
மனித கரு வளர்ச்சிக்காலம் 280 நாட்கள் (40 வாரங்கள்) கொண்டது. இது கர்ப்ப காலம் (கெஸ்டேஷன் Period) எனப்படும். பருவத்திற்கு 3 மாதங்கள் முப்பருவங்கள் உள்ளன.
(i) முதல் பருவம்
1. உறுப்பு உருவாக்கத்தின் முக்கிய காலம்.
2.இதயம், கை,கால், நுரையீரல்,புற இனப்பெருக்க உறுப்புக்கள் உருவாகின்றன.
(ii) இரண்டாம் முப்பருவம்
1. முகம் நன்கு உருவாகிறது.
2. கண்ணிமை, கண்ணிமை மயிர், இமைத்தல் தோன்றுகின்றன.
3. உடல் மெல்லிய மயிரிழைகளால் மூடப்படும்.
4. தசைத் திசு வளரும்.
5. எலும்புகள் கடினமடையும்.
(iii) மூன்றாம் முப்பருவம்:
இதன் முடிவில் முழு வளர்ச்சியடைந்த கரு மகப்பேறுக்கு தயாராகின்றது.
30.
ஹன்டிஸ்டன் கோரியா :
1. மனிதனில் உடற் குரோமோசோமின் ஓங்கு தன்மை கொண்ட கொல்லி மரபணுவால் ஏற்படுகிறது.
2. இவற்றின் பண்புகள் :
(i) தன்னியல்பான உடல் நடுக்கம்
(ii) நரம்பு மண்டல சிதைவு
(iii) மனநிலை பாதிப்பு
(iv) உடல் பலம் குன்றல்
31.
1. இது உடல் குரோமோசோமில் உள்ள ஒரு ஒடுங்கு பண்பு மரபணுவின் திடீர் மாற்றத்தினால் ஏற்படும் நோயாகும்.
2. இயல்புக்கு மாறான ஹீமோகுளோபினால் இரத்தத் சிவப்பணுக்கள் சிதைவடைகின்றன.
3. இயல்பான ஹீமோகுளோபின் 4 பாலிபெப்டைடு சங்கிலியால் ஆனது. அதில் 2 ஆல்பா மற்றும் 2 பீட்டா குளோபின் சங்கிலிகளானது.
4. தலாசிமியா நோயாளிகளில் ஆல்பா அல்லது பீட்டா சங்கிலிகளில் பாதிப்பு இருக்கும்.
| ஆல்பா தலாசீமியா | பீட்டா தலாசிமியா | ||
| 1. | 16 ம் குரோமோசோமில் அமைந்த 2 ஜீன்கள் தலாமீசியாவை கட்டுப்படுத்துகின்றன. அவைகள் HBA1,HBA2 | 11 ம் குரோமோசோமில் அமைந்த ஒற்றை ஜீன் கட்டுப்படுத்துகிறது. | |
| 2. | திடீர் மாற்றம் அல்லது நீக்கம் ஒன்றுக்கு மேற்பட்ட ஆல்பா மரபணுக்களில் ஏற்றப்படுவதால் ஆல்பா தலாசீமியா உண்டாகிறது. | பொதுவான தலாசீமியா | |
| . | ஆல்பா உற்பத்தி அதிகரிக்கிறது. | ||
| இரத்த சிவப்பணுக்களின் சவ்வுகள் சேதமுற்று இரத்தசோகையை ஏற்படுத்துகிறது. | |||
32.
(i). மீயொலி வரியோட்டம் (Ultra Sound)
1. முதல் மும்மாதக் கருவளர்ச்சியின் போது செய்யப்படும்.
2. கருவின் எண்ணிக்கை, பிறப்பு தேதி அறியலாம்.
3. தொடக்க கர்ப்பகாலக் பிரச்சனைகள் அறியலாம்.
4. 2D,3D,4D வகைகள் உள்ளன.
(ii) பனிக்குடத்துடைப்பு (Amniocentesis)
1.15 முதல் 20 வாரக் கருவளர்ச்சியில் செய்யலாம்.
2. ஊசியினால் கருவின் உதிர்ந்த செல்கள் கொண்ட, பனிக்குடத்திரவம் சேகரிக்கப்படும்.
3. குரோமோசோம் பிறழ்ச்சிகளை அறியலாம்.
(iii) கோரியான் நுண்நீட்சி ஆய்வு (CVS)
தாய் சேய் இணைப்புத்திசுவை ஆய்வு செய்து, குரோமோசோம் பிறழ்ச்சியை அறியலாம்.
(iv) கருகண்காணிப்புக் கருவி (Foetoscope)
1. வளர்கரு இதயத்துடிப்பு, கர்ப்பகால இறுதிச் செயல்கள், பிரசவ வலி அறியலாம்..
2. கருவின் சராசரி இதயத்துடிப்பு 120 முதல் 150 நிமிடம்
3. இயல்புக்கு மாறான இதயத்துடிப்பு O2 பற்றாக்குறை அறியலாம்.
(v) டாப்ளர் கருவி :
இந்த கையடக்க கண்காணிப்புக் கருவி வளர்கருவின் இதயத்துடிப்பு வீதத்தைக் காட்டும்.
33.
1. HCG ஊசியை பெண் உடலில் செலுத்தி 34 முதல் 37 மணிநேரம் ஆக வேண்டும்.
2. பொதுமயக்க மூட்டல் செய்ய வேண்டும்.
3. அறுவைசிகிச்சை மூலம் மீயொலி வழிகாட்டி மூலம், பெண்ணின் அண்டகத்திலிருந்து அண்டம் வெளியே எடுக்க வேண்டும்.
4. விந்து செல்கள் சிறப்பு ஊடகத்தைப் பயன்படுத்தித் தயார் செய்யப்படும்.
5. பின்னர் இனச்செல்கள் ஒன்றாகச் சேர்க்கப்படும்.
6. ஒரு முட்டையைக் கருவுறச் செய்ய 10,000 முதல் 1,00,000 திறனுள்ள விந்துக்கள் தேவை.
7. எட்டு செல் கருக்கோள நிலையில் கருப்பையில் செலுத்தப்படும். இது கருமாற்று தொழில்நுட்பம் எனப்படும்.
8. உபரி கருக்கள் உறைநிலை குளிரூட்டும் முறையில் பாதுகாக்கப்படும்.
34.
இரண்டு ஒற்றை மய இனச்செல்கள் இணைவதே ஒருங்கிணைவாகும்
ஒருங்கிணைவு முறையின் பல்வேறு வகைகள்:
i) தன் கருவுறுதல்:-
ஒரு செல்லிலிருந்தோ அல்லது ஒரே உயிரியிலிருந்தோ உருவாகின்ற ஆண் மற்றும் பெண் இனச்செல்கள் இணைந்து கரு முட்டையை உருவாக்குகின்றன.
2. எ.கா: ஆக்டினோஸ்பேரியம் மற்றும் பாரமீசியம்.
ii) அயல் கருவுறுதல்:
1.ஆண் மற்றும் பெண் என்னும் இரு தனித்தனி பெற்றோர்களிலிருந்து உருவாகின்ற ஆண் மற்றும் பெண் இனச்செல்கள் ஒன்றிணைந்து கருமுட்டை உருவாகிறது.
2. எ.கா: மனிதன்.
iii) முழு சேர்க்கை:
1. கீழ் நிலை உயிரிகளில் சில சமயங்களில் முதிர்ந்த உயிரிகள் இனச்செல்களை உருவாக்காமல், அவ்வுயிரிகளே இனச்செல்கள் போன்று செயல்பட்டு ஒன்றிணைந்து புதிய உயிரிகளைத் தோற்றுவிக்கின்றன.
2. எ.கா: டிரைக்கோநிஃம்பா.
iv) இளம் சேர்க்கை:
முதிர்ந்த பெற்றோர் செல்லிலிருந்து மறைமுகப்பிரிவு மூலம் உருவாகும் இரு இளம் சேய் செல்கள் இனச்செல்கள் போன்று செயல்பட்டு ஒன்றிணைந்து புதிய உயிரிகளைத் தோற்றுவிக்கின்றன.
v) மாறுபட்ட செல் சேர்க்கை:
அமைப்பில் மாறுபட்ட இரு சிறிய இனச்செல்கள் ஒன்றிணையும் முறை புதிய மாறுபட்ட செல் சேர்க்கை எனப்படும்.
vi) ஒத்த செல் சேர்க்கை:
1. அமைப்பிலும் செயலிலும் ஒரே மாதிரியான இரு இனச்செல்கள் ஒன்றிணைதல் ஒத்த செல் சேர்க்கை எனப்படும்.
2. எ.கா: மோனோசிஸ்டிஸ்.
vii) வேறுபட்ட செல் சேர்க்கை:
முற்றிலும் வேறுபட்ட இரு இனச்செல்கள் ஒன்றிணையும் முறை வேறுபட்ட செல் சேர்க்கை எனப்படும்.
35.
ஆய்வுக்கான உயிரினங்கள்:
(i) T2 பாக்டீரியோஃபேஜ் ஈ.கோலையை தாக்கும் வைரஸ்)
கோட்பாடு:
(i) DNA இல் பாஸ்பரஸ் காணப்படுகிறது. புரதத்தில் காணப்படுவதில்லை.
(ii) புரதத்தில் கந்தகம் காணப்படுகிறது. ஆனால் DNA இல் கந்தகம் காணப்படுவதில்லை.
செய்முறை:
I. பாக்டீரியங்களோடு பாக்டீரியோஃபேஜ் (வைரஸ்) கலந்து - பாக்டீரியப் பரப்பின் மீது மெல்லிய படலமாக பின் அவற்றிலிருந்து சில பொருட்கள் பாக்டீரியாவிலுள்ள செல்கின்றன, படர்கின்றன. இவை A மற்றும் B என இரண்டு மாதிரிகள் தனித்தனியாக மேற்கொள்ளப்படுகின்றன.
மாதிரி (A) - வளர்தளத்தில் கதிரியக்கதன்மையுடைய கந்தக ஐசோடோப்பு 35S சேர்க்கப்படுகிறது.
மாதிரி (B) - வளர்தளத்தில் கதிரியக்கத் தன்மையுடைய பாஸ்பரஸ் ஐசோடோப்பு 35P சேர்க்கப்படுகிறது.
மாதிரி (A) - வளர்தளத்தில் பாக்டீரியோஃபேஜ்களின் புரதங்களின் 35S அடையாளமிடப்பட்டிருந்தது.
மாதிரி (B) - வளர்தளத்தில் பாக்டீரியோஃபேஜ்களின் DNA 35P அடையாளமிடப்பட்டிருந்தது.
II. இவ்வாறு அடையாளமிடப்பட்ட (பாக்டீரிய சிதைவுக்கு முன்) மிதமான குலுக்கலுக்கு ஆட்படுத்தி அதிலுள்ள பொருள்களை விடுவித்தனர்.
காண்பவை:
32P மட்டுமே ஈ.கோலை பாக்டீரிய செல்களில் காணப்பட்டது. 35S காணப்படவில்லை.
முடிவு
எனவே வைரஸ் (பாக்டீரியோஃபேஜ்களிலிருந்து) பாக்டீரியாவுக்குப் பாரம்பரிய செய்தியை கொண்டு சென்றது புரதங்கள் அல்ல DNA மட்டுமே என இறுதியில் நிரூபித்தனர்.
36.

37.
வரையறை:
சைட்டோபிளாசத்தில் சிதறிக் காணப்படும் அமினோ அமிலங்களை எடுத்து வரும் கடத்தியாகவும் தூது குறியீடுகளை படிப்பதுமாக இரு பணிகளைச் செய்வதால் இது இணைப்பு மூலக்கூறு என்ற சொல்லை ஃபிரான்சிஸ் கிரிக் உருவாக்கினார்.
கடத்தி RNA அமைப்பு
ராபர்ட் ஹோலே கிராம்பு இலை மாதிரி
1. இரண்டாம் நிலை கட்டமைப்பு இவ்வாறு காணப்படுகிறது.
2. இறுக்கமான மூலக்கூறு தலைகீழ் L-வடிவத்தை ஒத்துள்ளது.
கிராம்பு இலை மாதிரி அமைப்பு

3. அமினோ அமில ஏற்பு முனையில் ➝ அமினோ அமிலம் உள்ளது.
4. எதிர்முனையில் ➝ எதிர் குறியீட்டிற்கான மூன்று கரங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இதில் தூது RNA இன் காரங்களின் நிரப்பு கூறுகளாயுள்ளன. சரியான அமினோ அமிலம் இணைக்கப்பட்டிருப்பதை உறுதி செய்கிறது (அமினோ அசைலேஷன்)
5. T-வளையம் - ரிபோசோம் இணையும் பகுதி
6. D-வளையம் - அமினோ அசைல் சிந்தடேஸ் இணையும் வளையம்.
7. மாதிரி வளையம் - இதில் நியுக்ளியோடைடுகளின் கூறுகளும் நீளமும் வேறுபட்டுள்ளது.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th English Supplementary - 3 - The Hour of Truth (Play) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Poem - 3 - All the World’s a Stage Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 3 - In Celebration of Being Alive Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Supplementary - 2 - Life of Pi Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards