12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 01/10/2020
12 ஆம் வகுப்பு கணிதம் முக்கிய 5 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Mathematics Tamil Medium Important 5 Mark Book Back Questions (New Syllabus 2020)
12ஆம் வகுப்பு Maths / கணிதவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
u(x,y,z) = xy2 z3, x = sin t, y= cos t, z= e2t எனில் \(\frac { du }{ dt } \) -ஐக் காண்க
2.
ஒரு குறிப்பிட்ட தொலைநோக்கியில் பரவளைய பிரதிபலிப்பான் மற்றும் அதிபரவளைய பிரதிபலிப்பான் இரண்டும் உள்ளது. படம் -இல் உள்ள தொலைநோக்கியில் பரவளையத்தின் முனையிலிருந்து 14மீ உயரத்தில் உள்ள F1 என்ற அதிபரவளையத்தின் ஒரு குவியம் பரவளையத்தின் குவியமாகவும் உள்ளது. அதிபரவளையத்தின் இரண்டாவது குவியம் F2 பரவளையத்தின் முனையிலிருந்து 2மீ உயரத்தில் உள்ளது. அதிபரவளையத்தின் முனை F1 -க்கு 1மீ கீழே உள்ளது. அதிபரவளையத்தின் மையத்தை ஆதியாகவும் குவியங்களை y -அச்சிலும் கொண்ட அதிபரவளையத்தின் சமன்பாடு காண்க.
3.
மதிப்பு காண்க.
(i) cos-1 \((-\frac{1}{\sqrt2})\)
ii) cos-1\((\cos(-\frac{\pi}{3}))\)
iii) cos-1\((\cos(\frac{7\pi}{6}))\)
4.
கீழ்க்காணும் சார்புகளை வரைக:
y = x \(\sqrt { 4-x } \)
5.
\(\mathbf{M}=\left\{\left(\begin{array}{ll} x & x \\ x & x \end{array}\right): x \in R-\{0\}\right\}\) என்க. \(*\) என்பது அணிப் பெருக்கல் எனக் கொள்க. \(*\) ஆனது M-ன் மீது அடைவு பெற்றுள்ளதா எனத் தீர்மானிக்க. அவ்வாறெனில், \(*\) ஆனது M -ன் மீது பரிமாற்றுப் பண்பு, சேர்ப்புப் பண்புகளையும் நிறைவு செய்யுமா எனச் சோதிக்க.
6.
ஒரு கொள்கலன் (container) ஆனது நேர்வட்டக் கூம்பின் இடைக்கண்டம் (frustum of a cone) வடிவில் படம் -ல் உள்ளவாறு அமைந்துள்ளது எனில் அதன் கனஅளவைத் தொகையிடலைப் பயன்படுத்தி காண்க.

7.
இரண்டாம் வகைக்கெழு சோதனையை பயன்படுத்தி இடஞ்சார்ந்த அறுதி மதிப்புகளைக் காண்க.
f(x) = x2 e-2x
8.
ஒரு பாத்திரத்தில் 100oC வெப்பநிலையில் கொதித்துக் கொண்டிருக்கும் நீரானது t = 0 எனும் நேரத்தில் அடுப்பின் மீது இருந்து இறக்கி குளிர்வதற்காக சமையலறையில் வைக்கப்படுகிறது. 5 நிமிடங்களுக்குப் பிறகு நீரின் வெப்பநிலை 80o C ஆகக் குறைகிறது. மேலும், அடுத்த 5 நிமிடங்களுக்குப் பிறகு நீரின் வெப்பநிலை 65o C ஆக குறைகிறது எனில், சமையலறையின் வெப்பநிலையைக் காண்க.
9.
வருடத்திற்கு 5% தொடர் கூட்டு வீதத்தில் ஒருவர் ரூ.10,000-த்தை வங்கிக் கணக்கில் முதலீடு செய்கிறார். 18 மாதங்களுக்குப் பின்னர் அவர் வங்கிக் கணக்கில் எவ்வளவு தொகை இருக்கும்?
10.
ஒரு துப்பறிவாளர் ஒரு கொலைக்கான புலன் விசாரணையின் போது, ஒருவரின் உயிரற்ற உடலை சரியாக பிற்பகல் 8 மணிக்கு காண்கிறார். முன்னெச்சரிக்கையாக துப்பறிவாளர் அவ்வுடலின் வெப்பநிலையை அளந்து 70o F எனக் குறித்துக் கொள்கிறார். 2 மணி நேரம் கழித்து அந்த உடலின் வெப்பநிலை 60o F ஆக இருப்பதைக் காண்கிறார். உடல் இருந்த அறையின் வெப்பநிலை 50o F ஆகும். மற்றும் இறப்பதற்கு முன்பு அந்நபரின் உடல் வெப்பநிலை 98.6o F எனில், அந்நபர் கொலை செய்யப்பட்ட நேரம் என்னவாக இருந்திருக்கும்?
[log (2.43) = 0.88789; log(0.5) = -0.69315]
11.
பின்வரும் நேரியல் வகைக்கெழுச் சமன்பாடுகளின் தீர்வு காண்க:
\(x \sin x\frac { dy }{ dx } +(x \cos x+\sin x)y=\sin x\)
12.
பின்வரும் வகைக்கெழுச் சமன்பாடுகளின் தீர்வு காண்க:
2xydx + (x2 + 2y2) dy = 0
13.
ஒரு வளைவரையின் சாய்வு \(\frac { y-1 }{ { x }^{ 2 }+x } \) ஆகும். வளைவரை (1, 0) எனும் புள்ளி வழிச் செல்லுமெனில், அதன் சமன்பாட்டைக் காண்க.
14.
x 2 + y 2 = a 2 என்ற வட்டத்தில் உள்ள அரங்கத்தின் பரப்பை x = h என்ற கோடு இரு பகுதிகளாக பிரிக்கின்றது எனில் சிறிய பகுதியின் பரப்பைக் காண்க.
15.
8 வெள்ளை மற்றும் 4 கருப்பு பந்துகள் கொண்ட ஒரு கூடையிலிருந்து இரு பந்துகள் சமவாய்ப்பு முறையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. தேர்ந்தெடுக்கப்படும் ஒவ்வொரு கருப்பு பந்துக்கும் ரூ.20 வெல்லும் தொகையாகவும் தேர்ந்தெடுக்கப்படும் ஒவ்வொரு வெள்ளை பந்துக்கும் ரூ.10 தோற்கும் தொகையாகவும் கருதுக. எதிர்பார்க்கப்படும் வெல்லும் தொகை மற்றும் பரவற்படி காண்க.
16.
என்பது சமவாய்ப்பு மாறி X -இன் நிகழ்தகவு அடர்த்தி சார்பு f(x) எனில் (i) பரவல் சார்பு F(x) (ii) P(1.5≤ X ≤ 2.5) ஆகியவற்றைக் காண்க.
17.
மதிப்பிடுக : \(\int ^{\pi}_{-\pi} \frac{cos ^2 x}{1+ a^x}\) dx
18.
ஓர் அறுபக்க பகடையின் ஒரு பக்கத்தில் ‘1’ எனவும், இரு பக்கங்களில் ‘3’ மூன்று எனவும், மற்றும் ஏனைய மூன்று பக்கங்களில் ‘5’ எனவும் குறிக்கப்பட்டுள்ளது. பகடை இருமுறை வீசப்படுகிறது. இருமுறை வீசப்பட்டதின் மொத்த எண்ணிக்கையை X குறிக்கிறது.
(i) நிகழ்தகவு நிறை சார்பு
(ii) குவிவு பரவல் சார்பு
(iii) P(4 ≤ X<10)
(iv) P(X ≥ 6)
19.
y = x2+3x-2 என்ற வளை வரைக்கு (1, 2) என்ற புள்ளியில் தொடுகோடு மற்றும் செங்கோட்டின் சமன்பாடுகளைக் காண்க.
20.
s(t) = 2t3-9t2+12t-4, இங்கு t ≥ 0 எனும் விதிப்படி ஒரு கோட்டில் ஒரு துகள் நகர்கிறது.
(i) எந்நேரங்களில் துகளின் திசை மாறுகின்றது?
(ii) முதல் 4 வினாடிகளில் துகள் பயணித்த தூரம் என்ன?
(iii) திசைவேகம் பூச்சிய மதிப்பை அடையும் நேரங்களில் எல்லாம் துகளின் முடுக்கம் காண்க?
21.
\(\vec { a } =\hat { i } -\hat { j } ,\hat { b } =\hat { i } -\hat { j }-4\hat { k } ,\vec { c } =3\hat { j } -\hat { k } \)மற்றும் \(\vec { d } =2\hat { i } +5\hat { j } +\hat { k } \) எனில்
(i) \(\left( \vec { a } \times \vec { b } \right) \times \left( \vec { c } \times \vec { d } \right) =\left[ \vec { a } ,\vec { b } ,\vec { d } \right] \vec { c } -\left[ \vec { a } ,\vec { b } ,\vec { c } \right] \vec { d } \)
(ii) \((\vec{a} \times \vec{b}) \times(\vec{c} \times \vec{d})=[\vec{a}, \vec{c}, \vec{d}] \vec{b}-[\vec{b}, \vec{c}, \vec{d}] \vec{a}\)
22.
1.2 மீ நீளமுள்ள தடி அதன் முனைகள் எப்போதும் ஆய அச்சுகளைத் தொட்டுச் செல்லுமாறு நகருகின்றது. தடியின் x -அச்சு முனையிலிருந்து 0.3மீ தூரத்தில் உள்ள ஒரு புள்ளி P-ன் நியமப்பாதை ஒரு நீள்வட்டம் என நிறுவுக, மேலும் அதன் மையத்தொலைத்தகவும் காண்க.
23.
ஒரு நீரூற்றில், ஆதியிலிருந்து 0.5மீ கிடைமட்டத் தூரத்தில் நீரின் அதிகபட்ச உயரம் 4மீ, நீரின் பாதை ஒரு பரவளையம் எனில் ஆதியிலிருந்து 0.75மீ கிடைமட்டத் தூரத்தில் நீரின் உயரத்தைக் காண்க.
24.
(2,2,1), (9,3,6) ஆகிய புள்ளிகள் வழிச் செல்லக்கூடியதும் 2x+6y+6z=9 என்ற தளத்திற்குச் செங்குத்தாக அமைவதுமான தளத்தின் துணையலகு அல்லாத வெக்டர் சமன்பாடு மற்றும் கார்டீசியன் சமன்பாடுகளைக் காண்க.
25.
4x2 + 36y2 + 40x − 288y + 532 = 0 என்ற கூம்பு வளைவின் குவியங்கள், முனைகள் மற்றும் அதன் நெட்டச்சு, குற்றச்சு நீளங்களைக் காண்க.
26.
px + by + cz = 0, ax + qy + cz = 0, ax + by + rz = 0 என்ற சமன்பாடுகளின் தொகுப்பு வெளிப்படையற்றத் தீர்வு பெற்றுள்ளது மற்றும் p ≠ a, q ≠ b, r ≠ c, எனில் \(\frac { p }{ p-a } +\frac { q }{ q-b } +\frac { r }{ r-c } \) = 2 என நிறுவுக.
27.
z = x + iy என்ற ஏதேனும் ஒரு கலப்பெண் Im\(\left( \frac { 2z+1 }{ iz+1 } \right) \) = 0 எனுமாறு அமைந்தால் z-ன் நியமப்பாதை 2x2 + 2y2 + x - 2y = 0 எனக்காட்டுக.
28.
(1, 1), (2, -1), மற்றும் (3, 2) என்ற மூன்று புள்ளிகள் வழிச்செல்லும் வட்டத்தின் சமன்பாடு காண்க.
29.
பின்வரும் சமன்பாடுகளின் தொகுப்பு ஒருங்கமைவு உடையதா என்பதை ஆராய்க. ஒருங்கமைவு உடையதாயின் அவற்றைத் தீர்க்க.
(i) x − y + 2z = 2, 2x + y + 4z = 7, 4x − y + z = 4
(ii) 3x + y + z = 2, x − 3y + 2z =1, 7x − y + 4z = 5
(iii) 2x + 2y + z = 5, x − y + z =1, 3x + y + 2z = 4
(iv) 2x − y + z = 2, 6x − 3y + 3z = 6, 4x − 2y + 2z = 4
30.
A = \(\frac { 1 }{ 7 } \left[ \begin{matrix} 6 & -3 & a \\ b & -2 & 6 \\ 2 & c & 3 \end{matrix} \right] \) என்பது செங்குத்து அணி எனி a, b மற்றும் c களின் மதிப்பைக் காண்க. இதிலிருந்து A−1-ஐக் காண்க.
31.
கீழ்க்காணும் எல்லைகளை, தேவைப்படும் இடங்களில் லோபிதாலின் விதியை பயன்படுத்தி காண்க :
\(\underset{x\rightarrow 0^{+}}{\lim}(\cos x)^{\frac{1}{x^{2}}}\)
32.
x3+ax2+bx+c=0 எனும் முப்படிச் சமன்பாட்டின் மூலங்களின் வர்க்கங்களை மூலங்களாகக் கொண்ட ஒரு சமன்பாட்டை உருவாக்குக.
33.
\(\left[ \begin{matrix} 3 & 1 & 4 \\ 2 & 0 & -1 \\ 5 & 2 & 1 \end{matrix} \right] \) என்பது பூச்சியமற்ற அணிக்கோவை அணி எனக்காட்டுக மற்றும் இவ்வணியை தொடக்க நிலை உருமாற்றங்கள் மூலம் அலகு அணியாக மாற்றுக.
1.
u(x, y, z) = xy2z3, x = sin t, y = cos t, z = 1+ e2t
\(\frac { \partial u }{ \partial x } ={ y }^{ 2 }{ z }^{ 3 };\frac { \partial u }{ \partial y } ={ 2xyz }^{ 3 }\)
\(\frac { \partial u }{ \partial z } =3{ x }y^{ 2 }{ z }^{ 2 }\)
\(\frac { \partial u }{ \partial x } ={ cos }^{ 2 }t+{ (1+{ e }^{ 2t }) }^{ 3 };\)
\(\frac { \partial u }{ \partial y } =2sin \ t \ cos \ t{ (1+{ e }^{ 2t }) }^{ 3 }\);
\(\frac { \partial u }{ \partial z } =3 \ sin \ t \ { cos }^{ 2 }t{ (1+{ e }^{ 2t }) }^{ 3 }\)
\(\frac { dx }{ dt } =cos \ t;\frac { dy }{ dt } =-sin \ t\)
\(\frac { dz }{ dt } ={ 2e }^{ 2t }\)
\(\frac { du }{ dt } =\frac { \partial u }{ \partial x } .\frac { dx }{ dt } +\frac { \partial u }{ \partial y } .\frac { dy }{ dt } +\frac { \partial u }{ \partial z } .\frac { dz }{ dt } \)
= cos2 t (1 + et)3 (cos t) + 2 sin t cos t ( 1+ e2t)3 (- sin t) + 3 sin t cos2t (1+ e2t)2 (2e2t)
= (1 + e2t)2 [cos3 t(1 + e2t) - 2 sin2 t cos t (1+ e2t) + 6 sin (cos2 t e2t]
\(\frac{du}{dt}\) = (1 + e2t)2 [cos3t (1 + e2t) - sin t sin 2t (1 e2t) + 6 e2t sin t cos2t
[∵ sin 2t = 2 sin t cos t]
2.

பரவளையத்தின் முனை V1 மற்றும் அதிபரவளையத்தின் முனை V2 என்க.
\(\overset { \_ \_ \_ \_ \_ \_ }{ { F }_{ 1 }{ F }_{ 2 } } \) = 14 − 2 = 12 மீ, 2c = 12, c = 6
மையத்திலிருந்து அதிபரவளையத்தின் முனைக்கு உள்ள தூரம் a = 6 - 1 = 5
b2 = c2 -a2
= 36 − 25 = 11
எனவே அதிபரவளையத்தின் சமன்பாடு \(\frac { { y }^{ 2 } }{ 25 } -\frac { { x }^{ 2 } }{ 11 } =1\)
3.
cos-1 x : [-1, 1] \(\rightarrow\) [0, \(\pi\)] எனும் நேர்மாறு கொசைன் சார்பு வரையறையின்படி, cos−1x = y எனில், எனில் மட்டுமே cos y = x. இங்கு \(-1\le x\le1 \) மற்றும் \(0\le y \le\pi\) ஆகையால்,
i) cos-1 \((-\frac{1}{\sqrt2})\) = \(\frac{3\pi}{4}\), ஏனெனில் \(\frac{3\pi}{4}\)\(\in[0,\pi]\) மற்றும் cos\(\frac{3\pi}{4}\) = cos\((\pi-\frac{\pi}{4})=-cos \frac{\pi}{4}=-\frac{1}{\sqrt2}\)
ii) cos-1\((\cos(-\frac{\pi}{3}))\) = cos-1\((cos(\frac{\pi}{3}))\) = \(\frac{\pi}{3}\), ஏனெனில் -\(\frac{\pi}{3}\)\(\notin \)[0,\(\pi\)], ஆனால் \(\frac{\pi}{3}\in[0, \pi]\)
iii) cos-1\((\cos(\frac{7\pi}{6}))\) = \(\frac{5\pi}{6}\), ஏனெனில் cos\((\frac{7x}{6})=\cos(\pi+\frac{\pi}{6})=-\frac{\sqrt3}{2}=\cos(\frac{5\pi}{6})\) மற்றும் \( (\frac{5\pi}{6})\in[0, \pi].\)
4.
\(y=x\sqrt { 4-x } =f(x)\)
1) \(x>4\) எனும்போது,வளைவரை அமையவில்லை மற்றும் \(x\le 4\) க்கு வளைவரை அமைகிறது.
2) சார்பகம் \(\left( -\infty ,4 \right) \) மற்றும் வீச்சகம் \(\left( -\infty ,\cfrac { 16 }{ 3\sqrt { 3 } } \right) \).
3) வளைவரை ஆதி வழியாகச் செல்கிறது. வளைவரை X-அச்சை (4,0) எனும் புள்ளியில் வெட்டுகிறது.
4) \(f'(x)=-\cfrac { x }{ 2\sqrt { 4-x } } +\sqrt { 4-x } =\cfrac { 8-3x }{ 2\sqrt { 4-x } } \)
\(f'(x)=0\Rightarrow 8-3x=0\Rightarrow x=\cfrac { 8 }{ 3 } \)
\(\therefore\) நிலை எண்கள் \(x=\cfrac { 8 }{ 3 } \) ல் உள்ளது.
5) \(f''\left( x \right) =\cfrac { 3x-16 }{ 4\left( 4-x \right) ^{ \frac { 3 }{ 2 } } } \)
\(f''\left( \cfrac { 8 }{ 3 } \right) =-\cfrac { 3\sqrt { 3 } }{ 4 } <0\)
\(\therefore x=\cfrac { 8 }{ 3 } \) எனும்போது f(x) பெருமமாகிறது மற்றும் இடஞ்சார்ந்த பெரும மதிப்பு \(f\left( \cfrac { 8 }{ 3 } \right) =\cfrac { 16 }{ 3\sqrt { 3 } } \)
மற்றும் படத்திலிருந்து x=4 எனும்போது இடஞ்சார்ந்த சிறுமம் என்பது 0.
5) \(f''\left( x \right) =\cfrac { 3x-16 }{ 4\left( 4-x \right) ^{ \frac { 3 }{ 2 } } } <0\forall x<4\)
\(\therefore\) வளைவரை மெய்யெண் கோட்டில் குறை மதிப்புகளுக்கு கீழ்நோக்கிய குழிவாக உள்ளது.
6) வளைவு மாற்றப் புள்ளிகள் இல்லை.
7) \(x\rightarrow \infty \) எனும்போது \(y\rightarrow \pm \infty \) என்பதால் வளைவரைக்கு தொலைதொடுகோடுகள் கிடையாது.
5.
\(M=\left\{\left(\begin{array}{ll} x & x \\ x & x \end{array}\right): x \in R-\{0\}\right\}\) என்க
அடைவுப் பண்பு:
\(A=\left\{ \begin{matrix} x & x \\ x & x \end{matrix} \right\} \in M\) மற்றும்
\(B=\left( \begin{matrix} y & y \\ y & y \end{matrix} \right) \in M\) என்க.
எனவே,\(AB=\left( \begin{matrix} 2xy & 2xy \\ 2xy & 2xy \end{matrix} \right) \)
\(x\neq 0,y\neq 0\) என்பதால் \(2xy\neq 0\) என்பதைக் காண்கிறோம்.மேலும் \(AB \in M\) .இது அணிப்பெருக்கலின் கீழ் M என்பது அடைவைப் பெற்றுள்ளது என்பதைக் காட்டுகிறது.
பரிமாற்றுப் பண்பு:
\(AB=\left( \begin{matrix} 2xy & 2xy \\ 2xy & 2xy \end{matrix} \right) \)
= BA எல்லா \(A, B \in M\)
இங்கு அணிப்பெருக்கல் என்பது பரிமாற்றுப் பண்பை நிறைவு செய்கிறது.
சேர்ப்புப் பண்பு:
அணிப்பெருக்கல் எப்போதும் சேர்ப்புப் பண்பை நிறைவு செய்யும்.எனவே M-ன் மீது அணிப்பெருக்கல் சேர்ப்புப் பண்பை நிறைவு செய்கிறது.
6.
தொகையிடலைப் பயன்படுத்தி,கூம்பின் இடைக்கண்டத்தின் கன அளவைக் காண வேண்டும்.முதலில் வளைவரையின் சமன்பாட்டைக் காண வேண்டும்.
A(0,1) மற்றும் B(2,2) என்பன இருபுள்ளிகள் என்க.இந்த இரு புள்ளிகளை இணைக்கும் நேர்கோடு x அச்சைப் பற்றிச் சுழல்கிறது.
AB-ன் சமன்பாடு
\(\cfrac { y-1 }{ 2-1 } =\cfrac { x-0 }{ 2-0 } \)
\(\cfrac { y-1 }{ 1 } =\cfrac { x }{ 2 } \)
\(y-1=\cfrac { x }{ 2 } \)
\(y=\cfrac { x }{ 2 } +1\)
\(y=\cfrac { x+2 }{ 2 } \)
x -அச்சைப் பற்றிச் சுழல்வதால் கிடைக்கும் திடப்பொருளின் கன அளவு
= \(\pi \int _{ a }^{ b }{ { y }^{ 2 }dx } \)
= \(\pi \int _{ 0 }^{ 2 }{ \cfrac { \left( x+2 \right) ^{ 2 } }{ 4 } dx } \)
= \(\cfrac { \pi }{ 4 } \left[ \cfrac { \left( x+2 \right) ^{ 3 } }{ 3 } \right] _{ 0 }^{ 2 }\)
= \(\cfrac { \pi }{ 4 } \left[ \cfrac { 64 }{ 3 } -\cfrac { 8 }{ 3 } \right] \)
= \(\cfrac { \pi }{ 4 } \left[ \cfrac { 56 }{ 3 } \right] =\cfrac { 14 }{ 3 } \pi \)
கூம்பின் இடைக் கண்டத்தின் கன அளவு = \(\cfrac { 14 }{ 3 } \pi \) மீ
7.
f'(x) = -2x2 e-2x + 2x e-2x
பெருமம் அல்லது சிறும மதிப்புக்கு, f'(x) = 0
\(\Rightarrow\) -2x e-2x (x - 1) = 0 \(\Rightarrow\) x = 0, 1
f"(x) = -2 [-2x2 e-2x + 4x e-2x - e-2x]
x = 0 ல், f"(x) > 0 \(\Rightarrow\) f(x) சிறுமத்தை அடைகிறது.
x = 1 ல், f"(x) < 0 \(\Rightarrow\) f(x) பெருமத்தை அடைகிறது.
\(\therefore\) இடஞ்சார்ந்த சிறும மதிப்பு f(0) = 0
இடஞ்சார்ந்த பெரும மதிப்பு f(1) = \(\frac{1}{e^2}\)
8.
T என்பது கொதித்துக் கொண்டிருக்கும் நீரின் வெப்பநிலை மற்றும் Tm என்பது சமையலறையின் வெப்பநிலை காண்க.
நியூட்டனின் குளிர்ச்சியடையும் விதிப்படி
\(\cfrac { dT }{ dt } =k\left( T-{ T }_{ m } \right) \)
சமன்பாட்டை \(\cfrac { dT }{ T-{ T }_{ m } } =kdt\) எனுமாறு எழுதலாம்.
இருபுறமும் தொகையிடக் கிடைப்பது
\(\int { \cfrac { dt }{ T-{ T }_{ m } } } =k\int { dt } \)
\(\Rightarrow log\left( T-{ T }_{ m } \right) =kt+logc\)
\(\Rightarrow log\left( T-{ T }_{ m } \right) -logc=kt\)
\(log\left( \cfrac { T-{ T }_{ m } }{ c } \right) =kt\)
\(\cfrac { T-{ T }_{ m } }{ c } ={ e }^{ ktr }\)
\(T-{ T }_{ m }={ ce }^{ kt }\)
தொடக்கக் கட்டுப்பாடு :
\(t=0\) எனும்போது \(T=100\)
\(100-{ T }_{ m }={ ce }^{ k(0) }\)
\(100-{ T }_{ m }={ ce }^{ 0 }\)
\(100-{ T }_{ m }=c\)
\(c=100-{ T }_{ m }\)
c ன் மதிப்பை சமன்பாடு (1)ல் பிரதியிடக் கிடைப்பது.
\(T-{ T }_{ m }=\left( 100-{ T }_{ m } \right) { e }^{ kt }\)
மேலும் கொடுக்கப்பட்டது:t=5 எனும்போது T=80
\(80-{ T }_{ m }=\left( 100-{ T }_{ m } \right) { e }^{ kt }\)
\(\cfrac { 80-{ T }_{ m } }{ 100-{ T }_{ m } } ={ e }^{ 5k }\)
\(\therefore { e }^{ 5k }=\cfrac { 80-{ T }_{ m } }{ 100-{ T }_{ m } } \)
அதன் பிறகு \(t=0\) T=65
\((2)\Rightarrow 65-{ T }_{ m }=\left( 100-{ T }_{ m } \right) { e }^{ 10k }\)
\(\cfrac { 65-{ T }_{ m } }{ 100-{ T }_{ m } } ={ e }^{ 10k }\)
\({ e }^{ 10k }=\cfrac { 65-{ T }_{ m } }{ 100-{ T }_{ m } } \)
\(\left( { e }^{ 10k } \right) =\cfrac { 65-{ Tm } }{ 100-{ T }_{ m } } \)
\(\left( \cfrac { 80-{ T }_{ m } }{ 100-{ T }_{ m } } \right) ^{ 2 }=\cfrac { 65-{ T }_{ m } }{ 100-{ T }_{ m } } \)
\(\cfrac { \left( 80-{ T }_{ m } \right) }{ \left( 100-{ T }_{ m } \right) } =\cfrac { 65-{ T }_{ m } }{ 100-{ T }_{ m } } \)
\(\left( 80-{ T }_{ m } \right) ^{ 2 }=\left( 65-{ T }_{ m } \right) \left( 100-{ T }_{ m } \right) \)
\(\left( a-b \right) ^{ 2 }={ a }^{ 2 }+{ b }^{ 2 }-2ab\)
\(\\ a=80,b={ T }_{ m }\)
\(6400+{ T }_{ m }^{ 2 }-160{ T }_{ m }=6500-100{ T }_{ m }-65{ T }_{ m }+{ T }_{ m }^{ 2 }\)
\(64000-6500=160{ T }_{ m }-165{ T }_{ m }\)
\(-100=\cfrac { 100 }{ 5 } \)
\({ T }_{ m }=20^{ o }c\)
எனவே சமையலறையின் வெப்பநிலை 20oC.
9.
P என்பது முதலீடு செய்யப்பட்ட தொகை என்க.
கொடுக்கப்பட்ட வட்டிவீதம்=5% வருடத்திற்கு
\(\therefore \cfrac { dp }{ dt } =P\left( \cfrac { 5 }{ 100 } \right) =0.05P\)
சமன்பாட்டை \(\cfrac { dp }{ p } =0.05dt \) எனுமாறு எழுதலாம்.
இருபுறமும் தொகையிடக் கிடைப்பது
\(\int { \cfrac { dp }{ p } } =0.05\int { dt } \)
\(logp=0.05t+logc\)
\(log P-logC=0.05t\)
\(log\left( \cfrac { P }{ C } \right) =0.05t\)
\(\cfrac { P }{ C } ={ e }^{ 0.05t }\)
\(P={ Ce }^{ 0.05t }\) ..(1)
தொடக்கக் கட்டுப்பாடு:
கொடுக்கப்பட்டது t =0 எனில் P=10,000 இம்மதிப்புகளை சமன்பாடு (1) ல் பிரதியிடக் கிடைப்பது.
\(P={ Ce }^{ 0.05t }\)
\(10,000=C{ e }^{ 0.05(0) }\)
\(10,000=C{ e }^{ 0 }\)
\(C=10,000\)
ஃ C ன் மதிப்பை (1) ல் பிரதியிடக் கிடைப்பது
\(P=10000e^{ 0.05t }\)
t=18 மாதங்கள்= \(1\cfrac { 1 }{ 2 } \) வருடம்= \(\cfrac { 3 }{ 2 } \) எனில்
\((2)\Rightarrow P=10,000{ e }^{ 0.05(3/2) }\)
\(P=10,000{ e }^{ 0.075 }\)
அவர் வங்கிக் கணக்கில் உள்ள தொகை \(\\ P=10,000{ e }^{ 0.075 }\)
10.
t நேரத்தில் உடலின் வெப்பநிலை T என்க. பிற்பகல் 8 மணி என்பதை t = 0 எனக்கொள்க.
நியுட்டனின் குளிர்வு விதிப்படி, \(\frac { dT }{ dt } =k(T-50)\) அல்லது \(\frac { dT }{ T-50 } =dt\).
இரு பக்கமும் தொகையிட, \(log\left| 50-T \right| =kt+logC\) அல்லது 50 - T = Cekt.
t = 0 எனும்போது T = 70 என்பதால், C = -20
t = 2 எனும்போது T = 60 என்பதா ல், -10 = -20ek2.
ஆகவே, \(k=\frac { 1 }{ 2 } log\left( \frac { 1 }{ 2 } \right) \).
எனவே, தீர்வு \(50-T=-20{ e }^{ \frac { 1 }{ 2 } log\left( \frac { 1 }{ 2 } \right) }\) அல்லது T = 50 + 20 \(( \frac { 1 }{ 2 })^{ \frac { 1 }{ 2 }}\)
நாம் இப்பொழுது T(t) = 98.6ஆக இருக்கும்போது t-ன் மதிப்பைக் காணவேண்டும். \(t=2\left( \frac { log\left( \frac { 48.6 }{ 20 } \right) }{ log\left( \frac { 1 }{ 2 } \right) } \right) \approx -2.56\)
எனவே , அந்நபர் இறந்த நேரம் பிற்பகல் 5.30 மணியாகும்
11.
கொடுக்கப்பட்ட வகைக்கெழுச் சமன்பாட்டை
\(\cfrac { xsinx }{ xsinx } \cfrac { dy }{ dx } +\cfrac { \left( xcosx+sinx \right) y }{ xsiny } =\cfrac { sinx }{ xsinx } \)
எனுமாறு எழுதலாம்.
\(\cfrac { dy }{ dx } +\left( \cfrac { xcosx }{ xsinx } +\cfrac { sinx }{ xsinx } \right) y=\cfrac { 1 }{ x } \)
\(\cfrac { dy }{ dx } +\left( cotx+\cfrac { 1 }{ x } \right) y=\cfrac { 1 }{ x } \)
இது \(\cfrac { dy }{ dx } +Py=Q\) எனும் வடிவில் உள்ளது.
இங்கு \(P=cotx+\cfrac { 1 }{ x } ;Q=\cfrac { 1 }{ x } \)
இது ஒரு நேரியல் வகைக்கெழுச் சமன்பாடு
தொ.கா = \({ e }^{ \int { pdx } }={ e }^{ \int { (cotx+1/x)dx } }={ e }^{ logsinx+logx }\)
= \({ e }^{ log(xsinx) }=xsinx\)
சமன்பாட்டின் தீர்வு
\(y\times I.F=\int { (Q\times I.F)dx+c } \)
\(y\left( xsinx \right) =\int { \frac { 1 }{ x } } xsinxdx+c\)
= \(y\left( xsinx \right) =\int { \frac { 1 }{ x } } xsinxdx+c\)
= \(\int { sinx } dx+c\)
\(y\left( xsinx \right) =-cosx+c\)
\(xysinx+cosx=c\) என்பது தேவையான தீர்வாகும்.
12.
கொடுக்கப்பட்ட சமன்பாட்டை
\(\cfrac { dy }{ dx } =\cfrac { -2xy }{ { x }^{ 2 }+{ 2y }^{ 2 } } \) எனுமாறு எழுதலாம்.
இது ஒரு சமப்படிதான வகைக்கெழுச் சமன்பாடு
y=vx எனப் பிரதியிட
\(\cfrac { dy }{ dx } =v\left( 1 \right) +x\cfrac { dv }{ dx } \)
\(\cfrac { dy }{ dx } =v+x\cfrac { dv }{ dx } \)
கொடுக்கப்பட்ட வகைக்கெழுச் சமன்பாடு
\(M\cfrac { dV }{ dt } =F-kV\)
கொடுக்கப்பட்ட சமன்பாட்டை
\(\cfrac { dV }{ F-kV } =\cfrac { dt }{ M } \) எனுமாறு எழுதலாம்.
தொகையிடக் கிடைப்பது
\(\int { \cfrac { dV }{ F-kV } } =\int { \cfrac { dt }{ M } } \)
\(\cfrac { log\left( F-kV \right) }{ -k } =\cfrac { t }{ m } +logc\)
\(log\left[ F-kV \right] =-\cfrac { kt }{ M } +logC\)
\(log\left[ F-kV \right] -logC=-\cfrac { kt }{ M } \)
\(log\left( \cfrac { F-kV }{ C } \right) =-\cfrac { kt }{ M } \)
\(\cfrac { F-kV }{ C } ={ e }^{ \frac { -kt }{ M } }\)
\(\cfrac { F-kV }{ { e }^{ \frac { -kt }{ M } } } =C\Rightarrow C={ e }^{ \frac { kt }{ M } }\left( F-kV \right) \) ....(1)
தொடக்கக் கட்டுப்பாடு
கொடுக்கப்பட்டது t=0 எனும்போது \(V=0\)
\(C={ E }^{ \frac { k(0) }{ { e }^{ M } } }\left[ F-k(0) \right] \)
= \({ e }^{ 0 }\left[ F-0 \right] \)
C=F
\(\therefore \left( 1 \right) \Rightarrow F=\left( F-kV \right) { e }^{ \frac { kt }{ M } }\)
13.
கொடுக்கப்பட்ட வளைவரையின் சாய்வு \(\cfrac { y-1 }{ { x }^{ 2 }+x } \)
\(\cfrac { dy }{ dx } =\cfrac { y-1 }{ { x }^{ 2 }+x } \)
சமன்பாட்டை \(\cfrac { dy }{ y-1 } =\cfrac { dx }{ { x }^{ 2 }+x } \) ...(1) எனுமாறு எழுதலாம்.
\(\cfrac { 1 }{ { x }^{ 2 }+x } =\cfrac { 1 }{ x(x+1) } =\cfrac { A }{ x } +\cfrac { B }{ x+1 } \)
\(I=A(x+1)+B(x)\)
x=-1 என்க. x=0 என்க
\(I=A(0)+B(-1)\quad I=A(0+1)+B(0)\)
\(I=-B\quad I=A\)
\(B=-1\quad A=1\)
\(\therefore \cfrac { 1 }{ { x }^{ 2 }+x } =\cfrac { 1 }{ x } -\cfrac { 1 }{ x+1 } \)
(2) ஆம் சமன்பாட்டை,சமன்பாடு (1) ல் பிரதியிடக் கிடைப்பது
\(\cfrac { dy }{ y-1 } =\cfrac { dx }{ x } -\cfrac { dx }{ x+1 } \)
இருபுறமும் தொகையிடக் கிடைப்பது
\(log(y-1)=logx-log(x+1)+loC\)
\(log(y-1)=logC+logx-log(x+1)\)
= \(logCx-log(x+1)\)
\(log(y-1)=log\left( \cfrac { Cx }{ x+1 } \right) \)
\(y-1=\cfrac { Cx }{ x+1 } \)
வளைவரை (1,0) என்ற புள்ளி வழிச் செல்வதால்
\(0-1=\cfrac { C(1) }{ 1+1 } \)
\(-1=\cfrac { C }{ 2 } \)
\(-2=C\)
\((3)\Rightarrow y-1=\cfrac { 2x }{ x+1 } \)
\(y=1-\cfrac { 2x }{ x+1 } \)
= \(\cfrac { x+1-2x }{ x+1 } \)
= \(\cfrac { 1-x }{ x+1 } \)
\(\therefore y=\cfrac { 1-x }{ x+1 } \)
14.
சிறிய பகுதியின் பரப்பு படம் -ல் நிழலிடப்பட்டுள்ளது. இங்கு < 0 < h < a வட்டம் x -அச்சைப் பொருத்து சமச்சீராக இருப்பதால் சிறிய பகுதியின் பரப்பு.
A = 2 \(\int ^{a}_{h} \sqrt {{a^2}-{x^2}} dx\) = 2 \([\frac {x \sqrt {a^2 - x^2}}{2} + \frac {a^2}{2} sin ^{-1} (\frac {x}{a})]^a_b\)
= 2 \([0+\frac {a^2}{2} sin^{-1} (1)]\) - 2 \([ \frac {h \sqrt {a^{2} -h^{2} }} {2} + \frac{a^2}{2} sin ^{-1}( \frac {h}{a})]\)
= \( a^2 (\frac {\pi}{2}) - h \sqrt {{a^2}-{h^2}} - a^2 sin^{-1} (\frac{h}{a})\)
= \(a ^2 [\frac {\pi}{2} - sin ^{-1} \frac {h}{a}] - h \sqrt {{a^2}-{h^2}}\)
= \(a^2 cos^{-1} (\frac{h}{a}) - h \sqrt{{a^2}-{h^2}}\)
15.
X என்பது வெல்லும் தொகை என்க. சாத்தியமான தேர்வுகளாவன (i) இரு பந்துகளுமே கருப்பு, அல்லது (ii) ஒரு வெள்ளை மற்றும் ஒரு கருப்பு (iii) இரண்டுமே வெள்ளை . எனவே X எனும் சமவாய்ப்பு மாறி கீழ்க்காணுமாறு வரையறுக்கப்படுகிறது:
X (இரண்டுமே கருப்பு பந்துகள்) = ரூ. 2(20) = ரூ .40
X (ஒரு கருப்பு பந்து மற்றும் ஒரு வெள்ளைப் பந்து) = ரூ . 20 − ரூ .10 = ரூ .10
X (இரண்டுமே வெள்ளைப் பந்துகள்) = ரூ. (-20) = - ரூ 20
எனவே X கொள்ளும் மதிப்புகள் 40,10 மற்றும் −20 ஆகும்.
மொத்த பந்துகள் n = 12
2 பந்துகள் தேர்ந்தெடுக்க மொத்த வழிகள் = \(\left( \begin{matrix} 12 \\ 2 \end{matrix} \right )=\frac{12\times11}{1\times2}=66\)
2 கருப்பு பந்துகள் தேர்ந்தெடுக்க வழிகள் = \(\left( \begin{matrix} 4 \\ 2 \end{matrix} \right )=6\)
ஒரு கருப்பு பந்து மற்றும் ஒரு வெள்ளை பந்து தேர்ந்தெடுக்க = \(\left( \begin{matrix} 8 \\ 1 \end{matrix} \right )\left( \begin{matrix} 4 \\ 1 \end{matrix} \right )=32\)
2 வெள்ளை பந்துகள் தேர்ந்தெடுக்க வழிகள் = \(\left( \begin{matrix} 8 \\ 2 \end{matrix} \right )=28\)
| சமவாய்ப்பு மாறியின் மதிப்புகள் | 40 | 10 | -20 | மொத்தம் |
| நேர்மாறு பிம்பங்களில் உறுப்புகளின் எண்ணிக்கை | 6 | 32 | 28 | 66 |
நிகழ்தகவு நிறை சார்பானது
| x | 40 | 10 | -20 | மொத்தம் |
| f(x) | \(\frac{6}{66} \) | \(\frac{32}{66} \) | \(\frac{28}{66} \) | 1 |
சராசரி : \(E(X) = \sum{xf(x)}=40.(\frac{6}{66})+10.(\frac{32}{66})+(-20).(\frac{28}{66})=0\)
அதாவது எதிர்பார்க்கப்படும் வெல்லும் தொகை 0 .
பரவற்படி : \(E(X^2)=\sum{x^2f(x)=40^2.(\frac{6}{66})+10^2.(\frac{32}{66})+({-20^2}).(\frac{28}{66})}=\frac{4000}{11}\)
(E(X))2 = 02 = 0
இதன்படி \(V(X) = E(X^2)-(E(X))^2=\frac{4000}{11}-0=\frac{4000}{11}\)
எனவே \(E(X)=0\) மற்றும் \(Var(X)=\frac{4000}{11}\)
16.
(i) வரையறைப்படி F(x) = P(X ≤ x) = \(\int_{-\infty}^{x}{f(u)du}\)
x <1 எனும்போது, F(x) = P(X ≤ x) = \(\int_{-\infty}^{x}{0du}=0.\)
1≤ x < 2 எனும்போது, F(x) = P(X ≤ x) = \(\int_{-\infty}^{1}{0du}+\int_{1}^{x}{(u-1)du}\)
= \(0+[\frac{(u-1)^2}{2}]_{1}^{x}=\frac{(x-1)^2}{2} \)
2 ≤ x < 3 எனும்போது, F(x) = P(X ≤ x) = \(\int_{-\infty}^{1}{0du}+\int_{1}^{2}{(u-1)du+\int_{2}^{x}{(3-u)du}}\)
= \(0+[\frac{(u-1)^2}{2}]_{1}^{2}+[-\frac{(3-u)^2}{2}]_{2}^{x}\)
=\(\frac{1^2-0}{2}+\frac{1-(3-x)^{2}}{2}=1 -\frac{(3-x)^2}{2}\)
x ≥ 3 எனும்போது, F(x) = P(X ≤ x) = \(\int_{-\infty}^{1}{0du}+\int_{1}^{2}{(u-1)du}+\int_{2}^{3}{(3-u)du+\int_{3}^{x}{0du}}\)
= \(\int_{-\infty}^{1}{0du}+\int_{1}^{2}{(u-1)du}+\int_{2}^{3}{(3-u)du+\int_{3}^{x}{0du}}\)
= \(0+[\frac{(u-1)^2}{2}]_{1}^{2}+[-\frac{(3-u)^2}{2}]_{2}^{3}+0\)
=\(\frac{1}{2}+\frac{1}{2}=1.\)
இவற்றின் மூலம்
(ii) P(1.5 ≤ X ≤ 2.5) = F(2.5) - F(1.5)
= \((1-\frac{(3-2.5)^2}{2})-(\frac{(1.5-1)^2}{2})\)
\(=\frac{1.75-0.25}{2}=0.75\)
அல்லது
\(P(1.5\le X \le 2.5) = \int_{1.5}^{2.5}{f(x)dx} = \int_{1.5}^{2}{(x-1)}dx+\int_{2}^{2.5}{(-x+3)}dx=0.75\)
17.
I = \(\int ^{\pi}_{-\pi} \frac{cos ^2 x}{1+ a^x} dx\) ------ (1)
\(\int ^{b}_{a}\) f(x) dx = \(\int ^{b}_{a}\) f(a+b -x)dx என்பதை பயன்படுத்த,
I = \(\int ^{\pi}_{-\pi} \frac{cos ^2 (\pi -\pi - x)}{1+ a^{\pi -\pi - x}} dx\)
= \(\int ^{\pi}_{-\pi} \frac{cos ^2 (-x)}{1+ a^{-x}} dx\)
= \(\int ^{\pi}_{-\pi} a^x (\frac{cos ^2 x }{a^x+ 1} )dx\) ------- (2)
சமன்பாடு (1)-யும் (2)-யும் கூட்டக் கிடைப்பது
2I = \(\int ^{\pi}_{-\pi} \frac{cos ^2 x }{a^x+ 1}(a^x+ 1) dx\) = \(\int ^{\pi}_{-\pi} cos ^2 x dx\)
= 2 \(x =\int ^{\pi}_{-\pi} cos ^2 x dx\) (∵ cos2 x ஓர் இரட்டைப் படைச் சார்பு)
எனவே , I = \(\int ^{\pi}_{0} (\frac{1 + cos2x }{2} )dx\) = \(\frac {1}{2} [ x + \frac {sin 2x}{2}]^{\pi }_{0}\) = \(\frac {1}{2} [\pi]\) = \(\frac {\pi}{2}\)
18.
சமவாய்ப்பு மாறி X என்பது பகடையின் இரு உருட்டல்களில் கிடைக்கும் எண்களின் கூட்டுத்தொகை என்க.
கூறுவெளி S
| I\II | 1 | 3 | 3 | 5 | 5 | 5 |
| 1 | 2 | 4 | 4 | 6 | 6 | 6 |
| 3 | 4 | 6 | 6 | 8 | 8 | 8 |
| 3 | 4 | 6 | 6 | 8 | 8 | 8 |
| 5 | 6 | 8 | 8 | 10 | 10 | 10 |
| 5 | 6 | 8 | 8 | 10 | 10 | 10 |
| 5 | 6 | 8 | 8 | 10 | 10 | 10 |
n(S) = 36
X = {2, 4, 6, 8, 10}
| சமவாய்ப்பு மாறி X-ன் மதிப்புகள் | 2 | 4 | 6 | 8 | 10 | மொத்தம் |
| நேர்மாறு பிம்பங்களில் உறுப்புகளின் எண்ணிக்கை | 1 | 4 | 10 | 12 | 9 | 36 |
(i) நிகழ்தகவு நிறைச் சார்பு
| x | 2 | 4 | 6 | 8 | 10 |
| f(x) | \(\cfrac { 1 }{ 36 } \) | \(\cfrac { 4 }{ 36 } \) | \(\cfrac { 10 }{ 36 } \) | \(\cfrac { 12 }{ 36 } \) | \(\cfrac { 9 }{ 36 } \) |

(ii) குவிவு பரவல் சார்பு
\(\begin{array}{r} \mathrm{F}(\mathrm{x})=\mathrm{P}(\mathrm{X} \leq \mathrm{x})=\sum_{\mathrm{x}_i \leq \mathrm{x}} P\left(X=x_i\right) \\ \end{array}\)
\(\mathrm{P}(\mathrm{X}<2)=0,-\infty<\mathrm{x}<2 \)
\(\begin{aligned} \mathrm{F}(2)=\mathrm{P}(X \leq 2) & =\mathrm{P}(X<2)+\mathrm{P}(X=2) \\ \end{aligned}\)
\(\begin{aligned} =0+\frac{1}{36}=\frac{1}{36} \end{aligned}\)
\(\begin{aligned} \mathrm{F}(4)=\mathrm{P}(X \leq 4) & =\mathrm{P}(X<2)+\mathrm{P}(X=2)+\mathrm{P}(X=4) \\ \end{aligned}\)
\(\begin{aligned} =0+\frac{1}{36}+\frac{4}{36}=\frac{5}{36} \end{aligned}\)
\(\begin{aligned} \mathrm{F}(6)=\mathrm{P}(X \leq 6)=\mathrm{P}(X<2)+\mathrm{P}(X=2)+ \mathrm{P}(X=4)+\mathrm{P}(X=6) \end{aligned}\)
\(\begin{aligned} =0+\frac{1}{36}+\frac{4}{36}+\frac{10}{36}=\frac{15}{36} \end{aligned}\)
\(\begin{aligned} \mathrm{F}(8)=\mathrm{P}(X \leq 8)= & \mathrm{P}(X<2)+\mathrm{P}(X=2)+\mathrm{P}(X=4) +\mathrm{P}(X=6)+\mathrm{P}(X=8) \\ \end{aligned}\)
\(\begin{aligned} = 0+\frac{1}{36}+\frac{4}{36}+\frac{10}{36}+\frac{12}{36}=\frac{27}{36} \end{aligned}\)
\(\begin{aligned} \mathrm{F}(10)=\mathrm{P}(X \leq 10)= & \mathrm{P}(X<2)+\mathrm{P}(X=2) +\mathrm{P}(X=4)+\mathrm{P}(X=6) +\mathrm{P}(X=8)+\mathrm{P}(X=10) \\ \end{aligned}\)
\(\begin{aligned} = 0+\frac{1}{36}+\frac{4}{36}+\frac{10}{36}+\frac{12}{36}+\frac{9}{36} \\ \end{aligned}\)
\(\begin{aligned} = \frac{36}{36}=1 \end{aligned}\)


(iii) \(\begin{aligned} \mathrm{P}(4 & \leq X<10) \end{aligned}\)
\(\begin{aligned} =\mathrm{P}(X=4)+\mathrm{P}(X=6)+\mathrm{P}(X=8) \end{aligned}\)
\(\begin{aligned} =\frac{4}{36}+\frac{10}{36}+\frac{12}{36}=\frac{26}{36}=\frac{13}{18} \end{aligned}\)
(iv) \(\begin{aligned} \mathrm{P}(X & \geq 6) \end{aligned}\)
\(\begin{aligned} =\mathrm{P}(X=6)+\mathrm{P}(X=8)+\mathrm{P}(X=10) \end{aligned}\)
\(\begin{aligned} =\frac{10}{36}+\frac{12}{36}+\frac{9}{36}=\frac{31}{36} \end{aligned}\)
19.

x-ஐப் பொறுத்து வகையிட, \(\frac{dy}{dx}=2x+3\), ஆகவே, \((\frac{dy}{dx})_{(1,2)}=5\).
எனவே , தேவையான தொடுகோட்டின் சமன்பாடு
\((y-2)=5(x-1)\Rightarrow 5x-y-3=0\) ஆகும்.
(1, 2) என்ற புள்ளியில் செங்கோட்டின் சாய்வு -\(\frac{1}{5}\).
எனவே , தேவையான செங்கோட்டின் சமன்பாடு
\((y-2)=-\frac{1}{5}(x-1)\Rightarrow x+5y-11=0\) ஆகும்.
20.
(i) \(s(t)={ 2t }^{ 3 }-{ 9t }^{ 2 }+12t-4,t \geq 0\)
திசைவேகம் \(v=\cfrac { ds }{ dt } ={ 6t }^{ 2 }-18t+12\)
துகளின் திசைவேகம் மாறும்போது v=0
\(\therefore { 6t }^{ 2 }-18t+12=0\)
\({ t }^{ 2 }-3t+2=0\)
\(\left( t-2 \right) \left( t-1 \right) =0\)
\(t=1,2\)
\(\therefore t=1\) வினாடி மற்றும் t=2 வினாடி எனும்போது,துகளின் திசை மாறுகிறது.
(ii) முதல் 4 வினாடிகளில் துகள் பயணித்த தூரம்
\(s(0)=-4\)
\(s(1)=2\left( 1 \right) ^{ 3 }-9\left( 1 \right) ^{ 2 }+12(1)-4\)
= 2-9+12-4 = 1
\(s(2)=2(2)^{ 3 }-9\left( 2 \right) ^{ 2 }+12(2)-4\)
= \(16-36+24-4\) = 0
\(s(3)=2\left( 3 \right) ^{ 3 }-9\left( 3 \right) ^{ 2 }+12\left( 3 \right) -4\)
= \(54-81+36-4\) = 5
\(s(4)=2\left( 4 \right) ^{ 3 }-9\left( 4 \right) ^{ 2 }+12(4)-4\)
= \(128-144+48-4\) = 28
முதல் 4 வினாடிகளில் துகள் பயணித்த தூரம்
= \(|s(0)+s(1)|+|s(1)-s(2)|+|s(2)-s(3)|+|s(3)-s(4)|\)
= \(|-4-1|+|1-0|+|0-5|+|5-28|\)
= \(|-5|+|1|+|-5|+|-23|\)
= 5+1+5+23 = 34 மீ .
(iii) \(s(t)={ 2t }^{ 3 }-9{ t }^{ 2 }+12t-4\)
திசைவேகம் \(v=\cfrac { ds }{ dt } ={ 6t }^{ 2 }-18t+12\)
\(v=0\Rightarrow 6\left( { t }^{ 2 }-3t+2 \right) =0\Rightarrow t=1,2\)
முடுக்கம் = \(\cfrac { { d }^{ 2 }s }{ { dt }^{ 2 } } =12t-18\)
t=1ல், முடுக்கம் = 12(1) - 18 = - 6 மீ/வினாடி2
t=2ல், முடுக்கம் = 12(2) - 18 = 6 மீ /வினாடி2
21.
வரையறைப்படி,
\(\vec { a } \times \vec { b } =\left| \begin{matrix} \hat { i } & \hat { j } & \hat { k } \\ 1 & -1 & 0 \\ 1 & -1 & -4 \end{matrix} \right| =4\hat { i } +4\hat { j } ,\vec { c } \times \vec { d } =\left| \begin{matrix} \hat { i } & \hat { j } & \hat { k } \\ 0 & 3 & -1 \\ 2 & 5 & 1 \end{matrix} \right| =8\hat { i } -2\hat { j } -6\hat {k } \)
பின்னர்,
\(\left( \vec { a } \times \vec { b } \right) \times \left( \vec { c } \times \vec { d } \right) =\left| \begin{matrix} \hat { i } & \hat { j } & \hat { k } \\ 4 & 4 & 0 \\ 8 & -2 & -6 \end{matrix} \right| =-24\hat { i } +24\hat { j } -40\hat { k } \) ...(1)
இப்பொழுது,\(\left[ \vec { a } ,\vec { b } ,\vec { d } \right] \vec { c } -\left[ \vec { a } ,\vec { b } ,\vec { c } \right]\vec { d } =28\left( 3\hat { j } -\hat { k } \right) -12\left( 2\hat { i } +5\hat { j } +\hat { k } \right) =-24\hat { i } +24\hat { j } -40\hat { k } \) ...(2)
சமன்பாடுகள் (1) மற்றும் (2) ஆகியவற்றிலிருந்து, முற்றொருமை (i) நிறுவப்பட்டது. முற்றொருமை (ii)-ன் சரிபார்த்தல் மாணவர்களின் பயிற்சிக்காக விடப்பட்டுள்ளது.
22.
AB என்பது தடி என்க மற்றும் P(x1, y1) தடியின் மீதுள்ள புள்ளி AP = 0.3மீ வரைக.
\(PD\bot x\) அச்சு மற்றும் \(PC\bot y\)

\(\Delta ADP\cong \Delta PCB\)
\(\therefore \cfrac { PC }{ DA } =\cfrac { PB }{ AP } =\cfrac { BC }{ PD } \)
\(\Rightarrow \cfrac { { x }_{ 1 } }{ DA } =\cfrac { 0.9 }{ 0.3 } =\cfrac { BC }{ { y\quad }_{ 1 } } \)
\(\Rightarrow DA=\cfrac { { 0.3 }x_{ 1 } }{ 0.9 } =\cfrac { { x }_{ 1 } }{ 3 } \)
மற்றும் \(BC=\cfrac { 0.9{ y }_{ 1 } }{ 0.3 } =\cfrac { 9 }{ 3 } { y }_{ 1 }={ 3y }_{ 1 }\)
இங்கு OA = OD + DA
\({ x }_{ 1 }+\cfrac { { x }_{ 1 } }{ 3 } =\cfrac { { 4x }_{ 1 } }{ 3 } \)
OB = OC + BC = y1 + 3y1 = 4y1
OA2 + OB2 = AB2
\(\Rightarrow \left( \cfrac { 4x_{ 1 } }{ 3 } \right) ^{ 2 }+\left( { 4y }_{ 1 } \right) ^{ 2 }=\left( 1.2 \right) ^{ 2 }\)
\(\Rightarrow \cfrac { 16{ x }_{ 1 }^{ 2 } }{ 9 } +\cfrac { 16{ y }_{ 1 }^{ 2 } }{ 1 } =1.44\)
16 ஆல் வகுக்க கிடைப்பது
\(\cfrac { { x }_{ 1 }^{ 2 } }{ 9 } +\cfrac { { y }_{ 1 }^{ 2 } }{ 9 } =\cfrac { 1.44 }{ 16 } =0.09\cong 1\)
\(\therefore\) (x1, y1)\(\cfrac { { x }^{ 2 } }{ 9 } +\cfrac { { y }^{ 2 } }{ 1 } =1\)
இங்கு a2 = 9, b2
\(\therefore e=\sqrt { 1-\cfrac { { b }^{ 2 } }{ { a }^{ 2 } } } =\sqrt { 1-\cfrac { 1 }{ 9 } } =\sqrt { \cfrac { 9-1 }{ 9 } } \)
\(=\sqrt { \cfrac { 8 }{ 9 } } \)
\(e=\cfrac { 2\sqrt { 2 } }{ 3 } \)
23.
பரவளையத்தின் சமன்பாடு
(x-h)2=-4a(y-k)
இங்கு முனை (0.5, 4)
பரவளையத்தின் சமன்பாடு (x - 0.5)2 = -4a(y - 4) ..1(1)
O(0, 0) பரவளையத்தின் மீதுள்ள புள்ளி
(0 - 0.5)2 = -4a(0 - 4)
\(\Rightarrow \left( \cfrac { -1 }{ 2 } \right) ^{ 2 }=-4a\left( -4 \right) \)
\(\Rightarrow \cfrac { 1 }{ 4 } =16a\Rightarrow a=\cfrac { 1 }{ 64 } \)
\(\therefore\) (1) லிருந்து (x - 0.5)2
\((x-0.5)^{ 2 }=-4\times \cfrac { 1 }{ 64 } \left( y-4 \right) \)
மேலும் D (0.75, y1) பரவளையத்தின் மீதுள்ள ஒரு புள்ளி
\(\therefore \left( 0.75-0.5 \right) ^{ 2 }=-\cfrac { 1 }{ 16 } \left( { y }_{ 1 }-4 \right) \)
\(\Rightarrow \left( \cfrac { 3 }{ 4 } -\cfrac { 1 }{ 2 } \right) ^{ 2 }=-\cfrac { 1 }{ 16 } \left( { y }_{ 1 }-4 \right) \)
\(\Rightarrow \left( \cfrac { 1 }{ 4 } \right) ^{ 2 }=\cfrac { -1 }{ 16 } \left( { y }_{ 1 }-4 \right) \)

\(\Rightarrow 1=-{ y }_{ 1 }+4\)
\(\Rightarrow { y }_{ 1 }=-1+4=3\) மீ
0.75 மீ கிடைமட்டத் தூரத்தில் நீரின் உயரம் 3 மீ ஆகும்.
24.
கொடுக்கப்பட்ட தளம் புள்ளிகள் \(\vec { a } =2\hat { i } +\hat { 2j } +\hat { k } \) மற்றும் \(\vec { b } =9\hat { i } +3\hat { j } +6\hat { k } \) வழிச் செல்கிறது.
கொடுக்கப்பட்ட தளத்தின் சமன்பாடு \(2x+6y+6z=9\)
இதை இவ்வாறு எழுதலாம் \(\vec { r } .\left( 2\hat { i } +6\hat { j } +6\hat { k } \right) =9\)
கொடுக்கப்பட்ட தளம் \(2\hat { i } +6\hat { j } +6\hat { k } \)க்கு செங்குத்து ஆதலால், தேவையான தளம் \(\vec { c } =2\hat { i } +6\hat { j } +6\hat { k } \)க்கு இணை ஆகையால் இரண்டு புள்ளி வழிச் செல்லும் மற்றும் வெக்டருக்கு இணையான தளத்தின் வெக்டர் சமன்பாட்டின் துணையலகு வடிவம் \(\vec { r } =\vec { a } +s\left( \vec { b } -\vec { a } \right) +t\vec { c } ,s,t\in R\)
\(\vec { r } =2\hat { i } +2\hat { j } +\hat { k } +s\left( 7\hat { i } +\hat { j } +5\hat { k } \right) +t\left( 2\hat { i } +6\hat { j } +6\hat { k } \right) ,s,t\in R\)
தளத்தின் கார்டீசியன் சமன்பாடு
\(\left| \begin{matrix} x-{ x }_{ 1 } & y-{ y }_{ 1 } & z-{ z }_{ 1 } \\ { x }_{ 2 }-{ x }_{ 1 } & { y }_{ 2 }-{ y }_{ 1 } & { z }_{ 2 }-{ z }_{ 1 } \\ { c }_{ 1 } & { { c }_{ 2 } } & { c }_{ 3 } \end{matrix} \right| =0\)
\(\Rightarrow \left| \begin{matrix} x-2 & y-2 & z-1 \\ 7 & 1 & 5 \\ 2 & 6 & 6 \end{matrix} \right| =0\)
\(\Rightarrow \left( x-2 \right) (6-30)-(y-2)(42-10)+(z-1)(42-2)=0\)
\(\Rightarrow (x-2)(-24)-(y-2)(32)+(z-1)(40)=0\)
\(\Rightarrow -24x+48-32y+64+40z-40=0\)
\(\Rightarrow -24x-32y+40z+72=0\)
\(\div -8\) கிடைப்பது
3x + 4y - 5z - 9 = 0 என்பது கார்டீசியன் வடிவம்.
\(\therefore\) வெக்டர் சமன்பாட்டின் துணையலகு வடிவம்
\(\vec { r } =\vec { r } .\left( 3\vec { i } +4\hat { j } -5\vec { k } \right) =9\)
25.
x மற்றும் y மதிப்புகளை முழுவர்க்கமாக்க 4x2 + 36y2 + 40x − 288y + 532 = 0,
4(x2+10x+25-25) + 36(y2-8y+16-16)+532 = 0 இலிருந்து
4(x2+10x-25) + 36(y2-8y-16) = -532 + 100 + 576
4(x+5)2 + 36(y-4)2 = 144.
இருபுறமும் 144-ஆல் வகுக்கச் சமன்பாடு
\(\frac { { (x+5) }^{ 2 } }{ 36 } +\frac { { (y-4) }^{ 2 } }{ 4 } =1\)
இது மையம் (-5,4), மற்றும் நெட்டச்சு x-அச்சுக்கு இணையான நீள்வட்டம். இதன் அரை நெட்டச்சின் நீளம் 12 மற்றும் குற்றச்சின் நீளம் 4. முனைகள் (1, 4) மற்றும் (-11, 4).
தற்போது, c2 = a2 - b2 = 36 - 4 = 32
மற்றும் c = ±4\(\sqrt 2\).
எனில் குவியங்கள் (-5 - 4\(\sqrt 2\), 4) மற்றும் (−5 + 4\(\sqrt 2\),4)
நெட்டச்சின் நீளம் = 2a = 12 அலகுகள் மற்றும்
குற்றச்சின் நீளம் = 2b = 4 அலகுகள்.
26.
px + by + cz = 0, ax + qy + cz = 0, ax + by + rz = 0 என்ற தொகுப்பின் சமன்பாடுகள் வெளிப்படையற்றத் தீர்வு பெற்றுள்ளது என்க.
எனவே \(\left| \begin{matrix} p & b & c \\ a & q & c \\ a & b & r \end{matrix} \right| \) = 0, R2 ⟶ R2-R1 மற்றும் R3⟶R3-R1 மேல் உள்ள சமன்பாட்டில் பயன்படுத்தக் கிடைப்பது
\(\left| \begin{matrix} p & b & c \\ a-p & q-b & 0 \\ a-p & 0 & r-c \end{matrix} \right| \) = 0, அதாவது, \(\left| \begin{matrix} p & b & c \\ -(p-a) & q-b & 0 \\ -(p-a) & 0 & r-c \end{matrix} \right| \) = 0
p ≠ a, q ≠ b, r ≠ c ஆதலால் நாம் பெறுவது (p-a)(q-b)(r-c)\(\left| \begin{matrix} \frac { p }{ p-a } & \frac { b }{ q-a } & \frac { c }{ r-c } \\ -1 & 1 & 0 \\ -1 & 0 & 1 \end{matrix} \right| \) = 0
எனவே \(\left| \begin{matrix} \frac { p }{ p-a } & \frac { b }{ q-a } & \frac { c }{ r-c } \\ -1 & 1 & 0 \\ -1 & 0 & 1 \end{matrix} \right| \) = 0
அணிக்கோவையை விரிவுபடுத்தக் கிடைப்பது, \(\frac { p }{ p-a } +\frac { q }{ q-b } +\frac { r }{ r-c } \) = 0
அதாவது, \(\frac { p }{ p-a } +\frac { q-(q-b) }{ q-b } +\frac { r-(r-c) }{ r-c } 0\) ⇒ \(\frac { p }{ p-a } +\frac { q }{ q-b } +\frac { r }{ r-c } \) = 2
27.
கொடுக்கப்பட்டது z = x + iy
\(Im\left( \frac { 2z+1 }{ iz+1 } \right) =0\)
\(\Rightarrow Im\left( \frac { 2(x+iy)+1 }{ i(x+iy)+1 } \right) =0\)
\(\Rightarrow Im\left( \frac { (2x+1)+2iy }{ ix+{ i }^{ 2 }y+1 } \right) =0\)
\(\Rightarrow Im\left( \frac { (2x+1)+2iy }{ ix-y+1 } \right) =0\)
\(\Rightarrow Im\left( \frac { (2x+1)+iy }{ (1-y)+ix } \right) =0\)
பகுதியின் இணையால் தொகுதி மற்றும் பகுதியை பெருக்க கிடைப்பது.
\(Im\left( \frac { (2x+1)+2iy }{ (1-y)+ix } \times \frac { (1-y)-ix }{ (1-y)-ix } \right) =0\)
\(\Rightarrow Im\left( \frac { (2x+1)+2iy\times (1-y)-ix }{ (1-{ y })^{ 2 }+{ x }^{ 2 } } \right) =0\)
கற்பனை பகுதியை தேர்ந்தெடுக்க கிடைப்பது,
\(\frac { (2x+1)+(-x)\times 2y(1-y) }{ (1-{ y })^{ 2 }+{ x }^{ 2 } } =0\)
⇒ (2x+ 1)-x+2y(1-y) = 0
⇒ -2x2 - x + 2y - 2y2 = 0
⇒ 2x2 + 2y2 + x - 2y = 0
எனவே z - ன் நியமப்பாதை
2x2 + 2y2 + x - 2y = 0
28.
வட்டத்தின் பொதுச் சமன்பாடு x2 + y2 + 2gx +2fy + c = 0 ...(1)
இது (1, 1), (2, -1) மற்றும் (3, 2) என்ற புள்ளிகள் வழிச்செல்வதால்
2g + 2 f + c = -2 , … (2)
4g − 2 f + c = -5 , … (3)
6g + 4 f + c = -13 . … (4)
(2)-(3)-இலிருந்து -2g + 4f = 3. ...(5)
(4)-(3)-இலிருந்து 2g + 6f = -8. ...(6)
(5)+(6)-இலிருந்து f = -\(\frac{1}{2}\) என கிடைக்கும் மதிப்பை (6) இல் பிரதியிட g =\(\frac{-5}{2},f,g\) இன் மதிப்புகளை (2) இல் பிரதியிட c = 4 எனவும் கிடைக்கிறது.
எனவே தேவையான வட்டத்தின் சமன்பாடு
\({ x }^{ 2 }+{ y }^{ 2 }+2\left( -\frac { 5 }{ 2 } \right) x+2\left( -\frac { 1 }{ 2 } \right) y+4=0\)
அதாவது x2 + y2 − 5x − y + 4 = 0.
29.
i) x − y + 2z = 2,
2x + y + 4z = 7,
4x − y + z = 4
சமன்பாட்டு தொகுப்பின் அணி வடிவம் AX=B
இங்கு \(A=\left[ \begin{matrix} 1 & -1 & 2 \\ 2 & 1 & 4 \\ 4 & -1 & 1 \end{matrix} \right] ,X=\left[ \begin{matrix} x \\ y \\ z \end{matrix} \right] \)மற்றும் \(B=\left[ \begin{matrix} 2 \\ 7 \\ 4 \end{matrix} \right] \)
விரிவுபடுத்தப்பட்ட அணியை ஏறுபடி வடிவத்திற்கு உருமாற்றங்கள் செய்யக் கிடைப்பது [A|B]
\([A|B]=\left[ \begin{matrix} 1 & -1 & 2 \\ 2 & 1 & 4 \\ 4 & -1 & 1 \end{matrix}|\begin{matrix} 2 \\ 7 \\ 4 \end{matrix} \right] \)
\(\overset { { R }_{ 2 }\rightarrow { R }_{ 2 }-2{ R }_{ 1 }\\ { R }_{ 3 }\rightarrow { R }_{ 3 }-4{ R }_{ 1 } }{ \longrightarrow } \left[ \begin{matrix} 1 & -1 & 2 \\ 0 & 3 & 0 \\ 0 & 3 & -7 \end{matrix}|\begin{matrix} 2 \\ 3 \\ -4 \end{matrix} \right] \)
\(\overset { { R }_{ 3 }\rightarrow { R }_{ 3 }-{ R }_{ 2 } }{ \longrightarrow } \left[ \begin{matrix} 1 & -1 & 2 \\ 0 & 3 & 0 \\ 0 & 0 & -7 \end{matrix}|\begin{matrix} 2 \\ 3 \\ -7 \end{matrix} \right] \)
இங்கு ρ(A) =3 மற்றும் ρ[A|B]=3
∴ ρ (A)=ρ[A|B] =3= மதிப்பிட வேண்டிய மாறிலிகளின் எண்ணிக்கை
எனவே தொகுப்பு ஒருங்கமைவுடன் ஒரே ஒரு தீர்வை கொண்டிருக்கும்.
ஏறுபடிவத்திலுள்ள அணியிலிருந்து கிடைக்கும் சமான சமன்பாடுகளின் தொகுப்பானது.
x-y+2z=2 ...(1)
3y=3⇒y=1 ...(2)
-7z=-7⇒ z=\(\frac{-7}{-7}=1\) ...(3)
y=1 மற்றும் z=1 என (1)ல் பிரதியிட,
x-1+2(1)=2
⇒ x-1+2=2
⇒ x+1=2
⇒ x=2-1=1
⇒ x=1
∴ x=1, y=1, z=1
ஆகையால், தீர்வு கணம் {1,1,1}
ii) 3x + y + z = 2,
x − 3y + 2z =1,
7x − y + 4z = 5
தொகுப்பின் அணி வடிவம் AX=B
இங்கு \(A=\left[ \begin{matrix} 3 & 1 & 1 \\ 1 & -3 & 2 \\ 7 & -1 & 4 \end{matrix} \right] ,X=\left[ \begin{matrix} x \\ y \\ z \end{matrix} \right] ,B=\left[ \begin{matrix} 2 \\ 1 \\ 5 \end{matrix} \right] \)
விரிவுபடுத்தப்பட்ட அணியை [A|B] ஏறுபடி வடிவத்திற்கு உருமாற்றங்கள் செய்யக் கிடைப்பது,
\([A|B]=\left[ \begin{matrix} 3 & 1 & 1 \\ 1 & -3 & 2 \\ 7 & -1 & 4 \end{matrix}|\begin{matrix} 2 \\ 1 \\ 5 \end{matrix} \right] \overset { { R }_{ 2 }\leftrightarrow { R }_{ 1 } }{ \longrightarrow } \left[ \begin{matrix} 1 & -3 & 2 \\ 3 & 1 & 1 \\ 7 & -1 & 4 \end{matrix}|\begin{matrix} 1 \\ 2 \\ 5 \end{matrix} \right] \)
\(\overset { { R }_{ 2 }\rightarrow { R }_{ 2 }-3{ R }_{ 1 }\\ { R }_{ 3 }\rightarrow { R }_{ 3 }-7{ R }_{ 1 } }{ \longrightarrow } \left[ \begin{matrix} 1 & -3 & 2 \\ 0 & 10 & -5 \\ 0 & 20 & -10 \end{matrix}|\begin{matrix} 1 \\ -1 \\ -2 \end{matrix} \right] \)
\(\overset { { R }_{ 3 }\rightarrow { R }_{ 3 }-2{ R }_{ 2 } }{ \longrightarrow } \left[ \begin{matrix} 1 & -3 & 2 \\ 0 & 10 & -5 \\ 0 & 0 & 0 \end{matrix}|\begin{matrix} 1 \\ -1 \\ 0 \end{matrix} \right] \)
இங்கு ρ(A)=2, மற்றும் ρ[A|B]=2[∵ அபூச்சிய நிரைகள் உள்ளன]. ஆகையால், ρ(A)=ρ[A|B]=2<3, கொடுக்கப்பட்ட தொகுப்பு ஒருங்கமைவுடன் தீர்வுகள் ஒரு சாராமாறிக் குடும்பமாக இருக்கும். ஆகையால் z=t, x∈R. ஏறுபடி வடிவத்திலுள்ள அணியிலிருந்து கிடைக்கும் சமான சமன்பாடுகளின் தொகுப்பு,
x - 3y + 2z = 1 ...(1)
10y - 5z = - 1 ...(2)
z = t ...(3)
(2) லிருந்து 10y - 5t = 1
⇒ 10y = 5t - 1
⇒ y = \(\frac{1}{10}[5t-1]\)
மேலும், (1) லிருந்து, \(x-\frac{3}{10}[5t-1]+2t=1\)
\(\Rightarrow x=\frac { 3 }{ 10 } [5t-1]-2t+1=\frac { 15t-3-20t+10 }{ 10 } \)
\(\Rightarrow x=\frac { 1 }{ 10 } [-5t+7]\)
எனவே தீர்வு கணம் என்பது
\(\{ \frac { 1 }{ 10 } (7-5t),\frac { 1 }{ 10 } (5t-1),t\} \)இங்கு t∈R
iii) 2x + 2y + z = 5,
x − y + z =1,
3x + y + 2z = 4
ஆகையால் தொகுப்பின் அணி AX = B இங்கு
\(A=\left[ \begin{matrix} 2 & 2 & 1 \\ 1 & -1 & 1 \\ 3 & 1 & 2 \end{matrix} \right] ,X=\left[ \begin{matrix} x \\ y \\ z \end{matrix} \right] ,B=\left[ \begin{matrix} 5 \\ 1 \\ 4 \end{matrix} \right] \)
\([A|B]=\left[ \begin{matrix} 2 & 2 & 1 \\ 1 & -1 & 1 \\ 3 & 1 & 2 \end{matrix}|\begin{matrix} 5 \\ 1 \\ 4 \end{matrix} \right] \overset { { R }_{ 1 }\leftrightarrow { R }_{ 2 } }{ \longrightarrow } \left[ \begin{matrix} 1 & -1 & 1 \\ 0 & 4 & -1 \\ 0 & 4 & -1 \end{matrix}|\begin{matrix} 1 \\ 5 \\ 4 \end{matrix} \right] \)
\(\overset { { R }_{ 2 }\rightarrow { R }_{ 2 }-{ 2R }_{ 2 }\\ { R }_{ 3 }\rightarrow { R }_{ 3 }-3{ R }_{ 1 } }{ \longrightarrow } \left[ \begin{matrix} 1 & -1 & 1 \\ 0 & 4 & -1 \\ 0 & 4 & -1 \end{matrix}|\begin{matrix} 1 \\ 3 \\ -1 \end{matrix} \right] \)
\(\overset { R_{ 3 }\rightarrow { R }_{ 3 }-{ R }_{ 2 } }{ \longrightarrow } \left[ \begin{matrix} 1 & -1 & 1 \\ 0 & 4 & -1 \\ 0 & 0 & 0 \end{matrix}|\begin{matrix} 1 \\ 3 \\ -4 \end{matrix} \right] \)
இங்கு ρ(A)=2[∵ 2 அபூச்சிய நிறைகள் உள்ளன]
மற்றும் ρ[A|B]=3[∵ 3 அபூச்சிய நிறைகள் உள்ளன]
இங்கு (A)≠p[A|B]
ஆகையால் கொடுக்கப்பட்ட தொகுப்பு ஒருங்கமைவு அற்றது மற்றும் தீர்வுகள் இல்லை.
iv) 2x − y + z = 2,
6x − 3y + 3z = 6,
4x − 2y + 2z = 4
தொகுப்பின் அணி வடிவம் AX = B இங்கு
\(A=\left[ \begin{matrix} 2 & -1 & 1 \\ 6 & -3 & 3 \\ 4 & -2 & 2 \end{matrix} \right] \)
\(X=\left[ \begin{matrix} x \\ y \\ z \end{matrix} \right] ,B=\left[ \begin{matrix} 2 \\ 6 \\ 4 \end{matrix} \right] \)
[A|B] என்ற விரிவுபடுத்தப்பட்ட அணியில் தொடக்கநிலை நிரைச் செயலின் பயன்படுத்தக் கிடைப்பது,
\([A|B]=\left[ \begin{matrix} 2 & -1 & 1 \\ 6 & -3 & 3 \\ 4 & -2 & 2 \end{matrix}|\begin{matrix} 2 \\ 6 \\ 4 \end{matrix} \right] \overset { { R }_{ 2 }\rightarrow { R }_{ 2 }-3{ R }_{ 1 }\\ { R }_{ 3 }\rightarrow { R }_{ 3 }-2{ R }_{ 1 } }{ \longrightarrow } \left[ \begin{matrix} 2 & -1 & 1 \\ 0 & 0 & 0 \\ 0 & 0 & 0 \end{matrix}|\begin{matrix} 2 \\ 0 \\ 0 \end{matrix} \right] \)
இங்கு ρ(A) = 1 [∵ ஒரே ஒரு அபூச்சிய நிரை]
மற்றும் ρ[A|B] = 1[∵ ஒரே ஒரு அபூச்சிய நிரை]
∵ ρ(A) = ρ[A|B] = 1<3, கொடுக்கப்பட்ட தொகுப்பு ஒருங்கமைவுடன் இரு சாராமாறிக் குடும்பமாக தீர்வுகள் இருக்கும்.
ஆகையால், z = t மற்றும் y=s இங்கு s, t∈R. ஏறுபடி வடிவத்திலிருந்து கிடைக்கும் சமான சமன்பாடுகள்.
2x - y + z = 2 ....(1)
y = s ....(2)
z = t ....(3)
(2) மற்றும் (3) ஐ (1)ல் பிரதியிட கிடைப்பது,
2x - s + t = 2
⇒ 2x = s - t + 2
⇒ \(x=\frac{1}{2}[s-t+2]\)
∴ தீர்வு கணம்{\(\frac{1}{2}\)(s - t + 2), s, t}
30.
A என்பது செங்குத்து அணி. எனவே, AAT = ATA = I3 எனவே நாம் பெறுவது
AAT = I3 ⇒ \(\frac { 1 }{ 7 } \left[ \begin{matrix} 6 & -3 & a \\ b & -2 & 6 \\ 2 & c & 3 \end{matrix} \right] \frac { 1 }{ 7 } \left[ \begin{matrix} 6 & b & 2 \\ -3 & -2 & c \\ a & 6 & 3 \end{matrix} \right] =\left[ \begin{matrix} 1 & 0 & 0 \\ 0 & 1 & 0 \\ 0 & 0 & 1 \end{matrix} \right] \)
⇒\(\left[ \begin{matrix} 45+{ a }^{ 2 } & 6b+6+6a & 12-3c+3a \\ 6b+6+6a & { b }^{ 2 }+40 & 2b-2c+18 \\ 12-3c+3a & 2b-2c+18 & { c }^{ 2 }+13 \end{matrix} \right] =49\left[ \begin{matrix} 1 & 0 & 0 \\ 0 & 1 & 0 \\ 0 & 0 & 1 \end{matrix} \right] \)
⇒ \(\left\{ \begin{matrix} 45+{ a }^{ 2 }=49 \\ { b }^{ 2 }+40=49 \\ \begin{matrix} { c }^{ 2 }+13=49 \\ 6b+6+6a=0 \\ \begin{matrix} 12-3c+3a=0 \\ 2b-2c+18=0 \end{matrix} \end{matrix} \end{matrix} \right\} \Rightarrow \left\{ \begin{matrix} { a }^{ 2 }=4,\quad { b }^{ 2 }=9,\quad { c }^{ 2 }=36 \\ a+b=-1,a-c=-4,b-c=-9 \end{matrix} \right\} \) ⇒m a = 2, b = -3, c = 6
எனவே நமக்குக் கிடைப்பது, A = \(\frac { 1 }{ 7 } \left[ \begin{matrix} 6 & -3 & 2 \\ -3 & -2 & 6 \\ 2 & 6 & 3 \end{matrix} \right] \) மற்றும் A-1 = AT = \(\frac { 1 }{ 7 } \left[ \begin{matrix} 6 & -3 & 2 \\ -3 & -2 & 6 \\ 2 & 6 & 3 \end{matrix} \right] \).
31.
\(\underset{x\rightarrow 0^{+}}{\lim}(\cos x)^{\frac{1}{x^{2}}}\) [1\(\infty\) தேரப்பெறா வடிவம்
\(g(x)=\left( \cos x \right) ^{ \frac { 1 }{ { x }^{ 2 } } }\) என்க
இருபுறமும் மடக்கை எடுக்க
\(\log g(x)=\cfrac { \log \cos x }{ { x }^{ 2 } } \)
\(\underset { x\rightarrow 0^{ + } }{ \lim } \log g(x)={ \lim }_{ x\rightarrow { 0 }^{ + } }\cfrac { \log \cos x }{ { x }^{ 2 } } \) [\(\frac { 0 }{ 0 } \) தேரப்பெறா வடிவம்]
லோபிதாலின் விதிப்படி பயன்படுத்த,
= \(\underset { x\rightarrow { 0 }^{ + } }{ \lim } -\cfrac { \tan x }{ 2x } \) [\(\cfrac { 0 }{ 0 } \) தேரப்பெறா வடிவம் மீண்டும் லோபிதாலின் விதியைப் பயன்படுத்த,
= \(\underset { x\rightarrow { 0 }^{ + } }{ \lim } -\frac { { \sec }^{ 2 }x }{ 2 } =-\frac { 1 }{ 2 } \)
அடுக்கைச் சார்பாக மாற்ற,
\(\underset { x\rightarrow { 0 }^{ + } }{ \lim } g(x)={ e }^{ -\frac { 1 }{ 2 } }=\cfrac { 1 }{ \sqrt { e } } \)
32.
x3+ax2+bx+c=0 எனும் முப்படிச் சமன்பாட்டின் மூலங்கள் α,β மற்றும் γஎன்க. எனவே,
∑ 1 =α+β+γ=-a, .....(1)
∑2 =αβ+βγ+γα=b .....(2)
∑3 =αβγ=-c .......(3)
α2,β2, மற்றும் γ2 ஆகியவற்றை மூலங்களாகக் கொண்ட ஒரு சமன்பாட்டை உருவாக்க வேண்டும்.
(1), (2) மற்றும் (3) ஆகியவற்றைப் பயன்படுத்தி, பின்வருவனவற்றைக் கண்டறிவோம்:
∑1=α2+β2+γ2 =(α+β+γ)2 -2(αβ+βγ+γα)=(-a)2-2(b)=a2-2b
∑2=α2β2+β2γ2+γ2α2 = (αβ+βγ+γα)2-2((αβ)(βγ)+(βγ)(γα)+(γα)(αβ))
=(αβ+βγ+γα)2-2αβγ(β+γ+α) =(b)2-2(-c)(-a)=b2-2ca
∑3=α2β2γ2 =(αβγ)2 =(-c)2=c2
எனவே, தேவையான சமன்பாடு,
x3-(α2+β2+γ2)x2+(α2β2+β2γ2+γ2α2)x-α2β2γ2=0
x3-(a2-2b)x2+(b2-2ca)x-c2=0 ஆகும்.
33.
A =\(\left[ \begin{matrix} 3 & 1 & 4 \\ 2 & 0 & -1 \\ 5 & 2 & 1 \end{matrix} \right] \) என்க. |A| = 3(0+2)-1(2+5)+4(4-0) = 6-7+16 = 15 ≠ 0. எனவே, A ஆனது பூச்சியமற்ற அணிக்கோவை அணியாகும்.
\(\left[ \begin{matrix} 3 & 1 & 4 \\ 2 & 0 & -1 \\ 5 & 2 & 1 \end{matrix} \right] \overset { { R }_{ 1 }\rightarrow \frac { 1 }{ 3 } { R }_{ 1 } }{ \longrightarrow } \left[ \begin{matrix} 1 & \frac { 1 }{ 3 } & \frac { 4 }{ 3 } \\ 2 & 0 & -1 \\ 5 & 2 & 1 \end{matrix} \right] \overset { { R }_{ 2 }\rightarrow { R }_{ 2 }-2{ R }_{ 1 },{ R }_{ 3 }\rightarrow { R }_{ 3 }-5{ R }_{ 1 } }{ \longrightarrow } \left[ \begin{matrix} 1 & \frac { 1 }{ 3 } & \frac { 4 }{ 3 } \\ 0 & -\frac { 2 }{ 3 } & -\frac { 11 }{ 3 } \\ 0 & \frac { 1 }{ 3 } & -\frac { 17 }{ 3 } \end{matrix} \right] \overset { { R }_{ 2 }\rightarrow \left( -\frac { 3 }{ 2 } \right) { R }_{ 2 } }{ \longrightarrow } \left[ \begin{matrix} 1 & \frac { 1 }{ 3 } & \frac { 4 }{ 3 } \\ 0 & 1 & \frac { 11 }{ 2 } \\ 0 & \frac { 1 }{ 3 } & -\frac { 17 }{ 3 } \end{matrix} \right] \\ \overset { { R }_{ 1 }\rightarrow { R }_{ 1 }-\frac { 1 }{ 3 } { R }_{ 2 },{ R }_{ 3 }\rightarrow \frac { 1 }{ 3 } { R }_{ 2 } }{ \longrightarrow } \left[ \begin{matrix} 1 & 0 & -\frac { 1 }{ 2 } \\ 0 & 1 & \frac { 11 }{ 2 } \\ 0 & 0 & -\frac { 15 }{ 2 } \end{matrix} \right] \overset { { R }_{ 3 }\rightarrow \left( -\frac { 2 }{ 15 } \right) { R }_{ 3 } }{ \longrightarrow } \left[ \begin{matrix} 1 & 0 & -\frac { 1 }{ 2 } \\ 0 & 1 & \frac { 11 }{ 2 } \\ 0 & 0 & 1 \end{matrix} \right] \\ \overset { { R }_{ 1 }\rightarrow { R }_{ 1 }+\frac { 1 }{ 2 } { R }_{ 3 },{ R }_{ 2 }\rightarrow- \frac { 11 }{ 2 } { R }_{ 3 } }{ \longrightarrow } \left[ \begin{matrix} 1 & 0 & 0 \\ 0 & 1 & 0 \\ 0 & 0 & 1 \end{matrix} \right] \)
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards