12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th English Poem - 6 - Incident of the French Camp Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 6 - On the Rule of the Road Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 5 - The Chair Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Supplementary - 4 - The Midnight Visitor Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Poem - 4 - Ulysses Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 4 - The Summit Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 02/10/2020
12 ஆம் வகுப்பு வேதியியல் முக்கிய 5 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Chemistry Tamil Medium Important 5 Mark Book Back Questions (New Syllabus 2020)
12ஆம் வகுப்பு Chemistry / வேதியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Chemistry / வேதியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Chemistry Test

1.
பின்வருவனவற்றிற்கு, கரைதிறன் பெருக்கம் மற்றும் மோலார் கரைதிறன் ஆகியவற்றிற்கிடையே உள்ள தொடர்பை நிறுவுக.
a) BaSO4 b) Ag2(CrO4)
2.
0.44 கிராம் மோனோஹைட்ரிக் ஆல்கஹாலை, ஈதரில் உள்ள மெத்தில் மெக்னீசியம் அயோடைடுடன் சேர்க்கும் போது STP ல் 112 cm3 மீத்தேனை வெளியேற்றுகிறது. அதே ஆல்கஹாலானது PCC யுடன் வினைபடுத்தும் போது கார்பனைல் சேர்மத்தைத் தருகிறது. அந்த கார்பனைல் சேர்மம் வெள்ளி ஆடி சோதனைக்கு உட்படுகிறது. சேர்மத்தினைக் கண்டறிக.
3.
வினைவேக மாற்றம் பற்றிய இடைநிலைச் சேர்மம் உருவாதல் கொள்கையை ஒரு எடுத்துக்காட்டுடன் விளக்குக.
4.
எவ்வாறு தயாரிப்பாய்?
i. அசிட்டிக் அமிலத்திலிருந்து அசிட்டிக் அமில நீரிலி
ii. மெத்தில் அசிட்டேட்டிலிருந்து எத்தில் அசிட்டேட்
iii. மெத்தில்சயனைடிலிருந்து அசிட்டமைடு
iv. எத்தனாலிருந்து லாக்டிக் அமிலம்
v. அசிட்டைல் குளோரைடிலிருந்து அசிட்டோபீனோன்
vi. சோடியம் அசிட்டேட்டிலிருந்து ஈத்தேன்
vii. டொலுயீனிலிருந்து பென்சாயிக் அமிலம்
viii. பென்சால்டிஹைடிலிருந்து மாலகைட் பச்சை
ix. பென்சால்டிஹைடிலிருந்து சின்னமிக் அமிலம்
x. ஈத்தைனிலிருந்து அசிட்டால்டிஹைடு
5.
6.
நான்காவது வரிசை கார உலோகத்தைக் கொண்டுள்ள (A) என்ற இரட்டை உப்பை 500K வெப்பநிலைக்கு வெப்பப்படுத்த (B) கிடைக்கிறது. (B) ன் நீர்க்கரைசல் Bacl2 உடன் வெண்மை நிற வீழ்ப்படிவைத் தருகிறது. மேலும் அலிசரினுடன் சிவப்பு நிற சேர்மத்தைத் தருகிறது. A மற்றும் B ஐக் கண்டறிக.
7.
ஒடுக்கும் காரணியைத் தெரிவு செய்தல் என்பது வெப்ப இயக்கவியல் காரணியைப் பொறுத்தது தகுந்த உதாரணத்துடன் இக்கூற்றை விளக்குக.
8.
பின்வரும் சேர்மங்களில் காணப்படும் இனக்கலப்பாதலைக் கண்டறிக.
அ) BrF5
ஆ) BrF3
9.
பின்வரும் வினை வரிசையில் A,B, X மற்றும் Y ஆகிய விளைபொருட்களைக் கண்டறிக.

10.
தன்னிழப்பு பாதுகாப்பு பற்றி குறிப்பு வரைக .
11.
இரப்பரின் வல்கையாக்கல் பற்றி குறிப்பு வரைக .
12.
α-சுருள் உருவாதல் பற்றி குறிப்பு வரைக
13.
பின்வரும் வினையின் A,B,C மற்றும் D ஐக் கண்டறிக.

14.
Hg2Cl2. இன் கரைதிறன் பெருக்கத்திற்கான சமன்பாட்டை எழுதுக.
15.
ஒரு முதல் வகை வினை 50 நிமிடங்களில் 40% நிறைவடைகிறது. வினைவேக மாறிலியின் மதிப்பினைக் கண்டறிக அவ்வினை 80% நிறைவடைய தேவையான காலம் எவ்வளவு?
16.
KF ஆனது சோடியம் குளோரைடைப் போன்று fcc அமைப்பில் படிகமாகிறது. KF ன் அடர்த்தி 2.48gcm-3 எனில், KF-ல் உள்ள K+ மற்றும் F- அயனிகளுக்கிடையேயானத் தொலைவினைக் கண்டறிக.,
17.
[Ni(H2O)6]2+ ன் நீர்க்கரைசல் பச்சை நிறமுடையது ஆனால் [Ni(CN)4]2-ன் கரைசல் நிறமற்றது விளக்குக.
18.
தாமிரத்தின் E0M2+/M மதிப்பு நேர்க்குறி மதிப்புடையது. இதற்கான தகுந்த சாத்தியமான காரணத்தை கூறுக.
1.
\(BaSO_{4}(S)\overset{H_{2}O}{\rightleftharpoons }Ba^{2+}(aq)+SO^{2-}_{4}(aq)\)
\(K_{sp}=[Ba^{2+}][SO^{2-}_{4}]\)
= (s) (s)
Ksp = s2
\(Ag_{2}CrO_{4}(s)\overset{H_{2}O}{\rightleftarrows }Ag^{+}(aq)+CrO^{2-}_{4}(aq)\)
\(K_{sp}=[Ag^{+}]^{2}[CrO^{2-}_{4}]\)
= (2s)2 (s)
Ksp = 4S3
2.
நிறை = 0.44 g

மோலார் நிறை = \(\frac{0.44}{112} \times 22400=88 \mathrm{~g}\)
CnH2n+1 + OH = 88
12n + (1)(2n+(1)+16+1 = 88
14n + 18 = 88
14n = 88 - 18
n = 70/14 = 5

3.
வினைவேக மாற்றிகள், குறைந்த கிளர்வு ஆற்றலைக் கொண்ட புதிய பாதையை உருவாக்குகின்றன.
ஒரு படித்தான வினைவேக மாற்ற வினைகளில் ஒரு வினைவேகமாற்றியானது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வினைபடு பொருட்களுடன் இணைந்து ஒரு இடைநிலை சேர்மத்தை உருவாக்குகிறது.
இந்த இடைநிலைச் சேர்மமானது, மற்றொரு வினைபடுபொருளுடன் வினைப்பட்டோ அல்லது தாமாக சிதைந்தோ வினைபொருட்களை உருவாக்குகின்றன.
மேலும் வினைவேகமாற்றியானது மீள் உருவாக்கம் பெறுகிறது.
\(\begin{aligned} \mathrm{A}+\mathrm{B} \xrightarrow{\mathrm{C}} \mathrm{AB} \end{aligned}\) ....(1)
A + C \(\rightarrow\) AC (இடைநிலை சேர்மம்) ....(2)
C என்பது வினைவேக மாற்றி
AC + B \(\rightarrow\) AB + C ....(3)
(2) மற்றும் (3) ஆம் வினைகளுக்கான கிளர்வுறு ஆற்றல்கள், வினை (1) ஐவிட குறைவாக உள்ளன. எனவே, இடைநிலைச் சேர்மம் உருவாதல் மற்றும் சிதைதல் மூலம் வினையின் வேகம் அதிகரிக்கப்படுகிறது.
எடுத்துக்காட்டு 1:
ஃபிரீடல் கிராஃப்ட் வினையின் வினைவழிமுறை.
நீரற்ற AlCl3
\(\mathrm{C}_6 \mathrm{H}_6+\mathrm{CH}_3 \mathrm{Cl} \xrightarrow{} \mathrm{C}_6 \mathrm{H}_5 \mathrm{CH}_3+\mathrm{HCl}\)
வினைவேக மாற்றியின் செயல்பாடு
\(\mathrm{CH}_3 \mathrm{Cl}+\mathrm{AlCl}_3 \rightarrow\left[\mathrm{CH}_3\right]^{+}\left[\mathrm{AlCl}_4\right]^{-}\)
(இடைநிலை)
இது ஒரு இடைநிலைச் சேர்மமாகும்.
\(\mathrm{C}_6 \mathrm{H}_6+\left[\mathrm{CH}_3^{+}\right]\left[\mathrm{AlCl}_4\right]^{-} \rightarrow \mathrm{C}_6 \mathrm{H}_5 \mathrm{CH}_3+\mathrm{AlCl}_3+\mathrm{HCl}\)
எடுத்துக்காட்டு 2:
\(2 \mathrm{KClO}_3 \xrightarrow{\mathrm{MnO}_2} 2 \mathrm{KCl}+3 \mathrm{O}_2\)
MnO2 முன்னிலையில் KCIO3 யின் வெப்பச்சிதைவு வினை பின்வருமாறு நிகழ்கிறது.
2KClO3 → 2KCl + 3O2, வினையில் நிகழும் படிகளை பின்வருமாறு எழுதலாம்.
\(2 \mathrm{KClO}_3+6 \mathrm{MnO}_2 \rightarrow 6 \mathrm{MnO}_3+2 \mathrm{KCl}\)
இது ஒரு இடைநிலைச் சேர்மமாகும்.
\(6 \mathrm{MnO}_3 \rightarrow 6 \mathrm{MnO}_2+3 \mathrm{O}_2\)
எடுத்துக்காட்டு 3:
\(2 \mathrm{H}_2+\mathrm{O}_2 \xrightarrow{\mathrm{Cu}} 2 \mathrm{H}_2 \mathrm{O}\)
Cu முன்னிலையில் H2, மற்றும் O2, ஆகியன வினைபுரிவதால் நீர் உருவாகும் வினையை பின்வருமாறு எழுதலாம்.
\(2 \mathrm{Cu}+\frac{1}{2} \mathrm{O}_2 \rightarrow \mathrm{Cu}_2 \mathrm{O}\)
இது ஒரு இடைநிலைச் சேர்மமாகும்.
\(\mathrm{Cu}_2 \mathrm{O}+\mathrm{H}_2 \rightarrow \mathrm{H}_2 \mathrm{O}+2 \mathrm{Cu}\)
சிறப்புகள்:
வினைவேக மாற்றியின் தேர்ந்து செயலாற்றும் தன்மை
வினைவேகமாற்றியின் செறிவு அதிகரிப்பை பொறுத்து வினையின் வேகம் அதிகரித்தல். ஆகியவற்றை இக்கொள்கை விளக்குகிறது.
வரம்புகள்:
வினைவேகமாற்ற நச்சு மற்றும் உயர்த்திகளின் செயல்பாடுகளை இடைநிலைச் சேர்மக் கொள்கையால் விளக்க இயலவில்லை.
பலபடித்தான வினைவேகமாற்ற வினைகளின் வினைவழிமுறையை இக்கொள்கையால் விளக்க இயலவில்லை.
4.
i. அசிட்டிக் அமிலத்திலிருந்து அசிட்டிக் அமில நீரிலி.
P₂O5 போன்ற வலிமை மிகுந்த நீர்நீக்கும் காரணிகளுடன் சேர்த்து வெப்பப்படுத்தும் கார்பாக்சிலிக் அமிலங்கள் அவற்றின் அமில நீரிலிகளை உருவாக்குகின்றன.
ii. மெத்தில் அசிட்டேட்டிலிருந்து எத்தில் அசிட்டேட்
குறைந்த கார்பன் எண்ணிக்கை கொண்ட ஆல்கஹாலை எஸ்டரிலிருந்து P₂O5 உயர் ஆல்கஹால் எஸ்டர்களை தயாரிக்க இந்த வினை பயன்படுகின்றன.
iii. மெத்தில் சயனைடிலிருந்து அசிட்டமைடு
ஆல்கைல் சயனைடுகளை குளிர்ந்த கார்பன் அடர் HCl கொண்டு பகுதியளவு நீராற்பகுக்கும் போது அமைடுகள் உருவாக்குகின்றன.
iv. எத்தனாலிருந்து லாக்டிக் அமிலம்
டொலுயீனிலிருந்து பென்சாயிக் அமிலம்
டொலுயீன் அமிலம் கலந்த KMnO4 முன்னிலையில் ஆக்ஸிஜனேற்றமடைகிறது.
பென்சால்டிஹைடிலிருந்து மாலகைட் பச்சை
பென்சால்டிஹைடானது N, N டைமெத்தில் அனிலீன் போன்ற அரோமேடிக் அமீன்களுடன் குறுக்க வினைக்கு உட்பட்டு ட்ரைபீனைல் மீத்தேன் சாயத்தை உருவாக்குகின்றன.
5.
6.
A என்ற இரட்டை உப்பு K2SO.Al2(SO4)3.24H2O ஆகும். நான்காவது வரிசை கார உலோகம் பொட்டாசியம் ஆகும்.
A யை 500Kல் வெப்பப்படுத்தும்போது:
\({ K }_{ 2 }{ SO }_{ 4 }.Al{ \underset { (A) }{ _{ 2 }{ ({ SO }_{ 4 } })_{ 3 } } }.24{ H }_{ 2 }O\underrightarrow { 500K } { K }_{ 2 }{ SO }_{ 4 }.{ \underset { (B) }{ Al_{ 2 }({ { SO }_{ 4 }) }_{ 3 } } }+{ 24H }_{ 2 }O\)
B ன் நீர்கரைசல் + BaCl2, → கரைசல் வெண்ணிற வீழ்படி
(ஏனெனில் B ல் சல்பேட் அமில உறுப்பு உள்ளது)
இது சல்பேட் அமில உறுப்பிற்கான ஆய்வு ஆகும்.
B + அலிசரின் → சிவப்புநிறம்.
இது அலுமினியத்தின் ஆய்வு ஆகும். அலுமினியத்துடன் சல்பேட் இருப்பதால் இது சிவப்பு நிறத்தை தருகிறது.
| சேர்மம் | வாய்ப்பாடு | பெயர் |
| A | K2SO4.Al2(SO4)3.24H2O | பொட்டாஷ் படிகாரம் |
| B | K2SO4.Al2(SO4)3 | எரிக்கப்பட்ட படிகாரம் |
7.
1. உலோக ஆக்ஸைடுகளிலிருந்து வெவ்வோறு ஒடுக்கும் காரணிகளைப் பயன்படுத்தி உலோகங்களை பிரித்தெடுக்கலாம். எடுத்துக்காட்டாக Mx Oy உலோக ஆக்சைடின் ஒடுக்கும் வினையைக் கருதுக.
2/y Mx Oy (S) → 2x/yM(S) + O2(g) ............... (1)
2. மேற்கண்டுள்ள ஒடுக்க வினையை கார்பனைக் கொண்டு நிகழ்த்தலாம். இந்நேர்வில் ஒடுக்கும் காரணியான கார்பன் CO அல்லது CO2 ஆக ஆக்சிஜனேற்றம் அடையலாம்.
C + O2 → CO2(g) ......................... (2)
2C + O2 → 2CO(g) ...............................(3)
3. கார்பன் மோனாக்சைடை ஆக்சிஜன் ஒடுக்கியாகப் பயன்படுத்தினால் அது பின்வரும் வினைப்படி, CO2 ஆக ஆக்சிஜனேற்றமடைகிறது.
2CO + O2 → 2CO2(g) .....................(4)
4. வெப்பஇயக்கவியல் கொள்கைகளின் அடிப்படையில் தகுந்த ஒடுக்கும் காரணியினைத் தெரிவு செய்யலாம்.
ஒரு தன்னிச்சையான வினைக்கு, கட்டிலா ஆற்றலில் ஏற்படும் மாற்றம் (\(\Delta\)G) ஆனது கண்டிப்பாக எதிர்குறி மதிப்பினைப் பெற்றிருக்க வேண்டும் என நாம் அறிவோம். எனவே சமன்பாடு (1) ல் கண்டுள்ள உலோக ஆக்சைடை கொடுக்கப்பட்ட ஒரு ஒடுக்கும் காரணியுடன் (சமன்பாடு (2), (3) அல்லது (4) ல் கொடுக்கப்பட்டுள்ளவை) சேர்த்து ஒடுக்க வேண்டுமெனில், இணைக்கப்பட்ட வினைகளின் சமன்பாடு (1) மற்றும் (2), சமன்பாடு (1) மற்றும் (3), சமன்பாடு (1) மற்றும் (4) கட்டிலா ஆற்றல் மாற்றம் எதிர்குறி மதிப்பினைப் பெற்றிருக்க வேண்டும்.
5. எனவே இணைக்கப்பட்ட வினையில், கட்டிலா ஆற்றல் மாற்றம் அதிக எதிர்குறி மதிப்பினைப் பெறும் வகையில், ஒடுக்கும் காரணி தெரிவு செய்யப்படுகிறது.
8.
அ) BrF5

புரோமின் அணுவில் உள்ள பிணைப்பு எலக்ட்ரான் 7 + ஃபுளுரின் அணுவின் எண்ணிக்கை (5) = 12
x = \(\frac{12}{2}\) = 6
இனக்கலப்பு: sp3d2
வடிவமைப்பு: சதுரபிரமீடு
ஆ) BrF3

புரோமின் அணுவில் உள்ள பிணைப்பு எலக்ட்ரான் 7 + ஃபுளுரின் அணுவின் எண்ணிக்கை (5) = 12
x = \(\frac{10}{2}\) = 5
இனக்கலப்பு: sp3d2
வடிவமைப்பு: முக்கோண இருபிரமீடு; (T-வடிவம்)
9.

| சேர்மம் | பெயர் |
| A | 2-குளோரோ பியூட்டேன் |
| B | இரண்டாம் நிலை பியூட்டைல் மெக்னீசியம் குளோரைடு |
| X | 2-பியூட்டனோன் |
| Y | 3,4-டைமெத்தில்-3-ஹெக்சனால் |
10.
எதிர்முனைப் பாதுகாப்பு : மின்முலாம் பூசுதலைப் போலல்லாமல், இந்த தொழில்நுட்ப உத்தியில் பாதுகாக்கப்படவேண்டிய உலோகம் முழுவதும் பாதுகாப்பு உலோகத்தை பூசவேண்டிய அவசியமில்லை. மாறாக, Mg அல்லது ஜிங்க் போன்ற இரும்பைவிட எளிதில் அரிமானமடையும் உலோகங்களை தன்னிழப்பு நேர்மின்முனையாக பயன்படுத்த முடியும். இரும்பு எதிர்மின்முனையாக செயலாற்றுகிறது. எனவே இரும்பு பாதுகாக்கப்படுகிறது. ஆனால் Mg அல்லது Zn அரித்தலுக்கு உள்ளாகின்றன.
11.
சார்லஸ் குட் இயர் என்பவர் இயற்கை இரப்பர் மற்றும் சல்பர் சேர்ந்த கலவையை சூடான அடுப்பின் மீது தற்செயலாக விட்டார். அந்த இரப்பரானது வலிமையானதாகவும், நீளும் தன்மை கொண்டதாகவும் மாறியதைக் கண்டு அவர் ஆச்சரியமடைந்தார். குட் இயர் இந்த செயல்முறையை “இரப்பர் உருவூட்டல்" அல்லது வல்கையாக்கல் என்றழைத்தார். இயற்கை இரப்பரை, 5 - 3.% சல்பருடன் சேர்த்து -100 150°C வெப்பநிலையில் வெப்பப்படுத்தும்போது சிஸ் -1.4 பாலிஐசோபிரீன் சங்கிலிகள் டைசல்பைடு பிணைப்புகளால்(-S-S) குறுக்க பிணைக்கப்படுகின்றன.
வல்கனைசேஷனுக்கு பயன்படுத்தப்படும் சல்பரின் அளவை கட்டுப்படுத்துவதன் மூலமாக இரப்பரின் இயற் பண்புகளை மாற்றியமைக்க முடியும். 1 முதல் 3 % வரை சல்பரைக் கொண்டுள்ள இரப்பரானது மிருதுவானதாகவும், நீளும் தன்மை கொண்டதாகவும் உள்ளது.3 முதல் 10% வரை சல்பரைப் பயன்படுத்தும்போது இரப்பரானது கடினமானதாக ஆனால், நெகிழும் தன்மை கொண்டதாக மாறுகிறது.
12.
α-சுருள் துணை அமைப்பில், அமினோ அமிலங்கள் வலப்பக்க செங்குத்து சுருள் அமைப்பில் அமைக்கப்பட்டுள்ளன, மேலும் இவை ஒரு அமினோ அமிலத்திலுள்ள (n-வது பகுதிக்கூறு) கார்பனைல் தொகுதி ஆக்சிஜனுக்கும் ஐந்தாவது அமினோ அமில (n+1 வது பகுதிக்கூறு) அமினோ ஹைட்ரஜனுக்கும் இடையே உருவாகும் ஹைட்ரஜன் பிணைப்புகளால் நிலைப்படுத்தப்படுகின்றன.
13.
| சேர்மம் | பெயர் |
| A | தாலிமைடு |
| B | ஐசோபுரோப்பைல் குளோரைடு |
| C | N - ஐசோபுரோப்பைல் தாலிமைடு |
| D | தாலிக் அமிலம் |
14.
\(\begin{aligned}
\mathrm{Hg}_2 \mathrm{Cl}_2\rightleftharpoons
\mathrm{Hg}_2^{+2}(\mathrm{aq})+2 \mathrm{Cl}^{-}(\mathrm{aq})
\end{aligned}\)
(S) S 2S
\(\begin{aligned}
\mathrm{K}_{\mathrm{sp}} & \left.=\left[\mathrm{Hg}_2^{+2}\right] \mathrm{Cl}^{-}\right]^2
\end{aligned}\)
\(\begin{aligned}
=(\mathrm{s})(2 \mathrm{~s})^2
\end{aligned}\)
\(\begin{aligned}
\mathrm{~K}_{\mathrm{sp}} & =4 \mathrm{~s}^3
\end{aligned}\)
மாற்றுமுறை:
Ksp = mm. nn(s)m+n
= 11. 22. S(1+2)
Ksp = 4s3
15.
\(i)\
{\left[A_0\right] } =100 \% \text { என்க } ;[A]=100-40=60 \% \\
k =\frac{2.303}{t} \log \frac{\left[A_0\right]}{[A]} \\
k =\frac{2.303}{50} \log \frac{[100]}{[60]} \\
k =0.010216 \mathrm{~min}^{-1}
\)
K = 0.010216 min-1 எனவே, வினைவேக மாறிலி 0.010216 min-1
ii) t = ?, வினை 80% நிறைவடையும் போது,
[A ] = 100 - 80 = 20%
k = 0.010216 min-1
\(t=\frac { 2.303 }{ 0.010216 } log\frac { 100 }{ 20 } \)
t = 157.58 min
80% வினை நிறைவடைய ஆகும் காலம் 157.58 min.
16.
n = 4
ρ = 2.48 gcm-3
NA = 6.023 x 1023
\(\rho =\frac { nM }{ { a }^{ 3 }{ N }_{ A } } \)
\(\therefore { a }^{ 3 }=\frac { nM }{ { \rho N }_{ A } } \)
= \(\frac { 4\times 58 }{ 2.48\times 6.023\times { 10 }^{ 23 } } \)
a3 = 15.55 x 10-23cm3
a3 = 0.1555 x 10-21 cm
\(
\mathrm{a} =\sqrt[3]{0.1555 \times 10^{-21}} \\
\mathrm{a} =0.5375 \times 10^{-7} \mathrm{~cm}=5.375 \times 10^{-8} \mathrm{~cm} \\
=537.5 \mathrm{pm}
\)
K+ மற்றும் F- அயனிகளுக்கிடையேயானத் தொலைவு
\(=\frac{537.5}{1.414}=380.13 \mathrm{pm}\)
17.
(i) [Ni(H2O)6]2+,

H₂O ஒரு வலிமை குறைந்த ஈனி எனவே எலக்ட்ரான்கள் இணையாவதில்லை. இரு இணையாகாத எலக்ட்ரான்கள் உள்ளன. இதனால் d-d இடப்பெயர்ச்சி நடைபெறும் சேர்மம் நிறத்தை (பச்சை) பெறுகிறது.
(ii) [Ni(CN)4]2-
[Ni(CN)4]2- இதில் CN- வலிமை மிகு ஈனி. இதனால் 3d- எலக்ட்ரான்கள் இணையாக்கப்படுகின்றன. எனவே தனித்த இணையாகாத எலக்ட்ரான்கள் இல்லை. இதனால் d-d இடப்பெயர்ச்சி நடைபெறாது. எனவே நிறமற்றதாக உள்ளது.

18.
1. தாமிரம் தனிமமானது Cu2+ விட அதிக நிலைப்புத் தன்மையுடையது. தாமிரத்தின் எலக்ட்ரான் அமைப்பு 3d104s1 முழுவதும் நிரம்பிய 3d ஆர்பிட்டால்களை பெற்று நிலைத்த அமைப்புடன் உள்ளது.
2. ஆனால் Cu2+ எலக்ட்ரானின் அமைப்பில் 3d9 ஆகும். Cu2+ ஆனது \(\mathrm{E}_{\mathrm{M}^{20} / \mathrm{M}}^{\mathrm{o}}\)ன் மதிப்பு நேர்குறியாகும்.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th English Supplementary - 3 - The Hour of Truth (Play) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Poem - 3 - All the World’s a Stage Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 3 - In Celebration of Being Alive Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Supplementary - 2 - Life of Pi Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards