12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set C
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set B
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set C

Published on: 04/10/2020
12 ஆம் வகுப்பு உயிரியல் மாதிரி 5 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Biology Tamil Medium Sample 5 Mark Creative Questions (New Syllabus 2020)
12ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
நீர்நிலை வழிமுறை வளர்ச்சியின் படிநிலைகள் யாவை? (அ) தாவர வழிமுறை வளர்ச்சியில் நீர்நிலை வழிமுறை வளர்ச்சியின் பல்வேறு நிலைகளை பற்றி எழுதுக.
2.
புவி வெப்பமாதலை குறைக்க இரண்டு கார்பன் சேமிப்பு முறைகளை எழுதுக.
3.
ஓசோன் பற்றி குறிப்பு வரைக.
4.
சூழியல் பிரமிட்கள் என்றால் என்ன? சூழியல் எண்ணிக்கை பிரமிட் பற்றி எழுதுக.
5.
வாழிடங்கள் துண்டாடப்படுவதினால் உயிரினங்கள் பாதிக்கப்படுவதை விவரி. உயிரினங்கள் வாழும் ஒரு பெரிய நிலப்பரப்பு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சிறு பகுதிகளாகப் பிரித்தல் வாழிடம் துண்டாடப்படுதல் ஆகும்.
6.
இரு சிற்றினகூட்டங்களுக்கிடையேயான சார்பை பகுப்பாய்ந்து அட்டவணைப்படுத்துக.
7.
நீர்வாழ் விலங்குகள் வாழிடத்திற்கு ஏற்ப எவ்வாறு தங்களை தகவமைத்துக் கொள்கின்றன?
8.
PHB, PHA & PLA போன்ற பயோபாலிமர்கள் வேறுபடுத்துக.
9.
மரபணு மாற்றமடைந்த தாவரங்களையும் அவற்றின் பயன்களையும் தொகுத்தெழுதுக.
10.
தொற்று நோய்களாக இருந்தாலும், பரம்பரை நோயாக இருந்தாலும் முன்கூட்டியே கண்டறிதல் சிகிச்சைக்கு முக்கியமானதாகும். பாரம்பரிய முறைகளில் நோயினை முன்கூட்டியே கண்டறிய முடிவதில்லை.
அ) முன்கூட்டியே நோய் கண்டறிதலின் முக்கியத்துவம் யாது?
ஆ) மூலக்கூறு அளவில் நோய் கண்டறிதலின் முக்கியத்துவம் யாது?
11.
கரும்பின் பயன்கள் கூறு?
12.
கழிவுநீர்ச் சுத்திகரிப்பில் இரண்டாம் நிலைச் சுத்திகரிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உன் பதில் மூலம் நியாயப்படுத்து.
13.
திடீர் மாற்றத்தின் வகைகளை அட்டவணைப்படுத்துக.
14.
உயிரி உரங்களின் வகைப்பாட்டினை பட்டியலிடுக
15.
இந்தியப் பயிர் பெருக்கவியலாளர்கள் மற்றும் அவர்களின் கண்டுபிடிப்பையும் அட்டவணைப்படுத்துக
16.
நிணநீர் முடிச்சின் அமைப்பை பற்றி கட்டுரை வரைக.
17.
புழுவின் நோய்கள் பற்றி விவரி.
18.
பெருவித்துசார் கருப்பையின் வளர்ச்சி -விளக்கு?
19.
ஆண் கேமிட்டகத்தின் தாவரத்தின் வளர்ச்சியை விவரி?
20.
தொற்றுத்தாவரங்கள் என்றால் என்ன? அதன் புறஅமைப்பு தகஅமைவுகள் யாவை?
21.
நீர்வாழ் தாவரங்களின் புறஅமைப்பு (அ) புறத்தோற்ற தகவமைப்புகள் யாவை?
22.
மூன்று பண்பு கலப்பை விவரி
23.
பரிணாமத்தின் மூலக்கூறு சான்றுகள் பற்றி விவரி.
24.
உயிர் பாதுகாப்பு என்றால் என்ன?
25.
திடக்கழிவு மேலாண்மை பற்றி விவரி?
26.
நீர் மாசுபாட்டினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் யாவை?
27.
ஆண் ,பெண் இருபாலாரிலும் காணப்படும் மாறுபாடடைந்த உமிழ்நீர்ச் சுரப்பி எது? விளக்குக.
28.
கரு சூலப் படலங்களை விளக்குக.
29.
மெண்டலின் குறைபாடான அல்பீனிசம் பற்றி குறிப்பு வரைக.
30.
குரோமோசோம்களில் ஏற்படும் இயல்பு மற்றும் சின்ட்ரோம்களை உருவாக்குகின்றன?
31.
இயற்கையான ஆனால் நம்பகத்தன்மையற்ற கருத்தடை முறை எது? விளக்கு?
32.
பலபிளவு முறை பற்றி விரிவாக விடையளி.
33.
DNA ரேகை அச்சிடலின் பல்வேறு படிகள் அட்டவணைப்படுத்துக.
34.
கடத்து RNA எனப்படும் இணைப்பு மூலக்கூற்றின் அமைப்பை விவரி.
1.
கொடுக்கப்பட்டுள்ளன நீர்நிலை வழிமுறை வளர்ச்சியின் பல்வேறு நிலைகள். அவை
1. தாவர மிதவை உயிரிநிலை
2. நீருள் மூழ்கிய தாவர நிலை
3. நீருள் மூழ்கி மிதக்கும் நிலை
4. நாணற் சதுப்பு நிலை
5. சதுப்பு புல்வெளி நிலை
6. புதர்ச்செடி நிலை
7. காடு நிலை
1. தாவர மிதவை உயிரிநிலை (Phytoplankton stage):
நீலப்பசும்பாசிகள், பாக்டீரியங்கள், சயனோ பாக்டீரியங்கள், பசும்பாசிகள், டயட்டம், போன்ற முன்னோடி குழுமங்களைக் கொண்ட வழிமுறை வளர்ச்சியின் முதல்நிலை இதுவாகும். இந்த உயிரினங்களின் குடிபெயர்வு, வாழ்க்கை செயல்முறைகள், இறப்பின் மூலமாக குளத்தின் கரிம பொருளின் அளவு மற்றும் ஊட்டச்சத்து செறிவடைகிறது. இது வளர்ச்சியின் அடுத்த படிநிலை வளர்ச்சிக்கு உதவுகிறது.
2. நீருள் மூழ்கிய தாவர நிலை (Submerged plant stage):
மிதவை உயிரிகளின் இறப்பு மற்றும் மட்குதலின் விளைவாலும், மழைநீர் மூலம் நிலத்திலிருந்து மண் துகள்கள் அடித்து வரப்படுவதாலும், குளத்தின் அடிப்பகுதியில் ஒரு தளர்வான மண் உருவாக வழி வகுக்கிறது. எனவே வேரூன்றி நீருள் மூழ்கி வாழும் நீர்வாழ்த் தாவரங்கள் புதிய வாழ்தளத்தில் தோன்ற ஆரம்பிக்கிறது. (எ.கா) கேரா, யூட்ரிகுலேரியா. தாவரங்களின் இறப்பு மற்றும் சிதைவு குளத்தின் அடித்தளத்தை உயர்த்துவதால் குளம் ஆழமற்றதாக மாறுகிறது. எனவே இந்த வாழிடம் நீருள் மூழ்கி மிதக்கும் நிலையிலுள்ள வேறுவகையான தாவரங்கள் குடியேறுவதற்கு ஏதுவாக அமைகிறது.
3. நீருள் மூழ்கி மிதக்கும் நிலை (Submerged free floating stage)
இந்த நிலையில் குளத்தின் ஆழம் கிட்டத்தட்ட 2-5 அடியாக இருக்கும். எனவே, வேரூன்றிய நீர்வாழ்த் தாவரங்கள் மற்றும் பெரிய இலைகளுடன் கூடிய மிதக்கும் தாவரங்கள் குளத்தில் குடியேற ஆரம்பிக்கின்றன. (எ.கா) வேரூன்றிய மிதக்கும் தாவரங்களான தாமரை, அல்லி மற்றும் ட்ராபா. இந்த தாவரங்களின் இறப்பு மற்றும் சிதைதல் மூலம் குளத்தின் ஆழம் மேலும் குறைகிறது. இதன் காரணமாக மிதக்கும் தாவரங்கள் படிப்படியாக பிற இனங்களால் மாற்றியமைக்கப்படுவதால் புதிய நிலை ஒன்று உருவாகிறது.
4. நாணற் சதுப்பு நிலை (Reed-swamp stage):
இது நீர் நில வாழ்நிலை எனவும் அழைக்கப்படுகின்றது. இந்த நிலையில் வேரூன்றிய மிதக்கும் தாவரங்கள் பிற தாவரங்களால் மாற்றியமைக்கப்படுகிறது. இது நீர்நிலையிலும், நில சூழ்நிலையிலும் வெற்றிகரமாக வாழக்கூடியது. எ.கா. டைஃபா
5. சதுப்பு புல்வெளி நிலை (Marsh meadow stage):
நீரின் அளவு குறைவதால், குளத்தின் ஆழம் குறையும் பொழுது சைப்பரேசி மற்றும் போயேசி. இவற்றின் அதிகம் கிளைத்த வேர்களின் உதவியால் பாய் விரித்தது போன்ற தாவரத்தொகுப்பு ஒன்று உருவாகிறது. இது அதிக அளவு நீர் உறிஞ்சுவதற்கும், நீர் இழப்பிற்கு வழி வகுக்கிறது. இந்த நிலையின் முடிவில் மண் வறண்டு, சதுப்புநிலத் தாவரங்கள் படிப்படியாக, மறைந்து புதர்ச்செடிகள் குடிபுக வழிவகுக்கிறது.
6. புதர்ச்செடி நிலை (Shrub stage):
சதுப்பு நிலத் தாவரங்கள் தொடர்ந்து மறைவதால், மண் வறண்டு போகிறது. எனவே இந்த பகுதிகளில் நிலவாழ்த் தாவரங்களான புதர்ச்செடிகள் (சாலிக்ஸ் மற்றும் கார்னஸ்) மற்றும் மரங்கள் (பாப்புலஸ் மற்றும் அல்னஸ்) ஆகியவை படையெடுக்கின்றன. இந்த தாவரங்கள் அதிக அளவிலான நீரை உறிஞ்சி, வறண்ட வாழிடத்தை உருவாக்குகின்றன. அத்துடன் செழுமையான நுண்ணுயிரிகளுடன் கூடிய கரிம மட்கு சேகரமடைவதால் மண்ணில் கனிமவளம் அதிகரிக்கிறது. இறுதியில் அப்பகுதி புதிய மர இனங்களின் வருகைக்கு சாதகமாகிறது.
2.
1. கார்பன் கவரப்படுத்தல் மற்றும் சேமிப்பு என்பது வளிமண்டலத்தின் கார்பன்-டை-ஆக்ஸைடை உயிரித் தொழில்நுட்பம் மூலமாகக் கைப்பற்றி ஒரு கிலோமீட்டர் அல்லது அதற்கு கீழான ஆழத்தில் உள்ள நிலத்தடிப் பாறைகளுக்கிடையே உட்செலுத்திச் சேமிக்கும் முறையாகும்.
2. புவி வெப்பமாதலை மட்டுப்படுத்தும் ஓர் அணுகுமுறையாகும்.
3. நிலைத்த சேமிப்பிற்காகப் பல பாதுகாக்கப்பட வேண்டிய இடங்கள் இதற்காகப் தேர்வு செய்யப்பட்டுள்ளன. பெருங்கடல்களில், திரவச் சேமிப்பாகவும், உலோக ஆக்ஸைடைப் கார்பன்-டை-ஆக்ஸைடை குறைத்தல் மூலம் திடமான கார்பனேட்டாக மாற்றி உலர் அல்லது திடச் சேமிப்பாகவும் சேமித்து வைக்கப்படுகிறது. இது புவியியல் சேகரிப்பு என்றும் அறியப்படுகிறது.
கார்பன் சேகரிப்பு :
4. கார்பன் சேகரிப்பு என்பது வளிமண்டலக் கரியமிலவாயுவைக் குறைக்கும் நோக்கில் வளிக் கார்பனைப் பிரித்தெடுத்துச் சேமிக்கும் ஒரு செயல்முறையாகும்.
5. தாவரங்களிலும், கடலில் இயற்கையாகவே கார்பன் சேகரிப்பு நிகழ்கிறது. வன மற்றும் மண் பாதுகாப்பு செயல்முறைகள் கார்பன் சேகரிப்பை அதிகரிப்பதன் மூலம் நிலக்கார்பன் சேகரிப்பு மற்றும் சேமிப்பைப் பொதுவாக நிறைவடையச் செய்கின்றன.
6. எடுத்துக்காட்டாக நுண் பாசிகளின் சிற்றினங்களான குளோரெல்லா, செனிடெஸ்மஸ், க்ரூகாக்ஸ் மற்றும் கிளாமிடோமோனஸ் உலகமெங்கும் கரியமில வாயுவின் கார்பனைச் சேகரிப்பதற்கு உதவிப் புரிகின்றன.
7. கடற்பெரும்பாசிகள், கடற்புற்கள் மற்றும் சதுப்புநிலக் காடுகளும் கரியமில வாயுவைக் கட்டுப்படுத்த அதிகத் திறன் பெற்றுள்ளன.
3.
1. ஓசோன் அடுக்கு புவியின் மீவெளிமண்டல அடுக்கின் (stratosphere) ஒரு பகுதியாக அமைந்துள்ளது.இது சூரியனிடமிருந்து வரக்கூடிய புற ஊதாக் கதிர்களைப் பெருமளவில் கவர்ந்து கொள்கிறது. இதனால் இவ்வடுக்கினை ஓசோன் கவசம் (Ozone Shield) என்றும் அழைக்கலாம். இவ்வடுக்கப் புற ஊதாக் கதிர்களைத் தடுத்து நிறுத்திப் புவியில் வாழும் உயிரினங்களைப் பாதுகாக்கும் அடுக்காக விளங்குகிறது.
2. வளிமண்டலத்தின் மேற்பகுதியில் இரண்டு அடுக்குகள் காணப்படுகின்றன. அவையாவன அடிவளி மண்டலம் (troposphere)(கீழடுக்கு) மற்றும் மீவளிமண்டலம்(srratosphere) (மேலடுக்கு) அடிவெளி மண்டலப் பகுதியில் காணக்கூடிய ஓசோன் படலம் பயனற்றதாகும். (bad ozone), அதே சமயம் மேலடுக்கில் ஓசோன் படலம் நன்மைதரும் அடுக்காகும். (good ozone). ஓசோன் அடுக்கின் தடிமண் டாப்ஸன் அலகுகளால் (Dobson Units) அளவிடப்படுகின்றன. இதன் மூலம் புவிப்பரப்பிலிருந்து வளிமண்டலத்தின் வெளிப் பகுதி வரையிலும் காற்றில் கலந்துள்ள ஓசோன் படலத்தை அளவிட முடியும்.
3. சில வகையான வேதிப்பொருட்கள் வளிமண்டலத்தில் வெளியிடப்படும்போது ஓசோன் படலம் தொடர்ந்து பாதிப்பிற்குள்ளாகிறது. குறிப்பாக குளிர்சாதனப் பெட்டிகளிலிருந்து வெளியேறும் குளோரோஃபுளோரோ கர்ப்ப,ஏரோசால், தொழிற்சாலைகளில் அழுக்கு நீக்கம் வேதிப் பொருட்கள் போன்றவை இத்தகைய பாதிப்பினை ஏற்படுத்துகின்றன. ஓசோன் அடுக்கின் அடர்வு வெகுவாகக் குறைந்து காணப்படும் பகுதிகள் அபாயகரமான பகுதியாகக் கண்டறியப்பட்டு அப்பகுதியை ஓசோன் துளை (Ozone hole) என அழைக்கப்படுகின்றன.
4. செப்டம்பர் 16-உலக ஓசோன் தின.UV B உயிர் மூலக்கூறுகளையும்,உயிர்ச் செல்களையும் அழிக்கின்றன. (தோல் மூப்படைதல்).UV கதிரியக்கம் தோலின் நிறமாற்றம் , தோல் கருகுதல் மற்றும் தோல் புற்றுநோய் போன்றவற்றைத் தூண்டவும் காரணமாகிறது.
5. 1970-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வு முடிவில் மனிதன் வாயிலாக வெளியிடப்படும் குளோரோஃபுளோரோ கார்பன் (CFC) ஓசோன் மூலக்கூறுகளை அதிகளவில் சிதைத்து வளிமண்டலத்தின் ஓசோன் அளவை வெகுவாகக் குறைத்துவிடுகிறது கண்டறியப்பட்டது.
6. சுற்றுச்சூழலைப் பாதுகாக்க ஏற்படுத்தப்பட்ட வியன்னா கூட்டத்தில் ஆக்கபூர்வமான ஒழுங்கு நடைமுறைகள் ஒப்பந்தம் (உடன்படிக்கைகள்) வகுக்கப்பட்டது. பிற்காலத்தில் இந்தச் செயல்முறைகள் அனைத்தும் சர்வதேச அளவிலான மான்ட்ரியல் ஒப்பந்தம் (உடன்படிக்கை) (Montreal Protocol) என அழைக்கப்பட்டது.
7. தூய்மை மேம்பாடு செயல்திட்டம் (Clean Development Mechanism -CDM) க்யோட்டா ஒப்பந்தம்/உடன்படிக்கை (kyoto Protocol)(2007) எனவும் வரையறுக்கலாம்.
4.
1. ஒரு சூழல்மண்டலத்தின் அடுத்தடுத்த ஊட்ட மட்டங்களின் அமைப்பு மற்றும் செயல்பாடுகளை குறிக்கும் திட்ட வரைபடங்கள் சூழியல் பிரமிட்கள் என்று அழைக்கப்படுகின்றன. இக்கருத்து சார்லஸ் எல்டன் (1927) என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்து. இதனால் எவை எல்டோனியின் பிரமிட்கள் எனவும் அழைக்கப்படுகின்றன.
எண்ணிக்கை பிரமிட் (Pyramid of number)
1. ஒரு சூழல்மண்டலத்தின் அடுத்தடுத்த ஊட்டமட்டங்களில் காணப்படும் உயிரினங்களின் எண்ணிக்கையை குறிக்கும் திட்ட வரைபடம் எண்ணிக்கை பிரமிட் என்று அழைக்கப்படுகிறது.
2. உற்பத்தியாளர்களில் தொடங்கி முதல்நிலை நுகர்வோர்கள், பிறகு இரண்டாம் நிலை நுகர்வோர்கள் மற்றும் இறுதியாக மூன்றாம் நிலை நுகர்வோர்கள் வரை ஒவ்வொரு ஊட்ட மட்டத்திலும் உயிரினங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
3. வனச்சூழல்மண்டலத்தின் எண்ணிக்கை பிரமிட் அடிப்பகுதி (T1) குறைவான எண்ணிக்கையிலான பெரிய மரங்களை கொண்டுள்ளது. இரண்டாவது ஊட்ட மட்டத்தில் இடம் பெற்றுள்ள தாவர உண்ணிகள் (T2) (பழம் உண்ணும் பறவைகள், யானை, மான்) உற்பத்தியாளர்களை விட அதிக எண்ணிக்கையை கொண்டுள்ளது. இறுதிக்கு ஊட்ட மட்டத்தில் (T3) உள்ள இரண்டாம்நிலை நுகர்வோர்களை விட (நரி மற்றும் பாம்பு) குறைவான எண்ணிக்கையை கொண்டுள்ளது. எனவே வனச் சூழல்மண்டலத்தின் எண்ணிக்கை பிரமிட் கதிரிழை வடிவத்தில் தோன்றுகிறது.
4. ஒட்டுண்ணி சூழல்மண்டலத்தின் எண்ணிக்கை பிரமிட் எப்பொழுதும் தலைகீழானது. தனி மரம் ஒன்றிலிருந்து தொடங்குவதே இதற்குக் காரணமாகும். எனவே, உயிரினங்களின் எண்ணிக்கை படிப்படியாக அடுத்தடுத்த ஊட்ட மட்டங்களில் உற்பத்தியாளர்கள் முதல் மூன்றாம் நிலை நுகர்வோர்கள் வரை படிப்படியாக அதிகரிக்கிறது.
5.
1. உயிரினங்கள் வாழும் ஒரு பெரிய நிலப்பரப்பு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சிறு பகுதிகளாகப் பிரித்தல் வாழிடம் துண்டாடப்படுதல் எனப்படும்.
2. காட்டு நிலங்களை விளை நிலங்களாக மாற்றுதல் பழத்தோட்டங்கள், மலைத் தோட்டங்கள், நகர்ப்புற குடியிருப்புகள் அமைத்தல், தொழிற்பேட்டைகள், விளைபொருட்களை எடுத்துச்செல்ல வழித்தடங்கள் அமைத்தல் ஆகிய நிகழ்வுகளால் வாழிடம் துண்டாடப்படுகிறது.
3. இதன் விளைவாக உணவுச்சங்கிலி, உணவு வலை அழிக்கப்படுதல், அழிக்கப்பட்ட பகுதியில் உள்ள உயிரினங்கள் அழிதல், துண்டாடப்பட்ட வாழிடத்தில் உள்ள பல்வகைத் தன்மை குறைதல் ஆகியவை ஏற்படுகின்றன.
4. அதிக நிலப்பரப்பை தேவையாகக் கொண்ட பாலூட்டிகள், பறவை போன்ற பாதிக்கப்படுகின்றன.
5. யானை வழித்தடங்கள், வலசை போகும் பறவைகள் பாதிக்கப்படுகின்றன.
6. சிட்டுக் குருவிகள் குறைய இதுவும் ஒரு காரணமாகும்.
6.
| வ.எண் | சார்பின் வகை | சிற்றினம் 1 |
சிற்றினம் 2 |
சார்பின் தன்மை |
எடுத்துக்காட்டு |
| 1. | கேடு செய்யும் வாழ்க்கை | - | 0 | சக்தி வாய்ந்த பெரிய உயிரினங்கள், சிறிய உயிரினங்கள் வளர்ச்சியைத் தடுத்தல் | யானையின் கால்களில் அழிக்கப்படும் சிறிய விலங்குகள் |
| 2. | பகிர்ந்து வாழ்தல் | + | + | இரண்டு சிற்றினங்களுக்கும் பயனுள்ள தொடர்பு | முதலைக்கும் பறவைகளுக்கும் உள்ள தொடர்பு |
| 3. | உதவி பெறும் வாழ்க்கை | + | 0 | உதவிபெறும் உயிரி பலனடைகிறது . விருந்தோம்பி பாதிக்கப்படுவது இல்லை. | உறிஞ்சு மீன் மற்றும் சுறா மீன். |
| 4. | போட்டி | - | - | ஒன்றை மற்றொன்று தடை செய்தல் | பறவைகள் உணவுக்காக அணில்களுடன் போட்டியிடுதல் |
| 5. | ஒட்டுண்ணி வாழ்க்கை | + | - | சிறிய உயிரினக்கூட்டம்-1 சிறிய விருந்தோம்பியைப் பாதித்து பலனடைகிறது.ஒட்டுண்ணி விருந்தோம்பியை விடச் சிறியது. | மனிதனின் உணவு மண்டலத்தில் உள்ள அஸ்காரிஸ் மற்றும் நாடாப்புழு |
| 6. | கொன்று தின்னுதல் | + | - | பெரிய கொன்று தின்னும் உயிரி இரையைக் கொள்கிறது. கொன்று திண்ணும் உயிரி இரையை விடப் பெரியது. | சிங்கம் மானை வேட்டையாடுதல். |
7.
1. மீன்களின் இடுப்புத் துடுப்பு மற்றும் முதுகுத் துடுப்புகள் சமநிலைப்படுத்தவும், வால் துடுப்பு சுக்கானாகவும் செயல்படுகின்றன.
2. மீன்களின் உடலில் உள்ள தசைகள் தொகுப்புகளாக இருப்பதால் அவை இடப்பெயர்ச்சிக்குப் பயன்படுகின்றன.
3. படகு போன்ற உடல் அமைப்பு நீரில் வேகமாக நீந்த உதவுகிறது,
4. நீரில் கரைந்துள்ள ஆக்சிஜனைச் சுவாசிக்க மீன்களின் செவுள்கள் உதவுகின்றன.
5. காற்று நிரம்பிய காற்றுப் பைகள் மிதவைத் தன்மைக்கு உதவுகின்றன.
6. பக்கக்கோட்டு உணர்வுறுப்பு, அழுத்த உணர்வேற்பியாகச் செயல்படுகிறது. இவ்வமைப்பு நீரில் உள்ள பொருட்களை, எதிரொலியைப் பயன்படுத்திக் கண்டறியப் பயன்படும்.
7. கோழைச் சுரப்பிகளை அதிகமாகக் கொண்ட தோல், செதில்களால் மூடப்பட்டுள்ளது.
8. கழிவுநீக்க உறுப்புகள் மூலம் இவை நீர் மற்றும் அயனிகள் சமநிலையைப் பேணுகின்றன.
8.
| வகைகள் | PHB | PHA | PLA | |
| 1 | விரிவாக்கம் | பாலிஹைட்ராக்ஸி பியூட்டரேட் | பாலிஹைட்ராக்சி ஆல்கனோயேட்கள் | பாலிலாக்டிக் அமிலம் |
| 2 | இயல்பு | சிதைவுறும் உயிரி பாலிமர்கள் | சிதைவுறும் உயிரி பாலிமர்கள் -உயிரிய பெரும் மூலக்கூறு | உயிரிய சிதைவடையும் அலிபாடிக் பாலியெஸ்டர் பாலிமர் |
| 3 | ஆதாரம் | சில வகை நுண்ணுயிரிகள் | கிராம் பாசிட்டிவ்: 1. பேசில்லஸ் மெகாஸ்டிரியம் 2. பேசில்லஸ் சப்டைலிஸ் 3. கார்னிபாக்டீரியம் 4. குளுடேனிக்கம் கிராம் நெகட்டிவ் 1. சூடோமோனாஸ் சிற்றினங்கள் 2. ஆல்கலிஜீன்ஸ் யூட்ரோபஸ் |
மீள் புதுப்பிக்கத்தக்க மூலப்பொருட்களான மக்காச்சோள தரசம், மரவள்ளிக்கிழங்கு, வேர்கள், சீவல்கள் தரசம் (அ) கரும்பு போன்றவற்றிலிருந்து பெறப்படுகிறது. |
| 4 | பயன்கள் | PHB & PHA பயன்பாடுகள் மருத்துவ பயன்: 1. சரியான ஏற்பிடத்தில் மருந்து சேர்க்கப்படுதல் 2. சாரக்கட்டு அமைப்பு 3. இதய வால்வுகள் அமைக்க 4. உயிரிய பெரும் மூலக்கூறு மற்றும் வெப்ப 5. பிளாஸ்டிக்குகள் |
உயிரிய சிதைவடையும் மற்றும் உயிரிய செயல்பாடுடைய வெப்ப பிளாஸ்டிக் | |
9.
| மரபணு மாற்றமடைந்த தாவரங்கள் | அவற்றின் பயன்கள் | |
| 1 | Bt-பருத்தி | காய்புழுக்களின் தாக்குதல் மற்றும் காய் ஈக்களின் தாக்குதலையும் கட்டுப்படுத்துகிறது. பூச்சிக்கொல்லியின் பயன்பாட்டையும் பயிர் வளர்ப்பு செலவும் குறைகிறது. |
| 2 | Bt-கத்திரி | லெபிடோப்டெரா வகை பூச்சிகளுக்கு தண்டு துளைப்பானுக்கு எதிராக உருவாக்கப்பட்டுள்ளது. |
| 3 | பொன்னிற அரிசி | உயிரி ஊட்டத்தரம் ஏற்றப்பட்டது. (Bio -fortification) பீட்டா கரோட்டீன் அரிசியில் உண்ணும் பகுதியில் நுழைக்கப்படுவதால் வைட்டமின் A குறைபாட்டை நீக்குகிறது. |
| 4 | தாரா கடுகு கலப்பினம் (DMH II) | பார், பர்னேஸ், ஃபார்ஸ்டார் எனும் மரபணுக்கள் சேர்த்து உருவாக்கப்பட்டது. ஃபாஸ்டா-களைக்கொல்லிக்கு எதிர்ப்பு தன்மை உடையது. |
| 5 | வைரஸ் எதிர்ப்பு தாவரங்கள் | வைரஸ் எதிரான மரபணுக்கள் ஓம்புயிரியில் செலுத்தப்படுகின்றன. வைரஸ் எதிர்ப்புத் தன்மை வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்படாமல் காக்கிறது. |
10.
அ) முன்கூட்டியே நோய் கண்டறிதலின் முக்கியத்துவம்:
தொற்று நோய்களாக இருந்தாலும், பரம்பரையாக வரும் மரபியல் நோய்களாக இருந்தாலும், முன்கூட்டியே கண்டறிதல் சரியான சிகிச்சைக்கு முக்கியமானதாகும்.
ஆ) மூலக்கூறு அளவில் நோய் கண்டறிதலின் முக்கியத்துவம்:
(i) நோய்களைக் கண்டறிய இலக்கு தன்மையுடைய, துல்லியமான எளிய கண்டறிதல் தொழில்நுட்பங்களை நாடி அறிவியலாளர்கள் தொடர் ஆய்வுகளைச் செய்து வருகிறார்கள்.
(ii) DNA மறுசேர்க்கைத் தொழில்நுட்பம், பாலிமரேஸ் சங்கிலி வினைகள், நொதி சார்ந்த நோய்த்தடைப்பொருள் உறிஞ்சுகை மதிப்பீடு போன்ற நம்பகத்தன்மை உள்ள தொழில்நுட்பங்கள் நோய்களைத் தொடக்க நிலையிலேயே கண்டறிய உதவுகின்றன.
(iii) நோயாளியின் உடல் அறிகுறிகள் தோன்றும் போது தான் அவரது உடலுக்குள் வைரஸ், பாக்டீரியா போன்ற நோயூக்கிகள் இருப்பதை அறிய முடிகிறது.
(iv) ஆனால், அறிகுறிகள் தோன்றுவதற்குள் அவை பல்கிப்பெருகி அதிக எண்ணிக்கையுடன் காணப்படுகின்றன.
(v) பாக்டீரியா, வைரஸ் போன்றவை மிகக்குறைந்த எண்ணிக்கையில் இருக்கும்போது, நோயின் அறிகுறிகளை வெளிப்படுத்துவதற்கு முன்பே அவற்றின் நியூக்ளிக் அமில பெருக்க வினையின் மூலம் அந்நோய்க் கிருமிகள் இருப்பதைக் கண்டறிய இயலும்.
11.
போயேசி குடும்பத்தை சேர்ந்த சாக்கரம் அஃபிசினாரம்
தோற்றம், விளையுமிடம்
நியூ கினியா காட்டு ரகமான, சாக்கரம் ஆஃபிசினாரம். இந்தியாவின் சாக்கரம் ஸ்பான்டேனியத்துடன், பிற்கலப்பு செய்து உருவானது. கன்னியாகுமரி, நீலகிரி தவிர எல்லா தமிழ்நாட்டு இடங்களிலும் விளைகிறது.
பயன்கள் :
1. வெள்ளைச் சர்க்கரை உற்பத்தி மூலப்பொருள்
2. சுத்திகரிக்கப்பட்டு சர்க்கரை, மதுபானம், வெல்லம் உற்பத்தி செய்யும் ஆலைகளில் பயன்படும்.
3. கரும்புச் சாறு புத்துணர்ச்சி தரும் பானம்.
4. வெல்லக் கழிவு பாகு (Molasses) எத்தில் ஆல்கஹால் உற்பத்திக்கு மூலப்பொருள்.
12.
1. இரண்டாம் நிலை சுத்திகரிப்பில் நுண்ணுயிரிகள் மூலம் கரிம பொருட்கள் உட்கொள்ளப்பட்டு அழிக்கப்படுகின்றன.
2. முதல் நிலையில் உருவான கலங்கல் நீர் பெரிய காற்றோட்டமுள்ள தொட்டிகளுள் செலுத்தப்படுகிறது.
3. அங்கு அவை இயந்திரங்களின் உதவியுடன் தொடர்ச்சியாக கலக்கப்படுவதால் காற்று உட்செலுத்தப்படுகிறது.
4. இதனால் காற்று சுவாச நுண்ணுயிரிகள் தீவிரமாக வளர்ந்து திரளாக (Floc) உருவாகின்றன.
5. திரள் (Floc) என்பது பாக்டீரியத் தொகுப்பும் பூஞ்சை இழைகளும் இணைந்து வலைப்பின்னல் போன்ற அமைப்பாக காணப்படும் அமைப்பு ஆகும்.
6. இவற்றின் வளர்ச்சியின் போது கழிவுநீரில் உள்ள பெருமளவு கரிம பொருட்களை உட்கொண்டு அழிக்கின்றன.
7. இது பெருமளவில் உயிரிய ஆக்சிஜன் தேவையை (BOD) குறைக்கின்றது.
8. உயிரிய ஆக்சிஜன் தேவை குறையும் வரை கழிவு சுத்திகரிப்பு நடைபெறுகின்றது.
9. உயிரிய ஆக்சிஜன் தேவை (BOD) எனப்படுவது "ஒரு லிட்டர் நீரிலுள்ள அனைத்து கரிம பொருட்களையும் ஆக்சிஜனேற்றம் செய்வதற்கு பாக்டீரியாவால் பயன்படுத்தப்படும் ஆக்சிஜன் அளவு" ஆகும்.
10. உயிரிய ஆக்சிஜன் தேவை குறைந்தவுடன் அந்த நீர் வீழ்ப்படிவதால் தொட்டிக்குள் அனுமதிக்கப்படுகிறது.
11. இதனால் பாக்டீரியா திரள் கீழே படிகிறது. இது செறிவூட்டப்பட்ட கசடு எனப்படும்.
12. இதன் ஒரு பகுதி காற்றோட்டமுள்ள தொட்டிக்குள் மூல நுண்ணுயிரிகளாகப் பயன்படுத்த செலுத்தப்படுகிறது.
13. மீதமுள்ள செறிவூட்டப்பட்ட கசடுகள் காற்றில்லா சுவாச கசடு சிதைப்பான் என்னும் பெரிய தொட்டியினுள் செலுத்தப்படுகிறது.
14. அதிலுள்ள காற்றற்ற சுவாச பாக்டீரியாக்கள் கசடிலுள்ள பாக்டீரியா மற்றும் பூஞ்சையை செரிக்கின்றன.
15. செரிமானத்தின் போது பாக்டீரியாக்கள் மீத்தேன், ஹைட்ரஜன் சல்பைடு மற்றும் கார்பன்-டை-ஆக்ஸைடு வாயுக் கலவையை உற்பத்தி செய்கின்றன.
16. இந்த உயிரிய வாயு ஆற்றல் மூலாதாரமாக பயன்படுகிறது.
17. இவ்வாறு முக்கிய பெருமளவு சுத்திகரிப்பு நிகழ்ச்சிகள் இந்நிகழ்வின் போது நடைபெறுவதால் இது மிகவும் முக்கியமான நிலை ஆகும்.
13.
| வ.எண் | வகைப்பாட்டின் அடிப்படை | சடுதிமாற்றத்தின் முக்கிய வகைகள் | முக்கிய பண்புகள் |
| 1 | தோற்றம் | தன்னிச்சையான | தெரியாத சடுதிமாற்றிகளால் நிகழ்வது |
| தூண்டப்பட்ட | தெரிந்த சடுதிமாற்றிகளால் நிகழ்வது | ||
| 2 | செல்வகை | உடல் வழி | இனப்பெருக்கமில்லாத செல்களில் நிகழ்வது |
| இன வழி | இனப்பெருக்க செல்களில் நிகழ்வது | ||
| 3 | பணிகளின் மீது பாதிப்பு | செயல் இழப்பு (வெளியேற்றுதல் (Knockout), இன்மை (null) | இனப்பெருக்க செயல்பாட்டினைக் நீக்குவது |
| குறை அமைப்பு நிலை (hypomorphic) (லீக்கி) | இயல்பான செயல்பாட்டினை நீக்குவது | ||
| மிகை அமைப்பு நிலை (hypomorphic) | இயல்பான செயல்பாட்டினை அதிகரிப்பது | ||
| செயல் ஏற்பு (இடமறியா வெளிப்பாடு) | தவறான நேரத்தில் அல்லது பொருத்தமற்ற செல்களில் வெளிப்படுவது. | ||
| 4 | மூலக்கூறு அளவில் மாற்றம் | நியூக்ளியோடைடு பதிலீடு | DNA ஈரிழையில் உள்ள ஒரு கார இணைக்குப் பதிலாக மற்றொரு கார இணை இருப்பது |
| ஒத்த பதிலீடு (transition) | பியூரினுக்கு பதில் பியூரின் (A⟶G) அல்லது பைரிமிடினுக்கு பதிலாகப் பைரிமிடின் (T⟶C) | ||
| வேறுபட்ட பதிலீடு | பியூரினுக்கு பதில் பைரிமிடின் (A⟶T) அல்லது பைரிமிடினுக்கு பதிலாகப் பியூரின் (C⟶G) | ||
| இடைசெருகல் (insertion) | ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நியூக்ளியோடைடுகள் கூடுதலாக இருப்பது | ||
| நீக்கம் (deletion) | ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நியூக்ளியோடைடுகள் இல்லாமல் இருப்பது | ||
| 5 | மரபுச்செய்தி பெயர்வினை பாதிப்பது | அமைதியான (silent) (ஒத்த)(synonymous) | அமினோ அமில வரிசையில் மாற்றம் இல்லை |
| தவறுதலாகப் பொருள்படும் (missense) (ஒத்தில்லா) (non synonymous) | அமினோ அமில வரிசையில் மாற்றம் இருப்பது | ||
| பொருளுணர்த்தா (nonsense) (முடிவு) | மரபுச்செய்தி பெயர்வினால் முடிவு நிலை மரபுக்குறியான (UAA, UAG அல்லது UGA) தோற்றுவிப்பது | ||
| கட்ட நகர்வு (frameshift) | சரியான கட்டத்தில் உள்ள மூன்று மரபுக்குறியான (codon) நகர்த்துவது. |
வேறுபட்ட பதிலீடு: (Transversion)
ஒரு பியூரினுக்கு பதிலாக மற்றொரு பைரிமிடின் (அ) ஒரு பைரிமிடினுக்குப் பதிலாக மற்றொரு பியூரின்
ஒத்த (அ) அமைதியான சடுதி மாற்றம்:
ஒரு அமினோ அமிலத்திற்கான ஒரு மரபுக்குறியனை (codon) அதே அமினோ அமிலத்திற்கான வேறோரு மரபுக்குறியனாக மாற்றியமைக்கப்படும் சடுதிமாற்றம்
ஒத்திலா (அ) தவறுதாகப் பொருள்படும் சடுதிமாற்றம்:
ஒரு அமினோ அமிலத்திற்கான மரபுக்குறியின் வேறொரு அமினோ அமிலத்திற்கான மரபுக்குறியனாக மாற்றியமைக்கப்படும் சடுதிமாற்றம்
14.
| வ.எண் | குழுக்கள் | எடுத்துக்காட்டு | |
| அ | நைட்ரஜனை நிலைநிறுத்தும் உயிரி உரங்கள் | ||
| 1 | தனி உயிரிகள் | அசோடோபாக்டர், க்ளாஸ்ட்ரிடியம், அனபீனா, நாஸ்டாக் | |
| 2 | கூட்டுயிர் வாழ்க்கை முறை | ரைசோபியம், அனாபீனா அசோலா | |
| 3 | இணை கூட்டுயிர் வாழ்க்கை முறை | அசோஸ்பைரில்லம் | |
| ஆ | பாஸ்பரசை கரைக்கும் உயிரி உரங்கள் | ||
| 1 | பாக்டீரியாக்கள் | பேசில்லஸ் சப்டிலிஸ், சூடோமோனாஸ், ஸ்டெய்ரிட்டா | |
| 2 | பூஞ்சைகள் | பெனிசில்லியம், ஆஸ்பர்ஜில்லஸ் | |
| இ | பாஸ்பரஸை திரட்டும் உயிரி உரங்கள் | ||
| 1 | ஆர்பஸ்குலார் மைக்கோரைசா | குலோமஸ், ஸ்குட்டெல்லோஸ்போரா | |
| 2 | புறவேர் பூஞ்சை | அமானிடா | |
| ஈ | நுண் ஊட்டச்சத்துக்களுக்கான உயிரி உரங்கள் | ||
| 1 | சிலிகேட் மற்றும் துத்தநாக கரைப்பான்கள் | பேசில்லஸ் | |
| உ | தாவர வளர்ச்சியை ஊக்குவிக்கும் ரைசோபாக்டீரியா | ||
| 1 | சூடோமோனாஸ் | சூடோமோனாஸ் ப்ளுரசன்ஸ் | |
15.
(i) Dr.M.S. சுவாமிநாதன் - சடுதி மாற்றப் பயிர் பெருக்கத்தின் முன்னோடி
(ii) Dr.B.P பால் - புகழ்பெற்ற கோதுமை பெருக்கவியலாளர், மேம்பட்ட நோய் தாங்கும் திறனுடைய கோதுமை இரகத்தை உருவாக்கியவர்.
(iii) Dr.K. ராமையா - பல உயர் விளைச்சல் நெல் இரகங்களை உருவாக்கிய புகழ்பெற்ற நெல் பெருக்கவியலாளர்
(iv) N.G.P ராவ் - உலகின் முதல் கலப்பினச் சோளத்தை (CSH I) உருவாக்கிய சிறந்த சோளப்பயிர் பெருக்கவியலாளர்
(v) C.T. படேல் - கலப்பினப் பருத்தியின் தந்தையான இவர் உலகின் முதல் கலப்பினப் பருத்தியை உருவாக்கியவர்.
(vi) சௌத்ரி ராம் தன - பஞ்சாபைக் கோதுமைக் களஞ்சியமாக மாற்றிய C 591 கோதுமை இரகத்தை உருவாக்கிய கோதுமை பெருக்கவியலாளர்
16.
1. இது சிறிய அவரை விதை போன்ற வடிவத்தை உடையது.

2. இவை உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் ஒரு பகுதியாகும்.
3. இவை தான் திசு இடைவெளியில் நுழைகின்ற எதிர்பொருள் தூண்டியை அழிக்கின்ற முதல் அமைப்பாகும்.
4. மேக்ரோஃபேஜ்கள் மற்றும் லிம்போசைட்டுகளால் நிரம்பியுள்ளது.
5. இவற்றில் கார்டெக்ஸ், பாராகார்டெக்ஸ் மற்றும் மெடுல்லா உள்ளது.
6. கார்டெக்ஸ் மற்றும், மெடுல்லாவில் B-செல்கள் உள்ளன.
7. பாராகார்டெக்ஸில் T-செல்கள் உள்ளன.
8. நிணநீர் முடிச்சு வீக்கம் நோய் தொற்றின் அறிகுறியாகும்.
17.
1. மனிதனில் குடல் மற்றும் இரத்தத்தில் அக ஒட்டுண்ணிகளாக இருக்கும்.
அஸ்காரியாஸிஸ்
1. இது அஸ்காரிஸ் லும்பிரிகாய்ட்ஸ் மூலம் ஏற்படுகிறது.
2. இவை கெட்டுப்போன உணவு மற்றும் நீரின் மூலம் பரவுகிறது.
3. இதன் அறிகுறிகள் - வயிற்றுவலி, வாந்தி இரத்தசோகை மற்றும் வயிற்றுப்போக்காகும்.
4. இது குடலழற்சி, கல்லீரல் அழற்சி, மூச்சுக்குழாய் அழற்சி ஏற்படுத்துகிறது.
யானைக்கால் வியாதி :
1. வுச்செரியா பான்கிராஃப்டி மூலம் ஏற்படுகிறது.
2. இது நிணநீர் நாளங்கள் மற்றும் நிணநீர் முடிச்சுகளில் காணப்படுகிறது.
3. இதன் வாழ்க்கைச் சுழற்சி மனிதன் மற்றும் பெண் கியூல்க்ஸ் கொசுவிலும் நடைபெறுகிறது.
4. அப்புழுவால் மைக்ரோபைலேரியே என்றும் இளம் உயிரி உருவாகிறது.
5. அவை நிணநீர் முடிச்சுகளில் முதிர்வடைகிறது.
6. நிணநீர் நாளங்களில் அவை அடைப்பு ஏற்படுத்துவதால் கால்கள், விதைப்பை மற்றும் பால் சுரப்பிகளில் இந்நோய் ஏற்படுகிறது.
18.
1. செயல்படும் பெருவித்து, கருப்பை அல்லது பெண் கேமீட்டகத் தாவரத்தின் முதல் செல்லாகும்.
2. உட்கரு குன்றலின் பகுப்படையும். இதைத் தொடர்ந்து செல்சுவர் தோன்றாது.
3. இரு உட்கருக்களுக்கு இடையே நுண்குமிழ்ப்பை (Vacuole) தோன்றும்.
4. இரு உட்கருவும், இரண்டு முறை பகுப்படைந்து, 4 உட்கருக்களை, ஒவ்வொரு துருவத்திலும் உருவாக்குகிறது.
5. சூல்துளைப் பகுதியில் 4 உட்கருக்களில் 3 முட்டை சாதனமாகிறது. நான்காவது உட்கரு மேல் துருவ உட்கருவாகிறது.
6. சலாசா பகுதி 4 உட்கருக்களில், 3 எதிரடி செல்களாகவும் (Antipodal) ஒன்று கீழ் துருவ உட்கருவாகிறது.
7. இரண்டு துருவ உட்கருக்கள் இணைந்து, இரண்டாம் நிலை உட்கருவாக (Secondary nucleus) மாறும்.
8. இவ்வாறாக 7 செல்கள் கொண்ட, 8 உட்கரு பெற்ற கருப்பை உருவாகும்.
19.
1. இதன் மூலம் செல் நுண் வித்து. இது ஒரு மடியமானது.
2. நுண் வித்தின் உட்கரு பகுப்படைந்து, ஒரு தழைவழி உட்கருவையும், ஒரு உருவாக்க உட்கருவையும் உண்டாக்கும்.
3. இரண்டு செல் நிலையில் மகரந்தத் துகள், மகரந்தப்பையினின்று வெளியேற்றப்படும்.
4. 60 சதவீதம் மூடுவிதைத் தாவரங்களில், மகரந்தத் துகள் 2 செல் நிலையில் வெளியேற்றப்படும். சில தாவரங்களில் உருவாக்க செல் பகுப்படைந்து, 2 ஆண் கேமீட்டுகளைத் தோற்றுவிக்கும். எனவே 3 செல் நிலையில் மகரந்தத் துகள் வெளியேறும்.
5. சூலக முடியில், மகரந்தத்துகள் ஈரப்பசையை உறிஞ்சி உப்புதலடைகிறது.
6. இன்டைன் வளர்தளை வழி மகரந்தக் குழாயாக வளரும்.
20.
தொற்றுத் தாவரங்கள் (Epiphytes):
மற்ற தாவரங்களின் மேல் (ஆதாரத் தாவரங்கள்) தொற்றி வாழ்பவை தொற்றுத் தாவரங்கள் எனப்படுகின்றன. இதில் ஆதாரத் தாவரத்தை உறைவிடத்திற்காக மட்டுமே பயன்படுத்திக் கொள்கின்றன. ஆனால் நீர் அல்லது உணவினைப் பெற்றுக் கொள்வதில்லை. தொற்றுத் தாவரங்கள் பொதுவாக வெப்ப மண்டல மழைக்காடுகளில் அதிகம் காணப்படுகின்றன.
(எ.கா) ஆர்கிட்கள், வன்கொடிகள், தொங்கும் மாஸ்கள், மணி தாவரங்கள்
புற அமைப்பில் தக அமைவுகள்:
(i) வேர்த்தொகுப்புகள் விரிவாக வளர்ச்சி அடைந்துள்ளது. இதில் இருவகை வேர்கள் காணப்படுகின்றன. இவை
அ) பற்றுவேர்கள் மற்றும்
ஆ) உறிஞ்சும் வேர்கள்
(ii) தொற்றுத் தாவரங்களின் பற்றுவேர்கள் (Clinging roots) ஆதாரத் தாவரங்களின் மேற்புற உறுதியாக நிலை நிறுத்த உதவுகின்றன.
(iii) நிலப்புற வேர்கள் (Aerial roots) பசுமையானது. இவை கீழ்நோக்கித் தொங்கிக் கொண்டிருப்பவை. மேலும் வளி மண்டலத்திலிருந்து ஈரப்பதத்தை உறிஞ்சுவதற்காக வெலாமன் (Velamen) என்ற பஞ்சு போன்ற திசுவுடையது.
(iv) சில தொற்றுத் தாவரங்களின் தண்டு சதைப் பற்றுள்ளதாகவும் மற்றும் போலி குமிழ்களையோ அல்லது கிழங்குகளையோ உருவாக்குகின்றன.
(v) இலைகள் பொதுவாகக் குறைந்த எண்ணிக்கையிலும் தடிப்பான தோல் போன்றும் காணப்படுகின்றன.
(vi) கொன்று உண்ணிகளிடமிருந்து தன்னைக் காத்துக்கொள்ளத் தொற்று தாவரக்கூட்டங்களில் மிர்மிகோஃபில்லி பொதுவாகக் காணப்படுகிறது.
21.
வேர்:
(i) பொதுவாக உல்ஃபியா மற்றும் சால்வீனியாவில் வேர்கள் முற்றிலும் காணப்படுவதில்லை அல்லது ஹைட்ரில்லாவில் குறைவுற்ற வளர்ச்சியுடனும், ரானென்குலஸில் நன்கு வளர்ச்சி அடைந்து வேர்களும் காணப்படுகின்றன.
(ii) வேர்மூடிகளுக்கு பதிலாக வேர் பைகள் அமைந்திருக்கிறது. (எ.கா) ஆகாயத்தாமரை
தண்டு:
(i) நீருள் மூழ்கித்தாவரங்களில் நீண்ட, மிருதுவான பஞ்சு போன்ற நீட்சியடைந்த தண்டு காணப்படுகிறது.
(ii) மிதக்கும் தாவரங்களில் தண்டானது தடித்த, குறுகிய, பஞ்சு போன்ற ஓடு தண்டுடனும், வேரூன்றி மிதக்கும் தாவரங்களில் இது கிடைமட்டத் தண்டாகவும் (கிழங்கு) காணப்படுகிறது.
(iii) தரைபடர் ஓடுதண்டு, தரைகீழ் உந்து தண்டு, தரைமேல் ஓடுதண்டு, தண்டு மற்றும் வேர் பதியன்கள், கிழங்குகள், உறங்கு நிலை நுனிகள் ஆகியவற்றின் மூலம் உடல இனப்பெருக்கம் நிகழ்கிறது.
இலைகள்:
(i) வாலிஸ்நேரியாவில் இலைகள் மெல்லியவை, நீண்டவை மற்றும் பட்டையான நாடா வடிவமுடையது. பொட்டோமோஜிடானில் இலைகள் மெல்லியவை, நீண்டவை செரட்டோஃபில்லம் தாவரத்தில் நுண்பிளவுற்ற இலைகள் காணப்படுகின்றன.
(ii) வேரூன்றி வெளிப்பட்ட நீர்வாழ் தாவரங்களில் இருவகையான இலைகள் (நீர்மட்டத்திற்குக் கீழே பிளவுற்ற இலைகளும், நீர் மட்டத்திற்கு மேலே முழுமையான இலைகளும்) காணப்படுகின்றன. எடுத்துக்காட்டு ரெனன்குலஸ், லிம்னோஃபில்லா ஹெட்டிரோபில்லா மற்றும் சாஜிடேரியா.
22.
மூன்று எதிரிடைப் பண்புகளுக்கான மரபணு இணைகளைக் கொண்ட இது தூய கால் வழி தாவரங்களுக்கிடையே செய்யப்படும் கலப்பு
♂️ F2 முப்பண்புக் கலப்பு (மூன்று மரபணுக்களுக்கான மாதிரி செக்கர் போர்டு)
| ♂️ | ABD | ABd | AbD | Abd | aBD | aBd | abD | abd | |
| ABd | AABBDd | AABBDD | AABBdd | AABbdd | AaBBDd | AaBbdd | AaBbDd | AaBbdd | |
| Abd | AAbbDD | AABbDd | AAbbDD | AAbbDd | AaBbDD | AaBbDd | AabbDD | AabbDd | |
| Abd | AAbbdd | AABbdd | AAbbDd | AaBbdd | AaBbDd | AaBbdd | AabbDd | Aabbdd | |
| aBD | AaBBDD | AaBBDd | AaBbDD | AaBbDd | aaBBDD | aaBBDd | aaBbDD | aaBbDd | |
| aBd | aaBBDd | AaBBdd | AaBbDd | AaBbdd | aaBBDd | aaBBdd | aaBbDd | aaBbdd | |
| abD | AaBbDD | AabbDd | AabbDD | AabbDd | aaBbDD | aaBbDd | aabbDD | aabbDd | |
| abd | AaBbDd | AaBbdd | AabbDd | Aabbdd | aaBbDd | aaBbdd | aabbDd | aabbdd | |
| 27 | 9 | 9 | 9 | 3 | 3 | 3 | 1 |
F2 புறத்தோற்ற விகிதம் 27 : 9 : 9 : 9 : 3 : 3 : 3 : 1
23.
1. அடுத்தடுத்த தலைமுறைகளில் டி.என்.ஏ மற்றும் ஆர்.என்.ஏ போன்ற மூலக்கூறுகள் மற்றும் புரதங்களின் வரிசை அமைப்பில் ஏற்படும் மாற்றங்களையே மூலக்கூறு பரிணாமம் குறிக்கிறது.
2. மூலக்கூறுகளின் அமைப்பில் ஏற்படும் மாற்றங்களை விளக்க பரிணாம உயிரியல் மற்றும் இனக்கூட்ட மரபியல் கோட்பாடுகள் பயன்படுகின்றன.
3. உயிரினங்களின் வாழ்வியல் நிகழ்வுகளைக் கட்டுப்படுத்தும் புரதங்கள் மற்றும் பிற மூலக்கூறுகளை சிற்றினங்களுக்கிடையே பாதுகாக்க மூலக்கூறு உயிரியல் உதவுகிறது.
4. இம்மூலக்கூறுகளில் காலப்போக்கில் ஏற்படும் சிறிய மாற்றம்' மூலக்கூறு கடிகாரம்' எனப்படும்.
5. பரிணாம குறித்த ஆய்வுகளில் பயன்படும் மூலக்கூறுகள் சைட்டோகுரோம் (சுவாசவழிப்பாதை) rRNA புரதச் சேர்க்கை ஆகும்.
24.
(i) பரந்துபட்ட பல கூறுகளை உள்ளடக்கியதே உயிரி பாதுகாப்பு
மனித உயிரி தொழில்நுட்ப அறிவின் பயன்பாட்டை தொழில்நுட்ப கருவிகளை ஆய்வகச் சூழலில் உயிரி பாதுகாப்பு பற்றிய தொடர் மீளாய்வு செய்தல், பின்பற்ற வேண்டிய கடுமையான வழிகாட்டுதல்களையும் உள்ளடக்கியது.
(ii) உயிரி பாதுகாப்பு கவனத்தில் கொள்வது
(i) உயிரி ஒருங்கிணைந்த தன்மையின் பெரிய அளவு இழப்பே - தடுப்பு
(ii) சூழ்நிலை பாதுகாப்பு
(iii) மனித உடல்நலம் ஆகியவை.
(iii) உயிர் தீங்கு விளைவிக்கும் பொருட்கள் (வேதிப்பொருட்கள், நோய் காரணிகள்) கையாளும் ஆய்வகங்களில் மேற்கொள்வது
(i) தொடர்ந்து செயல்படும் தீங்கு மேலாண்மை மதிப்பீடு
(ii) உயிரி பாதுகாப்பை உறுதி செய்யும் நடைமுறைகள் ஆகியவை
(iii) மனித தவறை முடிந்தவரை தவிர்ப்பது
(iv) தொழில்நுட்ப தவறுகள் ஏற்படாமல் தொடர்ந்து பராமரிப்பது
(v) தீங்கு நிகழும் போது விரைந்து செயல்படும் வழிமுறைகள்
(iv) உயிரி பாதுகாப்பு நெறிமுறைகள் செயல்படுத்தாமலிருப்பதால் ஏற்படும் பாதிப்பு அதிகளவு என்பது கருத்தில் கொள்ளப்படவேண்டியது.
25.
1. ஒவ்வொரு நாளும் டன் கணக்கிலான திடக்கழிவுகள் நிலப்பரப்புகளில் கொட்டப்படுகின்றன.
2. இந்தக் கழிவுகள் வீடுகள் அலுவலகங்கள் தொழிற்சாலைகள் மூலம் உருவாக்கப்படுகின்றன.
மேலாண்மை:
1. கழிவுப் பொருட்களைப் பெறுவது முதல் இறுதியாக வெளியேற்றுவது வரை உள்ளடக்கியது.
2. சுத்திகரித்தல், வெளியேற்றுதல் மற்றும் கழிவு மேலாண்மை செயல்முறைகளை கண்காணித்தல் மற்றும் ஒழுங்குபடுத்தல் இதில் அடங்கும்.
26.
1. தூய்மையான நீருக்கான உரிமை இந்திய அரசியலமைப்பின் கீழுள்ள அடிப்படை உரிமையாகும்.
2. நீர் மாசுபாட்டினைத் தடுத்தல் மற்றும் கட்டுப்படுத்துதல் சட்டம் 1974 பிரிவுகள் 17 முதல் 40 மாசுபடுத்துவதை தடை செய்கிறது.
3. மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு கட்டுப்பாட்டு வாரியத்தின் மீது அதிகாரம் உள்ளது.
4. சுற்றுச்சூழல், காடுகள் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் சுற்றுச்சூழல் மற்றும் வனவியல் கொள்கைகள் மற்றும் திட்டங்கள் மேற்கொள்கிறது.
27.
1. ஆண்களில் பால் சுரப்பி, செயலற்ற எச்ச உறுப்பாக உள்ளது.
2. மார்புப் பகுதியில் ஒரு இணை உள்ளது.
3. சுரப்பித் திசு, கொழுப்புத் திசு உள்ளது.
4. பால் காம்பைச் சுற்றி வட்ட காம்பில் தோல் வெடிப்பைத் தடுக்கும்.
5. உட்புறம் இணைப்புத் திசுக்களால் பிரிக்கப்பட்ட 2-25 கதுப்புக்கள் உள்ளன. இவற்றில் நுண் கதுப்புக்கள் உள்ளன.
6. நுண் கதுப்புக்களில் மீச்சிறு கதுப்புக்கள் உள்ளன. இவை பால் சுரக்கின்றன.
7. மீச்சிறு கதுப்புக்களில் மீச்சிறு கதுப்புகள் உள்ளன.
8. பால் நாளங்கள் ஒன்று கூடி பால் விரிமுனைகளை (mammary ampulla) உருவாக்கும்.
9. இவை பால் காம்பின், பால் உந்து நாளத்துடன் (லாக்டிஃபெரஸ் duct)
10. பால் உந்து நாளம், பால் குழியாக விரிகிறது. (lactiferous sinus)
11. பால் உந்து நாளம், பால் காம்பின் நுனித்துளைகள் வழி வெளித் திறக்கிறது.
28.
அ) அம்னியான்:
1. இரட்டை அடுக்கலான ஒளி ஊடுருவும் சவ்வு.
2. ஆம்னியாடிக் திரவத்தால் நிரப்பப்பட்டுள்ளது.
3. வளர் கருவிற்கு மிதவைச் சூழலைத் தருகிறது. காயங்களினின்று பாதுகாக்கிறது.
4. கருவின் வெப்பநிலையைச் சீராகப் பராமரிக்கிறது.
ஆ)கோரியான்
1. இது வெளிப்படலம்
2. தாய்சேய் இணைப்புத் திசுவை உருவாக்கிறது.
3. மற்ற படலங்களையும் கருவையும் பாதுகாக்கும்.
இ) கருவுணவுப்பை
1. வளரும் கருவின் உணவுப் பாதையை உருவாக்கும்.
2. இரத்த செல், இரத்தக்குழல் ஆகியவற்றின் மூல ஆதாரமாக உள்ளது.
ஈ) ஆலண்டாய்ஸ் :
1. கருவை தாய்சேய் இணைப்புத் திசுவுடன் இணைக்கிறது.
2. சிறுநீர்ப்பையின் ஒரு பகுதியாக மாறுகிறது.
கரு சூழ்படலங்களின் பணிகள்
1. கரு உலர்ந்து போகாமல் பாதுகாத்தல்
2. இயக்க அதிர்வு தாங்குதல்
3. ஊட்டச்சத்து
4. வாயுப் பரிமாற்றம்
29.
1. இது ஒரு வளர்சிதை மாற்ற பிறவி குறைபாட்டு நோயாகும்.
2. உடற்குரோமோசோமில் உள்ள ஒடுங்கிய ஜீனால் ஏற்படுகிறது.
3. தோலின் நிறத்திற்கு மெலானின் நிறமிகள் காரணமாக உள்ளன.
4. மெலானின் நிறமி இல்லாத நிலை நிறமி குறைபாட்டு நோய் எனப்படும்.
5. ஒரு நபர் ஒடுங்கிய அல்லீல்களை பெற்றிருக்கும் போது டைராசினேஸ் நொதியை உற்பத்தி செய்ய முடியாது.
6. மெலானோசைட் செல்களில் டைஹைட்ராக்ஸி பினைல் அலனைனை மெலானின் நிறமியாக மாற்ற டைரோசினேஸ் நொதி தேவைப்படுகிறது.
7. இந்நோயால் பாதிக்கப்பட்ட நபர்களின் தோல் மயிர் ஐரிஸ் பகுதிகளில் மெலானின் நிறமி இருப்பதில்லை.
30.
1. மனிதனுடைய ஒவ்வொரு இரட்டை மய உடல்செல்களும் 46 குரோமோசோம்களை பெற்றுள்ளன.
2. குரோமோசோமின் அமைப்பு அல்லது எண்ணிக்கையில் ஏற்படுகின்ற மாற்றங்கள் குரோமோசோம் குறைபாட்டு நோய்களை உண்டாக்குகின்றன.
3. செல் பிளவில் ஏற்படும் பிழைகளால் குரோமோசோமில் முரண்பாடுகள் உண்டாகின்றன.
4. செல்பிரிவின்போது குரோமோசோம்கள் குரோமேட்டுகள் சரிவர புரியாமல் அமையும்.
5. இதனால் குரோமோசோம்களின் எண்ணிக்கை அதிகரித்தோ அல்லது குறைந்தோ காணப்படுவது ஒழுங்கற்ற பன்மயம் எனப்படும்.
6. குரோமோசோம்கள் சரிவர பிரிந்து ஒதுங்காததால் இந்நிலை உண்டாகிறது.
7. ஒரு குறிப்பிட்ட குறைபாட்டு நோயின் பண்புகளாக வெளிப்படுகிற பல்வேறு அடையாளங்களும் அறிகுறிகளும் சின்ட்ரோம் எனப்படும்.
8. குரோமோசோம் குறைபாட்டு நோய்க்கு டவுன்சின்டரோம்,டர்னர்சின்டரோம் க்ளைன்பெல்டர்சின்டரோம் பட்டாவ் சின்டரோம் ஆகும்.
31.
பாலூட்டும் கால மாதவிடாயின்மை (Lactational Amenorrhoea)
1. தாய் பாலூட்டும் போது இயல்பான அண்ட செல்லாக்கச் சுழற்சி தொடங்க 6 மாதங்கள் தாமதமாகும்.
2. குழந்தை பாலை உறிஞ்சுவதால், பிட்யூட்டரி சுரப்பி தூண்டப்பட்டு, புரோலாக்டின் ஹார்மோன் உற்பத்தி அதிகரிக்கும். இதனால் பால் உற்பத்தி உயரும்.
3. தாய் இரத்தத்தில் புரோலாக்டின் ஹார்மோன் உற்பத்தி அதிகரிக்கும்.
4. இதனால் ஹைபோதலாமஸ் சுரக்கும் GnRH கொனடோடிராபின் விடுவிக்கும் காரணி உற்பத்தி தடுக்கப்படும்.
5. பிட்யூட்டரி சுரக்கும், கொனாடோட்ரோபின் ஹார்மோன் உற்பத்தி தடுக்கப்படும். இதனால் மாதவிடாய்ச் சுழற்சி தடுக்கப்படும்.
32.
1. சாதகமற்ற சூழலில் இனப்பெருக்கம் செய்வதற்காகத் சில உயிரிகளில் பல பிளவுமுறை நடைபெறுகிறது.
2. உட்கரு தொடர்ந்து பிரிவடைந்து பல உட்கருக்களாக உருவாகின்றன.
3. பல பிளவு முறையில் சமமான செல் பிரிதலினால் ஒரு உயிரியிலிருந்து நான்கு அல்லது பல சேய் உயிரிகள் தோன்றுகின்றன.
4. மேலும் பிளவுறுதல் நிகழ்வு முழுமையடையும் வரை சேய் உயிரிகள் பிரிவதில்லை.
5. இதற்கு பன்மடிப் பகுப்பு என்று பெயர்.
6. பிளாஸ்மோடியத்தில் சைஷாண்ட் மற்றும் உசைட் நிலையில் பலபிளவு முறை நடைபெறுகிறது.
7. சைஷான்ட் நிலையில் மீரோசைட்டுகள் உருவாகின்றன.
8. உசைட் நிலையில் ஸ்போரோசோயிட்டுகள் உருவாகின்றன.
9. அமீபாக்கள் சாதகமற்ற சூழலில் உறையாக்கம் மூலமும் இனப்பெருக்கம் செய்கிறது.

33.

34.
வரையறை:
சைட்டோபிளாசத்தில் சிதறிக் காணப்படும் அமினோ அமிலங்களை எடுத்து வரும் கடத்தியாகவும் தூது குறியீடுகளை படிப்பதுமாக இரு பணிகளைச் செய்வதால் இது இணைப்பு மூலக்கூறு என்ற சொல்லை ஃபிரான்சிஸ் கிரிக் உருவாக்கினார்.
கடத்தி RNA அமைப்பு
ராபர்ட் ஹோலே கிராம்பு இலை மாதிரி
1. இரண்டாம் நிலை கட்டமைப்பு இவ்வாறு காணப்படுகிறது.
2. இறுக்கமான மூலக்கூறு தலைகீழ் L-வடிவத்தை ஒத்துள்ளது.
கிராம்பு இலை மாதிரி அமைப்பு

3. அமினோ அமில ஏற்பு முனையில் ➝ அமினோ அமிலம் உள்ளது.
4. எதிர்முனையில் ➝ எதிர் குறியீட்டிற்கான மூன்று கரங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இதில் தூது RNA இன் காரங்களின் நிரப்பு கூறுகளாயுள்ளன. சரியான அமினோ அமிலம் இணைக்கப்பட்டிருப்பதை உறுதி செய்கிறது (அமினோ அசைலேஷன்)
5. T-வளையம் - ரிபோசோம் இணையும் பகுதி
6. D-வளையம் - அமினோ அசைல் சிந்தடேஸ் இணையும் வளையம்.
7. மாதிரி வளையம் - இதில் நியுக்ளியோடைடுகளின் கூறுகளும் நீளமும் வேறுபட்டுள்ளது.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set B
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Standard Physics Wave Optics Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Physics Wave Optics Creative Questions Study Material - QB365 Set C
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards