12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 02/10/2020
12 ஆம் வகுப்பு வேதியியல் பயிற்சி 5 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Chemistry Tamil Medium Model 5 Mark Book Back Questions (New Syllabus 2020)
12ஆம் வகுப்பு Chemistry / வேதியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Chemistry / வேதியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Chemistry Test

1.
ஒரு ஏரியில் \(9\times10^{12}\) லிட்டர் நீர் நிரம்பியுள்ளது. ஒரு திறன் அணு உலையானது தகுந்த மின்னழுத்தத்தில் ஏரியிலுள்ள நீரை மின்னாற்பகுத்து \(2\times10^{6}\) Cs-1 வேகத்தில் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. ஏரியிலுள்ள நீர் முழுவதும் மின்னாற்பகுத்தலுக்கு உட்பட எவ்வளவு வருடங்களாகும்? மின்னாற்பகுத்தலைத் தவிர வேறெந்த வகையிலும் நீர் இழக்கப்படவில்லை என கருதுக.
2.
பின்வரும் வினைவரிசையில் உள்ள A முதல் E வரை உள்ள சேர்மங்களை கண்டறிக.

3.
ஒரு முதல் வகை வினை 50 நிமிடங்களில் 40% நிறைவடைகிறது. வினைவேக மாறிலியின் மதிப்பினைக் கண்டறிக அவ்வினை 80% நிறைவடைய தேவையான காலம் எவ்வளவு?
4.
SO2Cl2 → SO2 + Cl2 என்ற வாயு நிலை ஒருபடித்தான வினையாது முதல் வகை வினைவேகவியலுக்கு உட்படுகிறது. அதன் அரை வாழ் காலம் 8.0 நிமிடங்கள் SOCl2 ன் செறிவானது அதன் ஆரம்ப அளவில் 1% ஆக குறைய ஆகும் காலத்தினை கணக்கிடுக.
5.
ஒரு அணு fcc அமைப்பில் படிகமாகிறது. மேலும் அதன் அடர்த்தி 10 gcm-3 மற்றும் அதன் அலகுக்கூட்டின் விளிம்பு நீளம் 100pm. 1g படிகத்தில் உள்ள அணுக்களின் எண்ணிக்கையினைக் கண்டறிக.
6.
[Co(C2O4)3]3- ல் காணப்படும் பிணைப்பின் தன்மையை VB கொள்கையைப் பயன்படுத்தி விளக்குக.
7.
8.
Cr2+ அல்லது Fe2+ இவற்றுள் எது வலிமையான ஆக்சிஜனொடுக்கி?
9.
எலிங்கம் வரைபடத்தின் வரம்புகள் யாவை?
10.
500 ml கனஅளவுள்ள நீரில், 6 கிராம் அசிட்டிக் அமிலம் மற்றும் 8.2 கிராம் சோடியம் அசிட்டேட் ஆகியவற்றை நீரில் கரைத்து பெறப்பட்ட கரைசலின் pH மதிப்பு என்ன? (கொடுக்கப்பட்டது: அசிட்டிக் அமிலத்தின் Ka மதிப்பு \(1.8 \times10^{-5}\))
11.
0.1M KCl கரைசலை பயன்படுத்தி கண்டறியப்பட்ட மின்கடத்து கலனின் மின்தடை 190 \(\Omega \) (0.1M KCl கரைசலின் நியம கடத்துத்திறன் மதிப்பு 1.3 Sm-1). அதே கலனில் 0.003M செறிவுள்ள சோடியம் குளோரைடு கரைசலை நிரப்பும் போது, அளவிடப்பட்ட மின்தடை மதிப்பு 6.3K\(\Omega\) இவை இரண்டும் ஒரே குறிப்பிட்ட வெப்பநிலையில் கண்டறியப்பட்ட அளவீடுகளாகும். NaCl கரைசலின் நியம மற்றும் மோலார் கடத்துத்திறன் மதிப்புகளை கணக்கிடுக.
12.
0.44 கிராம் மோனோஹைட்ரிக் ஆல்கஹாலை, ஈதரில் உள்ள மெத்தில் மெக்னீசியம் அயோடைடுடன் சேர்க்கும் போது STP ல் 112 cm3 மீத்தேனை வெளியேற்றுகிறது. அதே ஆல்கஹாலானது PCC யுடன் வினைபடுத்தும் போது கார்பனைல் சேர்மத்தைத் தருகிறது. அந்த கார்பனைல் சேர்மம் வெள்ளி ஆடி சோதனைக்கு உட்படுகிறது. சேர்மத்தினைக் கண்டறிக.
13.
வெப்பத்தால் இளகும் மற்றும் வெப்பத்தால் இறுகும் பிளாஸ்டிக்குகள் வேறுபடுத்துக.
14.
வினைவேக மாற்றம் பற்றிய இடைநிலைச் சேர்மம் உருவாதல் கொள்கையை ஒரு எடுத்துக்காட்டுடன் விளக்குக.
15.
எவ்வாறு தயாரிப்பாய்?
i. அசிட்டிக் அமிலத்திலிருந்து அசிட்டிக் அமில நீரிலி
ii. மெத்தில் அசிட்டேட்டிலிருந்து எத்தில் அசிட்டேட்
iii. மெத்தில்சயனைடிலிருந்து அசிட்டமைடு
iv. எத்தனாலிருந்து லாக்டிக் அமிலம்
v. அசிட்டைல் குளோரைடிலிருந்து அசிட்டோபீனோன்
vi. சோடியம் அசிட்டேட்டிலிருந்து ஈத்தேன்
vii. டொலுயீனிலிருந்து பென்சாயிக் அமிலம்
viii. பென்சால்டிஹைடிலிருந்து மாலகைட் பச்சை
ix. பென்சால்டிஹைடிலிருந்து சின்னமிக் அமிலம்
x. ஈத்தைனிலிருந்து அசிட்டால்டிஹைடு
16.
பின்வரும் மாற்றங்கள் எவ்வாறு நிகழ்த்தப்படுகின்றன?
புரப்பனல் \(\longrightarrow\) பியூட்டனோன்
ஹெக்ஸ்-3-ஐன் \(\longrightarrow\) ஹெக்சன் -3-ஓன்
பீனைல்மெத்தனல் \(\longrightarrow\) பென்சாயிக் அமிலம்
பீனைல் மெத்தனல் \(\longrightarrow\) பென்சாயின்
17.
நான்காவது வரிசை கார உலோகத்தைக் கொண்டுள்ள (A) என்ற இரட்டை உப்பை 500K வெப்பநிலைக்கு வெப்பப்படுத்த (B) கிடைக்கிறது. (B) ன் நீர்க்கரைசல் Bacl2 உடன் வெண்மை நிற வீழ்ப்படிவைத் தருகிறது. மேலும் அலிசரினுடன் சிவப்பு நிற சேர்மத்தைத் தருகிறது. A மற்றும் B ஐக் கண்டறிக.
18.
பின்வரும் சர்க்கரையானது, D – சர்க்கரையா? அல்லது L – சர்க்கரையா?

19.
ஹைப்போ ஃபுளுரஸ் அமிலத்தில் (HOF) ஆக்சிஜனின் ஆக்சிஜனேற்ற எண்ணைக் கண்டறிக.
1.
நீரின் மின்னாற்பகுப்பு
நேர்மின்முனை : 2H2O \(\rightarrow\) 4H+ + O2 + 4e- .....(1)
நேர்மின்முனை : 2H2O + 2e- \(\rightarrow\) H2 + 2OH- .....(2)
அல்லது: \(\text { (2) } \times 2 ; 4 \mathrm{H}_2 \mathrm{O}+4 e^{-} \rightarrow 2 \mathrm{H}_2+4 \mathrm{OH}^{-}\) .....(3)
கூட்டுக 1 + 3; நிகர வினை:
6H2O \(\rightarrow\) 4H++ 4OH + 2H2 + O2
\(\therefore\) 4F ஆனது, 2 மோல் நீரை மின்னாற்பகுக்க தேவைப்படுகிறது.
2 மோல் H2O = 2 \(\times \) 18 = 36g (அல்லது) 36 ml

\(\begin{aligned}
x & =\frac{4 \times 96500 \times 9 \times 10^{12}}{36 \times 10^{-3} \mathrm{~L}}=\frac{4 \times 96500 \times 9 \times 10^{12}}{36 \times 10^{-3}}
\end{aligned}\)
\(\begin{aligned}
=96500 \times 10^{15} \mathrm{C}
\end{aligned}\)
1 வினாடியில் 2 \(\times \) 106 மின்சாரம் உருவாகிறது. 96500 \(\times \) 15 C மின்சாரம் உருவாக தேவைப்படும் நேரம்.
\(\begin{aligned}
=\frac{1 \mathrm{~s}}{2 \times 10^6 \mathrm{C}} \times 96500 \times 10^{15} \mathrm{C}
\end{aligned}\)
\(\begin{aligned}
=48250 \times 10^9 \mathrm{~S}
\end{aligned}\)
வருடங்களின் எண்ணிக்கை
\(=\frac{48250 \times 10^9}{365 \times 24 \times 60 \times 60}\)
= 1.5299 \(\times \) 106 வருடங்கள்
2.
3.
\(i)\
{\left[A_0\right] } =100 \% \text { என்க } ;[A]=100-40=60 \% \\
k =\frac{2.303}{t} \log \frac{\left[A_0\right]}{[A]} \\
k =\frac{2.303}{50} \log \frac{[100]}{[60]} \\
k =0.010216 \mathrm{~min}^{-1}
\)
K = 0.010216 min-1 எனவே, வினைவேக மாறிலி 0.010216 min-1
ii) t = ?, வினை 80% நிறைவடையும் போது,
[A ] = 100 - 80 = 20%
k = 0.010216 min-1
\(t=\frac { 2.303 }{ 0.010216 } log\frac { 100 }{ 20 } \)
t = 157.58 min
80% வினை நிறைவடைய ஆகும் காலம் 157.58 min.
4.
t1/2 = 8 நிமிடங்கள் t99% = ?; [Ao] = 100%; [A] = 1%
\(K=\frac { 0.693 }{ { t }_{ 1/2 } } \)
\(K=\frac { 0.693 }{ 8 } =0.087\) நிமிடங்கள்-1
\(t=\frac { 2.303 }{ K } log\frac { \left[ { A }_{ o } \right] }{ \left[ A \right] } \)
\(t=\frac { 2.303 }{ 0.087 } log\frac { 100 }{ 1 } \)
\(t=\frac { 2.303 }{ 0.087 } log{ 10 }^{ 2 }\)
\(t=\frac { 2.303 }{ 0.087 } 2log10\)
\(t=\frac { 2.303\times 2 }{ 0.087 } \)
t = 52.93நிமிடங்கள்
5.
\( (\rho)=\frac{\mathrm{nM}}{\mathrm{a}^3 \mathrm{~N}_1}
\rho =10 \mathrm{gcm}^{-3} ; \\
\mathrm{a} =100 \rho \mathrm{m}=1 \times 10^{-8} \mathrm{~cm} ; \\
\mathrm{N}_{\mathrm{A}} =6.023 \times 10^{23} ; \\
\mathrm{n} =4 ; \mathrm{M}=? \\
\mathrm{M} =\frac{\rho \mathrm{a}^3 \mathrm{~N}_{\mathrm{A}}}{\mathrm{n}}=\frac{10 \times\left(1 \times 10^{-8}\right)^3 \times 6.023 \times 10^{23}}{4} \\
=\frac{6.023}{4}=1.505 \mathrm{~g} / \mathrm{mole}
\)
மோல்களின் எண்ணிக்கை \(n=\frac { W }{ M } =\frac { 1 }{ 1.505 } \) = 0.664 மோல்கள்
n மோல்களில் உள்ள அணுக்களின் எண்ணிக்கை = n x NA
அணுக்களின் எண்ணிக்கை = 0.6623 x 6.023 x 1023
= 3.99 x 1023 அணுக்கள்
6.
\(\left[\mathrm{Co}\left(\mathrm{C}_2 \mathrm{O}_4\right)_3\right]^{3-}\) ல் கோபால்ட் +3 ஆக்ஸிஜனேற்ற நிலையில் உள்ளது (C * o ^ 31)
\({ }_{27} \mathrm{Co}_{-18}[\mathrm{Ar}] 3 \mathrm{~d}^7 4 \mathrm{~s}^2 ;{ }_{24} \mathrm{Co}^{3+}-{ }_{18}[\mathrm{Ar}] 3 \mathrm{~d}^6 4 \mathrm{~s}^0\)

n = 0 டடையாகாந்தத் தன்மையுடையது இனக்கலப்பு: \(d ^ 2 s p ^ 3\)
\(\mu_{s} = 0\)
7.
8.
1. Cr2+ ஆனது Fe2+ விட வலிமையான ஆக்ஸிஜனோடுக்கியாகும். Cr2+ திட்ட மின்முனை மின்னழுத்த (E°) மதிப்பானது - 0.91 V ஆகும். ஆனால் Fe2+ ன் மதிப்பு - 0.44 V ஆகும்.
2. ஒரு உலோகத்தின் திட்ட மின்முனை மின்னழுத்த மதிப்பானது அதிக எதிர்க்குறி மதிப்பைப் பெற்றிருப்பின் அந்த உலோகமானது ஒரு வலிமையான ஒடுக்கும் காரணியாகும். ஏனெனில் இவைகள் எளிதில் எலக்ட்ரான்களை இழக்கின்றன. எனவே Cr²+ ஒரு வலிமையான ஆக்ஸிஜனோடுக்கியாகும்.
9.
1. எலிங்கம் வரைபடம் வெப்ப இயக்கவியல் கொள்கைகளை மட்டுமே கருத்திற்கொண்டு உருவாக்கப்பட்டதாகும். இது ஒரு வினை நிகழ்வதற்கான வெப்ப இயக்கவியல் சாத்தியத்தன்மை குறித்த தகவலை மட்டுமே தருகிறது. இது ஒரு வினை எவ்வளவு வேகத்தில் நிகழும் என்ற விவரத்தினை தருவதில்லை. மேலும் துணை வினை நிகழ்வதற்கான சாத்தியங்களை பற்றி எந்த ஒரு விவரத்தினையும் தருவதில்லை.
2. வினைபடு பொருட்கள், வினை விளை பொருட்களுடன் வேதிச் சமநிலையில் இருப்பதாக கருதி ΔG ஆனது எலிங்கம் வரைபடத்தில் விளக்கப்பட்டுள்ளது. இது எப்போதும் உண்மையல்ல.
10.
ஹென்டர்சன் - ஹேசல்பாக் சமன்பாட்டின்படி,

pKa = -logKa = -log(1.8 \(\times\)10-5) = 4.74
\(=\frac{8.2}{82}=0.1\)
\(\therefore\) [உப்பு]=\(\frac{0.1 mole}{1/2 Litre}=0.2M\)

\(=\frac{\left ( \frac{6}{60} \right )}{\frac{1}{2}}\)
= 0.2 M
\(\therefore pH=4.74+log \frac{(0.2)}{(0.2)}\)
pH = 4.74 + log 1
pH = 4.74 + 0 = 4.74
11.
கொடுக்கப்பட்டது
k = 1.3 Sm-1 (0.1 M KCl கரைசலுக்கு)
R = 190 \(\Omega\)
\(\left ( \frac{1}{A} \right )\)=k.R = (1.3 Sm-1) (190 \(\Omega\))
= 247 m-1
\(k_{(NaCl)}=\frac{1}{R_{(NaCl)}}\left ( \frac{l}{A} \right )\)
\(=\frac{1}{6.3 K\Omega}(247 m^{-1}) \) 6.3K\(\Omega\) = 6.3 \(\times\) 103 \(\Omega\)
= 39.2 \(\times\) 10-3 Sm-1
\(\Lambda_{m}=\frac{\kappa \times 10^{-3}mol^{-1}m^{3}}{M}\)
\(=\frac{39.2\times 10^{-3}(Sm^{-1})\times 10^{-3}(mol^{-1})m^{3}}{0.003}\)
\(\Lambda_{m}=13.04\times 10^{-3}Sm^{2}mol^{-1}\)
12.
நிறை = 0.44 g

மோலார் நிறை = \(\frac{0.44}{112} \times 22400=88 \mathrm{~g}\)
CnH2n+1 + OH = 88
12n + (1)(2n+(1)+16+1 = 88
14n + 18 = 88
14n = 88 - 18
n = 70/14 = 5

13.
வெப்பத்தால் இளகும் பலபடி :
1. வெப்பத்தால் நெகிழும் பலபடி
2. இவற்றை வெப்பப்படுத்தும்போது இளகி குளிர்விக்கும் போது இறுகுகின்றது.
3. இவற்றை மறுவடிவமைப்பிற்கு உட்படுத்தலாம்.
எ.கா : பாலித்தீன் ,PVC, பாலிஸ்டைரீன்
வெப்பத்தால் இறுகும் பலபடி :
1.இவை வெப்பப்படுத்தும் போது இளகாமல், உருகும் தன்மையற்ற பொருளாக மாறுகின்றன.
எ.கா: பேக்கலைட் மெலமைன் பார்மால்டிஹைடு
14.
வினைவேக மாற்றிகள், குறைந்த கிளர்வு ஆற்றலைக் கொண்ட புதிய பாதையை உருவாக்குகின்றன.
ஒரு படித்தான வினைவேக மாற்ற வினைகளில் ஒரு வினைவேகமாற்றியானது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வினைபடு பொருட்களுடன் இணைந்து ஒரு இடைநிலை சேர்மத்தை உருவாக்குகிறது.
இந்த இடைநிலைச் சேர்மமானது, மற்றொரு வினைபடுபொருளுடன் வினைப்பட்டோ அல்லது தாமாக சிதைந்தோ வினைபொருட்களை உருவாக்குகின்றன.
மேலும் வினைவேகமாற்றியானது மீள் உருவாக்கம் பெறுகிறது.
\(\begin{aligned} \mathrm{A}+\mathrm{B} \xrightarrow{\mathrm{C}} \mathrm{AB} \end{aligned}\) ....(1)
A + C \(\rightarrow\) AC (இடைநிலை சேர்மம்) ....(2)
C என்பது வினைவேக மாற்றி
AC + B \(\rightarrow\) AB + C ....(3)
(2) மற்றும் (3) ஆம் வினைகளுக்கான கிளர்வுறு ஆற்றல்கள், வினை (1) ஐவிட குறைவாக உள்ளன. எனவே, இடைநிலைச் சேர்மம் உருவாதல் மற்றும் சிதைதல் மூலம் வினையின் வேகம் அதிகரிக்கப்படுகிறது.
எடுத்துக்காட்டு 1:
ஃபிரீடல் கிராஃப்ட் வினையின் வினைவழிமுறை.
நீரற்ற AlCl3
\(\mathrm{C}_6 \mathrm{H}_6+\mathrm{CH}_3 \mathrm{Cl} \xrightarrow{} \mathrm{C}_6 \mathrm{H}_5 \mathrm{CH}_3+\mathrm{HCl}\)
வினைவேக மாற்றியின் செயல்பாடு
\(\mathrm{CH}_3 \mathrm{Cl}+\mathrm{AlCl}_3 \rightarrow\left[\mathrm{CH}_3\right]^{+}\left[\mathrm{AlCl}_4\right]^{-}\)
(இடைநிலை)
இது ஒரு இடைநிலைச் சேர்மமாகும்.
\(\mathrm{C}_6 \mathrm{H}_6+\left[\mathrm{CH}_3^{+}\right]\left[\mathrm{AlCl}_4\right]^{-} \rightarrow \mathrm{C}_6 \mathrm{H}_5 \mathrm{CH}_3+\mathrm{AlCl}_3+\mathrm{HCl}\)
எடுத்துக்காட்டு 2:
\(2 \mathrm{KClO}_3 \xrightarrow{\mathrm{MnO}_2} 2 \mathrm{KCl}+3 \mathrm{O}_2\)
MnO2 முன்னிலையில் KCIO3 யின் வெப்பச்சிதைவு வினை பின்வருமாறு நிகழ்கிறது.
2KClO3 → 2KCl + 3O2, வினையில் நிகழும் படிகளை பின்வருமாறு எழுதலாம்.
\(2 \mathrm{KClO}_3+6 \mathrm{MnO}_2 \rightarrow 6 \mathrm{MnO}_3+2 \mathrm{KCl}\)
இது ஒரு இடைநிலைச் சேர்மமாகும்.
\(6 \mathrm{MnO}_3 \rightarrow 6 \mathrm{MnO}_2+3 \mathrm{O}_2\)
எடுத்துக்காட்டு 3:
\(2 \mathrm{H}_2+\mathrm{O}_2 \xrightarrow{\mathrm{Cu}} 2 \mathrm{H}_2 \mathrm{O}\)
Cu முன்னிலையில் H2, மற்றும் O2, ஆகியன வினைபுரிவதால் நீர் உருவாகும் வினையை பின்வருமாறு எழுதலாம்.
\(2 \mathrm{Cu}+\frac{1}{2} \mathrm{O}_2 \rightarrow \mathrm{Cu}_2 \mathrm{O}\)
இது ஒரு இடைநிலைச் சேர்மமாகும்.
\(\mathrm{Cu}_2 \mathrm{O}+\mathrm{H}_2 \rightarrow \mathrm{H}_2 \mathrm{O}+2 \mathrm{Cu}\)
சிறப்புகள்:
வினைவேக மாற்றியின் தேர்ந்து செயலாற்றும் தன்மை
வினைவேகமாற்றியின் செறிவு அதிகரிப்பை பொறுத்து வினையின் வேகம் அதிகரித்தல். ஆகியவற்றை இக்கொள்கை விளக்குகிறது.
வரம்புகள்:
வினைவேகமாற்ற நச்சு மற்றும் உயர்த்திகளின் செயல்பாடுகளை இடைநிலைச் சேர்மக் கொள்கையால் விளக்க இயலவில்லை.
பலபடித்தான வினைவேகமாற்ற வினைகளின் வினைவழிமுறையை இக்கொள்கையால் விளக்க இயலவில்லை.
15.
i. அசிட்டிக் அமிலத்திலிருந்து அசிட்டிக் அமில நீரிலி.
P₂O5 போன்ற வலிமை மிகுந்த நீர்நீக்கும் காரணிகளுடன் சேர்த்து வெப்பப்படுத்தும் கார்பாக்சிலிக் அமிலங்கள் அவற்றின் அமில நீரிலிகளை உருவாக்குகின்றன.
ii. மெத்தில் அசிட்டேட்டிலிருந்து எத்தில் அசிட்டேட்
குறைந்த கார்பன் எண்ணிக்கை கொண்ட ஆல்கஹாலை எஸ்டரிலிருந்து P₂O5 உயர் ஆல்கஹால் எஸ்டர்களை தயாரிக்க இந்த வினை பயன்படுகின்றன.
iii. மெத்தில் சயனைடிலிருந்து அசிட்டமைடு
ஆல்கைல் சயனைடுகளை குளிர்ந்த கார்பன் அடர் HCl கொண்டு பகுதியளவு நீராற்பகுக்கும் போது அமைடுகள் உருவாக்குகின்றன.
iv. எத்தனாலிருந்து லாக்டிக் அமிலம்
டொலுயீனிலிருந்து பென்சாயிக் அமிலம்
டொலுயீன் அமிலம் கலந்த KMnO4 முன்னிலையில் ஆக்ஸிஜனேற்றமடைகிறது.
பென்சால்டிஹைடிலிருந்து மாலகைட் பச்சை
பென்சால்டிஹைடானது N, N டைமெத்தில் அனிலீன் போன்ற அரோமேடிக் அமீன்களுடன் குறுக்க வினைக்கு உட்பட்டு ட்ரைபீனைல் மீத்தேன் சாயத்தை உருவாக்குகின்றன.
16.
17.
A என்ற இரட்டை உப்பு K2SO.Al2(SO4)3.24H2O ஆகும். நான்காவது வரிசை கார உலோகம் பொட்டாசியம் ஆகும்.
A யை 500Kல் வெப்பப்படுத்தும்போது:
\({ K }_{ 2 }{ SO }_{ 4 }.Al{ \underset { (A) }{ _{ 2 }{ ({ SO }_{ 4 } })_{ 3 } } }.24{ H }_{ 2 }O\underrightarrow { 500K } { K }_{ 2 }{ SO }_{ 4 }.{ \underset { (B) }{ Al_{ 2 }({ { SO }_{ 4 }) }_{ 3 } } }+{ 24H }_{ 2 }O\)
B ன் நீர்கரைசல் + BaCl2, → கரைசல் வெண்ணிற வீழ்படி
(ஏனெனில் B ல் சல்பேட் அமில உறுப்பு உள்ளது)
இது சல்பேட் அமில உறுப்பிற்கான ஆய்வு ஆகும்.
B + அலிசரின் → சிவப்புநிறம்.
இது அலுமினியத்தின் ஆய்வு ஆகும். அலுமினியத்துடன் சல்பேட் இருப்பதால் இது சிவப்பு நிறத்தை தருகிறது.
| சேர்மம் | வாய்ப்பாடு | பெயர் |
| A | K2SO4.Al2(SO4)3.24H2O | பொட்டாஷ் படிகாரம் |
| B | K2SO4.Al2(SO4)3 | எரிக்கப்பட்ட படிகாரம் |
18.
இது ஒரு L-சர்க்கரை என்று குறிப்பிடப்படும்.
இவற்றில் Cல் உள்ள H மற்றும் OHஆனது L-கிளிசரால்டிஹைடின் C2 கார்பனை போன்று ஒரே அமைப்பில் அமைந்துள்ளது
19.
ஆக்ஸிஜனேற்ற எண் (F) = -1
ஆக்ஸிஜனேற்ற எண் (H) = +1
ஆக்ஸிஜனேற்ற எண் 0ல் HOF = x
(-1) + x + (-1) = 0
x = 0
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards