12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 01/10/2020
12 ஆம் வகுப்பு கணிதம் பயிற்சி 5 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Mathematics Tamil Medium Model 5 Mark Book Back Questions (New Syllabus 2020)
12ஆம் வகுப்பு Maths / கணிதவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
10 செ.மீ ஆரமுள்ள வட்டத்தினுள் அமைக்கப்படும் செவ்வகங்களுள் மீப்பெரு பரப்புடைய செவ்வகத்தின் பரிமாணங்களைக் காண்க.
2.
வெப்பநிலை 250C ஆக உள்ள ஒரு அறையில் வைக்கப்பட்டுள்ள நீரின் வெப்பநிலை 1000C ஆகும். 10 நிமிடங்களில் நீரின் வெப்பநிலை 800C ஆகக் குறைந்து விடுகிறது எனில், 20 நிமிடங்களுக்குப் பின்னர் நீரின் வெப்பநிலை காண்க.
(i) 20 நிமிடங்களுக்குப் பின்னர் நீரின் வெப்பநிலை
(ii) வெப்பநிலை 40oC ஆக இருக்கும்போது நேரம் காண்க.
\(\left[ \log\frac { 11 }{ 15 } =-0.03101;\ \log5=1.6094 \right] \)
3.
ஒரு துப்பறிவாளர் ஒரு கொலைக்கான புலன் விசாரணையின் போது, ஒருவரின் உயிரற்ற உடலை சரியாக பிற்பகல் 8 மணிக்கு காண்கிறார். முன்னெச்சரிக்கையாக துப்பறிவாளர் அவ்வுடலின் வெப்பநிலையை அளந்து 70o F எனக் குறித்துக் கொள்கிறார். 2 மணி நேரம் கழித்து அந்த உடலின் வெப்பநிலை 60o F ஆக இருப்பதைக் காண்கிறார். உடல் இருந்த அறையின் வெப்பநிலை 50o F ஆகும். மற்றும் இறப்பதற்கு முன்பு அந்நபரின் உடல் வெப்பநிலை 98.6o F எனில், அந்நபர் கொலை செய்யப்பட்ட நேரம் என்னவாக இருந்திருக்கும்?
[log (2.43) = 0.88789; log(0.5) = -0.69315]
4.
பின்வரும் நேரியல் வகைக்கெழுச் சமன்பாடுகளின் தீர்வு காண்க:
\((y-{ e }^{ { \sin }^{ -1 }x })\frac { dy }{ dx } +\sqrt { { 1-x }^{ 2 } } =0\)
5.
W(x, y, z) = xy + yz + zx, x = u − v, y = uv, z = u + v, u,v ∈ R எனில் \(\frac { \partial W }{ \partial u } \),\(\frac { \partial W }{ \partial v } \) காண்க மற்றும்\(\left( \frac { 1 }{ 2 } ,1 \right) \) இல் அவற்றின் மதிப்பைக் காண்க.
6.
பின்வரும் வகைக்கெழுச் சமன்பாடுகளின் தீர்வு காண்க:
\(x\frac { dy }{ dx } =y-xco{ s }^{ 2 }\left( \frac { y }{ x } \right) \)
7.
பின்வரும் வகைக்கெழுச் சமன்பாடுகளின் தீர்வுகளைக் காண்க:
tan y \(\frac { dy }{ dx } \) = cos (x + y) + cos (x - y)
8.
கீழ்க்காணும் சார்புகளுக்கு ஓரியல்பு இடைவெளிகளைக் கணக்கிட்டு அதிலிருந்து இடஞ்சார்ந்த அறுதி மதிப்புகளைக் காண்க:
\(f(x)=\frac{e^{x}}{1-e^{x}}\)
9.
ஆரம் r மற்றும் உயரம் h உடைய கோள வடிவ தொப்பியின் கன அளவைக் காண்க.
10.
ABC குழுமம் தயாரிக்கும் பொருட்களில் சராசரியாக, 20% பொருட்கள் குறைபாடுள்ளவை எனக் கண்டறியப்பட்டது. சமவாய்ப்பு முறையில் இதிலிருந்து 6 பொருட்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறது. மேலும் குறைபாடுள்ள பொருட்களின் எண்ணிக்கையை X குறித்தால் (i) இரு பொருட்கள் குறைபாடுள்ளவை (ii) அதிகபட்சம் ஒரு பொருள் குறைபாடுள்ளது (iii) குறைந்தபட்சம் இரு பொருட்கள் குறைபாடுள்ளவை. ஆகியவற்றிற்கான நிகழ்தகவு காண்க.
11.
\(\frac {x^2}{a^2} + \frac {y^2}{b^2} = 1\) என்ற நீள்வட்டத்தினால் அடைபடும் அரங்கத்தின் பரப்பைக் காண்க.
12.
\(\int ^\frac{\pi}{4}_{0}\) log(1+tan x) dx = \(\frac{\pi}{8}\) log2.
13.
என்பது ஒரு தனிநிலை சமவாய்ப்பு மாறியின் குவிவு பரவல் சார்பு எனில் (i) நிகழ்தகவு நிறை சார்பு (ii) P (X < 3) மற்றும் (iii) P (X ≥ 2) ஆகியவற்றைக் காண்க.
14.
ஓர் ஆறு பக்க பகடையின் ஒரு பக்கத்தில் ‘1’ என குறிக்கப்படுகிறது. அதன் இரு பக்கங்களில் ‘2’ எனவும் மீதமுள்ள மூன்று பக்கங்களில் ‘3’ எனவும் குறிக்கப்படுகிறது. இரு முறை பகடை உருட்டப்படுகிறது. இருமுறை எறிதலின் மொத்தத் தொகையை X குறிக்கிறது எனில்
(i) நிகழ்தகவு நிறை சார்பு காண்க.
(ii) குவிவு பரவல் சார்பு காண்க.
(iii) P(3 ≤ X < 6) காண்க
(iv) P(X ≥ 4) காண்க.
15.
தலைகீழாக வைக்கப்பட்ட ஒரு நேர்வட்ட கூம்பின் வடிவில் உள்ள ஒரு நீர்நிலைத் தொட்டியின் ஆழம் 12 மீட்டர் மற்றும் மேலுள்ள வட்டத்தின் ஆரம் 5 மீட்டர் என்க. நிமிடத்திற்கு 10 கன மீட்டர் வேகத்தில் நீர் பாய்ச்சப்படுகிறது எனில், 8 மீட்டர் ஆழத்தில் நீர் இருக்கும்போது நீரின் ஆழம் அதிகரிக்கும் வேகம் என்ன?
16.
பின்வரும் சமன்பாடுகளின் கூம்பு வளைவின் வகையைக் கண்டறிந்து அவற்றின் மையம், குவியங்கள், முனைகள் மற்றும் இயக்குவரைகளைக் காண்க :
9x2-y2-36x+6y+18 = 0
17.
(-5,7,-4) மற்றும் (13,-5,2) என்ற புள்ளிகள் வழியாகச் செல்லும் நேர்க்கோட்டின் துணையலகு வெக்டர் சமன்பாடு மற்றும் கார்டீசியன் சமன்பாடுகளைக் காண்க. மேலும், இந்த நேர்க்கோடு xy -தளத்தை வெட்டும் புள்ளியைக் காண்க.
18.
ஒரு முக்கோணத்தின் உச்சிகளிலிருந்து அவற்றிற்கு எதிரேயுள்ள பக்கங்களுக்கு வரையப்படும் செங்குத்துக் கோடுகள் ஒரு புள்ளியில் சந்திக்கும் என நிறுவுக.
19.
ஒரு அணு உலை குளிரூட்டும் தூணின் குறுக்கு வெட்டு அதிபரவளைய வடிவில் உள்ளது. மேலும் அதன் சமன்பாடு \(\frac { { x }^{ 2 } }{ { 30 }^{ 2 } } -\frac { { y }^{ 2 } }{ { 44 }^{ 2 } } =\)1. தூண் 150மீ உயரமுடையது. மேலும் அதிபரவளையத்தின் மையத்திலிருந்து தூணின் மேல்பகுதிக்கான தூரம் மையத்திலிருந்து அடிப்பகுதிக்கு உள்ள தூரத்தில் பாதியாக உள்ளது. தூணின் மேற்பகுதி மற்றும் அடிப்பகுதியின் விட்டங்களைக் காண்க.

20.
x−y+4 = 0 என்ற நேர்க்கோடு x2 + 3y2 = 12 என்ற நீள்வட்டத்தின் தொடுகோடு என நிறுவுக. மேலும் தொடும் புள்ளியைக் காண்க.
21.
ஒரு குடும்பத்திலுள்ள மூன்று நபர்கள் இரவு உணவு சாப்பிட ஓர் உணவகத்திற்குச் சென்றனர். இரு தோசைகள், மூன்று இட்லிகள் மற்றும் இரு வடைகளின் விலை ரூ.150. இரு தோசைகள், இரு இட்லிகள் மற்றும் நான்கு வடைகளின் விலை ரூ.200. ஐந்து தோசைகள், நான்கு இட்லிகள் மற்றும் இரண்டு வடைகளின் விலை ரூ.250. அக்குடும்பத்தினரிடம் ரூ.350 இருந்தது மற்றும் அவர்கள் மூன்று தோசைகள், ஆறு இட்லிகள் மற்றும் ஆறு வடைகள் சாப்பிட்டனர். அக்குடும்பத்தினர் சாப்பிட்ட செலவிற்கான தொகையை அவர்களிடமிருந்த பணத்தைக் கொண்டு செலுத்த முடியுமா? (உமது விடையை கிராமரின் விதிக்கொண்டு நிரூபி).
22.
A = \(\frac { 1 }{ 7 } \left[ \begin{matrix} 6 & -3 & a \\ b & -2 & 6 \\ 2 & c & 3 \end{matrix} \right] \) என்பது செங்குத்து அணி எனி a, b மற்றும் c களின் மதிப்பைக் காண்க. இதிலிருந்து A−1-ஐக் காண்க.
23.
இரு நிபந்தனைக் கூற்றை நிபந்தனைக் கூற்றுடன் இணைத்து p ↔️ q ≡ (p ➝ q) ∧ (q⟶ p) என்ற சமானமானவை பண்பை நிரூபிக்க.
24.
நம்மிடம் 12 அலகு பக்க அளவுடைய மெல்லிய சதுர தகடு உள்ளது மற்றும் வெளிப்புறத்தின் மூலைகளிலிருந்து சிறிய சதுரங்களை வெட்டி பக்கங்களை மடிப்பதன் மூலம் திறந்த பெட்டியை உருவாக்க விரும்புகிறோம். கேள்வி என்னவென்றால், எந்த வெட்டு அதிகபட்ச கன அளவை உருவாக்கும்?
25.
பின்வரும் சார்புகளுக்கு gxy,gxx,gyy மற்றும் gyx ஆகியவற்றைக் காண்க.
g(x, y) = log(5x + 3y)
26.
x2 + y2 = 4 என்ற வட்டத்தில் ( 1, \(\sqrt {3}\) ) எனும் புள்ளியில் தொடுகோடு , செங்கோடு மற்றும் x-அச்சு ஆகியவற்றால் அடைபடும் அரங்கத்தின் பரப்பை தொகையிடலைப் பயன்படுத்தி காண்க.
27.
லோபிதாலின் விதியை பயன்படுத்தி \(\underset{x\rightarrow 0^{+}}{\lim}(1+x)^{\frac{1}{x}}=e\) என நிறுவுக.
28.
பின்வரும் நேரியச் சமன்பாட்டுத் தொகுப்புகளை நேர்மாறு அணி காணல் முறையில் தீர்க்க:
2x + 3y − z = 9, x + y + z = 9, 3x − y − z = −1
29.
2x3 − 6x2 + 3x + k = 0 எனும் சமன்பாட்டின் ஒரு மூலம் மற்ற இரு மூலங்களின் கூடுதலின் இரு மடங்கு எனில், k -ன் மதிப்பைக் காண்க. மேலும் சமன்பாட்டைத் தீர்க்க.
30.
k-ன் எம்மதிப்புகளுக்கு பின்வரும் சமன்பாட்டுத் தொகுப்பு kx − 2y + z =1, x − 2ky + z = −2, x − 2y + kz =1
(i) யாதொரு தீர்வும் பெற்றிராது
(ii) ஒரே ஒரு தீர்வைப் பெற்றிருக்கும்
(iii) எண்ணிக்கையற்ற தீர்வுகளைப் பெற்றிருக்கும் என்பதனை ஆராய்க.
31.
தீர்க்க \(\cos\left( { \sin }^{ -1 }\left( \frac { x }{ \sqrt { 1+{ x }^{ 2 } } } \right) \right) =\sin\left\{ { \cot }^{ -1 }\left( \frac { 3 }{ 4 } \right) \right\} \)
32.
ஆதி வழியாகச் செல்லும் நேர்க்கோடுகளின் தொகுதியின் வகைக்கெழுச் சமன்பாட்டைக் காண்க.
33.
g(x) = x2 + sin x எனில் dg -ஐக் காண்க.
1.
படத்திலிருந்து
\({ x }^{ 2 }+{ y }^{ 2 }=\left( 20 \right) ^{ 2 }\) [பிதாகரஸ் தேற்றம்
\({ y }^{ 2 }=400-{ x }^{ 2 }\) [\(\therefore\) வட்டத்தின் ஆரம் 10 செ.மீ
\(y=\sqrt { 400-{ x }^{ 2 } } \)
இப்போது,செவ்வகத்தின் பரப்பு A=xy
\(A=\sqrt [ x ]{ 400-{ x }^{ 2 } } \)
\(\cfrac { dA }{ dx } =x\cfrac { \left( -2x \right) }{ \sqrt [ 2 ]{ 400-{ x }^{ 2 } } } +\sqrt { 400-{ x }^{ 2 } } (1)\)
= \(\cfrac { -{ x }^{ 2 }+400-{ x }^{ 2 } }{ \sqrt { 400-{ x }^{ 2 } } } =\cfrac { -2{ x }^{ 2 }+400 }{ \sqrt { 400-{ x }^{ 2 } } } \)
பெருமம் அல்லது சிறுமத்திற்கு
\(\cfrac { dA }{ dx } =0\Rightarrow \cfrac { -{ 2x }^{ 2 }+400 }{ \sqrt { 400-{ x }^{ 2 } } } =0\)
\({ x }^{ 2 }=200\)
\(x=\pm 10\sqrt { 2 } \)
\(x =-10\sqrt { 2 } \) என்பது சாத்தியமல்ல
\(\therefore x=10\sqrt { 2 } \)
இப்போது,
\(\cfrac { { d }^{ 2 }A }{ { dx }^{ 2 } } =\cfrac { \sqrt { 400-{ x }^{ 2 } } (-4x)-\left( { -2x }^{ 2 }+400 \right) \left( -\cfrac { 2x }{ \sqrt [ 2 ]{ 400-{ x }^{ 2 } } } \right) }{ 400-{ x }^{ 2 } } \)
= \(\cfrac { { 2x }^{ 3 }-1200x }{ \left( 400-{ x }^{ 2 } \right) \sqrt { 400-{ x }^{ 2 } } } \)
\(x=10\sqrt { 2 } \) ல் ,\(\cfrac { { d }^{ 2 }A }{ { dx }^{ 2 } } <0\)
\(\therefore x=10\sqrt { 2 } \) எனும்போது செவ்வகத்தின் பரப்பு சிறுமமாகிறது.
\(y=\sqrt { 400-200 } =\sqrt { 200 } =10\sqrt { 2 } \)
\(\therefore x=y=10\sqrt { 2 } \)
செவ்வகத்தின் நீளம் = \(10\sqrt { 2 } \) செ.மீ
செவ்வகத்தின் அகலம் = \(10\sqrt { 2 } \) செ.மீ
2.
நியூட்டனின் குளிர்ச்சியடையும் விதிப்படி,ஒரு பொருளின் வெப்பநிலை மாறும் வீதமானது பொருளின் வெப்பநிலைக்கும்,சுற்றுப்புற ஊடகத்தின் வெப்பநிலைக்கு உள்ள வேறுபாட்டிற்கு நேர் விகிதமாக அமையும்.
\(\cfrac { dT }{ dt } =-k\left( T-{ T }_{ 0 } \right) \)
இங்கு T என்பது அறையின் வெப்பநிலை ,மற்றும் T0 என்பது ஊடகத்தின் மாறாத வெப்பநிலை
எனவே,\(\cfrac { dT }{ dt } =-k\left( T-25 \right) \) (அல்லது)
\(\cfrac { dT }{ T-25 } =-kdt\)
சமன்பாடு (1) ஐ தொகையிடக் கிடைப்பது
\(\int { \cfrac { dT }{ T-25 } } =\int { -kdt } \)
\(log\left( T-25 \right) =-kt+{ c }_{ 1 }\)
இப்போது \(T=100,t=0\)
\(log\left( 100-25 \right) =-k\left( 0 \right) +{ c }_{ 1 }\)
\(\therefore log75={ c }_{ 1 }\)
c1 மதிப்பை சமன்பாடு (1)ல் பிரதியிடக் கிடைப்பது
\(log\left( T-25 \right) =-kt+log75\left[ \because logm-logn=logm/n \right] \)
\(log\cfrac { T-25 }{ 75 } =-kt\) ...(2)
மேலும் t=10 நிமிடங்கள் எனும்போது T=80
\(log\left( \cfrac { 80-25 }{ 75 } \right) =-k(10)\)
\(log\left( \cfrac { 55 }{ 75 } \right) =-10k\)
\(k=-\cfrac { 1 }{ 10 } log\left( \cfrac { 55 }{ 75 } \right) \)
\(k=\cfrac { 1 }{ 10 } log\left( \cfrac { 75 }{ 55 } \right) \)
\(k=\cfrac { 1 }{ 10 } log\cfrac { 15 }{ 11 } \)
k ன் மதிப்பை சமன்பாடு (2)ல் பிரதியிடக் கிடைப்பது
\(log\left( \cfrac { T-25 }{ 75 } \right) =-\left( \cfrac { 1 }{ 10 } log\cfrac { 15 }{ 11 } \right) t\)
t=20 என சமன்பாடு (3) ல் பிரதியிட
\(log\left( \cfrac { T-25 }{ 75 } \right) =-\cfrac { 20 }{ 10 } log\cfrac { 15 }{ 11 } \)
= \(-2log\cfrac { 15 }{ 11 } \)
= \(2log\cfrac { 11 }{ 15 } \)
\(log\cfrac { T-25 }{ 75 } =log\left( \cfrac { 11 }{ 15 } \right) ^{ 2 }\)
\(\cfrac { T-25 }{ 75 } =\left( \cfrac { 11 }{ 15 } \right) ^{ 2 }\)
\(T=75\left( \cfrac { 11 }{ 75 } \right) ^{ 2 }+25\)
\(T=75\left( 0.5378 \right) +25\)
\(\\ T=40.33+25\)
\(T=65.33^{ 0 }C\)
3.
t நேரத்தில் உடலின் வெப்பநிலை T என்க. பிற்பகல் 8 மணி என்பதை t = 0 எனக்கொள்க.
நியுட்டனின் குளிர்வு விதிப்படி, \(\frac { dT }{ dt } =k(T-50)\) அல்லது \(\frac { dT }{ T-50 } =dt\).
இரு பக்கமும் தொகையிட, \(log\left| 50-T \right| =kt+logC\) அல்லது 50 - T = Cekt.
t = 0 எனும்போது T = 70 என்பதால், C = -20
t = 2 எனும்போது T = 60 என்பதா ல், -10 = -20ek2.
ஆகவே, \(k=\frac { 1 }{ 2 } log\left( \frac { 1 }{ 2 } \right) \).
எனவே, தீர்வு \(50-T=-20{ e }^{ \frac { 1 }{ 2 } log\left( \frac { 1 }{ 2 } \right) }\) அல்லது T = 50 + 20 \(( \frac { 1 }{ 2 })^{ \frac { 1 }{ 2 }}\)
நாம் இப்பொழுது T(t) = 98.6ஆக இருக்கும்போது t-ன் மதிப்பைக் காணவேண்டும். \(t=2\left( \frac { log\left( \frac { 48.6 }{ 20 } \right) }{ log\left( \frac { 1 }{ 2 } \right) } \right) \approx -2.56\)
எனவே , அந்நபர் இறந்த நேரம் பிற்பகல் 5.30 மணியாகும்
4.
\((y-{ e }^{ { sin }^{ -1 }x })\frac { dy }{ dx } +\sqrt { { 1-x }^{ 2 } } =0\)
\(\left( y-{ e }^{ sin^{ -1 }x } \right) \cfrac { dx }{ dy } =\sqrt { 1-{ x }^{ 2 } } \)
\(\left( y-{ e }^{ { sin }^{ -1 }x } \right) =-\sqrt { 1-{ x }^{ 2 } } \cfrac { dy }{ dx } \)
\(\sqrt { 1-{ x }^{ 2 } } \cfrac { dy }{ dx } +y={ e }^{ sin^{ -1 }x }\)
\(\div \sqrt { 1-{ x }^{ 2 } } ,\cfrac { dy }{ dx } +\cfrac { 1 }{ \sqrt { 1-{ x }^{ 2 } } } =\cfrac { { e }^{ sin^{ -1 }x } }{ \sqrt { 1-{ x }^{ 2 } } } \)
எனவே,இது ஒரு நேரியல் வகைக்கெழுச் சமன்பாடு
\(P=\cfrac { 1 }{ \sqrt { 1-{ x }^{ 2 } } } ,Q=\cfrac { { e }^{ { sin }^{ -1 }x } }{ \sqrt { 1-{ x }^{ 2 } } } \)
\(I.F={ e }^{ \int { pdx } }\)
\({ e }^{ \int { \frac { 1 }{ \sqrt { 1-{ x }^{ 2 } } } dx } }={ e }^{ { sin }^{ -1 }x }\)
எனவே,தேவையான தீர்வு
\(y\times I.F=\int { Q\times I.Fdx+c } \)
\(ye^{ sin^{ -1 }x }=\int { \cfrac { { e }^{ { sin }^{ -1 } }x }{ \sqrt { 1-{ x }^{ 2 } } } +{ e }^{ { sin }^{ -1 } }dx+c } \)
\(t={ sin }^{ -1 }x\)
\(dt=\cfrac { 1 }{ \sqrt { 1-{ x }^{ 2 } } } dx\)
\({ y }^{ sin^{ -1x } }=\int { { e }^{ t }.{ e }^{ t }dt+c } \)
\(\int { { e }^{ 2t }dt+c } \)
\(y{ e }^{ sin^{ -1 }x }=\cfrac { { e }^{ 2t } }{ 2 } +c\)
\(\therefore y{ e }^{ sin^{ -1 } }=\cfrac { { e }^{ 2 }{ sin }^{ -1 }x }{ 2 } +c\)
5.
W(x, y, z) = xy + yz + zx, x =u -v, y = uv, z = u + v; y = uv; z = u
\(\frac { \partial W }{ \partial x } \) = y + z; \(\frac { \partial W }{ \partial y } \) = x + z
∴ \(\frac { \partial W }{ \partial x } \) = uv + u + v;
\(\frac { \partial W }{ \partial y} \) = u - v + u + v;
\(\frac { \partial W }{ \partial z} \) = uv + u - v
\(\frac { dx }{ du } =1;\frac { dy }{ du } =v;\frac { dz }{ du } =1\)
\(\frac { dx }{ dv } =1;\frac { dy }{ dv } =v;\frac { dz }{ dv} =1\)
\(\frac { \partial W }{ \partial u } =\frac { \partial w }{ \partial x } .\frac { dx }{ du } +\frac { \partial w }{ \partial y } .\frac { dy }{ du } +\frac { \partial w }{ \partial z } .\frac { dz }{ du } \)
= (uv +u +v) (1) +2u (v) + (uv +u - v)(1)
\(\frac { \partial W }{ \partial u } \) = 4uv + 2u = 12u (2v + 1)
\({ \left( \frac { \partial W }{ \partial u } \right) }_{ \left( \frac { 1 }{ 2 } ,1 \right) }\) = 2 x \(\frac12\) (2+ 1) = 1(2+ 1) = 3
= (uv + u + v) (-1) + (2u) (u) + (uv + u - v)(1)
= 2u2 - 2v = 2 (u2 - v)
∴ \({ \left( \frac { \partial W }{ \partial v } \right) }_{ \left( \frac { 1 }{ 2 } ,1 \right) }\) = \(2\left( \frac { 1 }{ 4 } -1 \right) =2\left( -\frac { 3 }{ 4 } \right) =-\frac { 3 }{ 2 } \)
6.
கொடுக்கப்பட்டது \(x\cfrac { dy }{ dx } =y-x{ cos }^{ 2 }\cfrac { y }{ x } \)
சமன்பாட்டை \(\cfrac { dy }{ dx } =\cfrac { y-x{ cos }^{ 2 }\frac { y }{ x } }{ x } \) எனுமாறு எழுதலாம்.
இது ஒரு சமப்படித்தான வகைக்கெழுச் சமன்பாடாகும்.
\(y=vx\)
\(\frac { dy }{ dx } =v(1)+x\cfrac { dv }{ dx } \)
y மற்றும் \(\cfrac { dy }{ dx } \) ன் மதிப்பை சமன்பாடு (10 ல் பிரதியிட
\(v+\frac { xdv }{ dx } =\cfrac { vx-x{ cos }^{ 2 } }{ x } \)
\(v+\cfrac { xdv }{ dx } =\cfrac { vx-x{ cos }^{ 2 }(v) }{ x } \)
\(v+\cfrac { xdv }{ dv } =x\cfrac { \left( v-{ cos }^{ 2 }v \right) }{ x } \)
\(x\cfrac { dv }{ dx } =v-{ cos }^{ 2 }v-v\)
\(\cfrac { dv }{ dx } =\cfrac { -{ cos }^{ 2 } }{ x } \)
\(\cfrac { dv }{ { cos }^{ 2 }v } =\cfrac { -dx }{ x } \)
இருபுறமும் தொகையிடக் கிடைப்பது
\(\int { { sec }^{ 2 }vdx } =-\int { \cfrac { dx }{ x } } \)
\(tanv=-logx+logC\)
\(tanv=logC-logx\)
\(tanv=log\left( \cfrac { c }{ x } \right) \)
\({ e }^{ tanv }=\cfrac { C }{ x } \)
\(C=x{ e }^{ tanv }\)
\(C={ xe }^{ tan\left( \frac { y }{ x } \right) }\) என்பது தேவையான தீர்வாகும்.
7.
சமன்பாட்டை tan y \(\frac { dy }{ dx } \) = cos (x + y) + cos (x - y) எனுமாறு எழுதலாம்.
[cos(A+B)+cos(A-B)=2cosAcosB என்பதை நாம் அறிவோம். இங்கு A=x,B=y]
\(\therefore tany\cfrac { dy }{ dx } =2cosxcosy\)
\(\cfrac { tany }{ cosy } dy=2cosxdx\)
இருபுறமும் தொகையிடக் கிடைப்பது
\(\int { \cfrac { tany }{ cosy } dy=2\int { cosxdx } } \)
\(2\int { \tan y \sec y dy } =2\int { \cos x } dx\)
\(\\ secy=2sinx+C\)
8.
\(f(x)=\cfrac { { e }^{ x } }{ 1-{ e }^{ x } } \)
\(f'\left( x \right) =\cfrac { \left( 1-{ e }^{ x } \right) { e }^{ x }-{ e }^{ x }\left( -{ e }^{ x } \right) }{ \left( 1-{ e }^{ x } \right) ^{ 2 } } \)
= \(\cfrac { { e }^{ x }-{ e }^{ 2x }+{ e }^{ 2x } }{ \left( 1-{ e }^{ x } \right) ^{ 2 } } =\cfrac { { e }^{ x } }{ \left( 1-{ e }^{ x } \right) ^{ 2 } } \)
x=0 எனும்போது,f(x) என்பது வரையறுக்கப்படாததாகிறது.
\(\therefore\) x=0 என்பது விலக்கப்பட்ட மதிப்பாகும்.
\(\therefore\) இடைவெளிகள் என்பன \(\left( -\infty ,0 \right) \cup \left( 0,\infty \right) \left( -\infty ,0 \right) \) ல் \(f'\left( x \right) >0\)
\(\therefore\) f(x) என்பது \( \left( -\infty ,0 \right) \) மற்றும் \((0, \infty)\)ல் திட்டமாக ஏறுகிறது மற்றும் அறுதி மதிப்பு கிடையாது.
9.
வட்டம் x2 + y2 = r2 , x-அச்சு,கோடுகள் x = r - h மற்றும் x = r ஆகியவற்றால் சூழப்பட்ட முதல் கால் வட்டப் பகுதியில் உள்ள அரங்கத்தின் பரப்பை x-அச்சைப் பொருத்து சுழற்றும்போது உருவாகும் திடப் பொருளானது , ஆரம் r, உயரம் h உடைய கோள வடிவ தொப்பியாகும் படம் -ல் காண்க. எனவே தேவையான கன அளவு
V = π \(\int ^{r}_{r-h} y^2 dx = π \int ^{r}_{r-h} (r^2-x^2) dx = π (r^2 x - \frac {x^3}{3})^{r}_{r-h} \)
= π \((r^2 (r (r-h)) - \frac {(r^3- (r-h)^3)}{3})\)
= π \((r^2h - \frac {(r^3-(r^3-3r^2h + 3rh^2 -h^3))}{3})\)
= π \((\frac {3rh^2-h3}{3}) = \frac{1}{3}πh^2(3r - h)\).
குறிப்பு
மேலே உள்ள கோள வடிவத் தொப்பியின் கன அளவை தொப்பியின் ஆரம் மூலம் எழுதலாம். ρ என்பது கோள வடிவத் தொப்பியின் ஆரம் எனில் ρ2 + (r - h )2 = r2
எனவே r = \(\frac {ρ^2 + h^2 }{2h}\) . மேலே உள்ள கன அளவில் r-ன் மதிப்பை பிரதியிட, நாம் பெறுவது
V = \(\frac{1}{3}πh^2[3 (\frac {ρ^2 + h^2}{2h})- h]\) = \(\frac{1}{3}πh[ (\frac {3ρ^2 + h^2}{2})] = \frac {1}{6} πh(3 ρ^2 +h^2)\).
10.
கொடுக்கப்பட்டது n = 6 .
குறைபாடுள்ள ஒரு பொருளைத் தேர்ந்தெடுப்பதற்கான நிகழ்தகவு \(\frac{20}{100}\), அதாவது p = \(\frac{1}{5}\).
q = 1 − p = \(\frac{4}{5}\). குறைபாடுள்ள பொருட்களின் எண்ணிக்கையை X குறிப்பதால், X கொள்ளும் மதிப்புகள் 0,1,2,...,6ஆகும்.
எனவே X ஈருறுப்பு பரவலைப் பின்பற்றுகிறது. அதனை X~B (6, \(\frac{1}{5}\)) எனக் குறிப்பிடலாம்.
இதிலிருந்து பெறுவது \(f(x) = \left( \begin{matrix} 6 \\ x \end{matrix} \right) (\frac{1}{5})^x(\frac{4}{5})^{6-x},\quad x=0,1,2,...,6\).
(i) இரு குறைபாடுகளுள்ள பொருட்களுக்கான நிகழ்தகவு,
P(X = 2) = \(f(2) = \left( \begin{matrix} 6 \\ 2 \end{matrix} \right) (\frac{1}{5})^2(\frac{4}{5})^{6-2}=15(\frac{4^4}{5^6})\)
(ii) அதிகபட்சம் ஒரு பொருள் குறைபாடுள்ளதாக இருக்க நிகழ்தகவு,
P(X ≤ 1) = P(X = 0) + P(X = 1)
\(=\left( \begin{matrix} 6 \\ 0 \end{matrix} \right) (\frac{1}{5})^0(\frac{4}{5})^{6-0}+\left( \begin{matrix} 6 \\ 1 \end{matrix} \right) (\frac{1}{5})^1(\frac{4}{5})^{6-1}\)
\(=\left( \begin{matrix} 4 \\ 5 \end{matrix} \right)^6 +(6)(\frac{4^5}{5^6})=2(\frac{4}{5})^5\)
அதிகபட்சம் ஒரு பொருள் குறைபாடுள்ளதாக இருக்க நிகழ்தகவு 2\((\frac{4}{5})^5\).
(iii) குறைந்தபட்சம் இரு பொருட்கள் குறைபாடுள்ளதாக இருக்க நிகழ்தகவு
P(X ≥ 2) = 1 − P(X < 2) =1 − P(X ≤ 1) = 1 − 2\((\frac{4}{5})^5\)
குறைந்தபட்சம் இரு பொருட்கள் குறைபாடுள்ளதாக இருக்க நிகழ்தகவு 1 −2\((\frac{4}{5})^5\).
11.
நீள்வட்டமானது நெட்டச்சு மற்றும் குற்றச்சுகளைப் பொருத்து சமச்சீராக உள்ளது. படம் - ல் நீள்வட்டம் வரையப்பட்டுள்ளது. y -அச்சின் மிகைப்பகுதியின் திசையில் பார்க்கும்போது தேவையான பரப்பு A ஆனது நீள்வட்டத்தின் முதல் கால் வட்டப் பகுதியில் \((y = \frac {b}{a} \sqrt{a^2}-{x^2}, 0 < x < a ), \) x -அச்சு, x = 0 மற்றும் x = a ஆகியவற்றால் அடைபடும் அரங்கத்தின் பரப்பைப் போல் நான்கு மடங்காகும். செங்குத்தான பட்டைகளைப் பயன்படுத்தி பரப்பு காணக் கிடைப்பது,
A = \(4\int ^{a}_ {0} x dx \) = 4 \(\int ^{b}_{0} \frac {a}{b} \sqrt{a^2 - x^2} dy \)
= \(\frac {4a}{b}\)[\(\frac {x \sqrt {a^2 - y^2}}{2}\) + \(\frac {a^2}{2}\) sin-1 \(\frac {x}{b}]^{a}_{0}\) = \(\frac {4b}{a} \times \frac {\pi^2}{4} = \pi ab.\)
12.
I = \(\int ^\frac{\pi}{4}_{0}\) log(1+tan x) dx என்க.
\(\int ^{a}_{0}\) f(x) dx = \(\int ^{a}_{0}\) f(a-x) dx என்ற பண்பை சமன்பாடு (1)-ல் பயன்படுத்தக் கிடைப்பது,
I = \(\int ^\frac{\pi}{4}_{0}\) log \([1+\tan (\frac{\pi}{4}-x)]\) dx = \(\int ^\frac{\pi}{4}_{0}\) log \([1 + \frac{\tan \frac {\pi}{4}- \tan x}{1 + \tan {\frac {\pi}{4} \tan x}}]\) dx
= \(\int ^\frac{\pi}{4}_{0}\) log \([1 + \frac {1 - \tan x}{1 + \tan x}]\)dx = \(\int ^\frac{\pi}{4}_{0}\) log \([\frac {1+tan x +1 - tan x}{1 + tan x}]\) dx
=\(\int ^\frac{\pi}{4}_{0}\) log \([\frac{2}{1+tanx}]\) dx = \(\int ^\frac{\pi}{4}_{0}\) [log 2 - log (1+tan x)] dx
= log 2\(\int ^\frac{\pi}{4}_{0}\) dx - \(\int ^\frac{\pi}{4}_{0}\) log (1+tan x)] dx
= \(\frac{\pi}{4}\)log 2 - I
2I = \(\frac{\pi}{4}\)log2. எனவே , I = \(\frac{\pi}{8}\) log2.
13.
(i) நிகழ்தகவு நிறைச் சார்பு
\(f(0)=P(X=0)=F(0)-F(0^-)=\cfrac { 1 }{ 2 } -0 =\frac { 1 }{ 2 } \)
\(f(1)=P(X=1)=F(1)-F(0)=\cfrac { 3 }{ 5 } -\cfrac { 1 }{ 2 } =\cfrac { 1 }{ 10 } \)
\(f(2)=P(X=2)=F(2)-F(1)=\cfrac { 4 }{ 5 } -\cfrac { 3 }{ 5 } =\cfrac { 1 }{ 5 } \)
\(f(3)=P(X=3)=F(3)-F(2)=\cfrac { 9 }{ 10 } -\cfrac { 4 }{ 5 } =\cfrac { 1 }{ 10 } \)
\(f(4)=P(X=4)=F(4)-F(3)=1-\cfrac { 9 }{ 10 } =\cfrac { 1 }{ 10 } \)
நிகழ்தகவு நிறைச் சார்பு
| x | 0 | 1 | 2 | 3 | 4 |
| f(x) | \(\frac{1}{2}\) | \(\frac{1}{10}\) | \(\frac{1}{5}\) | \(\frac{1}{10}\) | \(\frac{1}{10}\) |

(ii) P(X < 3) = P(X = 0) + P(X = 1) + P (X = 2)
\(\begin{aligned}
=\frac{1}{2}+\frac{1}{10}+\frac{1}{5}
\end{aligned}\)
\(\begin{aligned}
=\frac{5+1+2}{10}=\frac{8}{10}=\frac{4}{5}
\end{aligned}\)
(iii) P(X \(\geq\)2) = P(X = 2) + P(X = 3) + P(X = 4)
\(\begin{aligned}
=\frac{1}{5}+\frac{1}{10}+\frac{1}{10}
\end{aligned}\)
\(\begin{aligned}
=\frac{2+1+1}{10}=\frac{4}{10}=\frac{2}{5}
\end{aligned}\)
14.
இருமுறை எறிதலின் மொத்தத் தொகை X -ஐ குறிப்பதால், X -ஆனது 2, 3, 4, 5, மற்றும் 6 ஆகிய மதிப்புகளைக் கொண்டிருக்கும்.
அருகிலுள்ள அட்டவணை S-லிருந்து,
| சமவாய்ப்பு மாறியின் மதிப்பு | 2 | 3 | 4 | 5 | 6 | மொத்தம் |
| நேர்மாறு பிம்பங்களில் உறுப்புகளின் எண்ணிக்கை | 1 | 4 | 10 | 12 | 9 | 36 |
கூறுவெளி S

\(P(X=2)=\frac{1}{36},\)
\(P(X=3)=\frac{4}{36},\)
\(P(X=4)=\frac{10}{36},\)
\(P(X=5)=\frac{12}{36},\)
மற்றும் \(P(X=6)=\frac{9}{36}.\)
(i) நிகழ்தகவு நிறை சார்பானது.
| x | 2 | 3 | 4 | 5 | 6 |
| f(x) | \(\frac{1}{36}\) | \(\frac{4}{36}\) | \(\frac{10}{36}\) | \(\frac{12}{36}\) | \(\frac{9}{36}\) |

(ii) குவிவு பரவல் சார்பு வரையறைப்படி தனிநிலை சமவாய்ப்பு மாறியின் குவிவு பரவல் சார்பானது,
\(F(x)=P(X\le x) =\underset { { x }_{ i }\le x }{ \Sigma } { P(X={ x }_{ i }) }\),
P(X < x) = 0, −∞ < x < 2.
\(F(2)=P(X\le 2)=\sum _{ -\infty }^{ 2 }{ { P(X={ x }) }={ P(X<2) }+P(X=2)=0+\frac { 1 }{ 36 } } =\frac { 1 }{ 36 } .\)
\(F(3)= P(X\le 3)=\sum _{ -\infty }^{ 3 }{ { P(X={ x }) }={ P(X<2) }+P(X=2)+P(X=3)=0+\frac { 1 }{ 36 }+\frac { 4 }{ 36 } } =\frac { 5 }{ 36 } .\)
\(F(4)= P(X\le 4)=\sum _{ -\infty }^{ 4 }{ { P(X={ x }) }={ P(X<2) }+P(X=2)+P(X=3)+P(X=4)=0+\frac { 1 }{ 36 }+\frac { 4 }{ 36 }+\frac { 10 }{ 36 } } =\frac {15 }{ 36 } .\)
\(F(5)= P(X\le 5)=\sum _{ -\infty }^{ 5 }{ { P(X={ x }) }={ P(X<2) }+P(X=2)+P(X=3)+P(X=4)+P(X=5)}\)= \(0+\frac{1}{36}+\frac{4}{36}+\frac{10}{36}+\frac{12}{36}=\frac{27}{36}.\)
\(F(6)= P(X\le 6)=\sum _{ -\infty }^{ 6 }{ { P(X={ x })}}\)
= P(X < 2) + P(X = 2) + P(X = 3)+ P(X = 4)+ P(X = 5)+ P(X = 6)
= \(0+\frac{1}{36}+\frac{4}{36}+\frac{10}{36}+\frac{12}{36}+\frac{9}{36}=1.\)
எனவே , குவிவு பரவல் சார்பானது
,\(\begin{cases}\begin{matrix}0,&-\infty < x< 2\end{matrix}\\\begin{matrix}\frac{1}{36},&2 \le x< 3\end{matrix}\\\begin{matrix}\frac{5}{36},&3 \le x< 4\end{matrix}\\\begin{matrix}\frac{15}{36},&4 \le x< 5\end{matrix}\\\begin{matrix}\frac{27}{36},&5 \le x< 6\end{matrix}\\\begin{matrix}1,&6 \le x< \infty\end{matrix}\end{cases}\)

(iii) \(P(3\le X<6)=\sum _{ x=3 }^{ 5 }{ P(X={ x }_{ i })=P(X=3)+P(X=4) } +P(X=5)\)
= \(\frac{4}{36}+\frac{10}{36}+\frac{12}{36}=\frac{26}{36}.\)
(iv) \(P(X\ge4)=\sum _{ x=4 }^{ \infty }{ P(X={ x }_{ i })}\)
= P(X = 4)+P(X = 5)+P(X = 6)
=\(\frac{10}{36}+\frac{12}{36}+\frac{9}{36}=\frac{31}{36}.\)
15.
படத்திலிருந்து,\(\cfrac { r }{ h } =\cfrac { 5 }{ 12 } \) \(\Rightarrow\) \(r=\cfrac { 5h }{ 12 } \)
கொடுக்கப்பட்ட கன அளவின் மாறுவீதம் \(\cfrac { dv }{ dt } =10\)
h=8 எனும்போது \(\cfrac { dh }{ dt } \) ஐக் காண வேண்டும்
கூம்பின் கன அளவு \(V=\cfrac { 1 }{ 3 } { \pi r }^{ 2 }\)h
\(V=\cfrac { \pi }{ 3 } \left( \cfrac { 5h }{ 12 } \right) ^{ 2 }h\)
\(V=\cfrac { \pi }{ 3 } \left( \cfrac { 25{ h }^{ 3 } }{ 144 } \right) =\cfrac { 25\pi }{ 432 } { h }^{ 3 }\)
't' ஐப் பொறுத்து வகைப்படுத்த
\(\cfrac { dv }{ dt } =\cfrac { 25\pi }{ 432 } \left( 3{ h }^{ 2 } \right) \cfrac { dh }{ dt } \)
\(10=\cfrac { 25\pi }{ 432 } \left( 3\left( 8 \right) ^{ 2 } \right) \cfrac { dh }{ dt } \) \(\left[ \therefore h=8 \right] \)
\(\therefore \cfrac { dh }{ dt } =\cfrac { 1 }{ \pi } \cfrac { 432\times 10 }{ 3\times 25\times 64 } =\cfrac { 4320 }{ 4800\pi } \)
= \(\cfrac { 0.9 }{ \pi } =\cfrac { 9 }{ 10\pi } \)
ஃ நீரின் ஆழம் நிமிடத்திற்கு \(\cfrac { 9 }{ 10\pi } \) மீ வேகத்தில் அதிகரிக்கிறது.
16.
9x2-y2-36x-6y+18 = 0
\(\Rightarrow\) 9x2-36x(y2-6y) = -18
\(\Rightarrow\) 9(x2-4x)(y2+6y) = -18
\(\Rightarrow\) 9(x2-4x+4-4)-(y2+6y+9-9) = -18
\(\Rightarrow\) 9(x-2)2-36-(y+3)2+9 = -18
\(\Rightarrow\) 9(x-2)2-(y+3)2 = -18+36-9
\(\Rightarrow\) 9(x-2)2-(y+3)2 = 9
9 ஆல் வகுக்க கிடைப்பது
துணை அச்சு x-அச்சுக்கு இணையான அதிபரவளையத்தின் சமன்பாடு
a2 = 1, b2 = 9
\(\therefore { c }^{ 2 }={ a }^{ 2 }+{ b }^{ 2 }=1+9=10\Rightarrow c=\sqrt { 10 } \)
\(e=\sqrt { 1+\cfrac { { b }^{ 2 } }{ { a }^{ 2 } } } =\sqrt { 1+\cfrac { 9 }{ 1 } } =\sqrt { 10 } \)
(a) மையம் (2, -3)
\(\Rightarrow h=2,k=-3\)
(b) குவியங்கள் (h+c, k), (h-c, k)
\(\Rightarrow \left( 2+\sqrt { 10 } ,-3 \right) ,\left( 2-\sqrt { 10 } ,-3 \right) \)
(c) முனைகள் (h+a, k) (h-a, k)
\(\Rightarrow \left( 2+1,-3 \right) ,\left( 2-1,3 \right) \)
\(\Rightarrow \left( 3,3 \right) \left( 1,-3 \right) \)
(d) இயக்குவரையின் சமன்பாடுகள் \(x-2=\pm \cfrac { a }{ e } \)
\(\Rightarrow x-2=\pm \cfrac { 1 }{ \sqrt { 10 } } \)
\(x=2\pm \cfrac { 1 }{ \sqrt { 10 } } \)
\(\Rightarrow x=2+\cfrac { 1 }{ \sqrt { 10 } } \)
\(x=2-{ \cfrac { 1 }{ \sqrt { 10 } } }\)
17.
தேவையான நேர்க்கோடு (-5, 7, -4) மற்றும் (13, -5, 2) என்ற புள்ளிகள் வழியாகச் செல்கிறது. எனவே, இப்புள்ளிகளை இணைக்கும் கோட்டின் திசை விகிதங்கள் 18, -12, 6 ஆகும். அதாவது 3, -2, 1 ஆகும்.
ஆதலால், தேவையான நேர்க்கோடு \(3\hat { i } -2\hat { j } +\hat { k } \) என்ற வெக்டருக்கு இணையாக இருக்கும். எனவே,
தேவையான நேர்க்கோட்டின் துணையலகு வடிவ வெக்டர் சமன்பாடு
\(\vec { r } =(-5\hat { i } +7\hat { j } -4\hat { k } )+t(3\hat { i } -2\hat { j } +\hat { k } )\)அல்லது \(\vec { r } =(13\hat { i } -5\hat { j } +2\hat { k } )+s(3\hat { i } -2\hat { j } +\hat { k } )\) இங்கு s,t \(\in R\) ஆகும்.
தேவையான கோட்டின் கார்டீசியன் சமன்பாடுகள் \(\frac { x+5 }{ 3 } =\frac { y-7 }{ -2 } =\frac { z+4 }{ 1 } \) அல்லது \(\frac { x-13 }{ 3 } =\frac { y+5 }{ -2 } =\frac { z-2 }{ 1 } \) ஆகும்.
இந்நேர்க்கோட்டில் உள்ள ஏதேனும் ஒரு புள்ளியின் அமைப்பு
(3t-5, -2t+7, t-4) அல்லது (3s+13, -2s-5, s+2)
நேர்க்கோடு xy-தளத்தை சந்திப்பதால், வெட்டும் புள்ளியின் z -அச்சுத் தொலைவு பூச்சியமாகும். எனவே, t−4 = 0, அதாவது, t = 4 ஆகும். ஆகையால், நேர்க்கோடு xy-தளத்தை வெட்டும் புள்ளி (7, -1, 0) ஆகும்.
18.

முக்கோணம் ABC-ல், \(\vec { AD } ,\vec { BE } \) என்ற செங்குத்துக் கோடுகள் வெட்டும் புள்ளி O என்க. AB-ஐ F-ல் சந்திக்குமாறு COவை நீட்டுக. ஆதிப்புள்ளி O என்க. \(\vec { OA } =\vec { a } \), \(\vec { OB } =\vec { b} \) மற்றும் \(\vec { OC } =\vec { c } \) என்க.
\(\vec { AD } \) என்பது \(\vec { BC } \) க்குச் செங்குத்து என்பதால், \(\vec { OA } \) என்பது \(\vec { BC } \)-க்குச் செங்குத்தாகும். எனவே, \(\vec { OA } \).\(\vec { BC } \) = 0
அதாவது, \(\vec { a } .(\vec { c } -\vec { b } )=0\)
\(\Rightarrow \vec { a } .\vec { c } -\vec { a } .\vec { b } =0\) .....(1)
இதேபோன்று, \(\vec { BE } \) என்பது \(\vec { CA } \)-க்குச் செங்குத்து என்பதால், \(\vec { OB } \) என்பது \(\vec { CA } \) க்குச் செங்குத்தாகும். எனவே, \(\vec { OB } .\vec { CA } \) = 0.
அதாவது \(\vec { b } .(\vec { a } -\vec { c } )=0\),
\(\Rightarrow \vec { a } .\vec { b } -\vec { b } \vec {c } =0\) ....(2)
சமன்பாடுகள் (1) மற்றும் (2) ஆகியவற்றின் கூடுதல் காண, நாம் பெறுவது
\( \vec { a } .\vec { c } -\vec { b } .\vec {c } =0\)
\(\Rightarrow \vec { c } .(\vec { a } -\vec { b } )=0\)
அதாவது, \(\vec { OC } .\vec { BA } =0\). ஆகவே, \(\vec { OC } \) என்பது \(\vec { BA } \)-க்குச் செங்குத்து என்பதால், \(\vec { CF } \) என்பது \(\vec { AB } \) க்குச் செங்குத்தாகும். அதாவது, C-யிலிருந்து பக்கம் AB-க்கு வரையப்பட்ட செங்குத்துக் கோடு O வழியாகச் செல்கிறது. எனவே, ஒரு முக்கோணத்தின் குத்துக்கோடுகள் ஒரு புள்ளி வழிச் செல்லும் கோடுகளாகும்.
19.
அணு உலை குளிரூட்டும் தூணின் குறுக்கு வெட்டு அதிபரவளைய வடிவில் உள்ளது.

கொடுக்கப்பட்ட \(OC=\cfrac { 1 }{ 2 } OD\) மற்றும் CD = 150மீ அதனுடைய சமன்பாடு OC = 50மீ மற்றும் OD = 100 மீ \(\cfrac { { x }^{ 2 } }{ { 30 }^{ 2 } } -\cfrac { { y }^{ 2 } }{ { 44 }^{ 2 } } =1\)
OC = 50 மீ மற்றும் OD = 100 மீ அணு உலையின் மேற்புற ஆரம் x1 எனவும், கீழ்புற ஆரம் x2 எனவும் கொள்க.
ஃபுள்ளிகள் A(x1, 50) மற்றும் B(x₂, -100) அதிபரவளையம் A(x1, 50) புள்ளி வழிச் செல்கிறது.
\( \therefore \frac{x_1^2}{30^2}-\frac{50^2}{44^2} =1+\frac{2500}{1936}=\frac{1936+2500}{1936} \\ x_1^2 =\frac{30^2}{44^2}(4436) \\ \Rightarrow x_1 =\frac{30}{44} \times \sqrt{4436}
\)
\(\\ \Rightarrow x_1 =\frac{30}{44} \times(66.6)=45.41 \ \)மீ
மேற்புற ஆரம் = 45.41 மீ
மேற்புற விட்டம் = 90.82 மீ
மேலும், அதிபரவளையம் B(x2, -100) வழிச் செல்கிறது.
\( \frac{x_2^2}{30^2}-\frac{100^2}{44^2} =1 \\ \frac{x_2^2}{30^2} =1+\frac{100^2}{44^2}=\frac{44^2+100^2}{44^2} \\ x_2^2 =\frac{30^2}{44^2}(11936) \\ x_2 =\frac{30}{44} \times \sqrt{11936} \\ =\frac{30}{44}(109.25)=74.48 \)
கீழ்ப்புற ஆரம் = 74.48 மீ
கீழ்ப்புற விட்டம் = 148.96 மீ
ஃ தூணின் மேற்பகுதி மற்றும் அடிப்பகுதியின் விட்டங்கள் முறையே 90.82 மீ மற்றும் 148.96 மீ.
20.
நீள்வட்டத்தின் சமன்பாடு c2 + 3y2 = 12
\(\div \) 12 கிடைப்பது \(\cfrac { { x }^{ 2 } }{ 12 } +\cfrac { { y }^{ 2 } }{ 4 } =1\)
\(\therefore\) a2 = 12, b2 = 4
கோடு x - y + 4 = 0 ஐ y = x + 4 என திருத்தி எழுதலாம் .
\(\therefore\) m = 1, c = 4
y = mx + 4 நீள் வட்டத்தின் தொடுகோடாக இருக்க கட்டுப்பாடு c2 = a2m2 + b2
\(\therefore \) (4)2 = 12(1)2 + 4
\(\Rightarrow\) 16 = 12 + 4
\(\Rightarrow\) 16 = 16
நிபந்தனை நிறைவு செய்யப்படுவதால், கோடு x - y + 4 = 0 நீள் வட்டம் x2 + 3y2 = 12க்கு தொடுகோடாகும்.
மேலும் தொடும்புள்ளி \(\left( \cfrac { { -a }^{ 2 }m }{ c } ,\cfrac { { b }^{ 2 } }{ c } \right) \)
\(\Rightarrow \left( -\cfrac { 12(1) }{ 4 } ,\cfrac { 4 }{ 4 } \right) \Rightarrow \left( -3,1 \right) \)
\(\therefore\) தொடுபுள்ளி (-3, 1)
21.
ஒரு தோசையின் விலை ரூ.x என்க.
ஒரு இட்லியின் விலை ரூ. y என்க.
ஒரு வடையின் விலை ரூ.z என்க.
கொடுக்கப்பட்ட தரவின்படி,
2x+3y+2z=150
2x+2y+4z=200
5x+4y+2z=250
\(\therefore \Delta =\left| \begin{matrix} 2 & 3 & 2 \\ 2 & 2 & 4 \\ 5 & 4 & 2 \end{matrix} \right| \)
\(=2\left| \begin{matrix} 2 & 4 \\ 4 & 2 \end{matrix} \right| -3\left| \begin{matrix} 2 & 4 \\ 5 & 2 \end{matrix} \right| +2\left| \begin{matrix} 2 & 2 \\ 5 & 4 \end{matrix} \right| \)
=2(4-16)-3(4-20)+2(8-10)
=2(-12)-3(-16)+2(-2)
=-24+48-4=20 ≠ 0
\({ \Delta }_{ 1 }=\left| \begin{matrix} 150 & 3 & 2 \\ 200 & 2 & 4 \\ 250 & 4 & 2 \end{matrix} \right| \)
C3 லிருந்து 50ஐ பொதுவில் எடுக்க கிடைப்பது
\(=50\left| \begin{matrix} 3 & 3 & 1 \\ 4 & 2 & 2 \\ 5 & 4 & 1 \end{matrix} \right| \)
\(=50\left[ 3\left| \begin{matrix} 2 & 2 \\ 4 & 1 \end{matrix} \right| -3\left| \begin{matrix} 4 & 2 \\ 5 & 1 \end{matrix} \right| +1\left| \begin{matrix} 4 & 2 \\ 5 & 4 \end{matrix} \right| \right] \)
= 50[3(4 - 16) - 3(8 - 20) + 2(16 - 10)]
= 50[- 36 + 36 + 12] = 600
\({ \Delta }_{ 2 }=\left| \begin{matrix} 2 & 150 & 2 \\ 2 & 200 & 4 \\ 5 & 250 & 2 \end{matrix} \right| =50\left| \begin{matrix} 2 & 3 & 1 \\ 2 & 4 & 2 \\ 5 & 5 & 1 \end{matrix} \right| \)
\(=50\left[ \left| \begin{matrix} 4 & 2 \\ 5 & 1 \end{matrix} \right| -3\left| \begin{matrix} 2 & 2 \\ 5 & 1 \end{matrix} \right| +1\left| \begin{matrix} 2 & 4 \\ 5 & 5 \end{matrix} \right| \right] \)
= 50 [2(8-20)-3(4-20)+2(10-20)]
= 50[-24+48-20] = 200
\({ \Delta }_{ 3 }=\left| \begin{matrix} 2 & 3 & 150 \\ 2 & 2 & 200 \\ 5 & 4 & 250 \end{matrix} \right| =50\left| \begin{matrix} 2 & 3 & 3 \\ 2 & 2 & 4 \\ 5 & 4 & 5 \end{matrix} \right| \)
\(=50\left[ 2\left| \begin{matrix} 2 & 4 \\ 4 & 5 \end{matrix} \right| -3\left| \begin{matrix} 2 & 4 \\ 5 & 5 \end{matrix} \right| +3\left| \begin{matrix} 2 & 2 \\ 5 & 4 \end{matrix} \right| \right] \)
=50[2(10-16)-3(10-20)+3(8-10)]
=50[2(-6)-3(-10)+3(-2)]
=50[-12+30-6]=50[12]=600
\(\therefore x=\frac { { \Delta }_{ 1 } }{ \Delta } =\frac { 600 }{ 20 } =30\)
\(y=\frac { { \Delta }_{ 2 } }{ \Delta } =\frac { 200 }{ 20 } =10\)
\(z=\frac { { \Delta }_{ 3 } }{ \Delta } =\frac { 600 }{ 20 } =30\)
ஆகையால் ஒரு தோசையின் விலை ரூ.30, ஒரு இட்லியின் விலை ரூ. 10 மற்றும் 1 வடையின் விலை ரூ.30.
மேலும் 3 தோசைகள், ஆறு இட்லிகள் மற்றும் 6 வடைகளின் விலை
=3x+6y+6z =3(30)+6(10)+6(30)
=90+60+180=ரூ.330
அக்குடும்பத்தினரிடம் ரூ.350 இருப்பதால் சாப்பிட்ட செலவிற்கான தொகையை அவர்களிடமிருந்த பணத்தைக் கொண்டு செலுத்த முடியும்.
22.
A என்பது செங்குத்து அணி. எனவே, AAT = ATA = I3 எனவே நாம் பெறுவது
AAT = I3 ⇒ \(\frac { 1 }{ 7 } \left[ \begin{matrix} 6 & -3 & a \\ b & -2 & 6 \\ 2 & c & 3 \end{matrix} \right] \frac { 1 }{ 7 } \left[ \begin{matrix} 6 & b & 2 \\ -3 & -2 & c \\ a & 6 & 3 \end{matrix} \right] =\left[ \begin{matrix} 1 & 0 & 0 \\ 0 & 1 & 0 \\ 0 & 0 & 1 \end{matrix} \right] \)
⇒\(\left[ \begin{matrix} 45+{ a }^{ 2 } & 6b+6+6a & 12-3c+3a \\ 6b+6+6a & { b }^{ 2 }+40 & 2b-2c+18 \\ 12-3c+3a & 2b-2c+18 & { c }^{ 2 }+13 \end{matrix} \right] =49\left[ \begin{matrix} 1 & 0 & 0 \\ 0 & 1 & 0 \\ 0 & 0 & 1 \end{matrix} \right] \)
⇒ \(\left\{ \begin{matrix} 45+{ a }^{ 2 }=49 \\ { b }^{ 2 }+40=49 \\ \begin{matrix} { c }^{ 2 }+13=49 \\ 6b+6+6a=0 \\ \begin{matrix} 12-3c+3a=0 \\ 2b-2c+18=0 \end{matrix} \end{matrix} \end{matrix} \right\} \Rightarrow \left\{ \begin{matrix} { a }^{ 2 }=4,\quad { b }^{ 2 }=9,\quad { c }^{ 2 }=36 \\ a+b=-1,a-c=-4,b-c=-9 \end{matrix} \right\} \) ⇒m a = 2, b = -3, c = 6
எனவே நமக்குக் கிடைப்பது, A = \(\frac { 1 }{ 7 } \left[ \begin{matrix} 6 & -3 & 2 \\ -3 & -2 & 6 \\ 2 & 6 & 3 \end{matrix} \right] \) மற்றும் A-1 = AT = \(\frac { 1 }{ 7 } \left[ \begin{matrix} 6 & -3 & 2 \\ -3 & -2 & 6 \\ 2 & 6 & 3 \end{matrix} \right] \).
23.
| p | q | p ➝ q | q⟶ p | p ↔️ q | (p ➝ q) ∧ (q⟶ p) |
| T | T | T | T | T | T |
| T | F | F | T | F | F |
| F | T | T | F | F | F |
| F | F | T | T | T | T |
மெய்மை அட்டவணையில் p ↔ q மற்றும் ( p ⟶ q) ∧ (q ⟶ p) ஆகியவற்றிற்கான நிரல்கள் முழுவதும் ஒரே மாதிரியாக உள்ளன. எனவே அவை சமானமானவை.
24.
x = வெட்டி எடுக்கப்படும் ஒவ்வொரு சிறிய சதுரங்களின் நீளம் என்க.
V = மடிப்பதன் மூலம் பெறப்படும் பெட்டியின் கன அளவு என்க.
நீளத்தின் இரு மூலைகளிலும் x நீளமுள்ள சதுரத்தை வெட்டிய பின் நீளம் 12 − 2x மடித்த பின்பு பெட்டியின் ஆழம் x. எனவே, கன அளவு V = x \(\times\) (12 - 2x)2 ஆகும். x = 0 அல்லது 6 -ல் கன அளவு பூச்சியமாவதைக் கவனிக்க. எனவே, x = 0 அல்லது 6 எனில் பெட்டி கிடைக்காது. எனவே, V = x \(\times\) (12 - 2x)2 , x∈(0, 6) -ஐ பெருமப்படுத்த வேண்டும்.
இப்பொழுது, \(\frac { dV }{ dx } ={ (12-2x) }^{ 2 }-4x(12-2x)\)
= (12 − 2x)(12 − 6x).
\(\frac { dV }{ dx } \)= 0 ⇒ x = 2,6 . 6∉(0,6) என்பதால் x = 2∈(0,6) என்பது மட்டுமே தேக்கநிலை எண். மேலும் \(\frac { dV }{ dx } \)-ன் குறி x = 2 -ஐ கடக்கும்போது மிகையிலிருந்து குறைக்கு மாறுகிறது. எனவே x = 2 -ல் V ஆனது இடஞ்சார்ந்த பெரும மதிப்பினை அடையும். இந்த இடஞ்சார்ந்த பெரும கன அளவு V =128 அலகுகள். எனவே பெரும கன அளவிற்கு 2 அலகுகள் வெட்ட வேண்டும்.
25.
\({ g }_{ x }=\cfrac { 1 }{ 5x+3y } \times 5\)
= \(\cfrac { 5 }{ 5x+3y } \)
= \(5(5x+3y)^{ -1 }\)
\({ g }_{ xx }=5\times -1(5x+3y)^{ -2 }\times 5\)
= \(-\cfrac { 25 }{ \left( 5x+3y \right) ^{ 2 } } \)
\(g_{ yx }=5\times -1\left( 5x+3y \right) ^{ -2 }\times 3\)
= \(-\cfrac { 15 }{ \left( 5x+3y \right) ^{ 2 } } \)
\({ g }_{ y }=\cfrac { 1 }{ 5x+3y } \times 3=3\left( 5x+3y \right) ^{ -1 }\)
\({ g }_{ xy }=-3\left( 5x+3y \right) ^{ -2 }\times 5\)
= \(-\cfrac { 15 }{ \left( 5x+3y \right) ^{ 2 } } \)
\({ g }_{ yy }=-3\left( 5x+3y \right) ^{ -2 }\times 3\)
= \(\cfrac { 9 }{ \left( 5x+3y \right) ^{ 2 } } \)
26.
x2 + y2 = a2 என்ற வட்டத்திற்கு (x1y1) எனும் புள்ளியில் தொடுகோட்டின் சமன்பாடு (xx1 + yy1 = a2) என நாம் அறிவோம். எனவே x2 + y2 =4 என்ற வட்டத்திற்கு (1, \(\sqrt {3}\) ) எனும் புள்ளியில் தொடுகோட்டின் சமன்பாடு x+y\(\sqrt {3}\) = 4;
அதாவது y= − \(\frac {1}{\sqrt {3}}\)(x -4 ). தொடுகோடு (4,0) எனும் புள்ளியில் x-அச்சை சந்திக்கிறது. எனவே தொடுகோட்டின் சாய்வு - ( \(\frac {1}{\sqrt {3}}\)). எனவே செங்கோட்டின் சாய்வு \(\sqrt {3}\) . செங்கோட்டின் சமன்பாடு y− \(\sqrt {3}\) = \(\sqrt {3}\)(x−1); அதாவது y= \(\sqrt {3}\) x. இக்கோடு ஆதி வழிச் செல்கிறது. தேவையான பரப்பானது அருகில் உள்ள படத்தில் நிழலிடப்பட்டுள்ளது. இப்பரப்பினை இரு வழிகளில் காணலாம்.
முறை 1
y-அச்சின் மிகை திசையில் நோக்கி பார்க்கும் போது, தேவையான அரங்கத்தின் பரப்பானது x-அச்சு, y= \(\sqrt {3}\) x மற்றும் x+y\(\sqrt {3}\) = 4 ஆகியவற்றால் அடைபடும் பரப்பாகும். இதற்கு \(\int ^{b}_{a}\)ydx என்ற சூத்திரத்தைப் பயன்படுத்துவோம். இதற்குத் தேவையான அரங்கத்தின் பரப்பை இரு பகுதிகளாக பிரித்துக் காண்போம். ஒரு பகுதியானது x-அச்சு, செங்கோடு y= \(\sqrt {3}\) x மற்றும் x =1 ஆகியவற்றால் அடைபடும் அரங்கத்தின் பரப்பு மற்றொரு பகுதியானது x-அச்சுத் தொடுகோடு x +y \(\sqrt {3}\) = 4 மற்றும் x =1 ஆகியவற்றால் அடைபடும் அரங்கத்தின் பரப்பு ஆகும்.
∴ தேவையான பரப்பு = \(\int ^{1}_{0}\) y dx + \(\int ^{4}_{1}\) y dx = \(\int ^{1}_{0}\) \(\sqrt 3x dx\) + \(\int ^{4}_{1} [- \frac {1}{\sqrt 3} (x-4)] dx\)
= \([\sqrt 3 \frac {x^2}{2}]^{1}_{0}\) + \([ -\frac {1}{\sqrt 3} (\frac {x^2}{2}-4x)]^{4}_{1} \) = \(\frac {\sqrt 3}{2} + \frac {8}{\sqrt 3} - \frac {7}{2\sqrt 3} = 2\sqrt 3\).
முறை 2
x-அச்சின் மிகை திசையில் நோக்கி பார்க்கும் போது, தேவையான அரங்கத்தின் பரப்பானது y= \(\sqrt 3\) x, x + y\(\sqrt 3\) = 4, y = 0 மற்றும் y = \(\sqrt 3\)ஆகியவற்றால் அடைபடும் பரப்பாகும். இப்பரப்பைக் காண \(\int ^{d}_{c} (x_{R} - x_{L}) dy\) என்ற சூத்திரத்தைப் பயன்படுத்த வேண்டும்.
இங்கு c = 0, d = \(\sqrt 3\) , xR என்பது தொடுகோடு x + y \(\sqrt 3\) = 4 மற்றும் xL என்பது செங்கோடு y = \(\sqrt 3\) x இன் x மதிப்பாகும்.
∴ தேவையான பரப்பு = \(\int ^{d}_{c} (x_R - x_L) dy = \int ^{\sqrt 3}_{0} ((4 - y \sqrt {3}) - \frac {y}{\sqrt {3}} )dy\)
= \([(4y - \frac {y^2}{2} \sqrt {3}) - \frac {y^2}{2\sqrt {3}}]^{\sqrt {3}}_{0}\)
= 4 \(\sqrt {3} - \frac {3}{2} \sqrt {3} - \frac {3}{2 \sqrt {3} } = 2 \sqrt {3}\) .
27.
இது \(1^{\infty}\) எனும் தேரப்பெறா வடிவில் உள்ளது. \(g(x)=(1+x)^{\frac{1}{x}}\) என்க. மடக்கை எடுக்க,
\(\log g(x)=\frac{\log(1+x)}{x}\)
\(\underset{x\rightarrow 0^{+}}{\lim} \log (g(x))=\underset{x\rightarrow 0^{+}}{\lim}(\frac{\log(1+x)}{x})\) (\(\frac{0}{0}\) வடிவம்)
=\(\underset{x\rightarrow0^{+}}{\lim}(\frac{\frac{1}{1+x}}{1})\) (லோபிதாலின் விதியின்படி)
=1.
ஆனால், \(\underset{x\rightarrow0^{+}}{\lim}\log g(x)=\log(\underset{x\rightarrow 0^{+}}{\lim} g(x))\)
எனவே , log\((\underset{x\rightarrow 0^{+}}{\lim} g(x))=1\).
ஆகவே அடுக்குப்படுத்த , \(\underset{x\rightarrow 0^{+}}{\lim}g(x)=e.\)
28.
2x + 3y − z = 9, x + y + z = 9, 3x − y − z = −1
தொகுப்பின் அணி வடிவம்
\(\left[ \begin{matrix} 2 \\ 1 \\ 3 \end{matrix}\begin{matrix} 3 \\ 1 \\ -1 \end{matrix}\begin{matrix} -1 \\ 1 \\ -1 \end{matrix} \right] \left[ \begin{matrix} x \\ y \\ z \end{matrix} \right] =\left[ \begin{matrix} 9 \\ 9 \\ -1 \end{matrix} \right] \)
\(\Rightarrow AX=B\) இங்கு \(A=\left[ \begin{matrix} 2 \\ 1 \\ 3 \end{matrix}\begin{matrix} 3 \\ 1 \\ -1 \end{matrix}\begin{matrix} -1 \\ 1 \\ -1 \end{matrix} \right] \)
\(X=\left[ \begin{matrix} x \\ y \\ z \end{matrix} \right] \)மற்றும் \(B=\left[ \begin{matrix} 9 \\ 9 \\ -1 \end{matrix} \right] \)
\(\Rightarrow \quad X={ A }^{ -1 }B\)
\(|A|=\left| \begin{matrix} 2 \\ 1 \\ 3 \end{matrix}\begin{matrix} 3 \\ 1 \\ -1 \end{matrix}\begin{matrix} -1 \\ 1 \\ -1 \end{matrix} \right| =2\left| \begin{matrix} 1 & 1 \\ -1 & -1 \end{matrix} \right| -3\left| \begin{matrix} 1 & 1 \\ 3 & -1 \end{matrix} \right| -1\left| \begin{matrix} 1 & 1 \\ 3 & -1 \end{matrix} \right| \)
[R1 மூலம் விரிவுபடுத்தப்பட்டது]
=2(-1+1)-3(-1-3)-1(-1-3)
=0-3(-4)=12+4=16
\(adj\quad A={ \left[ \begin{matrix} +\begin{vmatrix} 1 & 1 \\ -1 & -1 \end{vmatrix} \\ -\begin{vmatrix} 3 & -1 \\ -1 & -1 \end{vmatrix} \\ +\begin{vmatrix} 3 & -1 \\ 1 & 1 \end{vmatrix} \end{matrix}\begin{matrix} -\begin{vmatrix} 1 & 1 \\ 3 & -1 \end{vmatrix} \\ +\begin{vmatrix} 2 & -1 \\ 3 & -1 \end{vmatrix} \\ -\begin{vmatrix} 2 & -1 \\ 1 & 1 \end{vmatrix} \end{matrix}\begin{matrix} +\begin{vmatrix} 1 & 1 \\ 3 & -1 \end{vmatrix} \\ -\begin{vmatrix} 2 & 3 \\ 3 & -1 \end{vmatrix} \\ +\begin{vmatrix} 2 & 3 \\ 1 & 1 \end{vmatrix} \end{matrix} \right] }^{ T }\)
\(={ \left[ \begin{matrix} +(-1+1) \\ -(-3-1) \\ +(3+1) \end{matrix}\begin{matrix} -(-1-3) \\ +(-2+3) \\ -(2+1) \end{matrix}\begin{matrix} +(-1-3) \\ -(-2-9) \\ +(2-3) \end{matrix} \right] }^{ T }\)
\(={ \left[ \begin{matrix} 0 \\ 4 \\ 4 \end{matrix}\begin{matrix} 4 \\ 1 \\ -3 \end{matrix}\begin{matrix} -4 \\ 11 \\ -1 \end{matrix} \right] }^{ T }=\left[ \begin{matrix} 0 \\ 4 \\ -4 \end{matrix}\begin{matrix} 4 \\ 1 \\ 11 \end{matrix}\begin{matrix} 4 \\ -3 \\ -1 \end{matrix} \right] \)
\(\therefore { A }^{ -1 }=\frac { 1 }{ |A| } adj\quad A=\frac { 1 }{ 16 } \left[ \begin{matrix} 0 \\ 4 \\ -4 \end{matrix}\begin{matrix} 4 \\ 1 \\ 11 \end{matrix}\begin{matrix} 4 \\ -3 \\ -1 \end{matrix} \right] \)
\(\therefore X={ A }^{ -1 }B=\frac { 1 }{ 16 } \left[ \begin{matrix} 0 \\ 4 \\ -4 \end{matrix}\begin{matrix} 4 \\ 1 \\ 11 \end{matrix}\begin{matrix} 4 \\ -3 \\ -1 \end{matrix} \right] \left[ \begin{matrix} 9 \\ 9 \\ -1 \end{matrix} \right] \)
\(=\frac { 1 }{ 16 } \left[ \begin{matrix} 0+36-4 \\ 36+9+3 \\ -36+99+1 \end{matrix} \right] =\frac { 1 }{ 16 } \left[ \begin{matrix} 32 \\ 48 \\ 64 \end{matrix} \right] =\left[ \begin{matrix} 2 \\ 3 \\ 4 \end{matrix} \right] \)
\(\therefore x=2,\quad y=3,\quad z=4\)
∴ தீர்வுக் கணம் {1,3,4}
29.
கொடுக்கப்பட்ட முப்படிச் சமன்பாடு
2x3 − 6x2 + 3x + k = 0
இங்கு a = 2, b = -6, c = 3, d= k
α,β,\(\gamma\) என்பது மூலங்கள் என்க.
கொடுக்கப்பட்ட α=2(\(\beta +\gamma \)) =\(\frac { \alpha }{ 2 } =\beta +\gamma \) .....(1)
இங்கு α+β+\(\gamma\)=\(\frac { -b }{ a } =-\frac { (-6) }{ 2 } \)=3
\(\frac { \alpha }{ 2 } +\alpha =3\Rightarrow \frac { \alpha +2\alpha }{ 2 } =3\Rightarrow \frac { 3\alpha }{ 2 } \)=3
⇒ α=2
\(\alpha \beta \gamma =\frac { -d }{ a } =\frac { -k }{ 2 } \Rightarrow 2.\beta \gamma =\frac { -k }{ 2 } \)
\(\beta \gamma =\frac { -k }{ 4 } \) .......(2)
மேலும், \(\alpha \beta +\beta \gamma +\gamma \alpha =\frac { c }{ a } \)
\(2\beta +\beta \gamma +2\gamma =\frac { 3 }{ 2 } \)
\(2(\beta +\gamma )+\beta \gamma =\frac { 3 }{ 2 } \)
\(\alpha \frac { -k }{ 4 } =\frac { 3 }{ 2 } \) [(1) மற்றும் (2) லிருந்து]
\(2-\frac { k }{ 4 } =\frac { 3 }{ 2 } \) [∵ α=2]
\(2-\frac { 3 }{ 2 } =\frac { k }{ 4 } \Rightarrow \frac { 1 }{ 2 } =\frac { k }{ 4 } \)
k=\(\frac { 4 }{ 2 } \) ⇒ k=2
(2)லிருந்து, \(\beta \gamma =\frac { -k }{ 4 } =\frac { -2 }{ 4 } =\frac { -1 }{ 2 } \Rightarrow =\frac { -1 }{ 2\beta } \)
(1) லிருந்து, \(\beta +\gamma =\frac { \alpha }{ 2 } =\frac { 2 }{ 2 } \)=1
\(\gamma =\frac { -1 }{ 2\beta } \) என பிரதியிட கிடைப்பது
\(\beta -\frac { 1 }{ 2\beta } \)=1 ⇒ 2β2-1=2β ⇒ 2β-2β-1=0
β=\(\frac { 2\pm \sqrt { 4-4(2)(-1) } }{ 4 } =\frac { 2\pm \sqrt { 4+8 } }{ 4 } \)
=\(\frac { 2\pm \sqrt { 12 } }{ 4 } =\frac { 2\pm 2\sqrt { 3 } }{ 4 } \)
β =\(\frac { 1\pm \sqrt { 3 } }{ 2 } \)
எனவே மூலங்கள் 2,\(\frac { 1+\sqrt { 3 } }{ 2 } ,\frac { 1-\sqrt { 3 } }{ 2 } \) மற்றும் k = 2
30.
சமன்பாட்டு தொகுப்பின் அணி வடிவம் AX=B
இங்கு
\(A=\left[ \begin{matrix} k & -2 & 1 \\ 1 & -2k & 1 \\ 1 & -2 & k \end{matrix} \right] ,X=\left[ \begin{matrix} x \\ y \\ z \end{matrix} \right] ,B=\left[ \begin{matrix} 1 \\ -2 \\ 1 \end{matrix} \right] \)
[A|B] என்ற விரிவுபடுத்தப்பட்ட அணியில் தொடக்கநிலை நிரை செயலிகள் பயன்படுத்தக் கிடைப்பது,
\(A=\left[ \begin{matrix} k & -2 & 1 \\ 1 & -2k & 1 \\ 1 & -2 & k \end{matrix} \right] ,X=\left[ \begin{matrix} x \\ y \\ z \end{matrix} \right] ,B=\left[ \begin{matrix} 1 \\ -2 \\ 1 \end{matrix} \right] \)
\([A/B]=\left[ \begin{matrix} k & -2 & 1 \\ 1 & -2k & 1 \\ 1 & -2 & k \end{matrix}|\begin{matrix} 1 \\ -2 \\ 1 \end{matrix} \right] \overset { { R }_{ 1 }\leftrightarrow { R }_{ 3 } }{ \longrightarrow } \left[ \begin{matrix} 1 & -2 & k \\ 1 & -2k & 1 \\ k & -2 & 1 \end{matrix}|\begin{matrix} 1 \\ -2 \\ 1 \end{matrix} \right] \)
\(\overset { { R }_{ 2 }\rightarrow { R }_{ 2 }-{ R }_{ 1 }\\ { R }_{ 3 }\rightarrow { R }_{ 3 }-{ kR }_{ 1 } }{ \longrightarrow } \left[ \begin{matrix} 1 & -2 & k \\ 1 & -2k+2 & k \\ 0 & -2+2k & 1-{ k }^{ 2 } \end{matrix}|\begin{matrix} 1 \\ -3 \\ 1-k \end{matrix} \right] \)
\(\overset { { R }_{ 3 }\rightarrow { R }_{ 3 }+{ R }_{ 2 } }{ \longrightarrow } \left[ \begin{matrix} 1 \\ 0 \\ 0 \end{matrix}\begin{matrix} -2 \\ -2k+2 \\ 0 \end{matrix}\begin{matrix} k \\ 1-k \\ 1-{ k }^{ 2 }+1-k \end{matrix}\begin{matrix} 1 \\ -3 \\ -k-2 \end{matrix} \right] \)
\(\rightarrow \left[ \begin{matrix} 1 \\ 0 \\ 0 \end{matrix}\begin{matrix} -2 \\ -2k+2 \\ 0 \end{matrix}\begin{matrix} k \\ 1-k \\ (k+2)(1-k) \end{matrix}\begin{matrix} 1 \\ -3 \\ -k-2 \end{matrix} \right] \quad .....(1)\)
நிலை (i) k=1 எனில்
\([A|B]\rightarrow \left[ \begin{matrix} 1 \\ 0 \\ 0 \end{matrix}\begin{matrix} -2 \\ 0 \\ 0 \end{matrix}\begin{matrix} 1 \\ 0 \\ 0 \end{matrix}\begin{matrix} 1 \\ -3 \\ -3 \end{matrix} \right] \overset { { R }_{ 3 }\rightarrow { R }_{ 3 }-{ R }_{ 2 } }{ \longrightarrow } \left[ \begin{matrix} 1 \\ 0 \\ 0 \end{matrix}\begin{matrix} -2 \\ 0 \\ 0 \end{matrix}\begin{matrix} 1 \\ 0 \\ 0 \end{matrix}\begin{matrix} 1 \\ -3 \\ 0 \end{matrix} \right] \)
[2 - k - k² = - (k² +k-2)
=-(k+2) (k-1)
= (k + 2) (1-k)]
நிலை (i) k = 1 எனில்
ρ(A)=1, ρ([A } B]) = 3.
ρ(A) ≠ ρ([A | B])
சமன்பாட்டுத் தொகுப்பு ஒருங்கமைவற்றது மற்றும் தீர்வுகள் கிடையாது.
நிலை (ii): k ≠ 1, k ≠ -2 எனில் ρ(A)=3, ρ([A | B]) = 3 = n
சமன்பாட்டுத் தொகுப்பு ஒருங்கமைவுடையது மற்றும் ஒரே ஒரு தீர்வைக் கொண்டது.
நிலை (iii): k=-2 எனில்
ρ(A) = 2, ρ([A | B]) = 2
சமன்பாட்டுத் தொகுப்பு ஒருங்கமைவுடையது மற்றும் எண்ணற்ற தீர்வுகளைக் கொண்டது.
31.
\({ \sin }^{ -1 }\left( \frac { x }{ \sqrt { 1+{ x }^{ 2 } } } \right) ={ \cos }^{ -1 }\left( \frac { 1 }{ \sqrt { 1+{ x }^{ 2 } } } \right) \).என அறிவோம்
எனவே, \(\cos\left( { \sin }^{ -1 }\left( \frac { x }{ \sqrt { 1+{ x }^{ 2 } } } \right) \right) +\frac { 1 }{ \sqrt { 1+{ x }^{ 2 } } } )\) ...(1)
\({ \cot }^{ -1 }\left( \frac { 3 }{ 4 } \right) =\theta \). என்க. பின்னர் \(\cot\theta =\frac { 3 }{ 4 } \)மற்றும் \(\theta \) குறுங்கோணம்.
படத்திலிருந்து, நமக்கு கிடைக்கப்பெறுவது
\(\sin\left\{ { \cot }^{ -1 }\left( \frac { 3 }{ 4 } \right) \right\} =\sin\theta =\frac { 4 }{ 5 } \) ...(2)
(1) மற்றும் (2)-ஐ கொடுக்கப்பட்ட சமன்பாட்டில் பயன்படுத்தும்போது
\(\frac { 1 }{ \sqrt { 1+{ x }^{ 2 } } } =\frac { 4 }{ 5 } \), என்பதிலிருந்து \(\sqrt { 1+{ x }^{ 2 } } =\frac { 5 }{ 4 } \) எனவே, \(x=\pm \frac { 3 }{ 4 } \).
32.
ஆதி வழிச்செல்லும் நேர்க்கோடுகளின் குடும்பத்தின் சமன்பாடு y = mx ஆகும். இங்கு, m என்பது ஏதேனும் ஒரு மாறிலி. … (1)
இருபுறமும் xஐப் பொருத்து வகைக்கெழுக் காண, நாம் பெறுவது,
\(\frac { dy }{ dx } =m\). ...(2)
சமன்பாடுகள் (1) மற்றும் (2) ஆகியவற்றிலிருந்து, நாம் பெறுவது, y = x \(\frac { dy }{ dx } \). இதுவே தேவையான வகைக்கெழுச் சமன்பாடாகும்.
கொடுக்கப்பட்ட y = mx எனும் சமன்பாடு
ஒரேயொரு மாறிலியை மட்டுமே பெற்றுள்ளது. எனவே, நாம் முதல் வரிசை வகைக்கெழுச் சமன்பாட்டைப் பெறுகிறோம் என்பதை கவனத்தில் கொள்க.

33.
சார்பு g வகையிடத்தக்கது என்பதைக் கவனிக்கவும். மேலும் g'(x) = 2x + cos x.
இதனால் dg = (2x + cos x)dx
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards